Wednesday, July 18, 2012

மூன்றாம் வருடத் துவக்கம் - அட்ராசக்க -டாப் 6 தமிழ் பிளாக்ஸ்

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

2 வருடங்கள் ஓடிடுச்சு.. அட்ராசக்க வலைப்பூ ஆரம்பிச்சு. ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் தமிழன் என்ன செய்வான்னா ஏதாவது சபதம் எடுப்பான், அப்புறம் மறந்துடுவான்..அந்த மாதிரி இந்த 3 வது பிறந்த நாள் அன்னைக்கும் ஏதாவது செய்யனுமே.. அதனால என்ன பண்ணப்போறோம்னா முதல்ல அட்ரா சக்க வலைப்பூபற்றி, அப்புறம் தமிழ் வலை உலகின் டாப் 6 பிளாக்கர்ஸ் யார் - ஒரு பார்வை, அப்புறம் நன்றி நவிலல்..


முதல் வருடம் முடிந்த போது அட்ராசக்க ஸ்டேட்டஸ் -640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655.


2வது வருடம் நேத்தோட முடியுது. 1532 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 289) ,  1249 ஃபாலோயர்ஸ் 27,58,734 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 71,886 & ட்விட்டர்ல 26,048  ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 3105, இண்ட்லி ஃபாலோயர்ஸ் 282



இதுல ஃபாலோயர்ஸ் வளர்ச்சி பார்த்தா முதல் வருடத்தை விட கம்மிதான்.. டபுள் ஆகலை.. மற்ற பதிவர்கள் எல்லாம் டபுள் பண்ணிடறாங்க.. நான் பண்ண முடியலை.. அலெக்சா ரேங்க்ல பின்னால போய்ட்டேன். காரணம்  பிளாக்ஸ்பாட் டாட் இன் என கூகுள் மாற்றியதால் 3 மாசம் வேஸ்ட் ஆகிடுச்சு.. எப்படின்னா டொமைன் வாங்கினது மார்ச் 2012ல.. அப்போ அலெக்சா ரேங்க் 44,000 ல இருந்து அதல பாதாளத்துக்கு போயிடுச்சு. 50 லட்சம் ரேங்க்.. அலெக்சா ரேங்க் என்பது வலை உலகில் உலக அளவில் அந்த கம்ப்பெனி தரும் ரேங்க்.. எந்த அளவு கம்மியா இருக்கோ அந்த அளவு வளர்ந்துட்டு வர்றோம்னு அர்த்தம்.இன்னும் நல்லா உழைக்கனும்.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை 

1. காப்பி பேஸ்ட் பதிவுகள் 

2. நடிகைகள்ன் கிளாமர் ஃபோட்டோஸ் போடறேன்

3. ராமநாராயணன் படம் மாதிரி கச கசன்னு போஸ்ட் போட்டுட்டே இருக்கேன்

4. விஜய்யை அதிகமா ஓட்டறேன், அஜித்க்கு சப்போர்ட் பண்றேன்

5. மற்ற பதிவுகளுக்கு முன்போல் வருவதில்லை

6. ட்விட்டர்ல ஓவரா மொக்கை போடறேன்,அதையே ஒரு போஸ்ட்டா தேத்திடறேன்


7. மற்றவர்கள் யாரும் காப்பி பேஸ்ட் பண்ணாத மாதிரி லாக் பண்ணி வெச்சிருக்கேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibVf59Nf2pHoT2oIL-IX1CGIQpoSkr3N2YZXXv9SUweX44lBVWHpJCJXkAYJEcGppis8bbsDU5G62i9HUHRe6iHceaa0I2-XIWXrviwhpsk1LPTOOmVCtMQ_NBOq98jW9O9K30Rqc-ew9S/s1600/Polyresin_Indian_God_Lord_Krishna.jpg

விளக்கங்கள்


1. நமக்குப்பிடிச்ச ஒரு படம் ரிலீஸ் ஆகுது, ஒரு நல்ல நாவல் படிக்கறோம், ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், அடுத்து என்ன பண்றோம்?அதை நம்ம நண்பர்கள் கிட்டே ஷேர் பண்றோம்.. ட்விட்டர்ல நல்ல ட்வீட் படிச்சா அதை ஆர் டி பண்றோம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. அந்த மாதிரிதான் காப்பி பேஸ்ட் போஸ்ட் என்பதும்.. நான் படிச்ச நல்ல சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள் மற்றவர்களும் படிச்சு பயன் பெறட்டும் என்பதே அதன் நோக்கம்.. ஏற்கனவே அதை படிச்சவங்க ஜஸ்ட் பாஸ்.. அவ்ளவ் தான்..



2. நடிகைகளின் கிளாமர் போஸ்ட் எல்லா போஸ்ட்டுக்கும்  போடறதில்லை
,சினிமா விமர்சனங்களில் மட்டும் தான். படங்களில் இடம் பெறாத படமா கிடைச்சா போடறேன்.. கிளாமர் தூக்கலா இல்லாம பார்த்துக்க முயற்சிக்கறேன்


3. முதல்ல எல்லாம் ஒரு போஸ்ட் தான் போட்டேன். காப்பி பேஸ்ட் போட்டா நீக்கிடுவோம்னு தமிழ் மணம் திரட்டி எச்சரிச்சாங்க.. ஆனா பல காரணங்களால என்னால காப்பி பேஸ்ட் போஸ்ட் போடாம இருக்க முடியல.. அதனால அவங்க என் வலைப்பூவை அவங்க திரட்டில இருந்து நீக்கிட்டாங்க.. அதனால எனக்கு டெயிலி 800  ஹிட்ஸ் குறைஞ்சுது.. அதே போல் இண்ட்லி திரட்டி முதல்ல எல்லாம் எல்லா போஸ்ட்டையும் ஹிட் பண்ணிச்சு , அதன் மூலம் டெயிலி 1800 ஹிட்ஸ் எனக்கு வந்துச்சு.. ஆனா ஏனோ அவங்களும் பிரபலமான இடுகைகள் பிரிவில் என்னுதை சேர்ப்பது இல்லை. அதனால இண்ட்லி மூலமா வந்த ஹிட்ஸ் 1800 போயிடுச்சு, அப்போ டோட்டல் லாஸ் 2600 ஹிட்ஸ். அதை சரிக்கட்ட, பேலன்ஸ் பண்ண போஸ்ட்டோட எண்ணிக்கையை  ஏற்ற வேண்டியதா போச்சு.. ஒரு நாளுக்கு சராசரி 2000 விசிட்டர்ஸ், பேஜ் வியூஸ் 5000 , இதுதான் என் டார்கெட். அதுக்குத்தகுந்தாற்போல் போஸ்ட் போடறேன்



4.விஜய், அஜித் எல்லா ரசிகர்களும் என்  நண்பர்களே. காவலன், நண்பன் இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனம் எழுதி இருக்கேன்.. வேலாயுதம் சுமார்னு சொல்லி இருக்கேன், மங்காத்தா விமர்சனத்தில் பெண்களை கவராது எனவும் அசல் டப்பா எனவும் சொல்லி இருக்கேன், ட்விட்டர்ல சில விஜய் ரசிகர்கள் அஜித்தை ஓவரா கலாய்க்கறப்போ சும்மா விளையாட்டுக்கு அவங்களுக்கு எதிர் ட்வீட் போடறேன்..பில்லா 2 படத்தை பிரமோட் பண்ற மாதிரியும் ட்வீட் போட்டேன், கிண்டல் பண்ணியும் ட்வீட் போட்டேன்..


5. அம்மாவின் ஆட்சியில் கரெண்ட் அடிக்கடி கட் ஆவதால் நெட்டில் நான் இருக்கும் நேரம் குறைவு. இருக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தில் என் பிளாக்கில் பதிவு போடவே நேரம் சரியா இருக்கு. இருந்தாலும் இப்போ ஓரளவு சீராகிடுச்சு, இனி டெயிலி மினிமம் 10 பிளாக்காவது வர முயற்சி பண்றேன்


6. ட்விட்டர்ல எல்லா ட்வீட்டும் பிரமாதமாப்போட்டுட முடியாது, ஆனானப்பட்ட மணிரத்னமே ராவணன், ஆயுத எழுத்து போன்ற டப்பா படம் குடுத்திருக்காரு.. மனசுல பட்டதை ட்விட்டா போடறோம்.. சிலது முன்னே பின்னே தான் இருக்கும் , கண்டுக்காதீங்க.. அந்த ட்வீட்ஸ் வேஸ்ட்டா போயிடக்கூடாதுன்னு டெயிலி அதிகாலை 5 மணீக்கு ஒரு பதிவா போட்டுடறேன்


7. நான் மற்ற பதிவு காப்பி பேஸ்ட் பண்ணி போடும்போது நன்றி - என அவங்க பேரை சொல்லிடறேன், ஆனா சில பிரபல சினிமாவலைத்தளங்கள் என் பேர் குறிப்பிடாம சினிமா விமர்சனத்தை சுட்டு போட்டுடறாங்க.. அதை கண்ட்ரோல் பண்ணவே அப்படி வெச்சிருக்கேன்./. மீறி யாராவது சுட்டாலும் எந்த பிளாக்னு கண்டு பிடிச்சுடலாம்..


இப்போ டாப் 6 வலைப்பூக்கள்


1. சவுக்கு - பிளாக் ஆரம்பிச்சு ரெண்டரை வருடங்கள் தான் ஆகுது, ஆனா அமோக வரவேற்பு, காரணம் அரசியல் ரகசியங்கள் அம்பலப்படுத்தும் அசாத்திய துணிச்சல்.. ஆல்ரெடி உளவுத்துறையில் ஒர்க் பண்ணி இருப்பதால் பல விபரங்கள் கிடைக்குது. 792 பதிவுகள்  ,  ---- ஃபாலோயர்ஸ் 89,90,621 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 99,919. எனக்குத்தெரிஞ்சு இவ்வளவு குறுகிய கால கடத்தில் அபார வளர்ச்சி அடைந்த தமிழ் வலைப்பூ எதுவும் இல்லை.. நெம்பர் ஒன் இதுதான்..அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 324 பேர்.சினிமா விமர்சனம் போடாமல் வெறும் அரசியல், விழிப்புணர்வு மட்டுமே போட்டு ஹிட்ஸ் அள்ளுபவர்.. ரெண்டரை வருஷமா பிளாக் எழுதுறார்



2. உண்மைத்தமிழன்- ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா இவர் எழுதும் பதிவின் நீளம் உண்மையான பட ஸ்கிரிப்டை விட நீளமா இருக்கும்னு கிண்டலா எல்லாரும் சொன்னாலும் ரொம்ப டீட்டெயிலா விமர்சனங்கள் இருக்கும்.. தமிழ் சினிமாவில் சாமான்யர்கள் அறிந்திராத பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கும். கூகுள் சர்ச்சில் இவரது சினிமா விமர்சனங்கள் தான் முன்னணியில் இருக்கு.. 881 பதிவுகள்1224 ஃபாலோயர்ஸ் ஒரு கோடியே 36 லட்சத்து 10,250  ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 3,37,775,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  221 பேர்.தமிழ் வலைப்பூக்களில் அதிக ஹிட்ஸ் பெற்றவர் இவர் தான். தனக்கு அடுத்து வரும் கேபிளை விட இவர் டபுள் மடங்கு ஹிட்ஸ் பெற்று முன்னிலையில் இருக்கார்,5 1/2 வருசமா பிளாக் எழுதுறார்.


3. கேபிள் சங்கர்  - கொத்து புரோட்டா, சாப்பாட்டுக்கடை இரண்டிலும் செம ஃபேமஸ் ஆனவர்.. இவரது சினிமா விமர்சனத்தை படிக்காத சினிமா பிரபலங்கள் ரொம்ப கம்மி. டெயிலி நைட் டைமில் தான் பதிவு போடுவார்.. இப்போ சினிமாத்துறையில் எண்ட்டர் ஆகிட்டார்.. ( எண்ட்டர் கவிதைகள் ராசி போல ) 1131பதிவுகள்  ,1839ஃபாலோயர்ஸ் ,53,29,431 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 94,223,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 180  பேர். 6 வருடங்களா எழுதறார்


4. ஜாக்கி சேகர் - ஆங்கிலப்படங்கள், உலகப்படங்கள் விமர்சனம், சென்னை மக்கள், நகரம் பற்றிய விழிப்புணர்வுப்பதிவு, சாண்ட்வெஜ் நான் வெஜ் போன்றவை இவரது பிளஸ். வலை உலகில் அதிகம் பேரால் தனி மனித தாக்குதல் பெற்றவர் என்ற பெருமையும், அதை கொஞ்சம் கூட கண்டுக்காமல் இருப்பவர் என்ற பெருமையும் உண்டு.இவரைத்தாக்கவெனவே 6 வலைப்பூக்கள் தனியா இருக்கு.. 1115 பதிவுகள்  ,1480 ஃபாலோயர்ஸ் ,36.36,689 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,79,364 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  160   பேர்.  நாலரை வருடங்களா எழுதறார்


5. வினவு  - அரசியல், கல்வி சமப்ந்தப்பட்ட விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதிப்புகழ் பெற்றவர்கள். ஒரு காலத்தில் தமிழ் மண கட்டண சேவை மூலம் முகப்புப்பக்கத்தை ஆக்ரமித்தவர்கள்.. இவங்க குருப்ல 12 பேர் இருக்காங்க.. மாத்தி மாத்தி எழுதுவாங்க போல  ,1434 பதிவுகள்  3507  ஃபாலோயர்ஸ் ,59 லட்சம் ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,06,090 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  170   பேர்.  நான்கு வருடங்களா எழுதறார். இவருக்கும் அட்ராசக்கவுக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் ஒரே நாள், மாதம் ( ஜூலை 17) எழுத வந்தாங்க,  4 வருடங்களா எழுதறாங்க


6. சித்தர்கள் ராஜ்ஜியம் - மேலே சொன்ன 5 வலைப்பூக்களும் அரசியல், அல்லது சினிமா சார்ந்து புகழ் பெற்ற பிளாக்ஸ்னா இது ரொம்பவே வித்தியாசம். எந்த திரட்டியிலும் இணைக்காம 3430 ஃபாலோயர்ஸ், 694 பதிவுகள்
32,36,250 ஹிட்ஸ்,  2 1/2 வருடங்களா எழுதறார்.. முழுக்க முழுக்க சித்தர்கள் பற்றிய அரிய தகவல்கள் , கட்டுரைகள் மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தமிழ் வலைப்பூவுக்கும் இல்லாத பெருமை டோட்டல் விசிடர்ஸை விட பேஜ் வியூஸ் 5 மடங்கு இருப்பதே..  மற்ற எல்லா பிலாக்கர்ஸும் அதை 1 :3 என்ற விகிதத்தில் வைத்திருக்கும்போது , சிலர் 1;2 என வெச்சிருக்கும்போது இவர் மட்டும் 1;5 என்ற விகிதத்தில் வைத்து இருக்கார்.. 



நன்றியுடன் நினைத்துப்பார்க்கும் நபர்கள்

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )


ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

ஆடி மாசம் ஸ்பெஷல் ஜோக்ஸ்

1. சிறுமி கற்பழித்து கொலை - எக்ஸ் தி.மு.க M.L.A கைது  # எக்ஸ் எம் எல் ஏ செக்ஸ் எம் எல் ஏவா இருந்திருக்காரு, தலைவர் வெக்ஸ் ஆகி இருப்பாரே?


---------------------

2. சின்ன வயசுல மாமா பெண்ணை சண்டை போடும் சாக்கில் அங்கங்கே தொட்டுக்கிட்டா நீயும் புத்திசாலித்தமிழனே!


----------


3. wedding க்கும் weldingக்கும்  என்ன வித்தியாசம்னா 1.wedding - தானா ஒட்டிக்கும்,கட்டிக்கும் 2  welding - நாம தான் ஒட்ட வைக்கனும்



-------------------------

4.ஒரு  ஆண் குரங்கு இன்னொரு பெண் குரங்குக்கு என்ன பூ குடுத்து லவ் புரப்போஸ் பண்ணும்? - சா”மந்தி”ப்பூ  # சங்கி மங்கி திங்கிங்க்




----------------------------


5.  கலைஞர் - கழக MLA ரேப் செய்யும்போதுகூட தமிழச்சியை ரேப் செய்யவில்லை, கேரளா பெண்ணைத்தான் ரேப் செய்து இருக்கிறார் # க,க ,கட்டுப்பாடு


----------------------



6. ஆடி மாசம் கூழ் ஊத்துனா அருள் கிடைக்கும் # அய்யய்யோ , விக்ரம் நடிச்ச அருளை அவரே பார்க்காத அளவு மொக்கை ஆச்சே?



----------------------


7. சாப்பாடு கெட்டுப்போகாம இருக்க ஃபாரீன்காரன் ஃபிரிட்ஜை கண்டு பிடிச்சான், தமிழன் சாப்பாட்ல தண்ணீர் ஊற்றி வெச்சு வெங்காயம் கடிச்சு அடிச்சான்



-------------------------


8. நல்ல ஃபிகர்ங்களை  கண்டு பிடிக்கறதுதான் கஷ்டம், அட்டு ஃபிகர்ஸ் 1000 பேர்  வெளீல சுத்திட்டு இருப்பாங்க ;-0 # சும்மா


----------------------------


9. யாரோ ஒரு சயிண்ட்டிஸ்ட் எதையோ கண்டு பிடிச்சு யுரேகா யுரேகா அப்டின்னு பாத்ரூம்ல இருந்து ஓடுனாராம், யார் அந்த யு. ரேகா? # U.REKA


--------------------

10 மே மாசம் கரெக்ட் பண்ணுன பெண்ணைத்தான் மே ஸ்திரின்னு சொல்றாங்களா?




-----------------------


போங்கடா நீங்களும் உங்க பெட்ரோலும்............
நீ horse power ல இஞ்சின வெச்சிருப்ப.........
நாங்க horse ஐ யே இஞ்சினா வெச்சிருக்கோம்......
நாங்க தாண்டா ஒரிஜினல்................
Add caption



11. திருவள்ளுவர் குரலை கேட்கறது முக்கியம் இல்லை, அவர் சொன்ன குறளை ஃபாலோ பண்ணறதுதான் முக்கியம்




--------------------------


12. நீ லவ் லெட்டர் குடுத்தும் ஒரு பொண்ணு எஸ் ஆர் நோ சொல்லாம பொத்தாம்பொதுவா புன்னகைத்தா பாப்பா ட்விட்டர்ல இருக்குன்னு அர்த்தம் # ஸ்மைலி



--------------------


13. 1000 @டு ஃபிகருங்க நம்ம கண்பார்வைல தட்டுப்படாம போனாலும் பரவாயில்லை, ஆனா ஒரு நல்ல ஃபிகரைக்கூட நாம பாக்காம மிஸ் பண்ணிடக்கூடாது


----------------------------

14. என்னை சைட் அடிக்கற பொண்ணுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா நான் சைட் அடிக்கற பொண்ணுக்கு தகுதி வேணும், ஹி ஹி # 16 டூ 19 ( வயசு)




--------------------------------


15. ”கிஸ்” கிந்தா காண்டம் - பேரிலேயே  இரு(க்கு) கிளு கிளுப்பு



-------------------------



இது எப்படி ' இதுக்கு பேருதான் கொக்கு

16. சும்மா  ஐ டி ஐ ல பேருக்கு  படிச்சுட்டு நான் ஐ டி ல ஒர்க் பண்றேன்னு பொய் சொல்றதுதான் ஃபேக் ஐ டி?



---------------------------


17.  படத்துல 2 ஹீரோயின்ஸ் இருந்தாலும் தொடாம இருந்தா அது அஜித் படம், படத்துல வர்ற  எல்லா லேடி கேரக்டர்சையும்  கிஸ் அடிச்சா அது கமல் படம்


-------------------------


18. அம்புட்டு தேன் நான் சொல்வேன் - கோவை பெண் # அம்புட்டு தேன் ( ஹனி) நான் ஜொள்வேன்



--------------------

19.உயர்ந்த எண்ணங்களை, விஷயங்களை சாதாரண வார்த்தைகளில் சொன்னால் அது  தத்துவம் ( ஃபிலாசபி),சாதாரண விஷயத்தை பில்டப்போட சொன்னா அது டகால்டி


----------------------------


20. XQS மீ மிஸ், உங்க கிட்டே பேண்ட் எய்டு இருக்கா? உங்களை பார்த்ததும் டபக்னு காதல்ல விழுந்துட்டேன், முட்டிங்கால்ல செம அடி ;-0



-----------------------



கிடைக்கிற அனைத்தையும் நீ தின்னுற.............
உன்னை இன்னைக்கு நான் தின்னுறேன்...........
உனக்கும் புரியட்டும் அந்த வலி....................

21.  ரசம் சூப்பரா இருக்கு என மனைவியிடம் ரீல் விட்டு, குல்லா போட்டா அதுதான் ரசகுல்லா



----------------


22. இன்னைக்கு ஆடி மாதம் தொடக்கம், குவி ஆடியா? குழி ஆடியா? # நாங்களும் சயின்ஸ் படிச்சிருக்கோம்ல?;-0



 --------------------------------


23. சரக்கு அடிக்கும் சங்கரலிங்கங்கள் ஸ்வீட் பர்சனாக இருக்க மாட்டார்கள் என்பதைத்தான் குடி “காரர்” கள்னு சிம்பாலிக்கா சொல்றாங்களா?




-------------------------


24. மீனம்பாக்கம் டூ கொழும்பு புதிய விமானம் விடப்படுகிறது # மீன் கொழம்பு


---------------

25. லவ் = குவாட்டர் , நட்பு = டாக்டர் , என்னதான் நீங்க குவாட்டர் அடிச்சு நாசமாப்போனாலும் ,கடைசில டாக்டர் கிட்டே வந்துதான் ஆகனும்




----------------------------


 a


டிஸ்கி - ஆடி மாசத்தில் மனைவியை பிரிந்து 

Tuesday, July 17, 2012

சாரு நிவேதிதா. - உலகப்புகழ் பெற்ற மொழி பெயர்ப்பு சிறுகதை -உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்

http://chummaaorublog.files.wordpress.com/2010/12/avanthika.jpgகதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் செய்திகளின் பத்தியில் நீங்கள் அவனை வாசிக்கிறீர்கள்.


விமான நிலைய அலுவலர்கள் அவனை ஆல்பர்ட் என்று அழைக்கிறார்கள்.தன்னுடைய சிவப்புப் படுக்கையையும் பழகி நைந்துபோன சூட்கேசையும் புத்தகங்களையும் நேசித்துக்கொண்டு அவன் பிரிட்டனை மறக்க முயற்சி செய்கிறான்.காலையில் ஐந்தரை மணிக்கு இருட்டு விலகும் முன்பே அவன் விழித்தெழுகிறான்.

குளியலறைக்குப் போய் குளித்து சவரம் செய்து , பிரிட்டனுக்குப் பறந்து செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பகல் முழுவதும் விமான நிலைய பெஞ்சில் அமர்ந்து படிப்பில் மூழ்கியிருக்கிறான்.அழகான விமானப் பணிப்பெண்களும் கம்பெனி ஊழியர்களும் ஓட்டல் பணியாளர்களும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் அவனிடம் நலம் விசாரிக்கிறார்கள்.மிக மெதுவான சத்தத்தில் ஆல்பர்ட்டும் அவர்களை நலம் விசாரிக்கிறான். ஒரு கட்டுக்கதைபோல பத்திரிகைகளில் நீங்கள் அந்த மனிதனை வாசிக்கிறீர்கள்.



தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆல்பர்ட்டுக்குப் புகார்கள் எதுவும் இல்லை.விமான நிலைய அலுவலர்கள் கொடுக்கும் வவுச்சர்களால் அவன் பட்டினியில்லாமல் சமாளித்துக்கொள்ளுகிறான்.தான் வசிக்கிற அந்த விமான நிலையம் எந்த இடத்திலிருக்கிறது என்று கூடத் தெரியாமல் கனவில் வாழ்வது போல அவன் காலம்கழித்துக்கொண்டிருந்தான்.


வரைபடத்தில் அந்த இடம் எங்கேயிருக்கிறது என்று ஆல்பர்ட் தேடிக்கொண்டிருக்கிறான்.ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாததுதான் அவனைப் பொறுத்தவரை மிகவும் துரதிருஷ்டமான உண்மையாக இருந்தது.நிலப்படத்தை விரித்துப் போட்டு பைத்தியக்காரனைப்போல புவியியலுக்குள் அலைந்து திரிந்தும் பிரிட்டன் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் தத்தளிக்கிறான்.


பத்திரிகைகளில் செய்தியுடன் ஆல்பர்ட்டின் படமும் இருக்கிறது.குளியலறைக் கண்ணாடியில் அவன் சவரம் செய்கிறான்.அவன் தன்னுடைய முக சருமத்தில் வளரும் துக்கத்தின் மஞ்சள் படலத்தையும் நரைத்த ரோமங்களையும் மழிக்க முயற்சி செய்கிறான்.சவரம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு வெளிறிய அமைதியினூடே அந்த முகத்தில் துக்கத்தின் புன்னகையும் ஒளிருகிறது.தான் வாழ்க்கையை நேசிப்பதாக அவன் மௌனமானக்ச் சொல்லுவதுபோலத் தோன்றுகிறது.ஆல்பர்ட்டின் வழுக்கையேறிய தலையும் ஒடுங்கிய கன்ன எலும்புகளும் கருணைக்காக யாசிப்பதுபோல உங்களை உற்றுப் பார்க்கின்றன.


குளியலறைக் கண்ணாடியில் சவரம் செய்யும்போது ஆல்பர்ட்டிடம் அசைவே இருக்காது.விமான நிலையச் சிற்றுண்டிச் சாலையில் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் சாப்பிடும்போது அவனுடைய கை மட்டும் உதடுகளை நோக்கி உயரும்.சிவப்பு பெஞ்சை அடையும்போது அவன் புத்தகத்தில் கண்களைப் புதைத்து உட்காரும் உருவமாக மாறுகிறான்.


ஆல்பர்ட் அணிந்திருக்கும் உடைகள் நிழிந்து தொங்கத் தொடங்கியிருக்கின்றன.என்றாவது ஒருநாள் தன்னால் பிரிட்டன்னுக்குப் போய்ச் சேரமுடியுமென்று நம்பும்போதே ஒருபோதும் அப்படி சம்பவிக்காது என்பதும் அவனுக்கு நிச்சயமாக இருந்திருக்கவேண்டும். எனினும் ஒரு நம்பிக்கையை அவன் இறுகப் பிடித்திருந்தான்.ஒரு பட்டுப் பூச்சியின் சிறகு வீச்சுப்போல ஆல்பர்ட்டின் இதயத்தில் ஒரு இளங்காற்று மிச்சமிருக்கிறது.


நீங்கள் மீண்டும் ஆல்பர்ட்டைப் பார்க்கிறீர்கள்.தன்னுடைய முகத்தில் பிரதிபலிக்கும் இதய வேதனையையும் உணர்ச்சியின்மையையும் அவன் சவரம் செய்கிறான்.அவனுடைய குழிந்த கன்ன எலும்புகளிலும் விழிப்பள்ளங்களிலும் மரணத்தின் படலங்கள் விழுந்திருக்கின்றன.அவன் மீண்டும் மீண்டும் சவரம் செய்கிறான்.காலத்தைத் தோற்கடிப்பதற்காக அவன் அதைத் தொடருகிறான்.


கடைசியான போது ஆல்பர்ட்டின் முகத்திலும் உதடுகளிலும் மின்னியிருந்த புன்னகை மறைந்தது.அவனால் சிரிக்கவோ ஏதாவது பேசவோ முடியவைல்லை. தன்னுடைய புத்தகங்களையெல்லாம் அவன் சுரண்டித்தின்றிருந்தான். பயணிகளில் சிலர் அந்த செத்துப்போன மனிதனிடம் சௌக்கியங்கள் விசாரித்து இன்னொரு உலகத்துக்குக் கடந்து சென்றார்கள்.பிரிட்டன் அப்போதும் அவன் மூளைக்குள்ளே ஒரு பழைய கனவாக மிஞ்சியிருக்கிறது….


விமான நிலையப் பணியாளர்களுக்கு ஆல்பர்ட் ஒரு தொந்தரவாக மாறியிருந்தான்.அவனுக்கு இலவசமாக வவுச்சர்கள் கொடுக்கும் வழக்கதையும் அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள்.அவனுடைய இதயத்தில் இளங்காற்றும் முடிந்துபோயிருந்தது.ஆல்பர்ட்டின் வாழ்க்கை நிச்சலனமல்லாமல் வேறு என்ன ?



ஒரு விடியற்காலையில் பத்திரிகையில் குளியலறைக் கண்ணாடிக்குக் கீழே விழுந்துகிடக்கும் ஆல்பர்ட்டை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவனுடைய தாடையெலும்புக்கு கீழே கழுத்து நரம்புகளில் ரத்தம் கசிந்திருக்கிறது. அவனுடைய சூனியமான கண்கள் மேற் சுவர்களில் பதிந்திருக்கின்றன.வினோதச் செய்திகளின் பத்தியில் வியப்பூட்டும் ஒரு கொலையையோ திவ்வியமான ஒரு காதல் கதையையோ நீங்கள் தேடுவதாக இருக்கலாம்.விவாதிப்பதற்காக , மெய் சிலிர்ப்புடன் புன்னகை பூப்பதற்காக , சமையலறையிருந்து கண்ணீரைத் துடைத்துக்கொள்வதற்காக ஒரு கதையை நீங்கள் எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.


அநேக வருடங்களுக்குப் பிறகு அந்த விமான நிலையத்தின் சிவப்பு பெஞ்சில் இறந்துபோன ஆல்பர்ட்டின் களிம்பேறிய மஞ்சள் நிற முகச்சாயலில் இன்னொருவன் இடம்பிடித்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.அவன் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறான்.பசியிலும் தனிமையிலும் வதங்கி துக்கத்தின்மஞ்சள் முகத்துடன் அவன் பிரிட்டனைக் கனவு காண்கிறான். ஒருவேளை , உலக முடிவுவரை அங்கே அதுபோல அநேக மனிதர்களை நீங்கள் பார்க்க நேரலாம்.

வரைபடத்தில் எங்கே பிரிட்டன் என்று தேடுவதற்கிடையில் படத்தின் கோடுகள் அவர்களது தலையெழுத்துபோல சிக்கலாகின்றன.ஒருவேளை அந்த கண்டமே பூமியின் மறுபக்கம் எங்காவது இருக்கலாம் என்று அவர்கள் யோசிக்கலாம்.அல்லது அந்த இடம் வேறு ஏதாவது கிரகமாக இருக்கலாம் என்று நினைப்பார்களாக இருக்கலாம்.இந்த உலகமும் மறக்கப்பட்ட கண்டங்களின் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு எதிராக மறக்கப்பட்ட நிலைப்பாட்டைக் கைக்கொள்ளுகிறார்கள்.

கடந்துபோகும் நூற்றாண்டுகளுக்கிடையில் மகா நகரங்களில் விமான நிலையங்களிலும் ரெயில்வே ஸ்டேஷன்களிலும் விசாவும் டிக்கெட்டுமில்லாமல் அவர்கள் நிரந்தரமாக வசிக்கிறார்கள் – எவருமில்லாதவர்களாக , பசியில் நடுங்கிக்கொண்டு.பிச்சையாகக் கிடைக்கிற வவுச்சர்கள் மூலம் பர்கரும் பிட்சாவும் சாண்ட்விச்சும் தின்று கொண்டு அந்த உலகக் குடிமக்கள் கனவு காண்கிறார்கள்.


ஆசிரியர் பற்றிய குறிப்பு

தாமஸ் ஜோசப்

எர்ணாகுளம் மாவட்டம் ஏலூரில் 1954 இல் பிறந்தவர். ஆலுவாய் பாக்ட் டவுன் ஷிப் பள்ளியிலும் செயிண்ட் பால் கல்லூரியிலும் கல்வி கற்றார்.மனைவி ரோசிலி , குழந்தைகள் தீப்தி மரியா , ஜெஸ்ஸே ஆகியோருடன் ஆலுவாயில் வசிக்கிறார்.

மிக வித்தியாசமான கதைகளை எழுதியிருப்பவர் தாமஸ் ஜோசப்.அதற்கான அங்கீகாரம் மிகக் குறைவாகவே பெற்றிருப்பவர். 1995 இல் கதா விருதும் , 96 இல் எஸ்.பி.டி.விருதும் பெற்றார்.உலகமுடிவுவரை என்ற இந்தக் கதை கே.ஏ.கொடுங்ஙல்லூர் விருதைப் பெற்றது.


ஓர் ஆங்கில நாளிதழில் பிழை திருந்துநராகப் பணியாற்றி வருகிறார்.

COCKTAIL - 18 ++ - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://cdn.biharprabha.com/wp-content/uploads/2012/05/Cocktail.jpg?ba4058

உள்ளூர்ல 1008 மாப்பிள்ளைங்க மேரேஜ்க்கு ரெடியா இருந்தாலும் இந்த பொண்ணைப்பெத்தவங்க எல்லாம் ஃபாரீன் மாப்ளைதான் வேணும்னு அடம் பிடிக்கறது ஏன்னு எனக்கு தெரியலை.. எல்லாம் ஒரு அந்தஸ்துக்குத்தான் போல.. மாப்ளை ஃபாரீன்னு சொல்லிக்கறதுல ஒரு பெருமை.. அதனால ஃபாரீன்காரன் எந்தப்பொண்ணையாவது ஏமாத்துனதா நியூஸ் வந்தா  பொண்ணு கிடைக்காத பேச்சிலர்ஸ் எல்லாம் நல்லா வேணும் அப்டினு தான் நினைப்பானே ஒழிய பரிதாபப்படமாட்டான்.. அந்த மாதிரி ஃபாரீன் மாப்பிள்ளையால அல்வா கொடுக்கப்பட்ட அல்வாத்துண்டு உதட்டழகி தான் டயானா பெண்ட்டி ( நல்ல வேளை டயானா பேண்ட்டி இல்லை )



ட்விட்டர்ல அக்கவுண்ட் வெச்சிருக்கற வெட்ட வெளிச்ச அழகி, தோலாடை தான் என் மேலாடை என்ற கொள்கை வைத்திருக்கும் ப்பூனம் பாண்ட்டே காஆஆட்டிய வழியில் நடந்து செல்லும் ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா தான் தீபிகா படுக்காத கோனை நேரா படு..கேனை பாப்பாவோட கொள்கை கதவைத்திற எல்லாமே திறந்துதான் கிடக்கு.. பீர் , பிராந்தி எங்கே தட்டுப்பட்டாலும் மடக்கு என்ற சரியான ஜாலி குடிகாரி..


தீபிகா வீட்டுல டயானா தங்கி இருக்கு..  படம் பார்க்கற சில ஆடியன்ஸ் இது ஏதோ ஃபயர் கதை போலன்னு முடிவு பண்றப்போ தான் ஹீரோ வர்றார்.. இவர் என்ன மாதிரி கேரக்டர்னா  உலகமே அழிஞ்சாக்கூட  எதைப்பற்றியும் கவலைப்படாம தான் உண்டு தன் கடலை உண்டுன்னு ரோட்ல போற வர்ற பொண்ணுங்க கிட்டே எல்லாம் கடலை போடும் கட்டதுர மாதிரி.. கிடச்ச ஃபிகரை மடக்கி போடு தான் இவர் கொள்கை..


ஹீரோ, 2 ஹீரோயின் நல்லா பழகறாங்க.. ஹீரோவின் அம்மா தான் டிம்ப்பிள் கபாடியா.. விக்ரம் படத்துல மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வான்னு சரசமா பாட்டு பாடுனாங்களே அவங்களை அம்மா கேரக்டர்ல பார்ப்பதா? என யாரும்  சங்கோஜப்படத்தேவை இல்லை.. நமக்குத்தான் படத்துல வெண் பொங்கல், சர்க்கரைப்பொங்கல்னு 2 இருக்கே..

டயானா அடக்க ஒடுக்கமா இருக்கறதால அவ தான் ஹீரோவோட ஆளுன்னு நினைக்கறாங்க.. ஆனா உண்மையில் ஹீரோ மேத்தமேட்டிக்ஸ் பண்ணறது தீபிகாவை..


டிம்ப்பிள் கபாடியா  அடிக்கடி உங்க ஜோடிப்பொருத்தம் பிரமாதம்னு சொல்லி சொல்லி டயானா - ஹீரோ 2 பேருக்கும் எப்படியோ லவ் ஆகிடுது ( எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்க.. உங்க ஆள் காதுல ப்டற மாதிரி அடிக்கடி ஆளை வெச்சு ஜோடிப்பொருத்தம் செம அப்டினு சொல்ல வைங்க,.,. ஒர்க் அவுட் ஆகிடும்.. )


 இப்போ என்ன பிரச்சனைன்னா ஆல்ரெடி கரெக்ட் பண்ணுன தீபிகாவை மேரேஜ் பண்றதா ? புதுசா கரெக்ட் ஆன டயானாவை லவ்வறதா? இதுதான் ஹீரோவுக்கு தலையாய பிரச்ச்சனை.. ஹீரோ கடைசி கடைசியா யாரை மேரேஜ் பண்ணிகிட்டார்? யாரை கழட்டி விட்டார்? ஐ மீன் மேரேஜ் பண்ணாம நைஸா கழட்டி விடுதல்.. என்பதை வெள்ளித்திரையிலோ லீவ் கிடைக்கற சனி ஞாயிறுஹ்ட்திரையிலோ காண்க..



படத்துல முதல்ல நம்மை கவர்வது டயானா  தான்.. ( நாம எந்தக்காலத்துல ஹீரோவை ரசிச்சோம்?) கதைப்படி பாப்பாவுக்கு 25 வயசு.. ஆனா நேர்ல 24 3/4 தான் சொல்ல முடியும்.. பாப்பாவோட முகச்சாயல் கொஞ்சம் பாய்ஸ் புகழ் ஜெனிலியா  கொஞ்சம் அசின் எல்லாம் கலந்து செய்த கலவை.. அவங்க உதடு பார்த்தா கட் பண்ணி தனியா எடுத்து வெச்ச கோதுமை அல்வா மாதிரி இருக்கு. ஆனா. கண் ரொம்ப சின்னது.. யாரும் மனம் கலங்க வேண்டாம்.. கண் மட்டும் தான் சின்னது.. ஐ மீன் அவங்க உதடு, கன்னம் எல்லாம் ஓக்கேன்னு சொல்ல வந்தேன்..



http://www.filmitadka.in/images/joomgallery/originals/movies_15/cocktail_reviews__wallpapers__news__videos_1078/cocktail_movie_wallpapers_20120628_1729343616.jpg

படம் பூரா இவங்களுக்குத்தான் நடிக்க ஸ்கோப் அதிகம்.. ஹீரோவும் , தீபிகாவும் நெருக்கமா இருப்பதை பார்க்க நேரிடுகையில் இவர் காட்டும் அவஸ்தை அழகுக்கவிதை.. ஹீரோவின் அம்மா அடிக்கடி அவரை மருமகளே  என சிலாகிப்பதில் அவர் மனம் மெல்ல மெல்ல ஹீரோ பக்கம் சாய்வதை நுணுக்கமான உணர்வுகளால், முக பாவனைகளால் வெளிப்படுத்தி இருக்கார்..



அடுத்தது நம்ம “காட்டு” தர்பார் கட் அழகி அதாவது சென்சார் கட்டில் இருந்தும் தப்பிய அழகி.. இடைவேளைக்குப்பின் இவர் ஒரே ஒரு சீனில் போனா போகுதுன்னு புடவையில் வர்றார்.. அழகு அள்ளிக்குது.. ஆனா மனசு அதுல லயிக்கலை.. ஏன்னா பட ஓப்பனிங்க்ல இருந்து எல்லாத்தையும் கிட்டத்தட்ட ஃபுல்லா காட்டிட்டு அப்புறம் முழுக்க நனைஞ்ச பின் முக்காடு போட்டு வாட் யூஸ்?


ஹீரோ முகச்சாயலில் நம்ம ட்விட்டர் எம் ஜி ஆர் ரவிக்குமார் மாதிரியும் கேரக்டர்ல ஜப்பான் ரவி மாதிரியும்.. பொண்ணுங்க கிட்டே கடலை போடும் அழகே அழகு. ஹாய் குட் மார்னிங்க், சாப்டாச்சா? இன்னைக்கு என்ன குழம்பு? ஹேவ் எ நைஸ் டே அப்டினு பிட்டைப்போட்டே காலத்தை ஓட்டும் கேரக்டர் ஹீரோவுக்கு..டிம்பிள் அதாவது அம்மா கேரக்டர் எண்ட்ரி ஆகும் இடங்கள் எல்லாம் காமெடி கத களம் அதகளம் தான்.

டிம்ப்பிள் கபாடியா,பொமான் இரானி, ரன்தீப் 3 பேரும் சின்ன கேரக்டர்ல வந்தாலும் அவங்க வேலையை கன கச்சிதமா முடிச்சுட்டுப்போறாங்க..


மனம் கவர்ந்த வசனங்களில் நினைவில் நின்றவை 




http://www.filmitadka.in/images/joomgallery/originals/movies_15/cocktail_reviews__wallpapers__news__videos_1078/cocktail_movie_wallpapers_20120628_1730890647.jpg


1. ஏய்.. நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?

பாப்கார் சாப்பிட்டுட்டு இருக்கேன், உன் கிட்டே கடலை போட்டுட்டு இருக்கேன்.



2.  ஐ ஹேட் யூ

 ஐ லவ் யூ, அண்ட் ஐ லவ் தட் ஆட்டிடியூடு



3. ஏய்.. உன் பேண்ட் எங்கே? ஏன் வெறும் டாப் மட்டும் போட்டுட்டு இருக்கே?

வீட்ல , ரூம்ல பேண்ட் போடாட்டி என்ன?

அவன் இருக்கான்..?

பார்த்துட்டு போறான்.. ( ஆஹா! பொண்ணுன்னா இதான்யா பொண்னு)




4.  உன் அழுகையை பார்த்தா இப்போ ஒரு மெலோ  டிராமாவை ஸ்டார்ட் பண்ணப்போறியோன்னு டவுட்டா இருக்கு..



5.  நீ எல்லாம் என்ன ஆளு.. ?  எப்போ கேட்டாலும் இவளை மேரேஜ் பண்றேன், அவளை மேரேஜ் பண்றேன்னு தட்டிக்கழிச்சுட்டே இருக்கே? அடிக்கடி கட்சி மாறிட்டு இருக்கே..



6. ஹீரோவின் அம்மா ஃபோனில்  - நீ அவளை பார்த்தியா?


ஹீரோவின் அம்மாவின் தம்பி  நேரில் ஹீரோவிடம் -நீ அவளை பார்த்தியா?



ஹீரோவின் அம்மா ஃபோனில்  -  எப்படி இருக்கா?



ஹீரோவின் அம்மாவின் தம்பி  நேரில் ஹீரோவிடம் - எப்படி இருக்கா?



7. ஹீரோவின் அம்மா - அடப்பாவி, இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஒரே ரூம்ல 2 பொண்ணுங்களா? இதான் நீ மேரேஜ் பண்ணிக்கப்போற லட்சணமா?



8. இங்கே பாருங்க.. இந்த டிராமா, ஆக்டிங்க் எல்லாம் எனக்கு ஒத்துவராது.. அதுவும்  லவ் பண்ற மாதிரி, மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொல்ற மாதிரி எல்லாம் நடிக்க முடியாது, பல ரிஸ்க் அதுல இருக்கு.. என்னைக்கு இல்லாட்டியும் ஒரு நாள் அது டேஞ்சர் தான்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4fL7BAVxjchpOu4HYg_lBJHkVdQpVXz5-zCjYd38bbxQRsbiKG600FKzLn3K4Ie08MdLicyOhu-4v0XsicloZEkH0TpwEcZVo-g9LL8SS6LDIPKNCqVRtMcuOJMk0nFVreuK9SEC8caFw/s1600/cocktail_movie_wallpapers_20120628_1229766595.jpg

9.  சரி.. நீங்க  சொல்ற மாதிரி நடிக்கறேன், ஆனா பிடி பட்டுட்டா? மாட்டிக்கிட்டா?

 ம்க்கும், நீ என்ன ஜேம்ஸ்பாண்டா? மாட்டிக்கிட?



10.  நான் சொனதை எல்லாம் நைட் டைம்ல தனியா இருக்கும்போது யோசனை பண்ணி காலைல  உன் பதிலை சொல்லு



11ஹீரோ - நீ என்னை லவ் பண்றே.. நான் அவளை லவ் பண்றேன்.. அவளும் தான் என்னை லவ் பண்றா


தீபிகா - வாவ்!! என் கிட்டே சொல்லவே இல்லை?



 அதான் இப்போ சொல்லிட்டனே?



12. உங்க 2 பேர்க்கு நடுவுல நான் வர்றதை நான் விரும்பலை.. கோ ஆன் யுவர் வே.. என்னை விட்ருங்க..



13. என் மனசு மாறிடுச்சு.. என்னை உன் கூட கூட்டிட்டு போ.. நமக்குன்னு ஒரு உலகம், நமக்குன்னு ஒரு குடும்பம்.. வேணும்..



14. நான் யாருக்கும் என் அந்தர் ஆத்மாவை ( உள் மனசு?) காட்டுனதில்லை.. உனக்கு மட்டும் உணர்த்தனும்னு தோணுச்சு..  எனக்கு ஒரு சான்ஸ் குடேன்..



15. தீபிகா - எனக்கு இப்போ பாத்ரூம் போகனும் போல இருக்கு.. ஆனா நான் மப்புல இருக்கேன்.. எந்திரிக்கக்கூட முடியல.. ப்ளீஸ், எனக்குப்பதிலா நீ போய்ட்டு வந்துடறியா?



16. அவ என்ன சொல்ல வர்றா? புரியல..

உன்னைப்பார்க்க விரும்பலையாம்..

 அதை அவளையே வந்து சொல்லச்சொல்லு..



17. நான் சொல்றதை கேட்பியா? என் வார்த்தைக்கு மதிப்புத்தருவியா?

எஸ் எஸ்.. சொல்லு, உனக்காக நான் என்ன செய்யனும்?

என்னை விட்டு விலகி இரு,, என் கண்லயே தென்படாத..

ஐ ஆம் நான்  எ டாய்.. ( நான் ஒண்ணும் பொம்மை கிடையாது) உன் இஷ்டத்துக்கு விளையாட.




18.  உனக்கு என்னை புரியுதா இல்லையா? ஐ மீன் நீ என்னை நல்லா புரிஞ்சுக்கிடியா ?இல்லையா?


 இல்லை

 அவ்வ்வ்




http://media1.santabanta.com/full1/Bollywood%20Movies/Cocktail/cocktail-6a.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்.

1. ஹீரோ ஏர்போர்ட்ல ஏன் அத்தனை பேர் முன்னால ஹீரோயின் கால்ல விழறார்.. ?அப்படி யாராவது விழுவாங்களா? இத்தனைக்கும் ஹீரோ கதைப்படி ஒரு ப்ளே பாய்.. பல பேரை பார்த்தவன்.. அவர் காதலுக்காக யாசித்து ஒரு பெண்ணின் காலில் விழுவதை ஏற்றுக்கொள்ள முடியல

2. A WALK IN THE CLOUDS (1995) = பூவேலி (தமிழ்-கார்த்திக் ) =

பிருந்தாவனம் ( தெலுங்கு -ஜூனியர் NTR) =

காக்டெயில் ( ஹிந்தி-ஷைப் அலிகான்)- இதை ஏன் நீங்க மென்ஷன் பண்ணலை? டைட்டில்ல க்ரெடிட் கொடுத்திருக்க வேண்டாமா?


3. படத்துல 2 ஹீரோயின் இருந்தா  யார் கூட சேர்த்து வைக்கறதுன்னு தெரியாம க்ளைமாக்ஸ்ல யாரோ ஒரு ஹீரோயினை சாகடிப்பது, அல்லது ஒரு ஹீரோயினுக்கு விபத்து நடப்பது போல் காட்டுவது 1990 கற்பனைகள்..


4. தன் கண் முன்னால வேறொரு பொண்ணோட குஜாலா இருக்கும் ஒரு ஆணிடம் ஒரு பெண்ணுக்கு காதல் வருமா? இதே போல் தான் தன்னையும் விட்டுட்டு வேற ஒரு பெண் பின்னால் போவான் என்ற சந்தேகம் பெண்ணுக்கு எழாதா?


5. தீபிகா படுகோனே என்னதான் அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக இருந்தாலும் அறிமுகம் இல்லாத புது ஆட்கள் வீட்டுக்கு வந்த போதும் ஒரே ஒரு பாண்ட்டிஸ், ஒரு சட்டை மட்டும் அணிந்து ஹாலில் சோபாவில் சுதந்திரமாக அமர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியலை.. இதில் காமெடி என்ற பெயரில் காலை நல்லா குறுக்கிக்கோ என ஹீரோவின் மாமா சொன்ன பிறகு அவர் காலை அகட்டி வைக்காமல் இருக்கார்.. பெண்ணிய வாதிகள் போர்க்கொடி தூக்காமல் விட்டால் ஆச்சரியம்..


6. ஒரு சீன்ல ஹீரோ தீபிகா வை பீச்ல கட்டிப்பிடிச்சு லிப் கிஸ் அடிக்கறார்.. அப்போ அவர் அம்மா வர்றாங்க. உடனே ஹீரோ தண்ணீரில் மூழ்கிய தால் தான் அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்வதாக அம்மாவிடம் பீலா விடுறார்.. அதை அம்மா நம்பறாங்க.. படு கேனத்தனமான சீன் இது,.,. ஏன்னா அவங்க உடம்பு காய்ஞ்சு போய்க்கிடக்கு.. தண்ணீரில் மூழ்கிய பாடின்னா அங்கங்கே நீர்த்திவலைகள் இருக்க வேண்டாமா?



http://www.dailyfunonline.com/wp-content/uploads/2012/06/Diana-Penty-Hot-8.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்


1.  ஹீரோவின் மம்மி டிம்ப்பிள் கபாடியாவின் காலை அமுக்கும் வேலைக்காரப்பெண்ணாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன் பா.. ஒரே ஒரு சீன் வந்தாலும் கண்ணுக்குள்ளே நிக்கறார்..


2. ஹீரோவின் அம்மாவுடன் செல் ஃபோனில் பேசிய பின் ஆஃப் பண்ணி விட்டார் என நினைத்து ஹீரோவின் மாமா டிம்பிளை கலாய்த்து பேசுவதும் ஃபோன் ஆனில் இருக்கு, அந்த லைனில் எல்லாத்தையும் அவர் கேட்டுடே தான் இருக்கார் என்பதை உணர்ந்ததும் அவர் வழிவதும் நல்ல காமெடி..


3. Daaru-Desi Daaru Desi"   பாடல் செம ஹிட்.. அது போக எல்லா பாடல்களூமே படத்தில் கேட்கற மாதிரிதான் இருக்கு. சேட் வாலாக்கள் கிளாப்ஸ் அடிச்சு படத்தை ரசிக்கறாங்க..


4. டயானாவை ஹீரோ  தன் அம்மா முன் ஜப்பானியர் பாணியில் வணக்கம் போட வைக்கும் சீன்


5. தீபிகா தண்ணீரில் மூழ்கியதாக டாவ் விட்டதும் டிம்ப்பிள் ஹீரோவை விலக்கி அவர் லிப் டூ லிப் வைத்து உறிஞ்சுவது கலக்கல் காமெடி


சி.பி கமெண்ட் - மும்பைல இந்தபப்டம் ஹிட் அடிச்சுடும், ஆனா நம்மூர்ல  பெரிசா எடுபடாது.. டைம் பாஸ்க்கு பார்க்கலாம்.. தீபிகா படுகோனே சீனுக்காக பார்க்கலாம்.. மற்றபடி ஒரே டைம்ல பல ஃபிகர்ங்களை கரெக்ட் பண்றது எப்படி? என தெரிஞ்சுக்க நினைக்கறவங்க பார்க்கலாம்.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்..






http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_vertical/article-images/851171-01-02.jpg.crop_display.jpg

பாடல்கள்


Track listing
No. Title Singer(s) Length
1. "Tumhi Ho Bandhu"   Neeraj Shridhar, Kavita Seth 4:42
2. "Daaru-Desi Daaru Desi"   Benny Dayal, Shalmali Kholgade 4:30
3. "Yaariyan"   Mohan Kanan, Shilpa Rao 6:18
4. "Second-Hand-Jawani"   Miss Pooja, Neha Kakkar, Nakkash Aziz 4:03
5. "Tera Naam"   Javed Bashir, Nikhil D'Souza, Shefali Alvares 3:39
6. "Luttna Luttna"   Masuma Anwar, Sahir Ali Bagga, Anupam Amod 5:01
7. "Jugni"   Arif Lohar, Harshdeep Kaur 6:57
8. "Yaariyan (Reprise)"   Sunidhi Chauhan, Arijit Singh 5:14
9. "Lootna (Version 2)"   Masuma Anwar, Sahir Ali Bagga, Anupam Amod 4:44
10. "Tera Naam (Remix)"   Javed Bashir, Nikhil D'Souza, Shefali Alvares 4:11
11. "Main Sharabi"   Yo Yo Honey Singh, Imran Aziz Milan 4:25   

Directed by Homi Adajania
Produced by Saif Ali Khan
Dinesh Vijan
Written by Imtiaz Ali
Sajid Ali
Starring Saif Ali Khan
Deepika Padukone

Diana Penty
Music by Pritam
Cinematography Anil Mehta
Editing by Sreekar Prasad
Distributed by Illuminati Films
Eros International
Release date(s)
  • July 13, 2012
Running time 146 minutes
Country India
Language Hindi
Budget INR30 crore (US$5.99 million)
Box office INR36 crore (US$7.18 million) nett (3 days domestic collection) 

   

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 15

ட்விட்டர் நண்பர் அனுப்பிய மடல் - அண்ணே எனது கேள்விகள் (மெயில் அனுப்ப வழி இல்லை, அதான் இங்கே, கேள்விகளை எடுத்து கிட்டு இங்கே இருந்து அழிச்சிடுங்க) [Kannamoochi (Vijay) in Twitter]


இதுக்கெல்லாம் ... டக்கு டக்கு ன்னு ஒன்னு ரெண்டு வார்த்தைல பதில் சொல்லணும் ....

சி.பி - டக் டக் ( duck)னா வாத்து மாதிரி பதில் சொல்லனுமா?



1. ஆஸ்கர் அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போல நீங்கள் கொடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?




வழக்கமா எனக்கு வாங்கித்தான் பழக்கம் , கொடுத்து பழக்கம் இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன் - அட்ராசக்க அட்ராக்‌ஷன் அவார்ட்ஸ்


2. உங்கள் முதல் திரைப்படத்தின் தலைப்பு என்று எதவாது யோசித்து வைத்துளீர்களா?


கதை, திரைக்கதை தயார்- கோவை ப்ரீத்தி கொலை வழக்கு - உண்மை சம்பவம்- அமரர் சுஜாதாவின் காயத்ரி நாவல் போல் சாயல் இருக்கும், ஆனால் 100% கோவையில் நடந்த உண்மைச் சம்பவம்.. சிறுகதையாக ஆல்ரெடி எழுதி இருக்கேன் http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html



3. ஈரோட்டில் உங்களுக்கு பிடித்த தியேட்டர்?


ஆனூர் தான். ஏன்னா ஏ சி போடும் ஒரே தியேட்டர் ஈரோட்ல அதுதான். அபிராமி முதல்ல சூப்பரா இருந்துச்சு. இப்போ நிர்வாகம் சரி இல்லை, ஏ சி போடுவதே இல்லை, அதே போல் ஃபேனை அடிக்கடி ஆஃப் பணிடுவாங்க. கேண்ட்டீனில் கொள்ளை லாபம் அடிக்கறாங்க 



நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில் ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில்  ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....


4. தாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம்?


எனக்கு சரியா நினைவில்லை, எங்கப்பா கிட்டே கேட்டபோது ஏதோ ஒரு எம் ஜி ஆர் படத்துக்குத்தான் கூட்டிட்டுப்போனதா சொன்னார்.. அநேகமா அது மலைக்கள்ளன் அல்லது மதுரை வீரன் என நினைவு. அப்புறம் வயசுக்கு வந்த பின் பார்த்த முதல் கில்மா படம் சென்னிமலை அண்ணமார் - பவுர்ணமி ராத்திரியில் ரதி தேவி ( அப்போ பகல்ல மூதேவியா?).. இந்தப்படத்துல இருந்துதான் கேரளா பெண்கள் குளீப்பதில் எவ்வளவு ஆர்வம் மிக்கவர்களாக இருக்காங்க என்ற ஜெனரல் நாலெட்ஜை அறிந்தேன், படத்துல செம சீன் இருந்துது






5. பிடித்த விளையாட்டு?



செஸ் தான். பாரதியார் யுனிவர்சிட்டி செஸ் சாம்ப்பியனாக 3 வருடங்கள் இருந்தேன்.. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ்க்கு போகும்போது என் கால்கள் முதலில் செல்வது விளையாட்டு மைதானம்.. அங்கே எப்பவும் ரெடியா 3 குரூப் செஸ் ஆடிக்கிட்டே இருப்பாங்க.. அங்கே போனா டைம் பாஸ் ஆவதே தெரியாது.. 12 பேர் சேர்ந்து ஆளாளுக்கு ஐடியா குடுப்பாங்க.. நான் ஒருத்தனே 12 பேர் ஐடியாவுக்கும்  யோசிக்கனும்././ நல்லா டெவலப் பண்ணி இருந்திருக்கலாம்.. எனக்கு செஸ் கேம் யோசிச்சு யோசிச்சு தலை ஹீட் ஆச்சு// அதனால அதை விட்டுட்டேன்././  இப்போ செஸ்க்கு பதிலா அதே அலைவரிசையில் உள்ள இன்னொரு விளையாட்டு அதுவும் இண்டோர் கேம் தான்.. ஐ மீன் கேரம்


6. நீங்கள் நன்றாக சமைக்க கூடிய உணவு?



தக்காளி சாதம், ஆனியன் தோசை .( வெங்காயத்தை முதல்லியே தாளிச்சு வெச்சுக்குவேன் ) சமையல்ல நான் ஸ்பெஷலிஸ்ட்.. அதே போல் ஒரு உணவை அல்லது சாம்பாரை ருசித்துப்பார்க்காமல் வாசம் நுகர்ந்தே அதுல உப்பு , உரைப்பு எல்லாம் சரியா இருக்கா? என்பதை உணர்வதில் திறமை  உண்டு.. எந்த ஹோட்டலுக்குப்போனாலும் உணவில் நிறை இருந்தால் அதை அனைவர் முன்னிலையில் மாஸ்டரை புகழ்ந்தும், குறை இருந்தால் அவரிடம் தனிமையில் அழைத்தும் சொல்வேன்..



7. வைரமுத்து / கண்ணதாசன் - உங்கள் சாய்ஸ் ?


நம்ம காலகட்டத்துக்கு வைரமுத்து ஒரு லெஜண்ட் என்றாலும் கண்ணதாசன் சாதனைகளை மறந்துவிடக்கூடாது.. எதுக்கு பிரிக்கனும்? நான் எல்லாரையும் ரசிப்பேன்.. எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என திறமை எங்கிருந்தாலும் அங்கே ரசிப்பு உண்டு.. வைரமுத்து பாட்டில் என்னை கவர்ந்தது - கண்ணுக்கு மை அழகு , கண்ணதாசன் - பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்



8. நீங்கள் எதனை கண்டு அதிகம் பயப்படுவீர்கள்?


சாலை விபத்துக்கள் தான்.. ஏன்னா மனிதனின்  எதிர்பாராத மரணத்துக்கு சாலை விபத்துக்கள் தான் காரணம். நோய் மூலம் வரும் மரணத்துக்கு மனிதன் பொறுப்பாகிறான்.. குடி, புகை, பெண்கள் சகவாசம் என அவனும் அதற்கான காரணி ஆகிறான், தற்கொலை , கொலைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறான்.. வயோதிகத்தின் காரணமாக மரணம் வந்தால் நோ பிராப்ளம்.. அது இயற்கையின் நியதி.. 
 ஆனால் இந்த தவறுமே செய்யாமல் மற்றவர்கள் அஜாக்கிரதையால் விபத்து நிகழும்போது சம்பந்தமே இல்லாமல் நடக்கும் மரணங்கள் என்னை பாதிக்கின்றன, பயம் கொள்ளச்செய்கின்றன..


9. அரசியலில் நுழையும் எண்ணம்?

 சுத்தமா கிடையாது, இந்த விஷயத்தில் நான் துக்ளக் சோ போல் இருக்க ஆசைப்படறேன்.. மக்களுக்கு அரசியல்வாதிகளின் கறுப்புப்பக்கத்தை அவ்வப்போது அறிமுகம் செய்து வெச்சா போதும்.. ஆனா அவரைப்போல் பி ஜேபி , அதிமுக அனுதாபி அல்ல.




10. தாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்து ஏமாந்த திரைப்படம்?


ஆபாவானனின் மூங்கில் கோட்டை - வரும் வரும்னாங்க. வராமயே போயிடுச்சு.. ஊமை விழிகள் மெகா ஹிட்டின்  2ம் பாகமாக வந்திருக்க வேண்டியது, ஏதோ சில காரணங்களால் வராம போயிடுச்சு. மற்றபடி எந்த படத்தையும் அதிகமா எதிர்பார்ப்பதில்லை.. ஏன்னா தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றன.. 



 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  
 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html   டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html   டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html   டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html   டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html   டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html   டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html   டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
ஒளியிலே தெரிவது..........? தேவதையா?????

ஐஸ்கிரீம் கடை, ஒயின் ஷாப் என்ன வித்தியாசம்? (ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

ஒரு தாயின் கவிதை...

பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்.
கல், மண் சுமந்து கல்லூரியில் சேர்த்தேன்,
வெய்யிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்.
மகனே! நீயோ என்னை எளிதில் சேர்த்து விட்டாய்..,
முதியோர் இல்லத்தில்.


............



2. நீ பெரியவன் ஆகி என்ன பண்ணப் போறே?

“கல்யாணம்”.

அது இல்ல..., நீ என்னவா ஆக விரும்புறே?

“கணவனா”...,

அதில்ல.., உனக்கு லைஃப்ல என்ன கிடைக்கனும்ன்னு எதிர்பார்க்குறே?


“ஒயிஃப்”

ஓ நோ..., உன் பேரண்ட்ஸ்க்கு என்ன பண்ணப் போறே.?


“மருமகளை தேடித்தரப்போறேன்”

ஸ்டுப்பிட்!  உன் பேரண்ட்ஸ் உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பாங்க?

“பேரக்குழந்தையை”

ஐயோ ,ஐயோ, உன் வாழ்வின் லட்சியம்தான் என்ன?

“நாம் இருவர்..., நமக்கு இருவர்”.

............



3. காதல் என்பது ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வரலாறு ஆகிறது.
ஆனால், ஒரு யுவதியின் வாழ்க்கையில் ஜஸ்ட் ஒரு எபிசோட் ஆகிறது.
.....




4.பசங்க ஏன் லவ் பண்றாங்க?


ஃபிரண்ட்ஸ் இருக்காங்க எப்படியும் சேர்த்து வெச்சிடுவாங்க அப்படினுதான்.

 பொண்ணுங்க ஏன் லவ் பண்றாங்க?


பேரண்ட்ஸ் இருக்காங்க எப்படியும் பிரிச்சுடுவாங்கன்னுதான்.


..............


5. முகம் பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் பேலன்ஸ் இல்லாத மொபலை வைத்திருந்தாலும் நம் உண்மையான அன்பு எஸ்.எம்.எஸ்ல தொடரும்.
..........

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.



6.வியர்வை துளிகளும், கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவைதான் வாழ்க்கையின் இறுதியில் இனிப்பாக இருக்கும்.
.....



7. நல்லவனாக இரு.ஆனால், அதை மற்றாவர்களுக்கு நிரூபிக்க முயலாதே.



.....


8. நிரந்தர பகையும் இல்லை...,
நிரந்தர நட்பும் இல்லை...,
 நிரந்தரமாய் ஊழல் மட்டும்...,
மானங்கெட்ட அரசியல்..., பெயர்தான் மக்கள் ஆட்சி...,
ஆனால் நடப்பதோ மாக்கான்களின் ஆட்சி...,
....




9. அன்பே! நீ ஒரு நைட்டி போட்ட ரோஜா...,


அப்போ நீங்க?


 கட்டிங்க் போட்ட ராஜா.


.......




10. அரேஞ்ஜ்டு மேரேஜ்னா மேரேஜ் செலவு ரூ.6லட்சம்,  நகை 4 லட்சம், மொத்தம் 10லட்சம் செலவு ஆகும். லவ் மேரேஜ்னா ரூ100க்கு ஸ்டாம்ப் பேப்பர், ரூ.20 நோட்டரி, ரூ 50க்கு மாலை, ரூ 10க்கு ஃபோட்டோ. மொத்தம் 180 தான் செலவு. அதனால அரேஞ்ஜ்டு மேரேஜை அவாய்டு பண்ணுங்க். பெற்றோர் பணத்தை மிச்சம் பண்ணுங்க.




.....




11.  ஒரு உயிரை நேசிப்பது நிஜம் என்றால் அதை பறவை போல் பறக்க விடு..., அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வரும்.



.........
12.  ஒரு பெண்ணின் உயர்வுக்கு காரணம் என்ன?


சயிண்டிஸ்ட் மாதிரி யோசிக்காதீங்க..., ஹை ஹீல்ஸ்தான்.


............




13. நேற்று ஜெயித்தவன் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால், நேற்று தோற்றவன் தினமும் தோற்பதில்லை.
.....




14. வாடிப்போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது. வாழப்போகிற நாம் ஏன் அழ வேண்டும்..
.............




15.  என்னைப் பார்த்த உடனே பூக்கும் பூக்கள் உன்னிடம் மட்டுமே உண்டு. அன்பு.., சிரிப்பு.
.....




16.என்னதான் கேர்ள்ஸ் வெள்ளையா இருந்தாலும் அவங்க மனசு கறுப்பு. என்னதான் பசங்க கறுப்பா இருந்தாலும் அவங்க மனசு வெள்ளை. By கறுப்பா இருந்தாலும் களையா இருப்போர் சங்கம்.
...............




17. ஐஸ்கிரீம் கடை, ஒயின் ஷாப் என்ன வித்தியாசம்?


லவ் ஸ்டார்ட் ஆனா ஐஸ் கிரீம் கடைக்கு போவாங்க. லவ் ஸ்டாப் ஆனா(புட்டுக்கிச்சுனா) ஒயின் ஷாப் போவாங்க.



.....


18. கோபம் - நம்மை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும்.
அன்பு- நம்ம வெறுப்பவர்களை யும் நேசிக்க வைக்கும்.
......




19. ஒரு பொண்ணு, ராங்கா  ரோட்டை கிராஸ் பண்றப்ப டிராஃபிக் போலீஸ் விசிலடிச்சார். அந்தப் பொண்ணு கண்டுக்காம ரோட்டை கிராஸ் பண்ணுச்சு.

“நான் விசிலடிச்சும், கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கலை.?

நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல.
..........




20.  அனைவருக்கும் குடி இருந்த கோயில் - அம்மா, பலருக்கு குடி இருக்கும் கோயில் டாஸ்மாக்




---------------------------


Monday, July 16, 2012

ஜி. நாகராஜன் - ன் பச்சைக்குதிரை- சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitDRYBtIiEoexZ8XagcXfYDmlwrLt7OfTtwxtn1NTklUeSlZ_8fp3ya_EfeXOBtOlTpv4Yqb4ycuC0Roj-R5D1yvkObpgmdZQlIDnZ7mdAbn8rUNqwurisXodaXM17SOuX1nS1AFPZHWE/s1600/gnagarajan.JPG 

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.

‘பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!’

ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது.

‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்…’


மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை ராஜு இலேசாகத் தொட்டுக் கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது. ‘இன்னைக்கு தின்ன என்னவோ?… இருட்டிடுச்சு… ஒருமிக்க சோத்தைத் தின்னுட்டு படுத்துர வேண்டியதுதான். ஐயோ, காதெ யாரும் பாக்காம இருக்கணுமே; ராஜு மீண்டும் காதைத் தொட்டுக் கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. ‘அம்மா பாத்தா ‘ஓ’ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லே, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும்… போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு.. காலையிலேயே போலீசுகாரன் வரும்போதல்ல தெரியும்’


இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீசுக்காரன் வந்திட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்குமாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவருகே ஒளிந்து கொண்டு நிற்கிறான். ‘அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சிட்டான்’ என்கிறான் போலீஸ்காரன். ‘எங்க வீட்டு ராஜுவா?

அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது’ என்கிறார் அப்பா. போலீஸ்காரன் விட்டால் தானே! ‘ஒடிக்கமாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.

‘பொய்யப் பாரு பொய்யை! நான் ஒன்ணும் காலை வாரிவிடலேப்பா… அந்தச் செல்லத் துரைக்கு பென்சில் தரலையாம், பொய் சொல்றான். மாணிக்கம் வாத்தியாரும் கூடச் சேர்ந்துக்கிட்டாரு’ என்று கத்திக்கொண்டு ராஜு அப்பாவின் முன் வருகிறான். ‘திருட்டுப்பயலே, நீதானா?’ என்று கூறிக்கொண்டு போலீஸ்காரன் ராஜுவை எட்டிப் பிடிக்கிறான். ராஜு ஓடுகிறான். போலீஸ்காரன் விரட்டுகிறான். அப்பா போலீஸ்காரனைக் தடுக்கப் பார்க்கிறார். அப்பா கைமீது போலீஸ்காரன் ஒரு போடு போடுகிறான். ராஜுவைத் தரதரவென்று இழுக்கிறான். அப்பா பின்னால் ஓடிவருகிறார். ‘பத்து வயசுக் குழந்தை அய்யா, அவனை விட்டிடுங்க.

நான் வேணா அந்தக் கையொடிஞ்ச பையனுக்கு நிறையப் பணம் தரேன். அவனை விட்டிடுங்க அய்யா!’ என்று கெஞ்சுகிறார் அப்பா. போலீஸ்காரனுக்கு நெஞ்சு கல். ‘கையை ஒடிச்சிருக்கான். பத்து வயசுக் குழந்தையாம்’ என்று இரைகிறான். பல்லைக் கடித்துக் கொண்டு ராஜுவை இழுத்துச் செல்கிறான். ‘இந்த ஒரு தரம் விட்டிடுங்கையா, இனிமே ஒடிக்கமாட்டேன். யார் கையையும் ஒடிக்கமாட்டேன்” என்று அழுகிறான் ராஜு…

ராஜுவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. வாய் உலர்ந்தது, வாயைத் திறக்க முடியவில்லை. நாக்கு வாயோடு ஒட்டிக்கொண்டது. தொண்டையில் ஏதோ உருண்டை மாதிரி நின்றது. ‘நான் காலை வாரிவிடலேப்பா. எல்லாம் இந்த செல்லத் துரையாலே, எத்தனை பொய் சொல்றான்! அவன் சொல்றதை வச்சிக்கிட்டு இந்த மாணிக்கம் வாத்தியார் போலீசிலே பிடிச்சுத் தருவாராம், அப்பா.’


பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சு போச்சு. ‘கையொடிஞ்சிருச்சே! வீட்டிலே கொன்னுப்புடுவாங்களே’ன்னு கத்தினான். ‘சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னைக் காலை வரிவிடலே, நீ கையை வச்சு முதுகிலே அழுத்தினபோது இலேசாகக் குனிஞ்சேன், சோமு.’ சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், ‘நான் வேணும்னு ஒண்ணும் செய்யலே சோமு, என்னை மட்டும் சும்மா விட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலைலே மங்கு மங்குன்னு குட்டினாரு. என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்ன்னு அடிச்சிருக்காரு. எல்லோரும் எம்மேலே விழுந்து என்னைக் கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னைப் போலீசிலே வேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு. அந்தச் செல்லத்துரை சொல்றான்.


‘சோமுவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்களே! பாவம், இனிமே என்ன செய்வான்? பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கையொடிஞ்சவனைக் கடையிலே வச்சிக்க மாட்டாங்க. பாவம் சோமு நொண்டிப் பிச்சைக்காரனா ஆக வேண்டியதுதான். ‘அய்யா சாமி! கொஞ்சம் தர்மம் போடுங்களேன். அந்த செட்டிப்பய ராஜு என் கையை ஒடிச்சிட்டானே’ இந்த அப்பா ஒண்ணு. அவனுக்கு ஏதாச்சியும் தாங்களேன்னா, ‘அவன் கையொடிஞ்சா நாம் என்ன செய்யறது?’ன்னுடுவார்.

‘இல்லேப்பா நான்தான் பாவம் அவன் கையை ஒடிச்சேன். ‘நீதான் ஒடிச்சயா! போ, அவனோடே நீயும் போ..’ ராஜு நந்தவனத்துக்கு வந்தான். தொட்டியிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினான். அங்கு சீப்பு, கண்ணாடி வைத்திருந்தார்கள். தலையைச் சீவிக் கொண்டான். சட்டையையும், டிராயரையும் சரிப்படுத்திக் கொண்டான். கழுவிய முகத்தில் கண்ணீர் மீண்டும் முத்துப் போல் உருண்டு விழுந்தது. துடைத்துக்கொண்டான். வீடு சேர்ந்ததும் யாருடனும் பேசவில்லை. வேலைக்காரி சோறு போட்டாள். சாப்பிட்டான். நேராகக் கட்டிலுக்குச் சென்று குப்புற விழுந்தான். அலைக்கழிந்த மனம் அமைதியை நாடியது.


இரண்டு மணி வெயில் மண்டையைப் பிளந்தது. ராஜுவும் அவர்களும் வேலாங்குளம் கண்மாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வேலுச்சாமி ஒருவன். தர்மராஜன் ஒருவன். மூன்றாவது யாரோ.. ராஜுவுக்கே தெரியாது. நிழலுக்காக, ரோட்டிலே நடக்காது ரோட்டோரமாக இருந்த மேட்டிலே நடந்து சென்றனர். ஒவ்வொருவராக சட்டையைக் கழற்றி முண்டாசாகக் கட்டிக்கொண்டனர். சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தின் மீது புகைவண்டி ஒன்று சென்றது. வண்டியைக் கண்டதும் அவர்கள் நின்று அதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர். கண்டபடித் திட்டினர். ரெயிலில் போகிறவர்களை, வேலுச்சாமி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி வண்டியைப் பார்த்து கூத்தாடினான். ராஜுவுக்கு கூச்சலிடவும் கூத்தாடவும் மனமில்லை. ‘இதெல்லாம் என்ன?’ என்று உள்ளூர அலுத்துக் கொண்டான்.


கண்மாயில் ஏக கலாட்டா. நாலு பேரும் தண்ணீரிலே குதியாட்டம் போட்டனர். வேலுச்சாமி மட்டும் ஒரு கோவணம் கட்டியிருந்தான். மற்றவர்கள் பிறந்த மேனியில் இருந்தனர். நாலு பேர்களுக்கும் கையும் காலும் வெளிறிப்போய் கனத்துவிட்டது. கண்கள் சிவந்து நீரைக் கக்கின. தலையில் கல்லைக் கட்டி அழுத்துவது போலிருந்தது. போதாதற்கு வயிறு நிறைய தண்ணீர். ஒவ்வொருவராக வேலுச்சாமியைத் தவிர மற்ற மூவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அரைகுறை நீச்சலடித்து சுற்றி வந்தான் வேலுசாமி. அவ்வப்போது கால்களையோ கைகளையோ தரையில் ஊன்றிக் கொண்டான. சுற்றிச் சுற்றி வந்தவன் சற்று விலகிச் சென்றுவிட்டான். கால்கள் தரையை எட்டவில்லை. ஆழத்துக்குப் போய்விட்டான். தத்தளித்துத் தத்தளித்துத் தலையை மேலே தூக்கினான். உரக்கச் சத்தமிட முயன்றான். தண்ணீர் அலை அலையாக வாய்க்குள் புகுந்தது. ஒரே உளறல் மட்டும் கேட்டது. தரையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ‘திக்’கென்றது. தர்மராஜன் நிலைகுலையாது நின்றான். ஒருவன் ‘அய்யோ அப்பா’ என்று கத்திக் கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென்று தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது.


பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். ‘நல்ல பையன், ரொம்ப சாது’ என்று அனுதாபப்பட்டார். ‘அந்த வேலுச்சாமிக்காகத் தான் ராஜு செத்துப் போனானாம்’ என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான்.

‘தம்பி எழுந்திரு. உங்க பெரியய்யா, மகன் வந்திருக்காரு’ என்று வேலைக்காரி கூறியதும் ராஜு எழுந்து உட்கார்ந்தான். ‘செத்ததெல்லாம் கனவுதான்! உம் அந்த சோமுக்கு கையொடிஞ்சதும் கனவாயிருக்கக்கூடாதா?” ராஜு வெளியே நடந்து வந்தான். பெரியப்பா மகன் நடராசன் இரண்டு சகாக்களோடு நின்று கொண்டிருந்தான். ‘என்ன தம்பி, செல்லத்துரை நேத்து சேட்டை பண்ணினானாமே? உடனே எங்கிட்டே ஏன் சொல்லலே? பெரிய சண்டியருன்னு நினைச்சிட்டிருக்காம்போலே, இன்னைக்கில்லே அவனுக்கு தெரியப் போவுது!” என்று நடராஜன் ஆரம்பித்தான். ‘இல்லே, அண்ணே, நான் சோமு கையை ஒடிச்சிட்டேங்கிறாங்க’ என்று ராஜு இழுத்தான்.

”கையொடியரவரு ஏன் விளையாட வந்தாராம்” என்று கேட்டுவிட்டு, நடராஜன், ”தம்பி, நீ தின்னுட்டு வா… இன்னைக்குப் பள்ளிக்கூடத்திலே வச்சு சாத்தற சாத்திலே, அவரு சண்டியத்தனமெல்லாம் பறக்கணும், ஆமா’ என்று கூறிக்கொண்டே ராஜுவிடம் விடை பெற்றுக்கொண்டு, சகாக்களின் தோள்களில் கைகளை வைத்தவாறே நகர்ந்தான் நடராஜன். ராஜு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினான்.


“கையொடியரவரு ஏன் பச்சக்குதிரை தாண்டணுமாம்?” என்று சொல்லிக்கொண்டே பல்லை விளக்கினான். உடனே நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். ”தம்பி வெந்நீர் ஊத்திவச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்திரு. இல்லாட்டி ஐயா கோவிப்பாரு” என்றாள் வேலைக்காரி. ”குளிக்கவும் மாட்டேன்; ஒண்ணும் மாட்டேன், நான் ஒடனே போகணும். இப்ப இட்லியை வைக்கிறயா, இல்லையா?” என்று அதட்டினான் ராஜு.


”உன் அதட்டலும் மிரட்டலும் இங்கே வச்சுக்காதே; மருவாதையாய் போய்க் குளி” என்று கண்டிப்புடன் பேசினாள் வேலைக்காரி.

”என்னை யாருன்னு நினைச்சே! இங்கே பார், நான் இன்ஸ்பெக்டராக்கும்” என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தோல் பெல்ட்டால் வேலைக்காரிக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ராஜு.



நன்றி - ஜி நாகராஜன், சிறுகதைகள்,