Sunday, February 17, 2013

கும்கி , மைனா -ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?மியூஸிக் டைரக்டர் இமான் பேட்டி


பாடல் சக்சஸ்க்கு திரைக்கதை காரணம்!

ராகவ்குமார்

இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார் மியூஸிக் டைரக்டர் இமான். இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வலது கை செய்வதை, இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும் என கர்த்தர் சொல்லி இருக்கிறார். ப்ளீஸ்... பப்ளிஸிடி வேண்டாமே..." என்கிறார் அடக்கமாக.
சேவை எண்ணத்துக்கு நீங்கள் சார்ந்துள்ள மதம் தான் காரணமா?
மதமும் ஒரு காரணம். சேவை செய்ய மனிதனாக இருந்தால் போதும். எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன."
உங்கள் பாடல்களில் வரும் ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த வார்த்தைகள் குழந்தைகளை அதிகமாக ஈர்க்கின்றன. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்கக் கூடாது. ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்போது வரும் வார்த்தைகள் இது."
ரொம்ப டச்சிங்கா காதல் பாட்டுக்கு ட்யூன் போடுறீங்களே சொந்த அனுபவமா?

குத்துப்பாட்டுக்கு ட்யூன் போட்டால் டான்ஸ் ஆடிக்கிட்டே ட்யூன் போட்டீங்களான்னு கேட்பீங்களா? எந்த ஒரு ட்யூனும் சக்ஸஸ் ஆக திரைக்கதைதான் காரணம். காதல் என்ற உணர்வு மனிதர்களையும் தாண்டி மற்ற உயிரினங்களில் கூட இருக்கே. ஸோ, காதல் பாட்டுக்கு டச்சிங்கா ட்யூன் போடறது பெரிய விஷயம் கிடையாது."
நிறைய ஹிட் கொடுத்தும், .ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போல உங்கள் மியூஸிக் ரீச் ஆகலையே?
இதற்கான சூழல் எனக்கு அமையலை. எவ்வளவு பெரிய ஹீரோ படமாக இருந்தாலும், மியூஸிக் டைரக்டரா சக்ஸஸ் ஆக, டைரக்டரும், திரைக்கதையும் முக்கியம். விஜய் நடிக்கும்ஜில்லாபடத்துக்கு மியூசிக் பண்றேன். அது எனக்கு வேறொரு இடத்துக்குக் கொண்டு போகும்."
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, விஸ்வநாதன்- இளையராஜா மாதிரி இணைந்து இந்தத் தலைமுறையினர் ஏன் மியூஸிக் பண்றதில்லை?

அன்றைக்கு இருந்த டைரக்டர்ஸ் நம்பிக்கையோட இணைந்து வொர்க் செய்ய வாய்ப்பு தந்த மாதிரி, இன்றைய டைரக்டர்கள் தந்தா நான் யாருடனும் சேர்ந்து மியூஸிக் செய்ய ரெடி."
வொய் திஸ் கொல வெறிபோல உங்க பாட்டு எப்ப சாதனை பண்ணப் போகுது?
சாட்டைபடத்தில்சகாயனேபாடல் நிறைய பேரால் கேட்கப்பட்டு சாதனை செய்தது உங்களுக்குத் தெரியாதா? கின்னஸ் சாதனை செய்வதை மட்டும் மனத்தில் வைத்து கம்போஸ் செய்ய முடியாது. எனது இசை, மக்களில் பலரின் ரசனையோடு ஒத்துப் போகும்போது பெரிய அளவில் ஹிட் ஆகிறது."
சினிமாவில் நடிக்கறதா கேள்விப்படறோமே?

இமான் அண்ணாச்சிதான் சினிமாவில் நடிக்கிறார். இந்த இமான் இல்லை. நிறைய பேர் நான் தான் சினிமாவில் நடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு எப்ப பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம்ன்னு கேட்குறாங்க. என்னைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்யவும், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இமான் கம்போஸர். காம் என்ற பெயரில் புதிய வெப்சைட்டை தொடங்கியுள்ளேன். என்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்டேட் செய்து, அனைவரும் பார்க்க வழி செய்துள்ளேன். "
கும்கிபடத்துக்காக பழங்குடி இசைக் கருவிகளைப் பயன்படுத்தினீர்களா?
மக்களிசையில் முக்கிய வாத்தியமானபறையை பயன்படுத்தியுள்ளேன். பறை இசை மக்களின் மகிழ்வு, கோபம், சோகம், வீரம் என பல உணர்வுகளை வெளிக்கொணரும் ஆற்றல் பெற்றது. தவிர மதுரையில் இருந்து, செயல்பட்டு வரும் நாட்டுப்புற, பழங்குடி இசையை மக்களிடையே பரப்பும்சமர் கலைக்குழுஎன்ற குழுவினரின் மக்கள் இசையையும்கும்கியில் பயன்படுத்தினேன்."
உங்கள் வெற்றிக்கு எது காரணம்?
இன்னைக்குசிட்டின்னு சொல்லப்படற இடத்தில் பெரும்பான்மையானவர்கள் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்கதான். நகரம் பல கிராமத்தினர் சேர்ந்து வசிக்கும் இடம். நகரங்களில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான். எனது இசை மண்சார்ந்து இருப்பதால் இவர்களைச் சென்றடைந்து வெற்றி பெறுகிறது."

நன்றி - கல்கி 

பல ஃபிகரை பார்த்த சாரதி யார் யார்?

1.லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))



2. காதலர் தின 'சர்வே': காதல் நகரமாக டில்லி தேர்வு...# டெல்லி லவ்லி கில்லி சிட்டி




3. நீ ஒரு கஞ்சன் ஜங்கா மாந்தோப்புக்கிளியே பரம்பரை என தெரியும்டி.அதான் நான் கிஸ் கேட்பதே இல்லை.கொடுப்பதோடு சரி




4. எந்தப்பெண்ணிடமும் இல்லாத 1 உன்னிடம் இருக்கிறது #



கவுண்டமணி - 1 இங்கே இருக்கு.இன்னொண்ணு எங்கே இருக்கு?




5. ராஜகுடும்பம் ஜமீன் பரம்பரை என பில்டப் தரும் பிகரிடம் நான்தான் வாயில் காப்போன் என சொல்லி லிப் லாக் கிஸ் செய்க




6. உம்மனாம்மூஞ்சிக்காதலி அமைந்தால் அப்படி வாய்ல என்னதான் வெச்சிருக்கே? என கேட்டு பிரெஞ்ச் கிஸ் செய்க




7. காதலி வாயாடி என்றால் கவலைப்படேல்.உன் வாயை அடைக்க வேற வழி தெரியலன்னு சாக்கு சொல்லி அடிக்கடி லிப் கிஸ் பண்ணலாம்




8. உன் கடைக்கண் பார்வையில் காதல் தெரியுது.உன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நெஞ்சத்தில் காம்பளான் தெரியுது



9. நீ ரோஜா மாதிரி இருக்கே.நான் ஆர் கே செல்வமணி ஆகலாம்னு பார்த்தா என் கிட்டே செல்வம் ,MONEY 2ம் நஹி



10. கூட்டுக்குடித்தனத்தில் யாருக்கும் தெரியாமல் கொலுசு அணியாமல் கட்டிலுக்கு பூனையாய் வந்துவிடும் நீ கள்ளிக்COTடு இதிகாசம்



11. காதலிக்கும்போதும் ,சாகும்போதும் நாம் பாட வேண்டிய பாட்டு - நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே




12. ஊர் என்னனு கேட்டாக்கூட அனர்த்தம்தான்.மிஸ்.நீங்க கன்யா குமரியா?




13. டியர்.நிச்சயம் பண்ணிடுவேன்னு சொன்னீங்க?



ஓ.நீ அந்த நிச்சயம்னு நினைச்சியா?



14.  கண் மை ,கன்னி யம் ,பிகர் தட்டுப்பாடு



15. உஷார் பண்ணுவது இரு வகை 1, அவன் ரொம்ப கெட்டவன்.அவன் கூட சேராதே. 2,நான் நெம்ப நல்லவன்.என் கூட சேர்






16. உஷாரா இருக்கும் கள்ளக்காதலி லிப்ஸ்டிக் போடமாட்டா





17. டியர்.நீ பக்கத்துல இருந்தா பசியே எடுக்க மாட்டேங்குது.ஏன்?




அமலாபால் - உதை விழும்.ராஸ்கல்ஸ்




18. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்





19. 18 வயதில் காதல் வேண்டாம்! வயதான பின் வைத்துக் கொள்ளுங்கள் - திரு.ராமதாஸ் #வெச்சுக்கிட்டா அது லவ் இல்ல.ஸ்டவ் ;-))்






20. லட்டு பிகரை லவ் பண்ணினேன்.பார்ட்டி திருப்பதி போல.மொட்டை அடிச்சுட்டா





21. டியர்.கனகாம்பரப்பூ தந்ததால சீப்பா டோன்ட் திங்க்.லைட் வெயிட்னுதான்.ரேட் கம்மி என்ப்தால் அல்ல்:-)்




22. மிஸ்.இந்தாங்க லவ் லெட்டர்.இது உங்கக்கா கிட்டே இருந்து வாங்குன ரெக்கமென்ட்டேசன் லெட்டர்.இது உங்கம்மாட்ட வாங்குன நோ அப்ஜெக்சன் லெட்டர்.




23 காதலியை சினிமாக்கு கூட்டிட்டுப்போனா 200 ரூபா செலவாகும்.கூட்டமே வராத கோயிலுக்குக்கூட்டிட்டுப்போனா செலவே இல்லை. 12 மணிக்கு அன்னதானம் வேற





24. கவுண்டர் இனப்பெண்கள் வலது கட்டை விரலுக்்கு அருகில் டைமன்ட் ஷேப்பில் பச்சை குத்தி இருப்பார்கள் # மைக்ரோநோட்டாலஜி





25. பிகரை ஓட்டிட்டுப்போகும் எல்லாரும் ஏற்கனவே பல பிகரை பார்த்த சாரதியே ( சாரதி = ஓட்டுநர்)

Saturday, February 16, 2013

என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு - அஞ்சலி பேட்டி

மொபைல், இமெயில், ஃபேஸ்புக்... எங்கேயும் எப்போதும் நாட் ரீச்சபிளிலேயே இருந்தார் அஞ்சலி. காத்திருந்து காத்திருந்து 'சேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிடித்தேன். 'சிங்கம்-2’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு சூர்யாவுடன் ஆடியிருக்கிறார்.



''ஹலோ, 'சிங்கம்-2’ல நான் ஆடிஇருக்கிறது அயிட்டம் சாங் கிடையாது. நான் சூர்யா சாரோட இன்ட்ரோ சாங்ல ஆடியிருக்கேன். ஹீரோகூட பப்ளியா ஒரு பொண்ணு ஆடினா நல்லா இருக்குமேனு தேடி இருக்காங்க. பை லக்... எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. பாட்டு நல்லா வந்திருக்கு. நிறையக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே விஜய், அஜித், சூர்யா கூட நடிப்பேன்.''



''சினிமால நல்ல கிராஃப் இருக்கு உங்களுக்கு. ஆனா, டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?''



'' 'சேட்டை’யில் ஹன்சிகா, 'எம்.ஜி.ஆர்’ல வரூ, தெலுங்கு 'சீதம்மா’வில் சமந்தா, 'பலுபு’வில் ஸ்ருதி... இவங்களோட சேர்ந்து நடிச்சது தானா அமைஞ்சது. யார் என்கூட நடிச்சாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா ஹீரோயினும் என்கூட நெருக்கமாகிடுவாங்க. ஏன்னா, நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி!''  


''ஆர்யா, விஷால் யார் பயங்கரமான ப்ளேபாய்?''  



''ஆர்யா, விஷால்... ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியாப் பழகுவாங்க. ஆர்யா செட்ல இருந்தா, நமக்கு எந்தக் கவலையும் வேண்டாம்.  எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். நிறைய ஹெல்ப் பண்ணுவார். அதைவிட நிறையப் பேசிட்டே இருப்பார். விஷால் அமைதியா இருப்பார். ஆனா, பயங்கரமா சேட்டை பண்ணுவார். ரெண்டு பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி. என்ன, ஆர்யா சேட்டை பண்ணா, வெளியே தெரிஞ்சிடும். விஷால் சேட்டை பண்ணா, யாருக்கும் தெரியாது. விஷால் அவ்ளோ அமைதி... ஆனா, பயங்கர நாட்டி!''


''இப்போ லீடிங்கில் இருக்கிற பல ஹீரோயின்கள், 'அஞ்சலி நடிப்புக்கு நான் ரசிகை’னு சொல்லியிருக்காங்க. அஞ்சலி யாருக்கு ரசிகை?''


''என் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்ரீதேவி மேடம்தான். ஆனா, நான் இம்ப்ரெஸ் ஆனது, நடிப்பு கத்துக்கிட்டது எல்லாம் ஜோதிகா மேடம் நடிப்பைப் பார்த்துதான்.''


''சினிமாவில் ஹீரோயினாக இருப்பது வரமா... சாபமா?''

''நூடுல்ஸ், சுடிதார், வீடு, வீக் எண்ட் சினிமான்னு பிடிச்ச விஷயங்களோடு இருந்த பொண்ணு நான். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு என் உலகமே மாறிடுச்சு. இங்கேயும் சில சிரமங்கள் இருக்குதான். ஆனா, ஹீரோயினா இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடிச்சிருக்கு. 'கற்றது தமிழ்’ ஆனந்தி, 'அங்காடித் தெரு’ கனி, 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை கேரக்டர்கள் எல்லாம் எனக்கு ஒவ்வொரு வாழ்க்கை. இதெல்லாம் எனக்குக் கொடுத்தது சினிமாதான். என்ன சொல்றது... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.''


''எப்பவும் ஏதாவது ஒரு கிசுகிசு உங்களை விரட்டிக்கிட்டே இருக்கே?''  

சத்தமாகச் சிரிக்கிறார்... ''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இதுவரை என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு இருக்கு... அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதோட கம்பேர் பண்றப்ப, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க!''


 நன்றி -ஆனந்த விகடன்,

கடல் - துளசி,கவுதம் கார்த்திக் காம்பினேஷன் பேட்டி @ கல்கி


நடிப்பு ஜீன்லயே இருக்கு!

எஸ். சந்திரமௌலி

கடல் படத்தின் கதாநாயகன் கௌதம், கதாநாயகி துளசி இருவரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் சந்தித்தோம். இரண்டு பேரையும் ஒன்றாக உட்கார வைத்து, பேட்டி கண்டோம். ஜாலியான மூடில் இருந்த இருவரும் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொன்னார்கள். தொகுப்பு இதோ:
கேள்வி: ‘அலைகள் ஓய்வதில்லைபடம் பார்த்திருக்கீங்களா?
கௌதம்: முன்னாடியே பார்த்திருந்தாலும், ரெண்டு மாசத்துக்கு முன்னால பார்த்தப்போ ரொம்ப என்ஜாய் பண்ணினேன். யூத்ஃபுல் பட் இன்னொசென்ட் அப்பாவைப் பார்த்தேன். திரையில என்னைப் பார்க்கிற மாதிரியே இருந்தது.
துளசி: முன்னாடி ஒரு தடவை பார்த்திருக்கேன். ஆனா, மணி ரத்னம் படத்துல நடிக்கப்போறது முடிவானதும் எத்தனை தடவை அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. நான் நடிக்கறதுக்கு அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது. படத்துல கார்த்திக் அங்கிள், அம்மாவுக்கு இடையிலான லவ் கெமிஸ்டிரி நல்லா இருந்தது.
கேள்வி: தமிழ் நல்லா தெரியுமா?
கௌதம்: ஸ்கூல்ல படிச்சிருக்கேன். ஆனாலும் கடல்ல நடிக்க வந்த பிறகு, மெட்ராஸ் டாக்கீஸ்லதான் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன்.
துளசி: எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. பேசினா புரிஞ்சுக்க சிரமமில்லை. அடுத்த படத்துல நானே எனக்கு டப்பிங் பேசுவேன்னு நம்பறேன்.
கேள்வி: சினிமாவுல நடிப்போம்னு நெனைச்சதுண்டா?
கௌதம்: ஸ்கூல்ல படிக்கறப்போ ஆஸ்டிரனாட் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம், டாக்டராக ணும்னு நினைச்சேன்; மியூசிக்ல இன்ட்ரஸ்ட் வந்தது. ஒரு மியூசிக் பாண்டுல இருந்தேன். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருந்தது. அதலெட் ஆகணும்னு பிராக்டீஸ் பண்ணினேன். வளர்ந்த பிறகு சினிமா ஆசையும் வந்தது. மணிரத்னம் கேமரா முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு.
துளசி: சினிமாவுல நடிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. ஸ்கூல் முடிச்சிட்டு நான் டாக்டராகணும்கிறது என் அப்பாவோட ஆசை. எனக்கு எம்.பி.. முடிச்சிட்டு, சொந்த பிசினஸ் பண்ணணும்னு ஐடியா. ஆனா நடிக்க வந்துட்டேன்.

கேள்வி: மணிரத்னம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சபோது உங்க ரியாக்ஷன்?
கௌதம்: ரொம்ப சந்தோஷமா இருந்தது.
துளசி: பிளசன்ட் சர்பிரைஸ்! ஆனா அவர் நான் கொஞ்சம் குண்டா இருக்கிறதால, வெயிட் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ரொம்பக் கஷ்டப்பட்டு, வெயிட் குறைச்சேன்.
கேள்வி: உங்க ரோல் பத்தி?
கௌதம்: தூத்துக்குடி மீனவ கிராமத்து இளைஞன் ரோல். பேர் தாமஸ். மெரினாவுக்குப் போய், ஒரு சில மீனவர்களோட பேசி, பழகி, அவங்களை நல்லா கவனிச்சுப் பார்த்தேன். மீனவங்க லைஃப் பத்தி வீடியோ எடுத்துக்கிட்டு வந்து குடுத்தாங்க. அதைப் பார்த்தேன். கலைராணிதான் என்னை நல்லா டிரெயினிங் கொடுத்து, தாமஸ் ரோலுக்கு தயார் பண்ணினாங்க.
துளசி: எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. கலைராணிதான் எனக்கும் டிரெயினிங். ரொம்ப உபயோகமாய் இருந்துச்சு.
கேள்வி: முதல் நாள் ஷூட்டிங் அனுபவம்?
கௌதம்: ஷூட்டிங்குக்கு முதல் நாள் ராத்திரிதான் ரொம்பப் படபடப்பாய் இருந்தது. படுத்தால் தூக்கம் வரலை. தூங்கினபோது ராத்திரி ரெண்டு மணி இருக்கும். நாலு மணிக்கெல்லாம் ஷூட்டிங்குக்கு ரெடியாகணும்னு சொல்லி எழுப்பிட்டாங்க. முதல் தடவை டயலாக் பேசவேண்டிய ஷாட்லயும் டென்ஷனாக இருந்தது. ஆனா மணிரத்னம், ‘ரொம்ப கூலா இரு. நேச்சுரலா நடின்னு சொல்லி, தைரியம் சொன்னாரு.
துளசி: முதல் ஷெட்யூல்ல எனக்கு சீன் இல்லை. ரெண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்குக்குத்தான் நான் போனேன். எனக்கு சைக்கிள் ஓட்டுறா மாதிரி முதல் ஷாட். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஒரு மாதிரி சமாளிச்சேன்.
கேள்வி: நடிப்புங்கறது ஜீன்ல இருக்குன்னு நம்பறீங்களா?

கௌதம்: ஜீன்லயும் இருக்கு; அதே சமயம் ஒரு நடிகனை டைரக்டர்தான் உருவாக்கறாருன்னும் நினைக்கிறேன்.
துளசி: எனக்கு ஜீன்லயே இருக்குன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஜீன், சொல்லித் தருவது இதையெல்லாம்விட, நடிப்புங்கறது சீனுக்குத் தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டு, அதை முழுசா உள்வாங்கி, நடிப்பா வெளிப்படுத்தவேண்டிய அறிவுபூர்வமான விஷயம்னு நினைக்கிறேன்.
கேள்வி: ரொம்ப சவாலாக இருந்த சீன்?
கௌதம்: எலே கிச்சா பாட்டுக்காக கடல்ல படு வேகமா கட்டுமரத்துல போன சீன். முதல்ல ரொம்பவே தடுமாறினேன். அப்புறமா பேலன்ஸ் பண்ணி நிற்கக் கத்துக்கிட்டு, நடிச்சு முடிச்சது ரொம்ப பெரிய சவால்.
துளசி: அந்தமான்ல எடுத்த மூங்கில்தோட்டம் பாட்டு சீன். எனக்கு தண்ணியைக் கண்டால் பயம். போதாக்குறைக்கு தண்ணியில நிற்கும்போது மீன் வந்து காலை குத்தும்னு சொல்லிப் பயமுறுத்திட்டாங்க. கடலுக்குள்ள இறங்கப் போற சமயத்துல, மணிரத்னம், என்னோட கண் கான்டாக்ட் லென்ஸ கழற்றிடுன்னு சொன்னபோது, ரொம்ப பயந்திட்டேன். கௌதம் கையைப் பிடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ளே போய், ஒருவழியா சமாளிச்சேன்.
கேள்வி: அடுத்தது என்ன?
கௌதம்: நோ ஐடியா. கடல் ரிலீசுக்குக் காத்திருக்கிறேன்.
துளசி: ரவி கே. சந்திரன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப நல்ல கேரக்டர்.



thanx - kalki 

ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - பிரபுதேவா பேட்டி

 

முதல் டான்ஸ் 3டி படத் தில் நானும் இருக்கேன்னு நாளைக்கு என் பசங்ககிட்ட பெருமையா சொல்லிக்கலாம். ஷூட்டிங் ஆரம்பிக் கும்போது 77 கிலோ இருந்தேன். இப்போ 71 கிலோ!'' - சட்டைக் காலரை உயர்த்தி விட்டுச் சிரிக்கிறார் பிரபுதேவா. 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தில் இளைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த உற்சாகம் பிரபு தேவாவின் வார்த்தைகளில் தெறிக்கிறது. 



 ''பட டிரெய்லர் நல்லா இருக்கு. ஆனா, ஷூட்டிங் அப்போ, 'எனக்கு வயசாகிடுச்சு. கஷ்டமான ஸ்டெப்ஸ் தராதீங்க’னு சொன்னீங்களாமே?''



''வயசாகிடுச்சுனு சொல்லலை. 39 வயசு ஆகிடுச்சுன்னுதான் சொன்னேன். ஹலோ, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்க.''

 ''இந்தியில் பரபரப்பான இயக்குநர் ஆகிட்டீங்க. ஆனா, தமிழ்ல நீங்க நடிச்ச 'களவாடிய பொழுதுகள்’ படம் வெளிவருவதில் ஏன் இவ்ளோ தாமதம்?''



''தங்கர் எனக்கு நல்ல நண்பர். ரிலீஸ் பண்ணலைன்னா, நான் அவரை விட மாட்டேன்ல. 'களவாடிய பொழுதுகள்’ படம் எப்ப வெளிவந்தாலும் அதில் லைஃப் இருக்கும். 'பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துக்குப் பிறகு, நான் நடிச்ச படங்களில் 'களவாடிய பொழுதுகள்’ என் மனசுக்கு நெருக்கமான படம். நானும் தங்கர் சாரைக் கேட்டுட்டே இருக்கேன். சீக்கிரமே நல்லபடியா ரிலீஸ் ஆகும்.'' 



 ''தனிமை கஷ்டமா இல்லையா?''


''அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் நான் பசங்களைப் பார்க்க, சென்னை வந்திருவேன். அவங்க என்னைப் பார்க்கணும்னு நினைச்சா, ஓடி வந்துடுவாங்க. இப்பதான் சமீபத்துல ஹாங்காங் போய்ட்டு வந்தோம். ரிஷிக்கு இப்போ ஒன்பது வயசு. ஃபோர்த் படிக்கிறான். ஆதித்யாவுக்கு நாலு வயசு. எல்.கே.ஜி. போறான். குழந்தைங்க உலகத்துக்குள்ள நாம போனா நேரம் போறதே தெரியலை. வாழ்க்கையில இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.''



 ''காதல்பத்தி இப்போ உங்க பார்வை என்ன?''


''அழகான விஷயம். சூப்பர் மேட்டர்ல அது!''


 ''இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லலாமே?''


''என் டைரக்ஷன்ல காதல் எப்பவும் இப்படித்தாங்க இருக்கும்''-


அட்டகாசமாகச் சிரிக்கிறார் பிரபுதேவா.

thanx - vikatan 



கிளாமர் படம் நல்லா தெரியனும்னா என்ன பண்ணனும்?

1. டியர்.3 டி எபக்ட் சவுன்ட்னா என்ன தெரியுமா?



ஆபீஸ்ல இருந்து 10 நிமிசம் நான் லேட்டா வந்தா அன்பா சவுன்ட் குடுக்கறியே அதான் ;-)





2. பிகர் பின்னாடி போகும்போது திரும்பி என்னானு கேட்டுட்டா பயந்து ஓடிடக்கூடாது ஆண்கள் பயந்து ஒதுங்கதெனாவெட்டு அதிகமாகும்.




3. இவளிடம் எதைக் குறித்தும் பேசிடக்கூடாது என்ற பயத்தை ஆணிடம் உருவாக்கும் பெண் தான் அவன் மனைவி ஆவாள்




4. ஒற்றை ரோஜா வை மட்டும் கூந்தலில் சூடி இருக்கும் பிகர்கள் உயரமாகத்தான் இருக்கும்!




5. என்னிடம் மலையாளத்தில் சிரிக்கும் கேரளத்துப்பைங்கிளிகளிடம்  என்னையறியாமலே நானும் சிரித்துவிடுகிறேன்.




6. திமுக அளவுக்குவேறு எந்த இயக்கத்திற்கும் தமிழுணர்வு இல்லை-கலைஞர்# தலைவா ! ஸ்டாலின் என்பது தூய தமிழ்ப்பெயரா?




7. இனி தமிழகத்தில் மாவட்டந்தோறும் சுழற்சி முறையில் மின்வெட்டு..# ஸ்பின் பவுலர்களுக்கு மின் வாரியத்தில் முன்னுரிமை ?




8. காதலிக்கும்போது அதிரசமாய் இனிப்பவள் தாலி கட்டியதும் அதிகாரமாய் ,அதிகாரத்தின் வர்க்கமாய் மாறுவாள் # எச்சரிக்கை




9. தூக்கிலிடப்பட்டு 2 நாட்களுக்குப் பின் அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசு கடிதம் வந்தது #போஸ்ட்மார்ட்டம் பண்ண பின் போஸ்ட்டட்?




10. இன்னைக்கு hug day- வாம்.இதுதான் சாக்குன்னு கூட்டத்துல டவுன் பஸ்ல உரசுன பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சு மாட்டிக்காதீங்க மக்களே!



11. உன் அலப்பரைகளை இரசிக்கும் கூட்டத்தில் ஒருவராக விருப்பமில்லை.. உன் அலப்பரைகள் அரங்கேறும் கலாட்டாக்கூடமாகவே ஆசை.




12. 26 வயதில் 26 படங்களில் நடித்த காஜல் அகர்வால்...# ஆனா நல்லாஆஆஆ நடிச்சது 4 படங்கள்ல தான் ;-))))



13. காதலர் தினத்தை முன்னிட்டு பழைய ஜோடியை கழட்டி விட்டு புதுசுக்கு ரூட் விடுபவர் பாலிசி- பழையன கழித்து விடுதலும் புதியன கரெக்ட் டிங்கும்





14. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது - சரத் # பொற்காலம் படத்துல வர்ற மாதிரி எல்லாரும் மண்பாண்டம் , சட்டி தான் தூக்கனும்னு சொல்றாரா?




15. விஜய் ன் தலைவா டைட்டிலுக்கு தடை. ( புரட்சித்) தலைவி என வைத்தால் வரி விலக்கு # வாய்ல புரளி தலைல அரளி




16. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்#ரஞ்ஜிதா 6 அடி .நித்தி 5 3/4 அடிதான் .ஆனா இனிமே ஹைஹீல்ஸ் தான் போட்டு சமாளிக்கனும்





17. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்# maleம் வளரனுமா?




18. பஸ் தினம் கொண்டாடினா 'அரஸ்ட்' தான்: சென்னை போலீசார் அறிவிப்பு # பஸ் டே கூடாது ஓக்கே பஸ் நைட்?




19. காதலர் தினத்தன்று காதலர்கள் கள்ளக்காதலர்கள் க்கு தலா 143 ரூபா அன்பளிப்பு-ஜெ அறிவிப்பு .அதிமுக மகிழ்ச்சி # சும்மா





20. தலைவா டைட்டிலுக்கு தடை வருமா? இன்று ஜெ முக்கிய முடிவு # பத்த வைடா பரட்டை




21. கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை - விக்ரம்! # அய்யய்யோ நான் மாட்டேன் - கமல்




22 விஜய் ஒரு படத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறாரு.பொறுத்துக்கலாம்,விஜய் ரசிகர்கள் டெயிலி 10 பஞ்ச் டயலாக் பேசறாங்க .முடியல ;-)




23. பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்ட லட்சுமிராய் # உங்க செல் ரிங் "டோனி"ல் அதை வெச்சுக்குங்க மேடம்




24. காத்திருந்து காத்திருந்து கோலங்கள் சீரியல் போனதடி




25. கிளாமர் படம் நல்லா தெரியனும்னா பால்கனி டிக்கெட் எடுக்கக்கூடாது.பெஞ்ச் டிக்கெட் தான் எடுக்கனும் # தரை டிக்கெட் தர்ம லிங்கம்