Wednesday, August 14, 2019

கஸ்தூரி"அக்காவும் இசக்கி தம்பியும் 38+

1  பட டைட்டில் 8 எழுத்து

ரிலீஸ் ஆகற தேதி 8
மாசம் 8 வது"மாசம்
8/8/2019=8+8+2+0+1+9=28 இதுலயும் ஒரு 8 . இதுல என்ன குறியீடு? அஷ்டமத்துல சனி னு எடுத்துக்கலாமா?

எட்டுத்திக்கும் புகழ் பரப்பும்னு ம் எடுத்துக்கலாம்============


2 சிட்டிசன் ல வர்ற அத்திப்பட்டி தான் அத்தி"வரதரோட "சொந்த ஊரு னு யாரும் இன்னும் கிளம்பலையா?


=============


3 அத்திவரதரைப் பார்க்கச் செல்லும் பலரும்..அங்கு இருக்கும் சிக்கல்களைப் பற்றியும்..சங்கடங்களைப்பற்றியும் குறைகூறுகிறார்களே அது ஏன்?


மனுசனோட"கண்ணுக்கு மைனஸ்தான் முதல்ல தெரியும்.
நிறைதான் எல்லாமே எனும் அர்த்தத்தைக்கூட
மறைமூர்த்தி கண்ணா னுநெகடிவ்வா சொல்ற மாதிரி
குறை ஒன்றும் இல்லை================


4 அனுஷ்கா இல்லாத ஊருக்கு நயன் தாரா அஸ்கா சர்க்கரை


===============


5 இன்றைய ஆண்கள் தேடுவது,

மனம் படைத்த பெண்களை அல்ல...
பணம் படைத்த பெண்களைத் தான்...என்ற கருத்து உண்மையா?

பொண்ணு அழகா இருந்தா போதும்னு ஏழைப்பெண்ணை கட்டிக்கிடட ஒரு கோடி ஆண்கள் பட்டியலை வெளியிட முடியும்.பொருளாதார பின்புலம் இல்லாத ஆணைக்கட்டிக்கிட்ட பத்து பொண்ணுங்க பேரு தர முடியுமா?


=================


6 ஏற்கனவே இருக்கற ரெக்கார்டை முறியடிப்பவர் ஸ்டாரு,
புதுசா ஒரு ரெக்கார்டை ஒவ்வொரு முறையும் உருவாக்குபவரே அல்ட்டிமேட் ஸ்டாரு


=======================


7 பெண்கள் நகம் வளர்ப்பதன் காரணங்கள்1 வெங்காயம் ,பூண்டு இத்யாதிகளை உரிக்க

2 காதலனை,கணவனை நறுக்னு கிள்ள
3 ஒரு பிரச்சனை வர்றப்ப மகாத்மா காந்தி சொன்ன மாதிரி ஆயுதமா உபயோகிக்க


-=================


8 அத்தி வரதர் ஸ்பெஷல் துளசி;

அத்தி வரதர் டூர் பிளான்
அத்தி வரதர் பிரசாதம்;
இப்டி"யாரும் இன்னும் பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலையா?===============


9 டாக்டர் ,கல்யாணம் பண்ணதும் புள்ள பெத்துக்கனும்னு சுத்தி இருக்குற ஆளுங்க,சொந்தக்காரங்க

உசுரு எடுக்குறாங்க

🤦🤦

ஏன்?

இப்பவெல்லாம் தம்பதிகளுக்குள்"அடிக்கடி சண்டை வருது,பிரிஞ்சுடறாங்க.சட்டு புட்டுனு குழந்தை"பெத்துக்கிட்டா அன்யோன்யம் கூடும்.============


10 டாக்டர்",போறபோக்க பாத்தா சென்சூரி போட்ருவேன் போல.

உடம்ப குறச்சே ஆகனும்.

1தினசரி அதிகாலை 5 மணிக்கு 4 கிமீ வாக்கிங் ,1 கிமீ ஜாக்கிங்க் 1 கிமீ ரன்னிங்
2 அரை மணி நேரம் கிணற்று நீச்சல்
5 அசைவம் தவிர்
3 வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கனும்
4 யோகா


================

11 நெகடிவ் டேக் போடறது,
ஒரு நடிகரை , குடும்ப"வாழ்வை மடட் ரகமா சித்தரிப்பது னு ஈடுபடற ஐடிகளை சஸ்பென்ட் பண்ணிட்டா ஒரு பயம் இருக்கும்,,வேற புது அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்க மாட்டானா?னு கேட்கறவங்களுக்கு பாலோயர்ஸ் போய்டுமே?அடியைப்பிடிடா பாரதப்பட்டானு மறுபடி முதல்ல இருந்து மேல வரனும்


================


12 ஆடி மாசத்தை முன்னிட்டு பிரிக்கப்பட்ட புதுமணத்தம்பதிகளை ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு வாங்கனு நம்பி வீட்டு பெருசுங்க ஏமாந்து அனுப்பிடறாங்க,நம்மாளுக கேப்ல கெடா வெட்டிடறாங்க


==============13 நான்புதுசா ஒரு கண்ணியமான மலையாளப்படம் இயக்கப்போறேன்
டைட்டில்
கஸ்தூரி"அக்காவும்
இசக்கி தம்பியும்


================14 குருவின் பெயரை காப்பாற்றிய சிஷ்யர்கள்
கே பாக்யராஜ் (பாரதிராஜா)
ஆர் பாண்டியராஜன் (பாக்யராஜ்)
இரா பார்த்திபன் (பாக்யராஜ்)
குருவை மிஞ்சிய சிஷ்யர்
குரு பெயரை கெடுக்கும் இயக்குநர்

ஷங்கர் (SAC)
குருவே இல்லாத ஏகலைவன்
மணிரத்னம்
அட்லீ (ஷங்கர்)


===================

15  சமீபத்திய மரணங்கள் சாப்பாடு சம்பந்தப்பட்டவருடையதாகவே இருப்பதை கவனித்தீர்களா?அது"தற்கொலையோ ,கொலையோ,இயற்கை மரணமோ


1 சரவணபவன் அண்ணாச்சி
2 காபி டே ஓனர்
அன்ன லட்சுமி க்கு கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டா இப்டி தான்

இப்டி ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?==============

16 8/8/2019 8pm அப்போ மோடி உரை என்றதும் ஆளாளுக்கு பணமதிப்பிழப்பு னு புரளி கிளப்பிட்டு இருக்காங்க.காஷ்மீர் ,370 பத்தி எதுனா சொல்வாரா இருக்கும்


================


17 சமீப காலத்தில் பெண்களின் வரவேற்பைப்பெற்ற இருவர்
1 அத்தி வரதர்
2 அஜித்குமார் #NerkondaParvai


================


18  எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கதரிசி.இப்படி நம்மாளு எசகு பிசகா கிசு கிசு ல சிக்கி பிரச்சனை உதய மாகும்னு முன் கூட்டியே கணித்துதான் "ட்ரியோ ட்ரியோ ட்ரியோ" சத்தியம் நீயே ,தர்மத்தாயே னு பாடுனாரு


===============


19 பழைய தலைவர் − அம்மா
புதுத்தலைவர் = மகன்
இடைக்காலத்தலைவர் = அதே அம்மா (அன்னை)
வருங்காலத்தலைவர் = மகள் /அதே மகன் # கை கொடுக்கும் கை


===============


20 அஜித்"ரசிகர்களே!ப்ளூசட்டை,வலைப்பேச்சு இவங்க நெகடிவ்"விமர்சனம் பண்ணா என்ன இப்போ?வீணா அவங்களுக்கு நீங்க விளம்பரம் தேடித்தந்துட்டு இருக்கீங்க,மெர்சல் படத்தை வெட்டியா எதிர்த்து அதை ப்ரமோட் பண்ணுன பிஜேபிகாரங்க செஞ்ச தப்பை நீங்களும் செஞ்சு அவங்களை பெரிய ஆள் ஆக்கிட்டு இருக்கீங்க


================

0 comments: