Showing posts with label இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

 


12 பி படத்தில் வருவது  போல் 2 டிராக்கில் அடுத்தடுத்து 2 கதைகள் . முதல் கதைல அனுஷ்கா ஒரு டாக்டர். அவர் வாலண்ட்ரியா போய் ஆர்யா கிட்டே ஐ லவ் யூ சொல்றார். ஆர்யா தன் குடும்ப சூழல் காரணமா அப்போதைக்கு நாட் ஓக்கே சொல்றார்.உடனே வீட்ல பார்க்கும் மாப்ளைக்கு அனுஷ்கா ஓக்கே சொல்லிடுது .ஏன்னா பொண்ணுங்க எப்பவும் பிராக்டிகல்.

ஆர்யா அப்புறமா யோசனை பண்ணி “ இப்போ நான் உன்னை லவ் பண்றேன்”னு சொல்லும்போது அனுஷ்கா  ஓக்கே சொல்லலை. இவங்க ஊடல் விளையாடல் கொஞ்சம் போகுது .

இன்னொரு உலகத்துல இதே கால கட்டத்துல  இன்னொரு ஆர்யா , அனுஷ்கா .அதுல ஒரு நாட்டின் தளபதியின் மகன் ஆர்யா.அனுஷ்கா அந்த நாட்டு பிரஜை.விஜயசாந்தி மாதிரி .மகனோட ஆசைக்காக அனுஷ்கா விருப்பம் இல்லாமலேயே 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாங்க .அனுஷ்கா மேரேஜ் பண்ணிக்கிட்டா  தன் சுதந்திரம் போய்டும்னு நினைக்கறதால ஆர்யாவை வெறுக்கறாங்க .

முதல் கதைல வர்ற அனுஷ்கா ஒரு விபத்துல செத்துடுது. இந்த ஆர்யா எப்படியோ அந்த உலகத்துல போய் தன் காதலியின் உருவத்தில் இன்னொரு ஆளைப்பார்த்து அப்படியே ஷாக் ஆகிடறார். அவர் தான் ஷாக் ஆகறார். நாம தான் பல எம் ஜி ஆர் , சிவாஜி படங்கள் லயே இதெல்லாம் பார்த்துட்டமே. நமக்கு எதுவும் ஆகலை. இதுக்குப்பின் எந்த ஆர்யா அனுஷ்கா கூட ஜோடி சேர்ந்தாங்க என்பதுதான் கதை . ( எந்த ஆர்யா கூட ஜோடி சேர்ந்தாத்தான் என்ன? -னு நமக்கு ஒரு அசால்ட்டு)

அனுஷ்கா தான் படத்தின் முதுகெலும்பு , செஸ்ட் எலும்பு எல்லாம். படம் பூரா அவரைச்சுத்தித்தான் நகருது கதையும் , கேமராவும் .அனுஷ்கா ஒரு தேவதை, அஸ்கா உதட்டழகி ,பீட்ரூட் கன்ன அழகி , ஆனா அவருக்கு 2 கேரக்டர்லயும் கோப முகம் அல்லது உம்மணாம்மூஞ்சி கொடுத்து ஆஃப் பண்ணியது ஏனோ? இருந்தாலும் அவர் நடிப்பு அழகு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்க நடிப்பைப்பார்த்தோம் ? )

ஆர்யா ஒரு லக்கி மேன் , அவருக்கு சினிமா வாழ்வில் நல்ல  நல்ல படங்களா செட் ஆகுது , பர்சனல் லைஃப்ல புதுப்புது ஃபிகரா செட் ஆகுது . ஆனா பாருங்க அவர் பேட்டில சொன்ன மாதிரி 100  கோடிடார்கெட்டை அச்சீவ் பண்ண உதவி செய்யும் படமா இது அமைய வாய்ப்பே இல்லை .அவர் இரு மாறு பட்ட கேரக்டர் ல நடிப்பு , குரல் , பாடி லேங்குவேஜ் ( ஜிம் பாடி , சாதா பாடி ) எல்லாத்துக்கும் மெனக்கெட்டு இருக்கார் , ச்பாஷ் ஆர்யா . 

2ம் உலகத்துல ஒரு அம்மா கேரக்டர் வருது. தேவதை மாதிரி , 22 வயசுதான்  இருக்கும் , குட் ஃபிகர் .( இயக்குநருக்கும் , இந்த தேவதைக்கும் ஷூட்டிங்க் டைம்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கும் போல , கேமரா அவரையே காட்டிட்டு இருக்கு , நமக்கெதுக்கு பெரிய இடத்துப்பொல்லாப்பு ? ) 


இசை ஹாரீஸ் ஜெயராஜ் , பாடல்கள் ஓக்கே  ரகம் . செல்வராகவனின் வழக்கமான சூப்பர் ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் இல்லை .அனிரூத் 2 பாட்டுக்கு இசை , பின்னணி இசை . பிரமாதம்னு சொல்லிட முடியாது ,ஆனாலும் நல்லாப்பண்ணி இருக்கார் . 


ஒரே பி ஜி எம்மை ( இருவர் தீம் மியூசிக் ) பல இடங்களில் அவர் தொடர்ந்து ஏன் பயன் ”படுத்தினார்”னு தெரியலை .

 
பலே பரிமளா 


1.காதல் சாதல்  2ம் 1  பாட்டு எடுக்கப்பட்ட விதம் , இசை , ஒளிப்பதிவு , லொக்கேஷன் அழகு 


2. 2ம் உலக அனுஷ்காவிடம் ஆர்யா அடி வாங்கும்போது ஆ , அய்யய்யோ , ம் என்ற ஒலியை அவர் சகாக்கள் கில்மா சத்தம் என புரிந்து சிரிப்பது பழைய காமெடி என்றாலும்   ஆடியன்ஸ் சிரிக்கறாங்க 


3 இந்த உலக ஆர்யா அனுஷ்கா ஓக்கே சொல்லாத போது  சீனியர் டாக்டரை லவ்வுவது போல் கலாய்க்கும் காட்சிகள் கலக்கல் காமெடி 


4.  ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் , முன் பாதி திரைக்கதை , அனுஷ்கா கண்ணிய அழகு எல்லாம் பட்த்தின் +


சொதப்பிட்டியே சொப்னா 


1. அனுஷ்கா வீரமான பெண். ஓப்பனிங்க் சீனில் தன்னைத்துரத்தும்  விலங்கிடம் தனியாளாக ஃபைட் போடறார், ஆர்யாவைத்தாக்கறார். ஆனா 4 ரவுடிகளிடம் மட்டும் பம்முவது ஏன் ? ( ரவுடிங்க மேல தன் கை படக்கூடாதுன்னு நினைக்கறாரோ? )


2 இடைவேளை டைமில்  அனுஷ்கா  விபத்தில் இறப்பது செய்ற்கை


3 ஆர்யா இந்த உலகத்தில் இருந்து இன்னொரு புதிய உலகத்துக்கு எதேச்சையாய்ப்போவது , இறந்து போன அப்பா வழிகாட்டியாய் வாழ்த்து சொல்வது எல்லாம் காதில் பூ



4 2வது உலக அனுஷ்கா தன் கணவர் ஆர்யா மேல் அளவுக்கதிகமாக வெறுப்பைத்தேவை இல்லாமல் உமிழ்வதும் , தடாலடியாய் அவர் மேல் காதல் வருவதும் நம்ப முடியவில்லை .


5. புது ஆர்யா மேல் அனுஷ்காவுக்கு ஆர்வம் இருப்பது போல் காட்டி விட்டு திடீர்னு அவர் எனக்குக்குழந்தை மாதிரின்னு அனுஷ்கா இந்த ஆர்யாவிடம் பல்டி அடிப்பது செம காமெடி


6. பின் பாதி திரைக்கதை இழுவை , எப்படிக்கொண்டு போக என இயக்குநர் தடுமாறி இருக்கிறார்



நச் டயலாக்ஸ்


1. நாம புத்துணர்ச்சியா உணர நாம யாரையாவது காதலிக்கனும் , அல்லது நம்மை யாராவது காதலிக்கனும்


2  எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ  அந்த தேசம் சீக்கிரமே அழிஞ்சிடும் ( சாண்டில்யன் -ன்  ஜலதீபம் நாவல் வசனம் )


3  ஆள்கலரா இருக்காண்டி , கறுப்புன்னா இன்னும் ஓக்கே


4 அவன் எல்லா சொத்துக்களையும் ஏழைகளுக்கே எழுதி வெச்சுட்டாண்டி

 அப்போ உனக்கு எதுவும்  மிச்சம் இருக்காது


5  ஏய் ,ரொம்ப வலியனா போனே இல்லை , அதான் அவன் உன்னை கண்டுக்கலை , உன்னை அயிட்டம்னு நினைச்ட்டானோ ?


6 சப்பையோ , குப்பையோ , வெந்ததோ வேகாததோ ஏதாவது 1 கிடைக்காதா?ன்னு அவனவன் ஏங்கிட்டு இருக்கான் , தேவதை மாதிரி கிடைச்ச ஃபிகரை வேணாம்னு விட்டுட்டியே?


7 இந்த நாட்டிலே 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் தான் இருக்காங்க , மீதி 200 ஆண்கள் என்ன செய்வாங்க ? ( ராமன் தேடிய சீதை  சேரன் வசனம் )

8. ஏண்டி  அவன் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருந்தான் , அலைய விட்டுட்டியேடி ?


9  ராஜாவோட பொண்ணைக்கேட்கறவனுக்கு சிங்கத்தை கொல்லும் தைரியமும் இருக்கனும்


10 சிங்கத்தோட தோல் இருந்தா அவனுக்கு சொர்க்கம் நிச்சயம்னு சாஸ்திரம் சொல்லுது


11 இந்த  உலகம் காதலர்களுக்கு மட்டும் அசைஞ்சு கொடுக்கும்

12. என்னை மாதிரியே நடிச்சு என் பொண்டாட்டியை மயக்கபார்க்கறியா? 


அது எப்டிங்க முடியும்? அவங்களுக்குத்தான் உங்களைப்பிடிக்கலையே? 




சி பி கமெண்ட் ஸ் -  ஹாலிவுட் தரத்தில் செல்வராகவனின் நல்ல முயற்சி , ஆனால் முன் பாதியில் இருந்த அழகியல் , பின் பாதியில் இல்லை , அனைவரும் பார்க்கும்படி இருந்தாலும் பொறுமை வேண்டும் 

 விக்டன் எதிர்பார்ப்பு மார்க் - 41 


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  3 / 5 


திருப்பூர் சக்தி தியேட்ட்ர்ல படம் பார்த்தேன். சூப்பர் தியேட்டர் . காதலர்கள் , கள்ளக்காதலர்களுக்குன்னே கட்டி இருப்பாங்க போல . உடன் பார்த்தவர்கள் ஆகாய மனிதன் யுவராஜ் , இட்ஸ் பிரசாந்த் .





படம் பார்க்கும்  பொழுது போட்ட ட்விட்ஸ்

1.கதை சொல்லும் உத்தியில் 12 பி
இந்த உலகம் ,அந்த் உலகம் .விஷூவல்ஸ் கலக்கல்ஸ்

2. அய்யயோ அனுஷ்கா சார்.ஓடி வருது சார் # ஸ்லோமோஷன் ஷாட் வைக்கலை :-(

3.சீன் பை சீன் மணிரத்னம் படம் போலவே இருக்கு # செல்வா ராக்ஸ் ;-))

4.அண்ணன் அனிரூத் இருவர் பிஜிஎம் மை ரீமேக்கிட்டார் ;-

5.செல்வராகவன் இன்னும் குழந்தை மனசாவே இருக்காரு.அம்புலிமாமா காமிக்ஸ் ஹி ஹி

6.இடைவேளை வரை ஓக்கே.ஸ்லோ.காதலர்களுக்குப்பிடிக்கும்.பின் பாதி இயக்குநருக்கு சவால் காத்திருக்கு #2ம் உலகம்

7.ஜாம்பவான் இயக்குநர்கள் பின் பாதி திரைக்கதையில் தடுமாறுவது ஏனோ? :-(

8.2 ம் உலகம் - முன் பாதி மணிரத்னம் ஸ்டைல் ,பின் பாதி தடுமாற்றம் - கமர்சியல் வெற்றி சிரமம் - விகடன் மார்க் - 41 ,ரேட்டிங் - 3 / 5