Tuesday, August 13, 2019

அட்டென்ஷன் சீக்கிங்க் அத்தி வரதர்

1 வருங்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட, எந்த கட்சியுடனும், கூட்டணி அமைக்க மாட்டோம்.-  தேவகவுடா: 


எங்க நாட்டில் கூட டாக்டர் ராம்தாஸ்னு ஒருத்தர் இதே மாதிரி டய;லாக்கை இதை விட ஃபோர்சா சொல்லிட்டு இருந்தாரு

===============

2   காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராகுலுக்கு மட்டுமே தகுதி உள்ளது. ஆனால், பதவியில் நீடிக்க முடியாது என, அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்-பீட்டர் அல்போன்ஸ்:

 கூட்டிக்கழிச்சுப்பார்த்தா காங் கட்சித்தலைமைக்கு யாருக்குமே தகுதி இல்லை, தலைமை இல்லாத கட்சினு சொ,ல்லறாரு போல 

=============

3 : எந்த தேர்தலிலும், அ.தி.மு.க., தோற்றால், அதற்கு அடுத்த தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறும். அது தான், இதுவரை நடந்திருக்கிறது. எனவே, வேலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி -.!***துணை முதல்வர், பன்னீர்செல்வம்


 வாயைக்கொடுத்து மாட்டிக்கிட்டாரு ,. அப்போ 2021   சட்டமன்றத்தேர்தல்ல அதிமுக தோற்குமா?


===============

4  மத்திய அரசின் தேச பாதுகாப்பு பயங்கரவாத ஒழிப்பு, என்.ஐ.ஏ., சட்டத்தால், சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக,  ஸ்டாலின் கூறுகிறார். கூட்டணி கட்சிக்காக, அவ்வாறு பேசும் அவரிடம், மக்கள் ஏமாறக் கூடாது-=அர்ஜுன் சம்பத் 

அவரு எந்த ஜோக் சொன்னாலும் சிரிப்போம், சீரியசா எடுத்துக்க மாட்டோம்

=================

5   ஓட்டு வாங்க, தி.மு.க.,வினர், பணப் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து, கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால், வேலுார் லோக்சபா தேர்தல், ரத்தானது. யாரால் தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அவரே மீண்டும் போட்டியிடுகிறார்.-ஜி.கே.வாசன் :


 தகவலுக்கு நன்றி , அப்போ வரவு நல்ல உறவு - தொகுதி மக்கள் குஷி

===============


6   இதனால், மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்-ஜி.கே.வாசன் 

ஜனங்களுக்கு கொண்டாட்டம் தான், ஜாக்பாட் அடிச்சிருக்கு மீண்டும்’’


=========:


7. அக்கட்சி வேட்பாளரை, டிபாசிட் இழக்கச் செய்யும் வகையில், கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும்.-ஜி.கே.வாசன் :-ஜி.கே.வாசன் :


 கூட்டணிக்கட்சியினரா எல்லா ஓட்டையும் போடப்போறாங்க, ஜனங்க தானே போடனும்?

=================
8 ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது, அ.தி.மு.க., அரசு தான். இத்திட்டத்துக்கு அடிக்கல் மட்டுமே நாட்டி விட்டு, தி.மு.க., தான் அதை நிறைவேற்றியதாக, ஸ்டாலின் கூறுவது, உண்மைக்கு மாறானது. -கே.பி.முனுசாமி  

அரசியல்வாதின்னாலே வாய்க்கு வந்ததை அடிச்சு விடறவங்க தானே?

==============


9  ஸ்டாலின், தரம் தாழ்ந்து தான் பேசுவார்; அவரால் தரமாக பேச முடியாது.-கே.பி.முனுசாமி  

அவரால் தரமாகவும் பேச முடியாது , தாமாகவும் ( சுயமா) பேசவும் முடியாது ட், துண்டுச்சீட்டு பார்த்து தான் பேசுவாரு

================= 

10  '  பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு, கங்குந்தி உட்பட பல இடங்களில் கட்டிய தடுப்பணை உயரத்தை, 40 அடியாக உயர்த்தி உள்ளது. இதை, தமிழக அரசு தடுத்து நிறுத்தவில்லை.=பாலகிருஷ்ணன்

 கோர்ட் உத்தரவிட்டாலே அவங்க மதிக்கறதில்லை

===============


11  மக்கள் பிரச்னைகளை, இந்த அரசு தீர்ப்பதில்லை. தமிழகத்திற்கு, இந்த ஆட்சி தேவையா? அ.தி.மு.க., அரசை, வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், விரைவில் நடத்தப்படும்.'-பாலகிருஷ்ணன்

 அவங்க பிரச்சனையே பெரும் பாஅடா இருக்கு, ஆட்சியைத்தக்க்க வைக்கவே நேரம் சரியா இருக்கு

============
12  முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நாளை, கருப்பு தினம் என்றே கூறலாம். -காதர் மொய்தீன்

ஆளுங்கட்சியின் மீதான் வெறுப்பு தினம்னும் கொண்டாடலாம்

==============


13 சிறுபான்மையினரின் மத உரிமைகளில் தலையிடுவது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறிச் செய்யும் சட்ட முரண். முத்தலாக் செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில், இச்சட்டம் கொண்டு வருவது, பா.ஜ.,வின் எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.  -காதர் மொய்தீன்

முஸ்லீம் ஆண்களுக்கு கொண்டாட்டம், பெண்களுக்கு திண்டாட்டம்


==============

14  டில்லியில், மாதம், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, கட்டணம் கிடையாது,'' -, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் 

 இந்த ஒரு ,மேட்டரை ப்வெச்சே பிரதமர் ஆகிடலாம்னு பிளான் போடறாரு


ஷாக்கிங் நியூஸ்

==========

15 ராகுல் கூறியதால் தான், இந்தப் பதவியை ஏற்றேன். ஆனால், கட்சித் தலைவர் பதவியில், அவருக்கு பதிலாக நான் இருக்க முடியாது. வீணாக, என்னுடைய பெயரை இழுக்க வேண்டாம்-பிரியங்கா  

 உங்க கணவர் பெயரை இழுக்கலாமுங்களா? 


அதே ராகுல் கூறினால் கட்சித்தலைவர் பதவியை ஏற்பேன்னு சொல்ல வர்றாரா?

====================


16 மதுக்கடை ஊழியர்கள், 'ஐ.டி., கார்டு' எனப்படும், அடையாள அட்டை அணியவில்லை எனில், நடவடிக்கை எடுக்கப்படும்' - 'டாஸ்மாக்' நிர்வாகம் 


மப்புல மறந்துட்டோம்னா ஒத்துக்க மாட்டீங்களா?

=================


 விபரம் தெரியாம எதிர்க்கட்சிங்க + இந்த விலைக்க்குறைப்புக்கு ஆளுங்கட்சியே காரணம்னு  சொல்லிடப்போறாங்க 

===================


 அட்டென்ஷன் சீக்கிங்க் அத்தி வரதர்


================


19  அரசு வேலை வாங்கி தருவதாக, பலரிடம், 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த, திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு துறை ஊழியர், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் உட்பட மூவர் மீது, போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்

 நல்லா விசாரிங்க, தன்கியா எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் நடத்திட்டு இருக்கப்போறாங்க 


==================


20 மதுரையில் உள்ள, ஓட்டல் ஒன்றில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிராமணர்களின் போராட்டத்தை அடுத்து, அந்த உணவின் பெயர் நீக்கப்பட்டதுடன், ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கடிதமும், எழுதி கொடுத்தார்.


ஹோட்டலுக்கு ஓசி விளம்பரம்


======================

0 comments: