Wednesday, January 23, 2013

அரக்கோணம் பெண்ணே....நான் அரைக்கேனம் கண்ணே.

1. கோ படத்துல நடக்கற எல்லா இன்சிடென்ட்ஸுமே Coincidence /கோ இன்சிடன்ஸ் தான்




------------------------


2. காதல் என்பது ஒரு "புரியாத புதிர்"், என்ன அட்வைஸ் பண்ணாலும் I KNOW I KNOW னு திருப்பி திருப்பி சொல்லிட்டே இருப்பாங்க்



----------------------------



3. சண்டகோழி க்கு தாலி கட்டினா உங்க வாழ்க்கை நர பலி.உயிரோட ஆள் காலி




----------------------------


4. ராகுலை போட்டியாகக் கருத முடியாது: பாரதிய ஜனதா கட்சி...# பிரியங்கா காந்தி கடைசி கட்டமா இறக்கி விடுவாங்க




--------------------


5. மேடம்.உங்களுக்கு என்னாச்சு?,இப்டி குண்டாகிட்டீங்க?



நமீதா (42)- மச்சான்.பொண்ணுங்க மேரேஜ்க்கு முன்ன உண்டானாத்தான் தப்பு.குண்டானா தப்பில்லை



---------------------------

6. படம் முடிந்ததும் யாரும் அவசரப்பட்டு செல்ல வேண்டாம்.இயக்குநர் படத்தின் கதை என்ன என்பதை எல்லோருக்கும் புரியும்படி விளக்குவார்




--------------------------


7. விஸ்வரூபம் போட்டி - படம் பார்த்தவர்கள் படத்தின் கதையை ் குழப்பம் இல்லாமல் சொன்னால் ஸ்ருதி நடித்த லக் ஹிந்திப்பட DVD இலவசம் # சும்மா





---------------------


8. லைப் ஆப் பை படக்கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி புலிக்கு பதிலா ஒரு கிளியை ( துளசி) ஜோடி சேர்த்தா அது தான் கடல் # சும்மா




-------------------------


9. ஓப்பன் யுனிவர்சிட்டில டிகிரி முடித்த கிளாமர் ஜிகிடிகளே ஒளிவு மறைவு இல்லாம நெளிவு சுழிவ காட்டுவாங்க# அவதானிப்பு,அவதான் இனிப்பு



-------------------------


10. யாரோ திருடி டிவிடி எடுத்துடக்கூடாது என்பதற்காக ஒலியில் புகுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் ஆரோ 3 டி# விஸ்வரூபம்




--------------------------


11. சுற்றி வளைத்துப்பேசுவது தவறில்லை.சுற்றி வளைக்க காதலியின் இடை அருகில் இருந்தால்



-------------------------


12. செல்லமே ( சீரியல் ) மெல்லமே ஆளைக்கொல்லுமே


-------------------------


13. டியர். 4 சுவத்துக்குள்ள நடந்தது நமக்குள்ள தான் இருக்கனும்,



ஓக்கே.ஆனா நாம எப்போ நடந்தோம்?்




---------------------------------



14. ஏய் மிஸ்டர்.,எத்தனாவது தடவையா என்னை பாலோ பண்றீங்க?



 இது என்ன கேனத்தன மான ?,நீங்க ஒவ்வொரு டைம் வீட்டை விட்டு வெளில வரும்போதெல்லாம்



------------------------


15. அரக்கோணம் ் பெண்ணே....நான் அரைக்கேனம் கண்ணே.எப்டி மேட்சுக்கு மேட்ச்




--------------------------



16  நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் -நயன்தாரா # ம்க்கும்.இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? அதான் எல்லாம் முடிஞ்சுபோச்சே?




-------------------------

 17. FIGURE உங்க முகத்துல துப்பினா கலங்க வேணாம்.முகப் பருக்களுக்கு சிறந்த மருந்து நம்ம எச்சில் தான்னு பாசிடிவா நினை




-------------------------


18. டாக்டர்.உருளைக்கிழங்கை தோலோடு தான் சாப்பிடணுமா?



அதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க ?



 நீங்க தானே ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்?்



---------------------------------


19. பெண்களுக்கான அதிகாரம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்: சோனியா # சும்மாவே ஆடுவாங்க.அன்னை சலங்கையை கட்டி விட்டாச்சா ,?



--------------------------



20. மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று பிகர் வீட்டுக்கு போகாமயே இருந்தா செட் ஆகாது.மானம் வெட்கம் ரோஷம் எல்லாம் துறக்கனும்



---------------------------


21. காவிய வர்ணனைகளில் வருவது போல் உதட்டு முத்தம் இனிக்க காதலியின் உதட்டில் தேன் தடவினால்தான் உண்டு # உயர்வு நவிற்சி ,அதீத கற்பனை




------------------------------



22. நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: # வருசாவருசம் காலண்டரை மாத்தற மாதிரி புருஷனை மாத்திக்கறாங்க



-------------------------------



23. தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா - # விவசாய நிலம் கிடைச்சாலே பிளாட் போடத்துடிக்கும் பிளாட் இனம் தானே நீங்க?




-----------------------



24. உதட்டில் முத்தம் இடும்போது காதலியின் இரு கன்னங்களை ஸ்டேண்ட் போல் பிடித்துக்கொண்டால் அது ஸ்டேண்ட் அப் கிஸ் லவ்்



-----------------------


25.  ஒரு கன்னத்தில் காதலி முத்தமிடும்போது மறு கன்னத்தை காட்டினால் நீ மாக்கான்.உதட்டை காட்டினால் நீ மன்மதன்




----------------------


26. ஒவ்வொரு நாளும் நமக்கு போர்க்களமே என்பதை உணர்த்தவே ஹிந்தியில் இத் WAR சோம் WAR ,மங்கள் WAR , புத்WAR,குரு WAR சுக்ர, WAR .சனிWAR




------------------------



27. தன்னை CM ஆக்கும்படி ராஜீவிடம் கெஞ்சினார் ஜெ -கருணாநிதி# உங்க காலுக்கு செருப்பா இருப்பேன்.என் னை் மன்னிச்சுடுங்கனு கெஞ்சுனது யார் தலைவா?



--------------------------


26.  இனியொரு முறை அந்த தப்பை செய்ய மாட்டேன் - நயன்தாரா: # யாருய்யா சீதை கிட்டே ஒன்ஸ்மோர் கேட்டது.ராஸ்கல்ஸ் 




-----------------------------


27.  ஸ்ருதியை வைத்து படம் இயக்க ஆசை! - விஷால்: # ம்க்கும்.அப்டி ஆசைப்பட்டுத்தான் நான் 3 எடுத்தேன்.முக்காடு - ஐஸ் ்வர்யா தனுஷ் 





-----------------------

 
கல்கி  பன்ச் போட்டியில் சி பி எஸ்


Tuesday, January 22, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu - சினிமா விமர்சனம்

http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/11/Seethamma-Vaakitlo-Sirimalle-Chettu-Release-Wallpapers-123cinejosh.jpgஅண்ணன் , தம்பி 2 பேரு , அம்மா , அப்பா உள்ள ஃபேமிலி .அண்ணனுக்கு முறைப்பொண்ணு வீட்லயே இருக்கு . ஃபேமிலிக்கு ஆகாத தூரத்து ச்சொந்தம் வீட்ல தம்பிக்கு ஒரு பொண்ணு மாட்டுது. தம்பியோட லவ் அண்ணனுக்கு பிடிக்கலை. இதனால அண்ணன் தம்பிக்குள்ளே நிகழும் போராட்டங்கள் தான் கதை . ஆல்ரெடி நாம வானத்தைப்போல , ஆனந்தம் , நட்புக்காக மாதிரி பல படங்கள்ல பார்த்த கதை தான். ஆந்திராவுக்கு ஒரு வேளை புதுசா இருக்கும்.


ஆந்திரா சூப்பர் ஸ்டார்கள் வெங்கடேஷ் , மகேஷ் 2 பேரும் தான் அண்ணன் , தம்பி .  படம் பூரா வில்லன்களோட ஃபைட் போடாம அமைதியா இருந்ததுக்கே அவார்டு தரலாம். வேலை இல்லாத வெட்டாஃபீசாய் , முன் கோபி யாய் வரும் வெங்கடேஷ்க்கு செம ஈசியான வேலை . அப்பப்ப தளபதி ரஜினி மாதிரி முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலே போதும் , மிச்சத்தை இயக்குநர் சமாளிச்சுக்கறார். அவர் அடிக்கடி சட்டைக்காலரை பின்னால தூக்கி விட்டுக்கறதுதான் ஸ்டைலா? நம்ம ஊர்ல ரஜினி 25 வருஷத்துக்கு முன்னாலயே அதை பண்ணிட்டாரு .


மகேஷ் இளமைத்துள்ளலான கேரக்டர் . வழியில் தென்படும் ஃபிகர்களை வலியனாப்போய் வம்பிழுக்கும் விதம் ஆஹா! கோபுர வாசலிலே படத்தில் கார்த்திக் பண்ணாததா?  ஆனாலும் ஜாலியா இருக்கு. அவர் அடிக்கடி டக் இன்  பண்ணிய சர்ட்டை எடுத்து வெளியே விடுவது ஸ்டைலா? , சகிக்கலை.  15 ரீல் படத்துல  27 டைம்  அப்படி பண்றார்.. உஷ் அப்பா . அவர் அடிக்கடி ஈ அப்டி காட்டுவது ஆரண்ய காண்டத்துல ஜாக்கி ஷெராப் ஆல்ரெடி செஞ்சாச்சி . புதுசா  அவர் பண்ணுனது ஒண்ணும் இல்லை .

 http://www.webparx.com/movies/wp-content/nggallery/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie-webparx-2.jpg




ஹீரோயின் 2 பேர்ல முதல் அறிமுகம் ஆவது  அனுதினமும் அணு அணுவாக ரசிக்கச்சொல்லும் அங்காடித்தெரு அஞ்சலி. கொழுக் மொழுக் கன்னம் , சிரிக்கும் கண்கள் , அழைக்கும் உதடுகள் என அவர் வரும் காட்சி எல்லாம் ஈர்ப்பு. இந்திய சினிமாக்களிலேயே கிளாமரான ஹீரோயின் அறிமுகம் ஆகும்போது அடிக்கும்  டார்க் கலரான சிவப்பு , வயலெட் , மயில் கழுத்து , ராமர் க்ரீன் ஜாக்கெட் எல்லாம் போடாமல் மிக எளிமையான  சம்பங்கி கலரில் ( லைட் காக்கி கலர் )  ஜாக்கெட் போட்டு அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ஈர்த்து விடுகிறார். 


அடுத்தடுத்த காட்சிகளில்  அவர் டார்க் கலர் டிரஸ்ஸில் கலக்குகிறார். எல்லா காட்சிகளும் சேலைகள் தான். செம செம . எஜமான் படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு அடிக்கடி துண்டு  எடுத்துக்கொடுத்து தூண்டும் வேலை . ஒரு டூயட்டும் உண்டு 


அடுத்த ஹீரோயின் சந்தனச்சிலையா? என திகைக்க வைக்கும் சமந்தா. கிண் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டி வந்தது எல்லாம் இயற்கையின் திரு விளையாடல் . பாட்டியாலா சுடிதார் ,  லெக்கின்ஸ் , பாராசூட் மாடல் பைஜாமா என அவர் வகை வகையாய் உடை அணிந்து வருகையில் தியேட்டர் பெண்கள் எல்லாம் நோட் பண்ணிக்கறாங்க . செத்தாண்டா அவங்கவங்க புருஷங்க . 

அஞ்சலியை விட இவர் அதிக காட்சிகளில் வர்றார். ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் என இவருக்கு 2 பாட்டு .கலர் ஃபுல் கலக்கல்ஸ். 


பிரகாஷ் ராஜ் இருவர் பட கெட்டப் , காஞ்சிவரம் பட  பாடி லேங்குவேஜ் என அடக்கி வாசிக்கிறார்.

 http://publichubs.com/blogimages/hub/784-2-anjali-saree-stills-at-malabar-gold-showroom.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சந்தனச்சிலை சமந்தா ஒவ்வொரு டைம் ஃபோன் பண்ணும்போதும் ஹீரோ ஃபோனை   ஓடும் மிக்சி ஜார் அருகே  ஃபோனை வைப்பது , ஊதும் நாதஸ்வரம் முன் வைப்பது என ஜாலி கலாட்டாக்கள் 


2. அஞ்சலிக்கான ஜாக்கெட் டிசைன் அற்புதம் , முழு முதுகும் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு  பேக் யு நெக் ஜாக்கெட். கேமரா எப்பவும் அஞ்சலி முதுகுலதான் லேண்ட் ஆகுது . ஹூம், முதுகா அது? பத்தமடை பாய் மாதிரி 



3. மேரேஜ் ஃபங்க்‌ஷனில் ஹீரோவைக்கண்ட  சம்ந்தா வெளிப்படுத்தும் ஷாக் சர்ப்பரைஸ் ரீ ஆக்‌ஷன்  சோ க்யூட்


 http://web2look.com/wp-content/gallery/samantha-hot1/samantha-hot-6.jpg



4. ஹீரோவை விட சமந்தா மிக குள்ளம் என்பதால் அவருக்கு  ஒரு அடி உயரத்துக்கு  ஹை ஹீல்ஸ் போட்டு சமாளிப்பதும் , வெங்கடேஷ் விட அஞ்சலி ஹைட் என்பதால் அவரை எப்போதும் வெறுங்காலுடன் நடக்க விடுவதும் , வெங்கடேஷ் ஹை ஹீல்ஸ் ஷூ அணிவதும் ( நம்ம ஊர் சூர்யா மாதிரி ) பேலன்ஸ்டு சீன்ஸ் 



5. தூரத்துடுக்கு பாட்டப்ப அஞ்சலி  தன்னோட இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாரே .. செம கிக். கோடானு கோடி  பாட்டப்ப அந்த லேடி இடுப்பை ஒரு சுத்து சுத்துமே அந்த கிக்குக்கு சமம் 



6. படத்தில் வாய்ப்பு இருந்தும் சண்டைக்காட்சிகள் வைக்காதது , திரைக்கதையில் இரு காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் காட்சிகளை ஒன் பை ஒன் மாத்தி மாத்தி காட்டி பேலன்ஸ் பண்ணது 



7 . கல்யாண கலாட்டா காட்சிகள் அழகு + பிரம்மாண்டம்

http://moviegalleri.net/wp-content/gallery/samantha-ruth-prabhu-latest-hot-images/hot_samantha_latest_stills_pics_3143.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு நியூலி மேரீடு கப்பிள் ரயில்ல அன் ரிசர்வ்டுல ட்ராவல் பண்ணுவாங்களா? ஏ சி கோச் ல வராட்டியும் அட்லீஸ்ட் ரிசர்வ்டு செகண்ட் கிளாஸ்ல தானே வருவாங்க.. 


2. அஞ்சலிக்கு மட்டும் இண்ட்ரோ சாங்க் இல்லை, ஆனா சமந்தாவுக்கு இருக்கு. இது எந்த வகைல நியாயம்? ஒரு கண்ணுல வெண்ணெய் , இன்னொரு கண்ல தொண்ணையா? 



3. படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். கலைஞர் குடும்பம் மாதிரி , எல்லா கேரக்டரும் அறிமுகம் ஆகி கதைக்கு செட் ஆகும்போதே ஒரு மணி நேரம் ஆகிடுது 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidMMvOqxwULA-hFsezvrDydqB7AZsk8R6FbbgN3Rn-f6LQCyOa6u2KCAiykz5JyOWmcqKx6dLM2NtMjKNkrmp2cCtc58Gzr68qcQhJJGSV60oo4N7qI6AmeXA6wcwtoWZfkfDxwORoBtqh/s1600/anjali-hot-stills.jpg



4.  ஒரு சீனில் வேலை வெட்டி இல்லாத வெங்கடேஷ்  இன்ஸ்பெக்டரை கோபத்தில் பளார் என அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர். அவர் ஆன்னு பார்த்துட்டு இருக்காரு . அவர் ஒண்ணும் ரவுடி கிடையாதே  நிஜ வாழ்வில் பப்ளிக்கில் ஒரு போலீஸ் ஆஃபீசரை ஒரு வெத்து வேட்டு பப்ளிக் பிளேஸ்ல அடிச்சா என்ன ஆகும்? 



5. கதைப்படி ஆன்மீக வாதியாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு சீனில் கூட நெற்றியில் திருநீறோ , குங்குமமோ வைக்கலை, ஆனா கோயில் பிரசாதத்தை ஒணத்தியா சாப்பிடறார், கோயில்ல இருக்கார் . 



6. கல்யாண வேலைகளில் வீடே பரபரப்பாக இயங்குகையில் எல்லாரும் வெறும் காலுடன் இருக்க, ஹீரோ மகேஷ் மட்டும் ரன்னிங்க் கேன்வாஷ் ஷூ உடன் அலைகிறார்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbymytcERdthXZUXZC7CyzwFqGecFmrPwEBR7JvimYRrcpf-A-26-Hrh9aUxqLJl-6mFRslfWXaVt1kcglxQJ607XclINq81EDciycSwXtK_CrcAiy2B5KPWZYjRM7yQvg1I0KZlyygt-C/s1600/Anjali-Latest-New-Unseen-Photo-Shoot-+(1).jpg



7. அதே போல் மேரேஜ் ஃபங்க்‌ஷனில் குப்பம்மா, குருவம்மா , முனியம்மா எல்லாம் பட்டு சேலையில் மினுக்கிட்டு வரும்போது அஞ்சலி சாதா சேலையில் உலா வர்றாரே?  க்ளைமாக்ஸ்ல அவருக்கு மேரேஜ் ஆகும் காட்சியில் தான் சில்க் சேலை . ஒய்? 




8. படம் போட்டதில் இருந்து அஞ்சலி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஏதாவது ஒரு சமையல் எடுபுடி வேலை  செஞ்சுட்டே இருக்காரே? அவர் என்ன வேலைக்காரியா? 



9. இண்ட்டர்வியூவில் எல்லா தேர்விலும் பாஸ் ஆன ஹீரோவிடம் அதிகாரிகள் “ உங்க சிரிப்பில் உயிர் இல்லை. அது இயல்பா இல்லை , நல்லா சிரிங்க அப்போதான் வேலை” என்பதும் மனதில் சோகத்துடன் இருக்கும் ஹீரோ மனம் விட்டு சிரிக்க முடியாமல் செயற்கையாய் சிரிப்பதும் அதனால் வேலை கிடைக்காமல் போவதெல்லாம் ஓவரோ ஓவர் . எந்த இண்ட்டர்வ்யூல சிரிப்பை வெச்சு ஜாப் தர்றாங்க? 



10 . ஒரு காட்சியில் கல்யாணப்பெண் வெள்ளைப்பட்டுப்புடவை அணிந்து வர்றார். கேரளாப்பெண்கள் தான் அப்படி வருவாங்க . நம்ம ஆட்கள் எல்லாம் முகூர்த்தப்புடவை மேக்சிமம் ரத்தச்சிவப்பு , மெரூன் , பிரவுன் , வயலெட் , பச்சை கலர் தான் . சத்தியமா வெ:ள்ளை நாட் அலோடு



11. கிட்டத்தட்ட வில்லனாக வரும் உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன?ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை 



 12. அந்த மின் விபத்து , வில்லனை காப்பாற்றுவது  , அவர் மனம் மாறுவது படு செயற்கை


13. சமந்தா வை பல படங்கள்ல கவனிச்சுட்டுதான் இருக்கேன், அவர் அழகா இருக்கும் புருவத்தை பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணி அப்புறம் அது மேல  ஐ ப்ரோ பென்சிலால டார்க்கா  வரைஞ்சு அலங்கோலம் பண்ணிக்கறார். கார்த்திகாக்குத்தான் வேற வழி இல்லை , வரைஞ்சுக்கறார், உங்களுக்கு என்ன? அஞ்சலி இந்த விஷயத்துல குட்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8u7je2fw7likzayZEj2zoUZyjVFsuJsCp5dSQ0BFosGSJ-9hpDJ24tmKqO2csxE1qLVYIZoERrSYZLvrhC9Gdea7Oa0v8BF6MPYNrcuumOt0Cg8CYYovgrJ96ompJ8hpwJsIyqtDbso/s1600/Samantha+Hot+Bikini+stills+(8).jpg



சி.பி கமெண்ட் -  ஃபேமிலியோட பார்க்கற மாதிரிதான் இருக்கு . 2 ஹீரோயின் ரசிகர்கள் பார்க்கலாம், மற்றபடி புதுசா கதைல ஒண்ணும் லேது . டைட்டிலுக்கான அர்த்தம் சீதையின் வீட்டின் முற்றத்தில் மல்லி செடி.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

ட்விட்டரில் தமிழில் ட்வீட்டிய அமிதாப் - பக்க விளைவுகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKKFmT1W8PLuHWUoi5uh2Pgj2gKz-R_BI8x2Xc-maKVT862h22wtlqqwNG26osLBv5Dmtj655cF7c79icJ2J1h2cs-kUf_qENiPhmUoXuL1WXHN3Ps9maFYKqBmFH2qtk6XPZvkSX9Tkg/s1600/b.jpg
 இன்னைக்கு ட்விட்டர்ல ஒரு ஆச்சரியம் + விநோதம் - அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழ்ல ட்வீட் போட்டுட்டார் . இது பல சந்தேகங்களை கிளப்புச்சு. அதாவது தமிழனே இங்க்லீஷ்பீஸ் ல அரைகுறையா ட்வீட்டிட்டு இருக்கும்போது  ஹிந்தி பேசும் அமிதாப் தமிழில் ட்வீட்டும் மர்மம் என்ன? இது எல்லார் மனசுலயும் எழுந்துச்சு 


அவர் போட்ட தமிழ் ட்வீட்ஸ் 


T 998 - ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும் 


2. T 998 - தமிழ் சில பெரிய இசை கேட்டு ... அதன் வசீகரிக்கும்! குறிப்புகள் singing முயற்சி ... உண்மையில் கடினமான இருந்தது! 



3. T 998 - AR Rehman மூலம் 'kadal' என்ற ... இசை குறிப்பாக ஒரு பாடல் விதிவிலக்கான குறிப்புகள் உள்ளன! அவரை சென்னை திருமண நேரடி விளையாட கேள்வி! 


4. T 998 - It is Tamil ... one of the most developed languages in Southern India .. its literature immense .. !! ( தமிழைப்பற்றி பாராட்டி )



5. T 998 - நம்முடைய விட ஒழுக்கமான தமிழ் சினிமாவில் .. பெரிய ஸ்டூடியோக்கள் சில சென்னை தொழிலாள ஆரம்ப ஆண்டுகள் 





 சிலர் அமிதாப் செல் வேற யாரோ யூஸ் பண்றாங்க  என கிண்டல் அடிச்சாங்க . 


 நான் அந்த டைம்ல போட்ட ட்வீட்ஸ்




1 சார், நீங்க தமிழர் தானே? அமிதாப் தமிழ்ல கீச்சறார்.



 ஓஹோ, இப்போ நான் ஹிந்தில கீச்சனுமா? எனக்கு அது தெரியாதே?



---------------------------



2  இன்ஸ்பெக்டர், என் செல் ஃபோனைக்காணோம் .



 இப்போதான் உங்க ட்வீட்டை படிச்சேனே? 



ஹய்யோ, அவன் தான் திருடன், ட்ரேஸ் அவுட் ஹிம்

-----------------------


 அப்போ இந்தியாவின்  நெம்பர்  ஒன் ட்வீட்டர்  அதாவது அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட தமிழ் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி  போட்ட ட்வீட்ஸ் , அதுக்கு எதிர் வினையா  பெங்களூர் ரைட்டர் போட்ட ட்வீட்ஸ் சுவராஸ்யங்கள்



பார். முழுசா தங்கர்பச்சனா மாறியிருக்கிற அமிதாப்பச்சன பார் 

குஷ்பூ ஜெயில் பாரோன்னா திட்றாங்க. அமிதாப் தமிழ்ல சொன்னா பாராட்டுறாங்க. சம்திங் இஸ் ராங். 









தங்கர்பச்சானை context-ஏ இன்றி கேலி செய்வது அத்தனை உவப்பில்லை. 


அவரையெல்லாம் கன்டெக்ஸ்டோடுதான் கேலி செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை


ஓ, சரி! கேலியோ, சீரியஸோ எதுவாகினும் அதில் குறைந்தபட்ச நேர்மை இருக்க வேண்டும் என‌ எதிர்பார்ப்பது என் பிழையே! 


ஆமா. வேல்யூஸ் மாறும்.ஜஸ்ட் லைக் தட் உங்ககிட்ட பேசுற பொண்ணுங்கள வச்சு பொதுவா மட்டம் தட்டுவீங்களே. அப்ப எனக்கும் இப்படி தோணு


பிறகு ஏன் அதே தவறை நீங்கள் செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் விதிவிலக்குகள் உண்டுனு சொல்லிட்டிருக்க முடியாது. (1/8) 


மற்றபடி பெரும்பான்மைப் பெண்களுக்கு நான் சொல்லும் கருத்துக்கள் செல்லுபடியாகும். அதில் இப்போதும் மாற்றமே இல்லை. (2/8) 

தங்கரை (சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்) நீங்கள் மேலோட்டமாக அணுகுவதற்கும் இருபது வருட (3/8)  

அனுபவங்களின் வழி பெண்களைப் பற்றி நான் வந்தடைந்திருக்கும் கருத்தும் ஒன்றா? நீங்கள் நான் ஜஸ்ட் லைக் தட் பெண்களைப் (4/8) 

பற்றி கேலி பேசுவதாக நினைத்தால் அது உங்கள் பிரச்சனை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட ட்வீட்டில் தங்கர் பற்றி அப்படி நீங்கள் (5/8)  


மேலோட்டமாகத் தான் பேசி இருந்தீர்கள். தமிழ் சினிமாவிற்கான, தமிழ் இலக்கியத்திற்கான அவரது சில முக்கியமான பங்களிப்புகளை (6/8) 

மதிக்கிறவன் என்ற அடிப்படையில் அதை நான் எதிர்த்தேன். அதே போல் உலகப் பெண்கள் அத்தனை பேருடனும் பழகிய பின்னரே (7/8)  

பெண்களைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல வேண்டும் என்றால் ஸாரி, எனக்கு அத்தனை பெண் சகவாசம் கிடையாது தான். (8/8)




 ரைட்டர் 1 /8 போடும் அளவு  கார்க்கி போட்ட ட்வீட் லாங்கர்












எனக்கும் தங்கருக்கும் எந்த சைடுவிரோதமும் கிடையாது. அழகியில் ஆச்சரியப்படுத்தியவர் தொடர்ச்சியாம ஏமாற்றியே வந்திருக்கிறார். அவரது இலக்கிய பங்களிப்புகளை அப்படி ரைட்டுக்கா வைப்போம். நான் போட்ட ட்வீத் தங்கரின் சந்தர்ப்பவாதத்தை முன்வைத்து. அழகியில் நந்திதாதாசை தாங்கியவர் அடுத்த படத்தில் தமிழ்ப்படத்தில் தமிழ்ப்பெண் தாண் நடிக்க வேன்டுமென 1/120 சைசில் பொங்கினார். 




குமரிபொண்ணு வெத்தலைக்குன்னு பாட்டு வைத்தவர் இரட்டை அர்த்த பாடல்களை வறுத்தார். ராஜாவுக்கு ஈடான ஒருவர் உலகிலே இல்லையென்றவற் வித்யாஸாகர் ராஜாவுக்கு = என்றார்.இன்னுமாயிரம் உண்டு. இதையெல்லாம் ஏன்சொல்கிறேன் என்றால் நீங்கள் 20 ஆண்டுகளாக கூர்ந்து பெண்களை கவனித்தது போலதான்நானும் தங்கரை கவனித்து இந்த முடிவுக்கு வந்தேன்.அமிதாப்பின் தமிழ் ட்விடுக்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகசில ட்வீத்களை பார்த்தேன்.



 அதன் நம்பகத்தன்மைகுறித்தெல்லாம் ஆராய விருப்பமில்லை.. பார்த்தேன். அந்த சமயம்சந்தர்ப்பவாத சந்நியாசி தங்கர் நினைவுக்கு வந்தார். ட்வீட் போட்டேன்.பச்சன் என்ற ரைமிங் மட்டுமே உம் கண்ணில் பட்டதென்றால் உமக்கும் உம் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கும் பயொவில் இருந்த இன்ட்டெலெக்சுவல் என்ற வார்த்தைக்கும் ஸ்நானபிராப்தியே இல்லையோ என ஐயுறுகிறேன்.


ரைட்டரின் ரிப்ளை



//எனக்கும் தங்கருக்கும் எந்த சைடுவிரோதமும் கிடையாது. அழகியில் ஆச்சரியப்படுத்தியவர் தொடர்ச்சியாம ஏமாற்றியே வந்திருக்கிறார். //

ஏற்கிறேன். அழகி படமும், பாரதி, பெரியார், குட்டி, கருவேலம்பூக்கள், பாண்டவர் பூமி உள்ளிட்ட சில‌ படங்களின் அபார ஒளிப்பதிவும் தாம் தங்கரின் சினிமாச் சாதனைகள். கடைசி சில ஆண்டுகளில் அவர் படங்கள் அனைத்தும் மொக்கை தான் (ஒன்பது ரூபாய் நோட்டு மட்டும் நான் இன்னும் பார்க்கவில்லை). ஆனால் அப்படிப் பார்த்தால் மணிர‌த்தினத்தையும் இப்படி கலாய்ப்பீர்களா? அவரும் நல்ல படம் எடுத்து தசாப்தம் ஆகிறது. அவருக்கும் இப்படி பகடி வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே. நேரடியாக இருவரையும் ஒன்று என்று சொல்வதாக‌ தட்டையாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதாவது நான் சொல்ல வருவதன் சாரம் மணி போன்ற பிம்பங்களை எல்லாம் நம்பி விட்டு, தங்கர் மீது மட்டும் வெளிப்படும் உங்கள் அலட்சியம் பற்றியது. உங்கள் இருவரையுமே தனிப்பட்ட முறையில் தெரியாது என்பதால் உங்களுக்குள் ஏதேனும் விரோதம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் சொல்வதற்கில்லை.

//அவரது இலக்கிய பங்களிப்புகளை அப்படி ரைட்டுக்கா வைப்போம்.//

குடி முந்திரி, வெள்ளை மாடு ஆகிய தொகுப்புகளில் இருக்கும் அவரது சிறுகதைகள் நிச்சயம் முக்கியமானவை. ஒன்பது ரூபாய் நோட்டு நாவலும் ஓரளவுக்கு அப்படியே. தங்கர் என்ற ஆளுமையில் பாதி அவர் எழுத்து தான். மீதி தான் சினிமா. இதைத் தவிர தமிழர், தமிழுணர்வு, தமிழ்க்கலைகள் குறித்த அவரது சில கருத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு. அதைத் தொடர்ச்சியாகத் தன் படங்களில் பதிவு செய்து வருகிறார். அதை மதிக்கிறேன். பாலாஜி சக்திவேல் மீது எப்படி மொக்கையாய்ப் படம் எடுப்பதையும் தாண்டி தொடர்ந்து மாற்று சினிமாவுக்கு முயல்கிறார் என்ற வகையில் மரியாதை உண்டோ, அதே அடிப்படையில் தங்கர் மீதும் மதிப்பு உண்டு.

//நான் போட்ட ட்வீத் தங்கரின் சந்தர்ப்பவாதத்தை முன்வைத்து. அழகியில் நந்திதாதாசை தாங்கியவர் அடுத்த படத்தில் தமிழ்ப்படத்தில் தமிழ்ப்பெண் தாண் நடிக்க வேன்டுமென 1/120 சைசில் பொங்கினார். குமரிபொண்ணு வெத்தலைக்குன்னு பாட்டு வைத்தவர் இரட்டை அர்த்த பாடல்களை வறுத்தார். ராஜாவுக்கு ஈடான ஒருவர் உலகிலே இல்லையென்றவற் வித்யாஸாகர் ராஜாவுக்கு = என்றார்.இன்னுமாயிரம் உண்டு. //

சினிமாவுக்கென சில எல்லைகள் உண்டு. அதன் வணிகத்திற்காக மானத்தையும் மனசாட்சியையும் கடாசிப் பேசிய பல ஜாம்பவான்கள் உண்டு. கமல் மன்மதன் அம்பின் போது டிஎஸ்பியை எம்எஸ்வி, ராஜாவுக்கு அடுத்து நல்ல ம்யூஸிக் டைரக்டர் என்றார். அன்பே சிவம் படத்தின் போது மாதவனை தமிழின் மிகச்சிறந்த நடிகர் என்றார். அதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கமல் வெறியனான நானே அதைப் பொருட்படுத்தியதில்லை. அதற்காக கமலின் மற்ற சாதனைகளை நிராகரிக்க முடியுமா? தங்கரும் அது போல் பல பச்சைப்பொய்கள் சொல்லி இருக்கலாம். போலி அறச்சீற்றங்கள் செய்திருக்கலாம். அதைக் காரணம் காட்டி அவரது பங்களிப்புகளை ரத்து செய்து விட முடியாது. அதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

//இதையெல்லாம் ஏன்சொல்கிறேன் என்றால் நீங்கள் 20 ஆண்டுகளாக கூர்ந்து பெண்களை கவனித்தது போலதான் நானும் தங்கரை கவனித்து இந்த முடிவுக்கு வந்தேன். //

ஒரு புன்னகை செய்து கொள்கிறேன். நீங்கள் ஐந்து நிமிடம் யோசித்ததும், நான் ஆயுள் முழுக்க அனுபவித்ததும் ஒன்றா, கார்க்கி? வாதத்திற்காகப் பேச‌ வேண்டாம்.

//அமிதாப்பின் தமிழ் ட்விடுக்கு பின்னால் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சில ட்வீத்களை பார்த்தேன். அதன் நம்பகத்தன்மைகுறித்தெல்லாம் ஆராய விருப்பமில்லை.. பார்த்தேன். அந்த சமயம்சந்தர்ப்பவாத சந்நியாசி தங்கர் நினைவுக்கு வந்தார். ட்வீட் போட்டேன்.//

நேரடியாகவே சொல்கிறேன். இப்போது பிரச்சனை என்று து எதிர்க்கேள்வி எழுப்பட்டவுடன் தான் ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து இந்த விளக்கத்தைத் தேடிப் பொருத்திச் சொல்கிறீர்கள் என்பது என் புரிதல். ஏற்கனவே இதை மனதில் வைத்துத் தான் போட்டீர்கள் என்பதை நம்பவில்லை. பொதுப்புத்தியில் ஒரு கோமாளி என்ற பிம்பம் தங்கருக்கு இருப்பதை வைத்துப் போட்டிருக்கிறீர்கள் என்றே நான் நினைத்தேன். இப்போதும் அதையே நினைக்கிறேன். இந்த ரைமிங்கைத் தாண்டி நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவங்களை நினைத்து, நீங்கள் முன்வைக்கும் "சந்தர்ப்பவாதம்" என்ற பொருளில் உங்கள் ட்வீட்டை விளங்கிக் கொண்ட ஒருவரேனும் இங்கே இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அப்படிச் சொல்பவர்களின் மற்ற விஷயங்களின் புரிதல்களை கவனித்துக் கேள்வி கேட்க நினைக்கிறேன். "கை தட்டினாயா?" என்பதை "கை அடிச்சியா?" எனக் கேட்கலாம் தான். தமிழ் தடை செய்வதில்லை. ஆனால் பொதுவாக பெரும்பான்மையானோர் தவறான பொருள் கொள்ளக் கூடும் என அப்படிக் கேட்க மாட்டோம் அல்லவா? அதை இங்கே ஒப்பிட்டுக் கொள்ளவும்.

//பச்சன் என்ற ரைமிங் மட்டுமே உம் கண்ணில் பட்டதென்றால் உமக்கும் உம் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழிக்கும் பயொவில் இருந்த இன்ட்டெலெக்சுவல் என்ற வார்த்தைக்கும் ஸ்நானபிராப்தியே இல்லையோ என ஐயுறுகிறேன்.//

என் ஹேண்டிலின் முன்னொட்டும், பயோவும் பலருக்கும் உறுத்தல் தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். உங்களுக்கும் அது கண்ணிநுண் சிறுத்தாம்பாய் இருப்பதில் தவறில்லை. தொடர்ந்து ஐயுற உங்களுக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

//நானும் 20வருடங்களாக பெண்களைகடந்து வருகிறேன். என் அனுபவம் வேறாக இருக்க்றது. ஆளுக்குஏற்றார் போல அளந்து பழகும் பெண்களின் புத்திசாலித்தனத்தை கண்டு வியக்கேன். //

ஓ! சரி. பெண்களுக்கு அபாரமான நடிப்புத் திறமை உண்டு என்பதையும், அதைப் பல ஆண்கள் உண்மை என்றே நம்ப விரும்புகிறார்கள் என்பதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்.

//போகட்டும். எல்லா விவாதமுமெனக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகிறது. இன்று, 1/ 8ஐ விட ட்வீட்லாங்கர் எழுதவும் படிக்கவும் எளிது என அறிந்து கொண்டேன் .//
அப்படிப் பார்த்தால், ப்லாக்கில் போடுவது இன்னமும் வசதி. எடிட், கமெண்ட் எனப் பல வகைகளில். ஆனாலும் எளிமை வசதி எல்லாம் கடந்து, ப்லாக், ட்வீட்லாங்கர் தவிர்த்து ஏன் 1/8 போடுகிறேன் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஒரு விஷயத்தில் கவனிக்க வேண்டியதை விட்டு வேறு எதையோ கவனிப்பதைப் பற்றி பொட்டும் இன்னொன்றும் என்று சாரு ஒரு கதை சொல்லி இருக்கிறார். நீங்கள் மென்மேலும் பல விவாதங்களை நிகழ்த்தி இது போல் பல விஷயங்களை அறிந்து கொள்ள வாழ்த்துக்கள்!

//நன்றி. வணக்க்க்க்க்க்க்க்கம் //
நன்றி. 



 நன்றி - கார்க்கி , ரைட்டர் , அமிதாப் ஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkRYbUBBAXxH3zzzo57Hdpl2iJuFdFaEt9JTf_l19AJsLZ-SSHVJgeofzVF2dgv3gPZnrKkYgdvIVEY6ViLADPTCIGUouz91FaGQoxBa2nl58ZXPn_STgDHBktZqrWGlA3lygRfFiGy4ah/s400/amitabh-jaya-wedding-004.jpg


டிஸ்கி - இந்தப்பதிவில் முறைப்படி கார்க்கியிடமோ , ரைட்டரிடமோ அனுமதி வாங்கலை , அவர்கள் ஆட்சேபித்தால்  இந்தப்பதிவு 6 மணி நேரம் கழித்து அகற்றப்படும் , எனவே எல்லாரும் சீக்கிரம் படிச்சுக்குங்க

அழகிரி அதிமுக வில் அம்மாவுக்கு வாரிசாவாரா? ஓ பக்கங்கள் ஞாநி அலசல்


ஓ பக்கங்கள்

ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா?

ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 


இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.



ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.


ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.


ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும்.


அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை.


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.

குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன.


ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.


இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும்.


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை.


அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம்.

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.


கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார்.

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.


அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.


நன்றி - கல்கி , புலவர் தருமி 

வலை வீசினால் சிக்கிக் கொள்ள கேப்டன் அயிரை மீனல்ல, சுறா மீன்

Photo
1. கமல் ( மைன்ட் வாய்ஸ்) - என் படத்தை பார்த்துட்டு சூப்பர்னு அவங்க சொல்வாங்க.அவங்க படத்தைப்பார்க்காமயே பிரமாதம்னு நான் சொல்வேன்.டீலிங்



-------------------------------------



2. வலை வீசினால் சிக்கிக் கொள்ள கேப்டன் அயிரை மீனல்ல, சுறா மீன் - பிரேமலதா # ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ - ராதிகா 



---------------------------



3. பிராப்பரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற பொண்ணுதான் எனக்கு வேணும்.ஓஹோ.குவிஸ் புரோகிராம் நடத்தவா பொண்ணு கட்றீங்க? 




---------------------------


4. மேடம்.நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு நீச்சல் உடையில் டான்ஸ் ஆடறீங்ளே? 



யா டான்ஸ் தான்.நடிக்கலையே? 


--------------------------------



5. உங்க பொண்ணுக்கு ராகு கேது தோஷம் இருக்கு.



 அய்யய்யோ.நேத்துத்தான் ரகு ,சேது பஞ்சாயத்து முடிஞ்சுது.மறுபடியுமா?



------------------------------


Photo



6. டாக்டர்.தினமும் அதிகாலை 5 எழுந்து விடஎன்ன பண்ணனும்?



 ஒண்ணும் பண்ணக்கூடாது.நைட் 9 மணிக்கே தூங்கிடனும். 




------------------------


7. டியர்.குக்கர்ல 3 விசில் வந்தா அடுப்பை ஆப் பண்ணிடுங்க.



ஓக்கே ஆனா குக்கர்ல ஒரு வெயிட் தானே இருக்கு.மீதி 2 எங்கே? 



--------------------------


8. மனைவியிடம் கோபிக்காதீர்கள்--கிருபானந்த வாரியார்# தாலி கட்ன மனைவியைத்தவிர வேற எந்த மனைவி கிட்டேயும் தமிழன் கோவிச்சுக்கவே மாட்டானே? 




----------------------------



9. அன்பே! தூரத்தில் நான் கண்டபோது உன் முகம் நிலா மாதிரி இருந்தது.கிட்டே வர வர கலா (மாஸ்டர்) மாதிரி ஆகிடுச்சே. ஏன் ஏன் என் அன்பே! 




--------------------------


10. டியர்.இன்னைக்கு 8 பூரிதான் சாப்பிட றே.ஏன்?



 டயட் தான்...:))டாக்டர்தான் சாப்பிடறதை பாதியா குறைக்கனும்னார். 




------------------------



WILL



11. இப்படி நிறைய பேர் வெளியேறினால், முகநூல் இனி என்ன ஆகும்.



 உலகம் உருப்படும் 




-----------------------------


12. டாக்டர்.அஞ்சு கிலோ குறைக்கனும்.



..பவுடர் அடிக்காம பட்டுப்புடவை கட்டாம காட்டன் சேலை கட்னாலே போதும் 




---------------------------------



13. டாக்டர்.பொண்ணுபார்க்க வர்றாங்க .அர்ஜென்ட்டா அஞ்சு கிலோ குறைக்கனும்....




அவங்க வெயிட் பார்க்க வர்றாங்ளா? பொண்ணு பார்க்க வர்றாங்ளா? 




-------------------------------------


14. இப்போ இருக்கறது தான் நான் இல்ல..அதான் பழைய படிக்கு மாற என்ன பண்ணனும் டாக்டர்?




 லிப்ட்ல போகாம படிக்கட்டுல போனா பழைய படி க்கு மாறிடலாம் 




----------------------------



15. ஒயிட் ரைஸ் சாப்பிடாத இருந்தா வெயிட் மேலும் கூடாமல் இருக்கும்..




 டாக்டர்.லெமன் ரைஸ் மஞ்சள் தானே? அது ஓக்கேவா? 




-----------------------------


இன்று அன்புள்ள காதல் நிகழ்ச்சில சிறப்பா மின் அஞ்சல் அனுப்பியிருன்தாங்க , அத்தனை மின்னஞ்சலும் ரொம்ப பிடிசிருந்திச்சு எனக்கு , skyp இலையும் தொடர்பு கொண்டு செமைய கதச்சங்க நம்ம அன்புள்ள காதல் நெஞ்சங்கள். ரொம்ப மினன்சல்கள் வந்திருக்கு நாளைக்கு சேர்த்துக்கிறன் காதல் உள்ளங்களே .



16. உடம்பு இளைக்கனும்னா டயட்ல இருக்கனும்.3 இட்லி தான் சாப்புடனும். 




ஓக்கே டாக்டர்.சாப்பாட்டுக்கு முந்தியா? பிந்தியா? 



-------------------------



17. மக்களே! நீயா? நானா? ஆல் செட்டப் டிராமா.வீணா உணர்ச்சி வசப்படாம பாருங்க.டி ஆர் பி ரேட்டிங் எகிற ,யூ ட்யூப் ஹிட்ஸ் அள்ள நிகழ்த்தப்படும் ரிகர்சல் பார்த்து எடுத்த டிராமா 



-----------------------------



18. மாப்ளே! என் பொண்ணை கட்டிக்கறீங்க்ளா? 




கட்டிக்க நோ அப்ஜெக்சன்.கல்யாணம் கட்டிக்கனும்னா யோசிக்கனும் 



-----------------------------


19. டியர்.உன்னைக் கட்டிக்கிட்டு என்னத்த கண்டேன் ?




 அதான் டெயிலி நான் பார்க்கற சீரியல் எல்லாத்தையும் பார்க்கறீங்ளே போதாது? 



---------------------------


20. அன்பே! நீ ஜில்லுனு இருக்கும் குல்பி.நான் உனக்கு ஜிங் ஜக் அடிக்கும் அல்பி 




----------------------------



ராஜ குடும்பம்.
ராஜ குடும்பம்.


21. படம் பார்க்கவே பிடிக்காத என் புருஷர் மேரேஜ்க்குப்பின் சினிமா தியேட்டரே கதியா இருக்கார். 



வீட்டுக்கு வந்தா நீங்க பண்ற இம்சைக்கு அந்த இம்சை தேவலாம்னு நினைச்சிருப்பா ர்



------------------------


22. திமுக, அதிமுக வை ஒழிக்க காலதேவன் கட்டளையிட்டுள்ளான் - ராமதாஸ்# ஆமா இவர்தான் எமனோட பி ஏ.




--------------------------


23. காங்கிரஸை வளர்க்க பாடுபடுவோம்-ராகுல் # அது என்ன நமீதா கூந்தலா? கேசவர்த்தினி ஆயில் போட்டு வளர்த்த ?்




--------------------------



24. இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்: மன்மோகன் # ஓ.இது வேறயா ? நமீதாவை கட்சில சேர்த்தும்போதே நினைச்சேன் 




-----------------------


25. அத்தான்.ஜெமினி சர்க்கஸ் போலாமா? வேணாம்.போர்.சாவித்ரி சர்க்கஸ் போலாம்.கிளாமரா இருக்கும் 





-------------------------


Photo



26.  மணிரத்னம் ரசிகன் - U R SO CUTE. 




 சாண்டில்யன் ரசிகை - அட்லீஸ்ட் 5 பக்கமாவது என் அழகை வர்ணிச்சாதான் நம்ம முதல் இரவு அடுத்த கட்டத்துக்கு் 



---------------------------


27.  மிஸ்டு கேர்ள் = முன்னாள் காதலி!? அல்ல.மிஸ் சோட ( டீச்சரோட.) பொண்ணு.அதையும் விட மாட்டோம் 



------------------------


28. புரியாமல் பேசும் சம்சாரம் - அடுப்படியில் ஒரு குழப்படி # ஆ என்னா அடி 





----------------------------



29. கடல் கன்னியை கல்யாணம் பண்ணினா நீ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.சினிமா கனவுக்கன்னியை கல்யாணம் பண்ணுனா நீ மிக்சர் பார்ட்டி 




--------------------------


30. ஒரு வருஷத்துக்கான பில்லை ஒரே தவணைல கட்டுவீங்ளா? நீங்க வேற.மாசா மாசம் தர வேண்டிய வீட்டு வாடகையையே வருஷம் 1 தடவைதான் தர முடியுது





-----------------------------------



டி வி டு டே டைம் டேபிள்




Monday, January 21, 2013

கலைஞர் கம்யூனிஸ்ட் ??!! - தமிழருவி மணியன் விமர்சனம்

கலைஞர் எந்த வகையில் கம்யூனிஸ்ட்?

ண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச்சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்​பதற்குப் போர்க் குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும்.



 இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்து விட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார் கலைஞர் கருணாநிதி. 


கவியரசர் ஷெல்லியின் படைப்பான 'புரோமித்​தியஸ்’ போன்று எவ்வளவு கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், சமரசமே இல்லாமல் தீரத்துடன் தியாக வாழ்வை விரும்பி ஏற்பவரே மார்க்ஸின் பாதையில் மாற்றமின்றிப் பயணிக்க முடியும். சமரசங்களையே தன்னு​டைய அரசியல் வாழ்வின் அணிகலன்களாகப் பூண்டு அழகு பார்க்கும் கலைஞர், எந்த விதத்தில் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக இருக்கிறது. தான் எதை வாய் மலர்ந்தாலும், அதைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் மக்கள் 


சமுதாயம் வணங்கி ஏற்று வழிபட வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்ப்பது கருத்துலகத்தின் தர்மத்துக்கு ஒருபோதும் தகாது.


'நான் சிறுவயதில் இருந்தே கம்யூனிஸக் கொள்கைகளில் ஈர்க்கப்​பட்டவன். நான் கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்​பட்டவனா, இல்லையா என்பதைக் கம்யூனிஸ்ட் தோழர்களே நன்றாக அறிவார்கள்’ என்று முரசொலித்து முழங்கி​யிருக்கிறார் கலைஞர்.



 'ஏழை மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே சொத்தான வீட்டையும் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்டேன். கழக நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பொருட்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்துக்கு அளித்து விட்டேன். பாளை யங்​கோட்டையில் தனிமைச் சிறையில் வாடி னேன். ஆடம்பர வாழ்க்கை என்னிடம் இல்லை. 75 திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிய பிறகும், 'தெரு வீட்டில் (street house) வசித்து வருகிறேன். 



என் மகனுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே 'ஸ்டாலின்’ என்று பெய​ரிட்டேன். மக்சிம் கார்க்கியின் 'தாய்’ நாவலைக் கவிதையில் காவியமாக்கினேன். இவ்வளவு செய்த நான் கம்யூனிஸ்ட் இல்லையா?’ என்று கலைஞர் உருக்கமாகக் கேட்கிறார். இந்தக் காரியங்களால் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
'பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் வஞ்சக நெஞ்சம்கொண்ட பாத்திரத்தை ஏற்று நடித்த 'நடிகவேள்’ எம்.ஆர்.ராதா தன் ஊழியரிடம், 'நேற்று எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டேன். சென்ற வாரம் அரச மரத்​துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்தேன். என்னை வள்ளல் என்று எவனும் பாராட் டவில்லையே’ என்று மனம் புழுங்குவார்.



 நம் கலைஞர் தன்னை யாரும் கம்யூனிஸ்ட்டாக ஏற்க மறுப்பவர்களின் மீது விமர்சனக் கணைகளை வேகமாக வீசும்போது, தவிர்க்க முடியாமல் 'பாவ மன்னிப்பு’ எம்.ஆர்.ராதா நம் மனக்கண்ணில் தரிசனம் தருகிறார்.



காணும் உலகம் வேறு; கண்டறியப்படும் உலகம் வேறு. காணும் உலகில் யாரும் எளிதில் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியும். ஆனால், கண்டறியப்​படும் உலகில் அதற்கான சாத்தியம் எளிதில்லை என்பதுதான் சத்தியம். நீச்சல் கற்பதற்கு நீந்து வதுபோல் கற்பனை செய்வது போதாது. சுதந்திரம் பெறுவதற்குச் சுதந்திரமாக இருப்பதுபோன்று பாவனை செய்வது போதாது. கம்யூனிஸ்ட் ஆவதற்கு சொத்து​டைமையின் மீது நாட்டமில்லாதவராக நடிப்பது மட்டும் போதவே போதாது. 'பிளேட்டோவை நான் மதிக்கிறேன். ஆனால், உண்மையை அவரைவிட அதிகமாக நான் மதிக்கிறேன்’ என்பதுதான் அறிவுலக சுதர்மம். 



பழுத்த அரசியல்வாதி கலைஞரை நாம் மதிக்கிறோம். அதற்காக, உண்மையை மதிக்காமல் புறம்தள்ளக்கூடுமா? எந்த வகையில் கலைஞரை ஒரு கம்யூனிஸ்ட்டாக ஏற்க முடியும்?


'சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து இல்லாமல் பறிக்கப்பட்டு விட்டது. ஒரு சிலரிடம் தனிச் சொத்து குவிந்து இருப்பதற்குக் காரணமே, இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிட​மிருந்து அது பறிக்கப்பட்டதுதான். அதனால்தான், சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்’ என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் பிரகடனம் செய்திருப்பதை நம் கலைஞர் வாசித்தது இல்லையா?


 பொருள் சார்ந்த சமூக அமைப்பில் அனைத்து உடைமைகளும், வளங்களும் வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தின் அங் கங்களான அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. தனிச் சொத்துடைமைக்கு அங்கு இடம் இல்லை என்பதுதானே கம்யூனிஸத்தின் உயிர். இந்த இலட்சியம் நோக்கி நம் கலைஞரும், கழகத் தள பதிகளும் இதுவரை ஓர் அடியாவது அழுத்தமாக எடுத்து வைத்தது உண்டா?


''ஐந்து முறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயரு 'தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்'' என்று கலைஞர் வழங்கி​யிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டு விட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? 



ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே. அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல் 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதி வரை வாழ்ந்து செத்தவர்கள், 'தெரு வீடு’கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிவதன் மூலம் 'கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?’ என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக்கூடும்.



மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு 1. நிருபன் சக்ரபர்த்தி 2. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு, தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்களாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடி யாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள்.



நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த போதும், ஏழைகளின் தோழனாய் தன் னைச் செதுக்கிக்கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்​பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல் கத்தாவின் புகழ் பூத்த இதழான 'அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர். முதல் வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்த பிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடைகளும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும்தான் இருந்தன. 



'தெரு வீடு’கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளி மையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார்.
இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். 'இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றுவரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக் கவில்லை.


 இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண்டவர். 'என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலை ஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்?


'எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக்கூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்தது இல்லை’ என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவுசெய்திருப்பதை நிருபன் அறிந்து​ வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை.



இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்​பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல்திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947-ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட 'தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில்தான் நாளிதழ் ஆனது. 




அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89-வது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில்கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார். ஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூ னிஸ்ட்கள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறை படிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா?



சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை?



நம்பூதிரிபாட் ஒரு முறை சொன்னார்: 'நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்து விடுகிறான்.



ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொதுவாழ்க்கைப் பிரகடனம்!





readers views



1. Dr.Mrs.MeenakshiPrabhakar18 Hours ago

 
கம்யூனிசம் என்பது உலகளாவிய பொதுவுடமையேயன்றி, எனக்கு எதுவும் வேண்டாமென சொல்லும் நிலையல்ல.அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையேற்படுத்த தனக்கு எதுவும் வேண்டாமென சொன்னார்களே தவிர, எள் முனையளவும் சுயனலமில்லாத உயிரினம் எங்கும் கிடையாது.அங்கு தலைவர் உண்டு.இருப்பது எல்லோருக்கும் பகிரப்படவேண்டும் என வலியுறுத்தும் பொறுப்பு உண்டு.னான் பகிர்ந்து தருகிறேன், அல்லது பகிர்வதற்கான கொள்கை வகுத்து தருகிறேன், எனக்கு எதுவும் வேண்டாம் என்பது உளவியல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் வினோத செயல்தளம்.பிறர் வாழப்பொறுக்காத மனனிலை, கம்யூனிசம் என அறியப்படுவது தவறு.விதிகள் சுட்டி என்ன விதி மீறல் நடந்திருக்கிறது, என்ன சமூக நலம் குறையாக இருக்கிறது, அதற்கான காரணம் களையப்பட வேண்டும் என சொல்லலாமே தவிர, இல்லாதவனை உயர்த்த முயலாது, நிரந்தர உதாரணமாக்கி , உயர்பவனை தேக்க முடியாது.

கம்யூனிசத்தினற்கு தன்னிலை க்றித்த கலைஞரின் கருத்துக்கள் வேண்டுமானால் ஏற்க முடியாதவையாக இருக்கலாம்.ஆனால் கம்யூனிஸ்ட் சிந்தனை ஒவ்வொரு மனிதருக்கு இயல்பு.கலைஞருக்கும் கூட.பராசக்தி பட வசனங்கள் தெளிவாக அவரது சமூக நீதியின் பால்பட்ட அக்கறையை குறிப்பவை.

பரம்பரைக்கு நிதி சேர்த்ததும், சர்வாதிகாரம் எப்ற்றதும் நடப்பு அரசியல் தந்த துணிவு.எம்.ஜி.ஆரும், ஜயலலிதாவும் தந்த பாதை.சசிகலா காட்டிய வழி.மக்களின் விழிப்புணர்வு இல்லாத சினிமா மோகம்.

தனி மனிதர்களாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.விதி தன்னியல்பானது.குழு நிலையிலேயே கண்காணிப்பு அவசியமாகிறது.வாழுதல் அவரவர் உரிமையெனில், பொறுப்பும் அவருடையதாகவே மாறிப்போகும்.சாடல்கள் இல்லாத உலகம் சாதனை படைக்கும்.

நம்பூதிரிபாட் சோஷலிச தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.சோஷலிசம் தலைவர் இல்லாத குழு நிலைப்பாடு.ஆலோசனைகளின் ஒருங்கினைத்த கொலள்கை வரைவு பொது பயனுக்கு எடுத்துக் கொள்வது. நம்பூதிரி பாடின் தலைவர் குறித்த கருத்து சோஷலிச கொள்கையில்லை.அந்த கால கட்டத்தில் நடப்பு நிலையில் குறித்த நம்பூதிரிபாட் என்பவரின் தனி மனித கருத்து.

விமரிசனங்கள் இடையூறு செய்பவை.எனக்கென எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என காந்தியும் கூற முடியாது என்பதே நிதரிசனம்.ஒரு விரல் விமரிசனமாக நீண்டால் மூன்று விரல் விமரிசனமாக நம்மை நோக்கி நீளும்.ஒரு விரல் ஆலோசனையாக நீண்டால் மூன்று விரமல் நம்மை நோக்கி ஆலோசனையாக நீளும்.னம்மை உயர்த்தும்.பிறரையும் உயர்த்தும்.

கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக மாற வேண்டிய கட்டாய சூழல் இன்று.கட்சி நிதியாவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய கட்டாயமும் இன்று.எப்படி ஊழல் வந்ததோ அப்படியே அதிர்வுகள் இன்றி செல்லும் தளம் எங்கும் விதி நிறுவுதல்.மனிதம் என்பது பண்பு.மனித பண்புல்ள விலங்குகளும் உண்டு.விலங்கு குணமுல்ல மனிதர்களும் உண்டென்றாலும் இவை சூழல் தரும் கற்றல் மட்டுமே .இயல்பு இல்லை.எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்னில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்றொரு பாடல் உண்டு.அன்னை என்பதும் சமூகமே.

சூழல் ஒரு மனிதரை மாணிக்கமாகவும், கூழாங்கல்லாகவும் மாற்றுகிறது என்பதை மறுக்க முடியுமா?.கூழாங்கள்ளும் மாணிக்கமாக மாறும் சூழல் உண்டு.தக்க அங்கீகாரம் கிடைக்காவிட்டால், மாணிக்கமும் கூழாங்கல்லாக மாறும் நிலை உண்டு.பயன் படவே இயற்கையின் படைப்பு..கூடையில் அடுக்குவதற்கோ?

தக்க விதத்தில், அந்தந்த நிலைப்பாட்டில், அவரவர் திறன் படி , சட்ட மன்றம் எனும் உலோகத்தில் பதித்தால், ஜனனாயகம் எனும் அழகிய ஆபரணம் உருவாகக்கூடும்.
2. Balasubramanian19 Hours ago
நம் ஊர்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்......'சிலருக்கு, கல்யாண வீடுகளில் மணமகனாக இருக்க வேண்டும். சாவு வீடுகளில் பிணமாக இருக்க வேண்டும் '. திரு கருணாநிதி அந்த ரகம். எங்கு சென்றாலும், அர்த்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும், தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டும்.
3. கம்யூனிஸ்ட் அல்லாத இரு கம்யூனிஸ்ட் உண்டு தமிழகத்தில்....

1. கர்மவீரர் காமராஜர்
2. மாண்புமிகு கக்கன்
4. திருச்சிக்காரன்2 Days ago
விமர்சனம் யார் வேண்டுமானாலும் பண்ணலாம்.

என்னை விமர்சித்தே
தன்னை வளர்த்துக்கொண்டவன்
தம்பி தமிழருவி மணியன்
என்று கலைஞர் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாரோ...
5. RADHAKRISHNAN2 Days ago
 
சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். .... யாராவது பதில் சொல்லுங்களேன்....
6. அறந்தை அபுதாகிர்2 Days ago
 
அலை கற்றையில் "அடித்து பிடித்து" அனைவருக்கும் அலை பேசி பேசும் வாய்ப்பை அளித்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

பெரும் செல்வந்தர்கள் மட்டும் கண்டு களித்த காபரா ஆட்டங்களை "மானாட மயிலாட " மூலம் பாமரனின் வீட்டுக்கே கொண்டு வந்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இந்த காட்சிகளையெல்லாம் தவற விடக்கூடாது என்பதற்க்காக வண்ணத்தொலை காட்சி பெட்டியை இலவசமாக அளித்தோமே நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இது போன்ற நல்ல செயல்களை பாராட்டி யார் விழா எடுத்தாலும் , எவ்வளவு பணி இருந்தாலும் அவர்கள் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக விழாவிற்க்கு சென்று அவர்களை மனம் குளிர வைத்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இதையெல்லாம் கண்டு கொள்ளாத தமிழருவி மனியன் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்...
7. கம்யூனிஸ்ட்களை பற்றி பேசும் போது நாம் சமீபத்திய திரு.ஹர்கிஷன்சிங் சுர்ஜீத் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.பஞ்சாபில் பெரும் நில சுவாந்தார் குடும்பத்தில் பிறந்து 100 வருடங்கள் வாழ்ந்து தன் பங்காக கிட்டிய குடும்ப சொத்த்தை (கிட்டதட்ட 200 ஏக்கர்கள்) கட்சிக்காக தானம் செய்து கடைசி வரை எளிமையாக வாழ்ந்த ஒரு கம்யூனிஸ்ட் அவர்
thanx - ju vi