Monday, March 25, 2013

கறுப்பு கவுன் அணியும் சடங்கு இனியும் தேவைதானா?'' -நீதிபதி சந்துரு

விகடன் மேடை சந்துரு பதில்கள்!
வாசகர் கேள்விகள்...
படம்: கே.ராஜசேகரன்
உங்களுடைய மிக எளிமையான நடவடிக்கைகளை, உங்களுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவர் களிடம் உங்களுக்குக் கெட்ட பெயர்தானே மிஞ்சியிருக்கும்?''

 
''ஓய்வுபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு தீவிர அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னுடைய ஏழு வருடப் பணியில் நான் விடுப்பு எடுத்தது அந்த மூன்று வாரங்கள் மட்டுமே. மருத்துவமனையிலும் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் என்னைச் சந்தித்த நீதிபதிகள் மொத்தம் 11 பேர் மட்டுமே. அதே போல் ஓய்வுபெறும் கடைசி நாள் அன்று எனது சேம்பருக்கு வந்து வாழ்த்து சொன்னவர்கள் 10 பேர் மட்டுமே. தற்போது ஹைகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 47 என்பதை மனதில்கொள்ளவும்!''


க.ஆனந்த், சென்னை-17.


''சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?''


'' 'கல், கற்பி, கலகம் செய்...’ என்ற தாரக மந்திரத்தை பாபா சாஹேப் அம்பேத்கர் உப தேசித்தார். ஆனால், அவர் பெயரில் இயங்கும் சட்டக் கல்லூரியில், மாணவர்கள் முதல் இரண்டைத் தவிர, மூன்றாவது வார்த்தையில் மட்டுமே கவனம் செலுத்துவது வருத்தத்துக்கு உரியது.''
கி.ராஜா, புதுச்சேரி.
''மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதியாக இருந் தாலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தாலும், சட்டப் புத்தகம் ஒன்றுதான். அதை வைத்துதான் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள். ஆனால் ஏன், கீழ்க் கோர்ட்டில் ஒரு மாதிரியும் மேல் கோர்ட்டில் ஒரு மாதிரியும் தீர்ப்பு வழங்கப்படுகிறது?''


''கீழமை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை எல்லாமே நீதிமன்றங்கள்தான். ஆனால், ஒரு கீழமை நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கினால், அதைப் பரிசீலிக்கத் தான் மேல்முறையீடுகள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. எல்லாமே சமமானது என்று சொல்லி விட்டால், மேல்முறையீடுகளுக்கும் சீராய்வு மனுக்களுக்கும் தேவையில்லாமல் போய்விடும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அந்த மாநிலத்தில் உள்ள மற்ற கீழமை நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும். அதை லத்தீன் மொழியில் Stare decisis என்று சொல்வார்கள். அதாவது, அந்தத் தீர்ப்பே நிலைக்கட்டும்.
பிரான்ஸ் நாட்டு நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட முறையைப் பின்பற்றுவது இல்லை. உச்ச நீதிமன்றமே சில சமயங்களில், 'தங்களுடைய முந்தைய தீர்ப்பு சட்டப்படி சரியல்ல’ என்று சொல்லியுள்ளது. படிம நிலை அமைப்புப்படி பல மட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்படும்போது, அதில் உள்ள உச்சகட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்ட வேண்டிய சூழ்நிலை தவிர்க்க இயலா தது. உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு நீதிமன்றம் இருந்தால், அதனுடைய பல தீர்ப்புகள் தவறு என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். அதைப் பற்றி ஒரு முறை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இவ்வாறு அழகாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்...
‘Supreme Court is infalliable not because it is supreme, because it is final it is infalliable!’
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாட்டர் ஸ்டூவர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின் கட்டுப்படுத்தும் தன்மையைப் (binding nature) பற்றிச் சொல்லும்போது இவ்வாறு குறிப்பிட்டார்...
‘Our judgement oflate have been railroad tickets, good for the day and good for the trip!’  ’’
சு.நாகராஜன், பம்மல்.



 ''கறுப்பு கவுன் அணியும் சடங்கு இனியும் தேவைதானா?''
''தேவையில்லை என்பது எனது கருத்து. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டங்கள், நீதிமன்றங்களுடன் நமக்குக் கிடைத்த கொசுறுதான் இந்த கறுப்பு கோட்டும் கறுப்பு அங்கியும். 1961-ம் வருடம் வழக்கறிஞர்கள் சட்டம் (Advocates Act, 1961)  நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதில் இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் (Bar Council of India) என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. வழக்கறிஞர்களுக்கான கல்வித் தகுதி, நெறிமுறைகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை உருவாக்க, அந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒரு புதிய சீருடையை (Dress code), நமது நாட்டின் கலாசாரம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உருவாக்கத் தவறி விட்டார்கள். பழைய சம்பிரதாயத்தை மாற்ற முன்வரவில்லை. ஆனால், பின்னர் ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மற்ற கீழ்க் கோர்ட்களில் தேவை இல்லை என்றாலும் வழக்கறிஞர்கள் அந்த அங்கி அணிவதை விடத் தயார் இல்லை. அவர்களிடம் அதுபற்றிக் கேட்டபோது, 'வக்கீல் குமாஸ்தாவும் கறுப்பு கோட் போடுகிறார். அவருக்கும் நமக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா..?’ என்ற பதில் வந்தது.
வட மாநிலங்களில் கோடைக் காலம் கடுமை யாக இருப்பதால், கறுப்பு அங்கி அணிவதில்இருந்து அங்கெல்லாம் ஏப்ரல் முதல் ஜூலை வரை விதியைத் தளர்த்தியுள்ளனர். இரு வாரங்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். 'நமது பருவநிலைக்கு ஏற்ப இந்தச் சீருடையை மாற்ற வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றமும் பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இன்னொரு துணுக்குத் தகவல். இங்கிலாந்து நாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஆடை நிபுணரைக் கலந்தாலோசித்து புதிய சீருடையை நீதிபதிகள் அணிகிறார்கள். ஆனால், 'பழைய சடங்குகளை யார் கைவிட்டாலும் நாங்கள் விட மாட்டோம்’ என்ற நம்மவர்களின் போக்கு வருத்தத்தை அளிக்கிறது!''


நா.மதுமிதா, சென்னை-75.

''உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியுமா?''


''முடியாது, அரசியல் சட்டம் ஷரத்து 348-ன் படி உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஷரத்து 348 (2)ன்படி அந்த மாநில அரசு விரும்பினால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான மொழியையும் உயர் நீதிமன்றத்தில் கையாளும் நடைமுறையை அறிமுகம் செய்யலாம். அப்படி உத்தரவு வந்த பிறகும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க வேண்டும்.


தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கும் முன், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய விரும்பியது. அதற்காகக் கூட்டப்பட்ட முழு நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நான் தயார் செய்த 35 பக்கங்கள்கொண்ட குறிப்புரை சுற்றுக்கு விடப்பட்டு, விவாதிக்கப்பட்டு முழு இசைவு பெறப்பட்டது. அதன் பின்னர் அந்த வேண்டுகோள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தினாலோ, அவர் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தையும் அறிய விரும்பினார் (அரசியல் சட்டத்தில் அப்படிக் கருத்து கேட்கும்படி கூறப்படவில்லை) அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்படி தமிழ் மொழியைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த தால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும், இன்று சில நீதிபதிகள் தங்களது கோர்ட்களில் தமிழில் வாதங்களை வைக்கத் தடை விதிப்பது இல்லை!''


சு.அருளாளன், ஆரணி.


 ''நீதிபதிகள் பல நேரங்களில் தீர்ப்பு சொல்வதைவிட, கருத்துதான் சொல்கிறார்கள். ஒரு நீதிபதிக்குக் கருத்து சொல்லும் உரிமை உண்டா?''


''பல நேரங்களில் நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறார்கள். சில சந்தர்ப் பங்களில் சட்டத்தை வியாக்கியானம் செய்யும்போது, சில கருத்துகளை உதிர்க்கிறார்கள். அப்படிக் கருத்து கூறும் தருணங்களில் அது விவாதத்துக்கு உரிய பொருளாகிவிடுகிறது.


ஆந்திர மாநிலத்தில் ஒரு வழக்கு. தேர்வு எழுதும் அறைக்குள் மாணவர்கள் எந்த ஒரு குறிப்பையும் கொண்டுவரக் கூடாது என்று ஒரு விதி. அதையும் மீறி செயல்பட்ட ஒரு தேர்வாளரை அதிகாரிகள் தேர்வு எழுதும் அறையில் இருந்து வெளியேற்றினர். அவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 'நான் படிக்கும் காலத்திலும் இப்படிக் கடைசி நேரத்தில் சிறு குறிப்புகளை எடுத்துச் செல்வது நடந்தது உண்டு. 

தேர்வுக்கு முன் நினைவுபடுத்திக்கொள்ள உதவும் எண்ணத்தில் அப்படி எடுத்துச் செல்வதில் தவறு இல்லை!’ என்று தேர்வுக் குழுவின் உத்தரவுக்குத் தடைவிதித்தார். பின்னர், சுப்ரீம் கோர்ட் அந்த உத்தரவை ரத்துசெய்தது. அப்போது, 'ஒரு நீதிபதி தன்னுடைய இளமைக் காலத்தில் அல்லது மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்வுகளை முன்மாதிரி யாக வைத்து, தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட விதிகளின் அடிப்படையில்தான் வழங்க வேண்டும்’ என்று கண்டித்தது.


நான்கூட, 'பெரியார் எழுத்துகளுக்குக் காப்புரிமை கோர முடியாது. யார் வேண்டுமானாலும் அவருடைய எழுத்துகளைப் பதிப்பிக்கலாம்’ என்று தீர்ப்பு சொன்னேன். அந்தத் தீர்ப்பின் இறுதியில் 'இந்த சகோதர யுத்தத்தில் பெரியார் எழுத்துகள், வழக்குக் கோப்புகளில் சிக்கிப் புதைக்கப்படக் கூடாது’ என்று முடித்தேன். அதற்கு, வழக்குப் போட்டவர் தனது கட்சி இதழில் இவ்வாறு விமர்சனம் செய்தார்:


'நீதியரசர்கள் சட்டத்தின்படி தீர்ப்பளிக்க வேண்டும். அவர்களது மலைப் பிரசங்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை’!''


அடுத்த வாரம்

 '' 'சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்கிறேன் நான். அதாவது, அரபு நாடுகளைப் போல், 'பல்லுக்குப் பல்... கண்ணுக்குக் கண்’ என்பதுபோல். உங்களுடைய கருத்து என்ன? மெக்காலே அடிப்படையில் உருவான இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? சீர்திருத்தம் தேவையெனில், என்னென்ன செய்ய வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்?''


''பொதுவாகவே, வக்கீல்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இல்லையே... இதை எப்படி மாற்றுவது?''


 ''ஓய்வுபெற்ற பிறகு, சில நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் சேர்கின்றனர். அனைவருக்கும் பொதுவாக நீதி வழங்கிய ஒருவர், இப்படி ஒரு கட்சியில் போய்ச் சேர்ந்தால், அவர் பணியாற்றிய காலத்தில் வழங்கிய தீர்ப்புகள் குறித்துச் சந்தேகங்கள் எழாதா? அதோடு, எதிர் காலத்தில் உங்களுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?''


- இன்னும் பேசுவோம்...

thanx - vikatan

2013 மாணவர் புரட்சி! - 456

2013 மாணவர் புரட்சி!





a

thanx - ju vi 


readers view

1.இது தமிழ் நாட்டில் காங்கிரஸை ஒழிக்கும் போராட்டமாக மாறியே ஆக வேண்டிய நிலைமை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் ஒரு சரியான தலைமைக்குழுவை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 1948 முதல் இன்று வரை சிங்களர்கள் செய்த அத்தனை கொடுமைகளையும், அதற்கு துணை போனவர்கள் பற்றிய செய்திகளையும் தொகுத்து ஒரு கையேடாக ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் பதிப்பித்து அவற்றை நாடெங்கும் உள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

மக்களுக்கு இந்த பிரச்சனை பற்றிய முழு விபரமும் தெரிந்தால் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்வோர் இதை சரியாக கையாள்வார்கள். இல்லையெனில் இது இத்தாலிய சமாச்சாரமாகவே இருக்கும்.


2. நான் பள்ளிகூடம் படிக்கும்போது ஜெயவர்த்தனேவை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றது நினைவில் நிழலாடுகிறது... மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்... அதே நேரத்தில் படிப்பிலும் கவனமாக இருங்கள்... ஏனெனில் படிப்பும் முக்கியமாச்சே...



3 நன்றி..நன்றி...நன்றி..கொடுமையாய் மாண்டுபோன அந்த அப்பாவி சனங்களின் சார்ப்பில் என் நன்றிகள் !! கோரமான மரணத்தை ...வலியை செய்த ....செய்ததையதுக்கு உதவி செய்த எல்லா ************* தண்டனை ...எதாவது கிடைக்க வேணும். அப்பவாது அந்த அப்பாவிகளின் ஆத்மா கொஞ்சமாவது ஆறுதல் அடையும். நடை பிணமாய் அந்த வலியுடன் வாழும் மிச்சமான உயிர்களுக்கும் ஒரு சின்ன ஆறுதல். நினைத்து பார்க்க முடியாத ...தாங்க முடியாத ..தினம் தினம் ..நெஞ்சு வலியோடு நாம் வாழும் வாழ்வு. எமக்கே அப்படி என்றால் ..அதை அனுபவித்தவர்கள் எப்படி வாழ்வார்கள் ? 21 centure ல் இதை செய்துவிட்டு ......ஒ ..சொல்ல வார்த்தை வருகுது இல்லை.



4. ஜெயா செய்த நல்ல காரியம் எதுவெனில், கல்லூரியின் முன்பு மட்டும் புரட்சி செய்த கல்லூரி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியதால், வீதியெங்கும், ஊரெங்கும், மாவட்டம்தோறும், மாநிலம் எங்கும் எழுச்சியின் முழக்கம். விடாதீர்கள், விடுதலை, நீதி கிடைக்கும் வரை.

Sunday, March 24, 2013

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்! ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்!

ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

ஏமாற்றங்களை எல்லாம் கடந்து, 25 நாடுகளின் ஆதரவோடும் 13 நாடுகளின் எதிர்ப்போடும் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டது. இதுவரை ஈழத்தமிழன் அழிவுக்கு எதிரான குரல், இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமே கேட்டது. அந்தக் குரலுக்கு உலகளாவிய அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது.  
 
 
2012-ம் ஆண்டு மார்ச் மாதத் தீர்மானத்துக்கும் இப்போதைய தீர்மானத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லைதான். அதேபோல் மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஓர் ஆண்டு அவகாசத்தில் இலங்கையின் கள நிலைமையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.


வாக்கெடுக்கும் முன் விவாதங்கள் 


அனைத்து தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாள் மார்ச் 21. அன்றைய தினம் இந்திய நேரம் மதியம் 2 மணிக்கு இறுதி விவாதம் நடந்தது. இலங்கையை பச்சையாக ஆதரித்தது பாகிஸ்தான். ''இலங்கைக்கு இன்னும் அவகாசம் தேவை. அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது முறையானதல்ல. தீவிரவாதத்தை ஒழிக்கும் போரில் வென்றுள்ள இலங்கையைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்க்கக் கூடாது’ என்று இலங்கையை அவர்கள் ஆதரிக்க, அடுத்து இந்தியா பேசியது.


தொடக்கத்திலேயே ஒலிவாங்கியின் இடர்பாடோடு தொடங்கிய இந்தியாவின் பேச்சு, ''13வது  அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல், 'கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கப் பரிந்துரைகள்’ (எல்.எல்.ஆர்.சி.) அடிப்படையில் முன்னேற்றப் பணிகள், தமிழர் வாழ்நிலங்களில் பாதுகாப்புப் படையைக் குறைத்தல், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திர விசாரணை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கு வசதியை ஏற்படுத்துதல் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். 


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்​கிறோம். போர் முடிந்திருக்கும் இந்தத் தருணத்தை சமாதானத்துக்கான காலமாகப் பார்க்கிறோம்'' என்று, இந்தியா சார்பில் பேசியவர் கவனமாக இலங்கையைக் குற்றம் சாட்டிவிடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ''இலங்கை நம்முடன் நெருங்கிய உறவில் இருக்கிறது. அதனால் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் எப்போதும் இந்தியா கவனம் செலுத்தும்'' என்றும் கவனத்துடன் முடித்தார்.


அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ள ஒரு வரியைக்கூட இலங்கை ஏற்றுக்கொள்ள​வில்லை. ''அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் நாங்கள் செய்த மறுவாழ்வுப் பணிகளை அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று இலங்கைப் பிரதிநிதி பேசினார்.
இறுதியில் வாக்கெடுப்பு நடந்தது. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெற வைத்தன. இந்தியாவும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


நாங்கள் பாடம் புகட்டுவோம்! 


ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைப் பிரச்னைகள் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. மனித உரிமைப் பிரச்னைகளை எடுத்துக்கூறும் அமைப்புகளின் மீதும் ஐ.நா-வின் பிரதிநிதிகளின் மீதும் இலங்கை அரசு, மிகச்சுலபமாகப் புலிப்பட்டம் கட்டி புறக்கணிக்க முயற்சி செய்கிறது. புலிப் பட்டம் கட்டும் காட்டத்தை இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி மகிந்த சமரசிங்க ஜெனிவாவிலேயே வெளிப்படுத்தினார்.


 அவர், ''ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவில் செயல்படுகிறது. ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளையும் அந்த ஆதரவில்தான் செயல்படுகிறார்'' என்று ஆதாரமில்லாமல் ஆவேசப்பட்டார்.


மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட்ட 'நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ என்ற 144 பக்க அறிக்கையில், இலங்கையைத் தோலுரித்துக் காட்டியது. இந்த அறிக்கையில், 2006-2012 வரை பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட 75 பேரின் ஆதாரப்பூர்வ வாக்குமூலங்கள் வெளியிட்டு இருந்தது. 


இதுபற்றி கருத்துக் கூறிய அந்தக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிராட் ஏடம்ஸ், ''இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சிறையில் பல தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திச் சித்ரவதை செய்துள்ளனர். இவை யுத்தகாலத்தில் மட்டும் நிகழ்ந்த அட்டூழியங்கள் அல்ல. இப்போதும் அந்த அட்டூழியங்கள் தொடர்கின்றன. புலிகளோடு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் தமிழர்கள் கடும் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்''என்றார்.


ஆனால், இலங்கையோ இதை முழுமையாக மறுத்தது. இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை பிரச்னைகள் பேசப்பட்டாலும் இலங்கைக்கு தண்டனை என்பதே இல்லை. ஏன் என்றால் சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா-வினாலோ இலங்கையை தண்டிக்கவே முடியாது. காரணம், இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்துக்கான விசாரணை விதிமுறைகளுக்கு இணங்கி இன்றுவரை கையெழுத்திடவில்லை.


அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானம் 


இலங்கையை தன் வசத்துக்குள் கொண்டுவர துடித்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இத்தனை நாட்களாக 'ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச விசாரணை’ என்று பொய்யாக மிரட்டுகிறது. இப்போது அதை விலக்கிக்கொண்டு ஒரு வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஐ.நா-வில் சமர்ப்பித்தது. இலங்கையில் தமிழர் வாழ் நிலங்களில் ராணுவத்தை உடனே விலக்க வேண்டும், போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.

.. இவ்வாறு அந்த தீர்மானம் இருக்கிறது. இலங்கை மீதான நடவடிக்கைகள் பேசப்பட்ட காலத்திலிருந்தே இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர்க் குற்றம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா தனது தீர்மானங்களை முன்வைத்தது. இனப்படுகொலை என்று குறிப்பிடப்படவில்லையே என்று கேள்விகள் எழுந்தபோது 'போர்க் குற்றத்தின் மீதான சுதந்திர விசாரணை’ நடக்குமானால் அதிலே 'இனப்படுகொலை’ என்பது சேர்க்கப்படும் என்று ஏமாற்றி, இப்போது அந்த 'சுதந்திர விசாரணை’ என்ற பேச்சையே விலக்கிக் கொண்டது.


சுப்பிரமணியன் சுவாமியின் வேலை! 


இப்படி இந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கு, இலங்கையை காப்பாற்றும் முடிவில் இந்தியா உறுதியாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்குப் பின்னால் சுப்பிரமணியன் சுவாமியின் பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி, மகிந்த ராஜபக்ஷேவை சந்தித்த சுவாமி, அடுத்த நான்காவது நாளிலேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் என்றால் அது இலங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் செயல்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 


'மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த விசாரணையாக இருந்தாலும், அது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசால்தான் நடத்தப்பட வேண்டும். ஒருபோதும் சர்வதேச பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்பதே சு.சுவாமி அமெரிக்க அதிகாரிகளிடமும் ஒபாமாவிடமும் தெரிவித்த கருத்தின் சுருக்கம். இதையேதான் அமெரிக்காவும் தன் தீர்மானத்தில் கூறி இருக்கிறது. எப்படி இருந்தாலும் தமிழர் பிரச்னையை உலக நாடுகளின் விவாதப் பொருளாக மாற்றிவிட்டது இந்தத் தீர்மானம்!


- மகா.தமிழ்ப்பிரபாகரன்

thanx - ju vi

சமந்தா - சித்தார்த்! புது காதல் ஜோடி

க.ராஜீவ் காந்தி

ரகசியம்... சமந்தா லவ் பண்றா!'' - கடந்த மாதம் விகடன் பேட்டியில் சின்ன லீட் கொடுத்திருந்தார் சமந்தா. கடந்த வாரம் காளஹஸ்தி கோயிலில் 'பாய்ஸ்’ சித்தார்த்துடன் இணைந்து சர்ப்ப நிவாரண தோஷ பூஜை செய்து சென்றிருக்கிறார் சமந்தா. தன் காதலன் யார் என்று சொல்லாதவர், இப்போது அது 'பாய்ஸ்’ சித்தார்த் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சமந்தா - சித்தார்த் காதல் கதை என்ன?
 சென்னைப் பசங்க!
கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படமான 'ஜபர்தஸ்த்’தில்தான், சித்தார்த்துடன் ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே இருவருக்கும் அறிமுகம் உண்டு. காரணம்... சென்னை! இருவரும் சென்னைவாசிகள். சமந்தா, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்தவர். சித்தார்த், தேவ் பாய்ஸ் பள்ளியில் படித்தவர். சமந்தா மாடலாக இருக்கும்போதே, சித்தார்த்துடன்  அறிமுகமாகிவிட்டார். ஆனாலும், நெருக்கமான நட்பு வளர்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான். அதுவும் சரும பாதிப்பால் சமந்தா பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த சமயம், அவருக்கு ஆறுதலும் தேறுதலுமாக இருந்தது சித்தார்த்.
சூர்யா - ஜோதிகா ஃபார்முலா!
சித்தார்த் - சமந்தா ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 'ஜபர்தஸ்த்’ படம் மாஸ் ஹிட். படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி, சமந்தாவின் நெருங்கிய தோழி. 'ஜபர்தஸ்த் நல்ல ரொமான்டிக் காமெடி. இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்!’ என்று புராஜெக்ட்டுக்குள் சித்தார்த்தை இழுத்தது சமந்தாவின் சிபாரிசுதான். 'காக்க காக்க’ படத்தில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிகா சிபாரிசு செய்தது நினைவுக்கு வருகிறதா? இத்தனைக்கும் மிக மென்மையான காதல் கதை ஒன்றைத்தான் முதலில் நந்தினி படமாக இயக்குவதாக இருந்தது. ஆனால், 'இப்படியான சாஃப்ட் ரொமான்டிக் கேரக்டரில் சித்து ஏகப்பட்ட படங்கள் நடித்துவிட்டார். ஒரு சேஞ்சுக்கு காமெடி ட்ரை பண்ணலாம். சித்துவின் எனர்ஜிக்குக் காமெடி சூப்பரா செட் ஆகும்!’ என்று கதையைத் திசை திருப்பியதும் சமந்தாவேதானாம். படம் ஹிட் அடித்து, 'ராசி ஜோடி’ அந்தஸ்துடன் இருக்கும் சமயம், தங்கள் காதல் தகவல் வெளியாக வேண்டும் என்ற சமந்தாவின் வேண்டுதல் ப்ளஸ் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது!
பிடிவாத சமந்தா!  
சமந்தாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடம் ஏகப்பட்ட எதிர்ப்பு. சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர், சோஹா அலிகான், ப்ரியா ஆனந்த், ஸ்ருதி என ஏராளமாகக் கிசுகிசுக்கப்பட்டவர் என எதிர்ப்புக்கான காரணங்களை அடுக்கியிருக்கின்றனர்.
ஆனால், சமந்தா தன் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். 'சித்துவை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்தான் என் கணவர் என்பதில் நான் பிடிவாதமாக இருக்கிறேன்!’ என்று விடாப்பிடியாக நின்று தன் பெற்றோரின் சம்மதம் பெற்றிருக்கிறார்.
நாக தோஷ நிவர்த்தி!
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலின் விசேஷம் நாம் அனைவரும் அறிந்ததுதான். தங்கள் திருமணத்தில் ஜாதகரீதியான தோஷங்களைத் தவிர்க்க தம்பதியாக காளஹஸ்திக்கு வந்து சர்ப்ப நிவாரண தோஷ பூஜை செய்தால், திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம். கங்குலி-நக்மா, பிரபுதேவா-நயன்தாரா போன்ற சர்ச்சைக் 'காதலர்கள்’கூட காளஹஸ்திக்கு வந்து சென்றதன் அவசியம் இதுதான். இப்போது அதே காரணம்தான் சித்தார்த் - சமந்தாவின் வருகைக்குக் காரணம் என்கிறார்கள் இரு தரப்பையும் சேர்ந்த நண்பர்கள்.  
சித்தார்த் - சமந்தா தங்கள் குடும்பத்தினரோடு வந்து பூஜை செய்த விவரங்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் கோயிலின் நிர்வாக அதிகாரி ஒருவர். ''சித்தார்த், சமந்தா இருவரது குடும்பத்தினருமே ஒட்டுமொத்த தரிசன டிக்கெட்டுகளையும் புக் செய்துவிட்டனர். காலை 10 மணிக்குக் கோயிலுக்கு வந்த அவர்கள் கோயிலின் ஓய்வு விடுதியில் ரெஃப்ரெஷ் செய்து கொண்டு, தோஷ பூஜையில் கலந்துகொண்டனர். பூஜைக்காக சித்தார்த்தின் அப்பா சூர்யநாராயணா விரதம் இருந்து வந்திருந்தார். சித்தார்த் தின் ஜாதக அமைப்புக்கு இந்த தோஷ பூஜை அவசியம் என்று சமந்தா குடும்ப ஜோதிடர் சொல்லியிருந்தாராம். அதனாலேயே இந்த வருகை!'' என்றிருக்கிறார்.
பிரபலங்களின் காதல் இலக்கணம் என்ன? அதை மறுப்பதுதானே..! இப்போது இருதரப்பும் மறுப்பு அறிக்கைகளில் பிஸி. அடுத்து என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா என்ன? 

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்- தமயந்தி - சிறுகதை

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்
சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ''இப்படி மெலிஞ்சிட்டியே ஜெனி... சாப்பிடுதியா, இல்லியா?'' என்றாள்.  


 அறையில் என்னோடு தங்கியிருந்த சத்யா, போர்வையை விலக்கிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
''எத்தன பேரு இங்ஙன இருக்கியல?''
ஊருக்குப் போய் எட்டு மாசம் இருக்கும். சித்தி பேசும்போது ரத வீதியில் ஈரத் தரையில் நடந்து போவது மாதிரியே இருந்தது எனக்கு.
''மூணு பேரு சித்தி. ஒரு பொண்ணு ஊருக்குப் போயிருக்கு.''
''யாரும் நம்ம ஊரு இல்லியால?''
''இல்ல சித்தி. காப்பி குடிப்பமா?''
''டீக்கட இருக்கா மோளே?'' எனக்கு வாய்க்குள்ளேயே சிரிப்பு வந்தது. ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கோயிலுக்குப் போய்விட்டு, கதை பேசிக்கொண்டே நடந்துவந்து டீக்கடையில் இஞ்சி டீ குடிக்கிற எங்களை ஊரேவேடிக்கை பார்க்கும். சித்திக்கு எப்போதும் ஞாயிற்றுக்கிழமை என்றால், ரொம்பவும் ஸ்பெஷல்தான். அன்று முழுக்க சித்தப்பாதான் சமையல் எல்லாம். பெரும்பாலும் கோழி பிரியாணிதான் சித்தப்பா செய்வார். சாயங்காலத்தில் அந்த வாரம் பாலஸ் டி வேலஸ் தியேட்டர்ல என்ன படமோ, அந்தப் படத்துக்குப் போவோம்.
இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. அந்த தியேட்டரில் சித்தியுடன் 'மௌன ராகம்’ படம் பார்த்தது மனசுக்குள் ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் பக்கத்துத் தெருபிரசாந்த் என் பின்னாடியே தொடர்ந்து வந்த காலம் அது. 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ...’ என்று ரீவைண்ட் செய்து செய்து பாட்டுப் போட்டுக்கொண்டே இருப்பான். அந்தப் பாட்டுக்காகவே க்ருபா சித்தியைக் கூட்டிக்கொண்டுபோய் 'மௌன ராகம்’ படம் பார்த்தேன்.
'நீ கிறிஸ்டியன் ஜெனி. நான் இந்து. அதுக் காகவா வேணாம்கிறே?’ என்று பிரசாந்த் அன்றைக்கு ஒரு நாள் கேட்ட கேள்வி மனசுக்குள் எட்டிப்பார்த்தது. முதன்முதலாக க்ருபா சித்தியிடம் தயங்கித் தயங்கி இதுபற்றிச் சொன்னபோது, ''அதனால என்னலே? இதெல்லாம் இயற்கைதான. நான்கூட எபநேசர் மாமாவை லவ் பண்ணேன். உங்க ஆத்தாகாரிதான் எங்க அய்யாக்கிட்டப் போட்டுக்குடுத்துட்டா...'' என்று சொல்லிச் சிரித்தாள்.
 
அன்றைக்கு ராத்திரி முழுக்கவும் சித்தி 'பால் போலவே... வான் மீதிலே... யார் காணவே நீ போகிறாய்...?’ என்று பாடிக்கொண்டே இருந்தாள். பின்னொரு நாளில் நானும் 'மன்றம் வந்த தென்றலுக்கு...’ என யாரிடமாவது பாட நேருமோ என்று சட்டெனத் தோன்ற, ''ச்சும்மா இரு சித்தி...'' என்றேன்.
''நானெல்லாம் படம் எடுத்தா,பொம்பளப்புள்ளைங்களும் லவ் பண்ணும்னு எடுப்பேன் மோளே!'' என்றாள். எனக்குப் புரை ஏறிக்கொண்டு சிரிப்புதான் வந்தது.
''ரெண்டு டீ...''  சித்தியே சொன்னாள். டீக் கடையின் முன்னால் போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தாள் சித்தி.
''அம்மா போன் போட்டாளால..?''
சித்தியின் குரலில் சின்ன ஏக்கம் இருந்தது.
''இல்ல சித்தி... உங்கிட்டப் பேசல?''
கடந்துபோன பேருந்துகளை வெறித்தபடியே இருந்தாள் சித்தி. டீக்கடைக்காரர் டீயைக் கொடுத்ததும் உள்ளங்கைக்குள் டீ தம்ளரை இறுக்கிக்கொண்டாள்.
''அம்மை சொல்லி நீ வரலயா சித்தி?'' என்றேன்.
'இல்லை’ எனத் தலையசைத்தாள். அசப்பில் சித்தி செய்யும் எல்லா விஷயங்களும் வாணிஸ்ரீ மாதிரியே இருக்கும். 'வசந்த மாளிகை’ படத்துக்கு முதல் ஷோவுக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தாள். அந்த வார ஞாயிற்றுக்கிழமை குறுக்குத் துறையில் துணி எல்லாம் துவைத்து, நடு ஆற்றில் ஈரத்தோடு நின்று... பழைய சோறுடன் குதிப்பு மீன் தலைக் குழம்புமாக நின்றவள், 'யாருக்காக..?’ என்று சால்வையைப் போத்திக்கொண்டு, மீன் தலையை வாயில் வைத்து உறிந்தது, சட்டென ஞாபகத்தில் மிதந்தது.
''இல்லலே... 'அம்மைக்கும் ஒனக்கும் சண்டை. உன்னைப் போய் அம்மைப் பாக்கச் சொல்லுச்சு’னு தன்ராஜ் மாமன்தான் சொன்னான்.. நீ...ங்கிறனால வந்தேன். இல்லன்னா...'' என்று இழுத்தவள் சற்றுப் பேச்சை நிறுத்தி டீயைச் சர்ரென உறிஞ்சினாள். பிறகு, அவளே தொடர்ந்தாள்.
''தன்ராஜ் மாமனுக்கு மீசைல்லாம் நரைச்சிருச்சு ஜெனி...'' என்று தம்ளரை வாயில் இருந்து எடுக்காமல், க்ளுக் எனச் சிரித்தாள். கல்கண்டு மிட்டாய் கிடைக்கும் என்று  தன்ராஜ் மாமனின் காதல் தூதாக, தான் லெட்டர் கொண்டுபோய்க் கொடுத்ததாகச் சித்தி சொல்லியிருக்கிறாள். பிறகு, தன்ராஜ் மாமன் ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறிப்போய்... காதலை எல்லாம் மறந்துபோனதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
'உன் சோஷியல் சர்வீஸ்லாம் வேஸ்ட் ஆயிடுச்சு சித்தி’ என்று பேசிக்கொண்டு இருக்கிற ஒருநாளின் நடுப்பகலில் தன்ராஜ் மாமா வந்ததுகூடத் தெரியாமல் சிரித்திருக்கிறோம். மாமா எதுவுமே பேசவில்லை. கண்களை மூடி முக்கு நார் கட்டிலில் தூங்குகிற மாதிரி படுத்து இருந்தார். அவருடைய கன்னத்து மேட்டில் கண்ணீர் பிசுபிசுப்பாக இறங்கியிருந்தது. ஆனால், தன்ராஜ் மாமா கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை. பாதி நாள் கட்சி, கூட்டம் என்று எங்கேயாவாது போய்விடுவார். பெரிய அம்மாச்சி இறந்த பிறகு தாழையூத்து அம்மாச்சி வீட்டில் தங்கியிருந்தார் மாமா. என்றைக்காவது ஒரு நாள் அவரிடம் அவர் காதலைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. போன தடவை குற்றாலத்தில் குளித்துவிட்டுக் குடும்பமாக செங்கோட்டை பார்டர் கடையில்பரோட்டா சாப்பிட வேனில் போனபோது, தன்ராஜ் மாமா கடைசி சீட்டில் என் அருகில்தான் அமர்ந்திருந்தார்.
''மாமா இப்ப கூட்டத்துக்கெல்லாம் போறீயளா?'' என்று கேட்டேன்.
''போறேன்மா... எங்க? இப்ப கட்சி முடிவு எதுலயும் எனக்கு உடன்பாடு இல்ல. கூடங்குளப் போராட்டத்துல கலந்துக்கிட்டேன்னு அவங்களும் என்னை நிர்வாகப் பதவிலேர்ந்து தூக்கிட்டாங்க...''
''பேசாம நீங்க கல்யாணம் பண்ணிருக்கலாம் மாமா...'' என்றேன். மாமா அமைதியாக அந்த இருட்டுக்குள்ளும் என்னை உற்றுப் பார்த்தார். ரொம்ப நேரம் கழித்து, ''பண்ணிருக்கணும்...'' என்றார் பெருமூச்சுவிட்டபடி. உடன் கண்களை இறுக மூடிக்கொண்டார். அதன் பிறகு மாமா எதுவுமே பேசவில்லை. க்ருபா சித்தி வந்திருந்தால், மாமாவை வற்புறுத்திச் சாப்பிட வைத்திருப்பாள். அம்மாவுக்கும் சித்திக்கும் பிரசாந்த் விஷயத்தில் சண்டை வந்து, பேச்சே நின்றுவிட்டது. இல்லை என்றால் சென்னையில் வேலைக்கு வந்து கம்பெனியில் என்னுடன் வேலை பார்க்கும் சிவகுமாரைக் காதலிப்பதை, சித்தியிடம்தான் முதலில் சொல்லியிருப்பேன்.
வேனை விட்டுக் கீழே இறங்காமல் நானும் மாமாவிடம், ''மாமா நான் ஒரு விஷயம் சொல்லணும். என்கூட வேலைபாக்குற ஒருத்தரை நான் விரும்புறேன். அம்மைட்ட சொன்னாக்கத்தி ரகளை பண்ணிடுவா...'' என்றேன்.
அவர் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ''பையன் பேரு என்ன?'' என்றார்.
''சிவகுமார்...''
''இந்துவா..?''
''மாமா நீங்க ஒரு கம்யூனிஸ்ட்...'' என்றேன்.
மாமா ஒன்றுமே பேசவில்லை. இரண்டு நாள் அம்மையிடமும் அவர் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. ஊருக்குக் கிளம்புகிற அன்றைக்கு பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதுதான் அம்மா லபோதிபோ என்று கத்தினாள்.
''என்னடி சொன்ன தன்ராஜ்கிட்ட? குடும்ப மானத்த நெனச்சியா... பாவி மவளே...'' முடியை இழுத்துச் சுவரில் முட்டினாள்.
''அவனவவன் நல்லாப் பழகிட்டு அம்போன்னு வுட்டுட்டுப் போறான். அப்படி நடந்தா என்னடி பண்ணுவே?''
''அப்ப நீ சொல்றவனக் கட்டிக்கிறேன்.''
''ஆமாமா... ஊர் மேஞ்ச நாயைக் கட்டிக்கக் காத்திருப்பானுங்க...''
''என்ன மாதிரியே ஊர் மேஞ்ச ஒருத்தனை நானே தேடிக் கட்டிக்கிறேன்...  புரிஞ்சிக்கம்மா. நீயேல்லாம் வயசுல லவ்வே பண்ணலைனு மனசைத் தொட்டுச் சொல்லு.''
''கேள்வி கேக்குறா பாரு...  இனிமே, மெட்ராஸுக்குப் போ... உன் காலை ஒடைக்கேன்.''
அவள் சொன்னதைப் போலவே சென்னைக்குப் போகக் கூடாது என்று அப்பாவும் சொல்லிவிட்டார். நான் தன்ராஜ் மாமாவுக்கு போன் செய்து, ''மாமா என்னை வந்து பஸ் ஏத்திவிட்டுருங்க...'' என்றேன். கருக்கல் சமயம் மாமா வந்ததும் அம்மா ஓவென அழுதாள்.
''அவ போனா... திரும்ப இந்த வீட்டுக்கு வரக் கூடாது. ஆனா ஒண்ணு, அவ நல்லாவே இருக்க மாட்டா... நாசமாப் போவா...''
தன்ராஜ் மாமா ஏதோ சொல்ல வாயெடுத்தவர் பின்னர் அமைதியானார். என் பையை வாங்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக அவரால் எப்படி நடக்க முடிகிறது என்றே தெரியவில்லை. புது பஸ் ஸ்டாண்டில் ஒரு கடையில் பரோட்டாவும் சால்னாவும் வாங்கிக் கொடுத்தார்.
''பொம்பளைங்க லவ் பண்ண மாட் டாங்கன்னும், லவ் பண்ணாத பொம்பளைலாம் நல்லப் பொம்பளைனும் பொதுவா எல்லாருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கு. நீ தப்பு பண்ணல புள்ள. தைரியமா இரு...'' என்றார் பரோட்டாவைப் பிய்த்தபடியே.
''ஆம்லெட் சொல்லட்டடா?''
''வேணாம் மாமா.''
பஸ் ஏற்றிவிட்டு கையில் நூறு ரூபாய் கொடுத்தார். 'வேணாம் மாமா’ என்றோ, 'இருக்கட்டும் மாமா’ என்றோ நான் சொல்லவில்லை. அவர் உள்ளங்கையின் ஈரம் ரொம்பப் பிடித்திருந்தது. ரூபாயோடு அவர் கையையும் பற்றிக்கொண்டேன். அப்போது அந்த நிமிஷம் க்ருபா சித்தியின் ஞாபகம் வந்தது. 'பால் போலவே... வான் மீதிலே...’ என்று அவள் பாடும் குரல் எதிர் மோதும் காற்றெங்கும் கலந்து இருப்பதுபோல் இருந்தது.
இந்தச் சம்பவங்களை எல்லாம் சித்தியிடம் சொன்னபோது டீ தம்ளரைக் கீழேவைத்துவிட்டுச் சித்தி விடாமல் சிரித்தாள்.
''இன்னும் மறக்கலயாலே நீ அந்தப் பாட்டை...''
''எப்படி சித்தி முடியும்?'' என்றேன்.
சித்தி திடீரென அமைதியானது போலிருந்தது. சித்தப்பா இறந்த பிறகு மிக மெல்லிசாக மாறிப் போயிருந் தாள். ஒரே மகன். காஷ்மீர் பக்கம் ஆர்மியில் இருக்கிறான். இப்போது சித்தி வாணிஸ்ரீ மாதிரி இல்லை என்று தோன்றிற்று. பேச்சை மாற்ற விரும்பி ''நேத்து டி.வி-யில 'வசந்த மாளிகை’ பார்த்தேன் சித்தி, ஸ்ரீவைகுண்டத்துல மாட்டு வண்டியில என்னைக் கூட்டிட்டுப் போனியே...''
''ஆமால்ல...'' என்றவள் சிரிக்க முயற்சித்தாள்.
வீட்டுக்கு வந்து குளித்து இட்லியை மிளகாய்ப் பொடி வைத்துச் சாப்பிட்டுவிட்டு, ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
''தூங்குறியா சித்தி?''
''இல்லல்லே...   நீ ஆபீஸுக்குப் போகணுமா?''
''லீவ் போடவா?''
''நானும் கூட வந்தா அந்தப் பையனைப் பாக்க லாம்ல?''
''உன்ன எங்கம்மை அவனை மறக்கவைக்க இங்க அனுப்பி இருக்கு சித்தி. நீ ஆபரேஷன் ஜெனியோட குறிக்கோளை மறக்காத...'' என்று நான் சொன்னபோது சித்தி சிரித்தாள்.
''எல்லாம் மாறிடுச்சு. உங்கம்மை மட்டும் இன்னும் மாறவே இல்ல. சண்டை போட்டாலும் உன்கிட்டப் பேச என்னத்தான் நம்புறா. மக்குப் பொம்பள. அவளுக்கு சாதிதான் முக்கியம். நம்ம ஜனங்களுக்கு பொம்பளக்  காதலிச்சிரக் கூடாதாம். பொட்டை ஜென்மமா எவனுக்கோ தொவைச்சுப் போட்டு... சமைச்சுப்போட்டுப் புள்ளப் பெத்துக் கொடுக்கணும்.''
சித்திக்குக் கண்ணோரம் நீர் துளிர்த்தது. மிக மெல்லிய ஒரு நிழல் கோடாகச் சித்தி மாறியது போல் இருந்தது. ''நீ நல்லாருக்கணும்  கண்ணு...'' என்றவள், என்னை இறுகக் கட்டித் தழுவிக்கொண்டாள். அவள் உடல் தளர்ந்து இருந்தது. எனினும் சிறுத்துப்போன ஒரு பறவையின் இதம் அதில் ஒளிந்திருந்தது.
''பேசாம என்கூடவே வந்துடுறியா சித்தி? இங்கயே இருந்துடேன். தெனம் ஒரு வாணிஸ்ரீ படம் டி.வி.டி வாங்கித் தாரேன்...''
''கேக்க நல்லாத்தான்இருக்கு'' என்றாள் புன்னகை நெளிய.
மத்தியானம் சமைத்துவிட்டு தெருமுக்கில் இருந்த டி.வி.டி. கடைக்குப் போய் 'ரோஜாவின் ராஜா’ வாங்கி வந்தேன். பக்கத்து ஃபலூடா ஸ்டாலில் சித்திக்கு ஒரு ஃபலூடாவும் எனக்கு ஒரு ஜிகர்தண்டாவும் வாங்கிக்கொண்டேன். சித்தி வீட்டில் தூங்கினபடி இருந்தாள். எழுப்பி சாப்பாடு வைத்துச் சாப்பிடச் சொன்னேன். லேப் டாப்பில் படம் போட்டேன். வயது குறைந்த உற்சாகத்தோடு அவள் படம் பார்த்துக்கொண்டு இருக்க, அவளுக்கு ஃபலூடாவும் எனக்கு ஜிகர் தண்டாவும் குவளைகளில் எடுத்து வந்து கொடுத்தேன்.
''இதென்னலே சேமியாவும் ஐஸ்க்ரீமும்...'' என்றாள்.
''ஃபலூடா சித்தி... சாப்பிட்டுப் பாரேன்'' என்றேன்.
வசதியாகத் தொடையில் ஒரு தலையணை போட்டுக்கொண்டாள். ரெண்டு வாய் ஃபலூடா சாப்பிட்டுவிட்டு,  ''நல்லாருக்குலே. நம்ம தேர் திருவிழாவுல சேமியா ஐஸ்க்ரீம் விப்பாம்ல... அத மாதிரி இருக்கு'' என்றாள்.
சிவாஜி ஏவி.எம்.ராஜனோடு பெண் பார்க்க வந்திருக்க, வாணிஸ்ரீ 'ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்திருந்தான்... ராஜா ராமன் நினைத்திருந்தான்...’ என்று பாடிக் கொண்டு இருந்தார்.
சித்தி என் தொடையைத் தட்டி ''எபநேசருக்கு வாணிஸ்ரீனா ரொம்பப் புடிக்கும்...'' என்றாள்.அவள் குரல் மிகவும் கீழ்ஸ்தாயியில் இருந்தது. கையில் இருந்தக் குவளையை நடுக்கத்தோடு கீழேவைத்தாள்.
அதன் பிறகு ஃபலூடாவை சித்தி சாப்பிடவே இல்லை!

நன்றி - விகடன்

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்

ஹீரோ ஷேர் ஆட்டோ டிரைவர் . ரெகுலர் கஸ்டமாரான அதாவது அப்படி இவராப்பார்த்து வலியனாப்போய் ஆக்கிக்கிட்ட ஹீரோயினோட  ஒன் சைடு லவ். இது ஒரு டிராக் . இவரை 3 வெவ்வேற ஆட்கள் வேறு வேறு காரணத்துக்காக துரத்தறாங்க , சும்மா இல்லை , அவரை கொலை செய்ய . அந்த அளவுக்கு அவர் என்ன செஞ்சார்?  என்பதை நான் லீனியர் ஸ்க்ரீன்ப்ளே மெத்தேடில் முடிஞ்ச வரை சுவராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்


 இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தம்பி  திலீபன் தான் ஹீரோ , ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா  ஹைட்டா இருந்தாலும் முக பாவனைகள் , காதல் , ஆக்ரோஷம் சோகம் சுத்தமா வர்லை , ஸ்டண்ட் மாஸ்டர் தயவில் நல்லா ஃபைட் போடறார்.  மற்ற படி தம்பி  நீ இன்னும் கத்துக்கனும் . 


 ஹீரோயின்  நம்ம அஞ்சலி. அங்காடித்தெரு அஞ்சலிக்கும்  , வத்திக்குச்சி அஞ்சலிக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் , இன்னும் 2 வருஷம் போனா நமீதாவைத்தோற்கடிக்கும் 10 வித்தியாசம் ஆகி விட வாய்ப்பு இருக்கு, கபர் தார் (அ தெரு அஞ்சலி =  32 ,  வ கு  அஞ்சலி = 36 ,  இன்னும் 2 வருஷத்துல = 42). என்னதான் இருந்தாலும் அஞ்சலிக்கு கன்னம் 2ம் உப்பி இருக்கே அடடா என்ன அழகு ( கன்னம் மட்டும் தான்யா ) அவர் ஹீரோவை லவ்வினாலும் அதை வெளிக்காட்டாமல் பம்முவது , மிரட்டுவது , குழைவது என பிரமாதப்படுத்துகிறார். லவ்வர் உள்ளவங்க எல்லாம் அஞ்சலி மாதிரி லவ்வர் இல்லையே எனவும், லவ்வர் இல்லாதவங்க அஞ்சலியே லவ்வரா வேணும் என நினைக்க வைப்பது அஞ்சலிக்குக்கிடைத்த வெற்றி ( ஆனா நான் அப்டி ஏதும் நினைக்கலை ) ( ஹீரோயினுக்கு மட்டும் எதுக்கு இத்தனை பெரிய பத்தி? )


 நண்டு ஜெகனுக்கு வில்லத்தனம் மிக்க கதாப்பாத்திரம் . மனதோடு ஒட்டாத கதாப்பாத்திரம் என்றாலும்  அவரளவில் நல்லா நடிச்சிருக்கார்.

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  ஹீரோ - ஹீரோயின்க்கு இடையேயான காதல் எபிசோடு செம சுவராஸ்யம் , எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பின் இதில் தான் லவ் செம டெவலப்மெண்ட்


2.  அஞ்சலி இங்க்லீஷ்க்கு டியூஷன் போவதும் சக மாணவிகளுடன் அடிக்கும் லூட்டியும் 


3. ஹீரோ புது முகம் என்பதால் அதை பேலன்ஸ் பண்ண ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கரெக்ட் பண்ணிய அதாவது திரைக்கதையை கரெக்ட் பண்ணிய இயக்குநரின் லாவகம்


4. ஃபில்டர் வாட்டர் கேன் மாதிரி சரக்கு இருக்கும் வாட்டர் கேன் செம அப்ளாஸ் அள்ளுது தியேட்டரில் 


5.  வில்லனாக வரும் நண்டு வஞ்சகச்சிரிப்பும் அப்போது வரும் பி ஜி எம்மும் 


6. ஒரு சீனில் அஞ்சலி கல்யாணக்கோலத்தில் வரும்போது ஜரிகை வைத்த கல்யாணிக்காட்டன் சேலையில் அசத்தலாக வருகிறார். காணக்கண் கோடி வேண்டும்




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சரண்யா இட்லிப்பாத்திரத்தில் மூடியை எடுக்க அவர் கர்ச்சீப்பை யூஸ் பண்றார். கரித்துணி என்னாச்சு ? ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவசரத்துக்கு அதுதான் கிடைச்சுதா? 


2. ஹீரோ யூஸ் பண்ணும் ஷேர் ஆட்டோ சில சமயம் க்ளோசப்பில் சாதா ஆட்டோவாகவும், லாங்க் ஷாட்டில் மட்டும் ஷேர் ஆட்டோவாகவும் இருக்கு, ஒய் திஸ் குழப்பம் ? 


3.  ஷட்டரை ஆள் மீது இறக்கி ஏற்றி  இறக்கி கொலை செய்யும் கொடூரக்காட்சி  எதுக்கு? எப்படி சென்சார் ல விட்டாங்க? 



4. பப்ளிக் ப்ளேஸ் ல 4 பேர் பார்த்துட்டு இருக்கும்போது ஒருத்தன் செல் ஃபோன்ல கொலை திட்டம் பற்ரி பக்காவா பிளான் அவௌட் பண்ணுவது எப்படி? 


5.என்னதான் அஞ்சலி மனம் கவரும்படி காதல் சல்லாபம் ,  ரொமான்ஸ் பண்ணாலும் அவர் கிட்டே ஒரு ஆம்பளைத்தனம் தெரியுதே , நளினம் குறையுதே, ஏன்?  குரல் காரணமா?


6. நண்டு ஜெகன் & நண்பன் 2 பேரும் ஷூ போட்டு பீச் மணல் ல ஓடறாங்க, அவங்களைக்கொலை பண்ணத்துரத்தும் ஆள் வெறும் கால் ல லாங்க் ஷாட்ல ஓடறாரு , கிட்டே நெருங்கியதும் அவர் கால் ல செப்பல் இருக்கு . மறுபடியும் லாங்க் ஷாட்ல  காட்டும்போது செப்பல் நோ


7.  ஹீரோ உயிரோட இருந்தா ஆள் கடத்தலுக்கு இடைஞ்சலா இருப்பான் என்பதால் ஹீரோவைக்கொலை செய்ய பிளான் போடுவது ஓவர். அதே மாதிரி ஹீரோவை வீட்டில் அடைச்சு வைப்பதும் 2 நாள் வெளியிலேயே வர முடியாது என வசனம் பேசியும்  போக்கு காட்டும் வில்லன் அப்போ ஆள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாமே? அப்போ ஏன் ஹீரோவை கொலை பண்ண துடிக்கனும்?


8.  நோக்கியா பேசிக் மாடல் பேட்டரி 3 நாள் தாங்கும். ஆனா ஹீரோவை ரூமில் அடைச்ச முதல் நாள் இரவே பேட்டரி டவுன் ஆகிடுதே எப்டி?



9.  பெரிய ரவுடி மாதிரி காட்டப்படும் ஆள் சாதா போலீசைக்கண்டு ஏன் பயந்து நடுங்கனும்?


10. மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்வா ஒர்க் பண்ணும் 3 பேரும் என்னமோ கை தேர்ந்த கிரிமினல்ஸ் போல் பிளான் பண்ணுவது எப்படி? முன் பின் பழக்கம் இல்லை, இதுதான் முதல் குற்றம் என வசனம் வேறு





 மனம் கவர்ந்த வசனங்கள்


1. இன்சூரன்ஸ் ஏஜென்ட் ,சேல்ஸ் ரெப் 2ம் நாய்ப்பொழப்பு


2. தம் ,தண்ணி அடிக்கற மாதிரி அடுத்தவங்களுக்கு உதவி பண்றதும் ஒரு போதை தான்.அதுல வீழ்ந்துட்டா மீளவே முடியாது


3. முகம் தெரியாத நபருக்கு நாம செய்யும் உதவி,முகம் தெரியாத நபரிடம் இருந்து நமக்குக்கிடைக்கும் உதவி 2ம் அற்புதமான விஷயம


4.  வண்டலூர் ஜூவுக்கு போகலாம் வா

“நான் எதுக்கு உன் கூட வரணும்” 

நாம லவ்வர்ஸ் இல்லை அதான். 


“அலோ.. ரோட்டுக்கு நாலு பேர் என்னை லவ் பண்றேன்னு சொல்றாங்க.. அதுக்காக எல்லாரையும் நான் லவ் பண்ண முடியுமா? நீ வேணா என்னை லவ் பண்ணிக்க,  ஆனா நான் பண்ணலை


5.   அவங்க வீட்ல எல்லாரும் கவர்மெண்ட் ஜாப்டா, எப்படி நீ லவ் பண்ணலாம்?  ஒருத்தர் ஈ பி ஆபீஸ்ல வாட்ச் மேன் , இன்னொருத்தர் வார்டு பாய் ஜி ஹெச்ல 



6 நீங்க படிச்சவங்க தான், ஆனா படிச்சவங்க கல்ச்சர் தெரியல. 


7. சண்டைல அடிக்கறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அடி வாங்குவதும் , தாங்குவதும் 


8. எப்பவுமே நமக்கு ஏதாவது நடந்தா அது கஷ்டம் , மத்தவங்களுக்கு நடந்தா அது வேடிக்கை

9.  பிசிக்கலா செஞ்சா தப்பு , அதுவே மெண்ட்டலா யோசிச்சு செஞ்சா அது திறமை


10. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும்  கண்டு பிடிக்க முடியாத  க்ரைம் கேஸ் நிறைய இருக்கும் 


11. நான் உன்னை லவ் பண்றேன்


 சரி, பண்ணிக்கோ


வாட்?


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( இதை படம் பார்த்த  17 3 2013 நைட் ட்விட்டர்ல போட்டுட்டேன் ,ஆன விகடன் மார்க் - 42 )


ரேட்டிங் -  3 /5


சி.பி கமெண்ட் - அஞ்சலி ரசிகர்கள் எல்லாரும் பார்க்கலாம், மாமூல் கமர்ஷியல் மசாலாப்படம் , போர் அடிக்காம போகுது .
 
















Saturday, March 23, 2013

கருப்பம்பட்டி -சினிமா விமர்சனம் ( தினமலர்)

 
 
தினமலர் விமர்சனம்
 
  • நடிகர் : அஜ்மல்
  • நடிகை : அபர்னா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிரபு ராஜா சோழன்
 


இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்துள்ள இயக்குனரின் படைப்பு எனும் கேப்ஷனுடன் விளம்பரம் செய்யப்பட்டு வரும் "கருப்பம்பட்டி", உறவுகளின் உன்னதத்தை சொல்லும் விதத்தில் மெய்யாலுமே கருப்பட்டி வெல்லமாக இனித்திருக்கிறது என்றால் மிகையல்ல!

கதைப்படி தனது கிராமத்து கலாச்சாரத்தையும், தன் பெற்றோர் உள்ளிட்ட கிராமத்து மக்களையும் வெறுத்து ஒதுக்கும் ஹீரோ, அந்த கிராமம் மொத்தத்தையும் அடமானம் வைத்துவிட்டு, அந்தகாசில் மேலைநாட்டு நாகரீகத்தை விரும்பி பிரான்ஸ் நாட்டில் போய் செட்டில் ஆகிறார்! அங்கு அந்தநாட்டுப் பெண்ணை திருமணமும் செய்து ஒரு குழந்தைக்கும் அப்பா ஆகிறார். 
 
 
 
மேலைநாட்டு நாகரீகத்தில் வளர்ந்த மனைவி நம் ஹீரோவுக்கு துரோகம் செய்ய, ஹீரோ போதை மருந்துக்கு அடிமையாகிறார். அப்புறம்? அப்புறமென்ன போதை பழக்கத்தால் போய் சேருவதற்கு முன் வளர்ந்து ஆளாகும் தன் மகனிடம் தான் செய்த துரோகம் மொத்தத்தையும் சொல்லி செத்துபோகிறார். மற்றொரு ஹீரோவான மகன் அப்பாவின் துரோகத்திற்கு பிராயசித்தம் தேடும் விதமாக அடமானத்தில் கிடக்கும் கருப்பம்பட்டியை மீட்டு, சிதறுண்டு கிடக்கும் சொந்த பந்தங்களை ஒன்று சேர்த்து, அந்த உறவிலேயே ஒரு பெண்ணை காதலித்து, கரம்பிடித்து, இந்தியன் சிட்டிசன் ஆகிறார். இதுதான் "கருப்பம்பட்டியின் கரு, கதை, களம் எல்லாம்!

அப்பா, மகன் என டபுள் ஆக்டிங்கில் அஜ்மல் அசத்தல்! அதிலும் மேலைநாட்டு கலாச்சாரத்தை விரும்பும் அப்பாவாகவும், சொந்த கிராமத்தையும் சொந்த பந்தங்களையும் விரும்பும் மகனாகவும், அஜ்மல் இருவேறு துருவங்களிலும் நின்று அஜ்மல் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். அப்பா வெறுத்து ஒதுக்கிய தன் தாத்தாவை தேடிப்பிடித்து, மொத்த கருப்பம்பட்டி சொந்தங்களையும் தேடிப்பிடிக்க கார்ட்ப‌ோர்டு ‌சீட்டில் ஸ்கெட்ச் போட்டு, உறவுப்பையன் ஜெகனுடன் சேர்ந்து கொண்டு சாப்ட்வேர் கோடீஸ்வரர் பில்கேட்ஸின் ரெப்பரஸென்டேடீவ்ஸ்... இந்திய கிராமங்களை தத்தெடுக்கும் டீமின் லீடர் என்று கருப்பம்பட்டி உறவுகளை பொங்கல் திருநாளில் அவர்களது கிராமத்திலேயே ஒன்று சேர்த்து பொங்கல் கொண்டாட வைப்பது சூப்பர்ப்!


அப்பா காதலி சாந்தியாகவும், மகனின் காதலி காவேரியாகவும் அபர்ணா பாஜ்பாய் ஒரு சாயலில் அசின் மாதிரி தெரிந்து, நம் நெஞ்சில் பிசின் போட்டு ஒட்டிக்கொள்கிறார். அப்பா அஜ்மலை ஒரு தலையாக காதலித்தாலும், அவரை நினைத்து இருதலை கொள்ளி எறும்பாக வாழ்ந்து மடிந்தாலும், அப்பாவின் காதலி மகள், அவரது மகனுக்கு தங்கை முறை உறவில்தானே வரவேண்டும்....?! எங்கோ லாஜிக் இடிக்கிறதே...? என‌ யோசிப்பவர்களுக்கு இயக்குனர் பிரபுராஜ சோழன் தான் பதில் சொல்ல வேண்டும்! அதுபோகட்டும்... சாந்தியாகவும், காவேரியாகவும் வரும் அபர்ணா அபாரமண்ணா...!!

கல்லூரி ஹாஸ்டல் வார்டன், கம் புரபசர் ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கர், செல்லாது செல்லாது... என்படியே சிரிப்பு மூட்டும் கருப்பு ஜெகன், ஸ்ரீநாத், மகாதேவன், கணேஷ்கர், சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது படத்தின் பலம்!


கண்ணனின் இசையில், கபிலனின் பாடல் வரிகள், அதிலும் பாலிவுட் பிரபலம் பப்பிலகரி பாடியிருக்கும் 1980களில் பிரபலமான டிஸ்கோ பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் அசத்தல்! சந்தோஷ் ஸ்ரீராம் - சஞ்சீவ் இருவரது ஒளிப்பதிவும் தூள். பிரான்ஸை இவ்வளவு பிரமாதமாக இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டியதில்லை என்பது ப்ளஸ்! பி.லெனினின் படத்தொகுப்பு, பிரபுராஜ சோழனின் எழுத்து - இயக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கின்றது!

ஆகமொத்தத்தில், "கருப்பம்பட்டி" - "கலெக்ஷ்ன்பெட்டி"!!

Friday, March 22, 2013

மறந்தேன் மன்னித்தேன் - சினிமா விமர்சனம்

 
டைட்டில்லயே 2 தேன் இருக்கே, அதனால படத்துல  2 ஹீரோயின் . 1. நிஜமாலுமேஏஏஏ தேன் மாதிரி லிப்ஸ் உள்ள டாப்ஸி ( பெயர்க்காரணம் டாப் ஸி? ) 2 தேன் கூடு மாதிரி ஒரு மொக்கை ஃபிகர் .( லட்சுமி மஞ்சு) என்னா கதைன்னு பார்ப்போம்

ஒரு திருவிழாக்கூட்டத்துல நண்பனின் இடுப்பை விளையாட்டுக்கு கிள்ளும்போது தவறுதலா ஹீரோ ஆதி  ஹீரோயின் டாப்ஸி இடுப்பைக்கிள்ளிடறாரு. பாப்பா முறைக்குது , அடுத்து நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி அங்கே ஒரு ஷேர் ஜீப் , கூட்டத்துல எசகு பிசகா  ஹீரோ கை ஹீரோயின் இடுப்புல பட்டுடுது . அடடே, இந்த மாதிரி எந்த நாயும் நம்ம இடுப்பை இப்படித்தடவுனதில்லையேன்னு ஹீரோயினுக்கு  இன்சிடெண்ட் லவ் வந்து தொலைச்சுடுது. இப்போ ஹீரோயின் எல்லாஆஆஅத்துக்கும் ரெடி.,.

 ஆனா பாருங்க ஹீரோ உலகமகா உத்தமன். பம்மறான். ஆனா ஹீரோயின் விடலையே. நாய் மாதிரி துரத்தி துரத்தி லவ்வறா ( நிஜ வாழ்க்கைல ஒரு ஃபிகரும் இப்படி அலையாது , நம்மை தான் அலைய வைக்கும் , இப்படி சீன் வைக்கறதுல ஆண்  டைரக்டர்களுக்கு ஒரு வக்ர திருப்தி )

ஹீரோயின் அப்பாவுக்கும் , ஹீரோவுக்கும் ஒரு சின்னத்தகராறு. ஆள் வெச்சு  பொய்க்கேஸ்ல ஹீரோவை உள்ளே தள்ளறாரு. ஹீரோ செம கடுப்பாகி ஹீரோயின் வீட்டுக்கு (ஹீரோயின் அப்பா இல்லாதப்ப கரெக்டா)வந்து “ உங்கப்பா எங்கே? பழி வாங்கனும்”னு ஆவேசமா சொல்றான்


அப்போதான் யாருமே தராத ஐடியாவை ஹீரோயின் தர்றா. யோவ் , என்னை ரேப் பண்ணிடு . பழி வாங்குன மாதிரியும் ஆச்சு , நாம மஜா பண்ணின மாதிரியும் ஆச்சு அப்டினு சொல்றா ( அடடா டா எதெதுக்கோ ஆஸ்கார் தர்றாங்க, இதுக்கு தர்லையே? )

ஹீரோ  ரொம்ப தயங்கிட்டே மேட்டரை முடிச்சுடறான் ( தயக்கம் எதுக்குன்ன்னா அவர் ரொம்ப நல்லவராம் அடேய் ) கில்மா சீன் முடிஞ்சதும்  ஹீரோயின் சொல்றா “ யோவ்! எங்கப்பா மேல எவ்வளவு கோபமா இருக்கே அப்டினு இப்போதான் தெரிஞ்சுது”ங்கறா . ( இது டபுள் மீனிங்க் டயலாக்காம், டேய், இதை விட நேரடியா சொல்லவே முடியாது )

அவ்வ்வளவுதான் முதல் பாதி ஓவர் . இப்போ நான்  4 நிமிஷத்துல டைப் பண்ணி நீங்க 2 நிமிஷத்துல படிச்சதை ஹீரோ தன் மேரேஜ் முடிஞ்சதும் தன் சம்சாரம் கிட்டே ( இது தான் அந்த மொக்கை ஃபிகர் )  சொல்றான் 1 மணி நேரமா.

இப்போ அந்த மொக்கை ஃபிகர் ஒரு குண்டை தூக்கிப்போடுது “ அத்தான், நீங்களாவது ஒரு பெண்ணால ஏமாற்றப்பட்டீங்க (!!!!!???? ) நான் 3 ஆண்களால் ஏமாற்றப்பட்டேன் !!!!!! :);-) அப்டிங்கறா . இப்போ இடைவேளை ( சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம் , அடேய் )

இடைவேளைக்குப்பிறகு அந்த மொக்கை ஃபிகர் ஆட்டோகிராஃப் சேரன் மாதிரி லவ் ஸ்டோரியை எடுத்து விடுது உஷ் அப்பா முடியல

ஈரம் படத்துல பிரமாதமா கம்பீரம் காட்டி , மிருகம் படத்துல துணிச்சலா நடிச்சு , அரவாண் படத்துல விருது பெறும் நடிப்பை வழங்கிய ஆதிதான் ஹீரோ , மனுஷனுக்கு மச்சம் , டாப்சியை புரட்டி எடுத்துட்டார், இதுல என்ன அநியாயம்னா அவர் இடுப்பை அடிக்கடி தடவிட்டு அதுக்கு சம்பளமா 40 லட்சம் வேற வாங்கிக்கிட்டாரு ( ஸ்டொமக் பர்னிங்க் தான் ஹி ஹி ) இந்தகேரக்டருக்கு எதுக்கு தேவதாஸ் மாதிரி தாடி?  ப்ளே பாய் கேரக்டர் மாதிரி புகுந்து விளையாட வேண்டியதுதானே? வெல்டன்

ஹீரோயின் டாப்ஸி. அவர் போட்டு வர்ற ஜாக்கெட்டே மொத்தம் 30 பாயிண்ட் ல தெச்சதுதான் , குடும்பப்பொண்ணுங்க பொதுவா  90 பாயிண்ட்ல ஜாக்கெட் தைப்பாங்க , 3 ல ஒரு பங்கு போதும்னு சொல்லிடுச்சு  போல , இவர் இடுப்புல தங்கத்துல  6 பவுன்ல சன்னமா ஒரு அரைஞாண் கயிறு. இதுக்கு கவுரமா ஒட்டியாணம் போட்டிருக்கலாம். இவர் முகத்தை படத்துல 20 நிமிஷம் காட்டினா இடுப்பை 40 நிமிஷம் காட்டறாங்க . கேமரா மேன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லை போல . இவர் வசனம் பேசும்போது வாயை ஒரு மாதிரி குவிச்சு சுளிச்சுக்கறார் , ஸ்டைலுன்னு நினைச்சாரா? மேனரிசம்னு நினைச்சாரோ, டிக்கெட் மாதிரி இருக்கு .ரொம்ப முக்கியமான விஷயம் , இந்தப்படத்துல தான் கண்டு பிடிச்சேன் டாப்ஸி இலியானாவை விட ரொம்ப ”சின்ன”ப்பொண்ணு , ஹி ஹி

இன்னொரு மொக்கை ஃபிகர் சொன்னேனே , அதுக்கு வாய் , கண் , கன்னம் எதுவுமேஏ சரி இல்லை , 40 மார்க் கூட தேறாது , சோ நோ கமென்ட்ஸ் , என்னதான் பாப்பா நல்லா நடிச்சிருந்தாலும் அதை நாங்க பாராட்ட மாட்டோம், நமக்கு கிளாமர் தான் முக்கியம் .

இது போக 16 வயதினிலே டாக்டர் மாதிரி ஒரு வில்லன்  டாக்டர் , குடிகார மாமா,  2 வது ஹீரோயினின் லவ்வர் அப்டினு 3 கேரக்டர்களும் இருக்கு, பொதுவா ஆம்பளைங்களை பாராட்டும் பழக்கம் நமக்கு இல்லை , விடுங்க


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1. தெலுங்கில் ரிலீஸ் ஆன குண்டெல்லோ கோதாவரி என்ற படத்தின் டப்பிங்க் படம் என தெரியாதவாறு அழகாக போஸ்டர் ஒட்டிய  இயக்குநரின் சாமார்த்தியம் 

2.  படத்தின் ஓப்பனிங்க் சீனில் 20 நிமிஷம் மழை வெள்ளப்பெருக்கை காட்டும் இடம் பிரமாதம் , ஒளிப்பதிவு , பின்னணி இசை , சிறப்புச்சத்தம் அற்புதம் ( இசை - இசை ஞானி இளையராஜா


3. இளையராஜா வின் ஆசையை காத்துல தூது விட்டு பாட்டை(மெட்டு) அவரே உல்டா அடிச்ட்டார் -ராத்திரி நேரத்துப்பார்வைபட்டு .ஆனா பாட்டு செம கிக் 


4.  நீர் நிலைகள் , ஆற்றோரம் , மரங்கள் , இயற்கைக்காட்சிகள் என பல இடங்களில் கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு . கேமராப்ரியர்கள் , ஸ்டில்ஸ் கேமராமேன்கள் பார்க்க , கற்றுக்கொள்ள ஏராளமான ஷாட்ஸ் 


5.  டாப்ஸிக்கு 70 லட்சம் சம்பளம் கொடுத்து 1 கோடிக்கு நடிப்பை !!!!!! வாங்கிக்கிட்டது 


 


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. கல்யாணப்பொண்ணு மேடைல உக்காந்திருக்கும்போது கைல பிளாஸ்டிக் வளையல் போட்டிருக்கே? எங்க ஊர்ல ஓ சி ல கல்யாணச்சாப்பாடு சாப்பிடும் ஓ சி ரோசியே 20 கல்யாணி கவரிங்க் வளையல் போட்டிருப்பா..  அதே மாதிரி அந்த சீன்ல ஹீரோயின் கட்டி இருக்கும் சேலை சாதாரண  வாரணாசி காட்டன் சேலை , ஒரு பட்டு சேலை கூட கிடையாதா? 


2. ஹீரோயின் டாப்ஸி ஹீரோ மேரேஜ் கிஃப்டா ஒரு பவுன் மோதிரம் இந்தா அப்டினு தர்றா. அது தாமரைக்கனி போட்டிருக்கும் 5 பவுன் மோதிரம் மாதிரி இருக்கு 


3. டாப்ஸி புறமுதுகை வஞ்சனை இல்லாம முழுசாகாட்டும் 13 இடங்களிலும் பிரா தாரை  ( அதாவது ஆல்ரெடி அணிந்த தாரை தெரியுது ) 


4.  சிக்கி முக்கி நெருப்பு பாடல் காட்சில  6 க்ரூப் லேடி டேன்சர்ஸ் இருக்காங்க , திடீர்னு  4 பேரா குறைஞ்சிட்டாங்க , 2 பேருக்கு சம்பள பாக்கியா? அதை விடப்பெரிய காமெடி படத்துல வர்ற 3 பாட்டுக்கும் அதே 4 க்ரூப் டான்சர்ஸ் தான் 


5.  காலேஜ் பில்டிங்க் ல இருந்து டாப்ஸி ஓடி வரும் சீன்ல அவர் மட்டும் தான் இருக்காரு, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் 6 பேரையாவது காட்டி இருக்கலாம் , வெறிச்சோடி கிடக்கு 


6. ஊரெல்லாம் வெள்ளம் , ஹீரோ , ஹீரோயின்  வைக்கோல் புல் போட்ல வெள்ளத்துல ஓப்பன் பிளேஸ் ல போய்ட்டு இருக்காங்க , அப்போ டிரஸ் மாத்தும்போது அந்த சம்சாரம் புருஷன் கிட்டே கண்ணை மூடிக்குங்க , அப்டினு அந்தப்பக்கம் திரும்பி டிரஸ் மாத்துது. ஹயோ அய்யோ   ஊரே பார்க்கலாம், அவன் பார்க்கக்கூடாதா? 


7. சேவல் சண்டை சீன்ல கிராமத்து ஜனங்க முகத்தை ,மட்டும் காட்டி கடைசி வரை கோழியைக்கூட காட்டலை அட்லீஸ்ட்  ஆடுகளம் சீனையாவது சொருகி இருக்கலாம் 



8. மாப்ளை யார்னே தெரியாம ஹீரோயின் கல்யாண மேடை ஏறுவது கூட ஓக்கே , ஆனா தாலி கட்டும்போது அவன் முகத்தை அப்போதான் பார்த்து ஷாக் ஆவது ஓவர் , நல்ல வேளை ஃபர்ஸ்ட் நைட் ல ஜெர்க் ஆகலை 


 



9. வில்லன் பிளாக் மெயிலுக்கு ஹீரோயின் ஓக்கே சொல்லிட்டா , அப்பவே வில்லன் மேட்டரை முடிக்காம 2 நிமிஷம் வெயிட் பண்ணு வந்துடறேன்னு எங்கியோ போறான், இந்த மாதிரி சான்ஸ் கிடைப்பதே பெருசு , எந்த மடையனாவது அப்டி போவானா? ( சான்ஸ் போய்டுது - நமக்கு சீன் இல்லை ) 


10. காதலனின் உயிரை காப்பாற்ற  காதலியின் கற்பை வில்லன் கேட்கறான் , இதான் சீன். காதலனுக்கு உயிர் போய்டுது. எந்த கூமுட்டை வில்லனாவது டெட் பாடியை அவ ,முன்னால காட்டுவானா? மேட்டரை முடிச்ச பின் தானே செத்த சேதியை சொல்லனும்? 


11. ஒரு வீட்டு வாசல்ல என்னமோ செடி நடுவது மாதிரி ஒரு இரும்புக்கம்பியை நட்டு வெச்சிருக்காங்க , காதலன் கரெக்ட்டா அங்கே தலை பட்டு உயிரை விடறான் 


12. டாக்டர் கோட் சூட் பேண்ட் போட்டிருக்காரு , அதுல பாக்கெட் எல்லாம் இருக்கு , ஆனா  என்னமோ கேடி கபாலி மாதிரி சட்டை கை படிப்பில் இருந்து பணம் எடுத்து ஹீரோயின்க்கு தர்றான். சேலை எடுத்துக்கோ அப்டிங்கறான். செட் பண்ணனும்னு எண்ணம் உள்ளவன் நல்ல சேலையா கடைல எடுத்து பரிசா தரனும், இப்டி பணமாத்தந்தா எப்டி? 


13 . போலீஸ் ஸ்டேஷன் ல வில்லன் கைல ஒரு வாழைப்பழத்தோட உள்ளே வந்து உரிச்சு சாப்பிடறாரு. இதுல என்ன ஸ்டைல் ? கண்ராவி இந்த லட்சணத்துல இன்ஸ்பெக்டர் கிட்டே “ உன் சம்சாரத்தை கேட்டதாச்சொல்லு”ங்கறான் அதுக்கு அந்த போலீஸ் இளிக்குது


14. காதலனுக்கு விபத்து என்றதும் ஹீரோயின் ஜி ஹெச் போகாம ஆல்ரெடி தன்னை கெடுக்க முயற்சித்த அதே டாக்டர் ஹாஸ்பிடல்க்கு ஏன் போறா? ஊர்ல  வேற டாக்ட்ரா இல்லை?  அதே வில்லன் கிட்டே தான் போய் நொட்டனுமா? 


15. படகுப்போட்டி பொதுவா பகல்ல தான் எடுப்பாங்க. எதுக்கு ஷூட்டிங்கை பகல்ல வெச்சு நைட் எஃபக்ட்? 



16. அடிச்ச வெள்ளத்துல , மழைல ஆனானப்பட்ட பனை மரம் , தென்னை மரம் எல்லாம் முழுகுது, ஆனா ஹீரோ , ஹீரோயின் பயணம் செய்ய ஒரு வைக்கோல் புல் கட்டு மட்டும் மெத்தை மாதிரி மிதந்துட்டுப்போய்ட்டே இருக்கே? 

 




 மனம் கவர்ந்த  வசனங்கள்


1.  நீ நினைக்கற மாதிரி  நான் தப்பானவன் கிடையாது , ஆனா தப்பு பண்ணி இருக்கேன் 


2. கொஞ்சமா பேசறவங்க தான் எடக்கு மடக்கா நிறையா செய்வாங்களாம் 


3. யோவ், நானும் சுத்தம் பண்ண கத்துக்கிடவா? 

 அதான், நான் பண்ணிட்டு இருக்கேனே? ( மீனை சுத்தம் பண்றாங்கப்பா) 


4. இந்த ராத்திரியை நான் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன் 


 ஆனா நான் மறந்துடுவேன் 


 நான் மறக்க விட மாட்டேன் 


5.  உன் வாழ்க்கைலயாவது ஒரு பொண்ணு, என் வாழ்க்கைல 3 ஆம்பளைங்க விளையாண்டுட்டாங்க 



 சி பி கமெண்ட் - கில்மாப்பட ரசிகர்கள் பார்க்கலாம் அதுவும் டி வி ல போட்டா.  முடியல ..... படு டப்பா , இந்தக்குப்பை ஆந்திராவில் செம ஹிட்டாம் , அய்யோ அம்மா .. ஈரோடு  வி எஸ் பி ஏசி யில் படம் பார்த்தேன் 



ஆனந்த விகடன் மார்க் - இது டப்பிங்க் படம், சோ நோ மோர் ரிவ்யூ @ விகடன் , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக  மார்க் - 38



 குமுதம் ரேங்க் - சுமார் 



 ரேட்டிங்க்  -  2  / 5 


டிஸ்கி -  இந்த சோகத்தை மறக்க நைட் நானும்  என் ஜமுனாவும் கில்மாப்படம் போறேன் , ஆண்கள் எல்லாம் அவங்கவங்க சம்சாரத்தை தூங்க வெச்சுட்டு 10 மணிக்கு வந்துடுங்க ஹி ஹி ( விமர்சனம் படிக்க )



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 22.3.2013 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1.மறந்தேன் மன்னித்தேன்.தெலுங்கில் குண்டெல்லோ கேதா‌வ‌ரி என்ற பெய‌ரில் சென்ற வாரம் வெளியான படத்தின் தமிழ் பதிப்பு மறந்தேன் மன்னித்தேன். நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு படத்தை தயா‌ரித்து முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.


FILE
1986 ஆகஸ்டில் கோதாவ‌ரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆந்திரா மாநிலத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. வீடுகள், சொத்துகள் நாசமானதுடன் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன. இந்த துயர நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கோதாவ‌ரி கதையிலு கதையை - எழுதியவர் ராமராவ் - முறைப்படி வாங்கி இந்தப் படத்தை மஞ்சு எடுத்துள்ளார். படத்தை இயக்கியிருப்பவர் குமார் நாகேந்திரா. ஆனால் கதை, திரைக்கதையிலும் இவரது பெயரையே போடுகிறார்கள்.

ஆதியும், மஞ்சுவும் கணவன், மனைவி. கோதாவ‌ரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். உயிர் போகும் நிலையில் இருவரும் தத்தமது முதல் காதலை நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த பிளாஷ்பேக்கில் ஆதியின் காதலியாக வருகிறார் தாப்ஸி.

ஆந்திராவில் படம் சூப்பர்ஹிட். தமிழில் கோதாவ‌ரியின் கதை எடுபடுமா என்பது நாளை தெ‌ரிந்துவிடும். இளையராஜாவின் இசை படத்தின் பலங்களில் ஒன்று என்கிறார்கள்.

சென்சார் இதற்கு யு சான்றிதழ் தந்துள்ளது.

erode v s p release

மறந்தேன் மன்னித்தேன் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/03/blog-post_609.html


2. கருப்பம்பட்டி -அ‌ஜ்மல் நடித்திருக்கும் கருப்பம்பட்டியை சுந்தர் கே., சுந்தர் பிக்சர்ஸ் சார்பில் தயா‌ரித்துள்ளார். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. 

ஒரு கெட்டப்பில் தொங்கு மீசை பாகவதர் தலைமுடி என வித்தியாசமாகத் தோன்றுகிறார் அ‌ஜ்மல். எழுதி இயக்கியிருப்பவர் பிரபு ராஜா சோழன்.


ல்பத்தின் ஹைலைட் 'நாட்டி ராஜா ராஜா...’ பாடல். இந்தியாவின் டிஸ்கோ கிங் பப்பி லஹிரி 80-களின் இந்தி இசைச் சாயலில் பாடி இருக்கிறார். 'ஸிந்தகி, குச் நஹி’ போன்ற எளிய இந்தி வார்த்தைகளைப் போட்டு மழலைத் தமிழில் அவர் பாடி இருப்பது அழகு. நவீன், முகேஷ், செந்தில், சுர்முகியின் கலகல குரல்களில் ஒலிக்கும் 'கருப்பம்பட்டி கருப்பம்பட்டி...’ பொங்கல் கொண்டாட்டப் பாட்டு. கோரஸ் குரலாக ஒலிக்கும் 'கண்ணம்மா சின்னக் கண்ணம்மா’ - ஊர்ப் பக்கம் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் மாமன் மகள்களுக்கு டெடிகேட் செய்யலாம். 'அடலேறு காளையெல்லாம்...’ பாட்டு செம கும்மாங்குத்து. பாடலெங்கும் தமிழர்களின் வீரத்தை வார்த்தைகளில் வார்த்திருக்கிறார் கவிஞர் கபிலன். சயனோரா பிலிப்பின் மெட்டாலிக் குரலோடு கார்த்திக்கின் ஜிலீர் குரலும் இணைந்து பார்ட்டி டான்ஸ் மூடு கொடுக்கிறது 'ஓ இந்திரா... ஓஹோ இந்திரா...’ பாடல்.

erode krishna release

கருப்பம்பட்டி -சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2013/03/blog-post_1662.html



3. கந்தா" -எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத் (திருவாரூர் பாபு) இயக்கிய படம் "கந்தா". கரண், மித்ரா குரியன், ராஜேஷ் நடித்துள்ளனர். வி.பழனிவேல் என்பவர் தயாரித்தார். வெளிநாட்டில் படித்து விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் கரண், அங்கு நடக்கும் தாதாக்கள் கொட்டத்தை அடக்குவதுதான் கதை. படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது. கரண் சம்பள பாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் இப்படி பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு படம் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்தும் இந்தப் படத்தை கை கழுவிட்டு "தேரடிவீதி" என்ற அடுத்த படத்தை இயக்கச் சென்று விட்டார். இப்போது தயாரிப்பாளர் ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்து வருகிற 22ந் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.


erode devi abirami release

கந்தா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/03/blog-post_495.html



4. நானும் என் ஜமுனாவும்’ படத்தை இயக்குனர் ஜெயதமிழ் உடன் இணைந்து பிரபல விநியோகஸ்தர் குருராஜா இயக்கியுள்ளார்.

நடிகர் பானுசந்தரின் மகன் ஜெயந்த், பெங்காலி நடிகை பௌலமி இருவரும் இதில் இணைந்து நடித்துள்ளார்கள்.
நானும் என் ஜமுனாவும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் குருராஜா.
இயக்குனர் ஜெயதமிழ் உடன் இணைந்து இப்படத்தை குருராஜா இயக்கியிருக்கிறார்.
‘நான் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளேன்.
கொலிவுட் படத்தை இயக்க, சரியான தருணம் பார்த்து காத்திருந்தேன்.
பல வருட திரையுலக அனுபவம் பெற்ற என் நண்பர்- இயக்குனர் ஜெயதமிலும் நானும் இணைந்து இந்தப்படத்தை இயக்கியுள்ளோம்.
திரை ரசிகர்களை நிச்சயம் இப்படம் திருப்திப்படுத்தும் என்று கூறியுள்ளார் குருராஜா.

erode anna

5.கண் பேசும் வார்த்தைகள்.   பாலாஜி சினி கிரியேஷன்ஸ் மற்றும் கான்சப்ட் பவுண்டேஷன் சார்பில் ஆர்.சரவணன் தயாரிக்கும் படம் கண் பேசும் வார்த்தைகள். இதில் செந்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் டி.வி. தொடரில் நடித்தவர். நாயகியாக இனியா நடிக்கிறார். ஆடுகளம் முருகதாஸ், மதுமிதா, இளவரசு, சரண்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் உறவினர் ஆவார். ‘உயிர்’ படத்தை தயாரித்தவர். எஸ்.பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். 

காதல், காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து புதுமையான திரைக்கதையில் படம் தயாராகிறது என்றார் அவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நாற்பது நாட்கள் நடத்த உள்ளனர். 

தஞ்சை, திருவாரூரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. 

ஒளிப்பதிவு : நாககிருஷ்ணன், இசை: ஷமந்த்நாத், எடிட்டிங்: சாபு, நடனம்: காதல் கந்தாஸ், ஸ்டண்ட்: செல்வம்.

6. AATHMAA - ( HINDI ) - A single mother fights against the supernatural in order to hold on to her daughter.



7. மாந்திரீகன் - இது ஒரு மலையாள டப்பிங்க் படம், ஜெயராம், பூனம் பாஜ்வா , தாமிரபரணி பானு நடிச்சது 


மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/03/blog-post_6179.html

இணையத்தில் கலக்கிய தங்க மீன்கள்!


இணையத்தில் கலக்கிய தங்க மீன்கள்!

கடந்த வாரம் முழுவதுமே YOUTUBE இணையத்தில்,சென்னை பகுதிக்கான மிகவும் பிரபலமான வீடியோக்கள் பகுதியில் முதல் இடத்தில் இருந்தது 'தங்க மீன்கள்' படத்தின் டிரெய்லர்.

டிரெய்லரை பார்த்தவர்கள் அனைவருமே தங்களது பேஸ்ஃபுக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் SHARE செய்து வந்தார்கள். 'மகள்களுக்கும், அப்பாக்களுக்கும் மட்டுமே தெரியும் முத்தம் காமம் இல்லையென்று' என நெத்தியடி வசனங்கள் அடங்கியது அந்த டிரெய்லர்.

'தங்க மீன்கள்' படத்தினை கெளதம் மேனன் தனது PHOTON KATHAS நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். 'கற்றது தமிழ்' இயக்குனர் ராம் இயக்கி நடித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சாதனா என்ற குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறது.

'தங்க மீன்கள்' படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு குறித்து இயக்குனர் ராம் "இலக்கியத்தில் பொருள்வயிற் பிரிவு என்று ஒரு பகுதி உண்டு. அதாவது பொருள் தேடி தலைவன் சென்றுவிட, தலைவி படும் கஷ்டங்களைப் பாடல்கள் சொல்லும். தலைவனுக்கும் அந்த கஷ்டங்கள் இருக்கும். ஆணுக்கும் அன்பும் தாய்மையும் உண்டு என்பதைச் சொல்லும் படம் இது. அதாவது இறந்த பின்பும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் என்பதை சொல்கிறேன்.

அப்பா, மகளுக்கான உறவு என்பது மற்ற உறவுகளை விட மகத்தானது. அந்த உறவை யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறேன். எல்லா குழந்தைகளும், பெற்றோருக்கு தங்க மீன்கள்தான் என்ற பொருளில் தலைப்பு வைத்துள்ளேன். 

படத்தின் டிரைலர் இந்தளவு மக்களைச் சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இளம் வயதுள்ளவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. டிரைலர் பார்த்துவிட்டு வந்த மெயில்களும் போன்கால்களும் இளம் வயதுள்ளவர்களிடம் இருந்துதான் அதிகம் வந்திருக்கிறது. 

நல்ல படைப்புக்கான ரசனை அதிகரித்துக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் " என்று கூறினார்.


thanx - vikatan