Sunday, December 18, 2022

விட்னஸ் (2022) (தமிழ்) -திரை விமர்சனம்( கோர்ட் ரூம் டிராமா) @ சோனி லைவ் ஓடி டி


 நாயகி ஒரு  துப்புறவுப்பணியாளர். ஒற்றைத்தாய்.(சிங்கிள் மதர்) அவருக்கு  கல்லூரி  இறுதி ஆண்டில்  படிக்கும்  மகன்  உண்டு கணவன்  இறந்து விட்டதால்  தன் ஒரே  ஆதரவான  தன்  மகனைப்படிக்க  வைத்துப்பெரிய  ஆள் ஆக்க  வேண்டும்   என்ற  அவர்  கனவு  கானல்  நீர்  ஆகிறது

ஒரு  அபார்ட்மெண்ட்டில்  செஃப்டிக்    டேங்க்   அடைத்து  விடுகிறது. அதை  நீக்க  நாயகியின்  மகன்  நிர்ப்பந்திக்கப்படுகிறான். மனிதக்கழிவுகளை  மனிதனே  அகற்ற  சட்டத்தில்  தடை  இருந்தும்  நடைமுறை வாழ்வில்    அது  நீடிக்கிறது. விஷ வாயு தாக்கி  மகன்  இறக்கிறான்


அபார்ட்மெண்ட்  செகரட்டரி  இந்த  கேசை  நைசாக  ஒன்றும்  இல்லாமல்  ஆக்க  முயற்சி  செய்ய  நாயகி  ஒரு  கம்யூனிஸ்ட்  தோழரின்  உதவியோடு  வழக்கு  தொடுக்கிறாள் 


நாயகியின்  மகன்  குடி  போதையில்  இருந்ததால்  மூச்சுத்திணறி இறந்ததாக  பொய்யாக  போஸ்ட்  மார்ட்ட்ம்  ரிப்போர்ட்  ரெடி  ஆகிறது


அந்த  அபார்ட்மெண்ட்டில்  குடி  இருக்கும்  ஒரு  பெண் நாயகியின்  மகனின்   தோழி . அவளுக்கு  நீச்சல்  பயிற்சியாளராக  இருந்தவன்  . அபார்ட்மெண்ட்டில்  இருக்கும்  சிசிடிவி  கேமரா  க்ளிப்பிங்க்ஸ்  அந்தப்பெண்ணின்  மூலம்  கிடைக்கிறது 

அந்த  சாட்சியை    வைத்து  நாயகி  கோர்ட்டில்  அந்தக்கேசை  வென்றாரா? என்பது  தான்  திரைக்கதையின்  சாராம்சம் 


நாயகியாக  ரோகினி  அந்தப்பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார் கே பாக்யராஜின்  பவுனு  பவுனு தான்  படத்துக்குப்பின்  அவருக்குக்கிடைத்திருக்கும்  அழுத்தமான  பாத்திரம்  இது . உயிர்ப்புடன்  வாழ்ந்திருக்கிறார். சூப்பர்வைசர்  தன்னிடம்  தகாத  முறையில்  பேசும்போது  பளார்  என  அறை  கொடுக்கும்போது  அவரது  துணிச்சல்  அசத்துகிறது 


சாட்சியை கொண்டு  வந்து  தரும்  அபார்ட்மெண்ட்  பெண்ணாக  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  கச்சிதமான  நடிப்பு . நேர்  கொண்ட  பார்வை  படத்துக்குப்பின்   வலுவான  கதாபாத்திரம்  அவருக்கு . அபார்ட்மெண்ட்  வாசிகள்  அனைவரும்  அவரை  எதிர்க்கும்போது  தனி  ஒரு  ஆளாய்  துணிச்சலாய்  எதிர்ப்பதெல்லாம்  பிரமாதம். அம்மாவுடனான  உரையாடலில்   நெகிழ  வைக்கிறார்


கேசை  ஏற்று  நடத்தும்  வக்கீலாக  சண்முகராஜன் அசத்தலான  வாதங்கள். வழக்கமாக  அவ்ரை வில்லனாகவே  பார்த்து  இதில்  நல்லவராகப்பார்ப்பதில்  மகிழ்ச்சி 


ஒரு  காட்சியில்  வந்தாலும்  உயர்  அதிகாரியாக  வரும்  அழகம்பெருமாள்  தெனாவெட்டாக  நடித்திருக்கிறார்


மகனாக  வரும் ஜி  செல்வாவின்  நடிப்பு  கனகச்சிதம்


ஜட்ஜ்  ஆக  நடித்தவர்  கலக்கி  விட்டார் . நா தான்  கேஸ்  கொடு  எனும்  மலையாளப்படத்தில்  இப்படித்தான்  ஒரு  ஜட்ஜின்  நடிப்பு  மிகவும்  சிலாகிக்கப்பட்டது


ரமேஷ்  தமிழ்  மணியின்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  கச்சிதம்  பிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்திருக்கிறார்

ஒளிப்பதிவு , இயக்கம்  இரண்டையும்  செய்திருப்பவர்  தீபக்,  சமூக  விழிப்புணர்வுக்கான  கதையை  துணிச்சலாக  கோர்ட்  ரூம்  டிராமாவாக படைத்திருக்கிறார்.படத்தின்  க்ளைமாக்ஸ்  எதிர்பாராத  ஒன்று., அது  பற்றி  இரு  வேறு  கருத்துகள்  இருக்கக்கூடும், ஆனால்  இதுதான்  நிதர்சனம்


நாயகி  தன்  கடைசி  மாத  ச்ம்பளம் , பிஎஃப்  பணத்துக்காகப்போராடும்  காட்சி  தீர்ப்பு  வரும்  நேரத்தில்  காட்டப்படுவதால்  சரியாக அந்தக்காட்சியுடன்  ஒன்ற  முடியவில்லை , அதே  போல்  ஷ்ரத்தா  ஸ்ரீநாத்  தன்  அம்மாவின்  ஃபிளாஸ்பேக்  கதை  பற்றி  அம்மாவிடம்  உரையாடும்  காட்சி  மெயின்  கதைக்கு  தேவைப்படாதது


அனைவரும்  காண வேண்டிய  சமூக  விழிப்புண்ர்வுப்படம். சோனி  லைவ்  ஓடி டி  யில்  காணக்கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 

1  பீச்சுக்குப்போனியே? என்ன  விசேஷம் ?


 கடல்  மட்டும்  தான்  காசு  கொடுக்காம  பார்க்க  முடியுது 


2   எப்போ  அவங்க  வருமானம்  தடை  படுதோ  அப்போதான்  நாம  அவங்க  கண்ணுக்குத்தெரிவோம்


3  செஃப்டிக்  டேங்க்  க்ளீன்  பண்ண  எக்யூப்மெண்ட்ஸ்  உள்ள  வண்டி  வ்ந்தா  5000  ரூபா  செலவு  ஆகும்,  தனி ஆள்னா  1500 ரூபா  செல்வில்  வேலையை  முடிச்சுடலாம்’’ 


அடப்பாவிகளா,  3500  ரூபா   மிச்சம்  பிடிக்க  ஒரு  உயிரைப்பலி  கொடுத்துட்டீங்களா? 


4    நாங்க  பண்ண  வேண்டிய  வேலைகளை  எல்லாம்  நீங்களே  பண்ணிட்டா  அப்புறம்  போலீஸ்  நாங்க  எதுக்கு ?


 யாராவது  ஒருத்தர்  வேலை  செய்யனுமில்ல? 


5  என்னம்மா  உன்  வாய்  ரொம்ப  நீளுது ?

 உன்  கை  நீளும்போது  என்  வாய்  நீளக்கூடாதா?


6  தனக்கான  பொறுப்பைத்தட்டிக்கழிக்க  அடுத்தவங்க  மீது  பழிபோடும்  அதிகாரிகள்  தான்  இங்கே  அதிகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   சிசிடிவி  கேமராவில்  பதிவான  தன்  மகன்  சம்பந்தப்பட்ட  காட்சி  பற்றி  நாயகி  ரோகினி  ஆர்வமாகக்கேட்கும்போது  ஷ்ரத்தா    தன்  மொபைல் ஃபோனில்  மெமரி  கார்டில்  ஏற்றி  ஏன் அதைக்காட்டவில்லை ? அதே  போல்  வக்கீல்  ஆஃபீசில்  அதை ஒப்படைக்கும்போது  அவராவது    லேப்டாப்பில்  தான்  பார்த்த  காட்சியை  அவருக்குக்காட்டி  இருக்கலாம் 


2  அப்போலோ  ஹாஸ்பிடல்  அட்மின்க்கு  இருக்கும்  அறிவு  கூட  அப்பார்ட்மெண்ட்  செகரட்ரிக்கு  இல்லை ., பிரச்ச்னை  வந்ததும்  அந்த  சிசிடிவி  ஃபுட்டேஜை  அழித்திருக்கலாம், அல்லது  இது   கட்ந்த  சில  நாட்களாக  ரிப்பேர்  என  சாணக்கியத்தனமாய்  பதில்  சொல்லி  இருக்கலாம் 


3   அபார்ட்மெண்ட்  வாசிகள்  ஷ்ர்த்தாவை  காலி  பண்ணிடுங்க  என  சொல்லாமல்  உங்க  அபர்ட்மெண்ட்டை  யாருக்காவது  விற்று  விட்டு  நீங்க  கிளம்புங்க  எனத்தானே  மிரட்டனும் ? அவர்  என்ன  வாடகைக்கா  இருக்கார் ?  காலி  பண்ண ?


4  நாயகியின்  மகன்  தனக்கு  தோழன் ,  நீச்சல் பயிற்சியாளன்  என்பதை  ஷ்ரத்தா   சொல்லும்போது   நமக்கு  சரியாக  கனெக்ட்  ஆகவில்லை . முதலிலேயே  அந்தக்காட்சிகளைக்காட்டி  இருக்க  வேண்டும். அதே  போல   ஓப்பனிங்  சீனிலேயே  மகன்  இறப்பதாகக்காட்டும்  முன்  மகனைப்பற்றி  சில  காட்சிகள்  காட்டனும், அப்போதான்  நமக்கு  அந்த  கேரக்டர்  இறக்கும்போது  ஒரு  பரிதாபம்  பிறக்கும் . இல்லாவிட்டால்  யாரோ இறந்துட்டாங்க, நமக்கு  என்ன  ? என்றுதான்  ஆடியன்சுக்கு  தோன்றும் 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  எல்லாம்  எதுவும்  இல்லாத  ஆனால்  சமூக  விழிப்புணர்வு  ஊட்டக்கூடிய  கோர்ட்  ரூம்  டிராமா ., ஆனந்த  விகடன்  மார்க்  44    ரேட்டிங்  3 / 5 

0 comments: