Sunday, July 24, 2011

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் -உண்மை சம்பவம்

snowstorm-china-yamashita_25988_600x450

ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இயங்கிகொண்டேதான் இருப்பார்கள்.ஆண் பெண்னை ஏமாற்றுவதும்,பெண் ஆணை ஏமாற்றுவதும் இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.மொத்தத்தில் மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது.. 

எனது முன் தினப்பதிவுகளில் சென்னைப்பதிவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பதிவு போட்ட பிறகு பலர் தனி மெயிலில், ஃபோனில் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தார்கள்.. அவற்றில் என் மனதை மிகவும் பாதித்த சம்பவங்களை உங்களுடன் வருத்தத்தோடும், கண்ணீரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவன் பெயர் பரத், இருப்பது மதுரை.ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் இறுதியில் சந்திக்கும் இடத்தின் பெயர் கொண்ட பிளாக் ,அதை நடத்தி வருவது சுந்தரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

இவர் தனது பிளாக்கில் கதை ,கவிதை,ஜோக்ஸ்,கட்டுரை என கலந்து கட்டி பதிவுகள் போடுவார்.. தனது ஃபோட்டோவை பப்ளிக்காக புரோஃபைல்லில் போட்டிருக்கிறார். ஃபேஸ் புக்கிலும் தன் ஃபோட்டோ,மெயில் ஐ டி எல்லாம் ஓப்பனாக பகிர்ந்திருக்கிறார்.

பரத் இவரது பிளாக்கில் ஆரம்பத்தில் எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு சாதாரண வாசகனாக  அறிமுகம் ஆகி இருக்கிறான்.. 

சுந்தரி திருமணம் ஆனவர், வயது 34 . பரத் திருமணம் ஆகாதவன், வயது 29. படைப்புகளை பற்றி பாராட்டி ஆரம்பத்தில் தனி மெயிலில் பகிர்ந்திருக்கிறான்.

பாராட்டுக்கு மயங்காத படைப்பாளியும், ஊதிய உயர்வு கேட்காத உழைப்பாளியும் உலகில் இல்லை என்ற தத்துவத்திற்கு  ஏற்ப சுந்தரி நல்ல ஒரு தோழியாக பழகி இருக்கிறார். பரத் ஆரம்பத்தில் அக்கா என்றே அழைத்து வந்திருக்கிறான்.. 

பரஸ்பரம் இருவரும் செல் ஃபோன் நெம்பர், ஃபோட்டோக்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.4 மாதங்கள் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சாதாரணமாக இவர்கள் நட்பு வளர்ந்திருக்கிறது.. 


Highway Throgh Qidam Basin In Western China


4வது மாத முடிவில் “ அக்கா, உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கு, எங்கே ,எப்போ பார்க்கலாம்? என கேட்டிருக்கிறான்.

சுந்தரி தனது வீட்டு அட்ரஸ் கொடுத்து குறிப்பிட்ட தேதியில் மாலை 6 மணிக்கு வரச்சொல்லி இருக்கிறார். தனது கணவரிடமும் இப்படி ஒரு நண்பர் இருப்பதாகவும் வரப்போவதாகவும் சொல்லி விட்டார்.

இங்கே தான் பரத் தன் குயுக்தி மூளையை  பயன் படுத்தி இருக்கிறான்.சுந்தரி சொன்ன அட்ரஸ்க்கு காலையில் 9 மணிக்கே போய்ட்டான்.. வீட்டுக்கு போகாமல் தெருவோரம் நின்று வேவு பார்த்திருக்கிறான்.சுந்தரியின் கணவர் 9.30 க்கு வீட்டை விட்டு ஆஃபீஸ் கிளம்பியதை பார்த்து விட்டு எதேச்சையாகப்போவது போல் 10 மணிக்கு வீட்டுக்கு போய் இருக்கிறான்.. 

ஏன் இவன் மாலையில் வராமல் காலையில் வந்தான்? என்ற சந்தேகக்கேள்வி மனதில் தொக்கி நின்றாலும் சுந்தரி அவனை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார். கிச்சன் ரூமில் போய் காபி போட்டு வருவதற்கு அவர் உள்ளே போனதும் பரத் பட பட என்று ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம் என ஃபோட்டோக்களாக எடுத்து தள்ளி விட்டான்.(இந்த மேட்டர் பின் போலீஸ் விசாரணையில் அவனே ஒப்புக்கொண்டு சொன்ன வாக்குமூலம்)

cormorant-palette_25982_600x450

சுந்தரி கிச்சனில் காபி போடுவதை பேக்கில்  (BACK)இருந்து அவருக்கே தெரியாமல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டான் பரத்.பின் ஏதும் தெரியாதவன் போல் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.சுந்தரி ஹாலுக்கு வந்து காபி குடுத்ததும் காபி குடித்துக்கொண்டே 30 நிமிடம் பேசி இருக்கிறார்கள். 



பின் பாத்ரூம் போகனும் என்று அவரிடம் சொல்லி  பாத்ரூம் போய் அங்கேயும் சில ஸ்நேப்ஸ் எடுத்துக்கொண்டான் பரத். பின் சுந்தரியிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டான்.. வேறு எந்த தவறான முயற்சியோ, மோசமான பார்வையோ  காட்டாமல் நல்லவனாகவே நடந்து கொண்டான்.... 

பிறகு 10 நாட்கள் கழித்து பரத் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்..

அக்கா என அழைப்பதை கட் பண்ணி பெயர் சொல்லி அழைத்திருக்கிறான்.. அவரது உடல் அழகை ஆபாசமாக வர்ணித்து மெயிலில் கடிதம் அனுப்பி இருக்கிறான்.. 

டேய். என்னடா இது? நல்லாதானே இருந்தே? உனக்கு என்னாச்சு? நான் கல்யாணம் ஆனவ, உன்னை விட 5 வயது  சீனியர், உனக்கு அக்கா முறை.. ஆகுது. இனியும் இது போல் பேசுவதாக இருந்தால் நம் ஃபிரண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம்”

என்று வார்னிங்க் பண்ணி இருக்கிறார் சுந்தரி.. 

ஆனால் அவன் அதை சட்டை செய்யவில்லை.. தொடர்ந்து பாலியல் ரீதியில் மெயில் அனுப்பி இருக்கிறான்.. (ஒன் சைடு மட்டும்.. சுந்தரி நோ ரிப்ளை)

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த சுந்தரி தன் மெயிலை மெயில் ஐ டி யை மாற்றி விட்டார். தன் செல் ஃபோன் நெம்பரையும் லாக் பண்ணி புது நெம்பர் வாங்கிக்கொண்டார். 

தனது இரு வழிகளும் தடை பட்டதும் பரத்துக்கு செம டென்ஷன் ஆகி விட்டது. 

சுந்தரியின் பிளாக்கில் போய் சுந்தரியும், பரத்தும் தாம்பத்ய உறவு கொண்ட மாதிரி மிக ஆபாசமான நடையில் கதை போல ஒரு பெரிய கமெண்ட்டை அவரது 217 போஸ்ட்களிலும்  ஒரே நேரத்தில்  போட்டு விட்டான்.. கமெண்ட் மாடரேஷன் வைக்காத தளம் அது. 


swan-wyoming-blair_25989_600x450
சுந்தரிக்கு செம ஷாக்.. உடனே அவனை ஃபோனில் கூப்பிட்டு நியாயம் கேட்டிருக்கிறார்.. அவன் சினிமாப்பட வில்லன் போல அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறான். 

இது ஆரம்பம் தான்.. நீ என் ஆசைக்கு இணங்கலைன்னா இன்னும் பல தாக்குதல்கள் வித்தியாசமா வரும்..

 எந்த பதிலும் சொல்லாமல்  கோபமாக கட் பண்ணி விட்டார் சுந்தரி.. 

அடுத்த நாள் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது... 

அவரது ஃபேஸ் புக்கில் அவரது மேலாடை இல்லாமல் அமர்ந்திருக்கும் படம் வெளியானது.. ( ஒரிஜினல் அல்ல) அதுவும் அவரது பெட்ரூமில், பாத்ரூமில் இருப்பது போல.. 

சுந்தரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது மார்ஃபிங்க் செய்யப்பட்டது என்று சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?

சாதாரணமாக அந்த ஃபோட்டோ வந்திருந்தால் பிரச்சனை இல்லை, அனைத்துப்படங்களும் அவரது வீட்டில் இருப்பது போல வந்ததால் பிரச்சனை.

கணவரிடம் சொல்லவும் வழி இல்லை, யாரிடம் பகிர்வது என்ற குழப்பத்தில் 2 நாட்கள் ஆஃபீசுக்கே போக வில்லை.ஆனால் அதற்குள் அவரது ஃபோனுக்கு ஏகப்பட்ட கால்கள்? அது நீங்களா? என கேட்டு.. 

நொந்து போன சுந்தரி அந்த ஆஃபீஸ்க்கு போவதையே தவிர்த்தார்.. வேறு ஒரு ஆஃபீஸில் ஜாயின் பண்ணிக்கொண்டார்.

உருப்படியாக அவர் செய்த ஒரே காரியம் ஒரு எஸ் ஐ அவர்களிடம் புகார் செய்ததுதான். தான் காலேஜ் டைமில் தன்னுடன் படித்த ஒரு நண்பன் போலீஸில் பணி புரிகிறார் சென்னையில் . அவரிடம் எல்லா விஷயங்களையும் சொன்னார்.. 

பரத் கொடுத்த முகவரி போலி.  செல் ஃபோன் நெம்பர் ஸ்விட்ஸ் ஆஃப்.. அந்த செல் எண்ணில் ஒரு ஃபோர்ஜரி அட்ரஸ். மெயில் ஐ டி வைத்து அவன் அட்ரஸை ட்ரேஸ் அவுட் பண்ணினார்கள்.

அவனை நையப்புடைத்ததில் அவன் பல உண்மைகளை வெளியிட்டான்.

அவனுக்குத்தொழிலே இதுதான்.. பெண்களிடம் செட் செய்வது.. இன்பம் அனுபவிப்பது, பின் பணம் கேட்டு மிரட்டுவது..

அவன் மேல் கேஸ் போடப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது. 

வழக்கு தீர்ப்பு வந்த பிறகு முபாரக் ஃபோட்டோவும் பரத் ஃபோட்டோவும் வெளியிடப்படும்.

1238

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை



1. பெண் பதிவர்கள் கண்டிப்பாக கமெண்ட் மாடரெஷன் வைத்துக்கொள்ள வேண்டும்..

2. புரோஃபைலில் அவர்கள் படம் போடுவதை தவிர்க்கலாம், மீறிப்போட்டால் அதை காப்பி பண்ண முடியாதபடி லாக் சிஸ்டம் வைக்கலாம்.

3. சேட் செய்யும் ஆண்களிடம் பர்சனல் தகவல்கள் சொல்லாமல் இருக்கலாம். கணவர் ஆஃபீஸ் போகும் டைம்,  தன் வீட்டு முகவரி இப்படி.


4.  சேட்டிங்க்கில் பழக்கமான நண்பர்களை தனிமையில் சந்திப்பதை தவிர்க்கலாம். தன் தோழிகளோடோ, ஆஃபீஸ் கொலீக்கோடோ சந்திக்கலாம். 

5.  முதல் முறை சந்திக்கும்போது எடுத்தவுடன் தன் வீட்டுக்கு வர சொல்லாமல் பொது இடத்தில் பப்ளிக் நடமாடும் இடத்தில் சந்திக்கலாம்.

6.  வீட்டுக்கு அழைக்கும் பட்சத்தில்  அவர் எந்த ஃபோட்டோவும் எடுக்காமல் கண்காணிக்கலாம்..

7. சேட்டிங்க் செய்யும் நபர் சந்திக்க ஆசைப்படும்போது தன் வீட்டுக்கு வர சொல்லாமல் அவர்கள் வீட்டுக்கு போய் பார்க்கலாம். ஒரு க்ளான்ஸ் பார்த்தால் அவர்கள் குடும்ப சூழல் தெரியும்.

8. எல்லாவற்றையும் விட பெஸ்ட் வழி ஒன்று உள்ளது. அது நோ சேட்டிங்க்.. நோ பர்சனல் சந்திப்புகள்.. இது தான் நிம்மதியான வாழ்வை தரும்..  படைப்பு நல்லாருக்கா? பப்ளிக்கா கமெண்ட் போடு. போய்ட்டே இரு.. தேவை இல்லாமல் தனி மெயிலில் நோ கடலை..

9. மீறி சேட்டிங்க் பண்ணி இது போன்ற பிரச்சனைகள்  வந்தால் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிக்கொண்டிராமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.போலீஸ்க்கோ, சைபர் க்ரைம்க்கோ உடனே புகார் கொடுங்கள்.

உங்கள் பெயர் வெளியே வராமல் குற்றவாளிகளை பிடிக்க சட்டத்தில் இடம் உள்ளது, நோ பயம். அதை விடுத்து தற்கொலை எண்ணத்திற்கோ , வேறு விபரீத முடிவுகளுக்கோ போய் விட வேண்டாம்.

10. பதிவர் சுந்தரி தன் கணவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி விட்டார். இனி சேட்டிங்க் செய்யும்போது கவனமாக இருக்கவும் என கணவராலும் ,நண்பர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

11. ஃபேஸ்புக்கில் பர்சனல் விபரங்கள் போடும்போது கவனமாக பகிரவும்.. 

டிஸ்கி - கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறும்போது பாதிக்கப்பட்ட பெண் பதிவர் மனம் புண்படாத மாதிரி  கமெண்ட்ஸ் போடவும், மீறி ஏதாவது டவுட்ஸ் இருந்தால் என் தனி மெயிலில் மெயிலிடவும்..

,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்


1. அண்ணே, பசிக்குது, 4 இட்லியாவது வாங்கிக் குடுங்க எனும் அவலக்குரலை கடந்து சென்று சாப்பிட  அமர்ந்தபோது வழக்கத்தைவிட 2 இட்லி கம்மியாகத்தான் சாப்பிட்டேன்.

----------------------------------

2. சந்தர்ப்பம் தெரியாமல் செய்யப்படும் பகடிகள் சில சமயம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,டைமிங்க் ஜோக் சில சமயங்களில் டையிங்க் எஃபக்ட் (DIEING EFFECT)

-----------------------------

3. வலி என்பது நம் அன்புக்குரியவர் நம்மை புரியாத போது ஏற்படுவது,

   மரண வலி என்பது அவர்கள் நம்மை தவறாக நினைக்கும்போது நமக்கு

   நிகழ்வது

-----------------------


4. காலப்போக்கில் வலிகள் மறந்து விட்டாலும்,தழும்புகள் மறைந்து விடுவதில்லை,கண்களில் அடிக்கடி தட்டுப்பட்டு ஆறிய காயத்தை மீண்டும் ரணம்ஆக்குகின்றன

------------------------------









5. முகம் அறியா நட்புக்களை நாம் நேரில் சந்திக்கும் போது நம் கற்பனையாக நினைத்திருந்த இமேஜ்போய் நிஜத்தின் தாக்கம்  முகத்தில் அறையும்போது தாங்கிடமுடிவதில்லை

----------------------------------

6. அருவிகள் எழுப்பும் பேரிரைச்சலை விட அதில் நனைபவர்களின் ”ஹா”ரிரைச்சல் குதூகலத்தின் பிறப்பிடம்#குற்றால குளியல் அனுபவங்கள்



-------------------------------

7. அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,நிறைவேறி இருக்குமா மிடில் க்ளாஸ் கனவுகள்?#ரயில் பயணங்கள்@மயில் சயனங்கள்

--------------------------------

8. தியேட்டரில் டூயட்சீன் வந்தால் தம் அடிக்கப்போகும் பார்ட்டிகள் பஸ்ஸில்,பார்க்கில் லவ்ஜோடிகளின் டூயட்களை கண் இமைக்காமல் ரசிப்பது விசித்திரம்

--------------------------

9. குற்றால அருவியில் குளிக்கப்போகையில் மழை வந்தால் குளியலை ஒத்திப்போடுபவன் இயற்கை ரசிகனாக இருக்க மாட்டான்#குற்றால குளியல் அனுபவங்கள்

-------------------------

10. முதல் காதலில் விழுந்த தருணத்தில் காதலனுக்கு ,எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் உயிர் உள்ள அழகு பொம்மைகளாக மட்டுமே தெரிவார்கள்#லவ்வாலஜி

------------------------------

A



 11. நீ அழகாக இருக்கிறாய் என்ற ஒரு பொய்யைத்தவிர வேறு எந்தப்பொய்யைச்சொன்னாலும் கண்டு பிடித்து விடுகிறாள் காதலி#லவ்வாலஜி

-------------------------------------

12. அம்மாவிடம் பல ரகசியங்களை மகள்கள் பகிர்ந்து கொள்வது போல் அப்பாவிடம் எந்த ஒரு ரகசியத்தையும் மகன்கள் கைர்ந்து கொள்வதில்லை#அப்பாலஜி(APOLOGY)

-------------------------------

13. என் காதலி ஒரு கடன்காரி,வாங்கியதை திருப்பித்தரமாட்டாள்.கந்துவட்டிக்காரனைப்போல் மிரட்டி,துரத்தித்தான் வாங்க வேண்டி இருக்கிறது கொடுத்த கிஸ்களை

-----------------------------

14. நான் இல்லாத தருணங்களில் யாரையும் நீ சைட் அடிக்கக்கூடாது என்றாள் காதலி.எல்லா இடங்களிலும் நீயே நீக்கமற நிறைந்து தொலைத்து விடுகிறாயே#சலிப்பு

--------------------------


15.  அப்பனுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கு என்ற சொலவடையை கேட்கும்போது எந்த அப்பா புள்ளய அப்பாம இருந்திருக்கு? என கேட்க தோன்றுகிறது#கண்டிப்பு

----------------------------




16. காதலி எனக்கு அணிவித்த மோதிரத்தில் இருந்த கற்கள் அவள் கன்னப்பருக்களை நினைவுபடுத்துகிறது#லவ்வாலஜி
-----------------------------


17. அம்மாவின் அருகாமையை விட அப்பாவுடன் இருக்கும் தருணங்கள் குறைவாக இருந்தாலும்அப்பாவின் அன்பு எல்லாக்குழந்தைகளுக்கும் நிறைவாக கிடைத்து விடுகிறது

-----------------------

18. நீ நல்லவனா? கெட்டவனா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்றாள் காதலி.கெட்டவனின் கண்களுக்கு தேவதைகள் காட்சி அளிப்பதில்லை,நீ எனக்கு தெரிகிறாயே என்று மடக்கினேன்

----------------------------

19. என் அப்பா இருந்தவரையில் அப்பாவுக்காக நான் எதையும் செய்ததே இல்லை,திதி மட்டும் தான் செய்தேன்#குற்ற உணர்ச்சி

------------------

20. என்னை இம்ப்ரஸ் செய்யத்தான் அடிக்கடி கவிதை சொல்கிறாய் என குற்றம் சுமத்தினாள் காதலி,இனி பெயர் சொல்லி அவளை அழைப்பதை தவிர்த்துவிட முடிவு செய்தேன்

----------------------------




21.அவள் முகத்தின் அருகே போய் மியாவ் என்றேன்,கோபத்தில் வவ் வவ் என்று குலைத்தாள்#ப்ளூ கிராஸ் காதல்

----------------------------

22. முகத்தைப்பார்த்தே காதல் கொண்டது எப்படி? என்றாள்  காதலி. ஹோட்டலின் தரம் அறிய ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தால் போதாதா? என்றேன்#லவ்வாலஜி

--------------------

23. என்னை விட ஒரு அழகியைப்பார்த்தால் மனசு மாறுவாயா? என்று கேட்டாள் காதலி,அந்த அளவுக்கு பிரம்மனுக்கு சமர்த்து இல்லை என்றேன்#லவ்வாலஜி

Saturday, July 23, 2011

யாரப்பா அது என் ஆளை ஃபாலோ பண்றது? ராஸ்கல்ஸ்

Friendship and love

1.வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும், ஆனால் சில வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையையே தரும்#நீ ஐ லவ் யூ சொன்ன தருணங்கள்

------------------------



2. இந்த உலகில் உண்மையான பாசத்துக்கு கிடைக்கும் கடைசி பரிசு கண்ணீர்த்துளி மட்டுமே#சுடுகாட்டு சிந்தனைகள்

---------------------


3. அன்பு + நம்பிக்கை = அம்மா ,

பயம் + பாசம் = அப்பா,

கூட்டுக்குடும்பங்களின் சிந்தனைகள்

-----------------------

4. கூட்டணிபற்றிபேச இளைஞர் காங்கிரஸ்க்கு அதிகாரம்இல்லை:தங்கபாலு #எதைப்பற்றியும் பேசவோ, முடிவெடுக்கவோ எந்த அதிகாரமும் இல்லை@இதுதான் சரி

----------------------


5. ட்விட்டர் அக்கவுண்ட்லயும் சரி,பிளாக்லயும் சரி என்னைத்தவிர வேற யாரும் உன்னைபின் தொடரக்கூடாது,சொல்லிவை உன் நிழலிடமும்,நண்பர்களிடமும்#காதல்

-----------------------


Breaking Up...
Not hard to do..








6. சில உறவுகள் புன்னகை போல,எப்போதாவது ஞாபகத்துக்கு வரும்,சில உறவுகள் மூச்சுக்காற்று மாதிரி,எப்பவும் கூடவே இருக்கும்#அம்மா ,அப்பா நினைவுகள்

------------------------


7. காரணம் இல்லாமல் காதல் யார் மீதும் யாருக்கும் வருவதில்லை. ஆனால் அந்த காரணம் என்னவென்று தான் யாராலும் சொல்ல முடிவதில்லை#காதலின் விசித்திரம்

--------------------------



8.வறுமையை ஒழிப்பதே அ.தி.மு.க.,வின்  முதல் லட்சியம்  -ஜெ#அடப்போங்க மேடம், அப்போ திமுகவை எப்போ ஒழிப்பீங்க?

--------------------------


9. உங்களுக்கு நடுத்தர வயது,அதுதான் யோசிக்கிறேன்

என்றாள் காதலி.

அப்பவும் தரமான வயசு தானே? தரங்கெட்ட வயசில்லையே

என்றேன்#சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

-------------------------------


10. ஆஃபீசில் பெண் முன்னேற்றம் என்பது திறமைசாலி என்ற அடிப்படையிலா? செழுமைசாலி என்ற அடிப்படையிலா?#பிரமோஷன்&;இன்க்ரீமெண்ட்ஸ் டவுட்ஸ் இன் லேடீஸ் செக்‌ஷன்


-------------------------






11. விஸ்வநாதன்: தமிழகத்தின் முதல்வராக ஜெஇருந்தாலும், நீதிமன்றத்தின் முன் அவர் ஒரு குற்றவாளியாகவே இருக்கிறார்#அதான் அம்மா கோர்ட்க்கே  வர்றதில்லை

---------------------------------

12. சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வை வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்#அய்யய்யோ,நாட்ல அரசியல்வாதிகளை எல்லாம் அடியோட அழிச்சுட்டா போர் அடிக்குமே?

---------------------------

13. தலைமைச் செயலகத்தை மாற்றுவது வீண் வேலை: கருணாநிதி#உங்களைக்கேட்டா சி எம் மை மாத்துனதே வீண்வேலைன்னு தானே சொல்வீங்க தலைவரே?

------------------------------

14. உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம் : ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமான கடிதம்#ராணாவுக்காக உடம்பை வருத்த வேணாம்,ஓய்வெடுத்தாலே போதும் தலைவா

------------------------

15. அடுத்த ரவுண்டுக்கு தயாராகிறார் இளங்கோவன்,கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா?#போன ரவுண்டுல விழுந்த அடியே இன்னும் 5 வருஷம் தாங்குமே?மறுபடியுமா?

---------------------------




16.ராமதாஸ் -அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க , தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்#எல்லாப்பணமும் சி எம் ஒருவருக்கே?ங்கறீங்களா? ( எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே பாட்டு மெட்டில் ...)

---------------------------

17.  சமச்சீர்கல்வித்திட்டம் கைவிடப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது-தங்கபாலு#இது பற்றியெல்லாம் தங்கபாலு அறிக்கை விடுவதும் துரதிர்ஷ்டவசமானது-ஜெ

------------------------------

18. கடந்த ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே, , மின்வெட்டு தான்  - வைகோ #தட்டுப்பாடில்லாத மின்சாரம்,கட்டுப்பாடு விதிக்காத சம்சாரம் மிகஅரிது

----------------------


19. லிபியாவில்பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் கவலை அளிக்கிறது-ஹிலாரி கிளிண்டன்#அண்ணன் காட்டியவழி??!!

---------------------


20.காங்கிரஸ் அன்னாஹசாரேவின் புகழைக் களங்கப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது - ஏ.பி.பரதன்-#ஒரு களங்கமே கலங்கரைவிளக்கை களங்கப்படுத்துகிறதே    அடடே!

------------------------



டியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது காதலர்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 

 1. தலைவரே, நில மோசடி வழக்குல கைது ஆனீங்களாமே? ஏன்?


.குறிஞ்சியை மருத நிலம்னு தப்பா ஒரு தடவை புவியியல் டீச்சர்ட்ட சொன்னது உண்மைதான்,ஆனா இதுக்குக்கூட நில மோசடி வழக்கு என் மீது பாய்ஞ்சா எப்டி?

---------------------

2. தலைவரே,பத்மநாபா கோயில்சொத்துக்களை அபகரிக்க நினைக்கறீங்களே,ஏன்?

கோயில் சொத்து குலநாசம்னு சொல்வாங்க,கோயில்ல இருக்கும் குலம் நாசம் ஆகவேணாம்,பாவத்தை நான் ஏத்துக்கறேன். ஹி ஹி

----------------------------

3. நம்நாட்டின் தேசியவிளையாட்டு எது?கபடியா?ஹாக்கியா?கிரிக்கெட்டா?

மூணும் இல்லை,உண்ணாவிரதம்தான்.அதை வெச்சுத்தான் நாட்ல ஆளாளுக்கு விளையாடறாங்க?

------------------------

4. மன்னா!ஏழைகளின் எண்ணிக்கை நம் ஆட்சியில் குறைஞ்சிருச்சே,எப்டி?

ஹி ஹி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஏழைகளை நாடு கடத்தி விட்டேன்.

--------------
5. என் சம்சாரமும் ஒரு மீடியா மாதிரிதான்னு தலைவர் சொல்றாரே?

அவரோட சம்சாரம் நினைச்சா அவரோட பேரைக்கெடுத்து அவருக்கு கெட்ட பேர் வாங்கித்தர முடியுமாம்..

-------------



6. தலைவரே,ஆட்சிக்கு 6 மாசம் கழிச்சு மார்க் போடறதா சொல்றீங்களே?

எவ்ளவ் போடுவீங்க? அவங்க ஆட்சில பங்கு குடுத்தா 100க்கு 100 ,பங்கு ,குடுக்கலைன்னா 0

-----------------------

7. தலைவரே,தீவின் பெயரை மாத்துனா உங்களுக்கு நல்ல பேரு கிடைக்குமா? எப்டி?

லட்சத்தீவை கோடித்தீவுன்னு மாத்துனா?பண வீக்கம் குறைஞ்சிட்டதாத்தானே அர்த்தம்?

-----------------------

8. ஆந்திராவுக்கு ஒரு திருப்பதி,கேரளாவுக்கு ஒரு பத்மநாபா போல தமிழ்நாட்டுக்கும் ஒரு பணக்காரப்புதையல் கோயில் உருவாக்கும் வரை ஓயமாட்டேன்-தலைவர்

-----------------

9. ஜெ எதுக்காக ஆடும்,மாடும் இலவசமா தர்றாங்க?

அதானே அம்மான்னு பாசமா கூப்பிடுது?

--------------------

10.  காதலனோட ஊரை விட்டு ஓடிப்போனப்பவே உனக்கு தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்,ஏன் இப்போ வந்தே?

சாரி டாடி,என் செல்ஃபோன் சார்ஜர் எடுக்க மறந்துட்டேன்

--------------



11. நடிகர் விஜய், தெய்வத்திருமகள் டைரக்டர் விஜய் என்ன வித்தியசம்?


நடிகர் விஜய் ரீமேக் படத்துல ஏ டூ இஜட் காப்பி அடிப்பார்,டைரக்டர் விஜய் ரீமேக் படத்துல சொந்த சரக்கு கொஞ்சம் சேர்ப்பார்#ஃபீல் த டிஃப்ரன்ஸ


-----------------

12,  ரேபான்கூலிங்க் கிளாஸ் போட்ட ஃபிகர் எல்லாம் ஹை க்ளாஸ் ஃபிகர் அல்ல.பொது நலன் கருதி வெளியிடுவோர் ஏமாந்தோர் சங்கம் C/O ஏர்வாடி


-----------------


13. லேடி டாக்டரை லவ் பண்றேன்,புரோப்போஸ் பண்ணுனா  24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்லிடுவாங்களோ? டவுட்


-----------------


14. தலைவரே,சீரணின்னா என்ன?

நாம அணி மாறும்போது அந்த கட்சிக்கு சீரா குடுப்பமே அது தான் சீரணி#டாக்டர் ராம்தாஸ் ஸ்பெஷல்


--------------------


15. பொதுவா பெண்ணுக்கு மன வலிமை ஜாஸ்தி ,ஆணுக்கு அது கம்மி.அதைத்தான் நம்ம முன்னோர்கள் சொன்னாங்க, பில்டிங்க் ஸ்ட்ராங்க்,பேஸ்மட்டம் வீக்.


-----------------



16. மிஸ் ,உங்க பேர் என்ன?

“எல்லாரும் என்னை அக்கான்னு கூப்பிடுவாங்க”,

என்ன ஒத்துமை பார்த்தீங்களா? என்னை எல்லாரும் மச்சான்னு தான் கூப்பிடுவாங்க


------------


 

 17. அரசியலில் பழங்குடியினர் பங்கேற்க வேண்டும் : ராகுல் அழைப்பு#மொடாக்குடியினர்க்கெல்லாம் அனுமதி இல்லையா?

-------------------------------

18..  தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை-நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்#அட!!உங்கம்மாவை தானம் பண்ணிட்டா உங்கப்பா கோவிச்சுக்க மாட்டாரா மேடம்?

-----------------------------

19.  குருவாயூர் சென்று பிரபுதேவா சாமி கும்பிட்ட போது நயன் தாரா காரிலேயே இருந்தார்,கோயிலுக்குள் செல்லவில்லை#வெளில இருந்து ஆதரவு தெரிவிச்சாரா?

-----------

20. டாக்டர்,உங்களை லவ் பண்றேன்,நல்லபதிலசொல்லுங்க”

என்னாலான முயற்சி செய்யறேன் உங்களை கடவுள் தான் காப்பத்தனும்

---------------------




21.ரீசார்ஜ் செய்து புகைக்கலாம் : வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!#அப்போ இனி புண்பட்ட மனதை இ-புகை விட்டு ஆற்றுவாங்களா?


-------------------

22. எல்லா சப்ஜெக்ட்லயும் உங்க பையன் ஒரே மாதிரி 40 மார்க்தான் வாங்கி இருக்கானே?


சமச்சீர்க்கல்வித்திட்டத்துல படிச்சவன் ஆச்சே?

----------------

23. சார்..உங்க சம்சாரத்தை நீங்க எதிர்க்கறதே இல்லையே ?

ஆமா,எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தி,நாய் எதிர்ப்பு சக்தி கம்மிடர் ஒயிஃப்

----------------------

24. சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்#வீடியோவை நல்லா பார்த்தாச்சே,செஸ்ட்டே தெரிலயே?

-------------------------

25.ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?பிரதமர்#போபார்ஸ் ஊழல் புகார் வந்த அடுத்த நொடியே ராஜீவ் ராஜினாமா பண்ணினாரா?

-----------------------


26. கிருஷ்ணவம்சி படக்கதையே என்னிடம் சொல்லப்படவில்லை- த்ரிஷா#கதை இருந்தா நாங்க சொல்லி இருக்க மாட்டோமா?வெச்சுக்கிட்டாவஞ்சனை?-ரம்யாகிருஷ்ணன்

-----------------------

27. மேனேஜர் சார்,நான் 4 மாசம் முழுகாம இருக்கேன்,எனக்கு லீவ் வேணும்.

அட ஏம்மா?கம்ப்பெனியே 7 மாசமா நஷ்டத்துல முழுகற மாதிரி இருக்கு!லீவ் வேறயா?

-----------------------

28. என்னது?தமிழுக்காக ஜெயிலுக்கு போனீங்களா?

ஆமா,என் மாமா பொண்ணு தமிழ்ச்செல்வியோட  மேரேஜ்ல கல்யாணமண்டபத்துல கலாட்டா பண்ணி மாட்டிக்கிட்டேன்

------------------------

29. கேள்வி - பிரமதர் ஆக தகுதி என்ன?


ஒரு புத்திசாலியின பதில் - நேரு குடும்பமாக இருக்கனும்,வயசு 41 ஆகி இருந்தா போதும்

-----------------------------

30.மேடம்,மாசம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கறீங்க,உங்க கணவர் வெறும் ரூ 30,000 தான் சம்பளம் வாங்கறார்,பிராப்ளம் வர்லை?

சம்பளம் சேர்த்துக்கேட்டாரு,சீனியாரிட்டி பிரகாரம்தான்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லீட்டேன்

----------------
Image

31. பெண்பார்க்கும்படலம் நடக்கறப்பவே மாப்ளை ஒரு சந்தேகப்பிராணின்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?

பொண்ணோட செல்ஃபோனை வாங்கி இன்பாக்ஸ் மெசேஜ் செக் பண்ணாராம்

---------------------

32.பருத்தி வீரன் கார்த்திக்கு மேரேஜ் ஆனதுல நம்ம தலைவருக்கு என்ன சந்தோஷம்?



இனி தமனா ஃபிரீ,இவரு நூல் விடலாமே?

---------------------

33. கவர்ச்சி நடிகையை மேரேஜ் பண்ணீக்கிட்டீங்களே?ஏன்?

அவ புடவையே கட்ட மாட்டா,புடவை துவைக்கற வேலை மிச்சம்,அயர்ன் பண்ணவும் தேவை இல்லையே?

---------------------------
34. தலைவரோட குடும்பம் ஒரு கோவில் மாதிரி...

நிஜமாவா?ஆனா அவர் நாத்திகர் ஆச்சே?

அட நீ வேற சொத்து மதிப்புல கேரளா பத்மநாபா கோயில் மாதிரி

------------


35. டியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க.

. எதுக்கு இது?உன் பிறந்த நாளா?

இல்லை.நீங்க என்னோட 100வது காதலர்#பெண்கள் முன்னேற்றம் வாழ்க


Friday, July 22, 2011

நானும்,காஞ்சனாவும்,175 ஜிகினா நிமிஷங்களும்

http://tamil.galatta.com/entertainment/wallpaper/tamil/movies/Kanchana/bigimage/80_New-Kanchana-Stills-05.jpgமுனி -2  காஞ்சனா - சினிமா விமர்சனம் :  பொதுவாக கதை, வசனம் ,டைரக்‌ஷன் பொறுப்பு ஏற்பவர்களே அந்த படத்துக்கு ஹீரோவாகவும் நடிக்க முற்பட்டால் காட்சிக்கு காட்சி ஹீரோவை சுற்றியே கதை போகற மாதிரி தான் படம் பண்ணுவாங்க ,கே.பாக்யராஜ்,டி ராஜேந்தர்,ஆர் பார்த்திபன் முதல் அமீர் வரை ஏகப்பட்ட உதாரணங்களை சொல்ல முடியும்.. அந்த லிஸ்ட்டில் ராகவா லாரென்ஸூம் சேர்ந்துட்டார்..

ஓப்பனிங்க் ஃபைட் 13 நிமிஷங்கள் போடும்போதே லைட்டா ஒரு பயம்.. எங்கே ராகவா லாரென்ஸ்  மாஸ் ஹீரோ சேர்க்கு குறி வைக்கிறாரோன்னு.. அந்த ஃபைட் முடிஞ்சதும் ஒரு ஓப்பனிங்க் சாங்க் வேற.. அட ஆண்டவா..!!!!!!!!!
(அநேகமா இந்தப்படம் தெலுங்குல செம ஹிட் ஆகிடும்னு நினைக்கிறேன் ஹி ஹி )

மாற்றுத்திறனாளிகளை கவுரவப்படுத்த 1008 வழிகள் இருக்கும்போது,லாரன்ஸ் ஏன் தேவை இல்லாமல் நடனக்காட்சிகளில் அவங்களை ஆட விட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தி நம்மையும் கஷ்டப்பட வைக்கிறாரோ? (IT IS NOT A BOOST UP)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5AyH5RujCC68v6NWS2yFZAjRUHoUkioZFVdq53fiCDAdYBrXE4R7nFjdYOB4MvFxtOzXjiYInl3LDIoKawxCwQFNqbJJ2e6hRouYBurw3nHT589ntynoFh6j0Gv3HCMLdNiSDCn3WIcw/s1600/southtamil.in+kanchana-movie-stills+1334.jpg

பேய்க்கதை சொல்லவே குலை நடுங்க வைக்கும் அளவு பயம் உள்ள ஒரு பயந்தாங்கொள்ளியின் உடலில் ஒரு பேய் புகுந்தால்....!!!இது தான் படத்தின் ஒன் லைன்.. முனி படத்தில் ஒர்க் அவுட் ஆன இந்த ஃபார்முலாவை கெட்டியாகப்பிடித்துக்கொண்ட லாரன்ஸ் வித்தியாசப்படுத்திக்காட்ட திருநங்கை ஃபிளாஸ்பேக்கை வலியனா புகுத்தி இருக்கிறார்.

 ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி வில்லன் அடுத்தவங்க இடத்தை ஆட்டையைப்போட நினைக்கற ஆளு.. தன் மகளுக்கு ஹாஸ்பிடல் கட்டித்தர வெச்சிருந்த நிலத்துல ஆக்ரமிப்பு நடந்ததால நியாயம் கேட்கப்போனவரு வில்லன் குரூப்பால கொலை செய்யப்படறாரு .. அவர் தான் பேயா வந்து நம்ம உயிரை சாரி.. வில்லன்களோட உயிரை லாரன்ஸ் உருவத்துல எடுக்கறாரு.
ஆரம்பக்கட்டங்களில் கோவை சரளாவுடன்,வாண்டுகளுடன் இவர் அடிக்கும் பய லூட்டிகள் தியேட்டரை கலகலப்படுத்துகிறது,ஆனால் அது ரொம்ப நேரம் தொடரும்போது அலுப்பை ஏற்படுத்துகிறது.பேய்குப்பயப்பாதாய் சொல்லும் ஹீரோ வாண்டுகளிடம் பேய்க்கதை சொல்லும்  நடிப்பு செம.. 

ராத்திரி அவர் படுக்கப்போறப்ப கட்டிலை சுற்றி 14 ஜோடி செருப்புகள், 8 விளக்குமாறுகள் ( # கவுண்ட் டவுன் கண்ணாயிரம் )இவற்றை பாதுகாப்புக்காக சுற்றிப்போட்டு விட்டு அனுமார் படம் போட்ட பெட்ஷீட்டை போர்த்தி படுப்பது கலக்கல் காமெடி.

அண்ணியின் தங்கையை ரூட் போடும் ஹீரோ அண்ணியே அதற்கு பர்மிஷன் தரும்போது செம கொண்டாட்டம் ஆகிறார் ( நாமளும் தான் )

வசனத்தில் தேவை இல்லாமல் டபுள் மீனிங்க் டயலாக்ஸ் ஆங்காங்கே.. 

ஒரு திகில்  கம் பேய்ப்படத்தில் கூட இந்தளவு வசனத்துக்கு முக்கியத்துவம் குடுத்திருப்பது புதுசு.. 


http://nowrunning.com/content/movie/2011/Kanchana/stills/Kanchana41.jpg

கருத்தில் நின்ற காமெடி வசனங்கள்-ல் மனதில் நின்றவை

1.  யாராலும் அவனை அடிக்க முடியலையா?இதோ நான் போறேன்.. 

பாஸ்.. கொஞ்சம் முன்னாடியே போய் இருந்தா நாங்களாவது அடி வாங்காம தப்பி இருப்போம் அல்ல?

2. பொதுவா பொண்ணுங்க முந்தானையை மூடி மூடி பாதுகாப்பாங்க.. ஆனா பேய் வந்த பெண்களைப்பாருங்க.. முந்தானை விலகறதை கண்டுக்காம அவங்க பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பாங்க..  அப்போ பேய் இருக்கறது நிஜம் தானே? ( இப்போ இருக்கற 27 ஹீரோயின்கள் முந்தானை பற்றியோ ,எந்த ஆணைப்பற்றியோ கவலையே படறதில்லை.. அதுக்காக அவங்களை பேய்னு சொல்ல முடியுமா? டவுட்டு )

3. டேய்.. நாயே ..பேய்க்கதை சொல்றப்ப ரீ ரிக்கார்டிங்க் எல்லாம் எதுக்கு?கதை மட்டும் சொன்னா போதாதா? ஏன் பயமுறுத்துறே?
அது சரி.. ஒரு த்ரில்  இருக்க வேணாமா?


த்ரில் இருக்கும், நான் இருப்பேனா?


4. அண்ணே.. அண்ணே. நாய் கத்துது.. 


டேய் நாயே.. நாய்னா கத்தத்தாண்டா செய்யும்?

அய்யோ.. அது பேய் மாதிரி கத்துது.... 

5.  அதானே.. எலி ஏன் .  அ.............மா போகுதேன்னு பார்த்தேன்

எப்பவாவது எலி டிரஸ் போட்டு போய் பார்த்திருக்கியா?

பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு கமல் சொல்லி இருக்கார்.. 

6.  ஏண்டி இப்படி அரை குறையா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கே?

அக்கா, உன் வீட்டுக்கு வர்றதாலதான் இந்த அளவு நாகரீகமா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்.. 

7. ஆஹா .. நீங்க எனக்கு அண்ணி.. அவ என் கனவுக்கன்னி.. 

8. என் அத்தை பொண்ணே.. உன் அடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஹி ஹி இதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு வா..

9.  டேய்.. ஏண்டா உன் கிட்டே இருந்து பேடு ஸ்மெல் வருது? 

ஹா ஹா ஐ ஆம் ப்ளே டுடே இன் நியூ ப்ளேகிரவுண்டு..  ( டபுள் மீனிங்க் )


10. ஹீரோயின் - நான் ரொம்ப மாடர்ன்.. எது செஞ்சாலும் மாடர்னாத்தான் செய்வோம்.. ( டபுள் மீனிங்க் )

11. ஏய்.. ஹிந்தி மட்டும் பேசாதே. எனக்கு அது சுத்தமா பிடிக்காது.. 
ஏன்?

எனக்கு ஹிந்தி தெரியாது.. 


http://lh3.ggpht.com/-lCgUrKeqSGw/Tg84o3mo3CI/AAAAAAAARbg/aJm8HZQA6w8/LakshmiRaiHOt0009.jpg
12. ஏங்க ,சத்தம் இல்லாம என் கூட வாங்க, நம்ம வீட்ல குதிரை ஆடுது.. 


ஏண்டி, அது என்ன மைக்கேல் ஜாக்சனா? ஆட

அய்யோ.. விழுந்துட்டேனே.. ஏய். நான் கீழே விழுந்ததை யார் கிட்டேயும் சொல்லாதே..

ம்க்கும், ரொம்ப முக்கியமாக்கும்..

13.  ஏம்மா என்னா கோலம் இது ?

இன்னைக்கு ஆயுத பூஜை.. அம்மா   புடவை கட்டச்சொன்னாங்க.. 

ஆஹா.. உன் அடக்க ஒடுக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஹி ஹி எல்லாமே தெரியுது  

14. இந்தாங்க தேங்காய்,, இதை ஒரே அடில அடிங்க பார்க்கலாம்.. 2 அல்லது 3 அடி ஆகும்னு நினைக்கறேன்..
அடியே, தேங்காயா இருந்தாலும் ,மாங்காயா இருந்தாலும் ஒரே அடிதான் .. 

ஆஹா சூப்பர் மாமா.. ( டபுள் மீனிங்க் )

15. உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க, ஆனா உடம்பு மட்டும் குறையவே இல்லையே?
16. சுவாமி.. பேயைக்கண்டு பிடிக்க சுலபமா க்ளியரா ரூட் போட்டுத்தர்ற நீங்க அப்டியே பேயை ஓட்டறதுக்கு மட்டும் எஸ் ஆகறீங்களே?

17.  நாலு பேர் நல்லாருக்கனும்னா ஒருத்தர் செத்தா தப்பில்லை..

யார்டா அந்த 4 பேர்?

நான் ,மனைவி, என் பசங்க 2 பேர். ( எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடக சுடல்)

18. அடப்பாவி..  எங்கே உன் வேட்டி ?

ஆவிக்கு பிடிக்காதுன்னு வேட்டியை கழட்டி வீசி.. 
19.  ஏப்பா.. ஜவுளிகடைக்காரரே.. நல்லா காஸ்ட்லியான புடவை எடுத்துப்போடப்பா.. ரூ 500 ஆக இருந்தாலும் பரவாயில்லை.. இப்போ நான் போட்டிருக்கறது ரோட்டோரமா கடைல வாங்குனது..  ரூ 150.. எப்பூடி?

20. ஏய்.. நான் சொன்னதெல்லாம் சமஜா? ( புரிஞ்சுதா?)

கோவை சரளா - அய்யோ. சமைஞ்சிட்டேன்... 

21.  ஏம்ப்பா.. உங்களுக்கெல்லாம் தர்கால வேலை இல்ல? அங்கே போய் நமாஸ் பண்ணாம இங்கே வந்து தமாஷ் பண்ணிட்டு

22.  ஆம்பளையா பிறந்தா அவன் சிவன் , பொம்பளையா பிறந்தா அவ சக்தி .ரெண்டும் கலந்து பிறந்தா அர்த்தநாரீஸ்வரர்..

23. இந்த உலகத்துலேயே பெரிய விஷயமா நான் நினைக்கறது உரியவங்களுக்கு நன்றி சொல்றது.....

http://www.cinibox.com/content/wp-content/uploads/2011/07/lakshmi_rai_hot_photo_3.jpg


ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் இருக்கான்னு செக் பண்ண ஹீரோ ஒரு கேவலமான ஐடியா வெச்சிருக்காரு.. எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்கப்பா.. 

அதாவது ஹீரோயினை டூர் கூட்டிட்டுப்போகனும்.. அங்கே ஹீரோயினை விட படு கேவலமா இருக்கற 2 மொக்கை ஃபிகருங்க கூட குத்தாட்டம் போடனும்.. அதைப்பார்த்து பொறாமைப்படும் ஹீரோயின் கோபமா வந்து கன்னத்துல பளார்னு ஒண்ணு குடுக்கறா..  அப்புறம் வெட்கப்பட்டுக்கிட்டே ஹீரோவின் கன்னத்துல கிஸ்  ஒண்ணு குடுக்கறா.. 

இந்த சீன்ல லாரன்ஸை க்ளோஸ் அப்ல முத்தம் தந்த சகிப்புத்தன்மைக்காவே

லக்‌ஷ்மிராய்க்கு சம்பளத்துல 2 லட்சம் சேர்த்து தரனும். படத்தைப்பார்த்து யாரும் அப்படி ட்ரை பண்ணாதீங்கப்பா.. இருக்கற ஃபிகரும் ஓடிப்போயிடும்.. 

பேய் பயத்தில் ஹீரோ அம்மா மேல் (கோவை சரளா ) விழுவதைக்கூட ஏத்துக்கலாம்.. அண்ணி இடுப்புல குழந்தை மாதிரி தாவி ஏறுவதெல்லாம் அந்த எஸ் ஏ சூர்யாவுக்கே அடுக்காதுப்பா.. 

பாடல்கள் 3 தேறுகிறது.. காயே கறுப்பக்கா கட்சி முட்டும் நெல்லிக்கா செம டப்பாங்குத்து.. கறுப்புப்பேரழகா கண்ணூக்குள்ள நிக்குறியே பாட்டு ஓக்கே .. ஆனா அதற்கான லக்‌ஷ்மிராய் உடை வடிவமைப்பை பார்த்தால் டோனி கிரிக்கெட் ஆடுவதையே விட்டு விடும் அபாயம் இருக்கு.. 

அப்புறம் லாரன்ஸ் டேன்ஸ் பேட்டர்னை மாற்றுவது நல்லது.. ஒரே மாதிரி ஸ்டெப்கள் போர் அடிக்குது... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFkjp_RryvxxpHUTBGas3n80AOlVyu0DNzXtLUJMDgKIg23LZ_OQH2_rBd5RG71_fZY1qgRbOhftm5WgZ7pLm5iJ9KdBq7krU7ujs8_dfzk0bUmrl7mLiDLp7a55tJesJgtJAI2y7i6IhW/s400/lakshmi-rai1.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. பொதுவா பேய்ப்படம்னா இடைவேளை வரை திகிலா கொண்டுபோய்ட்டு செகண்ட் ஆஃப்ல ஃபிளாஸ்பேக் போயிடுவாங்க.. இதுல கடைசி 20 நிமிஷம் வரை மெயின் கதைக்கே போகாம காமெடியா கொண்டு போக முயன்றது...

2.  ராகவாவிடம் திடீர் என்று பெண் தன்மை வருவதும் அவரிடம் நடை மாறுவதும்.. நுட்பமான பாடி லேங்குவேஜ்.. 

3.  பாட்டு சீன் 3 முடிஞ்சதும் நைஸா ஹீரோயினை கழட்டி விட்டுட்டு கதைக்கு வந்தது.. 

4. கோவை சரளா, அண்ணி ( டி வி நடிகை) 2 கேரக்டர்களின் பயத்தை வைத்தே பாதிப்படத்தை காமெடியாக ஓட்டியது. 

5. படத்தில் திகில் அல்லது காமெடி என இரண்டில் ஒன்றை ஒவ்வொரு சீனிலும் மெயிண்ட்டெயின் செஞ்சது ( கடைசி 20 நிமிடம் தவிர )


http://www.southgossips.in/wp-content/uploads/2009/11/lakshmirai_4.jpg

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பேய் இருக்கான்னு செக் பண்ண மிட் நைட்ல ஹால்க்கு வரும் கோவை சரளா மகனும்,மருமகளும் உள்ள பெட்ரூமை தட்றாங்க.. அடுத்த 3 வது செகண்டே மருமக ஆஜர்.. அது எப்படி? கட்டிலை விட்டு இறங்கி நடந்து வந்து திறக்க மினிமம் 13 செகண்டாவது ஆகுமே?

2.  பூசாரி பூஜிக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் தந்து இதை அறைல உங்களூக்குப்பக்கத்துல வெச்சுக்குங்க பேய் வராதுங்கறார்.. ஆனா பேய் அதே ரூம்க்கு வந்து அந்த எலுமிச்சைப்பழத்தை வெளில போடுன்னு சொல்லுது.. அப்ப மட்டும் வரலாமா?

3. பூஜை ரூமுக்குள்ள அமானுஷ்ய சக்தி எப்படி வரும்?

4.  பூசாரி பசு வீட்டுக்குள்ள வந்தா பேய் வீட்ல இல்லைன்னு அர்த்தம், மிரண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிட்டா பேய் வீட்ல இருக்குன்னு அர்த்தம்னு சொல்றாரே?அப்போ பசு பேய் இருக்கற அறை  வரை ஓடி அப்புறமா ஏன் வெளில ஓடி வருது..?அதுக்குத்தான் பேய்னா பயம் ஆச்சே?

5. ஜவுளிக்கடைல துணி எடுக்கறப்ப ஹீரோ சிவப்புக்கலர் சேலை எடுக்கறார்.. எனக்கு சுத்தமா அந்த கலர் பிடிக்காதுன்னு அண்ணி சொல்றாங்க.. ஆனா அதுக்கு அடுத்த ஷாட்லயே அண்ணி சிவப்புக்கலர் புடவை, சிவப்புக்கலர் ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்க.. அது போக படம் பூரா 3 டைம் அதே கலர் டிரஸ்ல வர்றாங்க.. எப்படி?

6.  பெண் வேடத்தில் சரத் குமார் வருவதெல்லாம் சரி.. அவர் ஃபைட் போடும்போது கண்ணியமான கேமிரா கோணங்கள் வைத்திருக்கலாமே?

7.  ஒரு சீன்ல நடுக்கூடத்துல பேய்க்கு ஒரு டெஸ்ட் வைக்கறாங்க.. அப்ப்போ பேய் ரத்தத்தை டேஸ்ட் பண்ணுது நாக்கால.. அது நாயா? பேயா? 

http://www.extramirchi.com/gallery/albums/south/actress/LakshmiRoy/Lakshmi_Roy_5.jpg


ஏ செண்ட்டர்ல படம் சுமாரா  25 நாட்கள் வரை போகும், பி ,சி  ஆகிய சென்ட்டர்கள்ல 40 நாட்கள் வரை ஓடிடும்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 

சி பி கமெண்ட் - நாட் சூப்பர், நாட் பேடு..

ஈரோடு ராயல். ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய தியேட்டர்களில் படம் ஓடுது. நான் ராயல்ல பார்த்தேன்....


http://www.kerala365.com/wp-content/uploads/2010/08/lakshmi_rai_kanchana.jpg

உன் கூந்தல் ஒரு கறுப்பு அருவி..உன் மணம் ரதியின் கருவி

Fun from Facebook
1.வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்னும் அரசாங்கம்
ஹார்ட்டுக்கு  ஒரு காதல் வளர்ப்போம் ,மின்னும் சரசாங்கம்#லவ் தத்ஸ்

-----------------------

2.  ஸ்கூலில் -

4 * 3 = ? 

டீச்சர் 12.

ஓக்கே 3* 4 = ?

கேள்வியை திருப்பிக்கேட்டா பதிலை திருப்பி சொல்லனும்னு தெரியாதாக்கும்? 21#லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்

--------------------

3. கல் மனசுள்ள லேடி ஜட்ஜ்..அவரோட காதலன் எப்படி கூப்பிடுவார்?


கனம் ஹார்ட்டார் அவர்களே!?

--------------------

4. உங்க மாமா கட் &  ரைட் டைப்பாமே?

ஆமா ,பழைய காதலியை கட் பண்ணிடுவாரு,புது காதலிக்கு ரைட் குடுப்பார்


---------------------

5. உங்க ஃபேமிலில இருக்கற எல்லாரும் ஒரே வட்டத்துல சுத்தி சுத்தி விளையாடறீங்களே? ஏன்?

நாங்க வீல் ஜாயிண்ட் ஃபேமிலி..

------------------


































6. அன்பு கொண்ட உள்ளங்களுக்கு விட்டுக்கொடுப்பது சுலபம்,அன்பில்லாத இதயங்களுக்கு விட்டுக்கொடுப்பது துர்லபம்

--------------

7. தினமும் சரிவுடன் துவங்குகிறது பங்குச்சந்தை,

    தினமும் பரிவுடன் தொடர்கிறது உன் அன்புச்சண்டை

------------------

8.தன்னம்பிக்கையின்தற்போதையஉதாரணம்அன்னாஹசாரே,
   தலைக்கனத்தின் நிரந்தர உதா”ரணம்” ராஜபக்‌ஷே

----------------------------

9. லட்சங்களுக்கும் ,லட்சியங்களுக்கும் என்ன முன் ஜென்ம விரோதமோ லட்சியவாதிகள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்

--------------------

10. நீ வரும் வரை பொழுது போக ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன், நீ வந்த பின் உன் பெற்றோர் எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்

------------------


11. பாப்பா. சாப்பிடாம அடம் பிடிச்சா சாமி உன் கண்ணை குத்திடும்.


அப்படி ஒரு சின்னக்குழந்தையோட கண்ணை குத்துனா அது எப்படிப்பா சாமியா இருக்க முடியும்?

------------------

12. வெள்ளை நிற அருவியில் நீ குளிக்க செல்கிறாய்!உன் கூந்தல் நனைக்கையில் கறுப்பு நிற அருவி கொட்டுகிறது#பிளாக் &;ஒயிட் ஃபால்ஸ்

--------------

13.தமிழ்சினிமாவும் ,லவ் மேரேஜும் ஒண்ணு தான், செகண்ட் ஆஃப் போர் அடிக்கும்#லவ்னா ஜாலி,மேரேஜ்னா காலி

-------------------

14. காதலிக்கப்படும் பெண்கள் தேவதைகள் ஆகிறார்கள்,காதலிக்கபடாத ஆண்கள் தேவதாஸ் ஆகிறார்கள்#தாடி விடு, திண்டாடு

-----------------

15. எல்லாம் தெரிந்த ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை,எதுவுமே தெரியாத பெண்களை ஆண்கள் விரும்பாமல் இருப்பதில்லை#சைக்காலஜி

------------------


16. நீ குடிவந்த ஏரியாபோஸ்ட்மேன்களும், கூரியர்பாய்ஸூம் நொந்துநூடுல்ஸ் ஆறாங்களே அது ஏன்?

ஏன்னா எனக்கு மெயில்ல சேட் பழக்கம் இல்லை#பழமை விரும்பி

-----------------



17. பெண்களின் கண்ணீர் அதிகமாக சேர்ந்ததாலோ என்னவோ அவர்கள் படுத்திருக்கும் தலையணைகள் மட்டும் என்றும் கனமாகவே இருக்கின்றன.

--------------------

18.மீனவர்கள் கடல் தண்ணீர்  குடிப்பதில்லை,ஆனால் கடல் தண்ணீர் மீனவர் உயிரை அடிக்கடி குடித்து விடுகிறது

----------------

19. என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் அம்மாவின் கருவறையில்,

     உன்னை மறந்து நான் தூங்கப்போவது என் கல்லறையில்

----------------

20. எங்க ஸ்கூல்ல மேத்ஸ் மாஸ்டர்க்கும், பிசிக்ஸ் டீச்சருகும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிடுச்சு,#1992 எ லவ் ஹிஸ்டரி

--------------

join-funship-group


டிஸ்கி  - முதல் ஃபோட்டோவைப்பார்த்து யாரும் அபவுட் டர்ன் என்றெல்லாம் சொல்லிப்பார்க்கக்கூடாது. ஹி ஹி

Thursday, July 21, 2011

உங்க கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட் உங்க புருஷனா?கிழிஞ்சுது கிருஷ்ணகிரி

cid:ACB786ED36DE4CC2A9A7C8DA9A9334BF@HomePC1.கடவுளுக்கு செவி மடுக்க நேரம் இருக்கிறது,பிரார்த்தனை செய்ய நமக்குத்தான் நேரம் இருப்பதில்லை

---------------------

2. நீ செய்யும் முட்டாள்தனங்களை எல்லாம் காதலுடன் ரசிக்கிறேன். ஆனால் நீ என்னை காதலிப்பது முட்டாள் தனம் அல்ல

-----------

3. நான் வெற்றி பெறும்போது அருகில் இருந்து அதைக்காண அப்பா இல்லையே எனவும்,தோல்வி அடையும்போது அருகில் இருந்து ஆறுதல் சொல்ல  நீ  இல்லையே எனவும் வருத்தப்படுவேன்.

-------------------------

4. காதல் எனும் சதுரங்கத்தில் நீ ராணி ,நான் ராஜா.அடிக்கடி எனக்கு செக் வைக்கிறாய்,   என் காதலை செக் செய்கிறாய்

---------------------

5. என் வழியில் நான் போறேன் ,எனக்கு வழி விடு என்றாய்,வழி விட்டேன் , நீ எனக்கு வலி கொடுத்தாய்

---------------------


cid:B251579C8DF94BC79A282719CFE09A4B@HomePC
6. அவள் பாதம் பட்ட இடத்தை முத்தம் இட்டேன்,அம்மாவிடம் புகார் செய்தாள்,”ஆண்ட்டி ,உங்க பையன் மண்ணு திங்கறான்”#1990 எல் கே ஜி லவ் ஸ்டோரி

-------------------

7. வெட்ட வெட்ட வளர்ந்துடுதே என ஆணும், வெட்டி வெட்டி பார்த்தும் வளர மாட்டேங்குதே என பெண்ணும் வருத்தப்படுவது தலை முடி விஷயத்தில்

--------------------

8. நீளம் தாண்டுதலில் இந்தியா தங்கப்பதக்கம் இழந்தது.


பதக்கத்தை கழுத்துல மாட்டிக்கிட்டே ஓடி வந்தா விழத்தான் செய்யும், கழட்டி பாக்கெட்ல சேஃபா வெச்சுக்கிட்டு ஓடி இருக்கனும்

-----------------------

9. உன் அழகுக்கு நான் இணை இல்லை,ஆனாலும் நான் உன் இணை ஆனேன்

#நன்றி நவிலல் இன் காதல் திருவிழா

--------------

10. சிவப்பழகு க்ரீம்கள் ஏதும் போடாமலேயே இன்சிடெண்ட்டாய் சிவந்தாய்!!நான் என் காதலை உன்னிடம் சொன்னபோது#தங்க தருணம்,குங்கும வர்ணம்

--------------------



11 டியர்,எங்கம்மா,அப்பா,அக்கா பார்த்துத்தான் உங்களை ஓக்கே பண்ணனும்”

“நம்ம காதல் என்ன ரியாலிட்டி ஷோவா? 3 ஜட்ஜ்ங்க பார்த்து தீர்மானிக்க?.

-------------------

12. என்னைப்பிடிக்காதது போல் என்றும் நீ நடிப்பதால் சிறந்த நடிகை ஆகிறாய்.(குணச்சித்திரம்)

------------------

13. இந்த உலக நன்மைக்காக நீ என்ன கிழித்தாய்?என கேட்க முடியாதவர்கள் பட்டியலில் கண்டக்டர்,சினிமா டிக்கெட் கிழிப்பவர்

------

14. 10 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கோடி ஊழல்:ஆய்வில் அதிர்ச்சி தகவல் #இந்த சாதனையில் எங்களுக்கே பெரும் பங்கு உள்ளது - கலைஞர்

-----------

15. பெண்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்குக்காரணம் அவங்க அடிக்கடி மனசை மாத்திக்கறதாலா? டவுட்டு

---------

Valentines Day Pop

16. மேரேஜ் ஆகும் வரை என் நகத்தைக்கூட நீங்க தொடக்கூடாது.. “

ச்சே.. ச்சே. நகத்தை எதுக்கு? தேகத்தை மட்டும் தொட்டுக்கறேன் #ஜிகிடி


---------------------

17. உன் காதலி எல்லாத்தையும் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருப்பாளாமே?

ச்சே ச்சே எல்லாத்தையும் அல்ல,நெயில் பாலீஸை மட்டும்
-----------------


18. என்னை மறந்துடுங்க என சொல்லி உன் செல் எண்ணை மாற்றினாய்.. ஆனால் என்னால் என்னை மட்டும் மாற்ற முடியவில்லை.

-----------------

19. உன் கணவருக்கு விளம்பர மோகம் ஜாஸ்தின்னு எப்படிடி சொல்றே?

பின்னே என்னடி? கிச்சன் ரூம்ல கிரியேட்டிவ் ஹெட்னு அவர் பேரை போட்டுக்கறாரே?

---------------

20. ரூ.200 கோடி வசூலித்தும் வீடு ஒதுக்கவில்லை சஹாரா சிட்டிஹோம்ஸ் மீது போலீசில் புகார்#சின்னா வீடா இருந்தாலும் பரவால்ல ,அழகான வீடா வேணும்னீங்களோ?

----------------

ஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்

aஇவர் சக தோழி செலின் ( ரிசப்ஷனிஸ்ட்)


 பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை பாகம் 3-


பதிவுலகில் எப்படி வெட்டிப்பேச்சு சித்ரா காமெடிக்கும் ,பின்னூட்டத்துக்கும் புகழ் பெற்றவரோ அதே போல கவிதைக்கும் ,சீரியஸ் கட்டுரைகளுக்கும் பெயர் பெற்றவர் இலங்கை வலைப்பதிவர் ஹேமா.இவர் வானம் வெளி வந்த பின்னும் எனும் வலைப்பூவையும்   http://kuzhanthainila.blogspot.com/ உப்புமடச்சந்தி எனும் வலைப்பூவையும் நிர்வகித்து வருகிறார் http://santhyilnaam.blogspot.com/


 தற்போது ஸ்விச்சர்லாந்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக  பணிபுரியும் இவர் அடிப்படையில்
 ஈழத்தமிழருக்கான விடுதலையில் மாறாத ஈடுபாடு கொண்டவர். பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் லிஸ்ட்டில் இவர் 2ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டைப்பற்றியும், தாய்நாட்டு மக்கள் பற்றியும் கண் விழித்திருக்கும் நேரம் எல்லாம் சிந்திப்பதால் ,படைப்புகளில் ஈழ விடுதலை பற்றி சிந்திப்பதால் அவர் அந்த இடத்தை பெறுகிறார்,

தன் தாய் தந்தையை இலங்கையில் விட்டு விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அயல் தேசத்தில் பணியாற்றுபவர். அவருடன் ஒரு நேர்காணல்..

பெண் எழுத்து பாகம் 1 படிக்காதவர்கள் இந்த லிங்க் செல்க.

  http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html

பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? ஒரு அலசல் (பெண் எழுத்து பாகம் 2 )  படிக்க http://adrasaka.blogspot.com/2011/05/10.html


. 1.  நீங்க பிளாக் உலகுக்கு வர்றப்ப என்ன நினைச்சு வந்தீங்க? யார் உங்களுக்கு வழி காட்டுனது?

எதுவுமே நினைக்கேல்ல சி.பி திடீரென்று நடந்த சந்தோஷமான நிகழ்வென்றுதான் சொல்லுவன்.நான் இலண்டன் போயிருந்த நேரம் என் வானொலி நணபர் தீபசுதனும், என் தமிழ்நாட்டு நண்பர் அரவிந்தும்தான் வலைத்தளம் தொடங்கக் காரணம்.நான் சிறுவயதிலிருந்தே ஏதாவது கிறுக்கியபடியே இருப்பேன்.

இங்கு வந்தபிறகும் அது தொடர்ந்தது.வானொலிக்கும்,சில இணையத் தளங்களுக்குக் கவிதைப் பகுதிக்கென்று அனுப்பிக்கொண்டிருந்தேன்.அப்போது கிடைத்த அன்பு நண்பர்தான் தீபசுதன்.அரட்டையில் கிடைத்த நண்பர் அரவிந்.இவர்கள் இருவரும்தான் எனக்கு ஊக்கம் தந்து வலைத்தளம் என்று ஒரு ஊடகம் இருப்பதாகச் சொல்லி ஆரம்பித்து வைத்தார்கள்.என்னவென்றே தெரியாது எனக்கு.பின்னூட்டம் போடக்கூட மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன்.இன்று என் எழுத்துக்கள் பதிவில் அழியாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்குத்தான் நன்றி சொல்வேன்.


2. உங்க 2 பிளாக்ல கவிதைக்கு 1, கட்டுரைகளுக்கு 1 என வகைப்படுத்திட்டீங்க.. அது ஏன்?


ஆரம்பத்தில் கவிதை மட்டுமே எழுதுவது என்று நினைப்போடுதான் தொடங்கியிருந்தேன்.பிறகு பிறகு வேறு தளங்களுக்குப் போகும்போது எனக்கும் கொஞ்சம் எழுத வருமே என்கிற நினைப்பு வந்தத்து.அதோடு கவிதைகளில் சிரிக்க முடியவில்லை என்னால்.சிரிக்கலாம் கதைக்கலாம் என்றுதான் உப்புமடச்சந்தியில்  "கதை பேச வாங்கோ" என்று ஆரம்பித்தேன்.


இவர் ஹேமாவின் தோழி,ஈழத்தவரைத் திருமணம் செய்த துருக்கியப் பெண் ஸ்வேதா(பெயரை மாற்றிக்கொண்டவர்)


3. உங்க படைப்புகள் பெரும்பாலும் சோக உணர்வுகள் கொண்டதாகவே இருக்கு.. அது ஏன்?

ம்...இது ஈழத்தவர் எல்லோருக்குமுள்ள விதி.நாடு ,மண் ,அகதி வாழ்வு ,உறவுகள் ,தனிமை.மற்றும் ஊருக்குள் இருந்தாலும் நம் அரசியல், போர், வறுமை, இடப்பெயர்வு, எதற்கும் சுதந்திரமில்லாமை.....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எம் சோகக்கதையை.இதை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுத்தான் நம் சில இளஞர்கள் இன்று சிரிக்கச் சிரிக்க எழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் நடுவில் ஒற்றைவரியிலாவது ஒரு சொட்டுச் சோகம் தடவாமல் இருக்காது.


4. நீங்க இலங்கைத்தமிழர்கள் நிலை பற்றி நினைக்கறப்ப எங்களைப்பொன்ற தமிழ்நாட்டு வாழ் தமிழர்களை வெறுப்பீர்களா? அதாவது இலங்கைத்தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாத, செய்ய இயலாத நிலையில் இருப்பவர்களை வெறுப்பீர்களா?

நிச்சயமாக இல்லை சி.பி.தனிமனிதனின் நிலை வேறு அரசியல் வேறு.தனிப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலரோடு எனக்குப் பழக்கம் இருக்கிறது.ஒருசிலருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது இலங்கை அரசு என்ன செய்கிறது என்று எதுவுமே தெரியவில்லை.தெரிந்திருக்கும் சிலருக்கோ ஈழத்தவர்களைவிட ஆவேசம் மனதில்.இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி.அரசியல் தன் தேவைக்கேற்ப தேவையான பக்கமெல்லாம் சாயும்.மனிதனைச் சாயவைத்து அழகு பார்க்கும் ஈழத்து அரசியலும் அதேதான்.

இதில் பொதுமக்கள் பங்கு என்ன இருக்கு.பாவம் அவர்கள்.ஆனாலும் பொதுமக்களும் தங்களால் முடிந்த பங்கைச் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்.சொல்லப்போனால் கருணாநிதி அவர்களைத் திட்டுகிறோம்.அரசியலுக்கு வெளியில் அவரும் மனிதமுள்ள மனிதராக நிச்சயம் எங்களுக்காக இரங்குவார்.அரசியலுக்குள் இருப்பதால் சொந்தநலன்தான் அவருக்குப் பெரிது ஈழத்தைவிட.


5. வானம் வெளி வந்த பின்னும் என்றால் நீங்க இலங்கையை விட்டு வந்த பின்னும் என அர்த்தம் பண்ணிக்கலாமா? உப்பு மட சந்தி என்றால்
 தமிழர்கள் இன்னும் கசப்பான உணர்வுகளுடனே வசிக்க வேண்டி இருக்கே ... அதை குறிப்பால் உணர்த்துவதா எடுத்துக்கலாமா?


வானம் வெளித்த பின்னும் என்றால்....வானம் தினமும்தான் வெளிக்கிறது.வெளிச்சம் ஈழத்தவர் வாழ்வின் இன்னும் இல்லையே அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஐயோ...உப்புமடச் சந்தி கசப்பா !பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்லியிருக்கிறேனே.நகைச்சுவைகூட இருக்கு செந்தில்.எப்பிடி கசப்புன்னு சொல்லுவீங்க.அது நான் வாழ்ந்த கோண்டாவில் என்கிற ஊரின் சந்தியின் பெயர். என் புழுதி மண் எனக்காகக் காத்திருக்கும்


ஊரின் நினைவாக வைத்த பெயர்.இனிப்பான நினைவுகள் இல்லாவிட்டாலும் என் நினைவுகளைத் தாங்கும் உப்புமடச் சந்தி.


6. நீங்க ஸ்விஸ்ல  ஒர்க் பண்றது உங்க முழு மன திருப்தியுடனா? அதாவது மனசுக்கு பிடிச்ச வேலைதானா? அல்லது வேற வழி இல்லை என்ற எண்ணத்திலா?


ஆரம்ப காலத்தில் மொழிப்பிரச்சனை இருந்ததால் நிச்சயமாக மனசுக்குப் பிடிக்காத வேலைகளைதான் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் வேலை செய்தேன்.ஆனால் இப்போது ஓரளவு மனசுக்குப் பிடித்த வேலைதான் செய்கிறேன்.ஆனாலும் அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே எங்கும் முன்னுரிமை கிடைக்கும்.என்னைப்பொறுத்தமட்டில் சொந்த நாட்டைவிட சுதந்திரமும் உரிமையும் மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு இங்கு கிடைக்கிறது.அதுவே பெரிய சந்தோஷம்.


7.  நீங்க புரொஃபைல்ல உங்க முகத்தை வெளிப்படுத்திக்கலை.. விளம்பரம் பிடிக்காது என்பதாலா? அல்லது நீங்க ஒர்க் பண்ற நிர்வாகத்துக்கு தெரிய விருப்பம் இல்லாததாலா>?

என் பதிவுலகத்திறகும் வேலைத்தளத்திற்கும் சம்பந்தமே இல்லை.சிலசமயம் சிலர் பார்ப்பார்கள்.ஆனாலும் நான்தான் மொழிபெயர்த்துச் சொல்லவேணும்.என்னை எனக்கே பிடிக்கவில்லை.அதுதான் நீங்கள் எல்லோரும் என்னைப் பார்க்கவேண்டாம் என்று முகம் காட்டாமல் மனதை மட்டும் காட்டிக்கொண்டிருக்கிறேன்.





8. நீங்க பதிவுகள் படிப்பதை இலங்கைதமிழர்கள் பதிவு, தமிழ் நாட்டு பதிவர்கள் பதிவு என பிரிச்சு பார்ப்பீங்களா? அதாவது இலங்கைதமிழர்கள் பதிவுக்கு உங்க மனசுல சாஃப்ட் கார்னர் உண்டா?

சி.பி...இது நீங்க கேக்கிறதே பிழை.இப்பவரைக்கும் என் மனசில இப்பிடி ஒரு நினைவு வந்ததே இல்லை.

9. இலங்கையில் ஒரு வேளை சுமூக நிலை தோன்றினால் மீண்டும் இலங்கயே செல்ல விருப்பமா? ஸ்விஸ்லயே தான் இருப்பீங்களா?

நிச்சயமாக சாகிற நேரத்திலயாவது ஊர்ல போய்த்தான் சாகவேணும் என்று இதுவரை சுவிஸ் கடவுச்சீட்டு எடுக்காமல் இருக்கிறேன்.


10..உங்க அம்மா அப்பா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் உங்க எழுத்தை பாராட்டுவாங்களா? அல்லது அவங்க பாராட்டனும்னு உங்க மனம் நினைக்குமா?

ம்...நினைக்கும்.என்னோட நெருங்கினவங்க சரி பிழை சொன்னாத்தானே நான் திருந்த வழி.சந்தோஷமும்கூட.என்னோட இணைய நண்பர்களுக்குக்கூட நிறையத்தரம் சொல்லியிருக்கிறேன்.என்னைத் திருத்த உங்களுக்கு உரிமை இருக்குன்னு.சொல்லணும்.ஏன் நீங்ககூட ஒன்றிரண்டு தரம் சொல்லியிருக்கிறீங்க.என் வீட்டில் அப்பா மட்டும்தான் ஏதாவது சொல்வார்.மற்றும்படி இணைய நெருங்கின நண்பர்கள்தான்.அப்பிடி உரிமையோட சொல்லிக்கொண்டிருந்த நட்பொன்றை இழந்துவிட்டேன்.அது மனசில் பெருங்கவலை.


11. பதிவுலகில் உங்களுக்கு பிடித்த ஒரு இலங்கை பதிவர், ஒரு தமிழ் பதிவர் பிளாக் சொல்லுங்க..


இது என்னை வம்பில மாட்டிவிடுற கேள்வி. சி.பி ஏன் இப்பிடிக் கொலை வெறி உங்களுக்கு.எல்லாருக்குமே ஒவ்வொரு திறமை.இத்தனை காலமும் போர்ச்சூழலுக்குள் உழன்றவர்கள் கொஞ்சம் காற்றாட ,எதையாவது அதுவும் மனம் விட்டுச் சொல்லக்கூட முடியாமல் மனம்புளுங்கி அதற்குள் கொஞ்சம் நகைச்சுவை ,ஆன்மீகம் ,யதார்த்தம், இலக்கியம், வைத்தியம், பொது ஏன் சமையல் என்றுகூட எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.சந்தோஷமாக இருக்கிறதே தவிர வேறேதும் இல்லை அப்பனே.எல்லாரும் என் சகோதரர்கள்.
Photo


12. வேலை நேரத்தில் பதிவு பற்றியோ படைப்பு பற்றியோ சிந்திப்பீங்களா? அல்லது வீட்டுக்கு வந்த பிறகா?


அப்பாடா....கடைசிக் கேள்வியா.முடிஞ்சுபோச்சு சி.பி கேட்டு மாசக்கணக்காப்போச்சு.நடுவில கேள்வியெல்லாம் தொலைஞ்சும்போச்சு.இதில இருந்து எல்லாருக்கும் என்ன தெரியுது எண்டா சி.பி க்கு நிறையப் பொறுமை இருக்கு.ரொம்ப நல்லவர்.

ம்...வேலை நேரத்தில் தனிமை கிடைத்தால் ஏதாவது சிந்திப்பேன்.மனதின் எண்ணங்கள் உணர்வுகள் வெளிப்பட வீடு ,வேலை ,பேரூந்து நிலையம் என்று இல்லைத்தானே சி.பி .தெருவில் நடக்கும்போது  சமிக்ஞை விளக்குகள் விட்டு விட்டு அணையும்போதுகூட அதன் வெளிப்பாட்டில் ஒரு வரி வரையலாம் மனதிற்குள் !

எல்லாம் சரியாச் சொல்லிட்டேசி.பி  !ஆனால் சொன்னதெல்லாம் உண்மையான என் உணர்வின் வெளிப்பாடு !

அன்போடும் நட்போடும் உங்கள் அன்பு ஹேமா.


டிஸ்கி -1 இங்கே தரப்பட்ட படங்கள் ஹேமாவின் ஹோட்டல் மற்றும் அவரது தோழிகள் ஃபோட்டோ.. அவர் படம் இல்லை..  அவர் தன் படம் பகிரப்படுவதை விட தன் படைப்புகள் பகிரப்படுவதில் தான் ஆர்வமாம்..

டிஸ்கி 2 -  கேள்வி எண் 6 , கேள்வி எண் 8 இரண்டும் எதேச்சையாக கேட்கப்பட்ட கேள்விகள்.. இப்போது பார்க்கும்போது அவை சிலருக்கு ஏன் இது போல் கேட்க வேண்டும் என்ற மன வருத்தம் அளிக்கக்கூடும் என உணர்கிறேன். அப்படி யாருக்காவது ஒரு ஃபீல் இருந்தால் என்னை மன்னிக்கவும்.