Thursday, September 19, 2013

மத்தாப்பூ - சினிமா விமர்சனம்

ஹீரோவோட பர்ஸ் மிஸ் ஆகி  ஒரு மிஸ் கைல சிக்குது . 2 பேருக்கும் அறிமுகம் ஆகுது . அப்புறம் பார்த்தா  ஹீரோயின் ஹீரோவோட அக்காவோட அசிஸ்டெண்ட். விடுவாரா ஹீரோ  ஹீரோயின் மனசுல டெண்ட் போட  பின்னாலயே சுத்தறார். ஆனா பாருங்க  ஹீரோயின்  நரசிம்மராவ்க்கு பேத்தி மாதிரி  ஒரு உம்மணாம்மூஞ்சி . பூரின்னா  உப்பலா  இருக்கனும் , நமீதான்னா கும்முன்னு இருக்கனும் , பொண்ணுங்கன்னா  சிரிச்ச முகமா இருக்கனும்னு சென்னிமலை சித்தர் சொன்னது பாப்பாவுக்கு தெரியல போல .விலகி விலகி போகுது .

 ஆம்பளைங்கள்னாலே பாப்பாவுக்கு ஏன் வெறுப்புன்னு  ஒரு ஃபிளாஸ் பேக் . ஒரு தலை ராகம் பட கால கட்டத்தில்  சொல்லப்பட்ட அதே டைப்  காரணம்  தான் .


ஹீரோயின்  ஆண் பெண் நட்பை சாதாரணமா  நினைக்குது , ஆனா பெற்றோர்  அடிக்கடி எச்சரிக்கறாங்க . ஆனா பாப்பா கேட்கலை . அது எதார்த்தமா பழகுது . பொதுவா பெண் நட்புன்னா ஆம்பளைங்க எல்லாருமே ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான் . எல்லாருமே தெள்ளவேரிங்க தான் , மொள்ள மாரிங்க தான் , முடிச்சவிக்கங்க தான் அப்டினு நிரூபிக்க  ஒரு சந்தர்ப்பம் . பாப்பாவோட  கிளாஸ் மேட்  3 நண்பர்களோட சேர்ந்து  கில்மாக்கு ட்ரை பண்றான் . பாப்பா தப்பி ஓடும்போது  போலீஸ் வந்துடுது . போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை போனதால அம்மாவுக்கு செம கடுப்பு , ஹீரோயினை திட்டுது.  



அப்போ எடுத்த  முடிவுதான் ஆம்பளைங்க சகவாசமே வேணாம்னு  ஹீரோயின்  எடுத்தது . அந்த  முடிவை  ஹீரோ எப்படி  முறியடிக்கறார் என்பதே  கதை 

சமீப காலத்தில் வந்த   புது முக ஆண்கள் ல இந்தப்பட  ஹீரோ  ஜெயன் மனம் கவர்கிறார். அருமையான நடிப்பு. மவுன ராகம் கார்த்திக் மாதிரி  துள்ளலான , இளமையான , கலாட்டாவான நடிப்பு . சபாஷ் . நல்ல எதிர்காலம் உண்டு இவருக்கு , டய்லாக்  டெலிவரியும் அமோகம் காலேஜ் பொண்ணுங்க  இவர் பின்னால  அலைவது  உறுதி 


நடுவுல  கொஞ்ச பக்கத்தைக்காணோம் நாயகி  யப்பா பேய் மாதிரி இருக்கா மேக்கப்  புகழ் காயத்ரிதான் நாயகி . படத்துக்கு சம்ப்ளமே கிடையாதுன்னு இயக்குநர்  சொல்லீடாரா? அல்லது  தான் மட்டும் தான்  நாயகியை  ரசிக்கனும் , ஊர்ல ஒரு  பய ரசிக்கக்கூடாதுன்னு  நினைச்சாரா தெரியல  , படம்  பூரா இவருக்கு  டல் மேக்கப் . எண்ணெய்  வழிஞ்ச  முகம் மாதிரி , உர் என  முகத்தை வைத்திருப்பது  முன் பாதியில் ஓக்கே  , ஃபிளாஸ் பேக் காட்சியில் கூட  அழுது வடிவது ஏனோ? ஒற்றை  விரலில்  விசில் அடிக்கும்  மானரிசம் எல்லாம் எடுபடவில்லை . பாப்பா  ரேவதி மாதிரி ட்ரை பண்ணி இருக்கு . ஆனா பாருங்க 30 % கூட ஒர்க் அவுட் ஆகலை 


 சித்தாரா  நாயகனின் சித்தி  கேரக்டர் . ஆள் இப்பவும்  சிக்னு இருக்கார். அவருக்கு  ஜோடி இளவரசு . யதார்த்தமான நடிப்பு .ஹீரோயின்=ன் பெற்றோராக  வரும்  கிட்டி - கீதா  ஜோடி  நிறைவான நடிப்பு 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. புதுமுக  ஹீரோ எனும் நினைப்பே  இல்லாத படி அவரை இயக்கிய விதம் . கண்ணியமான ஆடைகள்  , கவுரமான காட்சிகள் , பெண்கள் ரசிக்கும் படமாக தந்த  விதம் 


2. பாடல் காட்சிகள்  மிக நளினம் .  அடடா இதயம் பறக்கிறதே நல்ல மெலோடி ,  உன் பார்வை வெளிச்சத்திலே , யாரிடமும் சொல்லாதே( இந்தப்பாட்டில்  பிங்க்  கலர்  மிடியில்  வரும் ஒரு குரூப் டான்சர் நல்ல அழகு ) ஆகிய பாடல்கள்  எல்லாம்  ஓக்கே  ரகம் 



3. தினந்தோறும்  படத்துக்குப்பின்  ஒரு  பெரிய  கேப்  விழுந்தாலும்  , போதைப்பழக்கத்திற்கு  அடிமை ஆகி மிக வறுமை  நிலையை சந்தித்து  மீண்டு  வந்து  ஒரு நல்ல படம் தந்ததற்கும் பாராட்டுக்கள் 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. கோயில்   குருக்கள்  கோயில்ல இருக்கும்போதே  உள்ளே  சிலையை கை காட்டாமல் மேலே ஆகாயத்தில் கை காட்டி “ மேலே  ஒருத்தன்  இருக்கான் அவன் பார்த்துக்குவான் “ என்கிறாரே? அப்போ  கோயில்க்கு உள்ளே   இருப்பது  யாரு ? 



2.  ஹீரோயின்   எல்லா காட்சிகளிலும்   தோழிகள் , தோழர்கள்க்கு ஹாய் சொல்லும்போது  இடது கையில்  ஹாய் சொல்வது ஏன்? 


3.  ஹீரோ  முதன் முதலாக   ஹீரோயின்  வீட்டுக்குப்போறார். அவர்  யார்னே   பெற்றோருக்குத்தெரியாது , ஆனா முதல் சந்திப்பிலேயே  ஹீரோவை  வீட்டின் கிச்சன் ரூமுக்குள் பால் காய்ச்ச அனுமதிப்பது , ஹீரோயின்  பெட்ரூமுக்கே  அவரை தனியாக பால் தர  அனுப்பவது  ரொம்ப  ரொம்ப ஓவர் . சொந்த அத்தை பையன்  தான் அப்படி உரிமையா  போக  முடியும் 


4. அந்த  3 பசங்க மேல ஏன் அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடலை ? ஹீரோயின்   மேல காயம் ஆகி இருக்கு . பேர் வெளி வராம பார்த்துக்குங்கன்னு சொல்லி   கேஸ் போட்டிருக்கலாமே? 


5. சொந்த அம்மாவிடம்    தன்னை மகள் நல்லவள் என  நிரூபிக்க காலம்  பூரா மேரேஜ் பண்ணிக்காம  இருப்பதாக  முடிவு எடுப்பது அபத்தம் , அப்போதே வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து நிரூபிச்சு இருக்கலாமே? 


6. இந்தக்கதையின்  மெயினான  முடிச்சு  ஹீரோயின் ஆண்கள் மீது கோபம் கொண்டவள் என்பது , அதுக்கான  ஃபிளாஸ்பேக் காட்சி வலுவாக  இல்லை . எவனோ  ஒருவன் செஞ்ச தப்புக்கு   இவ எப்படி  தனக்குத்தானே தண்டனை  கொடுத்துக்கலாம் ? 


7. மேலெ நான்  சொன்ன 6 வது பாயிண்ட்டை வேற யாரும் கேட்டுடக்கூடாதே என ஹீரோவின் வாயாலயே  இதெல்லாம் சப்பை மேட்டர் என கிண்டல் செய்து  சுய எள்ளல் ஆக்கி  இருப்பதும் திரைக்கதையின்  பலகீனமே 




மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஐஸ்வர்யா ராயே இருந்தாலும் அழகை ஒருத்தன் எவ்ளவ் நேரம் தான் ரசிக்க  முடியும் ?  மன்சு தான்  முதல் தேடலா  இருக்கனும் 





2. ஹேய் , எப்படி  உன்னால  முடியுது ? நான் எங்கே போனாலும்  பின்னாலயே  வர்றே?

 யாரு நானு ? பின்ன்னால வர்றது நானா?  நீயா? 



3  ஒரு  வீட்ல பிள்ளைங்க சந்தோஷமா  இருக்க முடியாத வீட்ல  பெற்றோரும்  நிம்மதியா  இருக்க  முடியாது 



4.  நாம அடிக்கடி  இப்படி  மீட் பண்ணீக்கறோமே  அதுக்குக்காரணம் நீங்களோ நானோ இல்லை , அலை வரிசை , சேம்  வேவ் லெங்க்த்



5  நான் உங்களுக்கேத்தெரியாம உங்களூக்குள்ளே  இருக்கும்  வைரஸ் மாதிரி . ஒரு நாள் எப்படி வளர்ந்து நிப்பேன்னு பாருங்க 



6.  நோய் வந்தாத்தான்  மருந்து  கொடுத்து  குணப்படுத்தனும் , மருந்தை  கொடுத்து   நோயை வர வெச்சிக்கக்கூடாது 


7.  நான்  எவ்ளவ் பெரிய  சீரியஸ் மேட்டர் சொல்லிட்டு  இருக்கேன் ? நீ ஐஸ் க்ரீம் சாப்ட்டுட்டு  இருக்கே? 


 இது ஒண்ணும் அவ்ளவ் பெரிய  சீரியஸ்  மேட்டர்  இல்லையே? 


8. சைலண்ட்டா வாழனும்னாலே  இங்கே ஒரு வயலண்ட்  தேவைப்படுது 


9.  நடந்த எல்லாத்தையும்  மறந்துட்டா  எல்லாருக்கும் நல்லா தான் இருக்கும்  


10  உங்க ஃபிளாஸ் பேக் எல்லாம் கேட்டேன் , பைசா  தேறாது 


11  என்  கெட்டப் பார்த்து பயந்துட்டீங்களா?  

 சும்மா  உங்களைப்பார்த்தாலே   போதுமே , எதுக்கு கெட்டப் எல்லாம் ? 


12.  யார்  ஃபோனுக்காகவது வெயிட் பண்றியா?  ட்ரை பண்ரியா?  உன் முக்மே சொல்லுதே? 


13. பசங்களை புலம்ப விடறதும் , அவங்களை அலைய விடுவதும் பொண்ணுங்களுக்கு இப்போ ட்ரெண்ட் ஆகிடுச்சு 


14. எந்த அம்மா  தன்  புள்ளைங்களை கஷ்டப்படனும்னு நினைப்பா ? 

15  எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்  ஒரு இடத்துல நாம  இருக்கறதே எவ்ளவ் நல்ல விஷயம் ?




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   2.75 / 5


சி பி கமெண்ட் -  பெண்களை அதிகம் கவரும் படம்  இது , காத்லர்கள் பார்க்கலாம் . போர் அடிக்காம போகுது , புதுக்கோட்டை v/c  தியேட்டர்ல படம் பார்த்தேன் , மொத்தமே 8 பேர்தான் தியேட்டர்ல 



தனிக்குடித்தனம் VS கூட்டுக்குடித்தனம்

1. பிந்து மாதவியுடன் காதல். மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் ஆலோசனை? # அடுத்த பிரபு தேவா யார்? வின்னரா? விளங்கிடும்



--------------------------------


2. இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து விட்டது என்பதை டி வி பார்த்துத்தான் அறிந்து கொண்டேன்.அதிர்ச்சியாக இருக்கிறது - சோனியா ,மன்மோகன்




--------------------------


3. கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா ? சிந்திப்பீர் - வீரமணி # ஜெயந்திக்கு நம்பிக்கை இருக்கு .கொண்டாடுது.உமக்கு என்ன ஓய்?



---------------------------



4. வேறு சாதியினர் சமைக்கும் உணவை சாப்பிடமாட்டோம்-ராஜபாளையம் மாணவிகள்# ஊர்ப்பேரை சேவக பாளையம் னு மாத்திட்டா போதும்



--------------------------



5. வாய்ச்சண்டையில் ஆர்யாவை தோற்கடித்த நஸ்ரியா # ஆர்யா டர்ன் இனிமேத்தான் ஆரம்பம்



------------------------------



6.  தேமுதிகவை அரசு சீண்டினால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! - விஜயகாந்த் # அம்மாவின் திருவடியே சரணம்னு கிடக்காங்க .பதிலடி கொடுத்துட்டாலும்



-----------------------------


7. வெளிநாட்டில் சொத்து வாங்க தடை : மத்திய அரசு # விட்டா பாரீன் பிகரை கல்யாணம் கட்டவும் தடை விதிச்சுடுவாங்க போல



------------------------


8. எங்களைப் போன்ற கொள்கையுடைய கட்சி, இந்தியாவில் எங்கும் இல்லை-அன்புமணி # எவனா இருந்தாலும் வெட்டுவேன் கொள்கைதானே?



---------------------------



9. அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்: ஜார்க்கண்ட் காங்., தலைவர் பகீர் தகவல் #மினிஸ்டர் ஆகனும்னா மாமா வேலை கூட பார்ப்பாங்க போல



---------------------------



10.  இனி காவல்நிலையங்களில் ், CCTV கேமிராக்கள்பொருத்தப்படும் # அப்போ இனி மே லாக்கப்ல எந்த ரேப்பும் நடக்காது!




---------------------------



11. தேமுதிகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி: இல.கணேசன் குற்றச்சாட்டு # கை வசம் சரக்கிருந்தா நீங்களும் இழுக்கலாம்.நோ அப்ஜெக்சன்



---------------------------------



12. கொள்ளையடித்த வீட்டில் தூங்கிய திருடன் கைது # தொழில் ல எப்பவும் விழிப்புணர்வோட இருக்கனும்.இல்லைனா இப்டித்தான்



--------------------------



13. "இரவும் பகலும் மாறி மாறி வரும்': விஜயகாந்த் # மப்பும் ,தெளிவும் கூட அப்டித்தானுங்க்ணா



------------------------------------------



14. செப்.1ம் தேதி முதல், 50 ரூபாய்க்குக் குறைவாக பெட்ரோல் வழங்கபட மாட்டாது. # ஆப் குவாட்டர் ,மினி கட்டிங் அடிச்சே பழக்கப்பட்டவன் ஆச்சே தமிழன்



-----------------------


15. "காபி கோப்பையால் கணவனை அடித்து கொன்ற மனைவி் கைது"# அய்யய்யோ.இனிமே பொண்டாட்டிங்க கிட்டே பால் கூட வாங்கி குடிக்கமாட்டேன்



-------------------------



16.  கவிதைல மண்வாசனை வரனும்கறதுக்காக ஆங்காங்கே கரிசல் மண் ,களிமண் ,செம்மண் சேர்த்துக்கக்கூடாது




-----------------------


17  சந்தானம் - சாரி விஜய்.நான் இருந்தும் தலைவாவை யாராலும் காப்பாத்த முடியலை




---------------------



18. . தம் அடிச்சுக்கிட்டே பட்டம் விட்டா அது தான் தம்பட்டம்



--------------------------


19. சமீபத்தில் என்னைக்கவர்ந்தவர் என் ஆஃபீஸ் ரிசப்சனிஸ்ட் ,கொஞ்சம் தள்ளி நின்று கவனிக்கையில் என்னைக்கவர்ந்தவர் டைப்பிஸ்ட்
----------------------
20. தனிக்குடித்தனம் இருந்தா சம்சாரம் பிகு பண்ண சான்ஸ் கம்மி, கூட்டுக்குடித்தனம்னா அவங்களுக்குசவுகர்யமா போயிடும், எஸ் ஆகிடுவாங்க
------------------------------- 

Wednesday, September 18, 2013

புல்லுக்கட்டு முத்தம்மா - சினிமா விமர்சனம் 38+

ஓப்பனிங்க் சீன்லயே  ஒரு ஓப்பனிங்க்  சீன். ஆஹா! மேரேஜ்  முடிஞ்சு தம்பதிகள் முதல்  இரவு அறைல   இருக்காங்க . 2 பேரும்  மைசூர் பாக் சாப்ட்டுட்டு இருக்காங்க .நாட்டுக்கு  ரொம்ப   முக்கியம் . அடுத்து பொண்ணு   தரும் ( சொம்புப்)  பாலை  மாப்ளை  குடிக்கறான் . அடுத்ததா எல்லாரும் ஆர்வமா என்ன நடக்கும்னு பார்க்கும்போது எல்லா   கில்மா  சினிமாக்களில்  வருவது மாதிரி   மாப்ளைக்கு  என்னமோ ஆகி  குப்புறக்கா  படுத்துடறாரு . சரி , மத்ததை அப்புறக்கா பார்த்துக்கலாம்னு பொண்ணு மல்லாக்க படுத்து  தூங்கிடுது 

அடுத்த நாள் அதே  கதை ., மாப்ளை மயக்கம் ஆகிடறாரு. ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போறாங்க . அங்கே   ஒரு லேடி டாக்டர். அவர் டெஸ்ட் பண்ணிப்பார்த்துட்டு மாப்ளைக்கு நரம்பெல்லாம்  காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மாதிரி   ரொம்ப  வீக்கா  இருக்குங்கறார். அது ஏன் அப்டி ஆச்சுன்னு ஒரு ஃபிளாஸ் பேக் 


 மாப்ளை  யூத்தா  இருக்கும்போது  ஊர்ல   ஒரு பொண்ணை  விட்டு வைக்கலை . தன்  வீட்டு வயக்காட்ல  வேலை செய்ய்ற ஆளோட சம்சாரத்தை  கரெக்ட் பண்ணிடறாரு . அவங்க  2 பேரும்    இசகு  பிசகா இருக்கும்போது   ஒரு லேடி பார்த்துடுடறா. அய்யய்யோ அவ ஊரைக்கூட்டி  சொல்லிட்டா  என்ன பண்றதுன்னு ஆடியன்ஸ் எல்லாம் பதறும்போது  ரஸ்தாலிப்பழம் நழுவி அமலா பால் ல விழுந்த  மாதிரி அவளைப்பத்தி  ஒரு உண்மை 


 அதாவது அவ புருஷன்  துபாய் போய்  4 வருசமா ஆளே வர்லை . பணம் மட்டும் தான் அனுப்பிட்டு  இருக்கான். அதனால அந்தப்பொண்ணு  இவ்னை கரெக்ட் பண்ணிடலாம்னு திட்டம்  போடுது . 2 பேருக்கும்  மேட்டர்  முடிஞ்சிடுது




பக்கத்து  வீட்டுப்பொண்ணு  1 அடிக்கடி மெயிலைப்பார்க்கறேன்  , மயிலைப்பார்க்கிறேன்னு வருது . அது  கிட்டே ஹீரோ   தன்  வேலையை காட்றாரு . அது பளார்னு அறைஞ்சிடுது . ஏன்னா எல்லாப்பொண்ணுங்களும்   ஓக்கே  சொல்லிட்டா   மாதர் சங்கங்கள் சண்டைக்கு வந்துடும் . அதனால இந்த மாதிரி  கில்ம்பாப்படங்களுக்கு எழுதப்படாத  விதியே  3 பொண்ணுங்க   ஓக்கே சொன்னா  1 பொண்ணு  நாட்  ஓக்கே சொல்லம்னும்


படத்துல  மொத்தம் இந்த   3 லேடிங்க தான் . ஹீரோ ஒவ்வொரு டைம்  கில்மா பண்ணும்போதும்  வயாக்ரா  மாதிரி  ஏதோ  3 மாத்திரையை சாப்பிடறாரு . அதுவே   அவருக்கு பழக்கம் ஆகி  பாடி  ரொம்ப  வீக் ஆகிடுச்சு 

 ஃபிளாஸ் பேக்  முடிஞ்டுது . இப்போ டாக்டர்  சொல்லிட்டாரு , நீ மேட்டர் பண்ணவோ  , மனைவியை கர்ப்பம் ஆக்கவோ லாயக்கு இல்லைன்னு .. 

 அதுவரை  அந்த லேடி  டாக்டரை   ஹீரோ கரெக்ட் பண்ணிடுவாருன்னு பார்த்துட்டு  இருந்த ஆடிய்ன்ஸ்க்கு அதிர்ச்சி. அவ்ளவ் தான்  சீனா?ன்னு ஏக்கமா இருக்கும்போது கதைல  ஒரு ட்விஸ்ட் 


 மேரேஜ் ஆன புதுப்பொண்ணு மாசமா  இருக்கு . அதுக்கு யார் காரணம் ? இன்னொரு ஃபிளாஸ் பேக் .அதாவது  பொண்ணோட  அக்கா வீட்டுக்காரர் சரக்கு அடிச்சுட்டு குடி போதை ல இருக்கும்போது  தெரியாம கையோ , ஏதோ பட்டு  மேட்டர்  முடிஞ்சிருக்கு . அப்போ ஹீரோயின்  தூக்க மாத்திரை சாப்ட்டு  தூங்கிட்டு  இருந்திருக்கு . தூக்கக்கலக்கத்துல  பொண்ணு  இருந்தா  அந்தப்பொண்ணை  ஈசியா  ரேப் பண்ணிடலாம்னு யாரும்  கிளம்பிடாதீங்கய்யா. இதெல்லாம்  சினிமால  தான் சாத்தியம் .



ஹீரோ அநேகமா  தயாரிப்பு  தரப்பு ஆளாத்தான்  இருக்கனும் . வேஸ்ட்

 ஹீரோயின்கள் ல  மனைவியா வர்றதுக்கு 25 மார்க் , துபாய் புருஷன் சம்சாரமா வர்றதுக்கு  30 மார்க் , புல்லுக்கட்டு முத்தம்மாவா  வயக்காட்டுல வேலை செய்யும் லேடியா வர்றதுக்கு  10 மார்க் , லேப் டாப் ல மெயில் பார்க்க வரும் லேடிக்கு 15 மார்க்ன்னு  எல்லார் மார்க்கையும்  கூட்டினாக்கூட 100 வராது போல




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  படத்தின் நீளம்  ஜஸ்ட்   ஒன்றரை மணி நேரம் தான் . ரொம்ப  இழுக்காம   கதை  சொன்ன விதம், 



2.   டைட்டில் பாமர மக்க்ளை சுண்டி  இழுக்கும் விதமா அமைஞ்சது , போஸ்டர்  டிசைன் எல்லாம்  ஓக்கே 





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. மேரேஜ் ஆன புது தம்பதி மாலையும்  கழுத்துமா  வரும்போது  பொண்ணு கழுத்துல  மாலை  ஜடைக்கு வெளீயே  இருக்கு . பொதுவா  பொண்ணுங்க மாலையை ஜடைக்கு கீழே வர்ற மாதிரி எடுத்து  விட்டுக்குவாங்க 


2.  முதல்  இரவு அறைக்கு வந்த பின் எந்தப்பொண்ணும் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு இருக்க மாட்டா , ஏன்னா  கசக்குமே? அப்டியே  போடனும்னாலும்  முதல்லியே போட்டுட்டு வந்துடுவா 



3. முதல்  இரவுல பால் ஒரு சொம்பு ல கொடுப்பது , அதை டம்ளர்ல ஊத்துவது  குடிப்பது எல்லாம் பாவனையே . எல்லாம் காலி  சொம்பு . அவ்ளவ்  லோ பட்ஜெட் படமா?


4. ஹாஸ்பிடல்ல  டாக்டர் நர்ஸ் கிட்டே ஃபைலை வாங்கி “ எல்லா ரிப்போர்ட்சிம் இருக்கா?ன்னு கேட்க்றார். ஏன் பார்க்க மாட்டாரா? 


5. கணவர்க்கு  உடம்பு சரி இல்லாததால 2 நாளா தூங்காம இருக்கும்  ஹீரோயின் கண் சொக்கி  இருக்கு . விட்டா அப்டியே  தூங்கிடும் . எதுக்கு தூக்க மாத்திரை தர்றாரு  டாக்டர்? 



6. தூக்க மாத்திரை போட்டு தூங்கும்  ஒரு  லேடியை  ஒருத்தன்  ரேப் பண்ணீனா  அது அவ்ளுக்கு தெரியாதா?


7. புல்லுக்கட்டு முத்தம்மா  கம்யூனிஸ்ட்டா? தாலியை சிவப்புக்க்லர் கயிறுல  கட்டி இருக்கு ? 





8. துபாய்  புருஷன் ஃபோன் பண்றப்ப 2வது  ரிங்க்லயே அந்த உத்தம பத்தினி  ஃபோனை எடுத்துடறா. ஆனா அவன் “ ஏன் ஃபோனை எடுக்கலை? இவ்வளவு லேட்? அப்டிங்கறான் 



9. புருஷன் கேட் ல காலிங்க் பெல் அடிக்கறான். பொண்டாட்டி பெட்ரூம் கதவை  திறக்கும்போது அவன் எப்படி  அங்கே வெளீல இருக்கான் ?


10 கள்ளக்காதல்  ஜோடி மாட்டும்போது கட்டிலுக்கு அடில தான் ஒளிவாங்க ஆனா  இந்த  லூஸ்  கதவுக்கு பின்னால ஏன் நிக்கறான் ?  


11.   ஹீரோயின் கை மணீக்கட்டுல  கத்தியால   அறுத்துக்க்க்றா . ரத்தம்  கொட்ட வேணாமா?  துக்ளியூண்டு ர்த்தம்  தான்  வருது 



12.  புருஷன்  வெளியூர் போறேன்னு  சொல்லிட்டு கிள்ம்பறப்ப வெறும்  கையை  வீசிட்டு போறான் . ஒரு பேக்  கூட எடுத்துட்டு போக மாட்டானா? 



13. கார்ல போகும்போது ஹீரோ அப்படியே  ஏதாவது லாரி மேல விட்டா மேட்டர்  ஓவர் , எதுக்கு மெனக்கெட்டு  வீட்டுக்கு வந்து  தற்கொலை பண்ணிக்கனும் ?


14. தற்கொலை செஞ்ச  ஹீரோவை லாங்க் ஷாட்ல காட்டும்போது  தலை  குனிஞ்ச வாக்குலயும்  , க்ளோஸ் அப்ல நிமிர்ந்த வாக்குலயும்  இருக்கு 





மனம் கவர்ந்த வசனங்கள்


ஏய்

 ம் ம்  

 ச்சீய் ...  

 ம்க்கும்


ம் ம் அய்யோ 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  30 ( டப்பிங்க்  கில்மா படத்துக்கு விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க ) 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  சுமார் 

ரேட்டிங் =   2 / 5




சி பி கமெண்ட்  -  மேலே  இருக்கும் இந்த  4  முக்ங்கள் ல ஏதாவ்து உங்களூக்குப்பிடிச்சிருந்தா  போங்க . மத்தபடி எல்லாம்  வேஸ்ட் . புதுக்கோட்டை பிரக்தாம்பாள் தியேட்டர்ல நேத்து நைட் செகண்ட் ஷோ பார்த்தேன் 



அறை லூசு vs புது மாப்ளை

1. அன்பே! நீ சிரித்தால் மட்டுமல்ல குளித்தாலே தீபாவளி தான்



---------------------



2.வாசலில் கோலம் போடும் பிகர்கள் நம்மைப்பார்த்ததும் திரும்பி உட்கார்ந்து கோலம் போடுவார்கள் # நோட் பண்ணுங்க




----------------------



3. எல்லா ஆண்களுக்கும் அவரவர் சொந்த ஊரில் ஒரு ஒருதலைக்காதல் இருக்கும்




------------------------


4. காலைல குளிக்க டைம் இல்லைனு முன் தின இரவே குளிச்சுட்டு படுத்துக்கிட்டேன்.எப்பூடி? ;-)




--------------------------


5. மேரேஜ் ஆன புதுசுல ரூமை விட்டு வெளிலயே வராத புது மாப்ளையை அறை லூசுன்னு சொல்லிட முடியாது




----------------------

 6. பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 3 டூ 5 .ஓக்கே.விஷ்ணு முகூர்த்தம் ,சிவ முகூர்த்தம் , முருக முகூர்த்தம் எல்லாம் எப்போ?




--------------------


7. நல்லவேளை.ரேகை உள்ளங்கை ,உள்ளங்கால் ல மட்டும் இருக்கு.இல்லைனா இந்த ஜோசியக்காரங்க,.




-------------------



8. எத்தனையோ சாமி பேரை மனுசனுக்கு வைக்கறாங்க.கூடல் அழகர் இதை மட்டும் எப்டி விட்டு வெச்சாங்க?



---------------------


9. வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 5,000 அபராதம்: # அப்போ வேலைக்கே போகாம மாசம் 15 லட்சம் வருமானம் வரும் போல



------------------------
10.மாற்றுச்சொற்கள் - ஊமை - பேசும் திறன் அற்றோர் .குருடர் - விழி ஒளி இழந்தோர். செவிடர் - செவித்திறன் அற்றோர்.அநாதை - ஆதரவற்றோர்





--------------------------


11நெய்வேலி யில் உள்ள மந்தார குப்பம் நடிகை மந்த்ராவுக்கு சொந்தமானதா? # சும்மா




----------------------



12. டைம் டூ லீடு கேப்ஷனை எடுத்தா மட்டும் பத்தாது, ஹீரோ ( அவரோட ) கால் மேல கால் போட்டபடி தெனாவெட்டா அமர்ந்திருக்கும் ஸ்டில்லும் நீக்கனும்-ஜெ




-----------------------


13. படத்தின் கேரக்டருக்காக எப்படி எல்லாம் மெனக்கெடனும் என்பதற்கு உதாரணம் கமல்.எப்படி எல்லாம் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்பதற்கு விக்ரம்




----------------------


14. அமலா பால் ,டாப்சி பன்னு 2 பேரும் பார்ட்னரா சேர்ந்தா டீக்கடை ,காபி ஷாப் வைப்பாங்களோ?



--------------------


15. மனசுக்குள் DEEPA(தீபா) பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தாலும் deep aa thinking ன்னு சொல்லி சமாளிப்பவன் தான் தமிழன்




---------------------


16. மேரேஜ் ஆனதும் முத வேலையா சம்சாரத்தை மாசம் ஆக்கிட்டு தன்னை அப்பா வா செல்ப் புரொமோஷன் பண்ணிக்கத்தவறியதே இல்லை தமிழன்



----------------------


17. சாயாக்கடை சரசு டீ போட்டா குட்டி போட்ட குட் டீ (GOOD TEA)னு சொல்லலாமா?




--------------------------


18. விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு பெயர் "அதிரடி" # அம்மா கிட்டே அப்ரூவல் வாங்கியாச்சா? அதி லும் அடி விழுந்துடப்போகுது



------------------------------


19. கைவசம் தண்ணீர் இல்லாத போது தொலை தூரப்பயணத்தில் லெமன் சாதம் தவிர்ப்பது நல்லது.விக்கல் வரும்



-----------------


20. தீபாவளி சீசன் துவங்கும் வரை கூட்டம் இராது என்பதால் சில ஜவுளிக்கடை சேல்ஸ்கேர்ள்ஸ் கடலைக்காய் தொப்பை உரித்தல் ,பூக்கட்டுதல் பணியில்



----------------------------


Tuesday, September 17, 2013

நெல்லை தி.மு.க.,செயலாளர் குற்றாலத்தில் கும்மாளமா? பர பரப்பான பாலியல் புகார்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் மீது அவரது கட்சியை சேர்ந்த ஒரு பெண்ணே பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளார். இதற்கு மேலிடத்தின் சிக்னல் வந்ததும் போலீசார் இந்த வழக்கை துரிதப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



கட்சிக்குள் இருக்கும் பெண் ஒருவரே தி.மு.க., மாவட்ட செயலாளர் மீது செக்ஸ் புகார் கொடுத்திருப்பது மாவட்ட தி.மு.க, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பெண்ணிடம் தி.மு.க, செயலர் என்ன முறையில் நடந்து கொண்டார் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.


திருநெல்வேலி டவுன் கரியமாணிக்கப்பெருமாள் தெருவை சேர்ந்தவர் நாலடியார். இவரது மகள் தமிழரசி. காலையில் தமது தந்தையுடன், நெல்லை சரக டி.ஐ.ஜி.,சுமித்சரணை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: எனது தாத்தா குறள்ஏருழவர், மொழிப்போர் தியாகி. 1950களில் நெல்லையில் தி.மு.க.,வை தோற்றுவித்தவர். திருக்குறளில் ஆய்வு செய்து 17 புத்தகங்கள எழுதியுள்ளார். எனது தந்தை நாலடியாரும் கட்சியில் மாநகர இளைஞரணி செயலாளராக இருந்துள்ளார். எனது தம்பி குறளமுதனும் கட்சி பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் எம்.ஏ.,எம்.பில்.,படித்துள்ளேன். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 

நான் கட்சியில் ஈடுபட ஆர்வமாக இருந்ததால், எனது தந்தை, நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியனை சந்தித்து கட்சியில் பொறுப்பு பெற்று பணியாற்றலாம் என கூறினார். இதற்காக ஆகஸ்ட் 23ம் தேதி, நெல்லை கோர்ட்டிற்கு எதிரே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். 

அப்போது என்னிடம் அரசியலுக்கு வருவது நல்லது என்ற ரீதியில் பேசிய கருப்பசாமிபாண்டியன், எனது மொபைல் எண்ணை அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக்கிடம் கொடுக்குமாறு கூறினார். நானும் போன் நம்பரை கொடுத்தேன். 28ம் தேதி மாவட்ட செயலரின் உதவியாளர் கார்த்திக் என்னிடம் பேசினார்.



என் கையில் ஒரு முத்தம் கொடு :



குற்றாலத்தில் உள்ள கருப்பசாமிபாண்டியனின் பங்களாவிற்கு வருமாறு கூறினார். நானும் எனது தந்தையும் 28ம் தேதி மாலை ஐந்து மணிக்கு குற்றாலம் பங்களாவிற்கு சென்றோம். அங்கு எனது தந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, என்னை மட்டும் உள் அறைக்குள் அழைத்தார்கள். உள்ளே இருந்த கருப்பசாமிபாண்டியன், என்னிடம் முதலில் குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். அரசியலில் நல்ல சூழலுக்கு வரவேண்டும் என்றால், அவருக்கு கேர்ள் பிரண்டாக இருக்கும்படி கூறினார். சுக துக்கங்களில் பங்குகொள்ளும்படியும், அதற்காக எல்லா வசதிகளையும் செய்துதருவதாகவும் கூறினார். எல்லோர் முன்னிலையிலும் என்னோடு காரில் வரமுடியாது. உனக்காக கார் வாங்கித் தருகிறேன். அதில் வரவேண்டும். என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி, இதற்கு சம்மதித்தால், நீ இன்னும் தைரியமாக இருக்கலாம் என்றார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். என் உடலெல்லாம் நடுங்கியது. என் அருகில் வந்தவர், இதற்கு சம்மதித்தால், என் கையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போ என்றார். உங்கள் பேத்தி, வயது இருப்பேன். இதெல்லாம் முறையா என்றேன். அப்போது அவர் என்னை, நீயாக தேடிவந்துவிடு. இல்லையென்றால் எப்படி வழிக்கு கொண்டுவரத்தெரியும் என்றார்.உடனே வெளியே வந்துவிட்டேன்.




கொலைமிரட்டல் :



உள்ளே நடந்தது குறித்து எனது தந்தையிடம் கூறினால், அங்கு பிரச்னை வரலாம் என்பதால் அவருடன் வீட்டுக்கு வந்த பிறகு என் அம்மா மூலம் தந்தையிடம் விபரத்தை சொன்னேன். எனவே மனம்பொறுக்காமல், இந்த பிரச்னையை தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினிடம் புகாராக கூறினோம். அவரோ அவருடன் இருந்த இளங்கோவன் போன்றவர்களோ இதனை கண்டுகொள்ளவில்லை. என்னையும் என் தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அனுமதி தரவில்லை. இதற்கிடையே கடந்த ஐந்தாம் தேதி முதல் கருப்பசாமிபாண்டியன், ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு கொலைமிரட்டல் வந்தவாறு உள்ளது. எனவே என் பெண்மையை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலைமிரட்டல் விடுத்த கருப்பசாமிபாண்டியன், உடந்தையாக இருந்த உதவியாளர் அல்லல் கார்த்திக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு: நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் தமிழரசி புகார் கொடுக்க வந்திருப்பது தெரிந்ததும்,கருப்பசாமிபாண்டியன் தரப்பில் வக்கீல்கள், தி.மு.க.,வினர் டி.ஐ.ஜி.,பங்களா வளாகத்தினுள் கூடினர். தமிழரசியையும் அவரது தந்தையையும் சந்தித்து புகாரை வாபஸ் பெறும்படி கூறினர். அதற்கு தமிழரசி மறுத்துவிட்டார். இருப்பினும் தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேட்டியளித்தார்.


நன்றி - தினமலர்


டிஸ்கி - 2 பேருமே  சிரிச்ச முகத்தோட  இருக்காங்க , ஹி ஹி 

ஜில்லா படத்துக்கு சக்திமான் சீரியல் காரங்க தடை கேட்டு கேஸ்?

1. கல்லூரிகளில் உடைக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் -கல்வித்துறை #அப்போ இனி ட்ரான்ஸ்பரன்ட் டிரஸ்க்கு ட்ரான்ஸ்பர்?்



----------------------



2. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ஊழலும் காரணம்:சுப்பிரமணிய சுவாமி # ஆங்கிலேயனிடம் கொண்ட அடிமைத்தனமும் முக்கிய காரணம்



----------------------



3. காங்கிரஸ் கட்சியை திமுக கைவிட்டுவிடும் திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக எச்சரிக்கை # ம்க்கும்.சிம்பு போனா பிரபுதேவா.அவரும் போய்ட்டா ஆர்யா.



------------------------


4. அநேகன் படத்துல உங்களுக்கு எந்த மாதிரி கேரக்டர்?



 தனுஷ் - அநேகமா அநேகன் சைக்கோ வாத்தான் இருப்பான் # கற்பனை 


------------------------


5. தனுஷ் கே வி ஆனந்த் இணையும் பட டைட்டில் அநேகன் # அநேகமா இதுக்கு அர்த்தம் அஜித் ன் ஏகன் க்கு எதிர்ச்சொல்லா இருக்கும் (UN ஏகன்)



-----------------------



6. கருணாநிதி தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார்- ஜெயலலிதா # எல்லாருக்கும் தெரிஞ்ச சேதியை வாசிக்காதீங்க.வேற வேற வேற


---------------------


7. கச்சத்தீவை மீட்க முடியாது என்பதா?- மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் # ஒரு கர்ச்சீப்பைக்கூட அங்கிட்டிருந்து இங்கிட்டு மீட்க முடியாது.




------------------------


8. டாக்டர் அய்யா போல ஒரு தலைவர் இல்லை-அன்புமணி #மாதம் மும்மாரி பொழிவதற்குள் 30 முறை கட்சி மாறுபவர் அவர் போல் யார் உளர்?



--------------------------



9. தமிழ்நாடு-் கல்லூரி மாணவமாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அமல் # கடமை ,பெண்ணியம் ,தட்டுப்பாடு



-----------------------


10. நயன்தாரா சாயலில் இருக்கும் நஸ்ரியா தான் இப்போது கனவுக்கன்னி. # சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா கண் ல படாம இருக்கும் வரை பாதுகாப்பு




------------------------


11  பிரதமர் உரையில் ஒரு வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்! # ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் ஆகிடுமே.அதையும் நீக்கிட்டா எப்டி?




---------------------


12. பொறுமையாக இருந்தால் பொருளாதாரம் மேம்பாடடையும்! - ப.சிதம்பரம் # எருமை மாட்டு மேல மழை பொழிஞ்ச மாதிரி தானே தமிழன் இருக்கான்? இன்னுமா?




------------------------



13. பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகி...# தாமரை சின்னக்காரர் தா மறை கழண்டவர் போல



-------------------------



14. எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் நடப்பதுண்டா?-மன்மோகன் #,அன்டர் எஸ்டிமேட்டட்.கொள்ளைக்கு உடந்தைனு சொல்லி இருக்கனும்



-------------------------



15./ ரூபாய் மதிப்பு சரிவால் விலைவாசி உயரலாம் - பிரதமர் #பெரிய கொலம்பஸ் ,கண்டுபுடிச்சுட்டாரு.தத்தி தமனாக்களுக்குக்கூட தெரியுமேய்யா




------------------------



16. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மீது பிரதமர் அலுவலகம் புகார் # அப்போ பிரதமர் ஏதோ தப்பு பண்ணி மாட்டிக்கிட்டார் போல



-----------------------



17. வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா # தமிழன் உண்டியல் ல போட்ட காசையே நைசா எடுத்துடறான்



------------------------



18. கச்சத்தீவை மீட்க முடியாது - மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பதில்.#,அடமானம் வெச்சது மூழ்கிடுச்சா? மொத்தமா வித்துட்டீங்களா?



-----------------------


19. பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும் -கலைஞர்.# ஆபரேஷன் சக்சஸ்.பேஷண்ட் அவுட் டாக்டர் கிரெட் எஸ்கேப்



---------------------



20. ஜில்லா படத்தில் விஜய் பேரு சக்தி - செய்தி # சக்தி மான் காரங்க கேஸ் போட்ர மாட்டாங்களா?

Monday, September 16, 2013

மதகஜராஜா -விஷால் -ரேஸில் நான்

 

 

பெண்களுக்கான ரேஸில் நான் இல்லை! விஷால்

சினிமா நடிகன் என்ற அடையாளத்தை துடைத்தெறிந்து விட்டு பேசுவது விஷாலின் வழக்கம். பத்து வருடங்களை நிறைவு செய்த அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் வந்து விழுகிறது.... சினிமாவில் பத்து வருட நிறைவு பெரிய சாதனையான விஷயம்தான்.... வெளிப்படையாக சொல்லுங்கள்... எந்த இடத்துக்கு ஆசைப்பட்டீங்க...? இதுவரைக்குமான அனுபவம் எப்படியிருக்கு...?    லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ்!  "செல்லமே' படத்தில் நடிக்கலாம் என யோசித்ததே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். இயக்குநர் லிங்குசாமி சார்தான் ""விஷால் ஒரு கதை இருக்கு. நீ கேளு. பிடித்திருந்தால் நடி..''ன்னு சினிமாவுக்கு அழைத்து வந்தார். 
சின்ன வயதில் உள்ளுக்குள் இருந்த சினிமா ஆசையை புரிந்துக் கொண்ட என் அப்பா, அர்ஜூன் சாரிடம் சேர்த்து விட்டார். அங்குதான் உதவி இயக்குநராக, மாணவனாக சினிமா படித்தேன். என்ன நினைத்தாரோ திடீரென்று ஒரு நாள், ""விஷால் உன் ஹைட்டு க்கும், வெயிட்டுக்கும் நீ ஹீரோவானால் என்ன?‘' என்று கேட்டுப் போனார். அது முதல் உள்ளுக்குள் ஒரு பரபரப்பு. மனசுக்குள் எதையோ தேடிப் போகிற வெளிச்சம். அந்த வெளிச்சத்தை தேடி வந்து என்னை ஹீரோவாக்கினார் லிங்குசாமி சார்.


 இப்படி ஒரு புதையல் கிடைக்கும் என்று தெரியாமல்தான் போனேன். கதையை சொன்னார். பயம் வந்து விட்டது. ""சார் முதல் படமே இப்படி ஆக்ஷன் நிறைய இருக்கு''ன்னு சொன்னேன். ஏதோ ஒரு தைரியம். ஒரு கை பார்க்கலாம் என இறங்கி வந்து விட்டேன். அந்தப் படத்தின் வெற்றி, என்னை பெரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்த்ததை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனை நாள்கள் கடந்து போன வெற்றி, தோல்விகளுக்கு அந்த முதல் வெற்றிதான் காரணம்.

 




முன்னணி இடங்களில் எல்லாம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. எனக்கு இப்போது வந்துள்ள பக்குவம் என்னையே வியக்க வைக்கிறது. அக்கறையான மனிதர்கள் இப்போது என் பக்கத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.    சில நேரங்களில் எடுக்கிற எல்லா முடிவுகளின் கணக்கும் தவறிப் போனதாக உணர்ந்த நேரங்கள் இருக்கும்தானே...?  நிறைய தவறு செய்திருக்கிறேன். அது எதிர்பார்க்காத ஒன்றுதான். கதைகள் சரி வரக் கேட்காமல் தவறு செய்திருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சில இடங்களில் அதை சரி செய்துக் கொள்ள வேண்டும் என தோன்றியது உண்டு. திடீர்ன்னு ""விஷால் அவ்வளவுதான். காலி''ன்னு ஒரு வார்த்தை வந்து விடக் கூடாது என்பதில் விழிப்பாக இருந்தேன்.



அதற்காக எந்த எல்லைக்கும் சென்று உழைக்கவும் காத்திருந்தேன். என்னை உரசிப் பார்த்த சில தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அது இன்னும் உத்வேகம் கொடுத்தது. நான் எப்போதும் சினிமாவைக் கொண்டாடிச் செய்கிறேன். வீண் மரியாதைகள் எனக்கு தேவையில்லை. ஆனால் துளியும் பயம் கிடையாது. வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், சின்ன மார் தட்டல் வந்து விடும். அதனால் சில தோல்விகளும் தேவைப்படுகிறது. இப்போது என் சினிமாவுக்கு, என் நடிப்புக்கு இன்னும் உயிர் வந்திருக்கிறது.


அருமையான கதை, பெரிய படம் என்று ஆச்சரியமான இடங்கள் நிச்சயமாக காத்திருக்கிறது.    இப்போது இருக்கிற சினிமா சூழலில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கீங்களே... எல்லாவற்றையும் பார்க்கும் பக்குவம், அனுபவம் என நிறைய தேவைப்படுமே...?  நிறைய காரணங்கள் இருக்கிறது. சினிமாவில் சில நேரங்களில் காசு, பணமெல்லாம் பார்க்க முடியாது. ஒரு தோல்வி வந்தால் சென்டிமெண்டில் போட்டு தாக்கி விடுவார்கள். ஆனால் அந்த சென்டிமெண்டுகளை போட்டுத் தாக்குவதுதான் என் வேலை. இங்கே வெற்றிகள் மட்டும்தான் பேசும். ஒரு சினிமா விழாவுக்கு போனா, வெற்றி ஹீரோவா போனாதான் மரியாதை. அதற்காக எப்போதுமே வெற்றியின் பக்கத்தில் இருக்க முடியாதே? ஒரு ஹீரோவா என் படங்களையே ரிலீஸ் செய்ய நான் சிரமப்பட்ட காலம் உண்டு.





"சமர்' படம் வெளிவந்த நேரத்தில், தயாரிப்பாளராக இறங்க வேண்டிய நேரம் இதுதான் என்று தோன்றியது. அதற்காகதான் இந்த "விஷால் ஃபிலிம் பேக்டரி'. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் "பாண்டிய நாடு' படத்தை தயாரித்து நடிக்கிறேன். நம்ம பணம், நம்ம காசு போட்டு நடிக்கும் போது, இன்னும் கொஞ்சம் பொறுப்பு அதிகமாகிறது. அப்படியென்றால் இது நல்ல விஷயம்தானே.    தமிழ் சினிமாவில் பெண்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் இருக்கீங்க... அதே சமயம் அர்ஜூன் ஐஸ்வர்யா தொடங்கி வரலெட்சுமி, நயன்தாரா வரைக்கும் எல்லோருக்கும் நீங்கள் ஃப்ரெண்ட்லி... எப்படி சாத்தியப்படுகிறது...?



 நிறைய பேர் இதைக் கேட்டார்கள். என்ன பதில் சொல்லுவதென தெரியவில்லை. பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ். சினிமா அதை இன்னும் அதிகமாக்கி விட்டது. இந்த பத்து வருட அனுபவங்களில் இதையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஆர்யாவை ரொம்பவே பிடிக்கும். "நான் கடவுள்', "பாஸ் என்கிற பாஸ்கரன்', இப்போ கூட "ராஜா ராணி'ன்னு அவரும் பெண்களுக்கான இடத்தில்தான் இருக்கார். ஆர்யா உண்மையில் நல்ல உயரம், மனுஷன், ரொம்பவே மேன்லி. ஆர்யாவுக்குதான் சினிமாவில் அதிகம் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதைப் போலவே நடிகைகளுக்கும் ஆர்யாவைத்தான் ரொம்ப பிடிக்கிறது. அந்த ரேஸில் இருந்து இப்போது நான் கொஞ்சம் விலகி வந்திருக்கிறேன்.




    பட படவென தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் வந்து விட்டார்கள்....? யார் ரொம்ப உயரத்துக்கு போக தகுதியுடையவர் என்று நினைக்கிறீர்கள்...?  ஒவ்வொருத்தரும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள். நிறைய பேசாமல், உபதேசம் பண்ணாமல் கதைக்கு ஏற்றாற்போல், தன்னை மோல்ட் செய்துக் கொள்ளும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர்., ரஜினி வந்த விதம் பார்த்தா, வளர்ந்த விதம் பார்த்தா பளீச்சென ஒரு உண்மை புரியும். மக்கள் மனதில் நிலைத்து அதன் பின் கொடுத்த வெற்றிகளை, இப்போது வந்தவர்கள் புரட்டிப் போடுகிறார்கள். நல்ல உழைப்பு இருந்தால் முதல் படமே ஹிட் கொடுக்கிற அளவுக்கு மக்களும் தயாராகி விட்டார்கள்.






 இப்போது எல்லாமே வேறு மாதிரி இருப்பது நல்லது. ஆனால் சில நேரங்களில் அவர்கள் எல்லாம் அதிகமாக வெளிப்பட்டு நிற்கிறார்களோ என்று தோன்றுகிறது. நல்லது நடந்தால் சரி.    கொஞ்சம் கொஞ்சமாக சினிமாத்துறையின் பொது விஷயங்களிலும் உங்கள் பெயர் அடிபடுகிறது... "விஸ்வரூபம்' பிரச்னையிலிருந்தே... உங்கள் பேச்சு கவனிக்கப்படுகிறது....? என்ன ப்ளான்...?  ஆமாம், நிறைய விஷயங்கள் இருக்கு. இப்ப அது எதற்கு? பேச நிறைய விஷயம் இருக்கிறது. ஆனால் அதற்கு இது உகந்த நேரம் இல்லை. தனி மனித கோபம்தான் சில முக்கிய தீர்வுகளுக்குக் காரணமாக இருக்கும். இது அந்த விதத்தில் இருக்கலாம். எப்படியிருக்கும் என்று எனக்கே தெரியவில்லை. வரும் விநாயகர் சதுர்த்திக்கு "மதகஜராஜா' ரிலீஸ். அதற்கான வேலைகளில் இப்போது இருக்கிறேன். நேரம் வரும் பேசலாம்.    சினிமாவில் சில  நேரங்களில் காசு,  பணமெல்லாம்  பார்க்க முடியாது.  ஒரு தோல்வி வந்தால்  சென்டிமெண்டில் போட்டு தாக்கி  விடுவார்கள்.


 a





a


than = dinamani

மதகஜராஜா ( எம் ஜி ஆர் ) டைட்டில் நம்பியார் என மாறுதா? ஏன்?

1. 10 பைசா செலவோ ,கொஞ்சம் கூட அலைச்சலோ இல்லாமல் பலர் திருமண மண்டபத்திலேயே பெண் பார்க்கும் படலத்தை முடித்து விடுகிறார்கள்




-----------------------



2. பெரும்பாலான இளம் பெண்களின் சுடிதார் துப்பட்டாக்கள் ஒரு பக்கம் மட்டும் அணியப்படுகிறது.தோள் ல துண்டு மாதிரி



-------------------


3. தனி அழகு தரும் நெற்றிச்சுட்டி நகை அணியும் ப்ழக்கம் வழக்கொழிந்து வருவது வருந்தத்தக்க விஷயம்



----------------------------



4. திருமண விசேஷத்துக்கு வரும் இளம் பெண்கள் பிங்க் கலர் பட்டு சேலையும் ,30+ பெண்கள் மெரூன் கலர் சேலையும் கட்டுகிறார்கள்.




----------------------------


5. ஒரு பேங்க் லாக்கர்ல கூட இவ்ளவ் நகை இருக்காது.கல்யாண மன்டபத்துல எத்தனை டிசைன் நகைகள்?



--------------------------


6. கல்யாண மண்டபத்தில் மாப்ளைத்தோழனை விட பெண்ணின் தோழியே அதிகம் பேரால் கவனிக்கப்படுகிறார்



-------------------------


7. அத்துமீறும் ஆண்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பெண்கள் கத்தி வெச்சுக்கனும்-ஷில்பா ஷெட்டி # புத்தி உள்ள மனிதர் கத்தி வைப்பதில்லை




----------------------


8. ஒரு ஈழப்பெண்ணைத்தான்மணப்பேன் என சபதம் போட்ட சீமான் ஃபர்க்கெட்டோ மேனியா மறந்து நீ போனியா வியாதியால் கயல்விழியை இன்று மணம் முடித்தார்



-----------------------


9. ஆசாராம் பாபு வோட ஆசிரமத்துல ஆசாரம் இருக்குமா? # டவுட்டு



------------------------



10. 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், மோட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ # பச்சைத்தண்ணி தானே?



---------------------------


11. அழகிரியின் அரசியல் வாழ்க்கையா 'ஜில்லா' கதை? # அப்போ டைட்டில்ல ரவுடி சேர்க்கவும.ஜில்லா ரவுடி்



--------------------------


12. நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள பிரதமர் தயார்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு! # அப்போ சாட்சியை கலைச்ட்டாங்க போல



----------------------


13. சீனா நம் எல்லைக்குள் 640 கி.மீ. அத்துமீறி நுழைந்துள்ளது # ஊர் சுத்திப்பார்க்க வந்தாங்கனு அடிச்சு விடுங்க.எல்லாரும் நம்பிடுவாங்க



-------------------------




14.  எம்ஜிஆர்-சிவாஜி,ரஜினி-கமல் ,அஜித்-விஜய் என காலம் காலமாக ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து பகைமை பாராட்டுவது ஏனோ?


-----------------------



15. இந்தியா 1. ஊட்டச்சத்து இல்லை என்போர் 2 ஊட்ட சாப்பாடு இல்லை என்போர் 3.ஊட்ட அம்மா கை இல்லை என்போர் நிறைந்த நாடு




-----------------------


16. பேய்ப்படத்தில் ஹன்சிகா,ஆண்ட்ரியா, லட்சுமிராய்! # அய்யய்யோ , அப்போ பேய்க்கு ஜோடியா சிம்பு டிராகுலா ரோல்ல வருவாரே?


---------------------



17. சோறு கண்ட இடமே சொர்க்கம் என நினையாமல் , கண்ட இடங்களில் “சாப்பிடாமல்”வீட்டுச்சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவன் தான் சாப்பாட்டு ராமன்


-------------------------



18. நயன் தாரா வுக்குப்பிடிக்காத பாட்டு -யாரொ யாரோடி உன்னொட புருஷன்?்



-------------------------



19. சுந்தர் சி + விஷால் ன் எம் ஜி ஆர் ( மதகஜராஜா) பட டைட்டிலுக்கு எதிர்ப்பு # நம்பியார்னு மாத்திடுங்க


--------------------


20. அமெரிக்க பள்ளியில் மாணவர்களிடையே 'கேங்-வார்': மாணவன் ் கொலை, 3 பேர் காயம் # தலைவா விஷ்வா பாய் தான் இதுக்கு காரணம்னு சொல்லிடாதீங்கயா



-------------------------------