Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 1

24.8.2012 வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல நானும் ஈரோடு பதிவர் லாயர் நண்டு நொரண்டும்  கிளம்புனோம். இவர் ஒரு லாயர், ஜட்ஜைத்தவிர எல்லார்ட்டயும் இவர் நொரண்டாதான் பேசுவார்.. ( ஜட்ஜ் கிட்டே பேசுனா  வெளில அனுப்பிடுவாங்களே?).பேரு ராஜசேகரன். சனிக்கிழமை காலைல 4 மணிக்கு ரயில் சென்னை செண்ட்ரல்ல நின்னுது. நாங்க இறங்கி பார்க் ஸ்டேஷன்ல ரயில் ஏறி மாம்பலம் போய் அங்கே இருந்து வாக்கிங்க்ல ரோஹினி இண்ட்டெர்நேஷனல் ஹோட்டல், ஜி என் செட்டி தெரு அட்ரஸ்க்கு போய்ட்டோம், அங்கே ஆல்ரெடி ரூம் புக் பண்ணி இருந்தாங்க.



போய் 2 மணி நேரம் குட்டித்தூக்கம் ( நோ இமேஜினேஷன் ப்ளீஸ்.. சிறிய தூக்கம்). ஆரூர் மூனா செந்தில் தான் வெளியூர்ப்பதிவர்கள் தங்க ஏற்பாடு.அவர் மத்தியானம் வர்றேன்னார், ஆஃபீஸ்ல டியூட்டி அவருக்கு.நான் கிஷ்கிந்தா போலாம்னேன், லாயர்க்கு வேற ஏதோ எங்கேஜ்மெண்ட் போல, யாரையோ வரச்சொல்லி இருக்கார்.. வெயிட்டிங்க். யார் வந்தாங்க? என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர் என்பதாலும் ஒரு பதிவரின் பர்சனல் மேட்டர்ஸை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது சபை நாகரீகம் இல்லை என்பதாலும் ( இப்போ இதுக்குப்பேரென்ன?) அதை அப்படியே விட்ருவோம். 


நான் கிஷ்கிந்தா போன அனுபவம், கட்டுரை, படங்கள் தனிப்பதிவாய் பின் ஒரு நாளில்.. மாலை 4 மணிக்கு நான் ரிட்டர்ன். மதுமதி ரூமுக்கு வந்து எங்களை வரவேற்றார்.. எத்தனை ஃபிகர் எனக்கு செட் ஆனாலும் சரி என் தாடியை மட்டும் எடுக்கவே மாட்டேன்னு 12 வருஷமா பதிவுலகில் டி ஆராய் வலம் வந்தவர் என்ன காரணத்துக்காகவோ தாடி எல்லாம் எடுத்து மாப்ளை கெட்டப்ல வந்த மர்மம் என்னன்னு இன்னைக்கு வரை விடை தெரியல. அவர் கிட்டே கொ ஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.


அப்புறம் ஆரூர் மூனா செந்தில், மின்னல் வரிகள் கணேஷ், திண்டுக்கல் தனபாலன், குடந்தையூர் சரவணன்,புது மாப்ளை கோகுல் எல்லாரும் வந்தாங்க. பேசிட்டு இருந்தோம். 



26.8.2012 ஞாயிறு..காலை 5 மணிக்கே வானம் மழையை அனுப்பி தன் வருகையை சென்னை பதிவர் சந்திப்புக்கு பதிவு செய்தது. நான் 6 மணிக்கு குளிச்சு ரெடி ஆகி வாக்கிங்க்லயே பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போய்ட்டேன். 



மண்டப முகப்பே அட்டகாசமா பேனர் எல்லாம் வெச்சு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ட்விட்டர்  உலகின் ஜேம்ஸ் பாண்ட், கூலிங்க் கிளாஸ் கூல் டாக்கர் அய்யா சென்னை பித்தன் அவர்கள், நம்ம தமிழ் வாத்தியார் மாதிரியே தோற்றம் உள்ள புலவர் ராமானுசம் அய்யா இருவரும் அருமையான உரை ஆற்றினார்கள்.. வலைச்சரம் சீனா அய்யாவும் சிறப்பாக பேசினார்


அப்புறம்  வந்த பதிவர்கள் அறிமுகம்.. அதுக்கு  கலகலப்பு உதவி வசனகர்த்தாவும் கொத்து புரோட்டாக்காரருமான கேபிள் சங்கர், சித்தார்ல வீடு, பூர்வீகம் எல்லாம் இருந்தும் கோவையில் பணி ஆற்றும் ஒரே காரணத்துக்காக கோவை பதிவர் ஆகி விட்ட சங்கவி சதீஷ் ( நிறைய பேரு சங்கவின்னா பெண் பதிவர்னு இன்னும் அவர் கிட்டே  சேட் பண்ணிட்டு இருக்காங்க , ஹி ஹி ) ,  ,பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் , கடைசியா நான் 4 பேரும் ஒவ்வொருவரா பதிவரை மேடைக்கு அழைத்து உரை ஆற்ற வைத்தோம். 


விழாவின் ஹை லைட்ஸ்


1. அதுல அதிகமா கை தட்டல் வாங்குனது பதிவே அதிகம் போடாத, மிட் நைட்ல பல பதிவர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தே  கொலையாய் கொல்லும் அன்பு உள்ளம், டாஸ்மாக்கே இல்லம் என இருக்கும் நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் தான்.. இவரும், விபரீதமான மனிதாபிமானி பிளாக் ஓனரும் பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முன் சிம்பு , தனுஷ் போல நட்பு பாராட்டியதும், மண்டபத்தில் கட்டிப்பிடித்து பயங்கர பாசத்தை பகிர்ந்து கொண்டதைப்பார்க்கையில் தேர்தல் நேரத்தில் பகையாளியுடன் கூட கூட்டணி வைக்கும் கலைஞர் - ராம்தாஸ் நடிப்பு போல தத்ரூபமாக இருந்தது.. விழா ஃபுல்லா இந்த நாயம் தான் அன்னைக்கு 



2. அடுத்து பதிவுன்னு வந்துட்டா எல்லாரையும் கண்டபடி கிழிக்கும் பிளாக் உலகின் சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் ஒயின் ஷாப் ஓனர் ஃபிலாசபி பிரபாகரன் நல்ல பிள்ளை மாதிரி இந்தப்பூனையும் அமலாபாலை சைட் அடிக்குமா? என்பது போல் கையை கட்டி அடக்கம் காட்டி நடித்தது  நடிகர் சூர்யா மேடைகளில் காட்டும் போலி பவ்யத்தை தூக்கி சாப்பிட்டது



3. அடுத்த அதிரடி அண்ணன் சேட்டைக்காரன் - இதுவரை டி பி யில் பிளாக்கில் நாகேஷ் படத்தையும் , ட்விட்டரில் கவுண்டமணி படத்தையும் வைத்தவர் இந்த முறை தன் நிஜ முகத்தை காட்ட வேண்டிய கட்டாயம், ஏன்னா விழா ஏற்பாட்டாளர்கள் புத்தக வெளியீட்டை பெற்றுக்கொள்பவர் சேட்டைக்காரன் என பத்திரிக்கையில் போட்டு விட்டனர்.. இவர் 4 நிமிட நறுக் சுருக் உரை ஆற்றினார். அது விரிவாக பின்னர்.. இவர் 30 வயசுக்காரராக இருப்பார் என்றே இவர் எழுத்தை வைத்து அனைவரும் கணித்தனர்.ஆனால் நயன் தாரா வயசைப்போல் டபுள் மடங்கு வயசுள்ள இவர் இனியாவது நடிகை ஸ்ரேயாவிடம் டைம் லைனில் ட்விட்டரில்  கடலை போடாமல் கண்ணியம் காப்பார் என எதிர்பார்க்கிறேன்



4. அடுத்து மிக இளம் பெண் பதிவர் தூயா. கலைஞர் குடும்பமே எப்படி அரசியலிலும், ஊழலிலும் தங்கள் பங்கை சிறப்பா ஆற்றி வருகிறார்களோ அதே போல்  இவங்க குடும்பமே ஒரு பிளாக் குடும்பம். தமிழ் மணத்தில் இவங்க எப்போ போஸ்ட் போட்டாலும் உடனே 7 ஓட்டுக்கள் வாங்கி 10 நிமிஷத்தில் ஹிட் ஆவதை கவனித்து நான் மிரண்டு போனேன். பின் கழுகார், குருவியார் மூலம் விசாரித்தபோது அவங்க ஃபேமிலில 7 பேர் பிளாக்கர்ஸ் என்ற தங்கமலை ரகசியம் தெரிய வந்தது.. இவரை மேடையில் கலாய்த்தோம்



5. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் கொடுத்து ஏரியாவையே கதி கலக்கிய தமிழ்வாசி பிரகாஷ் ( தமிழ் மிஸ் வீட்லயே தான் எந்நேரமும் குடி இருப்பாராம்) என்னமோ டிஸ்கொத்தே கிளப்புக்கு டான்ஸ் ஆட வந்தவர் மாதிரி  கசாமுசா காலேஜ் ஸ்டூடண்ட் டிரஸ் அணிந்து வந்து கலக்கி இருந்தார்.. யூத்தாம். யோவ்.. 


6. மாமூல் வாங்காத போலீஸ் கவிதை வீதி சவுந்தர்,டீசண்ட் ரவுடி வேடந்தாங்கல் கருண்  மதிய உணவு பரி மாறும் வேலை இருக்கு முன் கூட்டியே பேசிட்டு போறோம்னு சொல்லிட்டு எங்கியோ எஸ் ஆகிட்டாங்க


7. பிறவிக்கலைஞன் கமலின்  குணா ரசிகை மன்றத்தலைவி கண்மணி அன்போடு பிளாக் ஓனரை கிண்டல் செய்து மேடைக்கு அழைத்தோம், அவங்க அப்பாவும் வந்திருக்காராம், அவரும் பிளாக்கராம். அவ்வ்வ்வ் ( இனிமே பொண்ணுங்களை கலாய்க்கறப்போ அப்பா வந்திருக்காரா?ன்னு செக் பண்ணிக்கனும்)



8. கோவை சரளா அப்டினு ஒரு பெண் பதிவர்.. இப்படி ஒருவர் இருப்பதே எனக்கு அங்கே தான் தெரியும்.. பயங்கரமா கவிதை எல்லாம் எழிதி இருக்காராம், அவரே சொன்னார்.. இனி தான் பார்க்கனும்.. 



9. வசந்த மண்டபம்’ மகேந்திரன் விழாவுக்காகவே புது வெள்ளை கதர் சட்டை, பேண்ட் , திருப்பூர் பனியன் எல்லாம் புதுசா போட்டு வந்து அசத்தினார்.. சூப்பர் ரின் விளம்பரத்துல கூட அப்படி ஒரு வெள்ளையை நான் பார்க்கலை. 


10. ஊக்குவிக்கும் சமீரா மேடம்.. அவர் எல்லார் பிளாக்கும் போய் அவங்களை ஊக்கி விப்பாராம்.. இதுவரை அட்ராசக்கவை ஊக்கு வித்ததில்லை.. ஏன்னு தெரியலை


11. பொதுவா லேடீஸ் தான் கல்யாணம் , காட்சின்னா காலைல ஒரு புடவை, மாலை ஒரு புடவை கட்டிட்டு வருவாங்க.,. ஆனா உலகத்துலயே முதல் முறையா கோவை நேரம் ஜீவானந்தம் காலை ஒரு சட்டை , மதியம் ஒரு ஜிப்பா, மாலை ஜீன்ஸ் என 3 வெவ்வேறு டிரஸ் அணிந்து  வந்து கலக்கினார். மனசுக்குள்ள கமலஹாசன்னு நினைப்பு , யோவ்.. 


12. சாதிகா, ஆதிரா இரண்டு பெண் பதிவர்கள் “ ஏன் எங்க பிளாக் எல்லாம் வர்றதே இல்லை? என கேட்க “ எங்கேங்க, இப்பவெல்லாம் அதிகம் கரண்ட் இல்லாததால்  எந்த பிளாக்கும் போக முடியறதே இல்லை, இருக்கற கொஞ்ச நஞ்ச நேரத்துல போஸ்ட்  ரெடி பண்ணவே நேரம் சரியா இருக்கு “ என்று சமாளித்தேன்.. அதற்கு அவர் சசிகா மேனகா பிளாக் மட்டும் போயிடறீங்க? என மடக்கினார்.. அவ்வ் பல்பு பல்பு.. 





13.  நம்ம ட்விட்டர் ஃபிரண்ட் சுரேகா ஹீரோ கணக்கா , கணக்கா 10 மணிக்கு ஆஜர் ஆனார். . அவர் பியூட்டி பார்லர் எல்லாம் போய் மிகச்சிரத்தையாக மேக்கப் போட்டு வந்தது  பதிவர் சந்திப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டை பறை சாற்றியது. மதியத்துக்குப்பின் இவர் ஆட்சிதான்..


1.30 மணிக்கு லஞ்ச், பின் கவியரங்கம், தென்றல் புத்தக வெளீயீட்டு விழா, பி கே பியின் அட்டகாசமான உரை போன்ற விபரங்கள் அடுத்த பதிவில்



வலம் இருந்து இடமாக கோவை நேரம் ஜீவா, சங்கவி சதீஷ், கோவை சரளா,சசிகலா, அவர் நண்பர், மின்னல் வரிகள் கணேஷ் ( மக்கள் டி வி பேட்டி)








தஞ்சை குமணன், மோகன்குமார். சீனு மற்றும் சிராஜுதீன்         







 மைக் மோகன் = ஆரூர் மூனா செந்தில்







அகநாழிகை வாசுதேவன், மணிஜி, சிவகுமார்  












சேட்டைக்காரன் அண்ணன்





பட்டர்பிளை சூரியா, சுகுமார் சாமிநாதன்,  மணிஜி , ஜாக்கி,மோகன்குமார், உண்மை தமிழன், ரோஸ்விக்   


 வீடு திரும்பல் மோகன், ரேகா ராகவன்அ




துவக்க விழா .. ராமானுசம் ஐயா, சீனா  ஐயா,  சென்னைப்பித்தன்  ஐயா
துவக்க உரை ஆற்றுகிறார் மதுமதி 
வரவேற்புரை மற்றும் விழா குழுவை அறிமுகம் செய்கிறார் வீடுதிரும்பல் மோகன்குமார் 
வரவேற்பு/ Registration  குழு   -  சீனு மற்றும் நண்பர்கள் 
புதிய தலைமுறை டிவி குழுவிற்கு பேட்டி தருகிறார்  முக்கிய பொறுப்பாளர் மதுமதி 
ப்ளாகில்  பெண்களின் பங்கு பற்றி  புதிய தலைமுறை டிவி க்கு   பேசுகிறார் தென்றல் சசிகலா 

புதிய தலைமுறை டிவி குழு வீடுதிரும்பல் மோகன்குமாரிடம் பேசுகிறது 
***



கரை சேரா அலை அரசன் அறிமுகம் செய்து கொள்கிறார் 

இளம் ஆளுமை மெட்ராஸ் பவன் சிவகுமார் 

மூத்த பதிவர் வல்லிசிம்ஹன் .... 
கேட்டால் கிடைக்கும்னு நாங்க இயக்கமே வச்சிருக்கோம் ; நான் கேட்டும் கூட எனக்கு ரெண்டாவது சுவீட் தர மாட்டீங்களா? - இப்படி கேட்கிறாரோ  கவிஞர் கேபிள் சங்கர் 
சங்கவி தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் 

ரஹீம் ஹசாலி சுய அறிமுகம்  (தம்பி ரெண்டு போட்டோ எடுத்தேன். ரெண்டிலும் கண்ணை மூடி கிட்டு தான் இருக்கீங்க) 

விழா முடிந்த பின் மேடையில்  விழா குழுவினர் 
****நன்றி - படங்கள் வீடு திரும்பல் மோகன், ரஹீம் கசாலி

படைப்பாளிகளின் சங்கமம்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆக.8-ம் தேதி நடந்த இலக்கியக் கூட்டத்தில் தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் இந்திரா பார்த்தசாரதி, விக்கிரமன், அசோகமித்திரன், நீலபத்மநாபன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.


http://www.badriseshadri.in/images/200407/vilaipokum.jpg


 ஒவ்வொரு படைப்பாளியையும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகப்படுத்தினார்.  ""அறிவாளியைப் பாராட்டாத நாட்டில் அறிவாளி உருவாகமாட்டான். தியாகியை பாராட்டாத நாட்டில் தியாகி உருவாகமாட்டான். படைப்பாளியை பாராட்டாத நாட்டில் படைப்பாளி உருவாகமாட்டான்...'' என மைக்கை பிடித்த ஸ்டாலின் குணசேகரன்,  ""மிக மூத்த படைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற படைப்பாளிகளை நேரில் பார்ப்பதே அதிசயம் தான். எனவே,தான் இலக்கிய ஆர்வலர்கள் இவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழைத்தோம். 8 ஆண்டு புத்தகத் திருவிழாவில் இந்த நிகழ்ச்சிதான் வித்தியாசமான நிகழ்ச்சி எனக் கருதுகிறேன்'' என்றார்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/udayam/2010/october/interview1.jpg

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, படைப்பாளிகளுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயத்தை வழங்கினார்.  நாமக்கல்லில் இருந்து வந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி, ""பேசும்போது, எனது 60 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் இதுவரை இரண்டே இரண்டு பாராட்டு விழாக்களுக்குதான் சென்றிருக்கிறேன். பாராட்டு விழாக்களுக்குச் சென்றால் படைப்பாளிக்கு புகழ் மயக்கம் வந்துவிடும். இதனால் படைப்பில் கவனம் சிதறிவிடும் என எனது குருநாதர் கற்றுக்கொடுத்த பாடம். மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்கெனவே நடத்திய பாராட்டுவிழா ஒன்று, மற்றொன்று இப்போது நடைபெறும் மூத்தப் படைப்பாளிகளை பாராட்டும் நிகழ்ச்சி'' என்றார்.

http://solvanam.com/wp-content/uploads/2009/10/ami.jpg


 எழுத்தாளர் நீல. பத்மநாபன்,""உடல் நலம் குறைவாக இருப்பதால் இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு நான் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து செவிமடுத்துவிட்டு வந்துவிடுவேன்.  எழுதப் படிக்கத் தெரிந்த வயதில் இருந்தே புத்தகத்தின் மீது எனக்கு தீராத காதல். ஆனால், இப்போது எழுதவும், இலக்கிய கூட்டங்களில் பேசவும் வந்துவிட்டது. ஏனெனில் இப்போது படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. முனைவர் பட்டம் பெறுவோர்கூட புத்தகங்களை வாசிப்பதில்லை. எங்கள் காலத்தில் புத்தகங்களை தேடி ஒவ்வொரு நூலகமாகச் செல்வோம். இப்போது புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தகங்களே உங்களைத் தேடி வருகின்றன. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmkFKnKT6AxSZxSwnCAqDXal21L932h8nuUSfvRYwCx55p2LNDfK1KFI20fWHn1NovKz0Yn3sTls1v7ACp0h24AA73gMpBLPRKsKBJhbLCYsy74wZGJVU7fLkhXdsE5vH-JxgyEeprYzQ/s400/Nee.Paa..jpg
தரமான தமிழ்ப் படைப்புகள் இருந்தும் எத்தனை பேர் அதைத் தேடிச்சென்று படிக்கின்றனர் என்று தெரியவில்லை. வாசகர்களை மனதில் வைத்துத்தான் எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். வாசகர்கள் அதை படித்து சிந்திக்கும்போதுதான் அந்த எழுத்து உயிரோட்டம் பெறுகிறது. எழுத்தாளர்களின் ரத்தம்தான் படைப்புகள் என்பதை உணர வேண்டும்'' என்றார்.  எழுத்தாளர் விக்கிரமன்,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga0I2hAkz79qP9jgyXwy9eu6pF0wk_rcHGkXh4EBuJtweyJZ8_c0GJotO9ONnnF5flovlMq7-o8A2qHcvMDLJLXf0SXAMohJDA-h-CkCMhC5r7D02DogFhtbaPfAj0f2l0HjX6PlCdrNA/s1600/thi+ka+si+book+wrap+copy.jpg

""வாசகர்கள்தான் எனது எஜமானர்கள். இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை பார்க்கும்போது இனிமேல் படைப்பாளிகளும், பதிப்பகங்களும் நூலகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். வாசகர்களை நம்பி புதிய படைப்புகளை வெளியிடலாம் என்ற நம்பிக்கை, உணர்வு ஏற்பட்டுள்ளது.  உடல் நலம் சரியில்லாததால் வீட்டை விட்டே வெளியே நான் வருவதில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பு முதல்முறையாக வீட்டை விட்டே வெளியே வந்திருக்கிறேன். ஈரோட்டில் ஆயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இக்கூட்டத்தில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மக்கள் கொடுத்த விருதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  இந்த விருதை எனது வீட்டில் எளிதில் தெரியும் இடத்தில் வைப்பேன். இனிமேல் சாகித்ய அகாதெமி விருது எனக்குத் தேவையில்லை. அதைவிட பெரிய விருதை பெற்ற மகிழ்ச்சியை இப்போது அடைந்துவிட்டேன்.




 ஈரோட்டுக்கு வந்து இதே மேடையில் எனது உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். ஈரோடு ரயில் நிலையத்தில் நள்ளிரவு 2 மணிக்கு இறங்கியதும் பாரதி உருவம் பொறித்த பனியன் அணிந்திருந்த மக்கள் சிந்தனைப் பேரவை தன்னார்வ தொண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கியபோது பாரதியே வந்து தூக்கி வந்ததாக உணர்ந்தேன். இதே போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க ஆர்வலர்களை தமிழகத்தில் நான் வேறு எங்கும் கண்டதில்லை. அடுத்த ஆண்டு சக்தி இருந்தால் இவ்விழாவுக்கு வருவேன்'' என்றார்.  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8owEapA1ujvZ2vENIdmlRya4W99W20GwqiQqSTxMwo-Cu_FbKQNq8DUzvSqmOsw-e3dtVm0cNVcUlR-2mH-VtzO0pL3rjNs6gUomsJei8VyGbZRr-EC1cgjZAtR3ywd4JTFdsBd2KG4MM/s1600/ku.ci.pa.JPG

""சரஸ்வதி சம்மான் விருது, சாகித்ய அகாதெமி விருது பெறும்போது நான் பெற்றதைவிட ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் கொடுத்த விருதை பெருமையாகக் கருதுகிறேன். அதைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.  எழுத்தாளர் அசோகமித்திரன்,""உடல் நிலை சரியில்லாததால் சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கே நான் செல்வதில்லை. பபாசி முன்னாள் தலைவர் சேது.சொக்கலிங்கமும், ஸ்டாலின் குணசேகரனும் 6 மாதங்களுக்கு முன்பாக என்னை நேரில் சந்தித்து ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கும்போது முயற்சி செய்கிறேன் என்றேன். தொடர்ந்து அழைத்ததால் இங்கு வந்தேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற மேடையில் நான் ஏறியதில்லை'' என்றார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgluGKrr-h0E8ja3u-L5bApS8sa4dI7kwIN4OWh2kckNx4fsS8bsO6Lra3q77S1_0F9dV9smED2PGwLDUkZqef0-eUZKrDd64NbCjDf9Hc04s71MxeQumj8GDx6B5_zTD4xBE02MQFNdI-l/s1600/6.jpg

  எழுத்தாளர் டி.செல்வராஜ்,"" நானும், கு.சின்னப்ப பாரதியும் எழுதத் தொடங்கிய காலத்தில் எங்களது எழுத்துக்களை வெளியிட யாரும் முன்வரமாட்டார்கள். இடதுசாரி சிந்தனையுடன் தொழிலாளர், பாட்டாளி வர்க்கத்தின் குரல்களை நாங்கள் பதிவு செய்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது.  எழுத்தாளர்களுக்கு வயது ஆகலாம்.
 ஆனால், எழுத்துக்கு வயது ஆகாது. சிந்திக்கும் எழுத்துக்களை மூத்த படைப்பாளிகளாலும் இப்போதும் படைக்க முடியும். சிந்தனையில் இப்போதும் உயிரோட்டமாகத்தான் இருக்கிறோம்'' என்றார்.  எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தி.க.சிவசங்கரன்,""ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா எப்போது வரும் என்று எண்ணிக்கொண்டிருப்பேன். இதுபோன்ற திருவிழாக்களை ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டும்''என்றார். 



இத்தனை படைப்பாளிகளையும் ஒரே மேடையில் ஏறியது 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை என மிகமூத்த இலக்கியவாதிகள் சிலர் பேசிக்கொண்டே சென்றது நம் காதில் விழுந்தது.

 நன்றி - தினமணி




டிஸ்கி - சென்னை பதிவர் சந்திப்பு பற்றி இனி தான் எழுதனும்.ஆனா அதுக்குள்ளே 18 பேர் அது பற்றி எழுதிட்டாங்க, தீயா வேலை செய்யறாங்கப்பா 

அன்பே!ஐம்பெரும் அட்டக்"காப்பி"யங்களாய் உன் SMS கள்

Mountain (Tianmen), Chunan province,China (1430 meter)
1. ஜட்ஜ் -50 பேரை மேரேஜ் பண்ணுனீங்களே எப்படி சமாளிச்சீங்க?


கேடி லேடி - அது கூட தேவலை.50 மாமியார்.யோசிச்சு பாருங்க



-------------------------


2. ஜட்ஜ் - மிஸ் கஞ்சா அழகி.உனக்கு 2 வருஷ ஜெயில்னு சொல்லியும் பயப்படலையே?


 கைதி - நான் சிறைக்"கஞ்சா" அழகியும் கூட



------------------------


3. சந்தியான்னு என் பேரை மாத்திக்கலாம்னு இருக்கேன்.


அப்போ நீங்க சிரிச்சா சந்தி சிரிக்குமே?



-------------------------

4. ''மிஷலுக்கு நான் கொடுத்த முதல் முத்தம் சாக்லேட்டைப் போல இனிப்பாக இருந்தது.''

- ஒபாமா # காபி சாக்லேட் டேஸ்ட்?



--------------------------


5.  எங்கள் ஊர்ல மின்சாரம்  நோ,மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்.'- மன்மோகன் சிங் # யாம் பெறாத இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்?


------------------------




6. மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல மாட்டேன்.'-நித்தியானந்தா# டெஸ்ட் பண்றது 18 வயசு நர்ஸ், இப்போ என்ன சொல்றீங்க?


-------------------

7.அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் #  அரைகுறையா ஒரு காரியத்தை செஞ்சா பிடிக்காதாம்



---------------------------

8.இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?

 லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0




----------------------





9. ஷகிலா இருந்தா அது கில்மா படம்.திகிலா இருந்தா அது கொல்மா படம் # ஜொள்மா நக்மாப்ரியனின் டைரியில் இருந்து




---------------------


10. ஜட்ஜ் - உங்க பாஸ்போர்ட்ட முடக்கியும் எப்படி வெளிநாடு போனீங்க?


 கைதி - யோக்கியனுக்கு ஒரு பாஸ்போர்ட்.அயோக்கியனுக்கு ஆயிரம் பாஸ்போர்ட்



------------------------





11. இந்தியா வல்லரசு ஆகும் முன்பே வல்லரசு ஆனவர்தான் கேப்டன் # பிரேமலதா பாறைகள்


----------------------


12/ AJITH AT ENGLISH VINGLISH # அஜித் தமிழர்தானா?ன்னு யாரும் கிளம்பலையா?




-------------

13. இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?




லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0



-----------------------


14. ஐம்பெரும் அட்டக்"காப்பி"யங்களாய்த் தெரிகின்றன நீ அனுப்பிய ஐந்து குறுஞ்செய்திகளும்! -# பார்வர்ட் மெசேஜ்



----------------------------


15. ஆணுக்கு பெண்செல்லப்பிராணி.,(pet animal), பெண்ணுக்கு ஆண் ் அப்பிராணி ! -- (bed animal)



-----------------------




16. சவுரிராஜன் டைரியில் இருந்து - உங்களால் 'முடி'யாதது என்று நீங்கள் நினைக்கும் ஒன்று,?



சம்சாரத்திடம் வணங்காமுடியாய் முயல்வது



--------------------


17. ஆமை புகுந்த வீடு உருப்படாது 1.முயலாமை 2இயலாமை 3 பொறாமை 4 முறைப்பெண் அருகில் இருந்தும் அவளை தீண்டாமை




-------------------------


18. ஹார்டு டிஸ்க்ல எறும்பு பூந்தா ANT(I) VIRUS form ஆகிடுமா?


--------------



19. சாப்ட்வெர் இஞ்சினியர் - ஹார்டு டிஸ்க்ல எறும்பு எப்படி புகும்?



என்னை கேட்டா?எறும்பு கிட்டே கேளுங்க



----------------------


20. டியர்,ஆனியன் தோசை சுடறியா?



வெங்காயம் அரிஞ்சு குடுத்தா சுடறேன்



.ம்க்கும்,வெங்காயம்.



என்னது? வெங்காயம் தா,அரியறேன்னேன்


---------------------------



Sunday, August 26, 2012

ராஜீவ் காந்தி கொலை பின்னணி - தமிழன் தொலைக்காட்சி

தமிழன் தொலைக்காட்சியில் 16.8.2011 அன்று இரவு 9 மணிக்கு சங்கே முழங்கு நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு...

கலா மாஸ்டர் பேட்டி @ விகடன் - கிடா வெட்டு

http://moviegalleri.net/wp-content/gallery/karthi-ranjani-wedding-reception/karthi_ranjani_reception_photos_490.jpg


செம ஜாலி பேட்டி மேடம்... ஓ.கே-வா?'' என்றதும் சூதுவாது புரியாமல் ஓ.கே. சொன்னார் கலா மாஸ்டர்.



 ''சூப்பர் ஸ்டாருக்கும் பவர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம்?''



(சின்னதாகக் குழம்புகிறார்) ''ஐயோ, அது எப்டிங்க? ரெண்டு பேரையும் எப்படி கம்பேர் பண்ணலாம்? சூப்பர் ஸ்டார் கஷ்டப்பட்டு ஃபீல்டுக்கு வந்தவர். பவர் ஸ்டார் ஃபீல்டுக்கு வந்து எல்லாரையும் கஷ்டப்படுத்துறவர். எப்படி... ஃபர்ஸ்ட் பால்லயே சிக்ஸரா?''




''ஜனாதிபதி தேர்தல்ல ஏகப்பட்ட செல்லாத ஓட்டு விழுகுதே... என்ன பண்ணலாம்?''




''ஓ... ஜனாதிபதிக்குத் தேர்தல்லாம் நடத்துறாங்களா? ம்... என்கிட்ட விட்டுடுங்க... 'மானாட மயிலாட’ ஸ்டைல்ல போட்டி நடத்தி சூப்பரா செலெக்ட் பண்ணிரலாம்.''




''தி.மு.க. ஆதரவோட துணை ஜனாதிபதி ஆனவர் பெயர் என்ன?''



''ஐயோ... நேத்துதானே படிச் சேன்... மறந்துடுச்சே... ஏதோ ஆசாரினு வந்துச்சு!''



''நமீதா ஏன் ஜீரோ சைஸ் முயற்சிக்கலை?''



''அதானே... ஏன் பண்ணலை? அவளால வாயைக் கட்ட முடியாது. அதானல இருக்கும்.''



http://www.lakshmansruthi.com/navarasam-2010/DanceKalaMaster/dancekalamaster7.jpg


''டான்ஸ் மாஸ்டர், ரிங் மாஸ்டர் எதுல ரிஸ்க் அதிகம்?''



''டான்ஸ் மாஸ்டருக்குத்தான். சிங்கத்தைப் பழக்கப்படுத்துறது ஈஸி. சொல்லிக்கொடுக்கிறதை அப்படியே செய்யும். ஆனா, டான்ஸ் மாஸ்டரா நான் படுற அவஸ்தை இருக்கே... ஒரு நாள் இருந்து பாருங்க தெரியும்.''



''காங்கிரஸ்ல எத்தனை கோஷ்டி இருக்கு?''



''காங்கிரஸ் இன்னும் இருக்கா என்ன? (சட்டெனப் பதறி) அச்சச்சோ... இது வேண்டாம். 'தெரியாது’னு சொன்னேன்னு போட்டுக்குங்க... ப்ளீஸ்!''



''நூடுல்ஸுக்கும் இடியாப்பத்துக்கும் என்ன வித்தியாசம்?''



''ம்... நூடுல்ஸ், சைனீஸ் இடியாப்பம். இடியாப்பம், கேரள நூடுல்ஸ்.''



''மானும் மயிலும் ஆடிப் பார்த்திருக் கீங்களா?''



''ஏங்க... நீங்க உண்மையிலயே ரிப்போர்ட்டர்தானா? ஐ.டி. கார்டு காட்டுங்க. (சமாளிப்புக்குப் பின்...) மயில் ஆடிப் பார்த்திருக்கேன்... மான் ஆடி... மான் ஆடுமா சார்? ஆனா, இந்தப் பேரை கலைஞர் ஐயா வெச்சப்ப, 'என்னடா, பழைய பேரா இருக்கே’னு எனக்கே வருத்தமாத்தான் இருந்துச்சு. அப்புறம் அவரே என்னைச் சமாதானப்படுத்திட்டார். இப்போ பேர் செம ஹிட்டுல்ல!''



''ஏன் அவரை 'அஞ்சா நெஞ்சன்’னு கூப்பிடுறாங்க?''



''அஞ்சா நெஞ்சனா? அப்படின்னா? சத்தியமாத் தெரியாதுங்க. எதுவும் தமிழ் டப் பண்ண ஹாலிவுட் பட டைட்டிலா இது?''



''நியூட்ரினோ என்றால் என்ன?''



''நியூட்ரின்... சாக்லேட் கம்பெனிதானே?''


http://b.vimeocdn.com/ts/535/166/53516618_640.jpg



''ப்ளஸ் டூ-வுல உங்க கெமிஸ்ட்ரி ஸ்கோர் என்ன?''



''அப்பாடா... இப்பவாவது என்னைப் பத்தி ஒரு கேள்வி கேட்டீங்களே... ஆறு மார்க்குங்க!''



''வெறும் ஆறா?''



''ஆமாங்க... எனக்கு தமிழ், இங்கிலீஷ், கணக்குத் தவிர, வேற எதுவுமே வராது!''



''நித்தியானந்தா - ஆதீனம் கெமிஸ்ட்ரிக்கு உங்க மார்க் எத்தனை?''



''நித்தியானந்தாவுக்கு எல்லார் கூடவும் செம கெமிஸ்ட்ரி. ஆனா, ஆதீனம் ம்ஹூம்... ஜீரோ!''



'' 'சும்மா கிழிகிழிகிழினு கிழிச்சிட்டேடா...’ அப்படின்னா என்னங்க?''



''அது ரஜினி சார் டயலாக். அவர்கிட்ட இருந்து பிருந்தா காப்பி அடிச்சா. நான் அவகிட்ட இருந்து பிடிச்சிக்கிட்டேன். அப்படின்னா, எதிர்பார்த்ததைவிட அதிகமா ஆடிட்டாங்கனு அர்த்தம்!''




''கொடநாடு பின்கோடு என்ன?''



''வம்புல மாட்டிவிடப் பாக்குறீங் களா? ஆனா, உண்மையிலயே எனக்குத் தெரியாது!''



''சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் யாரு?''





''எனக்கு அரசியல் நாலெட்ஜ் சுத்தமா கிடையாதுங்க!''



''ஈமு கோழி முட்டை போடுமா?''



''அந்தக் கோழியையே நான் பார்த்தது கிடையாதே. அது நிறையப் பேருக்குப் பட்டையப் போடுதுன்னுதானே நியூஸ் வருது.''



'' 'பில்லா 2’ல அஜித் எத்தனை கோட் மாத்துனாரு?''



''நிறைய நேரம் நடந்துட்டே இருந்தாரு. கோட் மாத்துனாரா என்ன? பட், ஐ லவ் அஜித்!''



''எத்தனை மில்லி அடிச்சா தள்ளாடலாம்?''



''எனக்கு எப்படி சார் இதெல்லாம் தெரியும்? (கோபமாகிச் சமாதானமாகிறார்). 10 கிளாஸ் அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்கிறவங்களும் இருக்காங்க... ஒரே கிளாஸ்ல தள்ளாடி லூஸு மாதிரி உளர்றவங்களும் இருக்காங்க. அதெல்லாம் ஆளைப் பொறுத்தது.''



''அரசாங்கத்தின் விலை இல்லாப் பொருட் கள் ஏதும் வீட்டுக்கு வந்துருக்கா?''



''புரியலை! அப்படின்னா?''

''மாஸ்டர் பீஸுக்கும் டம்மி பீஸுக்கும் என்ன வித்தியா சம்?''



''மாஸ்டர் பீஸ்னா பெஸ்ட்...  என்னை மாதிரி. டம்மி பீஸ்னா உங்களை மாதிரி... வேஸ்ட்!''

 http://moviegalleri.net/wp-content/gallery/naangaam-pirai-movie-launch/naangaam_pirai_movie_launch_photos_stills_2cf565f.jpg

நன்றி - விகடன்

லெக்கின்ஸ் பிரியாமணி ,கிண்ஸ் லெக் ரம்பா -ஜிம்பலக்கடி பம்பா

1.ஏக்தா டைகர் = புலிகளின் ஒற்றுமை # சபாஷ் துபாஷ் 
-----------------------
2. உன்னை வெறுப்பவர்களை நீ வறுத்தெடு் அது போதும் அவர்களை கொல்வதற்கு --
------------------------
3. கீரை உடம்புக்கு குளிர்ச்சி.கீரைக்காரி மனசுக்கு கிளர்ச்சி # இது மருத்துவ டிப்ஸ் 
---------------------
4. இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் : பொன். # மு க மனசாட்சி - தேவைப்பட்டா தசாவ"தாரம்" கூட எடுப்பேன் 
--------------------------
5. பிராவால் கழுத்தை நெரித்து தாத்தா கதையை முடித்த ரஷ்யப் பெண்! # பிகர் பேரு க்யூன் கோ"ப்ரா"? 
--------------------------------



Quickest "6 pack" ever : uses of buns .... # 104
6. நிலக்கரி ஊழல்:பிரதமர் பதவி விலக வேண்டும்:எதிர்கட்சிகள் பார்லியில் அமளி# கோதுமை,அரிசில எல்லாம் அமளி கிடையாதா?்
----------------------------
7. விஜய் ஆண்ட்ரியா பாடிய பாடல் அசத்தலாக வந்துள்ளது! - துப்பாக்கி! # அது என்ன சாதா வாயா?விடலை என்று தெரிந்தும் விடலை.லிப் லாக் மவுத் ஆச்சே? 
-------------------------
8. ஆண்களின் கண்களை சுறுசுறுப்பாய் வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. காற்றில் அசையும் முந்தானையும் அடிக்கடி சரியும் துப்பட்டாவும். 
-----------------------
9. face full லா மேக்கப் இருந்தா அது பிரியாமணி. பீஸ்full லா பிளேட்ல இருந்தா அது பிரியாணி 
----------------------
10. ஆபீஸ்ல எத்தனை ஆணி இருந்தாலும் சமாளிச்சுடலாம் போல.ஆனா எதிர் வீட்டில் தாவணி இல்லைன்னா பொழுதே போகாது போல 
----------------


11. டியர், 5 மெசேஜையும் எனக்கே அனுப்பிட்டியே? நீ தான் எம்புட்டு நல்லவ? 
போடா லூசு, என் கிட்டே 12 சிம் இருக்குடா 
---------------------------
12. அத்தான்.என் கிட்டே எப்படி இவ்ளவ் நல்லா பழக முடியுது?
 ரவுத்திரம் பழகுன்னு பாரதியார் சொன்னார் 
----------------
13. உள்ளத்தில் இடம் கொடு.முடியலையா? உன் இல்லத்தில் இடம் கொடு.உன்னை தினம் ரசித்துக்கொள்கிறேன் 
----------------------
14. நான் உனை சைட் அடிச்சேன்.அய்யய்யோ உனக்கு வலிச்சிருக்குமே? #கவித கவித 
------------------------
15. விமலா - ஐ ஹேட் யூ (I hate you) ,
விமலாப்ரியன் - யூ மீன் I had you?thanx 
-------------------------


16. டியர்.உன் கண்கள் ரெண்டும் மீன்.
வாட் யூ மீன்?
 ஐ மீன் யுவர் ஐஸ் லுக் லைக் FISH. 
ரப்பிஷ்.. 
நோ மப் FISH 
-----------------------
 17. அன்புதான் உலகில் வெல்ல முடியாத அபாயகரமான ஆயுதம் 
----------
18. மிஸ் உங்க லெக்கின்ஸ் சூப்பர். 
 டேய்.நான் போட்டிருக்கறது மிடி.
 ஓ! அப்போ கட் கின்ஸ் இன் மை லைன்.யுவர் கிண்ஸ் லெக் சூப்பர் 
---------------------------
19. கெஸ்ட் திடீர்னு அரிசி மூட்டையொட வந்தா அதுதான் சர்ப்ப"ரைஸ்" விஸிட் 
----------------------
20. ஆபீஸ் டேமேஜர்கள் பெண் ஊழியர்களை அதிகம் திட்டுவதில்லை#அவதானிப்பு 
------------------------------



Saturday, August 25, 2012

வெளிவரும் ராணுவ ரகசியம்

வெளிவரும் ராணுவ ரகசியம்



கடலுக்கடியில் வெள்ளிக்கட்டிகள்!



ரமணன்



ஆழ்கடலின் அடிமட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடல் தாவரங்கள், மீன் வகைகள், சிப்பி, சங்கு, முத்து போன்றவைதானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது வெள்ளிக்கட்டிகள். அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளிக் கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய கனமான புதையலாக வர்ணிக்கப்படுகிறது இந்தக் கண்டுபிடிப்பு.




1941ல் கல்கத்தா துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த 240 டன் வெள்ளிக் கட்டிகள் எஸ்.எஸ். கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்பப்பட்டன. கர்நாடக மாநிலத்தின் அழகான ஜோக் ஃபால்ஸ் அருவியின் பெயர் கரிஸோப்பா. இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு கம்பெனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலுக்கு அதன் நினைவாக இந்தப் பெயர். வெள்ளியைத் தவிர தேயிலை, இரும்பு போன்ற மற்ற சரக்குகளுடன்; வேறு ஆறு சரக்குக் கப்பல்களுடன் ஒரே வரிசையில் சென்று கொண்டிருந்தபோது போதுமான நிலக்கரியில்லாததால் மற்றவை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டது. தனித்து விடப்பட்ட கப்பல் நாஜி படைகளின் போர்க்கப்பல் ஒன்றின் டார்பிடோவால் தாக்கப்பட்டு மூழ்கிப்போனது. 85 பணியாளர்களுடன் மூழ்கிய இந்தக் கப்பலில் வெள்ளிக்கட்டிகள் அனுப்பிய விஷயம் ராணுவ ரகசியமாகையால் அந்தத் தகவல் வெளியிடப்படவில்லை.





சர்வதேச கப்பல் பயணங்களின் விவரங்களைப் பதிவு செய்து வைக்கும் லாயிட்ஸ் நிறுவனம் தொண்ணூறுகளில் வெளியிட்ட தகவலினால் அயர்லாந்து கடல் பகுதியில் மூழ்கிப்போன இந்தக் கப்பலை உலகம் அறிந்தது. அதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் அரசு அப்பணியை, தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க முன்வந்தது. மூழ்கிய கப்பலைக் கண்டுபிடித்து வெள்ளிக்கட்டிகளை எடுத்தால் எண்பது சதவிகிதம் நிறுவனத்துக்கும் மீதி அரசுக்கும் என்பது ஒப்பந்தம். கப்பலைக் கண்டுபிடிக்கும் சர்வே கட்டத்திலேயே சில கம்பெனிகள் முயற்சியைக் கைவிட்ட நிலையில், ஒடிசி என்ற அமெரிக்க நிறுவனம் டெண்டரை ஏற்று ஆழ்கடல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் களமிறங்கியது.




ஒடிசி எக்ஸ்ப்ளோரர் என்ற தாய் கப்பலிலிருந்து கம்ப்யூட்டர்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சிறிய நீர்மூழ்கிக் கப்பல்களையும் ரோபோக்களையும் பயன்படுத்தி வெற்றிகரமாக வெள்ளிக்கட்டிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். முதல் முயற்சியில் கிட்டத்தட்ட 48 டன் (20%) எடையளவில் வெள்ளிக்கட்டிகளைக் கொண்டுவந்துவிட்டார்கள். எழுபது ஆண்டுகள் ஜலவாசம் செய்திருக்கும் இந்தக் கட்டிகளில் படிந்திருக்கும் கடற்பாசியைத் தவிர வேறு பாதிப்புகள் ஏதுமில்லை.





எடுத்த வரை புதையலின் இன்றைய மதிப்பு 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (ஒரு மில்லியன் 10 லட்சம்) விரைவில் இதைப் போல் இன்னும் 4 பங்கு வெளியே வரும். இதில் தங்கள் சொந்தச் செலவில் இந்த முயற்சியை மேற்கொண்ட ஒடிசி கம்பெனிக்கு 80% கிடைக்கும். மீதி பிரிட்டிஷ் அரசுக்கு.




இந்தியாவிலிருந்து போனதுதானே, நமக்கு? அதெல்லாம் ஒன்றும் கிடையாதாம். அரசாங்க சொத்தான அது அன்றைய அரசுக்குத்தானாம். ரோபோக்களை ஈடுபடுத்தியிருக்கும் இந்த முயற்சி ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனை. மூழ்கிப்போன கப்பல்களை மீட்க மட்டுமில்லை, பல ஆராய்ச்சிகளுக்கும் உதவும்" என்கிறார்கள் வல்லுனர்கள்.




ஒடிசியின் அடுத்த முயற்சி 1995ல் கண்டுபிடிக்கப்பட்ட கடலடியில் கிடக்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல். ஏன் அந்தக் கப்பல்? அதில் 2 டன் தங்கம் இருக்கிறது!


நன்றி - கல்கி 

ராமராஜன். கிராமராஜன். ஆனது எப்படி? விகடன் பேட்டி - கிடாவெட்டு


ரு சின்ன ஃப்ளாஷ்பேக்...


 மதுரையை அடுத்து தீப்பெட்டி சைஸில் உள்ள கிராமங்களில் ஒன்றான மேலூர்...


டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் இருக்கும் இளைஞன் குமரேசன். டாக்கீஸுக்கு வெளியே காற்றாட உட்கார்ந்து இருக்கும்போது, உள்ளே திடீரென்று எழுந்த விசில் சத்தத்தையும் கைத்தட்டல் ஆரவாரத்தையும் கேட்டு, குமரேசன் என்னவென்று உள்ளே நுழைந்து ஆவலாக எட்டிப் பார்க்க...


ஆபத்தில் இருக்கும் ஒரு தாயைக் காப்பாற்ற வில்லன்களோடு ஹீரோ எம்.ஜி.ஆர். சிலம்புச் சண்டை போடும் காட்சி திரையில் ஓடுகிறது. தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல் குமரேசனின் அடிமனதில் புதைந்துகிடந்த கனவுகளை உசுப்பிவிடுகிறது.


'தானும் இதுபோல ஒரு நடிகர் ஆனால் என்ன’ என்ற கேள்வி பிறக்கிறது. அன்றே குமரேசன், கனவுத் தொழிற்சாலையான சென்னை கோடம் பாக்கத்தை நோக்கிப் புறப்படுகிறான்.



ஜிகினா சினிமா உலகம் வெளியே பளபளப் பாகத் தெரிந்தாலும், உள்ளே முட்களாகப்பரவிக் கிடப்பது குமரேசனுக்கு உள்ளே நுழைந்த பின்பு தான் தெரிகிறது. இருந்தாலும், கனவுகள் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றன. நம்பிக்கை ஊட்டுகின்றன. வருஷங்கள் ஓடுகின்றன... அந்த குமரேசன் அன்று கண்ட கனவு இன்று நிஜமாகி விட்டது. அன்றைய குமரேசன்தான் இன்றைக்கு பி, சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டு இருக்கும் கிராமத்து ஹீரோவான நடிகர் ராமராஜன்.



''மிகக் குறுகிய காலத்தில் பி, சி சென்டர்களில் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சைலன்ட் சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?''


சி.பி - இளையராஜா, தமிழ் ரசிகனின் விதி,ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை, சிம்ரன் இல்லாத தமிழ் நாட்டில் தமனா இடை அழகி கான்செப்ட் தான் 


''மக்கள் என்னை விரும்பறதுக்கு முக்கியமான காரணமா நான் நினைக்கிறது நகைச்சுவை - சென்டிமென்ட்ஸ். இதோடு கலந்த கிராமத்துப் பின்னணியில் அமைந்த திரைக்கதைகள்தான். அடுத்து, முக்கியமா அம்மா மேல ரொம்பப் பாசமா இருக்கிற பிள்ளை ரோல் நான் நிறையப் பண்றதால, பெண்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


 அடுத்து இளையராஜா என்னோட படங்களுக்குப் போடற அருமையான இசை. வரப்பிலே நடந்து போற கிராமத்துவாசியில் இருந்து வாகனத்துல போற ஆபீஸர் வரைக்கும் அனைவரையும் அவரோட டியூன் முணுமுணுக்கவெச்சிருக்கு. அடுத்து, விரசம் இல்லாத காமெடி. ஒரு சராசரிக் கிராமத்து இளைஞன் கேரக்டருக்கு நான் ரொம்ப இயல்பாப் பொருந்திப் போறதும் ஒரு காரணமா இருக்கலாம்.''


'' 'கரகாட்டக்காரன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றி, அடுத்த படம் இதைவிடப் பெரிய ஹிட்டாகணும் என்கிற பயத்தை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறதா?''



''பயமா, அது எதுக்கு சார்? இந்தப் படம் மட்டுமா ஓடியிருக்கு? இதுக்கு முன்னால வந்த என்னோட நாலஞ்சு படம்கூடத்தான் தொடர்ந்து நூறு நாள் போயிருக்கு. இந்தப் படம் அதிகமா சில்வர் ஜூப்ளி வரை ஓடியிருக்கு. அவ்வளவு தான்.

என்னோட இயக்கத்துல நாலு படம் பண்ணேன். 'மண்ணுக்கேத்த பொண்ணு’ படம் தவிர, வேறு எந்தப் படமும் சரியாப்போகலை. அப்பகூட நான் இடிஞ்சுபோயிடலையே? சந்தர்ப்பம் வரும்னு காத்துட்டு இருந்தேன். அப்புறம் நடிக்கறதுக்கு சான்ஸ் வந்தது. நடிகனா ஆயிட்டேன். எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம். நாளைக்கு எப்படி இருக்கோம்கிறதைப் பத்தி நான் கவலைப்படறது இல்லை. இன்னிக்கு நான் செய்ற வேலையை சின்சியரா செய்றேன். அவ்வளவுதான்.''
 http://123tamilgallery.com/images/2010/09/kollywood-actor-ramarajan-tamilnadu-actor-ramarajan-03.jpg

''பெரிய பேனர்களான ஏவி.எம்., சத்யா மூவிஸ் போன்ற நிறுவனங்களில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?''



''ஆமா, ஒப்புக்கறதில்லை. ஏன்னா, நீங்க சொல்ற பெரிய பேனர்கள், நான் நடிகனா அறிமுகமாகி ரெண்டு படம் வெளிவந்தப்போ, எனக்கு சான்ஸ் கொடுக்க முன்வரலையே. அன்னைக்கு என்னை வெச்சுப் படம் எடுக்க வந்திருந்தாங்கன்னா, அது என் வளர்ச்சிக்கு உதவுமேனு சம்பளம்கூட வாங்காம நான் நடிச்சுக் கொடுத்திருப்பேன்.


ஆனா, அப்போ அவங்க என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்கல. இப்போ நான் பதினெட்டு படத்துக்கு மேல நடிச்சு முடிச்சதுக்கு அப்புறம்தான் என்னை வெச்சுப் படம் எடுக்க வர்றாங்க. அதை நான் ஒப்புக்கத் தயார் இல்லே.



அன்னைக்கு என்னை அறிமுகம் பண்ணினது ஒரு சின்ன தயாரிப்பாளர்தான். அதுக்கு நன்றிக் கடனா, புதுப் புதுத் தயாரிப்பாளர்களை சினிமாவுக்குக் கொண்டுவந்துட்டு இருக்கேன். நீங்க சொல்ற பெரிய தயாரிப்பாளர்கள்கிட்ட ஏற்கெனவே நிறையப் பணம் இருக்கு. இன்னும் எதுக்கு நான் வேற சம்பாதிச்சுத் தரணும்? சின்ன தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கட்டும். இன்னொரு காரணம் - பெரிய பேனர்ல நடிச்சா, நான் சுதந்திரமா செயல்பட முடியாது.''



''கரகாட்டக்காரனோட வெற்றியை நீங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா?''



''என்கிட்ட கங்கை அமரன் வந்து கதை சொன்னபோது, ரொம்ப வித்தியாசமா இருந்தது. நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தை வெச்சு அதுவரைக்கும் தமிழ்ல ஒரு படம் கூட வரலை. இந்தப் படம் பெரிய சென்டர்களிலேயும் நல்லா ஓடுறத்துக்குக் காரணம், நல்ல கரகாட்டத்தை நகரத்தில் இருக்கிறவங்க நிறையப் பேரு பார்த்திருக்க மாட்டாங்க.''



''படத்துக்குப் படம் கமல் போன்றவர் கள் வித்தியாசமாகச் செய்யும்போது, நீங்களும் ஏன் வித்தியாசமான ரோல்களில் மாடர்ன் டிரெஸ்களில் நடிக்கக் கூடாது?''


''சார்... என் படப் பெட்டியெல்லாம் சென்னையில் இருந்து டெல்லி, கல்கத்தா போறதில்லே. மதுரை, கன்னியாகுமரிதான் போகுது. என்னோட அலட்டிக்காத நடிப்புதான் ஜனங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நான் பேகி பேன்ட்டும் டி-ஷர்ட்டும் போட்டு நடிச்சா, இப்படிப் புதுசா மாடர்ன் டிரெஸ் வந்திருக்குனு சின்ன ஊர்களிலே எத்தனை பேருக்குத் தெரியும்? ஏதோ கிறுக்குப்பயனு நினைச்சுடுவாங்க.


பட்டணத்துல இருக்கிறவங்க, நல்ல படம்னு எல்லோரும் சொன்னாதான் தியேட்டருக்கு வருவாங்க. ஆனா, கிராமத்து ஜனங்க 'நம்ம ராமராஜன் படம்’னு என்னோட எல்லாப் படத்தையும் பார்க்க வருவாங்க. எனக்கு பி,சி சென்டரே போதும்!''


''எதுக்காக படங்களில் எம்.ஜி.ஆர். ஸ்டைலைப் பின்பற்றி நடிக்கிறீங்க? ஒரு நடிகர்னு உங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை அவசியம் இல்லையா?''



''நான் சிகரெட் குடிக்கறதில்லே. மது அருந்தறதில்லே. அப்புறம் சினிமாவுல மட்டும் அந்தப் பழக்கம் இருக்கறதா ஏன் நடிக்கணும்னுதான் அந்த மாதிரி கேரக்டர் பண்றதில்லே. இன்னொண்ணு, என்னோட படத்துல வர்ற லேடீஸ் சென்டிமென்ட்ஸ்... இதெல்லாம் எதிர்பாராதவிதமா, எம்.ஜி.ஆரோட ஃபார்முலா மாதிரியே அமைஞ்சு போச்சு


. அதுக்காக எதையும் நான் வீணா திணிக்கிறது இல்லை. என்னை வெச்சுப் படம் எடுக்கிற எந்த டைரக்டர்கிட்ட வேண்டுமானாலும் கேளுங்க... அவங்க செய்யச் சொன்னாத்தான் எம்.ஜி.ஆர். ஸ்டைல்ல பண்ணுவேன்.''



''அரசியலில் நீங்க நுழைஞ்சதுக்கு அடிப்படைக் காரணம் என்ன? எம்.ஜி.ஆரோட பாதிப்பில் நடிக்க வந்தது மாதிரி அவரைப் போலவே அரசியலில் பேர் வாங்க ணும்னு உங்களுக்கு ஆசையா?''



''அரசியல்ல நான் நுழைஞ்சதுக்குக் காரணம், அந்த ஒரு சம்பவம்தான். தலைவரைச் சின்ன வயசில் இருந்தே எனக்குப் பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல என்னைத் தலைவருக்கு அவ்வளவா தெரியாது. அப்போதான் ரெண்டு படத்துல நடிச்சு முடிச்சிருந்தேன்.


என்னோட மனைவி நளினியை அவருக்குத் தெரியும். தலைவர், எங்க ரெண்டு பேரையும் அவரோட வீட்டுக்குக் கூப்பிட்டு, அவரோட சேர்ந்து சாப்பிடவெச்சு உபசரிச்சப்போ, என்னன்னு சொல்லத் தெரியலை... ஒரு உடன்பிறவா சகோதர ரைப் போல ஒரு அட்டாச்மென்ட் வந்துடுச்சு. தலைவரோட மறைவுக்குப் பிறகு, அவரோட இயக்கத்துக்காக நம்ம மேடத்துக்கு (ஜெயலலிதா) ஆதரவாப் பாடுபட்டுக்கிட்டு இருக்கேன்.''


''உங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகணும்னு ஆசை இருக்கிறதா? நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே?''



''நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கங்க. எந்தவிதப் பலனையும் எதிர்பார்த்து இயக்கத்துல நான் சேரலை. அதேபோல, அரசியல்ல எந்தவிதமான பதவிக்கு ஆசைப்பட்டும் நான் பிரசாரத்துக்குப் போகலை. மேடத்தோட பலத்தை அதிகரிக்கத் தான் உதவி செய்யறேன். என் கையில் நிறையப் படங்கள் இருக்கு. அதை முடிக்கவே நேரம் இல்லை.


இதுல எனக்கு எதுக்கு அரசியல்? எலெக்ஷன் சமயத்துல பத்துப் பதினஞ்சு நாள் பிரசாரம் போவேன். ஒருவேளை, என்னை மேடமே கூப்பிட்டு நிற்கச் சொன்னாக்கூட... பணிவா, 'எனக்கு விருப்பம் இல்லை’னு சொல்லி டுவேன். என்னோட ஒரே விருப்பம், தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை தொகுதியிலேயும் அ.தி.மு.க. இயக்கத்தைச் சேர்ந்தவங்க ஜெயிக்கணும். அது போதும் எனக்கு.''



''உங்களுடைய வாழ்க்கை லட்சியம் நிறை வேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?''



''எனக்கு லட்சியம்னு ஒண்ணும் கிடையாது. நடிக்க ஆசைப்பட்டேன். நடிகனாயிட்டேன். பகவத் கீதையில சொல்லியிருப்பதுபோல, எப்பவும் நான் உழைச்சுக்கிட்டு இருக்கேன். பலனை எதிர்பார்க்கறது இல்லே!''



- ந.சண்முகம்

'நம்பிக்கை’ ராஜன்!
ன்றைய சூழ்நிலையில், ரஜினிகாந்த், கமல் கால்ஷீட் பெரிய பேனர்களுக்கு அல்லது சொந்த கம்பெனிகளுக்கு மட்டுமே! அதேபோல புதுத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தவர் விஜயகாந்த். தற்போது தன் சொந்த நிறுவனங்கள், கலைப்புலி தாணு, ஆபாவாணன், பீட்டர் செல்வகுமார், ரங்கராஜ், மணிவண்ணன், சுந்தரராஜன் என்று தனக்கென்று  ஒரு சர்க்கிள் அமைத்துக்கொண்டுவிட்டார்



. சத்யராஜுக்கும் அவருக்கென்று ஒரு சர்க்கிள் உண்டு. இப்படி எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய தயாரிப்பாளர்களுக்கு சொர்க்கவாசல்போல் நம்பிக்கை அளிப்பவர் ராமராஜன். பெரிய தயாரிப் பாளர் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற ராமராஜனின் குறிக்கோள் அவருக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட்!



சினிமாவில் தனக்கொரு நிரந்தர மார்க்கெட் வந்துவிட்டதால், தனது ஆரம்ப நாள் நண்பர்கள், சென்னையில் தங்க உதவியவர்கள் என்று தனக்கு ஆதரவு அளித்தவர்களின் பட்டிய லைத் தயார்செய்து, அவர்களை வலிய அழைத்துத் தயாரிப்பாளர் ஆக்குகிறார் ராமராஜன். சைக்கிளில் வந்து ராமராஜனிடம் கால்ஷீட் பெற்று, தயாரிப்பாளர் அந்தஸ்து பெற்ற ஒரு புரொடக்ஷன் மேனேஜரும் உண்டு.



நிஜமாகவே கரகாட்டம்!


'கரகாட்டக்காரன்’ படம் வசூலில் சாதனை புரிந்திருப்பது பழைய செய்தி. படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் - தியேட்டர்களில் நடக்கும் ஒரு தமாஷான விஷயம்தான். திருச்சி, மதுரை சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற தியேட்டர்களில் இந்தப் படம் ஓடும்போது 'மாரியம்மா... மாரியம்மா...’ என்ற பாட்டு வந்த வுடன் பல பெண்கள் 'சாமி’ வந்து ஆட ஆரம் பித்துவிடுகிறார்கள்.



 எனவே, இதற்கென ஒவ்வொரு ஷோவின் போதும் இந்தப் பாட்டு வரும்போது, ஒரு நபர் தட்டில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு அரங் கத்தினுள் நுழைந்து, சாமி ஆடும் ஒவ்வொரு வருக்கும் திருநீறு போட்டு உட்காரவைக்கிறார்.


- பிரபா

நளினியின் ஆசை!
திருமதி நளினி ராமராஜன், நடிகை சீதா வின் பரம ரசிகை. தன் கணவருடன் சீதா ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நளினிக்கு அளவு கடந்த ஆசை. ராம ராஜனிடம் வரும் தயாரிப் பாளர்களிடம் நளினி கேட்கும் முதல் கேள்வி 'யார் கதாநாயகி?’ என்பது தான்.



பல தயாரிப்பாளர்களிடம் சீதாவை சிபாரிசு செய்தார் நளினி. படுபிஸியாக இருந்த சீதாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இப்போது நளினியின் ஆசை நிறைவேறிவிட்டது. 'மனசுக்கேத்த மகராசா’ படத்தில் ராமராஜனுக்கு ஜோடி சீதாதான்! இவர்கள் இணைந்த வண்ணப்படம் நமக்குத் தோதாகக் கிடைத்தது. அதுதான் இந்த இதழ் அட்டைப் படம்!

நன்றி - விகடன் பொக்கிஷம்

ஈரோட்டில் ஷை சென்ட்டர் ( SHY CENTER)

அட வருசகட்டி வாங்கப்பா.. அதான் பொளந்துகிட்டு கூபுடுராளுகல்ல...
1.விவேகா - அய்யா என்னை ராகிங் பண்றாங்கய்யா. மு க - யோவ் சாமியே நடையை சாத்திட்டு கிளம்பிடுச்சு.பூசாரிக்கு பூஜா கேட்குதா?#பேஸ்புக் லாக் 



------------------

2. அன்பே சுனைனா.உன்னை நாயகியா போட்டு படம் எடுத்தா வினையா? # பாண்டி ஒலி பெருக்கி 




--------------------------


3. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - பிரதமர் # யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு வதந்தி - சோனியா 



----------------


4. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு - த. த. அ # என்னையே ஓவர் டேக் பண்ணிட்டாரா? ஆ ராசா கவலை, கலைஞர் வருத்தம் 


--------------------------


5. மனதை 3டி விட்டாய்! பின் என் நெற்றியில் நாமம் இட்டாய்! # "வைஷ்ண"வியின் டைரிக்குறிப்பு 



---------------------------


எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குமுதத்தில் அ ண்ணாமலை ர ங்கராஜன் சு ந்தரேசன் அரசு பதில்கள் மிகவும் அருமையாக இருக்கும். ரா.கி. ரங்கராஜன் எழுதிய குடும்ப தொடர் கதைகள் சுவாரசியமாக இருக்கும்.

6. புரோ புவா -பேசிக்கலி நான் ரொம்ம்ம்ப சோம்பேறி,ஹிஹி # பேசிக்கலன்னா?நம்பாமாறி? 



---------------------------


7. முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் -அமைச்சர் # என்னை வேலை செய்யச்சொல்ல நீங்க யாரு? யூ ஆர் டிஸ்மிஸ் -ஜெ 



------------------------

8. டியர் .நீ தான் சாதிக்க தூண்டி விட்டே.


 யார் சொன்னது? 


சாதிக்கேதான் சொன்னான் 


----------------------

9. தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை--ஜெ# அப்போ உள் மாநில மக்கள் பயப்படனுமா?-கேப்டன் 


-----------------------


10. கண்டக்டர் - லேடீஸ் சீட்ல ஏன் உக்காந்திருக்கே? லொள் பயணி -அப்படியாவது என் பக்கத்துல ஒரு லேடி உக்காரட்டும்னுதான் 




--------------------------



11. XQS மீ மிஸ்.நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா? 



 38-38-38 - நோ .போலீஸ் குவாட்டர்ஸ்ல இருக்கேன் # ஓட்றா ஓட்றா ஓடுடா 




-------------------------


12. டியர்.நான் சாஞ்சுக்க உங்க தோள் கிடைக்குமா? 



 ஏன்? உங்கப்பா ஒரு ஈசி சேர் கூட வாங்கித்தரமாட்டாரா? 



-----------------------


13. திமுக-அதிமுகவுக்கு "0' போடணும்: விஜயகாந்த் # ஜீரோன்னு தெளிவா சொல்லுங்க.ஓ போடறீங்கன்னு நினைச்சுடப்போறாங்க 



-------------------


14. ஷை சென்ட்டர் - இங்கு வெட்கப்படுவது எப்படி என பெண்களுக்கு கற்றுத்தரப்படும் #2020 



----------------


15.  ரஞ்சிதாவுடன் கைலாய யாத்திரையா?நித்தி நழுவல் பதில் # லிங்க பூஜைக்கா ,ஆலிங்கன ஆசைக்கா?சுவாமி! 




----------------------




16. குடை பிடிக்கிறாய் நீ!இடை பிடிக்கிறேன் நான்.இடமாறு ஜெயிச்ச நிலை! 



---------------------


17. தினமும் 5 sms மட்டுமே அனுமதி # இது என்ன செல்போனா?சினிமா தியேட்டரா? 


------------------------


18. சனி நீராடு.= 1,சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சு குளி 2,அன்புள்ளமனைவி நீ (ர்)ஆடு 



----------------------------


19. sms இல் குடும்பம் நடத்தும் காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கதி இனி என்ன? # தினசரி 5 ரேஷனிஸம் 


-------------------------


20. இவனுங்க மட்டும் கட்டுப்பாடே இல்லாம ஊழல் ,கில்மா எல்லாம் பண்ணுவானுங்களாம்.நாம மட்டும் எஸ் எம் எஸ் அனுப்ப கட்டுப்பாடாம்#அடேய் 


--------------------


என்னை விட்டு நீ விலகினாலும் எனது Fake ID உன்னை சுற்றி கொண்டே இருக்கும் # E -Love :) என்ன எழவோ :)


#படித்ததில் ரசித்தது.
· · 

21.ஓட ஓட தூரங்கொரயல!# ஏன்?ரிவர்ஸ் ரன்னிங்க் போறே? 



-------------------


22. சாதாரண ஜனங்கள் இனி வாரம் ஒரு முறை தான் அவங்கவங்க மனைவி கூட பேசனும் -அரசு புதிய கட்டுப்பாடு.கணவர்கள் அமோக ஆதரவு 


------------------


23. தாக்குதல் வதந்தி:மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை # ஒல்லி எஸ் எம் எஸ்னா கா வ ( காலை வணக்கம்)மட்டும் தான் அனுப்ப முடியும்



-----------------


24.  தமிழ் சினிமா நர்ஸ் 


1. யாரும் சத்தம் போடக்கூடாது 

2, டாக்டர் கூப்பிடறார்


 3.நீங்க எப்பவுமே இப்படித்தான்






--------------------

25.15 நாளைக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கை மத்திய அரசு கண்காணிக்குமாம் # நாம போடற கடலையை பார்த்து அவனவன் மிரளப்போறான்




---------------------


முதல் ஆளாக ஓடி ஒளிவோம் ரிஷிகேசத்தை நோக்கி....! தப்பா சொல்லிட்டாரோ...?