Monday, December 19, 2022

DOCTOR G (2022) (ஹிந்தி) - திரை விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


கொரானாவின் ஆதிக்கம் 2020ல் தான்  இந்தியாவில்  தொடங்கியது, ஆனால்   ஆயுஷ்மான் குரானாவின்  ஆதிக்கம் 2012ல்  விக்கி டோனார் படத்தில்  தொடங்கியது. மாறுபட்ட காமெடி  மெலோ டிராமா,  இது  தமிழில்  தாராளப்பிரபு  என  ரீமேக்  ஆனது /2018 ல்  ரிலீஸ்  ஆன  அந்தாதூன்  த்ரில்லர்  மூவி  இந்தியாவிலேயே  அதிக  மொழிகளில்    ரீமேக்  செய்யப்பட்ட  இரண்டாவது  படம்  என்ற  பெருமை  பெற்றது. தமிழில் அந்தகன்  என  பிரசாந்த்  நடித்து  வெளி  வர  இருக்கும்  படம் ,அதே  2018ல் ரிலீஸ்  ஆன  பதாய்  ஹோ  தான்  சத்யராஜ்- ஆர் ஜே  பாலாஜி   நடிப்பில்   வீட்ல விசேஷம்  என தமிழில் ரீமேக்  ஆனது  2019ல் வந்த  ஆர்ட்டிகிள்  15  எனும்  க்ரைம்  இன்வெஸ்ட்ஃபிகேஷன்  ஃபிலிம்  தான் உதய நிதி  நடிக்க  நெஞ்சுக்கு  நீதி  ஆனது   ஆயுஷ்மான் குரானா  பட்ங்கள்  என்றாலே  வித்தியாசமான  சப்ஜெக்ட்  இருக்கும்  என்ற  நம்பிக்கை  பிறந்தது 

நாயகனுக்கு  ஆர்த்தோ  டாக்டர்  ஆகத்தான்  ஆசை , ஆனால்  அவருக்குக்கிடைப்பது என்னவோ  கைனகாலஜிஸ்ட்  சீட் தான். அந்த  பேட்ஜில் எல்லோரும்  பெண்கள் , இவர்  மட்டும்  தான்  ஆண். அதனால்  எல்லாரும்  அவரைக்கலாய்க்கிறார்கள் . 


நாயகனுக்கு  பர்சனல்  லைஃப்ல  ஆல்ரெடி  ஒரு  பிரேக்கப்  ஆகப்போகும்  காதல்  உண்டு .  அவரது  காதலியிடம்  அடிக்கடி  இப்போ  யார்  கிட்டே  பேசிட்டு  இருக்கே?  போன்ற  பொசசிவ்னெஸ்  சந்தேகங்களால்  பிரேக்கப்  நடக்கிறது


இப்போ  காலேஜில்  ஒரு  பெண்ணுடன்  நட்பு  ஏற்படுகிறது,, ஆனால்  அவருக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலன்  இருக்கிறான், இருந்தாலும் இந்தப்பெண்  எப்போதும்  நாயகனுடன்  சுற்றிக்கொண்டு  இருப்பதால்  அவனுக்கு சந்தேகம்  வருகிறது . ஒரு  சந்தர்ப்பத்தில்  நாயகன்  அந்தப்பெண்ணுக்கு  இதழ்  முத்தம்  தந்து  விடுகிறான், அப்போதைக்கு  அதற்கு  உடன் பட்டாலும்  அடுத்த  நாளே  அவள்  நாம்  இருவரும்  நண்பர்கள்  மட்டுமே, அந்த  முத்த  சம்பவத்தை  மொத்தமாக  மறந்து  விடு  என்கிறாள்


நாயகனுக்கு  ஒரு  நண்பன்  உண்டு, திருமணம்  ஆனவன், ஆனாலும்  அவனுக்கு திருமணம்  தாண்டிய  ஒரு  உறவு  உண்டு . அவள்  மைனர்  பெண். அவள்  கர்ப்பம்  ஆகிறாள் , கருவைக்கலைக்க  வேண்டி  நாயகன்  உதவியை  நாடுகிறான், நேரடியாக  அவன்  அவள்  கூட  ஹாஸ்பிடல்  போனால்  அவன்  பெயர்  ரிப்பேர்  ஆகி  விடும், அதனால்  நாயகன்  பொறுப்பில்  அவளை  விட்டு விடுகிறான்


இந்த மூன்று  பெண்களும்  நாயகன்  வாழ்வில்  ஏற்படுத்திய  பாதிப்புகள்  என்ன ? என்பதே  திரைக்கதை 


 மேலோட்டமாகப்பார்க்கும் போது  மம்முட்டி நடித்த  அழகன்  படத்தின்  கதை  போல தோன்றினாலும் இதன்  திரைக்கதை  புதியது. 


வசூல்  ராஜா  எம் பி பிஎஸ்  படத்துக்குப்பின்  முழுக்க  முழுக்க  டாக்டர்கள் , ஹாஸ்பிடல்கள் , நோயாளிகள்  சம்பந்தப்பட்ட  படமாக  இது  அமைகிறது 


நாயகன் உதய்  ஆக  ஆயுஷ்மான்  குரானா  அபாரமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். இவரது  கெட்டப்  மைக்கேல்  மதன காமராஜன்  படத்தில்  வரும்  பணக்கார  மதன்  கேரக்டர்  போல  இருக்கிறது, சில  இடங்களில்  பேசும்  படம்  கமல்  கெட்டப்  போலவும்  உள்ளது . முதல்  காதலியிடம்  பொசசிவ்  ஆக  இருந்து  பிரேக்கப்  ஆகும்போதும்  சரி , இரண்டாவது  காதலியுடன்  பேசும்போதும்  சரி  அனாயசமாக  நடிக்கிறார். நண்பனின்  காதலியுடன்  இருக்கும்பொழுது  பொறுப்பான  அண்ணன்  போல  நடந்து  கொள்வது  சிறப்பு


நாயகனின்  சீனியர்  ஆக  டாக்டர்  ஃபாத்திமாவாக  ரகுல் ப்ரீத்தி  சிங்  கச்சிதமான  நடிப்பு . ஒரு  கட்டத்தில்  உணர்ச்சி  வசப்பட்டு  முத்தத்துக்கு  ஒத்துழைத்தாலும்  அடுத்த  நாளே  பதறிப்போய்  என்க்கு  ஆல்ரெடி  எங்கேஜ்   ஃபிக்ஸ்  ஆகி  விட்டது   என  சொல்லும் இடத்தில்  துடிப்பான  நடிப்பு 


நாயகன்  பணி  புரியும்  ஹாஸ்பிடலில்  ஹெச் ஓ டி  ஆக  ஷெஃபாலி ஷா  கம்பீரமான  நடிப்பு , டெல்லி  கிரைம்  வெப்  சீரிசில்  கமிஷனராக  அசத்தியவ்ர்தான் . இவரது  கண்களே  பாதி  நடிப்பை  வழங்கி  விடுகிறது , இவரது  உடல்  மொழி  கனகச்சிதம் 


நாயகனின்  மூன்று  தோழிகளுடனான  சம்பவங்களும் , ஹாஸ்பிடலில்  நடக்கும்  காமெடி  சம்பவங்களும்தான்  மெயின்  கதை  என்றாலும்  கிளைக்கதையாக  வரும்  நாயகனின்  அம்மாவின்  காதல்  கதை  அற்புதம் 


நாயகனின்  அம்மாவாக ஷீபா  ஷத்தா அட்டகாசமான  நடிப்பு ., சோசியல்  மீடியாக்களில்  அப்டேட்டாக  இருப்பது  என்ன?  தன்  ஃபேஸ்  புக்  நண்பருடன்  வீட்டில்  பார்ட்டி  கொண்டாடும்போது  மகன்  வந்து  முகம்  மாற  நண்பரை  அன் ஃபிரண்ட்  செய்வ்து  என்ன?  பின்  மகன்  மனம்  மாறியதும்  தாங்க்ஸ்  சொல்லும்  தொனி  என்ன? மொத்தப்படத்தின்  சுவராஸ்யத்தையும்  அசால்ட்டாக  ஓவர்  டேக்  செய்து  விடுகிறார்


நாயகனின்  முதல்  டெலிவரி  பார்க்கும்  காட்சியில்  இயக்குநர்  டச்  தெரிகிறது . முதன்  முதலாக  இரட்டைக்குழந்தைக்கு  டெலிவரி  பார்க்கும்போது  நாயகன்  முகத்தில்  தோன்றும்  பரவ்சம்  அட போட  வைக்கிறது நாயகனுக்கு  எதிராக   ஒரு  புகார்  வரும்போது   அவர்  பதை  பதைப்பது  திரைக்கதைக்கு  நல்ல  வலு  சேர்க்கிறது 


  இயக்குநர்   ஒரு  பெண் .  அனுபுதி கஷ்யாப்.  கச்சிதமாக  காட்சிகளை  அடுக்கி  கதை  சொல்லும்  பாணி  நன்றாக  உள்ளது . ஓப்பனிங்  காட்சிகளில்  நாயகனை  ரேக்கிங்  செய்யும்  சீனியர்கள்   சம்பந்தப்பட்ட  காட்சிகளில்  மட்டும்  கொஞ்சம்  சென்சார்  செய்திருக்கலாம்

கேதான்  சவ்தா  இசையில்  எட்டு  பாடல்கள் , எல்லாம்  சின்னச்சின்ன  பாடல்களே. பின்னணி  இசை  கனகச்சிதம் பிரேர்னா  கைகல்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  இரண்டு  மணி  நேரத்தில்  கட்  செய்து  இருக்கிறார்கள் 


குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஒரு  ஃபீல்  குட்  மூவி 


சபாஷ்  டைரக்டர்


1  திருடா  திருடா  க்ளைமாக்ஸில்  இயக்குநர்  மணிரத்னம்  ஒரு  புத்திசாலித்தனமான  எஸ்கேப்  நடத்தினார். ஹீரா  யாருக்கு  ஜோடி ?   என்ற  கேள்விக்கு  நேரடியாக  முடிவைச்சொல்லாமல்   ஹீரோயின்  இருவரையும்  துரத்துவது  போல  முடித்திருந்தார், அதே  போலத்தான்  இதன்  க்ளைமாக்சும்


2  அ,ம்மா  வேறொரு  ஆண்  நண்பருடன்  இருப்பதைப்பார்த்து  கோபப்படும்  நாயகன்  பின்  மனம்  மாறி   அம்மாவிடம்  சாரி  கேட்பதும்  அந்த  நண்பரிடம்  அம்மாவை சமாதானப்படுத்த  ஐடியா   தருவதும்  கச்சிதம்


3   நாயகனின்  முதல்  காதல்  பிரேக்கப்பை  காட்சியாக  விளக்காமல்  வசனமாகவே  விளக்கிய்து, இந்த  புத்திசாலித்தனத்தை  மணிரத்னம்  தன்  பம்பாய்  படத்தில்  லவ்  போர்சனைக்குறைத்து  ஓப்பனிங்கில்  டேக்  அஃப்  ஆவது  போல  காட்டி  இருந்தார்


4  மகப்பேறு  மருத்துவமனைக்காமெடிகள்  எல்லாம்  இந்திய  சினிமாவுக்கே  புதுசு 


ரசித்த  வசனங்கள் 


1   என்ன  லட்டு  சுட்டு  இருக்கே?   ஒரு  லட்டு  கூட  வட்டமாவே  இல்லை


 ல்ட்டு  ஸ்வீட்டா  இருந்தா  போதாதா?  ரவுண்டா  வேணுமா?


2  ஒரு  விவாதத்தில்  யார்  குரலை  உயர்த்துகிறார்களோ  அவங்க  தோற்கப்போறாங்கனு  அர்த்தம் 


3    ஒரு    பெண்  நோயாளியை  ஆண்  டாக்டர்  செக்கப்  செய்யனும்னா  பக்கத்துல  ஒரு  லேடி  நர்ஸ்  இருக்கனும், இது   ரூல் 


4  டாக்டர், எனக்கு  ஊசின்னா  அவ்ளோ  பயம் 


  ஏம்மா, இவ்ளோ  சின்ன  ஊசிக்கு   பயப்படறியே, ஹஸ்பெண்ட்  அவ்ளோ  பெரிய  ஊசி  போட்டப்ப  பயப்படலையே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  மைனர்  பெண்ணை  ஒரு  டாக்டர்  கருக்கலைப்புக்காக  கூட்டிட்டுப்போறார். ரகசியமா  கார்ல  கூட்டிட்டுப்போகாம  இப்படியா  பைக்ல  கூட்டிட்டுப்போவாங்க ? 


2   டைம்  தாண்டிடுச்சு , இனி  அபார்ஷன்  டேஞ்சர்னு  தெரிஞ்சும்  டாக்டர் , அந்த  சின்னப்பொண்ணு  இருவருமே  பயமே  இல்லாம  எப்படி  ரிஸ்க்  எடுக்கறாங்க ? 


3   நாயகனின்  அம்மாவின்  ஃபேஸ்புக்  நண்பர்  அவ்ர்  வீட்டில் தனியாகத்தான்  இருக்கிறார் . அங்கே  சந்திக்காமல்  மகன்  இருக்கும்  தன்  வீட்டில்  சந்திப்பது  ரிஸ்க் இல்லையா? சிபிஎஸ்   ஃபைனல்  கமெண்ட்  -  ஆயுஷ்மான்  ரசிக்ர்கள்  அவசியம்  கான  வேண்டிய  காமெடி  கம் செண்ட்டிமெண்ட்  ஃபிலிம்   ரேட்டிங்  3 / 5 


Doctor G
Doctor G film poster.jpg
Theatrical release poster
Directed byAnubhuti Kashyap
Written bySumit Saxena
Saurabh Bharat
Vishal Wagh
Anubhuti Kashyap
Story bySaurabh Bharat
Vishal Wagh
Produced byJunglee Pictures
Starring
CinematographyEeshit Narain
Edited byPrerna Saigal
Music byKetan Sodha
Production
company
Distributed byAnand Pandit Motion Pictures
PVR Pictures
Viacom18 Studios
Release date
  • 14 October 2022
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budget₹35 crore[2]
Box officeest. ₹41 crore[3]

0 comments: