Saturday, August 17, 2019

அமலாபால் நடிச்ச "ஆடை" vs முதல் பாவம் அபிலாஷா 32+

1  மனைவிகள்

சமையலறையில் கத்திகள் இருந்தும் .புருசனை தாக்க
பூரிக்கட்டையை தேர்ந்தெடுக்கிறார்கள்...அது ஏன்?

கத்தி ல குத்துனா,கீறுனா ரத்தக்கறை வந்துடும்,அதை கழுவனும்,துலக்கனும்.பூரிக்கட்டை பிரச்னை இல்லை,பெண்கள் புத்திசாலிகள்================


2 தலைவரே!இந்திய தேசியக்கொடில காவி கலர் இருக்கு,அதை மாத்தனும்னு கிளம்புவோமா?விளம்பரத்துக்கு விளம்பரம்,நமக்கும் பொழுது போகும்,37 பேரும் தண்டமாதானே இருக்கோம்?


கம்னு இருய்யா,தேசியக்கொடியை அவமதிச்சா தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளுத்துடுவாங்க=============


3 டாக்டர் ,துக்கம் தொண்டைய அடைக்கும்போது ஒரு கூலிங் ஃபீர் சாப்பிட்டா சரியா போயிடும் னு சொல்றாங்களே ?நிஜமா?


ஆமா,அது போய் கல்லீரல் ல போய் அடைச்சுக்கும்,உயிர் சீக்கிரம் போய்டும்,துக்கமும் போய்டும்


================


4 டாக்டர்,நானும் என்னெல்லாமோ செய்து பார்க்கிறேன், ரைஸ்தான் குறையுது தவிற நம்ம வெயிட் குறைய மாட்டேங்குது


ரைஸ் ரெகுலரா சாப்ட்டா வெய்ட் குறைஞ்சாதான் அது சர்ப்பரைஸ்,ஓட்ஸ்,கோதுமை ,ராகி (கேழ்வரகு) இப்டி சாப்டுங்க==============


5 நன்னடத்தை காரணமாக ஓராண்டுக்கு முன்பே விடுதலை..ஆகறீங்களாமே"மேடம்?அப்டி என்ன நன்னடத்தையை அவங்க"கண்டுட்டாங்க?


ஜெயில் ல இருந்து வெளில ஷாப்பிங்கோ,சினிமாக்கோ போனா சொன்ன டைம்க்கு திரும்ப வந்துடுவேன்,இது நன்னடத்தை தானே?===========


6 டைரக்டர் சார்,இந்த ராஜ ராஜசோழன் முதல்ல எடுபுடியா அமாவாசையா இருந்தவர்தான்னு எப்டி சொல்றீங்க?


அமைதிப்படைல அப்டித்தானே காட்னாங்க?

அட ராமா,அது நாகராஜசோழன் ,இது ராஜராஜசோழன்,நமக்குத்தமிழும் தகராறு,வரலாறும் தகராறு==========


7 டைரக்டர் சார் ,நாளை காலை இயக்குநர் சேரனை தாக்கி அறிக்கை விடப்போறீங்களா?


ஏன் கேட்கறீங்க?

சோழனை தாக்கியாச்சு ,வரிசைப்படி அடுத்து சேரன்,பாண்டியன் தானே?==========


8 டாக்டர் ,உடல் எடை குறைய


வெந்தையம்- 1 TSP
கொள்ளு- 1 TSP
சீரகம் - 1 TSP
ஓமம் - 1 TSP
மல்லி- 2 TSP
கருஞ்சீரகம்- 2 TSP
மஞ்சள்த்தூள்- 1 TSP
சோம்பு - 1 TSP
Flaxseed- 2 TSP
த்ரிபலா பவுடர்- 5 TSP (TSP = டீ ஸ்பூன்)மிக்ஸ் பண்ணி குடிக்கனுமாமே?

பர்ஸோட வெய்ட் வேணா குறையும்===========


9 டாக்டர்,ஜீரணக்கோளாறு சரியாக வயிற்றைக்காயப்போட்டா போதுமாமே?


மழை சீசன் இப்ப,துவைச்ச துணியையே காயப்போட முடியறதில்லை============


10 சார்,கட்சி மாறிடலாம்னு இருக்கே்ன்,பேப்பர்"போட்ரலாமா?


அவசரப்படாதய்யா,முன்னணி"நடிகை"யாரையாவது"கண்டபடி திட்டி அறிக்கை"விடு,கட்சியே உன்னை நீக்கிடும்,டக் னு கட்சி மாறிடலாம்,அத்தையை நலம் விசாரிச்ச மாதிரியும் ஆச்சு,அத்தை பொண்ணுக்கு லவ் லெட்டர்"குடுத்த மாதிரியும் ஆச்சு=============


11 ஆபீசுக்கு ஏன் லீவு?


புளிச்ச மாவுல ஊத்துன தோசை சாப்ட்டதால உடம்புக்கு சேரலை சார்

இந்தப்புளிச்சுப்போன கதையை இன்னும் எத்தனை பேரு எத்தனை தடவைதான் சொல்வீங்க?


===================


12 சிந்துபாத் படத்துக்கு ஏ"சர்ட்டிபிகேட் தராம யூ சர்ட்டிபிகேட்"தந்ததை கண்டிக்கிறேன்


ஏன்?

சிந்து bath னா சிந்து குளிக்கிற சீன் இருக்கும்ல?அப்போ 18+ , ஏ தானே தரனும்?=================13 டாக்டர் எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு போன சரக்கு உடம்புக்கு நல்லதா?

அது என்ன லாஜிக்?

உடம்புக்கு நல்லது செய்யும், நோய் தீர்க்கும் மருந்து எக்ஸ்பயரி டேட் முடிஞ்சுபோனபின் உபயோகிச்சா அது கெடுதல், அதே ரிவர்ஸ் ஃபார்முலால உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் சாராயம் கெட்டா நல்லதுதானே?
==================
14 டாக்டர் , வலது கால் கட்டை விரல்ல கல் இடிச்சுட்டா அதிர்ஷ்டம் வருமாமே? நிஜமா?

ரத்தம் தான் வரும்
==================15 டாக்டர் , வாசக்கதவு நிலைப்படில தாண்டறப்ப கூரைல நங்-னு இடிச்சுக்கிட்டேன், வீக்கம் வருமா?

முதல்ல நங்-னு சத்தம் தான் வரும், அப்புறம் ரத்தம் வரும், கடைசியா தான் வீக்கம் வரும்

================
16 தலைவரே! எம். பி ஆகி என்ன சாதிச்சீங்க?

தமிழ் வாழ்கனு கோஷம் போட்டேன்

அப்றம்?
அந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங்ல விட்டோம், நெ 1


அருமை , அப்றம்?
1 ந்தேதி வந்தா சம்பளத்தை ஏ டி எம் ல எடுக்க வேண்டியதுதான்
=================
17 தலைவரே!நம்ம எம்.பி ங்க 38 பேரும் தமிழ் வாழ்கனு கோஷம்"போட்டு கலக்கிட்டாங்க


நன்றி

ஆனா கையெழுத்தை மட்டும் இங்க்லீஷ்ல போட்டாங்க,அது ஏன்?
அது வந்து ஆங்,வாழு வாழ விடு"பாலிசி,அந்நிய மொழி வாழவும் வாய்ப்பு குடுக்கனும்ல?


==============


18 டாக்டர்,தலைல 2 சுழி இருந்தா 2 பொண்டாட்டி கட்டலாமாமே?நிஜமா?

பொண்ணை கட்னா பொண்டாட்டி ஆகும்,பொண்டாட்டியை கட்டுனா அதுக்கு ஆல்ரெடி புருசன் இருப்பானே?


===============


19 அமலாபால் நடிச்ச "ஆடை" படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரு?

முதல் பாவம் படத்துல அபிலாஷாக்கு அமைச்ச அதே ஆள்தான்


===============


20  ஜோசியரே!வீட்ல ஊறுகாய் இருந்தா குபேரன் வருவாராமே ,நிஜமா?

அது நிஜம்னா ஊறுகாய் விற்கற கடைக்காரங்க கோடீஸ்வரர்களா ஆகி இருப்பாங்களே?


================

0 comments: