Thursday, June 28, 2012

ஈழத்தமிழர்கள் விஷயத்தில் கலைஞர் அடித்த பல்டிகள் - பழ நெடுமாறன் கட்டுரை

http://www.vinavu.com/wp-content/uploads/2010/06/karunanidhi.jpgதமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். 


 தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 


 அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்தின் முற்பகுதியில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழ்நாட்டில் ஈழப்போராளிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கு தங்கியிருக்கவும் மக்களிடையே தங்கள் போராட்டத்தைக் குறித்துப் பிரசாரம் செய்யவும் நிதி திரட்டவும் தாராளமாக அனுமதிக்கப்பட்டார்கள்.  ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும். 


ஆட்சியும், அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக்கூட அசைக்க அவர் தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 


 1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-73 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  ""இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா?'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ""போராட்டத்துக்கு ஆதரவில்லை'' எனத் திட்டவட்டமாகக் கூறினார்.  


அதேயாண்டில் தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்ட "டெலோ' இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிமருந்துகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது. குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை அதிகாரிகள் வந்து கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். 

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


இதன் விளைவாக, ஈழப்போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவர்களல்ல. நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான். 


 1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை.


 ஆனால், அப்போது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய வி.பி. சிங் அந்த உடன்பாட்டை மிகக்கடுமையாகக் கண்டித்தார். அது மட்டுமல்ல, அன்னிய நாடு ஒன்றின் உள்பிரச்னையை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பியதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.  1989-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் ராஜீவ் பதவி விலக நேர்ந்தது. 


அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.  இலங்கையில் இனப்பிரச்னை தொடர்பாக ஈழத் தமிழர் தரப்பினர் அனைவரையும் அழைத்துப் பேசி அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டார். அவர் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். அதாவது, ஈழத் தமிழர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.


  கருணாநிதியின் அழைப்பை மதித்து, ஏற்று அவருடன் பேசுவதற்காக பாலசிங்கம், யோகி ஆகியோரை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன தெரியுமா?  இந்திய ராணுவத்தினால் இலங்கையின் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறினார் கருணாநிதி.


  இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்களையும் வரதராசப் பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களையும் விரிவாக பாலசிங்கம் எடுத்துக்கூறினார். 


 புதிய தேர்தல் நடத்தி அந்தத் தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வர புலிகள் தயாராக இருப்பதாக பாலசிங்கம் கூறினார். அதைக் கருணாநிதி ஏற்கவில்லை என்பதுடன் நிற்கவில்லை. தில்லி சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்துப் பேசி, புலிகள் தனது யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி நழுவி விட்டார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமது பணி முடிவடைந்துவிட்டதாகவும் இனி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும் கூறி இப்பிரச்னையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி.


  தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த போராளிகள் சிகிச்சை பெறவும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhekGnWLPbZyffxhoAIFz4aJWZRxGnvKukCX5SVvhVn5jyFRf5HrNA26DFuTuLv7J7aGF618nSDSEoD2W39ZvmRJSrS2UOEwRkSfnmv3j9kt8q8LHugovt_1IEAjCnyuwHES74rcQ8spNU9/s1600/aftermath+war.JPG

 மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பணத்தைப் பறிமுதல் செய்தார்.  இதுகுறித்து 23-7-1997 அன்று எனக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தில் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி வந்தவர்களுக்கு கருணாநிதி செய்த கைம்மாறு இதுதான்.  24-8-1990-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் ஈழப்பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். 


அப்போது அவர் ""தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம்'' என்று கூறினார். ஆனால், அதில் உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. இவ்வாறு கூறியதையே பிற்காலத்தில் மறுத்தார்.  மீண்டும் அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்தபோது 14-5-2000 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார்: ""தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறியதற்கு அவ்வாறு தனி ஈழத்தை அமைக்கக் குரல் கொடுப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது.


 தனி ஈழத்தை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வேறுவிஷயம். தனி ஈழம் அமையத் தமிழ்நாட்டின் சார்பில் குரல் கொடுப்பேன் என்ற பொருளில் அல்ல நான் பேசியது. அங்குள்ள தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன்'' என்று கூறினேன் என்றார்.  



இரண்டே நாட்களில், 16-5-2000 அன்று அவருடைய உள்ளக் கிடக்கையையும் புலிகள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக வெளியிட்டார். ""விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது'' என்றார்.  



தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கானத் தமிழர்களைச் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்தபோது தமிழக மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்திய அரசிற்கு எதிரான உணர்வு வெடித்து வெளிப்பட்டது.  இந்திய அரசையும் தனது அரசையும் மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்


. இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி, "அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். 


அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதை வரவேற்றனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் உலகமெலாம் இருந்த தமிழர்களின் மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.  ஆனால், 12 நாள்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலையெடுத்தார். 26-10-2008 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

http://inioru.com/wp-content/uploads/2010/06/8.jpg



 எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை எனக் கருணாநிதி அறிவித்தார்.  அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சியான பிறகு மீண்டும் தமிழீழப் பிரச்னையைப் பேசத் தொடங்கி இருக்கிறார். 18-4-2012 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ""இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தரவேண்டும்'' என வற்புறுத்தினார். 


 இப்போது ""ஈழத்தை உருவாக்கும் பணியில் மீண்டும் ஈடுபடப்போவதாகவும் அதை விரைவில் காண்பதற்காகவே தான் உயிரை விட விரும்புவதாகவும்'' உருக்கமான வசனம் பேசியிருக்கிறார்.  கடந்த மூன்று முறை இவர் பதவி வகித்த காலகட்டத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை. இவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட்ட வேளையில் கூட அதை நிர்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க இவர் எதுவும் செய்ததில்லை. 


மாறாக, ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தவர் கருணாநிதி.  தமிழ் ஈழம் அமைவதற்குக் கருணாநிதி சமீபகாலமாகக் காட்டி வரும் ஆர்வமும், ஈழத் தமிழர்கள்மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பாசமும் புல்லரிக்க வைக்கிறது. ஆட்சியையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டதைத் தவிர, ஈழப் பிரச்னையில் அவர் எப்போதாவது உள்ளார்ந்த அக்கறை காட்டியிருக்கிறாரா என்பதை அவரது மனசாட்சியிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு அவர் பேசட்டும்.



 ""எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என நாமக்கல் கவிஞர் பாடிய திரைப்படப் பாடல் கருணாநிதிக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.  1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி  உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க  இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை.   

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_200.jpg



மக்கள் கருத்து

1. பதவிக்காக கொள்கையில் சோரம் போனவர்களில் தலைமையானவர் இனத்துரோகி கருணாநிதி. இவர் பேசும் தமிழ்,தமிழர் எல்லாம் சந்தர்ப்பவாதத்திற்கு மட்டுமே. தன் வாழ்நாளிலேயே கபடதாரி என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டது சந்தோசமே!
By ஷாலி  



2. நன்றி, ஐயா. என் வாழ்வில் மறக்க முடியாத தற்கால தமிழர் வரலாற்றில் மன்னிக்க படமுடியாத ஒரு இன துரோகி திரு.கருணாநிதி. திரு.வி.பி.சிங் காலத்தில் எளிதில் தனி தமிழ் ஈழம் பெற்றிருக்க முடியும்.ஆனால் விடுதலை புல்களுக்கு பெருமை கூட கூட கூடாது என்று எண்ணியேகருணாந்தி செயல்பட்டுள்ளார். இன்று எவ்வளவு பெரிய அழிவினை ஈழ தமிழ் இனம்ஏற்றுள்ளது! அத்தனையும் தவித்திருக்க படவேண்டியதுதானே.!!

By P .Padmanaabhan


3.  அருமையான தலையங்கம். ஜயா தான் புலிகள் மீது எப்போதும் வெறுப்பு காட்டினார் என்று கூறும் கருணா ஜெயா அவரை மாதிரி தன சுய நல்த்திர்க்க்காகவுன் பணம் சேர்ப்பதற்காகவும் வாரிசு அரசியலகுக்க்காகவும் தி மு க போன்ற ஒரு உயர்ந்த இயக்கத்தை குடும்ப இயக்கமாக மாற்றி மக்களை ஏமாற்றவில்லை . ஜெயா எப்போதும் புலிகளை அண்டிக் கெடுத்ததில்லை .திராவிட தெலுங்கு தமிழன் நாடகம் தமிழ் இனம் அழிவுக்கு காரணம் , .மலையாளி எம் ஜி ஆர் தமிழன் நலனுக்காக பாடுபட்டவர் . அதனால் தான் இன்றளவும் அவரைப்பற்றி பேச கருணாவிற்கு திராணி தைர்யம் இல்லை.இப்போதும் தமிழன் அழிவில் முக்கிய பாத்திரம் வகித்த ஆர்யா பார்ப்பானை கலாம் அவர்களை கலகம் என்று கூறி அரசியல் செய்கிறார் ,தமிழனை நெஞ்சில் குத்துகிறார்

By ர.Krishnamurthy 

4. தமிழன்னைக்கு பிறந்த தமிழின பச்சை தொரோகி


By SARAVANAN 
http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/c.jpg 
 நன்றி - தினமணி, தமிழ் உலகம்,முத்தமிழ்

சுஜாதா - த்ரில்லர் சிறுகதை - ஜோதியும் ரமணியும்

http://chummaaorublog.files.wordpress.com/2010/02/sujata-portrait.jpg

புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.


ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடு’ என்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான்

. இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடா’ என்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.


ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.


திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’


மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’


‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில் ‘க்றீச்’ என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.


‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’


‘‘அவனா… அவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.


முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.


யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!


பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான்… ‘‘பட்டா, மார்க் போடலை… தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்’.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.


திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.


இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளா… ஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.


‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றா… ரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.

’’
அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது.


‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இரு’ என்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்… கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’


‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.


‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’


‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.


அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.


‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.


‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.


இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’


ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.


‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’


ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’


ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’


‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’


‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்… தெரிஞ்சுக்கலாமா?’’


‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.


‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’


அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.


அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.


‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோ… எப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.


‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.
‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போ… கெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.


‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்’ என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.
‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி
அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.
மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தை
கள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவித்தது.
அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்’ என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். ஐ லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.


ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.


அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.


ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.


அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்… எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்ல… போய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. ஐ டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்கா… எப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’
டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணி’ என்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டு ‘உங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.


உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் ஹ§ர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸ§ம் வாபஸ்’’.


நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மா…எப்படி?’’


‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’


‘‘என்னடா சொன்னே?’’


‘‘எனக்கு லுக்கிமியா… ஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.


அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.


‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’


‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையே … உலகமே இல்லை!’’ என்றான்.


மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.


நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய்,சிறுகதைகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL14wJu9e9O_PLdPtcyr__0Bk2HIaKfgjWPOmr1JYNm_Nfpv3E5faZsQnxaErcOkENBT1dVhOhxIq7OFFpoKG2rT796s7YSeFBM92d9GppyHCM2Y6bfkhh_G_EP4PJZqGNDckF_FdC827k/s320/writer+sujatha+family+2.jpg

நகரம் - சுஜாதா - சிறுகதை

http://i.ytimg.com/vi/MfI9j7Po7jI/mqdefault.jpg

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் – ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) – 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்




        மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல “பைப்” அருகே குடங்கள் மனிதர்களுக்காகவரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் ‘டெடன்னஸ்” கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது .


கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !




நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தான் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி டிப்பாட்மேண்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு சுரம். கிராம ப்ரைமரி ஹெல்த் சென்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயங்காட்டிவிட்டார். “உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துகிட்டு போ’ என்றார் அதிகாலை பஸ் ஏறி ….




பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தால். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.




பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார்.  கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .




“acute case of meningitis . notice  this ..”


வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாசனையின் ஊடே தான் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள் . சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குளே பார்த்தார்கள். ‘டார்ச்’ அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள் . குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள் .




பெரிய டாக்டர், “இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள் ” என்றார்.


வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், ‘இத பாரும்பா, இந்தப்ப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உக்காந்திருக்காரே , அவர் கிட்ட போ , சீட்டு எங்கே ?” என்றார்




வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.


“சாரி அவரு கொடுப்பாரு . நீ வாய்யா இப்படி பெரியவரே ! “


வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, ” அய்யா, குழந்தைக்குச் சரியா போயிருங்களா ?” என்றாள் .


“முதல்ல அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம் . டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேசை பார்க்கிறேன். ஸீ தட் ஸீ இஸ் அட்மிட்டட் எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்”




மற்றவர்கள் புடைசூழ அவர் ஒரு மந்திரி போல கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டு  பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.


சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.


“இங்கே வாம்மா . உன் பேர் என்ன ..? டேய் சாவு கிராக்கி ! அந்த ரிஜிஸ்டரை எடுடா..! “




“வள்ளியம்மாள்”


“பேசண்டு பேரு?”


“அவரு செத்து போயிட்டாருங்க ..”


சீனிவாசன் நிமிர்ந்தான்


“பேசண்டுன்னா நோயாளி .. யாரைச் சேர்க்கணும் ?”


“என் மகளைங்க “


“பேரு என்ன ..?’


“வள்ளியம்மளுங்க”


“என்ன சேட்டையா பண்ற ? உன் மாக பேரு என்ன ../’




“பாப்பாத்தி ‘


“பாப்பாத்தி!.. அப்பாடா. இந்தா , இந்தச் சீட்டை எடுத்துகிட்டு போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படிகிட்ட நாற்காலி போட்டுகிட்டு ஒருத்தர் உக்காந்திருப்பார் . வருமான பாக்குறவரு அவருகிட்ட கொடு.”




“குளந்தங்கே..?’




“குளைந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்து இருக்கட்டும்  கூட யாரும் வல்லையா ? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா ?”




வள்ளியம்மாளுக்கு பாபதியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை . அந்த கியூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தான் கணவன்மேல் கோபம் வந்தது.


அந்த சீட்டை கொண்டு அவள் எதிரே சென்றால். நாற்காலி காலியாக இருந்தது. அதான் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள்.ஆவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார்.”இரும்மா அவரு வருத்தம்’ என்று காலி நாற்காலியை காட்டினார். வள்ளியம்மாளுக்கு தயும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில் , காத்திருப்பதா – குழந்தையிடம் போவதா என்கிற பிரச்சனை உலகளவுக்கு விரிந்தது.




“ரொம்ப நேரமாவுங்களா..? ” என்று கேட்க பயமாக இருந்தது அவளுக்கு.




வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார் உட்கார்ந்தார்.  ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக் கொண்டு கர்சிப்பைக் கயிறாக சுருட்டித் தேய்துக்க் கொண்டு சுறு சுறுப்பானார்.




“த பார் வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்புச்சி மாதிரி வந்திங்கன்ன என்ன செய்யிறது ..?”


வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்தபின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.


“டாக்டர் கிட்ட கை எழுத்து வாங்கி கிட்டு வா , டாக்டர் கையழுத்தே இல்லையே அதிலே ..?


“அதுக்கு எங்கிட்டு போவனும்..?”


“எங்கிருந்து வந்தே ..?’


“மூனாண்டிபாடிங்கே !’


கிளார்க் “ஹாத்” என்றாள். சிருதார். “மூணாண்டிபட்டி ! இங்கே கொண்ட அந்த சீட்டை “




சீட்டை மறுபடி கொடுத்தால். அவர் அதை விசிறி  போல் இப்படிப் திருப்பினார்.


“உன் புருசனுக்கு என்ன வருமானம் ?”


“புருஷன்  இல்லீங்க “




“உனக்கு என்ன வருமானம்? “




அவள் புரியாமல் விழித்தாள்.


“எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே ?”




“அறுப்புக்குப் போன நெல்லாக் கிடைக்கும் அப்புறம் கம்பு, கேழ்வரகு !’




“ரூபா கிடையாதா.! சரி சரி .. தொண்ணூறு ரூபா போட்டு வைக்கிறேன்.”


“மாசங்களா?”


“பயப்படாதே .சார்ஜு பண்ண மாட்டாங்க . இந்த , இந்த சீட்டை எடுத்துகிட்டு கொடு இப்படியே நேராப் போயி இடது பாக்கள் – பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும் . 48  – ம் நம்பர் ரூமுக்கு போ .”




வள்ளியம்மாள் அந்த சீட்டை இரு கரங்களிலும் வாங்கி கொண்டால். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பி இருக்க , காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்கு படிக்க வராது. 48  ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பி போயி அந்த கிளார்க்கை கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.




ஒரே ஸ்ட்ரச்சரில் இரண்டு நோயாளிகள் உக்கார்ந்து கொண்டு, பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருதது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன . அலங்கரித்து கொண்டு வெள்ளை கோட் அணிந்து கொண்டு ஸ்டேதேஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்சுகள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்கு  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஒரு ஆள் சீட்டுப் போல பல பழுப்புச் சீட்டுகளைச் சேகரித்து கொண்டிருந்தான்.





அவன் கையில் தான் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கி கொண்டான். வெளியே பெஞ்சில் எல்லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்த பெண் அங்கே தனிய இருக்கிறாள். சீட்டுகளைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டு கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்த சீட்டை பார்த்து, “இங்க கொண்டு வந்தியா! இந்தா, ” சீட்டை திருப்பி கொடுத்து, “நேராப் போ,’ என்றான். வள்ளியம்மாள், “அய்யா , இடம் தெரியலிங்களே”  என்றாள். அவன் சற்று எதிரே சென்ற ஒருவனை தடுத்து நிறுத்தி, ” அமல்ராஜ் இந்த அம்மாளுக்கு 48 ம் நம்பரை காட்டுய்யா . இந்த ஆள் பின்னாடியே போ . இவர் அங்கேதான் போறார்.” என்றான்.




அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.




அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடி இருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கி கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.




அரை மணி கழித்து அவள் அழைக்கபட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பி பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்




“ஓ,பி. டிபார்ட்மேண்டிலிருந்து வரியா ..?”




இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.




“அட்மிட் பண்றதுக்கு எழுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக்கு கலையிலே சரியாய் ஏழரை மணிக்கு வந்துடு என்ன..?”




“இங்கேயே வா, நேரா வா, என்ன ?”


வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தியாக வந்த விட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதாயிற்று.அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஓன்று போல் இருந்தன.ஒரே ஆசாமி திரும்ப திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. ஒரு வார்டில் கையை காலைத் தூக்கி கிட்டி வைத்துக் கட்டி பல பேர் படுத்திருந்தார்கள் . ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுது கொண்டிருந்தன.மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.




“அம்மா” என்று ஒரு பெண் டாக்டரை கூப்பிட்டு தான் புறப்பட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். “நெறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாமுன்னு சொன்னாங்க. எம் புள்ளைய அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா! “




அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டி இருந்தது. அப்போது அவளுக்கு பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்று கொண்டு அழுதாள். ஒரு ஆள் அவளை ஓரமாக நின்று கொண்டு அழச்சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அசெப்டிக் மணம் போல எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.




“பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டு பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்? ” என்று பேசிக் கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதான் கேட்டை திருந்து வெளியே மட்டும் செல்ல விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.




வெளியே வந்து விட்டாள்.அங்கிருந்து தான் தொலை தூரம் நடந்து மற்றோரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!


ஆனால் வாளில்தான் மூடப்பட்டிருந்தது உள்ளே பாப்பாத்தி ஒரு ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரச்சரில் கண் மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.




“அதோ! அய்யா, கொஞ்சம் கதவைக் திறவுங்க, எம்மவ அங்கே இருக்கு .’


சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்’” அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்கு புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக் கொண்டு யாருக்கோ  அவன் வழி விட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுதாள்.




பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காப்பி சாப்பிட்டு விட்டு வார்டுக்கு சென்றார். அவருக்கு காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது.B .M .J  யில்  சமீபத்தில் புதிய சில மருந்துகளை பற்றி வர படித்திருந்தார்.




“இன்னைக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே  மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா..?




“இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர் “




“என்னது? அட்மிட் ஆகலையே? நான் ஸ்பெசிபிக்கா சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை ..?”




“இருக்கிறது டாக்டர் ! “


“பால்! கொஞ்சம் போயி விசாரிச்சு கிட்டு வாங்க அது எப்படி மிஸ் ஆகும் ?”


பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளாற்குகளிடம் விசாரித்தார்.”எங்கயா! அட்மிட் அட்மிட்டுன்னு நீங்க பாட்டுக்கு எழுதிபுடுறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது! “




“சுவாமி சீப்  கேக்குறார் !”


“அவருக்கு தெரிஞ்சவங்களா ?”


“இருக்கலாம் எனக்கு என்ன தெரியும்?”


“பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரல. வேற யாரவது வந்திருந்தாக் கூட எல்லோரையும் நாளைக்கு காலையிலே வர சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட்டு காலியாகும். எமேர்ஜன்சின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை பெரியவருக்கு அதிலே இண்டரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா ..?’




வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சார்த்திக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.




“வாட் நான்சென்ஸ்! நாளைக்கு காலை ஏழரை மணியா! அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா! டாக்டர் தனசேகரன் நீங்க ஓ.பி யிலே போயி பாருங்க . அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சர்ட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிப்பாட்மென்ட் வார்டில பெட் இருக்குது. கொடுக்க சொல்லுங்க! க்விக்!”




“டாக்டர்! அது ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கு “


“i dont care. i want that girl admitted now. Right now!”


பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்தது இல்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா  என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளை தேடி ஓ.பி டிபாட் மெண்டுக்கு ஓடினார்கள்.




“வெறும் சுரம்தானே ? பேசாமல் மூனாண்டிப் பட்டிக்கே போயி விடலாம்.வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாக போயிவிடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்து விடலாம்.” சைக்கிள் ரிக் ஷா  பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வள்ளியம்மாள், “பாப்பாத்திக்குச் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்’ என்று வேண்டி கொண்டாள்.

நன்றி - சுஜாதா ,உயிர்மை,சிறுகதைகள் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ1QkxYbAIiBNA9ZMWDHvVCusulgO3QL8NVO2hVHzfp24LVi7L7oBepFVBL80cUNREOfxbCaMLxhQjqEFICJ1PElU3D6N1bBFCruWfe431QhU_M0s_-HF-mUu8NAG0SyEF7N8_5Bd4QPPU/s320/112371284_70db8a3e1b_o.jpg

சானியா மிர்சா ஆவேச தாக்குதல் - ஆணாதிக்கவாதம்

http://img.stillgalaxy.com/public/06-24-2011/sania-mirza/sania-mirza-hot-photos-0.jpg 

அதிருப்தியில் இருக்கும் லியாண்டர் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறி அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ), பயஸ் ஆகியோர் மீது கடுமையாகச் சாடியுள்ளார் சானியா மிர்சா.


 ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவிலும், சோம்தேவுக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் செவ்வாய்க்கிழமை இரவு வைல்கார்டு (நேரடித்தகுதி) வழங்கியது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்).  இதைத் தொடர்ந்து டென்னிஸ் சங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சானியா, தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:


 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து இந்தியாவின் சார்பில் 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒலிம்பிக் போட்டிக்கான அணி அறிவித்தது முதலே பயஸýடன் இணைந்து விளையாடுவீர்களா என்று நண்பர்கள், உறவினர்கள், சக வீரர், வீராங்கனைகள் குறிப்பாக ஊடகங்கள் என அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர்.

 அப்போதைய சூழ்நிலையில் வைல்டுகார்டு கிடைக்காமல் அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன்.  கலப்பு இரட்டையரில் பயஸýடன் இணைந்து விளையாடுவதற்கு நான் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை வேஸ் பயஸ் தொலைக்காட்சிகள் மூலமாக என்னை நிர்பந்தித்தார். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன்.  அதனால் பயஸ், பூபதி, போபண்ணா, விஷ்ணுவர்தன், சோம்தேவ் என யாருடன் வேண்டுமானாலும் இணைந்து விளையாடுவேன். ஒருபோதும் விளையாட முடியாது என்று மறுக்கமாட்டேன். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaCT-JGiHBn4IDpNhKQYYU2XkklJ8CIyB3kIRgY096Ky0xa-tiOAvtv18Ns7X-AW1i08lPKO_m0o_kvFFh9K4pVhvne7vnO_7SwdZU_H4K8EENJVx88bmSk5ts_im-sVGSSz6gma980NTE/s1600/Sania+Mirza+Hot+Pics.jpg

  ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதில் பூபதி மிக உறுதியாக உள்ளார். அவருடன் இணைந்து விளையாடினால் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறார். அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸýக்கு விட்டுக்கொடுத்து அவர் தியாகம் செய்திருக்கிறார்.  21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்ணாகிய நான், அதிருப்தியில் இருக்கும் பயûஸ சமாதானப்படுத்துவதற்காக பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் நான் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறேன். பயஸýடன் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்ட விதமும், வெளியாகியிருக்கும் நேரமும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.  பயஸýடன் விளையாட முடியாது என்று மகேஷ் பூபதி கூறிவிட்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக இப்போது நான் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகப்பெரிய அமைப்பான டென்னிஸ் சங்கத்தினால் நான் இழிவுபடுத்தப்பட்டுள்ளேன்.

அதை இங்குள்ள பெண்கள் அமைப்பினர் கண்டிக்க வேண்டும். பயஸ், பூபதிக்கு அடுத்தபடியாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது நபர் நான்.  கடந்த வாரம் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோதும் டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எவ்வித வாழ்த்தும் எனக்கு வரவில்லை. அப்படியிருந்தும் என் மீது டென்னிஸ் சங்கத்தினர் மரியாதை வைத்திருப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் இப்போது இழிவுபடுத்தப்பட்டுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 திறமை அடிப்படையில் அணி தேர்வு:  சானியாவுக்கு ஏஐடிஏ பதில்  புது தில்லி, ஜூன் 27: திறமையின் அடிப்படையிலேயே டென்னிஸ் அணி தேர்வு செய்யப்பட்டதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.  சானியாவின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த அணி தேர்வு செய்யப்பட்டது என்றும் ஏஐடிஏ தெரிவித்துள்ளது. அணி தேர்வு விவகாரத்தில் சானியா கடுமையாக சாடியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் ஏஐடிஏ பொதுச் செயலர் பரத் ஓஸô வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:  திறமையின் அடிப்படையிலேயே கலப்பு இரட்டையரில் சானியா, பயஸ் இருவரையும் விளையாட வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvUhMHe9wHOUHxpEHs4VC0Rw7rjNqoqc8axav6pely2BQtn8ssOVv4lPI-hzjvIrKfMK8uMlZDyO2QN1Of31T6WvY6fGwkDzKpy7UviY_25AyD8P1DR4EMDCE-JIrYT_TP9JOgdsoyr-I/s400/sania.jpg


. தரவரிசையில் லியாண்டர் பயஸ் 7-வது இடத்திலும், சானியா 12-வது இடத்திலும் உள்ளனர். அதனடிப்படையிலேயே கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள 12 முன்னணி அணிகளில் பயஸ்-சானியா அணி 9-வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. 


 சானியாவும், பயஸýம் இணைந்து விளையாடினால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என ஏஐடிஏ நம்புகிறது. இந்திய வீரர்கள் தங்களின் கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டு நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். பொது இடங்களில் ஒருவர் மற்றொருவர் குறித்து குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



THANX - DINAMANI

ஒரு ட்விட்டரின் அந்தரங்க டைரி

.
அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் காயம்

1. மனுஷனா பொறந்தா எதையாவது சாதிக்கனும், நல்ல வேளை, நான் குழந்தையாத்தான் பிறந்தேன், பிரஷர் கம்மி # SMS



--------------------------


2. நான் டைரி எழுதும்போதே யாராவது இதைப்படிப்பாங்கன்னு எச்சரிக்கையோட சென்சார் பண்ணிதான் எழுதறேன் ;-)


--------------------------


3. சிலம்பரசனின் மேல் கொண்ட ஆளுகையால் நயன் தாரா சிலம்புச்செல்வி என்று அழைக்கப்படுவாரா? # ம பொ சி சிந்தனைகள்



----------------------------


4. தோல்விக்கு முதல் காரணம் டென்ஷன்,வெற்றிக்கு முதல் காரணம் நம்பிக்கை # தத்ஸ்



----------------------------

5.ஐஸ்வர்யாதனுசின் அடுத்தபடம் குழந்தைகள் படம் # டைட்டில் சைக்கோ பேபி?


---------------------------------




6. பில்லா  சினிமா -கூட்டுத்தொகை =6, அஜித்குமார் =6,சூப்பர் ஹிட் =6 # எப்பூடி?# 6மனமே 6அல்டிமேட் ஸ்டார்க்கு எதிரே யாரு?



--------------------------------


7.  சைக்கோ லுக்கு பேபி ,சைக்கோ லுக்கு பேபி  ,மர்டர் பண்ணத்தோணலையா?நோ நோ நோ நோ # ஐஸ்வர்யா தனுஷின் சைல்டு ஃபிலிம்



-------------------------------

8. ஐஸ்வர்யாதனுஷ் - என்னோட அடுத்த படம் குழந்தை படம் # மேடம் , கரெக்டா சொல்லுங்க, குழந்தைத்தனமா இருக்குமா? குழந்தை மயமா இருக்குமா?



------------------------------------

9. சார்,உங்க மனைவி குழந்தைகள் படம் எடுக்கறாங்களே?


தனுஷ்- ஆமா, என் மனைவி குழந்தை மாதிரி, அவங்க எதுக்கவே  ஸ்ருதி கூட கடலை போட்டாலும் கண்டுக்கமாட்டாங்க


--------------------------


10. ராமானுஜம் மாதிரி கணக்குல மேதையா இருக்கனும், அல்லது நயன் தாரா மாதிரி கணக்கு பண்றதுல மேதையா இருக்கனும் # இப்போ டெல், நீங்க யாரு?



--------------------------


நாளைய இந்தியா


11. வாசகங்கள் உள்ள பனியன்களை அணியும் சுசிலாக்களின் பெற்றோர்கள் அதை படிச்சுப்பார்க்க மாட்டாங்களா? # டி சர்ட் கில்மா ஸ்லோகன்ஸ்



------------------------------

12. பசங்க ரசிச்சு படிக்கறதால  பொண்ணுங்க டி சர்ட் வாசக பனியன் போடறாங்க, பொண்ணுங்களுக்கு படிக்கத்தெரியாததால பசங்க அப்படி போடறதில்லை,ஹி ஹி



--------------------------------



13. பி எட் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் ஒரு கேள்வி, உங்க பேருக்குப்பக்கத்துலயே BED -னு போட்டுக்கிட்டதால தூக்கம் வந்துடாது? ஹி ஹி


------------------------


14.  வாசலில் கோலம் போடும் பெண்கள் நம்மளை பார்த்ததும் அவங்க திசையை மாற்றி அமர்ந்து பணியை தொடர்கிறார்கள் # எச்சரிக்கையாம் ;-)


---------------------------

15  அவரு பெரிய டிவிட்டர் பிறந்தநாள் வாழ்த்து சொன்னாக்கூட 'many more happy RT returns of the day'-னு தான் சொல்வாரு



------------------------------------


இந்த பொண்ணுங்களுக்கு...அடுத்தவ புருஷன நோண்டரதே வேலையா போச்சி.
.kuthunga ejaman kuthunga indha ponnungaleh ippadi dhan
Photo: இந்த பொண்ணுங்களுக்கு...அடுத்தவ புருஷன நோண்டரதே வேலையா போச்சி.
.kuthunga ejaman kuthunga indha ponnungaleh ippadi dhan



-------------------------------



Wednesday, June 27, 2012

சுஜாதா - ஒரு பார்வை - காலச்சுவடு கண்ணன் கட்டுரை


சுஜாதா ஒரு முரண்நோக்கு
கண்ணன்
கடந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது.
சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெகுஜன தளத்தில் எழுதவந்தவர்களுக்குப் பின்னர், சில தலைமுறை வெகுஜன எழுத்தாளர்கள் ஜொலித்து மறைந்த பிறகும் சுஜாதா வெகுஜன தளத்தில் தொடர்ந்து நாயகனாக நின்றார். இன்று வெகுஜன தளத்தில் நுழையும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் எவ்வாறு வேகமாகத் தேக்கமடைந்து காலாவதியாகிவருகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய செய்தி இது.



பலரையும் போல் சுஜாதாவை நானும் என் பதின்களில் வெகுஜன இதழ்களில் படித்திருக்கிறேன். அவரது நாவல்கள்மீதான ஆர்வம் பதின்கள் முடியும்வரை நீடிக்கவில்லை. பின்னர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு காலச்சுவடு ஆசிரியராக அவருடனான உறவு பெரிதும் எதிர்நிலையிலிருந்தே ஏற்பட்டுள்ளது. வணிகப் பண்பாட்டிற்கு எதிராக ஒரு சிற்றிதழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி. அக்காலகட்டத்தில் வெகுஜனப் பண்பாட்டின் நாயகனாக நின் றவர் சுஜாதா. இருப்பினும் காலச்சுவடு சுஜாதாவை உரிய இடங்களில் அங்கீகரிக்கத் தயங்கவில்லை.
'தமிழ் இனி 2000' நிகழ்வை நாங்கள் நடத்தியபோது, 'கணினியும் தமிழும்' அமர்வு அவருடைய தலைமையிலேயே நடந் தது.


 எங்கள் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் 'அற்றைத் திங்கள்' நிகழ்விற்கு அவரை அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவரது உடல்நிலை கருதி அழைக்காமலேயே இருந்துவிட்டோம்.
அதேநேரம் அவருடைய எழுத்துக்கள் சார்ந்தும் கருத்துகள் சார்ந்தும் பல முரண்பட்ட கட்டுரைகளும் விவாதங்களும் காலச்சுவடில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவும் காலச்சுவடை அதிகமும் பாதகமாகவே சுட்டிவந்திருக்கிறார். ஆனால், சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பற்றி அவர் எப்போதுமே உயரிய மதிப்பீட்டை வெளிப்படுத்திவந்தார்.



சு. ரா. வுக்கு சுஜாதா பற்றிய மதிப்பீடு இருந்தது. அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று சு. ரா. கருதினார். தன்னை வெகுஜன தளத்தில் சமரசப்படுத்திக் கொண்டதால், தமிழ்ச் சமூகம் அவரது பங்களிப்பைக் குறைவாகவே அடைந்துள்ளது என்றும் கருதினார். அவரது மேலோட்டமான அணுகுமுறை, பாலியல் கொச்சைப்படுத்தல் பற்றிய கடும் விமர்சனமும் சு.ரா.வுக்கு இ ருந்தது. ஒரு எதிர்வினையில் 'வணிகச் சீரழிவின் நாயகன்'1 என்று சுஜாதாவைச் சுட்டினார் சு.ரா. அறிவியல் தமிழுக்கு அவரது பங்களிப்பைப் பற்றிய மரியாதையும் சு. ரா. வுக்கு இருந்தது. சிங்கப்பூர் நா. கோவிந்தசாமிக்கு எழுதிய அஞ்சலிக் கட்டு ரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:



கணினியில் பொது விசைப்பலகை - பொதுக் குறியீட்டு முறை உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தொடர்ந்து அவர் முனைந்து வந்தார் என்பது தெரிகிறது. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் எந்தளவுக்கு இன்று நமக்குப் பயன்படும்? இவை பற்றி வாசகர்கள் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண் டும். கணினித் துறையில் நுட்ப விபரம் கொண்ட ஒருவர்தான் இதனைத் தெளிவுபடுத்த முடியும். தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சுஜாதா இதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்2.
தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவும் சில சமயங்களில் அலட்சியமாகவும் சுஜாதா எழுதுவது பற்றிய வருத்தமும் அவருக்கு உண்டு.


குவளைக்கண்ணனுக்கு அவரது கவிதைத் தொகுப்பு பற்றி சு. ரா. எழுதிய ஒரு கடிதம் நூல் மதிப்புரையாக காலச்சுவடில் வெளிவந்தது.
'கிட்டதட்ட கவிதைகள்' என்ற உபதலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். இது கவிதைக்கு எதிரான ஒரு வேடிக்கை மனநிலையை உருவாக்குகிறது. இந்த வேடிக்கை மனோபாவம் தமிழில் ஒரு இதழாலும், ஒரு பிரபல எழுத்தாளராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது'3
என்று குறிப்பிடுவது சுஜாதாவைத்தான் என நினைக்கிறேன். (அழுத்தம் என்னுடையது)



சுஜாதா ஒன்றிரண்டுமுறை தெற்குப்பக்கம் வந்தபோது வீட்டிற்கு வந்துவிட்டு சு. ரா. வைப் பார்க்க முடியாமல் போனது பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். 80களின் இறுதியில் இருக்கலாம், பீட்டர் புருக்கின் 'மகாபாரதம்' நாடக நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றபோது சு. ரா. வைச் சந்தித்த சுஜாதா, அவரும் இணைந்துகொண்டு காலச்சுவடைத் தொடர்ந்து நடத்து வது பற்றிப் பேசியிருக்கிறார்.


 அந்தத் திட்டத்தை சு. ரா. முன்னெடுக்கவில்லை. சுஜாதா இதனால் மிகவும் மனம் புண்பட்டார் என நினைக்கிறேன். 1991இல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளிவந்தது. கோமல் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் பிரதி ஒன்று சுபமங்களாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இதழிலேயே சுஜாதாவின் மிக எதிர்மறையான விமர்சனம் சுபமங்களாவில் வெளிவந்தது.


 சுஜாதாவே தன்னை அழைத்து, தான் விமர்சனம் செய்வதாகக் கூறிப் பெற்றுக்கொண்டதாகக் கோமல் கூறினார். அவ்வாறு தான் செய்வது பற்றியும் முற்றிலும் தீவிரத் தளம் சார்ந்த அம்மலரை விமர்சிக்கத் தனக்கிருக்கும் தகுதி பற்றியும் சுஜாதாவுக்கு இருந்த உறுத்தல் அக்கட்டுரையிலேயே வெளிப்பட்டது.


இதற்கான உன் தகுதி என்ன என்றால் காலச்சுவடு மதிப்புரைக்காக சுபமங்களாவுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்ப - அவர்கள் எனக்கு அதை அனுப்பி விமரிசனம் எழுதச் சொன்ன ஒரே காரணம்தான். இருந்தும் இதை எழுதுவதில் எனக்கு இஷ்டமே.


சு. ரா. வின் கடுமையான எதிர்வினையும் சுபமங்களாவில் (ஏப்ரல் 92) வெளிவந்தது. காலச்சுவடில் பங்கு பெற முடியாது போனதால் தொடர்ந்து காலச்சுவடைச் சீண்டிவந்தார் என்றும் பிற்காலத்தில் காலச்சுவடு 'போன்ற' ஒன்றை உருவாக்கித் தன் ஆற்றாமையை சுஜாதா தீர்த்துக்கொண்டார் என்றும் எண்ண இடமிருக்கிறது.


n
2000ஆம் ஆண்டை ஒட்டி சுஜாதாவை அவர் வீட்டில் நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். சந்தித்த காலத்தையும் நோக்கத் தையும் இப்போது தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காலச்சுவடு இதழைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியிருந்ததை அப்போது 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தோம். அதைக் கு றிப்பிட்டு 'உண்மையிலேயே எனக்குப் புரியவில்லையப்பா' என்றார்.


அதற்கு முன்னர் பேச்சுவாக்கில் சில தண்டிதண்டி ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருந்தார். அவை கண் முன்னால் மேசையிலிருந்தன. 'இவை புரியும்போது காலச்சுவடு புரியவில்லையா?' என்று கேட்டேன். சில கட்டுரைகள் புரியவில்லை என்றார். 'சில' என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே என்றேன். சிரித்துக்கொண்டே 'அப்ப தப்புதான்' என்றார்.



அறிவியல் புனைகதைகள் எழுதுவது பற்றிய ஒரு பட்டறைக்குக் காலச்சுவடு ஒழுங்குசெய்தால் வந்து நடத்து கிறேன் என்றார். ஆர்தர். சி. கிளார்க் போன்று அறிவியலின் வளர்ச்சியை முன் உணரும் படைப்புகள் தமிழ்ச் சூழலில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. மேலும் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு என்பன மிகுந்திருக்கும் சூழலில் ஒரு நெகிழ்ச்சியை அறிவியல் கதைகள் அளிக்கக்கூடும்.


 பகுத்தறிவும் அதீதங்கள் பற்றிய நம்பிக்கையும் இரட்டைப் பின் னல்போல இருக்கும் தமிழ்ச் சூழலில், மென்பொருள் வட்டத்திற்கு வெளியே அறிவியல் புனைகதைகளின் பொருத்தத்தை நான் உணரவில்லை. அதை அவரிடம் சொன்னேன். மாற்றுக் கருத்துகள் பற்றிய பொறுமையின்மை ஏற்பட்டுவிட்ட வயது அப்போது அவருக்கு.



பின்னர் அவர் ஆலோசகராகப் பணியாற்றிய மீடியா டிரீம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு புளிய மரத்தின் கதையைத் திரைப்படமெடுக்க அவர் யோசனை கூறியிருந்ததை அடுத்து அவரை ஓரிருமுறைகள் அலுவலகத்தில் சந்தித்தேன். அதில் ஆசிரியருக்கு உரிய தொகையின் போதாமையைச் சுட்டி நான் வாதிட்டதை அவர் ரசிக்கவில்லை.


படத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம்கூட நூலாசிரியருக்கு இல்லை. எனக்குத் தொகையைவிடவும் இலக்கியவாதிகளை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்ற சினிமாக்காரர்களின் முன் முடிவை உடைப்பது அவசியமாகத் தோன்றியது. பின்னர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இடையீட்டில் சமரசமாகி அந்த முயற்சி தொடங்குவதற்குள் நிறுவனம் பொளிந்துவிட்டது.



தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பை இவ்வாறு தொகுக்கலாம் என நினைக்கிறேன்:



1. சமகாலத் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.



2. தான் செயல்பட்ட வெகுஜன தளத்தில் வாசகர்களுக்குத் தொடர்ந்து தீவிர ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வந்தி ருக்கிறார்.



3. தொழில்நுட்பத் தமிழுக்கு அவருடைய பங்களிப்பு மிக வலுவானது. சிக்கலான அறிவியல் செய்திகளை எளிய முறையில் விளக்கிவிடுவதில் அவருடைய ஆற்றல் தன்னிகரற்றது.



(பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைத் தமிழன் எக்ஸ்பிரசில் தொடராக எழு திக்கொண்டிருந்தார். அதில் அமெரிக்கா செல்லும்போதும் திரும்பும்போதும் ஏற்படும் ஜிவீனீமீறீணீரீ ஐ விளக்க, 'மறுநாள் கிளம்பி முதல் நாள் வருவதுபோல' என எழுதியிருந்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வருகிறது.)



2005 நவம்பரில் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் சுஜாதாவைக் கடைசியாகச் சந்தித்தேன். உடல்நலம்குன்றிக் காணப்பட்டார். சுந்தர ராமசாமியின் மறைவைப் பற்றிய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். 'பெரிய இழப்பு, பெரிய இழப்பு' என மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக்கொண்டேயிருந்தார்.



அதெல்லாம் சம்பிரதாயமானதாக இல்லாமல் ஆத்மார்த்தமானதாக இ ருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று நான் படித்த கட்டுரையைப் பற்றி உயர்வாக ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' பத்தியில் எழுதியிருந்தார். இனி அதிகமும் முரண்படவும் அவ்வப்போது பாராட்டவும் சுஜாதா இல்லை.


n
ஒரு தலைமுறைத் தமிழ் வாசகர்களுக்குப் பெண் பற்றிய விடலைத்தனமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் சுஜாதா. தனது சாதிச் சங்கங்களுடன் அவர் கொண்டிருந்த உறவை அவரே பதிவுசெய்திருக்கிறார். அவர் புறக்கணித்து ஒதுக்கிய 'காலச்சுவடு 1991 ஆண்டு மல'ரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் ஒன்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் 'ராமஜென்ம பூமி: ஓர் இந்தியப் பார்வை.'



சென்னையிலிருந்து வெளிவரும் சமநிலை சமுதாயம் என்ற 'முற்போக்கு மாத இத'ழின் கௌரவ ஆசிரியர் ஏவி. எம். ஜாபர்தீன் மலேசியாவில் வசிப்பவர். அவர் சுஜாதாவுக்கு எழுதிய அஞ்சலியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் 'கோயில் ஒழுகு' பற்றி அவர் எழுதும்போது அது முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய இருவர், சுஜாதாவுக்குக் கடுமையான கடிதம் எழுதினர். சுஜாதா தானாக ஏதும் கூறவில்லை.


 கோயில் ஒழுகு பற்றி கூறப்பட்டவற்றை அப்படியே எழுதப்போய் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தூஷணையுடன் எழுத, மனம் நொந்த சுஜாதா இனி இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றித் தாம் ஏதும் எழுதப் போவதில்லை என்பதுபோல் 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் கு றிப்பிட்டார்.5 முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இது. புகழ்பெற்றவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் இன் பம், தர்க்கத்திற்கும் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த இன்பத்தை ஜாபர்தீன் அவர்கள் சுஜாதாவிடமிருந்து நிறைவாகப் பெற்றிருக்கும் செய்தி அவரது அஞ்சலிக் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது.



மேற்படி விஷயத்தில் சுஜாதா 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எழுதியது இதுதான்:


அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான 'கோயில் ஒழுகு' புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். . .


. . . 'கோயில் ஒழுகு' நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட் டிருக்கிறார்.
நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள்போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.



யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். (ஆனந்த விகடன் 17.4.05) (அழுத் தம் என்னுடையது).
இது பற்றிய விவாதம் காலச்சுவடு இதழில் நடந்தது. கோம்பை எஸ். அன்வர், ஜெ. ராஜா முகமது, ஆ. சிவசுப்பிரமணியன், பொ. வேல்சாமி ஆகியோர் பங்களித்தனர். இவற்றை ஜாபர்தீன் அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.



விருந்தினர் வீட்டிற்கு வருவது, அதுவும் நாம் ஆதர்சிப்பவர்கள் வருவது மகிழ்ச்சியான செய்திதான். சுஜாதா குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வந்தது பற்றி ஜாபர்தீனின் உணர்வுகள் இவை:



1993இல் நான் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு நாள் மாலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்" என்றார். உடனே அவரைச் சந்தித்தேன். அவருடன் அவர் துணைவியார் திருமதி சுஜாதா ரங்கராஜனும் அவருடைய மாமனார், மாமியார் ஆகியோரும் வந்திருந்தனர்.


 அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லும்போது, "எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்தான். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்தமாட்டீ ர்களே?" என்றேன். "யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்பதுதான் எங்கள் குறை. எங்களுக்கு சைவ சாப்பாடு தாரு ங்கள். நாங்கள் வருகிறோம்" என்றனர் அனைவரும்.
நான் என் மனைவியிடம் கூறி அசைவ உணவுகளை அப்புறப்படுத்திவிட்டு சைவம் மட்டுமே சமைத்து அவர்களை வி ருந்துக்கு அழைத்தோம். எவ்விதத் தயக்கமுமின்றி அனைவரும் வந்து விருந்துண்டனர். தொடர்ந்து கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்பிய அவர்களுக்கு எனது காரையும் டிரைவரையும் அவர்கள் மலேசியாவில் தங்கி இருக்கும்வரை கொடுத்தேன்.



மிகவும் மகிழ்வோடு அவர்கள் சுற்றுப்பயணம் நிகழ்ந்தது.6
ஆச்சாரமான அய்யங்கார்கள் நம் வீட்டில் தங்கி, உணவருந்தி கௌரவித்துவிட்டார்களே என்ற ஜாபர்தீன் அவர்களின் பெருமிதம் இ ன்றைய காலத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றது. மேற்படிப் பதிவில் விரவிக்கிடக்கும் புலால் உணவு பற்றிய ஜாபர்தீன் அவர்களின் தயக்கங்களும் குற்ற உணர்வும் சமூகவியல் ஆய்வுக்கு உரியவை.
n
சுஜாதா ஆர்வத்துடன் விரும்பிச் செயல்பட்ட தளம், வெகுஜன வணிகத்தளம். அத்தளத்தில் இருந்து அவருக்குச் செலுத் தப்பட்ட அஞ்சலிகள் பல ஆத்மார்த்தமானவை. சுஜாதாவால் பயன்பெற்றவர்கள், பயன்பெறத் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு மட்டும் அவரைப் பற்றி உதிர்க்கத் தொடங்கிய மிகையான புகழாரங்களை, 'நன்றி விசுவாசத் தந்திரம்' என்று புறக்கணி த்துவிடலாம்.



 பெண்ணியமும் திராவிடச் சித்தாந்தமும் பேசுபவர்கள் சுஜாதாவின் கருத்தியல் தொடர்பாக மேற்கொள்ளும் விமர்சன மௌனத்தையும் இதே தொடரில் அடக்கிவிடலாம்.


தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம்


. இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.


என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற 'முழு உண்மை'மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் - சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது - உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.


நன்றி - காலச்சுவடு

GHOST SON -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்

http://www.filmlinks4u.net/wp-content/uploads/2011/04/Ghost-Son-2007-%E2%80%93-Hollywood-Movie-Watch-Online.jpg
ரத்தம், வன்முறை, தேவை அற்ற பயமுறுத்தல் காட்சிகள் எல்லாம் இல்லாம ரொம்ப நுணுக்கமான மனித உணர்வுகளை சித்தரிக்கும் வித்தியாசமான படமா இதை எடுத்திருக்காங்க.. 2007-ல் வந்த இந்தப்படம் இப்போதான் இங்கே ரிலீஸ் ஆகுது.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னே என் அம்மா , அப்பா பற்றி ஒரு பேரா...


எங்கப்பா ஜூலை 7, 2007 ஆம் ஆண்டுதான் மாரடைப்பில் திடீர்னு இறந்தார்.. எங்களுக்கு சென்னிமலைல சொந்த வீடு இருக்கு.. மொத்தம் 4 வீடுகள்.. 3 வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு மீதி ஒன்றில் குடி இருந்தோம்.. அப்பாவின்  இறப்புக்குப்பின்  அம்மாவை ஈரோடு வந்துடச்சொல்லி எல்லோரும் அழைத்தும் அம்மா வர்லை.. எங்கப்பா வாழ்ந்த ( 30 வருடங்களா) அதே வீட்டில் தான் வசிப்பேன் என உறுதியா சொல்லீட்டாங்க.. அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் , அப்பாவின் நினைவுகளை கிளறி விடுவதாக,வர்ணிக்க இயலாத ஆத்ம சந்தோஷம்  தருவதா அம்மா சொல்றாங்க..இந்தப்படம் பார்க்கறப்போ  எனக்கு அவங்க நினைவு தான் வந்தது.. 


தென் ஆப்பிரிக்காவில் உள்ள கானகம் தான் கதை நடக்கும் இடம்.. அங்கே ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் குடி இருக்காங்க.. சில குதிரைகள் சொந்தமா இருக்கு. அந்த குதிரை லாயத்தை நடத்திட்டு இருக்காங்க.. 2 பேரும் புது மணத்தம்பதிகள்.. 

ஹீரோ ஜீப்ல ஒரு இடத்துக்கு போறப்போ ஒரு விபத்துல மாட்டிக்கறார்.. உடனே ஹீரோயின் ஸ்பாட்டுக்கு சைக்கிள்ல போறாங்க.. ஜீப்  கவிழ்ந்து இருக்கு.. அதுக்குள்ளே சிக்கி இருக்கற ஹீரோ தன் கடைசி மூச்சை விட்டுட்டு இருக்காரு.. என்னை விட்டுட்டுப்போயிடாதேன்னு ஹீரோயின் கதறியும் ஹீரோ இறந்துடறாரு.. 

 ஹீரோவின் பாடியை அடக்கம் பண்ணிடறாங்க.. ஹீரோயினை அங்கே தனியா இருக்க வேணாம்.. ஊருக்கு கிளம்பிடுன்னு டாக்டர் கம் ஃபிரண்ட் அட்வைஸ் பண்றாரு.. ஆனா ஹீரோயின் கேட்கலை..  கணவன் இருந்த இடத்துல வாழ்ந்து அந்த குதிரை லாயத்தை பார்த்துக்கறேன்னு சொல்லிடறா.. 

அவ உதவிக்கு ஒரு டீன் ஏஜ் பொண்ணு.. நீக்ரோ.. கூட மாட ஒத்தாசைக்கு.. அந்த பொண்ணோட அம்மாவும் இறந்துட்டாங்க.. ஆனா அந்தப்பொண்ணு அடிக்கடி இறந்து போன அம்மா தன் கூட அப்பப்ப வந்து பேசுவாங்கன்னு சொல்லி ஹீரோயினை குழப்பறா.. 

இனி நடக்கும் சம்பவங்களை எல்லாராலும்  நம்ப முடியாது.. உணர முடியாது.. ஐ திங்க் ஆண்களை விட பெண்களால் தான் இந்த நுட்பமான உணர்வுகளை உணர முடியும்.. 




http://images.movieplayer.it/2004/01/18/laura-harring-in-una-scena-del-film-ghost-son-38905.jpg

தனிமையின் தவிப்பில் ஒரு முறை ஹீரோயின் தற்கொலை முயற்சி பண்றா.ஆனா அந்த டாக்டர் வந்து காப்பாத்தறார்.. நார்மல் செக்கப் பண்றாங்க. அப்போதான் ஹீரோயின் கர்ப்பமா இருக்கறது  தெரிய வருது.. கலைக்கலாம்னு சொல்லியும் அவ கேட்கலை..

 ஹீரோயின் ஹீரோ கூட வாழ்ந்துட்டு இருக்கா.. கற்பனையில் .. அவளோட ஒவ்வொரு அசைவும் தன் கணவன் பக்கத்துலயே இருக்கறதா நினைச்சுக்கறா.. ஆல்ரெடி மாசமா இருக்கற ஹீரோயின் குழந்தை பெத்துக்கறா.. 


இறந்து போன கணவன் இப்போ அடிக்கடி அவ முன்னால வந்து “ என்னை விட்டுட்டு நீ எப்படி இருக்கப்போறே? என் கூடவே வந்துடு..”ன்னு சொல்றான்.,. 


குழந்தைக்கு  தாய்ப்பால் குடுக்கறப்போ குழந்தை நல்லா கடிச்சு வெச்சுடுது.. ரத்தம் வர்ற அளவு.. டாக்டர்ட்ட காட்டுனா அவர் நம்பலை.. 2 மாசமே ஆன குழந்தை எப்படி பல்லே இல்லாம ரத்தம் வர்ற அளவு கடிக்க முடியும்?னு உதாசீனப்படுத்திடறார்.. 


இப்போ கணவனின் ஆவி அப்பப்போ குழந்தையின் உடலில் புகுந்து ஹீரோயினை மிரட்டுது.. பயம் காட்டுது.. 

ஹீரோ பேய் கிட்டே இருந்து ஹீரோயின் எப்படி தப்பிக்கறா? என்பதை ஒன்றரை மணி நேரம் திகிலுடன் சொல்லி இருக்கார்..   



http://i188.photobucket.com/albums/z58/annubis44/GhostSonCap1.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



 1. தெளிவான திரைக்கதை, மிகக்குறைவான பாத்திரப்படைப்புகள்.. எந்த அளவு திரைக்கதையில் கேரக்டர்ஸை குறைக்கறோமோ அந்த அளவு தெளிவு, புரிதல், ஆர்வம் வந்துடும் ( விதி விலக்கு - பொன்னியின் செல்வன் )


2. ஹீரோயின் பயம் கலந்த நடிப்பு டாப் ரகம்.. குறிப்பா பாத்டப்ல பிளேடால தற்கொலை செய்ய முயலும் சீன், தன் குழந்தையைப்பார்த்து தானே பயப்படும் சீன் என படம் முழுக்க ஹீரோயின் ராஜ்யம் தான்


3. பேய்ப்படமாகட்டும், திகில் படமாகட்டும்  பின்னணி இசை ரொம்ப முக்கியம்.. இந்தப்படத்துல கனகச்சிதமா பயமுறுத்தும் இசை போடப்பட்டிருக்கு.. 


4. அந்த சிறுமியின் மரணப்போராட்டம் செம திகில்.. அந்த 7 நிமிடக்காட்ட்சியில் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு 3க்கும் பலத்த போட்டி.. வென்றது அந்த சிறுமியின் நடிப்பு.. நீக்ரோ முகமாக இருந்தாலும் அட்டகாசமான நடிப்பு


5. லொகேஷன் செலக்சன் அழகு.. அந்த மரச்சிற்பங்கள் செய்யும் கலைஞனின் இடம் அசத்தல்.. அந்த மரம்.. காடு என ஆர்ட் டைரக்‌ஷன் செம.. 




http://images.movieplayer.it/2004/01/18/john-hannah-e-laura-harring-in-una-scena-del-film-ghost-son-38906.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. கணவனால் ஆபத்து என்பது தெரிந்ததும் ஹீரோயின் அந்த வீட்டை விட்டு வெளியேற ஓக்கே சொல்லிடறா.. ஆனா டாக்டர் இப்போ என்ன அவசரம்? விடிஞ்சதும் காலைல போய்க்கலாம்னு அசால்ட்டா சொல்றார்.. அது ஏன்? இவரே தான் சில காட்சிகளுக்கு முன்  “ இங்கே நீ இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்னு பேசறார்.. ஏன் இந்த முன்னுக்குப்பின்  முரண்?



2. ஹீரொயின் தன் குழந்தையை கொஞ்சும்போது அது அப்படியே கணவனாக உருமாறுவது , பின் இருவரும் கில்மாவில் ஈடுபடுவது என்னமோ மாதிரி இருக்கு.. அந்த காட்சி அமைப்பில் மாற்றம் தேவை.. 


3. ஒரு சீன்ல வீட்டில் நடக்கும் சின்ன விபத்தில் கண்ணாடி அலமாரி  உடைஞ்சு ஹீரோயின் சின்னத்தம்பி க்ளைமாக்ஸ் குஷ்பூ “ நீ எங்கே என் அன்பே?  பாட்டு பாடறப்போ கால் பூரா கண்னாடி மாதிரி எதையோ ஏத்திக்குவாரே அந்த மாதிரி ஆகிடுது.. பேண்டேஜ் போட்டுக்கறா.. அவளே சுய வைத்தியம்.  ஓக்கே , ஆனா அவ எப்படி பூ விழி வாசலிலே வில்லன் ரகுவரன் மாதிரி அந்த உபகரணம் வெச்சு நடக்க ஆரம்பிக்கறார்.. அது ஏது? தனி வீடு.. கானகம்.. அருகில் ஹாஸ்பிடல் இல்லை.. உடனே எப்படி அந்த கிட் கிடைக்கும்?



4. பேய்க்கணவனின் இலக்கு தன் மனைவி தானே? எதுக்காக சம்பந்தமே இல்லாம வேலைக்கார சிறுமியை  கொலை செய்யுது? ( சாமார்த்தியமா அந்த சீனை விபத்து மாதிரி காட்டினாலும் அது எடுபடலை)

5. ஹீரோயின் ஆரம்பத்துல கணவன் போன இடத்துக்கே போக நினைக்கறா.. தற்கொலை முயற்சி எல்லாம் செய்யறா.. ஆனா அவ  தன் கணவன் கூப்பிடும்ப்போது ஏன் மனசு மாறிடறா?ன்னு தெளிவா சில்லலை.. 


6. பேய்க்கு அபரிதமான சக்தி இருக்கு.. தன் மனைவியை கொல்ல வருது.. எப்போ மனைவி “ எனக்கு உன் மேல உண்மையான காதலே இல்லை,.” அப்டினு சொல்றாளோ அப்பவே அது மனசு உடைஞ்சு கிளம்பிடுது.. அவ்ளவ் நல்ல பேய் ஏன் அவளை அப்பப்ப டார்ச்சர் பண்ணுது? டார்ச்சர் பண்ற மாதிரி காட்டிட்டா அவளை கொலை பண்ணி இருக்கனும்.. நல்ல பேய் மாதிரி காட நினைச்சா டார்ச்சர் பண்ற சீன் இருக்கக்கூடாது. எதுக்கு இந்த ரெண்டும் கெட்டான் வேலை?






ஈரோடு வி எஸ் பி ல இந்தப்படம் பார்த்தேன்.. பெண்கள் , திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்..  இந்தப்படம் வழக்கமான பர பரப்புள்ள திகில் படம் அல்ல. ஸ்லோவான ஸ்க்ரீன்ப்ளே தான்.. பொறுமையாக பார்ப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJf-AVq534w20VkCRFePMF08OREiVae8pYD-FZiibZSSh4WoCYjuNCo6hkpcD2Uwlro9pwCrELsPo6bjryPDHW0J_K4pfdtDrMQYs3TOP7e1J6RGQRb5FKAnmdhq0TQ-X0l0mtpPaakY/s400/ghostsonharring.jpg