Tuesday, December 18, 2012

2013 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

செவ்வாய்க்கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு 12.34-க்கு,  1.1.2013-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி சுக்கிரனின் ஆதிக்கத்தில் (2 0 1 3=6) இந்த ஆண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.



ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


முற்போக்கு சிந்தனை உள்ளவர்களே !
மேஷம்: உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... மனதில் தெளிவு, நிம்மதி பிறக்கும். புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். ஆனால், மே 29-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், ஓரே முயற்சியில் முடிக்க வேண்டிய சில வேலைகள் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சனியும், ராகுவும் இந்த ஆண்டு முழுக்க 7-ம் வீட்டிலேயே தொடர்வதால்,  வேலைச்சுமை, அலைச் சல் காரணமாக கணவர் கோபப்படலாம். நீங்களும் அவருக்கு சரிசமமாக அலுத்துக் கொள்ளாதீர்கள். கேதுவும் ராசிக்குள்ளேயே நிற்பதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.



முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.

சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே !
ரிஷபம்: இந்த வருட தொடக்கம் முதலே சனியும், ராகுவும் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் பக்குவத்தை அடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனால், மே 28-ம் தேதி வரை ஜென்ம குரு தொடர்வதால், கணவருடன் கருத்து மோதல் வரும். உடல் உபாதை வந்து நீங்கும். மே 29-ம் தேதி முதல் ராசியை விட்டு குரு விலகி 2-ம் வீட்டில் நுழைவதால், தோல்வி மனப்பான்மை, விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை, கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மே 29-ம் தேதி முதல் வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையை  மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும்.



இந்தப் புத்தாண்டு, உங்களை சாதிக்க வைப்பதுடன் வசதி, வளங்களையும் அள்ளித் தரும்.

கலையுணர்வு மிக்கவர்களே !
மிதுனம்: கேது பகவான் லாப வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நவீன ரக செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். புது சொத்து வாங்குவீர்கள். இந்த வருடம் முழுக்க சனியும், ராகுவும் 5-ல் தொடர்வதால், அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சொந்தபந்தங்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. குருவால் கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். 



இந்தப் புத்தாண்டு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு அவ்வப்போது உங்களைத் தள்ளினாலும், கடின உழைப்பால் முன்னேற வைக்கும் வருடமாக அமையும். 

 
கால நேரம் பார்த்து காய் நகர்த்துபவர்களே !
கடகம்: உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது சோர்வாக காணப்படுவீர்கள். உடல் பருமனைக் குறைப்பதாக சொல்லி பட்டினி கிடக்க வேண்டாம். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.  மே 28-ம் தேதி வரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மே 29-ம் தேதி முதல் குரு 12-ல் மறைவ தால், அநாவசியச் செலவுகளை தவிருங்கள். இந்த ஆண்டு முழுக்க ராகுவும், சனியும் 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், ஓய்வெடுக்க முடியாமல் போகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படலாம்.. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறு வீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.     


        
சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவைப்படும் வருடமிது.

அன்புக்கு அடிமையானவர்களே !
சிம்மம்: சனியும், ராகுவும் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மனோபலம் அதிகரிக்கும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஆனால், உங்களுக்கு 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்... அலைச்சல், திடீர் பயணங்கள், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மே 28 வரை, குரு 10-ம் வீட்டிலேயே நிற்பதால்... சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குரு லாப வீட்டில் நுழைவதால்... பணவரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்கு வீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து பேசுவார்கள். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வும், புது வாய்ப்புகளும் வரும். 



தொட்டதெல்லாம் துலங்குவதுடன், எதிர்பாராத வெற்றிகளையும் தரும் வருடமிது.

  நகைச்சுவையாக பேசுபவர்களே !
கன்னி: உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானம் உயரும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். இந்த வருடம் முழுக்க 2-ம் வீட்டிலேயே ராகுவும், ஏழரைச் சனியும் தொடர்வதால், வீண் விவாதங்களைத் தவிருங்கள். செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மே 29-ம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களில் சிலர் எதிரில் ஒரு பேச்சு, மறைவில் வேறு பேச்சு என்று இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். 



பயணங்களின்போது கவனமாக இருப்பதுடன், ரகசியங்களையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும் பாதுகாக்க வேண்டிய வருடமிது.

நீதிக்குத் தலை வணங்குபவர்களே !
துலாம்: உங்களின் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். செலவுகள் உங்களைத் துரத்தினாலும், அதற்கேற்ற பண வரவும் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மே 28-ம் தேதி வரை குரு 8-ல் மறைந்திருப்பதால், வீண் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். கவலைகள், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் 9-ம் வீட்டில் நுழைவதால், எங்கு சென்றாலும் கூடுதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். மாமியார், நாத்தனாருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். வருடம் முழுக்க உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் தொடர்வதால்... உடல் உபாதை வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரம் செழிப்பாக நடைபெறும். ஜூன் மாதம் முதல் உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.   


இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளையும், நிம்மதி குறைவையும் ஏற்படுத்தும். அதேவேளையில், அந்தஸ்தை அதிகப்படுத்தும்.

சுயகௌரவம் பார்ப்பவர்களே !
விருச்சிகம்: கேதுபகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீட்டை நவீனமாக்குவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால்... வீண் விரயம், ஏமாற்றம், திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். பழைய கடனை பைசல் செய்தாலும், புது கடன் வாங்க வேண்டி வரும். உறவினர்கள், உங்களின் நிதி நிலையறியாது பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால்... வீண் அலைச்சல்களும், செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


சின்னச் சின்ன சுகங்களை இழந்து, பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது.

தான, தருமங்களை விரும்பிச் செய்பவர்களே !
தனுசு: லாப வீட்டில் சனியும், ராகுவும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தொட்ட காரியம் துலங்கும். வரவேண்டிய பணம் எல்லாம் கைக்கு வந்து சேரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வருடம் முழுக்க கேது 5-ல் நிற்பதாலும், 8-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதாலும், மன இறுக்கம் வந்து செல்லும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பூர்விக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு, மருந்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மே 28-ம் தேதி வரை ராசிநாதன் குரு பலவீனமாக இருப்பதால், சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்று சில நேரங்களில் வருத்தப்படுவீர்கள். ஆனால், மே 29-ம் தேதி முதல் குரு 7-ல் அமர்வதால், தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 


இந்தப் புத்தாண்டின் முற்பகுதி முணுமுணுக்க வைத்தாலும், மையப் பகுதி முதல் மகிழ்ச்சி பொங்கும்.

மனசாட்சியை மதிப்பவர்களே !
மகரம்: மே 28-ம் தேதி வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்தபடி அமையும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். மே 29-ம் தேதி முதல் 6-ல் குரு மறைவதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் யோசித்து செய்வது நல்லது. இந்த வருடம் முழுக்க 10-ல் ராகுவும், 4-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால், ஓரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டி வரும். வாகனம் பழுதாகும். தாயாருக்கு உடல் நலக் கோளாறு வந்து செல்லும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக போராடுவீர்கள்.


தைரியமான முடிவுகளாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் வெற்றி பெறும் வருடமிது.

கொடுத்து உதவும் குணம் உள்ளவர்களே !
கும்பம்: ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் சொந்தமாக இடம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் 4-ம் வீட்டில் நிற்பதால்... வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வேலைச்சுமை வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குரு 5-ல் நுழைவதால், புது தெம்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிக சம்பளத்தில் புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. இந்த வருடம் முழுக்க கேதுபகவான் 3-ம் வீட்டில் வலுவாக தொடர்வதால், துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் ஆதாயமடைவீர்கள். ராகு 9-ல் நிற்பதால், வீண் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.         


இந்தப் புத்தாண்டின் முற்பகுதி அலைச்சல், செலவினங்களை தந்தாலும், ஜூன் மாதம் முதல் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கற்பனையில் மூழ்குபவர்களே !
மீனம்: உங்களின் சுக - சப்தமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். இந்த வருடம் முழுக்க 8-ம் வீட்டிலேயே சனியும், ராகுவும் நிற்பதால்... ஆர்வமின்மை, சிலர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது பணம், நகையை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பது நல்லது.  உங்களின் திறமையை மற்றவர்கள் குறைத்து எடை போடுவார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிநாதன் குருபகவான் சாதகமாக இல்லாததால், திட்டமிட்ட காரியங்கள் தடைபட்டு முடியும். இடைத்தரகர்களை நம்பாமல், சில வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வெளி உணவுகளைத் தவிருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மேலதிகாரியை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.


திட்டமிடுதலும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் வருடமிது.


நன்றி - அவள் விகடன்

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.



 ''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.



மீல்மேக்கர் டிக்கிஸ்
தேவையானவை: மீல்மேக்கர் - 20, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், முருங்கைக்கீரை - ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி... பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - முக்கால் கப், பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... பூண்டு - பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு - 2, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப், வெங்காயம் - 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் - 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு - 100 கிராம், மைதா - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. 
செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி... ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 2, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு - 4 பல்,  காய்ந்த மிளகாய் - 6, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ -  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி... இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10, ஸ்வீட் கார்ன் - 2, பெரிய வெங்காயம் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு - 6 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட... சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி
தேவையானவை: இட்லி - 10, வெங்காயம், தக்காளி - தலா 2, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி... சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி
தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், தேன் - ஒரு கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

கிரீன்  ரெட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் - 10, புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.

கேழ்வரகு  முருங்கைக்கீரை அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) - அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.

நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ்
தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,
டொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி... கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

முந்திரி பொடி
தேவையானவை: முந்திரி - 20, பாதாம் - 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்... அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.

பட்டாணி ஊத்தப்பம்
தேவையானவை: தோசை மாவு - 4 கப், துருவிய கேரட், வேக வைத்த  பச்சைப் பட்டாணி - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து... மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.

மூங்தால் பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - சிறு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.

ஸ்வீட் கார்ன் சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி... பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஸ்பைஸி ரவா கிச்சடி
தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பறிமாறவும்.

ஆலு  பாலக் கட்லெட்
தேவையானவை: பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் - 4, பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, மைதா மாவு - அரை கப், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த  பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து... டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

சோயா  ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு - ஒன்றரை கப், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும்  சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 6,  பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.

 வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10, புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

 பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் - 4, சீஸ் துருவல் - அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.


நன்றி - அவள் விகடன்



ராணுவத்தை எதிர்த்த யுவான் சுவாங் - எஸ் ராமகிருஷ்ணன்

எனது இந்தியா!

புத்தனைத் தேடிய பயணி
 பள்ளிப் பாடப் புத்தகங்களில் பலரும் படித்து, மறந்துபோன 100 பெயர்களில் ஒன்று யுவான் சுவாங்.



சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி, பருத்து வீங்கிய கழுத்து, வட் டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடல் அமைப்பு கொண்ட யுவான் சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், அவரது பயணத்தின் பின்னுள்ள தேடுதலையும், அவர் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளவே இல்லை.



சமீபத்தில், ரிச்சர்ட் பெர்ன்ஸ்டெயின் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்பப் பயணம் செய்து, 'அல்டிமேட் ஜர்னி’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில், யுவான் சுவாங் மேற்கொண்ட பயணத்தின் இடர்ப்​பாடுகளையும், அவர் கடந்துவந்த பாதையின் வரைபடங்களையும் மீள்ஆய்வு செய்தபோது, 'எப்படி இந்த மனிதர் அந்த நாட்களில் பயணம் செய்தார்?’ என்று வியப்படைந்து, 'யுவான் சுவாங் ஒரு மகத்தான யாத்ரீகர்’ என்கிறார்.


எவ்விதமான முறையான வரைபடமும் வாகன வசதிகளும் இன்றி நடந்தும், கோவேறுக் கழுதைகளிலும் யுவான் சுவாங் பயணம் செய்து இருக்கிறார். அதே பாதையில் இன்று எல்லா வசதிகள் இருந்தும் பாதுகாப்பாக ஆப்கானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் தாலிபான்கள், கண்ணி வெடிகுண்டுகள், தீவிரவாத வன்முறைகள். 


அந்தக் காலத்தில் மழை நேரங்களில் ஓர் ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்று உறுதியான இரும்புப் பாலம் இருக்கிறது. ஆனால், அதைக் கடக்க அரசு அனுமதி மறுப்பதால், பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்று தனது நூலை முடிக்கிறார். காலம் காட்டும் உண்மை இப்படித்தான் இருக்கிறது.


நாடு பிடிக்கவோ அல்லது மதப் பிரசாரம் செய்வதற்காகவோ, ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ், கேப்டன் குக், பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் போன்ற பயணிகளைப் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியாவுக்கு வந்துசேர்ந்த புத்தத் துறவி யுவான் சுவாங்.


தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார். கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக்குதிரைகளிலும்,கால்​​நடையாக நடந்தும் இவர் கடந்து வந்ததூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான் சுவாங்கின் சிறு வயதில் வேர்விடத் தொடங்​கியது.


யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்றுகொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர். யுவான் சுவாங்கின் சகோதரர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர். ஆகவே, தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலேயே அவருக்கு அறிமுகம் ஆனது.


தனது 12-வது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கப்பட்ட யுவான் சுவாங், அங்கே பௌத்தத் தத்துவமும் கன்பூசிய சிந்தனைகளும் கற்றார். அதன்பிறகு, அவர் பௌத்த அறிவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், 'தி கிரேட் லேர்னிங் டெம்பிள்’ என்ற மடாலயத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த மடாலயத்தில் 500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருந்தனர். அவர்களது முக்கியப் பணி பௌத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.


அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவில் இருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்தத் துறவிகள், தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காகச் செலவு செய்தனர்.


பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை மூத்த துறவிகள் பரிசீலனை செய்வார்கள். பிறகு, அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலப்பிரதியோடு ஒப்பீடு செய்யப்படும். 


 முழுமையாகத் திருத்தம்செய்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக 40 துறவிகள் வேலை செய்தனர். அவர்கள் ஏடுகளைப் பிரதி எடுத்து, சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப் பார்கள். இப்படி, தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்றத் தொடங்கிய யுவான் சுவாங், இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.



இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழிபெயர்க்க முடிந்தது.



629-ம் ஆண்டு மடாலயத்தில் தங்கி இருந்த ஓர் இரவில், இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அருகில், தான் பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாகப் புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை உணர்ந்தார் யுவான் சுவாங்.


ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பகவான் புத்தர் பிறந்த இடத்தைக் கண்டு வர வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவைச் சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தனர். ஆனால், யுவான் சுவாங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்.



ஆனால், தாங் அரசு அந்த நாட்களில் யுத்தத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த காரணத்தால், எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. யுவான் சுவாங் சூழலைப் பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, குதிரையில் பயணம்செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தி​யாவுக்குச் செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே, அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டார்.



மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடி தொடங்கிய அவரது பயணம், எண்ணிக்கையற்ற பிரச்னைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும், வழிப்பறியும், பசியும், நோயும் அவரைத் தாக்கியது. ஆனாலும், அவர் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணித்தார்



சீனாவின் எல்லையைக் கடக்கும்போது, அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்துவிடும்படியாக ராணுவ அதிகாரி கட்டளை இட்டதும், 'அப்படித் தன்னைச் செய்வதாக இருந்தால், அந்த இடத்திலே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேன்’ என்று யுவான் சுவாங்  தனது கத்தியைக் கையில் எடுத்தார்.



அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி, எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தார். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, வெயிலும் தாகமும் வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்துப்போன யுவான் சுவாங், அந்தப் பாலைவனத்திலேயே இறந்து​விடக்கூடும் என்று நம்பினார். இனி, தனது முயற்​சியால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்று உணர்ந்த​வராக தன்னைக் குதிரையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.



குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் போகத் தொடங்​கியது. எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால், குதிரை எதையோ அறிந்தது​போல சீராகப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கண் விழித்தபோது, தன் எதிரில் பெரிய பாலைவனச் சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர்ப் பொய்கை இருப்பதையும் கண்டார்.


அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஓடிப்போய்த் தண்ணீரைக் குடித்தார். அங்கேவிளைந்​திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரைதன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளதுஎன்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான் சுவாங், அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்திய​தோடு, முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நாட்டை அடைந்தார்.



அந்த நாட்டின் அரசர் புத்தத் துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரைத் தேடிச்சென்றார். அரசரும் யுவான் சுவாங்கின் அறிவுச் செல்வத்தைக் கண்டு வியந்து, தனது ஆஸ்​தான குருவாக தன்னோடு வைத்துக்கொண்டார். ஓர் ஆண்டு அங்கே கழித்த யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்துக்குத் தயாரானபோது அரசர் அனுமதி தர மறுத்தார். தன்னை இந்தியப் பயணத்துக்கு அனுமதிக்கா விட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் தொடங்கினார். அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப் பிரதிநிதி என்று முத்திரை ஓலையையும், பாதுகாப்புக்காக ஆட்களும், வழியில் தேவைப்படும் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.



ஆனால், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது, அவரை யாரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்தனர் கொள்ளைக்காரர்கள். அதனால், அவரை வழிமறித்துத் தாக்கி, காவலர்களைக் கொன்று அவரது உடைமைப் பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி நபராக விடப்பட்டவர், அங்கே இருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். 



வழி முழுவதும் பௌத்த மடாலயங்களில் தங்கியும், சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கைமுறை கலாசார செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதிக்கொண்ட யுவான் சுவாங், வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

நன்றி - ஜூ வி . எஸ் ராம கிருஷ்னன்


அண்ணா! லட்டு தின்ன ஆசையா?

டுடே டைம் பாஸ்@டிவி
Photo
1.சேலையில் ராமர் உருவம் குஷ்பூக்கு எதிராக போராட்டம் -# நல்லாப்பாருங்க அது சுந்தர் சி படம்.ராமர் கெட்டப் 




-------


2. லட்சுமி மேனன் போட்டிருக்கும் கொண்டைக்கு பேரு கும்கி கொண்டையாம் # பியூட்டி பார்லர் பிகரின் டைரியில் இருந்து 





-----------------


3.  ஆஸ்கர் ரேஸில் குதித்தது அமலாபாலின் மலையாளத்திரைப்படம்..: # அமலா பாலியப்படமா? 




-------------------


4. கவுதம் - நீஎபொவ உண்மை சம்பவம் # ஓஹோ.அப்போ அதுவும்சொந்த சரக்கில்ல? 





-------------------




5. அன்பே! வெண்ணெய் போல் உருகிக்கொண்டிருக்கிறேன் 



.டேய் வெளக்கெண்ணெய்.வெய்யில்ல நிக்காத.வீட்டுக்குள்ளே போ 




------------------





6. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு- பாமக # தில் இருந்தா கேப்டன் வாய்க்கு ஒரு பூட்டு போடுங்க பார்க்கலாம் 





------------------


7. கைது செய்யப்பட்ட என் கட்சி ஆட்கள் அனைவரையும் விடுதலை செய்யனும் - டாக்டர் ராம்தாஸ் # சரி சரி அந்த 5 பேரையும் கூட்டிட்டுப்போங்க -ஜெ 




-------------------


8. ஜெ வை பிரதமராக விட்டால் இந்தியாவே இருண்டு போய் விடும் - ஸ்டாலின் # உங்க குடும்பமே ஜெயிலுக்குள் போயிடும்) 



-----------------


9. கவுதம் - என் அடுத்த படத்தை உயிரைக்குடுத்து எடுப்பேன் #



 இப்டித்தான் சொல்வீங்க.ஆனா உயிரை எடுப்பீங்க 



------------------


10. சமந்தா ,லக்ஷ்மி மேனன் என்றால் உதடுகள் ஓட்டும் ஸ்ருதி ,ஸ்ரேயா என்றால் உதடுகள் ஒட்டாது ! ் 




--------------------


நான்
தடம்புரள நினைக்கும்
தண்டவாளம் நீ!
நான் 

தடம்புரள நினைக்கும் 

தண்டவாளம் நீ!


11. வங்கிகள் மூலம் மானியம் என் ஐடியா ராகுல் திருடிவிட்டார் - லோகேஷ் #இதெல்லாம் ஒரு திருட்டா? தம்பி நீ இன்னும் வளரனும் - ராகுல் நக்கல்் 





-------------------



12. தலைவலி போய் திருகுவலி வருதல் = காலையில் அஜித் படம் மாலையில் விஜய் படம் # சும்மா 



-----------------------



13. இண்ட்டர்வ்யூவில் - இதுவரை எத்தனை கம்பெனில வேலை செஞ்சிருக்கீங்கனு கேட்டா ஓவர் எக்ஸ்பீரியன்ஸ்னு சொல்றீங்க்ளே? 




6 கம்பெனி ஸார் ( ஓவர் = 6) 



--------------------


14. த்ரிஷாவை ஈசியா பீட் பண்ணிடுவேன்:சமந்தா..# நானா தேடி போகமாட்டேன்.தானா ஒரு பிகர் தேடி வந்தா வேணா சொல்லமாட்டேன் - ராணா 




-------------------------


15. நீதிபதிக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய செக் 'பவுன்ஸ்' ஆகி திரும்ப வந்தது.# மகா திருதராஷ்ட்ரா அரசு போல 



------------------



அடைமழைக் குளிரிலும்
சூடேற்றி போகிறது –உன்
நனைந்த கூந்தல் தேகம்!
அடைமழைக் குளிரிலும்

சூடேற்றி போகிறது –உன்

நனைந்த கூந்தல் தேகம்!


16. ஒரு பெண் புன்னகைத்தால் பதிலுக்கு புன்னகைத்தவர்களை விட தனக்குப்பின்னால யாராவது இருக்காங்களா?னு திரும்பிப்பார்த்தவங்கதான் அதிகம் #எகீ 




-----------------------



17. ஊசியிலைக்காடுகளின் முக்கிய மூன்று மரங்கள் யாவை? 


டீச்சர்.நான் பார்த்த வரை எந்த மரமும் முக்கலை.சைலன்ட்டாதான் இருந்துது 



------------------



18. அன்னியமுதலீட்டை எதிர்ப்பவர்கள் ஒன்றும்தெரியாதவர்கள்-பிரதமர் #ஓஹோ.மறைமுகமா நீங்க எல்லாம் தெரிஞ்சவர்னு சொல்ல வர்றீங்க ?- சோனியாீ 




--------------------


19. ஸார்.கும்கி னு டைட்டில் வெச்சுட்டு கடைசி வரை கும்கி யானையை காட்டவே இல்லையே? 



பிரபு சாலமன் - கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் 



--------------------


20. கவுதம் - என் அடுத்த படத்துக்கு நீங்கதான் இசை.பார்த்து.சொதப்பிடாதீங்க 



.ஏ ஆர் ஆர் - ம்க்கும்.அதை நான் சொல்லனும்.பாவம் சூர்யா. 



---------------------


Ultimate star Thala ajith - Ultimate boldness
How many remember this?
Photo: Ultimate star Thala ajith - Ultimate boldness
How many remember this?



21.  நீ எப்போ வந்து சொல்லப்போறே? 



ஸாரி.ஏ டி எம் பாஸ் வோர்டு சொன்னா என்னை பரதேசி ஆக்கிடுவே 



--------------------------


22. ஸார்.நான் ஒரு மீனவன்.மே ஐ கம் இன் ? 



ஏன்? வந்தா என்ன?



 புயல் எச்சரிக்கை.மீனவர்கள் கடல் பக்கம் போக வேணாம்னு நியூஸ் # மணிரத்னம்் 



----------------------


23. காதலியின் திருமணத்துக்கு காதலன் சோகத்துடன் சென்றான்.மாப்ளையுடன் நின்றவள் கேட்டாள் - அண்ணா! லட்டு தின்ன ஆசையா? 



========================


24. விஷால் ( சமர்) கிச்சன் ல போய் ரசம் வெச்சா அது சம(ர்)ரசம்? 




----------------------


25. ஜெ பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓபிஎஸ் # அண்ணன் எப்போ எந்திரிப்பான்?திண்ணை எப்போ காலி ஆகும்னு தம்பி வெயிட்டிங்் 




-------------------------------




Must Read , Please Help :

ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட வினோதினிக்கு இன்று 23-வது (16-12-12) பிறந்த நாள்.

படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன் தோழிகளுடன் ஊருக்கு ...
வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த வினோதினிக்கு, இன்று பிறந்த நாள் என்று கூட சொல்லாமல் மறைக்க வேண்டிய பரிதாப நிலை அவரது பெற்றோர்களுக்கு..

`` இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..” என்று சொல்லும்போதே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அவரது தந்தைக்கு..

முகம்.. பார்வை இழந்து பகலா..இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி..

இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது நண்பர்களே..

காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து நிற்கும் இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதேனு, உதவி செய்ய விரும்பும் வாசகர்களுக்காக..

JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416

(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு காயத்துடன் கொடூரன் சுரேஷ்)

YOUR ONE SHARE CAN FIND SOMEONE TO HELP HER
See more
Photo: Must Read , Please Help : 



ஒரே நாளில் கொடூரன் ஒருவனால் தன் கண்களையும் கனவுகளையும் தொலைத்துவிட்ட 
வினோதினிக்கு இன்று 23-வது (16-12-12) பிறந்த நாள்.



படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின்னர் வரவிருந்த இந்த பிறந்த நாளை தன்
 தோழிகளுடன் ஊருக்கு வந்து கொண்டாடுவேன் என்று தன் பெற்றோரிடம் கூறியிருந்த
 வினோதினிக்கு, இன்று பிறந்த நாள் என்று கூட சொல்லாமல் மறைக்க வேண்டிய 
பரிதாப நிலை அவரது பெற்றோர்களுக்கு.. 



`` இன்னைக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா..” என்று 
சொல்லும்போதே கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது அவரது தந்தைக்கு..



முகம்.. பார்வை இழந்து பகலா..இரவா.. என்ன தேதி.. என்ன நேரம்.. எதுவும் 
தெரியாமல் கருகிய மலராய் படுக்கையில் கிடக்கிறார் வினோதினி.. 



இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது நண்பர்களே..



காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரே நாளில் தன் கனவுகளையெல்லாம் தொலைத்து 
நிற்கும் இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதேனு, உதவி செய்ய விரும்பும் 
வாசகர்களுக்காக.. 



JAYAPALAN

603899558 

INDIAN BANK 

KILPAK BRANCH 

IFCS CODE: IDIB000k037 

contact : ramesh 9944161416



(அந்த பெண் மீது வீசிய ஆசிட் சிறிது அவன் மீதும் தெரித்ததால் சிறு 
காயத்துடன் கொடூரன் சுரேஷ்)



YOUR ONE SHARE CAN FIND SOMEONE TO HELP HER

Like · ·

Monday, December 17, 2012

பூனம் பாண்டே பர பரப்பு பேட்டி @ த டைம்ஸ் ஆஃப் இண்டியா

Poonam Pandey
 
 http://pclayer.com/images/2012/07/Poonam-Pandey-Wallpaper-3.jpg
 
Times of India
With the latest comparison by director Amit Saxsena about Poonam Pandey better than Bipasha Basu, Poonam claims to not like comparison with anyone. However, the actress takes Amit's statement as a compliment.

Amit Saxsena directed Bipasha in
Jism and now directing Poonam in her debut film, Nasha. On being asked about the director's comment, Poonam asserted, "Honestly, I don't like to be compared. However, Amit is my director and he saying that is surely a compliment. I am happy that my director liked my work."


While talking about her film, Poonam seemed confident. "The film is 60% complete and we recently came back from Mahabaleshwar. When we were shooting outside Mumbai, it was really
fun. I am enjoying film thoroughly," concluded Poonam.




Poonam Pandey is better 
than Bipasha: Jism director
Poonam Pandey More Pics
Times of India
Amit Saxena, who directed Bipasha Basu in 'Jism' (2003), is also directing Poonam Pandey in her Bollywood debut, 'Nasha'.

Saxena is very impressed with Poonam's talent and her ability to emote before the camera. "Poonam is a natural when it comes to facing the camera. She grasps the script so well that working with her is a cakewalk," he said, adding, "Poonam is a director's actor. I think she is far more talented than Bipasha. The future looks very bright for Poonam in Bollywood."

Apart from Amit, the crew members are also impressed with Poonam. Says a source on the outdoor set, "Just watching Poonam on the sets is amazing. She is very passionate about her work and her concentration shows how focussed she is."

So, how does Poonam keep herself so focussed? "I am very passionate about my work. For me, work always comes first," the actress says, adding, "I listen to music to keep me charged up." And which is her current favourite? "I am sexy and I know it," she concludes with a wink and a wicked grin. 
 
 
நன்றி - The Times of India

டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பேச்சு

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:
டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:
"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


thanx - dinamalar




மக்கள் கருத்து 



1. இங்கே கருத்து சொல்லி இருக்கும் திரு ரமேஷ் மற்றும் சாடிக் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசாங்கம் என்ன மானியமாக மாதம் 6000 ரூபாயா குடுக்குது. அத வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காம சோம்பேறி ஆக போறாங்க, 600 ஓவாய வச்சிக்கிட்டு இன்னைக்கு ஒரு தனி மனிதனால கூட வாழ முடியாதுன்னு சாமானியனுக்கும் தெரியும். மானியம் என்பது என்ன? கஷ்ட படுரவங்களுக்கு அவங்க கஷ்டத்த குறைக்க குறைஞ்ச விலைல பொருள குடுக்குறதுதான் மானியம். அதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கும் மேல வாழற நம்ம இந்தியால இது தேவை, ஏழை மக்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம மானியத்த ஒழிக்கணும்னு சொல்றிங்களே நீங்க எல்லாம் மனசார முடியாதவங்களுக்கு ஒரு உதவி கூட செய்ய மாட்டிங்கனு நல்ல தெரியுது 






2. பிஜேபியோடு சேர்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதே பிழைப்பாகி விட்டது சிலருக்கு. ஷீலா என்ன தவறாக சொல்லி விட்டார், ஆதார் அட்டை மூலம் மாதம் அறுநூறு கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்றால், படுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சொல்லவில்லை. மறைமுக மானியமாக கிடைத்து கொண்டிருக்கும் இப்பணத்துடன் குடும்ப வருமானமும் சேர்ந்தால் சுலபமாக குடும்பம் நடத்த முடியும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம். நம்மை பொறுத்த வரை இந்த மான்யங்களையே நிறுத்தி விட்டு விலைவாசியை குறைப்பதற்கும் வேலையில்லா திண்டாத்தை போக்குவதற்கும் பயன் படுத்தினால் நல்லது என்பதே சரியானதாக இருக்கும். 




3. Sekar
 Sekaran ஐய்யய்யோ...இந்த தொகை மிக மிக அதிகம்..அறுநூறு ரூபாயா..அடேங்கப்பா..இவ்ளோ தொகை வைத்துகொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? சுவிஸ் வங்கியில் கணக்கை ஆரம்பித்துவிடுவார்கள். சொன்னால் கேளுங்கள்..தயவு செய்து இவ்ளோ தொகையை கொடுக்காதீர்கள்..சேர்த்து வைக்க வங்கி இருக்காது..எல்லா செலவும் போக மீதி கூட ஐநூற்றி தொண்ணூறு ரூபாய் மீதமிருக்கும். அப்படியே உடனே சுவிஸ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். ஷீலா அவர்கள் என்செய்வார்கள்..? அவர்கள் வாழுகின்ற விதம் அப்படி..ஏழைகள் என்றால் என்ன என்று கேட்பார்கள்..அல்லது வயிற்றில் ஈரத்துணியை போட்டு கொண்டு வாழ்ந்தால்..இதே அதிகம்தான். கோபுரங்களில் வாழ்பவர்கள்..குடிசைகள் பற்றி தெரிய நியாயமில்லை..ஒரு லட்சத்தை தினசரி வாடகையாக கொடுத்து வாழும் வசதி படைத்த மத்திய அமைச்சர்கள் உள்ள நாடு அல்லவா இது..இன்னமும் பேசுவார்கள்..இது போதும் பிரச்சாரத்திற்கு..காங்கிரஸ் காணாமல் போக இது போதும்.. 





4. இலக்கு எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் வைத்துக்கொண்டால்தான் நமக்கு முயற்சி என்பது இருக்கும். அரசியல்வாதிகள் இப்படி கீழ்த்தரமான இலக்குகள் வைத்துக்கொள்வதால்தான் நாடு முன்னுக்கே வராமல் இருக்கிறது. அறுநூறு ரூபாயில் ஒருவர் மட்டுமே வாழ்க்கை நடத்துவது கடினம். மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும்தான். அதில் உணவுக்கு மட்டுமே ரூபாய் ஆறுநூறு போதாது. ஆறு நூறு ரூபாய்க்கு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு (ரொட்டி) யார் கொடுக்கிறார்கள்? ஒரு ஆளின் தினக்கூலியே முன்னூறு ரூபாய்க்கும் அதிகம். மாதம் இரண்டு நாள் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் சோம்பேறிகளாக இருந்தால் போதுமா? டெல்லி முதலமைச்சர் என்ன சொல்லவருகிறார்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மாறினால்தான் நாடு முன்னுக்கு வரும். ஒரு ஆளின் மாத வருவாய் மூன்று ஆயிரம் என்ற இலக்கு இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அப்போதுதான் அரசியல்வாதிகளும் வேலை செய்வார்கள். மக்களும் உழைப்பார்கள். மக்களுக்கு இந்த அளவு வருவாய் வரவில்லை என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும் அல்லது எதாவது ஒரு நிரந்தரமற்ற வேலையாவது தந்து ஊதியத்திற்கு வழி செய்யவேண்டும். இதை செய்யாதவரை நாடு முன்னேறியதாக சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. ..





5. 1965 லே நானும் என் கணவரும் 400ரூவா சம்பளத்துலே குடுமபம் நடத்த என்ன பாடு பட்டோம்னு தெரியுமா? அப்போ காய்கள் அவ்ளோமலிவு , பால் 35காசுதான் லிட்டர்க்கு. ஒரு லிட்டர் பால் வாங்கினா போரும் அரிசி நல்லரகம் 38காசு மலிவுரகம் 26காசு , 1கிலொ பருப்பும் 20காசு 30காசுதான் பிறகு கொஞ்சம்கொஞ்சமா ஏறி 2 /3 ரூவாயாச்சு. வீட்டுவாடகை 45ரூவா மின் பில் 14 டு 20 ரூவா ஆகும் பத்துகாசுக்கு முள்ளங்கிவாங்கினாலபூம்பிஞ்ச்ஜாக இருக்கும் ஒரு முள்ளங்கி வாங்கி கொஞ்சம் சாம்பர்லே போடு மீதிய பொரியலும் செஞ்சுருவேன் பொரியலும் செஞ்சுருவேன் இதே டெல்லிலே தான் இருந்தேன் என் கணவர் 1000/ ரூவா சம்பளம் வாங்கும் போது 1980ம் ஆண்டு வரை வீட்லே டிவி வாங்கலேஒரு ற்றான்சிச்ட்டர் தான் உண்டு . muunupillaikal படிச்சாகணும் அப்போ எல்லாம் பள்ளி சம்பலம்கூட கம்மிதான் தமிழ் பள்ளிலேதான் படிச்சாங்க 8ம் வகுப்புவரை பீஸ் 3ரூவாதான் டியூஷன் எல்லாம் போகலே தாமே தான் படிச்சாங்க டீசர்கலும் நல்ல கத்துகொடுத்தாங்க பிள்ளைகளும் சின்சியரா படிச்சாங்க , 9ம் வகுப்பிலேந்து 10ரூவாதான் பீஸ் .+1 +2 க்கு எடுக்கும் க்ரூப் பொருது 15 டு 20 ரூவாய்தான் , இப்போ வாரம் 10 000 / வாங்கினாலும் போராதுன்ர நிலை , ஏழைகளும் தம் பிள்ளைகள் நல்ல பெரிய பல்லிலே ஆங்கிலவழி லே படிக்கவைக்க ஆசைபடுராக, இப்போதும் பல பெத்தவங்க தாம் தான் கஷ்டம் படறோம் தம் பிள்ளைக நல்லா வாழனும்னு உளைக்கிராக அரசு சொல்லுது 2000/போரும்னு ஷீலா திக்ஷித்துக்கு வரும் சம்பளம் எவ்ளோ ஒரு சாமானியனுக்கு வரும் சம்பளம் எவ்ளோ , இந்தம்மா சூக்க ரொட்டியும் தாலும் தின்னுட்டு போகமுடியும் வயசாச்சு இன்று செத்தால் நாளை சங்கு , வளரும் பிள்ளைக நிலை என்ன என்று தெரிஞ்சுதான் பேசுராகளா , யாருகண்டது இதுகளெல்லாம் ஒருவேளைக்கே 200 ரூவா சிலவு செய்வாக ,