Saturday, December 17, 2022

YASODA (2022) ( TELUGU)-யசோதா ( தமிழ்) - திரை விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 ஒரு  அழகிப்போட்டில ஒரு  மினிஸ்டர்  சீஃப்  கெஸ்ட்டாக கலந்துகொள்கிறார்.போட்டியில்  கலந்து  கொள்ள  வந்த  அழகிகளில் ஒருவரைப்பார்த்து  அவர்  மீது  ஆசைப்படுகிறார். அதே  அழகி  மீது  ஒரு சயிண்ட்டிஸ்ட்டும்  ஆசைப்படுகிறார். ஆனால்  அழகி  தேர்ந்தெடுத்தது  மினிஸ்டரை, காரணம்  பணம்


சில  மாதங்களில்  திடீர்  என  ஏதோ  நோயினால்  அந்த  அழகி  ஐ  பட  நாயகன்  விக்ரம்  போல  சின்ன  வயதிலேயே  முகம்  மூப்படைந்து  போகும்  வியாதிக்கு  ஆளாகிறாள், அழகு  போனதால்  மினிஸ்டர்  அந்த  அழகியை  விட்டு  விலக  முற்படுகிறார், ஆனால்  அந்த  சயிண்ட்டிஸ்ட்  அழகியை  பழையபடி  அழகாக்க  தன்  ஆராய்ச்சி  மூலம்  முயற்சி  செய்து  வெற்றி  அடைகிறார்


இந்த  அழகாக்கும்  ஃபார்முலாவை  வைத்து  பணம்  சம்பாதிக்க  அழகி , மினிஸ்டர் , சயிண்ட்டிஸ்ட்  மூவரும்  கூட்டணி  சேருகிறார்கள்.அந்த  ஆராய்ச்சிக்கு  முக்கியத்தேவை  கர்ப்பத்தில்  இருக்கும்  சிசு. அந்த  சிசுவின்  பிளாஸ்மா  செல்களை  வைத்துத்தான்  அழகாக்கும்  ஃபார்முலா  வெற்றி  அடையும் 


 அதற்காக  அவர்கள்  செய்யும்  திட்டம்தான்  வாடகைத்க்தாய்  திட்டம்., அதன்படி  ஏழைப்பெண்களுக்கு  அதிக  பணம்  தருவதாக  ஆசை காட்டி  வாடகைத்தாயாக  பணிபுரிய  சம்மதிக்க  வைத்து  அவர்களை  உபயோகிக்க  முடிவு  செய்கிறார்கள் 


 நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  முயற்சி  செய்பவர், அவருக்கு  ஒரு  தங்கை  உண்டு . போலீஸ்  ஆஃபீசர்  ஆக  லஞ்சமாக  ஏகப்பட்ட  பணம்  கேட்கிறார்கள். அந்தப்பணத்துக்காக  நாயகியின்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  சம்மதிக்கிறாள்நாயகிக்கே  தெரியாமல்  அவள்  தங்கை  வாடகைத்தாய்  ஆக  அந்த  ஹாஸ்பிடல்  செல்கிறாள் 


காணாமல்  போன  தங்கையைத்தேடி  நாயகி  தானும்  வாடகைத்தாய்  ஆக  உள்ளே  நுழைகிறாள். அந்த  ஹாஸ்பிடலில்  நுழைந்து  அவர்  எப்படி  தன்  தங்கையை  காப்பாற்றி  வில்லன்கள், வில்லியை  சட்டத்தின்  பிடியில்  சிக்க   வைக்கிறார்  என்பதே  திரைக்கதை ‘’

 


 நாயகியாக  சமந்தா. நீதானே  என்  பொன்  வசந்தம்  படத்துக்குப்பின்  சமந்தா  செய்த  பெஸ்ட்  ரோல்  இதுதான். முதல்  பாதி  முழுக்க  அப்பாவி  கர்ப்பிணி  பெண்  போல  நடந்து  கொள்ளும்  பாங்கு  ஆகட்டும், பின்  பாதியில்  ஆக்சன்  அவதாரம்  எடுக்கும்  துணிச்சல்  ஆகட்டும் , கலக்கலான  நடிப்பு 


வில்லி  ஆக    அழகி  ஆக  வரலட்சுமி  சரத்குமார் . தாரை  தப்பட்டை  படத்துக்குப்பின்  அவர்  ஏற்று  நடித்திருக்கும்  பிரமாதமான  ரோல்  இது


 போலீஸ்  ஆஃபீசராக  வரும்  சம்பத் ராஜ்  கவனம்  ஈர்க்கிறார். , வில்லியின்  காதலனாக  , சயிண்ட்டிஸ்ட்  ஆக  வரும்  உன்னி  முகுந்தன்  நல்ல  நடிப்பு 


பின்னணி  இசை  மணி  சர்மா, பல  இடங்களில்  சுவராஸ்யத்தைக்கூட்டுகிறது சுகுமாரின்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் மார்த்தாண்ட்  கே   வெங்கடேஷின்  எடிட்டிங்  கனகச்சிதமாக  ரெண்டே  கால்  மணி  நேரத்தில்  ஷார்ப்பாக  கட்  செய்திருக்கிறது 


  நிறை  மாத  கர்ப்பிணியான  படத்தின்  நாயகி  அத்தனை  பேரை  ஆக்சன்  அவதாரம்  எடுத்து  வீழ்த்துவது  எல்லாம்  நம்ப  முடியவில்லை ., சிசிடிவி  கேமராவை  ஏமாற்ற  நாயகி  சமந்தா  ஒளிந்து  ஒளிந்து  செல்வதெல்லாம்  லாஜிக்கே  இல்லை 


வாடகைத்தாய்   என்ற  வார்த்தை  நயன் தாரா  திருமணத்துக்குப்பின்  ஃபேமஸ்  ஆகி  விட்டது . அந்த  சமயம்  பார்த்து  ப்டம்  வெளி  வந்தது  ஒரு  கூடுதல்  விளம்பரம் .  பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படமாக  பெண்களும், ஆண்களுக்கான  மெடிக்கல்  க்ரைம்  த்ரில்லராக  ஆண்களும்  இந்தப்படத்தைப்பார்க்கலாம்.


ரசித்த  வசனங்கள் 


1    ஒரு  பெண்  தன்  அழகுக்காக  தன்  கடைசி பைசா  வரை  செலவு  பண்ணத்தயாரா  இருப்பா 


2 ராஜா  ஆகனும்னா  யுத்தத்துல  ஜெயிக்கனும், ராணி  ஆகனும்னா  ராஜாவை  ஜெயிச்சாலே ( வளைச்சுப்போட்டாலே )  போதும் 


3  அரசியல்வாதியான  என்  கிட்டே  பணம் மட்டும்  தான்  கறுப்பா  இருக்கும் ( பிளாக்  மணி )  ஆனா  லைஃப்  கலர் ஃபுல்லா  இருக்கும் 


4  நாம  வணங்கற  கடவுள்  கூட  அழகானதா  இருக்கனும்னுதான்  விரும்பறோம், அதனால  நாம  மேக்கப்  போட்டு  அழகா  காட்டிக்கொள்வதில்  தப்பில்லை 


5   ஷாரூக்  கான் , அமீர்  கான் , ஷில்பா  ஷெட்டி ,சன்னிலியோன் இவங்க  எல்லாருமே  வாடகைத்தாய்  வயிற்றில்  பிறந்தவங்க தான் 


6  பையன்  இருந்தைருந்தா  கடனை  அடைச்சிருப்பான்னு  அப்பா  வருத்தப்பட்டார் , பெண்ணா  இருந்தும்  பையனால்  செய்ய  முடியாத  ஒரு  வேலையைச்செஞ்சு  கடனை  அடைக்கப்போறேன், அதுதான்  வாடகைத்தாய்  ஃபார்முலா 


7  மிஸ் 1  உன்க்கு  பொட்டு  அழகா  இருக்கு 


  ஸோ,  நீ டெய்லி  என்னை  வாட்ச்  பண்றே.  நான்  பொட்டு  வெச்சிருக்கேனா? இல்லையா?  என்பதை  நோட்  பண்றே!


8   என்னோட  டேப்  காணோம்


 டேப்லெட்  பற்றிப்பேசும்போது  டேப்  பற்றி  பேசறே 


9  இந்த  ஆப்பத்தைப்பார்த்தா  மாசமா  இருக்கும்  தோசை  மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நிறை  மாத  கர்ப்பமா  இருக்கும்  நாயகி  க்ளைமாக்ஸ்  காட்சிகளில்  வயிறு  உப்பாமல்  நார்மலாக  இருப்பது  எப்படி ?


2  ஒரு  தனி  நபர்  ஒரு  மாபெரும்  கூட்டத்தையே  எதிர்த்து  வெற்றி  பெறுவது  எப்படி ? அர்னால்டு  ஸ்வார்செனேகர் , ரஜினி  படங்கள்  போல  லாஜிக்கே  இல்லை 


3  நம்ம  ஊர்  நடிகைகள்   அவுட்டோர்  போனாலே  கூட  செக்யூரிட்டிக்கு  அம்மா,  உட்பட  பல  செக்யூரிட்டிகள்  கூடப்பாறாங்க , பிரபல  ஹாலிவுட்  ஹீரோயின்  தனியா  துணை  இல்லாம  ஸ்விம்மிங்  பூலில்  இருப்பதும்  அவரது  கூல்டிரிங்க்சில்  அசால்ட்டா  மருந்து  கலந்து  மயக்கமடைய  வைத்து  ரேப்  பண்ண   ட்ரை  பண்ணுவதும்  காட்சிப்படுத்திய  விதத்தில்  நம்பும்படி  இல்லை 


4  வில்லியின்  கையாளான  ஒரு  பெண்  தான்  கர்ப்பிணி  அல்ல  என்பதை  நாயகியிடம்  சொல்வதே  ஓவர், ஆனால்  இடம்  சுட்டிப்பொருள்  விளக்குவது  போல   அந்த  கர்ப்பிணிபேடை  எடுத்துக்காட்டுவது  எல்லாம்  ஓவரோ  ஓவர் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்

  போன  மாதம்  திரைக்கு  வந்த  படம்  இப்போது  அமேசான் பிரைம்ல  கிடைக்கிறது . பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும், வரலட்சுமி  ரசிகர்கள்  பார்க்கலாம்  , ரேட்டிங் 2.75 / 5 

0 comments: