Thursday, December 01, 2022

WHO'S A GOOD BOY ? (EI GUAU)- ( 2022) -சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் (


பிரம்மாண்டமான  தமிழ்ப்படங்கள்   ரிலீஸ்  ஆகும்போது  ஹாலிவுட்  தரத்துக்கு  எடுத்திருக்காங்க  என  ஆச்சரியப்பட்டு  நாம்  சிலாகிப்பது  உண்டு . இந்தப்படத்தைப்பார்க்கும்போது  தமிழ்ப்படங்களைப்பார்த்து  இவங்களும்  இப்படி  படங்கள்  எடுக்க  ஆரம்பிச்சுட்டாங்களா? என  கேட்கத்தோன்றுகிறது

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்    செமா ஸ்கூலில்  படிக்கிறான்.  அந்த  ஸ்கூல்க்கு  புதிதாக  க்ளாடியா எனும் ஒரு பெண்  அட்மிஷன்க்கு  வருகிறாள் . அவள்  அழகு  நாயகனை  பெரிதும்  கவர  எப்படியாவ்து  அவள்  அன்பைப்பெற  முடிவு  செய்கிறான்.நாயகியை  வீட்டில்  இருந்து  ஸ்கூலுக்கு  டிராப்  செய்வது , கூட  மாட  உதவி  செய்வது  என  எல்லா உதவிகளையும்  செய்கிறான். ஆரம்பத்தில்   க்ளாடியா  நாயகனிடம்  நன்றாகத்தான்  பழகுகிறாள். ஆனால்  கூடப்படிக்கும்  சக  மாணவிகள் நாம  எப்போதும்  நம்ம  பாய்  பெஸ்டிகளை  செல்ல  நாய்க்குட்டிகள்  மாதிரிதான்  நடத்தனும், நாம  வா  என்றால்  அவர்கள்  வர  வேண்டும், போ  என்றால்  போக  வேண்டும், சுருக்கமாகச்சொன்னால்  நம்ம  அடிமை  மாதிரி  தான்  அவங்களை  நடத்தனும்  என்கிறார்கள் .  அதைக்கேட்டு  கிளாடியா  மனம்  மாறுகிறது 


  நாயகனுக்கு  ஒரு  முறைப்பெண்   எலி  என்பவள் இருக்கிறாள் . அவளும், நாயகனும்  சின்ன  வயதில்  இருந்தே  க்ளாஸ்  மேட்ஸ்.  டீன்  ஏஜ்    வ்ந்த  பின்   எலி  தன்  அன்பை  நாயகனிடம்  தெரிவிக்க  முயலும்போது  நாயகன்  கிளாடியா  பின்னால்  சுற்றுவதை  அறிந்து   தன்  மனதுக்குப்பூட்டுப்போடுகிறாள்  எலி 


ஒரு  தருணத்தில்  புது  மாணவி  க்ளாடியா  வேறு  ஒரு   பையன்  கூட நட்பு  கொண்டிருப்பதைப்பார்த்து   நாயகன் அதிர்ச்சி  அடைகிறான்

  காலம்  ஓடுகிறது. காலேஜ்  ல  எல்லோரும்  பட்டமளிப்பு  விழாவில்  கலந்து  கொள்கிறார்கள் . அப்போது  கிளாடியா  நாயகனிடம்  நான்  என்  பாய்  ஃபிரண்ட்டை  பிரேக்கப்  பண்ணி  விட்டேன். நாம  காதலிக்கலாமா? என  கேட்கிறாள். அப்போது  நாயகன்  என்ன  முடிவ்  எடுத்தான்  ? என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகன்  செமா  வாக  செபாஸ்டின் டாண்ட்டே   ஸ்கூல்  ஸ்டூடண்ட்டாக  கச்சிதமாகப்பொருந்தி  விடுகிறார். நம்ம  ஊரு  தனுஷ் , சிவகார்த்திகேயன் , பிரசாந்த்  போன்ற  நடிகர்களின்  ஆரம்பக்கட்ட  படங்களில்  வருவது  போல   சாக்லெட்  பாய்  ஆக  வருகிறார்.  துறுதுறு  நடிப்பு


நாயகி  கிளாடியாவாக   சிரேனா  ஆர்டிஸ். . கிளாமர்  க்யூன்  ஆக  வலம்  வருகிறார் . இவரது  கேரக்டர்  டிசைன்  கொஞ்சம்  குழப்பமாக  வடிவமைக்கப்பட்டிருப்பதால்  நாயகன்  மட்டும்  அல்லாமல்  நமக்கும்  இவர்  மனதில்    யாரைத்தான்  விரும்புகிறார்? என்ற   சந்தேகம்  கடைசி  வ்ரை  எழுகிறது 


இன்னொரு  நாயகி  எலி  ஆக   லூசா  கச்சிதமான  நடிப்பு ., இவ்ர்  ஹோம்லி  லுக்கில்  மனம்  கவர்கிறார். நாயகன்  உடனான  ஃபிளாஸ்பேக்  தருணங்களை  நினைவு  படுத்தி  சிலாகிப்பதில்  அருமையான  முக  பாவனைகள் 


நாயகனின்  அம்மாவாக , மாமாவாக , தங்கையாக  நடித்தவர்கள்  அவரவர்  கேரக்டருக்கு  நியாயம்  செய்திருக்கிறார்கள் 


நாயகனின்  நண்பர்கள்  , தோழிகளாக  நடித்தவர்களும்  குறை  சொல்ல  முடியாத  அளவுக்கு  நடித்திருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு , எடிட்டிங்  ,  இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  சராசரி  தரம்  தான் 


ஒன்ற்ரை  மணி  நேரம்  ஜாலியாகப்போகும்  இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்ல  காணக்கிடைக்கிறது 

சபாஷ்  டைரக்டர்


1  க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்பு  வரும்  ஒரு  காட்சியில்  நாயகன்  சக  மாணவிகளைக்கண்டித்து  ஒரு  லெக்சர்  அடிக்கும்  காட்சி  நன்றாக  இருக்கிறது. பாய்  பெஸ்டிகளை  அடிமை  போல்  நடத்தும்  பெண்களுக்கு  சாட்டையடி. ஆனா  அந்த  சீனில்  அந்தப்பெண்கள்  சண்டைக்கு  வராமல்  கை  தட்டுவது  டிராமா  பார்ப்பது  போல்  செயற்கையாக  இருக்கிறது 


2    சக  மாணவர்கள்  உசுப்பேற்ற்யதால்  தான்  கிளாடியாவை  லவ்   ப்ண்ண  நாயகன்  முயற்சித்ததாகவும்  அவனது  உண்மையான  அன்பு  தன்  முறைப்பெண்  மேல்  தான்  எனவும்  சமாளித்த  விதம்   இயக்குநர்  சாமார்த்தியம் 

  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  நல்ல  பானத்தையோ , சாப்பாட்டையோ  உருவாக்குவதை  சமையல் செய்பவரின்  அன்பு  தான்  பொறுப்பு  எடுத்துக்கொள்கிறது 


2  தனக்கு  வரப்போகும்  துணை  யாராக  இருக்க  வேண்டும்? எப்படி  இருக்க  வேண்டும் ? என  ஒப்பீடு  செய்து  தேர்வு  செய்வதற்கான  எல்லா  உரிமைகளும்  பெண்ணுக்கு  உண்டு 


3  என்ன  பேசனும்? எதை  வெளிப்படுத்தனும்?னு  நினைக்கிறோமோ  அதை  அன்னைக்கே  அப்பவே  செய்யயனும்


4  உன்  மனசு  என்ன  சொல்லுதோ  அதைக்கேள். வேற  யாரையும்  ஐடியா  கேட்காதே!


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  அம்மாவை  தன்  மாமாவுடன்  தொடர்புபடுத்தி  அம்மாவிடமே  பேசும்  காட்சிகள்  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லாதவை 


2  கிளாடியா  தன்  வீட்டில்  தன்  பெற்றோர்    இருக்கும்போதே  அவர்கள்  அறியாத  வண்ணம்  தன்  பாய்  ஃபிரண்டுடன்   தப்பு  செய்ய  முயல்வது  அபத்தமான  காட்சி  என்றால்  நாயகியின்  பெட்  ரூமிற்கு  நாயகன்  கள்ளத்தனமாக   நுழைந்து  அதை  கதவிடுக்கில்  காணும்  காட்சி  அதை  விட  அபத்தம் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம  மட்டும்  இல்லை  , ஃபாரீனில்  கூட  இந்த  மாதிரி  மொக்கைப்படங்களை  எடுக்கிறார்கள்  என  ஆறுதல்படுத்திக்கொள்ள  நினைப்பவர்கள்  பார்க்கலாம்  ரேட்டின்  1.75 / 5 

0 comments: