Monday, December 05, 2022

QALA- கலா - (2022) (ஹிந்தி ) - திரை விமர்சனம் (சைக்காலஜிக்கல் டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

 

ஸ்பாய்லர்  அலெர்ட்


அம்மாவுக்கும் , மகளுக்கும்  இடையே  உள்ள  உறவுப்பிணக்குகள் , ஊடல்கள் , கோப,தாபங்கள் , கண்டிப்பு  பற்றிய  ஒரு  கதை. கதை  நடக்கும்  கால  கட்டம் 1930 - 1950 . சங்கீத  குடும்பத்தில்  பிறந்த  ஒரு  பெண்  எப்படிப்பட்ட  பிரச்சனைகளை  சந்தித்து  மேலே  வருகிறாள்  என்பதை  சைக்கலாஜிக்கல்  டிராமாவாக   மிக  நேர்த்தியாக  படைத்திருக்கிறார்கள் ,  படத்தின்  இயக்குநர்  ஒரு  பெண்  என்பதும் , நாயகி   மிகப்பிரபலமான , அற்புதமான  நடிகை  என  பெயர்  வாங்கியவர்  என்பதும்  ஹை  லைட்ஸ் 


சினிமா  உலகில்  புகழ்  பெற்ற   பாடகி  இந்த  நிலைக்கு  வர  என்ன  என்ன  சிரமங்கள் எல்லாம்  பட்டார்? என்னென்ன  தவறுகள்  எல்லாம்  செய்தார்?  புகழின்  உச்சிக்கு  சென்ற  பின்  குற்ற  உணர்வின்  காரணமாக  மன  நிலை  பாதிக்கப்பட்டு  எப்படி  வீழ்ச்சி  அடைந்தார்  என்பதும்  சொல்லப்படுகிறது 


நாயகியின்  அம்மா    பிரசவத்தில்  இரட்டைக்குழந்தை  பெற்றெடுக்கிறாள், ஆனால்  அவளிடம்  ஒரு  பெண்  குழந்தை  மட்டுமே  ஒப்ப்டைக்கப்படுகிறது.  இன்னொரு  குழந்தை  ஆண்  குழந்தை , ஆனால்  இறந்தே  பிறந்தது  என  சொல்லப்படுகிறது 


நாயகி  சிறு  வயதில்  இருந்தே  மிகவும்  கண்டிப்பாக  வளர்க்கப்படுகிறாள் . கர்நாட  சங்கீத  பாடகியாக  அவளுக்குக்கடுமையான  பயிற்சிகள்  தரப்படுகிறது என்னதான்  நாயகி  முனைப்பாக  சங்கீதம்  பயின்றாலும் அம்மாவுக்கு  பெரிய  அளவில்  திருப்தி  இல்லை 


 ஒரு  கச்சேரியில்  ஒரு   அனாதைப்பையன்  மிகப்பிரமாதமாகப்பாடுவதைக்கண்ட  நாயகியின்  அம்மா  அவனை தத்து  எடுத்து  வளர்க்க  முடிவு  எடுக்கிறாள் . நாயகியிடம்  நீ  திருமணம் செய்து  கொண்டு  உன்  கணவன்  வீட்டுக்குப்போய்  விடு . நான்  இவனை  வளர்த்து  சினிமாவில்  பாட  வைத்து  பெரிய  ஆள்  ஆக்கிக்கொள்கிறேன். பெண்களுக்கு  சினிமா  உலகம்  ஒத்து  வராது  என்கிறாள் 


ஆனால்  நாயகிக்கு  தான்  பாடகி  ஆக  விருப்பம், புகழுக்கு  ஏங்குகிராள். அம்மாவை  மீறி  அவள்  எப்படி  தன்  இலக்கை  அடைந்தாள்? அதற்கு  விலையாக  என்னென்ன  இழக்க  நேரிட்டது  என்பதுதான்  கதை 

நாயகியாக  த்ருப்தி  டிம்ரி பிரமாதமான  நடிப்பு,  ஏற்கனவே  இவர் 2017ல்  போஸ்டர்  பாய்ஸ் , 2018ல் லைலா  மஜ்னு  ஆகிய  படங்களில்  நடித்திருந்தாலும்  BULBBUL   படத்தில்  தான்  இவர்  நடிப்பு  பரவலாக  பேசப்பட்டது . மிக  அற்புதமான  நடிப்பு . மனோவியல்  ரீதியாக  பாதிக்கப்பட்டவராக , புகழுக்கு  ஏங்குபவராக , அம்மாவுக்குப்பயந்தவராக , சக  போட்டியாள்ர்  மீது  பொறாமை  கொள்பவராக  இவரது  நடிப்பு  சபாஷ்  போட  வைக்கிறது. இவரது  கேரக்டர்  டிசைன்  அற்புதமாக  வடிவமைக்கப்பட்டு  இருப்பதும்  பெரிய  பலம் . 28 வயதில்  இவர்  அடைந்திருக்கும்  உயரம்  வாவ் 


நாயகியின்  அம்மாவாக    ஸ்வஸ்திகா  முகர்ஜி. 22  வருடங்களாக  சினிமா  உலக  அனுபவம்  பேசுகிறது.  தில்  பேச்சாரா,  ஹிந்திப்படம்   பாதாள்  லோக்   அமேசான்  பிரைம்  வெப்  சீரிஸ்  இரண்டும்  இவரது   முக்கிய  அடையாளங்கள் . மக்ளைக்கண்டிக்கும்போதும்  சரி  , வளர்ப்பு  மகன்  மேல்  கொண்ட  பாசத்திலும்  சரி  பர்ட்ஃபெக்ட்  ஆன  நடிப்பு ,இவருக்கு 41  வயது  என்பதை  நம்ப  முடியவில்லை 

வ்ளர்ப்பு  மகனாக  பாபில்  கான்  கச்சிதமான  நடிப்பு . அப்பா  இர்ஃபான்  கான்  பெயரைக்காப்பாற்றி  விடுவார் . ஒரு  சாயலில்  ஏ  ஆர்  ரஹ்மான்  போல  இருக்கிறார் 


இயக்குநர்  அன்விதாதத்   மூன்று  விசயங்களை  நம்  கண்  முன்  நிறுத்துகிறார். அம்மாவுக்கும்  மகளுக்கும்  இடைப்பட்ட  உறவு , கண்டிப்பு , எதிர்பார்ப்பு,  பின்  மகள்  மேல்  நம்பிக்கை  இல்லாமல்  ஒரு  வளர்ப்பு  மகனை  தத்தெடுத்து  அவனை  பிரபல  பாடகன்  ஆக்க  முயல்வது , இதில்  பொறாமைப்பட்ட  நாயகி அவனுக்கு  பாலில்  மெர்குரி  கலந்து  கொடுத்து  அவன்  குரலை  சிதைப்பது  இதனால்  தன்  வாழ்வின்  எதிர்காலமே  போனதே  என்ற  மன  உளைச்சலில்  அவன்   தற்கொலை  செய்து  கொள்வது, பின்  நாயகி  புகழ்  பெற்ற  பாடகி  ஆவது , அதற்குப்பின்  குற்ற  உணர்வில்  மன  நோயாளி  ஆவது  என  ஒரு  சைக்காலஜிக்கல்  டிராமாவாக  அமைத்திருக்கிறார்


பாடல்கள்  , இசை  பின்னணி  இசை  மூன்றும்   முக்கிய  அம்சங்கள் . ஒளிப்பதிவு  ஓவியம்  போல்  இருக்கிறது , சித்தார்த்  திவான்  தான்  ஒளிப்பதிவு. நம்ம  ஊர்    மது  அம்பாட்  சாயலில்  நேர்த்தியான   ஒளிப்பதிவு. பாடல்களுக்கான  இசையை  அமித் த்ரிவேதியும் , பின்னணி இசையை சாகர்  தேசாயும்  செய்திருக்கிறார்கள் மான்ஸ்  மிட்டல்  தான்  எடிட்டிங் . கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  கட்  செய்திருக்கிறார். நான்  லீனியர்  கட்  படத்தின்  சுவராஸ்யத்தை  மேலும்  கூட்டுகிறது 


 நெட்  ஃபிளிக்சில்  ரிலீஸ் 


ரசித்த  வசனங்கள் 


1 கலை , கல்வி  இரண்டும்  ஆண்களுக்கானது   மட்டும்  இல்லை , பெண்களுக்கும் தான், ஆனால்  பெண்கள்  வெற்றி  பெற  கூடுதலாக  உழைக்க  வேண்டி  இருக்கும் 


2   எல்லா  விஷயத்தையும்  உள்ளேயே  வெச்சிருந்தா , மனசுக்குள்ளே  புதைச்சு  வெச்சிருந்தா பின்னொரு  நாளில்  பெரிய  பிரச்சனை  ஆகி விடும் 


3   சீக்கிரமா  பாட்டு  எழுதிக்கொடுத்தாதான்  திறமை  சாலி  என  அர்த்தம்  இல்லை 


4  வெறும்  செகரெட்டரினு  சொன்னாப்போதாதா?  லேடி செகரெட்டரினு   சொல்லனுமா? 


5    ஜெகனுக்கு  வாய்ப்புக்குடுத்தா  அவன்  உங்க  இடத்தை  அபகரிச்சுக்குவான்


நான்  ஒருவர்  இடத்தை  அபகரித்தேன்,  என்  இடத்தை  ஒருவர்  அபகரிப்பார்,  அவர்  இடத்தை  இன்னொருவ்ர்  அபகரிப்பார் , ஆனால்  சங்கீதம்  மட்டும் அ தே  இடத்தில்  இருக்கும்


6  உன்னை அவர் குயில்னு  சரியாதான்  சொன்னாரு, குயில்  எப்பவும்  அதுவா கூடு  கட்டாது ,  மற்றவங்க  கூட்டைத்தான்  அபகரிக்கும் 


7  நீ  க்‌ஷ்டப்[பட்டு  வாங்காத  ஒரு பெருமையை  உன்னுடையதுனு  சொந்தம்  கொண்டாடிக்க  முடியாது 


8  தன்  மகள்  எப்படிப்பட்டவளாக  இருந்தாலும்  ஒரு  அம்மா  அவளை  ஏத்துக்கனும்,  அன்  கண்டிஷனல்  லவ் 


9  காலம்  ஒரு  நாள்  மாறும்,  பாவம், காலத்தால  வேற  என்ன பண்ண  முடியும் சொல்லு 

சபாஷ்  டைரக்டர்


1   நமக்கு  காய்ச்சல்  வந்தா  வாய்ல  தெர்மா  மீட்டர்  வெச்சு  டெம்ப்ரேச்சர்  பார்ப்பாங்க, அதுல  பாதரசம்  இருக்கு , அது  பாடகர்  வாய்சை  பாதிக்கும்  அதனால  அவங்களுகு  கை  இடுக்கில் தான்  வெச்சுப்பார்க்கனும்., இந்த  காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  அதன்  மூலம்  வரும்  ட்விஸ்ட்  அபாரம் 


2   எதேச்சையாக  அம்மா  சொன்ன  பாதரச  தகவலை  வைத்து  நாயகி  பாலில்  பாதர்சம்  கலந்து கொடுத்து  ஜெகனின்  குரலை  காலி  ஆக்கும்  வில்லி  அவதாரம்  எதிர்பாராதது 


3   சினி  ஃபீல்டில்   ஒரு  பெண்  முன்னேற  எந்த  மாதிரி  முட்டுக்கட்டை  எல்லாம்  வரும்  என்பதை  விளக்கும்  காட்சி    ஸ்க்ரிப்டாக  கொடூரமாக  எழுதப்பட்டிருந்தாலும்  காட்சிப்படுத்திய  விதம்  கண்ணியம், ஒரு  பெண்  இயக்குநர்  என்பதால்  தான்  இது  சாத்தியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைகக்தையில்  சில  நெருடல்கள் 


1    ஒரு  பெண்  தன்  மகனின்  அல்லது  மகளீன்  முன்னேற்றத்துக்காக எந்த  தியாகமும்  செய்யத்தயராக  இருப்பார் என்பது  ஓக்கே, ஆனால்  சொந்த  மகளை  விட்டுட்டு  வளர்ப்பு  மகனை  முன்னிலைப்படுத்த  அவர்  செய்ய  முன்  வரும்  தியாகம்  அதிர்ச்சி  அளிப்பதாகவும்  நம்பகத்தன்மை  குறைவாகவும்  இருக்கிறது 


2   அம்மாவைக்கண்டு  பயந்து  நடுங்கும்  மகள்  அம்மா  செய்யும்  அதே  சாகசத்தை  செய்து    சினிமா  பட  உலகில்  காலடி  எடுத்து  வைப்பது  அதை  அம்மா  வேடிக்கை  பார்ப்பது  எப்படி ?


3  வலர்ப்பு  மகன்  தான்  ஆரம்பத்தில்  இறந்ததாக  சொல்லபப்ட்ட  முதல் குழந்தை  என  ட்விஸ்ட்  வரும்  என  எதிர்பார்த்தது  நடைபெறவில்லை , அது  ஏமாற்றம்


4   சின்மயி - வைரமுத்து  மீ  டூ  பிரச்சனை  தான்  பூடகமாக  கதைக்கரு  ஆக்கி  இருக்கிறார்கள், அதை  பூசி  மெழுக   சித்தரிக்கப்பட்டவை  தான்  வளர்ப்பு  மகன்  எக்ஸ்டா  ஃபிட்டிங். அதனால்  திரைக்கதையில்  போதிய    பலம்  கிடைக்கவில்லை 


 சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -    ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கான  சைக்காலஜிக்கல்  டிராமா.  ஸ்லோவாதான்  போகும்  ரேட்டிங்  3 / 5 

Qala
Qala.jpeg
Official poster
Directed byAnvita Dutt
Written byAnvita Dutt
Produced byKarnesh Ssharma
Starring
CinematographySiddharth Diwan
Edited byManas Mittal
Music byGuest Composition and Background Score:
Sagar Desai
Songs:
Amit Trivedi
Production
company
Distributed byNetflix
Release date
  • 1 December 2022
Running time
119 minutes
CountryIndia
LanguageHindi


0 comments: