Sunday, June 05, 2011

ஹோட்டலுக்குப்போகாமல் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கான 30 வகை பிரெட் சமையல் (சைவம்)

http://www.ibiblio.org/wm/paint/auth/vermeer/kitchen-maid/kitchen-maid.jpg

30 வகை பிரெட் சமையல்

'பிரெட்' என்றாலே, ''உடம்பு சரியில்லாதவங்க சாப்பிடறது'' என்கிற காலமெல்லாம் மலையேறி, 'பிரெட் இன்றியமையாத உணவு' என்பதாகிவிட்ட காலம் இது. வகை வகையாக ஹோட்டல்களில் கிடைக்கும் பிரெட் உணவுகளைப் பார்க்கும்போது... 'இதையெல்லாம் நாமும் செய்து பார்த்தால் என்ன?' என்று தோன்றும்தானே!

 இதோ, ''ஒரு பாக்கெட் பிரெட் இருந்தால்போதும்... அட்டகாசமான ரெசிபிகளை செய்து அசத்தலாம்’' என்று சொல்லும் 'சமையல்கலை நிபுணர்', நங்கநல்லூர் பத்மா, அப்பம் முதல் அல்வா வரை 30 வகை ரெசிபிகளை பிரெட்டிலேயே தயாரித்து பிரமிக்க வைத்திருக்கிறார். அவையெல்லாம், செஃப் ரஜினியின் அலங்கரிப்பில் இங்கே அசத்தலாக இடம் பிடிக்கின்றன - நீங்கள், உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துவதற்காக!

சமையல் டிப்ஸ்... 

பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருப்பதால், இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
சாதம் வைத்த குக்கர் சூடாக இருக்கும்போதே, அதன் மீது இரண்டு பிரெட் துண்டுகளை வைத்தால்... நன்கு ரோஸ்டாகிவிடும்.
பொடி வகைகளை செய்யும்போது, சிறிது கல் உப்பை சேர்ப்பதால், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது, நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால், பாகு இளகியே இருக்கும்.
டீ தூள் போட்டு கொதிக்க வைக்கும்போதே சர்க்கரை சேர்த்தால், சுவை குறைந்துவிடும். கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும்.
தக்காளி ரசம் செய்யும்போது தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்காமல், புளியுடன் சேர்த்து நன்றாகக் கரைத்து (அ) மிக்ஸியில் அரைத்து வடிகட்டி செய்யுங்கள். சூப் போல் தக்காளி ரசமும் சூப்பராக இருக்கும்.

கொழுக்கட்டை செய்ய மேல் மாவுக்கு கிளறும்போது, சரியாக வேகாமல் கட்டி தட்டிவிடும். அரிசியை ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரையுங்கள். அடுப்பில் ஒரு கடாயை ஏற்றி, கரைத்த மாவை அதில் போட்டுக் கிளறி, பந்து போல் கையில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து, கொழுக்கட்டை செய்தால் நன்றாக வரும்.

கேரட்டைத் துருவுவதற்கு முன்பு ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துத் துருவினால், ஈஸியாக துருவ முடியும். 
வெண்டைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் உதிராக இருப்பதுடன் ருசியும் நன்றாக இருக்கும்.
கீரை மசியல் செய்யும்போது, சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைப்பதால், அதன் மணமும், குணமும் குறைந்துவிடும். ஒரு வாரத்துக்கு தேவைப்படும் அளவுக்கு மட்டும் அரைத்து, பாலிதீன் கவரில் போட்டு, ஒரு டப்பாவில் சேமிக்கலாம். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே வாசனையாக இருக்கும்.
http://4.bp.blogspot.com/_z2bGs6LjjDQ/S_i7ZilXWLI/AAAAAAAAABY/I_ydkz5cqg0/s1600/78+Sexy+Girl+Cooking+in+the+Kitchen.jpg
1. பிரெட் காரப்பணியாரம்
 தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும். 

2. புலாவ் வித் பிரெட்
 
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.

 3.பிரெட் பாயசம்
 தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

 4.பிரெட் பக்கோடா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1,  முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல்,  நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

5. பிரெட் போண்டா

 தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

6.  பிரெட் வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

7. பிரெட் பூரண போளி

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.

8. பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

9. கல்கத்தா ஜீரா

 தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!

 10.பிரெட் சமோசா

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.

11.  பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டை நான்கு துண்டுகளாக 'கட்’ செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளைத் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

12. பிரெட் அல்வா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, சர்க்கரை - 100 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சிறிது கெட்டியானதும் பிரெட் பொடியை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு மேலும் கிளறி இறக்கவும்.

பால் மற்றும் பிரெட் இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவையை உண்டாக்கும் அல்வா இது.

13.பிரெட் அடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, இட்அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும்போது இரண்டு பூண்டுப் பல் சேர்க் கலாம்.

14.  பிரெட் ஸ்பிரிங் ரோல்

 தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸுடன் சாப்பிட ஸ்பிரிங் ரோல்... சூப்பர் ரோல்!

15. பிரெட் வடை

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.


http://cdn.wn.com/pd/a4/b0/59276a1455eeb40cf47467df7e98_grande.jpg
16. பிரெட் சூப்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, தக்காளி - 6, மிளகுத்தூள் நெய் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கோஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூடாக குடித்தால் 'சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

17.  பிரெட் சப்பாத்தி

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

18. பிரெட் குணுக்கு

தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், வெங்காயம், பேபிகார்ன் - தலா 2, பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

சாஸ் தொட்டு சாப்பிடலாம். வாயில் போட்டதும் 'நறுக்’கென இருக்கும் இந்தக் குணுக்கு.

19.  பிரெட் கேக்

 தேவையானவை: பிரெட் - 6 துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்., சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

 20.பிரெட் சாலட்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1, முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை - தலா 50 கிராம், எலுமிச்சம்பழம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி,  கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

21. பாவ் பாஜி

 தேவையானவை: பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
.
பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

22. பிரெட் ஜாமூன்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் - தலா 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

பால் பவுடருக்குப் பதிலாக ஜாமூன் மிக்ஸ் சேர்த்தும் இதை செய்யலாம்.  

23.  பிரெட் ரெய்தா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

24,  புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புதினா - ஒரு கைப்பிடி, உரித்த பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 1, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - சிறிதளவு, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை: புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து  விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

 25. பிரெட் ஊத்தப்பம்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் - தலா 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.

26, பிரெட் நெய் அப்பம்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 2 (பொடித்துக் கொள்ளவும்), அரிசி மாவு - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் - 4, பொடித்த வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - தேவையான அளவு. 

செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

27. பிரெட் உப்புமா

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், கேரட் - தலா 2, பச்சை மிளகாய் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

28. பிரெட் பீட்ஸா

தேவையானவை: பீட்ஸா பிரெட் - 1, சீஸ் - 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, நெய் - 6 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக 'கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.


29. பிரெட் கிரேவி

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.

 30.பிரெட் சீஸ் பால்

 தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.
நன்றி - அவள் விகடன்

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா? ( ஆன்மீகம்)

http://adrishta.com/wp-content/uploads/2011/02/krish111.jpg 
 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்


'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!’ என்பார்கள். ஆனால், அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர் களாகும்போது, அதே குணங்கள் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்!

நமக்கெல்லாம் ஆத்மா என்பது இருக்கிறது. ஆனாலும், சரீர சம்பந்தத் துடன் உயிர் வாழ்கிறோம். அந்தச் சரீரத்தின் தேவைகளுக்குத் தக்கபடி, நம்முடைய குணங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது, சுபாவங்கள் இன்னதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லமுடியாமல், சட்சட்டென்று மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏனெனில், சரீரமானது, சுக-துக்கங்களுடன் தொடர்பு கொண்டது; நன்மை- தீமைகளுடன் பிணைந்திருப்பது.

ஆனால், நம்மைப் போலவே, சரீரத்தால் அவதாரம் எடுத்தவர்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால், அவருடைய எந்தக் குணங்களும், எப்போதும் மாறாமல் அப்படியே இருந்தன. சொரூபம் என்பதும், சுபாவம் என்பதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு மாறவே மாறாத ஒன்று. ஏனெனில், அவர்... பரமாத்மா!
 
இன்னும் ஆழ்ந்து பார்த்தால், மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்கிறது வேதம். சத்திய விரதம், சத்திய பரம், த்ரிசத்தியம் ஆகிய மூன்று சத்தியங்களுடன் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அதாவது, பரமபதத்தில் நிலையாகக் காட்சி தருகிற அதே ஸ்ரீமந் நாராயணன்தான், சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார். 'அங்கு வைத்தாற்போன்றே...’ எனும் வாக்கியத்துக்கு ஏற்ப, அதே குணங்களுடனும் சுபாவங்களுடனும் தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். 

ஜோதிர்மயமாகவும் அவதரித்தார். நித்திய சூரிகள் தீப- தூப ஆராதனை செய்து பரம்பொருளை வழிபடும் வேளையில், அந்தப் புகை பரவி, அந்தப் பகுதியையே மறைக்க... சந்திர- சூரியர்களை தன்னுடைய கண்களாகக் கொண்ட பரம்பொருள், அப்போது தனது கிருஷ்ணாவதாரத்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWjFAXUvXaEWkq0QcXw0Vzez8ho9Wp5F3jELvUtuICyXWfEh7cToy1V_lfdJ24bdRWf_B_w8f9o7z3QZ4HWEpeDqJ6QA2p5kiadw2UisDakmUmcADcOnUn8k7t84nWwUp4RwEf0zlqYg/s1600/krishna1baby.jpg
ஆகவே, தன் நிலையில் இருந்து பரம்பொருள் என்றைக்கும் நழுவவே மாட்டார் என்பதை அறிந்து உணர்வது அவசியம்.

வாழ்க்கையில், எவருக்குத்தான் ஆசை இல்லை?! நல்லவை அனைத்தும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றும், கெட்டவை எதுவும் நம்மை அண்டக்கூடாது என்றும் வேண்டுவதே நம் அனைவரின் பிரார்த்தனை! நம்முடைய ஆசைகள்தானே, பகவானிடம் பிரார்த்தனையாக வெளிப்படுகின்றன.

அதாவது, நல்லவை என நாம் நினைக்கிற விஷயங்கள், நமக்குக் கிடைக்கவேண்டும்; துன்பம் விளைவிக்கக் கூடியதாக நாம் நினைத்துப் பதறுகிற விஷயங்கள், நம்மை விட்டு விலகிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன... ஒருவருக்கு இருக்கிற ஆசை வேறொருவருக்கு இருக்காது.

அதாவது, நீங்கள் விரும்புகிற விஷயத்தை இன்னொருவர் விரும்பமாட்டார்; வேறு ஏதேனும் ஒன்றை நாடுபவராக இருக்கலாம். அதேமாதிரி, நீங்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கிற விஷயத்தை அவரும் புறக்கணிப்பார் என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் கெட்டது என்று நினைத்து நடுங்குகிற ஒரு விஷயம், அவருக்குச் சாதாரணமாகப் படலாம். மாறாக, 'இந்த விஷயம் மட்டும் என்னை நெருங்கவே கூடாது ஸ்வாமி!’ என்று வேறு ஏதேனும் ஒன்றைக் கெட்டதாக நினைத்து, பிரார்த்திப்பார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNtPk-PrcQzT44G8LwI1Lb0G7VWJ08gHEUc0LjluQRxJuLefdsWHMZjoN1oNBfrc6a_2614KZeK4Bo1ZRl2Ha9U93zbhFbS21i3C047aLJh9XQjW6Ci5Dqag2mU-SRV8goX9Njeqma_mk/s320/BARATAM.jpg
அவ்வளவு ஏன்... நாமேகூட, சின்ன வயதில் நல்லதையும் கெட்டதையும் பட்டியல் போட்டு வைத்திருப்போம். பிறகு இளைஞனாகும் தருணத்தில், நமது 'தேவைப் பட்டியலில்’ வேறு சில விஷயங்கள் இடம்பெற்றுவிடும்; 'தேவையற்றவை’ என வேறு வேறு விஷயங்களைக் குறித்து வைத்திருப்போம். வயதுக்குத் தக்கபடி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும்!

ஆனால், இந்தப் பூவுலகில், எவருக்கும் மாறவே மாறாத ஓர் ஆசை உண்டெனில், அது பகவானின் திருவடித் தாமரையை நாடுவதுதான்! இறுதிக் காலத்தில், அவனைச் சரணடைந்து, அவனது திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, மனிதர்களாகிய நம்முடைய ஆசையும் பிரார்த்தனையும்! மகாபாரதத்திலும் ஸ்ரீபகவத் கீதையிலும் இதை வெகு அற்புதமாக உணர்த்தியிருக்கின்றனர், ஆச்சார்ய பெருமக்கள்.

நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைக்கவேண்டும் எனில், அதற்கு நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும் அல்லவா?! எதுவுமே சும்மா நம் மடியில் வந்து விழுந்து விடுமா, என்ன? நாம் மெனக்கெட வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம்.

சரி... பகவானின் திருவடியில் சரணடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
கைங்கர்யம்... கைங்கர்யம்... கைங்கர்யம்! கிட்டத்தட்ட ஸ்வாமிக்கு தாசனாக வேண்டும். அதாவது, அவனுக்கு அடிமையாக வேண்டும். ஏனெனில், அவன்... ஆண்டான்; ஆண்டவன். நாம் எல்லோருமே அவனுக்கு அடிமைகள்!
 http://elayarajaartgallery.com/images/oilpainting/imb3.jpg

'என்னது இது... அடிமைத்தனத்தைக் களைய வேண்டும் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள்! இதென்ன குழப்பம்?’ என்று தவிக்காதீர்கள். 'சுதந்திர இந்தியா என்று சொல்லும்போதே, எவ்வளவு சுகமாக இருக்கிறது. அப்படியிருக்க... ஆண்டான்- அடிமை இப்போது அவசியம்தானா?’ என்று கலங்கிவிடாதீர்கள்.  

என்னதான் நாம் இப்போது சுதந்திர தேசத்தில் வாழ்ந்தாலும் சில நியமங்களுக்கு உட்பட்டு, சட்டதிட்ட வரையறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்கிறோம்?! அதேபோல், பூவுலகில் சில நியமங்கள் உள்ளன; சில விதிகள் இருக்கின்றன. இங்கே, இந்த உலகை ஆட்சி செய்கிற மிகப் பெரிய அதிகாரம் பரம்பொருளிடம் இருக்கிறது. அவனே ஆண்டான். அப்பேர்ப்பட்ட ஆண்டவனிடம் நாம் அடிமையாக, தாசனாக இருப்பதில் தவறே இல்லை. சொல்லப்போனால், இறைவனுக்குத் தாசனாக இருப்பதைவிட, வேறென்ன பெருமை இருக்கிறது, சொல்லுங்கள்!

முக்கியமாக, இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும். வார்த்தைக்குத்தான் அவன் ஆண்டான்; நாம் அடிமை - தாசன். ஆனால், அவனுக்கு நாம் தாசனாகிவிட்டால், உடனே அந்தப் பரம்பொருள், நமக்குத் தாசனாகிவிடுவான். அவனது குணம் அப்படி; சுபாவம் அப்படி! இதை எந்த நாளும், எவருக்காகவும் மாற்றிக்கொள்ளவே இல்லை, பகவான்!

மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாசனாக இருந்தான் அர்ஜுனன். ஆனால், மெள்ள மெள்ள அவனுக்கு தாசனாகிப் போனான், ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனன் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, அவனது தேரை ஓட்டியது கிருஷ்ண பரமாத்மாதானே?! தான் பரம்பொருள், இதோ... இந்த அர்ஜுனன் ஜீவாத்மா என்றெல்லாம் நினைக்காமல், அர்ஜுனக் கூட்டத்துக்காகத் தூதுபோன கண்ணனின் கதையை அறிவோம், இல்லையா?

பகவானுக்கு நாம் தாசனாகிவிட்டால், அவன் நமக்குத் தாசனாகிவிடுவான் என்பது, இப்போது புரிகிறதா? ஆக, பகவானின் திருவடிக் கமலத்தைச் சரணடைவதற்கு, அவனுக்குத் தாசனாக இருந்து கைங்கர்யம் செய்ய வேண்டும். என்ன கைங்கர்யம்..? எப்படிச் செய்யவேண்டும்?

எமலோகம். பூமியில் வாழ்ந்த ஒருவன், இறந்ததும் அங்கே வந்தான். அப்போது, எமதருமன் அவன் அருகில் வந்து, ஆதுரத்துடன் அவனுடைய தோளைத்தொட்டான். நடுநடுங்கிப் போனான் வந்தவன். ஆனால், எந்த முரட்டுத்தனமும் எமதருமனிடம் இல்லை; அந்த மானிடனின் தோளை மிருதுவாகத்தான் பற்றிக்கொண்டான். அதில் தனது வலுவையெல்லாம் எமதருமன் காட்டவில்லை. முகத்திலும் எந்தக் குரூரமோ ஆவேசமோ இல்லை. மாறாக, எமதருமனின் கண்களிலும் முகத்திலும் மெல்லிய சோகம்தான் படர்ந்திருந்தது.
 http://mykathiravan.com/Annmeegam/krishna.gif
அந்தச் சோகம் அவனுடைய குரலிலும் எதிரொலித்தது. வந்தவனின் தோளைப் பற்றிக்கொண்டு, மிகுந்த கனிவான, கருணை அடர்ந்திருந்த குரலில், ''எத்தனை வருடங் களாகப் பூமியில் இருந்தாய் நீ? இருபது வருடம் இருந்திருப்பாயா? முப்பது வருடங்கள் வாழ்ந்திருப்பாயா? அறுபது எழுபது வருடங்கள் வரை பூவுலகில் இருந்தவனா நீ?

சரி, இத்தனை வருடங்களாக பூமியில் இருந்திருக்கிறாயே? ஒரு முறை, ஒரேயரு முறை 'கேசவா’ என்று ஏன் உச்சரிக்கவில்லை? உன் நாக்கு 'கேசவா’ என்று உச்சரிக்க ஏன் மறுத்தது? கேசவனைப் பற்றிய சிந்தனை உனது புத்திக்குள் எட்டவே இல்லையா? உன் மனதில் ஒருமுறைகூட, கேசவனின் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே கிடையாதா?

என்னுடைய ஊரான எமலோகத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால், சந்தோஷப்பட மாட்டேன், நான்! 'அடடா... என்ன கொடுமை இது!’ என்று வருந்தத்தான் செய்வேன். வாழ்வில், ஒருமுறையேனும் கேசவனின் திருநாமத்தைச் சொல்லியிருந்தால், இப்போது நீ இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

தண்டனை பெறுவதைவிட, தண்டனை கொடுப்பதுதான் ரொம்பவே கஷ்டமான காரியம். கேசவ நாமத்தைச் சொல்லாததால், இப்போது உனக்கும் கஷ்டம்; உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமே என்பதால், எனக்கும் கஷ்டம்!'' என்று கனிவுடன் சொன்னாராம் எமதருமன்.

'கேசவன்’ எனும் திருநாமத்தின் வலிமையைப் புரிந்து கொண்டீர்களா? அந்தத் திருநாமத்தைச் சொல்வதால் கிடைக்கிற மோட்ச பலனை அறிந்துகொண்டீர்களா?

எங்கே... சொல்லுங்கள், கேசவா... கேசவா... கேசவா!

thanx - sakthi vikatan

Saturday, June 04, 2011

வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s1600/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு.

 சி.பி - ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..



ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.

சி.பி - அவர் எங்கேங்கே சூட்டை எழுப்புனாரு?சூடு வாங்கிட்டு வந்து நிக்கறாரு.. மீடியாக்கள் தான் அவரை பெருசாக்குனாங்க.. அவரே சொன்ன படி அவரை டம்மி பீஸாத்தான் மக்கள் நினைச்சிருக்காங்க.. 

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!

சி.பி - டாப் டென் எல்லாம் கிடையாது வேணும்னா டூப் டென்னு சொல்லலாம்
http://www.cinechance.com/forum/tamil-films/jan-01-08/shriya-vadivelu.jpg


1. ''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''

சி.பி - எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?

''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''

சி.பி - பொங்குனது ஓக்கே.. ஆனா இப்படி அடிபட்டு கன்னம் வீங்குனது நாட் ஓக்கே.. 



2. ''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

 சி.பி - ஒரே உறைல 2 கத்தி இருக்க முடியாதும்பாங்க.. ஒரே ஊர்க்காரங்கள்ல 2 பேரும் பெரும் குடிகாரர்கள்னு பேர் எடுத்தா எப்படி? யாரா இருந்தாலும் தனித்து தெரிய தானே ஆசைப்படுவாங்க?




''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க.


'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்தரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம்.

வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்?

வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''

சி.பி- நீங்க சொல்றதுல ஏதோ இடிக்குதே? எங்கள் அண்ணா படத்துல தான் அப்படி  ஒரு சம்பவம் நடந்தது..அதுக்குப்பிறகு நீங்க அவர் படத்துல நடிக்கவே இல்லையா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiCta5thfd_4MVJbRIcaAysjeYJy5ThwsfP3uYJZQqaTg3BNnmZ5WDKpc2bQuoi4vK3nB-0FADUAL55p5HLD8smweWJlLi1hLx3or_SWcN_H8am1xT8aq8UEEkAzDCxrHFUfXlg2TyPU/s1600/Vadivelu-and-Actress-Namitha-in-Jegan-Mogini-Tamil-Movie.jpg
3. ''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங்களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''


''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன்.

நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''

சி.பி - பின்னே நீங்களே ஜெவையும் திட்டிட்டா அப்புறம் கழகக்கண்மணிகளுக்கு,அழகிரிகளுக்கு வேலை வேணாமா? அப்புறம் ஒரு பய அவங்களை மதிக்க மாட்டானே?




4. ''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''

சி.பி - என்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.. தனி மனித தாக்குதலில் பி ஹெச் டி வாங்கியவர் கலைஞர்.. அவர் கட்சிக்கு ஆதரவா பேசறவங்க பின்னே எப்படி பேச முடியும்?


''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeBz-I1YOMWzCbJdHbolwlL1xgc8iwQZDJuDjqujfZXVmZXjRhB_bNZYzPHOS8Xgjgys1wdk6fmWdlcBZOULF_jDh8UlXoMH_P6fFZvEx5QWHZnI0jjuCEdbPlXWhlwNreTSQ8U37u40/s1600/Vadivelu-and-Actress-Tamanna-in-Thillalangati-Tamil-Movie.jpg
5. ''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''


'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார்.

அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?


தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா?

'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க.

அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''

சி.பி - ரைட்டு.. இனிப்பேசிப்பிரயோஜனம் இல்லை.. ஹி ஹி உதை கன்ஃபர்ம் டி



6. ''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''

''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன்.

பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''

சி.பி - எங்கே ? சந்தானம் சைக்கிள் கேப்ல சிக்சரா அடிச்சுட்டு இருக்காரு.. சிங்கம் புலி ஒரு பக்கம் கோல்களா போடறாரு.. உங்களுக்கு ரீ எண்ட்ரி கஷ்டம்.. இனி டிஸ்ஸெண்ட்ரி தான்.. 




7. ''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''

''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க.

நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''

சி.பி - யோவ்.. என்னாய்யா பேச்சு ? இது? ஷகீலா ஸ்டேஜ் ஏறுனாக்கூட மாளாத கூட்டம்   வரும்.. அதுக்காக அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிட முடியுமா?அவர் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டு போடுவாங்களா?,,,,..
http://sites.google.com/site/cinemaphotogallery/Vadivelu5.jpg

8. '' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''


''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க?

கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது?

எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''

சி.பி - அப்போ நீங்க சொல்றதை வெச்சுப்பார்த்தா ஒண்ணு உங்களுக்கு நாவடக்கம் பத்தாது.. இன்னொண்ணு ராணா படம் யார் நடிப்புல உருவாகுதுங்கற மேட்டரையே அப்டேட் பண்ணிக்கல.. ரெண்டும் டேஞ்சர் தான்.. இனி உங்களை புக் பண்ண நினைக்கறவங்க ஏன் வீணா ரஜினி,கேப்டன்,ஜெ இத்தனை பேரை  பகைச்சுக்கனும்னு நினைப்பாங்க..


9. ''அரசியலில் அடுத்த கட்டம்?''

''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''

சி.பி - எனக்கென்ன தோணுதுன்னா நல்ல நாளா பார்த்து ஒரு சால்வை வாங்கிட்டுப்போய் கேப்டனைப்பார்த்து இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கவைல்லையே தவிர மற்றபடி அம்மா பாசத்துக்கு ஏங்குபவர்களே.. இருவரும் ஒண்ணா தண்ணி அடிச்சவங்களே..  இருவரும் சினிமாக்காரங்களே அப்டின்னு ஏதையாவது உளறி நைஸா சமாதானம் ஆகிக்குங்க.. தி முக ல வரிசையா எல்லாரும் உள்ளே போய்ட்டு இருக்காங்க.. அவங்களையே காப்பாத்திக்க அவங்களுக்கு நேரம் இருக்காது.. உங்களை எல்லாம் காப்பாத்த நேரமும் இல்லை.. அவங்களுக்கு அது இனி தேவையும் இல்லை..

 நன்றி - விகடன்

சீமான் VS விஜயலட்சுமி -கில்மா?!! நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை

http://thatstamil.oneindia.in/img/2011/06/03-seeman-vijayalakshmi300.jpg 

ன்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! 

சி.பி- ஏம்மா.. 3 வருஷமா பழகிட்டே இருந்தீங்களே... அப்பவே ஏன் புகார் பண்ணாம இப்போ எலக்‌ஷன் ரிசல்ட் காங்கிரஸ்க்கு பாதகமா வந்த பிறகு பண்றீங்க?


புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ்வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார்.  

சி.பி - ஹா ஹா அப்படியா?அப்போ புகாரை வாபஸ் வாங்குங்க.. ஹே ஹே ஹேய்

விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை?

சி.பி- எல்லாம் புகழ் ஆசை தான், வேற என்ன? பரபரப்பா பத்திரிக்கைல பேர் வரனும்.. மீடியா ஜூம் லைட் தன் மேல படனும்...

'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சின்னத்திரையிலும் தலையைக் காட்டினார். சீமானின் இயக்கத்தில் வெளியான 'வாழ்த்துகள்’ படத்திலும்  நடித்தார். பரபரப்பு சர்ச்சையில் அவர் பெயர் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ், தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். அப்போது, தூக்க மாத்திரை களை விழுங்கி தற்கொலைக்கும் முயன்றார். 2006-ல் கன்னட நடிகர் சுஜான் லோகேஷ§டன் மூன்று வருடங்களாக குடும்பம் நடத்துவதாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார். 

சி.பி - ஹா ஹா .. மேடம் உங்க ராசியான நெம்பர் 3 ஆ? யாரை லவ் பண்ணுனாலும் 3 வருஷம்  தான் லவ் பண்றீங்க?

டி.வி நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் மீதும் 'கல்யாண கலாட்டா’ புகாரைக் கொடுத்து பரபரக்க வைத்தார். இப்போது அதே வெடிகுண்டை சீமான் மீதும் வீசி இருக்கிறார். பரபரப்பு கிளப்புவதும் பின்னர் அப்படியே அமைதியாகிவிடுவதும் விஜயலட்சுமியின் வழக்கமான வாடிக்கைதான்.

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் எப்படிப் பழக்கம்?

சி.பி - ஹி ஹி ,இதை எல்லாம் பப்ளிக்கா சொல்ல முடியுமா?
ஒன்றரை வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமியின் சகோதரிக்கு குடும்ப ரீதியான சிக்கல். அப்போது விஜயலட்சுமி கண்ணீரோடு சீமானை அணுக, அவர் மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ராமாத்தாளிடம் அனுப்பினார். விஜயலட்சுமியின் சட்டப் போராட்டத்துக்கு சங்கமித்திரை என்ற வழக்கறிஞர் மூலமாக உதவினார். மேற்கொண்டு நடந்ததை சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் விவரிக்கிறார்.

சி.பி - ஓஹோ அவர் குடும்பமே அப்படித்தானா? அப்ப சரி.. அவர் மேல தப்பில்லை போல ... எல்லாம் ஹெரிடிட்டி பிராப்ளம்.. 

''ஈழ விவகாரத்தில் மிகுந்த தீரத்தோடு போராடும் சீமானுக்கு இழுக்கு உண்டாக்கும் விதமாகவே இப்படி ஒரு புகாரைப் பரப்பி இருக்கிறார் விஜயலட்சுமி. குடும்பப் பிரச்னையில் மனிதாபிமான முறையில் இரக்கப்பட்டதைத் தவிர அந்தப் பெண்ணுக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் சீமானின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கியது விஜயலட்சுமிதான்.

சி.பி - ஓஹோ, சிவா மனசுல சக்தி மாதிரி சீமான் மனசுல சிங்கார லட்சுமியா? ம் ம் நடக்கட்டும்.. 

'என் மீது கயல் விழி என்கிற ஆவியை ஏவிவிட்டு என் குடும்பத்தின் நிம்மதியையே குலைத்து விட்டீர்கள். தயவு செய்து என் மீது ஏவி இருக்கும் ஆவியை விரட்டுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்கிற எஸ்.எம்.எஸ்-ஐ சமீபத்தில் சீமானுக்கு அனுப்பினார். 

 சி.பி - அட.. அது யாரு?கயல்விழி.. புது கேரக்டரா இருக்கு? நல்ல ஃபிகரா?


(அதை நம்மிடம் காட்டுகிறார்!) 

 சி.பி - இதை காட்டுனது விஜயலட்சுமியா?சீமான் வக்கீலா? #டவுட்டு..
ஹி ஹி

எத்தனையோ இக்கட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஈழ விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் சீமான், ஆவியை ஏவிவிடுகிறார் என்றால் சிரிக்கத்தானே முடியும்? பகுத்தறிவுக் கொள்கையில் உறுதி பிறழாமல் இருக்கும் சீமான் மீது பில்லி சூனியப் பிரச்னையைக் கிளப்புவதில் இருந்தே அந்தப் பெண்ணின் குணம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அவதூறு பரப்பிய விஜய லட்சுமி மீது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இருக்கிறோம். விஜயலட்சுமியை இயக்கும் சூத்திரதாரிகளையும் சும்மா விட மாட்டோம்!'' என்றார் சந்திரசேகர்.

 சி.பி- அப்போ அஞ்சு கோடி ரூபா கொடுத்துட்டா அண்ணன் சீமான் மானம் காக்கப்படுமா? ஹி ஹி , சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்.. அது சரி.. ஏதோ சூத்திரதாரின்னு சொல்றீங்களே? அது கலைஞரா?அவர் தான் அப்படி கதை சொல்லிட்டு இருப்பாரு.. 



இன்னும் சிலரோ, ''விஜயலட்சுமி புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் போவதற்கு முன்னரே காங்கிரஸ் புள்ளி ஒருவர் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் போன் செய்து 'கமிஷனர் ஆபீஸில் முக்கியச் செய்தி!’ எனப் பரப்பி இருக்கிறார். 

 சி.பி - உண்மை பொடி   நடையா வாசலுக்கு வந்து செருப்பை தொடும்போது வதந்தி பஸ் ஏறி ஊருக்கே போய் இருக்குமாம்.. அந்த மாதிரி.. 



ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சீமானை சிதைக்கும் விதமாகவே திட்டமிட்டு சிலர் விஜயலட்சுமி மூலமாக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள். விஜய லட்சுமி மீது தாக்குதலை நடத்தி பழியை சீமான் மீதும் போட்டு சிக்கவைக்கவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமி சீமானை திருமணம் செய்ய நினைத்திருந்தால் அவருடைய உறவினர்களைத்தானே அணுகி இருக்க வேண்டும்.

 http://123tamilcinema.com/images/2011/06/02-vijayalakshmi33-300.jpg
அதைச் செய்யாமல் போலீஸிடம் புகார் கொடுத்ததிலேயே சீமானின் இமேஜை உடைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது புரிந்துவிட்டது. ஈழப் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த சி.மகேந்திரன் மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பின்னணியில் சிங்கள உளவுப் புள்ளிகளின் கைங்கர்யம்தான் செயல்பட்டது. அதேபோல் இப்போது சீமான் மீதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது!'' என்கிறார்கள் அவர்கள்.

சி.பி - பொதுவா வி ஐ பிங்க எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சு பொண்ணுங்க கிட்ட பழகறப்ப ஜாக்கிரதையா இருக்கனும், அல்லது ப்ழகவே கூடாது.. அதுக்கான விலை தான் இதெல்லாம்.

'பகலவன்’ பட டிஸ்கஷனில் இருந்த சீமானை சந்தித்தோம். எதையும் சட்டையே செய்யாதவராக சிரித்தவர், ''காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கேன்? ஒரு வருஷத் துக்கும் மேல் சிறையில் இருந்துட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்காகப் போராடவும் காங் கிரஸுக்கு எதிராகப் பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை. படிக்கவோ தூங்கவோ நேரம் இல்லாத அளவுக்கு தீவிரமாக இயங்கிவரும் எனக்குக் கண்டவர்களோடும் டூயட் பாடுவதுதான் வேலையா?

ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்த களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். விட்டுத் தள்ளுங்கள் அந்த வெட்டிக் கதைகளை எல்லாம்...'' என்றார் சீறலாக!

சி.பி - வெட்டிக்கதைகள்னா விட்டுத்தள்ளிடலாம். குட்டிக்கதைகளா இருக்கே? ஹி ஹி 

Friday, June 03, 2011

பதிவுலகில் ஜொள் பார்ட்டிஸ் VS லொள் பார்ட்டிஸ் காமெடி கலாட்டா கற்பனை

http://www.serendipity-photography.com/blog/20101220/St_Regis_Hotel_Houston_Indian_Wedding_Photography_PujaRahul_serendipity_0300.jpg. 1.பூங்கொடி.. எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்....

பொய் சொல்லாதீங்க..நிரூபன்  அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?

---------------------------------------

2. அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..

இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 ...... அப்படியா வைப்பாங்க?

--------------------------------

3. விக்கி தக்காளி -  நீ அவ கிட்டே ஐ லவ் யூ சொன்னியா?

லேப்டாப் மனோ - சொன்னேன்.. ஆனா அது நடக்காது..

விக்கி தக்காளி - ஏன்?

லேப்டாப் மனோ -அவ வேற யாரோ 2 பேரை லவ் பண்றா போல.. ஐ லவ் டூ அபடின்னாளே..?

விக்கி தக்காளி -அட வெளங்காதவனே.. ஐ லவ் TWO என சொல்லலை.. ஐ லவ் TOO  அப்படின்னு சொன்னா.. அப்டீன்னா அவளும்  உன்னை லவ் பன்றா-னு அர்த்தம்...

----------------------------

4. நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்  சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கறாரே?

--------------------------

5. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எதை எதை கேட்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு..

ஏன்?

தலைவர் தேர்தல்ல ஏன் தோத்தாருனு கேட்டு மனு குடுத்திருக்காங்க./..

-----------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXgWd-KvJKByOvdE0nHRWkRBfipTzwpzJhYRcWZci8Q8Wkut1sYFuCFamumIbXnk2WjHufWbhyphenhyphencMNQeFu1w4S_zCKhxJjiOI891fsfRbs-1YTAcTetr7ImWmc5dHitD_9hs65HiqRspUXG/s1600/wedding+fashion+for+girls+%25281%2529.jpg

6. வைகோ-ம.தி.மு.க., வளர்வது தமிழகத்திற்கு நல்லது; நாங்களும் ஒரு நாள், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்#நல்ல வேளை ராம்தாஸ் மாதிரி தேதி சொல்லல

---------------------
7.
 விஜயகாந்த்: எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்#ஓப்பனிங்க் நல்லாதான் இருக்கு

----------------------- 

8. நாற்பதை தொட்ட த்ரிஷா#40 வது படமா?வயசு 40 ஆச்சா?40 வயசான தொழில் அதிபரை தொட்டாரா?எந்த விளக்கமும் இல்லாம ஹெட்டிங்க் போட்டா எப்படி? இப்படி கேட்பது நம்ம மாத்தியோசி ஜீவன்

-------------------

9.  
கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு #செய்தில கிக்கே இல்லையே? நாளை ஆ ராசாவுடன் குஷ்பூ சந்திப்புன்னு நியூஸ் வந்தா ஓக்கே#எக்ஸ்பெக்டேசன்

------------------

10. 
ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை#இசைஞானிக்கு கொண்டாட்டமான நியூஸ் ஆச்சே..இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடுவாரோ?

---------------------
11. முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்! #நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா போதும் சார்,தானா வலு ஆகிடும்

-------------

டிஸ்கி 1 - நாஞ்சில் மனோ வேறு லேப்டாப் மனோ வேறு என யாரும் குழம்ப வேண்டாம்.. அண்ணன் மனோ தான் இனி லேப்டாப் மனோ என அழைக்குமாறு என்னை தனி மெயிலில் மிரட்டினார்.. ஹி ஹி  

டிஸ்கி 2 - விக்கி தக்காளி திடீர் என திருந்தி விட்டதாக பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவல். அவர் சட்டப்படி தாலி கட்டிய முதல் மனைவி ஊரிலிருந்து (இந்தியா)வியட்நாம் வந்து விட்டதால் கண்காணிப்பு ஜாஸ்தி ஆகி விட்டதாம்.. அதென்ன முதல் மனைவி என கேட்பவர்களுக்கு  சாரி அதெல்லாம் தக்காளியின் பர்சனல் மேட்டர்.. அவருக்கு எத்தனை மனைவி என எண்ணுவது என் வேலை அல்ல.. ஹி ஹி 

டிஸ்கி 3 - நம்ம உணவு உலகம் ராஜேந்திரன் நல்லவர் ஆச்சே.. எதுக்கு அவருக்கு ராசலீலா என பெயர் வந்தது என கேட்பவர்களுக்கு.. அவர் இப்போத்தான் நல்லவர்.. டீன் ஏஜ் -ல் ராசலீலா மலையாள படத்தை 7 முறை பார்த்தாராம்,அதனால் பிளஸ் டூ மாணவர்கள் அப்படி பட்டப்பெயர் வைத்தார்களாம்.. 


வெள்ளிக்கிழமைகள்ல மட்டும் ஃபிகர்கள் ஏன் செமயா இருக்காங்க?

http://farm4.static.flickr.com/3356/3223842952_b65e526646.jpg 

1. தலைக்கு குளிக்கும் நாள் என்பதால் மற்ற தினங்களை விட வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார்கள் # லேடீஸாலஜி

--------------------------

2. எல்லோரும் நம்முடன் மரியாதையாகப்பேசவேண்டும் என நினைக்கும் நாம் குழந்தைகள் டா போட்டு கூப்பிட்டால் மட்டும் ரசிக்க முடிகிறது#மழலை மனசு

-----------------------------
3. மம்மி.. எனக்கு தம்பி வேணும். 

அப்பா துபாய் போய் இருக்கார். வரட்டும் ரெடி பண்ணலாம்.

நோ மம்மி நீ டாடிக்கு ஷாக் சர்ப்பரைஸ் கொடு#ஏ ஜோக்

-------------------------
4. மணிபர்ஸை ஜாக்கெட்டில் வைக்கும் பெண்கள் செல் ஃபோனை ஏன் அங்கே வைப்பதில்லை? ஹில்ஸ் ஏரியாவுல சிக்னல் கிடைக்காதே?அதான்#ஏ ஜோக்

----------------------
5. செருப்பு அணியாமல் இருந்த அமைச்சரை அழைத்த ஜெ, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்#யார் யார் எதெது அணியலையோ அவங்க எல்லாம் நோட் பண்ணவும்

---------------------

http://www.bangkokpicture.com/photos/busstation0508.jpg
6. ஆணை காதலிக்கும் பெண் அவனிடம் செக்யூரிட்டியை எதிர்பார்க்கிறாள். பெண்ணை காதலிக்கும் ஆண் அவளிடம் தாய் அன்பை எதிர்பார்க்கிறான்#லவ்வாலஜி

-------------------
7. சாதாரண புடவை செலக்‌ஷனுக்கே பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும் பெண் ஆண் ஐ லவ் யூ சொன்ன உடனே சடன் ரிப்ளை வரும் என எதிர்பார்ப்பது ஆணின் அறியாமை

--------------------------
8. டி. வி ரிமோட் யார் கையில் என்ற சாதாரண பிரச்சனையோடு மாலை வேளைகள் குடும்பங்களில் பூதாகரமாய் வெடிக்கிறது#சைக்காலஜி

--------------------
9. காதலிக்கு ரோஜா,மனைவிக்கு மல்லிகை,கள்ளக்காதலி(ஸ்டெப்னி)க்கு ஜாதி முல்லை என வலை(கை) வ(கை)லையாக பூக்களை தருகிறார்கள் ஆண்கள்#ஜெண்ட்ஸாலஜி

-----------------------------------
10. பஸ்ஸில் ஸ்டேண்டிங்க் வாய்ப்பு கிடைக்காமல் உட்காரும் சூழல் ஏற்பட்டால் முன்னால் இருந்து 4 வது சீட்டில் ஓரமாக அமரவும்#உரசாலஜி இன் பஸ்ஸால்ஜி

---------------------------- 

http://farm3.static.flickr.com/2785/4302727009_52791b4961.jpg 



டிஸ்கி - ஜாக்கி சான் படம் பார்த்தாச்சு.. அடுத்து டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டுடன் ஒரு சந்திப்பு @த ரீடர் #கில்மா ஜொள்மா சினிமா 

ஜிகிர்தண்டா ஜிகிடிஸ் C/O ஜில் ஃபிகர்ஸ்-ஒன்லி ஃபார் யூத்ஸ்

http://www.zonkerala.com/movies/gallery/chappa-kurishu/chappa-kurishu-still-3.jpg

1.காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன#ஜிகிடி

-----------------------------

2.பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க#ஜிகிடி

----------------

3. கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்#ஜிகிடி

----------------------------
4. சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு#ஜெண்ட்ஸாலஜி

--------------------------

5. திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?

----------------------
 Awesome Natural fotography
2155.jpg (642×473)

6.சீமான்  3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள்  புகார் கடிதம்#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?

---------------------

7. நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?

--------------------

8. ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன - கலைப்புலி ஜி.சேகரன்#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?

--------------------------------

9. தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ

-----------------------

10. இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்#ஜிகிடி

--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhufbrTohZGA5Aa144VHmxjyrIgLKDi_dV30cM247MEP3bASdh44eAYkv_a80uH90jM-I-d2R7kJ4I8J1ziexIvCt4xTu_X0t6TcksBDIHX4xBRnn0B7UIIGsf3qg-No6FL-anK-_F5o0I/s1600/vijaya-laxmi-latest-hot-stills+(2).jpg

டிஸ்கி 1 - சீமான் பற்றிய ட்வீட்கள் வெறும் காமெடிக்கே.. அவர் தப்பு செஞ்சாரா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது.. பொங்கிப்பாயக்காத்திருக்கும் சீமான் ஆதரவாளர்களுக்கு சிரமம் தராமல் இங்கேயே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்கப்படுறது.. இப்படிக்கு  தப்பு செய்யும்போதே பாவ மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்வோர் சங்கம்...

டிஸ்கி 2 - ஜாக்கிசானின் ஃபைட் படம்,கேட் வின்ஸ்லேட்டின் கில்மாப்படம்,சைக்கோ த்ரில்லரான ஆண்மை தவறேல் என 3 படங்கள் இன்னைக்கு ரிலீஸ் ஆகுது.. ஆஃபீஸ் மேனேஜர் மனசு வெச்சா ஏதாவது ஒரு படம் இன்னைக்கு பார்த்துடலாம்னு நினைக்கறேன்.. ( 1 1/2 மணி நேரம் ஓ.பி அடிக்க சான்ஸ் கிடைச்சா இங்கிலீஷ் படம் 3 மணி நேரம் ஓ.பி அடிக்க சான்ஸ் கிடைச்சா தமிழ்ப்படம்..

Thursday, June 02, 2011

கவர்ச்சி காட்டுவதை நான் சமூக சேவையாய் நினைக்கிறேன்.....

http://boxoffice9.com/gallery/var/albums/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Aanmai-Thavarael-Movie-Stills,Photos,Pics/Aanmai%20Thavarael%20Movie%2000-19.jpg?m=13057899721.தலைவர் ஜாக்கிங்க் போறப்ப ஷூ போட்டுட்டு போறதில்லையே ஏன்?


செருப்பு போட்டுட்டு தான் இனி எந்த வேலையும் செய்யனும்னு மேலிட உத்தரவாம்.

-------------------------------
2. கவர்ச்சி காட்றதை நான் சமூக சேவையா நினைக்கிறேன்னு நடிகை சொல்றாங்களே?

ஆமா,இந்த நூற்றாண்டின் சிறந்த சமூக சேவகி விருது அவங்களுக்குத்தானாம்

---------------------

3. அவர் போலி ஜட்ஜ்னு எப்படி சொல்றே?

ஒப்புதல்வாக்குமூலம் குடுத்த கைதி கிட்டே வாட் எ பியூட்டிஃபுல் பர்ஃபார்மென்ஸ்?அப்டினு பாராட்னாரே?

---------------------------------------

4.   எதுக்காக உன் நாக்கை கட் பண்ணிக்கிட்டே?

தலைவருக்காக நாக்கை கட் பண்ணுனா கவர்மெண்ட் வேலை கன்ஃபர்ம்-னு சொன்னாங்களே?

-------------------- 

5. பேஷண்ட் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கார்?

டென்த் ரிசல்ட் வந்தாச்சு, நான் பாஸ்னு குதிச்சாராம்.

-------------------------------------

http://123tamilgallery.com/images/2010/09/Aanmai-Thavarael-08.jpg

6. கவர்மெண்ட் வேலை வேணும்னா எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச்ல பதிவு செய்யனும்.நீ எதுக்கு ENT DR க்ளினிக் போறே?

என் நாக்கை கட் பண்ணிக்கத்தான்.

-----------------------------------

7. ஆபரேஷனை டாக்டர் ஸ்டார்ட் பண்ணீட்டாரா? 

ஓ,அந்த பேஷண்ட்க்கு காலை ஏழு மணிக்கே எழரை ஸ்டார்ட் ஆகிடுச்சே?

--------------------------
8. சி பி ஐ மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? ஏன்?

என்னதான் சிபிஐ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை  விசாரணை பண்ணுனாலும் ஆ ராசா கிட்டே மாட்டுன பணமும்,உத்தம ராசா படத்துல கவுண்டமணி வடக்குப்பட்டி ராசாவுக்கு தந்த கடனும் ஊ ஊ ஊ 

-----------------------

9. வா மீட் பண்ணலாம்னு என் காதலர் கூப்பிட்டப்ப போனது தப்பா போச்சு.

ஏண்டி? 

வாமிட் பண்ண வெச்சுட்டாண்டி

----------------------------------

10. ஸ்கூல்ல நீ எத்தனாவது ரேங்க் வாங்குவே? 

எங்கப்பா என்ன ரேங்க் வாங்கித்தருவாரோ அதை வாங்கிக்குவேன்..அது வேணும் இது வேணும்னு நச்சரிக்க மாட்டேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjGbhyphenhyphenfKWhInKEMH1hNitQqYmfE_1R3NQ2wgVwTG1Dyt9NSQuGEXjxwWMspy1fsVZm7YH04z-UhQU8ff2woVsgMA4TIakx84FkYXJRMonYny5790TUtsitOGF4yFZdmu2vEY30K4IJU80/s1600/Aanmai-Thavarael-Audio-Launch-37.jpg

தயாநிதி மாறனின் 440 கோடி ஊழல்,ஆதாரம் சிக்கியது,சி பி ஐ அதிர்ச்சி- தினமணி அம்பலம்

 http://www.thehindu.com/multimedia/dynamic/00003/DAYANIDHI_MARAN_AGEND_3888f.jpgநினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

 இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு. 

 பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். 

ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.  அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. 

இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.  323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. 
http://cdn.wn.com/pd/c7/3d/a1d2a393b9a381f561d57b0e160d_grande.jpg
சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். 

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது

.  இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
http://www.hindu.com/gallery/0274/027406.jpg
 டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.  இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.  இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. 

 மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

 கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். 
http://www.cinepicks.com/blog/wp-content/uploads/2009/06/jayam-ravi-marriage-reception-photo-15.jpg
 இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும்.

கதை இத்தோடு முடியவில்லை.  இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை. 

நன்றி - தினமணி