Monday, October 08, 2012

உப்பிய அனுஷ்கா VS யாரையும் கிஸ் செய்யாத சன்னி லியோன்

1. அத்தான்.இன்னைக்கு மீட்டிங் இருக்கு ஸ்கூல்ல.வீட்டுக்கு வர லேட்டாகும். 


ஐ ஜாலி. 


அதனால சமையலை நீங்களே பார்த்துக்குங்க #



ம்க்கும் :-) 



------------------------


2. மனைவியின் சமையலுக்கு உதவியாய் காய் கறி அரிந்தவன் இல்லற ரகசியம் அறிந்தவன் :-) 




-------------------



3. ஓ பெண்களே பெண்களே ஏன் எல்லாரும் ஜிமிக்கிக்கு டிமிக்கி குடுத்துட்டீங்க? 



---------------



4. இன்ஸ்பெக்டர் ,தக்காளி வாங்க உழவர் சந்தை போன என் கணவர் இன்னும் வீடு திரும்பல.இப்போ நான் என்ன செய்ய ? 



சிம்ப்பிள் . லெமன் ரைஸ் செய்ங்க 



-------------------------


5. இனிமையான முத்தம் உன் உதட்டில் வைப்பது.சூடான முத்தம் ஹீட் ஏறுன அயர்ன் பாக்சில் உதட்டை வைப்பது :-) 



-----------------




6. ரோட்ல " ஏய் இடியட்",னு கத்தி பாருங்க.நிறைய பேரு திரும்பி பார்ப்பாங்க :-) 



---------------------


7. மிஸ் .நாளை ஆபிஸ்.வரும்போது ஜெ மாதிரி பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு வந்தா லவ்க்கு ஓக்கே் ,மு க மாதிரி கறுப்பு டிரஸ்னா நாட் ஓக்கே 




----------------------



8. ஒரு சாதா பிகரை அசாதாரண பிகரா மாற்ற.... அதை பார்க்கறவங்களின் கற்பனை கலந்த புரிதல்தான் பல நேரம் காரணமாகுது 



-----------------


9. எதிர்க்கட்சியாய் இருக்கையில் வெளிவரும் ் வண்டவாளங்கள் ஆளுங்கட்சி ஆனதும் அமுங்கிப்போயின 



----------


10. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற இழிவை எடுத்துக்காட்ட கருப்புச் சட்டை: கருணாநிதி # டூ லேட் தலைவரே,உங்க ஆட்சி நடந்தப்பவே அணிந்திருக்கனும் 



-----------------------



vathi Rajan was tagged in JaffnaFriends's photo.


11. இந்தியா 'அவுட்' ஆக டோணி தான் காரணம்-முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு #டோனியா?சோனியா? 



------------------------


12. இந்தியாவில் ராணுவ ஆட்சி வர வாய்ப்பே தரககூடாது என்றுதான் அதை பலவீனம் ஆக்கி விட்டார்களோ என்னவோ ? 



-------------------------


13. தமிழ்நாடு 3 கடன் கார கட்சிகளால் நாசமாகி விட்டது 1 காங்கிரஸ் 2 தி முக 3 ஜெ அதிமுக 



--------------------------


14. தானே தன்னைத்தலைவன் என்றழைத்துக்கொண்டவர்கள் எல்லாம் தானைத்தலைவர் ஆகி விட்டனர் 



---------------------


15. ஜெ வின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை -தா.பா # முன்னால புரட்சித்தலைவி போட்டுக்குங்க.நடு நடுவே அம்மா குலதெய்வம் சேர்த்துக்குங்க 



-------------------------




16. ஜெ - எனக்கு கறுப்பு பிடிக்காது என்று தெரிந்தேதான் சில தீய சக்திகள் கறுப்புசட்டைக்காரன் ஊழலுக்கு கெட்டிக்காரன் அவதாரம் கொண்டனவோ ?




----------------------


17. கைலாஷ் யாத்திரைக்கு அரசே மானியம் தர வேண்டும் - ராம கோபாலன் # கொடுத்தா "கை" லாஸ் ஆகிடும் -சோனியா 



-------------------------


18. இதுவரை நான் யாரையும் கிஸ் செஞ்சதே இல்லை - சன்னி லியோன் # டம் டம் மேடம், ஜிஸம் 2 படத்துல ஹீரோ, வில்லன், வாட்ச்மேன் கூட எல்லாம் செஞ்சீங்களே 




-----------------------------


19.காஞ்சிபுரம் - மனைவிக்கு சமைத்த குழம்பு சரியில்லை என்று கணவன் தற்கொலை.# நல்ல வேளை, நான் எப்பவும் ருசியாவே சமைப்பேன் ;-0 



---------------------


20. அனுஷ்கா (வின் கன்னம்) உப்பல் என குறை கூறுபவர்களே!நீங்கள் ரசித்து ருசிக்கும் பூரி கூட உப்பி இருந்தால் தான் விரும்புகிறீர்கள் ;-0 



----------------------------



Photo

Sunday, October 07, 2012

புலிக்கலைஞன் – அசோகமித்திரன்- சிறுகதை

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.



வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.



எனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு, அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.



”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.



சிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.



”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார்.
”சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க” என்று அவன் சொன்னான்.
”சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே?” என்று சர்மா சொன்னார்.
”காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க”
”ஓ, நீயா? வேலாயுதமில்லை?”
”இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்”
”நீ வந்திருந்தயா?”
ஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு”
”யாரு வெள்ளை?”
”வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை.”
இப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.



”இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா?” என்று சர்மா சொன்னார்.
”தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.”
”யாரு சொன்னாரு”
”அதாங்க, வெள்ளை சாரு”
சர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.



”நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்” என்று சர்மா சொன்னார். 


நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.

தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி, சிறுகதை

மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.
நான்காம் தடவையாக, “எலே ராமு” என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, “இப்பத்தான்வெளியே போனான்” என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.
ராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.
ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.
அவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.
“தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது…” ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.
மாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.
ஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.
“அந்தப் பக்கமா போறேன், தாத்தா.” என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.
அவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.
தூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான்.
இப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.
“ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்” என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன் முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.
மீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.
ஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, “கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா” என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.
அவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.
ராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.
தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.
தன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது – ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.
“நீதான் பிடிச்சியா?” என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். “பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ ” மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.
ராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.
அந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து  இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
சற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.
இடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, “செத்த முன்னே எங்கே போயிருந்தே?” என்று கேட்டார் மாணிக்கம்.
“அந்தப் பெரிய மீனு…”
கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.
“அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ?” அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.
“அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது”.
ராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.
ராமுவும் கூடச் சென்றான்.
கயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.
ராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.
“அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா” என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.
அவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே  குளத்தில் போய் விழுந்தார்.
ராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.
“மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா.”
மாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.
“எதுக்காக இங்கேயே நிக்கறே?” என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.
மாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.
பெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.
குளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.
மாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.
அவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும் பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.
நீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.
மீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. சலிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத்  தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.
அடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். “ஒண்ணு நான்; இல்லே அது… ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்.”
பரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.
குளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.
தலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், “என்ன பண்ணிக்கிட்டிருக்கே” என்று வினவினார்.
அவன் மெளனமாக இருந்தான்.
“உன்னைத்தான் கேக்கறேன்”. காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். “எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே…” என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.
அவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது.
“எவ்வளவு பெரிய மீன்… ராஜா மாதிரி…” மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.
மீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலுவடைந்து கொண்டே வந்தது.
சப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.
வெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.
தூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.
வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.
“இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது” என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.
தக்கை அசைந்தது. பெரிய மீன் வந்துவிட்டது.
மாணிக்கம் எழுந்து நின்றார்.
மீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.
தெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.
மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.
கரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.
கொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.
மாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் “எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா?” என்று உறுமினார்.
அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.
“எலே கேக்கறது காதிலே உளுவுதா” சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.
அவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.
“நேத்தியிலேருந்து என்ன பண்ணினே?” தலையை அசைத்து மேலே தூக்கினார்.
“எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க” என்று கேட்டாள் அவன் மனைவி.
“பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க”
“இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்?”
“எட்டுக்கட்டு சனமுண்டு உனக்கு?”
“மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே”
“என்னடி சொன்னே திருடன் மவளே” என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.
“நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு.” என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.
“வாயை மூடு.”
அவள் குரல் உயர்ந்தது.
மாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.
“போ உள்ளே.”
”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”
“பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்.”
அவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.
அவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.
மகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.
குளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.
குளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. ‘உம்’ என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.
கண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.
சாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.
“அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்” என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.
‘சை’ என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.
முன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. ‘ஹா’ என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.
கோழிகள் கூவின.
“வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.
கிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.
“நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா.”
மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.
“ஆத்தா” என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.



நன்றி - தமிழ் தொகுப்பு எஸ் ரா மகிருஷ்ணன்

காசி ஆனந்தன் கடிதம் -தமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?

http://www.jaffnacnn.com/upload-files/sept/kasianandan02.jpgதமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?


காசி ஆனந்தன்
ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார்.

ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? 


அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உணமை.


சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக  மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான். 


 தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.


ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய  மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை  இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். 


உங்களுக்குக் கவலையாக  இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். 



ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். 


இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர்,  பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும்.



சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா?



இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம்.


 தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக  எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம்.



ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக்  கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும்.


 தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ்  கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும்.



எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா?



மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள். அதுபற்றி 2010, டிசம்பர் 23 அன்று வெளிவந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்
   என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

நன்றி - த சண்டே இந்தியன்

விநாயகரிடம் வேண்டிய அன்னா ஹசாரேவும், பதட்டப்பட்ட கலைஞரும்

1. ஷி இஸ் மை கேர்ள்னு சொன்னா யாரும் அடிக்க முடியாது, அது ஐ டெக்ஸ் மை யூஸ் பண்ணும் பெண்ணை குறிக்கும் ;-0



--------------------


2. முதல் இரவில் தவறாமல் இடம் பெறும் வசனங்கள் 1,என்னை உனக்கு பிடிச்சிருக்கா? 2, அம்மா இந்தப்பாலை உங்க கிட்ட குடுத்து குடிக்கச்சொன்னாங்க



-----------------------


3. நான் சின்னப்பையனா இருக்கும்போது முதல் இரவுன்னா சினிமால வர்ற மாதிரி மணப்பெண்ணின் தோழிகள 6 பேர் சுத்தி நின்னு ஹம்மிங்க் பாடுவாங்கனு திங்க்



----------------------------


4. எப்பேர்ப்பட்ட சாப்பாட்டு ராமனும் முதல் இரவில் வைக்கப்படும் பலகாரங்களை சாப்பிட மாட்டான் # டைம் வேஸ்ட் ஆகிடுமாம்




-----------------------


5. முதல் இரவை அடிப்படையாகக்கொண்டு ஒரு முழு காமெடிப்படம் இதுவரை தமிழில் வந்ததில்லை ,தெலுங்கு டப்பிங்க்கில் "முதல் இரவே வா வா"



-----------


6. கல்யாணம் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா மீதி இருக்க பேச்சிலர்ஸ் நாட்கள சாந்தி முகூர்த்தம் பற்றியே சிந்திக்கத்தோணும் # கிளுகிளு அவ தான் இனிப்பு்




---------------



7. ஊசி போட்டுக்காயப்படுத்தும் டாக்டரை விட, பஞ்சு வெச்சு் துடைக்கும் நர்சே மேல்....




---


8. சில பெண்கள் Saree கட்டியிருப்பதைப் பார்த்தால் நன்றாக காட்டி இருக்கீங்க என சொல்லத் தோன்றுகிறது! -



----------------------


9. திரும்ப சந்திக்க போவதில்லை என்று தெரிந்த பின் அதிகம் தைரியப்படுகின்றன விரல்கள் பஸ் நெரிசலில்




-------------------------



10. கன்னிப்பெண்ணுக்கும் கல்யாணமாகி கண்ணிப்போன பெண்ணுக்கும் குறைந்த பட்சம அறுபத்து ஆறு வித்தியாசம் இருக்கு




----------


`11. ஆயுதம் தவிர்ப்பீர் பெண்களே! # தோசைக்கரண்டி ,டிவி ரிமோட் ,பூரிக்கட்ட , தயிர்  கடையும் மத்து -எத்தனை..



=---------------


12. ஆண்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் பேசுவது அவங்கவங்க ஏரியா பாப்புலர் கேர்ளஸ் பற்றித்தான்.கில்மா குறித்த பேச்சும் கண்டிப்பா இருக்கும்.




--


13. உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டுபவரே Hypocrites. # சும்மா



-----


14. பத்தினி சாபம் பலிக்குமென்றால் இந்நேரம் புருஷன்்காரன் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்...



-----------


15. பெண்கள் தம் மிடம் இல்லாத அழகை பற்றியும்,ஆண்கள் தமமிடம் உள்ள இளிச்சவாய்த்தனம்் பபற்றியும்் பெருமிதம் கொள்கிறார்கள் #பெரும்பாலும்



---------


16. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என வாதிடுபவர்களுக்கு பிடித்த நதி வைகை ஆக இருக்கக்கூடும் # வை கை


------------

17. டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு எல்லாமே நாட்டு மக்களின் நன்மைக்குத்தான்: ம மோ்சிங் # எந்த நாட்டு மக்களுக்கு?



----


18.""ஊழல்வாதிகளுக்கு நல்ல புத்தி தாரும்': விநாயகரிடம் வேண்டினார் ஹசாரே# தயவு செஞ்சு அப்படி பண்ணிட வேண்டாம் - கலைஞர் பதட்டம்



--


19. ஆர்யா ஜாலியான நடிகர்- அனுஷ்கா # ஷூட்டிங்க் ஸ்பாட்ல இதை கண்டு பிடிச்சீங்களா? கேரவுன் வேனுக்குள்ளேயா?




---------------------------


20. தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா  #  மலையாளத்துல நடிங்க , தமிழ்ல எப்படியும் டப் ஆகிடும்

Saturday, October 06, 2012

ஒண்டுக் குடித்தனம் – இரா.முருகன் -சிறுகதை

சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன் ஒருத்தன்.
இந்த நஜீபை இழுத்துப் போட்டு உதைக்க வேண்டும்.
சரவணனுக்குப் பங்க்ளாதேஷ் காரன் நஜீப் மேல் வந்த ஆத்திரத்தை மீறி அரையில் முட்டிக்கொண்டு வந்தது.
பாத்ரும் கதவைத் திறக்க விடாமல் அதன் மேல் ராணுவ வீரன் படிந்து நின்று கேத்தியை முத்தம் கொடுக்கச் சொல்லித் திரும்பத் திரும்பக் கேட்டான்.
உனக்குப் புண்ணியமாப் போறது. கொஞ்சம் நகரு. நான் பாத்ரூம் போய்ட்டு வந்து தூங்கிடுவேன். அப்புறம் இஷ்டம் போல ஓடிப்பிடிச்சு விளையாடுங்க ..
சரவணன் விசனத்தோடு கேத்தியைப் பார்த்தான்.
கேத்தி ராணுவத்தானைப் பிடித்துப் பின்னால் இழுத்தாள்.
ஜார்ஜ் .. இவன் பாத்ரூம் போக வழிவிடு. திரும்பி வர வரைக்கும் நாம அவன் படுக்கையில் உருண்டு புரண்டுக் கொஞ்சம் போலக் கொஞ்சலாம் ..
சரவணன் அவளை நன்றியோடு பார்க்க அவள் பூப்போல சிரித்தாள்.
வடிவான சின்னப் பெண். இருபது வயசு காணும். அந்தப் பிராயத்தில் பிசாசு கூட அழகாகத் தான் இருக்கிறது.
பாத்ரூம் பிளஷ்ஷை இழுக்கும் போது நஜீப்பின் கழுத்து டையை இப்படிப் பிடித்து இழுத்து அவன் மொகரையில் குத்த வேண்டும் போல் இருந்தது சரவணனுக்கு.
ஜனாப் .. இந்த யார்க்ஷயர் கவுண்டியிலே எந்த ஊர்லே எந்தப் பேட்டையிலே வீடு வேணும்னாலும் சொல்லுங்க .. சல்லிசா முடிச்சுத் தரேன் .. வீடு பிடிச்சிருந்தா கமிஷன் கொடுங்க .. இல்லாட்ட வேணாம் ..
கொலாசியம் மதுக்கடையில் உசர ஸ்டூலில் உட்கார்ந்து சரவணன் காசில் பியர் குடித்துக் கொண்டு, பர்மிங்ஹாம், ஹாலிஃபாக்ஸ், ப்ரட்போர்ட் என்று எல்லாப் பிரதேசத்தையும் அவன் குப்புகுப்பென்று விட்ட சுருட்டுப் புகைக்கு ஊடாகக் காற்றில் வரைபடமாக விரலால் வரைந்து, அங்கேயெல்லாம் காலியான வீட்டு விவரங்களை சரமாரியாக அடுக்கியபோது சரவணனுக்கு அவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது.
விட்டால் பக்கிங்ஹாம் அரண்மனையில் கூட இரண்டாம் மாடியில் செயிண்ட் ஜேம்ஸ் பார்க்கைப் பார்க்க ஒரு காற்றோட்டமான அறையைக் குடக்கூலிக்குப் பிடித்துக் கொடுத்துவிடுவான் இவன்.
நூறு பவுண்ட் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கைமாறியதும் அந்தப் பங்களா தேஷ்காரத் தடியன் ஒரு மாதம் காணாமல் போனான்.
என்ன செய்ய ? ஆபீஸில் சடுதியில் இங்கிலாந்து போ என்று வொர்க் பெர்மிட் எடுத்துக் கொடுத்து சரவணனை அனுப்பி விட்டார்கள். அவர்கள் கூடவே வந்து இங்கே குடித்தனம் இருக்க வீடெல்லாம் பிடித்துக் கொடுக்க முடியாது. வேலையோடு வேலையாக அதைச் சரவணன் தான் செய்தாக வேண்டும்.
பங்க்ளாதேஷ்காரனை நம்பாதேன்னா கேட்டியா ?
சரவணனுடைய பாக்கிஸ்தானிய ரெஸ்டாரண்ட் நண்பர்கள் பரிதாபப்பட்டு ராத்திரி கோழிக்கறிக்குத் தொட்டுக் கொள்ள இன்னொரு பப்படம் இலவசமாகப் போட்டார்கள். அவர்களால் அவ்வளவு தான் உதவ முடியும்.
இன்றைக்கு வெள்ளிக்கிழமை ராத்திரி என்பதால் சும்மா பார் பாராகச் சுற்றி தாகசாந்தி செய்து கொண்டு, பாக்கிஸ்தானி கடையில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதும் முதலில் ஞாபகம் வந்தது நஜீப் சொன்னது தான்.
உங்களுக்காக அருமையான வீடு பார்த்து வச்சிருக்கேன் ஜனாப் .. விக்டோரியா காலத்துக் கட்டிடம். கிண்ணுனு கிராமப் பொண்ணு கணக்கா வனப்பா வடிவமா நிக்குது .. நாளைக்கே லேப்டேப் கம்ப்யூட்டர், ஊறுகாய் பாட்டில், துவைக்க வேண்டிய துணி சகிதம் போய் இறங்கிடுங்க ..படு சல்லிசு .. மாதம் நானூத்தம்பது பவுண்ட் தான் .. இந்தப் பேட்டையிலேயே இந்த ரேட்டுக்குக் கிடைக்காது.. ஒரு மாசமா அலஞ்சு பிடிச்சு வந்திருக்கேன் .. பெரிய வீடு .. . நவாப் மாதிரி சின்ன சைஸ் அந்தப்புரத்தோட இருக்கலாம் ….
தனிக்கட்டைப் பிரம்மச்சாரி சரவணன் படுக்கைக்குத் திரும்பினான்.
அங்கே கேத்தியைக் கட்டிப் பிடித்தபடி இழவெடுத்த பட்டாளத்தான்.
எங்கள் கால ஆங்கிலத்தில் நீ சொல்கிற இந்த நாலெழுத்து வார்த்தை கிடையாது .. இந்த மகா விஷயத்தை நாங்க போர்னிக்கேஷன் என்போம்.
கெக்கெக் என்று சிரிக்கும் அவன் நாசமாப் போக. சரவணன் தலையில் அடித்துக் கொண்டான்.
இந்த வீட்டில் வளைய வரும் பேயாகக் கேத்தரினும் அவ்வப்போது பேயிங்க் கெஸ்டாக வந்து போகும் அவளுடைய பேய் பிரண்டும் இருக்கிற விஷயத்தைக் கடன்காரன் நஜீப் சொல்லி இருந்தால் சரவணன் இங்கே வந்திருக்கவே மாட்டான்.
கேத்தி ராணுவக்காரனைப் பிடித்து அவளோடு இழுத்துக் கொண்டு படுக்கைக்குப் பக்கத்தில் மிதந்தபடி, “தூங்கு டார்லிங்” என்று சரவணனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
அவள் பாவம். முப்பது வருஷம் முந்தி இறந்து போனவள். இப்படி ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி பழைய பாய் பிரண்டோடு பாரில் போய் சுதி ஏற்றிக் கொண்டு நடனமாடி விட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது டிரக் இடித்து அகால மரணம் அடைந்தவள்.
சரவணன் இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள் ராத்திரி அவள் பிரத்யட்சமானதே சுவாரசியமான கதை.
ராத்திரியில் டெலிவிஷன் திரை தன்னிச்சையாக உயிர் பெற்று சானல் சானலாக மாறிய சத்தத்தில் சரவணன் விழித்துக் கொண்டபோது முன்னறை நாற்காலியில் புகை மாதிரி உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்த கேத்தி என்ற கேத்தரின் அவனுக்குப் பழக்கமானாள்.
என்னமோ சரவணனுக்குப் பயமே வரவில்லை. அவளுடைய சிநேகிதமான சிரிப்புத்தான் காரணம்.
ஒரு மாதத்தில் கேத்தி பழகி விட்டதோடு அவனுக்கு அவ்வப்போது வீட்டு வேலைகளில் ஒத்தாசையும் செய்கிறதை எப்போதும் சரவணன் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறான்.
ராத்திரி வீட்டுக்குத் திரும்பும்போது வெங்காயம் அரிந்து வைத்திருப்பது, வாஷிங் மிஷினில் தண்ணீரும் சலவைப் பவுடரும் நிறைத்து வைப்பது, புது ஒயின் பாட்டிலைக் கார்க் ஸ்குரூவால் திறந்து வைக்கிறேன் என்று உடைத்து அறை முழுக்க வாசனை வாசனையாக சிவப்பு ஒயினை ஓட விட்டது என்று உபத்திரவம் குறைவாகவும் உதவி கூடுதலாகவும் கேத்தி செய்கிறாள்.
அதற்காக இப்படி முன்னூறு வருஷம் முன்னால் உசிரை விட்ட ஒருத்தனைப் புது பாய் பிரண்ட் என்று கூட்டிக் கொண்டு வந்து ராக்கூத்து அடிக்கும் சலுகை எல்லாம் இந்தப் பெண்ணுக்குத் தர முடியாது சரவணனால்.
அந்த முப்பாட்டன் ராணுவ வீரன் முழியே சரியில்லை. தாடியும் மீசையும் வினோதமான ஆங்கில உச்சரிப்புமாக இருந்த அவன் வருஷக் கணக்காகக் குளிக்காதவன் என்று ஏனோ சரவணனுக்குத் தோன்றியது.
அந்தப் பக்கத்தில் இருந்து மொச்சு மொச்சு என்று சத்தம் வர, எக்கேடும் கெட்டுப் போங்க என்று ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு சரவணன் தூங்க ஆரம்பித்தான்.
காலையில் எழுந்ததும் பார்க்கக் கெட்டிலில் கேத்தி தண்ணீர் நிரப்பி இருந்தாள். செய்தித்தாள் மேஜை மேல் இருந்தது. டாய்லெட்டில் புது உருளை டாய்லெட் பேப்பர் மாட்டி வைத்துவிட்டுப் போயிருந்தாள். சக குடித்தனக்காரியால் சின்னச் சின்ன சவுகரியங்கள்.
ஆனாலும் நஜீப் மேல் கோபம் மட்டும் மாறாமல் சரவணன் விரைப்பாக எழுந்தான்.
இன்றைக்கு எப்படியும் முடிவு கட்டிவிட வேண்டும். தொலைபேசியை எடுத்தான்.
மாஃப் கீஜியே ஜனாப் .. உங்களுக்கு வீடு பிடிக்கலேன்னா வேறே உடனே மாத்திக் கொடுத்திடறேன் .. ஆனால் இங்கே கொடுத்த அட்வான்ஸ் அம்போதான் .. சரியா .. பேயாவது .. பிசாசாவது .. ராத்திரியிலே கொஞ்சமாத் தண்ணி போடுங்க ஜனாப்.
நஜீப் சொன்னபடிக்கே ஜூபிளித் தெருவில் இன்னொரு வீடு பார்க்கக் கூட்டிப் போனான். வீடு விக்டோரியா காலப் பழசு இல்லை. புத்தம் புதுசும் இல்லை. இரண்டாம் உலகப் போர்க் காலத்துக் கட்டடம்.
இங்கேயும் ஒரு மாத வாடகை முன்பணம் தண்டம். நஜீபுக்கு ஐம்பது சதவிகிதம் தள்ளுபடியில் புரோக்கர் கமிஷன்.
ஆவி உலகத் தொந்தரவு இல்லாமல் ராத்திரி இனிமேல் நிம்மதியாகத் தூங்கலாம்.
சாப்பிட்டு விட்டு ஹாய்யாக சீட்டி அடித்தபடி வீட்டுக்குள் வந்து ரஜாய்க்குள் புகுந்து, புதுவீட்டில் கல்யாணமாகி குடியும் குடித்தனமுமாக இருப்பதைக் கற்பனையில் ரசித்தபடி தூங்கப் போனான் சரவணன்.
நடு ராத்திரி திடுதிப்பென்று தூக்கத்திலிருந்து எழுந்ததும் அவன் அலறிக் கொண்டிருந்த டிவியை முதலில் அணைத்தான்.
ஏன் அதை ஆஃப் பண்ணே ?
கேத்தி தான். அறைக்கூரையில் பதினேழாம் நூற்றாண்டு பாய் பிரண்ட் மேல் சாய்ந்தபடி கேட்டாள். அந்த மடையன் அவள் தலைமுடியில் வாசனை பிடித்துக் கொண்டு மஞ்சள் பல் தெரிய ஈ என்று இளித்தான்.
கேத்தி .. நான் நாளைக்கு வீடு மாத்திப் போறேன் .. உன்னோட உதவிக்கு எல்லாம் நன்றி .. ஆனாலும் ஒண்ணு .. நீ இப்படி முன்னூறு வருஷம் முந்தினவனோட குடித்தனம் நடத்தறது கொஞ்சமும் நல்லா இல்லே ..
உசிரோடு இருக்கற என் பழைய பாய் பிரண்டைப் பார்த்தா நீ இப்படிச் சொல்ல மாட்டே .. தொந்தியும் தொப்பையும் வழுக்கையும் ரெண்டு விவாகரத்துமா ஆளே கிழண்டு போய்க் கிடக்கான் .. என் ஜார்ஜ் மாதிரியா ? ஜார்ஜ் உனக்கு பிரஞ்சு முத்தம் தெரியுமா ?
அந்தத் தாடிக்காரன் பிரஞ்சு கில்லட்டின் தான் தெரியும் என்றான்.
இதான் பிரஞ்ச் கிஸ்.
சரவணன் முகத்தைத் திரும்பிக் கொண்டான்.
எங்கே போகப் போறே ?
கேத்தியின் பாய் பிரண்ட் புதுசாக ஒரு சங்கதி அனுபவப்பட்ட சந்தோஷத்தோடு விசாரித்தான்.
குளிக்காதவன். நாக்கு வழித்துப் பல்லுக் கூடத் தேய்த்திருக்க மாட்டான் முன்னூறு வருஷமாக. இந்தப் பெண்ணுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்.
எங்கே போகப் போறே ? சும்மாச் சொல்லு .. நாங்க உன்னோட வரலை .. பழகின இடத்தைத் தவிர நாங்க எங்கேயும் புதுசாப் போக மாட்டோம் …
கேத்தி சிரித்தபடி கீழே வந்து அவன் முகத்தை வருடினாள். எர்த் ஆகாத வாஷிங் மெஷினைத் தொட்டதும் ஷாக் அடிக்க, உறைபனியும் மேலே படிந்து விலகியது போல் சரவணன் உணர்ந்தான்.
விலாசம் சொன்னான்.
தாடிக்காரன் ஓவென்று சிரித்தபடி அங்கேயும் இங்கேயுமாக மிதக்க ஆரம்பித்தான். கேத்தி சரவணனின் கட்டிலில் சாய்ந்து அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
அது ஜார்ஜ் வீடுதான் .. அவனுக்கு வாஷிங் மெஷின் இயக்கத் தெரியாது. ஆனா, வெங்காயம் நல்லா நறுக்குவான் .. கவலைப்படாதே .. ஜார்ஜ் இங்கே வர மாதிரி நான் இனிமே அவனோட இடத்துக்கு வந்து உன்னைப் பாத்துக்கறேன் ..
சரவணன் தூங்கிப் போயிருந்தான்.


நன்றி - தமிழ்க்கதைகள் எஸ் ராம கிருஷணன்

நெடுமாறனுக்கு கலைஞரின் காட்டமான கடிதம்


தமிழகத்தில் நடைபெறும அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து,  இன்று முதல் கருப்புச் சட்டையே அணிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது குறித்து இன்று அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், கடுமையான மின் தடை, குடிநீர் பஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு  கொடுமைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து
மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழகச் செயற்குழுவிலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதி கோரி, காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்தால் அதற்குக் கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை. கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை
என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக் குறித்துக் கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால்; அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தவிருந்த மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கருப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை - கருப்பு உடை அணிந்து வீடு வீடாகச் சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு நம்மைக் கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.



கழகம் நடத்தவிருந்த மனிதச் சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், “அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க. வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்” போராட்டம் என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.க. வினர் பழிவாங்கப்படு வதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே  காட்சியளிக்கிறது.


இந்த அவலங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலேதான் 5ஆம் தேதியன்று சென்னையிலும், 6ஆம் தேதியும், 7ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம்.


நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளையதினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச் சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்புச் சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன் என்று கூறியுள்ளார்.


 கடிதம் 2 


சென்னை: இலங்கை போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கிவைத்தவன் நான் என்றால் 1985-ம் ஆண்டு உருவான டெசோ அமைப்பில் நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," கடந்த 23-8-2012 அன்று நெடுமாறன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப்போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத்தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாக சில விவரங்களை குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனை தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதையெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன்.




நெடுமாறனை பொறுத்தவரையில் அவருக்கு எப்படியாவது தற்போது ஆளுங்கட்சியோடு இணைந்து ஏதாவது பயன்பெற வேண்டுமென்பதுதான் குறிக்கோள். அங்கே நெருங்க வேண்டுமென்பதற்கு என்ன வழி என்று பார்த்து, நம்மை தாக்கினால்தான், அங்கே உள்ளவர்கள் மனம் குளிர்வார்கள், தனக்கு தக்க இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, 24 மணி நேரமும் நம்மை சாடுவதிலேயே நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.



1984-85 ஆண்டுகளில் போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கி வைத்தவனே கருணாநிதிதான் என்று எழுதியிருக்கிறார். சகோதர யுத்தத்தை போராளிகளிடையே நான் தூண்டி விட்டேனா? அல்லது நெடுமாறன் கும்பல் தூண்டி விட்டதா? என்பதை அந்தப்போராளி இயக்கங்களை சேர்ந்தவர்களே நன்குணர்வார்கள். அந்த போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று நெடுமாறன் கூறுவதை வாதத்திற்காக ஒப்புக்கொண்டு கேட்கிறேன்.




நான்தான் போராளிகள் இயக்கத்தை தூண்டி விட்டவன் ஆயிற்றே? 1985-ம் ஆண்டு மே திங்களில் என் தலைமையில் உருவான "டெசோ'' அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார்? "டெசோ'' அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண்டார்?



கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்துகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்றபோது, 10-10-1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காண போராடும் விடுதலை போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது "டெசோ'' இயக்கத்தை தவிர உற்ற துணைவன்-உண்மையான துணைவன் வேறு யாருமில்லை'' என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே?


அதுமாத்திரமல்ல; அந்த காலகட்டத்தில் இதே நெடுமாறன்; அவர் எழுதிய "மத்திய-மாநில உறவுகள்-சில குறிப்புகள்'' என்ற நூலினை நான்தான் வெளியிட வேண்டுமென்று கேட்டு, 30-6-1985 அன்று சென்னை பெரியார் திடலில் தி.சு.கிள்ளிவளவன் தலைமையில் நான் வெளியிட்டேன். அப்போது நெடுமாறனுக்கு நான்தான் இலங்கையில் சகோதர சண்டையை தொடங்கி வைத்தவன் என்று தெரியாமல் போய்விட்டதா?



நெடுமாறன் அறிக்கையில் திரும்பத்திரும்ப நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டதைபோல தோற்றமளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எழுதியுள்ளதாகவே தெரிகிறது.



டெசோ மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி.ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் "நமக்குள் நாமே மோதி கொள்ளக் கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தை கொன்றுவிட வேண்டாம், இலங்கை தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்துதான் பாடுபடவேண்டும்'' என்று அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டேன். நெடுமாறனுக்கு இது தெரியாதா?




இலங்கை தமிழர் பிரச்சினையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.



இலங்கைத்தமிழர் பிரச்சினையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் என் மனச்சாட்சிபடி என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.



இதிலே நெடுமாறன் போன்றவர்களின் சான்றிதழ்களை நான் ஏற்கனவே பெற்றிருக்கிறேன். எனவே இப்போது அவரை போன்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன். என்மீது குறை கூறி விரலை நீட்டுகின்ற நெடுமாறன் போன்றவர்கள் வாய் ஜாலம் காட்டுவதை தவிர இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள்.


 என்னைப்பற்றியும் நன்கறிவார்கள். ஏதோ என்னைத்தாக்கி எழுதினால் தங்கள் பிழைப்பு நடக்காதா என்பதற்காக எழுதுகிறார்கள் என்றால் எழுதி விட்டுப்போகட்டும்! எதையும் தாங்கும் இந்த இதயம்-வாழ்க வசவாளர்கள்! என்று மட்டும் அண்ணா வழியில் கூறி, அவ்வழியில் நடப்போம் நாம்" என்று கூறியுள்ளார்.

இருவர் கண்ட ஒரே கனவு - கு.அழகிரிசாமி -சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmTrJRSiFsmRqiQjH4s3OYWOQI9uCDEPiCpi6KGONqTN_zikShMN9WXDZIz5HyaOzNHoD58NJiU5pP4MFSK8YxVrFzp1dWgkm5F_3IlEVJoUNbS_0OsR3BnPIe6Gkbh-7delLSrOPNfO8/ 
 
வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை.
குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு
சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை
நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல்
போனதுதான்.



சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து
விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ,
முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால்,
மானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக்
கவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள்
பட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்து
அவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது.



அவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக்
கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய
குழந்தைகளுமாக வசித்து வந்தார்கள். வீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில்
குடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும்
மனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.


 அதனால், வாடகை
கொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடைய
வீட்டில்-முதலாளி வீட்டில் - அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்து
வரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதர்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு
வரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும்
முதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக்
குத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள்.


இப்போது
இந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போக
முடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று
முதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்ல
வேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்களாக இல்லை; முதலாளியம்மாள்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க.
வெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா? ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்து
சேந்துட்டா. என்ன பண்றது?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள்
உள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப்
போய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவை
முதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்....




வெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக் கொண்டு தன்னுணர்வில்லாமல்
தொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும்
அப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப்
பிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன.


அந்த இரண்டு சிறுவர்களும்
தெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக்
கொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒரு
பக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளி
வீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சி
குடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
வாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப்
பார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா! ஏன் முழங்காலைக்
கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்டான்.




அவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப்
பார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன. வெகுநேரமாக அவர்கள்
பசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.



“உங்க அம்மா எங்கடா?” என்று அவன் கேட்டான்.


சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.

“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா?”

இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே,
அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.



மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற
போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப்
பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப்
பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று. மாடு முரட்டுத்தனமாகத்
தன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான்.



வெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள்
பதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலே
சும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக்
கொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்பு
சரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும்
ஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன்.


 தண்ணீர் காணாத
பயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும்,  அவர்களுடைய
கண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா?” என்று அவன்
விசாரித்தான்.



அப்போது தான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.


“இல்லே.”


“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு!” என்று ஒரு தடவை தமாஷாகச்
சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும்
கூப்பிட்டான்.


சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.


வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான்.
அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி,
சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டு
அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம்
கொடுத்தாள்.



இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.

மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.

“வேண்டாமா! வாங்கிக்கோ நாயே!” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.

“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.

”இல்லை இல்லை, கொண்டு போகட்டும். இவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்கு
இல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது? அங்கே
கொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.

சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ! ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்
கிட்டு வாறே! கேவலம்! இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.

பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று
அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச்
சட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும்,
இரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும்
அம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.

“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.

”சீ! நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.

மேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும்
பேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான்.
“கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண்டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒரு
மடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால்
சட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டை
முற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும்
சண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது.
கஞ்சியெல்லாம் தெருப்புழுதியோடு ஐக்கியமாகிவிட்டது.




ஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.

அண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதே
என்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்து
திரும்பியது. பெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது;
அழுதுவிட்டான்.

“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்கு
என்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாக
நிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன்
எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாத
உபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல்
செய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.

இருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனை
ஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.

அம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டு
கிடந்தாள். வாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.
உடம்பிலே அசைவே இல்லை.

இப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை
ஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போக
வேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல்
போட்டார்கள்; அம்மாவை அடித்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்று
சொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால்
சிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்று
அடித்தார்கள். “அம்மா, செத்துப்போகாதே! செத்துப் போகாதே, அம்மா!” என்று
கதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல்
கோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக்
கிடந்தாள்.

எப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக்
கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும்? கை
ஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா!” என்று ஓலமிட
ஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல்
விழுந்து அழுதான்.

மாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்து
சேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்து
ஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாக
வெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளை
வெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப்
பார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள்.
அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும்
அப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மா
செத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.

வெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும்
சிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மா
மட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச்
சிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்கு
முன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்கு
அழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். வயிறு
நிறைந்த பிறகுதான்    அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின்
நெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க.
பேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தை
மறக்க வைக்க முயன்றாள்.



இரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள். வேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான்.
சிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில்
அவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்து
உறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது.
இந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாக
இருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான்
சின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான்.
அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்து
போர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு
தானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.




வயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும்
கோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாக
இருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத்
தூங்கிவிட்டார்கள்.

அதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாத
குளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி. போர்வையாகக்  கிடந்த
வேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒரு
பக்கத்தில் கிடந்தது.



சந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத்
திரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்த
சிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன்
கொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில்,
“அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.



வேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால்
வாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்து
எழுந்தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.



தைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே! இந்தக் குழந்தைகள்
என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே!” என்று வாய்
விட்டுப் புலம்பினான்.



கணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும்
சிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப் பர்த்து அம்மாவைத்
தேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்து
கொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.



“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ?” என்றாள் வேலப்பன் மனைவி.

”என்னான்னு தெரியலையே!” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே
ஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.



அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டு
சிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால்
நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்?



சிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள்
இருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக்
குழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.




“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான்
அம்மா வந்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகு
குழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையை
அவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களை
விட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடே
அலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும்
கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை;



சுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்திய
அந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.
 
 
நன்றி - தமிழ்க்கதைகள்

ஊறுகாய் - ஆந்திரா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFxYPMoKojLxp2zgIO7MOlqvggJS9tUmcftx0l6eashtp605L9afqPvX8UyuzC9w2ROnD3rseVoGN8MP7Dhfh0LuBT_L_M6hYsmoYAHheq0r0gCRJHGzfHlh2845b74YcG7edrx8__scI/s320/cucumber_pickle_andhra_dosavakaya.JPG
 
ஆந்திராவில் உள்ள கோனசீமா டெல்டா பகுதியைச் சேர்ந்த இரண்டு கிராமங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கும் ஊறுகாய்த் தொழில் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்துள்ளன. அதுபற்றி கிருஷ்ணா சாய்ராம்


தென்னிந்திய உண வைப் பொறுத்த வரை காரசாரமான ஊறுகாய் இல்லா மல் நிறைவடைவதில்லை. ஆந்திரப் பிரதேச மாநிலத்தி¢ல் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோனசீமா பாசனப் பகுதியில் தயாராகும் ஊறுகாய்களுக்கு இணையாக வேறு இல்லை. அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய இரண்டு தீவுக் கிராமங்கள்தான் இரண்டு நூற்றாண்டு களாக ஊறுகாய்த் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆந்திரா வின் நீர்வளமுள்ள இப்பகுதியில் மாங்காய் மட்டுமின்றி பழங்கள், காய்கறிகள் எனப் பலவகைகளில் ஊறுகாய்கள் தயாராகின்றன.



ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பாலிதீன் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கும் மண் ஜாடிகளிலும் ஊறுகாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


அங்கம்பாலம், நற்கடிபள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள எல்லா  வீடுகளிலும்  ஊறுகாய் மணம் வீசுகிறது. இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு 25  கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிற மாநிலங் களுக்கும், நாடுகளுக்கும் வேலைக்காகக் குடிபெயர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும் தான்  கோனசீமா  ஊறுகாய்களைப் பிரபலப்படுத்தினார்கள்.



 ஏற்றுமதி அதிகரிக்கும்போது புதிய வாடிக்கையாளர்கள் உருவாகி இந்த இரு கிராமங்களும் ஊறுகாய் தொழிலில் செழிக்கத் தொடங்கின. இங்குள்ள மக்கள் தங்களது தொழில் முனைவுத் திறனாலும் சிறப்பான தொடர்பு கொள்ளும் திறனாலும் பாரம் பரியத் தொழிலான விவசாயத்தையே விட்டுவிட்டனர். “விவசாயம் வருவாயைத் தரவில்லை. அதனால் இங்கு ஊறுகாய்த் தொழிலை 170 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கினோம்” என்கிறார் நற்கடிபள்ளியைச் சேர்ந்த கோபி ஹனுமந்து பலம்.



கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தொடர்ந்த வெள்ளங்களால் பாதிக்கப்படுபவை. இதனால் அங்குள்ள மக்கள் இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 150 ஆண்டுகளுக்கு முன்பு சர். ஆர்தர் காட்டன்  மிகப்பெரிய  அணை ஒன்றை கட்டி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் இம்மாவட்ட மக்கள் நிம்மதியையும், வளத்தையும் அடைந்தனர்.



“ஆண்டு முழுவதும் பயன் படுத்துமாறு பிட்லா வெங்கடேஸ்வரலு என்பவர்தான் முதலில் ஊறுகாய்களைத் தயார் செய்தார். தொடர்ந்த பஞ்சம் இந்த ஊறுகாய்த் தொழிலை வியாபாரமாக மாற்றுவதற்கு அவரை உந்தியது. இந்தத் தொழில் படிப்படியாக உறவினர்களால் விரிவுபடுத்தப்பட்டு, முழு கிராமத்திற்கும் பரவியது” என்கிறார் பலம்.


ஏழு தலைமுறைகளாக இத்தொழில் இக்கிராமங்களில் செழித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஊறு காய்களைச் செய்யத் தொடங்கும்    போது சடங்குகள் செய்யப்படு கின்றன. வசந்த காலம் வரும்போது அங்காளம்மா என்ற கிராம தெய்வத்தை வணங்கி படையல் கொடுக்கின்றனர். சாதி, இன வித்தியாசமின்றி மாங்காய், எலுமிச்சை, மிளகாய், இஞ்சி, புளி, பாகற்காய், காட்டு நெல்லிக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை வெட்டி ஊறுகாய் போட பக்குவப்படுத்துகின்றனர். மாங்காய் ஊறுகாய்களில் மட்டும் 22 வகைகள் உள்ளன. இவற்றில் பிரபலமானது ஆவக்காய்!
 http://www.tribuneindia.com/2003/20031123/chd14.jpg


பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி சிறுதொழில் செய்பவர் களுக்கு ஆந்திர அரசு சலுகைகளை வழங்குகிறது. இதன்மூலம் கோனசீமா ஊறுகாய் தொழில் செய்பவர்கள் பயன் பெறுகின்றனர். இந்தத் தொழிலகங்கள் எப்பிஓ அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. வீடுகளில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் உரிமம் தேவையில்லை.



ஆனாலும் ஊறுகாய்த் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னை இல்லாமல் இல்லை. அரசு அதிகாரிகள் இந்தச் சிறுதொழிலாளர்களை பெரிய கார்ப்பரேட் வியாபாரிகளின் நலனுக் காகத் தொந்தரவு படுத்துகின்றனர். ஏனெனில் அந்தப் பெரும் வியாபாரிகள் ஊறுகாய் ஏற்றுமதிக்காக உரிமங்களை வைத்திருக்கிறார்கள்.     அங்கம்பாலத் தைச்  சேர்ந்த 30 வயதான கங்கா பவானி நம்மிடம் பேசுவதற்கே தயங்குகிறார். இவரது இரண்டு மாடி கட்டட வீட்டின் முற்றம் முழுவதும் மிளகாய் வத்தலால் சிவப்பாகி இருக் கிறது. 



கங்கா பவானி தனது நாற்பது ஊழியர்களுடன் மிளகாய் வத்தலை மாவாகப் பொடி செய்வதற்குத் தயா ராகிறார். அவரது வியாபாரச் செழிப்பு அந்தச் சூழலிலேயே தெரிகிறது. “பெரிய எந்திரங்கள் வைத்து தொழில் செய்பவர்களுடன் போட்டி போடுவது சிரமமாகவே உள்ளது. எங்கள் ஊறுகாய்கள் மலிவாகவும் தரத்துடனும் இருந்தாலும் பிரியா பிக்கிள்ஸ் மற்றும் ஈநாடு குழு மத்தினருடன் போட்டியிடுவது சிரம மாக உள்ளது” என்கிறார் கங்கா பவானி.



செயற்கை வேதிப்பொருட்களை ருசிக்காகவோ, நீண்டகாலம் நிலைத்திருக்கவோ பயன்படுத்து வதில்லை என்கிறார் நற்கடிபள்ளியைச்  சேர்ந்த நரசிம்ம மூர்த்தி. இந்தக் கிராமத்தில் இருந்து திருமணம் செய்து வெளியேறும் பெண்கள் தங்களோடு ஊறுகாய் தொழிலையும் எடுத்துச் செல்கின்றனர். இக்கிராமத்தின் சுமார் 150 மருமகன்கள் இத்தொழிலில் உள்ளனர். 
 
 
தொடர்ந்து வரும் போட்டி களாலும் சவால்களாலும் இளம் தலைமுறையினர் உயர்கல்விக் குச் செல்லாமல் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு இத் தொழிலில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இது அந்தக் கிராமத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று அவர்களைக் கேட்டால் தெரியவில்லை.   
 
நன்றி - த சண்டே இந்தியன்



http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-98/stin7.jpg