Showing posts with label கவுதம் கார்த்திக் காம்பினேஷன். Show all posts
Showing posts with label கவுதம் கார்த்திக் காம்பினேஷன். Show all posts

Saturday, February 16, 2013

கடல் - துளசி,கவுதம் கார்த்திக் காம்பினேஷன் பேட்டி @ கல்கி


நடிப்பு ஜீன்லயே இருக்கு!

எஸ். சந்திரமௌலி

கடல் படத்தின் கதாநாயகன் கௌதம், கதாநாயகி துளசி இருவரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் சந்தித்தோம். இரண்டு பேரையும் ஒன்றாக உட்கார வைத்து, பேட்டி கண்டோம். ஜாலியான மூடில் இருந்த இருவரும் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொன்னார்கள். தொகுப்பு இதோ:
கேள்வி: ‘அலைகள் ஓய்வதில்லைபடம் பார்த்திருக்கீங்களா?
கௌதம்: முன்னாடியே பார்த்திருந்தாலும், ரெண்டு மாசத்துக்கு முன்னால பார்த்தப்போ ரொம்ப என்ஜாய் பண்ணினேன். யூத்ஃபுல் பட் இன்னொசென்ட் அப்பாவைப் பார்த்தேன். திரையில என்னைப் பார்க்கிற மாதிரியே இருந்தது.
துளசி: முன்னாடி ஒரு தடவை பார்த்திருக்கேன். ஆனா, மணி ரத்னம் படத்துல நடிக்கப்போறது முடிவானதும் எத்தனை தடவை அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. நான் நடிக்கறதுக்கு அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது. படத்துல கார்த்திக் அங்கிள், அம்மாவுக்கு இடையிலான லவ் கெமிஸ்டிரி நல்லா இருந்தது.
கேள்வி: தமிழ் நல்லா தெரியுமா?
கௌதம்: ஸ்கூல்ல படிச்சிருக்கேன். ஆனாலும் கடல்ல நடிக்க வந்த பிறகு, மெட்ராஸ் டாக்கீஸ்லதான் நல்லா தமிழ் கத்துக்கிட்டேன்.
துளசி: எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. பேசினா புரிஞ்சுக்க சிரமமில்லை. அடுத்த படத்துல நானே எனக்கு டப்பிங் பேசுவேன்னு நம்பறேன்.
கேள்வி: சினிமாவுல நடிப்போம்னு நெனைச்சதுண்டா?
கௌதம்: ஸ்கூல்ல படிக்கறப்போ ஆஸ்டிரனாட் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம், டாக்டராக ணும்னு நினைச்சேன்; மியூசிக்ல இன்ட்ரஸ்ட் வந்தது. ஒரு மியூசிக் பாண்டுல இருந்தேன். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருந்தது. அதலெட் ஆகணும்னு பிராக்டீஸ் பண்ணினேன். வளர்ந்த பிறகு சினிமா ஆசையும் வந்தது. மணிரத்னம் கேமரா முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு.
துளசி: சினிமாவுல நடிப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. ஸ்கூல் முடிச்சிட்டு நான் டாக்டராகணும்கிறது என் அப்பாவோட ஆசை. எனக்கு எம்.பி.. முடிச்சிட்டு, சொந்த பிசினஸ் பண்ணணும்னு ஐடியா. ஆனா நடிக்க வந்துட்டேன்.

கேள்வி: மணிரத்னம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சபோது உங்க ரியாக்ஷன்?
கௌதம்: ரொம்ப சந்தோஷமா இருந்தது.
துளசி: பிளசன்ட் சர்பிரைஸ்! ஆனா அவர் நான் கொஞ்சம் குண்டா இருக்கிறதால, வெயிட் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ரொம்பக் கஷ்டப்பட்டு, வெயிட் குறைச்சேன்.
கேள்வி: உங்க ரோல் பத்தி?
கௌதம்: தூத்துக்குடி மீனவ கிராமத்து இளைஞன் ரோல். பேர் தாமஸ். மெரினாவுக்குப் போய், ஒரு சில மீனவர்களோட பேசி, பழகி, அவங்களை நல்லா கவனிச்சுப் பார்த்தேன். மீனவங்க லைஃப் பத்தி வீடியோ எடுத்துக்கிட்டு வந்து குடுத்தாங்க. அதைப் பார்த்தேன். கலைராணிதான் என்னை நல்லா டிரெயினிங் கொடுத்து, தாமஸ் ரோலுக்கு தயார் பண்ணினாங்க.
துளசி: எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. கலைராணிதான் எனக்கும் டிரெயினிங். ரொம்ப உபயோகமாய் இருந்துச்சு.
கேள்வி: முதல் நாள் ஷூட்டிங் அனுபவம்?
கௌதம்: ஷூட்டிங்குக்கு முதல் நாள் ராத்திரிதான் ரொம்பப் படபடப்பாய் இருந்தது. படுத்தால் தூக்கம் வரலை. தூங்கினபோது ராத்திரி ரெண்டு மணி இருக்கும். நாலு மணிக்கெல்லாம் ஷூட்டிங்குக்கு ரெடியாகணும்னு சொல்லி எழுப்பிட்டாங்க. முதல் தடவை டயலாக் பேசவேண்டிய ஷாட்லயும் டென்ஷனாக இருந்தது. ஆனா மணிரத்னம், ‘ரொம்ப கூலா இரு. நேச்சுரலா நடின்னு சொல்லி, தைரியம் சொன்னாரு.
துளசி: முதல் ஷெட்யூல்ல எனக்கு சீன் இல்லை. ரெண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங்குக்குத்தான் நான் போனேன். எனக்கு சைக்கிள் ஓட்டுறா மாதிரி முதல் ஷாட். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஒரு மாதிரி சமாளிச்சேன்.
கேள்வி: நடிப்புங்கறது ஜீன்ல இருக்குன்னு நம்பறீங்களா?

கௌதம்: ஜீன்லயும் இருக்கு; அதே சமயம் ஒரு நடிகனை டைரக்டர்தான் உருவாக்கறாருன்னும் நினைக்கிறேன்.
துளசி: எனக்கு ஜீன்லயே இருக்குன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஜீன், சொல்லித் தருவது இதையெல்லாம்விட, நடிப்புங்கறது சீனுக்குத் தேவை என்னன்னு புரிஞ்சுக்கிட்டு, அதை முழுசா உள்வாங்கி, நடிப்பா வெளிப்படுத்தவேண்டிய அறிவுபூர்வமான விஷயம்னு நினைக்கிறேன்.
கேள்வி: ரொம்ப சவாலாக இருந்த சீன்?
கௌதம்: எலே கிச்சா பாட்டுக்காக கடல்ல படு வேகமா கட்டுமரத்துல போன சீன். முதல்ல ரொம்பவே தடுமாறினேன். அப்புறமா பேலன்ஸ் பண்ணி நிற்கக் கத்துக்கிட்டு, நடிச்சு முடிச்சது ரொம்ப பெரிய சவால்.
துளசி: அந்தமான்ல எடுத்த மூங்கில்தோட்டம் பாட்டு சீன். எனக்கு தண்ணியைக் கண்டால் பயம். போதாக்குறைக்கு தண்ணியில நிற்கும்போது மீன் வந்து காலை குத்தும்னு சொல்லிப் பயமுறுத்திட்டாங்க. கடலுக்குள்ள இறங்கப் போற சமயத்துல, மணிரத்னம், என்னோட கண் கான்டாக்ட் லென்ஸ கழற்றிடுன்னு சொன்னபோது, ரொம்ப பயந்திட்டேன். கௌதம் கையைப் பிடிச்சுக்கிட்டு, கடலுக்குள்ளே போய், ஒருவழியா சமாளிச்சேன்.
கேள்வி: அடுத்தது என்ன?
கௌதம்: நோ ஐடியா. கடல் ரிலீசுக்குக் காத்திருக்கிறேன்.
துளசி: ரவி கே. சந்திரன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். ரொம்ப நல்ல கேரக்டர்.



thanx - kalki