Thursday, May 19, 2011

ஜெ இனி செய்யவேண்டும் ?25 நிபுணர்களின் கருத்து. விகடன் கட்டுரை

முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு...

'ஒன்றே செய்... நன்றே செய்... அதுவும் இன்றே செய்’ என்பது முன்னோர் வாக்கு!

மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த  மதிப்புக்குரியவர்கள்’  வழிகாட்டுகிறார்கள்!

1. விவசாயம்

'காவிரி’ எஸ்.ரங்கநாதன் 


''விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!''

2. விலைவாசி

வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர். 


''ஊக பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கென, என்.எஸ்.சி. போஸ் சாலையில் செயல்படும் ஏஜென்ஸிகளை இழுத்து மூட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். அங்கே, சேமிப்புக் கிடங்கு வசதி உருவாக்கப்பட வேண்டும். ஆண்டின் மழை அளவு, விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டித் திட்டமிட்டு, அதற்கேற்ப சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்!''

3. கல்வித் துறை - ச.மாடசாமி, கல்வியாளர். 

''அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இல்லை. நம்முடைய கிராமப்புறப் பள்ளிகளிலோ, ஆசிரியர் எடுத்துக் காட்டி பாடம் நடத்த ஒரு காந்தத் துண்டுகூடக் கிடையாது. முதலாவதாக, எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், போதிய அளவு கல்வி உபகரணங்கள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். அடுத்து, துணைவேந்தர் நியமனத்தில் தொடங்கி, ஆசிரியர் நியமனம் வரை அரசியல் தலையீட்டைத் தடுத்து, தகுதியானவர்கள் பதவிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும். இன்னமும் தாய் மொழியில் குழந்தைகள் எளிமையாகப் படிக்கத்தக்க பாடப் புத்தகங்களைக்கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. சமச்சீர் கல்வியோ மேலும் கடினமான பாடத்திட்டங்களைத் திணிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்ப - குழந்தைகளை மையப்படுத்தியதாக பயிற்றுவிப்பை மாற்ற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தொடங்கி, வகுப்பறைகள் வரை இந்த மாற்றம் வேண்டும்!''

4. தலித் முன்னேற்றம் - அழகிய பெரியவன், எழுத்தாளர். 

''இடஒதுக்கீடு அடிப்படையில் தலித் மக்களுக்கென ஒதுக்கிய பணியிடங்கள், தகுதியானவர்கள் இல்லை என்ற காரணத்தினால் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அத்தகைய பின்னடைவுப் பணி இடங்களை நிரப்ப வேண்டும். உயர் சாதியினரிடத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு, தலித் மக்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு என தலித் மக்களுக்கு அரசுப் பணியை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத் துறை அலுவலகங்களில், இளைஞர்களுக்காக வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்!''

5. விளையாட்டு - தன்ராஜ்பிள்ளை, ஹாக்கி வீரர். 

''சர்வதேச விளையாட்டுகளை சென்னையில் நடத்துவதற்கு ஏதுவாக, சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில்,  விளையாட்டுத் திடல்கள் அமைக்க வேண்டும். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று பல்வேறு விளையாட்டுகளுக்கு, மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான நகரங்களிலும் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். நான், முஹம்மது ரியாஸ், பாஸ்கரன் போன்றோர் கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்!''  

6. மின்சாரம் - சாவித்ரி கண்ணன், பத்திரிகையாளர். 

''ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். இந்தத் துறையில் கணிசமான அளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை புனல் மின்சார உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காற்றாலை மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, துறையின் ஊழல்களையும் களைய வேண்டும்!''

7. சுற்றுச்சூழல் - 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன். 

''தமிழகத்தில் புதிய அணு உலைகளை இனிமேலும் அமைக்கக் கூடாது. மரபணு மாற்றுப் பயிர்கள், எண்டோசல்ஃபான் போன்றவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குண்டு பல்புகளை நீக்கிவிட்டு எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்த வேண்டும். கேரளாவில் விவசாய நிலங்களை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதுபோல, தமிழகத்திலும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளிகளில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்!''

8. திரைப்படத் துறை - அமீர், இயக்குநர். 

''ஆளும் கட்சியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கும் சங்க ஆட்களை அரசு நெருங்கவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே, எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம். 'ஃபெப்ஸி’, இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் போன்றவற்றில், அரசியல் சார்பு இல்லாத நபர்களே நிர்வாகிகளாகும் சூழலை உருவாக்க வேண்டும். திருட்டு வி.சி.டி. விற்பனையையும் அதற்குத் துணை போகும் காவல் துறையினரையும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!''

9. தொழிலாளர் நலன் - டி.கே. ரங்கராஜன்,  தொழிற்சங்கவாதி. 

''விவசாயத் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், சேவைப் பிரிவுத் தொழிலாளர்கள் போன்றோருக்கு, தமிழகத்தில் பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல். இவர்களுக்கான நலத் திட்டங்களும் சரிவரச் செயல்படுத்தப்படுவது இல்லை. அவற்றை முறைப்படுத்த வேண்டும். பணியிட விபத்துகள், பணிச்சூழல் உண்டாக்கும் நோய்களை எதிர்கொள்ளுதல் போன்ற பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வேண்டும். தொழிலாளர் சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்!''

10. சிறுபான்மையினர் நலன் - பேராசிரியர் அ.மார்க்ஸ் 

''சச்சார் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து உயர்த்தி, சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை விடுவித்தபோது, முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுவிக்கவில்லை. அவர்களையும் விடுவிக்க வேண்டும். மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

11. அண்டை மாநில உறவுகள் -  ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். 

''சட்டம்-ஒழுங்கு, எல்லை, நதி நீர் ஆகிய மூன்று பிரச்னைகளுக்காகத்தான் நாம் அண்டை மாநிலங்களைப் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இவற்றை வெற்றிகரமாகக் கையாள ஒரே யுக்தி... அவற்றை அரசியல் ஆக்காமல் இருப்பதும்  பரபரப்பு ஆக்காமல் இருப்பதும்தான். சம்பந்தப்பட்ட பிரச்னைகளுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்து மாநிலக் கூட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும். பெரும்பாலும் இந்தக் குழுக்கள் அதிகாரிகள் மட்டத்தில் அமைக்கப்படுவது நன்மை பயக்கும். அடிக்கடி இந்தக் குழுக்கள் கூடுவதும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்கூட்டித் திட்டமிடுவதும் அவசியம்!''

12. சட்டம் - அருள்மொழி, வழக்கறிஞர். 

''தமிழகச் சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான விசாரணைக் கைதிகளின் நிலையையும்  நலனையும் கருத்தில்கொண்டு, தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இளம் குற்றவாளிகள் இருக்கும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் மேம்படுத்த வேண்டும். குடும்ப நீதிமன்றங்களைப் பொறுத்தவரை வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய சமரசப் பேச்சுவார்த்தைக்கு, நிம்மதியாக மனம்விட்டுப் பேசக்கூடிய அளவுக்குக் கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!''

13. தமிழ் வளர்ச்சி -  தமிழருவி மணியன். 

''ஆங்கிலம் படித்தால் வாழ்வு சிறக்கும் என்கிற சூழல்தான், நம்முடைய இளைஞர்களை அந்த மொழியை நாடச் செய்கிறது. தமிழ் படித்தாலும் நாம் சிறக்க முடியும் என்கிற நம்பிக்கையை தமிழக மக்களிடம்  உருவாக்க, அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். வேலைவாய்ப்பு, நீதி, கல்வி ஆகிய மூன்று துறைகளில் என்று தமிழ் மேலோங்குகிறதோ, அன்றுதான் தமிழ் மொழி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். ஆகையால், தமிழை நிர்வாக மொழியாக மாற்ற வேண்டும். அப்போதுதான், தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!''

14. பதிப்புத் துறை - 'பாரதி புத்தகாலயம்’ நாகராஜன். 

''அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12,574 நூலகங்கள், இன்னமும் கிராமப்புறங்களில் திறக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றைத் திறக்க, புதிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நூலகங்களுக்கு நூல்களை அரசு பெறவில்லை. இந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, நூல்களை நூலகங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது 'எம்.எஸ்.வேர்’டில் மட்டுமே 'யூனிகோட்’ பயன்படுத்த முடிகிறது. இதனை 'பேஜ் மேக்கர்’, 'போட்டோ ஷாப்’, 'கோரல் டிரா’ போன்ற மென்பொருட்களிலும் பயன்படுத்தும் சாத்தியங்களை அதிகரிக்க வேண்டும்!''

15. போக்குவரத்து - 'டிராஃபிக்’ ராமசாமி. 

''நகர்ப் பகுதியில்கூட ஒழுங்கான சாலைகள் இல்லை. பிறகு கிராமப்புறங்கள் எப்படி இருக்கும்? முறையான உள்கட்டமைப்பு வசதிகளை முதலில் செய்துகொடுத்து, பின்னர் தரமான வாகனங்களை ஓட்ட  வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக, எந்த அரசாங்கமும் பொதுமக்களிடம் கருத்து கேட்பதே இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிப் பிரச்னைகள் இருக்கின்றன. அதை, அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சரிசெய்ய வேண்டும்!''

16. தொழில் துறை - முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) 

''தொழில் துறையின் அடிப்படைக் கட்டமைப்பான மின் விநியோகத்தைச்  சீராக்க வேண்டும். எதிர்கால மின் தேவைக்கும் இப்போதே திட்டமிட வேண்டும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் தேவைக்குப் பொருட்கள் வாங்கும்போது, சிறுதொழில் - குறுந்தொழில் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றின் மீட்சிக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். சேவைத் துறை தனித் துறையாக்கப்பட்டு, கவனம் செலுத்தப்பட வேண்டும்!''

17. நீர் ஆதாரம் - பேராசிரியர் ஜனகராஜன். 

''நீர் நிலைகள் பாதுகாப்புக்கென புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். மணல் கொள்ளை, நதி நீர் மாசுபடுவதில் தொடங்கி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வரை அனைத்தையும் தடுக்க வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க, அந்தச் சட்டம் அடித்தளமாக இருக்க வேண்டும். நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்க, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், நிலத்தடி நீரை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம், பயன்படுத்தலாம் என்கிற நிலையை மாற்றவும், தீவிர நடவடிக்கைகள் அவசியம்!''

18. பெண்கள் / திருநங்கைகள் நலம் - 'லிவிங் ஸ்மைல்’ வித்யா. 

''குடும்ப வன்முறைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு நம் பெண்களுக்கு அவ்வளவாக இல்லை. அரசு அதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சத இடஒதுக்கீட்டைக் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தைக் கண் துடைப்பு அமைப்பாக ஆக்காமல், செயல்படும் வாரியமாக மாற்ற வேண்டும். திருநங்கைகள் சுய சார்போடு வாழ்வதற்கு, படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினராலும் சமூக விரோதிகளாலும் திருநங்கைகளுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!''

19. வேலைவாய்ப்பு

வேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 


''தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். அரசுப் பணிகளில் 1.5 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நிரப்ப வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் தோறும் தனித் தனியாக வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்!''

20.சாலை அடிப்படை வசதிகள் - ஆண்டனி, இயக்குநர், 'நீயா நானா’. 

''சிங்கப்பூரில் நுழைந்தவுடனேயே அதன் கச்சிதமான பிரமாண்டம் நம் கண்ணைக் கவரும். அதுபோல சென்னை நகரத்தையும் மாற்ற வேண்டும். அதற்கேற்ற உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களையும் மற்ற சிறுநகரங்களையும் ஒப்பிட்டால், பெரிய வேறுபாடு இருக்கிறது. இது களையப்பட வேண்டும்!''

21. மனித உரிமைகள் - 'எவிடென்ஸ்’ கதிர். 

''காவல், நீதி, நிர்வாகம், மருத்துவம்... இந்த நான்கு துறைகளில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகள் அங்கேயே விசாரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டுவிடுகின்றன. தமிழகத்தில், குற்றவியல் நீதி ஆணையம் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, அதைத் தன்னிச்சையாக, சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதித்து, இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் எந்த அதிகாரமும் அற்ற அமைப்பாக, செல்லாக் காசாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். தேசியக் காவல் ஆணையம், மனித உரிமைகள் சார்ந்து மாநிலக் காவல் துறைகளுக்கு அனுப்பிய பல பரிந்துரைகள் அமலாக்கப்படவில்லை... அவை அமலாக்கப்பட வேண்டும்!''

22. சமூகச் சீர்திருத்தம் - பேராசிரியை சரஸ்வதி. 

''இரட்டை டம்ளர் முறைபோல  தீண்டாமைக் கொடுமை எந்த வடிவில் இருந்தாலும், ஒழிக்கப்பட வேண்டும். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பாங்கு இருக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மகளிர் ஆணையத்தில் கட்சி சார்பு உள்ளவர்களைப் பதவியில் அமர்த்தாமல், இயல்பாகவே பெண்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் பெண்களுடன் இணைந்து பணிபுரிந்தவர்களையும் நியமிக்க வேண்டும். மலைவாழ் மக்கள், நாடோடிகள் போன்றோரின் குழந்தைகள் கல்வி கற்க உண்டு-உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்!''

23. இளைஞர் நலன் - சங்கர், 'சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’. 

''அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இளம் ஆசிரியர்களுக்கு 'Incentive Based Programs’ மூலம் அவர்களின் பணித் திறனை அதிகப்படுத்த அரசு உதவ வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களை வேலைவாய்ப்புக்காகத் தேடி வரும் நிலையை மாற்ற, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நிறைய  வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் வேலை பார்க்க தமிழ், இந்தியாவில் வேலை பார்க்க இந்தி, அயல்நாட்டில் வேலை பார்க்க ஆங்கிலம் என்கிற மும்மொழிக் கொள்கை இருந்தால், இன்னும் சிறப்பு!''

24.சுகாதாரம் - மருத்துவர் புகழேந்தி. 

''தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்குத் தரமான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பதையும் எல்லா மருந்துகளும் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து பணியாற்றுவதைத் தடை செய்ய வேண்டும். மருந்துகள் அநியாய விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டில், பெரும் பகுதியை சிறப்புக்கூறு நோய்களுக்கு செலவழிப்பதற்குப் பதிலாக, அடிப்படை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்!''

25.கிராமப்புற மேம்பாடு - குத்தம்பாக்கம் ஆர்.இளங்கோ, சமூக சேவகர். 

''கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயத் துறை மறுமலர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். தட்டுப்பாடு இல்லாத குடிநீர், வீடுகள்தோறும் சுகாதாரமான கழிப்பறைகள், குளியல் அறைகள் என்கிற சூழலை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்ட 'நமது கிராமம்’ திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டி, செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கூடுதல் அதிகாரமும் நிதியும் அளிக்கப்பட வேண்டும்!''

Wednesday, May 18, 2011

ஆட்சிக்கு வந்ததும் அம்மா சந்திக்கும் முதல் வழக்கு.. அதிமுக அதிர்ச்சி

http://mmimages.mmnews.in/Articles/2010/Nov/4115d304-e7a7-48b8-9e64-6ff0154e2a57_S_secvpf.gif 

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

http://www.chikubuku.com/news_images/1268657988jayalaliitha%20AIADMK%20chief.jpg
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதற்கான பணிகள் நடந்து வருவது பற்றிய புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றுவது சட்ட விரோதம்.

அதுமட்டுமல்ல. மீண்டும் கோட்டைக்கு மாற்றுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும். கோட்டைக்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய அரசு சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.


தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே தலைமைச் செயலகத்தை அரசினர் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், பொதுப் பணித் துறைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
 http://mmimages.mmnews.in/Articles/2011/Mar/1ac6b751-0864-4b9d-a1d8-b6bcab0fc787_S_secvpf.gif
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த இட மாற்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? ஆளுனரா? அல்லது வேறு யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, தலைமைச் செயலக இடமாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி வழக்கறிஞர்  கிருஷ்ணமூர்த்தி விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.


கலைஞர் இட்ட சட்டங்கள் , அவர் அமைத்த திட்டங்கள் எதுவும் உபயோகிக்கக்கூடாது என்பது ஜெவின் நினைப்பு. ஆனால் பொது மக்களின் வரிப்பணம் வீணாகும்போது அவர் தன் பிடிவாதத்தை தளர்த்தத்தான் வேண்டும்.

அதே போல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது. வேண்டுமானால் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் அது . தொடர வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் அவா.. செய்வாரா? ஜெ?

நாளைய இயக்குநர் - திகில் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள்ல அந்த வாரம் என்ன டாப்பிக் கதைங்கறது சொல்லிடறாங்க. இது தெரியாம ஹாய் மதன் இந்த வாரம் என்ன டாபிக்னு தெரியுமா? என்று  சஸ்பென்ஸ் வைக்கும்போது சிரிப்பு தான் வருது. ஆனா அவரை சொல்லி தப்பில்லை.. நிர்வாகம் விளம்பர க்ளிப்பிங்க்ஸ் போடும்போது கவனமா இருக்கனும்.. 

அப்புறம் தொகுப்பாளினி போட்டுட்டு வர்ற டிரஸ் பற்றி எப்பவும் போல சொல்லியே ஆகனும். அஞ்சரைக்குள்ள வண்டி படத்துல ஹீரோயின் பாத்ரூம்ல இருந்து வெளில வர்றப்ப எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார். ஒரு மஞ்சள் கலர்  பெட்டிகோட் மட்டும் போட்டுக்கிட்டு பொண்ணு ஜாலியா வருது.. பார்க்கற நமக்கே கூச்சமா இருக்கே..... ஹி ஹி 

சரி.. சதையை பற்றி எதுக்கு நமக்கு கவலை ?கதைக்குள்ள போவோம்.



1. அருண் பிரகாஷ் - பிடாரன்

ஒரு பர்த்டே பார்ட்டிக்கு வீட்ல மேஜிக் மேன் வர வைக்கப்படறான்.அது கணவனுக்கு பிடிக்கலை. மனைவியை குறை சொல்றான்.( பொதுவா மனைவிங்க எது தன்னிச்சையா செஞ்சாலும் நாங்க குறை சொல்லுவோம் இல்ல.. ?)ஹால்ல மேஜிக்மேனை உட்கார வெச்சு உள்ளே கணவன் மனைவி 2 பேரும் அவனைப்பற்றி வாக்குவாதம் பண்ணிக்கறாங்க.. ( இப்போ எல்லாம் இது ஒரு டெக்னிக்காவே ஃபாலோ பண்றாங்க போல)

தன்னோட மேஜிக் கலையை அவமானப்படுத்தறது பிடிக்காம அவன் அவங்களுக்கு பாடம் கற்றுத்தர நினைக்கிறான். கண் கட்டு வித்தையால அவங்களை பயமுறுத்திட்டு , ஆனா எந்த கெடுதலும் பண்ணாம அவன் காசும் வாங்காம ரிட்டர்ன் போயிடறான்.இதான் கதை.

ஒரு படைப்பாளியின் கோபம், ஒரு கிரியேட்டிவ் திங்க்கர்க்கு சமூகம் கொடுக்கற மரியாதை ஆகியன  பற்றி நல்ல முறையில் அலசப்பட்ட கதை.

ஹாய் மதன் ஒரு குறை சொன்னாரு. மேஜிக் மேன் எப்பவும் சுறு சுறுப்பா இருப்பாங்க,, டாமினேஷன் பண்ணுவாங்க.. ஆனா இவர் ஏன் டல்லடிச்ச மாதிரி இருக்காரு?ன்னு கேட்டாரு.


ஆனா கதையோட சஸ்பென்ஸூக்கு அப்படி காட்றது தேவைதான். சைக்கோ மாதிரி காட்டி அப்புறம் சஸ்பென்ஸை உடைக்க படத்தோட டைரக்டர் முயற்சி பண்ணி இருக்கார். ஆனா இந்த படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும்னு சொல்ல முடியாது.. ஆனா வெல் டேக்கன் ஃபிலிம்னு சொல்லலாம்.

 ஒரு உபரி தகவல். இது எஸ் ராமகிருஷ்ணன் எழுதுன கதை

2. ராஜ்குமார் - பிழை

வித்தியாசமான சஸ்பென்ஸ் கதை. ஒரு அபார்ட்மெண்ட்ல நர்த்தகியா வாழும் ஒரு ஆண்.. அவன் பெண் வேஷத்தில் ரூம்ல இருக்கறதை வாட்ச் மேன் பார்த்துடறார்.அதை வெளில சொல்லாம இருக்க அப்பப்ப மிரட்டி பணம் வாங்கிக்கறார்.மிரட்டல் எல்லை மீறவே (அதாவது வாட்ச் மேன் ஹோமோ ட்ரை பண்றப்ப)கொலை பண்ணிடறான். இதான் கதை

ஆரம்பத்துல ரூம்ல இருக்கும் ஆண் ஏதோ ஒரு பெண்ணுடன் தகாத உறவு வெச்சிருப்பது போல் சஸ்பென்ஸ் காட்சி வெச்சது நல்லாருக்கு.கேமரா கோணங்கள் செம.. 


இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வாட்ச் மேன் டூப்ளிகேட் சாவி போடறப்ப சாவியை தன் ப்ளேஸ்க்கு எடுத்துட்டு  போய் அப்புறம் சோப்ல தடம் பதிச்சு மறுபடி சாவியை பழைய இடத்துல வெக்கற மாதிரி காட்டி இருக்கீங்க.ஆனா சோப்பை கையோட எடுத்துட்டு போய் அதுல தடம் படிச்சு சாவியை வைக்கறதுதான் ஈஸி & சேஃப்டி

2. நர்த்தகியா (திருநங்கை) வர்ற ஹீரோ ரூம்ல புடவை மாத்தறதை எப்படி ரூம் ஜன்னல் சாத்தாம இருப்பார். இந்த மாதிரி நேரத்துல ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தியா வெலை செய்யுமே?

3.வாட்ச்மேன்  ஒரு ஹோமோ என்பதை இன்னும் தெளிவா காட்டி இருக்கலாம்.

ஹாய் மதன் ஐடியா ஓக்கே என பாராட்டிட்டு டைரக்டரோட ஐடியாவை சொன்னேன்,. வாட்ச் மேன் ஐடியாவை சொன்னேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க அப்படின்னு டைமிங்க் ஜோக் அடித்தார். ஹாய் மதனிடம் எல்லோரும் இந்த மாதிரி விட்களை எதிர்பார்க்கறாங்க. ஆனா அவர் ஏன் அடக்கி வாசிக்கிறார்னு தெரில.. ( பிரதாப் போத்தன் கூட சேர்ந்து கெட்டுட்டார் போல).

 பிரதாப் போத்தன் டைரக்டர் ராஜ்குமாரைபாராட்றப்ப நல்லா மெயிண்டெயின் (maintain)பண்ணுனீங்க என பாராட்டுவதற்குப்பதிலாக நல்லா மெண்டென் பண்றீங்க என்றார். ஸ்டைல் உச்சரிப்புன்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா
show details 21:35 (1 hour ago)

http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-1.jpg


3. மணிவண்னன் - நியதி

பேங்க்கை கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம் எதேச்சையா அவங்க தங்கி இருக்கற ஹோட்டல் பாம் வெச்சிருக்கறது தெரியாம பலி ஆகிடறாங்க.. சாதாரண ஒன்லைன் ஸ்டோரி தான். ஆனா மேக்கிங்க் நீட். 

நல்ல வசனம்

1. பணத்துக்காக விஷமா மாறும் ஒரே இனம் மனுஷன் தான்.

நல்ல காட்சி

பேங்க்கில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பேங்க்கிலேயே மற்றவர் முன் தீயால் எரிப்பதைப்போல் காட்டி பணத்தை சாமார்த்தியமாக அபேஸ் பண்ணுவது

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரத்தம் வர்ற மாதிரி காட்சில ஒரிஜினல் ரத்தம் யூஸ் பண்ணாட்டியும் பரவால்லை. சிவப்பு கலர் திரவமாவது யூஸ் பண்ணி இருக்கலாம். ஆனா ஆரஞ்ச் கலர் திரவம் ஏன் யூஸ் பண்ணி காட்சியின் டெப்த்தை (depth)குறைக்கனும்.?

(டாக்டர் ராஜசேகர் மன்னிக்க வேண்டுகிறேன் படத்துல ஒரிஜினல் ரத்தத்தை யூஸ் பண்ணினார்)

2. பேங்க் கொள்ளை நடக்கறப்ப பொதுவா ஆண்கள், பெண்கள் தனித்தனியா தனிமைப்படுத்தி மிரட்டுவாங்க.. இப்படி க்ரூப்பா ஒரே செட்டா போட்டு வைக்க மாட்டாங்க..

கே பாலச்சந்தர் இந்தப்படம் செம ஸ்க்ரீன்ப்ளே க்ளாரிட்டி எக்ஸ்ஸிக்யூஷன்மட்டும் கன்ஃபியூஷன்னு சொன்னார்


http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-3.jpg

டியர்.. சூடு ஆறுவதற்குள் பாலை குடிச்சிடுங்க.. இல்லைனா...!!!!!



1. வாக்குறுதியை அள்ளி வீச தலைவரை விட்டா ஆள் இல்லைன்னு எப்படி சொல்றே?

நாங்க ஆட்சிக்கு வந்தா வாக்காளர் அனைவருக்கும் இலவச ஃபிளைட் பாஸ் அப்படின்னு சொல்லிட்டாரே?

----------------------------

2. தலைவர் ஸ்ட்ரைட் ஃபார்வார்டுன்னு எப்படி சொல்றே?

மரியாதையை, சுய மரியாதையை எதிர்பார்க்கறவங்க என் கட்சி கூட கூட்டணி வெச்சுக்க வேண்டாம்னு ஓப்பனா சொல்றாரே?

---------------------

3. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ்  எலக்‌ஷன்லயே நிற்கலையே? எப்படி சட்டசபைக்குள்ள போறாரு?

விஜய்காந்த்துக்கு ஃபைட் போட ட்ரெயினிங்க் குடுக்கப்போறாரு.. 

-----------------------

4.தலைவரோட கொடும்பாவியை எரிக்கறதா சொன்னதும் தொண்டர்கள் பதறீட்டாங்களாம்..?

ஆமா..ரியாலிஸ்டிக் வேணும்.. எதுக்கு பொம்மையை எரிக்கறீங்க.?. அசல் அருகில் இருக்கையில் நகல் எதற்கு?ன்னு கேட்டாங்களாம்.. 

-------------------

5. அரசியல் ஒரு சாக்கடைன்னா தலைவர் ஏன் ஒத்துக்க மாட்டேங்கறாரு?

அவர் இங்கிலீஷ் மீடியம் ஆச்சே? பாலிடிக்ஸ் ஈஸ் எ டிச் என சொன்னா புரிஞ்சுக்குவாரு.. 

-------------------------
6. நாம படிக்கிற க்ளாஸ்லயே லவ்வர் இருந்தா என்ன யூஸ்?

ஒரே ஒரு யூஸ் தான். 100% அட்டெண்டென்ஸ்.. கிடைக்கும்.. நமக்கு. 

--------------------

7. உங்க கடைல மேரேஜ் ஆன ஆம்பளைங்களைத்தான் சேர்த்தறீங்க.. ஏன்?

அவங்களுக்குத்தான் ஒபீடியன்ஸ் ஜாஸ்தி (OBEDIENCE)இருக்கும். சொல் பேச்சு கேட்டு நடப்பாங்க..

----------------------

8. டியர்.. பாதாம் பால் சூடா இருக்கு.. சீக்கிரம் சாப்பிடு.. 

ஏன்?

போர்டை பார்த்தியா? ஹாட் பாதாம் பால் ரூ 30 , கூல் பாதாம் பால் ரூ 40னு போர்டுல எழுதி இருக்கு.. ஆறுவதற்குள் குடிச்சுடு.. இல்லைன்னா 10 ரூபா தண்டம் கட்டனும்.. 

------------------

9. நீ எது வரை படிச்சிருக்கே?

PHD  சார்.. 

ஆச்சரியமா இருக்கே? எப்படி?

PASSED IN HIGH SCHOOL WITH DIFFICULTY

-----------------------
10. ஃபோன்ல ஏன் இவ்வளவு சைலண்ட்டா பேசறே?


சிஸ்டர்டா......

சிஸ்டர் தானே? ஏன் ஒளிஞ்சு நின்னு பேசறே?

உன்னோட சிஸ்டர்டா..

------------------------------------

Tuesday, May 17, 2011

நர்த்தகி - வித்தகியா? பாதகியா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8KQeV8gYcFltch0fCXwPWKcb7lKcmt_jTPrNPCySYbzVaSfde1pmo2hPpVyC8iILh_bB6kjOPoATygkmji35jpJm942Baa1TmcGSxiMt2LGAkIjfgR6SE5T9ezGucRX1pai4-yItKIsE/s1600/Narthagi+New+Tamil+Movie+Posters+Stills+Images+Photos+Gallery.jpg

பொதுவாக தமிழ் சினிமா திருநங்கைகளை காமெடிக்காகவும்,டப்பாங்குத்துப்பாடல் காட்சிக்கு மட்டுமே உபயோகித்து வந்த சூழ்நிலையில் முதன் முதலாக ஒரு திரு நங்கை எப்படி உருவாகிறார் என்பது முதற்கொண்டு அவரது முழு வாழ்க்கையை பதிவு செய்யும் முதல் தமிழ்ப்படம் என்ற அளவில்  இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.. ஆனால்.......

சிலம்பாட்ட வீரரின் குடும்பத்தில் 3 பெண்குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. ஆனால் வீரனாக தான் வளர்க்க விரும்பும் ஆண் குழந்தை சின்ன வயதிலேயே பெண் தன்மையுடன் வளர்வது கண்டு கோபம் அடைந்த  தந்தை அவனை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.அவன் மும்பை போய் முறைப்படி திரு நங்கை ஆகிறான்.அதற்குப்பிறகு அவனை சமூகம் எப்படி வஞ்சிக்கிறது,அவன் என்ன செய்கிறான்,அவன் வாழ்க்கை திசை எப்படி பயணப்படுகிறது என்பதை வலி நிறைந்த திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள்.

சிலம்பாட்ட வீரர்+ மனைவி இருவர் நடிப்பும் செம யதார்த்தம்.இருவரும் 3 குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்துக்கொண்டு கண்களாலேயே காதல் மொழி பேசுவது செம கிளு கிளு.. அதுவும் சிக்கன் பீஸின் எலும்புத்துண்டை மனைவி வாயில் வைத்து உறிஞ்சும்ப்போது கணவர் குறும்புப்பார்வை பார்க்கிறாரே.. அக்மார் கே பாக்யராஜ் பாணி டச்சிங்க்  சீன்... அந்த சீனில் மனைவியாக வருபவரின் முக பாவனைகள் அழகு கவிதை..
http://chennai365.com/wp-content/uploads/Audio-Launch/Narthaki-Audio-Launch/Narthaki-Audio-Launch-Stills-04.jpg
சிலம்பாட்ட வீரர் தனது மகனுக்கு சிலம்பம் கற்றுத்தரும்போது அவரது மகன் பரத நாட்டிய ஸ்டெப் போடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தனது மகன் பெண்ணியல்புக்கு போவதை கண் கூடாக உணர்வதும் அழகிய படப்பிடிப்பு.

அதேபோல் ஹீரோவிடம் ஆசையாகப்பேச ஆரம்பிக்கும் 17 வயது ஹீரோயின் தனது முகத்தில் காதல் 60 % +காமம் 40 என உணர்ச்சிக்கலவையாக இருக்கும்போது தன் காதலன் பெண் தன்மை உள்ளவன் என அவன் வாய்ச்சொல்லாலேயே உணரும்போது சடார் என அவரது முக உண்ரவுகள் மாறி ஒரு அசூயை+ அருவெறுப்புடன் பார்ப்பது அட்டகாசமான நடிப்பு..

ஆனால் ஹீரோ தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக ஹீரோயின் கிட்டத்தட்ட ஹீரோவை ரேப் பண்ணுவது போல் காட்டி இருக்க தேவை இல்லை. அது ஒரு பெண்ணுக்கு 20 வயசுக்குப்பின்னே மனோ பலம் வரும். 16 அல்லது 17 வயசுப்பெண்ணுக்கு வெட்கமும், தயக்கமும் தானே வரும்?

ஹீரோ மும்பைக்கு போனதும் கொஞ்சம் அந்நியத்தன்மை தலை தூக்குகிறது. ஹிந்தியில் ஏகப்பட்ட வசனங்கள் வரும்போது சப் டைட்டிலாக தமிழ் வசனங்களை  திரையில் ஓட விட்டிருக்கலாம்.

 பரத நாட்டிய வர்ஷினி டீச்சராக வரும் ஃபிகர் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எடிட்டிங்க் அல்லது ஃபுட்டேஜ் பிராப்ளமோ என்னவோ அவரை திடீர்னு காணோம்.

படத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆண் பெண் தன்மை அடைவான் என்ற கருத்து மறை முகமாக சொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்.எத்தனையோ பரத நாட்டிய கலைஞர்கள் ஆண்கள் மிகச்சிறப்பாக வாழ்கிறார்களே? அவர்கள் அசைவில் ஒரு நளினம் வரலாம்.. அவ்வளவு தான்.

டி வி சீரியல்களில் ஒரு பாத்திரம் கால்ஷீட் பிராப்ளம் என்றால் உடனே இனி இவருக்குப்பதில் இவர் நடிப்பார்  என டைட்டில் கார்டு போட்டு டகார் என ஆள் மாற்றுவது போல் படத்தின் மெயின் கேரக்டராக வரும் திரு நங்கை கேரக்டர் ஹீரோவை வளர்ந்த ஆளாக காட்டும்போது வேறொரு பெண்ணை காட்டுவது திரைக்கதையின் மைனஸ்.. ஹீரோவின் மேல் தோன்ற வேண்டிய அனுதாபம் மிஸ் ஆகிறது.. 





http://gallery.southdreamz.com/cache/movie-gallery/narthagi/narthaki--tamil-movie-stills-30_720_southdreamz.jpg
படத்தில் மனதை தொட்ட வசனங்கள்

1. எங்கம்மா சொன்னதுக்காக உங்களை கட்டிக்கிட்டேன். என்ன சுகத்தை கண்டேன்? 4 குழந்தைகளைத்தவிர.. ( ஏம்மா? குழந்தையே ஒரு சுகம் தானே?)

2. டேய்.. ஏண்டா இப்படி இருக்கே? கோழையா 100 வருஷம் வாழறதை விட வீரனா ஒரு வருஷம் வாழ்ந்தா போதும்.. ஆம்பளையா நடந்து குடும்ப கவுரவத்தை காப்பாற்று..

3.  ஏண்டி.. சும்மா புலம்பறே.. நான் வீரண்டி.. என்னை கட்டிக்கிட்டதுக்கு சந்தோஷப்படு....

அப்போ வீரனைக்கட்டிக்கிட்டதுக்காக ஒரு பொண்ணூ வாழ்க்கை பூரா கோழை போல வாழனுமா? ( ஆஹா செம கேள்வி..)


4. மகளே.. இப்படி ஆம்பளை ஆசை பிடிச்சு அலையாதேம்மா.. அப்புறம் ஆம்பளை வளர்த்த புள்ள அதனால தான் இப்படின்னு ஊர்ல தப்பா பேசுவாங்க..

5. எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு நல்ல படியா வாழனும்னு ஆசை இருக்கு. ஆனா அதுக்காக அரசாங்கமும் , மக்களும் எங்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..

6. அம்மா.. எனகு ஆணா இருக்க பிடிக்கலை.. உடம்புக்குள்ள ஒரு முள் செடி முளைச்ச மாதிரி நரம்பெல்லாம் தெறிக்கற மாதிரி இருக்கு.. ( சபாஷ்.. அவர்கள் வலியை உணர்த்தும் நுட்பமான வசனம்)

7. எனக்கு அழுகையே வராது..ஏன்னா சின்ன வயசுல இருந்தே அதை முழுங்கி முழுங்கி வளர்ந்துட்டேன்..

8. என்னை மாதிரி தனியா இருக்கறவங்களுக்கு புத்தகங்கள் தானே துணை..

9. அளவுக்கதிகமான காதல் என் கண்னை மறைச்சிடுச்சு..என் கால் கூட என் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது.. 

10.  என்னதான் தோஷ நிவர்த்தி என்றாலும் என் புருஷன் இன்னொரு பொண்ணு கூட  படுத்துட்டு வர்றதை எப்படி ஒத்துக்க முடியும்?( அதானே.. அதே பொண்டாட்டி வேற ஒரு ஆண் கூட படுத்துட்டு வந்தா தோஷம் சரி ஆகிடும்னா ஒத்துக்குவாங்களா?)

11. என்ன சார்.. இப்படி சொல்லீட்டீங்க? நீங்க தானே அவரை எனக்கு அறிமுகம் பண்ணீ விட்டீங்க?

அதுக்கு? நீங்க அவரை லவ் பண்ணுவீங்கன்னு எப்படி தெரியும்?

12. மன வலிகளை இசையால மட்டும் தானே கரைக்க முடியும்?

13. ஆணோ, பெண்ணோ காதல் தோல்வி ஏற்பட்டா மறுபடி வேற காதல், வேற வாழ்க்கை என சீக்கிரம் மாறிக்கலாம். ஆனா எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு இது ரொம்ப பெரிய வலி..
http://timesofindia.indiatimes.com/photo/7719066.cms

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. களஸ்தர தோஷம் என்பதற்க்குப்பரிகாரமாக கணவன் வேறொரு திருநங்கைக்குத் தாலி கட்டி 2 நாட்கள் (இரவுகள்) இருந்தால் தோஷம் சரி ஆகி விடும் என ஒரு வசனம் வருகிறது.. அது ரொம்ப தப்பு..

பரிகாரம் 1 

லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
இதற்க்கு அந்த கிரகத்தை பிரீத்தி செய்ய விரதங்கள்// வழிபாடுகள் செய்வது தோஷத்தை நிவர்த்திகும்.,

 பரிகாரம் 2 - வாழை மரத்துக்கு தாலி கட்டி அதை வெட்டி விட்டால் அதுவும் தோஷ நிவர்த்தியே.. இது சில செவ்வாய் தோஷத்துக்கும் செய்வார்கள் .

2. ஒரு ஆண் திரு நங்கையிடம் ஐ லவ் யூ என்று சொல்லும்போது அவள் அதை அவ்வளவு ஈஸியா நம்பி விடுவாளா?எப்படி திருமணத்துக்கு சம்மதிகிறாள்?

3. கேரளாவில் உள்ள மலையாளிகள்( பெண்கள்) பொதுவா தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து நெற்றியில் சந்தன கீற்று வைப்பார்கள். படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் அதை ஃபாலோ பண்ணவே இல்லையே?

4. திருநங்கையாக வரும் ஹீரோ தனக்கு பிடிக்காத இடத்தில் வாழும்போது ஒரு கார் வருது.. ஒரு இடத்துக்கு போலாம்னு கூப்பிடறாங்க..நைட் 10 மணீக்கு தவறான நோக்கத்துக்குத்தான் கூப்பிடறாங்க என அவருக்கு தெரியாதா?

5. ஹீரோயின் 16 வயசுப்பொண்ணு என்பதால் அந்த டூயட் சீனை இன்னும் கண்ணியமாக எடுத்திருக்கலாமே? எதற்கு கவர்ச்சி உடை? 20 வயசு பெண் என்றால் ஓக்கே.. 

6. ஹீரோவுக்கு திருநங்கை  மாற்ற பூஜை சம்பந்தப்பட்ட சீன்களில் உண்மையை பதிவு செஞ்சது ஓக்கே.. இன்னும் கண்ணியமாக காமெரா கோணங்களை வைத்திருக்கலாமே?

இந்தப்படம் ஒரு ஆர்ட் ஃபிலிம் என்ற அளவில் தான் பேசப்படும்..


எல்லா செண்ட்டர்களிலும் இது 10 நாள் தான் ஓடும்


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் எதிர்ப்பார்ப்பு ரேங்க்கிங்க் - ஓக்கே

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ஓடுது

 எச்சரிக்கை-1 -  இந்தப்படம் மனோ ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மென்மையான மனம் படைத்த பெண்கள்,(பெண்மை என்றாலே மென்மைதானே?)மாணவ மாணவிகள், தனிமையில் இருக்கும் ஆண்கள்,மேன்சனில் குடி இருக்கும் பிரம்மசாரி ஆண்கள்,மனதளவில் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது..

  எச்சரிக்கை 2 - வழக்கமாக காமெடி பதிவுகளில் கும்மும் நண்பர்கள் இந்த போஸ்ட்டில் கும்ம வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அது திருநங்கைகளை கேலி செய்வதாக நம்மையும் மீறி நடந்து விடலாம்..
 

 

பஸ்ஸாலஜி,சைட்டாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில்கள் ஒரு அலசல்

 http://yofashion.in/wp-content/uploads/2011/01/Nandita-Das-in-Saree.jpg

1.பஸ்ஸில் ஏறியதும் சீட்டில் அமர்பவன் பத்தோடு 11 ஆகிறான்.நின்று கொண்டே வருபவன் தனித்து தெரிகிறான்#பஸ்ஸாலஜி

-----------------------

2. சினி ஃபீல்டில் மேக்கப்மேனுக்கு கிடைக்கும் சான்ஸ் போல பெண்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு பஸ் கூட்ட நெரிசலில் பயணிப்பவனுக்கு மட்டும்#பஸ்ஸாலஜி

---------------------

3. ஹாஸ்பிடல் நர்ஸூகள் ,ஈரோடு திருப்பூர் கார்மெண்ட்ஸ் லேடி டெயிலர்கள் பார்க்கும்போதுதான் கேரளாவின் மகத்துவம் தெரிகிறது#சைட்டாலஜி

-----------------

4. லேடீஸ் ஸ்டாஃப்கள் எல்லோரும் காலை முதல் மாலை வரை ஃபிரெஸ்ஸாக இருப்பது போலவே தெரிவது கண் கோளாறா? வயசுக்கோளாறா?# ஆஃபீஸாலஜி

----------------

5. பிரணாப் முகர்ஜி-தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இதே கூட்டணி தொடரும் .#இவ்வளவு அடி வாங்குன பிறகுமா?ஐ லைக் யுவர் நேர்மை

----------------

http://www.thedipaar.com/pictures/resize_20110203121313.jpg

6. உங்க பிரச்சனை எதானாலும் என் கிட்டே சொல்லுங்க யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று ஆண் வஞ்சக வலை விரிக்கிறான் பெண்ணிடம்# வார்னிங்காலஜி

--------------------

7. தான் ஒரு அக்மார்க் யோக்கியன் என்றும் , தன்னைத்தவிர அனைவரும் அயோக்கியன் என்றும் காட்டிக்கொள்ள ஆண் ரொம்பவே சிரமப்படுகிறான்,# ஜெண்ட்ஸாலஜி

--------------------

8. திருமணத்துக்கு முன் பெரும்பாலான பெண்ணுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும், ஆணுக்கு 4 காதல் தோல்வி இருக்கும்#ஜெண்ட்ஸாலஜி

-------------------

9. தனது முதல் காதல் தோல்விக்குப்பிறகு செண்ட்டிமெண்ட்டல் இடியட் ஆகி விடக்கூடாது என்று பெண் பிரயத்தனப்படுகிறாள்#லேடீஸாலஜி

---------------

10. ஃபிகர்கள் 2 பேர் அமர்ந்த சீட் அருகே போய் நிற்பவனை விட அவர்கள் பார்வை படும்படி எதிரே நிற்பவன் புத்திசாலி# பஸ்ஸாலஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioS6ax_J2ghLwMdrvNDtm9KrtlBq0WTcfogPC8cx5cYFZp7Vf4Z2U_Dy6QJZSKPiKe0qPuG1OpIIXBxDmkFNQA4WgnNfqtuRGSh0H5qUBuyK4dw_9VG9hPnY3cgEvLZJVHrmVu614wUMyH/s400/actress-nayanthara-kerala-saree-stills-actress-nayanthara-kerala-saree-imagesactress-nayanthara-kerala-saree-photo-gallery-5.jpg

Monday, May 16, 2011

செம லவ் ஸ்டோரி - (காமெடி VS டிராஜடி)

http://katrinakaifv.files.wordpress.com/2009/12/katrina_kaif_a_.jpg

1. செம லவ் ஸ்டோரி - (காமெடி VS  டிராஜடி)

அவ அவனுக்கு எப்பவுமே மெசேஜ் அனுப்பிட்டே இருப்பா.. ஐ லவ் யூ .. ஐ மிஸ் யூ.. இப்படி.ஒரு நாள் அப்படித்தான் லேட் நைட்.. அவ கிட்டே இருந்து மெசேஜ் வந்தது.. இவன் தூக்கத்துல படிக்காம விட்டுட்டான்.அடுத்த நாள் காலைல அவ அம்மா கிட்டே இருந்து இவனுக்கு ஒரு கால் வந்துச்சு.. என் மக நேத்து நைட் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போய்ட்டா.. ..இவன் அப்பத்தான் அந்த மெசேஜை படிச்சான்.அதுல “டியர்... உன் வீட்டு முன்னால தானிருக்கேன். ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு.. நான் பிழைக்க மாட்டேன்.. கடைசியா  உன்னை பார்க்கனும் போல இருக்குடா.. ப்ளீஸ்.. வாயேன்..

 நீதி - பய புள்ள அப்பக்கூட கால் (CALL) பண்ணாம மெசேஜ் தான் அனுப்பி இருக்கா.. எல்லாம் பழக்க தோஷம்.../

-------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvpomAv9K5bVenN8JkhnmbtCCToHx2IizxVKpqDWPIokBbYU1jWRLidZLVMUsHHIJAO8Yb-rh6pdSU9j-V9AqqZVxE5kWHPCoHCTfz3lK_H1zkb1DRkJ8RzsBiQNrARZLL5z86gX6QsV4/s1600/Deepika_Padukone_In_Blue_Saree.jpg
2. கில்மா கேர்ள் VS  அடி முட்டாள் பாய் (BOY)

ஒரு ஃபிகரு திடீர்னு தன்னோட டி சர்ட், பேண்ட் எல்லாத்தையும் கழட்டி  தன்னோட காதலன் கிட்டே என்னை உன் மனைவி போல் நடத்து என்றாள்.. உடனே அந்த மக்கு மாப்ளை தன்னோட பேண்ட், சர்ட் எல்லாத்தையும் கழட்டி அவ கைல குடுத்து நம்ம 2 பேர் டிரஸ்ஸையும் துவை என்றான்..

( அந்த மக்கு மாப்ளை நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன் தான் - அண்ணே மன்னிச்சுக்குங்க அண்ணே)


----------------------------

3. ட்வின்ஸ் சிஸ்டர்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணீக்கிட்டியே .. எப்படி அவளை அடையாளம் கண்டு பிடிப்பே?

நாஞ்சில் மனோ - நான் ஏன் கண்டு பிடிக்கனும்..? வந்த வரைக்கும் லாபம் தான் ஹி ஹி ..

-----------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/07/Genilia-hot-.jpg
4. கடவுள் - உனக்கு என்ன வரம்  வேண்டும் கேள்


விக்கி தக்காளி - ஒரு அழகான பொண்ணு .. ( பய புள்ள கடவுளை புரோக்கர் ஆக்கிட்டானே?)

கடவுள்  - நீ முஸ்லீம்னா கேத்ரீனா கைஃப்  தர்றேன்.. நீ ஹிந்துன்னா தீபிகா படு கோன் தர்றேன்.. கிறிஸ்டியன்னா ஜெனிலியா டிசோஸா தர்றேன்.. உன் பேரை சொல்லு....

விக்கி தக்காளி - மொஹம்மத் நாராயண ஜோசஃப்... ( அடங்கொன்னியா)

( இந்த ஜோக்குல கடவுளுக்கு அவர் படைச்ச மனுஷனோட பேரே தெரியாதா? அப்படினு லாஜிக் பார்க்கறவங்களுக்கு.. ஹி ஹி ஜோக் சொன்னா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது.. )




http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/06/Uthamaputhira-_8_.jpg

5. வீட்ல எஃப் டி வி பார்த்துட்டு இருக்கறப்ப திடீர்னு பையன் வந்துடறான் ...
அரை குறை டிரஸ்ல பொண்ணுங்க வர்றதைப்பார்த்துட்டு  அவன் எதுவும் தப்பா தன்னை நினைச்சுடக்கூடாதுன்னு அப்பன்காரன் சொல்றான்.. “ பாவம் ஏழைப்பொண்ணுங்க போல..டிரஸ் வாங்கக்கூட காசில்லாம இருக்காங்க.. “ அதுக்கு பையன் சொல்றான்.. ”டாடி.. மேலும் பல ஏழைப்பொண்ணுங்கலைப்பார்க்க ஆசையா இந்த சி டி யைப்போட்டு பாருங்க அப்டிங்கறான்

 ஹூம் கலி காலம்..

-------------------------

6. ஹிட்லர் யாருடா?


தெரில மம்மி..

கொஞ்சம் படிப்பு மேலயும் கவனம் இருக்கனும்..

ஓக்கே மம்மி.. உஷா ஆண்ட்டி யாரு?

தெரிலயே?

கொஞ்சம் அப்பா மேலயும் கவனம் இருக்கனும்.. மம்மி

--------------------------------

லவ் பண்ணலாம்.. ஓக்கே.. ஆனா நோ மேரேஜ்னு சொல்றீங்களே? ஏன்?

http://www.newcineplus.com/admin/newsImage/656.jpg1. தலைவரே.. உங்க செல்ஃபோன்ல ஒரு மிஸ்டு கால் இருக்கு...

அது ஒரு மிஸ்ஸோட கால் (CALL) தான்னு எப்படி கண்டு பிடிச்சே?

-------------------------------------------

2. தலைவருக்கு டிரஸ்ஸிங்க் சென்சே இல்லை போல..?

அப்படி சொல்லிட முடியாது.. சென்சே ( SENSE)  இல்லைன்னு வேணா சொல்லலாம்..

---------------------
3. நிருபர் - சார்.. வடிவேலுவை பழி வாங்குறதை ஏன் 2 நாள் தள்ளி வெச்சிருக்கீங்க?


ஆஃப் அடிச்சாத்தான் ஆப்பு வைக்க முடியும்.. 3 நாள் டாஸ்மாக் லீவ் ஆச்சே?


----------------------------------------------
4. சினிமாவுக்கும் ,அரசியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...

எப்படி சொல்றே?

ஹீரோ என்னைக்கும் ஹீரோ தான்... காமெடியன் என்னைக்கும் காமெடியன் தான். 

------------------------
5. தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் 5 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும்னு தலைவர் சொல்றாரே?

ஆமா.. 6வது வருஷத்துல எப்படியும் அடுத்த கட்சி தான் வரப்போகுதுன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு போல..

---------------------------
http://yarlosai.com/wp-content/uploads/2011/04/03-201x300.jpg
6. என்னது? 2016 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவை இப்பவே விடப்போறீங்களா? எப்படி?

இதென்ன பிரமாதம்?5 வருஷத்துக்கு ஒரு தடவை ஆட்சி மாறும்.டி எம் கே, ஏ டி எம் கே என மாறி மாறி வரும் .. இது தெரியாதா?

-----------------------
7. சார்.. இந்த சோப்பை 10 லட்சம் பேர் யூஸ் பண்றாங்க..

அடப்பாவமே.. ஏன் ஒரே சோப்பை அத்தனை பேர் யூஸ் பண்றாங்க?ஆளுக்கு ஒரு சோப் வாங்கிக்கக்கூடாது?
-----------------------------

8. சட்டசபைக்குப்போறப்ப கேப்டன் மேக்கப் போட்டுட்டு போவாரா?

ஆமா.. ரொம்ப முக்கியம்.. விட்டா ஜோடியா ஒரு நடிகையோட போவாரா?ன்னு கூட கேட்டுடுவாங்க போல../

-----------------
9. தலைவருக்கு ஒரே சமயத்துல 2 அதிர்ச்சி....

எப்படி?

12th  ரிசல்ட்ல பையன் ஃபெயில்.. 13th ரிசல்ட்ல தலைவர் அவுட்...
-------------------------
10. டியர்.. குழந்தைத்தனமா பேசாதீங்க.. லவ் பண்ணலாம்.. ஓக்கே.. ஆனா நோ மேரேஜ்னு சொல்றீங்களே? ஏன்?

ஹி ஹி .. டியர்.. ஆம்பளைங்களுக்கு ரஸ்க் சாப்பிடப்பிடிக்கும்.. ஆனா ரிஸ்க் எடுக்க பிடிக்காது.. 


-------------------------------
http://img1.dinamalar.com/cini/ActressStill/1304326762.jpg