Tuesday, September 24, 2019

கட் அவுட் க்கு கெட் அவுட் சொன்ன தானைத்தலைவா

1  தமிழகத்தில், 'கட்-அவுட்' வைக்கக் கூடாது என அறிவித்து, பிரகடனமும் செய்து, செயல்படுத்திய ஒரே கட்சி, எங்களின், ம.தி.மு.க., தான்!- , வைகோ:

கட் அவுட் க்கு கெட் அவுட் சொன்ன தானைத்தலைவா அப்டினு ஒரு கட் அவுட் பார்த்தோமே? அது நம்ம கட்சி ஆளுங்க தான?


---------------------
2      அமித் ஷாவின், ஹிந்தி திணிப்புக் கருத்துகளை கண்டித்து,  மாவட்ட தலைநகரங்களில், மாபெரும் போராட்ட, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்-ஸ்டாலின்:

நமக்கும் பொழுது போகனுமில்ல? 


ஹிந்தி ஒழிக அமித்ஷா வீழ்காப்டினு க்ட் அவுட் வெச்சுடப்போறாங்க ,புடிச்சு உள்ளே போட்டுடுவாங்க 


================


 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும், மின் வாகனங்களுக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு,  மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படும்;-பத்திரிகை செய்தி:


   ஷாக் சர்ப்பரைஸ் நியூஸ்


மயில் வாகனம்னு பேர் இருந்தாக்கூட அவரு வருமான வரி கட்ட வேண்டியதில்லையா?

==============

 பொதுவாக, ஆறுகள், நீர்நிலைகள் கோடை காலத்தில் வற்றியிருக்கும். அந்த நேரத்தில் தான், துார் வாருவர். ஆனால், இப்போது ஆறுகளில், கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்ட பின், துார் வாருவது எதற்காக? - தினகரன் : 

எதிர்க்கட்சிகள் இப்டி தூர் வாரி தூற்றத்தான்

================

5 ,   தி.மு.க.,வில் சாதாரண தொண்டனால், ஒரு போதும், முதல்வராக ஆக முடியாது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தான், அக்கட்சியில் தலைவராக முடியும்; முதல்வராக முடியும். ஆனால், அ.தி.மு.க.,வில் யார் வேண்டுமானாலும், தலைமை பொறுப்புக்கு வர முடியும்.-ஓ.எஸ்.மணியன் 


அண்ணே! பக்க்த்து இலைக்குப்பாயாசம் போடுங்க , அப்டியே நமக்கும்,,,,


=================
6  வாழ்க்கைமுறை கோளாறுகளால், நோய்கள் ஏற்படுகின்றன. வாழும் முறையில் மாற்றங்களை மேற்கொண்டால், நோய்களை சரி செய்ய முடியும். இந்த மாற்றம் தொடர்பான உத்வேகத்தை, மக்களிடம் ஏற்படுத்தவே, 'பிட் இந்தியா' இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இந்த திட்டம் வழிகோலும்.-அஸ்வினிகுமார் சவுபே 


பிட் இந்தியாவா? இந்தியாவை பிட் பிட்டா துண்டாட நினைக்கும் சதி இது அப்டினு எதிர்க்கட்சிகள் கிளம்புவாங்களே?

=================

7   தமிழகத்தின் முதல்வராக, அண்ணாதுரை பொறுப்பேற்றதும், தமிழகத்தில் மாற்றங்கள் வரத் துவங்கின. சட்டசபையில், 'சென்னை மாகாணம்' என்று இருந்ததை, 'தமிழ்நாடு' என மாற்றினார். 'மெட்ராஸ்' என இருந்ததை, 'சென்னை' என மாற்றினார். சென்னை மாநகரில் அறிஞர்கள், கலைஞர்களுக்கு சிலைகள் வைத்தார்.- வைகை செல்வன் 


கலைஞருக்கு சிலை வெச்சதும் அண்ணா தான்னு ஒரு கூட்டம் கிள்ம்புமே

==================? கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளுக்கும், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தான் இனிமேல் கேள்விக் தாள்கள் இருக்கும். தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு மலையாளத்தில் போதுமான வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த தேர்வுகளுக்கும் விரைவில், மலையாளத்தில் வினாத்தாள் தயாரிக்க நடவடிக்கை மே  
 மின் வாகன உற்பத்தி தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்  -  பினராயி விஜயன் 

திராவிட வாசம் வீசுதே? தமிழ்நாடு டூர் வந்துட்டுப்போனாரா?

================சர்தார் வல்லபபாய் படேலை எதுக்கு வம்புக்கு இழுக்கறார்னு யாரும் சந்தேகப்”படேல் -”

================


10   நம்பத் தகுந்த கூட்டணி கட்சியில்லை என்பதை, காங்கிரஸ், மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.-மாயாவதி 

இன்னும் எத்தனை டைம் நிரூபிச்சா அவங்க கூட கூட்டணி வைக்க மாட்டீங்க? 

 ============
11  

பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' - மாயாவதி பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் வருமோ?


=================

1 2  நான் தமிழர்களை திட்டவில்லை. தமிழை வைத்து அரசியல் நடத்துபவர்களைதான் நன்றி கெட்டவர்கள் என சொன்னேன்'' - பொன்.ராதா

தமிழ் நாட்ல தமிழை வெச்சு அரசியல் பண்ற கட்சி ஏகப்பட்டது இருக்கு , யாரைச்சொல்றீங்க?


==============


13    இம்மாத இறுதிக்குள் 

நீர் நிலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு'கல்தா!'

பணிகளை முடிக்காத, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி, தலைமை செயலருக்கு, அவர் அதிரடி உத்தரவு


 தண்ணி இல்லாக்காட்டுக்கு மாத்திடுவாங்களோ?


================


14  தி.மு.க.வினர் நடத்தும் ஹிந்தி போதக பள்ளிகளை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும்= எச்.ராஜா  #  அப்றம் டொனேஷன்  எப்டி கறக்க முடியும்?

================


15 நேர்மை என்பது எள்ளுமுனை அளவாவது இருக்குமானால் போராட்டம் நடத்தும் முன் தி.மு.க.வினர் நடத்தும் ஹிந்தி போதக பள்ளிகளை சமச்சீர் கல்விக்கூடமாக மாற்ற வேண்டும். இல்லையேல் உங்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்வர்-எச்.ராஜா 

 நேர்மையா? நேர்மைங்கற சொல் வர்றதால ஹமாம் சோப் விளம்பரத்தைக்கூட அரசியல்வாதிகள் பார்க்கறதில்லையா,ம்

=========================

0 comments: