Tuesday, June 21, 2011

திருநெல்வேலி அல்வாடா.. வடை வாங்கி செல்வாடா.. நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 2



நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பிக்கும்போதே ஆன் லைன் -ல் அனைவரும் அந்த சந்திப்பை காண வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் இலங்கை அலப்பறை மன்னன் நிரூபனுக்கு இருந்தது.. பதிவர் சந்திப்பு அன்று அவர் ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டு வீட்ல காத்துட்டு இருந்தார்..


யார் செய்த பாவமோ,அண்ணன் உணவு உலகம் போன ஜென்மத்துல  எந்த ஃபிகரை ஏமாத்தி சாபம் வாங்குனாரோ ஹோட்டல்ல நெட் ஒர்க் ஆகலை..

என்னென்னமோ முயற்சி செஞ்சு பார்த்தோம், முடியலை.. நிரூபனை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டு  பதிவர் சந்திப்பு  கூட்டம் ஆரம்பம் ஆச்சு..


எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு வரி அறி முகம்..

பெயர் சொல்ல விருப்பம் இல்லை (ஹூம் இப்படி ஒரு பிளாக்கர் பேரா/) ஆள் செம காமெடியா இருந்தார்.. கன்னிப்பொண்ணுங்க பொதுவா பசங்களுக்கு என்ன சாத்துவாங்களோ அதை நெற்றில இட்டிருந்தார் .. ( அதாங்க நாமம்)

ரசிகன் ஷர்புதின் அப்பாஸ் மாதிரி இருந்தார்.. ( தனி மெயில்ல அஜித் மாதிரி தான் இருக்கறதா போடனும்னு மிரட்னாரு.. )

மேலும் ஒவ்வொருத்தர் பற்றியும் வர்ணிக்கறதுக்குள்ள  புரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடுச்சு..

லேப்டாப் மனோ பேசறான் (ர்),அருகில் அண்ணன் உணவு உலகம்,வலைச்சரம் சீனா ,பலாபட்டறை சங்கர், அப்பாஸ் ரசிகன் ஷர்புதீன்


நிகழ்ச்சியின் 2 வது கட்டமா கோபி காதல் மன்னன் கோமாளி செல்வா  கதை விடும் நேரம்.. ( கோபி மாவட்டம் பாரியூர் என்ற ஊரில் மட்டும் எங்கள் தங்கத்தலைவன் செல்வாவுக்கு 3 காதலிகள் ஹி ஹி .. அந்த ஃபிகர்களோட ஃபோட்டோ வேண்டுபவர்கள் செல்வாவிடம் தனி மெயிலில் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும்,.. )


கோமாளி செல்வாவைப்பற்றி ஒரு அறிமுகம்,, அவர் பிளாக் உலகில் உள்ள மிக முக்கியமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரர்..செல்வா கதைகள் என அவர் எழுதி வருவது முல்லா கதைகளுக்கு இணையானது..  இவர் பத்திரிக்கை உலகை கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. இவர் இப்போதே ட்விட்டர் அக்கவுண்ட்டில் பின்னிட்டு இருக்கார்.. ஆனந்த விகடனில் 5  ட்வீட்கள் வந்துள்ளது..இவர் என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் திறமையில்,நகைச்சுவையில் ,பழகும் பண்பில்,கண்ணியத்தில் மிக மிக உயர்ந்தவர்.. 


கோமாளி செல்வா மீது நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை படிக்க உங்கள் சுவராஸ்யத்துக்காக அவரை செந்திலாகவும் , என்னை கவுண்டமணியாகவும் கற்பனை செய்து கொள்க.. இந்த உரையாடலில் ஏற்படும் மரியாதைக்குறைவான வசனங்களுக்கு மன்னிக்கவும்..செல்வாவின் குடும்பத்தார்கள், அவரது நண்பர்கள் ,அவரால் கழட்டி விடப்பட்ட, இனி கழட்டி விடப்போகிற காதலிகள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.. ஹி ஹி



எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. 

 சி.பி - அப்போ ஆரம்பிக்காதே.. நாங்க தப்பிச்சுக்கறோம்.. 


காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை.

 சி.பி- ஒரு மொக்கைப்பையன் கிட்டே இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்?


தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன்.

 சி.பி - கதையையா? எங்களையா? 

கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு நீங்க கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

சி.பி - உயிரோட இருந்தா சொல்றோம்.. 


நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

சி.பி - பூனை குறுக்கே வர்லை.. ஒரு யானை தான் குறுக்கே வந்துச்சு.. லேப் டாப் மனோ.. தான் மப்புல  குறுக்கே வந்தான்.. ஹா ஹா 


முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ?


சி.பி - நாளிகையா? நாழிகையா? டவுட்டு/....

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது.


சி.பி - அடங்கொய்யால.. உனக்கும் தெரியாதா> அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை கேட்டே? 

இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாளிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

 சி.பி - குடையை கையில் எடுத்த வை கோ வுக்கு  நேர்ந்த கதி எங்களுக்கும் வரனுமா? 



சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

சி.பி - இந்த கூட்டத்துலயே  கோவை டாக்டர் கந்த சாமியும்,உணவு உலகம் அண்ணனும் தான் சீனியர்ஸ்.. நீ எல்லாரையும் விட சீனியர் போல..

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

 சி.பி - முப்பொழுதும் உன் கற்பனைகள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு..? நாயே... நாயே.. 


கோபியின் காதல் மன்னன் எங்கள் அண்ணன் கோமாளி செல்வா ,வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன்
( கூலிங்க் கிளாஸை மறந்துட்டு வந்துட்டாராம்.. )

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

சி.பி - என்ன? கலைஞரை சோனியா மிரட்டி 63 சீட் வாங்குன மாதிரி மிரட்றே? 

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

சி.பி - அட பொழப்பு கெட்ட மன்னா.. மன்னர்னா அந்தப்புரத்தை சுத்திப்பார்க்கனும்.. 

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


சி.பி - டேய் டேய்.. சீக்கிரம் மேட்டருக்கு வாடா.. பொறுப்பல்ல பருப்பல்லன்னு என்னடா இழுவை.. 

ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.


சி.பி - உன் குள தெய்வம்  அடச்சே... குல தெய்வம் ஹன்சிகா மோத்வாணி தானே?

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை.

சி.பி - இப்போ நீ பேசறது  மட்டும் எங்களுக்குப்புரிஞ்சிடுச்சாக்கும்.. நாயே நாயே..

எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.


சி.பி - வேட்டிப்பேச்சு சித்ராவை நக்கல் அடித்ததற்காக எனது கடும் கண்டனங்கள் ஹி ஹி நாங்களும் கோர்த்து விடுவோமில்ல. ஏஹே ஹேய்  

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன்.

சி.பி - உன்னை முடிச்சா போதும் ,கதை உடனே முடிஞ்சிடும்.. 


சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது.

 சி.பி - ஏன் பட்டத்து ராணி குப்பத்து கோபால் கூட ஊடிப்போயிடுச்சா?

அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

சி.பி - கலைஞர் டி வியை நக்கல் அடிக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டயா ராஸ்கல். இதுக்கு தண்டனையா கலா மாஸ்டரை க்ளோஸப்ல மேக்கப் இல்லாம ஒருக்கா, ஃபுல் மேக்கப்போட மறுக்கா காட்டனும்டா..  (ஒருக்கா ,மறுக்கா ,கலாக்கா அடடே நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே... ஹூம் நம்ம முதல் கவிதையே கலாபூர்வமா அமைஞ்சிடுச்செ..?)

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.

 சி.பி - கோபில இருக்கற கெமிஸ்ட்ரி டீச்சர் ஏன் ரிசைன் பண்ணீட்டாங்கன்னு இப்போத்தான் தெரியுது.. பாப்பா எங்கே போனாலும் எதிர்க்கவே அதாவது எதிர் திசைலயே வந்தா எப்படிய்யா?

அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார்.

சி.பி - அய்யய்யோ ,ரமேஷ்க்கு ஆபத்தாச்சே.. அவர் பல் துலக்காம சாப்பிட மாட்டாரே?ஓ சி சாப்பாடுன்னா மட்டும் விதி விலக்கு உண்டு.. 


அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது.

சி.பி - தம்பி . இது பதிவர் சந்திப்பு , லேடீஸ் எல்லாம் இருக்காங்க.. இது அட்ராசக்க பிளாக் கிடையாது.. எது வேணாலும் சொல்லலாம்கறதுக்கு அடக்கி வாசி அமுக்கி வசி.. 


அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில் நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை ஞாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!


சி.பி - இது தெரியாதா? எங்க பண்ணையார் அண்ணன் ராசலீலா ராசேந்திரன் தான் ,ஏன்னா அவரு தான் 5 செல் ஃபோன் வெச்சிருக்காரு.. செல் ஃபோனே 5 வெச்சிருக்காரே..   சரி சரி அண்ணன் பப்ளிக் பப்ளிக்னு கண் அடிக்கிறார்... விட்ருவோம்.. 



அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன்.

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ள :-)


சி.பி -சகுனத்தை நம்பவே முடியாது.. சில சமயம் என்னைப்பார்த்து சிரிப்பா.. சில சமயம் முறைப்பா.. எதிர் வீட்டு ஃபிகர் சகுனத்தை பத்தித்தானே  பேசறே.. ? ஆனா சற்குணத்தை நம்பலாம் .. களவாணி என செம ஹிட் படம் கொடுத்தாரே..?


தமிழ்வாசி பிரகாஷ்,வெறும்பய ஜெயந்த் ( ஜோதி புகழ்)


அடுத்து என் உரை. இதுவரை காமெடியாக போய்ட்டு இருக்கற பதிவு இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆகப்போகுது..

ஏன்னா வலை உலகில் என்னை குறி வைத்து தாக்கப்படும் பதிவுகள் ,விமர்சனங்களுக்கு நான் நேரடி பதில் அளிக்கப்போகிறேன்.. வித் அவுட் எனி சென்சார்.. ...  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. ஏன்னா கலர் டோன் மாறுது.. அதுவரை  குட்டி பிரேக்..  (குட்டி = சின்னதா) #நோ டபுள் மீனிங்க் ப்ளீஸ் ஹி ஹி 


டிஸ்கி 1 - இந்தப்பதிவில் வரும் செல்வாவைப்பற்றிய மரியாதைக்குறைவான வார்த்தைகள் பதிவின் நகைச்சுவையை கூட்டவே.. யார் மனதாவது புண்பட்டால் மன்னிக்கவும்.. இப்படிக்கு ஒவ்வொரு பதிவிலும் மன்னிப்பு கேட்பதையே பொழப்பாக வைத்திருக்கும் ஒரு மானங்கெட்ட அடச்சே மானமிகு  பதிவர் ...ஹி ஹி 


டிஸ்கி 2 - படங்கள் உதவி ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம்  கல்பனா ராஜேந்திரன் (பெயர்க்காரணம் பாகம் 4 -ல்) மற்றும் உணவு உலகம் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன்.. (இவரைப்பற்றி ஒரு கில்மா மேட்டர் பாகம் 5 -ல் )




தொடரும்.........

பாலாவின் அவன் இவன் - , நோ ஜீவன் ,எஸ் காமெடி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR4VASGXr92m6x4llPrwB3NumoAQoKyoYIVro5eLYnrLYIE5OWdJpru5P3spGJrdgCr5PRJjOMlHUryxLpL40GYD_hxeDvORnC_J3r1Ms7DeG36uWxZH6ziuScw2o92PpBndAhASQymAo/s1600/avan_ivan_movie_posters_wallpapers1.jpg 

நமக்குப்பிடித்த கலைஞன் (கவனிக்க - கலைஞர் அல்ல) கம் படைப்பாளி மிக பிரமாதமான படைப்பு ஒன்றை அளிக்கும்போது மனம் குதூகலம் அடைந்து அவருக்கு கை குலுக்க கை கொடுப்போம்.அதே படைப்பாளி எப்போதாவது சறுக்க நேரிட்டால் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்து ஆறுதல் வரம் அளிப்போம். அப்படி ஆறுதல் தர வேண்டிய அளவிலான ஒரு சறுக்கல் படம் தான் பாலா எனும் கம்பீர யானையின்  அவன் இவன் .

தொடர்ந்து ஒரே விதமான படங்களை தரும் படைப்பாளி விமர்சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது பாணியிலிருந்து விலகி வித்தியாசமான படம் தர முற்படுகையில்  அவரையும் அறியாமல் அப்படம் மக்கள் ரசனையை விட்டு விலகி விட நேர்வது உண்டு.. அப்படி ஒரு விலகல் படம் தான் இது..

கதை ரொம்ப சிம்ப்பிள்.. வளர்ப்புத்தந்தையை  அவமானப்படுத்திய,கொலை செய்த வில்லனை  கொடூரமாக கொலை செய்யும் இரண்டு மகன்களின் கதை.அந்த 2 பசங்களுக்கும் உண்டான  காதல்,அவர்களுக்கிடையே யான உறவு என்று படம் ரொம்ப சாதாரண திசையில் செல்கிறது..

படத்தில் முதல் பாராட்டு விஷாலுக்குத்தான்.. என்னா ஒரு பாடி லேங்குவேஜ்.. என்னா ஒரு நளினம்.. கமல் மாதிரி பரத நாட்டியக்கலைஞர் பெண்மையின் நளினத்தை கொண்டுவருவது சிரமமான விஷயம் இல்லை.. விஷால் மாதிரி ஆண்மை மிளிரும் பாடி பில்டர்ஸ் பெண்மையின் நளினத்தை , கிட்டத்தட்ட திருநங்கை மாதிரி ஒரு லாவகத்தை முகத்தில்,உடல் மொழியில் கொண்டு வந்தது அபாரம். இந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருது நிச்சயம்..

http://tamil.filmychai.com/images/moviewallpapers/orginal_48596ff5-1d4a-3788-7a37-000046c0b421.jpg

ஆர்யா மட்டும் என்ன? அசால்ட்டாக நடிப்பதில் அவரை அடிச்சுக்க ஆள் ஏது?சம்பட்டைத்தலையா.. சட்டித்தலையா என்று கவுண்டமணி செந்திலைத்திட்டுவது போல அவரது கெட்டப் இருந்தாலும் மைனஸ்ஸையே ப்ளஸ் ஆகும் ரசவாத வித்தையை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்யா ஆங்காங்கே கோல் அடிக்கிறார்.. பாத்திரத்தின் தன்மை கருதி பல இடங்களில் விஷாலுடனான கம்பைண்டு சீனில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கில் அசத்துகிறார்.. 


இருவரது வளர்ப்புத்தந்தையாக வருபவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதே.. (ஜி எம் குமார்)பாத்திரத்தின் தன்மை கருதியும்,திரைக்கதையின் தேவை கருதியும் அவர் துகில் உரியப்பட்டு வில்லனால் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்தது செம துணிச்சல் தான்.. 

ஹீரோயின்களில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மதுஷாலினியின் நடிப்பு சுமார் ரகமே... அவரது ஃபேஸ்கட் வசீகரம் கம்மி..
ஆனால் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கான்ஸ்டபிளாக வருபவர் (ஜனனி அய்யர்) கண்களால் கவிதை சொல்கிறார்.. கிட்டத்தட்ட லைலா வின் வெகுளித்தன காப்பி என்றாலும் அவரது பாடி லேங்குவேஜ் அழகு.. 

ஒரு காட்சியில் விஷாலும், இவரும் போட்டி போட்டுக்கொண்டு காதல் பார்வைகளை பகிர்வதும்,விருந்து பரிமாறும்போது பார்வைகளை பரிமாறுவதும்  காதலர்கள் காணக்கண் கோடி வேண்டும்..

http://chennai365.com/wp-content/uploads/movies/Avan-Ivan/Avan-Ivan-Moive-04-18-Stills-018.jpg

பாலாவின் காமெடி வசனங்கள் ( விளிம்பு நிலை மனிதர்களின் உரையாடல் என்பதால் கண்ணியம் குறைவாக இருந்தாலும் அதுவும் ஒரு கலாச்சாரப்பதிவே)

1. டேய்,, அநாதை நாயே.. 

ஆமா.. இவரு மட்டும் 4 பொண்டாட்டி,5 வைப்பாட்டி வெச்சிருக்காரு..


2. அடப்பாவி.. எப்படி என் வீட்டுக்குள்ள வந்தே? இந்த அர்த்த ஜாமத்துல?

ம்.. ஏறிக்குதிச்சு.. பின்னே காலிங்க் பெல் அடிச்சு எந்த திருடனாவது வருவானா?

3. எங்கேடி போறீங்க?

ம். காலேஜ்க்கு.. 

எனக்குத்தெரியாத காலேஜா? ஓ.. டுட்டோரியல் காலேஜா?

4. ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்?

5. என்னை இப்போ யாரும் ஃபோட்டோ பிடிக்காதீங்க.. நான் மேக்கப்ல வேற இல்ல.. 

6.  அந்த கோமாளிப்பையன் என்னையே பார்க்கறான் (செல்வா மன்னிக்க)

விடுடி.. அவனாவது உன்னைப்பார்க்கறானே? சந்தோஷப்படு.. 

7.  டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா.. 

டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே  மூ********மா வரும்?


8. ஏம்மா.. கூப்பிட்டதும் உடனே ஓடோடி வர்றதுக்கு நான் என்ன உன் புருஷனா?


9. பாப்பா.. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.. உன் பேண்ட்ல ஜிப் இருக்கா ? இல்லையா? என்பதை மட்டும் சொல்லிடு.. 

10. சரி.. உன் பேரென்னடி?

தேன் மொழி.. தேனு.... 

ஓ.. நக்கனும்னு நினைப்பீங்களோ.... ( படிக்கும்போது விரசமாக இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி இல்லை)

http://www.cinehour.com/gallery/actresses/kollywood/Janani%20Iyer/Janani%20Iyer%20Stills%20At%20Avan%20Ivan%20Audio%20Launch/34365645Janani-Iyer-At-Avan-Ivan-Movie-Audio-Launch-17.jpg

11. அம்பிகா.. - டேய்.. சரக்கு அடி வேணாம்கலை.. அம்மாவுக்கு கொஞ்சம் மிச்சம் வைடா.. இப்போவெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது./.

12. போலீஸ்- ஆள் பார்க்க எப்படி இருந்தான்..?

கருப்பா இருந்தாலும் களையா தான் இருந்தான்,,,, 

13. என்னா இது சலூன் பக்கம் பொம்பள புள்ளா?.. ஏம்மா கட்டிங்க்கா? ஷேவிங்க்கா? ( இந்த வசனத்தில் இன்னும் கண்ணியம் காட்டி இருக்கலாம்)


14. டேய்.. என்னமோ உழைச்சு சம்பாதிச்ச மாதிரி யோசிக்கறே.. நீ திருடனதைத்தானே தாரை வார்க்கப்போறே?

15. டேய்.. சுமங்கலியோட சாபம் உங்களை சும்மா விடாது.. 


அட போடா.. அவளுக்கு 2 புருஷன்.. அதும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ.. 

14.  அதுக்குத்தாண்டா நானும் சொல்றேன்.. அவ நமக்கு எதுக்கு?

அடப்பாவி .. நமக்குன்னு ஏன் என்னையும் சேர்க்கறே?

15.  டேய்... ஒரு கோடி ரூபா சரக்கு.. ஒரு டீயும் ,பன்னும் வாங்கிக்கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கறாங்கடா.. ஏமாந்துடாதே?

16. எதுக்குடா லேடீஸ் காலேஜ் பஸ் ஸாப் பக்கம் ஜீப் வர்ற மாதிரி பண்ணுனீங்க..?

உள்ளே போறது உறுதி ஆகிடுச்சு.. அண்ணி முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு போயிடறோம்.. 

17. என்னது பிளேடு முழுங்கிட்டானா?

டாக்டர்.. என் குடல் ஃபுல்லா நீங்க உருவு உருவுன்னு உருவுனாலும் ஒரு பிளேடு எடுக்க முடியாது..  ( டபுள் மீனிங்க் டயலாக்  யூ டூ பாலா)

18.   இன்ஸ்பெக்டர்.. அவன் பிளேடு முழுங்கலை.. ஹி ஈஸ் எ லையர் (HE IS A LIEAR)

என்ன டாக்டர் சொல்றீங்க? அவன் ஒரு லாயரா? (LAWER)

(கிரேசி மோகன் பாணி வசனம்)

19. சூர்யா - அகரம் ஃபவுண்டேஷன் மூலமா  ஏழைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யறோம்.. 

ஆர்யா- அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கோடிக்கணக்குல சம்பாதிக்கறீங்களே.. கொடுத்தா என்னவாம்..?

20.  டேய்.. மாப்ளே.. நீ பெரிய நடிகன்டா.. த்ரிஷா உனக்குத்தான்.. 
21. ராத்திரி தூங்கறப்பக்கூட பவுடர் அடிச்சுட்டு, செண்ட் போட்டுக்கிட்டு தான் அவன் தூங்குவான்..

22. டேய்.. நாயே.. நல்ல படம் ஓடிட்டு இருக்கறப்ப  எதுக்கு நடுவுல தேவை இல்லாம பிட் படம் ஓட்டிட்டு இருக்கே?

23. யோவ்.... உன் அரண்மனையை வித்து ஒரு படம் எடுக்கப்போறேன்.. அதுல கதை ,வசனம்,வெட்டிங்க்,ஒட்டிங்க் ,புட்டிங்க் எல்லாம் நீ தான், நான் டைரக்சன் மட்டும்,,

24.  ஆர்யா - எனக்கு அவனை பிடிக்கும்,.. ஆனா அதை வெளில காண்பிச்சுக்க மாட்டேன்.. அவனுக்கு மட்டும் தான் நடிக்கத்தெரியுமா?

25.  டேய்.. போதும்டா.. அப்பனை மாதிரி எக்ஸ்ட்ரா பிட்டுப்போடாதே.. இத்தோட நிறுத்திக்கோ..

26. உனக்கு என்ன வேணும் மவனே..... 

என்ன வேணும்னே தெரில .. நீ என்ன சாமி.. ? 

(ஆனந்த விகடனில் வந்த கவிதையின் உல்டா வடிவம் .

ஒரிஜினல் கவிதை - என்ன வரம் வேண்டும் என கடவுள் கேட்டார்..   பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்பதே தெரியவைல்லை.. நீ என்ன கடவுள் என்றேன்.. ) 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_v_OH_3PtVTWg1CebplEHUM7ymMSXSXRIqbW77JK0x_hZ7VWJTelwh9DsjoCrphCDxVH47usjgKIaXWpqyZvQIcEH7ecc6O6uoOnk-30dQG06sciHwQXfXE8qX-0RYX97xbfXtEtd_5PU/s640/Madhu+Shalini5.jpg

இயக்குநர் பாலா சபாஷ் பெறும் இடங்கள்

1. விஷாலின் பாத்திரப்படைப்பும், அவர் மூலம் இப்படியும் ஒரு நடிப்பை வர வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும்.. 

2.  ரவுடி,கேடிகளுக்கு போலீஸ் அழைப்பு விடுத்து விருந்து வைத்து வேண்டுகோள் விடுக்கும் காமெடி சீன்.. 

3. காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி  காத்துக்கிடக்கேன் வாடி பாடல் படமாக்கப்பட்ட விதம்..

4. சக்சஸ் சக்சஸ் என்று கத்திக்கொண்டே அந்த சின்னப்பையன் லேடி கான்ஸ்டபிளை கட்டிப்பிடிக்கும் சீன் , தியேட்டரில் செம் ஆரவாரம்..

5. சூர்யா வேடிக்கை பார்க்க விஷால் காட்டும் நவரச நடிப்பை வேடிக்கை பார்க்கும் காதலியின் முகத்தில்  தோன்றும் பெருமித உணர்வு  காதலனின் நடிப்பை விட பிரமாதமாக படம் ஆக்கியது.. 

http://aambal.files.wordpress.com/2011/06/bala.jpg
  இயக்குநர் சறுக்கிய இடங்கள்

 1. மூளையை கழற்றி மூலையில் வைத்து விட்டுப்பார்க்க வேண்டிய காமெடிப்படமாக இருந்தாலும்  இயக்குநர் தாராளமாக தவிர்த்திருக்கவேண்டிய பல கட்டங்கள் உண்டு.. அதில் முக்கியமானது படத்துக்கும் விஷாலின் மாறுகண் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை.. தேவையே இல்லாமல் அவரை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?

2. எந்த காதலனாவது காதலியை கலாட்டா பண்ணுவதாக நினைத்து மற்றவர் முன்னிலையில் காதலியை குட்டிக்கரணம் அடிக்க சொல்வானா? அப்படி சொன்னால் அவன் நல்ல காதலனா? ( காதலியின் முந்தானை காற்றில் விலகினாலே பரிதவிப்பவன் தானே உண்மையான காதலன்? )

3. பாலா டச் வேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் அந்த கொடூரமான துரத்தல் காட்சியும், அப்பா கேரக்டர் ஆடை இல்லாமல் தூக்கில் தொங்க விடப்படுதல் .. தேவையற்ற திணிப்பு.. 

4. இடைவேளை வரை காமெடியாக போகும் திரைக்கதை அதற்குப்பின் சீரியசாகப்போக வேண்டிய சூழ்நிலையில் பாலா பதட்டத்தில் பல காட்சிகளை ரெண்டும் கெட்டானாக காமெடி+ சோகம் மிக்ஸிங்க்காய் அமைத்தது..

5. வில்லனின் பாடி லேங்குவேஜ் கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகானின் நடிப்பை காப்பி அடித்தது..

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmUL_O1sduh4QFZbCu9v1VU5mAei6tiDOdEGpb2Okvw9tlaLx-X1hSa_2sYuz9TOmafrLPxVa4ZpY5g82pXCV7U_uxTo3UrJkAz7ARcjs9UeUG88nRV0GZUQW8NwPJtroXb6GsEZzUQTtJ/s1600/Janani+Iyer+Hot+1.jpg

இந்தப்படம் வசனங்களில் அத்துமீறல், காட்சி அமைப்பில் ஒரு பத்து நிமிடங்கள் பெண்கள் முகம் சுளிக்கும்படியாக இருப்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.. ( ஆனா எல்லாரும் தனித்தனியா போய் பார்க்கலாம்)

 கமர்ஷியலாக இந்தப்படம் ஓடாது.. அதிகபட்சம் 25 நாட்கள் ஓடலாம்.. ஏ செண்ட்டரை விட பி சி செண்ட்டரில் தான் எடுபடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - காமெடி ரசிகர்கள்,பாலா அபிமானிகள் மட்டும் பார்க்கலாம் (கதையைப்பறி கவலைப்படாதவர்களும் )

ஈரோடு அபிராமி,சண்டிகா  என 2 தியேட்டர்களில் படம் ஓடுது.. நான் அபிராமியில் பார்த்தேன்.. (ஏன்னா என் பொண்ணு பேரு அபிராமி.. )

Monday, June 20, 2011

சாருநிவேதிதா - வாசகி @சேட்டிங்க் VS சீட்டிங்க் - காமெடி கும்மி

1.ஆண்களை பல பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள்,ஆனால் ஆண்கள் எந்தப்பெண்னையும் தவிர்க்க நினைப்பதில்லை#நீதி - பெண்ணை விட ஆண் நல்லவன்

----------------------------------

2. என்னுடன் எப்போதும் இருக்கும் தோழிகள் யாரையும் அடையாளம் தெரியாதா? ஏன்? என்றாள் காதலி.நிலா இருக்கும்போது நட்சத்திரங்களை யார் ரசிப்பது?

----------------------

3. கனிமொழிக்கு ரிலீஸ்ஆர்டர் கி‌டைக்கவில்லைசுப்ரீம் கோர்ட் கைவிரித்தது #கை விரிச்சா அப்போ உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவுன்னு தானே அர்த்தம்?

---------------------

4.  சாருநிவேதிதா ON LINE -பெண் வாசகிகள் எச்சரிக்கை-யூ டியூப் நியூஸ்#அவர் ஆண்லைன்ல இருந்தா பெண்கள் ஏன் எச்சரிக்கையா இருக்கோணும்?டவுட்டு

--------------------

5. அடிக்கடி விடப்படுவதால் பெண்களின் கண்ணீருக்கு மதிப்பு கம்மி தான்,எப்போதாவது வருவதால் ஆணின் கண்ணீருக்குத்தான் மதிப்பு அதிகம்#அழகிய அழுகை

-----------------------\\

6. காதல் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு மந்திரக்கயிறு,அது காதலர்களை பிடித்துக்கொள்வதில்லை,காதலர்கள் தான் அதை பிடித்துக்கொள்கிறார்கள்#லவ்நெட்

-----------------------------

7. கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்காதீங்க: விஜயகாந்த் கண்டிப்பு#கமிஷன்னா கான்ட்ராக்டர்ட்ட தான் கேட்கனும்.. கண்டக்டர்ட்டயா கேட்க முடியும்?

------------------------------

8. கண்ணகி சிலை பஸ்ஸ்டாப் கூரை இடிந்தது#செண்ட்டிமெண்ட் சரி இல்லை, ஜெ ஆட்சி முடிந்தது-கலைஞர் ஆரூடம்

------------------------

9.  முழு நீள கவர்ச்சிப்படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டேன் - நடிகை அனுயா #அப்படியும் சான்ஸ் லேதுன்னா முழுநீல கவர்ச்சிப்படத்துல நடிப்பீங்காளா? டவுட்டு

-----------------------

10.ஊழலால் இந்தியாவில்  ஆண்டுக்கு, 72,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.-கிரண்பேடி #மிஸ்கால்குலேஷன்  மிஸஸ். தமிழகத்துலயே அவ்வளவு வந்துடுமே?

------------------------

-----------------------

11. சாருநிவேதிதா- வாசகி அம்புட்டு நல்லவரா இருந்தா வா சகி என நான் அழைத்தபோதே எஸ்கேப் ஆக வேண்டியதுதானே? எஸ் நோ கேப்  (YES ,NO GAP) என சொன்னது ஏன்?#இமேஜினேஷன்

------------------------ 

 12. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன்

--------------------------
 13/.  ட்விட் உலகின் சாரு நிவேதிதா யார்? என ஒரு வதந்தி உலா வருது.. அவர்க்கும் கலைஞருக்கும் ஜென்மப்பகை.மஞ்சள் முகமே வருக@க்ளூஸ்#கிசு கிசு

---------------------------

நெல்லை பதிவர் சந்திப்பும்,நான் வாங்கிய பல்புகளும்


ஜூன் மாசம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு நடந்தது.

ஜூன் 16 நைட் 10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல இடம் பிடிச்சாச்சு..ஈரோடு டூ நெல்லை ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்பதை ஜூன் 25 அன்று தனி பதிவா போட்டுக்கலாம்.. இப்போ பதிவர் சந்திப்புல என்ன நடந்ததுங்கறதை மட்டும் பார்ப்போம்..


நெல்லையில் காலை 5 மணிக்கு ரயில் ஸ்டேஷன் அடைகிறது.. வரவேற்க யாராவது வந்திருப்பாங்கன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்..  ( ஆமா இவரு பெரிய ஃபிகரு.. ரோசாப்பூ மாலையோட வந்து வரவேற்க.. )

இறங்குனதும் நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்க்கு ஃபோன் போட்டா அண்ணன் ஃபோனை எடுக்கவே இல்லை.. அடடா.. இது ரெகுலரா அண்ணன் பதிவு போடற டைம் ஆச்சே..


நடிகர் விக்ரம்,நடிகர் சம்பத் போல சாயலில் கலக்கலாக என் அருகே அமர்ந்திருப்பவர் பலா பட்டறை சங்கர்

சரி.. நாமே ஹோட்டல் பேரை வெச்சு விசாரிப்போம்னு விசாரிச்சுட்டு போனா ஹோட்டல் வாசல்ல லேப் டாப் மனோ படுத்திருக்கான்.. டேய் ராஸ்கோலு.. மப்புல இருக்கியா? எந்திரிலேய்.. என்றேன்..

செம சரக்கு போல.. அப்படியே வாசப்படில உருண்டுட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு ரிசப்ஷன்ல போய் விசாரிச்சேன்..

திருநெல்வேலி வாசிகள்க்கு ரசனை கம்மி போல.. (நெல்லைவாசிகள் மன்னிக்க) அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி இல்லையே?ன்னுட்டுயோசிச்சேன்..

சார்.. ரூம் இருக்கா?

ஓ ,இருக்கே.. மொத்தம் 237 ரூம் இருக்கு..

ஓக்கே ஒரு சிங்கிள் காட் ரூம் வேணும்..

அவசரப்படாதீங்க.. ரூம் இருக்கு,ஆனா எதுவும் காலியா இல்லை..

அடிங்கொய்யால.. நம்ம கிட்டேயேவா?ன்னு நினைச்சுட்டு பக்கத்துல உள்ள 6 ஹோட்டல்லயும் விசாரிச்சா எங்கேயும் ரூம் கிடைக்கல.. அது கூட பரவாயில்ல.. எல்லா ஹோட்டல்லயும் லேடி ரிசப்ஷனிஸ்ட் நஹி.. ஹூம்..

அப்புறம் எப்படியோ ஒரு ஹோட்டல்ல ரூம் கிடைச்சது.. ரூம்க்கு போய்ட்டு ராசலீலா ராஜேந்திரன் அண்னனுக்கு மெசேஜ் அனுப்பினேன் (மெசேஜ் அனுப்பினா நாலணா தான் )அண்ணன் ரிப்ளை எதுவும் அனுப்பலை.(அவருக்கு ஒரு ரூபாயாம் மெசேஜ் அனுப்ப)



பதிவுலக தாதா மாதிரி ,ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மாதிரி ,ஹிந்தி வில்லன் மாதிரி தோற்றம் அளித்தாலும் பச்சப்புள்ளய்யா இந்த ஜெயந்த(வெறும்பய)

ஆனா 10 நிமிஷத்துல அண்ணன் ரூம்க்கு வந்துட்டாரு..

நான் தான் ரூம் வேணுமா?ன்னு முதல்லயே கேட்டப்ப வேணாம்னீங்க..

ஆமாண்ணே.. எதுக்கு உங்களுக்கு சிரமம்,நமக்கு கிடைக்காத ரூமா?ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்..

சரி.. குளிச்சுட்டு ஃபிரஸ் ஆகிட்டு வாங்க நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்..

அண்ணே,நான் ஆல்ரெடி ஃபிரஸ் பீஸ் தான்.. குளிச்சாத்தான் ஃபிரஸ்ஸா? அவ்வ்வ்வ்


சரி சரி.. வாங்க..நாம 2 பேரும் டிஃபன் சாப்பிடலாம்..

(ஆஹா.. காலைலயும் ஓசி சாப்பாடா.. டேய் சி பி நீ நிறய புண்ணியம் செஞ்சவண்டா.. )

அண்ணன் ஒரு ஆஃபீசர் இல்லையா?தன்னோட கெத்தை காமிச்சாரு.. டேய் தம்பி.. இதை எல்லாம் க்ளீன் பண்ணு என்ன இப்படி இருக்கு?



நான்,அழுகாச்சி காவியம் புகழ் கவிதாயினி கல்பனா,ஃபாரீன் புயல் சித்ரா,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்

போன ஜென்மத்துல அண்ணன்  பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு.. போலீஸ்காரங்க எல்லாம் அண்ணனுக்கு சல்யூட் வெச்சாங்க..

அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போனாரு.. ஆஃபீஸ்ல அண்ணனுக்கு செம சவுகர்யம்.. ஒரு பெரிய ஹால் 40 * 40 சைஸ்..ஒரே ஒரு சேர்... வெளில இருக்கறவங்க உள்ளே பார்க்க முடியாது.. உள்ளே இருக்கறவங்க வெளில பார்க்கலாம்.. ஹூம்.. அண்ணன் என்னென்னெ தில்லு முல்லு பண்றாரோ//.. ஆனா பதிவர் சந்திப்புக்கும் அண்ணனோட பர்சனல் லீலைகளுக்கும் சம்பந்தம் இல்லாததால மேட்டர்க்கு வரேன்.

இங்கே ஏன் வெயிட் பண்ணனும்? நேரா ஹோட்டல்க்கு போயிடலாம்..?

இருங்க.. இப்போ பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும்,கவுசல்யாவும் வருவாங்க.. அப்புறம் போலாம்

சொன்ன மாதிரியே பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும் வந்தாங்க.. சங்கர் அண்னன் ஹிந்தி ஹீரோ கணக்கா  செம கலரா இருந்தாரு,,ஆனா பந்தா எல்லாம் பண்ணலை.. ( இனிமே நாமளும் வெட்டி பந்தா பண்ணுவதை குறைச்சுக்கனும்,, அஜித் மாதிரி இருக்கறவங்களே அடக்கி வாசிக்கறப்ப  அட்டக்கறுப்பா இருக்கற நாம எப்படி இருக்கனும்? )

மணிஜி அண்னன் ஜாக்கிசேகரோட தோஸ்த்.. ஏற்கனவே எனக்கு அறிமுகம், நேரில் இப்போத்தான் பார்க்கறேன்..

அப்போ அண்ணனுக்கு ஃபோன் வந்தது.. பேசுனது கவுசல்யா மேடம்

சார்.. நான் நேரா ஹோட்டலுக்கே வந்துடறேன்.. ஆஃபீஸ்க்கு வர்லை..

ஏம்மா?



அங்கே வந்தேன் .. சி பி அங்கே இருக்கறதை பார்த்தேன்.. அவன் விவகாரம் பிடிச்ச ஆள் ஆச்சே.. பிளாக்லயே நடிகைங்க ஃபோட்டோ எல்லாம் போடுவான்.. எதுக்கு வம்பு..? புரொஃபைல்ல என் ஃபோட்டோ தெரியக்கூடாது.. என் எழுத்து மட்டும் தெரிஞ்சா போதும்னு நினைக்கறேன்.. இவன் பாட்டுக்கு செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து போட்டுட்டா?

சரி சரி.. ஓக்கே ஓக்கே

அப்புறம் அண்ணன் வந்து சமாளிச்சார்..

மேடம் டிராஃபிக்ல மாட்டிட்டாங்களாம்.. நேரா ஹோட்டல்க்கு வந்துடறதா சொன்னாங்க..

 சரின்னு ஹோட்டல்க்கு  போனோம்..


அங்கே போனதும் “ வாங்க வாங்க வணக்கம்னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுது..


ஆஹா, நம்மையும் ஒரு லேடி மதிச்சுட்டாங்களேன்னு நானும் பதிலுக்கு வணக்கம் போட்டேன்..

அந்த மேடம் அண்ணன்  கிட்டே ரகசியமா “ தம்பி யாரு?”ன்னு கேட்டாங்க..

ஹூம் ,யாருன்னு தெரியாமயே இந்த பில்டப்பா? ந்னு நினைச்சுட்டே அக்கா என் பேரு சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..

என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)
 
கோமாளி செல்வா,லேப்டாப் மனோ,நான்(குற்றாலம்)

அவங்க அண்ணன் கிட்டே ஏதோ சொல்லி நைஸா என் செல் ஃபோனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க.. ( நான் ஃபோட்டோ எடுத்துடக்கூடாதாம்)

டாக்டர் கந்த சாமி கோவை ஆல்ரெடி அங்கே இருந்தார்.. அவர் கிட்டே அறிமுகம் நடந்தது..

இம்சை அரசன் பாபு ,வெறும்பய ஜெயந்த்,கோமாளி செல்வா,கல்பனா 4 பேரும் வந்தாங்க..

பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு.. ஆள் நல்ல ஜாலியா பேசுனாரு.. ஜெயந்த் ஹிந்திப்பட வில்லன் மாதிரி இருந்தாரு.. தெரியாத்தனமா அவர் கிட்டே நான் கை குடுத்துட்டேன்.. குலுக்கறேன்கற பேர்ல கையை கசக்கி எடுத்துட்டாரு..

(அவரோட கோபத்துக்கு காரணம் அவர் எழுதுன ஜோதி தொடர் ல நான் “அப்புறம் ஜோதியை முடிச்சீங்களா? இல்லையா? அப்டின்னு கமெண்ட் போட்டிருந்தேன்.. அதான் , பழி வாங்கிட்டாரு..)

செல்வா ஏற்கனவே பார்த்து அறிமுகம் ஆனவர் தான்.. கைல ஸ்கிரிப்ட் வெச்சிருந்தார் ,காமெடி கதை போல.. மனப்பாடம் பண்ணிட்டு இருந்தார்..

கல்பனா தமிழ்ப்பொண்ணு கணக்கா ஒரு கும்பிடு போட்டாங்க,, நானும் கும்பிடு போட்டுட்டு சுய அறிமுகம் பண்ணுனேன்... (வேற யாரும் என்னை அறிமுகப்படுத்தலை..கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி நானே அறிமுகம் பண்ணிக்கிட்டேன்,வேற வழி?)

. என் பேரு.. சி.பி.. அட்ரா சக்க பிளாக் ஓனர்.. (பொல்லாத முதலாளிடா இவனுங்க.. )

அப்டியா.. சாரி.. நான் கேள்விபட்டதில்லை.. கண்ட கண்ட பிளாக் எல்லாம் நான் படிக்கறதில்லைன்னாங்க..

 ஹி ஹி .. நீங்க ஓப்பனா பேசறீங்க.. வெரிகுட்.. ( நற நற.. )

வெட்டிப்பேச்சு சித்ரா வந்தாங்க.. என்னமோ சொல்லீட்டே வந்தாங்க.. எல்லாம் அமெரிக்கன் இங்கிலீசா இருந்ததால எனக்கு ஒண்ணும் புரியல.. (பட்லர் இங்கிலிஸே ஒழுங்கா புரியாது நமக்கு.. )



அப்போத்தான் நம்ம ஆஃபீசர்.. ஒரு வில்லங்கமான காரியத்தை பண்ணுனாரு..

ஒண்ணா நேரடியா என்னை அறிமுகப்படுத்தி இருக்கோனும்.. இல்ல சும்மா விட்டிருக்கனும்.. இவர் பில்டப் குடுக்கறேன்கற பேர்ல..

 சித்ரா மேடம்.. இது (அக்ரிணை) யார்னு தெரியுதுங்களா?

எவனா இருந்தா எனக்கென்ன? ஹா ஹா  ஹா

அப்டின்னாங்க..

ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..

தொடரும்...

Sunday, June 19, 2011

எனக்கு கொழுப்பு ஜாஸ்திதான்யா.. அதுக்காக என்னா பண்ண சொல்றீக.. ?

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

டாக்டர் விகடன் - நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!
ன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.


இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.

பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.

1. பூண்டு

'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு  கணிசமாக குறைந்துவிடும்.
2. ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.

3. கொள்ளு

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

4. கறிவேப்பிலை

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

5. மிளகு

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.


6. சாம்பார் வெங்காயம்

சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

7. கோடாம்புளி

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக  பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

8. சீரகம் - அதிமதுரம்

தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். 

இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருடன்      20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.

9. செம்பருத்தி,ரோஜா இதழ்கள்  

செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து        50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.


10. இஞ்சி - ஏலக்காய்

இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

11. சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

நன்றி - டாக்டர் விகடன்

கண்ணன் ஏமாந்தான்.... இளம் கன்னிகளாலே.....(ஆன்மீகம்)

http://guppic.com/uploads/2009/Oct/1256621501-1_406443875l.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

'பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். 'தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயரு திருநாமத்தை மட்டும், ஒரேயரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. 'கேசவா’ எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்... அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்... பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

'அது சரி... பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’ என்றும் கேட்கலாம், 
சிலர்.
மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். 

http://farm1.static.flickr.com/133/352867983_87f8c184b6.jpg
அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப் பாய் விரித்திருக்கும். 'அதெப்படி... ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன... அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்... இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!

கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, 'ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். 'ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயரு விஷயம்... பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg

சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! 

அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!  

முக்கியமாக ஒன்று... 'பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’ என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், 'என் தோட்டத்துக்கு வந்துவிடு’ என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். 


http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg
ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்... மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு  ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.


மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான், அவன்.

எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 'இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’ என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய... குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, 'அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். 

உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக... மீனவன், வியாபாரி, மன்னன்... இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, 'நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, 'எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’ என்று வாழப் போகிறீர்களா?


அதாவது, நீங்கள்... மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.
கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. 'நான் இன்னார்... என் பெயர் இது... கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuIhmZn8dmfSJC1HQmU5Ox05sgDhCLg6E2kAm6hwnSuL0rsWlaljjswUWtltBuZE9-CDO7QorJ1oLTvXNbXStP3ZyAevKEBumOiYG7w4aeXosPmeem97H3yEm4n0eFob8GKCyxBOj4Pa2Q/s1600/krishna_lotusfeet.jpg
விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், 'ஹலோ... என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’ என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது... உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

நன்றி - சக்தி விகடன்

Saturday, June 18, 2011

சீரக குழம்பு வைப்பது எப்படி?லெமன் ரைஸ்,புளி சாதம்,தக்காளி சாதம் வெரைட்டிஸ் சமையல் குறிப்புகள்



1. எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் 

தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.

எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி!  

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2. .புளிக் காய்ச்சல் 

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

3. தக்காளி சாத மிக்ஸ் 

 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.

இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.

4.  சீரக குழம்பு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5.  பஜ்ஜி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.

பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்


டிஸ்கி - இன்று தான் நெல்லை சந்திப்பு,குற்றாலம் டூர் முடிந்து வந்தேன்.இனிமேல் தான் அவை பற்றி எழுதனும்.மேலும் ,அவன் இவன் ,ரதி நிர்வேதம்,அநாகரீகம் படங்கள் விமர்சனமும்.. பொறுத்திருக்க.. ஹி ஹி

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!


வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.


தாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.


இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக  கொடுத்த டிப்ஸ்:

டயர் பராமரிப்பு :
டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய  வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால்,  எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.
சிக்னலில் சிக்கனம்:
சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில்   என்ஜினை  ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம்.  இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.

ஏர்கன்டிஷன் :
கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால்  தேவைப்படும்போது மட்டும்  பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின்  வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும்.  முக்கியமாக  கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும்.  நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.

வேகம் :
வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின்  முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது.  'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை  கடைப்பிடிப்பது நல்லது.


தேவை என்ன?
சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க்  எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.

ஓவர் லோடு :
தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.


 நன்றி: மோட்டார் விகடன். 

Friday, June 17, 2011

ரதிநிர்வேதம் ரீமேக்கிற்கும் ,திமுக வுக்கும் என்ன சம்பந்தம்?


1. நான் நிர்வாணமாக நடிப்பதாகசொல்லப்பட்டது புரளி.

தெரியும் மேடம்.

அட புரளின்னு தெரியுமா?

ம்ஹூம் அப்படி நடிச்சா எல்லாமே தெரியும்னு சொல்லவந்தேன்.


------------------------

2.திறமையாக எழுதத்தெரிவதைவிட அதிகஃபாலோயர்ஸ்பெற ஒருகுறுக்குவழி உள்ளது,அது தமிழனின் மொய்க்கு மொய் சிஸ்டம்,கண்ணை மூடிக்கொண்டு பலரைஃபாலோசெய்க

--------------------------

3.சரி,7 மணி ஆச்சு ,நான் கிளம்பறேன் என்றாள் காதலி.ஆஃபீசில் மட்டும் தான் OT  பார்ப்பாயா? என்றேன்#லவ்வாலஜி

-------------------------

4. ஊழல்,காதல் இரண்டுக்கும் ஒரே வித்தியாசம் தான். ஊழலை யாராலும் ஒழிக்க முடியாது,காதலை யாராலும் ஒளிக்க முடியாது#தமிழ் டீச்சர் வாழ்க

--------------------------

5. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா, நான்காவது இடத்தில் உள்ளது.#அம்மா ஆட்சிக்கு வந்துட்டாங்க இல்ல? இனி முதல் இடம்தான்

-------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpMPZSGv9hquTdrMpFtUcZs3SRbcwkq88dofuhIkWLVV9SJS2qK5XSrSxKDjK2FsQYAe9DKKG53qyuJ_Jwikl6cQ-xyKvW-SQX9DWO1rhmlVgFcDN2t5_wJV7GBKrzjguu7N7RrRVozG8/s1600/swetha_menon_hot_5.jpg
6. சிபிஐ இயக்குனருடன் நீரா ராடியா திடீர் சந்திப்பு#பகல்ல சந்திச்சா ஆடியோ டேப்பையும், நைட்ல சந்திச்சா வீடியோ டேப்பையும் ரிலீஸ் பண்ணுங்கப்பா

--------------------------

7. கனிமொழி, ராசாவை வீரமணி சந்திப்பு #இப்படி நியூஸ் போட்டா நம்மாளுங்க குழம்பிடுவாங்க.ரெண்டு பேரையும் தனித்தனியா போய் சந்தித்தார்னு போடனும்

-------------------------
8.  எந்தக்குழந்தையும் கருவாக இருக்கும் முதல் 2 வாரங்கள் பெண் சிசுவாகத்தான் இருக்குமாம்#விஞ்ஞான தகவல்

----------------------
9.  வெற்றி பெற்றவர்கள் சொல்வது எல்லாம் வேதம் அல்ல' : கருணாநிதி#தோல்வி அடைந்தவர்கள் இசைப்பதெல்லாம் நாதம் அல்ல@நாங்களும் சொல்வமில்ல?

--------------------

10.  ஸ்வேதா மேனனின் நடிப்பில் ரீமேக்காகி வரும் ‘ரதிநிர்வேதம்’#வெற்றி பெற்றவர்கள் எடுப்பதெல்லாம் ரதி நிர்”வேதம்” அல்லன்னு சொல்லிடுவாங்களோ?

-----------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

Thursday, June 16, 2011

டியர்,உன்னை லவ் பண்றது ரொம்ப சிரமமா இருக்கு.ஏன்னா.....


3352909921 515aea693a o 100+ Funny Photos Taken At Unusual Angle [Humor] 

1. டியர்,உன்னை லவ் பண்றது ரொம்ப சிரமமா இருக்கு.

ஏன் சதீஷ்?அப்டி சொல்றீங்க?லவ் பண்றப்ப நல்லவன் மாதிரியே நடிக்க வேண்டி இருக்கே?

-----------------------------

2. ஜீவா,நம்ம 2 பேருக்கும் என்ன வித்தியாசம்?

பூங்கொடி,எனக்கு கிடைச்ச ஒரே லவ்வர் நீ தான், உனக்கு இருக்கற ஏகப்பட்ட லவ்வர்ல நானும் ஒருத்தன்

----------------------

3. நீ என்னை கேட்ட முதல் கேள்வி உங்களுக்கு மிகவும் பிடிச்சது எது?அதற்கான பதில் இந்த ட்வீட்டின் முதல் எழுத்து

------------------------------


4. நான் ஆயில்பாத் எடுத்துக்கொண்டிருக்கேன் என SMS அனுப்பினேன்,ஒரு வெளக்கெண்ணய் எண்ணெய்க்குளியல்  செய்கிறதே அடடே !!! என ரிப்ளை அனுப்பினாள்

----------------------------

5. சாரி.. உங்க காதலை நான் ஏத்துக்க முடியாது என்றாள் காதலி,,ஏன் என்றேன். ஏற்பது இகழ்ச்சி என்றாரே வள்ளுவர் என்றாள்#அவ தமிழ்ப்பற்றில் இடி விழ

---------------------------------

Very nice animation...






6. உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறலாம்,ஆனால் யாரையும் ஏமாற்றாது

---------------------

7. யாருடைய நினைவும் இல்லாத ஒரு இதயம் கல்லறையை போன்றது

---------------------------
8. காலை முதல் மாலை வரை ஆசையாய் தொட்டுத் தொட்டு பார்த்தவளுக்கு முழுசா கட்டிக்கொள்ளும் நேரம் வந்தது#தூங்கும் நேரம் @இமைகள்

---------------------

9. மனம் திறந்து பேசுவது தவறல்ல,ஆனால் மனதில் பட்டதை எல்லாம் பேசுவது நண்பர்கள் புரிந்து கொள்ள உதவாது,பிரிந்து செல்லத்தான் உதவும்

------------------

10. மோஹனாவை பார்த்தியா?98% மார்க்ஸ் வாங்கி இருக்கா,அவளைப்பார்த்தாவதுஒழுங்காபடிடா.டீச்சர்,அவளைப்பார்த்ததாலதான் படிக்க முடியல#டீன் ஏஜ் லொள்

------------------------