எல்லே கென்னடி என்பவர் எழுதிய Off Campus என்னும் தொடர்கதையைத்தழுவி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
மொத்தம் 8 எபிசோடுகள் கொண்டது.ஒவ்வொரு எபிசோடும் 45 லிருந்து 55 நிமிடங்கள் ,ஆக மொத்தம் 7 மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு அம்மா இல்லை,அப்பா மட்டும் தான்.ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறந்த ஹாக்கி பிளேயர்.இவன் விளையாட்டில் கவனம் செலுத்தியதால் படிப்பில் கோட்டை விட அரியர் விழுகிறது.யாரிடமாவது ட்யூஷன் போய் படித்துப்பாஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறான்.இவனுக்கு காதலி இல்லை,காதலில் நம்பிக்கையும் இல்லை.
நாயகி காலேஜில் டாப் ரேங்க்கில் இருக்கும் நல்ல படிப்பாளி.இவளுக்கு ஒரு இசைக்கலைஞனிடம் ஒரு தலைக்காதல்.இன்னமும் வெளிப்படுத்தவில்லை.இவளுக்கு ஒரு நெருங்கிய தோழி இருக்கிறாள்.அவள் அவ்வப்போது நாயகியை வழி நடத்துவாள்.
நாயகன் நாயகியை சந்தித்துத்தனக்கு ட்யூஷன் எடுக்க முடியுமா? என்று கேட்கிறான்.ஆனால் நாயகி மறுத்து விடுகிறாள்.
அப்போதைக்கு மறுத்தாலும் நாயகிக்கு ஒரு யோசனை வருகிறது.தான் ஒருதலையாகக்காதலிக்கும் காதலன் நம்மைக்கண்டு கொள்ளவே இல்லை.அவனை வெறுப்பேற்ற நாயகனுடன் நாம் நெருக்கமாக இருப்பது போல் காண்பித்தால் என்ன?அவனைக்கவனம் ஈர்க்க இது நல்ல வழி என்று நினைக்கிறாள்.
நாயகனிடம் தன் டீலிங்கை சொல்கிறாள்.நான் உனக்கு ட்யூஷன் நடத்திப்பாஸ் ஆக வைக்கிறேன்.அதற்குப்பிரதி உபகாரமாக நீ என்னுடன் காதலன் போல் பொது வெளியில் நடந்து கொள்ள வேண்டும் என்கிறாள்.
நாயகன் நாயகியின் டீலுக்கு ஓக்கே சொல்கிறான்.நாயகியின் திட்டம் பலிக்கிறது.நாயகியின் காதலன் நாயகியை கவனிக்கிறான்.இப்போது நாயகிக்குத் தன் காதலனிடம் பழகும் வாய்ப்புக்கிடைக்கிறது.
நாயகி நாயகனிடம் நம் டீலிங்க் முடிந்து விட்டது.இனி நீ என் காதலன் ஆக நடிக்கத்தேவை இல்லை என்கிறாள்.நாயகனும் ஓக்கே சொல்கிறான்.
இனிமேல் தான் பிரச்சினை. சும்மா பாசாங்கிற்காகக்காதலர்கள் போல் நடித்த நாயகனும் ,நாயகியும் நிஜமாகவே அவர்களையும் அறியாமல் ஒருவரை ஒருவர் காதலித்து இருக்கிறார்கள்.இப்போது நாயகியால் தன் காதலனைக்காதலிக்க முடியவில்லை.நாயகன் மீது தான் அவளுக்கு ஈர்ப்பு இருக்கிறது.
இதற்குப்பின் இவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகி ஆக எல்லா பிரைட் நடித்திருக்கிறார்.நம்ம ஊர் ஹன்சிகாவை முக சாயலில் நினைவுபடுத்துகிறார்.இவரது இளமையும் ,அழகும் வெப் சீரிசுக்குப்பெரிய பிளஸ்.நாயகனுடன் காதல் வசப்படும்போது முகம் சிவப்பதை நேச்சுரலாகக்காட்டி இருக்கிறார்.பிரமாதமான நடிப்பு.
நாயகன் ஆக பெல்மோண்ட் கேமலி இயல்பாக நடித்திருக்கிறார்.டீலிங் முடிந்த பின் நாயகி பிரியும்போது அவர் முகத்தில் காட்டும் நுணுக்கமான ஏமாற்றம் அற்புதம்
நாயகியின் தோழி ஆக மைக்கா அப்டெல்லா நடித்திருக்கிறார்.இவருக்கு ஒரு கிளைக்கதையும் உண்டு.கிட்டத்தட்ட இரண்டாம் நாயகி.வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.
நாயகியின் காதலன் ஆக ஜோஸ் ஹோஸ்டோன் நடித்திருக்கிறார்.பொறாமை ததும்ப இவர் நாயகியைப்பார்க்கும் பார்வை கச்சிதம்.
மெயின் கேரக்டர்கள் ஆன இந்த நால்வர் போக வெப் சீரிசில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கீகன் டேவிட் இசையில் இளமைத்துள்ளலுடன் கதை நகர்கிறது.காலின் ஹோய்ட், நிக் தாமஸ் இருவரும் இணைந்து கலர்புல்லான ஒளிப்பதிவைத்தந்திருக்கிறார்கள்
நான்கு பேர் கொண்ட எடிட்டிங் டீம் கடுமையாக உழைத்திருக்கிறது.வெப் சீரிசின் ரன்னிங் டைம் 7 மணி நேரம் 12 நிமிடங்கள்
சபாஷ் டைரக்டர்
1 காலேஜ் கேம்பசில் கதை நடப்பதால் முழுக்க,முழுக்க இளமைக்கொண்டாட்டம் ஆக ,ஜாலியாக நகர்வது பெரிய பிளஸ்.
2 இசை ,பாட்டு ,ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் என திரைக்கதைபாதை அமைந்து விட்டதால் வில்லன் ,அடிதடி வேலைக்கு இடமில்லை.
3 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் நாயகியின் தோழிக்கான கிளைக்கதை ரசிக்கும்படி இருந்தது.
4 ஒளிப்பதிவு ,பின்னணி இசை இரண்டும் பெரிய பிளஸ்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இந்தக்கதையை 2 மணி நேரத்தில் சொல்லி முடித்திருக்கலாம்.வலுக்கட்டா
2 கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஒரு எபிசோடுக்கு ஒரு 18+ கண்ட்டெண்ட் என்று வலிதத்திணித்திருக்கிறார்கள்
3 க்ளைமாக்சில் பெரிய சுவராஸ்யம் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜென் இஜட் கிட்சுக்குப்பிடிக்கும்.ஜாலியான கலாட்டா ,இளமைக்கொண்டாட்டம் .ரேட்டிங் 2.5/5
| Off Campus | |
|---|---|
| Genre | Romantic drama |
| Created by | Louisa Levy |
| Based on | Off-Campus series by Elle Kennedy |
| Showrunners |
|
| Starring | |
| Music by | Keegan DeWitt |
| Country of origin | United States |
| Original language | English |
| No. of seasons | 1 |
| No. of episodes | 8 |
.jpg)