Saturday, December 03, 2022

நித்தம் ஒரு வானம் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

 

 நித்தம் ஒரு வானம் (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்

அசோக் செல்வன் படங்களில் எனக்குப்பிடித்தவை தெகிடி, ஓ மை கடவுளே, வேழம், மன்மத லீலை , இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச்சேர்ந்தவர்.


ஸ்பாய்லர் அலெர்ட்

ஹீரோ ஒரு இண்ட்ராவர்ட், யார் கிட்டேயும் சகஜமா பழக மாட்டார். ரொம்ப சுத்த பத்தம் பார்க்கற ஆள் . .இந்த மாதிரி கேரக்டரை யார் லவ் பண்ணுவா? அதனால அரேஞ்சுடு மேரேஜ் தான், வீட்ல பார்த்த பெண் கூட நிச்சயதார்த்தம் ஆகிடுது
அந்தப்பொண்ணு ஆல்ரெடி ஒரு பையனை லவ் பண்ணுனவ. திடீர்னு மனசு மாறி காதலன் கூடப்போய்டறா. இதனால ஹீரோ அப்செட் ஆகறார். அவருக்கு பொண்ணு மிஸ் ஆனது கூட வருத்தம் இல்லை , இன்னொருத்தனுக்கு மிசஸ் ஆனதிலும் கஷ்டம் இல்லை, ஆனா இனி ஆளாளுக்கு துக்கம் விசாரிப்பாங்களே?னு ஒரு கடுப்பு
இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர ஒரு மனநல மருத்துவரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஒரு ரைட்டர். அவர் எழுதுன 2 சிறுகதைகளை ஹீரோ கிட்டே கொடுத்துப்படிக்கச்சொல்றார்
முக்கியமான இடத்தில் தொடரும் போடற மாதிரி அந்த 2 கதைகளிலும் முடிவு இல்லை , செம காண்ட் ஆன ஹீரோ டாக்டருக்கு ஃபோன் பண்ணி விபரம் கேட்க அந்த 2 கதைகளும் கற்பனைக்கதைகள் அல்ல, நிஜ வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு என 2 வெவ்வேற அட்ரஸ் கொடுத்து அங்கே போய் அவங்களைப்பார்த்து அவங்களுக்கு என்ன நடந்தது?னு தெரிஞ்சுக்கச்சொல்றார்
அவர்களை ச்ந்திக்க ஹீரோ மேற்கொள்ளும் பயணங்களும், அதில் அவருக்குக்கிடைத்த அனுபவங்களும் தான் திரைக்கதை . அந்த பயணத்தில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக இன்னொரு பெண்ணும் துணைக்கு வர்றார்
இறுதியில் என்ன ஆச்சு? என்பதை திரையில் காண்க
ஹீரோவா அசோக் செல்வன். இவருக்கு அமைவதெல்லாமே பணக்காரர் அல்லது செல்வச்செழிப்பு மிக்க சீமான் கேரக்டர்கள் தான். பி சி செண்ட்டர்களில் க்ளிக் ஆக அவ்வப்போது ஏழையாகவும் நடிக்கனும். இதில் மாறுபட்ட மூன்று வெவ்வேறு கேரக்டர்களில் வருகிறார்போலீஸ் ஆஃபீசராக வரும்போது விஜயின் டயலாக் டெலிவரி நினைவு வருது . பேஸ்கட் பால் பிளேயரின் லவ்வராக வரும் கேரகடரில் இயல்பாக நடித்திருக்கிறார். மெயின் கேரக்டரான இண்ட்ராவர்ட் கேரக்டர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத கேரக்டர்., எந்த அளவுக்கு அது ரீச் ஆகும் என சொல்ல முடியாது
நாயகிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் அபர்ணா பாலமுரளி வச்தியான இடம், நல்ல அப்பா எல்லாம் இருந்தும் அரேஞ்சுடு மேரேஜ் நோ , ஒன்லி லவ் மேரேஜ் ஆனா இதுவரை நோ லவ் என விசித்திரமான கேரக்டராக இருந்தாலும் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகன் இது போன்ற பல லூஸ் தனமான ஹீரோயின்களை சந்தித்திருக்கிறான் என்பதால் பிரச்சனை இல்லை
பேஸ்கட் பால் பிளேயராக வரும் ஷிவதா அடக்கமான அழகு , அமைதியான நடிப்பு
ஹீரோ கூட பயணத்தில் இணைபவராக ரிது வ்ர்மா .. துடுக்குத்தனமான நடிப்பு
அபர்ணா பால முரளியின் அப்பாவாக அழகம்பெருமாள் அருமையான நடிப்பு
கார் டிரைவராக காளி , கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பு. ஜீவா கேமியோ ரோல் . சிவாத்மிகா கச்சிதமான நடிப்பு
பாடல்கள் பிரமாதம் என சொல்ல முடியாவிட்டாலும் ஓகே ரகம்,. பிஜிஎம் குட்
ஒளிப்பதிவு பிரமாதம். 3 விதமான லொக்கேஷன்கள்.

சபாஷ் டைரக்டர் ( ரா கார்த்திக் )
1 2007ல் ரிலீஸ் ஆன ஜப் வி மெட் ஹிந்திப்படத்தின் சாயல் இருந்தாலும் திரைக்கதை அமைத்த விதம் பிரமாதம். இந்தக்கதைக்கருவுக்கு இந்த திரைக்கதை கச்சிதம்

2 ஹீரோ படிக்கும் சிறுகதையில் வரும் கதாநாயகனாக நாயகன் தன்னை அந்த பாத்திரமாகப்பொருத்திக்கொள்வார் என்ற கற்பனை அருமை . இதனால் 2 பிளஸ் , 1 நாயகனுக்கு வெரைட்டி ரோல் செய்யும் வாய்ப்பு 2 சம்பளம் மிச்சம்
3 முதலில் நிச்சயம் ஆகும் பெண் , பயணத்தில் உடன் வரும் பெண் , கதையில் நாயகிகள் நிஜத்தில் தலா 2 , கற்பனையில் தலா 2 என மொத்தம் 6 பெண் கேரக்டர்கள் , இது போதாது என ஆஃபீசில் ஒன்சைடாக லவ் பண்ணும் பெண் ஒன்று ஆக மொத்தம் 7 ஜோடி. கண்ணுக்குக்குளிர்ச்சியான நாயகிகள்
ரசித்த வசனங்கள்
1 எல்லாத்துலயும் என்னைக்கண்ட்ரோல் ப்ண்ணினா எனக்குப்பிடிக்காது, கையைக்காலைக்கட்டிட்டு தாலி கட்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு , அதான் விலகிட்டேன்
யாருக்காக மாறுகிறோம்?கறதுல தான் எல்லாம் இருக்கு
2 எல்லாமே முடிஞ்சிடுச்சுனு அவ சொல்லிட்டா, ஆனா பிரச்சனையே அதுக்குப்பிறகுதான் ஆரம்பிச்சுது
3 வாழ்க்கைல இனி யார் முகத்துல எல்லாம் விழிக்கக்கூடாதுனு நாம நினைக்கறமோ அவங்க முகத்துல மீண்டும் விழிக்க வேண்டிய தருணம் வந்தா என்ன செய்ய?
4 நமக்கே தெரியும், நம்மை சுத்தி இருப்பதெல்லாம் ஃபேக் ஆன லைஃப், ஆனா அந்த ஃபேக்கான லைஃபை நாம ரசிக்கும்படி மாத்திக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங் சீன்ல நிச்சயதார்த்தம் ஆன ஹீரோவை வேண்டாம்னு சொல்லிட்டு முன்னாள் காதலனை கைப்பிடிக்க முடிவு எடுக்கிறாரே? அந்த காதலன் கஞ்சா கேஸ்ல உள்ளே போனவன் மாதிரி ஆள் தாடியும் தொப்பையும் சகிக்கலை..இவரை விட்டுட்டு அவரை பிடிக்க ஹெவியா உன்னை எதும்மா கவர்ந்துச்சு?னு கேட்கனும்
2 ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் படி அவர் ரொம்ப ஹைஜீனிக்கானவர். ரோட்டோர கடைகளில் சாப்பிட மாட்டார். ரொம்ப சுத்த பத்தம் பார்ப்பவர் . அப்படிப்பட்டவர் தனக்கு அமையும் மனைவி இன்னொருவரின் காதலி என தெரிந்தும் ஓக்கே சொல்வது எப்படி ? ஆக்சுவலா அவர்தானே பெண்ணை ரிஜக்ட் பண்ணி இருக்கனும் ?
3 பெற்றோருக்குத்தெரியாத காதலில் காதலியை யாராவது வீட்டு வாசலில் டிராப் பண்ணுவாங்களா? வழக்கமா தெரு முக்குல டிராப் பண்ணிட்டு தானே போவாங்க ? இதில் முதல் கதையில் ஹீரோ தன் காதலியை வீட்டு முன் பைக்ல டிராப் பண்ணி மாட்டிக்கறார்
4 டி வி சீரியல்ல கால் ஷீட் பிரச்சனை வந்தா டக்னு கட்டம் கட்டி இனி இவருக்குப்பதில் இவர்னு ஈசியா மாத்திடலாம், ஆனா ஹீரோ ஒரு கதை படிக்கும்போது அவர் கற்பனைல நமக்குக்காட்டப்படும் நபர் வேற , நிஜத்தில் அவர் சந்திக்கப்போகும் முகம் வேற என்பது லாஜிக் படி சரி தான் என்றாலும் நம்மால அதுல கனெக்ட் ஆக முடியல , இதுக்கு தீர்வா நாயகிகள் ம்ட்டும் மாறாம காட்டி இருக்கலாம்,
5 கதையாகப்படிக்கும்போது இரு கதைகளிலும் முடிவு என்ன ஆகி இருக்குமோ? என வ்ரும் ஒரு ஆர்வம் காட்சியாக காட்டப்படும்போது ஏனோ முழுமை பெறவில்லை . அல்லது நமக்கு பூரண திருப்தி வரவில்லை
4 ரிது வர்மா உட்பட ஆடியன்சுக்கும் கடைசி வரை தெரியாத சஸ்பென்ஸ் “ எதுக்காகடா அவளை விட்டுட்டுப்போனே?
5 இரண்டு சிறுகதைகளிலும் ஒரு சோக முடிவு அமைவது கொஞ்சம் நாடகத்தன்மையாக இருக்கிரது. நாயகனின் மன மாற்றத்துக்காக அவை வடிவமைக்கப்பட்டது போல தோணுது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த ஒரு ஃபீல் குட் மூவி . ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான படம் , ஆனந்த விகடன் மார்க் 42 . ரேட்டிங் 3 /. 5

0 comments: