Wednesday, September 18, 2019

கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
1  60 வயதிலும் கணவரின் கண்ணுக்கு மனைவி ஐஸ்வர்யராயாக தெரிந்தால்"என்ன அர்த்தம்?கல்யாணம் ஆனதுல இருந்தே மனசளவுல அவன் அபிஷேக் பச்சனுக்கு துரோகம் பண்ணி இருக்காப்டினு அர்த்தம்=-============


2 டாக்டர்,கேரட்... மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு னு சொல்றாங்களே ,அது நிஜமா?ஆமா,ஆனா கேரட்"விலை"கிலோ 80 ருபா ங்கறதை மறந்துடனும்,விலையைக்கேட்டா டென்ஷன்"ஆகிடுவீங்க

=========

3 ஜட்ஜ் = பாலியல் பலாத்காரம் பண்ணுனியா?கைதி = அய்யா ,நான் போராளிங்க.
ஜட்ஜ் = கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஆசை வார்த்தை சொன்னியா?
கைதி = ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சுனுதாங்க சொன்னேன்,அது தப்பா புரிஞ்சிக்கிடுச்சு


=============


4 ஜட்ஜ் = சம்மன் அனுப்புனோம் ,ஏன் ஆஜர் ஆகல?கைதி − சாமி வந்துடுச்சுங்க
என்னம்மா கத விடறே? சாமி முதல் பாகம் 2013 ல வந்துடுச்சு
2 ம் பாகம் 2018 ல வந்துடுச்சு,உனக்கு மட்டும் ஸ்பெஷலா 2019 ல சாமி வந்துதா?


===========


5 தலைவரே!தேர்தல்ல ஜெயிச்சா நீங்க நடத்தற சாராய ஆலைகளை மூடுவீங்களா?னு ஒருத்தர் கேட்டாராமே?ஆமா,மூடீட்டோம்
சபாஷ்,சாராய ஆலையையா?
இல்ல ,கேள்வி கேட்டவரோட ட்விட்டர் அக்கவுண்ட் ,FB A/C , பேங்க் A/C எல்லாத்தையும் சப்ஜாடா மூடீட்டோம்,யாரு கிட்ட?=============


6 லஞ்ச் ஓவரா?ச்சே!ச்சே! டிபனோ,லஞ்ச்சோ,டின்னரோ எதுவா இருந்தாலும் லிமிட்டாதான்,ஓவரா எல்லாம் கிடையாது,டயட்=============


7 டாக்டர்,மதிய வேளையில் தூங்குபவர்கள் அதிகம் யோசிக்கும் திறன் கொண்டவர்கள் என்பது உண்மையா?ஆமா,வேலை ,வெட்டி இல்லாதவங்கதான் மத்தியானம் தூங்குவாங்க,எதிர்காலத்துல நாம என்ன பண்ணப்போறோம்?எப்டி சம்பாதிக்கப்போறோம்னு அதிகம் யோசிக்க வேண்டி இருக்கும்


==============


8 ஜட்ஜ் = சுடிதார் போட்டு அதுக்கு மேல சேலை கட்டி இருக்கீங்களே எதுக்கு?பேராசிரியை நிர்மலா தேவி = போலீஸ் விசாரணைல இருக்கும்போது இரண்டு அடுக்கு பாதுகாப்பு
================


9 உங்க நாலாவது பொண்ணுக்கு நான்டி அப்டி னு பேர்"வெச்சிருக்கீங்களே?ஏன்?3 வது பொண்ணுக்கு ஆல்ரெடி நான்சி னு வெச்சாச்சு,சி க்கு அடுத்து டி தானே?=============


10 யுவர் ஆனர் ,பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கைதி மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கார்இதை சொன்னது யாரு?செக்கப் பண்ண டாக்டரா?
இல்லை,மனநிலை பாதிக்கப்பட்ட குற்றவாளியே சொன்னார் ,நமக்கு டாக்டர் fees மிச்சம்===============


11 குருவே!வயதாகி விட்டாலே அறிவுரை சொல்லத் தகுதி வந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் சிலர் என்ற கருத்து சரியா?தவறா?தனது ஆயுட்கால அனுபவ அறிவை இலவசமாக இளைஞர்களுக்கு வழங்க நினைப்பது முதுமை,
நீ யார் எனக்கு அறிவுரை சொல்ல?என பொங்குவது இளமை=============


12 அப்பா ,ஒரு கதை சொல்லுஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க
அவங்க விஜய்"ரசிகையா? எப்டி தெரியும்?
வடை சுடறதுன்னாலே அவங்கதானே?===============


13 டீச்சர்,நியூசிலாந்து என்பதை சிலர் தூய தமிழில் புதிய சிலாந்து னு சொல்றாங்களே?இது சரியா?


தமிழை வளர்க்கறேன்
தமிழைக்காப்பாத்தறேன் னு இறங்கவங்க பெரும்பாலும் தமிழை கொல்றவங்களே! தமிழகத்தை சூறையாடுபவர்களே!


=================


14 வாழ்நாள்லயே மேக்சிமம் பத்து தடவை மட்டுமே கட்ற கல்யாணப் புடவைய எதுக்கு அவ்ளோ காஸ்ட்லியா எடுக்குறாங்க?. 😏😏


சில நடிகைகள் போல நாலஞ்சு கல்யாணம் பண்ற மாதிரி இருந்தா பரவால்ல,வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு"கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை பூரா நினைச்சுப்பார்க்க விலை உயர்ந்ததா எடுத்தா என்ன?================


15 குருவே!பொண்டாட்டியை

சமாதானப்படுத்த, வீட்ல பீரோவில் இருக்கும்
சேலையையே பேக் பண்ணி கிப்டா கொடுத்தாலும்
பீரோ பூரா அவ்ளோ சேலை.னு சிலர் ஸ்டேட்டஸ் போடறாங்களே!அது நிஜமா?
கண்டிப்பா தெரியாது
பொண்டாட்டிங்களுக்கு ஞாபகசக்தி,மோப்ப சக்தி ஜாஸ்தி, புதுப்புடவை வாசம் ,பீரோ புடவை வாசம் அத்துபடி=================


16 சார்,லோன் செக்சன்ல புதுசா ஜாய்ன் பண்ணி இருக்கேன்,யார் யாருக்கு லோன் தரலாம்?யார் ,யாருக்கு லோன் தரக்கூடாது?


டாக்குமெண்ட்ஸ் கரெக்ட்டா இருந்தா யாருக்குவேணாலும் லோன் தரலாம்,ஆனா கட்சில இருக்கற ஒரு பயலுக்கும் லோன் தந்துடாத.டீக்கடைல வாங்கற 8 ருபா பஜ்ஜிக்கே கடன் சொல்றவனுங்க===================


17 கறி வாங்கும் எல்லோருக்கும் கொழுப்பு, எலும்புமாக தரும் மட்டன் கடைக்காரர்கள், கடைசியாக, யாருக்கு தான் அந்த நல்ல கறியை தருவாங்க?
கடை ஓனரோட ஓனரான அவரோட சம்சாரத்துக்கு


================


18 ஞாபக சக்தியை வளர்க்கும் ,கணக்கிடும் ஆற்றலை பெருக்கும்னு வெண்டைக்காய் பற்றி ஒரு மேட்டர்"படிச்சேன் ,அது உண்மையா டாக்டர்.?
ஆமா,ஒரு உபரித்தகவல் ,மேட்டர் னா முருங்கைக்காய்தான்


===============


19 முழுக்கை சட்டை போட்டு முழங்கைவரை மடிச்சு விட்டுட்டு ஸ்டைல்னு அலையறவங்க புல் பேண்ட் போட்டு முழங்கால் வரை மடிச்சு விட்டுட்டு திரிவாங்களா ?
தாராளமா திரியலாமே?பொண்ணுங்க டிரஸ்சிங்க்ல தான் கெண்டைக்கால்தெரிஞ்சாலே அண்டை வீட்டார் முதற்கொண்டு பொறணி பேசுவாங்க,ஆம்பளை எப்டி டிரஸ் பண்ணா என்ன?


=================


20 சார் ,உங்க ஜவுளிக்கடைல" காட்டன், லினன், சில்க், பெங்களூரி சில்க், ஷிபான், சன்டே"மன்டே சேரி, கலந்து கட்டி எடுக்கலாம்னு வந்திருக்கேன்
அடடா,முதல்ல பணத்தைக்கட்டி புடவையை வாங்குங்க,அப்புறமா தனித்தனியாவோ கலந்தோ"கட்டிக்குங்க ,உங்க விருப்பம்


================


0 comments: