Wednesday, January 01, 2014

தமிழ் சினிமா 2013 ஒரு பார்வை

 

தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ம் ஆண்டும் காமெடி படங்களே பெரும் அளவில் வெளியாகின. பெரிய நடிகர்கள் படங்கள் வசூல் ரிதியில் முன்னணியில் இருந்தாலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிறு நடிகர்களின் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. 


மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. நலன் குமாரசாமி, நவீன் உள்ளிட்ட புதிய இயக்குநர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். 


காமெடி நடிகர்கள் பட்டியலில் சந்தானம் இல்லாத சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சூரி, ’எதிர்நீச்சல்’ சதிஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் தங்களது முத்திரையை பதித்தார்கள். 


மொத்தத்தில் புதிய இயக்குநர்கள் கவனம் ஈர்த்தனர். சிறு நடிகர்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்தன. புதிய கதைகளத்தில், புதிய நடிகர்கள் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழ் திரையுலகிற்கு உணர்த்தினார்கள் ரசிகர்கள். 


அவ்வகையில் 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வெளியான முக்கியமான படங்களும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்க்கலாம். 


ஜனவரி : ஆரம்பமே அதிர்ச்சியளித்த 'அலெக்ஸ் பாண்டியன்' 

 
'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'சமர்' ஆகிய படங்கள் ஜனவரியில் வெளியான முக்கியமான படங்கள். பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. ஆனால் நடந்ததோ, 'எப்படி விளம்பரப்படுத்தினாலும் படம் பிடிக்கவில்லை' என்று நிராகரித்தனர் ரசிகர்கள். வருடத் தொடக்கமே கார்த்திக்கு அதிர்ச்சியளித்தது. 


'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெளியீட்டு சமயத்தில் பாக்யராஜ், 'இது எனது 'இன்று போய் நாளை வா' படத்தின் மறுபதிப்பு. ஆகையால் எனக்கு பணம் தர வேண்டும்' என்று கே.பாக்யராஜ் செய்த சர்ச்சையினிடையில் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சந்தானம். சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர் ரசிகர்களுக்கு லட்டை அளித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளினார்கள். 


வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான 'சமர்' போதிய வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்று பெரும் சர்ச்சையில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் மக்களால் கொண்டாடப்படவில்லை. 


பிப்ரவரி : விஸ்வரூபமெடுத்த கமல்

 
'கடல்', 'டேவிட்', 'விஸ்வரூபம்', 'ஆதிபகவன்', 'ஹரிதாஸ்' ஆகிய படங்கள் பிப்ரவரியில் வெளியான முக்கியமான படங்கள். 


படத்தின் புகைப்படம் ஒன்றைக் கூட வெளியிடாமல், 'நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் மூலம் மக்களை திரையரங்கிற்கு இழுத்த படம் 'கடல்'. ஆனால் 'கடல்'க்கு உள்ளே போயிட்டு, மணிரத்னம் அளித்த சுனாமியால் மக்களுக்கு தலைவலியை உண்டாக்கி, நிராகரிக்க வைத்த படம். 'கடல்' மூலம் அதிர்ச்சியளித்தார் மணிரத்னம் என்றால், அவரது உதவி இயக்குநர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' மூலம் பேரதிர்ச்சி கொடுத்தார். 


கடும் சர்ச்சைக்கு இடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது 'விஸ்வரூபம்'. முதலில் தமிழகத்தை தவிர இதர இடங்களில் வெளியானது. வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் கேரளா, பெங்களூர் என வெளியூர்களுக்குச் சென்று 'விஸ்வரூபம்' படத்தினை கண்டு களித்தார்கள். 'எனது ஆழ்வார்பேட்டை வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன். படம் வெளிவராவிட்டால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவேன்' என்று கமல் கூறினார்.


 ரசிகர்களோ அவருக்கு செக் மூலமாக பணத்தை அனுப்பி கமலை தங்களது அன்பால் அடிமையாக்கினார்கள். பின்னர் தமிழகத்திலும் படம் வெளியானது. படம் வெற்றியடைந்தவுடன் பணம் அனுப்பிய இதயங்களுக்கு நன்றியுடன் அவர்களது பணத்தை உரியவர்களுக்கே அனுப்பி வைத்தார் கமல். 


நீண்ட மாதங்கள் தயாரிப்பிற்கு பிறகு வெளியான அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படம், படம் பார்க்க வந்தவர்களை 'பகவானே.. படமா இது' என்று கேட்க வைத்தது. அமீர் இயக்கத்தில் வெளியாகி முற்றிலும் நிராகரிக்க படமாக 'ஆதிபகவன்' அமைந்தது. இப்படத்திற்காக ஜெயம் ரவியின் காத்திருப்பு வீணானது. 


சினிமா விமர்சகர்கள் கொண்டாடிய படம் 'ஹரிதாஸ்'. குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினேகா இப்படத்தில் நடித்தார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்கள். வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும், அனைவரது பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களுள் ஒன்றாக இடம் பிடித்தது. 



மார்ச் : 'பரதேசி' மூலம் திரும்பிய பாலா

 
'பரதேசி', 'வத்திக்குச்சி', 'சென்னையில் ஒரு நாள்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் மார்ச்சில் வெளியான முக்கியமான படங்கள். 'அவன் இவன்' படத்தின் மூலம் சற்றே சறுக்கிய பாலா, மீண்டும் தனது எதார்த்த உலகிற்கு திரும்பிய படம் 'பரதேசி'. 'ரெட் டீ' என்ற நாவலை மையப்படுத்தி எடுத்தாலும், அதில் அதர்வா, வேதிகா போன்ற நடிகர்களை கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து 'பாலா இஸ் பேக்' என்று பேச வைத்தார். அதர்வாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது ‘பரதேசி’.


ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியானதால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டு, குச்சி தீப்பிடிக்காமல் தீப்பெட்டிக்குள் அடங்கிய படம் 'வத்திக்குச்சி'. 


'டிராபிக்' என்ற வரவேற்பை பெற்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'. விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரியளவிற்கு படம் சோபிக்கவில்லை. 



பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. பாண்டிராஜின் காமெடி பாணி இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம். 


ஏப்ரல் : பவர் கட்டானலும் இருப்பேன் என அடம்பிடித்த ராஜகுமாரன்

 
'சேட்டை', 'கெளரவம்', 'திருமதி தமிழ்', 'உதயம் NH4' ஆகிய படங்கள் ஏப்ரலில் வெளியான முக்கியமான படங்கள். 'டெல்லி பெல்லி' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா என முக்கியமான நடிகர்கள் நடிப்பில் வெளியானலும், இவங்களுக்கு எல்லாம் சேட்டை ஒவராயிடுச்சு என்று மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள். ராதாமோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கெளரவம்', படக்குழுவுக்கு கௌரவத்தை தரவில்லை. 


'திருமதி தமிழ்' படத்தைப் பார்த்து விமர்சகர்கள், மக்கள் என அனைவருமே சிரித்தார்கள்; படம் பார்த்து அல்ல, படத்திற்காக ராஜகுமாரன் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து. ராஜகுமாரனின் மேக்கப்பும், அவர் கொடுத்த ’போஸ்’களும், முக்கியமாக அவரே அவருக்கு கொடுத்துக் கொண்ட 'சோலார் ஸ்டார்'பட்டமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் போஸ்டரில் மட்டும் நூறு நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது. 


சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கலாம் என்று உணரவைத்த படம் 'உதயம் NH4'. விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்தவித பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை. 


மே : சூது கவ்வும் நேரம்


 
'எதிர்நீச்சல்', 'மூன்று பேர் மூன்று காதல்', 'சூது கவ்வும்', 'நாகராஜ சோழன்', 'நேரம்', 'குட்டிப்புலி' ஆகிய படங்கள் மே மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். பாடல்கள் மூலமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிர் நீச்சல்' மக்களிடையே வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது மட்டுமன்றி, சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக்கியது. தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார். 


அர்ஜுன், விமல், சேரன் நடிப்பில் முன்னணி இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படம் வரவேற்பைப் பெறவில்லை.
'சூது கவ்வும்' என்ற படத்தின் மூலம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் முக்கியமான இயக்குநர் ஆனார் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி களத்தில், தமிழக அரசியலை சாடி எடுக்கப்பட்ட படம். மணிவண்ணன் - சத்யராஜ் இணைப்பில் வெளியான 'நாகராஜ சோழன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, படம் பார்த்தவர்களால் 'ம்ஹூம்.. அமைதிப் படை மாதிரி இல்லை..' என நிராகரிப்பட்டது. 


'பிஸ்தா' என்ற YOUTUBEல் வெளியான பாடல் மூலம் படம் எப்போபா ரிலீஸ் என்று கேட்க வைத்த படம் 'நேரம்'. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது. 


சசிகுமார் நடிப்பில் வெளியான 'குட்டிப்புலி', விமர்சகர்கள் மத்தியில் எடுத்த கதையே தான் எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு நிலவினாலும், வசூலில் பாய்ச்சல் காட்டியது 'குட்டிப்புலி' 



ஜூன் : திக்குமுக்காடிய தில்லு முல்லுவும் அம்பேலான அன்னக்கொடியும்


 
'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு', 'அன்னக்கொடி' ஆகிய படங்கள் ஜுன் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு' ஆகியவை காமெடியை நம்பி களமிறங்க, 'தீயா வேலை செய்யணும் குமாரு' மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆனால் ரஜினி நடித்தளவிற்கு சிவா நடிப்பு எடுபடாமல் பெட்டிக்குள் படுத்து விட்டது. 


பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை இழந்து, 2013ல் படுதோல்வியை சந்தித்தது. 


ஜூலை : ரஹ்மானுக்கு மரியாதை கொடுத்த மரியான்

 
'சிங்கம் 2', 'மரியான்', 'பட்டத்து யானை' ஆகிய படங்கள் ஜுலை மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் 2' வெளியானது. பரபரப்பான திரைக்கதை, பாட்டிற்கு டான்ஸ் ஆட அனுஷ்கா, காமெடிக்கு கைகொடுக்க சந்தானம், இளசுகளைக் கவர ஹன்சிகா, பரபர காட்சியமைப்பு, விறுவிறு வசனம் என பார்வையாளர்களை யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், வசூலை அள்ளியது. 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சொதுப்பலாகி, தோல்வியடைந்த படம். 


படம் தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டு, ‘மரியான்’ பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது. 


விஷால் நடிப்பில் எதிர்பார்க்கப்பட 'பட்டத்து யானை' வெளியாகி தோல்வியடைந்தது. 


ஆகஸ்ட் : விஜய்யை அதிரவைத்த ஆகஸ்ட்

 
'ஐந்து ஐந்து ஐந்து', 'ஆதலால் காதல் செய்வீர்', 'தலைவா', 'தேசிங்கு ராஜா', 'தங்க மீன்கள்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான 'ஐந்து ஐந்து ஐந்து' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 


சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது 'ஆதலால் காதல் செய்வீர்'. தற்போதுள்ள இளைஞர்களின் வாழ்க்கைமுறை, யுவனின் மனதை கொள்ளை கொள்ளும் இசை என வரவேற்பைப் பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியன் பனோராமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது. 


'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி, தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற விஜய் வீடியோ மூலம் பேசி என பலதரப்பட்ட முயற்சிக்கு பின் வெளியான படம் 'தலைவா'. போதிய வரவேற்பை பெறவில்லை, வசூலையும் பெறவில்லை. 


எழில் இயக்கத்தில் விமல், சூரி நடிப்பில் வெளியான 'தேசிங்குராஜா' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி சூரியை முன்னணி காமெடி ராஜாவாக ஆக்கியது இந்த 'தேசிங்கு ராஜா' 


செப்டம்பர் : சங்கம் தந்த செப்டம்பர்

 
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'ராஜா ராணி' ஆகிய படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மூன்று படங்களுமே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம். 


நவீனின் அசத்தலான திரைக்கதை அமைப்பில் வெளியான 'மூடர் கூடம்', வி.சி.துரையின் உருக வைக்கும் திரைக்கதை, தூங்காமல் கண்ணுக்கு கீழே வீங்க வைத்து நடித்த ஷாம் ஆகிய வகையில் '6 மெழுகுவர்த்திகள்', மிஷ்கின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' என விமர்சகர்கள் பாராட்டினாலும் மூன்றில் எந்த படமுமே வசூல் ரீதியாக வெற்றி பெறாதது சோகமே. 



சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் காமெடி கதகளியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூல் ரிதியில் பல முன்னணி நடிகர்களை கலங்கடித்தது. 'சிங்கம் 2' படத்தின் முதல் நாள் வசூலை பல இடங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முந்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா இப்படத்தில் அறிமுகமாகி, ஜி.வி. பிரகாஷ் உடன்’பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரதீரசூரன்’ என படபடவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். பலரையும் சந்தோஷப்படுத்தியது வருத்தப்படாத வாலிபர் சங்கம். 



'மெளனராகம்' சாயலில் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடிய படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் பாத்திரப் படைப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு என ரசிகர்கள் மனதில் ‘ராஜா ராணி’ சிம்மாசனமிட்டது . குறிப்பாக, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நாயகியாக நயன்தாரா நடித்து, அவரது ரசிகர்களை மகிழ்வித்தார். 


அக்டோபர் : அசத்தலான ஆரம்பம்.. ஆசைப்பட்டதை அடையாத பாலகுமாரன்


 
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நய்யாண்டி', 'வணக்கம் சென்னை', 'ஆரம்பம்' ஆகிய படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 



'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி,எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சியாக இருக்கிறார். தனுஷ் நடித்து, நஸ்ரியாவின் பஞ்சாயத்திற்கு இடையே வெளியான 'நய்யாண்டி', படம் பார்க்க வருபவர்களை நய்யாண்டி செய்தது. 


அனிருத்தின் ஹிட்டடித்த இசையால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட 'வணக்கம் சென்னை', மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பை பெற்றது. 


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'ஆரம்பம்' வசூல் ரீதியில் கோடிகளை அள்ளியது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் விமர்சகர்கள் கூறினாலும், அஜித் இருக்காரு.. அவருக்கு நாங்க இருக்கோம் என்று படம் பார்த்தார்கள் அஜித் ரசிகர்கள். 



நவம்பர் : தடைகளைத் தாண்ட வைத்த பாண்டிய நாடு

 
'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டியநாடு', 'வில்லா (பீட்சா 2)', 'இரண்டாம் உலகம்', 'விடியும் முன்' ஆகிய படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 


கார்த்தி - ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', அழுக்கு ராஜாவாக பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது. சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விஷால் எதிர்நோக்கிய ஹிட்டை பரிசாக அளித்தது. தொடர்ந்த வந்த தோல்விப்படத் தடைகளை விஷால் உடைத்தார். 


'பீட்சா' படத்தின் அடுத்த பாகமாக வெளியான 'வில்லா', முதல் பாகம் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. 


செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்' வெளியானது. ஆனால், ரசிகர்களை எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் என்று யோசிக்க வைத்து, சலிப்புடன் திருப்பி அனுப்பியது. 2013ல் படுதோல்வி அடைந்த படங்கள் ஒன்றாகவும் பெயர் பெற்றது. 


பூஜா நடிப்பில் வெளியான 'விடியும் முன்' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், வசூலில் வானம் விடியவில்லை. 


டிசம்பர் : கல்யாண சாப்பாடும், பிரியாணியும் 

 
'கல்யாண சமையல் சாதம்', 'பிரியாணி', 'என்றென்றும் புன்னகை', 'தலைமுறைகள்', 'மதயானைக்கூட்டம்' ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 


'கல்யாண சமையல் சாதம்' ADULT COMEDY என்ற வகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு - கார்த்தி இணைப்பில் வெளியான 'பிரியாணி' வெளியானது. கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களோடு ஒப்பீடு செய்து அதற்கு 'பிரியாணி' பரவாயில்லை என்று பேச்சுகள் நிலவுகின்றன. 





அஹ்மத் இயக்கத்தில் வெளியான 'என்றென்றும் புன்னகை', படம் வெளியான நாளில் கூட்டம் இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு படம் பிடித்து WORD OF MOUTH மூலம் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை. 


விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கும் 'மதயானைக்கூட்டம்' பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கூட்டத்தை சேர்த்து இருக்கிறது என்பது இனிமேல் தான் தெரியும். 

 a

thanx -the tamil hindu

சுயபட சர்ச்சையில் ஒபாமா!

 

இளசுகளையும் நட்சத்திரங்களையும் பாதித்த சுயபட (செல்ஃபீ - selfie) மோகத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவும் ஆளாகியிருக்கிறார். மண்டேலா நினைவு பிரார்த்தனை கூட்டத்தில் ஒபாமா சுயபட நிகழ்வில் பங்கேற்றது இணைய உலகில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ஸ்மார்ட்போன் யுகத்தில் எங்கேயும் எப்போதும் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துகொள்ளும் பழக்கம் பிரபலமாகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளும் புதிய பழக்கமும் அறிமுகமாகியுள்ளது. 


ஸ்மார்ட் போனை அப்படியே முன்னாள் நீட்டி தன்னை தானே சுயமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இந்த முறையிலான புகைப்படங்களுக்கு சுயபடங்கள் செல்ஃபீ என பெயரிடப்பட்டுள்ளது. 


இந்த சுயபட கலாச்சாரத்தை பிரபலமாக்கியதில் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமுக்குக்கு பெரும் பங்கிருக்கிறது. அல்லது இன்ஸ்டாகிராமை பிரபலாமாக்கியதில் சுயபடங்களுக்கு அதிக பங்கா? என்று பட்டிமன்றமே கூட நடத்தலாம். மற்றொரு புகைப்பட பகிர்வு சேவையான ஸ்னேப்சாட்டும் இந்த பெருமைக்கு போட்டிக்கு வரலாம். 


பெரும்பாலும் இளசுகள் மத்தியில்தான் இப்படி தன்னைத்தானே புகைப்படம் எடுத்து வெளியிட்டுக்கொள்ளும் கிரேஸ் இருக்கிறது. பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இணைய நட்சத்திரங்களாகவும் இருக்கும் மைலி சைர்ஸ் மற்றும் கிம் கர்தாஷியான் போன்றவர்கள் சுயபட மோகத்தை வளர்த்தெடுக்கும் பெருமைக்குறியவர்கள். 


சுயபட மோகம் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால், ஆக்ஸ்போர்டு அகராதி இந்த ஆண்டின் சொல்லாக செல்ஃபீயை தேர்வு செய்திருக்கிறது.
இப்படித் தன்னைத்தானே படமெடுத்துக்கொள்ளும் பழக்கம் ஆரோக்கியமானதா, இதன் உளவியல் தேவை என்ன என்றெல்லாம் விவாதங்கள் தூள் பறக்கின்றன.
சுயபட கலாச்சாரம் தொடர்பான சர்ச்சையில் ஒபாமா போன்ற தேசத் தலைவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. 


நெல்சன் மண்டேலா நினைவாக நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமா சுயபடம் ஒன்றின் மையமாக இருந்தது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சுயபடத்தில் டென்மார்க் பிரதமர் ஹெல்லே தோரிங் ஸ்கிமிட் கையில் ஸ்மார்ட்போனுடன் நடுவில் இருக்கிறார். அவருக்கு அருகே ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் ஆகியோர் உள்ளனர்.
தலைவர்கள் இப்படி ஸ்மார்ட்போனில் தங்களை பார்த்து கொண்டிருக்கும் காட்சியை ஏ.எஃப்.பி புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இந்தப் புகைப்படம் தான் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


நினைவு கூட்டத்தில் தலைவர்கள் இப்படி நடந்து கொண்டிருப்பது சரியா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இந்தப் புகைப்படத்தை தனியே பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். 


எப்படியோ ஏற்கெனவே பிரபலமாகி இருக்கும் சுயபட கலாச்சாரத்திற்கு இப்போது இப்படி ஓர் அங்கீகாரம்.


Thanks - The Hindu

அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை

1. எங்காள் பட பாடல் வரி தான் உங்காள் பட டைட்டில் னு சூர்யா ரசிகர்கள் யாரும் சிம்பு ரசிகர்ட்ட வம்பு பண்ணலையா? #,சட்டென்றுமாறுது வான்நிலை



===============



2  சட்டென்று மாறுது வானிலை' புது படத்தில் இணையும்் சிம்பு - கெளதம் # யார் மீதும் பிழை இல்லாமல் ரிலீஸ் ஆக வாழ்த்து "



=============



3  அன்பே! மீன் கண்கள் ,மயில் தோகை கூந்தல் கொண்டிருப்பதால் நீ சைவம் ஆக இருந்தாலும் அசைவமாய்க்கருதப்படுவாய்!



===============


4  நடிகை சாவித்திரி பிறந்த தினம் இன்று....எனவே பொண்டாட்டிங்க எல்லாம் பீரோ சாவியை இன்னைக்கு மட்டுமாவது புருசன் கைல தரவும்"



================


5 கேரளா போலீஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது னு போர்டு இருக்கு.ஹோட்டலுக்கு போகாம ஸ்டேஷன்லயே தங்கிடலாமா?னு யோசிக்கேன் ;-)



===================


6  B A PASS அப்டினு ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் ஆகுது.நல்ல கல்விப்படம் போல.ஆனா எதுக்கு ஏ சர்ட்டிபிகெட் குடுத்திருக்காங்க்னு தெரில




=====================




7  ரிமோட் கன்ட்ரோல் கையில் இருந்தாலும் அடிக்கடி சேனல் மாத்தாம உருப்படியா ஒரே சேனல் பார்ப்பதும் செல்ப் கன்ட்ரோல் தான்


=================


8 ஐப்பசி ,மார்கழி,தை மாதங்களில் இந்துக்களும் ,எல்லா மாதங்களில் முஸ்லீம்களும் அதிகாலை 5 க்கு எழுந்துவிடுகின்றனர்




====================


9  கொல்லம் டூ TVMம் பஸ் ஏறுனவங்க " மூணாம் குட்டி 2, ரெண்டாம் குட்டி 3 ",அப்டின்னார்.கண்டக்டர் TKT குடுத்தபின் தான் தெரிஞ்சுதுஸ்டாப்பிஙபேராம்்




===============



10  தினமும் 18 மணி நேரம் உழைப்பவர்கள் இருக்கும் இதே தேசத்தில் தான் 8 மணி நேர.அரசுவேலையில் திருட்டுத்தனம்



===================



11  தனுஷ் டூ செல்வராகவன் = பாத்து எடுங்ணா.நீங்க பாட்டுக்கு எதையாவது எடுத்து சொதப்பிட்டா அந்த நட்டத்தை சரி கட்ட ஓசி ல நான் ஒரு படம் பண்ணனும்

======================


12  ஹீரோயின் சோனாக்சி கறுப்புக்கலர் ஜாக்கெட் போட்டு அதுக்கு மேல வெள்ளை பிரா போட்டிருக்கு.அய்ய்யோ.இது பேஷன் ஆகிடுமோ? #,புல்லட் ராஜா



=================


13 அதிர்ஷ்ட தேவனின் முதல் இரவில் அதிர்ஷ்ட தேவதை வந்து கதவைத்தட்டட்டும் என தாழ் போட்டிருக்க மாட்டார்.



=================



14 பொண்டாட்டி திட்டறதை யாராலும் தடுக்க முடியாது.யார் தடுத்தாலும் பொண்டாட்டியால திட்டாம இருக்க முடியாது # பகவதி ரீ மிக்ஸ் பஞ்ச்



===================



15  செல்வராகவன் டூ விஷால் = சார் ! ஹீரோ நீங்க தான்.ஹீரோயின் நீங்க விருப்பப்பட்டபடி லட்சுமிமேனன் தான்.ஆனா வில்லன் தனுஷ் அவரை கரெக்ட் பண்றார்


=================



16  விஷால் - சார்.மினிமம் 35 அடியாள்ங்களை நான் அடிக்கனுமே?,



செல்வராகவன் - சாரி.இது லோ பட்ஜெட் படம்.ஒரே ஒரு வில்லன் தான்




=================



17  ஹீரோ எங்கே போனாலும் ( பாத்ரூம்க்குக்கூட) புல்லட் பைக் ல தான் போறாரு.1 ரீல் க்கு 15 பேரை ஷூட் பண்றாரு ! # புல்ல்ட் ராஜா




===================



18 புல்லட் ராஜா ( ஹிந்தி) ரிலீஸ் ஆகி 6 வது நாளிலேயே காத்து வாங்குது.17 பேர் தான் தியேட்டர்ல.படு டப்பா படம் போல # திருவனந்தபுரம் அஞ்சலி




======================



19 அன்பே! நீ எது சொன்னாலும் நான் அதை ஆமோதிக்கிறேன்.ஆனாலும் நீ எப்போதும் மோதிக்கிறாய்!




===================



20 ஹேய்! உன்னாலே நான் குண்டானேனே ! எஹேஹேய்! .ம் என்னாலே நீ உண்டானாயே! ஒஹோஹோ ஹோ!



========================

Tuesday, December 31, 2013

தூம் 3 - சினிமா விமர்சனம்




லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3

1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால்.



2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.



வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார்.

பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!


150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.


மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'

Thanks - Dinamalar

Monday, December 30, 2013

என்றென்றும் புன்னகை- சினிமா விமர்சனம்

சின்ன வயசுலயே   அம்மா  விட்டுட்டு ஓடிட்டதால  ஹீரோவுக்கு  பொண்ணுங்கன்னாலே வெறுப்பு.2வதுமேரேஜ்  பண்ணிக்கிட்ட அப்பாமேலயும்  கோபம். ஈகோ  உள்ள ஆள்  வேற.இவருக்கு  அமைஞ்ச   2 ஃபிரண்ட்ஸ் கிட்டேயும்  கடைசிவரை மேரேஜே பண்ணிக்காம  காலம்முழுக்க கன்னிப் பையனாகவே இருப்போம்னு சத்தியம்   எல்லாம் வாங்கிக்கறாரு.அதைமீறி   3 பேர்  வாழ்க்கைலயும்  எப்படி  ஒரு பொண்ணு  (தலா1)  வர்றா  என்பது தான்  கதை.

படத்தோட  முத  ஹீரோ  ஒளிப்பதிவாளர்தான்.ஃபாரீன்  லொக்கேஷன்கள் எல்லாம்  நேர்லயே பார்ப்பதுபோல்,கலக்கலா  கேமராவில்  பிடிச்சிருக்கார்.கண்ல ஒத்திக்கலாம்.பனி  பொழியும் காட்சிகளில்  ஏசி  இல்லாத தியேட்டர்களில்படம்,பார்த்தாக்கூட  ஜில்  லா உணர வைக்கிறது.சபாஷ் சார்.


கடவுள்  த்ரிஷாவுக்குக்கொடுத்த வரங்களிலேயே  முக்கியமானது  2. முதலாவது விண்ணைத் தாண்டி வருவாயா? 2வது   இதுதான்.கலக்கல்  காதல்காட்சிகள், நடிப்பு,தோற்றப்பொலிவு  ,ஆடைஅணிகலன்கள்  ,புன்னகை,கண்ணீர் எல்லாம் கலக்கல் ரகம்.   35+ ஆன ஆண்ட்டி மாதிரியேதெரியலை.நேத்துத்தான்  திரட்டி சுத்திகுடிசையில்  உட்கார வைக்கப்பட்ட  தேவதை போல் மிளிர்கிறார். ஹீரோ தன்னை  நண்பன் முன்  அவமானப்படுத்தும்காட்சியில், ஃபோட்டோ,எடுக்கும்போதுஇருவரும்   நெருங்கி  வரும்போதுவெட்கப்புன்னகையில்   என    சுத்திசுத்திகோல்,அடிக்கிறார்.(ஈரோடு  மாவட்ட எனக்கு20  உனக்கு 18த்ரிஷா நற்பணிமன்றத்துல இருந்துட்டுஇதுகூடவர்ணீக்கலைன்னாஎப்டி?)



அடுத்து  ,சந்தானம்.,அழகுராஜா,தோல்வியால்,துவண்டு,இருந்தவர்,இதில்,பேக்டூஃபார்ம்.

இடைவேளை  வரை,இவரால்,தான்  படம்,களை கட்டுகிறது.சரக்கு,அடித்து.விட்டு,வீட்டில்,சலம்பல்,செய்யும்,காட்சியில்,.அரங்கம்,

அதிர்கிறது. படத்தில்  மொத்தம்37ஜோக்ஸ்,சொல்றார்.அதுல இடைவேளைக்குப்பின்,வரும் 18 மொக்கை,ஜோக்ஸ்  ஆல்ரெடி   பத்திரிக்கைகளீல்வந்த,அரதப்பழசானஜோக்ஸ்தான், ஆனாலும்,ஆடியன்ஸ்சிரிக்கறாங்க,.காமெடிஸ்க்ரிப்ட்,எழுத,சம்பளம்வாங்கும்,

டீம்,மெம்பர்கள்,இப்படி,சுட்டுப்போடாமல்,சொந்த,சரக்கை,யோசித்து,எழுதவும்,

சந்தானம்,அதை,மானிட்டர்,செய்யனும்,.படத்தின்,முன்,பாதியில்,வரும்,காமெடி,
படத்தோடு,ஒன்றிவருவது,பிளஸ்


மூன்றாவது,பாராட்டு,இயக்குநருக்கு.இந்த,வருடத்தில்,வந்த,முக்கியமான,
ரொமான்ஸ்,படமிது.மிக,அழகாக,கவிநயத்துடன்,காட்சிகளை,அமைத்திருக்கிறார்.
இயக்கம்,கனகச்சிதம்,3நண்பர்களுக்குள்,இருக்கும்,நட்பு,ஹீரோ,ஹீரோயின்

கெமிஸ்ட்ரி எல்லாம்,அருமை.இவரதுஇயக்கத்தில்,இயக்குநர்  ஜீவா  டச் ஆங்காங்கேதெரிகிறது.


நாலாவது  பாராட்டு,ஜீவாவுக்கு. ஈகோ பிடித்த,கேரக்டர்,அழகாக,செய்திருக்கிறார்.ஆனால்தோற்றத்தில்,கோ,தான்

ஹை,லைட்.மீசைஇல்லாமல்,எடுபடவில்லை.ஆனாலும்,ஜீவாவின்,கேரியரில்,
இது,முக்கியமானபடம்


வினய்,நாசர்,ஆண்ட்ரியாஎன,அடுத்தடுத்து,பாராட்டுப்பெறுபவர்கள்
பட்டியல்,தொடர்கிறது.  ஆண்ட்ரியா  வரும்,காட்சிகளெல்லாம்,லோ,கட்,தான்.


ஹாரிஸ்ம்ஜெயராஜ்,அதிகம்,சுடாமல்,சொந்த,சரக்குடன்,களம்,இறங்கி,இருக்கிறார்.

குட்.



இயக்குநரிடம்,சிலகேள்விகள்


1.சின்னப்பையனா,இருக்கும்போது,ஹீரோ,அப்பாவிடம்,கோவிச்சுக்கறார்,ஓக்கே.

ஆனா,பல,வருடங்களா,அவர்,ஏன்,அப்பாகிட்டே,பேசாம,இருக்கார்?,காரணங்கள்

பலமா,சொல்லப்படலை


2.படத்தின்,முக்கியத்திருப்பம்,ஏர்போட்டில்,நண்பன்,முன் ஹீரோ,ஹிரோயினை

அவமானப்படுத்தும்,காட்சி.இது,யாருடா?என,கேட்கும்போது,விளம்பரப்படத்தில்

நடிக்கும்,நடிகை,எனவோ,அசிஸ்டெண்ட்டைரக்டர்,எனவோஉண்மையை,சொல்ல
வேண்டியதுதானே?காதலி,என்றோ,கேர்ள், ஃபிரண்ட்,என்,றோதானேசொல்லக்கூடாது?யார்,என்றே,தெரியலை.ஃபிளைட்டில்’
கூட,வந்தவங்களா,இருக்கும்,என,டபாய்ப்பது,ஏன்?படு,செயற்கை


3.ஹீரோவும்,காமெடியனும்,ஹோமோ,என்பது,மாதிரி,காமெடி,தேவை,இல்லாதது.
இது,போன்ற,ஃபேமிலிஆடியன்சை,வரவைக்கும்,லவ்,ஸ்டோரியில்,இது,தேவை,
இல்லாதது.ஆல்ரெடி,எஸ்,ஜே,சூர்யாவின்,அன்பே,ஆருயிரே,வில்,வந்த,காட்சி,தான்


4.பலர்,முன்,கன்னத்தில்,அறை,வாங்கும்,ஆண்ட்ரியா,அதைப்பெரிதாக,எடுத்துக்
கொள்ளாதது,நம்பவே,முடியல.இந்தக்கால,மாடர்ன்,ஃபிகருங்க,அவமானத்தை

மறக்கவோ,மன்னிக்கவோ,மாட்டாங்க.(பின்,வரும்,காட்சியில்,அவர்,கழுத்தறுக்கும்
காட்சி,இருக்கு,என்றாலும்,கூட,என்னமோ,இடிக்குது

நச்,டயலாக்ஸ்


1.அவன் ஹைட்டா இருக்கறதால முன்னால போற பிகர்ஸை எட்டிப்பார்த்துடறான் ஈசியா



2. சந்தானம் - லேடீஸ் செப்பலைப்பார்த்தாலே அது மேல ஒரு நிமிசம் ஏறி நின்னு பார்ப்பான் அவன்.சரியான ஜொள்ளு கேஸ்


 3. டீ சாப்பிடறயாடி?

ம்

இந்தா (மொட்டை,மாடில,இருந்துகீழே  ஊத்தறார்)

4.லேடி - சார் ,5 10 க்கு போலாம் னு இருக்கேன்.



 அட போம்மா.உன்னாலதான் எல்லாப்பிரச்சனையும் # சந்தானம்

(பிரச்சனை,வரும்,முன்,இருந்தவசனம்=  நல்லாதானே,இருக்கே?ஏன்,அஞ்சு,10க்குப்போறே?500,ரூபா,1000 ருபாக்கு

போகலாமே?(இதயம்பேசுகிறது,ஜோக்,எழுதியவர்-வலங்கைமான்நூர்தீன்)



5 எனக்குப்பொண்ணுங்கன்னா,ரொம்பப்பிடிக்கும்,ஆனா,மேரேஜ்னாபிடிக்காது



6.,பொண்ணுபன்னு,மாதிரி,இருக்கு

பேக்கரி,ஓனர்,மாதிரி,பேசாதே



7.இவஎன்னமோ,சைக்கிள்,ஃபோர்க்ஸ்,மாதிரி,இருக்கா?இவதான்,சமந்தாஃபாக்சா>


8. அவன்,பெரிய,ஆளு.எங்க,கை,வெச்சாலும்,பொறுத்துப்போகனும்


அட்ஜஸ்,பண்ணிப்போக,அவன்,என்ன,ஐட்டமா?



9,கக்கூஸ்ல,ஏன்,புக்,படிக்கறே?அது,என்ன,லைப்ரரியா?

10.அவனைப்பாரு,ஆமை,ஆய்,போற,மாதிரியே,உக்காந்திருக்கான்


11,கடைல,இருக்கும்,பல்புஎல்லாம்,ஏன்,ஆஃப்,பண்ணி,இருக்காங்க?


இவ்ளவ்,பெரிய,பல்புநீ,இருக்கும்போது,அது,எதுக்குன்னுதான்(கு,ஞானசமப்ந்தன்

எழுதியபுக்கில்,இருந்துசுட்டது)






12.அடியே,உன்,மூஞ்சியை,கொஞ்சம்,வாஷ்,பண்ணிப்பாரு,ஸ்கூல்,வாசல்ல,
மாங்கா  விக்கற,ஆயா,மாதிரியே,இருக்கே



13.என்,பொண்டாட்டி,இப்போதைக்கு,குழந்தைவேணாம்கறா.குழந்தை,
பிறக்காம,இருக்கஎன்ன,செய்யனும்?


எதுவுமே,செய்யக்கூடாது,(பாக்யா  1986ல்,வந்த ஜோக்)



 14.சம்பாதிச்சுக்கொட்டறதும்,இல்லாம,இவங்கசொல்றதுக்கு,எல்லாம்,உம்,
கொட்டனும்


15.கல்யாணத்தாலஃபிரண்ட்ஷிப்,கெடும்னாஅப்படிப்பட்ட,ஃபிரண்ட்ஷிப்பே
வேணாம்



16ஏண்டி!உன்,புருஷனுக்குமுருகையான்னுபேர்வைக்காமமுகேஷம்பானுன்னா

வைப்பாங்க?


17. யாருஇவன்?பர்மா,பஜார்ல பிட்  பட  சிடி  விக்கறவன்,மாதிரியே,இருக்கான்



18பார்த்த,உடனே,வர,காதல்,என்ன,மெட்ராஸ்,ஐ,யா?


19,அவன்,விடும்ஜொள்ளுக்கு,நாம,நீச்சல்,அடிச்சுத்தான்,போகனும்



20,என்னடா?கை,வலியா?


கையை,மட்டும்,முறுக்கி,இருஃந்தா,தேவலை



21   லேட்டஸ்ட்,டெக்னிக்,என்ன,தெரியுமா?அம்மாவைக்கரெக்ட்,பண்ணிட்டா
பொண்ணு,ஈசியாசெட்,ஆகிடும்


22 நம்மால,5,நிமிசமே,பேச,முடியலையே,எப்படி5 மணிநேர,ம்,கடலை
போடறாங்க?



23.ஏண்டா,கண்ணாலயே,பேசறே?வாய்லபேசமுடியாதா?
வெத்தலைபாக்குபோட்டிருக்கியா?


24.நீ,ஏண்டா,போறே?அவளே பிளேட்,கழுவிட்டாளாம்



25.பொண்ணுங்களுக்கு,கைகொடுத்தா லோக்கல்.கட்டிப்பிடிச்சா,ஃபாரீன்



26  உங்கபக்கத்துல,யார் நின்னாலும்,கழுவாதமூஞ்சி,மாதிரிதாந்தெரியும்

27.ஷேம்,ஷேம்,பப்பிஷேம்


இதுக்குமுன்னாலநீஅசிங்கப்பட்டதேஇல்ல?



28கதகளி,டான்ஸ்,கராத்தேரெண்டையும்மிக்ஸ்,பண்ணிஒருமேட்டர்

சோடாஊத்தல?



29போலீஸ்-வீட்டுக்கு,ஃபோன்பண்ணு


நெம்பர்,சொல்லுங்க


உன்வீட்டுக்கு,ஃபோன்,போடச்சொன்னேன்



30.ப்ரியாபிழைச்சுக்குவாளா?


ஏன்?அவளுக்குஅமெரிக்காவுல,நல்லவேலை,வாங்கித்தரப்போறியா?






சி.பி.கமெண்ட்-என்றென்றும் புன்னகை - முன்பாதிசந்தானம்காமெடி,பின்பாதி,மயில் இறகால் விழி இமை முடிகளை வருடியது மாதிரி மென்மையான காதல் -

விகடன்,எதிர்பார்ப்புமாக்=42,


குமுதம்-ஓக்கே


 ரேட்டிங்-3/5


ஈரோடு,அபிராமியில்,படம்,பார்த்தேன்.படம்,ரிலீஸ்,ஆகி,7நாள்,லேட்டா,பார்த்து,11 நாள்,கழிச்சு,விமர்சனம்,போடறேன்..ஈரோடு அபிராமி தியேட்டர் எதிரே இருக்கும் KR பேக்ஸ் பேக்கரி ல 6,ரூபாய்க்கு விற்கும் வெஜிடபிள் பப்ஸை தியேட்டர் ல 20 ரூபாக்கு விக்கறாங்க


படம்,பார்க்கும்போது,போட்டட்வீட்ஸ்

1.ஆன்ட்ரியாவுக்கான கேமரா கோணங்கள் ஆஹா!



2.த்ரிஷா வுக்கு ஓப்பனிங் ஷாட் எப்டி வைக்கனும்னு தெரியாதவரா இருக்காரே இயக்குநர் :-((


3 சந்தானம் பேக் டூ பார்ம் # என்றென்றும் புன்னகை .படம் போட்ட 12 நிமிடத்தில் 8 ஜோக்ஸ் ;-))




இங்கே ஒரு மானஸ்தர் இருந்தாரே , பார்த்தீங்களா?

1.  BJP ல்சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு # விளையாட்டுத்தனம் னு எதிர்க்கட்சி சொன்னா விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கிடுவாரோ?



====================


2 ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'! # இனி அந்தக்கோயில் அஞ்சலி வந்தருளிய தலம் ஆகிடுமோ?



====================



3 டெல்லியில் ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம் தேவை: கெஜ்ரிவால் # பாத்துங்ணா.உள்ளதும் ஓடிப்போச்சு ,வளரும் முன் வாடிப்போச்சுன்னு ஆகிடப்போகுது


====================


4 BJP கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது# இந்து கட்சியோட சேர்ந்தா முஸ்லீம் கட்சி எப்டி வளரும்? னு யாரும் கிளம்பல?



=========================



5 ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம் # நல்லா இரு " ராசா"



=====================


6 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவோம்: சரத்குமார் உறுதி # இன்னுமா இன்னோவா வர்ல?



===================



7 விஜயகாந்தை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா # அடிச்சாலும் புடிச்சாலும் நீ தான் மச்சான் ,்




=====================


8 அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு # அரசியலை விட்டு ஒதுங்கறேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரு.ஆளைக்காணோம்



====================



9  பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் புதிய கூட்டணி: அன்புமணி ராமதாஸ் # விரட்டி அடிக்கப்பட்டோர் ,சும்மா இருப்போர் முன்னேற்ற முன்னணி



=====================


10 திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா # மெஸ் ல டிபன் ரெடிங்கற மாதிரி இப்பவெல்லாம் மிஸ் ரெடி ஆகிடறாங்க


=====================


11 இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது! # சரி .ஒயிட் & பிளாக் கன்னிகள் ஆடுனாலும் எங்களுக்கு ஓக்கே தான்




======================



12 ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் # இதுக்குத்தான் அமுல்பேபிக்கெல்லாம் சீக்கிரமா மேரேஜ் கூடாது



====================



13 சேலத்தில் பெட்ரோல் டீிசல் கலந்த குடிநீர் சப்ளை# ரொம்ப சவுகர்யமாப்போச்சு.பைக் ல பிடிச்சு ரவுண்ட் அடிக்கலாம்.அம்மா மலிவு பெட்ரோல்க்கு ஜே




====================


14 'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல் # வம்புக்கு இழுக்கும் சீனியர் சிம்பு




=====================


15 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! # வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை பாவத்தை அசை போட்டுப்பாருங்க


=======================



16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு # ஊழல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


=====================



17  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்.# பப்ளிஸிட்டிக்காகவாவது பொண்ணுங்க சிட்டி ல சமையல் செய்யறாங்க



=======================


18 ஹ்ருத்திக் ரோஷன் 17 ஆண்டுகால மணவாழ்க்கை முறிவு # ரோஷம் அதிகமா இருந்தாலே இப்டித்தான்



===================



19 மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் முத்தம் -சரத்குமார் # சித்தப்பா இனி முத்தப்பா



==================


20 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன்"# வாடகை வீட்டைக்குறை சொல்லலாம்.சொந்த வீட்டை?



=================


21 பிரபாகரனைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் - திருமா! # இலங்கைக்கும் ஓடுனீங்க போல


=======================


22 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் # இன்னோவா கார் கிடைச்சுடும்னு நம்புக்கை வந்துடுச்சு



===================


23 தேமுதிகவின் அச்சாணி பண்ருட்டியார் ராஜினாமா # எல்லா கட்சிலயும் ரொட்டீனா நடப்பதுதான்


====================

24 சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் # அவங்களே தோல்வி ஜூரம் கண்டு கிடக்காக


================



25 திமுக - காங். கூட்டணி தொடருமா?: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது": கருணாநிதி ் # " உள்ளே" போய் தான் சொல்வாரோ?



===================



26  இன்னும் 6 மாதகாலத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை செய்யப்போகிறேன்-ராகுல் #பிஜேபி கட்சிப்பிரமுகர் பொண்ணை லவ் மேரேஜ் செஞ்சிடுவாரோ?




==================

 

Sunday, December 29, 2013

'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!

 

ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .
தமிழ் ஆசிரியர் தன்னுடைய அணுகுமுறையைக் கூற, "அதெல்லாம் சரிவராது, நான் சொல்வதைக் கேளுங்க.. இப்படி பண்ணுங்க..." என்று அவர் சில வழிமுறைகளை கூறுகிறார்.


அடுத்து ஆங்கில ஆசிரியரின் முறை அவர் தன் வழிமுறையாக எந்தெந்த கேள்விகளை மிகவும் பின்தங்கிய மாணவர்களால் படிக்க முடியுமோ அதை மட்டுமே அவர்களுக்கு தான் சிறப்பு பயிற்சியளிப்பதாக கூற, அவற்றை கேட்டு விட்டு இதெல்லாம் எப்படி தமிழ் மீடியம் பயிலும் மாணவர்களுக்கு ஒத்துவரும் என்று அவரே சிலவற்றை கூறுகிறார்.


அடுத்து கணித ஆசிரியை தன் பங்குக்கு தான் தன் வகுப்பை மூன்றாக, மிகவும் பின்தங்கிய மாணவர்கள்,பின்தங்கிய மாணவர்கள், நன்கு படிக்கும் மாணவர்கள் என்று பிரித்து அவரவர்க்கு தகுந்த வகையில் கணக்குகளைக்கொடுத்து போடச் சொல்வதாக கூற, "அதெப்படி வகுப்பை மூன்றாகப் பிரிப்பது.. இரண்டாக மட்டுமே பிரிக்க வேண்டும்" என்று அவரை இடைமறிக்கிறார் தலைமை ஆசிரியர்.


"அப்படி பிரித்தால் தான் உங்களுக்கு ரிசல்ட் வரும்" என்று அவர் கூற அப்படி பிரித்து கவனிக்காமல் விட்டதால் 80 மதிப்பெண் வாங்கிய மாணவன் 40 மதிப்பெண் பெற்றிருக்கிறார். இது எனக்கு கவலையாக இருக்கிறது என்று ஆசிரியை வருத்தப்பட, "அதை பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நமக்கு எல்லோரும் பாஸ் ஆனால் போதும்.. ஏனென்றால் CEO கேட்பது அதை தான்" என்று முடித்துவிட்டு அடுத்த ஆசிரியரிடம் பார்வையை செலுத்தினார்.
தலைமை ஆசிரியர் ஒரு மனநிலையில் வந்திருக்கிறார் அவர் நாம் சொல்லும் எதையும் கேட்கப்போவதில்லை எதற்காக வீணே சொல்லிக்கொண்டிருப்பது என்று மற்றவர்கள் அமைதி காக்க, 'ஆலோசனைக் கூட்டம்' என்ற பெயரில் அனைத்து ஆலோசனைகளையும் தானே வழங்கிவிட்டு கூட்டத்தை முடிக்கிறார் தலைமை ஆசிரியர்!


இப்படித்தான் நடக்கின்றன பெரும்பாலான ஆசிரியர் கூட்டங்கள்! இப்படி எதையும் செய்யவோ சொல்லவோ அனுமதிக்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறவில்லை, மாநில சராசரியை எட்டிப்பிடிக்கவில்லை என்று குறை கூறுவதால் என்ன பயன்?


அப்படியெனில் இதற்கெல்லாம் தலைமையாசிரியர்தான் காரணமா எனில், தலைமை ஆசிரியரை நாம் இங்கு குறை கூற முடியாது. ஏனெனில், அவர் வெறும் அம்பு. அதை எய்தவர் சி.இ.ஓ. அவரையாவது நாம் குறை கூற முடியுமா எனில் அதுவும் முடியாது. அவரும் கல்வி இயக்குனரிடம் இருந்து, "உன் மாவட்டம் மட்டும் ஏன் கடைசியாக இருக்கிறது? அடுத்த முறை ஐந்து இடங்களாவது முன்னேறியிருக்கவேண்டும்" என்று தன் மீது வீசப்பட்ட சொல் அம்பை பிடுங்கி தனக்குக் கீழ் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மீது வீசியவர் அவ்வளவே. அவர் வீசியதை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது வீச, அவர்கள் மாணவர்களை நோக, இப்படித்தான் அம்பு வீச்சு தொடர்கதையாய் நீள்கிறது.


'அப்படியெனில் இயக்குனரையாவது நொந்துக்கொள்ளலாமா அல்லது கல்விச் செயலரையும் கல்வி அமைச்சரையும் நொந்துகொள்ளலாமா அல்லது நாம் குற்றச்சாட்டை முதல்வரை நோக்கி நேரடியாக வீசிவிடலாமா?' என்று நாம் யோசிக்கும்போது நம் விரலை வேறு திசையை நோக்கி வீசுவதை விட நம்மை நோக்கி காட்டிக்கொள்வதே சாலச் சிறந்தது. ஆம். இங்கு அனைவரும் ஒன்றை கவனிக்க மறந்து போகின்றோம்.


முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அது உளவியல் வல்லுனர்கள் அடிக்கடி வலியுறுத்தும் வார்த்தைகளான, 'தனியாள் வேற்றுமை'. ஆனால் இதைப்பற்றி யாரேனும் கவலை கொள்கின்றனரா எனில், நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். அப்படி கவலைகொள்ளும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் யாரும் அனைத்து மாணவர்களும் 40 மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்றோ, தனியார் பள்ளி முதல்வர்கள் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் இரண்டு 100 மதிப்பெண்களாவது வாங்கிவிட வேண்டும் என்றோ கூற மாட்டார்கள் .


ஒவ்வொரு வகுப்பிலும் பல வகையான நுண்ணறிவுத் திறன் கொண்ட மாணவர்கள் இருப்பர். அவர்களில் சிலர் அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களாகவும் சிலர் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பர். மற்றும் சிலர் நுண்கலைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். சமூக அறிவியலில் 80 மதிப்பெண் பெரும் மாணவன் தமிழில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பாஸ் ஆகி இருக்கிறான் எனில், அவனுக்கு வரலாற்று துறையில் ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அவனை அந்த வழியில் தொடந்து ஊக்கப்படுத்த வேண்டும். இதை தான் உளவியல் அறிஞர்கள் APTITUDE, ATTITUDE என்கின்றனர்.


இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளரும் கவிஞருமான தாகூர், தன் பள்ளிப் படிப்பைப் பற்றி கூறும்போது, தான் பள்ளியில் இருக்கும்போது கூண்டுப் பறவையாய் உணர்ந்ததாக கூறுகிறார். ஆசிரியர்களால் ஒன்றுக்கும் உதவாதவர் என்று எண்ணப்பட்டதால், பள்ளிப்படிப்பை இடையில் விடுத்த அவர்தான் தன் நாற்பதாவது வயதில் உலகம் போற்றும் சாந்திநிகேதன் என்ற பள்ளியை நிறுவி, அதை விஸ்வபாரதி எனும் பல்கலைக்கழகமாக உருவாக்கினார் .
தனக்குப் பிடிக்காத பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் ஆழ் மனம் கூறிய பாதையை தேர்ந்தெடுக்க தாகூரால் முடிந்தது. 


காரணம், அவருடைய வீட்டு சூழ்நிலை அதற்கேற்றவாறு இருந்தது. அவருடைய தந்தை கல்வி என்பதன் முழுப்பொருளை உணர்ந்திருந்தார். ஆனால் இப்போதைய பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆர்வத்துக்கும் உள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் போக்கு குறைந்து போய்விட்டது. அதனால் தான் அரசுப் பள்ளிகள் வெறும் ஆவரேஜ்பொருள்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறிக்கொண்டிருக்க, இதற்கு நேரெதிராக தனியார்ப் பள்ளிகளும், கல்லூரிகளும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய தங்கள் மாணவர்களை தயாரித்துக்கொண்டிருக்கின்றன.


ஆனால், நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரே மாதிரியான ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸை அரசுப் பள்ளிகள் உருவாக்கிக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் வருங்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல. சமுதாயக் கட்டமைப்பு என்பது பல்வேறு தொழில்நிலைகளைச் சார்ந்தது. அதை நிலைநிறுத்த வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வித பணிகளை மேற்கொள்வது அவசியம். ஆனால் அரசுப் பள்ளிகள் செய்துகொண்டிருக்கும் இந்த ஆவரேஜ் உற்பத்தி நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதோடு, தனிமனிதனின் உளவியலையும் கடுமையாக பாதிக்கிறது. சமூக அமைப்பைப் பற்றிய விரிவான பார்வை மாணவர்கள் முன் வைக்கப்படுவதில்லை. இந்நிலை நீடித்தால் என்ன ஆகும் பெற்றோர்கள் அவசியம் யோசிக்கவேண்டும்!

Thanks - The Hindu

சோனியா ! ஊழல் வழியில் போனியா?

1. போரில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர் # சக்சஸ்.எங்காளு பேசிட்டாரு.சவால் எல்லாம் விடறாருங்கோவ்



==================



2  விஷால் செல்வராகவன் உடன் படம்- செய்தி # சைக்கோ ஹீரோ மதுரைல இருந்து சிகாக்கோ போய் ரவுடிகளை ஒழிப்பதே கதை.டைட்டில் புரொடியூசரைக்கொன்றேன்



================


3  மகாத்மாவுக்கு"தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை':உள்துறை அமைச்சகம் # இது இத்தாலி அன்னை யின் ஆலோசனைப்படி சொன்னதா?




==================



4 சிம்பு,தனுஷ்,அனிருத் மூவரும் லண்டன் பயணம். # அநேகமா நயன் தாரா ,ஸ்ருதி ,ஆன்ட்ரியா அவுட் ஆப் ஸ்டேஷன் னு நினைக்கறேன்



==================



5 எனக்கு மீண்டும் பிரதமராகும் கனவு இல்லை - தேவகௌடா # பகல் கனவு காணாமல் இருப்பதே நல்லது.ஆல்ரெடி 2 பேருக்குள்ள அடிதடி




====================


6  தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் # கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்த நரசிம்மாவே சொல்லிட்டாரு





==================



7 பெண்கள் மீது ஆசிட் வீசும் நபரை பாதுகாப்புக்கு கொன்றால் கொலை குற்றம் ஆகாது. s.100(7) ipc"# அதை நிரூபிப்பதற்குள் பாதி ஆயுசு போய்டுமே?




====================

 8 
 பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் # உங்க தலை மை சிவப்பு .கம்யூனிிஸ்ட் தான் மேட்ச்சுக்கு மேட்ச்




==================


9 டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் # கேப்டன் மேலயே கை வெச்சுட்டாரே?



==================


10 டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு # சிவ சிவா. 10 நாள் ஓடற படத்தை 30 நாள் ஓட விட்றுவாங்கபோல



=================


11  ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கருணாநிதி # அம்மா ,தாயே! சாப்பிடாம மிச்சம் மீதி இருந்தா



=================


12   19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது # வெள்ளி விழா கொண்டாடறதுக்குள்ளே சனி திசை தொடங்கிடுச்சு போல




==================


13 உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியாகாந்தி - எல்லாம் நம்ம காசுதான்.ஊரை அடிச்சு உலையில் போட்ட காசு



=====================



14  ஆண்மை இருக்கிறதா? தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை # அவர் ரேப்பா பண்ணிட்டாரு.சும்மா லை ட்டா தடவுனதுக்கேவா?


=================



15 மின் வெட்டால் விசைத்தறித் தொழில் பாதிப்பு -செய்தி # தமிழ் நாட்ல விசய் சினிமாக்கும் ,விசைத்தறித்தொழிலுக்கும் பாதுகாப்பில்லாம போச்சே?



============



16  இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ் # உறவே வேணாம் ,வெட்டிட்டு வாய்யான்னா பொண்ணை கட்டிட்டு வந்தானாம்


==================


17 ஏற்காட்டில் மின்வெட்டு இருக்காது: சேலம் கலெக்டர் தகவல் # எலக்சன் முடிந்த பின் மீண்டும் வந்து விடும் மின் வெட்டு எனும் இக்கட்டு


===================


18  சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு # அவர் பேர்லயே ஏன் மது இருக்கு?னு தனி கேஸ் போடுவாங்க்ளோ?


===================


19 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி # சோனியா ! ஊழல் வழியில் போனியா?செம போணியா?


===================



20  கள்ளக்காதலி- மனைவி் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த கோர்ட் உத்தரவு # இவரு பாட்டுக்கு ஈசியா தீர்ப்பு சொல்லிட்டாரு.அடி வாங்குறது யாரு?


==================


Saturday, December 28, 2013

ஆம் ஆத்மிஅர்விந்த்கேஜ்ரிவால்-சில அதிர்ச்சித்தகவல்கள்

 

சமுதாயத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்; குழப்பவாதி, தேர்ந்தெடுக்க லாயக்கற்றவர் என்றெல்லாம் இதர கட்சியினரால் விமர்சிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்க்க இடங்களைப் பிடித்து, டில்லியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. தன்னுடைய இந்த சாதனை மூலம், இதர கட்சிகளின் வாயை அடைத்துள்ளார். கெஜ்ரிவால்.

வழக்கமான அரசியலில் ஈடுபட்டு வட்டம், மாவட்டம் என்றெல்லாம் சுற்றித்தான் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்ற நடைமுறையையும், அரசியல் வாரிசாக இருந்தால் மட்டுமே பதவியைப் பிடிக்க முடியும் என்ற அவலத்தையும் மாற்றி, சாதாரண ஒரு நபர், முதல்வர் என்ற நிலைக்கு உயர முடியும் என்ற சாதனையைப் படைத்தவர் கெஜ்ரிவால். நாட்டில் மாற்றம் வரவேண்டுமானால் இவரைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். இவரைப்போன்றவர்கள் மேலும் உருவாவார்களா? மக்கள் அவர்களை ஆதரிப்பார்களா இவரும் இவருடைய கட்சியினரும் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.



மேலும் டில்லியில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்து சாதனை படைத்தார். 1967ல் 3 முறை மேயராக இருந்த மத்திய அமைச்சர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1977ல் இந்திராகாந்தியை தோற்கடித்த ராஜ்நாராயண் ஆகிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.


கொலைகாரர்கள் என்று விமர்சித்தவர் : இந்த அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ளா விட்டால், மக்கள் அவர்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்கட்டுவதாக கூறும் கெஜ்ரிவால், பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொலைகாரர்கள்; கற்பழிப்பாளர்கள் என்று விமர்சித்தவர்; ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால், பாதிக்ம் மேற்பட்ட மத்திய அமைச்சர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக கூறியவர்.


அதிகாரி முதல் அரசியல்வாதி வரை:

பொறியாளராக வாழ்க்கையைத் துவக்கி, அதிகாரியாக பொறுப்பேற்று, ஒரு தலைவரின் ( அன்னா ஹசாரே) தீவிர தொண்டராக மாறி, பின்னர் அவரிடமிருந்து விலகி தனிக் கட்சி துவக்கிய கெஜ்ரிவால், ஹரியானா மாநிலம் ஹிஷாரில், கோபிந்த் ராம் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் கீதா தேவிக்கும் இடையே, 1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ம் தேதி மகனாகப் பிறந்தவர்.1985ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த கெஜ்ரிவால், முதல் முயற்சியிலேயே, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெற்றியடைந்து, ஐ.ஐ.டி. கோரக்பூரில், மெக்கானிக்கல் இஞ்ஜினியர் பட்டம் பெற்றார்.

இஞ்ஜினியரிங் படிப்பை முடித்த கையோடு, டாடா ஸ்டீல் நிறுவனத்தில், 1989ம் ஆண்டில் பணியில் சேர்ந்த கெஜ்ரிவால், 1992ம் ஆண்டில், அப்பணியை ராஜினாமா செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முழு கவனத்தையும் செலுத்தினார். முதல் முயற்சியிலேயே, அந்த தேர்விலும் வெற்றி பெற்று மத்திய அரசுப் பணியில் அமர்ந்தார். மத்திய அரசின் பணியில் இருந்தபோதிலும், அவரது கவனம் முழுவதும் சமூக விழிப்புணர்வு அடிப்படையிலான செயல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை குறித்த விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளிலேயே மிகுதியாக இருந்தது.

தகவல் அறியும் உரிமை குறித விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற நடவடிக்கையை கவுரவிக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், ரமோன் மகசேசே விருதை, அர்விந்த் கெஜ்ரிவால் பெற்றார்.

ராம்லீலா மைதானம் முதல் சட்டசபை வரை: 


மத்திய அரசின் வருமான வரித்துறையில் இணை ஆணையராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அப்பணியையும் ராஜினாமா செய்து, முழு நேர சமூக சேவையில் களமிறங்கினார். ரமோன் மகசேசே விருதின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, அரசு சாரா அமைப்பினை உருவாக்கி, அதன்மூலம், பொதுமக்களுக்கு ஏற்படும் அன்றாட இன்னல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டார்.


இந்நிலையில், 2011ம் ஆண்டில், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே நடத்திய மாபெரும் போராட்டத்தில், கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட அன்னா ஹசாரே குழுவில், நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உள்ளிட்டோர்களோடு, கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார்.



லோக்பால் மசோதா குறித்த விவகாரத்தில், மத்திய அரசு தங்களை ஏமாற்றுவதாக கெஜ்ரிவால் கருத்து கூறியதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், கெஜ்ரிவால், அரசியலில் நுழைந்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பார்க்கட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு நேரடியாக சவால் விடுத்தனர். இந்நிலையில், அன்னா குழுவினருக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்குழுவிலிருந்து விலகிய அர்விந்த் கெஜ்ரிவால், 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி "ஆம் ஆத்மி' என்ற கட்சியை துவக்கினார்.
கரி பூசினார்:


கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலர் எள்ளி நகையாடிய போதிலும், அதுகுறித்து, அவர் கவலை கொள்ளாமல், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கினார். டில்லி சட்டசபை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், இம்மாதம் 4ம் தேதி வெளியானது. டில்லி மாநிலத்தில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 28 இடங்களில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, தங்களின் நடவடிக்கைகள் குறித்து எள்ளி நகையாடியவர்களின் முகத்தில் கரியை பூசியது.

தொடர்ந்து 3 முறை டில்லி முதல்வராக பதவி வகித்த ஷீலா திட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட அர்விந்த கெஜ்ரிவால், 25,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்வர் அலுவலகத்திலிருந்து மட்டுமல்லாது, அவரது தொகுதியிலிருந்தும் ஷீலாவை, கெஜ்ரிவால் வெளியேற்றினார்.

அரசியலில் முதன்முறையாக களம் கண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், இமாலய வெற்றி பெற்று, டில்லி மாநிலத்தின் குறைந்த வயது முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.
 
 
நன்றி-தினமலர்
 
 
டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். 


டெல்லி மாநிலத்தின் 7-வது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் மக்கள் ஆட்சி அமைந்து விட்டது. 


டெல்லியில் இனி அதிகாரிகள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் மக்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள். மக்கள் கைகளில் அதிகரத்தை அளிக்கவே இந்த போராட்டத்தை ஆம் அத்மி மேற்கொண்டது. 


டெல்லியில் ஊழல் முற்றிலுமாக களையப்படும். ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஆதரவு வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு கறை படிந்த அரசியல் தான் காரணம். 


ஆரம்பத்தில் அரசியலில் அடி எடுத்து வைக்க அண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரிடம், அரசியல் நுழைந்தால் தான் அதில் இருக்கும் அசுத்ததை நீக்க முடியும் என்றேன். அதற்கேற்ப அரசியலை சுத்தப்படுத்துவோம் என்றார். 


மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், பெரிய கட்சிகள் கடைபிடிக்கும் அதிகார ஆட்சியை அப்புறப்படுத்தவே ஆம் ஆத்மி உதயமாகியுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆட்சிக்கு ஆசைப்படவில்லை ஆம் ஆத்மி:

 
டெல்லி சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி மேல் ஆசை இல்லை. 


எனவே முடிவு என்னவாக இருந்தாலும் மகிழ்ச்சியே. மறு தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகப்படியான பெரும்பான்மையை அளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


நன்றீ- ததமி  இந்து

திருப்பூர் மாவட்டம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் திறப்பு விழா அணைவரும் வருக...
Embedded image permalink
 

மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்

 

கிராமிய  மண் மணம் கமழும் படங்கள் மக்கள்  மனதைக்கவர  என்றுமே தவறியதில்லை.பாரதிராஜா ,அமீர் -ன்பருத்திவீரன்பாணியில்  வந்திருக்கும்   இந்தப்படமும்  தமிழ்    சினிமாவின்  முக்கியமான மைல்  கல் படமே.குறிப்பிட்ட  ஒரு  இனத்தின்,கலாச்சாரத்தை  ,பழக்கவழக்கங்களை,நேரில் நாம் பார்ப்பது ,போன்ற ,உணர்வைத் தந்து பிரமாதமாக இயக்கிய விக்ரம்சுகுமாரன்க்கு  ஒருஷொட்டு.இவர்  பாலுமகேந்திராவிடம்  தொழில்கற்றவர்.தேசிய விருதுவாங்கிய ஆடுகளம்வசனகர்த்தா.ஒத்தைக்கண்ணால,பாட்டுக்குதனுஷ்,ஆடும்,லுங்கி,டான்ஸ்,ஐடியாஇவருதுதான்.


ஹீரோவோட  அப்பாவின் மரணத்தில் கதை துவங்குது.கேரக்டர்களை,வில்லுப்பாட்டு,மூலம்,அறிமுகப்படுத்திட்டே,வர்றாங்க.

ஹீரோவோட,அப்பாவுக்கு,2 சம்சாரம்.முத  சம்சாரத்துக்கு ஒருஅண்ணன்.2வதுசம்சாரத்தோட ஜென்மப்பகைபாராட்டிவர்றார்  முத சம்சாரத்தோட  அண்ணன்.

அக்னி நட்சத்திரம்  படத்தில்வரும்காத்திக்,பிரபு,மாதிரி,அண்ணன்,தம்பிங்க,அடிச்சுக்காம
ஒத்துமையா,இருப்பதும்,இரு,தாரங்களும்,அனுசரணையா,இருப்பதும்,தமிழ்சினிமாவுக்குப்புதுசு.

ஹீரோவோட  அப்பாவின் மரணத்தின்போது,இழவு,காண,வரும்சொந்தங்கள்
ரகளைல,அடிதடில.எதிர்பாரதவிதமா,விபத்தா,முதசம்சாரத்தோட,அண்ணன்,மகன்

இறந்துடறார்.கொலைப்பழி,ஹீரோமேல விழுது.


அதுக்குப்பழி,வாங்கநடக்கும்,சேசிங்க்,தான்மிச்சமீதித்திரைக்கதை.


ஹீரோவின்,அப்பாவின்,முதசம்சாரத்தின்,அண்ணனாகவரும்,வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி,பாடிலேங்குவேஜில்,கலக்கி,இருக்கிறார்.அவருக்குத்தான்
முதமார்க்.மீசையை,முறுக்கி,ஒரு,பார்வை,பார்த்தாலே பயம்,தொத்திக்குது.

செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் முத சம்சாரம் செவனம்மாவாக விஜி சந்திரசேகர்,க்குஅடுத்த,இடம்.

 அறிமுகம் கதிர்,இயல்பா,பண்ணி ,இருக்கார்.படம்,முழுக்கசாந்தசொரூபியாக,வரும்,அவர்,க்ளைமாக்சில்,மொட்டை,
அடித்த, பின்சூர்யன்,சரத்குமார்,மாதிரிஅடித்துதூள்,பரத்துவது,நம்பும்படி,இல்லை.

அவருக்கு,ஜோடியாக,வரும்,கேரளத்துக்கன்னி,ஓவியா,கண்முன்,நிற்கிறார்.(உக்காருங்க)

சபாஷ் சத்யா



1.இழவு வீட்டில் தேவர் இனத்தின் சம்பிரதாயங்கள் இவ்வளவு விஸ்தீரணமாக காட்டப்பட்ட முதல் தமிழ்ப்படம்,இதுவாகத்தான்,இருக்கும்


2,மத யானைக்கூட்டம் - இயக்குநரின் திரை ஆளுமை ,கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அபாரம் .கிராமிய மணம் வீசும் வசனம்


3.ஓப்பனிங் சீன் ல ஆட்டோவில் இருந்து குனிந்து இறங்கும் கேரளக்கன்னி ஓவியா.கேமராமேன் புத்திசாலி.படம்,முழுக்க,ஓவியா,வரும்,காட்சிகளில்,எல்லாம்,அடிக்கடி,குனிகிறார்.
ஒளிப்பதிவாளர்சொந்த,ஊர்,குனியமுத்தூர்,போல.எப்படியோ,ரசிகர்களுக்கு விருந்துதான்


4.திரைக்கதை,செமவிறுவிறுப்பு.ஒரு,சீனில்,கூடபோர்,அடிக்கலை,ஒருவித,பதைபதைப்போட

போகுது.வன்முறைக்கதைக்களமா,இருந்தும்,ரத்தம்,எல்லாம்கோரமா,காட்டாம.
கண்ணியம்,காத்திருக்காங்க


5.ஹீரோதான்,ஜெயிக்கனும்,என்ற,சம்பிராதயம்,எல்லாம்,இல்லாம,இயல்பானக்ளைமாக்ஸ்
பபடத்துக்குபிளஸ்

 6.ரகுநந்தனினிசையில்,பாடல்கள்,அருமை.பின்னணி,இசையும்கலக்கல்


 திரைக்கதையில்,காட்சிஅமைப்பில்,சிலசறுக்கல்கள்


1.ஓவியாகேரளாப்பெண்ணாக,வர்றார்.ஒரு,சீனில்கூடமலையாளம்,கலந்த,தமிழில்,
பேசாமல்சாதா,தமிழில்,பேசுவது,உறுத்துது.கேரளாவில்,பெண்கள்,தினமும்
தலைக்குக்குளித்து,லூஸ்,ஹேரில்,தான்,இருப்பாங்க.பின்னல்,கொண்டை,போடமாட்டாங்க
அப்போதான்,தலை,சீக்கிரம்,காயும்.ஆனா,ஓவியா,ஜடை,பின்னி,பெரும்பாலான,காட்சியில்,
வர்றார்.எண்ணெய்,ஃபுல்லா,போட்டிருக்கார்.சும்மாசந்தனகலர்சேலை,கட்டிநெத்தில

சந்தனம்வெச்சா,அதுகேரளா,பெண்ணாகிடுமா?எல்லா,கேரக்டர்களையும்,
பார்த்துபார்த்து செதுக்கிய,இயக்குநர்,இதில் ,கோட்டைவிட்டதுஏனோ?


2.கல்யாண,விஷேசங்களில்,சந்தனம்,இருக்கும்,பேழைகளில்,விருந்தினர்,சந்தனம்,
எடுக்கும்போது,எப்போதும்,மோதிர,விரலால்,தானெடுப்பாங்க,அப்படித்தான்,எடுக்கனும்.

ஆனா,ஆள்,காட்டி,விரலால்தான்,எல்லாரும்,எடுக்கறாங்க


3.வில்லன்,-ன்ஆட்கள்,ஹீரோவைத்துரத்தி,வருகிறார்கள்.அப்போ,ஒருபஸ்ஸை,ரனிங்க்
ல,சேஸ்,பண்றார்.அடுத்த,ஷாட்டில்,பஸ்சின்,டயரின்,அருகில்,இருக்கும்,
லக்கேஜ் வைக்கும்,இடத்தில்,ஹீரோ,பதுங்கிக்கொள்வது,போல்

காட்டறாங்க.அந்த,இடம்,ஸ்டோர்,ரூம்,மாதிரி,லக்கேஜ்கள்,வைக்கப்பட்டு
கண்டக்டர்,அதைப்பூட்டி,சாவியை,வெச்சிருப்பார்.எப்படி,ஹீரோ,ரன்னிங்க்
பஸ்சில்,ஏற,முடிந்தது?


4.ஹீரோவின்,அம்மாவின்,மரணச்செய்தி,ஓவியாவுக்கு,ஃபோனில்,சொல்லப்படுது.
பாடி,வீட்டில்,இருக்குன்னுதகவல்,போயாச்சு.ஓவியா,ஆட்டோவில்,

வந்துஹாஸ்பிடலில்.இறங்கும்போது,வில்லனால்,கொல்லப்பட்ட,ஹீரோவின்
டெட்பாடி,உடல்,முழுக்க,துணியால்,போர்த்தப்பட்டுஸ்ட்ரெக்சரில்,வேனில்
ஏத்தப்படுது.அதைப்பார்த்து,ஓவியா,அழுது,அது,எப்படி,அது,ஹீரோவின்,டெட்பாடி
என,கரெக்டாத்தெரியும்?ஹீரோயினுக்கு,ஹீரோ,இறந்த,மேட்டரேதெரியாதே?


 



நச் டயலாக்ஸ்


1.அந்தப்பொண்ணு எனக்குத்தான்னு கடவுள் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட்டார்.ஒரு பய 1 ம் செய்ய முடியாது 


2 கபில் தேவ் நம்மாளா? ( தேவர் இனமா)?)


3,நம்மூர்ப்பொண்ணுங்களே நம்மளை சுத்தல் ல விடுதுங்க.இதுல கேரளாப்பொண்ணுன்னா கேட்கவே வேணாம்


4,கலர் ல என்ன இருக்கு? கட்டி வாழ்றதுல தான் இருக்கு 


5 நமக்காகத்தான் ஜெயிலைக்கட்டி வெச்சிருக்காங்க.அடிக்கடி போய்ட்டு வந்தாத்தான் நம்ம சாதிக்கு கவுரவம்


6 சுதந்திரப்போராட்டத்துக்குப்போய்ட்டு,ஜெயில்,போனவன்,மாதிரி,என்ன,ஒருநடை,பாருங்க


7.,போறது,என்,பொண்டாட்டின்னு,என்,மனசு,சொல்லுது


8.உங்க,ஊர்ப்பொண்ணுங்க,எப்படிக்காத்திருப்பாங்கன்னு,எனக்குத்தெரியாது.ஆனா,நான்நிச்சயம்,நீங்க,வரும்,
 வரை,காத்திருப்பேன்



 





சி.பி.கமெண்ட்-மதயானைக்கூட்டம் = கிராமிய மண் மணம் கமழும் பேமிலி க்ரைம் த்ரில்லர் -டோண்ட் மிஸ்,இட்


எதிர்பார்க்கப்படும் ஆ விகடன் மார்க் =46, 


ரேட்டிங் = 3.75 / 5

ஈரோடு,ஆனூர்-ல்,படம்,பார்த்தேன்,கூட்டமே,இல்லை.மவுத்,டாக்,மூலம்,

இனிஹிட்,ஆகிடும்


டிஸ்கி-மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இனமா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))