Saturday, January 14, 2012

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/11/nanban-audio-release.jpg

1. இது எப்படி இருக்கு?

செம..

அடப்பாவி.. இது என் ஒயிஃப், நான் கேட்டது அவளுக்குப்பின்னால இருக்கே அந்த வீடு அது எப்படின்னு ..?

நானும் அந்த வீட்டைத்தாண்டா சொன்னேன்.. ( வீட்டை பார்றான்னா வீட்டுக்காரியை பார்த்திருக்கான் அடங்கோ..)


2. வணக்கம் சார்.. என் பேரு மில்லி மீட்டர்.. இங்கே எல்லாருக்கும் நான் ஹெல்ப் பண்ணுவேன்.. உங்களுக்கு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணி தர்றது.. அயர்ன் பண்றது, போஸ்ட் பண்றது ஆல் இன் ஆல் நான் ஹெல்ப் செய்வேன், ஆனா ஒண்ணு சார்.. படிக்கறது மட்டும் நீங்க தான் படிக்கனும்.. ( விருந்தும் , திரைச்சித்ராவுமா?)

3. அவன் ஏன் எப்போ பாரு சாமி கும்பிட்டுட்டே இருக்கான்?

பஜனை பண்ணியே பாஸ் பண்ணிடலாம்னு நினைக்கறான் போல.. ( ஊமை விழிகள்ல வர்ற மாதிரி ராத்திரி நேரத்து பஜனையா?)


4. தம்பி.. உனக்குத்தான் தமிழ் தெரியுமில்ல? எதுக்கு இப்படி இங்கிலீஷ் துரை மாதிரி படம் காட்டிட்டு இருக்கே?

சத்யன் - ஹி ஹி ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி ( பேர்லயே போர்ன் இருக்கே போர்னோகிராஃபி ஸ்பெஷலிஸ்ட்டா?)


5.  லெக்சரர் - குயில் எங்கே முட்டை போடும்?

காலேஜ் வந்த முத நாளே முட்டை  பற்றி பாடம் நடத்தறாரே..இனி நாம மார்க் வாங்கி விளங்குன மாதிரி தான்.. ( அப்போ நூர்ஜஹான் பற்றி பாடம் நடத்துனா 100 மார்க் வாங்கிடுவீங்களா?)


6.  லைஃப் ஒரு ரேஸ் மாதிரி.. வேகமா ஓடிட்டே இருக்கனும், இல்லைன்னா ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்பாங்க..  ( அதனால தான் தல ரேஸ் வீரரா இருக்காரோ?)


7. டேய்.. தம்பி.. இப்படியே எடுபுடியாவே இருக்கியே..? ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டியா?

ஃபீஸ் உங்கப்பனா கட்டுவான்?

ஹூம், இதுக்கு நான் கேக்காமயே இருந்திருக்கலாம்.. வாயைக்குடுத்து வாங்கி கட்டிக்கிட்டேன்.. ( இனிமே வாயை ஜிகிடிங்க கிட்டே மட்டும் குடுங்க ஹி ஹி )


8.  பாரி இருக்கானே.. உலகத்துல இருக்கற எல்லா பிரச்சனைக்கும் வேற ஒரு வித்தியாசமான கோணத்துல தீர்வு வெச்சிருப்பான்.. ( பொறந்த ஊரு கும்ப கோணமோ?)

9.  சார்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை, அதனால ஒரு மாசமா சரியா படிப்புல கான்செண்ட்ரேஷன் பண்ண முடியல.. 

அப்போ ஒரு மாசமா சாப்பிடலை? குளிக்கலை? 


.............. ( அட! நானா இருந்தா நான் சாப்பிட்டு தெம்பா , குளிச்சுட்டு சுத்த பத்தமா இருந்தாத்தானே அப்பாவை பார்த்துக்க முடியும்னு சமாளிச்சிருப்பேன்.. )


10. என் கொள்கை என்ன தெரியுமா? ஆல் ஈஸ் வெல்  ( ALL IS WELL)  , நடப்பதெல்லாம் நன்மைக்கே.. ( அப்போ ஜாகிங்க், ரன்னிங்க் போறதெல்லாம் தீமைக்கா?)

http://www.filmics.com/gallery/d/129050-1/Nanban-Audio-launch-photos8.jpg

11.  விஜய் - எப்பவும் பாஸிட்டிவ் திங்க்கிங்க் வேணும்.. நான் லைஃப்ல எதையும் பாசிட்டிவ் தான் லைக் பண்ணுவேன் ( சரிங்க்ணா.. நமக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ்னு ரிசல்ட்  வந்தாக்கூட  அப்டியே அதை பாசிட்டிவா எடுத்துக்கனும் ஹி ஹி )


12. நம்ம மனசு இருக்கே.. அது ஒரு பயந்தாங்குள்ளி..நம்மை அது பயமுறுத்திட்டே இருக்கும். லைஃப்ல எந்த பிரச்சனை வந்தாலும்  எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கனும், மனசு நினைச்சா  போதும்ம். எல்லாம் தானா நடக்கும்..  (நம்ம லைஃப்ல சம்சாரம் பெரிய பிரச்சனைங்க்ணா, சரி ஆகிடும்னு நினைக்கறேன் , சரியே ஆக மாட்டேங்குதுங்க்ளே?)


13.  நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு ஏண்டா அலையறீங்க? யூரின் போறது கூடத்தான் நெம்பர் ஒன்..  ( இங்கே யாருங்க்ணா அலையறாங்க? நீங்க ஒருத்தர் தான் பஞ்ச் டையலாக்ல அடிக்கடி சூசகமா நெம்பர் ஒன் பற்றி சொல்றீங்க..)

14.  வாங்க வாங்க.. நாம எல்லாரும் சாப்பிட போலாம்.. 

ஸ்டாப்.. சார் அடுத்த வாட்டி வந்தா , அதாவது அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போவார்.. ( கிளம்புங்கனு அண்ணன் நாசுக்கா சொல்றார் போல )


15.  கறுப்பு கலர்ல கோரமா இருக்கே அதான் பொண்ணு, என் அக்கா தான் , அவளைத்தான் நீ கட்டிக்கப்போறே.. 

அய்யய்யோ, எனக்கு கக்கா வரும் போல  இருக்கே? ( சிவாஜி படத்துல இருந்தே ஷங்கர் சார்க்கு இது ஒரு பழக்கமா போச்சு கறுப்பு கலர்னா ஒரு எகத்தாளம், அதை வெச்சு காமெடி அங்கவை சங்கவை பொங்கவை மாதிரி,, )

16. யாருமே கூப்பிடாத கல்யாணத்துக்கு எதுக்குப்பா வந்தீங்க?


புராஜக்ட் டிசைன் பண்ண வந்தோம் சார்..


எங்கே அதை காட்டுங்க..  என்னடா டிசைன் கேட்டா ஏப்பம் விடறீங்க?

சார் சார்.. இந்த ஒரு தடவை மன்னிட்டு விட்ருங்க சார்.. இனி எந்த கல்யாணத்துக்கும் போக மாட்டோம்..  ( ஆமாமா, நாங்க எல்லாம் கல்யாண முகூர்த்தத்தை எல்லாம் கண்டுக்கவே மாட்டோம், சாந்தி முகூர்த்தம் தான் எய்ம்..)


17.  விஜய் - உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடு , கடுமையா உழை..  வெற்றி உன்னை தேடி வரும்.. ( எனக்குப்பிடிச்ச துறை மயிலாடு துறை தான்.. ஈரோட்டை காலி பண்ணிட வேண்டியதுதான்..)

18. நத்திங்க் ஈஸ் இம்ப்பாசிபிள்..

அப்படியா? இந்த டூத்பேஸ்ட் ல இருக்கற பேஸ்டை எடுத்துட்டேன், அதை மறுபடி உள்ளே வை பார்க்கலாம்.. ( அண்ணே, இது 1982 வது வருஷம் எட்டாங்கிளாஸ் பாடத்துல   துணைப்பாடத்துல வந்துடுச்சுண்ணே, புதுசா திங்க் பண்ணுங்கண்ணே.. 13 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இருந்து  என்ன பிரயோஜனம்?)

19.  நீ எதுவும் கவலைப்படாதே.. அவன் உரைல ஒரு சின்ன திருத்தம் பண்ணிட்டோம்.. அவனுக்கு சரியா அர்த்தம் புரியாது, மக்கப் பண்ணி படிக்கறவன் தான்,, கற்பிக்கும் அப்டினு வர்ற இடத்துல எல்லாம் கற்பழிக்கும் அப்டினு மாத்திட்டோம்.இனி பாரு வேடிக்கையை.. விழா மேடையே அதிரப்போகுது..

20.  கண்ணுக்கே தெரியாம குண்டு போடறதுல  எக்ஸ்பர்ட்யா நம்ம ஆளுங்க..  அப்பா, கப்  ஸ்மெல் தாங்கலை..
உன்னை மாதிரி ஆளுங்களால தான் ஓசோன்ல கூட ஓட்டை விழுந்துடுச்சு

http://g.ahan.in/tamil/Nanban%20Audio%20Launch/Nanban%20Audio%20Launch.JPG

21.  சத்யன் ( விழா உரை) மேடையில் -  இதோ இருக்காரே நம்ம பேராசிரியர்( சத்யராஜ்), அவர் பெருமைகள் பற்றி இப்போ கூறுகிறேன்..  இவரால்  பல மாணவ மாணவிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்.. ( கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என இருந்ததை மாத்திட்டாங்க )இது நாட்டுக்கே பெருமை.. ஒரு பேராசிரியரால் இவ்ளவ் பேரை   கற்பழிக்க முடியுமா? என்பதை நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது..  இனி வரும் காலங்களில் பலரை கற்பழிக்க உள்ளார்..  இவரைப்போல் யாராலும் கற்பழிக்க முடியாது  என்று நான் உறுதி அளிக்கிறேன்.

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/10/Sathyan-in-Nanban.jpg


அடுத்து நம்ம கலவி அமைச்சர் ( கல்வி அமைச்சர் என்பதன் மாற்று) கலவி தான் இவர் கொள்கை.. கலவி தான் இவர் மூச்சு.. இவர் 24 மணி நேரமும் கலவி பற்றியே சிந்தித்து வருகிறார்.. ( தியேட்டரே குலுங்கிய காமெடி சீன் )

22.  பேச்சை மாத்தாதே..
நீ வாட்சை மாத்தாதே..
உன்னை ஒரு பிராண்டா த்தான் அவன் பார்ப்பான்.. அவனுக்கு உன் மேல லவ் இல்ல.. உனக்கு அதை ப்ரூஃப் பண்ணவா?

அவன் எனக்கு கிஃப்டா தந்த வாட்ச் 4 லட்சம் ரூபா..

என் கிட்ட 400 ரூபாய்க்கு வாங்குன வாட்ச் இருக்கு.. அதுவும் இதே டைமைத்தான் காட்டுது ( அப்ளாஸ் வசனம்) மனுஷனை காதலிச்சா நீ சொல்றது ஓக்கே, நீ லவ் பண்றது ஒரு கழுதையை.. அங்கே பாரு அவன் வாய்ல பேப்பர்..

23 எப்படியும் நீ டாக்டர் ஆகி எல்லாத்தையும் கொல்லத்தான் போறே..

24.  எங்கப்பா சீரியசா இருந்திருக்கார். அவரை ஏன் ஸ்கூட்டில எடுத்துட்டு போனே?

ஃபிளைட் கிடைக்கலை. கிடைச்சிருந்தா அதுல கூட்டிட்டு போய் இருப்பேன்..
25.  சீரியஸா இருக்கற அப்பாவைக்கூட கவனிக்காம அப்படி எங்கேடா போனே?

இன்னைக்கு எக்ஸாம்..
எக்ஸாம் போனா இன்னொரு எக்ஸாம் வரும்டா.. ஆனா அப்பா ஒரே ஒருத்தர் தான்.. ( கை தட்டலை அள்ளிய கலக்கலான செண்ட்டிமெண்ட் டச் வசனம் )

26.  எல்லாரும் சீக்கிரம் எந்திரிங்க..
எதுக்குடா இவ்ளவ் அவசரப்படுத்தறே,, ஊர்ல போஸ்ட் மாஸ்டர் செத்துட்டாரா?

27. பொறுடா.. திடீர்னு நல்லவனா மாறிட்டா எல்லாருக்கும் டவுட் வந்துடும்..

28..  சாமி.. எப்படியாவது எக்சாம்ல பாஸ் பண்ண வெச்சுடு, நாங்க டிஸ்டிங்க்‌ஷனா கேட்டோம்?ஜஸ்ட் பாஸ்தானே?

29.  ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறவன் நல்ல ஸ்டூடண்ட்.. அவன் மேல் ஜாதி? செகண்ட் ரேங்க் வாங்கறவன் , ஜஸ்ட் பாஸ் வாங்கறவன் எல்லாரும் கீழ் ஜாதி? என்னய்யா கல்வி சிஸ்டம் இது? இந்த மாதிரி பிரிச்சு உக்கார வைக்கறதால மாணவர்களுக்குள்ள பிரிவினை வந்துடதா?

30 . விஜய் - சார்.. உங்களுக்கு எய்ட்ஸ் வந்துடுச்சு, சும்மா ஒரு பேச்சுக்கு.. அதை டாக்டர் ரகசியமா உங்க காதுல சொல்வாரா? இல்ல ஊரைக்கூட்டி மைக்ல இவருக்கு எய்ட்ஸ்ங்கோவ் அப்டிம்பாரா? எதுக்காக காலேஜ் நோட்டிஸ் போர்டுல இவன் ஃபர்ஸ்ட் ரேங்க், இவன் லாஸ்ட் ரேங்க்னு ஒட்டி வைக்கறீங்க? என்னை பொறுத்தவரை ரேங்க் மாணவர்களுக்குள் பிரிவினையை வளர்த்தும்.

சத்யராஜ் - அப்போ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனவனை ரகசியமா கூப்பிட்டு அவன் காதுல நீ ஃபர்ஸ்ட் வந்துட்டே அப்டினு சொல்றதா?

http://www.gulte.com/content/2011/12/photos/events/Nanban%20Audio%20Launch/normal/Nanban%20Audio%20Launch_1.jpg

31. நான் அடிச்சு சொல்றேன், இவனுங்களுக்கு எங்கேயும் வேலை கிடைக்காது..
மிஷினை மட்டும் நம்பாம  மனுஷனை நம்பற கம்பெனிங்க நிறைய இருக்கு, எனக்கு அங்கே வேலை கிடைக்கும்..

32.  ஸ்வெட்டர் விக்கற பெரியவரே, இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பார்த்து சொல்லுங்க..
படிக்க தெரிஞ்சா நான் ஏன் ஸ்வெட்டர் விக்கறேன்?

( இதே வசனம் , இதே ஹீரோ நடிச்ச மின்சாரக்கண்ணால கே எஸ் ரவிக்குமார் ஒரு சீன் வெச்சுட்டாருங்கோவ்)

33. அப்பா அஸ்தி இந்த கூஜால இருக்கு,  உன் கைல இருக்கற துப்பாக்கியை கீழே போடு, அப்புறம் காசில இல்ல, கக்கூஸ்ல கூட அஸ்தியை கரைக்க முடியாது..

34.  இந்த உலகம் ரெண்டாவதா வர்ற யாரையும் ஞாபகத்துல வெச்சுக்காது, ஃபர்ஸ்ட் வர்றது தான் பெஸ்ட்.. ( அண்ணா.. சும்மா விடாதீங்க. நயன் தாரா வாழ்க்கைல 2வதா வந்தாரே பிரபு தேவா அவரை ஞாபகம் வெச்சுக்கலையா? ஸ்ருதி கமல்  சித்தார்த்துக்குப்பிறகு 2வதா தனுஷ் கூட தூய காதல் கொண்டாரே அதை ஞாபகம் வெச்சுக்கலையா? இந்த உலகம் எல்லாரையும் ஞாபகம் வெச்சுக்கும்.. ஹி ஹி )

35.  யூஸ் பண்ணாத மூளை அவங்களுது, நல்லா சேல்ஸ் ஆகும்..

36.  இந்த நிலாவுல முதல்ல காலடி எடுத்து வெச்சது நீல் ஆம்ஸ்ட்ராங்க்.. அது எல்லாருக்கும் தெரியும்.. 2வது காலடி எடுத்து வெசது யாரு?

அதே நீல் ஆம்ஸ்ட்ராங்க்..  தான் , தன் அடுத்த காலை அதாவது முதல்ல இடது காலை, அப்புற்ம் வலது காலை எடுத்து வெச்சிருப்பாரு..

அடேய், அதில்லை , அவருக்குப்பிறகு 2 வதா நிலாவுல காலடி எடுத்து வெச்சவரை எல்லாரும் மறந்துடறோம்..

37.. புரொஃபசர் அவனை நல்லா ரேப் பண்ணிட்டார் போல.. ?

ஆமா, கதறக்கதற

38.  ஃபியூச்சரை  நினைச்சு பயந்து பயந்து இப்போ இருக்கற லைஃபை கோட்டை விட்டுடறோம்..

39.  இப்படி பயந்து பயந்து வாழறதும், செத்து செத்து வாழ்றதும் தப்பு..

40.  ஏய்.. இவ யாரு?

என் அக்கா...
இவன் யாரு?
என் அக்கா ஹி ஹி


http://cinefundas.cinefundas.netdna-cdn.com/wp-content/uploads/2011/12/Nanban.jpg?d9c344

41.  காலேஜில் லெக்சர் - HOW DOES THE INDUCTION MOTOR  STARTS?

மக்கு ஸ்டூடண்ட் - டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

( இந்த ஜோக் வெ சீதாராமனால் சாவி வார இதழில் 1989-ல் எழுதப்பட்டு பல இதழ்களில் உல்டா செய்யப்பட்ட அரதப்பழசான ஜோக்)

42.  எந்தப்பக்கம் போறதுன்னு முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை எல்லாருடைய வாழ்க்கைலயும் ஒரு தடவை வரும்..

43.. அவளை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொன்னேன், வேற எதுவும் இல்லை..

அடேய், புளுக அளவில்லையாடா? என்னமோ அவ திட்டுனா நல்லா கேட்குது..

44.  உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேளு

45.  ஜீவா- என் 2 கால்களையும் இழந்த பின் தான் என் சொந்தக்கால்ல நிக்கனும்கற எண்ணமே எனக்கு தோணுச்சு..  ( அப்ளாஸ்)

46.  சத்யராஜ் - அவனுக்கு வேலையே கிடைக்காது, அப்படி கிடைச்சா என் மீசையை எடுத்துக்கறேன்னு நீங்க தானே ஐயா  சொன்னிங்க?

ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக  நான் அசந்த நேரம் பார்த்து என் கிட்டே சொல்லாமயே மீசையை எடுத்துடறதா?

47.  ஹீரோ - குடிச்சிருக்கியா?
இலியானா- ஆமா, ஜின்னு சும்மா கிண்ணுனு ஏறுது..

48. இலியானா- தம் இருக்கா மாமூ? இன்னாடா ஆட்டறீங்க? ஓ! நான் மப்புல இருக்கேனா?
 49.  இலியானா - ஏய் லூசு.. மூக்கும், மூக்கும் முட்டாம கிஸ் அடிக்க உனக்கு தெரியாதா? ( விட்டா உதடும் உதடும் படாம லிப் டூ லிப் கிஸ் அடிக்க சொல்வாங்க போல? )

50.  விஜய் - சாரி.. நாம மேரேஜ் பண்ணிக்க முடியாது..

இலியானா - ஏன்? சினிமால வர்ற மாதிரி நீ செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கா?மேரேஜ் பண்ணி குடுக்க வேண்டிய தங்கச்சி இருக்கா? இல்ல.. அவனா நீ?


விஜய் - ஏய்..ஏய்ய்...

இலியானா- ARE YOU IMPOTENT?  ( இந்த வசனத்தை நீக்கி இருக்கலாம். ஷங்கர் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார் போல)

http://i0.peperonity.info/c/C17208/669837/ssc3/home/044/kishore.actress/albums/iliyana3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

51. என்னை கல்யாண கோலத்துல மண்டபத்துல இருந்து கடத்திட்டு வந்திருக்கீங்களே? சப்போஸ்  பாரிக்கு மேரேஜ் ஆகி இருந்தா?

Thursday, January 12, 2012

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg

ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ  அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய்  எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவாக   நடித்ததற்காக அவரையும், அப்படி நடிக்க வைத்ததற்கு ஷங்கரையும் பாராட்டலாம்.. 

கொஞ்சம் ஏமாந்தால் சச்சின், பறவைகள் பல விதம், கல்லூரி வாசல், ஏப்ரல் மாதத்தில் மாதிரி ஒரு சாயல் வந்து விடும் அபாயம் உள்ள கல்லூரி கேம்பஸ்-இல் நடக்கும் இளமையான கதைதான்.. 

எல்லாம் நன்மைக்கே ( ALL IS WELL) என்று நினச்சாலே போதும் , வாழ்க்கைல ஜெயிச்சுடலாம் என்ற நேர்மறை எண்ணம் கொண்ட இளைஞன் - நம்ம மனசுக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழனும்,மனசுக்குப்பிடிச்ச வேலையைத்தான் நாம தேர்வு செய்யனும்கற  கொள்கை கொண்ட இளைஞன் -சுத்தி இருக்கற நண்பர்களுக்கும், மனிதர்களுக்கும் தன்னாலான  ஆலோசனை, உதவி செய்யும் குணம் உள்ள நல்ல மனிதனின் கல்லூரிக்கதைதான் படம்.. 

http://datastore04.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/lt4grd3lugjc9q2t.D.0.Vijay-Nanban-Movie-Stills.jpg

எஞ்ஜினியர் காலேஜ் முதல்வர் சத்யராஜ்  ஒரு கட்டுப்பட்டியான, வறட்டுப்பிடிவாதம் உள்ள ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம், மயக்கம் என்ன பட ஹீரோ தனுஷ் மாதிரி விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள ஃபோட்டோகிராஃபரான ஸ்ரீகாந்த் அப்பாவின் ஆசைக்காக இஞ்சினியரிங்க் காலேஜில் சேர்ந்து படிக்கிறார்.. வறுமை நிலையில் குடும்பம் இருந்தாலும், வாரிசு பெருமை நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோருக்குப்பிறந்த ஜீவா  படிப்பில் சுமார் ரகம் என்றாலும் எஞ்சினியர் காலேஜில் சேர்கிறார்.. படிப்பில் நெம்பர் ஒன்னாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தின்  கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை இவற்றில் மாற்றம் வேண்டும் என நினைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட்டாக விஜய்..  இவர்கள் 4 பேரின் மோதல் , காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 

அய்யய்யோ, அப்போ இலியானாவுக்கு என்ன வேலை என யாரும் பதற வேணாம்.. அவரை சத்யராஜின் மகள் ஆக்கிட்டா மேட்டர் ஓவர் என்பது இயக்குநருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. காமெடிக்கு சத்யன்.. 

படத்தில் உள்ள முக்கியமான 6 பேரில் நடிப்பில் முதல் இடம் சத்யராஜ்க்கே.. படத்தின் முதல் பாதியில் கனம் கோர்ட்டார் அவர்களே பட கெட்டப்பை நினைவு படுத்துவது போல் ஆள் சீரியஸாக இருந்தாலும் நமக்கு சிரிப்பு வர வைக்கும் பாடி லேங்குவேஜ் .. நடிப்பு, வசன உச்சரிப்பு என மனிதர் ஜமாய்க்கிறார்.. பின் பாதியில் வில்லாதி வில்லன் பூ கேரக்டர் போல் கெட்டப்.. அந்த கெட்டப் வந்ததுமே ஆட்டோமேடிக்காக அவர் கண்களில் , முகத்தில் வில்லன் களை தாண்டவம் ஆடுகிறது.. சபாஷ் சத்யராஜ்...

அடுத்து விஜய்.. காவலன் படத்திலாவது ஃபைட் இருந்துச்சு, இதுல அதுவும் இல்லை.. இருந்தாலும் திரைக்கதை, பாத்திர வடிவமைப்பு எல்லாம் பக்க பலமாக இருப்பதால் ரசிக்க வைக்கும் அமைதியான நடிப்பை தருகிறார்.. கொஞ்சம் ஏமாந்தா புதிய கீதை ரேஞ்சுக்கு போர் அடிக்கும் உபதேசவிலாஸ் உப்பிலி கேரக்டர் ஆகி இருக்கும்.. நூல் இழையில் தப்புகிறார்.. ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது.. 

3 வது இடம் சத்யனுக்கு.. செம காமெடி ரவுசு பார்ட்டிப்பா.. இவர் வந்தாலே தியேட்டர் களை கட்டுகிறது.. க்ளைமாஸில் செம நடிப்பு.. இவர் டயலாக் டெலிவரி, கணீர்க்குரல் நல்ல பிளஸ்.. 

ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் சம அளவு வாய்பு, + நடிப்பு.. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து அழகாக செஞ்சிருக்காங்க.. 13 வருடங்கள் முந்திய கதையிலும் சரி, நிகழ்கால கதையிலும் சரி இருவரின் கெட்டப் சேஞ்ச், பாடி லேங்குவேஜ் மாறம் எல்லாம் பக்கா.. ( ஆனா ஹீரோ விஜய் அந்த அளவு மெனக்கெடலை.. நோ கெட்டப் சேஞ்ச்..)

கடைசில ஊறுகாய் இலியானா.. அழகு பொம்மை தான் நோ டவுட்.. ஆனா அவருக்கான ஆடை வடிவமைப்பு, சில கேமரா கோணங்கள் அவர் கொஞ்சம் “சின்ன” பொண்ணு என்பதை உணர்த்தி விடுவதால் எள்ளலான புன்னகையுடன் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ( தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி)

இவர் துணிச்சலான ஹீரோயின் என்பதை காட்டுவதற்காக விஜய் உடன் ஒரு லிப் டூ லிப் சீன்  வெச்சிருக்காங்க.. 

http://cybernila.files.wordpress.com/2010/02/ileana-pink-saree-small.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஒரே சமயத்தில் 2 கைகளாலும் , 2 கால்களாலும் எழுதும் திறமை படைத்த மல்டி பர்சனாலிட்டி ஆளாக சத்யராஜின் பாத்திர வடிவமைப்பு தமிழுக்கு புதுது.. 

2. ஏழையான ஜீவாவின் அம்மா நண்பர்கள் குழாமுக்கு உணவு பரிமாறும்போது விலை வாசி உயர்வை பட்டியல் இடும் கேரக்டராக காட்டி அவர்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் சீன் நச்.. 
3. ஓப்பனிங்க் ஷாட்டில் ஊட்டியை நோக்கி  பயனப்படுகையில் ஏரியல் வியூ ஷாட்டாக ஹேர்ப்பின் பெண்ட் 12 வளைவுகளை அட்டகாசமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளரை உபயோகப்படுத்திய விதம்.. 

4. அஸ்கு புஸ்கு பாடல் காட்சியில் விஜய் -இலியானாவை யாரும் கவனிக்க வைக்காமல் குரூப்டேன்சர்களை உற்றுப்பார்க்க வைக்கும் அளவு கண்களை உறுத்தாத கிளாமரில் ஃபிரெஸ் பெண்கள் அதாவது இதுவரை நாம் திரையில் பார்க்காத புது பெண்களை களம் இறக்கி இருப்பது.. இது வரை வந்த ஷங்கர் படங்களில் இந்த பாடல் காட்சி தான் உயர்ந்த பட்ச கிளாமர் காட்சி கொண்ட படம்.. 

5.  ஆல் ஈஸ் வெல்  பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் , ஒளிப்பதிவு, நடன  அமைப்பு அனைத்தும் இதம்.. 

6. ALL IS WELL பாடலில் வடையில் இருந்து வரும் நூலில் இருந்து பட்டம் விடுவது நல்ல நகைச்சுவை..

7. சத்யன் ஞான சூன்ய லேகியம் சாப்பிடுவதும்.. கற்பித்த முதல்வர் என்று பேசுவதற்குப்பதில் கற்பழிக்கும் என மாற்றிப்பேசுவதும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சர் என கலாய்க்கும் அந்த 10 நிமிஷ விழா மேடை காமெடி கலக்கல் ரகம்.. 

8.  விஜய் இலியானா காதல் காட்சியில் ஜீவா பேசக்கூடாது... நினைத்தாலே இனிக்கும் போன்ற ஹிட் சாங்க்சை எடுத்து விடுவதும் , குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சியும்... 

9. இயக்குநர் ஷங்கரே ஒரு பாடல் காட்சியில் ஆஜர் ஆகி லொக்கேஷன் சேஞ்ச், கெட்டப்சேஞ்ச் பற்றி போர்டு வைத்து சுய எள்ளல் செய்து கொள்வது.. 

10. படத்தின் பின் பாதியில் ஹீரோவை படம் பூரா காட்டியே ஆக வேண்டும் என்ற  போலியான பதட்டம் ஏதும் இல்லாமல் திரைக்கதை தேவைக்கு மட்டும் அவரை உபயோகப்படுத்திய விதம்.. 

11. ஒரு பாடல் காட்சியில் ரயில் அலங்காரம், டிசைன் கலக்கல்.

12. க்ளைமாக்ஸில் விஜய்  மருத்துவ படிப்பறிவு இல்லாமல் இலியானாவின் அக்கா அனுயாவுக்கு லேப்டாப்பில் வரும் ஆர்டர்களை கொண்டே பிரசவம் பார்க்கும் பர பரப்பான படத்துக்கு ஜீவன் அளித்த முக்கிய காட்சியை உயிரோட்டமாக படம் பிடித்த விதம்..

13. ஜஸ்ட் 5 நிமிஷமே வந்தாலும் கலகலக்கவைக்கும் எஸ் ஜே சூர்யா நடிப்பு செம 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7r3_lI02hFMCmwe43-3gMvyeyahNuwsc1dosdGWOfn7wEK1ioohmOV81b1Zr_SVScnxA-Z9kveC4W2LvDsAMHPxtKnBoLZB0aaWUZHXepoVrnJqsI0fSDrrF-evm-ytE0PrujGcx6C82l/s1600/vijay-nanban-movie-stills-09.jpg

இயக்குநர் ஷங்கர் சார்.. யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்.. ( லாஜிக் மிஸ்டேக்ஸ்)

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஜீவா பேண்ட் போட அவசரத்துல மறந்துடறார், ஓக்கே, தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி அவசரமா விஜயை பார்க்க ஸ்ரீகாந்துடன் ஸ்பாட்க்கு போறார்.. அங்கே அவர் இல்லை.. இதுவரை ஓக்கே, இனி ஊட்டி கிளம்பறாங்க.. சாவகாசமாத்தான் போறாங்க.. போற வழில ஒரு பேண்ட் க்டைல வாங்கி போட்டுக்க மாட்டாரா? 179 கி மீ அப்படியே போவாங்களா? யாராவது?

2. விஜய் ராக்கிங்க் பண்ற சீனியர் ஸ்டூடண்ட்டை கலாய்க்க கரண்ட் ஷாக் கொடுத்த பின் ஸ்கேலை இடுப்புக்கு கீழ் பிடிச்சுட்டு வர்றது ரொம்ப விரசமா இருக்கு.. சிங்கார வேலன் படத்துல இதே மாதிரி கமல் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க  பாடலில் இடுப்புக்கு கீழே வைத்து ஆபாச அசைவு செய்து கெட்ட பேர் வாங்கிக்கொண்டார்.. அதை தவிர்த்திருக்கலாம்.. 

3.  காலேஜ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸும் நீட்டா சர்ட் அல்லது காலர் வெச்ச டி சர்ட் போட்டுட்டு வர்றாங்க. ஸ்ரீகாந்த், ஜீவா உட்பட.. ஆனா அண்ணன் விஜய் மட்டும் 5 வருஷமும் எப்பவும் காலர் இல்லாத ரவுண்ட் நெக் பனியன் போட்டுட்டுதான் வர்றார்.. அது எப்படி? காலேஜ்ல சனிக்கிழமை மட்டும் தான் அப்படி பனியன் போட முடியும்.. 

4.  ரியலிஸ்டிக்கா காட்றேன்னு சில காட்சிகளில் ஹீரோக்கள் 3 பேரும் காலேஜ் ஹாஸ்டல்ல ஷேவ் பண்றப்ப பாத்ரூம் போற மாதிரி பலர் நடந்துக்கறது உவ்வே.. 

5.  பயந்தாங்கொள்ளி என வர்ணிக்கப்படும் ஜீவா அவர் கைல போட்டிருக்கற 6  வெவ்வேற கலர்ல உள்ள தாயத்து கயிறைக்காட்டி விஜய் கிண்டல் பண்றார்.. ஆனா அந்த ஒரு சீனும், 20 நிமிஷம் கழிச்சு அதை கழட்ற சீனிலும் மட்டும் தான் தாயத்து கயிறு இருக்கு.. மற்ற அனைத்துக்காட்சிகளிலும் ஜீவா வெறும் கைல தான் இருக்கார்.. நோ தாயத்து.

6. இலியானா தான் வர்ற சீனிலெல்லாம் அவர் வெச்சிருக்கறது ஸ்கூட்டினு டயலாக் பேசறார், ஆனா விஜய் அதை ஸ்கூட்டர் என்கிறார்..

http://telugu-actress.com/wp-content/uploads/2011/06/Tollywood-Actress-Ileana-Dcruz-In-Saree-Picture.jpg

. 7.  சத்யராஜ் ஒரு திண்ணை மாதிரி சோபால படுத்து அடி ஆள் மூலமா ஷேவிங்க் பண்ற மாதிரி சீன் வருது 3 இடங்கள்ல , ஆனா எப்பவும் அவர் கன்னம் மழு மழுன்னுதான் இருக்கு.. அந்த சீன் டைம்ல மட்டுமாவது தாடி லைட்டா இருக்கற மாதிரி காட்டி இருக்கலாம்.. 

8.  ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவுல சொந்தக்கதை சோகக்கதையை எல்லாம் உருக்கமா சொல்றார்..  எந்த இண்டர்வியூவுல அதை எல்லாம் பொறுமையா கேட்கறாங்க..?

9.  தண்ணி அடிச்சுட்டு இலியானா பேசறப்ப ரொம்ப லோக்கலா சேரி பாஷை பேசுது ஒரு காலேஜ் பிரின்சிபாலோட பொண்ணு அதெப்பிடி?

10. வில்லனோட மாப்பிள்ளை டிரஸ் ஸை அயர்ன் பண்ற மாதிரி ஒரு சீன்.. பொதுவா மேரேஜ் அன்னைக்கு போடற டிரஸ் புதுசாத்தான் இருக்கும்.. அதை யார் அயர்ன் பண்ணுவாங்க.. அதுவும் அவர் ஒரு மல்ட்டி மில்லியனர்.. 

11.  பக்காவான ஐ டி இளைஞர் போல் காட்சி அளிக்கும் ஸ்ரீகாந்த் இஞ்சினியர் ஸ்டூடண்ட்.. ஒரு சீனில் ஜீவாவிடம் வண்டியை நிப்பாட்றா என்கிறார்.. இது லோக்கலா இருக்கே?

12.  கதை முழுக்க பேக் டிராப்ல ஸ்ரீ காந்த் கதை சொல்ற மாதிரி வைச்சிருக்காங்க.. அது தேவையும் இல்லை.. பல பிராப்ளம் வரும்.. ஏன்னா விஜய் இலியானா சந்திப்புகள்ல அவங்க 2 பேரையும் தவிர யாரும் இல்ல.. அந்த மேட்டர் எல்லாம் எப்படி ஸ்ரீகாந்துக்கு தெரியும்?

13. படத்தில் பாடல் காட்சிகளில் சில செகண்ட்களில் வரும் கோமாளி மாதிரி கெட்டப்பை போஸ்டராக ஒட்டி இருப்பது என்னை பொறுத்தவரை  ஒரு மைனஸ் தான்.. இன்னும் நல்லா இந்தப்பட போஸ்டர் டிசைனிங்கை செஞ்சிருக்கலாம்.. ஏன்னா வ்ழக்கமான ஷங்கர் பட ஓப்பனிங்க்  மற்றும் எதிர்பார்ப்பு குறைந்ததற்கு இந்த படத்துக்கு வடிவமைக்கப்பட்ட போஸ்டர் டிசைன் முக்கிய பங்கு வகிக்கும்..

14. ரீமேக்னா ஷங்கர் நீங்க கூட அட்டக்காப்பி அடிக்கனுமா? ராகிங்க் சீன்ல பசங்க அடிக்கடி பேண்ட்டை  கழட்டி உள்ளாடையுடன் நிற்பது காமெடியா? அந்த சீனை இன்னும் கண்ணியமா காட்டி இருக்கலாமே?

15.  காமெடி என்ற பெயரில் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் ஏன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2ofyWbKLEdA7zo2EiTZQxp9yIIIupaIU6dKLYphf281QS4KbjPP90RGYj7p-q2Anc5dEGKkLyZ6YcL2ia3d5oog_6cFZEn7IyweeklKIG1sccGeOJKmeOzB6NFyPmz0CmlAgD1bnyUP8/s800/Anuya10.jpg

ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அமைதியா வந்த படம் என்பதால் போக போக படம் பிக்கப் ஆகிக்கும்னு தோணுது.. 2012 ஓப்பனிங்கில் விஜய்க்கு கிடைத்த ஆரோக்யமான வெற்றிப்படம்.. 

ஏ செண்டர்களில் 75 நாட்கள். பி செண்டர்களில் 50 நாட்கள், சி செண்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42

குமுதம் அதிர்பார்ப்பு விமர்சனம் - ஓக்கே

சி.பி கமெண்ட் - குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்..

http://s3.hubimg.com/u/3271474_f520.jpg

டிஸ்கி -1 படத்தில் ஷங்கர் எங்கே காணோம்? என யாரும் கேட்டுடக்கூடாதேன்னு ஒரு பாட்டு சீன்ல டைரக்டரா வந்து இலியானாவை டச் பண்ணி மூவ்மெண்ட் சொல்லித்தர்றாரு.. டைரக்‌ஷன் டச் ஹி ஹி

டிஸ்கி 2. - விஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி

டிஸ்கி 3 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 4 -

குறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக்கல் காமெடி டிஸ்கஷன்

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/anjali/anjali.jpg

ஒரு நாள் காலை உணவு உலகம் சாரோட போன் அடிக்குது. தூக்கக்கலக்கத்தோடவே போன் எடுத்து பேசுறார்.

உணவு உலகம்: ஹலோ! யார் பேசுறது?
சிபி: சார், நான் சிபி செந்தில்குமார் பேசுறேன்.
 உணவு உலகம்: என்னப்பா! என்ன விஷயம்?
சிபி: சார், பொங்கல் லீவுல  நான் ஒரு குறும்படம் எடுக்க போறேன் சார். அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் போன் பண்ணேன்.

உணவு உலகம்: அப்பிடியா!  ரொம்ப நல்ல விஷயம்தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பதான் கைக்கூடி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிபி: நன்றி சார்.
உணவு உலகம்: பணம்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?
சிபி: பண்ணிட்ட்டேன். சம்பளத்துல மிச்சம் பிடிச்சு சீட்டு போட்டு 1 லட்சமும். மிச்சத்துக்கு ஆபீசுல  லோன் போட்டுக்கலாம்னு இருக்கேன் சார்.  

உணவு உலகம்: பணம் ஓக்கே. கதை?
சிபி: கதைலாம் கூட ரெடி...
சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட ஆபிசர்
உணவு உலகம்: நீ எப்படி கதையை ரெடி பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியும். குறும்படம் எடுக்க சொன்னால்..., எதாவது நடிகையை வச்சு குறும்பு படம் எடுத்தாலும் எடுப்பே. நீ ஒண்ணு பண்ணு. ஈரோடுல ஒரு கல்யாண மண்டபத்தை புக பண்ணு.
சிபி: கல்யாண மண்டபமா? எதுக்கு?
உணவு உலகம்: நான் நம்ம பதிவர்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஈரோடு வந்துடுறேன். அங்க வச்சு கதை டிஸ்கஷன் வச்சுக்கலாம்.
சிபி: (இவரு நம்மளை வச்சு பதிவர் சந்திப்பு தேத்த்லாம்னு பார்க்குறாரோ) சரிங்க சார்.
உணவு உலகம்: எல்லா பதிவர்களும் வெவ்வேற இடத்துல இருந்து  வருவதால், சாப்பாடெல்லாம் சூப்பரா அரேஞ்ச் பண்ணிடு. மனோ ஆமைக்குஞ்சு வறுவல் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான். அதை ரெடி பண்ணிடு. அப்பிடியே விக்கிக்கு பிடிச்ச பிராண்ட் சரக்குலாம் வாங்கி வச்சுடு.
சிபி: சரிங்க சார்.


மண்டபத்துல கசமுசான்னு ஒரே சத்தம். என்ன இங்க சத்தம்ன்னு உணவு ஆபிசர் சார் சத்தம் போடுறார்.
மனோ: இங்க பாருங்க சார், எல்லாரும் வேலைவெட்டி, புள்ளைகுட்டிலாம் விட்டுட்டு சிபிக்கு ஹெல்ப் பண்ணாலாம்ன்னு வந்தால், அவனை ஆளை காணோம் 
விக்கி: கில்மா படம் பார்க்க போயிருப்பானோ?
ஆபீசர்:சேச்சே அப்படியிருக்காது. புதுப்படம் எதாவது ரிலீஸாகியிருக்கோ?
சௌந்தர்: இல்லை சார்.
ஆபீசர்: உனக்கெப்படி தெரியும். எல்லா பயலுகளும் இப்போ விமர்சனம் போட ஆரம்பிச்சுட்டீங்களா? என் பொண்ணு கல்யாண வேலை முடியட்டும். அப்புறம் பெல்ட்டை கழட்டிட வேண்டியதுதான்.

டொக் டொக்

சிபி வந்துட்டான் போல. கதவு திறந்துதான் இருக்கு வா. உள்ள வா சிபி.
எலேய், இங்க நாங்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ எங்கேடா போய் தொலைஞ்ச மூதேவி இது மனோ 

ஹி ஹி  பதிவு ஒண்ணு போட்டுட்டு வந்தேன்.அதான் லேட்டு.

ஆபீசர்: என்ன நடந்தாலும் காரியத்துலயே கண்ணா இருப்பியே. 
சரி சரி கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கலாம்.

மனோ: சார்,
 
ஆபீசர்: வெயிட், முதல்ல கருண், சௌந்தர், ராஜாலாம் கதையை சொல்லட்டும். என்ன இருந்தாலும் வாத்தியாருங்க. நம்மைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்

கருண்: கதை ஒரு பஸ்ஸுல ஆரம்பிக்குது. பஸ்ஸுல ஒரு காலேஜ் பையன், ஒரு பொண்ணை டாவடிக்குறான். 
சௌந்தர்: டேய் கருண்உன் சொந்த கதையை நிப்பாட்டு.
கருண்: அடப்பாவி சௌந்தர் இது ஒண்ணும் என் சொந்த கதை இல்லை. இப்படி ஏடாக்கூடமா சொல்லி பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்க விட்டுடாதே.

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/Anjali_Stills_004.jpg
சௌந்தர்: அப்பிடி வா வழிக்கு இனி பேருந்து, கடைக்கண்-ன்னு சொல்வியா?
ஆபீசர்: வாத்தியாருங்களாச்சே நம்மைவிட விஷயம் தெரியும்ன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா ஸ்கூல் பிள்ளைங்களை பார்த்து பார்த்து சின்ன பிள்ளைகளாட்டம் சண்டை போடுறீங்களா? இனி நான் சொல்றவங்க தான் வாயை திறக்கனும் மத்தவங்கள்லாம் அமைதியா இருக்கனும். சூர்யஜீவா நீ சொல்லு..,
சூர்யஜீவா:சார், கூடங்குளம் பிரச்சனை தான் இப்போ ஹாட் டாபிக் நாம அந்த சப்ஜெக்ட் எடுத்டுக்கலாம். 
சிபி கொஞ்சம் டெர்ரராகி... சார் கூடங்குளமா? அங்கெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்களே.

சூர்யஜீவா:  கதை சொல்ல போற நான் தமிழன், கதை ஓக்கே பண்ணும் நம்ம பதிவுலக சகாக்கள் தமிழர்கள், படம் எடுக்க போற நீங்க தமிழன் அப்புறம் எப்படி படம் எடுக்க விட மாட்டாங்க. ஏற்கனவே சீனாவுல இருக்குற அணு உலையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்த்திருக்காங்க. அதோட லிங்க் வேணும்ன்னா நான் தரவா? கோர்ட்ல கேஸ் போடலாமா?

சிபி: சார், அதெல்லாம் லேட்டாகும். ஆபீசுல 3 நாள்தான் லீவ் தந்திருக்காங்க அதுக்குள்ள முடிக்கனும் சார்.
சூர்ய ஜீவா: அப்பிடின்னா, செட் போட்டுக்கலாம் சிபி
சிபி: என்னது சார்ட் ஃபிலிம்க்கு அணு உலை போல செட்டா?னு பரிதாபமாக விழிக்க..,
மனோ: சார் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் சொல்லவா?
ஆபீசர்: ம்ம் சொல்லு பார்க்கலாம்.
மனோ: ஹீரோவுக்கு சொந்த ஊர் திருப்பாச்சி. அவரு அருவா செய்ற வீட்டுல பிள்ளையா பொறந்திருக்காரு. அவருக்கு ஒரு தங்கச்சி..தங்கச்சியை பஹ்ரைன்ல கட்டி குடுக்குறார். தன் தங்கச்சியை பார்க்க பஹ்ரைன் வரும் ஹீரோ எங்க ஹோட்டல்ல தங்கறார்...
சிபி: டேய் தம்பி இது ஹீரோவா விஜய்  நடிச்ச  திருப்பாச்சி படத்தோட கதை போல தெரியுது.
மனோ: முழுசா சொல்றதுக்குள்ள நீ எதுக்குடா வாயை திறக்குறே. மூதேவி அடங்குடா.
விக்கி: சார் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இனி நிறுத்த யாராலும் முடியாது.

ஆபீசர்: அடப்பாவி திருப்பாச்சியை சுட்டு கதையை சொன்னால் எங்களுக்கு தெரியாதா? நீ போய் அந்த ஆமைக்குஞ்சு கறியை சாப்பிடு. விக்கி நீ சொல்லு..,
 விக்கி: ஒரு பையனும் பொண்ணும் கலயாணம் கட்டிக்கிடாமல் ஒரே வீடுல வாழுறாங்க. ஆனால் அவங்க லவ்வர் இல்லை.
சிபி: அப்ப அண்ணன் தங்கச்சியா?
விக்கி: இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcygp7d1ZA0ehhqyk95HCAAiaYnTTrif-EFqV_12HRciLR8yc0HIQo5us-QFVMlIXP3aFn5I05Dk6GgdXlRUNiPJkFZ5nwQida9m-b0A8yvZb5EdQB3ayBYp16nWuE5rpFUwjHfMPJ35V/s1600/parvathi-melton-hot-stills+(2).jpg
சிபி: ஃப்ரெண்ட்சா
விக்கி : இல்லை
சிபி: அடங்கோ, ஏண்டா நாயே இப்படி போட்டு குழப்புறே. அண்ணன் தங்கச்சி இல்லை, லவ்வர் இல்லை, புருசன் பொண்டட்டி இல்லை, அட ஃப்ரெண்ட்சும் இல்லை அப்புறம் எப்படி ஒண்ணா இருப்பாங்க. எந்த ஊருலயும் இந்த அநியாயம் நடக்காதே.
விக்கி: சமீபத்துல நான் ஆப்பிரிக்கா போனேனே அப்போ அங்கே ஒரு பழங்குடி இனத்தவர்கள்ல ஒரு பிரிவினர் இப்படித்தான் இருக்காங்க.

சிபி: சார், விக்கி என் செலவுல ஆப்பிரிக்க சுத்தி பார்க்க முடிவு பண்ணிட்டான் போல.படம் எடுக்க  ஆப்பிரிக்கா கூட்டி போக சொன்னாலும் சொல்வான். இவனை கதை சொல்ல வேணாம்ன்னு சொல்லுங்க சார். இது மயக்கம் என்ன கதையை உல்டா செஞ்சது போலவே இருக்கு

ஆபீசர்: விக்கி சிபி, சின்ன பட்ஜெட்ல சாட் ஃபிலிம்தான் எடுக்க போறான். அது பெரிய அளவுல பேசப்பட்டால், சினிமா எடுக்க பெரிய பெரிய ப்ரொடியூசர் வருவாங்க. அப்போ உன் ஆப்பிரிக்கா கதையை எடுக்கலாம். இப்போ நீ போய் உன் ஃபேவரிட் நெப்போலியனை உள்ளே தள்ளு.

பிரகாஷ் நீ சொல்லு இப்போ..,

தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஹீரோ எஞ்சினியர் காலேஜ் ஸ்டூடண்ட், ஹீரோயினும் அதே காலேஜ்லதான் படிக்குறாங்க. ரெண்டு பேரும் பார்க்க மூலைல தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க. 
சிபி: நீங்க ஒருத்தர்தான் நல்ல கதையா சொல்றீங்க. ரெண்டு பேருக்கும் லவ்தானே.கிஸ் பண்ணிக்குறாங்களா?மேட்டர் நடக்குமா? சீன் தேறுமா?

தமிழ்வாசி பிரகாஷ்:  ஐயையோ அதெல்லாம் இல்லை சிபி சார், ரெண்டுபேரும் CN++, JAVA, PGDCA இதுல எது படிக்கலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சிபி: அடிங்கொய்யால அப்புறம் என்ன இதுக்கோசரம் பார்க் மூலையில உக்காந்துக்கிட்டு பேசனும்
தமிழ்வாசி பிரகாஷ்: இப்படிலாம் கோவப்பட்டா அப்புறம் நான் கதை சொல்ல மாட்டேன்.
சிபி: நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு ராசா.

மகேந்திரன்: சார் நான் ஒரு கதை சொல்றேன்.
ஆபீசர்: சொல்லுங்க,
மகேந்திரன்: ஒரு வயல்ல பெண்கள் எல்லாரும் நடவு நட்டுக்கிட்டு இருக்காங்க
சிபி: மொத்தம் எத்தனை பொண்ணுங்க. 
மனோ: ஆபிசர் சார், இவன் படம் எடுக்க போறானா இல்லை சைட்டடிக்க போறானா? மொத்தம் எத்தனை பொண்ணுங்கன்னு ஜொள் வடிக்க கேட்குறான்.
http://www.glamsham.com/movies/scoops/09/aug/united-six.jpg
விக்கி: மகேந்திரன் சொல்லும் கதை மட்டும் கிளிக்கானால் நட்றதுலாம் கிழவிங்கன்னு கதையை சேஞ்ச் பண்ணிக்கனும் சார்.
ஆபீசர்: ஓக்கே. எல்லாரும் அமைதியா இருங்க நீங்க சொல்லுங்க மகேந்திரன். 

 மகேந்திரன்: அப்போ ஒரு நூறு மாட்டுவண்டி வருது. கூடவே உருமி மேள சத்தமும், நூறு பெண்கள் அந்த மாட்டு வண்டியில் குலவை போட்டுக்கிட்டே வராங்க.  


ஆபீசர்: இருங்க மகேந்திரன், தம்பி ராஜா!
ராஜபாட்டை ராஜா: தீவிரமா எதையோ யோசித்துக்கிட்டு இருந்தவர், ஆபீசர் குரல் கேட்டு திடுக்கிட்டு
ராஜா: என்ன சார்?
ஆபீசர்:ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கியே தவிர, வாயை திறக்க மாட்டேங்குறியே. நாம சிபிக்காக கதை டிஸ்கசனுக்காக வந்திருக்கோம். நினைவிருக்கா உனக்கு?

ராஜா: இருக்கு சார்.
ஆபீசர்: அப்போ உன் கருத்தை சொல்லு.
ராஜா: கதை எதுவானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க ஆனால் ஹீரோவா யாரை போடப்போறீங்க ஆபீசர் சார்?

ஆபீசர்: கதை சொல்லாட்டி பரவாயில்லை. ஹீரோ யாருன்னு நீயே சொல்லேன்.
ராஜா: அஜீத் கிட்ட கேளுங்க அவர் மறுத்தா விஜய், விஜய் கால்ஷீட் கிடைக்கலைன்னா சூர்யாவை கேளுங்க. சூர்யாவும் ஒத்துக்கலைன்னா நானே ஹீரோவா நடிச்சுடுறேனே.
ஆபீசர்: டேய் சிபி நில்லு ஓடாதே. 
மனோ: டேய் அண்ணா ஓடாதே. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா நாதாரி.

விக்கி: அடிங்கொய்யால வறுத்த கறிக்கும், குடிச்ச சரக்குக்கும் யாருடா துட்டு தரது நில்லுடா ங்கொய்யால.
 
சிபி: நான் ஏதோ லைஃப்ல முன்னேறலாம்னு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்ன்னு யோசிச்சு, நல்ல ஐடியாலாம் தருவீங்கன்னு உங்களை கூப்பிட்டால் என் உயிரையாடா எடுக்குறீங்க. நான் படமே எடுக்கலை போங்கடா நீங்களும் உங்க டிஸ்கஷனும்

Wednesday, January 11, 2012

பொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்

பொங்கலுக்கு முதல்ல 2 படம்தான்னு சொன்னாங்க.. இப்போ 4 தமிழ் படங்கள், 2 ஹிந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தெலுங்கு மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இதுல சந்தேகமே இல்லாம முதல் இடத்துல இருக்கறது நண்பன்..தான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnJxVL_hyiR7bnazeC8ZdQ7pV_8ghJe4DDCGqzrPA5g2qAycTnRhRCGkO_3FLzx6OJAkAtsmWhmGEJ6tscXQ1KcrHYm0M9mrO_I-cC3Ax1_TdAxE_3uj1d3ErpNC1K8VXOo-Q5sLPVKaU/s1600/Nanban+movie+stills+nanban.jpg
1. நண்பன் - ஹிந்தில சூப்பர் ஹிட் ஆன 3 இடியட்ஸ் ரீமேக் ஆகுதுன்னு நியூஸ் வந்ததுமே பல கருத்துக்கள்..இதுவரை ஷங்கர்  சொந்தக்கதையைத்தான் எடுத்துட்டு வந்தார்.. ரீ மேக் அவருக்கு புதுசு.. விஜய்க்கு அது பழகுனது.. ஆனாலும் விஜய்க்கு ஷங்கர் டைரக்‌ஷன் புதுசு.. அவர் அப்பா எஸ் ஏ சந்திர சேகரிடம் அசிஸ்டெண்ட்டாக பணி புரிந்தவராக இருந்தாலும் ஜெண்டில்மேனுக்குப்பிறகு ஷங்கரின் ஸ்டார் வேல்யூ உயர்ந்தது.. அதன் பின் விஜய் ஷங்கர் டைரக்‌ஷனில் படம் பண்ணவே இல்லை.. 

த்ரீ இடியட்ஸ்’ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.‘நண்பன்’னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார்.

 சி.பி - ஷங்கர் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானா? சார், பிரம்மாண்டம்னா எல்லாத்துலயும் இருக்க வேணாமா?

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :( குமுதம் மற்றும் பலகனி)

* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.


சி.பி - அவங்களுக்கெல்லாம்  வாய்ல தமிழ் நல்லா வருமா?ன்னு கேட்டு பாருங்க முதல்ல..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZexZx5IRjq6fHMhQTEiivQIU92wVXkMb2dtKbW8JtfTemPQjM2Hqz_FckVfa0_BDlWqNApK5k-bdKSuvFIX1m1eC5LE4IGWRCApQr1F_ECSIRRYg2HruV3bTKj_N0YJm01miwPH0i8U/s1600/nanban-movie-stills-photos-pics-images-3.jpg


* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

சி.பி - விஜய் ரிசர்வ் டைப்பாச்சே? ஜீவா தானே ஜோக் அடிச்சு தானே சிரிச்சுக்கிட்டாத்தான் உண்டு.. ஹி ஹி 


* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.

சி.பி - ஓஹோ, அவர் படத்துல டூயட் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நெருக்கமா வர காரணம் அதானா? காதலன் படத்துல முக்காலா முக்காபலா பாட்டுக்கு ஷங்கர் எப்படி நடிச்சு காட்டி இருப்பார்னு நினைச்சா சிரிப்பா வருது.. ஹி ஹி  


* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, 

சி.பி - பஞ்ச் அவன் பாரிவேலு?? ( பாரி வேலு = போரு ஆளு?? ஹி ஹி )




ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

சி.பி - ஹி ஹி அப்போ அதுவும் சொந்த சரக்கில்லை? 

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/ileana-nanban-movie-hot-stills.jpg


* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய சுளீர் வசனங்கள் இருக்கிறது நண்பன் படத்தில்.

சி.பி - உங்க ஊர்ல இதுதான் சுளீர் வசனங்களா? அவ்வ்வ்வ்வ்வ் 

 ஃபைனல் கமெண்ட் - இந்தப்படம் ஷங்கர்-ன் வழக்கமான படமாக இல்லாமல் காமெடி படமாக இருக்கும், அதிக எதிர்பார்ப்பு , பில்டப் இல்லாமல் வருவதால் ஹிட் ஆக வாய்ப்புகள் அதிகம்.. 

ஈரோடு அன்னபூரணி, ராயல், ஸ்ரீசண்டிகாம் ஸ்ரீநிவாசா  ஆகிய 4 தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டிருக்கு, அது போக  இன்னும் 2 தியேட்டர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5n_C5YeasFywF-83kUq5Msn-klrwPf2wWWQifNNujZV1E2CBjf1Lzd8peNulWNc1CR37EhBXLikhcM6il7K62bGQnOGRkDJ7Iu1E-ibyf-MbifckEK2B_U98h1JmVv3o2GenxQNGuYjE/s1600/vettai.jpg

2. வேட்டை -பையா" படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி அடுத்து இயக்கும் படம் "வேட்டை". ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆரம்பத்தில் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. பின்னர் சிலபல பிரச்சனைகளால் அவர் விலக தயாரிப்பு பொறுப்பை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் ஏற்றது. லிங்குசாமியுடன் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அந்த கால எம் ஜி ஆர் கால கதை .. ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாக இருக்கும் ஆர்யா , மாதவன் இருவரில் ஒருவர் போலீஸ் , ஆனா எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் போல் பயந்த சுபாவம் உள்ளவர். இன்னொருவர் வேலை இல்லாத வெட்டாஃபீஸ், அவர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் இவர் செய்ய ஏற்படும் காமெடி குழப்பங்கள் படம்.. 

மேலே சொன்ன கதை ஒரு உதவி இயக்குநர் சொன்னது.. பார்ப்போம்..ஈரோடு அபிராமி, ஆனூர் ஆகிய இரு தியேட்டர்களில் ரிலீஸ்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGONZXpoA5e8UdNXzHTmuKctZ9g6JaJdWESXR7o8phUtdP1fP3jEqotbJClf1frdtO10GbQcn_VmjOb0EV34L3_n7_QZMNXlaEnlqXzW80FGdi5yqyMLWDD1VWSi6cZuZjdXyzUq95z26t/s1600/ramarajan_medhai_movie_wallpapers.jpg
3. மேதை - மக்கள் நாயகன், லிப்ஸ்டிக் நாயகன், டவுசர் நாயகன், பசு நேசன், நளினியின் முன்னாள் கணவர் திரு ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை ரிலீஸ் ஆகுது.. யூ டியூப்ல ஒரு  ஃபைட் சீன் பார்த்டேன்.. ச்சே கொன்னுட்டார்..:))ஒரே பஞ்ச். 14 பேர் தொப் தொப்னு விழறாங்க.. இந்தப்படத்தை சத்தியமா நான் பார்க்க மாட்டேன்.. பவர் ஸ்டார், ராம்ராஜன் படங்கள்னா எனக்கு அலர்ஜி ஹி ஹி , ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKismPB-uMM836gYM6Bust5Eap3Mhfa6Zb_AKwcwMqMAwDutKZT3u8HIDsVlYhnoo8RHa_me49VvfolKIdLVIMx5CXsO01yciu9OOdUsHc0qfe2u5Gt3ewuaEaWEPxuvqAVjJ08CIofkA/s320/Kollaikaran+Songs+MP3+Free+Download++Tamil+Songs+Movie+mp3+Free+In+Single+File+Mediafire+Link+FRee+Download.jpg
4. கொள்ளைக்காரன் - மைனா விதார்த் நடித்து வெளி வர உள்ள படம் கொள்ளைக்காரன், படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டை, நண்பன்  என்று இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் நிலையில் இப்போது புதிய வரவாக கொள்ளைக்காரனும் சேர்ந்துள்ளது.



பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் ‌படத்தில் தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். இவர் சீனு ராமசாமியிடம் அசோஷியேட் டைரக்டராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.எல்.ஜோகன் இசையில் உருவாக்கப்பட்டுள்ளன.ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://kollywoodz.com/wp-content/uploads/2011/12/Kollaikaran-Audio-Release-Stills02.jpg


சிறுசிறு தவறுகள் செய்து, பின்னர் திருந்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றிய கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த காதலுடன் கொள்ளைக்காரன் படம் கூறுவதாக டைரக்டர் தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4Tm9gsZAlWjuhQbqtLoJApxTeX9UUWMSC7NtzcwENPlVlVRztesKEVoOn3BWhr0Eom5Ma1Lw73vP0CxhJ4xN1MOgCMt7U17o3y7AKkMSfuqREDldbhVwNqKMf5w83asSUvnKBaeALRqU/s1600/Business_Man_new_Wallpapers+%25281%2529.jpg


5. BUSINESS MAN -போக்கிரி, தூக்குடு போன்ற மெகா ஹிட் கொடுத்த மகேஷ் நடிச்ச இந்தபபடமும் கேங்க்ஸ்டார் கதைதானாம்.. ஆனாலும் திரைக்கதை செம ஸ்பீடுன்னு சொல்றாங்க.. ஜோடி காஜல் அகர்வால்.. ஆல்ரெடி அவங்க நடிச்ச மாவீரன்ல காட்டு காட்டுனு காட்டி இருந்தாங்க , நடிப்பைத்தான்.. அதே போல் இந்தப்படமும் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்..ஈரோட்டில் இன்னும் தியேட்டர்ஸ் புக் ஆகலை

http://www.filmics.com/telugu/images/stories/news/December/17-12-11/The_Business-Man_Movie_Preview.jpga

டிஸ்கி -1  மீதி 3 படங்கள் விபரம் 14ந்தேதிதான் தெரியும்.. 

டிஸ்கி 2 - நமீதா போட்டிருக்கற டிரஸ் டிசைன்ல கொங்கு மாவட்டகிராமத்துபெண்கள் 1985களில் பாவாடை போடுவாங்க.. அந்த டிசைனை எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க.. சரியான பட்டறைன்னு அந்த டிசைனுக்கு இளைஞர்கள் வட்டாரத்துல பேரு.. இப்போ இவங்க உடுத்துனாங்காட்டி ஃபேஷன் ஆகிடுச்சு போல அவ்வ்வ்

டிஸ்கி 3.

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை