Monday, July 11, 2011

லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்?


1. ”8 வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?அப்புறம் எப்படி ஆஃபீஸ்ல வேலை செய்யறீங்க? ”

”ஆஃபீஸ்ல பேசுவேன்,வீட்லமட்டும்தான் விரதம்”#பேச்சிலர் லைஃப்

-----------------------

2. தலைவருக்கு சினிமா நாலெட்ஜே இல்லைன்னு எப்படி சொல்றே?

“அவன் -இவன் பட ஹீரோயின் ஜனனி ஐயர் பிராமின் பொண்ணா?ன்னு கேட்கறாரே?

---------------------

3. லட்டு ஃபிகர்,அட்டு ஃபிகர் என்ன வித்தியாசம்? 

18 வயசுள்ள எல்லா ஃபிகரும் லட்டு ஃபிகரே,அதே ஃபிகரை கல்யாணம் பண்ணிட்டா 5 வருஷத்துல அது அட்டு ஃபிகர்.

----------------------------------

4. மேடம்.வெளில பியூட்டிபார்லர்னு போர்டு பார்த்து வந்தேன்..

சார்.இது ஒன்லி ஃபார் லேடீஸ், 

தெரியும்,இங்கே உள்ள 27 ஃபிகர்ல 1 கூட பியூட்டி நஹி?அப்புறம் என்ன இதுக்கோசரம் பியூட்டிபார்லர்னு போர்டு  வெச்சீங்க?

---------------------------------------

5. அந்த எழுத்தாளர் ஒரு உல்டாபார்ட்டின்னு எப்படி சொல்றே? 

உங்களுக்கு டி வி ல பிடிச்ச நிகழ்ச்சி எதுன்னா ”காபி ”வித் அனுங்கறாரே?#காபிபேஸ்ட்டர்

------------------------------



6. ”என் மேரேஜை சிக்கனமா நடத்தி முடிச்சுட்டேன்” 

”உளறாதே,மணப்பெண்னே வர்லையாமே?”#ஐ ஜாலி

------------------------

7. உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.

.எப்படி சொல்றீங்க ஜோசியரே? 

என் மக உங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளே?

---------------------------------

8. தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே? 

ஹன்சிகா மோத்வானி பிஜேபி அத்வானியோட பேத்தியா?ன்னு கேட்கறாரே?#பயங்கர ஜொள்ளுபார்ட்டி

-----------------------

9.  ”உங்க படத்துக்கு ஏன் 680 ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?” 

“ஹீரோ +2 மாணவன்,அவன் எக்ஸாம்ல எடுக்கற மார்க்கை டைட்டிலா வெச்சிருக்கோம்”

-----------------------
10. 40 வயசானா நாய்க்குணம்னு சொல்வாங்களே,அது உண்மையா?

அது அப்போ,பிரதமர் ஆகிடனும்கற ஆசைகுணம் இப்போ#ராகுல்காந்தி


------------------------------

11. செப்.15 ஆடு மாடு வழங்கப்படும்-ஜெயலலிதா# நாடு,அதை நாடு,வீட்டுக்கு வீடு ஆடு மாடு

-------------------------

12. ஷங்கர் அர்ஜூனை வெச்சு முதல்வன் எடுத்தாரு,எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை வெச்சு சி எம் சீட்டையே எடுக்க நினைக்கறாரு

----------------------

 

13. ஆண்,பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்,ஆனால் எதற்காகவும் ஆண் தங்கை என அழைப்பதில்லை#நீதி-ஆண் அஜாக்கிரதை!

-------------------
14 டவுன் பஸ்ஸில் பெண்களின் ஆதிக்கம்,சர்வீஸ் பஸ்ஸில் ஆண்களின் ஆதிக்கம்,கூகுள் பஸ்ஸில் பெண்களுக்காகப்பரிந்து பேசுபவர்களின் ஆதிக்கம்#பஸ்ஸாலஜி

------------------

15 கார்த்தியின் திருமணம் கோவையில்,தமனாவின் மனம் கோபத்தில்#கேன்சல் த ஷூட்டிங்க் &; சேட்டிங்க்,வாட்ச் அவுட் த வெட்டிங்க்

------------------

16 பிரதமருக்கு 129 தடவை கடிதம் எழுதிய மாயாவதி: ஒரு பதில் கூட இல்லை#இந்தம்மா கலைஞருக்கே அக்கா போல.சிலை வைப்பதிலும் ,உலை வைப்பதிலும்

--------------------------

17. கோயிலில் மட்டுமே பெண்கள் ஆண்களை (கடவுள்)சுற்றுகிறார்கள்,வெளி இடங்களில் ஆண் தான் பெண்களை சுற்றி சுற்றி வருகிறான்#காரியம் ஆகும் வரை

-------------------


18 ஆண்களைப்பிடிக்காதது போல பெண்கள் காட்டிக்கொள்கிறார்கள்,பெண்கள் மனதைப்படிக்காதது போல ஆண்கள் நடந்து கொள்கிறார்கள்#சைக்காலஜி

---------------

19. எப்போதும் வயிற்றைக்கொஞ்சமாவது காலியாக வைத்திருந்தால் உடலுக்கு நல்லது,பேச்சில் கொஞ்சமாவது ஜாலியை கொண்டிருந்தால் அது மனதுக்கு நல்லது

-------------------------

20. நம்மையே அடிக்கடி பார்த்தால் அது சுமாரான ஃபிகர்,நம்மை கொஞ்சம் கூட மதிக்காம,கண்டுக்காம தெனாவெட்டா இருந்தா அது சூப்பர் ஃபிகர்#சைட்டாலஜி

---------------------

21 ஆணின்மீது ஒரு பெண்ணைப்போல் அன்பு செலுத்த சிலரால் முடியாது,அதே ஆணுடன் பகை என்றால் அந்த பெண்ணைப்போல் வன்மம் காட்ட யாராலும் முடியாது

-----------------------
22 அழகா இருக்கே என பொய் சொன்னால் தான் பெண்கள் மயங்குகிறார்கள்,ஆனால் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்,ஆண்கள் மயங்குவதற்கு#சைக்காலஜி

------------------

23.. தன் மனதுக்குப்பிடித்தவள் தன்னை ச்சீ போடா என சிணுங்கி கொஞ்சும் நாள் வாராதா என்று தான் ஒவ்வொரு காதலனும் காத்திருக்கிறான்

---------------------

------------------------------------

24. .வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அரசு நிவாரன நிதி தருதே?பெண்ணின் உள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கு நிவாரண நிதி தருமா?#அரசு போண்டி ஆகிட ஐடியா

--------------

25. .ஜப்பானில் கடும் மின் தட்டுப்பாடு#ஆற்காடு வீரசாமிக்கு ஜப்பான்ல வேலை கிடைச்சுட்டுதா? சொல்லவே இல்ல?

---------------------


26. உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது

---------------

27. கணவன்மேல் பற்றுள்ள பெண்கள் மாங்கல்யத்தை கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள்,மனைவி மேல் பற்றுள்ள ஆண்கள் ஃபோட்டோவை பர்சில் வைத்துக்கொள்கிறார்கள்

-----------------------

.டிஸ்கி - இன்று என் அன்புத்தந்தையின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்,திதிக்காக பவானி செல்கிறேன். காலை 8 டூ மாலை 3..


Sunday, July 10, 2011

காஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)

http://dinamani.com/Images/article/2010/6/23/25vmani2.jpg

யாகம் காத்த எட்டு கரங்கள்!

காஞ்சி ஸ்ரீஆதிகேசவர் தரிசனம்
ட்டெழுத்து நாயகன், எட்டுத் திருக்கரங்களுடன் அருளாட்சி நடத்தும் அற்புதத் தலம், காஞ்சி- அஷ்டபுயகரம்; ஸ்ரீஆதிகேசவபெருமாள் குடியிருக்கும் திருக்கோயில்!

சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ளது காஞ்சிபுரம். இங்கே ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மேற்கே பயணித்தால், அஷ்ட புயகரம் பெருமாள் ஆலயத்தை அடையலாம்.

வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் மற்றும் ஸ்வாமி தேசிகன் ஆகியோர் பாடிப் போற்றியுள்ளனர்.

சோழர் கால கட்டுமானத்துடன் திகழும் ஆலயத்தில், சக்ராக்ருதி விமானத்தின் கீழ், எட்டுத் திருக்கரங்களுடன்...  வலக்கரங்களில் முறையே சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடக்கரங்களில் சங்கம், வில், கேடயம், கதை ஆகியவையும் திகழ, அருள்கோலம் காட்டும் ஸ்ரீஆதி கேசவரைத் தரிசிக்கக் கண்கோடி வேண்டும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZxZlGmmBUfnQ8Rphotuuz3ZUDZJqfDj1QcB0NRI4yfmesrrNuO3gZj7x5pgKWSYSMtCP-djPNSIlWwCu7Mr49Ck_EqFtqg_q3DJYksHMaoC0rQZqDuqyZwL4SeesZZKw8iZ7rC6vI68Ik/s400/g9.jpg

சரி, எட்டுத் திருக்கரங்களுடன் இவர் அவதரித்தது ஏன்? 'நாடிக் கண்டுகொண்டேன்’ என, தம்மைத் தேடி ஓடி வரும் பக்தர்களுக்கு அருள, வரம் வாரி வழங்க இரண்டு கரங்கள் போதாதென்று, எட்டுத் திருக்கரங்களுடன் அவதாரம் செய்துவிட்டாரோ?! வேறு ஏதேனும் புராண காரணங்கள் உண்டா?! ஒருமுறை, யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டான் நான்முகன். காஞ்சியில் வேள்வி நடத்தினால், அது அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பாகும். எனவே, புனிதமிகு காஞ்சி யில் யாக காரியங்களை ஆரம்பித்தான்.


http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_1151.jpg

ஆனால், ஏற்கெனவே அவருடன் ஊடல் கொண்டிருந்த கலைவாணி, தன்னை அழைக்காமல் பிரம்மன் நிகழ்த்தும் யாகத்தை அழிக்க அரக்கர்களை ஏவினாள். பிரம்மன், பெருமாளைச் சரணடைந்தார். பெருமாளும் எட்டுத் திருக்கரங்களுடன் தோன்றி, அசுர வதம் நிகழ்த்தினார்; பிரம்மனின் யாகம் காக்கப்பட்டது. பிறகு, பிரம்மதேவன் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க, எட்டுக் கரத்தினராய் இங்கேயே கோயில் கொண்டாராம். 

அதுமட்டுமா? எதிர்த்து வந்த சரபேசனை பணியச் செய்து, பயம் நீக்கி, யாகசாலையின் வாயுமூலையை பாதுகாக்கப் பணித்ததும், கஜேந்திரனுக்கு திருவருள் புரிந்ததும் இங்குதான். இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்த பேயாழ்வார்...

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித் தெறித்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு 

- எனப் போற்றுகிறார்!

தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேலு மங்கை தாயார். ஸ்ரீஆண்டாள், கருடாழ் வார் ஆகியோரையும் இங்கே தரிசிக்க லாம். சனிக்கிழமைகளில் அஷ்டபுயகரத் தான் கோயிலுக்குச் சென்று வழிபட, நம் பிரச்னைகள் யாவும் தீரும் என்கிறார்கள்.

நாமும் ஒருமுறை, நகரேஷு காஞ்சி என்று புராணங்கள் போற்றிக் கொண்டாடும் காஞ்சிபுரத்துக்குச் சென்று, அஷ்டபுயகரத்தானை ஸ்ரீஆதிகேசவனை வழிபட்டு வருவோம். நம் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் செழிக்கும்!


ண்ணனூர் கண்ணபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். மூலவர் திருநாமம் ஸ்ரீநீலமேகப் பெருமாள்; கிழக்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் பிரயோகச் சக்கரத்துடன் திகழ்வது விசேஷ அம்சம். தாயார் திருநாமம் ஸ்ரீகண்ணபுர நாயகி.

உற்ஸவர் ஸ்ரீசௌரிராஜ பெரு மாளும் வரப்பிரசாதியே! அர்ச்சகர் ஒருவர், சோழ அரசனிடம்... பெருமாளுக்குக் கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களிக்க, பெரு மாளும் திருமுடியில் கேசத்துடன் திருக்காட்சி தந்ததால் ஸ்ரீசௌரிராஜன் என்ற திருப்பெயர் வந்ததாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYllt9rezOJ2xNXNXNp9uR68xPgqOlrt_B33WskQj5rCphi80plRz02gNhYRUE1C_3TJlbx-mUpzZYPYX3EddSiz5s5sOJu_iWqYTY5t_dfnCfac_xWUeUyvpUZkMY_NKESFzrb24yN0aE/s400/g7.jpg

பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ஏழு வகை புண்ணியங்களுடன் திகழ்கிறதாம்!

  அதாவது, ஸ்ரீகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், தண்டகவனம், காவிரி நதி, கடல், கண்ணபுர நகர், நித்திய புஷ்கரணி, உத்பலாவதக விமானம் ஆகிய ஏழு வகை புண்ணியங்கள் திருக்கண்ண புரத்துக்கு உண்டு. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு இந்த திவ்ய தேசத்துக்கு. அஷ்ட சுயம்பு திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் எம்பெருமான், திருமந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமாக எழுந்தருளியிருக்கிறாராம். ஆனால் இந்தத் தலத்தில், எட்டெழுத்தின் முழு வடிவினராக எழுந்தருள்கிறாராம். இதை இறைவனே கூறியதாக விவரிக்கிறது தல புராணம்.


நாகப்பட்டினம்- நன்னிலம் சாலையில் உள்ள திருப் புகலூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். குடும்பத்துடன் இந்தத் தலத்துக்குச் சென்று எட்டெழுத்துநாயகனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டமெல்லாம் பறந்துபோகும்.

நன்றி - சக்தி விகடன்

Saturday, July 09, 2011

அரிசிம்பருப்பு தோசை,உளுந்து வடை மிக்ஸ் , செய்வது எப்படி?



1..அரிசி - பருப்பு தோசை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு.  

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2.  வெங்காய குழம்பு 

தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.

இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

3. உளுந்து வடை மிக்ஸ் 

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

4. பருப்பு வடை மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்

Friday, July 08, 2011

MURDER -2 - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoxN9VLGMDwY7CxwZeL8O-Myr5nGdsGrPH8HN87Ws-lnoboLaZC_hBwp__Xferu-RE-bMn_IE81Q_u_A10chBM9wUZiyvUNy4OsX7X49R_mSB-D5uv4izgAbFGwRyCQPSM1SfX3h2ucsY/s1600/Murder2.jpg 

நம்ம ஆளுங்க பண்ற பெரிய தப்பே ஒரு படத்தை எப்படி மார்க்கெட் பண்றதுங்கற டெக்னிக் தெரியாம சொதப்பறதுதான்,படத்தை எடுக்க தெரியாம எடுத்து சொதப்பறதைக்கூட தாங்கிக்கலாம்,ஆனா ஒரு படத்தை ரிலீஸ் பண்றப்போ அது என்ன மாதிரி படம்கறதை தெளிவா  சொல்லாம குழப்பிடறதுதான் தாங்க முடியாத கொடுமை

பிரமாதமான படம்னு சொல்ல முடியாட்டியும்,ஓரளவு சுமாரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் இது. ஆனா மாஸ் ஓப்பனிங்க்க்கு ஆசப்பட்டு இந்தப்பட போஸ்ட்டர் டிசைன்களில்,விளம்பரங்களில் இது ஒரு கில்மா படம்ங்கற மாதிரி ஒரு பில்டப்பை தேவை இல்லாம தூண்டி விட்டுட்டாங்க. (சரி. விட்டுத்தள்ளு.. எதுக்கு எமோஷனல் ஆகறே?)

பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல பிரகாஷ்ராஜ் அரவாணி கேரக்டர்ல வருவாரே, அந்த கெட்டப்ல வில்லன்,இவன் ஒரு சைக்கோ கொலைகாரன்.. பெண் போல மேக்கப்,உடை போட்டுக்கிட்டு பெண்களை கொலை பண்ணி கிணத்துல போட்டுடறான்.அவன் ஏன் அந்த கொலைகளை பண்றான், என்ன மேட்டர்?அப்டிங்கறதை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. (ஏன்னா கடைசி வரை எனக்கு காரணம் தெரியலை. இந்த லட்சனத்துல எம் ஏ ஹிந்தியாம் )





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXyPfGytP0ORIt_yCQOsQzpLxb-d0Hbn9Y2p_pi81_1TK-oFkfotZ7n6_CX7VkrMlLrjOwU5Zfi9_DDf8g4Du-1glA_5JJalRdZpx0lGjLWLc-4oEj7gd1J0My1Fezx2kC_kZMxpxsgNco/s1600/jacqueline-fernandez-murder-2-stills-8.jpg
மர்டர் முதல் பாகத்துல பாலிவுட் ஏஞ்சலினா ஜூலின்னு தன்னைத்தானே அழைச்சுக்கற( !!!!) மல்லிகா ஷெராவத் கூட கில்மா பண்ணுனாரே. அவர் தான் இதுல ஹீரோ..(emraan hashmi), ஹீரோயின் Jacqueline Fernandez, தயாரிப்பு - மகேஷ்பட்

வில்லனோட வீட்ல பாத்ரூம்ல ரத்தக்கறை பார்த்துட்டு ரேஷ்மா அலறுதே அந்த சீன் செம. பின்னணி இசை இளையராஜா மாதிரியே போட்டிருக்காங்க.. அவர் படத்திலிருந்து சுட்டுட்டாங்களோ என்னவோ?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0dVciomvRjjUVucPFe4RV1-CDSp8vPqt5t8djXf9SXK9OoYe-IuVUkGrd3GweTn0I1TWVujZKbMsj9da_55gknAN0YiP0fuoGisCV_a6M5anfojMiSASIgccrFCJG1Pvl7SQhVboRSXcs/s640/Jacqueline+Fernandez+Hot+Pics+1.jpg

வில்லனை பெண் போலீஸ் உயர் அதிகாரி விசாரிக்கும் சீன் அப்படியே பேசிக் இன்ஸ்டிங்க்ட் ல இருந்து சுட்டுட்டாங்க.


ஆனா படத்துல பாராட்ட வேண்டிய நடிப்பு வில்லனுக்குத்தான். செமயான ,மிரட்டலான நடிப்பு.. ஆனா திருநங்கையா வர்றவங்க கிட்டே இந்த அளவு கம்பீரம் வருமா? பெண்மையின் நளினமும், அந்த தளுக்கும் மிஸ்ஸிங்க்.. ஒரு வேளை பாத்திரத்தின் சைக்கோத்தனம், கொடூரம் இவற்றை உயர்த்திக்காட்ட வேண்டி இயக்குநர் அப்படி கேரக்டரைசேஷன் பண்ணீட்டாரோ?என்னவோ?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1mGMPi9QPKeLRLnt5q_BjZRoIxG0-r1iNlRVS1qYFR7_yl7YW38ozaneO-WNrkFr6Qt3EfNDMGgOAMQlgASnUCsDl0GtdKsbSRprwxI0EHVVhbHBXE3GPoQIB4gKPGcJkap8bP1G8Tr8m/s1600/m6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன் ஒரு பாழுங்கிணத்துல பிணங்களை சேமிக்கிறான். (அதென்னா டெட் பாடி பேங்க்கா?)2 நாள் ஆனாலே செம ஸ்மெல் அடிக்குமே பல நாட்களா பிண வாடை அக்கம் பக்கம் அடிக்காதா?

2.ஹீரோயினை கண்டபடி தாக்கி (கிட்டத்தட்ட கஜினி படத்துல அசின் அடி வாங்கற மாதிரி )20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றுல தூக்கிப்போடறாரே. பாப்பாவுக்கு சின்னதா கால் எலும்பு கூட முறியலையே ஏன்?

3. சரி. அந்த லாஜிக் தான் போகட்டும் கீழே விழுந்த ஹீரோயின் 47 பிணங்கள் தன்னை சுற்றி இருக்கறதை பார்த்ததும் பயத்துல இயக்குநர் சொல்லிக்கொடுத்தபடி அலறுது ஓக்கே. ஆனா ஸ்மெல் தாங்காம முகத்தை ,அட்லீஸ்ட் மூக்கைக்கூட பொத்திக்காம இருக்கே அது எப்படி?அதுவும் 9 மணீ நேரமா. 

4. வில்லனை விசாரனை பண்ண ஒரு பெண் அதிகாரி தெனாவெட்டா  சேர்ல உக்காந்து போஸ் கொடுக்கறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லாம அப்படித்தான் அசால்ட்டா ஒரு கொலைக்கைதி அதுவும் சைக்கோவை விசாரிப்பாங்களா?(அவனை சேரோட கட்டிப்போட்டல்ல விசாரிக்கனும்?)

5. வில்லன் அந்த லேடி ஆஃபீசரை பாய்ஞ்சு கை விலங்கால கழுத்தை நெரிக்கும்போது அந்த ஆஃபீசர் தப்பிச்சா போதும்னு பாக்குதே ஒழிய ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான பாடி லேங்குவேஜ் இல்லையே?

6. க்ளைமாக்ஸ்ல வில்லன், ஹீரோ ஃபைட் ரொம்ப கொடூரம். ஹீரோவைப்போட்டு சட்னி ஆக்க்குன பின்னாடியும்,அண்ணன் அசால்ட்டா எந்திரிச்சு வர்றாரே அது எப்படி?அதே போல செத்துட்டதா நினைச்ச வில்லன் மறுபடி பாய்ஞ்சு வந்து தாக்கறார்.



7. எந்த ஊர் போலீஸ் ஃபங்க்ஹேர் ஸ்டைல்  வெச்சுக்க  பர்மிஷன் கொடுத்தது?

http://mimg.sulekha.com/hindi/murder-2/stills/murder-2-film-030.jpg

போலீஸ் விசாரனை நடைபெறும்போது வசனகர்த்தா நெஞ்சில் நிற்கிறார்


இந்த வண்டி யாருது?

வில்லன் - என் மாமாவுது. 

அவர் பேர் என்ன?

ஞாபகம் இல்ல. அவர் பேரு டைரில எழுதி வெசிருக்கேன்.. ஆனா டைரி வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன். 

சரி.. வீட்டு அட்ரஸ் சொல்லு. 

சாரி.. அதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. 

என்னது?உன் வீட்டு அட்ரஸ் கூட உனக்கு ஞாபகம் இல்லையா?


--------------

ஹீரோ - இந்தா. நீ கம்ப்பெனி கொடுத்ததுக்கு பரிசா இந்த ஒரு லட்சம் எடுத்துட்டு கிளம்பு.


என்ன இவ்வளவு தர்றே.?பிளாக் மணியா?

அதைப்பற்றி உனக்கு என்ன?

-------------

நீ இப்போ யார் கிட்டே பேசிட்டு இருந்தே? உன் பாய் ஃபிரண்டா? (BOY FRIEND)


இல்லை..

அப்போ பாய்ல படுக்கற ஃபிரண்டா?

------------

கில்மா ரசிகர்களை சூடேத்துற மாதிரி படத்தோட ஓப்பனிங்க்ல சம்பந்தமே இல்லாம 2 கில்மா சீன்கள் உண்டு. ஆனா சென்சார் விதிகளூக்குட்பட்டது. நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது. அடக்கி வாசி அண்ணாத்தே. 



http://www.viewsbuzz.com/wp-content/uploads/2011/02/Jacqueline-Fernandez-Murder-2-wallpaper-3.jpg

ஈரோடு ஸ்ரீநிவாசா,ஸ்ரீ லட்சுமி ஆகிய 2 தியேட்டரில் படம் ஓடுது. நான் ஸ்ரீநிவாசா தியேட்டர்ல தான் படம் பார்த்தேன். 

சி .பி . கமெண்ட் - க்ரைம் ரசிகர்கள் பார்க்கலாம் ,

டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?

TWOO33-snowwhite1.jpg1. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சித்தால் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக அமையும்#பணம் தேடும் உலகு கண்டு மனம் வாடும்  மனிதன்

----------------------------

2. திறமை உங்களை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்லும்,ஆனால் நன்னடத்தை தான் உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்து நிலை நிறுத்தும்

-------------------------

3. எதிர் வீட்டு டல் திவ்யா இப்போ தூள் திவ்யா ஆகிட்டாளே ,ஏன்?

ஏன்னா என் சம்சாரம் ஊருக்கு போயிருக்கா

-------------------------

4. சம்சாரம்,செல்ஃபோன் என்ன வித்தியாசம்?

சம்சாரத்தை மியூட் பண்ண முடியாது,செல்ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கலாம்,மாடல் பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்

------------------------

5. நான் கண்ணீர் மாதிரி,நீ சந்தோஷமாக இருக்கும்போது உன் கூட இருக்க மாட்டேன்,உன் கஷ்டத்தில் மட்டும் உடன் இருப்பேன்

--------------------------



6. கடவுள்பாதி மிருகம்பாதி படத்தில் ஆர்யா,நரேன்,ஆதி மூவரும் ஒப்பந்தம்#இதுல ஆதி தான் மிருகம் போல் நடிக்கனும்னு நிர்ப்பந்தம் பண்ணி இருப்பாங்களே

------------------------


7.போஸ்ட் பாக்ஸ்கள் விமான நிலையங்களில் மட்டும் நீல நிறங்களில் இருப்பது போல் மனிதன் மனம் தனிமையில் மட்டும் கறுப்பு நினைவுகளில் வாழ்கிறான்

--------------------------

8. டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?

நான் சேலையை ஏத்திக்கட்டறவ இல்ல.. இறக்கிக்கட்டறவ.

அது.(எது?) #திருப்பதி தல ரசிகை (மொட்டை அடிக்கப்போறா)

-------------------


9. தலைவரே,உங்க பொண்ணை லவ் பண்றேன்.

அப்படியா?யாராவது பெரிய மனுஷன் கிட்டே இருந்து ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வா#ஹூம்,இவனெல்லாம் மனுஷனா?

-----------------------------


10. அந்த நடிகை கூட எனக்கு லவ் இருக்குன்னு சொல்றது புரளி,என் வேலையை கவனிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு.

உங்க வேலையே நடிகையைலவ்வறதுதானாமே?

------------------------------


snow_white_and_the_seven_dwarfs-2560x1600.jpg

 

11. பாசிட்டிவ் ரிசல்ட்டை விரும்பாத ஒரே இடம் ஹெச் ஐ வி டெஸ்ட் ரிப்போர்ட்டில் மட்டுமே#ஜி ஹெச்

----------------------
12. தன்னை யாரும் கவனித்து விடக்கூடாது என ஒவ்வொரு பால்வினை நோயாளியும் தன் முகத்தை மறைத்துக்கொள்ளும் சோகத்தை ஜி ஹெச்சில் பார்க்கலாம்

---------------------

13. பால்வினை நோயாளிகள் பிரிவில் ஒரு ரவுண்ட் அடித்துப்பார்த்து விட்டு வந்தால் ஜென்மத்துக்கும் பெண் ஆசையே மனிதனுக்கு வராது#ஜி ஹெச் உலா

---------------------
14.  நான் ஆஸ்கார் வாங்கவேண்டிய இசைமைப்பாளர்-டி.ஆர் #மக்கள் உயிரை வாங்கறவங்களுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டாங்களே சார்..

-

-------------------------------

15. நாம் இருவரும் பேசாமல் இருக்கும் விரதம் இருப்போம். யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போமா? உன் கண்கள் இருக்கும் வரை ஜென்மத்துக்கும் ஜெயிக்கமாட்டாய்

-------------------------


16. சுடி,மிடி ,ஜீன்ஸ் டீ சர்ட்டில் கலக்கும் பெண்களை எந்த அளவு ரசிக்கிறோமோ 3 மடங்கு அதிகமாக சேலை அணிந்த ஃபிகரை ரசிக்கிறோம்#தமிழண்டா

----------------------

17. விஜயகாந்த் மகன்  +2 தேர்வில் 1200க்கு 585 மார்க்#ஒரு நாட்டின் வருங்கால சி எம் மகனே எந்த ஊழலும் செய்யாம நியாயமான மார்க் போதும்னு பெருந்தன்மை

-----------------------

18. ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு  அப்துல்கலாம் பதில்# எல்லாரும் தொடங்கறாங்க. ஆனா கடைசி வரை நடத்தறதில்லை, அதான் பிரச்சனை

---------------------
19. ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி : மரத்தில் மோதியது அரசு பஸ்: 30 பேர் காயம்#பஸ்ல பொன்னர் சங்கர் ஓடிட்டு இருந்திருக்குமோ?

--------------------

20. அன்புமணி: அதிமுக கூட்டணியில் தேமுதிக., தான் குறைவாக, 44 சதவீத ஓட்டு பெற்றுள்ளது.#அண்ணே,ஜெயிச்சவங்களைப்பற்றி தோத்தவங்க நக்கல் அடிக்கலாமா?

-------------------------

21. இலங்கை பிரச்னையில் அரசின் நிலை என்ன? இந்திய கம்யூ., கேள்வி # அஸ்யூசுவல் கையாலாகாத நிலைதான், இதென்ன கேள்வி?

----------------------

22. ரிசர்வ் வங்கி கவர்னர் -வங்கிகள் உபயோகமான செயல்பாடுகளுக்கு மட்டுமே கடன் அளிக்க வேண்டும்.#அப்போ கட்சி தொடங்கனும்னா லோன் கிடையாதா?

--------------------------

23. அன்புமணி -தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.,வினரால் தான், பாமக.தோற்றது.#உன்னால நான் கெட்டேன்,என்னால நான் கெட்டேன்,நம்மால நாடே கெட்டுது

--------------------------

24. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கதறும் தங்கர் பச்சான்!#இந்த டயலாக்கை கனிமொழிகிட்டே இருந்து காப்பி அடிச்சீங்களா?

------------------

25. தண்ணியடிக்க வயசு எதற்கு...? சர்ச்சையில் ஸ்ரேயா! #மூன்றெழுத்து நடிகைக்கு நான்கெழுத்தில் ஆர்வம் -சரக்கு

---------------------

Thursday, July 07, 2011

வேங்கை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIYJ4zZfopn86mHzr5-FWbWaNG4TnPL-NqprdijVCdL7Z2V8vKqv73F6JtY5TEXqGinzcuHMyN7QW3khJ4tdpp1lxq9RpjiDedsa2FQan-XngGE-OWtYtUkhxgOYIB2IHe7NheQ3O1RVA/s1600/Vengai-movie-First-Look.jpg
சாணக்யன் செல்லும் இடம் எல்லாம் அறிவுடன் செல்கிறான்,மன்னன் செல்லும் இடம் ஆள் பலத்துடன் செல்கிறான்,இயக்குநர் ஹரி மட்டும் அரிவாளுடன் தான் ஸ்டோரி டிஸ்கஷனுக்கே போவார் போல....ஒரே ரணகளம்,வெட்டு குத்து,லாரி,அடியாட்கள்,  தாதா கோஷ்டி மோதல்கள்..உஷ் அப்பா. சாமி.. முடியல.. 

ராஜ்கிரண் ஊர் பெரிய மனுஷன் கம் கட்டப் பஞ்சாயத்து பார்ட்டி அண்ணன் அழகிரி மாதிரி..அவர் பார்த்து ஜெயிக்க வைத்த எம் எல் ஏ பிரகாஷ் ஊழல் பண்ணி விடுகிறார் ஆ ராசா மாதிரி.. சொத்துக்களை மக்களுக்கே எழுத வைத்து  தன்னை அவமானப்படுத்திய ராஜ்கிரணை பிரகாஷ்ராஜ் 45 தடவை டேய் என உறுமி பழி வாங்கத்துடிக்கிறார்...அவரை காப்பாற்றுவது ராஜ்கிரணின் மகன் தனுஷ்..

இந்தப்படம் பத்தோட 11 ஆகப்போயிடக்கூடாதுங்கறதுக்காக இடையிடையே ஒரு காதல் வித் தமனா.. கார்த்தி- ரஞ்சனி கல்யாணத்தால் ஏற்பட்ட சோகமோ என்னமோ தமனா ஈரோடு மஞ்சள் கிழங்கு மாதிரி இருந்தவர் காய்ந்து போன பாரியூர் வாழை மட்டை மாதிரி டல்லடிக்கிறார்..அதுவும் பாடல் காட்சிகளில் அவர் காட்டும் அதீத உற்சாகம் அதீத செயற்கை.. 

ஓப்பனிங்க் சீன்ல இயக்குநர் கோட்டை விட்டுட்டார்.. அதாவது தண்டவாளத்துல பாம்,ஹீரோ தடுக்கனும்,இந்த சீன்ல ஹீரோ சுள்ளான் படத்துல வர்ற மாதிரி செம பில்டப்போட வந்து ஒற்றைக்கையால ரயிலை நிறுத்துவார்னு பார்த்தா ப்ச். சிவப்புக்கலர் கொடியை காட்டி நிறுத்தறார்.. இதெல்லாம் சிவாஜி கால ஒயிட் &பிளாக் பச்சை விளக்குலயே பார்த்தாச்சு பாஸ்.. 

கஞ்சா கறுப்பு சைக்கிள் பெண்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டு என்னமோ பண்றாரே. அதான் காமெடியாம் ஹய்யோ ஹய்யோ.. (இயக்குநர் பேட்டி ஒன்றில் - என் படங்கள் குடும்பத்தோட  உக்காந்து பார்க்கற மாதிரி இருக்கும்)

http://narumugai.com/wp-content/uploads/2010/11/vengai.jpg
படத்தில் வேங்கையாய் சீறிய வசனங்கள்

1. அப்பா.. எதுக்கு என் ஃபோட்டோ கேட்கறீங்க? என் பேர்ல ஏதாவது சொத்து எழுதி வைக்கப்போறீங்களா?


இல்லை. பாஸ்போர்ட் எடுத்து உன்னை வெளிநாடு அனுப்ப போறோம்.. அப்போதான் நீ அடி தடி எதுக்கும் போக மாட்டே.... ( ஏன் ஃபாரீன்ல போய் ஃபைட் போட மாட்டாரா?)


2. விட்றா.. விட்றா..


பளார்.. பளார்.

எதுக்குடா என்னை அறைஞ்சே?

நீதானே விட்றா விட்றான்னு கத்துனே..? அதான் விட்டேன்

3. சரி.. சரி.. வா, மாரியப்பன் உன்னை தேடுவான். அவன் கிட்டே போவோம்..

யார் அந்த மாரியப்பன்?

 என் சித்தப்பன் தான்.. 

4. ஊர்ல இருக்கறப்ப கண்ட கண்ட பசங்களோட எல்லாம் தண்ணி அடிச்சது தப்பா போச்சு.. இப்போ ஆளாளுக்கு மாமா,மச்சான்னு கூப்பிட்டு மானத்தை வாங்கறானுங்க...


5. சோகத்துலயே பெரிய சோகம் புத்திர சோகம் தான்.. 

6. டேய்.. ஒண்ணு சொல்லட்டா.அவ சின்ன வயசுல எப்படி பிச்சை போட்டாளோ அதே மாதிரி தான் இப்போவும் பிச்சை போடறா.. 

அடப்பாவி,பிச்சைஎடுக்கறவங்க வேணா விதம் விதமா எடுப்பாங்க,ஆனா பிச்சை போடறவங்க எல்லாரும் ஒரே மாதிரிதான் போடுவாங்க.. 

7. பல எருமைகளை மெயிண்ட்டெயின் பண்ணவேண்டி இருக்கு,இந்த மாசம் ஒரு மூட்டை புண்ணாக்கு அதிகம் வாங்கு. 

8.  ஈ  ரோட்ல நின்னு திரிச்சு திரிச்சு  அதையே பரஞ்சா எப்படி?

ஹலோ.. ஈரோட்ல இருந்தா நாங்க எல்லாம் ஈரோடுன்னுதான் சொல்லுவோம்.. உங்களை மாதிரி திருச்சின்னு சொல்ல மாட்டோம்..

9. அவளுக்கு ஓமனக்குட்டன்ன்னு  ஒரு அண்ணனும் ,கோமணக்குட்டன்னு ஒரு அப்பாவும் இருக்காங்க போல.. 

10. டேய்.. நீங்க எல்லாம் போதைக்கு குடிக்கறவனுங்க,நாங்க எல்லாம் டயட்க்காக குடிக்கறவங்க.. 

புரியலையே?

உடம்பு குண்டா இருக்கறவங்க ஒல்லி ஆக கொள்ளு சாப்பிடற மாதிரி, ஒல்லியா இருக்கறவங்க உடம்பை தேத்த பீர் சாப்பிடறாங்க.



http://www.thedipaar.com/pictures/resize_20110608033028.jpg

11. தினமும் பல முறை கண்ணாடில நம்ம முகத்தை பார்க்கறோம்,அப்போ தோணாதது யாரோ ஒருவர் நாம் அழகா இருக்கறதா சொன்ன பின்னாடி கண்ணாடில நம்மை நாமே புதுசா பார்ப்போம்.. யூ ஆர் பியூட்டிஃபுல்னு அவன் சொன்ன பின்னாடி தான் நம்ம அழகே நமக்கு தெரியுது.. 

12.  ஏய்.. என்ன நடக்குது அங்கே?

ம்.. ஆடு ,மாடு, பூனை, நாய் எல்லாம் நடக்குது... ( அரதப்பழசான ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வெ சீதாராமன் 1987)

13. பூமித்தாயிடம் இருந்து மண்ணைக்களவாடறதும், பெத்த தாயிடம் இருந்து கற்பை களவாடறதும் ஒண்ணுதான்...

14. செல்வத்தை பார்த்து சாரி.. சொல்லப்போறியா?

இல்லை, சரின்னு சொல்லப்போறேன்.. காதலுக்கு.. 

15. ஏய்.. எதுக்குடி பஸ்ல எழுதப்பட்டிருக்கும் குறளை பார்த்துட்டு சிரிக்கறே?

(செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.)


என் ஆள் செல்வத்தை நினைச்சுத்தான்.. 

16.  ஒரு நிமிஷம்.. பதறாதீங்க.. நீங்க பதறுனா எதிரி போட்ட திட்டத்துல பாதி வெற்றி அடைஞ்ச மாதிரி.. 

17. டிரங்க்கன் டிரைவிங்க்னு எதுக்குய்யா எங்களைப்பிடிக்கறீங்க? டாஸ்மாக் வாசல் டூ வீடு வரை குடிகாரர்களை டிராப் பண்ணறதுக்குன்னே ஒரு தனி பஸ் விடுங்கய்யா.. 

18. பிரகாஷ்ராஜ் பேசும் கேவலமான பஞ்ச் டயலாக் - பருப்புல உயர்ந்தது முந்திரி.. பதவில உயர்ந்தது மந்திரி.. ( படம் பார்த்தவரை போதும் நீ எந்திரி)

19. நானே தனியா வந்திருக்கேன்.. நீ உன் ஆளுங்களோட தானே இருக்கே.. ஏன் பயப்படறே? ( நீ ஹீரோ.. அப்டித்தான் வருவே.. )

20. எதுக்குடி என்னை ஏமாத்துனே?

அண்ணே,இன்னைக்கு ஏப்ரல் 1.. இன்னைக்குத்தான் லவ் ரிசல்ட் சொல்றதா அவ சொல்லி இருக்கா.. நான் உன்னை ஏமாத்திட்டா ,அவ உன்னை ஏமாத்தமாட்டா.. ஏன்னா ஏப்ரல் 1 ல யாரும் 2 வது தடவை ஏமாற மாட்டாங்க.. 

21. என் காதலை என்னால மறக்கவும் முடியலை, மறுக்கவும் முடியல.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga-CDpInfjCPuVwZadI6Bq6qsyKvtL223A3n-kb2DSvx8eVY6aLM8CtskMnjjqeeJ2TPvAIEKhCUgL7mi97O4g9OWEpJNv2LiM8WM36oxCy2Z1TNV4mov_U6QC2rUr9WEBngLrN2QVn99T/s1600/venkai+movie++dhanush+and+thammana+new+photos+2.jpg
22. உலகத்துலயே கொடுமையான விஷயம் என்னான்னா ஒருத்தன் தன் மனைவி முன்னிலையில் மற்றவர்களால் அவமானப்படுவதுதான்.. (எனக்கென்ன தோணுதுன்னா ஒரு ஆண் பெரும்பாலும் மனைவியாலதான் அவமானப்படுத்தப்படறான்னு ஹி ஹி )

23. கோவத்துக்காக அரிவாள் எடுத்தா தப்பு,ஆனா காவலுக்காக அரிவாள் எடுத்தா அது தப்பில்லை.. ( மவனே.. இனி எந்தப்படத்துலயும் எவனாவது அரிவாள் எடுத்தீங்க.. _ ஆடியன்ஸ்.. )



24.  இங்கே பாருடி.. கூட்டமா வாழ்ந்தாத்தான் அது குடும்பம்.. 2 பேர் மட்டும் வாழ்ந்தா... அது வாழ்க்கையே இல்லை.. 

25.  நீங்க சொல்ற ஆளுங்களுக்கு மக்கள் ஓட்டு போடறாங்க.. நீங்க ம்னு சொன்னா இந்த சோப்பு வாங்க மாட்டாங்களா?

26. இந்த ஆட்டத்துக்கு பேர் என்ன? 

செக்ஸ்....
யோவ்.. இது செஸ்யா..

27. ஏய்... என்ன பண்றே?அய்யா கோழியைத்தானே பிடிக்கச்சொன்னாரு?


எனக்குப்பிடிச்ச கோழியை நான் பிடிக்கறேன்... 

28.  பழி வாங்க எத்தனையோ வழி முறைகள் இருக்கு.. என் காதல் தானா கிடைச்சது?

29..  உடம்பை வித்து பிழைக்கற பொண்ணு கிட்டே போய் பணம் கொடுத்து ஒருத்தனை காதலிக்கற மாதிரி நடின்னா அவ கூட காரியை துப்புவா.. ஆனா நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டியேடி..


30. கெட்டவங்க எல்லாரும் சேர்ந்து நல்லவங்களை அழிச்சிட முடியும்னா எதுக்கு சாமி? எதுக்கு கோயில்?


31. ஒரு நண்பனுக்கு நண்பனா நடக்கலாம், ஒரு எதிரிக்கு எதிரியா நடக்கலாம், ஆனா ஒரு துரோகிக்கு துரோகியா மட்டும் நடந்துக்கக்கூடாது.. 


32.. அம்மா.. தேவை இல்லாம அழுது என்னை கோழை ஆக்காதே..

33. நீ இருந்தா என்னால சாக முடியாது,நீ இல்லாம போனா என்னால வாழ முடியாது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4hbAjU3I2iJixEVEqVbgEA0up0JewYxbWUyHdbA2XFv1Sw0POpOswIXTttgE6gytr65Uhzg74RPZy2appfGOZ5AlUNgX-qHvEK9LWf6aXI2p-7KTBxpZlT20Cv3rmk-ujfed6_HCWhcYp/s1600/venkai+movie++dhanush+and+thammana+new+photos+10.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தில் அடியாட்கள் என்ற பெயரில் 1279 பேருக்கு வேலை கொடுத்து ,சம்பளம்,பேட்டா கொடுத்து மெயிண்ட்டெயின் செய்தது..

2. அரிவாள் செய்யும் கலைஞர்கள், அரிவாள் தீட்டும் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்தது..

 3. வாகனங்கள்  89 டாட்டா சுமோ, 34 லாரி, 12 ஜீப் பொன்ற வாகனங்களை யூஸ்செய்ததின் மூலம் பல வாகன ஓட்டிகளுக்கு வாழ்வு கொடுத்தது..

4, பிரகாஷ்ராஜ் மாதிரி ஜைஜாண்டிக்கான ஆளை தனுஷ் மாதிரி  சப்ப பசங்க எல்லாம் சாதாரணமா ஜெயிக்கற மாதிரி காட்டி ஒல்லிப்பசங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது

5. காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்ததும் ஒளிஞ்சிக்கறியே பெண்ணே... , மற்றும் என்ன சொல்லிப்போறே நீ எப்போ சொல்லப்போறே?,உன்னை மட்டும் பிடிச்சது கண்ணை மட்டும் பிடிச்சது என 3 ஹிட் பாடல்களை தேவி பிரசாத் மூலம் ரெடி பண்ணுனது.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6kKl42NtLG-1HRaSLgwO4VXkalp942_WWuFnufIpkSKQj0tuhOTR9hZdRKqAd9nWeJu8_aQuu15ZLPkSsU50y8xjmKdf1oToSOsO4RUFoNVkl-frL-eBzd6X2-ihQixg-zTkGRVeOPa-m/s400/11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தமனாவுக்கு 8 வயசுல தொடைல சூடு போட்டுடறாங்க.. ( நோ பதட்டம் படத்துல தான் )அது 23 வயசுலயும் காயம் ஆறாம தழும்பு அப்படியேவா இருக்கும்? 


2. கஞ்சா கறுப்பு காமெடி சீன் சாரி காம நெடி சீன் எடுக்கும்போது உங்க மனசுல குற்ற உணர்ச்சியே வர்லையா? இப்படி கேவலமா சீன் எடுக்கறமேன்னு..?

3. மனிதனின் மனதில் உள்ள மென்மையான உணர்வுகள், பாசிட்டிவ் குணங்களே உங்க கண்ணுக்கு தெரியாதா?

4. ஒரு கிராமம்னா அங்கே இருக்கறவங்களுக்கு அடி தடி வெட்டு குத்து தவிர வேற வேலையே இருக்காதா?

5. படத்துல ஹீரோவைத்தவிர எல்லாருமே படு முட்டாளுங்களா இருக்காங்களே அது ஏன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5gYB-KzExM390dXgFdVmSl0Jx7O2EUzz7PmEw4AirrUqnca-JN8Dj1jm6ddjTC5x1PeU8Wo_JY8ibrbCU6nwmMZp9Z59JbYJt_6V_2dDvlaAEX8wQkEDP3S_SpuOGvudO6ZLTLjcpnrq3/s1600/tamanna%252Bhot%252Bnavel.jpg
இந்தப்படம் கமெர்ஷியலா போட்ட முதலீட்டை எடுத்துடும்னாலும், ஒரு நல்ல சினிமா ரசிகனா இந்தப்படம் ஓடிடக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. அப்படி ஓடிட்டா ஆளாளுக்கு இதை மோசமான முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு  மறுபடி இதே மாதிரி மசாலாக்குப்பைகளைத்தான் எடுப்பாங்க.. 

ஏ, பி செண்ட்டர்களில் 25 நாட்கள்,  சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈரோடு அபிராமி,ஆனூர்,சங்கீதா ,லட்சுமி என 4 தியேட்டரில் இந்த படம் ஓடுது.. (ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளீக்க இது ஒரு குறுக்கு  வழி ஐடியா.. )

நான் அபிராமில பார்த்தேன்.. காரணம் உங்களுக்கே தெரியும். என் பொண்ணு பேரு அபிராமி... .

டிஸ்கி- தமனா படத்தில் சரியில்லை என சொன்னீங்க, ஆனா இங்கே பார்க்க நல்லாத்தானே இருக்காங்க? என கமெண்ட் போடுபவர்களுக்கு - நான் வேங்கை ஸ்டில்ஸில் எடுக்காமல் தமனாவின் ஆல்ப ஸ்டில்லிலிருந்து எடுத்தேன் ஹி ஹி

”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”


1.சென்னையில் தான் கலைஞர் குடும்பம் இருக்கிறது என்பதற்காகத்தான் சென்னையில் மட்டும் 4 மணி நேர மின் வெட்டா? டவுட்டு

------------------

2, ”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”

“நச்”

-------

3. நம்ம காதல் இனி சக்சஸ் ஆக சான்ஸ் இல்லை,ஜஸ்ட் இனி ஃபிரண்ட்ஸா மட்டும் இருப்போம்,?”


“காதல் இல்லை என்பதில் கூட வருத்தம் இல்லை,அதென்ன ஜஸ்ட்?

-------------------


4.”என்னைப்பற்றி ஏதாவது சொல்லுங்க,கேட்கலாம்.”

“உன்னைப்பற்றிக்கொள்ளும்போது எனக்கே பற்றிக்கொள்கிறது...... எப்படி பேச?”#காதல் தீ




---------

5. ”எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை.

“ “எனக்குக்கூடத்தான் தேவதைகள் இருப்பாங்கன்னு எல்லாம் நம்பிக்கை இல்லை, இப்போ நம்பலையா?”

-------



6. காதலை எப்படி எக்ஸ்போஸ் பண்றதுன்னு ஆண்களுக்கு தெரியறதில்லை,ஆனா அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு பெண்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.

----------------

7./

Wednesday, July 06, 2011

”நீங்க ஒரு மாதிரியான ஆளாமே?அதான் லவ் பண்ண பயமா இருக்கு.


1.”எல்லோரும் காதலைவெளிப்படுத்த ரோஜா தருவாங்க, நீங்க எதுவும் தர்லையே?”

”யாரும்  யாருக்கும் தராத புது காதலை உனக்கு நான் தரலாம்னு தான்”#லவ்வாலஜி

--------------------------

2. ”ஸாரி.. எங்க வீட்ல யாருமே லவ் பண்ணுனதில்லை...”


“ சேம் சாரி..எங்க வீட்ல எல்லாருமே லவ் மேரேஜ் தான், நான் மட்டும் மீற முடியுமா?

------------------------

3. ”ஹை ஹீல்ஸ் செப்பல் போட்டா உங்களுக்கு பிடிக்காதா? ஏன்?”


”ஒரு சாதாரண செருப்பு உன்னை மேலும் உயர்த்தி விட முடியும் என நான் நம்பாததால்..”

--------------

4. ”டியர்,போஸ்ட் கார்டையே ஏன் லவ் லெட்டரா தர்றீங்க?”

“1. மங்களகரமா இருக்கும்

2.நான் வெளிப்படையான சிம்ப்பிள்மேன்னு உணர்த்தும்,

3. செலவு கம்மி

4. உன் மூஞ்சிக்கு இது போதும்.. ( மைண்ட் வாய்ஸ் )

----------------------

5. ”எங்களை விட நீங்க வசதி,அதான் என மனசுல நோ எண்ட்ரி போர்டு டூ லவ்”

“வசதி எனும் வாகனத்தை நிறுத்திட்டு நான் மட்டும் நடந்து வந்தால் ஓக்கேவா?”

----------------------






6. ”நீங்க ஒரு மாதிரியான ஆளாமே?அதான் லவ் பண்ண பயமா இருக்கு..”

“நீ லவ் பண்ணு, நான் புது மாதிரியான ஆளா மாறிடுவேன்”

------------------

7. ”டியர்,ஒரு கிஸ் வேணும்”

“ம்,அதுக்கு வேற ஆள் பாருங்க”

“ச்சே ச்சே அது தப்பு..லவ் பண்ற உனக்கே தர தயக்கம்னா..நான் வேற யார்ட்ட கேப்பேன்?”

------------------

8. ”டொக் டொக், மே ஐ கம் இன்?” 

“பக், பக்.. பயமா இருக்கு” 

“பைத்தியம்,உன் இதய அறைக்குள்தானே வரப்போறேன்?வீட்டின் அறைக்குள்ளா வர்றேன்? பயப்பட?

----------------------

9. ”உங்க பாசிட்டிவ் அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா....”

“வெயிட்.. நெகடிவ்வா எதையும் சொல்லிடாதே.!”

-----------------

10. ”என் நினைப்பு வந்தா என்ன செய்வீங்க?”

“உடனே உன்னைப்பார்க்க உன் வீட்டுக்கு வந்துடுவேன்,ப்ளீஸ் ஓப்பன் த டோர். “
(வாசல்ல நின்னுக்கிட்டே வக்கணையா கடலை}
------------------




1. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுடன் தமிழகம் பேச்சு நடத்த கூடாது:ராமதாஸ்#ஆமா,பேச்சு வார்த்தைல ஏதாவது நல்லது நடந்துட்டா?பயம் தான்

-------------------------

2. உலகின் மிக சிறந்த வாகன ஓட்டிகள் இந்தியர்களே...#ஆமா,மத்தவங்களை ஓட்டறதுலயும்,கலாய்க்கறதுலயும் கூட அவங்க தான் நெம்பர் ஒன்

--------------------------

3. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு#கூடாநட்புக்கு ஜெயிலில் இடம் கொடுப்போம்

------------------------

4. லோக்பால் மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெக்டே "அட்வைஸ்'#எங்க அம்மாவுக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ்

---------------------

5. இன்று டாக்டர்கள் தினம்#டாகூட்டர் விஜய் ரசிகர்கள் இன்று அந்தந்த ஊர் நர்சுகளை சந்தித்து ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடினர்

-----------------------



6. தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் விசாரணை: #MR
மாறன் ,மேலிடம் கொடுத்த 10 கேள்விகள் அடங்கிய லிஸ்ட்,உங்க மேலிடத்தை கேட்டுட்டு பதில்குடுங்க

--------------------------

7. தன் படைப்பில் யாராவது திருத்தம் சொன்னால் படைப்பாளிக்கு வருத்தம் வந்துவிடுகிறது.படைப்புக்கு அர்த்தம் என்ன என யாராவது கேட்டால் கோபம் வருது

-----------------------------

8. கரெக்‌ஷனும்,கரப்ஷனும்(CORRUPTION)ஒவ்வொண்ணாத்தான் வெளில வரும்#டேக்கன் ஃப்ரம் மை தத்துவ கலெக்‌ஷன்ஸ்

-----------------------

9.  தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?#சம்பளம் சூப்பரா இருக்குமா?சஃப்ர் ஆகற மாதிரி இருக்குமா?

----------------

10.  பிரதமரின் ஆலோசகர் வீட்டில் திருட்டு #பிரதமர்ட்ட சரக்கு இல்லை,வேல்யூ இல்லங்கற மேட்டர் திருடனுங்களுக்குக்கூடத் தெரிஞ்சுருக்கே.?

மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?சுமாவுக்கே சுமோவா?

1. கேரள அரசுக்கு உலக வங்கி கடனுதவி #பத்மநாபா கோயில் மேட்டர் தெரிஞ்சபிறகுமா?சுத்த கேன பேங்க்கா இருக்கே?

---------------

2. ஃபோட்டோவுடன் கூடிய "மெமோ' : திருச்சி டிராஃபிக் போலீஸார் அதிர்ச்சி#மாமாவுக்கே மெமோவா?ஒபாமாவுக்கே டெமோவா?

-----------------------

3. நடிகை ராதா தோட்டத்துகாவலாளிக்கு அரிவாள்வெட்டு ஏர்வாடி அருகே 5பேர் கைது#கோடம்பாக்கத்துக்கும்,கீழ்ப்பாக்கத்துக்கும் எப்பவும் லிங்க் உண்டு



-----------------------

4. சதுரகிரியில் 3 ஆயிரம் அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்#அவ்வளவு தூரம் ஏறி இறங்குறதுக்குள்ள சாப்பிட்டது செரிமாணம் ஆகிடுமே?

--------------

5. சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை#கேட்டுட்டீங்களா? கலைஞரே கவலைப்படேல் கனி மொழி நலம்

------------------



6. ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார் #கலைஞர் போனார்னா அதுக்கு காரணம் இருக்கு,இவிங்க ஏன் போகனும்?சும்மா போட்டிக்காக போறாங்களோ?

-------------------

7. ரிஸ்க்கான காட்சியில் நடித்த சமீரா ரெட்டியை அவரது பெற்றோர்கள் இனிஇப்படி  நடிக்கவேண்டாம் என்றார்கள்#அடடாஇப்படி என்பதை கட் பண்ணி இருக்கலாம்

----------------------
8. திரு என்ற மரியாதைச்சொல் தேவைப்படாத எழுத்தாளர் சாரு#திரு திரு துறு துறு இன் சேட்டிங்க் & சீட்டிங்க்

--------------------

9. திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட,திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள்-ஸ்டாலின் # அதெப்பிடிங்க? இன்விடேஷனே வைக்காதவங்க மேரேஜ்க்கு வர்லன்னு வருத்தப்படுவாங்களா?

------------------------
10.  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தொடர் கொள்ளை#அதெப்பிடிங்க?ஆ ராசா தான் உள்ளே இருக்காரே?

---------------------

IN Gif - IN

11. குடிபோதையில்  ஸ்ரேயா குத்தாட்டம்#டாக்டர் ராம்தாஸ் &; கோ பாப்பாவை என்ன பண்னப்போறாங்களோ?

------------------

12. சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை-ஆய்வுக் குழு அறிக்கை #அப்டின்னு அம்மா சொல்லச்சொன்னாங்களா?

----------------

13. கவுண்டமணி வீட்டில் விஜய் வேலாயுதம் படத்துக்காக # காமெடி பாஸ் வீட்ல காமெடி பீசுக்கு என்ன வேலை?

--------------------

14. வேலாயுதம் படத்தில் 15 வில்லன்கள், 30 காமெடியன்கள்  உண்டு#நாசமாப்போச்சு,அப்போ ஃபைட் சீன்கள் தான் படம் பூராவா?

-------------------

15. வேலாயுதம் கதைப்படி விஜய் ஒரு பால்காரன். பெயர் வேலு.#அண்ணாமலை ரீ மேக்கா?என் ரசிகர்கள் மீது கை வெச்சா.. அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசுவாரா?

------------------



16. பாளை சிறையில் கைதிகளிடையே மோதல்: #இதெல்லாம் ஒரு நியூசா? சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்குள் காதல்னா அது நியூஸ்@நோ உள் குத்து

----------------------

17.திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை-ஸ்டாலின்#நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க, 5 வருஷத்துல ஒரு நாளாவது அம்மாவை கைது செஞ்சீங்ளா?@உசுப்பேத்து

--------------------
18.ரயில்வே துறையை தமிழக எம்.பி.,க்கள் கேட்டுப் பெற கோரிக்கை#விட்ராதீங்கய்யா,செம மாலு,கமுக்கமா முடிச்சுக்கோங்க டீலு

----------------
19. பருவமழை காரணமாக நாடு முழுவதும் சிமென்ட் விலை ரூ. 10 முதல் 15 வரை குறைந்துள்ளது#ஒரு மலையாள கில்மாப்படத்துக்கு இம்புட்டு மவுசா?

----------------

20. மாஜி முதல்வரின் மகனை கரம்பிடிக்கிறார் ஜெனிலியா! #கழக உடன்பிறப்புகள் கலக்கம் வேண்டாம்,இது மும்பை செய்தி

---------------



21.   2வது திருமணம் செய்த செல்வராகவனுக்கு கருணாநிதி வாழ்த்து!#தொடர்ந்து இதே போல் பல திருமணங்கள் செய்யுங்கள் அப்டீன்னா? வெளங்கிடும் தலைவரே!

-------------------
22. கமல் படத்தில் நடிக்க போட்டி போடும் சல்மான், அக்ஷய்! #விபரம் தெரியாத பசங்க,டம்மி ஆகறதுக்கு இம்புட்டு போட்டியா?பிரபு,அர்ஜூன்,மாதவன் வரிசை

-------------------------------

23. சம்பளத்தை பாதியாக குறைத்தார் இலியானா! #உடையை கால்வாசியா குறைத்தாரா?ரசிகர்கள் கேள்வி,எம்புட்டு காமிச்சாலும் பசங்களுக்குப்பத்தாதே!?

---------------------

24. ஆகஸ்ட் 12 அல்லது 19ல் மங்காத்தா! வெங்கட்பிரபு அறிவிப்பு!! #2013 அல்லது 2019 இல் சம்பளப்பட்டுவாடா ,பட தயாரிப்பாளர் அறிவிப்பு

-------------------

25. மானாட மயிலாட குண்டு ஆர்த்தி மெலிந்து விட்டார்-செய்தி#கலைஞர் டிவி,மற்றும் கலைஞர் குடும்பம் இதற்குப்பதில் சொல்லியே ஆகவேண்டும் ,ஜெ ஆவேசம்

------------------------