Wednesday, February 27, 2013

தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி- கட்சி எம்.எல்.ஏ.வே தாக்கியதால்.

  1. RT ": கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்! "
  2. அடிச்சது நண்பனா இருந்தா வெளியே சொல்லக்கூடாது #ஆனாலும் வலிக்குதே
  3. எல்லாரும் உடன் நிறுத்திக்குங்க சப்போர்ட் பண்ணுறன் எண்டு DP எல்லாம் மாத்தவேண்டாம்
  4. கருப்பு எம்.ஜி.ஆர், ஏழைகளின் பாதுகாவலன் மீது தொடுத்த வன்முறையை கண்டிக்கிறோம்!
  5. விஜயகாந்துக்கு என்னாச்சோ,எதோச்சோ,பயந்து போயி டிவி பாக்க வீட்டுக்கு கிளம்பிட்டாரு எங்க ஆபீஸ்ல ஒருத்தரு
  6. இதுக்கு காரணம் பாக்கிஸ்தான் தான்,கேப்டன் அதிரடி பேட்டி
  7. கண்டிப்பா அவன் இந்த ஊரா மட்டும் சேர்ந்தவனா இருக்கமாட்டான்
  8. ": ஒரு கட்சித்தலைவரை அடிப்பது என்பது மோசமான முன் உதாரணம்-கண்டனங்கள்"
  9. RT ": ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .
  10. பீசு பீசா கிழிக்கும்போது ஏசு போல சிரிப்பப்பாருடா! இவன் பேருக்குள்ளே காந்தம் இருக்கு உண்மைதானடா!
  11. இவய்ங்க எப்பவுமே இப்படித்தான். அடிச்சிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க வாங்க பாஸ்! இதுக்கெல்லாம் பயந்தா தொழில்பண்ண முடியுமா?
  12. RT தம்பி கேப்டன் மீது விழுந்த அடி.. தமிழின் மீது விழுந்த அடி.. கலைஞர் கண்ணீர் பேட்டி "
  13. அடச் சே கூட்டத்த வெளக்கும்போது அந்த MLA கை தெரியாம கேப்டன் மேல பட்டு இருக்குயா இது தெரியாம னாம்... பல்பு
  14. ரோபுலு!! RT ": அண்ணி இல்லாத நேரமா பாத்து தான் தட்டிருக்கானுக! ரேஸ்கெல்ஸ்! "
  15. ஒரே கட்சில இருந்தா வாக்கிங் போகும்போது போட்டுத் தள்ளனும்டா போட்டப் பசங்களா இப்டி பப்ளிக்ல அடிக்க கூடாதுடா
  16. தாக்குற கேப்டனே தாக்கப்பட்டாரா # இன்னைக்கி வலிய மறக்க கூடுதலா ரெண்டு ரௌண்ட் போங்க கேப்டன் :))
  17. வன்முறை இல்லாத மாநிலத்திற்கு (தமிழ் நாடு தவிர்த்து) மாற போகிறேன். -கேப்டன் #குசும்பு  
  18. ஓரு ராணுவத்துக்கு கூட வேணும்னே மோதியிருக்கான். . .
  19. தாமிரபரணி மனோரமா குரலில் : உய்ய்ய்ய்யா, இது அந்த அடி இல்லைய்யா, ஏதோ தள்ளுமுள்ளு அடி போல இருக்குய்ய்யா
  20. இஸ்தலக்கடி லாலசுந்தரி கோலா கொப்பறக் கொய்யா
  21. காலில் விழுந்தாலும் கலாய்க்கிறாங்க...கேள்வி கேட்டாலும் கலாய்க்கிறாங்க...அடிச்சாலும் .அடிபட்டாலும் கலாய்க்கிறாங்க..
  22. "சொல்லால் அடித்த சுந்தரி "ன்னு பாடினவரு, அவர போய்.. எப்படி மனசு வந்தது அந்த பாவிக்கு
  23. 9ரவுண்டு அடிச்ச உங்களையே ஓருத்தன்.! சோ சேடு,சோ சேடு
  24. மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி, வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
  25. தென்பாண்டி சீமையிலே ,தேரோடும் வீதியிலே , யானை போல வந்தவனே , யார் அடிச்சாரோ ?? யார் அடிச்சாரோ !!
  26. தமிழ்நாட்டுல எனக்கு பிடிக்காத ஓரே ஊரு தஞ்சாவூரு . . ஆங்
  27. வரணும், நீங்க பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்
  28. தலைவா நீ ஒண்ணும் கவலைப்படாத உனக்காக இந்த தொண்டன் டீ குடிப்பான்
  29. புடிங்க சார் சப்போர்ட் கேப்டன் போட்டவங்ளளாம் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்....:))))
  30. சும்மாவே அவரு வீங்கிப்போய் தான் இருக்காரு அவர மேலும் வீங்க வச்சுட்டானுவ
  31. புதன்கிழமை கேப்டன் விரதம் இருக்கிறத ரகசியமா தெரிஞ்சிக்கிட்டு வேலைய காட்டிட்டானுக முடிஞ்ச நாளைக்கு ஏரியா பக்கம் வாடா வாடா
  32. சுவத்து மேல கால வச்ச, கேப்டன் மேலயே கைய வச்சிட்டீங்களேடா
  33. குடிக்குறதுக்கு ரோல்மாடலே கேப்டன் தான்
  34. இந்தா ஆரம்பிச்சிட்டாய்ங்கல்ல டேக!இனி பொழுது போயிரும்!
  35. கேப்டனை நாமளே அடிச்சா,அந்த தீவிரவாதிங்களுக்கு குளிர் விட்டுடாது? நாடு பாதிக்கப்படாது?எப்படி வல்லரசு ஆகும் இந்தியா?


     diSki -

    Vijayakanth attacked -Junior Vikatan

    http://www.youtube.com/watch?v=X1tsDGBVsjY&feature=youtu.be

. ஹெலிகாப்டர். ஊழல் -முன்னாள் ராணுவ அதிகாரி அதிர வைக்கும் பேட்டி

போஃபர்ஸ்... ஹெலிகாப்டர்... இந்த பட்டியல் தொடரும்!''


அதிரவைக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி
 
 
தேசம் நிம்மதியாக சுவாசிக்க வேண்டுமானால், அதன் கவசமாகத் திகழும் பாதுகாப்புத் துறை வலுவாக இருக்க வேண்டும். ஆனால், அங்கேயே ஊழல்களும், இடைத்தரகர்களும், நிழல் பேரங்களும் நடக்கின்றன என்றால், பாதுகாப்புத் துறையும் பாதுகாப்பாக இல்லை; அதை நம்பி உள்ள தேசமும் பாதுகாப்பாக இல்லை என்றே அர்த்தம்.


 போஃபர்ஸ் பீரங்கி ஊழல் இதை 25 ஆண்டுகளுக்கு முன்பே வெளிச்சம் போட்டுக் காட்டியது. விடை தெரியாமல் முடிந்த அந்தப் புதிரின் தடம் மறைவதற்குள், இப்போது வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.   


ராணுவம் உள்ளிட்ட துறைகளில்நிலவும் இதுபோன்ற மோசமான நிலைக்குக்காரணங்கள் என்ன என்பது குறித்து, தெற்காசிய பிராந்தியத்​துக்கான ராணுவஉளவுத்துறையின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஹரனிடம் பேசினோம்.



''தேசத்தின் கவசமாக இருக்கும் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற என்ன காரணம்?''



''பணம்தான். அதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்? பணம் என்றால், சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒரு தேசத்தின் ஒட்டு​மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்குப் பணம். 2009-ம் ஆண்டு கணக்குப்படி, உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிய தொகை 1.6 டிரில்லியன். இந்தப் பணத்தில்தான் ஒரு நாட்டுக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன. அந்த 20 நாடுகள் வாங்கும் ராணுவத் தள வாடங்களை மொத்தமாகக் கணக் கிட்டால், அதில் 10 சதவிகிதத்தை இந்தியா வாங்குகிறது.  1,93,000 கோடி ரூபாயை இந்தியா இதற்காகச் செலவிடுகிறது.



அதில் ஊழல் நடைபெற, சிக்கலான நடை​முறைகளைக் கொண்ட நமது அரசு இயந்திரம்தான் காரணம். திட்டம் தயாரிப்பதில் தொடங்கி, குறிப்பிட்ட அந்தத் தளவாடத்தைக் கொள்முதல் செய்வது வரை, நாம் 12 படிநிலைகளைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தாமதம், அர்த்தமற்ற கேள்விகள், பொறுப்பற்ற பதில்கள் சகித்துக்கொள்ளவே முடியாதவை. இந்தத் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு படிநிலையிலும் சரியான இடத்தை 'கவனிக்க’ வேண்டும். அப்படி கவனிக்கும் வேலையை இடைத்தரகர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். தாமதம் செய்தால்தான் நாம் 'கவனிக்கப்படுவோம்’ என்பதை, அதிகார மையங்கள் புரிந்து வைத்துள்ளன. இந்தத் தெரிதலிலும் புரிதலிலும்தான் தொடங்குகிறது ஊழலின் ஊற்றுக்கண்.



அப்போது நடந்த போஃபர்ஸ் ஊழல், இப்போது வெளிவந்துள்ள வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் எல்லாவற்றிலும் இதுதான் ஆதார சுருதி. இவற்றோடு இது முடியப்போவதும் இல்லை. ஏனென்றால், இது​போன்ற பல ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் செய்யப்​பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடியும்போது, பின் விளைவுகளாக அதில் மறைந்துள்ள ஊழல்களும் வெளி​வரும்.''



''ஊழல்கள் வெளிவந்தாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல் லையே?''



''யாரைத் தண்டிப்பது? எப்படித் தண்டிப்பது? ஆயுதம் மற்றும் ராணுவத் தளவாட விற்பனை என்பது... வல்லரசு நாடுகள், உலகின் மிகப் பெரிய ஆயுத விற்பனை நிறுவனங்கள், இடைத்தரகர்கள், உள்நாட்டு அரசியல்வாதிகள், அரசுப் பொறுப்பில் உள்ள அதிகார மையங்களின் கூட்டு வலைப்பின்னல். இவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிவரும்போது, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றொருவரைக் கைகாட்டுவார்கள். நம் நாட்டில் அதிகபட்சமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும்.



 ஆனால், விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் அவர்கள் கைக்குப் போகாது. தேசியப் பாதுகாப்பு, ராணுவ ரகசியம் என்று காரணம் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படும். இறுதியில் விசாரணைக் குழு, பூனை தன்னுடைய வால் முனையை பிடிக்க முயன்று அதைச் சுற்றி சுற்றி வருவதுபோல், சுற்றிச் சுற்றி வந்து சோர்ந்து விடும். ஒரு கட்டத்தில் எல்லோரும் அதை மறந்து விடுவார்கள். போஃபர்ஸ் பீரங்கி ஊழல் தொகை 64 கோடி ரூபாய். ஆனால், அதை விசாரிக்க நாம் 250 கோடியை செலவிட்டோம். 25 ஆண்டுகள் ஆகின. இறுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்களே. அதேகதிதான் பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்தில் நடக்கும் ஊழல்களுக்கு ஏற்படும். இப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படுகிறார். முறைகேடான காரியங்களில் ஈடுபடும் 12 ராணுவத் தளவாட விற்பனை நிறுவனங்களை, கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டார்.''



''இதற்கு என்னதான் தீர்வு?''



''நம்முடைய ராணுவத்துக்கான தளவாடங்களை நாமே தயாரிக்க வேண்டும். நம்முடைய ஆயு தங்களை நாமே வடிவமைக்க வேண்டும். நம்முடைய தேசியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், இந்த ஆராய்ச்சிகளில் முன்னணியில் உள்ளது. ஆனாலும், ஆராய்ச்சி முடிவுகளுக்கு செயல் வடிவம் கிடைப்பது இல்லை. அவை காகிதங்களில் மட்டுமே உள்ளன. எனவே, ராணுவத் தளவாடங்களை வடிவமைப்பது மட்டும் அல்ல... அவற்றின் தயாரிப்புப் பணியிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். இப்போது, பொதுத் துறையிடம் மட் டுமே தளவாடங்கள் தயாரிப்புப் பட்டறைகள் உள்ளன. ஆனால், அவர்களிடம் வேகம் இல்லை. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிய புரிதல்கள் இல்லை. நாம் எதை நோக்கிச் செயல்படுகிறோம் என்ற நோக்கமும் இல்லை. இதை சரிசெய்தாலே போதுமானது.''


- ஜோ.ஸ்டாலின்

thanx - vikatan

. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?

Vattakottai fort
1. பூஜா குமாருக்கு 36 வயது # அடடே, வயசும் 36 ஆஆ?     


----------------------


2. இதுவரை என்னுடன் நடித்தவர்களில்,  சித்தார்த்  நல்ல  டீசென்டாக பழக கூடியவர்.-சமந்தா # பழகும்போது “செண்ட்” போட்டுக்குவாரா? 




-------------------------


3. காதலிக்கும்போது அவள் சாப்பிடும் அழகைப்பார்த்து அடடா! என்றேன். கல்யாணத்துக்குப்பின் பில் பார்த்து அய்யய்யோ என்றேன் # 8 புரோட்டா



--------------------


4.  கோச்சடையான்க்கு ஒருநாள்முன் ஆனந்தத்தொல்லை ரிலீஸ் செய்வேன் -பவர்ஸ்டார் # ஆனந்தத்தொல்லை ரிலீஸ் அன்னைக்கு என் படம் - ரஜினி



-------------------------


5. ஜட்ஜ் - எதுக்காக ராகிங் பண்ணே?



 கைதி - புது டிரஸ் போட்டுட்டு காலேஜ் போனப்ப கீப் ராக்கிங் னாங்க.கீப்பை காலேஜ் கூட்டிட்டு வந்து .,ராக்கிங்க் பண்ணிட்டேன்




----------------------------






6. ஆண்கள் தங்கள் நினைவுகளில் இருந்து அழிக்க நினைத்தும் முடியாதது முதல் காதலை!



---------------------------


7. டியர். ZigZag ட்ரைவிங் னா என்ன?




பிகரை கரெக்டாவும்,பைக்கை ராங்காவும் ஓட்டுவது ;-)



-------------------------------



8. டாக்டர்.அல்சர் பேஷன்ட்ங்கறதால அலங் காரம் கூட பண்ணக்கூடாதுன்னு சொல்றது ஓவர் # மேக்கப் மேகலா




------------



9. பாதாளக்கிணத்தடி,நெய்வேலி சுரங்கத்துல காதலியை மீட் பண்ணிட்டா அது ஆழமான காதல் ஆகிடாது




----------------------------


10. டியர்.உனக்காக உயிரைக்கொடுக்க தயாரா இருக்கேன்.நீ?



 ம் ம் நான் ஆல்ரெடி உன்னால தாயாரா இருக்கேன்.



---------------------------



11  தொலை தூரத்துல பொண்ணு கட்டனும்.மேரேஜ்க்குப்பின் அடிக்கடி அம்மா வீட்டுக்குப்போனா ரிட்டர்ன் ஆக ஒரு வாரம் ஆகும்.நிம்மதியா நாம இருக்கலாம்



----------------------


12. அத்தான்.மேரேஜ்க்கு முன்னே எனக்கு துரோகம் பண்ணி இருக்கீங்ளா?




இல்லை.சமையல் தான் பண்ணி இருக்கேன்




-------------------------------



13. சூர்யகாந்திப்பூ செவ்வந்திப்பூ வை கட்டில்ல தூவி ஒரு பிகர் படுத்திருந்தா அது தான் மஞ்சக்COTடு மைனா



--------------------------------


14. அத்தான்.செஸ் விளையாடலாமா?



 சாரி.எனக்கு ஆடத்தெரியாது



. சுத்தம்.செஸ்சும் தெரியாதா?


----------------------------


15. செஸ் விளையாட்ல 64 கட்டங்கள்.ஆய கலைகள் 64 ,எட்டு எட்டா மனித வாழ்வைப்பிரிச்சாலும் 8×8=64


-------------------------


16. டீச்சர்.லீவ் லெட்டர் எழுத கூச்சமா இருக்கு.



ஏண்டா?



கடைசில தங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன் னு வருதே,தப்பா நினைக்க மாட்டாங்ளா?



-------------------------------


17. ஆபீஸ் பிகர்கள் ஹேண்ட்பேக்.ரிஸ்ட் வாட்ச்,டிபன் பாக்ஸ் எல்லாமே சின்னதா இருக்கே ஏன்?


------------------------


18. ஏடி வெள்ள(ல்ல)ச்சிறுக்கி என்னைத்தெரியலையா?




சாரி.நினைவில்லை.




 ம்க்கும்.ஒரு ஆள்னா நினைவிருக்கும்



---------------------------


19. டாக்டர்.இடுப்பு பிடிச்சிருக்கு.




லேடி டாக்டர் லேகா - என் கணவரும் அப்டித்தான் சொல்வாரு.



விளையாடாதீங்க டாக்டர்.என் இடுப்பு சுளுக்கு



0--------------------------



20. 40 வயசு ஆனாலும் சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைய பொருந்திய த்ரிசாவை சாமுத்ரிஷா என சொல்லலாமா?




---------------------------



21. கல்யாணப்பந்தில பிகர் உனக்கு பரிமாறும்போது வடை வேணுமா? பாயாஸம் ஊற்றவா? என கேட்டால் வேணாம்னு சொல்லிடக்கூடாது.ஊற்ற வா என் க



---------------------------


22. பெரும்பாலான ஹைக்ளாஸ் பிகர்கள் மூக்குத்தியை இடது மூக்கு மடலில் அணிகிறார்கள் # பொழப்பத்த ஆராய்ச்சி




-----------------------------



23. RELATIONSHIP = உறவுகள் ,RELATION SHIP = சொந்தக்காரரின் கப்பல், RELATION'S HIP = முறைப்பெண்ணின் இடுப்பு # சபாஷ் துபாஷ்




---------------------------


24. காக்கிச்சட்டை - பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே - பாடலில் மாதவி தாவணியும் போடல.மப்பிலும் இல்லை .லாஜிக் இடிக்குதே?;-)



---------------------------


25/ டியர், நான் அழகா இருக்கேனா?



ஆமான்னு சொன்னா உன்னை கையில பிடிக்க முடியாது , இல்லைன்னு சொன்னா தொடவே விட மாட்டே






----------------------------------

Tuesday, February 26, 2013

30 வகை விருந்து சமையல்’ ரெசிபிகள்

'30 வகை விருந்து சமையல்’ ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.



 ''ஸ்டார்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட் என்ற மூன்று வகையிலுமே, சுவையில் அட்டகாசமாக இருக்கும் பல்வேறு ரெசிபிகளை தந்திருக்கிறேன். விருந்துக்கு அழைப்பு விடுங்கள்... அசத்திவிடுங்கள்'' என்று ஆருயிர் தோழியாக, உற்சாக மிகுதியுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, கண்ணுக்கு விருந்தாகும் வகையில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
 
செஷ்வான் வெஜ் நூடுல்ஸ்
தேவையானவை: பிளெய்ன் நூடுல்ஸ் - 200 கிராம், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, கோஸ் - 50 கிராம், வெங்காயத்தாள் - சிறு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை மிகவும் மெல்லியதாக, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நீரை சேர்த்து சூடாக்கி, அதில் நூடுல்ஸை உடைத்துப் போடவும். ஒரு நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்துவிட்டு, நூடுல்ஸை குளிர்ந்த நீரில் அலசி தனியே வைக்கவும். பிறகு அடுப்பில் தவாவை வைத்து சூடாக்கி, நூடுல்ஸை அதன்மேல் பரப்பி, நூடுல்ஸின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெயைப் பரவலாக ஊற்றி 2 முறை திருப்பிவிட்டு எடுத்து வைக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைப்பது அவசியம்). காய்கள் வெந்ததும் கடைசியாக நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.
இந்த செஷ்வான் வெஜ் நூடுல்ஸ் இருந்தால், விருந்து களைகட்டும்

ஸ்வீட் கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப் (ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2 (துருவவும்), தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் நெய், உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, துருவிய வெங்காயத்தை பிழிந்து சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக மசித்து வைத்துள்ள ஸ்வீட் கார்னையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உப்பு சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
சப்பாத்தி மாவைக் கிண்ணம் போல செய்து ஸ்வீட் கார்ன் கலவையை கொஞ்சம் எடுத்து அதனுள் வைத்து மூடி, சற்று கனமான சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் கிரேவி
தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று, வெங்காயம் - 4, பூண்டு - 8 பல், முந்திரிப்பருப்பு - 10, காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, லவங்கம் - 2, பட்டை - 2 சிறு துண்டுகள், சீரகம் - ஒன்றரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:  காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும். முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, லவங்கம், பட்டை, சீரகம், தனியா, தேங்காய் துருவல், மஞ்சள்தூள், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர் துண்டுகளுடன், வெங்காயம் - பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கப் நீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும் (மசாலா வாணலியில் ஓட்டமாலிருக்க அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்)
காலிஃப்ளவர் வெந்து கிரேவி ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சென்னா பேடா
தேவையானவை: வெள்ளை சென்னா - 200 கிராம், பெரிய வெங்காயம் - ஒன்று, வெங்காயத்தாள் - 5, பூண்டு - 4 பல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சென்னாவை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள், ஊறிய சென்னாவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும், அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை சேர்த்து... மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

வெஜிடபிள்ஸ் க்ரிஸ்பி
தேவையானவை: கோஸ் - 100 கிராம், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 3 பல், மைதா - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: கோஸ், கேரட், குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்¬றை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு மெல்லியதாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பூண்டு, மைதா, மிளகாய்த்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

கேரட் சூப்
தேவையானவை: கேரட் துண்டுகள் - 2 கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு சிட்டிகை, காய்கறி வேக வைத்த நீர் - 2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பிறகு கேரட் துண்டுகள், காய்கறி வேக வைத்த நீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பின்னர் இதை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அடித்து, உப்பு சேர்த்து நன்கு வடிகட்டி,  மீண்டும் வாணலியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதை பௌலில் ஊற்றி, மேலே க்ரீம் சேர்த்து புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குஸ்கா
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கொத்தமல்லித் தழை, புதினா - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பிரிஞ்சி இலை - ஒன்று, பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய்ப் பால் - ஒரு கப், எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும், குக்கரில் நெய், எண்ணெய் விட்டு... பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் - தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் ஒரு கப் நீர், உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கழுவிய அரிசியை சேர்த்து, குக்கரை மூடி, நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு (அடுப்பை 'சிம்’மில் வைத்து) 10 நிமிடத்துக்குப் பிறகு நிறுத்தவும். பிரஷர் போனதும் குக்கரைத் திறக்க... ஹாட் ஸ்பைஸி குஸ்கா 'கமகம’வென்று தயார் நிலையில் இருக்கும்.

பிரிஞ்சால் ஸ்டூ
தேவையானவை: கத்திரிக்காய் (விதையில்லாதது) - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு,  கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, லவங்கம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சின்ன கோலிகுண்டு அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா  - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கசகசா - 4 டீஸ்பூன், முந்திரி - 3, வெந்தயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை, எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். கத்திரிக்காயை ஓரங்குல சதுரத்துண்டுகளாக அரிந்து கொள்ளவும். தேங்காயைத் துருவி, சிறிது நீர் விட்டு அரைத்து 3 முறை பால் எடுத்து, மூன்றையும் தனித்தனியே வைக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்துள், லவங்கம் தாளித்து... கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்க்கவும். பிறகு வறுத்துப் பொடித்த மசாலாப்பொடி, மூன்றாம்  முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும். நன்கு கொதிக்கும் இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்க்கவும். கிரேவி சற்று கெட்டியானதும் முதல் முறை எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கிளறி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி, பரிமாறவும்.

 ஸ்பைஸி வெஜ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா 2, உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சைப் பட்டாணி -  ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 6 பல், தனியா, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய், நெய் - தலா அரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அவற்றை தனித்தனியாக, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில்  நன்கு அரைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
குக்கரில் நெய், வெண்ணெய் சேர்த்து உருக்கி... பட்டை - லவங்கப் பொடியை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளையும். உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  இதனுடன் அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்த்து, கொதி வந்ததும், கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த பிரியாணியின் வாசனை ஆளைத் தூக்கும்.

 கமகம காலிஃப்ளவர் சூப்
தேவையானவை: காலிஃப்ளவர் - மிகவும் சிறியது (நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - ஒன்று, லவங்கம் - 2, மிளகு - 4, வெண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - அரை டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொடியாக நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவருடன் லவங்கம், மிளகு, 2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மிக்ஸியில் மசித்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதா சேர்த்து நன்கு வதக்கி, பால் விட்டு நன்கு கலக்கவும். இதனுடன் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி, 2 கொதி விட்டு... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.


டேஸ்ட்டி வெஜ் சூப்
தேவையானவை: கேரட் - ஒன்று, பீன்ஸ் - 6, கோஸ் - 50 கிராம், கொத்தமல்லி - சிறிய கட்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கார்ன்ஃப்ளார்          - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: கேரட், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து மிகவும்  பொடியாக நறுக்கவும். கார்ன் ஃப்ளாரை கால்  கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் 3 கப் நீரை கொதிக்கவிட்டு, கேரட், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவிடவும். காய்கறி நன்கு வெந்ததும் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி... மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும். 

பனீர் ஸ்டஃப்டு குல்ச்சா
தேவையானவை: மைதா, கோதுமை மாவு, பனீர் (துருவியது) - தலா ஒரு கப், முந்திரி - 10 (பொடியாக நறுக்கவும்), சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். ஒரு கப்பில் பனீர், முந்திரி, சாட் மசாலா, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனுள் பனீர் கலவையை வைத்து மூடி, சிறிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சூடாக பரிமாறலாம்.

 டிரை ஃப்ரூட்ஸ் ரைஸ்
தேவையானவை: முந்திரி, பாதாம், திராட்சை எல்லாம் சேர்த்து - அரை கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு, பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு -  3 பல், பச்சை மிளகாய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். குக்கரில் தேங்காய்ப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து, கழுவிய அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் வந்ததும் எடுக்கவும். வாணலியில்  ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பாதாமை நன்கு வறுக்கவும். அடுப்பை நிறுத்தி, திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும் (டூட்டிஃப்ரூட்டியை அப்படியே ஃபிரெஷ்ஷாக வைக்கவும்). வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நன்கு வதக்கி, கடைசியாக டூட்டிஃப்ரூட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால்... விருந்தினர்களை 'ஒன்ஸ் மோர்’ கேட்கச் செய்யும்.

 ஷாஹி பனீர் வித் கேப்ஸிகம்
தேவையானவை: பனீர் - 200 கிராம் (வெந்நீரில் கழுவி சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கவும்), குடமிளகாய் - ஒன்று, வெங்காயம் - 2, தக்காளி - 6, பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சிறு சதுரங்களாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு தக்காளி வேகும்வரை கொதிக்கவிடவும். தக்காளி வெந்ததும் பனீர், குடமிளகாய் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 பனீர் ஜால் ஃப்ரீஸ்
தேவையானவை: பனீர் - 200 கிராம், கேரட், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ்  - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் -  தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை சதுர சதுரமாக 'கட்’  செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கேரட், வெங்காயம், குடமிளகாயை நீள நீளமாக ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கவும், அடி கனமான வாணலியில் வெண்ணெயை உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி... இஞ்சி - பூண்டு விழுது, கேரட், குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீரை சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை மேலே தூவி பரிமாறலாம்).

பிரெட் - ஆலு கபாப்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பச்சைப் பட்டாணி -  ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும், மைதாவை அரை கப் நீரில் கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளை - பட்டாணி கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் 'கபாப்’ தயார் செய்து கொள்ளவும். கபாப்பை மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து, பரிமாறவும்.

 உருளை - காலிஃப்ளவர் சீஸ் கிராக்கெட்ஸ்
தேவையானவை: காலிஃப்ளவர் - மீடியம் சைஸ், உருளைக்கிழங்கு - 2, துருவிய சீஸ் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், மைதா - 4 டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை 2 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். இதனுடன் மசித்த உருளை, துருவிய சீஸ், அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு, 2 டேபிள்ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவம் கொடுக்கவும். இதுதான் சீஸ் கிராக்கெட்ஸ். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவைச் சற்று நீர்க்கக் கரைத்து அதில் சீஸ் கிராக்கெட்ஸை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து பரிமாறவும்.

 மீல்மேக்கர் பிரியாணி
தேவையானவை - மீல்மேக்கர் கோலா வுக்கு: மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) - 25, பொட்டுக்கடலை - கால் கப் (மிக்ஸியில் பொடிக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5 பல், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2, பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பிரியாணிக்கு: பாசுமதி அரிசி - 2 கப், தேங்காய்ப் பால் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா 3, பச்சை மிளகாய் - 5, இஞ்சி -  பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து, தண்ணீரில் அலசி நன்கு நீரை ஒட்டப் பிழிந்து, ஒன்றிரண்டாக 'கட்’ செய்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து,  மிக சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தால்... மீல்மேக்கர் கோலா ரெடி.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும், பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, ஒரு கப் நீர் விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். (வதக்கும்போது சிட்டிகை உப்பு சேர்க்கவும்). பிறகு, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதில்  ஊற வைத்த அரிசி மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடத்துக்குப்  பிறகு இறக்கவும்.
பிரியாணியுடன் மீல்மேக்கர் கோலா உருண்டைகளை சேர்த்து, சாதம் உடையாமல் கிளறி, ஆனியன் - தயிர் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

 உருளை மசாலா கிரேவி
தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2, தயிர் ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை வெறும் வாணலியில் சூடுபட வறுத்து, பிறகு ஆறவைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
தோலுரித்த உருளையை முள் கரண்டியால ஆங்காங்கே குத்தி உப்பு சேர்த்த தயிரில் அரை மணி நேரம் ஊறவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிரில் ஊறிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதித்ததும், மிக்ஸியில் பொடித்த பொடியைத் தூவி மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 தக்காளி - வெண்ணெய் சூப்
தேவையானவை: தக்காளி - 5, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான வாணலியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து, 3 டம்ளர் நீர் ஊற்றி, 10 நிமிடம் வேகவிட்டு, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அரைத்து வடிகட்டவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, மைதாவை சேர்த்துக் கிளறி, பால் சேர்த்து நன்கு கலக் கவும். ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக் கும் தக்காளி சாறை அதில் ஊற்றி, நன்றாக கலக்கி, மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

 முருங்கைக்காய் சூப்
தேவையானவை: முருங்கைக்காய் - 4, பாசிப்பருப்பு -  ஒரு டேபிள்ஸ்பூன் (குழைய வேகவிடவும்), வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 2 பல், வெண்ணெய், கார்ன்ஃப்ளார் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கார்ன்ஃப்ளாரை கால் கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு, ஆறியதும் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெயை  உருக்கி, பொடி யாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கி, மசித்து வைத் துள்ள பாசிப்பருப்பு - முருங்கை கலவை மற்றும் 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி... மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

 பட்டாணி - பட்டர் கிரேவி
தேவையானவை: பச்சைப் பட்டாணி - 200 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெரிய தக்காளி - 5, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு, வெண்ணெய், எண்ணெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறவும். பிறகு, தேவையான நீர், பட்டாணி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, மூடி வைக்கவும் (பட்டாணி வேகும் வரை). பட்டாணி வெந்து, கிரேவி கெட்டியானதும் இறக்கி, மல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

 குடமிளகாய் - வெள்ளரி சாலட்
தேவையானவை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், சர்க்கரை -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு கழுவி, சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றுடன் மிளகுத்தூள், சாட் மசாலா, சர்க்கரை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

 பனீர் க்ரீன் கிரேவி
தேவையானவை: பனீர் - 100 கிராம் (மிதமான சூட்டில் இருக்கும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்), பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கசகசா - அரை டீஸ்பூன், தயிர், உப்பு, வெண்ணெய், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கசகசா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடாக்கி... அதனுடன் அரைத்த விழுது, சிறிதளவு நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது பனீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

 ஆரஞ்சு - வாழைப்பழ சாலட்
தேவையானவை: ஆரஞ்சு சுளைகள் - 10, வாழைப்பழம் - ஒன்று, அன்னாசிப்பழம் - ஒன்று, ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு, மாதுளை முத்துக்கள் - சிறிதளவு.
செய்முறை: ஆரஞ்சு சுளைகளை நார், விதை எடுத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தை பொடியாக நறுக்கவும். பழங்களுடன் ப்ரெஷ் க்ரீம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, 'ஜில்’லென்று பரிமாறவும்.

 நவாபி வெஜ் கறி
தேவையானவை: வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று,  பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - ஒரு கப், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 4 பல், முந்திரி - 8, தேங்காய்ப் பால் - அரை கப், ஃப்ரெஷ் தயிர் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - அரை கட்டு, ஃப்ரெஷ் க்ரீம், நெய் - தலா 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - ஒரு கப், லவங்கம், ஏலக்காய் - தலா 3, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன சதுர  துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மற்ற காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் மசாலா, உப்பு என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி, கொஞ்சம் நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப் பால், தயிர், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். இறக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.

 பனீர் கீர்
தேவையானவை: பால் - அரை லிட்டர், பனீர் துண்டுகள் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, சர்க்கரை - கால் கப் அல்லது விருப்பத்துக்கேற்ப.
செய்முறை: பனீர் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் நன்கு கழுவி துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை சூடாக்கவும். பாலை சற்று ஆற வைத்து... பனீர், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

 ஆப்பிள் கோவா
தேவையானவை: ஆப்பிள் - 2, இனிப்பு இல்லாத கோவா, சர்க்கரை - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 6, நெய் - கால் கப்.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். பாதாம், முந்திரியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் சீவிய முந்திரி, பாதாமை லேசாக வறுத்து எடுக்கவும். வாணலியில் துருவிய ஆப்பிளை சேர்த்து (அடுப்பை 'சிம்’மில் வைத்து)  நன்கு கிளறவும். 10 நிமிடம் கழித்து பால்கோவா, சர்க்கரை சேர்த்து மேலும் கிளறவும் (சர்க்கரை சேர்த்தவுடன் சற்று இளகும்). எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி, பரிமாறவும்.

 மாதுளை - உருளை ராய்த்தா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்), மாதுளை முத்துக்கள் - ஒரு கப், கறுப்பு திராட்சை - 10, கெட்டித்தயிர் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடி யாக நறுக்கவும்).
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்க வும். தயிரில், எல்லாப் பொருட் களையும்  சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். 

 ஃப்ரூட் கஸ்டர்ட்
தேவையானவை: பால் - 2 கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பைனாப்பிள், வாழை போன்ற பழங்களை பொடியாக நறுக்கிய கலவை -  ஒரு கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைக்கவும். மீதியுள்ள பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது கஸ்டர்ட் கரைசலை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைத்து) மேலும் கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். ஆறியதும் பழக் கலவை, தேன் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென்று பரிமாறவும்.

நன்றி - அவள் விகடன்

 

ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.

கட்டண உயர்வு இல்லா ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! 
 
 
புதுடெல்லி: 2013-14 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


புதிய ரயில்கள், திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு  வருகிறார்.


அவர் தனது உரையில் ரயில்வேயின் தொடர் நஷ்டம்  காரணமாக பயணிகளின் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாகவும், ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்குவதில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.'


ரயில் விபத்துகளை குறைப்பதில் இலக்குகள் எட்டப்பட உள்ளதாக கூறிய பவன்குமார் பன்சால், இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார்.


தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனாலும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதன்முறை என்பதனாலும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.



ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அமசங்கள் 


*  பயணிகளுக்கான ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை 

 
புதிய ரயில்கள் 


* 67 புதிய விரைவு ரயில்கள் & 27 பயணிகள் ரயில் அறிமுகம் 


* 58 பயணிகள் ரயில்களின் பயண  தூரம் நீட்டிப்பு

*  தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள் அறிமுகம் 



* தட்கல், முன்பதிவு & முன்பதிவு ரத்து கட்டணம் அதிகரிக்க்ப்படும்



*  2013 - 14 ல் பயணிகள் ரயிலின் எண்ணிக்கை 12,335 ஆக அதிகரிப்பு

* பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது


* 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்னர் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்காது


* * பயணிகள் ரயில் சேவைகள் மூலமான இழப்பு 2011 ல் ரூ.4,955 கோடியாக இருந்து, 2011-12 ல் ரூ. 22,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2012-13 ல் ரூ. 24,600 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


*  கல்வி நோக்கத்துடன் 'ஆசாதி எக்ஸ்பிரஸ்' திட்டம் அறிமுகம்


* ரயில்வேயின் தொடர் நட்டம் காரணமாக பயணிகளுக்கு குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அதனை களைய முயற்சிப்போம்.


* செலவுகள் அதிகரிப்பு காரணமாக சரக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.



* சில குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களில் அனுபூதி என்ற சிறப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இதில் உயர்தர, ஆடம்பர சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

* இணையதள முன்பதிவு நேரம் காலை 12.00 முதல் இரவு 11.30 வரை நீட்டிக்கப்படுகிறது.

* புகார்களுக்கும், ஆலோசனைகளுக்கும் 1800 - 111 - 321 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.




* இன்டெர்நெட், மொபைல் போன்கள் மூலமாக 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


* இந்த ஆண்டு முடிவில் அடுத்த தலைமுறை மின் டிக்கெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதன்முலம் ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்கள் வழங்க முடியும்.


*முன்பதிவு நிலவரத்தை அறிய விரைவில் எஸ்.எம்.எஸ். ( SMS)  அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.


* சக்கர நாற்காலி உள்ள பெட்டிகள் பரிசீலனையில் உள்ளது.

* ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற வசதி செய்யப்பட உள்ளது.

* 104 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
* ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே துறைக்கு 5.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய ரயில்வே அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.95,000 கோடியை ஈட்டியே ஆகவேண்டும்.

* மாநகர ரயில் சேவையில் பெண்கள் பாதுகாப்பிற்காக பெண் ரயில்வே காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* 2012-13 ஆம் நிதியாண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.24,000 கோடி இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



* RPF பணியிட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

* பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது.


* கூடுதல் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில ரயில்களில் இலவச WiFi அமைக்கப்படும்.

* முக்கிய ரயில் நிலையங்களில் 179 மின் படிக்கட்டுகள் மற்றும் 400 மின் தூக்கிகள் செயல்படுத்தப்படும்.


* இந்தியாவில் உள்ள சுமார் 10,797 ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 17 முக்கியமான ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

* ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இரும்புத் தாது சுரங்கங்களை இணைக்க ரூ.800 கோடியில் திட்டம்*கழிவு இரும்பு விற்பனை மூலம் ரூ.4500 கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு*நாக்பூரில் ரயில் துறை பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது*இணையதள முன்பதிவு வசதி அதிகாலை இரவு 12.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிப்பு*

100 கோடி டன் சரக்கு கையாளும் திறன் படைத்த 100 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்*ரயில்வே அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க செகந்தராபாத்தில் நிறுவனம்*
வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் - பஸ் வசதி மேற்கொள்ளப்படும்*

மேலும் 6 'ரயில் நீர்' உற்பத்தி நிறுவனங்களை அமைக்க முடிவு* ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1லட்சத்து 52 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்*

* சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்

* முன்பதிவில் தாமதத்தை தவிர்க்க IRCTC சேவை துரிதப்படுத்துகிறது.
நிமிடத்திற்கு 7,200 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்* பெண் பயணிகள் பாதுகாப்புக்கு புதிதாக 8 கமபெனி படைகள் அமைக்க நடவடிக்கை*நலிவடைந்த பிரிவினர் 47000 பேருக்கு வேலைவாய்ப்பு*ஆதார் திட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு*

அனுபூதி என்ற பெயரில் அதிநவீன ஏசி ரயில் பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்படும்* ரேபெரேலி, பாலக்காடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய ரயில் பெட்டிகள் அமைக்கும் தொழிற்சாலை நிறுவப்படுகிறது* ராஜீவ் கேல் ரத்னா விருது, ஒலிம்பிக் விருது பெற்றவர்களுக்கு இலவச ரயில் பாஸ்
 
 
 
தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம். 
 
 
 
2013-14 ஆம் நிதியாண்டில் ரயில்வே பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  14 . புதிய அறிவிக்கப்பட்டுள்ளன.
 
 
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்: 
 
1.பாலக்காடு- ஈரோடு 2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ் 
 
 
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில் 
4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக) 
 
 
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில் 
 
 
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி 
 
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக) 
 
 
8.விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில் 
 
9.சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில் 
 
10.சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்.
 
பாசஞ்சர் ரயில்கள்: 
 
1.விழுப்புரம்- காட்பாடி தினசரி 
 
2.விழுப்புரம்-மயிலாடுதுறை தினசரி 
 
3.பாலக்காடு- கோவை- ஈரோடு 
 
4.மன்னார்குடி- திருச்சி- மானாமதுரை தினசரி
 
 
thanx
 

MURDER 3 - சினிமா விமர்சனம்



மல்லிகா ஷெராவத் கிளாமரை நம்பி  ஹாலிவுட் கில்மா கம் சஸ்பென்ஸ் படமான UNFAITHFULL  படத்தை ரீமேக்கி மர்டர் பாகம் 1 எடுத்தாங்க , THE CHASER என்ற கொரியன் மூவியை  உல்டா பண்ணி மர்டர் 2 எடுத்தாங்க , இப்போ  The Hidden face   படத்தை ( கொலம்பியா) உல்டா பண்ணி  மர்டர் 3 எடுத்திருக்காங்க . மற்ற இரு பாகங்களை விட இது சஸ்பென்ஸ் , த்ரில்லிங்க் ஜாஸ்தி .

  ஹீரோ ஒரு ஃபேமஸ் ஆன ஃபோட்டோ கிராஃபர். அவரோட காதலி அவரை விட்டுப்போன சோகம் தாங்காம சரக்கு சங்கர லிங்கம் ஆகிடறாரு  .தண்ணி அடிக்க ரெகுலரா வர்ற பார்ல ஒரு ஃபிகரைப்பார்க்கறாரு, பார்ல ஒர்க் பண்ணுது . 


 ஹீரோ   கட்டதுர மாதிரி கடலை போட்டே  தன் சொந்தக்கதையை அள்ளி விட்டே அதை கரெக்ட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மேட்டரை முடிச்சிடறாரு .

இப்போ புதுக்காதலி ஹீரோ வீட்ல யாரோ பேய் அல்லது ஒரு தீய சக்தி நடமாட்டம் இருப்பதா உணர்றா. ஆனா போலீஸ் ஹீரோ மேல சந்தேகப்படுது. அவரோட முதல் காதலி காணாம போனதுக்கு காரணமே அவர் தான்னு நினைக்குது , கொலை பண்ணிட்டாரோன்னு சந்தேகப்படுது 


ஆனா சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ அவிழ திரைக்கதை பட்டாசைக்கிளப்புது . எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தின் பின்பாதியில் அசர வைக்குது .


 




 ஹீரோவா  ரன் தீப் , அண்ணனுக்கு முக்கிய வேலையே 2 ஃபிகர்களையும் கரெக்ட் பண்றதுதான். இதுக்கு லட்சக்கணக்குல சம்ப்ளம் வேற . கரும்பு தின்னக்கூலி . ஸ்டொமக் பர்னிங்க் . நடிக்க வெல்லாம் தேவை இல்லை, சும்மா வந்து நின்னாலே போதும்.


 ஹீரோயின்கள் 2 பேரு . 2 வது காதலியா வர சாரா லோரன்  தேங்காய் பர்பி மாதிரி இருக்குது . கடிச்சுப்பார்த்தியா?ன்னு எல்லாம் லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது . வழு வழுன்னு வெண்ணெய் தடவிய தேகம் . செம கலர் , லக்கி நெம்பர் 38.படத்தின் முன் பாதி பூரா இவர் ராஜ்ஜியம் தான் . பேய் இருக்கோன்னு நம்மையே நம்ப வைக்கும் அளவு இவர் ரீ ஆக்‌ஷன் இருக்கு. நல்லா வருவாங்க பிற்காலத்துல


 அடுத்த ஹீரோயின்அதிதிராவ் .ஒல்லியா இருக்கும் தர்பூசணிப்பழம் மாதிரி கலரு,பால்கோவா மாதிரி உடம்பு .( சரியான சாப்பாட்டு ராமண்டா நீ) இவர் நடிப்புதான் படத்தின் ஆணிவேர். படத்தின் மெயின் கேரக்டரே இவர் தான் ,அறைக்குள் மாட்டிக்கொண்டு துடிக்கும் துடிப்பென்ன? தன் கண் முன்னே காதலன் வேறொரு பெண்ணுடன் கில்மா பண்ணும்போது அடையும் வலி ,  என  அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம் . தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் பின் பாதியில் பிரமாதமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கு என்ற தைரியத்தில் முன் பாதியில் அசால்ட்டாக கதை சொல்லாமல் ஏதோ கில்மாப்படம் போல் காட்சிகள் வைத்தது . ஒரிஜினல் அளவுக்கு இல்லைன்னாலும் ஹிந்திக்கு இது நெம்ப ஓவருங்கோ


2. ஹீரோயின்  செலக்‌ஷன்ஸ் பிரமாதம் , தொப்பை இல்லாம , அதே சமயம் ஒல்லிப்பிச்சானாக இல்லாம நச் ஃபிகர் 2 பேரை புக் பண்ணி  முடிஞ்சவரை இருவரையும் பேலன்ஸ் பண்ணி ஐ மீன் காட்சிகளில்  பிரமாதப்படுத்தி இருப்பது


3.  படத்தின் பின்னணி இசை எனப்படும் பி ஜி எம்  பின் பாதியில் கலக்கல் ரகம் , ஒளிப்பதிவும் பக்கா


4. கதைக்களம் சவுத் ஆஃப்ரிக்கா அப்டினு சொல்லிக்கிட்டாலும்  படம் முழுக்க ஒரே வீட்டில் முடிச்சது லோ பட்ஜெட்டுக்கான இலக்கணம் , குறைந்த முதலீடு , நிறைந்த லாபம்


5. திகில் , சஸ்பென்ஸ் படங்கள் என்றால் பி ஜி எம் டொம் டொம்னு  அடிக்கனும் என்றில்லாமல் தேவையான இடங்களில் மட்டும் அதை யூஸ் பண்ணி பெரும்பாலான இடங்களில் அமைதியாய் அப்படியே விட்டது . அமைதியும் ஒரு இசையே என உணர்த்தியது


6. பாலிவுட்டின் டாப் 10 சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஒரு லிஸ்ட்  எப்போ எடுத்தாலும் இந்தப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு


 



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. என்னோட முத கேள்வியே என்னோட ஜி கே வை வளர்த்துக்க , சும்மா தெரிஞ்சு வெச்சுக்க.. அதாவது முதன் முதலா அப்போதான் மீட் பண்ணும் ஒரு ஃபேமிலி ஃபிகரை பேசியே கரெக்ட் பண்ணி அன்னைக்கு  நைட்டே மேட்டரை முடிக்க முடியுமா?



2. அறையில் மாட்டிய ஃபிகர் கண்ணாடி வழியே எல்லாத்தையும் பார்க்க முடியுது , ஆனா அவங்க கூப்பிடும் குரல் வெளில கேட்காது என்ற வரை ஓக்கே , அந்த கண்னாடியை உடைக்கக்கூட முடியாதா?  ரூம்ல சேர் டேபிள் இருக்கு . உடைக்க முடியாத கண்ணாடி என்பதை காட்டிக்கவாவது ஹீரோயின் முயற்சி பண்ணி தோற்பது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம் .


3. ஹீரோ மேல சந்தேகப்படும் போலீஸ்  ஹீரோ வீட்டை தரோவா செக் பண்ணி இருந்தா அந்த ரகசிய அறையை கண்டு பிடிசிருக்கலாமே?  அட்லீஸ்ட் வீட்டை செக் பண்ற மாதிரி கூட சீன் வெக்கலையே?


4. அறையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் சாப்பிட , குடிக்க ஏதும் இல்லாம  எப்படி அத்தனை நாள் உயிரோட இருக்க முடிஞ்சுது?



5. பல நாட்கள் பட்டினி கிடந்த ஹீரோயின் நெம்பர் 1  கொழுக் மொழுக் ஹீரோயின் நெம்பர் 2 வை திடீர்னு அவ்வளவு ஆவேசமா எப்படி தாக்கி வீழ்த்த முடியும் ? அவளே சொங்கிப்போய் இப்பவோ அப்பவோன்னு கிடக்கா


6. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பாதாள அறைக்கு முதன் முறையா ஹீரோயின் 1 போகும்போது  சுத்தமா ரூம் இருக்கு , சிலந்தி வலை கட்டி  தூசும்  குப்பையும் இருக்கற மாதிரி காட்டி இருக்க வேணாமா?



 


 மனம் கவர்ந்த வசனங்கள் 


 படத்துல வசனத்துக்கு வேலையே இல்லை , கொஞ்ச நஞ்ச வசனமும் ம் ம் ஹா ஹேய் அப்படி முக்கல் முனகல் வசனம் தான்




 ரேட்டிங்க் - 7 /10


 சி பி கமெண்ட் - சஸ்பென்ஸ் , திகில்  ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பிரமாதமான திருப்பம் உள்ள படம், இந்தப்படத்துக்கு தமிழ் நாட்டில் சரியான ஓப்பனிங்க் இல்லாததுக்குக்காரணம் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததே.. இந்தப்படம் கண்டிப்பா தமிழ்ல யாராவது ரீ மேக்குவாங்க ..

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்





Film: Murder 3

Cast: Randeep Hooda, Aditi Rao Hyadri, Sara Loren, Rajesh Shringapure, Shekhar Shukla, Bugs Bhargava



Director: Vishesh Bhatt



Producer: Vishesh Films, Fox Star Studios


Writer: Mahesh


 

மிஸ் , ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?


மார்கழி மலரின் ஈர இதழில்
மறைந்து கிடக்கும் பூவின் பெண்மை
இறைந்து கிடக்கும் அன்பின் வாசம்
நிறைந்து அடைக்கும் என்சுவாசம்

மொட்டாய் குவிந்து கோபத்தில் சிவந்து
மலராய் விரிந்து மஞ்சத்தில் கிளர்ந்து
சிலையாய் நெளிந்து நெஞ்சுக்குள் நுழைந்து
அனலாய் அணைக்கும் புனலாய் இழைந்து

இசையின் வாசம் இதுவென காட்டும்
முனகல் நேசம் முழுதும் பேசும்
சுகமும் சுமையும் சுந்தர மாகும்
அகடும் முகடும் அடிக்கடி மாறும்

இகமும் செகமும் ஈடாகுமா..? - உனக்கு
இந்திர சொர்க்கம் காலாகுமா...? - எனக்கு
மந்திர மார்க்கம் நீயாகுமா...? - நமக்கு
சுந்தர சுதந்திரம் நிலவாகுமா..?

அழகின் ஒளியில் வழியும் ஆசையில்
அகமும் ஒளிரும் நெகிழ்ந்தே நாளும்
புறமும் மிளிரும் புன்னகை இதழில்
பூவின் தீண்டல் பூமிக்காந்தம்

அல்லும் பகலும் ஆருயிர் உன்னை
அணுவளவும் நீங்காத ஆயுள் வேண்டும்
கல்லும் காடும் மலையும் ஆறும்
நன்னும் மேடும் நாம்வாழ வேண்டும்

புல்லில் தொடங்கிய புழுதியின் வாழ்க்கை
சொல்லில் அடங்கிய கவிதையின் காதல்
என்னுள் அடங்கி உன்னுள் உயிர்த்து
ஏழ்பிறவிக் கடந்தும் சீவித்திருக்கும்.
1. பூனம் பான்டே சேலை உங்க கடைல இருக்கா?



 இருக்கு மேடம்.டேய்.அக்காவுக்கு அந்த கர்ச்சீப் எடுத்துக்குடு



-------------------------------


2. எப்பவும் பெண்களைப்பற்றியே சிந்திக்கும் ஒரு தலைவரின் மேடைப்பேச்சு  எப்படி ஸ்டார்ட் ஆகும்?

 தெரியலையே? நீயே சொல்லு 

 லேடீஸ் & ஜெண்ட்டில் விமன்


---------------------------


3. பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?




 மாப்ளை சமைச்சா வக்கணையா சாப்பிடத்தெரியும் 


-----------------------


4.  நைட் 10 மணிக்கு தூங்கறதா இருந்தா 8 மணிக்கே டின்னரை முடிச்சுடனும். டாக்டர்.எனக்கு மேரேஜ் இன்னும் ஆகலை.2 மணி நேரம் வேற என்ன பண்ண ?



-------------------------


5. சயின்ஸ் டீச்சர் சரோஜா - தண்ணீரில் கரையாதது எது? 



போலீஸ் காரர் மகன் - எங்கப்பா தொப்பை 



-----------------------



Photo


6. யுவர்ஆனர்.கிளாமரா டிரஸ் பண்றது அவரவர் விருப்பம்.தடை போடக்கூடாது. 




ஜட்ஜ் -அட்லீஸ்ட் கொஞ்சமாவது கவர் பண்ணிக்கம்மா.எனக்கே ஒரு மாதிரி இருக்கு 



------------------------------


7. டாக்டர்.கிளினிக் வந்த என்னை ஏன் போ நீ னு துரத்தறீங்க?



 மிஸ் வாணி.நீங்க தான் என் முத போணி னு தான் சொன்னேன், போ நீ -னு சொல்லலை 


-----------------------


8. அத்தான்..கிச்சன் இஸ் மை ப்லேஸ்..யாரையும் உள்ள விட மாட்டேன்




..நல்ல வேளை இதே பார்முலாவை பெட்ரூம்க்கு நீ பாலோ பண்ணலை.நான் தப்பிச்சேன்


----------------------------


9/. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவங்க தரணி ஆள்வாங்கனு ஜோசியர்ங்க அள்ளி விடறாங்ளே.அத்தனை பேரு ஒரே உலகத்தை ஆண்டா குழப்பம் வராதா?



------------------------



10. கீப் இன் டச் னா என்ன அர்த்தம்? 

சின்ன வீட்டை தொடு



--------------------




11. டாக்டர்.யார் எது சொன்னாலும் முத டைம் எனக்கு புரியமாட்டேங்குது.ரிப்பீட் னு கேட்டுடறேன்.



 புரியலையே.ரிப்பீட் . 


------------------------


12. உங்க பையன் சினிமா , இண்ட்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றீங்க? 


ராதா சதா கூகுள் தெய்வம் அப்டிங்கறானே?




-------------------------------------------------------------------------------



13. டியர்.என் காதல் பரி பாஷை உங்களுக்கு ஏன் புரியறதே இல்லை?




 நான் என்ன குதிரைக்காரன் பேமிலியா? பரி பாஷை புரிஞ்சுக்க? 




---------------------------


14. டாக்டர்.இனிப்பு அதிகம் சேர்த்தா உடம்பு உப்புமா?




 நோ நோ ரவை கொஞ்சமாச்சும் சேர்த்தாதான் களர முடியும் உப்புமா 




----------------------------


15. உன் சம்சாரம் விஜய் ரசிகை னு எப்டி கண்டு பிடிச்சே?

- நான் ஒரு தடவை சமைச்சா என் சமையலை நானே வாய்ல வைக்க மாட்டேன்அப்டின்னாளே?




-------------------


Please Share...


16. டாக்டர்.அடிக்கடி சாக்லெட் சாப்டா என்ன ஆகும்?



 உங்களுக்கு சுகர் வரும்.எனக்கு வருமானம் வரும் 



--------------------


17. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும் தூக்கம் வருது 



.சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-) 



----------------------


18. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க?




 இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா? 




----------------------


19.  டீச்சர், மனோரஞ்சிதப்பூ வாசத்துக்கு பாம்பு வருமா?



 அது தெரில , ரஞ்சிதா வாசத்துக்கு நித்தி வேணா வருவார் ;-)



------------------------


20. எனி ஹெல்ப் ஷாலினினு கேட்க லைசென்ஸ் எடுத்தவர் அஜித் மட்டுமே








-------------------------
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி



21. விஜய் நடிச்ச ஆதியே ஹிட் ஆகலை, ஜெயம் ரவி நடிச்ச ஆதி பகவன் மட்டும் ஹிட் ஆகவா போகுது ?






-------------------------------




22. கும்பகோணம் ஃபிகரைப்பார்த்து “ நீங்க குடந்தை மடந்தையா?”ன்னு கேட்கக்கூடாது , அப்புறம் கும்ப கோபம் ஆகிடும்



--------------------------


23. லவ்வுன்னாலே பிடிக்காதுன்னு ஃபிலிம் காட்டும் ஃபிகர் கூட வாலிபால் ல சர்வீஸ் போடும்போது “ லவ் ஆல்”னு சொல்லித்தான் ஆகனும்






------------------------




24. மேத்ஸ் டீச்சர் - உனக்கு  வால்யூ தெரியாத ஒண்ணை X  ( எக்ஸ்) னு வெச்சுக்கோ.



லொள் மாணவன் - ஓக்கே மிஸ், அப்போ ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?








----------------------------------




25. அம்மா மெஸ் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்குன்னா ஜெ வுக்கு கோபம் வந்துடும். வெள்ளைத்தாமரை போல் இருக்கு என்க








------------------------------------


உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்