Saturday, August 10, 2019

நேர்கொண்ட பார்வை - சினிமா விமர்சனம்

nerkonda paarvai എന്നതിനുള്ള ചിത്രം

பெண்களைப்பற்றிய ஆண்கள் பொதுப்பார்வைக்கு சவுக்கடி கொடுக்கும் கதை அமைப்பு . சரக்கு அடிக்கற பொண்ணு, மாடர்ன் கேர்ள் ,இவங்க எல்லாம் ஈசியா படிஞ்சிடுவாங்க அப்டினு பெரும்பான்மையான்மையான ஆண்கள் மனசுல ஒரு தவறான எதிர்பார்ப்பு விதைக்கப்பட்டு இருக்கு , ஆனா கட்டுன சம்சாரமா இருந்தாலும் , காசு கொடுத்தா வர்ற சமாச்சாரமா இருந்தாலும்  ஒரு பொண்ணு நோனு சொன்னா அது நோ தான்    நோ மோர் ஆர்க்யூமெண்ட்ஸ் என்பதே படத்தின் சாராம்சம்


வெவ்வேற ஊர்ல இருந்து  சென்னைக்கு வந்து ஒரு வீட்ல வாடகைக்கு தங்கி இருக்கும் 3 பொண்ணுங்க ஒரு பார்ட்டில 3 ஆண்களோட பழகறாங்க. அதுல ஒருத்தன் நாயகியோட ஸ்கூல் மேட். 6 பேரும் சரக்கு அடிக்கறாங்க .  அத்து மீற முற்படும்போது நாயகி வில்லன் கண்ல பாட்டிலை அடிச்சிடறா. 


பழி வாங்கத்துடிக்கும் வில்லன் கூட்டம், அவங்களை தப்பான பொண்ணுங்கனு கோர்ட்ல நிரூபிக்கப்பார்க்கறாங்க என்ன நடக்குது என்பதே மிச்ச கதை

 வக்கீலா , ஹீரோவா  அஜித். ஆரம்ப கட்டத்தில் எந்தக்குரல் அவருக்கு மைனஸ் என சில விமர்சகர்களால் குறை கூறப்பட்டாரோ அதே  குரல் இப்போ அவருக்கு பிளஸ், பேஸ் வாய்ஸ்ல அவர் அமைதியா பேசும்போது தியேட்டரில் ஆரவாரம்பிங்க் ஒரிஜினலில் இல்லாத 2 கூஸ்பம்ப் ஆக்சன் காட்சிகள் இதில் உண்டு . ரீமேக்லயே இப்படிப்பட்ட மாஸ் சீன் வைக்கறார்னா புதுக்கதை ல என்ன என்ன ஐயிட்டம் வெச்சிருக்காரோ இயக்குநர்

 சதுரங்க வேட்டை , தீரன்  அதிகாரம் ஒன்று என இரண்டு சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர்  ஹெச்  வினோத் தான் ஒரு டேலண்ட்டான  கமர்ஷியல் டைரக்டர் என இந்த ,முறையும்  நிரூபித்து விட்டார்


கோர்ட் காட்சிகளில்  படம் சூடு பிடிக்கிறது


 பாதிக்க;ப்பட்ட 3 பெண்களின் நடிப்பும் அருமை. அவங்க முகத்துல எப்பவும் ஒரு பதட்டம் குடி கொண்டிருப்பது  அருமை. ஃபோனில்   வில்லன் மிரட்டும்போது கெத்து காட்டுவது   கடத்தப்பட்டதும் அவனிடம் கெஞ்சுவது  , கோர்ட்டில் ஏடாகூடமான கேள்விகளுக்கு பம்முவது  எல்லாமே செம நேச்சுரல்


எதிர் தரப்பு வக்கீலாக முன்னாள் தினத்தந்தி  புகழ் பாண்டே. நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் இன்னும் நேர்த்தியா செஞ்சிருக்கலாமோனு தோணுது


 நீதிபதியா வர்றவர் அட்டகாசமான இயற்கையான நடிப்பு 

 பிஜி எம் பட்டாசு . பாடல் காட்சிகள்  வேகத்தடை
நச் வசனங்கள்


1 ஜனங்க fool லா இருக்கறவரை
நாம cool லாஇருக்கலாம். அதான் அரசியல் #NerkondaPaaravaiஎதுக்காக என்னை அடிக்க ஆள் அனுப்புனே?

சும்மா பயமுறுத்தத்தான்
என் முகத்துல பயம் தெரியுதா?
ஆ!
என்னை பயம் காட்றவங்களை பயமுறுத்திதான் எனக்கு பழக்கம் #NerkondaPaaravai ( இந்த சீனுக்கு பிஜிஎம் அல்டிமேட் ,அரங்கம் அதிரும்கைதட்டல்)

3 பதில் சொல்லு
அய்யா,இன்னும் கேள்வியே கேட்கலைங்க
பதில் வேணும்
அய்யா ,புரிஞ்சுதுங்கய்யா,சொல்லிடறேன் #NerkondaPaaravai (சாதாரண சீனை அல்டிமேட் சீன் ஆக்கும் இயக்குநர்


பொண்டாட்டிக்கு குடுத்த சத்தியத்தை ஏன் எந்த புருசனும் காப்பாத்தறதே இல்ல?

.....
என்ன பதிலையே காணோம்?வக்கீல் சார்
குறுக்கு விசாரணை பண்றது பொண்டாட்டியா இருந்தா எந்தப்புருசன்தான் பதில் சொல்வான் ? #NerkondaPaarvaiReview


5 கதவை மூடறது பெண்களுக்கே உரிய பாதுகாப்பு உணர்வு #NerKondaPaarvaiFdfs


6 பொண்ணுங்க லேட்டா வரக்கூடாது,ஏன்னா கடிகார முள்தான் ஒரு பொண்ணோட கற்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை தீர்மானிக்குது #NerKondaPaarvaiFdfs


7 பசங்க குடிச்சா அது உடல் நலத்துக்குக்கேடானது,அதுவே பொண்ணு குடிச்சா அவ கேரக்டர் சரி இருக்காது,இதுதான் இந்த சமூகத்தோட பார்வை #NerkondaPaaravai


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்1  நேர்கொண்ட பார்வைக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ்வருது.பிங்க் ரீமேக் அறிவிப்பு,வந்தப்ப இது ரிஸ்க்,Aசென்ட்டர் பிலிம் ,கமர்ஷியலா போறது கஷ்டம்னு கருத்து தெரிவித்திருந்தேன்.இயக்குனர்வினோத் அதை உடைச்ட்டார்.படத்தின் பின் பாதி கோர்ட் காட்சிகள் அதகளம் என பார்த்தவர்கள் விமர்சனம் #NerkondaPaaravai

தொடர்ந்து ஹிட் படங்களா தருவார் என்பதன் குறியீடுதான் அவரது இன்ஷியல் போல H(it).வினோத் #NerKondaPaarvaiபரத் சுப்ர"money" யன் ,கேரக்டர் பேர்லயே குறியீடு னு அஜித் ரசிகர்கள் யாரும் இன்னும் கிளம்பலையா? #NerkondaPaaravai

5   ஹாஸ்பிடலில ்வெய்ட் பண்ணும் ஹீரோ பெயரை கம்பவுண்டர் அழைத்தும் அவர் வராததால் யோவ் என விளித்ததும் ஹீரோ ஒரு முறை முறைக்கிறாரே அது அப்ளாஸ் சீன்.காட்சி அமைப்பு ,பிஜிஎம் அக்னி நட்சத்திரம் கவுதம் விசுவநாத் ஓப்பனிங்க் சீன் போல #NerkondaPaaravai


6  ரிட்டையர்ட் ஆகற வயசைத்தாண்டிய அமிதாப் பிங்க் கதை ல ஒத்துக்கிட்டது பெரிய விஷயம் இல்லை, ஆனா மார்க்கெட்ல,பீல்டுல பீக் ல இருக்கற ஒரு ஹீரோ இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ண தில்லு வேணும் #NerkondaPaaravai7  ஒரு பைட் சீன் ஹிட் ஆக முக்கியமான தேவை பைட்டுக்கான லீடு.தமிழ் சினிமாவின் பிரமாதமான பைட்சீன் லீடு சீன்கள்
1 பாட்ஷா
2 கேப்டன்பிரபாகரன்
3 ரன் 4 விஸ்வரூபம்
6 இணைந்த கைகள்
5 கில்லி
பட்டியலில் இதுவும் சேரும் #NerkondaPaaravai

8  விஸ்வாசம் படம் மூலம் பி & சி சென்ட்டர் ரசிகைகளைக்கவர்ந்த அஜித் இந்தப்படத்தில் அசால்ட்டாக ஏ சென்ட்டர் லேடிஸ் ஆடியன்சையும் கவர்கிறார் ,வலைப்பேச்சு ரிவ்யூவர்ஸ் சொன்னது போல் பெண்கள் ஆடியன்சை இந்தப்படம் கவராது என்பது சரி அல்ல. #NerKondaPaarvaiFdfs

9  க்ளைமாக்ஸ் ல கேஸ் ஜட்ஜ்மெண்ட் வந்தபின் ரொம்ப அமைதியா ஹீரோ வெளில வர்றாரு,ஒரு லேடி கான்ஸ்டபிள் அவருக்கு கை கொடுக்கறாரு.ஒரு வெற்றியை ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா காட்றது இப்டித்தான்,லேடீஸ் ஆடியன்சின் அமோக வரவேற்பை பெறப்போகும் காட்சி #Nerkondaparvai


10  வழக்கமான சினிமாக்களில் கோர்ட காட்சிகளில் வக்கீலாக வரும் ஹீரோ கர்ஜிப்பார்,ஆக்ரோசமாக வாதிடுவார்,அப்டி காட்சி அமைப்பு இல்லாமல் இதில் ஹீரோ ரொம்ப அமைதியாக வருவது கூஸ்பம்ப் உணர்வை மட்டுப்படுத்துகிறது என சிலர் FB ல கருத்துதெரிவித்திருக்கிறார்கள்.சரிதான்,ஆனா பத்தோடு 11 ஆக இருக்கும் #nkp


11 பெண்களைக்கவர்நத அஜித் படங்கள்
1 ஆசை
2 முகவரி
3 கண்டுகொண்டேன் ஸ்கொயர்
4 பூவெல்லாம் உன் வாசம்
6 உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் (கெஸ்ட் ரோல்)
5 விஸ்வாசம்
8 நீ வருவாய் என
7 இங்க்லீஷ்விங்க்லீஷ்(கெ.ரோ)
11 அமர்க்களம்
9 காதல் மன்னன் 10 காதல் கோட்டைசபாஷ் டைரக்டர்

1 பிங்க் ஒரிஜினலை விட  கமர்ஷியலா பண்ணினது. அஜித் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்ட ஆக்சன் காட்சிகள் அதற்கான லீடு  கூஸ்பம்ப் மொமெண்ட்


2 வித்யாபாலன் ஃபிளாஸ்பேக் காட்சிகள் லேடீஸ்  செண்ட்டிமெண்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு  ( ஆனா தனிப்பட்ட என் கருத்து திரைக்கதையின் வேகத்துக்கு அது கொஞ்சம் முட்டுக்கட்டை)

3   தினத்தந்தி நேர்காண்லில் கேள்விகளால் மடக்கும் ரங்கராஜ் பாண்டே வுக்கு வகீல் ரோல் தந்தது, அவரது கேர்க்டர் வடிவமைப்பு கிட்டத்தட்ட விதி  ஜெய்சங்கர்   ரோல்


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1   லாஜிக் மிஸ்டேக் 1− சம்பவம் பண்ணப்போறோம்னு முடிவு பண்ணுன வில்லன் க்ருப் ல ஒருத்தன் தன்னோட போன்ல இருந்தே 3 பொண்ணுங்கள்ல ஒருத்திக்கு ph பண்ணி மிரட்றான்,அது ஒரு சாட்சி ஆகீடும்னு தெரியாதா? #NerkondaPaaravai


லாஜிக் மிஸ்டேக் 2 −வில்லனை தாக்கியது கண்ல,புருவத்துல.கட்டு போட்டிருக்கறதும் அங்கே தான்,ஆனா டயலாக்ஸ்ல அடிக்கடி தலைல அடிபட்டிருக்கு னு வருது.நெற்றி னு கூட சொல்லி இருக்கலாம் #NerkondaPaaravai


லாஜிக் மிஸ்டேக் 3−ரெகுலரா வாக்கிங்க் ,ஜாகிங் போறவங்க எல்லா ரூல்சையும் பக்காவா பாலோ பண்ணுவாங்க.ஆனா நாயகி ஒவ்வொரு டைம ்ஜாகிங் முடிச்சதும் ரிலாக்ஸ் பண்ண வாய் வழியா மூச்சு விடறாங்க #NerkondaPaaravai


லாஜிக் மிஸ்டேக் 4− ஒரு பணக்காரரின் மகன் ,அரசியல் செல்வாக்கு மிக்கவர் சார்பாக வாதிடும் வக்கீல் நாயகி கில்மா க்கு பணம் கேட்டா,அவன் தர்ல ,தாக்கிட்டான் னு வாதிடறாரு.இது என்ன லாஜிக்?பணக்காரன் பணம் செலவு பண்ண தயங்குவானா?னு ஒரு பாய்ண்ட் இருக்கே? #NerkondaPaaravai

5  பிங்க் கில் இல்லாத ஹீரோ−ஹீரோயின் பிளாஸ்பேக் சீன் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டதுதான் ,ஆனால் கதையின் வேகமான ,பரபரப்பானஓட்டத்துக்கு அது ஸ்பீடுபிரேக்கே #NerkondaPaarvaiReview


6  லாஜிக் மிஸ்டேக் 5− வசதியான ஹீரோ நிறை மாத கர்ப்பிணியா இருக்கற மனைவியை பாத்துக்க ஒரு பெண்ணை நியமிச்சுக்க மாட்டாரா? பெற்றோர் இல்லாத தம்பதிகள் அப்டி பண்றதுதானே வழக்கம்? #NerKondaPaarvaiFdfs


7  லாஜிக் மிஸ்டேக் 6− வக்கீல் பாண்டே கோர்ட்ல நாயகியை நீ ,வா,போ னு ஒருமைல பேசறார் ,சட்டப்படி அது தப்பாச்சே!பெண்களுக்கு மரியாதை தர்ற தமிழகத்திலா இப்படி? #NerKondaPaarvaiFromToday

8  லாஜிக் மிஸ்டேக் 7− லாயரான பாண்டே நாயகியை கோர்ட் ல வாங்க போங்க னு பேசிட்டே டக்னு அவ இவ னு மரியாதை இல்லாம பேசும்போது ஜட்ஜோ,ஹீரோவான வக்கீலோ ஆட்சேபணை செய்யல #NerKondaPaarvaiFromToday


   விகடன் மார்க் ( யூகம்)  -43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்) - 3.5 /5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -3.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)  சி.பி கமெண்ட் -நேர்கொண்ட பார்வை − பெண்களின் உரிமையைப்பேசும் படம் ,கோர்ட் காட்சிகள்தான் படத்தின் முதுகெலும்பு,விதி படத்தை விட ஒரு மாற்று கம்மிதான் ,ஆனா பிங்க் ஒரிஜினலை விட ஜனரஞ்சகம்,விகடன் 43 ,ரேட்டிங் 3.25 / 5 ,அஜித்துக்கு லேடீஸ் ஆடியன்ஸ் குறைவு என்ற பேச்சை பொய்யாக்கும் படம் #Nerkondaparvai

0 comments: