Monday, November 25, 2013

சப்பாத்தி செய்ய சலித்துக்கொள்ளும் பொண்டாட்டிங்களே!

1. இன்னைக்கு ஆண்கள் தினமாம்.மென்ஸ் டே வை நைட் தான் கொண்டாடுவான் தமிழன்



===============


2 ஆபாசமான ஏ படத்துக்கு யூ சர்ட்டிபிகேட் தரும் சென்சார் ஆபீசரை தண்டிக்க அவரை அவர் குடும்பத்துடன் அதே படத்தைப்பார்க்க வைப்பதே வழி


===================


3 முத்தம் தரும் முன் உதட்டில் தேன் தடவிக்கொள்ளும் டெக்னிக் அரதப்பழசு.ஆனால் காதலிக்கு அதரப்புதுசு



=====================


4  ஒரு முத்தத்துக்கு மட்டும் தான் அனுமதி சம்மதமா? என்றாய்!,நீ ரஜினி ரசிகை என்பதால் சம்மதித்தேன் #,ஒரு முத்தம் =100



====================


5 ஜில்லா ,வீரம் 2ம்் ஹிட் ஆகி ஓடினால்தான் யார் வசூலில் டாப் என்பது தெரிய வரும்.ஏதாவது ஒரு படம் சுமார்னாலும் சரி வராது.சோ வாழ்த்து டூ போத்


===================


6 அன்பே! உன் விழிகள் என் விழிகளை சந்தித்தாலே தாயம் 1,உன் உதடுகள் என்னைப்பார்த்து புன்னகைத்தாலோ பகடை 12 # விருத்தக்காதல்



====================


7  சார்.10 ந் தேதி படம் ரிலீஸ் ஆகுது.ஜெ ராசி எண் 9 ஆச்சே?



 கண்ணா! அரைகுறையா நியூமராலஜி பார்க்காதே!10 1 2014 = கூட்டிப்பாரு 9 #ஜில்லா,வீரம்


================


8 பொண்டாட்டி நம்மைத்திட்டும்போது நாம அந்த ஜில்லா விலேயே இருக்கப்படாது.அது தான் இல்லற வாழ்வின் வீரம்



=====================


9 அன்பே! மேல் உதடு ,கீழ் உதடு என நான் பேதம் பார்ப்பதில்லை.முத்தம் இடுகையில் # லிப் கிஸ்ஸாலஜி



===================


10 பொங்கல் ரேசில் பூவா? தலை யா? ;-)))



====================


11  இரண்டாம் உலகம் 3 மணி நேரப்ப்டமாம்.அனுஷ்கா ரசிகர்கள் முதல் நாளே பார்த்துடுங்க.அப்புறம் 30 நிமிசம் ட்ரிம் பண்ணிடுவாங்க



=====================


12 ஜனவரி 10 ல்அஜித் ரசிகர்கள் எல்லாரும் ஜில்லாவுக்கும் ,விஜய் ரசிகர்கள் எல்லாரும் வீரத்துக்கும் போனா ஒரு பய பிளாக் ல டிக்கெட் விக்க முடியாது



=======================



13 பனி ,குளிர் என்பதால் சேலை கட்டி அதுக்கு மேல 2 ஸ்வெட்டர் போட்டு கவர் பண்ணி வாக்கிங் வரும் பெண்களை வ வா சங்கம் வருத்தத்துடன் கண்டிக்கிறது


=====================


14 மிக எளிமையாக சும்மா டீ குடிக்கும் போசையே பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை



=====================



15 நரக வேதனை ,நகர வேதனை இரண்டை விடக்கொடிது நீ என்னை விட்டு நகர முற்படும்போது ஏற்படும் வேதனை



======================


16 குறைந்த பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் தரமறுப்பதா? மெய்யழகி பட டைரக்டர் போர்க்கொடி # காம்ப்ளெக்ஸில் திரையிட கட்டாயச்சட்டம் கொண்டுவரனும்



=======================


17 நல்ல படங்கள் மக்கள் மவுத் டாக் மூலம் ஸ்லோ பிக்கப் ஆகி ஹிட் ஆனாலும் ஓப்பனிங் வசூலை இழக்கும்.எனவே பில்டப் ப்ரமோ நல்லது



=================


18 சப்பாத்தி செய்ய சலித்துக்கொள்ளும் பொண்டாட்டிங்க்்ளே! ஒன்றரை ரூபாய்க்கு அம்மா உணவகத்துல சப்பாத்தி.இனி அடக்கி வாசிங்க




=====================


19 பொண்ணுங்க கூலிங் கிளாஸ் போட ஆர்வம் காட்டாததுக்கு காரணம் மை அழகு வெளியே தெரியாம போயிடுமாம் # மை விழி மெய்யழகி யின் டைரியிலிருந்து



=======================


20 மணிரத்னத்தின் கலை உலக வாரிசு என செல்வராகவனை சொல்லலாம் # இளமைத்துடிப்பு ,இசை ,நேர்த்தி



==========================

Sunday, November 24, 2013

'மெய்யழகி'. - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

'ஆட்டிச' தம்பிக்கும், அவனுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து வாழும் அக்காவுக்கும் இடையேயான பாசப்போராட்ட கதைதான் 'மெய்யழகி'. சின்னப்படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை... சிறந்த கதையம்சம் உடைய படங்களுக்கு தியேட்டர் தருவதில்லை... இதனால் திட்டமிட்டபடி என 20 வருட திரையுலக போராட்டத்தின் வாயிலாக உருவான கருவான திரைப்படம் வெளியாவதில் சிக்கல், விக்கல்... என்றெல்லாம் இப்படம் திரைக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன் இயக்குநர் ஆர்.டி.ஜெயவேல் பேட்டி கொடுத்தார். ஆனாலும் திட்டமிட்டபடி (நவ., 22ம் தேதி) திரைக்கு வந்திருக்கும் 'மெய்யழகி', மெய்யாலுமே அழகியா என்பதை பார்ப்போம்...

கதைப்படி குடிகார அப்பா, அம்மாவை தின்று பிறந்த 'ஆட்டிச' தம்பி. ஆனாலும், வாழை இலை விற்று பிழைத்து குடும்பபாரத்தை சுமந்தாலும், குத்து விளக்காட்டம் ஜொலிக்கும் 'மெய்யழகி' ஜெய்குஹேனி(என்ன பெயரோ, பொருளோ...?) மீது ஊர் பெரிய மனிதரும், பெரும் பணக்காரருமான 'பணம்' எனும் அருண்மொழிவர்மனுக்கு ஒருதலை காதல். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தை குட்டி என்றிருக்கும் 'பணம்' , மெய்யழகியை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக பண்ணும் தில்லு முள்ளுகளும், தகிடுதித்தங்களும் கண்டு பதறும் மெய்யழகியின் ஆட்டிச தம்பி, அக்காவை 'பணத்'திடமிருந்து புத்திசாலித்தனமாக காப்பாற்றினாரா..? அல்லது தனக்காகவே வாழும் அக்காவை 'பணத்'திற்கு காவு கொடுத்தாரா...? என்பது க்ளைமாக்ஸ்! இப்படி ஒரு வித்தியாசமான கதையை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை திரைக்கதையாகவும், கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் என்றால் டி.ஜெயவேல் மேலும் ஜெயித்திருக்கலாம், ஜொலித்திருக்கலாம்.

'ஆட்டிச' சிறுவனாக 'தெய்வா' எனும் கேரக்டரில் பாலாஜி பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்காக தெரிந்தாலும், 'ஆட்டிச' சிறுவர்களை அப்படியே பிரதிபலித்திருப்பதற்காக பாலாஜிக்கு விருதுகள் நிச்சயம்!

பாலாஜியின் அக்காவாக வரும் 'மெய்யழகி' எனும் ஜெய்குஹேனி பெரிய மேனியழகியாக தெரியவில்லை என்றாலும், நல்ல நடிப்பழகியாக மிளிர்ந்திருக்கிறார். ''எச்சில் இலையில் விருந்து வைக்கிறேன் சாப்பிடு... என எப்படி கூசாமல் கேட்கிறீங்க...'' என 'பணத்'தின் மனைவி செளந்தரவள்ளியிடம் அவர் பேசும் வசனங்கள் நச்-டச்!

பாலாஜி, ஜெய்குஹேனி மாதிரியே எல்லன் - அர்ஜூன், குடிகாரதந்தை - ராம்ராஜ், வில்லன் பணமாக வரும் அருண்மொழிவர்மன், செளந்தரவள்ளி, ஜெனிஜாங்மின் உள்ளிட்டோரும் மெய்யழகிக்கு மெய்யாலுமே அழகு சேர்த்திருக்கின்றனர்.

எஸ்.பி.அபிஷேக்கின் இசையும், வெங்கடேஷ் அர்ஜூனின் ஒளிப்பதிவும் அழகான கிராமத்தையும், அதன் பின்னணி சப்தங்களையும் அருமையாக காட்டி நம் காதுகளையும், கண்களையும் குளிர்விக்கின்றன!

''இப்போல்லாம் இளம் பொண்ணுங்களுக்கு எங்களை மாதிரி இளைஞர்களை பிடிப்பதில்லை, 2 பிள்ளை பெத்த தகப்பன்களைதான் பிடிக்குது...'' என 'பணத்'திடம் காமெடி பண்ணும் இயக்குநர் ஜெயவேல், பின்னணியில் 'வில்லு' பட போஸ்டரையும், அதில் நயன்தாரா 'ஸ்டில்'லையும், பிரபுதேவா பெயரையும் காட்டி 'குசும்பு'பண்ணும் இடத்திலும், க்ளைமாக்ஸில், ''எங்கமாமா வந்து அக்காவை கட்டிக்க போறதால, 'பணத்'தை போட்டு தள்ளிட்டு போயிட்டாரு...'' என இல்லாத மாமாவை இருப்பதாக வில்லன் 'பணத்'தின் ரூட்டிலேயே போலீஸ்க்கு போக்கு காட்டு இடத்திலும் இயக்குநர் ஜெயவேல் ஜெயித்திருக்கிறார்.

மற்றபடி 'ஆட்டிச' குழந்தைகளுக்கும் அறிவு உண்டு என சொல்லும் ''மெய்யழகி'' - ''பேரழகி'' அல்ல... 'போர்' அழகியும் அல்ல! 'வசூல்' அழகியா?' என ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்
thanx - dinamalar

நீங்க படுத்திருக்கறதைப்பார்த்தா பத்தமடைப்பாயாகவே தெரிகிறீர்கள் மன்னா!

1. அடுத்த தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்! - அன்புமணி # நகராட்சியைக்கூட பிடிக்காது சார்



======================


2 முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததில் தவறு இல்லை-ஞானதேசிகன்# உங்க பேச்சை எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு பிரயோஜனம் இல்லை


===========================


3 ரூ.7,௦௦00,000 இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே திருடிய பலே கும்பல்! # குரு சிஷ்யன் ரஜினி ரசிகர் போல ( பேரீச்சம்பழத்தையே திருடிடலாம்)



============================



4  சீரியல்களில் நடிக்க மாட்டேன்: சதா "# சான்ஸ் கிடைக்கும் வரை எல்லா நடிகைகளும் சதா இதே தான் சொல்றாங்க.சதா மட்டும் விதி விலக்கா என்ன?



========================


5 மக்களை கவராத ராகுல்-காங்., அதிர்ச்சி"# ப்ரியங்கா காந்தியை இறக்கி விடுங்க.டெபாசிட்டாவது வாங்கலாம்



=======================


6 சிதம்பரம் அருகே பிடிபட்ட ஜமுக்கால விரியன் பாம்பு!: # கண்ணாடி விரியன் ,கட்டு விரியன் க்கெல்லாம் அண்ணன் போல



=========================


7 ஜோடியாக வலம்வரும் விஷால்-வரலட்சுமி!"# ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.ராமர் லட்சுமணர் மாதிரி



======================


8 அக்ஷராஹாசனுடன் பாலிவுட்டில் நடிக்கும் தனுஷ் #,ஸ்ருதி பிசகாத ஜோடிப்பொருத்தம் ஆஹா!முதல்ல அக்கா ,அடுத்து தங்கச்சி.



========================


9 இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் என் புகழைப் பரப்புவார்கள்: மோடி # நீங்க ஏதோ ஒரு பொண்ணைக்கண்காணிக்கசசொன்்னது,உங்க செல் நெம்பர் தந்தது இப்டி?


======================


10 ஜெ எனக்கு ஈழத் தாயாகவே தெரிகிறார் - சரத்குமார்#அப்டியே தரையோட நீங்க படுத்திருக்கறதைப்பார்த்தா பத்தமடைப்பாயாகவே தெரிகிறீர்கள் மன்னா



====================


11 வருமானத்திற்கு ஏற்றாற்போல் செலவு செய்யுங்கள்: -ு வைகோ அறிவுரை"# வலது கைல சம்பளம் வாங்கறது இடது கைக்கு மாத்தும் முன் செலவாகிடுதுங்க



======================



12  சினேகா கர்ப்பம்: சந்தோஷத்தில் கணவர் பிரசன்னா"# இவர் அதிகாரப்பூர்வமாக கர்ப்பம் ஆவது இதுவே முதல் முறை.போங்கய்யா நீங்களும் உங்க நியூசும்




=========================


13 போதை பழக்கம் உள்ளவருக்கு அரசு வேலை கொடுக்க கூடாது! -ராமதாஸ்! # ஜாதியைப்பத்தி பேசறவங்களுக்கு கட்சி அங்கீகாரம் கொடுக்கக்கூடாது




--=======================



14  கூட்டணியில் யார் வேண்டும்,் வேண்டாம் என்று முடிவு செய்யும் நிலையில் பா.ஜ உள்ளது.’’-பொன்.ராதாகிருஷ்ணன்" # கடைசி முடிவு மக்கள் கை யில்



==================


15 சச்சினை வாழ்த்தி பிரதமர் ஃபோனில் பேசினார்.! # பிரச்சாரத்துக்கு "கை" வசம் பலமான ஆயுதம் நீங்க தான்னு சொல்லி இருப்பார்



===================


16 ராகுலை கடித்த கொசுக்களுக்கு வாழ்த்துக்கள்-மோடி"# புகழின் உச்சியில் இருப்பவர்களும் சில சமயம் சறுக்குவார்கள் என்பதற்கு மோடி விதிவிலக்கு அல்ல



=======================


17 போலீசாரின் கெடுபிடியால் ராகுல் கூட்டத்திற்கு ு மக்கள் வரமுடியவில்லை: ஷீலா தீட்சித் # மழையின் காரணமா ன்னு கவுரமா சொல்லி இருக்கலாம்ி"



=======================



18 நாட்டில் முதன்முறையாக பெண்களுக்கு தனி வங்கி: சென்னை உட்பட 6 இடங்களில் இன்று துவக்கம்! # நகை லோனுக்கு முன்னுரிமை தருவாங்களோ?



====================


19  ‘ஆசை’ படஸ்டைலில், பாலீதின் பையால் சென்னை டாக்டர் தற்கொலை # நல்லா விசாரிங்க.புரியாத புதிர் ஸ்டைல் ல பொண்டாட்டி தான் போட்டித்தள்ளி இருக்கும்


=====================


20  தி.மு.க.வேட்பாளர் மாறன் தெருத்தெருவாக நடந்து சென்று ஓட்டு வேட்டை # மாறாதய்யா மாறாது.மக்கள் மனமும் முடிவும் மாறாது


=======================

Saturday, November 23, 2013

சுந்தரா டிராவல்ஸ் சொப்பன சுந்தரி ராதா - காமெடி கும்மி

 நடிகை ராதா

தொழிலதிபருடன் ஆறு ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்த நான் கர்ப்பமாகி கருவை கலைத்தேன் என்றும் தற்போது திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையரிடம் சுந்தரா டிராவல்ஸ் படநாயகி ராதா புகார் அளித்துள்ளார்.

நடிகர் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா (29). இவர், மானஸ்தன், கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வரும் நடிகை ராதா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தொழிலதிபர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதா, "ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த நான், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்2 வரை படித்துள்ள நான், சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.


ஓரளவு சினிமாவில் நடித்தவுடன், திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று இனிய இல்லற வாழ்க்கை வாழ்ந்திட ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டில் பிரபல படஅதிபர் ஒருவர் எனது செல்போனில் பேசி, ‘‘மலேசியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், உன்னை நேரில் பார்த்து பேச ஆசைப்படுகிறார். அவர் உனது தீவிர ரசிகர்’’ என்று சொன்னார். நான் அதற்கு சம்மதித்தேன்.


ஏவி.எம். ஸ்டூடியோவில் வைத்து, அந்த பட அதிபர் மூலம், மலேசிய தொழிலதிபர் என்ற நாமத்துடன் பைசூல் என்ற ஷியாம் என்பவர் என்னை நேரில் சந்தித்தார். என்னை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாக சொன்னார். ரூ.10 ஆயிரம் பணத்தை அட்வான்சாக கொடுத்தார்.




சி பி - ஏம்மா , அது படத்துக்கான அட்வான்ஸ் தானா? ஏதாவது அக்ரீமெண்ட் ல சைன் போட்டீங்களா?  ஆதாரம் இருக்கா? அவ்ளவ் பெரிய தொழில் அதிபர் ஜஸ்ட் 10,000 தான் கொடுத்தாரா? நம்ப முடியவில்லை வில்லை வில்லை


அதன்பிறகு பட தயாரிப்பு தொடர்பாக அவரும், நானும் அடிக்கடி சந்தித்து பேசினோம். 


சி பி - ஏம்மா படம் தயாரிக்கனும்னா அவர் ஏன் உங்களை சந்திக்கனும்? ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு நேரா வர்றேன் அப்டினு சொல்ல வேண்டியதுதானே? 2 பேரும் ரூம் போட்டு ஸ்டோரி டிஸ்கஸன் பண்ணிட்டு இருந்தீங்களா? 




அடுத்த 20 நாட்களில் பைசூல் என்னை நேசிப்பதாக சொன்னார். திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இல்லற வாழ்க்கையை விரும்பிய என்னை அவரது காதல் பொங்கிய அழைப்பு சிந்திக்க வைத்தது. அவரது காதலை ஏற்றுக்கொண்டேன்


சி பி - ஆம்பளை 1000 பொய் சொல்வான் . உங்களுக்கு எங்கே போச்சு ? ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வாடான்னா தலை தெறிக்க ஓடி இருப்பான்  , 20 நாள் ல யே லவ் பண்றேன்னு  ரீல் விட்டிருக்காரு . அதென்ன 20 - 20  மேட்சா?



அவருடன் நடத்திய இல்லற வாழ்க்கையின் பலனாக, நான் கர்ப்பம் ஆனேன். ஆனால், அவர் சொன்னதின் பேரில் கருவை கலைத்துவிட்டேன்.



 சி பி - பாதுகாப்பான உறவு கொள்ளனும்னா நிறைய பேரு  ரூம்க்கு வெளில பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டியை நிறுத்தி வெச்சுட்டா போதும்னு நினைப்பாங்க போல 

 
 கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் கணவன்–மனைவியாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்தோம். என்னை வெளிப்படையாக பைசூல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்.


சி பி - முத டைம் கில்மாக்கு கூப்பிடும்போதே இந்தகழுத்துல தாலி அந்தக்கைல கில்மா அப்டின்னுகண்டிஷன் போட்டுருந்தாலே அண்ணன் ஓடி இருப்பாரு , மேட்டர் எல்லாம் முடிஞ்ச பின் மேரேஜ் பண்ணு அப்டின்னா பண்ணுவாரா? 




 தனது தந்தை–தாய் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று முதலில் சொன்னார். இப்போது அவரது தாய்–தந்தை இறந்துவிட்டார்கள். அதற்கு பிறகும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

‘நடிகையை திருமணம் செய்ய முடியாது, வைப்பாட்டியாகத்தான் வைத்துக்கொள்ள முடியும்’ என்று என்னை இப்போது கிண்டலாக பேசுகிறார். அவரோடு இனி வாழ முடியாது என்று முடிவு செய்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை அனுபவித்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டார். போகத்துக்கும், பணத்துக்கும் மட்டும் என்னை பயன்படுத்தினார்.

பைசூல் வைர நகை செய்யும் தொழிலும் செய்வதாக சொன்னார். அந்த தொழிலுக்கு தேவைப்படுவதாக சொல்லி எனது நகைகளையும், ரொக்கப்பணமாக ரூ.50 லட்சம் வரையும் என்னிடம் இருந்து சுருட்டினார்.




சி பி - மேட்டர் முடிச்சுட்டு அவனவன் பாயைச்சுருட்டுவான் ,, அண்ணன் 50 லட்சத்தைசுருட்டி இருக்காரு . பணம் கேட்டப்பவே என் பேருல வைரக்கடையை எழுதிவைங்கன்னு கேட்டிருக்கலாம் , அல்லது அவர் பேருல அக்கவுண்ட் பேயி செக்கா போட்டுக்கொடுத்திருக்கலாம் , நான் வாங்கலைன்னு அண்ணன் மறுக்க முடியாது , இப்போ பணம் வாங்குனதுக்கு ஆதாரம் இருக்கா?ன்னு நாக்கு மேலபல்லைப்போட்டு , அல்லது பல்லு மேல நாக்கைப்போட்டு கேப்பாரு

 அந்த பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி சொந்த வீட்டில் வாழ்கிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள இளையான்குடி, புதூர் ஆகும். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன். பணத்துக்கும், போகத்துக்கும் என்னைப்போல வேறு நடிகையையோ, வேறு பெண்ணையோ அவர் ஏமாற்றி விடக்கூடாது. அவரது வேடத்தை கலைத்து, சட்டப்படி அவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காகவே, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன்" என்றார்.

நடிகை ராதாவின் புகார் மனு தியாகராயநகர் காவல்துறை துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சி பி - நல்ல வேளை புகார்கொடுக்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போகாம உயர் அதிகாரி கிட்டே போய் இருக்காரு , இல்லைன்னா எஸ் ஐ கொஞ்சம் விளையாடி இருப்பாரு 

நடிகை ராதா பலபேரை மணந்துள்ளார்: தொழிலதிபர் குற்றச்சாட்டு

சென்னை: நடிகை ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தொழிலதிபர் பைசூல் கூறியுள்ளார்.
சி பி - யோவ் , அவர் பாஞ்சாலியா? கண்ணகியா? அப்டிங்கறது பேச்சில்லை . நீங்க  ராமனா? கண்ணனா? அதுக்குமட்டும் பதில் சொல்லுங்க

நடிகை ராதாவின் புகரை மறுத்துள்ள பைசூல், "என் மீது நடிகை ராதா சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. அவரது புகாரை சட்டப்படி சந்திப்பேன். நியாயப்படி நான்தான் அவர் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் என்று இரக்கப்பட்டு, அவர் மீது புகார் கொடுக்காமல், அவர் கொடுத்த தொல்லைகளை நான் சமாளித்து வந்தேன்.

 சி பி - அதென்னாய்யா ஆளாளுக்கு பொண்ணுன்னா இரக்கப்படறீங்க ? உங்க இரக்கத்தை ஆம்பளைங்ககிட்டே காட்டவே மாட்டீங்களா? 


 அரசியல்வாதிகள் மூலம் அவர் என்னை மிரட்டி வந்தார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்னை அவமானப்படுத்திவிட்டார்.


சி பி - தயாரிப்பாளர்னா எதுக்கு உரசிட்டே போஸ் குடுக்கனும் ? ஏ வி எம் சரவணன் எப்டி நிப்பாரு? அப்படி அடக்கி வாசிப்பது தானே? 



அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரமாக அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது வருமான வரித்துறை பான் கார்டு நகல்கள் உள்ளன. பான் கார்டில் அவரது கணவர் பெயர் என்ன போடப்பட்டுள்ளது, பாஸ்போர்ட்டில் அவரது கணவர் பெயர் என்ன என்று போடப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆதாரங்களை சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து கொடுப்பேன்.



சி பி - நீங்க ஒரு  உத்தம பத்தனன் அப்டின்னா பல பேரை மணந்த ஆள்கூட எதுக்கு சகவாசம் ?

அவர் எனக்கு அனுப்பி உள்ள எஸ்.எம்.எஸ். தகவல்களில் கூட நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவர் என்னை சிறைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ளார். நான் அவரை ஒரு முறை அல்ல, பல முறை சிறைக்கு அனுப்புவேன்" என்றார்


சி பி - ஜெயில்ல 2 பேரையும் தனித்தனி செல்லு ல போடனும் , இல்லைன்னா இன்னும் கூத்தடிப்பாங்க

Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

 


12 பி படத்தில் வருவது  போல் 2 டிராக்கில் அடுத்தடுத்து 2 கதைகள் . முதல் கதைல அனுஷ்கா ஒரு டாக்டர். அவர் வாலண்ட்ரியா போய் ஆர்யா கிட்டே ஐ லவ் யூ சொல்றார். ஆர்யா தன் குடும்ப சூழல் காரணமா அப்போதைக்கு நாட் ஓக்கே சொல்றார்.உடனே வீட்ல பார்க்கும் மாப்ளைக்கு அனுஷ்கா ஓக்கே சொல்லிடுது .ஏன்னா பொண்ணுங்க எப்பவும் பிராக்டிகல்.

ஆர்யா அப்புறமா யோசனை பண்ணி “ இப்போ நான் உன்னை லவ் பண்றேன்”னு சொல்லும்போது அனுஷ்கா  ஓக்கே சொல்லலை. இவங்க ஊடல் விளையாடல் கொஞ்சம் போகுது .

இன்னொரு உலகத்துல இதே கால கட்டத்துல  இன்னொரு ஆர்யா , அனுஷ்கா .அதுல ஒரு நாட்டின் தளபதியின் மகன் ஆர்யா.அனுஷ்கா அந்த நாட்டு பிரஜை.விஜயசாந்தி மாதிரி .மகனோட ஆசைக்காக அனுஷ்கா விருப்பம் இல்லாமலேயே 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாங்க .அனுஷ்கா மேரேஜ் பண்ணிக்கிட்டா  தன் சுதந்திரம் போய்டும்னு நினைக்கறதால ஆர்யாவை வெறுக்கறாங்க .

முதல் கதைல வர்ற அனுஷ்கா ஒரு விபத்துல செத்துடுது. இந்த ஆர்யா எப்படியோ அந்த உலகத்துல போய் தன் காதலியின் உருவத்தில் இன்னொரு ஆளைப்பார்த்து அப்படியே ஷாக் ஆகிடறார். அவர் தான் ஷாக் ஆகறார். நாம தான் பல எம் ஜி ஆர் , சிவாஜி படங்கள் லயே இதெல்லாம் பார்த்துட்டமே. நமக்கு எதுவும் ஆகலை. இதுக்குப்பின் எந்த ஆர்யா அனுஷ்கா கூட ஜோடி சேர்ந்தாங்க என்பதுதான் கதை . ( எந்த ஆர்யா கூட ஜோடி சேர்ந்தாத்தான் என்ன? -னு நமக்கு ஒரு அசால்ட்டு)

அனுஷ்கா தான் படத்தின் முதுகெலும்பு , செஸ்ட் எலும்பு எல்லாம். படம் பூரா அவரைச்சுத்தித்தான் நகருது கதையும் , கேமராவும் .அனுஷ்கா ஒரு தேவதை, அஸ்கா உதட்டழகி ,பீட்ரூட் கன்ன அழகி , ஆனா அவருக்கு 2 கேரக்டர்லயும் கோப முகம் அல்லது உம்மணாம்மூஞ்சி கொடுத்து ஆஃப் பண்ணியது ஏனோ? இருந்தாலும் அவர் நடிப்பு அழகு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்க நடிப்பைப்பார்த்தோம் ? )

ஆர்யா ஒரு லக்கி மேன் , அவருக்கு சினிமா வாழ்வில் நல்ல  நல்ல படங்களா செட் ஆகுது , பர்சனல் லைஃப்ல புதுப்புது ஃபிகரா செட் ஆகுது . ஆனா பாருங்க அவர் பேட்டில சொன்ன மாதிரி 100  கோடிடார்கெட்டை அச்சீவ் பண்ண உதவி செய்யும் படமா இது அமைய வாய்ப்பே இல்லை .அவர் இரு மாறு பட்ட கேரக்டர் ல நடிப்பு , குரல் , பாடி லேங்குவேஜ் ( ஜிம் பாடி , சாதா பாடி ) எல்லாத்துக்கும் மெனக்கெட்டு இருக்கார் , ச்பாஷ் ஆர்யா . 

2ம் உலகத்துல ஒரு அம்மா கேரக்டர் வருது. தேவதை மாதிரி , 22 வயசுதான்  இருக்கும் , குட் ஃபிகர் .( இயக்குநருக்கும் , இந்த தேவதைக்கும் ஷூட்டிங்க் டைம்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கும் போல , கேமரா அவரையே காட்டிட்டு இருக்கு , நமக்கெதுக்கு பெரிய இடத்துப்பொல்லாப்பு ? ) 


இசை ஹாரீஸ் ஜெயராஜ் , பாடல்கள் ஓக்கே  ரகம் . செல்வராகவனின் வழக்கமான சூப்பர் ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் இல்லை .அனிரூத் 2 பாட்டுக்கு இசை , பின்னணி இசை . பிரமாதம்னு சொல்லிட முடியாது ,ஆனாலும் நல்லாப்பண்ணி இருக்கார் . 


ஒரே பி ஜி எம்மை ( இருவர் தீம் மியூசிக் ) பல இடங்களில் அவர் தொடர்ந்து ஏன் பயன் ”படுத்தினார்”னு தெரியலை .

 
பலே பரிமளா 


1.காதல் சாதல்  2ம் 1  பாட்டு எடுக்கப்பட்ட விதம் , இசை , ஒளிப்பதிவு , லொக்கேஷன் அழகு 


2. 2ம் உலக அனுஷ்காவிடம் ஆர்யா அடி வாங்கும்போது ஆ , அய்யய்யோ , ம் என்ற ஒலியை அவர் சகாக்கள் கில்மா சத்தம் என புரிந்து சிரிப்பது பழைய காமெடி என்றாலும்   ஆடியன்ஸ் சிரிக்கறாங்க 


3 இந்த உலக ஆர்யா அனுஷ்கா ஓக்கே சொல்லாத போது  சீனியர் டாக்டரை லவ்வுவது போல் கலாய்க்கும் காட்சிகள் கலக்கல் காமெடி 


4.  ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் , முன் பாதி திரைக்கதை , அனுஷ்கா கண்ணிய அழகு எல்லாம் பட்த்தின் +


சொதப்பிட்டியே சொப்னா 


1. அனுஷ்கா வீரமான பெண். ஓப்பனிங்க் சீனில் தன்னைத்துரத்தும்  விலங்கிடம் தனியாளாக ஃபைட் போடறார், ஆர்யாவைத்தாக்கறார். ஆனா 4 ரவுடிகளிடம் மட்டும் பம்முவது ஏன் ? ( ரவுடிங்க மேல தன் கை படக்கூடாதுன்னு நினைக்கறாரோ? )


2 இடைவேளை டைமில்  அனுஷ்கா  விபத்தில் இறப்பது செய்ற்கை


3 ஆர்யா இந்த உலகத்தில் இருந்து இன்னொரு புதிய உலகத்துக்கு எதேச்சையாய்ப்போவது , இறந்து போன அப்பா வழிகாட்டியாய் வாழ்த்து சொல்வது எல்லாம் காதில் பூ



4 2வது உலக அனுஷ்கா தன் கணவர் ஆர்யா மேல் அளவுக்கதிகமாக வெறுப்பைத்தேவை இல்லாமல் உமிழ்வதும் , தடாலடியாய் அவர் மேல் காதல் வருவதும் நம்ப முடியவில்லை .


5. புது ஆர்யா மேல் அனுஷ்காவுக்கு ஆர்வம் இருப்பது போல் காட்டி விட்டு திடீர்னு அவர் எனக்குக்குழந்தை மாதிரின்னு அனுஷ்கா இந்த ஆர்யாவிடம் பல்டி அடிப்பது செம காமெடி


6. பின் பாதி திரைக்கதை இழுவை , எப்படிக்கொண்டு போக என இயக்குநர் தடுமாறி இருக்கிறார்



நச் டயலாக்ஸ்


1. நாம புத்துணர்ச்சியா உணர நாம யாரையாவது காதலிக்கனும் , அல்லது நம்மை யாராவது காதலிக்கனும்


2  எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ  அந்த தேசம் சீக்கிரமே அழிஞ்சிடும் ( சாண்டில்யன் -ன்  ஜலதீபம் நாவல் வசனம் )


3  ஆள்கலரா இருக்காண்டி , கறுப்புன்னா இன்னும் ஓக்கே


4 அவன் எல்லா சொத்துக்களையும் ஏழைகளுக்கே எழுதி வெச்சுட்டாண்டி

 அப்போ உனக்கு எதுவும்  மிச்சம் இருக்காது


5  ஏய் ,ரொம்ப வலியனா போனே இல்லை , அதான் அவன் உன்னை கண்டுக்கலை , உன்னை அயிட்டம்னு நினைச்ட்டானோ ?


6 சப்பையோ , குப்பையோ , வெந்ததோ வேகாததோ ஏதாவது 1 கிடைக்காதா?ன்னு அவனவன் ஏங்கிட்டு இருக்கான் , தேவதை மாதிரி கிடைச்ச ஃபிகரை வேணாம்னு விட்டுட்டியே?


7 இந்த நாட்டிலே 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் தான் இருக்காங்க , மீதி 200 ஆண்கள் என்ன செய்வாங்க ? ( ராமன் தேடிய சீதை  சேரன் வசனம் )

8. ஏண்டி  அவன் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருந்தான் , அலைய விட்டுட்டியேடி ?


9  ராஜாவோட பொண்ணைக்கேட்கறவனுக்கு சிங்கத்தை கொல்லும் தைரியமும் இருக்கனும்


10 சிங்கத்தோட தோல் இருந்தா அவனுக்கு சொர்க்கம் நிச்சயம்னு சாஸ்திரம் சொல்லுது


11 இந்த  உலகம் காதலர்களுக்கு மட்டும் அசைஞ்சு கொடுக்கும்

12. என்னை மாதிரியே நடிச்சு என் பொண்டாட்டியை மயக்கபார்க்கறியா? 


அது எப்டிங்க முடியும்? அவங்களுக்குத்தான் உங்களைப்பிடிக்கலையே? 




சி பி கமெண்ட் ஸ் -  ஹாலிவுட் தரத்தில் செல்வராகவனின் நல்ல முயற்சி , ஆனால் முன் பாதியில் இருந்த அழகியல் , பின் பாதியில் இல்லை , அனைவரும் பார்க்கும்படி இருந்தாலும் பொறுமை வேண்டும் 

 விக்டன் எதிர்பார்ப்பு மார்க் - 41 


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  3 / 5 


திருப்பூர் சக்தி தியேட்ட்ர்ல படம் பார்த்தேன். சூப்பர் தியேட்டர் . காதலர்கள் , கள்ளக்காதலர்களுக்குன்னே கட்டி இருப்பாங்க போல . உடன் பார்த்தவர்கள் ஆகாய மனிதன் யுவராஜ் , இட்ஸ் பிரசாந்த் .





படம் பார்க்கும்  பொழுது போட்ட ட்விட்ஸ்

1.கதை சொல்லும் உத்தியில் 12 பி
இந்த உலகம் ,அந்த் உலகம் .விஷூவல்ஸ் கலக்கல்ஸ்

2. அய்யயோ அனுஷ்கா சார்.ஓடி வருது சார் # ஸ்லோமோஷன் ஷாட் வைக்கலை :-(

3.சீன் பை சீன் மணிரத்னம் படம் போலவே இருக்கு # செல்வா ராக்ஸ் ;-))

4.அண்ணன் அனிரூத் இருவர் பிஜிஎம் மை ரீமேக்கிட்டார் ;-

5.செல்வராகவன் இன்னும் குழந்தை மனசாவே இருக்காரு.அம்புலிமாமா காமிக்ஸ் ஹி ஹி

6.இடைவேளை வரை ஓக்கே.ஸ்லோ.காதலர்களுக்குப்பிடிக்கும்.பின் பாதி இயக்குநருக்கு சவால் காத்திருக்கு #2ம் உலகம்

7.ஜாம்பவான் இயக்குநர்கள் பின் பாதி திரைக்கதையில் தடுமாறுவது ஏனோ? :-(

8.2 ம் உலகம் - முன் பாதி மணிரத்னம் ஸ்டைல் ,பின் பாதி தடுமாற்றம் - கமர்சியல் வெற்றி சிரமம் - விகடன் மார்க் - 41 ,ரேட்டிங் - 3 / 5



நித்தியானந்தா பாஷைல தீர்த்துக் கட்டினேன்னா என்ன அர்த்தம் ?

1. பாஜக மோடியை முன்னிலைப்படுத்துவது தவறு: ப.சிதம்பரம்# ராகுலை முன்னிலைப்படுத்துவாங்கனு எதிர்பார்ப்பார் போல


================


2  இரண்டாம் உலகத்துக்கு யு சான்று. நவ 22-ல் வெளியீடு! # முன் ஜென்மம் ,பின் ஜென்மம் னு 2 அனுஷ்கா இருந்தும் யூ ,? ச்சே.இந்த ஜென்மமே வேஸ்ட்


=================


3 விருதுநகரில் தேர்தல் பணியை தொடங்கினார் வைகோ. தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்! # நடிகைக்குத்தானே அவங்க ஆதரவு தருவாங்க?



=====================



4 ஏற்காடு எங்களின் எஃகுக் கோட்டை.. ஓ.பி.எஸ். முழக்கம் # பரம சிவன் கழுத்தில் இருந்தா தண்ணிப்பாம்பு கூட பஞ்ச் டயலாக் பேசும் போல


=================


5 ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயற்சி. மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம் # துப்பாக்கி நல்ல படம் தான்.அடுத்த முறை சுறா வுடன் முயற்சிக்க்


==================



6 சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டாணா! # ரஜினி யின் ராணா போல் டான் னு சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வாழ்த்து


===============


7 விக்கி விக்கி அழுதபடி ஆதரவு திரட்டிய ஏற்காடு அதிமுக வேட்பாளர் சரோஜா...! # தண்ணியைக்குடி தண்ணியக்குடி சரோஜான்னு யாரும் சொல்லலையா?



==================


8 லோக்சபா தேர்தல்... தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்? # நமீதா வை கட் பண்ணி ட்டு நயன் தாரா வா?


================


9  கேப்டன் டெல்லிதேர்தலுக்கு ஐந்து வேட்பாளரை அறிவித்தார்# கட்சியோட பஞ்ச தந்திரமா? பஞ்ச தரித்திரமா? விரைவில் தெரியும்



===============


10 நய்யாண்டி படத்திற்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார் - செய்தி # பொண்ணு மேரேஜ்க்கு முன்பே 3 மாசமாம்.முதல் இரவுக்குத்தடையாம்


================


11   புதுச்சேரியில் பெய்து வரும் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை # சேறு சகதியால பழைய சேரி மாதிரி ஆகாம இருந்தா சரி


====================


12 ஜெ.வை சந்தித்தபோது முதுகை வளைக்கலை, முண்டாசை கழட்டலை” -வைகோ # அப்போ நீங்க சந்திச்சது ஜெ வா இருக்காது


====================

13 பாலியல் பலாத்கார வழக்கு அசராம் பாபுக்கு எதிராக 1,000 பக்க குற்றபத்திரிகை # பக்கத்துக்குப்பக்கம் பாபுவோட கில்மா அக்கப்போர்தானாம்


====================


14 ஏழைகளின் பசியறிய இரவில் வெறும் வயிற்றோடு படுக்கிறேன் - ராகுல் # உங்க செல் போன் ரிங்க் டோன் - என் ராத்தூக்கம் போச்சு..?


===================


15  2ஜி மீதான ஜே.பி.சி. அறிக்கை அரைவேக்காடனது: ஆ.ராசா # ஆ ராசா ஆயுள் ல அரை வாசி ஜெயில் அறை வாசி தான்


===================


16 சிம்பு – ஆண்ட்ரியா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்# ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத்தேதி 1000 இருக்குது சுபதினம்.அடுத்தவர் ஆளை மடக்கிட நினைத்தால் ..



==================


17  6மாத குடும்ப பிரச்சினையை அரைமணி நேரத்தில் தீர்த்தேன் -நித்தியானந்தா# புருசனை தீர்த்துட்டு பொண்டாட்டியை கட்டிட்டேன் = தீர்த்துக் கட்டினேன்?


======================


18  மகாராஷ்ட்ரா பக்தையிடம் ரூ.18 லட்சம் அபேஸ் செய்துவிட்டு பக்தரின் மனைவியுடன் சாமியார் எஸ்கேப் # மகாராஷ்ட்ராவா? மஜா ராஷ்ட்ராவா?


=================


19  அம்மா குடிநீர், அரசு மினி பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னத்தை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு! -# இலை மறை தாய் மறையாக்கூட விளம்பரம் கூடாதா? 


===================

20  டீசல் விலை மாதந்தோறும் 1 ரூபாய் உயர்த்த முடிவு# நான் ஒரு தடவை ரேட்டை ஏத்த ஆரம்பிச்சா மாசா மாசம் ஏத்திக்கிட்டே இருப்பேன்


=================


21  சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல: கவுகாத்தி நீதிமன்றம் # ஆளுங்கட்சியோட செட்டப் பூர்வமானதா?


==================


22  டின்னர் செட் மட்டும் ரூ.1.5 கோடி... ம.பி. பாஜக தலைவர் யசோதா வீட்டில் இருக்கு - செய்தி # ய"சோதா" அல்ல யகாஸ்ட்லீ



================


23  மோனோ ரயிலை விட மெட்ரோ ரயில் தான் பெட்டர் - கருணாநிதி # பேசஞ்சர் ரயில் தான் தலைவரே பெட்டர்.சீப் & பெஸ்ட்


====================


24  தமிழர்கள் பிரச்சினையை யாரிடம் பேசுவது? ஞானதேசிகன் # ராஜபட்சேட்ட போய் பேசுங்கய்யா.நீங்களும் உங்க கேள்வியும்


====================

Thursday, November 21, 2013

ஏ.டி.எம்.களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!


பெங்களூருவில் ஏடிஎம் மையத்துக்குள் 44 வயது நிரம்பிய பெண் வங்கி அதிகாரியை, இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



பெங்களூரு, உல்சூர் கேட் காவல்நிலையம் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில், நேற்று காலை 7.11 மணியளவில் பெண் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். 



அவரைப் பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். ஷட்டரை மூடி விட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டியுள்ளார். இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். பெண்ணிடம் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அந்த இளைஞர் தப்பிச்சென்றுள்ளார். 



ஏடிஎம் மையத்துக்குள் நடந்த சம்பவங்கள் அனைத்தும், அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக எஸ்.ஜே.பார்க் சரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கத்தியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் பி.ஜி.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


சம்பவம் நடைபெற்று மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அந்த ஏடிஎம் வழியாக சென்ற சிலர் வாசலில் ரத்தக் கறை இருப்பதையும், ஏடிஎம் ஷட்டர் மூடியிருப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே போலீசார் சம்பவ் இடத்துக்குச் சென்று காயமடைந்த பெண்ணை மீட்டுள்ளனர். 


பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயர் ஜோதி உத்தய் என்பதும் அந்தப் பெண் கார்ப்பரெசன் வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 


  • Nallasivan
    இதெல்லாம் கர்நாடகாவின் எல்லைக்கு அப்பால் இதுவரை அன்றாடம் நடந்தன. அறிவிக்கப்படாத பலமணிநேர மின்வெட்டைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் தனியரசாங்கம் நடத்துகின்றனர். சமுதாயத்தில் ஒரே பிரிவினரை மட்டுமே காவல்துறைக்கு நியமிக்கும் ஊழல் வழக்கத்தால் இதைத் தடுக்க இயலவில்லை. வீடுபுகுந்து கொள்ளை, கொலை, காலை நடைப்பயிற்சி வெட்டு குத்து, வங்கித் திருட்டு, வயோதிகர்களைத் தாக்குதல், செயின் பறிப்பு இவைகளால் கர்நாடகம் நுமேரோ உனோ மாநிலமாக மாறிவருகிறதா, என்ன?
    about 24 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • RK
    இப்படி ஒருவரை கொருரமாக தாக்கி பொருள் பறிக்கும் அளவுக்கு ஒருவன் இருப்பான் என்றால் 1. அவன் ஒரு வான் புத்தி உள்ளவனாக இருக்க வேண்டும். ஏன் எனில் அந்த பெண்ணிடம் அவ்வளவு வன்முறை கட்டவித்து விட வேண்டிய அவசியம் இல்லை. அல்லது 2. இது கொள்ளை போல் சித்தரிக்கப்பட்ட கொலை முயரிசியாக கூட இருக்க வாய்பு உள்ளது.
    a day ago · Up Vote  (1) ·  Down Vote (0) ·  reply (0)
  • eliyaz
    excellent..
    a day ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • அ.
    சற்றுமுன்தான் அந்த சம்பவத்தின் காணொளி காட்சியை பார்த்தேன்.அந்த ATM ன் சுருள் கதவை(Rolling shutter )யார் வேண்டுமானாலும் அடைக்கவோ,திறக்கவோ செய்யுமாறு வைத்து இருக்கிறார்கள்,இது மிகவும் தவறு,அடுத்ததாக அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிப்பதற்கு முன் இந்த காணொளி காட்சி உடனே ஊடகத்தில் பரவலாக வெளியாவதால் குற்றவாளி தப்பிபதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
    a day ago · Up Vote  (2) ·  Down Vote (0) ·  reply (0)
  • அ.
    முன்பெல்லாம் சில ATM இல் உள்ளே ஒருவர் இருக்கும் பொழுது மற்றவர் செல்ல முடியாமல் கதவு அடைக்கபட்டிருக்கும்.அது மாதிரி வசதி இனி எல்லா ATM க்கும் கட்டாயமாக்க படவேண்டும்.
    a day ago · Up Vote  (4) ·  Down Vote (0) ·  reply (0)
    rex   Up Voted அ. \"s comment
  • SELVAA
    மிகக்கொடுமையான சம்பவம் சட்டத்தின்படி மிகக்கடுமையான தண்டனை வழங்கலாம்
    a day ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • உமாபதி
    மிகக்குறைந்த அளவிலான தொகைக்குகூட மிருகத்தனமாக தாக்கி பறித்து செல்லும் அவலம். எங்கும், எதனையும் சந்தேகக்கண் கொண்டு அணுக வேண்டிய கட்டாயமாகிவிட்ட காலம். மனிதம் எங்கே.
    a day ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • MANUSHI
    தனியாக பெண்கள் ATM இல் பணம் எடுக்க கூட இனி தயங்க வேண்டியது தான். ஆமாம் வாட்ச்மன் என்று ஒருவர் கூடவா இல்லை..........?
    a day ago · Up Vote  (2) ·  Down Vote (0) ·  reply (1)
    • Chitra
      இருந்தும் என்ன பயன் மனுஷி. அப்படி அவர் இருந்தால் அவருக்கு என்ன வயது இருக்கும் நிஞ்சயமாக 60க்கு மேல்தான் இருக்கும். இவரை வெட்ட தெரிந்த அந்த அரக்கனுக்கு அவரை வேட எவளவு நேரம் ஆகிருக்கும். இதையெல்லாம் veeda பெரிய கொடுமை அந்த அடம் போலீஸ் ஸ்டேஷன் அருகமையில் இருபதுதான்.

பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஏ.டி.எம். மையத்தில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரித்தால், வாடிக்கையாளர்களுக்கு மட்டு மின்றி வங்கிகளுக்கே போதியப் பாதுகாப்பு இல்லை என்கிற ரீதியிலான தகவல்கள் கதிகலங்க வைக்கின்றன. 


ஆட்டோமேட்டட் 'கில்லர்' மெஷின்?- ஏ.டி.எம்.களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!


வீடியோ கேமிராவில் பதிவு 


பெங்களூரில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஜோதி உதய் என்பவர் ஏ.டி.எம். மையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட காட்சிகள் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாளால் அவர் வெட்டப்படும் காட்சிகள் அந்த ஏ.டி.எம். மையத்தின் வீடியோ கேமிராவிலும் பதிவாகி இருக்கிறது. பெண்ணின் பையில் 15 ஆயிரம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. 


ஆனாலும் பெண்ணின் நகைகள் அப்படியே இருப்பதால் இது தனிப்பட்ட விரோதத் தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்தச் சம்பவம் ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசமாக இருக்கும் ஏ.டி.எம். மையங்களை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 



இதுதொடர்பாக தேசிய வங்கியின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஒரு நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. இது ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். ஆனால், இது வரை எந்த வங்கியும் இதுபற்றி யோசிக்கக்கூட இல்லை. வங்கிகளை முறைப்படுத்தி ஆலோசனை வழங்கும் இந்திய வங்கிகள் சங்கம் (Indian banks association) மற்றும் விதிமுறைகளை வகுத்து வங்கிகளை வழி நடத்தும் ரிசர்வ் வங்கி ஆகியவைகூட இதுவரை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து பெரிதாக எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. அதன் விளைவாகத்தான் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி சம்பவங்களும், காவலாளி கொலை செய்யப் படுவதும் தாக்கப்படுவதும் நடக்கின்றன. 


செயல் இழந்த தொழில்நுட்பம் 


ஏ.டி.எம். மையங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும். கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் கேமிரா கண்விழித்துக்கொள்ளும். கேமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால், இன்றைக்கு 


90% மையங்களில் வாயிலில் அந்த தொழில் நுட்பம் செயலிழந்துவிட்டன. அதேபோல், ஒரு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவு திறந்தி ருந்தால் அது மீண்டும் கீழே இறக்க முடியாதபடி மேலே சுவற்றுடன் பூட்டப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் காவலாளி தவிர வெளியாட்கள் யாரும் ஷட்டரை இழுத்து மூடவோ, பூட்டு போடவோ முடியாது. ஆனால், தற்போது யார் வேண்டுமானாலும் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவை இழுத்து சாத்திவிடலாம் என்கிற நிலைதான் உள்ளது - பெங்களூருவிலும் அதுதான் நடந்துள்ளது. 


யாருக்கும் பாதுகாப்பு இல்லை 


இப்படி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் அல்ல... பெரும்பாலான வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் பணத்துக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று பெரும்பாலான வங்கி காவலாளிகளுக்கு மிகப் பழமையான ‘பி - 303’ மாடல் துப்பாக்கிதான் (1914-ம் ஆண்டு பிரிட்டிஷ் மாடல் - முதலாம் உலகப்போரில் பயன்படுத்தியது!) கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ரவுண்டு மட்டுமே இதில் சுட முடியும். ஆனால், அதற்கு துப்பாக்கியில் குண்டு லோட் செய்யப்பட்டிருக்க வேண்டுமே... ஆனால், அதுவும் கிடையாது. ஏனெனில் குண்டுகள் லோட் செய்யப்பட்டிருக்கக் கூடாது என்பது வங்கிகள் மற்றும் அவை சார்ந்த பாதுகாப்பு ஏஜென்ஸிகளின் வாய்மொழி உத்தரவு. துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிட்டால் என்ன செய்வது என்று அதற்கு காரணம் கூறுகிறார்கள். 


குறைவான சம்பளம் 


பாதுகாப்பு ஏஜென்ஸிகள், முன்னாள் போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற தகுதியான நபர்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்பதே உண்மையான காரணம். ஏனெனில் அவர்களை எடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க நேரிடும். 


பெரிய வங்கிகள் தினசரி 30 முதல் 40 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை செலுத்த 25 முதல் 32 கோடி ரூபாய் வரை பணத்தை ஒரு வேன் போன்ற வண்டியில் எடுத்துச் செல்கின்றன. அதில் ஒரு டிரைவர், இரு தனியார் பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் அதே (குண்டு லோட் செய்யப்படாத) ரகத் துப்பாக்கிதான். 



30 லட்சம் பணம் இருக்கும் ஒரு ஏ.டி.எம். மையத்தின் வயதான பாதுகாவலருக்கு சுமார் 4,000 சம்பளம் என்றால், 30 கோடி ரூபாயை வண்டியில் எடுத்துச் செல்லும் நடுத்தர வயதுடைய பாதுகாவலருக்கு சம்பளம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. வங்கி களில் இருக்கும் பாதுகாவலர்களுக்கும் இதே நிலைமைதான். இன்று பல்வேறு வங்கி களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் வாடிக்கை யாளர்களின் உதவியாளர்களாகவும், வங்கிப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கித் தருபவர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். 



ஏ.டி.எம். மையம் தொடங்கி வைப்பு நிதி வரைக்கும் கறாராக லாபம் பார்க்கும் வங்கிகள் தங்களது பணத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் காரணம், காப்பீடு. நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்ன என்கிற பொறுப்பின்மை. ஏ.டி.எம். மையங்களில் உடனடியாக குறைந்தபட்சம் ஆபத்துக்கால அலாரம், துப்பாக்கியுடன் கூடிய 50 வயதுக்குட்பட்ட காவலாளி போன்ற வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டும்” என்றார். 


காணாமல்போன ஸ்ட்ராங் ரூம்! 



ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில தேசிய வங்கிகள் 'கரன்ஸி ஜெஸ்ட்' என்கிற பெயரில் 'ஸ்ட்ராங் ரூம்' வைத்திருக்கின்றன. சுமார் ஒன்றரை அடி தடிமனுள்ள கான்கிரீட் சுவர் கொண்ட இந்த அறையைக் கணிப்பொறி கடவுச்சொல், இருவருக்கும் மேற்பட்டோரின் கைவிரல் ரேகை, ரகசிய எண் பூட்டு, சாதாரண பூட்டுகள் இத்தனையையும் ஒருசேர இயக்கினால் மட்டுமே திறக்க முடியும். இந்த அறைகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்தாலும் இவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. இங்கு கதவைத் திறக்கவும் பணம் எடுக்கவும் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. ஆனால், இந்த நடைமுறை தற்போது முழுவதுமாக கைவிடப்பட்டுவிட்டது. இதுவும் பாதுகாப்பு குறைபாடுகளில் ஒரு முக்கிய அம்சமாகும். 

'வீரம்’ - இயக்குநர் சிவா.- ஆக்ஷன் ப்ளாக் ?காமெடி ?

 

பன்ச் டயலாக் வேண்டாம்!’
அலர்ட் அஜித்
எம்.குணா
எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். 'அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சர்யப்பட்டார். மேக்கிங்லயே 'வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!''  - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் 'வீரம்’ இயக்குநர் சிவா.


'' 'வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, 'எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து நிறுத்தணும்’னு சொன்னார். 

 


இதுபத்தி அஜித் சார்கிட்ட பேசினப்போ, 'அப்போ கிராமத்துக் கதையா ரெடி பண்ணுங்க சிவா’னு சொன்னார். மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளினு எப்பவும் 'குட் ஃபீல்’ கொடுக்கிற குடும்ப உறவுக் கதைக்குள், அஜித்துக்குனு ஒரு கேரக்டரைப் புகுத்தினோம். அட்டகாசமான திரைக்கதை செட்டாச்சு.



 இந்த 'வீரம்’, வீட்டுச் சாப்பாடுனா... சாம்பார், ரசம், கூட்டு பொரியல்னு இல்லை... வெடக்கோழிக் குழம்பு, வஞ்சிரம் மீன், மட்டன் மசாலானு காரசாரமான வீட்டுச் சாப்பாடு!''
 
'' 'இந்தப் படத்தில் அஜித் ஸ்பெஷல் என்ன?''

 

''ஒண்ணே ஒண்ணுதான்... 'பன்ச் டயலாக் வேணாம் சிவா’னு அன்பா சொல்லிட்டார். ஏகப்பட்ட பன்ச் பிடிச்சு வெச்சிருந்தோம். ஆனா, அவர் இப்படிச் சொல்லிட்டாரேனு தவிர்த்துட்டோம். சாதாரணக் கிராமத்து மனுஷன் 'வினாயகம்’ கேரக்டர் அஜித்துக்கு.  வேட்டியை மடிச்சுக் கட்டினா, விளையாட்டுதான்.



ஸ்க்ரீனுக்குப் பின்னாடி அஜித் கலகலப்பா இருப்பார்.  தானும் சிரிச்சு, மத்தவங்களையும் சிரிக்க வெச்சுட்டே இருப்பார். 'சார் உங்களோட இந்தக் காமெடி முகத்தை நான் ஸ்க்ரீன்ல காட்டப் போறேன்’னு சொன்னேன். 'நல்லாவா இருக்கும்?’னு அப்பாவியாக் கேட்டார். 'அடி பின்னும்’னு சொன்னேன். சின்னதா சிரிச்சுக்கிட்டார். அஜித் சார்கூட சந்தானம், தம்பி ராமைய்யா கூட்டணி.  




ரொம்ப தன்மையா இருக்கார். ஸ்விட்சர்லாந்துல ஷூட்டிங். அங்கே லைட் எஃபெக்ட் எல்லாருக்கும் அலர்ஜியை உண்டாக்கி, கண்களைச் சிவக்கவெச்சிருச்சு. தவிச்சுப்போயிட்டோம். மறுநாள் காலையில எல்லார் ரூமுக்கும் அஜித் சாரே போய் எல்லார் கண்லயும் மருந்து போட்டுவிட்டார். 


 எல்லாரும் அப்படியே மெல்ட் ஆகிட்டோம். 'சார் உங்களை ஆக்டர் அஜித் குமார்னு நினைச்சேன். ஆனா, இப்பத்தான் தெரியுது நீங்க டாக்டர் அஜித் குமார்’னு, அப்போ ஜோக் அடிச்சேன். கலகலனு வெள்ளந்தியாச் சிரிச்சார். இவ்வளவு ஈஸியான மனுஷன்கூட தொடர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை வரும்தானே!''


thanx - vikatan


a





Wednesday, November 20, 2013

அம்மா உணவகம் - சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

 

சென்னை மருத்துவமனையில் மிகப் பெரிய அரசு உணவகம் திறப்பு

ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். 



இது குறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டார். 


அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மிகப் பெரிய உணவகம்:

 
இந்த உணவகம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலேயே, இந்த உணவகம்தான் மிகப் பெரியது. ஒரே நேரத்தில் 300 பேர் சாப்பிடலாம். உணவகத்தில் 40 டேபிள்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மின்விசிறிகள் போடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் சிரமம் இன்றி உணவு அருந்தும் வகையிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டோக்கன் வழங்குவதற்கு 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1-க்கு இட்லி, ரூ.5-க்கு பொங்கல் வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் மற்றும் ரூ.5-க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்பட உள்ளது. மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் வழங்கப்படும். சப்பாத்திகள் மட்டும் வெளியில் தயாரித்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். 



இந்த மருத்துவமனையில் தொடங்கப்படும் அம்மா உணவகத்தில், முதல் நாள் காலையில் விற்பனைக்காக 500 இட்லி தயாரிக்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். முதல் நாள் என்பதால் மாலையில் சப்பாத்தி வழங்கப்படாது. ஓரிரு நாள்களில் மாலையில் சப்பாத்தி வழங்கப்படும். அதன்பின், படிப்படியாக உயர்த்தி தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 



இங்குள்ள இட்லி தயாரிக்கும் இயந்திரத்தில் 7 நிமிடத்தில் 1,000 இட்லிகள் தயாரிக்க முடியும். சமையல் வேலைக்காக பெண்கள் உள்பட 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 4 மணி முதல் 10 மணி வரை 20 ஊழியர்களும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 20 ஊழியர்களும் பணியில் ஈடுபடுவார்கள். 



ஊழியர்கள் ஒவ்வொருவருக்கு தினமும் ரூ.300 ஊதியம் வழங்கப்படும். சப்பாத்தி விற்பனை தொடங்கியதும் கூடுதலாக 20 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த அம்மா உணவகத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் என அனைவரும் பயன்பெறுவார்கள்' என்று அவர் தெரிவித்தார். 

thanx = the hindu


readers views


1. ஒரு நல்ல விஷயம். ஆனால் அணைத்து பொது மக்கள் புழங்கும் இடம் அருகில் இருந்தால் அது பாராட்டுதலுக்கு உரியது. கோயம்பேடு, தியாகராய நகர் பேருந்து நிலையம், அசோக் பில்லர், கிண்டி ரயில் நிலையம் அருகில், அப்புறம் முக்கிய சந்திப்புகளில். இதை செய்தால் சென்னை வேலை பார்க்க வரும் இளைஞர்கள், அனைவரும் பயனடைவார்கள். அரசின் கருவூலமும் பயனடையும். மதுபான கடைக்கு பதில் இதை திறக்கலாமே. ரோட்டோரத்தில் இருக்கும் மது கடைகளை தானே மூட சொன்னார்கள்.. அந்த இடங்களில் உணவகம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


2  "சோறுக்காக வரிசையில் நிற்காதே நண்பா ,வேலைக்காக வரிசையில் நின்று வெற்றிக்கொடிகட்டி உலகில் வாழ வழியை கேட்டுப்பார்.