Sunday, September 01, 2019

ஜோசியரே!வாழ்க்கைல பிக்பாஸ் லாஸ்லியா கிடைக்குமா?

1   குருவே!எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை அறிவாளியாகப் பிறக்கும் என்பது நிஜமா?


அதுக்காக ஏழு முட்டாள் குழந்தைகளைப் பெத்துக்கிட்டு ஏழரையைக்கூட்டவா?==============


2 டியர், தோசை சுடும் போது மட்டும் கோவம் வர்றமாதிரி சண்டை போடாதீங்க.. தோசைக்கரண்டி உடைஞ்சிடக் கூடாதேனு கஷ்டப்பட்டு அமைதியா நிக்க வேண்டிருக்கு


ஓஹோ,தோசை சுட்டதுக்கப்புறம்,சண்டை போடலாமா?

அப்ப சண்டை போட்டா சுட்ட தோசையைப்பிச்சு பிச்சு போட்டுடுவேன்
அப்போ புரோட்டோவா சுடு,ஈசி எனக்கு


==============


3 ஒரு நல்ல காபி க்கு தர்ற மரியாதையே அதை ஆறுவதற்கு"முன்பே குடிக்கறது.. தான்


ஓஹோ,அப்பொ cold காபி க்கு எப்டி மரியாதை"தர்றது?================

4 கணவன் அன்பு கிடைக்காததால் தான் பெண்கள் சிலர் ட்விட்டர், fb அதிக நேரம் செலவிடுகின்றனரா?

அப்போ ஆண்கள் ஏன் அதிகம் இணையம் வருகின்றனர்...!!

அன்பு"கிடைக்காம இங்கே"வர்ற பொண்ணுங்களுக்கு அன்பு காட்டத்தான் −=============


5 சாதா பயணம் ,அதீத சிறப்புப்பயணம் என்ன வித்யாசம்?


சிம்பு VS தனுஷ்

புரியல


============


6 களவாணி 1
களவாணி 2
என்ன வித்தியாசம்?

நெ1 களவாணி யால தான் சமூகத்துக்கு அதிக ஆபத்து,சட்டத்தின் பிடியில் மாட்டிக்காம சாமார்த்தியமா சாட்சி இல்லாம திருடுவான்
============
7  ட்விட்டரில் இதுவரை எந்த பெண்ணிடமும் கடலை போடாதவன் என்ற கர்வம் எனக்கு உண்டு!


ஓஹோ!FB ல?

நோ

வாட்சப்ல?
மெயில்"சேட்டிங்க்?
நெவர்
அதுவும்"கிடையாது;

அப்ப உனக்கு நெட்"கனெக்சன் எதுக்கு தண்டமா?


============8 மழை
மாமழை
என்ன வித்யாசம்?

மாமழை ன்னா தொடர்ச்சியா பெய்யும் பெரு மழை தானே?
ச்சே,ச்சே.மாங்கா மரத்துல இருந்து கொத்து கொத்தா மாங்கா காத்தடிச்சு விழுவது


=============9 சென்னை,சேலம் என்ன வித்தியாசம்?

நகரம் ,"மா"நகரம்


===========


10 மழை பொழியாத வானத்துக்கு நாங்கள் கறுப்புக்கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப்பதிவு செய்தோம்,இதோ சென்னையில் மழை! எங்கள் முயற்சியால் பொழிந்த இந்த மழைக்கு நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை


============11 மழைனு ஸ்டேட்டஸ் போடுறதுக்குள்ள மழை நின்னுட்டா எப்படிதான் ஸ்டேட்டஸ் போடுறது,?

சிம்ப்பிள்
மழை
மழை நின்னுடுச்சு
மழை மறுபடி வர்ற மாதிரி இருக்கு
இப்டி ஸ்டேட்டஸ் மேல ஸ்டேட்டசாப்போடுங்க
லைட்டா தூறுது


============12 தமிழ் மிஸ் தன்யா = அறம் செய்ய விரும்பு னு உலகத்துக்கு சொன்னது யார்?

லொள் மாணவன் = அது சரியா தெரியல டீச்சர் ,ஆனா"அறம்"செய்யவிரும்பு,படம் ஹிட் ஆகும்னு நம்பிக்கை குடுத்து ,கால்ஷீட் குடுத்து,நடிச்சுக்குடுத்தது மேல் உதட்டின் மேல் மச்சம் உள்ள female நயன்தாரா டீச்சர்.


=============13 ஜட்ஜ் = சுற்றுப்புறத்தை சுத்தபத்தமா வெச்சிருக்கறதுல இந்தியாவிலேயே கேரளாதான் நெ 1 ,வெரிகுட்,எப்படி உங்ளால முடியுது?

நாங்கதான் குப்பைகளை எல்லாம,தமிழ்நாடு பார்டர்ல கொட்டிடறமே?


==============

14 காலை"ல இருந்து,ரொம்ப பிசி, நிமிர்ந்து பாக்க முடியாத அளவு வேலை இருந்தது


ஓ,என்ன வேலை?

FB ல ஸ்டேட்டஸ் போடற"வேலைதான்

============15 பிக்பாஸ் 3 போட்டியாளர்களிலேயே ரொம்ப வெண்மையானவங்க"யாரு?

லாஸ்லியா?
இல்லை,ஷெ"ரின்" தான்
எப்டி?
ரின் தான் பரிசுத்த வெண்மை தருமே?


===============


16 சார்,பேப்பர் வெய்ட் இருக்குமா?

அதெப்பிடிங்க? பேப்பர் லேசா தானே இருக்கும்?எப்டி வெய்ட்டா இருக்கும்?
சுத்தம்.


===============17 தலைவரே!தமிழ்நாடு பூரா ஆரிய பவன்கள்தான் இருக்கு,நம்ம கெத்தைக்காட்டநம்ம கட்சி செலவுல திராவிட பவன்கள் அமைக்கலாமா?

யோவ் நமக்கு பொதுவா மக்கள் பணத்தை சாப்ட்டுதான் பழக்கம்,மக்கள் வந்து நம்ம கடைல சாப்பிடறதா?


=============

18  உடன்பிறப்பே!ஆளுங்கட்சியை ஒழிக்க"ஒரு"வழி"கண்டுபிடிச்ட்டேன்,அதிருப்தியாளர்கள்,பதவி கிடைக்காதவர்கள்,வெந்தது ,வேகாதது இப்டி யார் வந்தாலும் அவங்களை சேர்த்துக்கறது,எப்டி நம்ம சாணக்கியத்தனம்?


தலைவரே!இதுக்குப்பேரு மொள்ளமாரித்தனம் ,கேப்மாரித்தனம்,அங்கே துரோகியா இருந்தவன் இங்கே மட்டும்..?

===============

19 உங்க ஜாதகப்படி உங்க வியாபாரத்துல லாஸ் கிடைக்கும்


ஜோசியரே!அதை விடுங்க,வாழ்க்கைல பிக்பாஸ் லாஸ்லியா கிடைக்குமா?அதைப்பார்த்து சொல்ங்க============

20 என்ன செய்தாலும் திருப்தியடையாமல் குறை சொல்லும் உறவுகளை என்ன செய்யலாம்?

அப்டி என்னென்ன செஞ்சீங்க?

ரவா உப்புமா
கோதுமை உப்புமா
சேமியா உப்புமா
ஒரே நாள்ல இத்தனை உப்புமா செய்யறது ரொம்ப தப்புமா


===================

0 comments: