Sunday, September 01, 2019

திராவிட பவன்கள்

1  இன்ஸ்பெக்டர் , முகமூடித்திருடர்களைப்பற்றி எதுனா க்ளூ கிடைச்சுதா?கொள்ளை அடிச்ட்டுப்போகும்போது ஒருத்தன் பாரத் மாதா கி ஜே-ன்னானாம், இன்னொருத்தன் தமிழ் வாழ்கன்னானாம், திருடனுக்கு பயங்கர தேசப்பற்று , தமிழ்ப்பற்று இருக்கும் போல==============

2 தலைவரே! நம்ம ஆளுங்க தமிழ் வாழ்கனு கோஷம் போட்டாங்க, பிரமாதம்,நன்றி
நம்ம சேனல்கள் பேரு என்ன?
சன் டிவி கே டிவி
ஏன் தமிழ் டி வினு பேர் வைக்கலை?
அது வந்து.... ரெட் ஜெயண்ட் மூவிஸ் நம்முதுதானே?
அது தமிழா? ஏன் இப்டி ஊரை ஏமாத்திட்டு இருக்கீங்க?
ஆமா=============


3 டாக்டர் ,நின்னுக்கிட்டே இருந்தா கால் வலிக்கிது..

உக்காந்துட்டே இருந்தா இடுப்பு வலிக்கிது..
படுத்துட்டே இருந்தா முதுகு வலிக்கிது..
பாட்டுகேட்டுக்கிட்டே இருந்தா காது வலிக்கிது..
TV பாத்துட்டே இருந்தா கண்ணு வலிக்கிது .இன்னா பண்ண?
கடல்ல குதிச்சு நீந்திட்டே இருங்க,வலியே தெரியாது


=============


4 தலைவரே! பாரத் மாதா"கி ஜே அப்டினா நம்மாளுங்களுக்கு ஏன் காண்டாகுது?J ன்னா லே அப்பவும் ,இப்பவும்,எப்பவும் கலக்கம்தான்,பயந்து கிடப்பது
கழகம்தான்==============


5 மேடம்,ஆடை படத்துல உங்க முழுத்திறமையையும் காட்டி நடிச்சிருக்கீங்களாமே?டைரக்டருக்கு நன்றிக்கடன்"பட்டிருக்கீங்க?இல்ல,எல்லா சீன்களையும் கட் பண்ணாம அனுமதிச்ச சென்சாருக்கு தான் நன்றிக்கடன்"பட்டிருக்கேன்===============


6  கல்யாணம் ஆகாதவன் யார் கூடவும் ,மத்தவங்களுக்காக பொண்ணு பாக்க போக கூடாதா? 😕😕😕😕 இப்புடி ஒரு விதி எதுக்கு உருவாக்கி வச்சுருக்கானுங்க?மயக்கம் என்ன? தனுஷ் மாதிரி நீங்க கரெக்ட்"பண்ணிட்டா?ஒரு முன்ஜாக்கிரதைதான்===========


7 ஆடை பட தயாரிப்பாளர் மேல மோசடி வழக்கு பதிவு ஆகி"இருக்காம்;ஏன்?
டீசர்ல அமலாபால் அம்மா போன் நெம்பர் திரைல வந்ததைப்பாத்துட்டு நம்மாளுங்க போன் பண்ணினப்ப யாரும்"எடுக்கலையாம்,இது ஒரு"மோசடி தானே?=============


8 யுவர்"ஆனர் ,பதவி ஏற்கும்போது பதவிப்பிரமாணத்துல,என்ன இருக்கோ அதை"மட்டும்தானே சொல்லனும்?ஆமா,சட்டப்படி அப்டித்தான்
ஆளாளுக்கு எக்ஸ்ட்ரா பிட் போட்டு விட்டிருக்காங்க,ஒரு"மாச"சம்பளத்தைக்கட் பண்ணிடுங்க,அடுத்த தடவை கரெக்டா நடந்துக்குவாங்க=============


9 தலைவரே! நாம ஸ்கோர்"பண்ணிடக்கூடாதுனு ஆளுங்கட்சி ஆட்கள் முனைப்பா வேலை" செய்யறாங்களாமே?நாம எப்பய்யா ஸ்கோர் பண்ணினோம்? சிஸ்டம்"பார்த்துட்டு"மவுஸை வேணா"ஸ்க்ரோல்"பண்றோம==============


10 தலைவரே!இன்னைக்கு என்ன தேதி?இது,தெரியாதா?சின்னக்குழந்தை கூட சொல்லுமே?ஜூன் 19
தமிழ் வாழ்க ஏமாத்து க்ரூப்தானே நீங்க?தமிழ் மாசம் ,தமிழ்"தேதி சொல்லுங்க பார்ப்போம
அது"வந்து",அது...வந்து..ஆக..=============


11 தலைவரே!உங்க பசங்க ,பொண்ணுங்க என்ன படிக்கறாங்க?ஏதோ"டிகிரி
சரி, தொடக்கப்பள்ளிப்படிப்பு தமிழ் மீடியமா?இங்க்லீஷ் மீடியமா?
இதென்ன கேனத்தனமான கேள்வி?நம்ம ஸ்டேட்டஸ் என்ன?வசதி என்ன? இங்க்லீஷ் மீடியம்தான்
அப்போ தமிழ் வாழ்க னு கோஷம் போட்டது?
ஊரை ஏமாத்தத்தான்===============


12 தலைவரே! நம்ம ஆளுங்க தமிழ் வாழ்கனு கோஷம் போட்டாங்க, பிரமாதம்,நன்றி
நம்ம சேனல்கள் பேரு என்ன?
சன் டிவி கே டிவி
ஏன் தமிழ் டி வினு பேர் வைக்கலை?
அது வந்து.... ரெட் ஜெயண்ட் மூவிஸ் நம்முதுதானே?
அது தமிழா? ஏன் இப்டி ஊரை ஏமாத்திட்டு இருக்கீங்க?
ஆமா
=================13 அதர்வா நடிச்ச 100 படம் நல்லா தாம் இருக்கு ..
நம்ப முடியல,அவர்"இன்னும்,10 படமே தாண்டலையே?அதுக்குள்ள 100 படம் முடிச்ட்டாரா?


=================


14 ஆடை என்ன விலை?வெட்டு இல்லாதது 500 ருபா,வெட்டுப்பட்டது"50 ருபா
வெட்டுப்பட்டத எவன் வாங்குவான் ,சென்சார"கட் பண்ணாத "ஆடை" சிடி குடுங்க
பட ரிலீசுக்குப்பின்===============


15 காலை"ல இருந்து,ரொம்ப பிசி, நிமிர்ந்து பாக்க முடியாத அளவு வேலை இருந்தது


ஓ,என்ன வேலை?
FB ல ஸ்டேட்டஸ் போடற"வேலைதான்


==============


16 தினகரன் = ஸ்லீப்பர்செல் லாக எங்க"ஆளுங்க,அங்குட்டு இருக்காக,சமயம்"வரும்போது நான் கண் அசைச்சா போதும் ஆட்சி கவிழும்


இபிஎஸ் = அங்கே கொஞ்சம பாரு"கண்ணா,தங்க"தமிழ்செல்வன் தான் நம்ம ஸ்லீப்பர்செல்லு.இது"எப்படி இருக்கு?=============


17 பிக்பாஸ் 3 போட்டியாளர்களிலேயே ரொம்ப வெண்மையானவங்க"யாரு?


லாஸ்லியா?
இல்லை,ஷெ"ரின்" தான்
எப்டி?
ரின் தான் பரிசுத்த வெண்மை தருமே?===============


18 சார்,பேப்பர் வெய்ட் இருக்குமா?


அதெப்பிடிங்க? பேப்பர் லேசா தானே இருக்கும்?எப்டி வெய்ட்டா இருக்கும்?
சுத்தம்.===============


19 தலைவரே!தமிழ்நாடு பூரா ஆரிய பவன்கள்தான் இருக்கு,நம்ம கெத்தைக்காட்டநம்ம கட்சி செலவுல திராவிட பவன்கள் அமைக்கலாமா?


யோவ் நமக்கு பொதுவா மக்கள் பணத்தை சாப்ட்டுதான் பழக்கம்,மக்கள் வந்து நம்ம கடைல சாப்பிடறதா?===============

20 சார்,உங்க கம்பெனில கார் தருவீங்களா?


சம்பளம் தரவே 45 நாள் ஆகும்,ஒவ்வொரு மாசத்துக்கும்=================

0 comments: