Friday, November 15, 2013

பெப்சி - அமீர்

திரைப்படத் தொழிலாளர்களை அடகுவைத்தார் குகநாதன்! - அமீர்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெப்சிக்கு எதிராகப் படைப்பாளிகள் சங்கம் உருவானபோது, தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துப் போனது. அந்த அளவுக்கு இரும்புக்கோட்டையாக இருந்த பெப்சியின் பெயரை மாற்ற இருப்பது மட்டுமல்ல, அதை ஒரு முழுமையான தொழிலாளர் அமைப்பாகவும் சீர்திருத்தம் செய்ய முனைப்போடு இயங்குகிறார் அதன் தலைவர் இயக்குநர் அமீர். 


ஒருபக்கம், ஊதிய உயர்வைத் தரமால் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள், இன்னொரு பக்கம், தமிழ்நாட்டுக்கு வெளியே நடத்தப்படும் தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் என்று முன்பு எப்போதும் இல்லாத நெருக்கடிகளைச் சந்திக்கும் பெப்சிக்கு, சங்கம் உருவாகி 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொடியை உருவாக்கியிருக்கிறார். அண்மையில் மொத்தத் தொழிலாளர்களும் பேரணியாகச் சென்று முதல்வரைச் சந்தித்து, தங்களது பிரச்சனைகளைப் பேசித் திரும்பியிருந்த நிலையில் ‘தி இந்து’வுக்காகப் பேசினார் அமீர்…



இயக்குநர் சங்கத்திலிருந்து புறப்பட்டுப் போய்த் தொழிலாளர்களின் அமைப்புக்குத் தலைமையேற்க என்ன காரணம்?

 
நான் வளர்ந்தே ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்களின் மத்தியில்தான். மதுரையில், எட்டுசி யானைக்கல்லிதான் என் பால்யம் கழிந்தது. அங்கே சுமைதூக்குபவர்கள், பாரவண்டி இழுப்பவர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், பழ வண்டிபோடுபவர்கள் என்று கடினமான உடல் உழைப்பை நம்பி வாழும் எளிய தொழிலாளர்களின் வாழ்விடம் அது.


 தொழிலாளர்களின் வியர்வை வாசனையை அருகிருந்து உணர்ந்தவன் நான். உழைப்பதற்கான உடலைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவுமே இருந்ததில்லை. திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வு இன்று உதிரித்தொழிலாளர்களின் வாழ்நிலையைவிட மிகப்பரிதாபகரமாக, பட அதிபர்களால் வஞ்சிக்கப்பட்டதாக இருக்கிறது. சரியான தலைமை இல்லாமல், தொழிலாளர்கள் மனம்நொந்து, நிர்க்கதியாகத் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெப்சிக்குப் போனேன். 



நிர்க்கதியாக தடுமாறிக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னீர்கள்? அப்படி என்ன இக்கட்டான நிலைமை ஏற்பட்டது?


 
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தித் தரப்பட வேண்டும் என்பது திரைப்படத் தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப்படி கடந்தமுறை ஊதியத்தை உயர்த்திக் கேட்டபோது, ஒன்றரை ஆண்டுக் காலம் இழுத்தடித்தும் ஊதிய உயர்வு தரவில்லை. ஆனால் தொழிலாளர்களின் துன்பக்குரல் ஓயவில்லை. 


இதனால் பெப்சி சங்கத்தையே இரண்டாக உடைக்கத் தயாரிப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டார்கள். ஒரு சில தொழிலாளர்கள் செய்த சின்னச் சின்ன தவறுகளை வைத்துக் கொண்டு, இத்தனை ஆண்டுக்காலமாக சினிமாவுக்கு உழைப்பைக் கொடுத்த இவர்களது அடையாளத்தையே தயாரிப்பாளர்கள் நொறுக்க நினைத்தபோது, திரையுலகில் எல்லோரும் கள்ளமௌனத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் நானும், இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனும் இந்தத் தொழிலாளர்களை நிர்க்கதியாக விட மனமின்றி உள்ளேபோனோம். 


இடையில் சின்னத்திரைக்கென்று தனித் தொழிலாளர் சங்கம் தொடங்கும் நிலை உருவானதே?

 
தொழிலாளர் அமைப்பை உடைப்பதோ, அல்லது தொழிலாளர் அமைப்புக்குப் போட்டியாக இன்னொரு அமைப்பை உருவாக்குவதோ நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது புதிய தொழிலாளர் அமைப்பை உருவாக்கினாலும், அதில் அங்கம் வகிக்கப்போகும் தொழிலாளிக்கும் பிரச்சனை ஒன்றுதானே. இதை முதலாளிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை ராதிகா அவர்களிடம் எடுத்துச் சொன்னபோது அதை அவர்கள் புரிந்துகொண்டு பெப்சியை அங்கீகரித்தார். 


10% தொழிலாளர்கள் தவறு செய்திருக்கிறார்கள் இல்லை சொல்ல வில்லை. இதற்காக ஒட்டுமொத்தமாகத் தொழிலாளர்களின் சாப்பாட்டில் கை வைப்பது சரியா? சங்க விதிமுறைகளை மாற்ற வேண்டுமே தவிர சங்கத்தை அல்ல.


திரைப்படத் தொழிலாளர்கள் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கிறதே?

 
நான் மறுக்கவில்லை. பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து, ஒட்டுமொத்தத் தொழிலாளர்களையும் நீங்கள் தவறானவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? 13 ஆண்டுகளாக எனது திரைப்படங்கள் உருவாவதில் தொழிலாளர்களின் மிகக் கடினமான பங்கைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். 


திரைத்தொழிலாளர்களைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களது உழைப்பைச் சொல்லில் அடக்க முடியாது. 


இன்று திரைப்படத்தின் பட்ஜெட் உயர்ந்திருக்கிற அளவுக்குத் தயாரிப்பாளர்களின் வியாபாரமும், லாபமும் உயர்ந்திருக்கிறது. ஆனால் தொழிலாளர்களின் ஊதியம் மட்டும் அடிமாட்டு நிலையிலேயே இருக்கிறது. 3000 பிரதிகள், சர்வதேசச் சந்தை என்று தமிழ்சினிமா எங்கோ போய்விட்டது. 



15 ஆண்டுகளுக்கு முன் பெப்சிக்கு எதிராகப் படைப்பாளிகள் சங்கம் உருவானது. பிறகு பெப்சியோடு அது இணைந்தது. ஆனால் இன்று பெப்சியே முன்வந்து தன் முகத்தை மாற்றிக்கொள்ள முன்வந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

 
தலைமைதான் காரணம். எனக்கு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை கிடைக்கும் என்றால், அங்கே நன்றாக டேபிள் துடைப்பவனாக நான் வாழ நினைப்பேன். ஏனென்றால் எல்லா இடத்திலும் தூய்மை என்பது முக்கியமானது. முதலில் ஒழுங்கற்றுக் கிடக்கும் இந்தத் தொழிற்சங்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். 


இதற்காகக் கடந்த 2 ஆண்டுகளாக என் காலங்களை இழந்திருக்கிறேன். வருமானத்தை இழந்து வேலை செய்திருக்கிறேன். தொழிற்சங்கப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் மட்டுமே இங்கே தொழில் அமைதி ஏற்படும். புதிதாகப் படம் தயாரிக்கப் பலர் வரமுடியும். நல்ல சினிமாவும் புதிய தயாரிப்பாளர்கள் வரும்போதுதானே பிறக்கும். 


கடந்த ஆட்சியில் பெப்சியின் தலைவராக இருந்த வி.சி.குகநாதன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூற என்ன காரணம்?

 
சங்கத்துக்கு அரசியல் சாயம் பூசியதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சியாளர்களிடம் உதவிபெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் திரைப்படத் தொழிலாளர்கள் இருக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் கிளை அமைப்புபோலச் செயல்படக் கூடாது. கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் தலைவராக இருந்த, வி.சி.குகநாதன் அந்த அசிங்கத்தைதான் செய்து வைத்து விட்டுப் போனார். 


தனது தன்னலத்துக்காகத் தொழிலாளர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் பெப்சிக்கு இந்த இழிநிலை. 23 சங்கங்களைக் கொண்ட ஒரு சம்மேளனத்தின் தலைவர், திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போய் நின்று இந்தச் சங்கத்தை அடமானம் வைத்து விட்டார். இதனால்தான் பெப்சி தொழிலாளர்கள் நசுங்கிப் போனார்கள். நேர்மையற்றவன் தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவனாக வரக் டாது. அதேபோலத் தொழிலாளர்களிடம் நாம் முதலாளிகளை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தையும் வளர்க்கக் கூடாது. இது இரண்டையுமே செய்தவர்தான் வி.சி. குகநாதன்.


 மத்தியத் தொழிலாளர் நலத்துறையில் திரைப்படத்தொழிலாளர்ருக்கு பிஎஃ ப் இருக்கிறது. அதைக்கூட வாங்கித்தரக் கூட முயற்சி எடுக்காதவர்தான் இந்தக் குகநாதன். 


மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது?


 
தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறந்த கலைஞர்களும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் பல சங்கங்களின் பைலாக்கள் மாற்ற வேண்டியிருக்கிறது. தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவுட்டோர் யூனிட் முதலாளிகள் யாரும் தமிழர்கள் கிடையாது. அவர்கள் இங்கிருக்கும் முதலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு தரமற்ற, பாதுகாப்பு இல்லாத சாதனங்களைத் தொழிலாளர்களிடம் கொடுத்து அனுப்புவது அநியாயம். இதுகுறித்து தொழிலாளர் நல வாரியத்திடம் முறையீடு அளித்திருக்கிறோம். 



அடுத்து பெப்சி தொழிலாளர்கள் உழைக்கத் தயங்காதவர்கள். ஆனால் தொழில் நுட்ப ரீதியாகப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. இயக்குநர் சங்கத்தில் இருந்தபோது உதவி இயக்குநர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அதை பெப்சியில் தொழிலாளர்களுக்கும் கொண்டுவருவோம். ஹாலிவுட்டுக்கு இணையான தொழிலாளர்களாக அவர்களை மாற்றிக்காட்டுவோம். 


சங்கத்தின் பெயரைத், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் என மாற்ற முடிவு எடுத்ததற்குக் காரணம், வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலாளர்கள் துரத்தி அடிக்கப்பட்டதுதான் காரணமா?


 
அதுமட்டுமே காரணமல்ல. சங்கத்தின் பெயரில் தென்னிந்திய என்று இருக்கும் வார்த்தையால் ஒரு தொழிலாளிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கிறது என்று சொன்னால் அதை வைத்துக்கொள்ளத் தயார்.முன்பு பெப்சி படைப்பாளி பிரச்னையில் இது அரசிலாக்கப்பட்டது. ஆனால் இன்று தொழிலாளர்கள் வறுமையில்லாமல் ஜீவனம் நடத்துவது மட்டும்தான் உண்மையான அரசியல். அதிகபட்சம் ஒரு லைட் மேனுக்கு இன்றைய ஊதியம் 530 / ரூபாய் முப்பது நாளும் அவனுக்கு வேலை இருக்கிறதா என்றால் இல்லை. 



படப்பிடிப்பில் வேலை செய்பவனுக்கு ஊதிய உயர்வு கொடுக்காமல் , நட்சத்திரங்கள் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தும் கேராவேனுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் கடுமையான பதவிச்சண்டை. இதனால் தமிழ்சினிமா படப்பிடிப்புகள் அத்தனையும் வெளிமாநிலங்களுக்குச் சென்று விட்டது. 



ஆந்திராவிலும், இந்திப்படங்களிலும், தமிழ்க் கலைஞர்களுக்கு அவ்வளவு கிராக்கி. தமிழ்நாட்டில் இருந்து எல்லாரும் கிளம்பி இங்கே வருகிறார்களே என்று அவர்கள் பிராந்திய உணர்வுடன் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். வெளிமாநிலத்தில் இருந்து எங்கள் மாநிலத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால், 70 % எங்கள் மாநிலத்து ஆட்களைத்தான் நீங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் தமிழ் திரைப்படத்தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையை முற்றாக இழந்தார்கள். இதனால் நாங்களும் தமிழர்களாக மாறுவதில் தவறில்லையே? 


இங்கே இருக்கும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபை இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையிலான தொழிலாளர் பிரச்சனையில் தலையிடுவதில்லையா?


 
அதன் தலைவர் கல்யாண், இங்கே சினிமா நூற்றாண்டு விழா நடத்தினாரே தவிர, நான்கு மாநில முதல்வர்கள் இங்கே ஒன்றாகச் சந்தித்துக்கொண்டபோது அதை அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, முதல்வர்களை இதுபற்றி அவர் பேசவைத்திருக்கலாம். நமது முதல்வரிடமும் இதுபற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி விழா நடத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு, திரைப்படத்துறை பிரச்சினைகளைப் பேசவே இல்லை. இங்கே உண்மையாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் பேரணியாகச் சென்று முதல்வரிடம் சொன்னோம். வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்பதே முதல்வருக்கு இப்போதுதான் தெரிகிறது. உடனடியாக இது குறித்துப் பேசுகிறேன் என்றார். 



அப்படியானல் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபையும் மாற வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?


 
அதில் என்ன ஐயம் இருக்கிறது. தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகசபை என்பது தொடங்கும்போது சரியான அமைப்புதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. காரணம் அப்போது நான்கு மாநி்ல சினிமாக்களும் ஒன்றாக இருந்தன. தமிழகம் தாய் வீடா இருந்தது. ஆனால் இன்று மற்ற தென்மாநில சினிமாக்கள் வளர்ந்து தனி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். ஆந்திரா பிலிம் சேம்பர் ஆஃ காமர்ஸ் இருக்கிறது. இதேபோல மற்ற மாநிலங்களுக்கும் தனித்தனியாக உருவாகிவிட்டது. தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு திரைப்பட வர்த்தகச் சபைதானே இருக்க வேண்டும். நீங்கள் மட்டும், இந்தப் பணத்தையும் இந்தச் சொத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள். தமிழ் சினிமாவுக்கு கல்யாண் தலைமையில் இயங்கும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபையின் பங்களிப்பு என்ன? அதைச்சொல்லுங்கள் முதலில். இந்தச் செயல்படாத அமைப்பின் தலைமை மாறும்போது இந்த அமைப்பும் , தமிழ் சினிமாவுக்கான அமைப்பாக, தமிழ்நாட்டின் அமைப்பாக மாறும். அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை. 



இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எந்த அளவு நம்புகிறீர்கள்?

 
இந்த அரசுதான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உள்ளன்போடு அனைத்தையும் செய்திருக்கிறது. ஜே.ஜே.பிலிம் சிட்டி 1991இல் கொண்டு வந்தது இன்றைய முதல்வர்தான். அதன்பிறகு திருட்டு விசிடிக்கு குண்டர் சட்டத்தை இணைத்ததும் அவர்தான். பள்ளிக்கரணையில் 85 ஏக்கர் நிலத்தைத் திரைப்படத்தொழிலாளர்களின் வீடுகட்ட ஒதுக்கியதும் இன்று இருக்கும் அரசுதான். 


திரைப்பட நகரம் வந்தபோது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் விமர்சனம் செய்தார்கள். ஆனால் இன்று படப்பிடிப்புத் தளங்களை இழுத்து மூடிவிட்டார்கள். ஆனால் ஜே.ஜே. பிலிம் சிட்டிக்குப் பின்னால் திறக்கப்பட்ட ராமோஜி பிலிம் சிட்டி எங்கேயோ போய்விட்டது. ஆனால் தென்னிந்தியத் சினிமாவின் தாய் வீடாக இருந்த தமிழ்நாடு படுத்து விட்டது. 


thanx - the hindu

Thursday, November 14, 2013

பீட்சா 2 - வில்லா - சினிமா விமர்சனம்

a

ஹீரோ ஒரு க்ரைம்  நாவல் எழுத்தாளர்.  அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த  ஓவிங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை  விவரிப்பது போல் சில கலெக்‌ஷன்ஸ் இருக்கு.ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச  அடுத்த வருசம் அம்மா  டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல்  ஹீரோ அவார்டு வாங்கறார். 


இந்த மாதிரி  சில சம்பவங்கள் ஓவியங்கள் ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது . ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ் ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ் ல படுத்து செத்துடறாரு.


ஹீரோவுக்கு தற்செயலா  வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது . அது அவரோட  அப்பா  வாங்குன வீடுதான் , ஆனா ஏதோ சில காரணங்களுக்காக  அந்த வீட்டைப்பற்றின  தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த  வீட்டில்  இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள்  ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால யாக்கூட இருக்கலம்னு  ஹீரோ  நினைக்கறாரு. 


ஹீரோவோட அப்பா வரைஞ்ச  ஓவியக்கலெக்‌ஷன் ல ஹீரோ சாவது போலவும் , ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு . 


ஹீரோ அதைத்தடுக்க  எடுக்கும்  நடவடிக்கைகள்  வெற்றியா? தோல்வியா?  என்பது க்ளைமாக்ஸ்





விஜய் சேதுபதி   ஹீரோவா  நடிச்ச பீட்சா செம  ஹிட் ஆனதால் அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ்  சினிமாவுக்கு   மாறுதலான  த்ரில்லர்  கதை  கொண்ட  படம்


ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு . அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான  முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப   ஜாலியா  இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம். 


ஹீரோயின் சஞ்சிதா  ஷெட்டி . ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் 


நாசர்  ஹீரோவுக்கு அப்பா கேரக்டர் . ஆனா அதிக வாய்ப்பில்லை 



பின்னணி இசை  பிரமாதம்  என  சொல்ல   முடியாவிட்டாலும் ஓக்கே லெவல் . 


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.   முன்  பாதி ரொம்பவே ஸ்லோவாப்போகுது . பீட்சா  முதல் பாகம் மாதிரி இருக்கும் என எதிர்பார்த்த  ரசிகர்கள்  ஓ-ன்னு கத்த ஆரம்பிச்சுடறாங்க . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கை கொடுக்கும்னு அதீத தன்னம்பிக்கையில் முன் பாதியில் கோட்டை விட்டது போல் தோணுது .ஸ்லோ   அண்ட் ஸ்டடி வின் த ரேஸ் அப்டினு நினைச்சுட்டார் போல . 


2. அவார்டு  வாங்கும்   ஓவியத்துல  தெளீவா ஒரு பெரிய ஆள் வாங்கும் விருது போல் இருக்கு, ஆனா ஹீரோயின் சின்ன வயசுல ஏதாவது ஓவியம் வாங்கி இருக்கியா? என்று கேட்கும் சீன்  தேவை இல்லாதது 


3  ஹீரோயின் ஏன் ஹீரோவை அடிக்கடி நச்சரிச்சுட்டே இருக்கா? என்பதற்கு க்ளைமாக்சில் பதில் இருக்கு . ஆனா ஹீரோ ஹீரோயினை அடிக்கடி அவாய்டு பண்ணும் காட்சி  எரிச்சல் தான் வர வைக்குது . ஹீரோயின்  மேல் உள்ள காதலால் தான் அப்படி பண்றார் என்றாலும் அதை காட்சிப்படுத்தும்போது ஆழமா செய்யலை


4 அந்த  வீட்டால் தான் பிரச்சனை எனும்போது  ஏன் விலகிப்போகாமல் ஹீரோ மேலும் மேலும் புதைகுழியில் சிக்கனும் ?


5 வில்லா வீட்டின்  முந்தைய ஓனர் பொன்ராஜ் அவரது அண்ணனால் கொலை செய்யப்படப்போறார் என்பது  ஹீரோவுக்குத்தெரிந்தும் அதை ஏன் பொன்ராஜிடம் சொல்லி எச்சரிக்கலை ?  சும்மா பொதுவா சொல்றாரு . நீங்க இந்த  ஊர்ல  இருக்க வேணாம்னு . ஆனா உங்கண்ணன் உங்களைக்கொலை பண்ணப்போறார்னு ஓவியம் சொல்லுது அப்டினு உடைச்சுச்சொல்லலை , அது ஏன் ?


6  ஹீரோவோட நண்பர் எதிர்பாராத விதமா கால் ல அடிபட்டு ஆம்புலன்ஸ் மூலம்  ஹீரோ மூலம்  அவசர அவசரமா  அழைத்துச்செல்லப்படறார். எந்த ஹாஸ்பிடல் போகப்போறோம்னு  ஹீரோவுக்குக்கூடத்தெரியாது . ஆனா அங்கே வரும்  ஹீரோயின் கிட்டே யாரோ ஒரு  பப்ளிக் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல் பெயரை எப்படி சொல்றார்?


7 ஹீரோவோட நண்பருக்கு 2 கால்களையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டோம்னு ஒரு தகவலா டாக்டர்  ஹீரோ கிட்டே சொல்றார் . ஆபரேஷன் முன்பே  நோ அப்ஜெக்சன் லெட்டர்ல சைன் வாங்கவே இல்லை


8 பேய் பங்களா என  சொல்லப்படும் ராசி இல்லாத பங்களா மார்க்கெட் ரேட் எப்படி நாலரைக்கோடி வரும் ?


9 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் அதி புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டிருக்கிறது .  ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு மட்டும்  புரிஞ்சாப்போதுமா?


10 ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படத்தை  அசால்ட்டான முன் பாதியால்  கமர்ஷியல் ரீதியான வெற்றி பெறாத படமாக ஆக்கி விட்டீர்கள்



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஓவியர்கள் பொதுவா   அந்த மைன் செட்ல என்ன ஓடுதோ அதைத்தான் வரைவாங்க . பின் எதை வெளீல காட்டலாம் என்பதை அவங்களா முடிவு செய்வாங்க 



2.  உன்னால எதையும் , எப்பவும் மாத்தவே முடியாது . நடப்பது நடக்க இருப்பது நடந்தே தீரும் 



3  மனிதனோட உடல் ல இருக்கும் முடிக்கு , தங்கத்துக்கு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கு . அதனாலதான் கோயிலுக்கு உள்ளே போகும்போது ஆண் சட்டையைக்கழட்டிப்போகனும்கறாங்க . பொண்ணு தங்க நகைகள் அணிஞ்சு போகனும்கறாங்க . பாசிட்டிவ் எனர்ஜியை அப்சர்வ் பண்ற பவர் முடி , தங்கம் 2க்கும்  இருக்கு 


4 இறந்தவங்க எல்லாரும் கெட்டவர்களோ , துரோகிகளோ  இல்லை, அதே சமயம் வாழ்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் அப்டினும் சொல்லிட முடியாது 





சி பி கமெண்ட் - த்ரில்லர் மூவி , சஸ்பென்ஸ் பட விரும்பிகள் பார்க்கலாம் . தேவையற்ற ரத்தம் , கோரக்காட்சிகள் எதுவும் இல்லாத படம். எதுக்கு யு /ஏ? யு வே கொடுத்திருக்கலாம் . பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கு . ஏ சென்ண்டர்களில் மட்டும்  சுமாரா ஓடும் . பீட்சா படம் அளவு அனைத்து ரசிகர்களிடம்  போய்ச்சேராது 


பீட்சா2 -வில்லா - முதல்பாதி ஸ்லோ திரைக்கதை , அபாரமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ஸ் ,கச்சிதமான இயக்கம் -



ஆனந்த விகடன் மார்க் -43 ,


ரேட்டிங்க் - 3.25/5


குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே


டிஸ்கி = பைத்தியம் கேரக்டரில் ஓவியர் வீர சந்தானம் , டைரக்டர் கேரக்டரில் எஸ் ஜே சூர்யா கெஸ்ட் ரோல் பண்ணி இருக்காங்க . இயக்குநர் பாராட்டு பெறும் பகுதிகள் ல எதைச்சொன்னாலும் சஸ்பென்ஸ்ட் உடைஞ்சுடும். எனவே இந்த டைம், அது மட்டும் ஆப்செண்ட்.



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 15 11 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.ராவண தேசம்’- இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. 



இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம். 


அஜெய் என்பவர் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்துள்ளார். ஜெனிபர் என்பவர் ஹீரோயின். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே சினிமாவுக்கு புதுமுகங்கள்.


"அகதியாக கடலில் திகில் பயணம் மேற்கொண்டு ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. "லைப் ஆப் பை" போல பெரும்பகுதி படம் நடுக்கடலில் நடக்கிறது. நிஜமாகவே கடலில் படமாக்கி இருக்கிறோம். உலகம் அறிந்திராத இலங்கை அகதிகளின் இன்னொரு வலியை பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர்  அஜெய்.




பீட்சா 2 வில்லா -படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 


கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் படம் ’பீட்சா 2 வில்லா’ . இதன் நாயகனாக அஷோக் செல்வனும், நாயகியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். 


'ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் பீட்சா 2 வில்லா திரைப்படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்குச் சென்றது. 


இதனை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வர்வேற்பைப் பெற்றிருக்கிறது. பீட்சாவை போன்று அதன் இரண்டாம் பாகமான பீட்சா 2 வில்லா திரைப்படமும் சஸ்பென்ஷ் மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.



விஜய் சேதுபதியால் 'வில்லா' படத்தின் வெளியீடு தள்ளிப்போய்யுள்ளது. 

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.  இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 


இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென படத்தை தீபாவளிக்கு பிறகு வெளியிடப் போவதாக அறிவித்துவிட்டனர். காரணம், அக்டோபர் 2ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' வெளியாகிறது. 'வில்லா' பட இயக்குனர் தீபன் சக்ரவர்த்தியும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள். எனவேதான் வில்லா படத்தின் வெளியீடு தள்ளிப் போய்யுள்ளது. 


மேலும், அக்டோபர் 2வது வாரத்திலிருந்து தீபாவளி வரை வேறு சிறு படங்கள் தியேட்டர்களை புக் செய்திருப்பதால் தீபாவளிக்கு பிறகு 'வில்லா' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ‘பீட்சா' போல் ஒரு வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை. 


அதோடு முதன் முறையாக இந்த படமானது டால்பி அட்மாஸ் என்ற நவீனதொழில் நுட்பத்தில் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாம். 'வில்லா'வில் விஜய் சேதுபதிதான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.




 3  ஆப்பிள் பெண்ணே -ஆப்பிள் பெண்ணே' படத்தில் தம்பி ராமையா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 



கே.ஜி.பாண்டியன்  வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ்  படநிறுவனம்  தயாரித்துக் கொண்டிருக்கும்  படம்  'ஆப்பிள்பெண்ணே'. இதில் வத்சன் நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரோஜா, தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள். கலைமணி இயக்குகிறார். 



படத்தில் தம்பி ராமையாவுக்கு வில்லன் வேடமாம். இதுவரை குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரங்களுக்கு  மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்த  இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்த இருக்கிறார். 'ஆப்பிள் பெண்ணே'  படத்தில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார். எந்த பிரச்சனையையும்  ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம். 

கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி. பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ஆப்பிள் பெண்ணே’. இதில் நாயகனாக வத்சன், நாயகியாக ஐஸ்வர்யாமேனன் நடிக்கின்றனர். ரோஜா, தம்பிராமையா, கே.ஜி.பாண்டியன், தேவா, சுசித்ரா, சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி ஆர்.கே.கலை மணி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசபோராட்டமே கதை. மொத்தம் ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ், திரில்லராக தயாராகிறது. தம்பி ராமையா அமைதியான வில்லனாக வருகிறார். எந்த பிரச்சினையையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம்.

மருந்தே உணவு என்பதை விளக்கி ரோஜா பாடும் பாடல் படத்தில் இடம் பெறுகிறது. ஒவ்வொரு காய்கறி பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதை அப்பாடலில் சொல்லி உள்ளோம். இது பாட்டாக மட்டுமின்றி எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும்.

ஒளிப்பதிவு: ஸ்டெடுகம் பிரபாகர், இசை: மணி சர்மா, பாடல்: யுகபாரதி, விவேகா, நடனம்: சுஜாதா, தினா, அமெய், விஜய், ஸ்டண்ட், குன்றத்தூர் பாபு, எடிட்டிங்: ஆண்டனி இணை தயாரிப்பு கே.எஸ்.மரியப்பா. 




4 ராம் லீலா -தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ராம் லீலா படத்தை வரும் 15-ம் தேதி திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. டிரெய்லர் வெளியிடப்பட்டதில் இருந்தே இப்படம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.


இந்நிலையில், ராம் லீலா படத்தில் காமம், குரோதம் மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.ராம் லீலா என்ற பெயர் இந்துக்களின் கடவுளான ராமரை குறிப்பதால் இந்த படம் ராமரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த படத்தை பார்க்க வரும் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன.


எனவே,இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.ராமரின் வாழ்க்கையை விவரிக்கும் எந்த காட்சிகளும் இடம்பெறாத இந்த படத்தை ராம்லீலா என்ற பெயருடன் திரையிட அனுமதிக்க கூடாது என பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா கமிட்டி மற்றும் மேலும் 5 பேர் சார்பில் டெல்லி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை இன்று விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ.எஸ்.ஜெயச்சந்த்ரா,மறு உத்தரவு வரும் வரையில் ராம்லீலா படத்தை திரையிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார். 


5  THOR ( THE DARK WORLD) - உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த Thor ஹாலிவுட் படத்தின் 3வது பாகத்தின் டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, வெளியான Thor திரைப்படம், உலகம் முழுவதும் 450 மில்லியன் டாலர்கள் வசூலை வாரிக் குவித்தது. அதற்கு அடுத்து வெளியான The avengers திரைப்படத்திற்கும், ஒன்று புள்ளி 5 பில்லியன் டாலர்கள் வசூலானது. இந்த 2 படங்களுக்கும் கிடைத்த வரவேற்பை அடுத்து, Thor படத்தின் 3வது பாகம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. 


Thor The dark world என்னும் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் அடுத்த மாதம் 9ந் தேதியன்று வெளியிடப்படுகிறது. முதல் 2 படங்களில், நாயகன் Thor, தனது சகோதரனும் வில்லனுமான லோகி கதாபாத்திரத்துடன் மோதுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், 3வது பாகத்திலோ, சகோதரர்களான Thor-ம், லோகியும் பகையை மறந்து, கூட்டாக சேர்ந்து, எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வெல்வது போன்று கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 


தோர் படத்தின் முதல் 2 பாகங்களிலும், பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோன்று, 3வது பிரமிப்பூட்டும் காட்சிகள் பல இடம்பெற்றிருப்பதால், திரைப்பட ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


நன்றி - தினமலர் , மாலை மலர் , அனைத்து இணைய தளங்கள்

Wednesday, November 13, 2013

சந்தானத்தை தாக்கிய கவுண்டமணி

வாய்மையில் அனல் பறக்கும் கவுண்டமணியின் அரசியல் பன்ஞ்...!

Goundamanis Political Punch in Vaaimai Movie

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி வாய்மை என்ற படத்தில் நடித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ், பானு நடிக்கும் இந்தப் படத்தில் கவுண்டமணி பென்னி என்ற டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அவரின் அறிமுகமே "ஐயம் கம்மிங் பேக்வித் ஏ ஸ்மால் பிளாஷ்பேக்" என்ற வசனத்தோடுதான் தொடங்கும். அதோடு படம் முழுக்க கிடைக்கிற கேப்பில் எல்லாம் அரசியல் பன்ஞ் டயலாக்குகளை அள்ளி விட்டிருக்கிறாராம். அவற்றில் சில...




* மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டாத்தான் சமத்துவம், பள்ளத்தை வெட்டி மேட்டுல போட்டா அது சவக்குழி. (அரசியல் கட்சிகளுக்கு)



*பணக்காரன்களும், அரசியல்வாதிகளும் ஏழைகளோட கஞ்சியகூட விட்டு வைக்க மாட்டறாங்களே... வீடு வீடாபோயி நீ கஞ்சிகுடி.... நாடே கஞ்சிக்கு வழியில்லாம அலையட்டும். (அரசியல் கட்சிகளுக்கு)



*இருக்குறவங்க இல்லாதவங்ளுக்கு கொடுக்கலேனாலும் பரவாயில்லை, அவுங்கிட்டேருந்து பிடுங்காதீங்கப்பா... (எல்லோருக்கும்)



*ஆமா... எல்லோரும் என்னைய பார்த்தே காப்பி அடிங்க... சொந்தமா யோசிக்காதீங்க (இது சந்தானத்திற்கு)



இப்படி நிறைய அனல் பறக்கும் வசனங்கள் உண்டு. எல்லாமே கவுண்டரின் சொந்த டயலாக்குகள்தான். கவுண்டரின் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு.


நன்றி - தினமலர் 

எட்டுத்திக்கும் மதயானை -ராட்டினம்' தயாரிப்பாளர் கே.எஸ்.தங்கசாமி பேட்டி


காத்திருக்கும் பிரச்னைகளி



கே.எஸ்.தங்கசாமி


"தயாரிப்பாளராக எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது "ராட்டினம்'. அது தந்த நம்பிக்கைதான் என்னை "எட்டுத்திக்கும் மதயானை' படத்தை இயக்கி, தயாரிக்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, வித்தியாசமான முயற்சிகளைத் தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது'' ரொம்பவும் தெளிவாக தன் பேச்சை ஆரம்பிக்கிறார் "எட்டுத்திக்கும் மதயானை'யைத் தயாரித்து இயக்கிவரும் கே.எஸ்.தங்கசாமி.



 தொடர்ந்து யானைகள் தலைப்பாக வருகிறதே...?


 நான்தான் இந்தத் தலைப்பை முதலில் வைத்தது. அதன்பின் வைத்தவர்கள் எல்லாம் என்னைக்கேட்டுதான் வைத்தார்கள்.அதுமட்டுமல்ல, இது யானைகள் சம்பந்தப்பட்ட கதை அல்ல. ஒரு சாமனிய மனிதன் எட்டுத்திக்கிலிருந்தும் பிரச்னைகள் வந்தால் என்ன செய்வான் மதயானை போல அந்தப் பிரச்னைகளை உடைத்தெறிவான். இந்தச் சமூக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவான். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவான். இதுதான் கதை.

 அப்படியென்றால் இது ஆக்ஷன் படமா?


 எமோஷனல் மூவி. காதல், காமெடி என்று போகிற கதையில் திடீரென்று பிரச்னைகள் வந்தால்... அப்படி ஒருத்தன் வாழ்க்கையில் நடக்குதது. அதை அவன் எதிர்க்க மேலும் மேலும் சிக்கல். அப்பதான் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான். எவியான கதை. எல்லோருக்கும் பிடிக்கும்.

 பிரச்னை, பிரச்னை என்கிறீர்களே அப்படி என்னதான் கதை?


 நீங்க பைக்கிள போய்க்கிட்டிருக்கீங்க. அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருத்தர் மேல மோதிட்டா பிரச்னை ஆரம்பிக்கும். போலீஸ் ஸ்டேசன் போன, வாங்க சார் உட்காருங்க, டீ சாப்பிடுறீங்களா, கையெழுத்துப் போட்டுட்டுப்போங்கன்னு போலீஸ் ஸ்டேசன்ல சொல்லமாட்டாங்க. ஒவ்வொரு சம்பவமும் சிக்கலாகத்தான் போகும். இது நமக்கே நமக்காக காத்திருக்கும் பிரச்னைகளின் கதை. எல்லோருமே இதைக் கடந்து வந்திருப்போம். இல்லை கடக்க காத்திருப்போம். பெரிய சம்பவங்கள் எதுவும் கிடையாது. நம்ம தெருவுல நடந்துபோகுற மாதிரிதான் இருக்கும்.


 படப்பிடிப்புகள் திருநெல்வேலியில் நடத்திருக்கீங்க, எப்படியிருந்தது?


 என்னைக் கேட்டால் சென்னையிலேயே கூட ஈஸியாக படப்பிடிப்பு நடத்திடலாம். அங்க அப்படியில்லை. பர்மிஸன் வாங்கியிருந்தாலும் ரூல்ஸ் தெரியாம அங்க இருக்கிற ஏரியா போலீஸ்காரங்க திடீர் திடீர்னு படப்பிடிப்பை நிறுத்தச் சொல்வாங்க. அப்புறம் பேசி ஒருவழியாக படப்பிடிப்ப நடத்தினால் அரை நாள் போயிருக்கும். அதுமட்டுமில்லை, திடீர் திடீர் கொலை சம்பவங்கள் நடக்கும். எதுக்கு, ஏன்னு ஒன்னும் புரியாது. படப்பிடிப்பு ரத்தாகும். அந்த ஏரியாவை புரிந்துகொள்வதற்கே தனியாகப் படிக்கணும்.


 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?


 ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. ஸ்ரீமுகி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகம் ஆகுறாங்க. "ராட்டினம்" படத்தில் நடித்த லகுபரன் இதில் முக்கிய ரோல் பண்றார். "மதுபானக்கடை' துர்காவும் இருக்கிறார். நானும் இந்தப்படத்தில் நடித்திருகிறேன். இசை, "ராட்டினம்" மனு ரமேஷ். ஒளிப்பதிவு, ஆர்.ஜே.ஜெய். கலை, மணி கார்த்திக்.

 
 லகுபரன் படத்தின் இன்னொரு ஹீரோவா?


 இல்லை. ஆனால் படம் அவர் மூலம்தான் தொடங்கும். அவர் மூலம்தான் முடியும்.

 இந்தப் படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?


 நான் ஏற்கெனவே "ராட்டினம்" படத்தைத் தயாரித்திருக்கிறேன். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளரைத் தேடி என்னுடைய கதையை ஒரு அவரிடம் சொல்லி, அவருக்குப் பிடித்த மாதிரி சமரசம் செய்துகொண்டு எடுக்க என்னால் முடியாது. "எட்டுத்திக்கும் மதயானை" சமரசம் செய்துகொள்ள முடியாத படம். அதனால்தான் நானே இப்படத்தைத் தயாரிக்கிறேன்.

 அதனால்தான் குறைந்த பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து எடுக்கிறீர்களா?


 ஒரு படத்துக்குக் கதையும் களமும்தான் முக்கியம். பட்ஜெட்கூட இரண்டாம் பட்சம்தான். பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிறந்த படம் தந்துவிடமுடியாது. இந்தக் கதைக்குப் புதுமுகங்கள்தான் தேவைப்பட்டார்கள் என்றும் சொல்லமாட்டேன். என்னால் இவர்களை வைத்துக்கொண்டும் நல்ல படம் தரமுடியும். அதற்கான முயற்சிதான் இந்தப்படம்.

 புதுமுக இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம் தானே?


 அப்படிச் சொல்ல முடியாது. ஈஸியான சப்ஜெக்டை சொன்னால் ஈஸியாக தயாரிப்பாளர் கிடைத்து விடுவார்கள்.
 ஈஸியான சப்ஜெக்ட் என்றால்..

.
 ஜாலியாக சொல்றது. ரசிகர்கள் ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் பார்த்துவிட்டுப் போவது போன்ற காமெடி சப்ஜெக்ட்டுக்கு மார்கெட்டில் கிராக்கி அதிகம். எவி சப்ஜெக்ட் என்றால் யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை.

 அப்ப நீங்க ஏன் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கணும்?


 ஏன் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கணுமா. நான் வேற மாதிரி எடுக்க நினைக்கிறேன். எத்தனை சிரிப்பு படத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கு. தியேட்டரை விட்டு வந்தவுடனே அந்த மாதிரி படங்களை டிக்கெட்டை கீழே போட்டுவிட்டுப் போவதுபோல மனதில் இருந்து கழற்றி எறிந்துவிட்டுத்தான் போவார்கள். நல்ல படங்கள் மட்டுமே காலத்துக்கும் நிற்கும். அதுமாதிரி இரண்டு மூன்று படம் பண்ணாப்போதும்னுதான் நான் சினிமாவுக்கு வந்தேன்.


 சினிமா இன்று...



 இன்னைக்கு தயாரிப்பாளர்கள் கிட்டையோ, இயக்குநர்கள் கிட்டையோ சினிமா இல்லை. ஒரு சிலரிடம்தான் இருக்கிறது. அவர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் சினிமாவாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு படம் வெற்றி பெற்றால, அதுபோலவே ஒன்பது படம் வருகிறது. இதை ட்ரெண்ட் என்கிறார்கள். ரசிகர் விருப்பம் என்கிறார்கள். வியாபாரத்துக்கு சினிமாவில் பல பெயர்கள்.

 ராட்டினம் பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பீர்களா?


 இந்தப்படம் வெற்றி பெற்றால்தான் தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன் என்று சொல்லமாட்டேன். நல்ல படங்களை, மக்கள் விரும்பும் வண்ணம் தொடர்ந்து தயாரிப்பேன். ஏனென்றால், நான் சினிமாவை ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன்


நன்றி - தினமணி.

ஸ்டூடியோ க்ரீன் VS ரேடியோ ஜாக்கி பாலாஜி - மிரட்டல்கள் - ஒரு பார்வை

சினிமாவும் இணைய விமர்சனமும்

எது நமக்குத் தேவையோ, ஆனால் இல்லையோ, அதைப் பற்றிதான் நமக்கு நிறையவே பேச / புலம்பத் தோன்றும். 1947க்கு முன் கண்டிப்பாக வெள்ளையனே வெளியேறு என பேசாத, புலம்பாத, முணுமுணுக்காத ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதே போல, அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு, பெண் விடுதலை, மத நல்லிணக்கம், விலைவாசி, கரெண்ட் என புலம்பல்கள் / விவாதங்கள் இருக்கத்தான் செய்திருக்கும். 



கடந்த 5-6 ஆண்டுகளில், அதாவது, இணையத்தின் தாக்கமும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரும் பெருக ஆரம்பித்த நேரத்தில், கருத்து /பேச்சு சுதந்திரத்தைப் பற்றி நிறைய பேர் பேசியிருப்பார்கள். இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு, நமது பேச்சு சுதந்திரத்திற்கு புத்துணர்ச்சி கிடைத்தது போலவும், இன்னொரு பரிமாணம் வந்ததைப் போலவும், ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப்படும் எனவும் பலர் ஆரம்பித்தனர். அது நடந்தேவிட்டது என கொண்டாடுபவர்களும் உண்டு. ஏன், அதற்கு முன் நமக்கு பேச்சு சுதந்திரமோ, கருத்துச் சுதந்திரமோ இல்லையா? நமது அடிப்படை மனித உரிமைகளிலேயே இந்த சுதந்திரங்களைப் பற்றி சொல்லியிருக்கும்போது, ஏன் புதிதாக அதைப் பற்றிப் பேச வேண்டும்? விவாதிக்க வேண்டும்? 



வேண்டுமென்றால் முதல் பத்தியில் பேசியதை சற்றே மாற்றி யோசிக்கலாம். எதெல்லாம் நமக்குத் தேவையோ, இருக்கிறதோ ஆனால் அடக்குமுறைக்கு ஆளாகிறதோ, அப்போது அதைப் பற்றிய விவாதங்கள் அதிகமாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால், அடிக்கடி கருத்து, பேச்சு சுதந்திரங்களைப் பற்றி உருவாகும் விவாதங்கள், அதன் மீது நடக்கும் அடக்குமுறைகளின் எதிர்வினையே எனக் எடுத்துக்கொள்ளலாம் தானே? 


அப்படி, கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருந்தது (ஆம்.. பேசிக்கொண்டிருந்தது, இணையத்தில் எந்த சர்ச்சைக்கும் 3 நாட்களுக்கு மேல் இடம் இல்லை), கருத்து சுதந்திரத்தைப் பற்றி. இந்த முறை அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பது, தன் இடைவிடாத, வித்தியாசமான நகைச்சுவைப் பேச்சால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஆர்.ஜே பாலாஜி. 


சமீபத்தில் வெளியான ஒரு படத்திற்கு இவர் செய்த விமர்சனத்தால், அந்த படத் தயாரிப்பு நிறுவனம் இவரை எச்சரித்ததாகவும், இதன் விளைவாக, அவர் வேலை செய்யும் எப்.எம் நிலையத்திலும் அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் பாலாஜி, தன்னால் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்ய முடியாது எனக்கூறி, தனது ட்விட்டர் பேஜில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தான் இனி சினிமா விமர்சனங்கள் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் பேசியிருந்தாலும், அவருடைய நிலைப்பாடு மாறியதாகத் தெரியவில்லை. இவர், ஏற்கனவே இத்தகைய சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பாலாஜி பேசியது இப்போது இணையத்தில் இல்லையென்றாலும், அவருக்கான ஆதரவும் எதிர்ப்பும் இணையத்திலேயே காணப்படுகிறது. அவரது முந்தைய விமர்சன தொகுப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, லட்சக்கணக்கில் ஹிட்ஸ்களை வாரிக் குவித்திருக்கிறன. இவரது இந்த புகழே இப்போது இவரது நிலைக்கும் காரணமாகியுள்ளது. ஏனென்றால், விமர்சிக்கப்படுபவர்கள் பயப்படுவது பெரும்பாலானவர்கள் படிக்கும், பார்க்கும், கேட்கும் விமர்சனங்களைப் பற்றிதான். 


பாலாஜியின் விமர்சன சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும், இணைய விமர்சனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பார்ப்போம். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலையில், பெரும்பாலான பயனர்களின் விமர்சனங்கள், சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றன. பலருக்கு, ஒரு பத்தியை சரியாக கட்டமைக்கத் கூடத் தெரிவதில்லை. இலக்கணப் பிழைகளும் மிகையாக இருக்கின்றன. 



படத்தை சுக்கல் சுக்கலாக பிரித்து போஸ்ட்மார்ட்டம் செய்வதில் குரூரமாக ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் இத்தகைய விமர்சனங்களை படிப்பவர்கள் குறைவே. இதில், படிப்பவர்கள் தெளிவாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி தேர்ந்தெடுத்து படிக்கும் விமர்சனங்களும் எத்தகைய பாதிப்பை உண்டாக்குகின்றன? 


"விமர்சனங்கள் எந்த விதத்திலும் ஒரு படைப்பை பாதிப்பதில்லை. 'அன்பே சிவம்', 'தூள்' இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி, 'தூள்' தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்தனைக்கும் 'அன்பே சிவம்' படத்தை அன்று கொண்டாடியவர்கள் பலர். இருந்தாலும், அன்று வியாபார ரீதியாக வெற்றி பெற்றது 'தூள்' மட்டுமே. இதற்கு எந்த விமர்சகரும், விமர்சனமும் காரணம் அல்ல. இதுவே இன்றுவரை நிதர்சனம். 


வெகுஜன மக்களின் ரசனைக்கேற்றவாறே ஒரு படத்தின் வெற்றி இருக்கும். அதே போல், இதுவரை என் எந்த விமர்சனத்திற்கும், திரையுலகில் இருப்பவர்கள் எவரிடமிருந்தும் எதிர்ப்பு வந்ததில்லை. என் விமர்சனத்திற்கு எதிர் விமர்சனங்கள் பல வந்துள்ளன. அவற்றை எந்த விதத்திலும் ஒதுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார், பிரபலமான ஒரு இணையதளத்திற்காக விமர்சனங்கள் செய்து வரும் நடிகர், பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவையாளர் பாஸ்கி. 


இணையத்தில் பிரபலமான எழுத்தாளரும், விமர்சகருமான, (இன்று ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்) கேபிள் சங்கர், "நான் எழுதிய விமர்சனத்தினால் சிலரது மாற்றுக்கருத்துக்களை சம்பாதித்தது உண்டு. ஆனால் பிறகு, அவர்களுடைய படங்களிலேயே பணியாற்றியதும் உண்டு. என் விமர்சனம் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் நோக்கி இருக்காது. அது அந்த படத்திற்கான விமர்சனமே. ஒரு விமர்சனத்தினால் படத்தினுடைய வியாபரம் பாதிப்படையும் என்பது தவறான கருத்து. அப்படிப் பார்த்தால், சமீபத்தில் வெளியாகிய ஓரு காமெடி படம், இணையத்தில் பலரிடம் குட்டுகளை மட்டுமே வாங்கியது. அந்தப் படம் ஓடவில்லையா?" என்கிறார். 



ஒரு விமர்சனத்தால் திரைப்படத்தை ஓட வைக்கவோ, ஒட்டத்தை நிறுத்தவோ முடியாது என்பதே பரவலான கருத்து. இன்று பல கலைஞர்களுக்கு விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் புறக்கணிக்கவோ பக்குவம் இருப்பதில்லை. 



ஒரு ஹோட்டலில் சாப்பிடப் போனவர், 'என்ன முட்டை நன்றாகவே இல்லையே?' எனக் கேட்டதற்கு, 'நீயும் அடைகாத்து போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் கோழியோட வலி' என்றாராம் சர்வர். இப்படி எந்த ஒரு திரைவிமர்சனத்திற்கும் எதிர்வினையாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதலில் சொல்லும் வாதம், "விமர்சனம் செய்பவர்கள் எங்கே படம் எடுத்து காட்டுங்கள், தெரியும் அதன் உழைப்பு" என்பதே. அல்லது, "கோடி கோடியாக செலவழித்திருக்கும் ஒரு படைப்பை எந்தவித இரக்கமும் இல்லாமல் விமர்சனம் செய்தால் நியாயமா" எனச் சொல்வது. சமீபத்திய சர்ச்சையில், கலையுலக வாரிசு ஒருவரும், புது சினிமா வெளியீடு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதைப் போல என்று கூறியிருந்தார். 



ஒரு சில படைப்பாளிகளோ தங்கள் படைப்பில் மறைத்துவைத்த நூற்றுக்கணக்கான குறியீடுகளைச் சுட்டிக்காட்டி, சினிமா விமர்சனங்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 



இவர்கள் எல்லோருமே கூற வருவது என்ன? இப்படி ஓர் உன்னத கலைப் படைப்பை ரசிக்க தெரியாதாவர்கள் ஜடங்களே என்று கூறுகிறார்களா, அதற்கு பயந்தே பாராட்ட வேண்டுமா? அல்லது இவ்வளவு பணம் செலவழித்து, சினிமா என்ற பெயரில் நாங்கள் எதை கொடுத்தாலும் பாருங்கள் என்பதா?. இது ஃபைவ்ஸ்டார் ஹோட்டல், இங்கு தண்ணீர் கிடைப்பதே அரிது, உங்களுக்கு விஷமே கிடைத்திருக்கிறது. யோசிக்காமல் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அபத்தமாக இருக்காது? அப்படிதான் இந்த வாதங்களும் இருக்கின்றன. 



நூற்றாண்டு கால இந்திய சினிமாவால் எந்த ஒரு பெரிய சமூக மாற்றமும் நிகழவில்லை (அரசியலில் தமிழக, ஆந்திர முதல்வர்கள் விதிவிலக்கு). குறிப்பாக இன்றைய காலகட்டதில், சினிமாவை ஒரு உன்னதக் கலை வடிவமாக யாரும் பார்ப்பதில்லை. அது ஒரு பொழுதுபோக்கு ஊடகமே. 


தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு, ஒரு சினிமாவை பாராட்டவோ, தூக்கிப்போடவோ எல்லா உரிமையும் இருக்கிறது. ஏனென்றால் இது இலவச சேவை அல்லவே. ஒவ்வொரு ரசிகனும் தன் காசை செலவழித்தே டிக்கெட் வாங்குகிறான். அதே போல், தயாரிப்பாளர்கள் 100 ரூபாய் செலவழிப்பதும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றியா? அல்ல. முதலீடு செய்த பணத்திற்கு மேல் பத்து மடங்காக சம்பாதிக்கவே. வியாபார நோக்கின்றி திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களுக்கும் விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எவ்வளவோ பாடுபட்டு வெளியான விஸ்வரூபத்திற்கும் விமர்சனங்கள் வந்தன. எந்த ஒரு விமர்சனத்திற்கும் எதிர்வினைகள் உண்டு. அந்த விமர்சனத்தை 50 பேர் ஏற்றுக்கொண்டால், 50 பேர் ஒத்துக்கொள்ளாமல் விவாதம் செய்யவே ஆரம்பிப்பார்கள். இது ஆரோக்கியமானதாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை. 



எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, விமர்சனம் செய்தவரை மிரட்டுவது / ஆபாசமாகப் பேசுவதை எல்லாம் தெலுங்கு சினிமா வில்லன்கள் 80களிலேயே செய்துவிட்டார்கள். விமர்சனங்கள் ஒரு சினிமாவைப் பற்றி இல்லாமல், அதிலிருக்கும் தனி மனிதனைப் பற்றி மாறும்போது, எதிர்வினைகள் இருப்பதில் தவறில்லை. அதே போல், ஒரு படைப்பைப் பற்றிய தவறான விஷயங்கள் மட்டுமே சுட்டிக்காட்டப்படும்போது, கிண்டலடிக்கப்படும்போது, அந்த விமர்சனம் அதன் பாதையிலிருந்து மாறுகிறது. அத்தகைய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது. 


பவர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சீனிவாசனுக்கு, இணையத்தில் எக்கச்சக்க ரசிகர்கள். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை. ஏனென்றால், எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எவ்வளவு தூற்றினாலும் போற்றினாலும், ரசிகர்களுக்குத் தெரியும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று. 


படைப்பாளியானாலும் சரி, விமர்சகரானாலும் சரி.. விமர்சனங்களை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆரம்பிக்கும்போது தான், நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். இல்லாவிட்டால், விமர்சனமும், எதிர்வினையும் முடிவில்லாத வெறும் சுழல் வாதம் தான். இதற்கு சினிமா பாடலில் இருந்தே உதாரணம் சொல்லலாம்.. "செக்கு மாடு சுற்றி வரலாம்.. ஊர் போய் சேராது!" 


நன்றி - த தமிழ் ஹிந்து 


 மக்கள் கருத்து 


 1. உண்மையான படைப்பாளிகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வார்கள்.. வியாபாரிகளுக்கு பாராட்டு மட்டுமே தேவை..


2 தமிழக சட்ட மன்றத்தை போல இங்கு பாராட்டுபவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.. குறைகளை சொல்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்" என்பது வியாபாரத்தின் நோக்கம்!!!


3 பாலாஜி தன்னுடைய விமர்சனத்தை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து திரைபடங்களை விமர்சிக்க வேண்டும். தரமான படங்கள் வெளி வருவதற்கு விமர்சனம் அவசியம். இரசிகனின் விருப்பத்தை அறியாமல் படத்தை எடுப்பவர்கள் தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பது போலாகும்.


4 அந்தக் காலத்தில் MGR நடித்து அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படத்திற்கு குமுதம் பத்திரிகை வெட்கக்கேடு என்று ஒரே வரியில் விமர்சனம் எழுதியது.அப்போது அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.இப்போது எல்லா விசயத்திலும் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது.


5 நாங்க என்ன குப்பையா வேணும்னா படம் எடுபோம் ஆதே எல்லாம் நீ எதுவும் சொல்ல கூடாது ...இது தான் உங்க நிலைப்பாடு என்றால்... நான் திருட்டு vcd ல தான் படம் பார்பேன் நீ யும் எதுவும் சொல்ல கூடாது ...


6 சினிமாவுக்கு விமர்சனம் தேவை, இல்லாவிட்டால் கண்டமேனிக்கு சினிமா எடுப்பாங்க, அந்த கன்றாவிய பாக்கணும்.


7 விமர்சனம் என்பது என்ன நன்றாக இருந்தால் பாராட்டப்படுவதும் குறைகள் இருந்தால் கொட்டுவதும்தானே. ஆனால் இந்த விமர்சனம் யார் செய்கிறார்கள் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது. ஒருவரது விமர்சனம் அவரது தனிப்பட்ட விறுப்பை வெறுப்பை ஒட்டியே அமையும் என்பதில் யாருக்கும் மாறபட்ட கருத்து இருக்க முடியாது.


 ஆனால் விமர்சனம் செய்பவர் சற்று புகழ் பெற்றவராக இருந்தால்தான் அந்த விமர்சனத்தின் தாக்கம் மற்றவர்களை பாதிக்கும். மற்றபடி முகப்புத்தகத்திலோ அல்லது ட்விட்டரிலோ உள்ள ஒரு நபர் சொல்லும் விமர்சனம் என்பது அதிகபட்சம் அவரது இணைய நண்பர்களை மட்டுமே சென்றடைவதால் பாதிப்பு என்பது வருவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. திரு ஆர் ஜே பாலாஜியின் தனிப்பட்ட புகழ் விமர்சனத்திற்கு விமர்சனம் வர வைத்துவிட்டது

4 லேடி லாயர்சிடம் கில்மா சில்மிஷம் செய்த 58 வயசு பெருசு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்த ஒருவர், ஓட்டல் அறையில் தன்னை, மானபங்கம் செய்ததாக, பெண் வழக்கறிஞர், பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி, சதாசிவம் அமைத்துள்ளார்.



கோல்கட்டாவில் உள்ள, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுடீசியல் சயின்ஸ்' கல்வி நிலையத்தில், சட்டத்தில் பட்டப்படிப்பு இறுதித் தேர்வை முடித்த, பெண் அவர். டில்லியில் உள்ள, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக, கல்லூரி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டியிருந்ததால், அவர், டில்லியிலேயே தங்கியிருந்தார். பயிற்சியை முடித்து, இப்போது, கோல்கட்டாவில் உள்ள, அரசுசாரா தொண்டு நிறுவனத்தில், சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.



 அவருக்கு டில்லியில், சில மாதங்கள், சட்டப்பயிற்சி அளித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், பணியில் இருந்து, இப்போது ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில், தனக்கு பயிற்சி அளித்த, அந்த நீதிபதி, பயிற்சி காலங்களில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஓட்டல் அறை ஒன்றில், தன்னை மானபங்கம் செய்ததாகவும், அந்த வழக்கறிஞர், இப்போது குற்றம் சாட்டியுள்ளார்.


பயிற்சிக்காக சென்றபோது:


இது பற்றி, அந்த பெண் வழக்கறிஞர், தன், இணையதள பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கல்லூரி இறுதித் தேர்வுகளுக்குப் பின், டில்லியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரிடம், பயிற்சி பெறுவதற்காக சென்றேன். பயிற்சி காலங்களில், அந்த நீதிபதி, என்னிடம், 'சில்மிஷத்தில்' ஈடுபட்டார். 



என் தாத்தாவின் வயதை ஒத்த அவர், என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது, எனக்கு மிகவும் மன வேதனை அளித்தது. எனினும், அந்த நேரத்தில் என்னால் இதை வெளியில் கூற முடியவில்லை. அவர் என்னை மானபங்கம் செய்ததில், காயங்கள் ஏற்படவில்லை; என்னை அவர் உடல் ரீதியாக துன்புறுத்தவும் இல்லை. எனினும், அவர் செய்த சில்மிஷங்களை, என்னால் மறக்க முடியாது. என்னைப் போன்று, மேலும், மூன்று பெண் வழக்கறிஞர்களிடம் அவர், தவறாக நடந்து கொண்டுள்ளார். 



எனினும், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை எனக்கு ஏற்படவில்லை. டில்லியில், மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே வேளையில், நாட்டின் உயர் பதவிகளில் ஒன்றான, சுப்ரீம் கோர்ட் நீதிபதியே, என்னிடம் தவறாக நடந்து கொண்டது, எனக்கு மிகவும் வேதனை அளித்தது.



பிறருக்கு நடக்கக்கூடாது:


டில்லியில், யாருடைய துணையும் இல்லாமல், தனியாக இருந்தேன். என் படிப்பும் முடிவடையாத நேரம் என்பதால், எனக்கு நடந்த கொடுமைகளை, என்னால் அப்போது வெளியில் சொல்ல முடியவில்லை. இது போன்ற கொடுமைகள், மாணவிகளுக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காகவே, எனக்கு நடந்த கொடுமைகளை இப்போது வெளிப்படுத்தியுள்ளேன். இவ்வாறு அந்த, பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார். 


இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவம் நியமித்துள்ளார். ''இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்ற அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய மூவர் குழு, இதுகுறித்து, இன்றே விசாரணையை துவக்கும்,'' என, நீதிபதி, சதாசிவம் தெரிவித்துள்ளார்.


நன்றி - தினமலர்


மக்கள் கருத்து 


1. அப்போது சொல்லாமல் இப்போது எதற்காக சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அப்போது உள்ள மனநிலையில் கண்டிப்பாக அந்தப்பெண்ணால் சொல்லமுடியாது. ஒன்று மட்டும் நிச்சயம்... சம்பவம் நடந்து இருக்க முடியாது என்று சொல்ல முடியாது. சரியான தருனத்திற்காக காத்திருந்து, இப்போது சொல்லியிருக்கலாம். உண்மையாக இருக்கும்பட்சத்தில், சரியான தீர்வு சொல்லப்பட்டால்தான் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்பது மட்டுமல்ல.. நீதித்துறையில் இருப்பவர்களே தவறுகளுக்குக் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். 


டில்லி கல்லூரி மாணவி மிகச் சாதரனமானவர்களால் நடத்தப்பட்டது. இது மெத்தப்படித்த, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டியவரால் (நிகழ்வு உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நடத்தப்பட்டதைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் இவருக்கும் ஒழுக்கம் என்ற அளவில் பெரிய வேறுபாடு இல்லை. நீதிமன்றத்தில் மாண்பு காக்கப்படவேண்டும். "ஊருக்குத்தான் உபதேசம், தனக்கில்லை" என்பது நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. நல்லது நடக்கட்டும். 


2 நீதிபதியானாலும், வக்கீலானாலும் ஆணும் பெண்ணும் தனித்திருப்பதை தவிர்ப்பதே தவறுகளுக்கு இடம் கொடுப்பதை தடுக்கும். இது மாதிரியான தவறுகளில் ஆண்களை மட்டுமே பலியாடாக அடையாளம் காணப்படுவதால் பெண்களின் உடந்தை, அவர்களை பொறுப்பற்றவர்களாக்கி விடுகிறது. 


3 இதுக்குதான் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு போகக்கூடாதுங்கிறது 


4 அதுவும் முக்கியமா ஓட்டலுக்கு ... எதுக்கு ஓட்டலுக்கு போனிங்கன்னு கேட்ட சாப்பிடரத்துக்குன்னு சொல்லுவிங்க .. அடுக்கு உடிப்பி ஓட்டலுக்கு போகவேண்டியதுதானே ?? ஸ்டார் ஓட்டல்ல என்னவெல்லாம் நடக்க சத்தியம் உண்டோ ??? ஒன்னு எதற்கு துணிஞ்சி போயிருக்கனும் ... பசப்புவேளைஎல்லாம் வேண்டாம் ...... 


5 பெண்களை இழிவுபடுத்துவதாக நினைக்க வேண்டாம் ... ஒருசிலர் கற்பை விற்க துணிந்துவிட்டனர் என்பதே இம்மாதிரி சம்பவங்கள் ஏற்பட காரணமாக இருந்துவிடுகிறது ...... 


 6 இந்திய அரசியல் அமைப்பை காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.... கடுமையான சட்டங்கள் மூலம் நீதி துறையை தூய்மை படுத்தலாம் என்பதை விட நேர்மையான மனிதர்களை இந்த சுதந்திர ஜனநாயக தேசம் தயார் செய்ய தவறிவிட்டது என்பது தான் உண்மை. குறிகிய நோக்கம் உடையவர்கள் கையில் இந்த தேசம் சிக்கி தவிக்கிறது... மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத மதம் பிடித்தவர்கள் கையில் இந்த தேசம் அடிமை பட்டுக்கிடகிறது. சொன்னால் கோபம் வரும். சொல்லவில்லை என்றால் என் பாரதி கண்ட தேசம் அழிந்துவிடுமோ... மக்களை சோம்பேறி ஆக்கி மதுவுக்கு அடிமை படுத்தும் ஆட்சியின் அவலம் உலகில் எந்தொரு ஏழ்மையான தேசத்திலும் இல்லை...


 7  மானபங்கம் செய்தபோது குற்றச்சாட்டை எழுப்பாமல், இப்போது எழுப்புவது ஏன்? கேட்டது கிடைக்கவில்லை என்பதாலா? அல்லது வேறொரு காரணத்திற்காக நீதிபதியை பழிவாங்க நினைப்பதாலா? குற்றம் நடக்கின்ற போதே, சுட்டி காட்டாமல், பல மாதங்கள் கழித்து குற்றம் சாட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது. 


 ""சுரணை கெட்ட சமுதாயமே சோற்றுக்கு வழி இல்லாத போது விழிப்பதை விட இப்போதே விழிதுகொள்""... இந்த புகார் சுதந்திரத்துக்கு பிறகு கொடுக்கும் முதல் புகார், இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வெளியே வராமல் அன்றாடம் நீதி துறையில் நடந்து கொண்டுதான் உள்ளது. சுதந்திரம் பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லிதானே சுதந்திரம் வாங்கினார்கள், இன்றைய இந்தியாவின் பாலாறும் தேனாறும் இவைகள் போன்ற புகார்களும் இலஞ்சகளும் ஊழல்களும் தானா? அன்னியர்கள் ஆண்ட போது கூட அரசாங்கமும், நீதி துறையும் நேர்மை தவறாமல் இருந்து என்பது தான் உண்மை... அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் இவர்களை யார் கொள்வார்கள்???