Thursday, July 28, 2011

கலைஞருக்குப்பிறகு ஸ்டாலினா? அழகிரியா?கொதி நிலையில் கோபாலபுரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ2JH51Kid4j_jx-H26zD1Hed4NjApwT_KDv2BO0ea_vdBK4YpDaKtWD5vBKP28jALhiicCMeDdEIWLJ8RpHWfCfqzcLJw1PUG4nzDj7Ww-2mMgoKpoRY0CGNNfYNtDrIuMzHKEAXrWWiq/s1600/Kushpoo+Joining+in+DMK.jpgமுடிவுக்கு வராத மு.க. கலாட்டா!

ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

 'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக் கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. 

சி.பி - அய்யா தான் இருக்கும் வரை  சி எம் சீட் தனக்கே என்ற உயரிய கொள்கையோட உலா வர்றார்னு நினைக்கறேன்.. 

பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. 

தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. 

சி.பி - கலைஞர் ஒரு திறமையான செஸ் வீரர் போல காயை நகர்த்தறார்,ஆனா விதி வலியது

அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!


சி.பி - அழகிரிக்கு அனுபவம் பத்தாது ,ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் பத்தாது

கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்!

செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 

சி.பி - தளபதிக்கும் மன்னர் ஆக ஆசை தான்,ஆனா மகுடத்தை இறக்கி வைக்க மனம் இல்லாதவர் மன்னரா இருந்தா அவர் தான் என்ன பண்ணுவார் பாவம்?

'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சுவார்த்தைகூட இல்லை.

 சி.பி - அப்டி எல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா நீங்களே ஒரு பிட்டு போடறீங்கன்னு நினைக்கறேன். அப்பாவுக்கும், பையனுக்கும் நடுவுல 1008 இருக்கும்..
'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 

சி.பி - வருத்தம் மட்டுமா? எரிச்சலும் தான். மனசுக்குள்ளேயே மருகுவதைத்தவிர அவருக்கு வேற வழி இல்லை

(உருகுதே மருகுதே ஒரே பதவியாலே..சி எம் சீட்டுக்கு ஆசப்பட்டேன்,அப்பா கிட்டே பிட்டை போட்டேன். ஏதும் ஒர்கவுட் ஆகல.  - வெயில் பாட்டு மெட்டில் )

'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

சி.பி - அரிது அரிது அரியாசனம் கிடைப்பது அரிது
பெரிது பெரிது அதை தந்தையிடம் இருந்து அதை தட்டிப்பறித்தல்

'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார்.

சி.பி - தனக்கு கிடைக்காட்டியும் பரவால்ல,தம்பிக்கு கிடைச்சடக்கூடாதுங்கற நல்ல எண்ணம் தான், வேறென்ன?

ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.
''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. 

பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.


''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். 


சி.பி - கலைஞர் மகனுக்குப்பதவி தராமல் தட்டிக்கழிக்கிறார். அது கண்டு கனி மொழி களிக்கிறார்.  நமக்கும் எதிர்காலத்துல சான்ஸ் உண்டுன்னு..


http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg

கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...


''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார். ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.  'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. 


சி.பி எதுக்கு வம்பு?ரெண்டரை வருஷம் ஸ்டாலின்,  ரெண்டரை வருஷம் அழகிரின்னா நோ பிரச்சனை

இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.
''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள். 

நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.


உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்.
 
சி.பி - இன்னும் இவங்களை நம்பிட்டு இருந்தா அது தான் தமிழ் நாட்டு மக்களின் மிகப்பெரிய தவறு
 
நன்றி - விகடன்

சிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்களே!பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

1.அன்பு கொண்டவரைப்பார்க்கும்போது கண்களில் தோன்றும் சந்தோஷத்தை விட அவரைப்பிரியும்போது  வெளிவரும் கண்ணீர் அதிகமாக இருக்கும்

-------------------

2. வெற்றியும் ,தோல்வியும் நிரந்தரம் அல்ல,ஜெயிச்ச பின்னும் உழைப்பை விடாதே!தோற்ற பிறகு முயற்சியை விடாதே!

-------------------

3. என் காதலுக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன்,அவள் உண்மையான காதலை மட்டும் இழந்தாள்#ஒரு தலைக்காதலின் வலி

------------

4. வாட்டர் மேலே போட் போனா உல்லாசம், போட் மேலே வாட்டர் போனா கைலாசம்#டைட்டானிக் எஃபக்ட்

-------------------

5. அழகுதான் ஒரு பெண்ணின் மூலதனம் (ASSET),ஆனால் மூலதனம் (ASSET) தான் ஒரு ஆணின் அழகு#சொத்துக்கு சொத்தாக

-----------------



6. ஹென்றி ஃபிஷ் (U.S.A) என்பவர்தான் எக்ஸாம் என்னும் சிஸ்டத்தை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தியவர். வாடி வாடி, நீர் தான் அந்த சதிகாரரா?

-------------------

7. என்ன சார்? ஸ்விட்ச்போர்டுல தண்ணி ஊற்றி கழுவறீங்க?ஷாக் அடிச்சிடாது?

தம்பி! நீங்க தமிழ் நாட்டுக்கு புதுசா? #மின் வெட்டு விட்டு(WIT)

-------------------

8. காதலுக்குத்தெரிந்தது இரண்டே இரண்டு தான்

1. அழ வைப்பது 2 .அலைய வைப்பது,

காதலிக்குத்தெரிந்ததும் 2 தான்

1.விழ வைப்பது 2 நிலைகுலைய வைப்பது

------------------------

9. சூரியன் வரைந்த அழகிய ஓவியம் அவள் நிழல்

---------

10. நாம் வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது,நாம் இறந்த பின் நம்மை யாரும் மறக்கக்கூடாது

-----------------


 
 

11. தூங்கிக்கொண்டிருக்கும் காதலியை அமைதியாக ரசிக்கும் தருணமே வாழ்வின் அழகிய காதல் நிகழ்வு

-----------------------

12. என் இதயக்கதவில் எழுதி வைத்தேன் யாருக்கும் அனுமதி இல்லை என ,ஆனால் உன் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது எனக்குப்படிக்கத்தெரியாது என

-------------------

13. நமக்காக காத்திருக்கும் அன்பும்,நம்மை காக்க வைக்கும் அன்பும் என்றுமே அழகு தான்

------------------

14. உன்மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் நீ மழையில் அழுது கொண்டிருந்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்#சார்லிசாப்ளின் எஃபக்ட்.


------------------------

15. ஷேக்ஸ்பியர் எம் ஏ இங்கிலீஷ் பாஸ் பண்ணலை,ஆனா ஷேக்ஸ்பியர் பற்றி படிக்காம எம் ஏ இங்கிலீஷ் யாரும் படிக்க முடியாது

---------------


16. நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்,மறந்த பின்னும் நேசித்தால் அதுதான் உண்மையான உறவுகள்

-----------------

17. சிவப்பான பொண்ணு தான் வேணும்னு சொல்ற கறுப்பான பசங்களே!பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?#கவுண்டமணி எஃபக்ட்

--------------------

18. ஏம்மா,அந்த பேஷண்ட் ஏன் மிட் நைட்ல க்ளினிக்கை விட்டு ஓடிப்போய்ட்டாரு?

எந்த நர்ஸையும் பிடிக்கலையாம் டாக்டர்

---------------

19. மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் அன்வர் அன்சாரி  80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி#ஆண் அவிசாரி போல

--------------------

20. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன் தலைவரே? கட்சில இருக்கற எல்லோருக்கும் கல் மனசுன்னு சூசகமா சொல்றீங்களா?

----------------------

Wednesday, July 27, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி

http://shotpix.com/images/16161806371053495878.png 

தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கும், புதிய ரசனைக்கும் கொண்டு சென்றது பாலச்சந்தர், பாரதிராஜா,மகேந்திரன் என்றால் முதன்முறையாக இந்தியாவை , பாலிவுட்டை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, உலகளாவிய சந்தையை கொண்டு வந்தது மணிரத்னம் என்றால் அது மிகை இல்லை.. 


எந்த ஒரு இயக்குநரிடமும் அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் டைரக்ட்டாக ஃபீல்டில் இறங்கி டைரக்ட் பண்ணி ஹிட் கொடுத்த முதல் டைரக்டர் என்ற பெருமையையும், தமிழ் சினிமா வசனங்களின் பிடியில் கிடந்த போது காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து விசுவல் டேஸ்ட்டை புதிய பாணியில் தந்த அளவில் இவர் முக்கியத்துவம் பெறுகிறார்.  

இவரது எல்லா படங்களிலும் மழை,குதிரை கண்டிப்பாக இடம் பெற்று விடும். இவர் படங்களில் வசனங்கள் சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவதில்லை என்ற குறையும் உண்டு. ஒளிப்பதிவில் இவர் தனி கவனம் கொள்வார்.

ஜூன் 2, 1956 இல் பிறந்த இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் இவரே.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSFIR-oU-3iXDT99ri5VO_VjNTh3TombkMRMqd4PqeCmBkJfz849u5bV6l9e-ksXc9ALeVDFyTdchhdKNelk6b4N4FI21q3Mmt637Df0fIxyKrMYQCOTYzLeH0ljAVlRCYLnee9hl6HyI/s1600/PALLAVI+ANUPALLAVI2.jpg

1.  (கன்னடம்)- பல்லவி அனுபல்லவி (1983) -பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார் மற்றும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார். இப்படம் தமிழில் பிரியா ஓ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

 2. 1984 - உணரு (மலையாளம்) -இந்தப்படம் மணிரத்னம் பாணி எல்லாம் இல்லாமல் அந்த கால கட்ட மலையாளப்பட பாணியில் எடுக்கப்பட்டது.

3.1985 - இதய கோவில் -மதர்லேண்ட் பிக்சார்ஸ்சின் கோவைத்தம்பியின் உதய கீதம் வெள்ளி விழா கண்ட நேரம்,பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த இதய கோவில் தோல்வியைத்தழுவினாலும் பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ஓடின, பாடல்கள் சூப்பர் ஹிட்

1.கூட்டத்திலே கோவில் புறா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
2. நான் பாடும் மொஉன ராகம் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
3.இதயம் ஒரு கோவில் (Male) - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
4.இதயம் ஒரு கோவில் - இளையராஜா, எஸ்.ஞானகி
5.பாட்டு தலைவன் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
6.யார் வீட்டு ரோஜா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
7.வானுயர்ந்த - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
8.ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - இளையராஜா

 4. 1985 - பகல் நிலவு - சத்யராஜின் மார்க்கெட்டை ஒரு புரட்டு புரட்டிய படம்.. இதில் அவரது வித்தியாசமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது.வில்லன்கள் என்றால் பக்கம் பக்கம் வசனம் பேசியே பார்த்தகண்களுக்கு புதுமையான அனுபவமாக இது அமைந்தது.. விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப்பெற்றாலும் வசூல் பிரமாதம் என சொல்ல முடியாது.


http://123tamilforum.com/imgcache/11/67532.jpg

5.1986 - மௌன ராகம் - கார்த்திக்கிற்கு வாழ்வில் மறக்க முடியாத படம். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சுறு சுறு , துறு துறு நடிப்புக்கு பாடமாக இருந்தது.. படத்தின் கதைச்சுருக்கம்

பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி) தனது காதலனை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரின் கைகளில் இருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார்.அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார்.நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்தில் ஒன்றாக வாழ்கின்றனர்.இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? பாடல் உட்பட எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்..  இது ஈரோடு பிரபா தியேட்டரில் 40 நாட்கள் ஓடின

6.1987 - நாயகன்  - தமிழ் சினிமாவின் போக்கு,கமலின் வாழ்க்கை,மணிரத்னத்தின் மார்க்கெட் வால்யூ எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிய படம்.மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

 "நீங்க நல்லவரா கெட்டவரா" என்று மகளின் கேள்விக்கு  கமலின் பதிலான “தெரியல” எனும் வார்த்தையும் சூழ்நிலைக்கேற்ற வசனமாக அமைந்தது.நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல எனும் பதில் செம ஹிட் ஆனது.. 

பாடல்கள் செம ஹிட் . நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.. தென்பாண்டி சீமையிலே ..லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - கமலஹாசன்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பி.சி. ஸ்ரீராம்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி

இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் காட் ஃபாதர் படத்தின் ரீ மேக் என்பதால் நோ சான்ஸ்.. இது ஈரோடு ஆனூர் தியேட்டரில் 90 நாட்கள் ஓடின. 

http://lh4.ggpht.com/_lMxNrZCbDdY/TFoI6MERK0I/AAAAAAAADC4/UKwnZdD03tw/agninatchathiram.jpg

7. 1988 - அக்னி நட்சத்திரம் - படம் பார்த்த ஆடியன்ஸ் தியேட்டர் விட்டு வெளியே போகும்போதே பாதிப்பேர் அடுத்த ஷோவுக்கு ரிப்பீட் ஆடியன்ஸாக லைனில் நின்றார்களாம். அந்த அளவு இது மெகா ஹிட் .கதை சிங்கிள் லைனில் வைத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்டில் புகுந்து விளையாடிய படம். பிரபுவும், கார்த்திக்கும் சந்திக்கும் ஒவ்வொரு சீனும் பொறி பறக்கும்.. அப்போ ஒரு பேக் கிரவுண்ட் மியூசிக் வரும்.. கலக்கல் ரகம்.. மணிரத்னம் படத்தில் முதல் வசூல் மழை பொழிந்த படம் இது தான்.. 

அமலாவின் இடையை இந்த அளவு அழகியல் நேர்த்தியோடு இதற்கு முன் யாரும் காட்டியதே இல்லை.. நிரோஷா என்ற சுமார் ஃபிகரைக்கூட குளத்தில் குளிக்க விட்டு இளமை பொங்க படம் ஆக்கினார்.. பிரபுவும் சரி,கார்த்திக்கும் சரி இது போல் ஒரு வெற்றியை இதற்குப்பின் பெறவே இல்லை.படத்தில் ஃபேமஸான வசனம். 

1.நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லாம போய் இருக்க்கலாம், ஆனா உனக்கு நல்ல கனவனா இருந்திருக்கேன்

2. நீங்க நல்லா அப்பாவாத்தான் நடந்துக்க முடியல, அட்லீஸ்ட் எங்கம்மாவுக்கு நல்ல புருஷனாவாவது நடந்தீங்களா?

இந்தப்படம் ஈரோடு ஆனூர் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது




8. 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு) -இதயத்தை திருடாதே (தமிழ்) -

ஒரு காதல் கதை இந்த ஓட்டம் ஓடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நாகார்ஜூன் -கிரிஜா நடிப்பில் வெளிவந்த படம்,படம் முழுக்க செம ஜாலியாக போகும். ஓடிப்போலாமா என்ற வசனம் செம ஹிட்.. அந்த கால கட்டத்தில் எல்லா இளைஞர்களும் ஃபிகர்களைப்பார்த்து கிண்டலாக அப்படி கேட்க தொடங்கினர். 

ஓ பிரியா பிரியா,காட்டுக்குள்ளே, உட்பட 7 சூப்பர் ஹிட் பாடல்கள்.ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும்படி இருந்தது.ஈரோடு தேவி அபிராமியில் 120 நாட்கள் ஓடியது..

9. 1990 - அஞ்சலி - குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எல்லா வயது ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் எடுக்க முடியும் என்று சர்வசாதாரணமாக  நிரூபித்தார்.

சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண்- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன் சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் 

- அஞ்சலி - மணிரத்னம் என 3 விருதுகள்.சூப்பர் ஹிட் பாடல்கள் பை இளையராஜா 1.வானம் நமக்கு  2. மொட்ட மாடி 3. இரவு நிலவு- எஸ்.ஜானகி  4. அஞ்சலி அஞ்சலி  5. சம்திங் சம்திங் 6. ராத்திரி நேரத்தில்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  7. வேகம் வேகம்- உஷா உதுப்

இதில் வேகம் வேகம் பாடல் மட்டும் ஈ டி பட இன்ஸ்பிரேஷன் என சொல்லப்பட்டது.. க்ளைமாக்சில் பேபி ஷாம்லியின் நடிப்பு கிளாஸிக். ரகுவரன்,ரேவதியின் நடிப்பில் இந்தப்படம் ஒரு மைல்கல்.

இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.க்ளைமாக்சில் நெகடிவ் முடிவு..ஈரோடு அபிராமி தியேட்டரில் 60 நாட்கள் ஓடியது

http://www.envazhi.com/wp-content/uploads/2009/12/thalapathi_5.jpg

10. தளபதி - 1991 கமல் நடிப்பில் நாயகன் உருவான போதே ரஜினியை வைத்தும் எடுப்பார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்தப்படம் தான் தமிழ் சினிமாவில் மிக அதிக எதிர்பார்ப்பில் உருவான படம் ( இப்போ எந்திரன்). இந்தப்படம் ரிலீசின் போது ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் விலை ரூ 6 .ஆனால் பிளாக்கில் ரூ 90க்கு விற்கப்பட்டது.. கிட்டத்தட்ட 15 மடங்கு.. இது பர பரப்பாக பேசப்பட்டது..

இந்தப்படத்தில் இருந்துதான் மணி பாரத இதிகாசங்களில் இருந்து கதைக்கரு எடுக்க ஆரம்பித்தார்.. மகாபாரதக்கதையில் வரும் துரியோதணன்-கர்ணன் நட்பு தான் அடிப்படை.. அதற்கு மாடர்ன் கலர் கொடுத்தார்..

சூப்பர் ஹிட் பாடல்கள் ஆடியோ சேல்சில் பின்னி எடுத்தது.

1.யமுனை ஆற்றிலே - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

2. சுந்தரி கண்ணால் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி


3. புத்தம் புது பூ - யேசுதாஸ், எஸ். ஜானகிசின்னத் தாயவள் - எஸ். ஜானகி

4. மார்கழிதான் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, குழு


5. ராக்கம்மா கையத்தட்டு -எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

6.காட்டுக்குயிலு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ்

பட ரிலீசுக்கு முன்பிருந்த ஆர்வம் படரிலீசுக்குப்பின் வரவில்லை. ஓவர் வன்முறை முக்கிய காரணம். இந்தப்படத்தில் 2 பாடல் காட்சி தவிர படம் முழுக்க ரஜினி சிரிக்காமல் இறுக்கமான முகத்துடனே வருவார்.. ரஜினிக்கு முக்கியமான படம்.அர்விந்த்சாமி இதில் தான் அறிமுகம். கலெக்டராக வருவார் .



தொடரும்


நன்றி - விக்கி பீடியா ஃபார் புள்ளி விபரங்கள்

சொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை காதல்


 


1.அன்பைத்தவிர உனக்குத்தர என்னிடம் வேறேதும் இல்லை.நிராகரிப்பைத்தவிர எனக்குத்தர உன்னிடம் வேறேதும் இல்லை

-------------

2. நான் தொடுகின்ற இடம் உன் மனதாக இருக்கட்டும்,நான் மடிகின்ற இடம் உன் மடியாக இருக்கட்டும்

-------------------

3. முதலும்,முடிவுமான சந்திப்பு என அறிவிக்கப்பட்ட பின்பு முதல் சந்திப்புக்கான சந்தோஷத்தை விழுங்கி நிற்கிறது இறுதி சந்திப்புக்கான துயரம்

-------------------

4. என்னுடன் போர் புரியும் குரோதத்துடன்  நீ தயாராக இருக்கிறாய்,உன்னிடம் சரண் அடையும் உத்தேசத்துடன் பணிவுடன் இருக்கிறேன்


-----------------------

5. ஓர் எழுத்தில் என் உயிர் உருகும் ,அது நீ! மூன்றெழுத்தில் என் உடல் மருகும், அது நீ செலுத்தும் அன்பு

------------------------

6. என்னிடம் அன்பைப்பொழியும் எண்ணம் உன் மனதிடம் இல்லை.அது தெரிந்தும் உன்னை விட்டு விலகி நிற்க எனக்கு மனோதிடம் இல்லை

-----------------

7. உன்னுடனான சந்திப்பில் கண்ணீர் தளும்பி கண்களில் நிரப்பிக்கொள்வதால் நீ எப்போதும் என் எதிரே நிற்கையில் எனக்கு மங்கலாகத் தெரிகிறாய்

--------------------

8. சொல்லித்தெரிவதில்லை அன்பு, சொல்லாமல் புரிவதில்லை காதல்


-------------------------

9.  மனம் விட்டுப்பேசாதபோதே தெரிந்து கொண்டேன், உன்னிடம் என் மனதை விட்டு விட்டேன் என்று

--------------------

10. நீ என்னை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிறாய்! என் காதல் உன் தேகத்துடன் என்றே நினைக்கிறாய்!சுடு சொல் வீசி என் கண்களை  நனைக்கிறாய்

-----------------



11. சாலை விபத்தில் தமிழகம் முதலிடம், குறைக்க வேண்டும் -அன்புமணி # சேலைகளால் ஏற்படும் விபத்துகள், ஆபத்துகள் கூட தமிழகத்தில் தான் அதிகம்

-----------------------

12. கதர்துணியை அவமதித்த ராஜஸ்தான் மாநில முதல்வர்:ஷூவை கதர் துண்டால் துடைத்தார்#காந்தியையே கேவலப்படுத்தினவங்க,கதர்துணியை விட்டு வைப்பாங்களா?

-------------------------

13. இந்த ஆண்டில் சமச்சீர் கல்வி அமலாவதுசாத்தியம் இல்லை#ஸ்கூல் ஓப்பன் ஆகி ஒரு மாசம் ஆகுது, இன்னும் அமலாகலை, அமலா பால் ஆகலைனுட்டு,ராஸ்கல்ஸ்

----------------------------

14. ஆபாச காட்சி இருந்தா வரிவிலக்கு கட்! தமிழக அரசு அதிரடி!!#அப்போ இனி தமிழ்ப்படத்திலயும் மலையாளப்படம் மாதிரி பிட் சேர்க்கப்போறாங்களா? ஐ ஜாலி

------------------------

15. சிக்ஸ் பேக்கை காட்ட போகிறார் சிம்பு!#மீதி 4க்கு எங்கே போவாரோ?

--------------

16.  மாப்பிள்ளை தேடுகிறார் சிம்பு!#தங்கைக்காக அப்டின்னு டைட்டில்ல ஒரு வார்த்தை சேருங்கப்பா, அவனா நீ அப்டின்னு கிண்டல் பண்னப்போறாங்க . 


-------------------

17. நான் பதில் சொல்லும் அளவுக்கு சோனா ஒரு  பெரிய நடிகை அல்ல.-நமீதா #ஆமா,உங்க அளவுக்கு அவருக்கு மார்க்கெட்டும் இல்ல........

-----------------

18. அமீர்கானின் சொந்த படத்தில் ஆபாசமான, கெட்ட வார்த்தைகள் கொண்ட பாடல் வரிகள் ,கோர்ட்டில் வழக்கு#தாரே ஜமீன் பர் நாயகன் இப்போ ஜாமீன் பர்?

------------------------
19. தமிழகஅரசுக்கு கல்வி மற்றும் சட்டத்துறையில் சரியான ஆலோசனை வழங்குவதற்கு உரியவர் எவரும் இல்லை. -அரசு வக்கீல்#ஏன்? சசிகலாக்குஎன்னகுறைச்சல்?
----------------------

20. ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்#மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதால வருத்தம்தானே படனும்?

-----------------------------




ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப. சிதம்பரமும் ஒரு குற்றவாளியா? ஜூ வி அதிர்ச்சி கட்டுரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQwpIsczYIot-ZA32vmSYDt5PnMOwGFpV_uxl845MX-F_IGceu72HaqQqNXcYXJxqFPDE7xcErH3HOykne9HfktiwpTDOXuHYQsfMmkqaayVdFyC4-hChHdTJNJe8eb_LkyH1I374FnkO6/s1600/pc.jpg 
 
நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்
 
தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.

 இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.


4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும். என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. 

இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.

பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். முதலில் ப.சிதம்பரம் மீதான நான்கு குற்றச்சாட்டுகளைப் பட்டியல் இட்டார்.

குற்றச்சாட்டு - 1:  2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில், தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். 

இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?


குற்றச்சாட்டு - 2 :  டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. 

இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. 

இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFIRs5Xr7DtiZ_hHzh8YVA-WCqVwmuYmN87Dte7IBIWFbgq_-Ydg62c9GTOd17MwDYmgPY0enETOjb-n9euhI1V4f7wA5lmZyDl9uwHyvGzWGnD6PpEdTc_PXn8M6GngdP7183GbtQpAw/s1600/5263847701_e5cd14723f.jpg

குற்றச்சாட்டு - 3:  ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?


குற்றச்சாட்டு-  4 :  தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?'' என்றார் ஆவேசமாக.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiolRDGoKXjOjiHHZjXCZPDqfqjqYhx4udz9oHfGsh0PBDjN5JVskd-X58Ql-_ptABbKmt2bBNHUwDjjZeLSfDepdlKcLc5gXt4QOTYU7MIhPluTqf5QH1s7Jrq-v38Km4q3o8vfKcg7rw/s1600/rasa.jpg


இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!

நன்றி - ஜூ வி 

Tuesday, July 26, 2011

தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்



 1. '' 'சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?'' 

''அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி  போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும்கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை!''



'2. 'மறைக்காமல் சொல்லுங்கள்... தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?'' 

''வண்ண நிலவன். அவரது 'எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது!''



3''எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?'' 


''குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.

எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும்  வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன,  சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது!''



4. ''ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?'' 

''இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்?
ஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி... அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது?

எழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து  கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.


அதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, நுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க  வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது!''

5.''உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது?'' 

''மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.

யாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.
மழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், 'இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் 'வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். 'ஒரு ஆள்’ என்று சொன்னேன். 'கையில் பணம் இருக்கிறதா?’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.

நான், 'என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.


'என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், 'அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, 'இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.

ஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது!''  

6.''எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..?'' 


''இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.

கண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்... அதன் மகத்துவம் புரியும்!''


7.''நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ?'' 

''எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.
ஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே!
மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள்! வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்!''


8.''குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன?'' 

''கதை கேட்பது, கதை சொல்வது இரண்டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.
இன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று  கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.  

படித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.

குழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.

கதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்!


நம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்!''

9.''உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார்? ஏன்?'' 

''டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார்,  கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்!''

நன்றி - விகடன்

ஆர்ட்ஸ் காலேஜா? ஹார்ட்ஸ் காலேஜா?அடங்கோ

House Between Rocks Is Reflected In Brittany, France
1.நம்ம காலேஜ்க்கு அழகான விளம்பர வாசகம் ஒண்ணு சொல்லு.. “

சிங்கிளா வாங்க ,டபுளா போங்க #ஆர்ட்ஸ் காலேஜா? ஹார்ட்ஸ் காலேஜா?அடங்கோ

-------------------------

2. GABRIEL BALOBIOUS - இவரை தெரியாதவங்களே இருக்க முடியாது, இருக்கக்கூடாது,

”அப்டி என்ன பெரிய கண்டத்தை கண்டுபிடிச்சாரு?

“ நோ நோ காண்டத்தை”

-----------------------

3. ஸ்பெயின் நாட்டில் துணியால் செய்தித்தாள்கள் வெளியிடப்படுகிறது #துணிவுள்ள செய்திகள் துணி யில் உள்ள செய்திகளா?

------------------

4. உலகின் மிகச்சிறந்த பலசாலி கூட  உலகின் மிகச்சிறந்த மகிழ்ச்சியான மனிதன் முன் பலவீனமாகவே கருதப்படுவான்


----------------

5. தவறுகள் நிகழும்போது வலி நிறைந்தவையாக இருக்கும், அதுவே( வலிகளின் தொகுப்பு ) எதிர்காலத்தில் அனுபவம் ஆகி விடும்

-------------------

Arizona dust storm


6. லைஃப் ஏன் மெக்கானிக்கல் லைஃபா ஆகிட்டு வருது?

தெரில ,ஒரு வேளை மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க் படிச்சதாலோ என்னவோ?

---------------------

7. எங்க குடும்பத்துல மொத்தம் 46 பேர் இருக்கோம்.

யோவ், கூட்டுக்குடும்பமா? அது கூட்ஸ் குடும்பமா?

-------------------

8. அத்தான்,நான் செத்துப்போய்ட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?

ஆமான்னு சொன்னா நீ கோவிச்சுக்குவே,நோ சொன்னா உன் தங்கை கோவிச்சுக்குவா.

--------------

9. லவ் ஃபெயிலியர்ங்கறது ஒரு சிங்கிள் பேப்பர்,லைஃப்ங்கறது டைரி.சிங்கிள் பேப்பர் மிஸ் ஆகிடுச்சுன்னு ஏன் டைரியை வேஸ்ட் பண்ணனும்?

-----------------

10. ஒரு பெண்ணை வசீகரிக்க அவள் சொல்லும் மைல் கணக்கான ஆசைகளை நிறைவேற்றனும். ஒரு ஆணை பெண் வசீகரிக்க ஜஸ்ட் ஒரு ஸ்’மைல்’ போதும்

-------------------



11..மார்க்கெட்ல மல்லிகைப்பூ வாங்கிட்டுப்போனா அவனுகு மேரேஜ் ஆகி 2 மாசத்துக்குள்ளேதான் இருக்கும்,கொத்துமல்லி வாங்கிட்டுப்போனா 2 வருஷம் இருக்கும்

----------------------------

12. ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது தி.மு.க., முடிவு#அழகிரி கனவோட காத்திருக்கப்போறாரு!யாருக்கும் கிடையாதுன்னு அடிச்சு விடுங்க தலைவரே

------------------

13. தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி#அப்போ தலைமைப்பொறுப்பை துறக்கப்போறீங்களா? தலைவரே?

-----------------

14. ஊழலுக்கு எதிராக பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது.-இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா #ஒரு ஆக்டிங்கையே உருப்படியா பண்ணத்தெரியாது அதுக்கு

-----------------------

15. திமுக,அதிமுக., எல்லாம் ஒரே கட்சி தான்; மது விற்கும் பணத்தில், இலவசங்களை வழங்கி வருகின்றனர்.-அன்புமணி #அப்போ ஏன் கூட்டணி வைக்கறீங்க ?

-------------------

16. கச்சத்தீவை மீட்க வேண்டும்-திமுக பொதுக்குழு தீர்மானம்#தலைவரே!முதல்ல கட்சியோட முக்கிய தலைகளை சிறையிலிருந்து மீட்கப்பாருங்க

-----------------------

17. ஏதாவது செய்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதை விட எதுவுமே செய்யாமல் நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது  காதலி மட்டுமே

------------------

18. அவள் பிறப்பிடம் வேறு, படிப்பிடம் வேறு, ஆனால் என்றும் அவள் இருப்பிடம் என் இதயம்

-------------------

19. ’திமுகவை வலுப்படுத்த 7 பேர் கொண்ட குழு-கலைஞர் #தலைவரே,கட்சி வலுவாத்தான் இருக்கு,தலைமைதான் வலு இல்லாம கிடக்கு

------------------

20. வாழ்வதற்குப்பொருள் இருக்க வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் இருக்க வேண்டும்

---------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2d94dPqtJDmRYNnRJ-BKEaczdb1C_2t901P7SnwqClhxxXbPJ0cppWYzdSa-_TDa904m4p1XXoA5AORsdIXnIzO0XTHxj9PkU3KAmTuxNyvkRFaISsebv-Jdm9VEPpzlWI3uDbpbn6KM/s400/Indian-Girls-Playing-Holi-Photos-19.jpg

21.வருடத்திற்கு 12 முறையாவது சேலை கேட்டு மனைவி  நச்சரிக்கிறாள்,ஒரு முறை நம் அம்மாவுக்கு வாங்கினால் போதும் போதும் என எச்சரிக்கிறாள்

--------------------

22. நம் பெற்றோருக்கு புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு இல்லை,நம் வாரிசுகளுக்கு வாய்ப்பு இருந்தும் படிக்க விருப்பம் இல்லை#அநாதையாக இலக்கியங்கள்

---------------------

23. பழைய சோறு+நீச்சத்தண்ணீர் கரைத்துக்கொடுத்த அம்மாவின் அன்புக்கு முன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சர்வர் காட்டும் போலியான பணிவு எடுபடவில்லை


---------------------
24. திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம்#காஜல் அகர்வாலே படத்துல ஐஸ்க்ரீம் மாதிரிதான்

------------------------------

25. சினிமாக்காரர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்! ஜெ., கண்டிப்பு!!#ஆமாங்க மேடம்,இந்த சினிமாக்காரங்களால தமிழ்நாட்டுக்கே அவப்பெயர் தான் ஹி ஹி 


------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlNWYo8jP_RbsYtozjKkLJHt8IydzfStoSf5DdHeArI3a8gob3BK9Yr1GjBPsIZQPKdSguA3nYPgmwDiMCGnqYuAxPMPtGt4CUJwKsymoP1p8D_ZpUTy71CuM8QvTiZQkCpiNzjFQnXnL8/s400/desi-indian-girls.jpg

26.  சினிமாவாகிறது பாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில்-செய்தி#டைட்டில் என்ன? போலீஸ்வாலா சுடிதார் லே ஜாயேங்கே வா?

---------------------

27. பாபா ராம்தேவ் வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.அவர் தான் பொருத்தமாக தெரிகிறார்#ஆனா படத்துல ஜோடி இல்லைன்னு அவர் வருத்தமா தெரிகிறார்

----------------

28. உலகின் கவர்ச்சியான பெண் காத்ரீனா கைப்!-ஆன்லைனில் தேர்வானார்#கவர்ச்சியான ஆண் போட்டி வெச்சிருந்தா எங்க அண்ணன் ராம் தேவ் செலக்டாகி இருப்பாரு

-------------------------

29. பெண்ணின் பலம் எது? என எல்லா ஆண்களுக்கும் தெரியும்,ஆணின் பலஹீனம் எது என எல்லா பெண்களுக்கும் தெரியும்

---------------------

30 . கவர்ச்சி நடிகை சோனா 100 பேருக்கு உடை வழங்கி தன் பிறந்த நாளை கொண்டாடினார்#அங்கே கூட கவர்ச்சி காட்டிட்டே தான் கொண்டாடனுமா மேடம்?சகிக்கல

-------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXX94XqbCdbR69VoQraxhJDRJzguV5Jputv-QpvMFmVr1gxFz2BaqwcZRVtk_O4wlUfSxGtKamaBRkKt4Pe40OVzS5h12f0PGOngteEjTTo7F5PNA8LJA7LQVDfbGCCcnw4XslJDjZilq_/s1600/indian-girls-520x693.jpg

Monday, July 25, 2011

தெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட்டி

http://blog.unchal.com/wp-content/uploads/2011/07/sara-11.jpg
ள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!


 கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)    


''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். 

அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். 

நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''
 http://www.viduppu.com/photos/full/actresses/others/amala_paul20.jpg

1. ''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''


''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''


2. ''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''


''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''



3. ''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''

(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''


4. ''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''


''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''


5. ''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''


''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''


6. ''அவங்க யாரு?''


''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''


7. ''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''


''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!
எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''


(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)


8. ''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''  


''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''


(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு  ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)
 சாரா

9. ''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''


''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. 

ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே  உயரமா வரணும்!''
(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)


10. ''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''


''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். 

அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''     

     
11. 'யார் தியாகராஜன்..?'

'
''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''


12. ''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''


''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. 


சாரா
நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''


கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!

நன்றி - விகடன்

வயசுப்பசங்க அதிகாலையில் துயில் எழுவது எதனாலே?



www.forwards4all.com
1. ஆண்களின் கோபத்தை பெண்கள் சட்டை செய்வதில்லை,ஆனால் பெண்களின் மவுனம் ஆண்களை பயப்படுத்துகிறது#சைக்காலஜி

----------------------

2. ஃபிகர்கள் பாதங்களை அலங்கரிக்கும் கொலுசும்,வீட்டில் மழலைகள் செய்யும் ரவுசும் ஒன்று தான். ஆண்கள் கண்டு கொள்வதில்லை#ஜெண்ட்சாலஜி

--------------------------

3. ஹை க்ளாஸ் ஃபிகர்கள் ஹோட்டலில் சாப்பிடும்போது காட்டும் நளினம்,நாசூக்கு இவற்றை எந்த ஒரு ஆணாலும் தொட்டு விட முடியாது#டைனிங் டேபிள் மேனரிசம்


---------------------------

4. பஸ்ஸில் வரும் புது மணத்தம்பதிகளின் செல்லச்சீண்டல்களே முதிர் கன்னிகளுக்குக்கிடைக்கும் காட்சி இன்பமாக இருக்கிறது#பஸ்ஸாலஜி

---------------------

5. ஆறடி உயர ஆணுக்கு கிடைக்கும் நேரடி பலன் தான் பெண்ணின் ஆச்சரியப்பார்வை#லேடீஸாலஜி

--------------------

www.forwards4all.com


6. சுடிதார் அணிந்து வந்த பெண்ணின் முகத்தில் பல தருணங்களில் சேலை அணீயாமல் வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை பார்க்கலாம்#லேடீசாலஜி

-------------

7. மழை பெய்யும்போது யார் யார் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்க குடையுடன் நான் வெளியே நிற்கிறேன்

---------------------------------
 8. அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது.. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை#ஃபேமிலி செண்ட்டிமெண்ட்


-------------------------

9. ஹீரோ ஆகிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!#தமிழ்நாட்டுக்கு சோதனைக்காலம் தான்.மக்களைக்காப்பாத்துவார்னு பார்த்தா இப்படி பழி வாங்கறாரே?

----------------------

10. அதிகாலையில் எழுந்து யாரும் பார்க்கும் முன்பே கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடவேண்டும்எனபெண்கள் நினைக்கிறார்கள்#அதிகாலையில்துயில்எழு

------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg59Mbgw9TDW_pUxDZqeYYt-i9ClHInsQjmWXH5ntukF1LzIMjcgMffFzaqhH_tg1YupWnDrayVQYEttWxnCDI3vd7ESWdDiMUlJfKkOYaMyOydc2W76kAgxsRzD_VN2VIpsZp8gSET4ymm/s1600/Patios+C%25C3%25B3rdoba.-18.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBx5qUQerW6wOao-nX1uDr_-tTTAAKHqB9XDsr4r0SypfnHsMb8nk1wPx_ofn0kEcebbnYWl0ABKTzBR5utVCuLMc8nb3QgieErK8ws5LgJ8-7xTw53R_2Z-UgaOtucjZMTh08OQoNYlY/s400/Indian-Girls-Playing-Holi-Photos-24.jpg

11.பெண்ணுக்கு ஆதரவுக்குரலை வெளிப்படையாக கொடுப்பவர்களில் பலர் உள்ளுக்குள் பெண்ணின் நன்மைக்கு எதிராக சிந்திக்கலாம்

-------------------------
12. 25 வருடங்களாக அம்மாவின் சமையலுக்கு பழகிய மகனால் தன் மனைவியின் சமையலுடன் உடனே ஒத்துப்போவது சிரமம் தான்

------------------------------

13. நமக்குப்பிடித்தவர் நம்மிடம் பேசுவார் என எதிர்பார்க்கும் நேரங்களில் நமக்குப்பிடிக்காதவர் வலியனா வந்து பேசினால் நமக்கு மொக்கையாகத்தெரியும்

------------------------

14. ஒரே ஒரு திருநீற்றுக்கீற்று ஆணின் முகத்துக்கு அழகு,ஒரே ஒரு குங்குமப்பொட்டு பெண்ணின் முகத்துக்கு அழகு#பியூட்டி டிப்ஸ்

--------------------

15. எல்லோரிடமும் வெற்றி அடைந்து தன் ஆளுமையை நிரூபிக்கும் ஆண் தன் குழந்தையிடம் மட்டும் தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைகிறான்#மழலை இன்பம

---------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsqazqRfpK7vMeT4LvYkE20p9VRyt_2fJSLTUDuGQb27GeWUNtXlkyK7WS2NHhzzZl2E05wzFoOKsQ9LI1kK-KlTfXOOgP1brMUx13GqkhFbqxhM92RbH642N2Qqbr3URkFxO7yS6xZyqu/s1600/indian.jpg

16.  காலம் காலமாக கண்ணுக்கு மை வைத்து வைத்தோ என்னவோ ஆணின் முகத்தில் கரி பூசுவது பெண்ணுக்கு கை வந்த கலை ஆகிறது

----------------------

17. பெண்ணின் அன்புக்கு ஆண் ஏங்குகிறான்,ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள நாணுகிறான்#ஜெண்ட்ஸாலஜி

-------------------

18. காதலியை காமெடிப்படத்துக்கோ, திகில் படத்துக்கோ அழைத்து செல்லவும்,விழுந்து விழுந்து சிரிக்கையில் உன் மீது விழலாம்,பயத்தில் உன்னை அணைக்கலாம்

----------------------

19.  தன்னை விட வயதில் குறைந்த யாராவது டேய் என அழைத்தால் சஞ்சலப்படும் ஆண் தன் குழந்தை அப்படி கூப்பிட்டால் மட்டும் குதூகலம் அடைகிறான்#மழலைஇன்பம்

---------------------------

20. ஆண் முரட்டுத்தனமாக வெளியில் காண்பித்துக்கொண்டாலும் பெண்ணின் மனோ பலத்தின் முன் அவன் பலவீனன் தான்

------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc1CUZo2Xp8TGH0ttN3p64Mwkl_G_fQ-SjEVmCnUffH0WdIIH1kRwyy8XdGuvY6-0WYhP4DARQZj4RNO1S5qmiYEFBY8t5bQ0Yqw-TN5jBsAW9P-PnUI9Fxz4uHNrq92UM1JdgaSi82BHg/s400/Indian+&+Pakistani+Local+Girls+Pictures.jpg