Sunday, January 01, 2023

JAYA JAYA JAYA HEY(2022) -ஜெய ஜெய ஜெய ஹே - மலையாளம் - திரை விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்

 


JAYA JAYA JAYA HEY(2022) -ஜெய ஜெய ஜெய ஹே - மலையாளம் - திரை விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்

5 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீசில் 40 கோடி ரூபாய் வசூல் செய்த படம் , இந்த மாதிரி மினிமம் பட்ஜெட் படங்களின் வெற்றி தான் திரை உலகின் ஆரோக்யமான வளர்ச்சி , டொமெஸ்டிக் வயலன்ஸ் எனப்படும் திருமணம் ஆன பெண் கணவனால் துன்புறுத்தபடும் கதையை சீரியசாக சொன்ன படங்களான த கிரேட் இண்டியன் கிச்சன் ( மலையாளம் ) ,தப்பட் ( ஹிந்தி ) அம்மு ( தெலுங்கு) , டார்லிங்க்ஸ் ( ஹிந்தி ) போன்றவை என்ன மாதிரி திரைக்கதை அமைப்பைக்கொண்டனவோ அதில் காமெடி கலந்து கே பாக்யராஜ் பாணியிலும் வி சேகர் பாணியிலும் கலந்து கட்டி கலக்கி இருக்கிறார்கள் .இது குங்க் ஃபூ ஜோஹ்ரா என்ற ஃபிரான்ஸ் படத்தின் அன் அஃபிஷியல் ரீ மேக்

ஸ்பாய்லெர் அலெர்ட்

நாயகி கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி ஆசிரியரால் கவரப்படுகிறாள் .இருவரும் காதலிக்கிறார்கள் . ஆரம்பத்தில் பெண் சுதந்திரம் பற்றி வாய் கிழியப்பேசும் ஆசிரியர் போகப்போக தன் ஆணாதிக்க புத்தியைக்காட்டுகிறார். அவன் கூடப்பேசாதே, இந்த மாதிரி டிரஸ் போடாதே என நாயகியை டார்ச்சர் செய்கிறார். ஒரு கட்டத்தில் கை நீட்டி அடித்து விடுகிறார். இதனால் இவர்கள் லவ் பிரேக்கப் ஆகிறது

காலேஜ் லவ் மேட்டர் தெரிந்ததும் பெற்றோர் நாயகிக்கு திருமண ஏற்பாடுகளை அவசர அவசரமாக செய்கிறார்கள் , ஆனால் நாயகிக்கு டிகிரி முடிக்க ஆசை, ஆனால் யாரும் அவள் பேச்சைக்கேட்பார் இல்லை , கோழிப்பண்ணை வைத்திருக்கும் நாயகனுடன் திருமணம் நடக்கிறது

கணவன் ஒரு முன் கோபி . எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவன், மனைவியிடம் ரொமாண்டிக்காகப்பேசக்கூடத்தெரியாதவன். சின்னச்சின்ன விஷயத்துக்கு எல்லாம் கை நீட்டி அடித்து விடுபவன். நாயகி தன் அம்மாவுக்கு ஃபோன் போட்டு புகார் சொல்ல அவர்கள் பெரிதாகக்கண்டு கொள்ளவில்லை . ஆண்கள் அப்படித்தான், அட்ஜஸ் பண்ணிப்போம்மா என்கிறார்

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நாயகி யூ ட்யூப் பார்த்தே கராத்தே , குங்க்ஃபூ எல்லாம் ஓரளவு கற்றுக்கொள்கிறாள் இந்த முறை கணவன் அடிக்க வரும்போது நம்ம ஊர் வடிவேலுவை கோவை சரளா வெளுத்து வாங்குவது போல போட்டுத்தாக்கி விடுகிறார்

இரு குடும்பத்திலும் பஞ்சாயத்து நடக்கிறது , கணவனின் நண்பன் ஒரு ஐடியா தருகிறான். நாயகி கர்ப்பம் ஆகி விட்டால் , குழந்தை பிறந்து விட்டால் சரியாகி விடும், உனக்கு அடங்கிதான் நடப்பாள் என்கிறான். இதனால் கணவன் நயவஞ்சகமாக நடித்து நாயகியுடன் நட்பாக இருபபது போல் காட்டிக்கொள்கிறான்

நாயகி கர்ப்பம் ஆன பிறகு ஒரு கட்டத்தில் நாயகனின் சதித்திட்டம் தெரிய வருகிறது ., இதற்குப்பின் நாயகி என்ன முடிவெடுத்தாள் எனப்தே திரைக்கதை

நாயகியாக தர்சனா ராஜேந்திரன் பிரமாதமான நடிப்பு . மொத்தப்படத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார். . இவரது சிரித்த முகமே இவரது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் . கணவனை முறைப்பது , மாமியாரை நக்கலாகப்பார்ப்பது , அம்மாவிடம் மன்றாடுவ்து என பல காட்சிகளில் கண்களாலேயே நடித்து விடுகிறார். இவர் ஒல்லியாக இருப்பதால் சண்டைக்காட்சிகள் நம்பும்படி இருக்கிறது

கணவனாக பஷீல் ஜோசஃப் ஒரு அக்மார்க் தாழ்வு மனப்பான்மை கொண்ட முன் கோபி கேரக்டரை கண் முன் கொண்டு வருகிறார், நாயகியைப்பெண் பார்க்க வரும்போது தனிமையில் பேசும்போது கூட தன் பிஸ்னெஸ் பற்றி மட்டும் பேசுவது வெடிச்சிரிப்பு . நாயகியிடம் அடி வாங்கி அந்த வேதனையை வெளியே சொல்லாமல் உடல் மொழியிலேயே காட்டி விடுவது அசத்தல்

கணவனின் தங்கையும் அவள் கணவனுடன் சண்டை போட்டு விட்டு வந்து இங்கே வீட்டில் வாழாவெட்டியாக இருப்பது இந்தக்கால தம்பதியினரிடம் சகிப்புத்தன்மை இல்லாத நிலையைக்காட்டுகிறது

க்ளைமாக்ஸ்ல கோர்ட் சீன்ல அந்த ஜட்ஜ் அம்மாவாக நடித்தவர் பிரமாதமான டயலாக் டெலிவரி, அசத்தி விட்டார் நடிப்பில் ., சமீப காலப்படங்களில் ஜட்ஜ் கேரக்டர் டிசைன் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது , நா தான் கேஸ் கொடு படத்தில் இதே போல ஜட்ஜ் ந்டிப்பு பேசப்பட்டது

திரைக்கதை மிக நுட்பமாக , ஜனரஞ்சகமாக அமைக்கப்ட்டிருக்கிறது , ஒரிஜினல் படத்தில் 100 நிமிடம் தான் , இந்தப்படத்தில் 140 நிமிடங்கள்

பப்லு அஜூவின் ஒளிப்பதிவு நேர்த்தி அங்கித் மேனன் இசையில் இரண்டு பாடல்கள் ஆல்,ரெடி ஹிட் , பின்னணி இசையும் சிறப்பு ஜான் குட்டியின் எடிட்டிங்கில் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் செல்கிறது

திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் விபின் தாஸ் சமூகத்துக்குத்தேவையான நல்ல கருத்தை நகைச்சுவையாகச்சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறார், பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவரும் படம்

ரசித்த வசனங்கள்

1 டைவர்ஸ் ஆன ஆண்கள் யாராவது நிம்மதியா வாழ்ந்து பார்த்திருக்கியா?

2 பெண்களால் தனியா வாழ முடியும், ஆனா பெண் இல்லாம ஆண்களால் தனித்து வாழ முடியாது

3 ஒரு பெண்ணுக்குத்தேவையானவை எவை?னு தெரியுமா? நீதி , சமத்துவம், பெண் சுதந்திரம்

4 என் சம்சரம் களறி வித்தை முழுசாக்கத்துக்கிட்டாளா? என்பதை எப்படி கண்டு பிடிக்கறது?

மறுபடி ஒரு தடவை அடி வாங்கிப்பாரு

5 மாப்ளைக்கு சிக்கன் இல்லையா? வெறும் கடலைக்கறியை மனுசன் தின்பானா? மாப்ளை, நீங்க சாப்பிடுங்க

6 இன்னைக்கு இடியாப்பமா?

தினமுமே இங்கே சமையல் இதுதான்

7 பெண் பார்க்க வந்திருக்கீங்க, எதுனா பேசுங்க மாப்ளை

உங்க ஊர்ல கோழி , சிக்கன் எல்லாம் என்ன விலை ?

கோழி தவிர வேற ஏதாவது பேசுங்க

சரி , வாத்து என்ன விலை ?

சுத்தம்

8 மாப்ளையை விட பொண்ணு அழகா இருந்தாதான் நல்லது

9 நீங்க உடுத்தும் உடை உங்க உரிமை , அதை கேலி பண்ண எவனுக்கும் உரிமை இல்லை

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பொதுவா லவ் பண்ற ஆண்கள் தங்கள் சுயரூபத்தை உடனே காட்ட மாட்டாங்க. தன் காரியம் முடிந்த பின் தான் அது நடக்கும். ஆனா ஆசிரியரா வரும் காதலர் நாயகியைக்கை நீட்டி அடிப்பதெல்லாம் ஓவரோ ஓவர்

2 நாயகன் முரடனாகவும், ரவுடி போலவும் சித்தரிக்கப்படுகிறார், ஆனால் அவரோட தங்கை வாழா வெட்டியாய் வீட்டில் இருப்பதைக்கண்டுக்கவே இல்லை , மச்சானை மிரட்ற மாதிரி காட்சியோ , வசனமோ இல்லை

3 நாயகனும், நண்பனும் ஒரு சதித்திட்டம் போட்டிருக்காங்க , அப்படிப்பட்ட சூழ்நிலைல நண்பன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை வாட்சப் ஓப்பன் பண்ணி தன் மனைவி முன்பே அதை கேட்டு மாட்டிக்குவாங்களா யாராவது ?

4 நாயகனின் தங்கை வாழாவெட்டி , அண்ணன் தன் மனைவியுடன் வாழலை , இப்படிப்பட்ட குடும்பத்தில் எப்படி பெண் கொடுப்பாங்க ?? நாயகியின் பெற்றோர் அது பற்றிக்கவலையும் படலை , கேள்வியும் கேட்கலை

5 ஜட்ஜ் கேரக்டருக்குனு ஒரு மரியாதை இருக்கு , என்னதான் காமெடி படம்னாலும் கோர்ட்டுக்கு லேட்டா வந்த ஜட்ஜ் மன்னிப்புக்கேட்பதும் கோர்ட்டுக்கு வந்த பின் செல் ஃபோனில் பேசுவதும், பின் கோட் மாட்டிக்கொள்வதும் சொதப்பல் காட்சிகள்

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான காமெடிப்படம் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம் , பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் தவிர்க்கவும் , ரேட்டிங் 3 / 5


Jaya Jaya Jaya Jaya Hey
Jaya Jaya Jaya Jaya Hey.jpeg
Directed byVipin Das
Written by
  • Vipin Das
  • Nashid Mohamed Famy
Produced by
  • Lakshmi Warrier
  • Ganesh Menon
Starring
CinematographyBablu Aju
Edited byJohnkutty
Music byAnkit Menon
Production
company
Cheers Entertainments
Distributed byIcon Cinemas Release
Release date
  • 28 October 2022
Running time
140 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget5–6 crore[1]
Box officeest.42crore [2]

0 comments: