Monday, July 07, 2025

AABHYANTHARA KUTTAVAALI (2025) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( பேமிலி கோர்ட ரூம் டிராமா )

                   

       அபயந்தரக்குட் டவாளி  = உள்  (நாட்டு)குற்றவாளி 


ஒரு காலக்கட்டத்தில்  ஆண்கள்  பெண்களைக்கொடுமைப்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும்  சங்க இலக்கியங்களில் , தஞ்சாவூர்  கல்வெட்டுக்களில்  படித்திருக்கிறேன் .ஆனால்  இப்போது நிலைமை தலைகீழ் . ஆண்கள்  இளிச்சவாயர்களாகவும் , மாங்கா மடையர்களாகவும் , பெண்களுக்கு  எடுபுடி  வேலை செய்யும் வேலைக்காரர்களாகவும்  இருக்கின்ற்னர் .  பெண்கள்  ஆண்களின்  தலையில்  மிளகாய்  அரைக்கிறார்கள் .அப்படி   ஏமாற்றப்பட்ட   ஒரு அப்பாவி  ஆணின் கதைதான்  இது . ஆண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவு இது 



6/6/2025 அன்று திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  இதுவரை  ஓ டி டி யில்  வெளியாகவில்லை . விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப்பெற்ற  இந்தப்படம்  காமர்ஷியலாகவும் ஹிட் ஆனது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  நாயகியுடன்  பெற்றோரால்  நிச்சயிக்கப்பட் ட  திருமணம்  நடக்கிறது .திருமணம்  மட்டும்  தான் முடிந்தது . சாந்தி  முகூர்த்தம்  10 நாட்கள்  ஆகியும்  நடக்கவில்லை .நண்பர்கள்  வேற  நாயகனை கிண்டல் பண்ணிட் டே  இருக்காங்க . நாயகன் - நாயகி , நண்பர்கள்  கேலி கிண்டல்  என முதல்  அரை மணி நேரம்  படம் ஜாலியாகப்போகிறது 



நாயகி  நாயகனிடம்  வெளிநாடு  போய் தான் படிக்க இருப்பதாகக் கூறு கிறாள் . ஐயோ  , அதுக்கு  15 லட்ச ம்  செலவு ஆகுமே?  என நாயகன்  மறுக்கிறான் . அப்போ    எங்க அம்மா, அப்பா   எனக்குப்போட் ட  நகைகளைக்கொடுங்க , அதை வித்து வெளிநாடு போய்க்கறேன்  என்கிறாள் நாயகி .பிரச்சனை வெடிக்கிறது 


 நாயகி  நாயகன் மீது  டொமஸ்டிக்  வயலன்ஸ்  கேஸ் ,டைவர்ஸ்  கேஸ்  என்   மானாவாரியாகப்போடுகிறாள் .நாயகி  வில்லி  ஆனதும்   நாயகன்  எப்படி  பேமிலி  கோர்ட்  ரூமில்    வாதாடி  தப்பிக்கிறான் என்பது மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆசீப் அலி  பிரமாதமாக நடித்திருக்கிறார் . கோர்ட்  ரூமில்  அவரது  வாதத்தைக்கேட்டு   ஐட்ஜே  பாராட்டுகிறார் . நாயகி ஆக   புது முகம்   துளசி  கச்சிதமாக நடித்திருக்கிறார் . நடிகை  ராதாவின்  2வது  மகளும் கடல்  படத்தின் நாயகியும்  ஆன  அந்தத்துளசி   இல்லை . இது வேற   துளசி . குடும்பப்பாங்கான தோற்றம் . கண்ணிய உடை 


நாயகன் க்கு ஆதரவாக  கோர்ட்டில்  வாதாடும்  பெண்  வக்கீல் ஆக ஸ்ரேயா   ருக்குமணி  அருமையான  பங்களிப்பு இவர்கள்  இருவரும்  இணைய மாட் டார்களா ? என  ஏங்க  வைக்கும்  கெமிஸ்ட்ரி 

.பாடல்களுக்கான இசையை  மூவரும் , பின்னணி இசையை ராகுல்   ராஜுவும்   செய்திருக்கிறார்கள் .. சாபின்  கே சோமன் தான் எடிட்டிங்க் .2 மணி நேரம்   படம் ஓடுகிறது . பின் பாதி ரொம்ப ஸ்லோ 


அஜய்  டேவிட்   தான்  ஒளிப்பதிவு . கண்ணுக்குக்குளுமை 


திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  சேது நாத்  பத்மகுமார் 




சபாஷ்  டைரக்டர்

 1  சீரியஸ் ஆன இந்தக்கதையை  முதல் பாதி காமெடி டிராமாவாக கொண்டு  போன  சாமார்த்தியம் 



2   கிரேசி மோகன் டைப்  வார்த்தை ஜால வசனங்கள் 


3 கோர்ட்டில்  வேறு ஒரு கேசில்  அப்பாவைப்பார்க்க விடாமல் குழந்தையை  மிரட்டும் பெண்ணின்  பச்சோந்தித்தனத்தைப்படமாக்கிய விதம் 


4  ஜீவனாம்சக்கேஸ்கள்  பெரும்பாலும்  பெண்களின்  பணம் பறிக்கும் ஆசை, வெறி தான் காரணம்   என்பதைத்துணிச்சலாகச்சொன்னது 


5 டொமஸ்ட்டிக்  வயலன்ஸ்   கேஸ்களில்  25% போய்க்கேஸ்   தான் பெண்களால்  ஜோடிக்கபப்டுகிறது என்பதை புள்ளி விபரங்களுடன் சொன்ன விதம் 


6 நாயகன் , நாயகி , பெண் வக்கீல்   மூவரின்  யதார்த்தமான நடிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


 1  எல்லாப்பெண்களும்  சீதை மாதிரி  நல்லவங்கன்னு சொல்லிட முடியாது . சூர்ப்பனகைகளும் இருக்காங்க 


2   எல்லாருக்கும் கனவுகள் உண்டு . ஆனா நம்ம கனவு இன்னொருவர் கனவை பாதிக்கக்கூடாது 


3 ஒரு பெண்ணை   வார்த்தையால் காயப்படுத்தினாலே 3 வருஷம் ஜெயில் தண்டனை உண்டு 


4  டைவர்ஸ்  பண்ணனும்னா  முதல்லியே  பண்ணிடுங்க . குழந்தை  பிறந்த பின் பண்ணினா  பல சிக்கல்கள் இருக்கும் , குழந்தையை   யார் வளர்ப்பது ? 


5  என்னது ? இவளுக்கு ஜீவனாம்சம்   தர்லைன்னா கோர்ட் என் வீட் டை ஜப்தி பண்ணுமா?  5 ஜட்டி தான் வீட்டில் இருக்கு 


6  பத்து நாட்கள்  என் வீட்டில்  இவ வந்து தங்கி இருந்தா அவ்ளோ தான் .  இதுக்காக  வாழ்நாள் முழுக்க  நான் மாதா மாதம் இவளுக்கு தண்டமாக  ரூ  6000 ஜீவனாம்சம்  தரணுமா?  


7  மீனுக்கே   நீந்தக்கற்றுத்தருகிறாயா?


8   அந்தப்பாத்திரத்தை த்திருப்பிக்கொடுத்திடுங்க 


அது ஐஸ்க்ரீம் டப்பா 


9   தயிர்   பாக்கெட்   உறை  வாங்கிட்டு   வர  சொன்னா   உன் பிரண்ட் காண்டம்   உறை   5 பாக்கெட்   வாங்கிட்டு  வந்திருக்கான் 


10  சொந்தக்காரங்க   வந்திருக்காங்க 


 அவ குளிச்சுட்டு இருக்கா 


 சரி உன் டிரஸ் எதனால  நனைந்திருக்கு ? 



11   இந்த   இடத்தை வாங்கி நான் என்ன செய்யப்போகிறேன் ?சூசையிட் பாயிண்ட் மாதிரி இருக்கு 


12 எதுக்காக  முடியை இப்படி  ஆம்பிளை   மாதிரி  கட்   பண்ணிக்கிட் டே 


 அம்மாவைக்கேட்டு தான் 


 எங்க அம்மாவையா?


 இல்லை  எங்க அம்மாவை


13  என்னது ?முதல்   இரவில் எதுவுமே நடக்கலையா? 


 அதுக்குப்பின் வந்த 10 இரவுகளும் எதுவும் நடக்கலை 


14   என்ன ;பிரச்சனை ?என என் கிட்டே   சொன்னா   நான் பேசிப்பார்ப்பேன் 


உனக்கு இன்ஸ் பெக் டரைத்தெரியுமா? 


ம்ஹும் , கர்த்தரிடம்  பேசுவேன் 












 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நிரந்தர  வேலை  இல்லாத  ஒரு மிடில்  கிளாஸ்  மாப்பிள்ளைக்கு  100 பவுன்  நகை போட்டுப்  பெண் கொடுப்பார்களா? . 2  பவுன்  கூட போட வக்கில்லாதவங்க எல்லாம் கவர்மெண்ட் மாப்பிள்ளை தான் வேணும்கறாங்க 


2   இந்தியா  முழுவதும் , அனைத்து  மாநில ங்களிலும்  இலவச  சட் ட  உதவி  மையம்  இருக்கிறது . வருமானம்  இல்லாதவர்க ளுக்கு  அரசாங்கமே  வக்கீல்  வைத்து  வாதாட  உதவுகிறது . நாயகன்  எதனால்  அதை அணுகவில்லை? 


3  குடும்ப நல  கோர்ட்களில்  தம்பதி  பெயர் சொல்லியே  அழைப்பார்கள் . கேஸ்   நெம்பர்  நினைவு வைத்திருக்கத்தேவை இல்லை 


4   நாயகன்  சார்பாக  வாதிட   வக்கீல்  இருக்கும்போது   நாயகன்  எதற் காகக்கிளைமேக்சில்  வாதாடுகிறான் ? 


5 நாயகி  செய்வது   வில்லித்தனம் .ஆனால்  பெண் ஆடியன்ஸின்  வரவேற்புத்தேவை   என்பதால்   பின் பாதியில்  மென்று முழுங்குகிறார்கள் 


6  டைவர்ஸ்  கேஸ் குடும்ப நல  கோர்ட்களில் விசாரணைக்கு  வர  மினிமம்  ஒரு வருடம் ஆகும் , அதுவரை வாய்தா வாய்தா   என இழுப்பார்கள் . ஆனால்  முதல்   வாய்தாவிலேயே  கவுன்சிலிங்க் , அ டுத்த வாய்தாவில் கேஸ்   என காட்டுகிறார்கள் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது   அபலை ஆண்களுக்கான படம் .பெண்களுக்கும் பிடிக்கலாம் .ரேட்டிங்  2.75 / 5 


Aabhyanthara Kuttavali
U.S theatrical release poster
Directed bySethunath Padmakumar
Written bySethunath Padmakumar
Produced byNaisam Salam
StarringAsif Ali
Thulasi
Jagadish
Harisree Ashokan
CinematographyAjay David Kachappilly
Edited bySobin K Soman
Music bySongs:
Bijibal
Muthu
Christy Joby
Score:
Rahul Raj
Production
company
Naisam Salam Productions
Distributed byDream Big Films (India)
Fars Films (Overseas)
Release date
  • 6 June 2025
Running time
121 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

Sunday, July 06, 2025

KERALA CRIME FILES SESSION 2 - கேரளா க்ரைம் பைல்ஸ் 2 (2025) - மலையாளம் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்

         

      கேரளா க்ரைம் பைல்ஸ் பாகம் 1  பாகம் 2  இரண்டுக்கும்   எந்த  சம்பந்தமும்  இல்லை . இரண்டும்  தனித்தனிக் கதைகள் . முதல் பாகத்தில்  வேற  ஒரு கேஸ் . இந்த பாகத்தில்  புதுக்கேஸ்  . மொத்தம் ஆறு எபிசோடுகள் .ஒவ்வொன்றும் சராசரியாக 30 நிமிடங்கள் . மொத்தம் 3 மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம் டிஸ்னி ஹாட்  ஸ்டார் ப்ளஸ்  ஓடிடி  யில் காணக்கிடைக்கிறது           


ஸ்பாய்லர்  அலெர்ட்



 கேரளாவின்  தலைநகர் ஆன திருவனந்தபுரத்தில்  ஒரு  சின்ன  ஊரில்  உள்ள  போலீஸ் ஸ்டேஷனில்  அனைத்து  போலீசும்  ஒரே நேரத்தில்  இட  மாற்றம்  செய்யப்படுகிறார்கள் . பொதுவாக  இந்த மாதிரி  டிரான்ஸ்பர் ஆகும்  ஆபீசர்கள்  ஒர்க் பிரஷர்  காரணமாக  தற்கொலை செய்து கொள்வது உண்டு . ட்யுயூட்டியில் ஜாயின் பண்ணாமல் எஸ்கேப் ஆவதும் உண்டு . அந்த  போலீஸ்  ஸ் டேசனில்  பணியாற்றிய  ஒரு போலீஸ்    இட  மாற்றம்  செய்யப்பட் ட   பின்  ஆள்   காணாமல்  போகிறார் . அவர் நேர் மை யான  ஆள் . அவரைக்கண்டு பிடிக்க ஒரு டீம் கள த்தில் இறங்குகிறது . இந்தக்கேஸ்  தான் மொத்தக்கதையும் 



சபாஷ்  டைரக்டர்



1  துப்பறியும்  நாய்கள்   பற்றிய  டீட் டெய்லிங்க்  அருமை . அவைகளை  பராமரிப்பவர்கள் , அதற்கான டாக் டர்கள் போன்ற  விவரங்கள்  பக்கா 


2  சி சி டி வி  புட் டேஜ் ல நாய்  போன பாதையை ரிவர்ஸில்  பாலோ செய்து  போகும்  சீன்கள் பரபரப்பு , அந்த ஐடியா  செம 


3  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும்  போலீஸ் ஆபீசர்கள்  அவரவர்  மனைவியை  சமாதானப்படுத்தும் சீன்கள் கச்சிதம் 


4  நேர்மையான  போலிஸாக  வரும் இந்திரன்ஸ் ,நாயகன் ஆக   வரும்  அஜு வர்கீசின்  கம்பீரமான நடிப்பு   கன கச்சிதம் 


5 ஒவ்வொரு  எபிசோடின்  முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ்  முடிச்சை வைப்பது  அசத்தல் 


6  பின்னணி  அருமை   , பல சீன்களில்  எடிட்டிங்க்  , பி ஜி எம்  கலக்கல் ரகம் 


  ரசித்த  வசனங்கள் 


1  லாட்டரில  500 ரூபா  பரிசு  அடித்தால்  அந்த 500 க்கும் லாட்டரியே  வாங்கறவங்க தான் அதிகம் 


2  செய்யற  வேலைக்கு மெடல் எதுவும்  வேணாம் .புகார் எதுவும்  வராம இருந்தாப்  போதும் 


3 ஒரே  நேரத்தில்  2 படகுகளில் பயணம் செய்ய முடியாது 


4  சாரி   சார் ,அவன்  கூட  இப்போ   அதிக  பழக்கம்  இல்லை 


 ஓஹோ , அப்போ  கொஞ்சம்  பழக்கம்   உண்டு  ?


5   பொதுவா குற்றவாளிகள் 5 வருடங்கள்  ஒரே இடத்தில்  குற்றம் செய்து கொண்டு இருக்க மாட்டாங்க , ப்ரோமோஷன் ஆகி வேற ஏரியாப்போகத்தான் விரும்புவாங்க 


6  ஒரு கேஸை  டீல் செய்ய அசம்ப்சன் ( யூகங்கள் ), தியரி  இவை மட்டும்  போதாது 


7  பவர்  இருக்கும் வரை தான் மரியாதை .என் தொடர்புகள்  தான் என்னோட பவர் 


8  என்னோட  பவரை ( தொடர்புகளை)  வேற  ஒருவருக்கு  ஹேண்ட் ஓவர்  பண்ணிட் டா  எனக்கு என்ன வேலை ?


9  எல்லா  உயிரினங்களுக்கும் இந்த உலகில் வாழ ரைட்ஸ் உண்டு 


10   என்  வேலைல  நான்  பெஸ்ட்  ஆக  இருக்கணும்னு  நினைக்கறவன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஏ சென்ட்டர்  ஆடியன்ஸுக்கு  மட்டும் தான் படம் புரியும் . அதே  போல க்ளைமாக்சில்  என்னதான் நடந்தது  என ஒரு முறை  விபரமாக கேஸை  விளக்கி இருக்க வேண்டும் 


2  முதல் ஒரு மணி  நேரம் மிகவும் மெதுவாகத்தான் திரைக்கதை நகர்கிறது .பொறுமை அவசியம் 


3  நாய் ,பூனை  போன்ற   வளர்ப்புப்பிராணிகளை வீட்டில் வைத்திருப்பவர்களுக்குத்தான் கதை கனெக்ட் ஆகும் . மற்றவர்ளுக்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்காது 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  ரசிகர்களுக்குப்படம் பிடிக்கும் ,ஆனால் பொறுமை தேவை . ரேட்டிங்க்  3 / 5 


Kerala Crime Files
GenreCrime drama
Police procedural
Created byAhammed Khabeer
Written byAshiq Aimar (Season 1)
Bahul Ramesh (Season 2)
Directed byAhammed Khabeer
StarringAju Varghese
Lal
Music byHesham Abdul Wahab
Country of originIndia
Original languageMalayalam
No. of seasons2
No. of episodes12
Production
ProducersRahul Riji Nair (Season 1)
Ahammed Khabeer
Jithin Stanislaus
Hassan Rasheed (Season 2)
CinematographyJithin Stanislaus
EditorMahesh Bhuvanend
Camera setupSingle-camera
Running time30 minutes
Production companiesFirst Print Studios (Season 1)
Monkey Business (Season 2)[1]
Original release
NetworkJioHotstar
Release23 June 2023 –
present

Saturday, July 05, 2025

LOVE MARRIAGE (2025)-லவ் மேரேஜ் -தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

       







 


      ஆண்களின்  வாழ்க்கையில்  பெண்பார்க்கும் படலத்தினை  மட்டும் மறக்கவே முடியாது .தமிழ்  சினிமாவின் முதல் பெண்பார்க்கும் படலம்  பேஸ்   கொண்ட  திரைக்கதை  படித்தால் மட்டும் போதுமா? (1962) . பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாட்டு   செம ஹிட்டு . இந்தப்படம்  நா  என்ற  வங்காள  மொழித்திரைப்படத்தின்  தழுவல் . இதற்குப்பின் பெண்பார்க்கும் படலத்தை   வைத்து  திரைக்கதை  எழுதப்பட்டு    மெகா  ஹிட் ஆன  படம்  தூறல் நின்னுபோச்சு (1982).ஆர்   பாண்டிய ராஜனின்  ஆண்  பாவம் (1985)   அதிரி  புதிரி ஹிட் . இது படித்தால் மட்டும் போதுமா? வின்   பட்டி  டிங்கரிங்க்  அட்லி  வெர்சன் தான் 


 ஆஹா  (1997) பூ  மகள் ஊர்வலம்  (1999) , கண்டு  கொண்டேன் கண்டு  கொண்டேன் (2000) ,கல்யாண  சமையல்  சாதம் (2013) ஆகிய  படங்களில்  கதை  வேறாக இருந்தாலும் பெண்பார்க்கும் படலம்  இருக்கும்             


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு முதிர் கண்ணன் .33 வயசு ஆகியும் இன்னமும் மேரேஜ் ஆகவில்லை . யாரும்  பெண் தர முன் வரவில்லை .ஜவுளிக்கடை  வைத்திருக்கிறார் . எப்படியோ  ஒரு வழியாக தேனியில்  இருக்கும் நாயகனுக்கு  கோவையில் ஒரு பெண்  கிடைக்கிறது . பெண்பார்க்க  சொந்தக்காரர் களுடன் கோவை போகிறார் . பெண்ணைப்பார்த்ததும்  அவருக்குப்பிடித்து விடுகிறது . மணப்பெண்ணுக்கு  ஒரு தங்கை உண்டு . அவர்  விளையாட்டாக  நாயகனின் செல் போனுக்கு  மணப்பெண்  போல  அதாவது  தன அக்கா அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புகிறார் 



 செல் போனில்  நன்றாக   ரொமாண்டிக்காக மெசேஜ் அனுப்பும் மணப்பெண்  நேரில் சரியாகப்பேசுவது இல்லையே அது ஏன் ? என நாயகன் குழம்புகிறான் .மணப்பெண்ணுக்கு  ஒரு காதலன் உண்டு . அவனுடன் ஓடிப்போய் விடுகிறாள் மணப்பெண் . இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீ தி திரைக்கதை 


நாயகன் ஆக  விக்ரம் பிரபு  , கனகச்சிதமான  நடிப்பு .பல இடங்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் .ஹேர் ஸ்டைல் , உடை  அருமை .மணப்பெண் ஆக சுஷ்மிதா  பட்  அழகு பொம்மை மாதிரி  வந்து போகிறார் . நடிக்க அதிக வாய்ப்பு இல்லை , டயலாக்ஸும் அதிகம் இல்லை ..மணப்பெண்ணின்  தங்கை  ஆக வரும் மீனாடசி  தினேஷ்   தொண  தொண    எனும் பேசும் கேரக்ட்டர் . நடிக்க நல்ல வாய்ப்பு .கெஸ்ட்  ரோலில்  சத்யராஜ் , ரியோ    ராஜ்   வந்து போகின்றனர் 


 தாய் மாமனாக வந்து அலப்பறை பண்ணும்    அருள்  தாஸ் நடிப்பு     கலக்கல் ரகம் .ரமேஷ்   தி லக்கின்  காமெடி சுமார் ரகம் . மற்ற   அனைவருமே  நடிப்பில் குறை வைக்கவில்லை 


ஷான் ரோல்டன்  இசையில்  2 பாடல்கள்   அருமை . பின்னணி இசையும்   செம .மதன்  கிறிஸ்டோபரின்  ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . 2 நாயகிகளையம்  கண்ணியமாக அழகாக காட்டி இருக்கிறது கேமரா .எடிட்டிங்க்  கச்சிதம் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது . திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர் சண்முகப்பிரியன் 

சபாஷ்  டைரக்டர்


1   அனைவருக்கும்   எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய கதைக்கரு , கதைக்களம் . காமெடி  க்ளாட்டாக்களுக்கு பஞ்சம்   இல்லாத பெண்பார்க்கும் படலம்  ரசனை 


2   நாயகிகள்  இருவரின் அழகு முகங்கள் ,    கண்ணிய  உடை 


3  மணப்பெண்ணின் தங்கைக்கும் , நாயகனுக்கும்  இடையே  உருவாகும்   புரிதல் , காதல்  அருமை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மணப்பெண்ணைக்காட்டும் முதல் சீனிலேயே  அவருக்குத்திருமணத்தில் இஷ்டம் இல்லை என்பது  ஆடியன்சுக்குத்தெரிந்து விடுகிறது . ஆனால்   நாயகனுக்கோ , வேறு யாருக்குமோ அது தெரியவில்லை என்பது மைனஸ் 


2 மணப்பெண்ணை  மிகவும் விரும்பும் நாயகன்  அவர் இல்லை என்றானதும்  இனி இவருக்குப்பதில் இவர் என ஈசியாக மச்சினியை கரெக் ட் செய்ய முயல்வது   ஓவர் . கொஞ்ச்ம   டைம்   எடுத்திருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- கிளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் லவ் மேரேஜ் (2025) -LOVE MARRIAGE - தமிழ் - அசோக வனம் லோ அர்ஜுன கல்யாணம் (2022 ) தெலுங்குப்படத்தின் அபிஷியல் ரீமேக் இது . தூறல் நின்னு போச்சு (1982) , ஆண் பாவம் (1985) ஆகிய படங்கள் போல பெண்பார்க்கும் வைபவத்தை வைத்து எழுதப்பட் ட திரைக்கதை . முதல் பாதி சராசரி , பின் பாதி தரம் . விகடன் மார்க் யூகம் - 41 . ரேட்டிங்க் 2.5 / 5


Friday, July 04, 2025

மார்கன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

                 


        அறிமுக இயக்குனர் லியோ  ஜான் பால்  2004ம் ஆண்டு  சினிபீல்டு க்கு வந்து  2007ம் ஆண்டு    வாரணம்  ஆயிரம்  படத்தின் ஸ்பாட்   எடிட்டர்  ஆகப்பணி புரிந்தார் .  தனுஷ்  நடித்த  3 படத்தின் புகழ்  பெற்ற பாடல் ஆன ஒய் திஸ்   கொலை  வெறி  பாட்டின் வீடியோ மேக்கர் ஆக பணி  புரிந்தார் . ஆசியாவிலேயே  அதிகம்  தேடப்பட்ட  பாடல் ஆக அது அமைந்தது .2012ம் ஆண்டில்  அடடக்கத்தி   படத்தில்  எடிட்டர்  ஆகப்பணி புரிந்தார் .13  வருடங்கள் போராடி  தன முதல் படத்தை இயக்கி விட் டார் 



விஜய் ஆண்ட்டனி  தனது  தங்கை மகனை  நாயகன் ஆக வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தார் ஆனால்  ப்ரமோஷனில்  அவர் தான் நாயகன் என்பது போல காட்டிக்கொண்டார் .க்ரைம்  த்ரில்லர்  ஆக ஆரம்பிக்கும் கதை  பின் க்ரைம்  இன்வெஸ்ட்டிகேஷன்  த்ரில்லர்  ஆக   மாறி  இறுதியில்  சூப்பர் நேச்சர் த்ரில்லர்  ஆக    முடிகிறது . எப்படிப்பார்த்தாலும்  இது ஒரு மாறுபட் ட   படைப்பே 


 12  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இந்தப் படம்  ரிலீஸ்   ஆன முதல்  ஒரு வாரத்திலேயே  7 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

சீரியல்  கில்லர்  ஒருவன் சென்னையில் ஒரு பெண்ணை  விஷ ஊசி  போட்டு  கொலை செய்கிறான் . பிணம்  உடல் முழுக்கக்கருகி விடுகிறது . இந்த செய்தி  வெளி வந்ததும்  அதை மும்பையில் இருந்து  பார்க்கும் போலீஸ் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார் . அவரது போலீஸ்  வாழ்க்கையில்  இதே  போல் ஒரு கேஸ்  இருந்தது . இன்னமும் அது தீர்க்கப் படவில்லை , எனவே  அந்தக்  கேசை  விசாரிக்க    அவர் சென்னை  வருகிறார் 



நாயகன்  ஒரு ஸ்விம்மிங்க் ஸ்பெஷலிஸ்ட் . தண்ணீருக்குள்  மூச்ச விடாமல் 6  நிமிடங்கள்   வரை இருக்கும் ஆற்றல் பெற்றவன் . அவனை வலியனா  ஒரு பெண் காதலிக்கிறாள் . நாயகனின்  தங்கை  வாழ்க்கை செட்டில் ஆகாமல்  வெளி நாடு  வர மாட்டே ன்   என  தனது  காதலி இடம் சொல்லி விடுவதால் லவ் பிரேக்கப் ஆகிறது .காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள் 


  நாயகி க்கு பிரமாதமான  கண்கள் .அவளது அழகை அடையாளம் கண்டு  போட்டோ  எடுக்கும்  நபரை  நாயகி காதலிக்கிறாள் ., ஆனால் ஆல்ரெடி  தனக்கு ஒரு  காதலி உண்டு என அவன் மறுத்து விடுகிறான் . மாடலிங்கில்  பெரிய ஆள் ஆ க வேண்டும் என்ற  லடசியம் கொண்ட நாயகி  தன  கனவு நிறைவேறப்போராடுகிறாள் 



போலீஸ்  ஆபீசர் , நாயகன் , நாயகி   இந்த  மூவரும் எந்தப்புள்ளியில்  இணைகிறார்கள் என்பது மீதி திரைக்கதை  


போலீஸ்  ஆபீசர்   ஆக  விஜய் ஆண்ட்டனி  கச்சிதம் . எந்த  முக பாவனையும் காட் டாமல் இருப்பதே  அவரது தனித்தன்மை . போலீஸ்  கெட்டப் க்கு அதுவே போதும்  என்பதால்  தப்பி விடுகிறார் 


நாயகன் ஆக அஜய் திஷன் ஆரம்பத்தில்   தடுமாறினாலும்  போகப்போக  மனம் கவர்கிறார் 


  நாயகி   ஆக   கனிமொழி கண்களால்  கவர்கிறார் . நடிப்பும் அருமை 


போலீஸ்  ஆபீசர்     விஜய் ஆண்ட்டனிக்கு  உதவி ஆக வரும் இன்ஸ்பெக்ட்டர் பிரிஜிதா சகா  கம்பீரமான நடிப்பு , கான்ஸடபிள் ஆக வரும்   மகாநதி சங்கர்   காமெடி  ட்ரை செய்கிறார் .நாயகனின் காதலி ஆக தீப்ஸிகா  கச்சிதம் .சமுத்திரக்கனி கெஸ்ட் ரோல் 

எஸ்   யவாவின் ஒளிப்பதிவு அருமை .நாயகி ,லேடி போலீஸ்  ஆபீசர் , நாயகனின்  காதலி , . நாயகனின் தங்கை  என அனைத்துப்பெண் கதாப்பாத்திரங்களை கண்ணியமான உடையில் படம்  பிடித்திருக்கிறார் . திரைக்கதை  எழுதி  இயக்கிய  லியோ ஜான் பால்   தான் எடிட்டிங்கும்  . அதுவே   பெரிய  பிளஸ் . தயாரிப்பாளர்  விஜய் ஆண்டதானி தான் இசை . கச்சிதம் 



சபாஷ்  டைரக்டர்


1  கடைசி  அரை மணி  நேர பிளாஷ்பேக்  போர்சன்   சுவராஸ்யம் 


2  ஓப்பனிங்க்  சீன்ல இருந்து  முதல் அரை மணி நேரம்  கதைக்குள் பார்வையாளர்களை இழுக்க வைக்கும் யுக்தி   அருமை 


3  க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே  உரித்தான  பின்னணி இசை இதில்  பட் டாஸ் .பாடல்கள்  இரண்டும் நன்றாக இருந்தன 


4  

விஜய் ஆண்ட்டனி    அண்டர் பிளே  ஆக்டிங்க் , அறிமுக  நாயகன் அஜய் திஷன் ஆக்டிங்க் , ,  நாயகி  கனிமொழியின்  மாறுபட் ட நடிப்பு , கெட்டப் .,லேடி போலீஸ்   இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் பிரிஜிதா  சகா  நால்வர்  பங்களிப்பும் அருமை 


5  கொலைகாரன்  யார் என சொல்லும் க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  பிரமாதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  சாவை விடப்பெரிய வலி நம்ம மனசுக்குப்பிடிச்சங்க சாவைபார்ப்பதுதான் 


2  மனுஷன்  கண்ணாடியைக்கண்டுபிடிக்கும் முன் அவனை அவனுக்கே அடையாளம் காட்டியது தண்ணீர் தான் 


3   இந்த மாதிரி  ஒரு இடத்துல   நான் செட்டில் ஆகணும் 


 உன் கூட செட்டில் ஆனா எனக்குப்போதும் 


4    சூயிங்கம் மெல்வது  நம் மனதின் போகஸ் திறனை பாதிக்கும் 


5 ஒருத்தரை  ஓடவம் , விடாம ஒளியவும் விடாம தனிமைப்படுத்தினா  அவங்க  ரகசியங்கள் வெளி வரும் 


6  உங்க   டைம்   சரி இல்லைனு நினைக்கிறேன் . உங்க வாட்ச்   நின்னு போய் ஒரு மணி நேரம் ஆகுது 


7      உனக்கு லாபம்  கிடைக்கணும்னு ஒரு செயலை செய்தால் அது பாவம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   தனது காதலி இறந்த  அடுத்த நாளே  முகத்தில்   எந்த சோகமும் இல்லாமல்  அவன் பாட்டுக்கு ட்யூட்டியை கவனிக்கிறான் . யார் சார் அவன் ? 


2 லவ்வரை  அவள் வீட்டின் வாசலில் டிராப் பண்ணாமல்  அந்தக்கிறுக்கன்  எதனால்  2 தெரு தள்ளி  டிராப் பன்றான் ? கொலை  நடக்க  வசதியா இருக்கட்டும்னா? அதுவும்  நைட் டைம்ல 


3  போலீஸ்  ஆபீசர்  அவரா  ஒரு துப்பும் கண்டு பிடிக்கலை . எல்லாம்   நாயகனாப்பார்த்து க்ளூ  கொடுத்தால் தான் ஆச்சு 


4  நாயகனின்  நீச்சல்   திறமை , மூச்சு  அடக்கி வைக்கும்  திறன் . எல்லாம் அருமை .ஆனால்   மெயின் கதையை  அது ஓவர் டே க் செய்கிறது .இவருக்கு முக்கியத்துவம் தர வேண்டும்  என்பதற்காக  வலுக்கட் டாயமா க  திரைக்கதையை  இவரைச்சுற்றி  அமைத்திருக்கிறார்கள் 


5   நாயகன்  தன காதலியுடன் பிரேக்கப் செய்யும்  சீன்   படு செயற்கை . ஏம்ப்பா   அஸிஸ் டெண்ட்  டைரக்டர் ஸ் , ஐடியா கொடுக்கலையா? 


6   நாயக னின் தனித்திறமை  அருமை , ஆனால்   அதை வைத்து  அவர்  போதிதர்மருக்கே  தாத்தா  மாதிரி   பில்டப் கொடுப்பது ஓவர் 


7 க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  வெளிப்பட் ட  பின்  கொலைக்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை . இன்னமும் வலுவாக  காட்டி இருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட் ட  க்ரைம்   த்ரில்லர்  இது . வித்தியாசமான  படங்களைக்காண  விரும்பும் அனைவரும்  பார்க்கலாம். விகடன் மார்க்  யூகம் 42 . ரேட்டிங்க்  3 / 5  


Maargan
Theatrical release poster
Directed byLeo John Paul
Written byLeo John Paul
Produced byMeera Vijay Antony
Starring
CinematographyS. Yuva
Edited byLeo John Paul
Music byVijay Antony
Production
company
Vijay Antony Film Corporation
Release date
  • 27 June 2025
CountryIndia
LanguageTamil
Budget12 crore
Box office7 crore

Tuesday, July 01, 2025

RONTH (2025) -PATROL- மலையாளம் - சினிமா விமர்சனம் (போலீஸ் புரொஸீஜரல் த்ரில்லர் )

         

        இயக்குனர்  ஷாஹி  கபிர்   இளவிலா பூஞ்சிரா (2022)  என்னும்   மலையாளப்படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்னும்  மாநில அரசின்  விருதைப்பெற்றார் இவர்  இயக்கும் இரண்டாவது  படம் இது . இவர் முன்னாள் போலீஸ்  காரர்   என்பதால் இவரது கதைகளில்  இது வரை சொல்லப்படாத போலீஸ்  சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும் . இவர்  திரைக்கதை ஆசிரியர் ஆகப்பணி புரிந்த ஜோசப் (2016), நயாட்டு (2021) ஆபிசர்  ஆன் ட்யூட்டி (2025) ஆகிய  3 படங்களுமே  வெற்றிப்படங்கள் + போலீஸ்  சப்ஜெக்ட் .நயாட்டு (2021)  படத்துக்காக  சிறந்த  திரைக்கதைக்கான தேசியத்திரைப்பட விருது , சிறந்த   கதைக்கான மாநில   அரசின்  விருது ஆகியவற்றை  வென்றவர்     

பொதுவாக  போலீஸ்   சப்ஜெக்ட்  படங்கள் என்றால்  நமக்கு  இதுதாண்டா  போலீஸ் , சத்ரியன் , மூன்று முகம் , வேட் டையாடு  விளையாடு  , சாமி , காக்க காக்க , சிங்கம்  போன்ற  படங்கள்   தான்  நினைவு  வரும் . இவை அனைத்தும்  போலீஸ்   கதைகள்   என்றாலும்  ஹீரோவின்  சாகசம் தான் மெயின்  கதையாக இருக்கும் . இந்த வழக்கமான பாணியிலிருந்து விடுபட்டு ஆக்சன்  ஹீரோ பைஜு(2016) என்னும்  மாறுபட் ட   படம்  வந்து ஹிட் ஆனது , இந்தப்படத்தில்  முழு நீளக்கதை கிடையாது . போலீஸ்   ஸ்டேஷனில்  நிகழும்   சின்ன சின்ன   சம்பவங்கள்   தான்   கதை .சுவராஸ்யமாக   இருக்கும் .,அதே  போல  ஒரே இரவில் ரோந்துப்பணியில்  ஈடுபடும்  இரு போலிஸ் காரர்களின்   கதை தான் இது . சின்ன சின்ன  சம்பவங்களின்   தொகுப்பு 


 13/6/2025  அன்று  திரை   அரங்குகளில்   வெளியான இந்தப்படம்  வெளியான முதல் 3 நாட்களில்   5 கோடி வசூல் அடைந்தது . இது ஒரு லோ பட்ஜெட் படம்  என்பது   குறிப்பிடத்தக்கது  . மொத்த பட்ஜெட்டே  ஒரு கோடிக்குள் தான் இருக்கும்  



ஸ்பாய்லர்  அலெர்ட்

போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர் , ஜீப்  டிரைவர்  இருவரும்  போலீஸ்   ஜீ ப்பில்  ஓரு  நாள்  இரவில்  ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர் .  இதில் எஸ் ஐ  25  வருடங்கள்  அனுபவம்  மிக்கவர் , டிரைவர்  வேலைக்குப்புதுசு . இவர்கள்  இருவருக்கும் இடையே  எழும் ஈகோ  மோதல்கள் , போலீஸ்  ரோந்து நடக்கும்போது  சந்திக்கும் பிரச்சனைகள் , இறுதியில் இவர்கள்  மீடியாக்களால்  போகஸ்  செய்யப்பட்டு ஒரு தவறான  பொய்க்கேஸில்    எப்படி   சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதே கதை 


 மேலோட்டமாகப்பார்க்கும்போது  இதில்  என்ன சுவராஸ்யம்  இருந்து  விடப்போகிறது ?2  மணி  நேரம்  பார்க்கும் அளவுக்கு ஒர்த்தாக  இருக்குமா? என்ற   சந்தேகம்      வருவது  இயற்கை . ஆனால்  பிரமிப்பு அளிக்கும் வகையில் இதன் திரைக்கதை பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது 


போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர்  ஆக திலீஷ் போத்தன்  அட்டகாசமாக  நடித்து  இருக்கிறார் . மனைவி  தன்  மேல் சந்தேகப்படும்போது  கோபப்படாமல்  பொறுமையாக அவரை டீல் செய்யும் விதம் அருமை .ஜீப்  டிரைவருடன்  ஈகோ  மோதல்   வரும்போதெல்லாம் நக்கல் ஆக   அவரை   டீல்  செய்யும்  இவர்  ,டிரைவர் குடும்பத்தில் ஒரு பிரச்சனை   என்றதும்  மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வது செம 



ஜீப்  டிரைவர்  ஆக  துடிப்பான  ரோலில்  ரோஷன்  மேத்யூ இயல்பாக   நடித்து   இருக்கிறார் . இன்ட்டர்வெல்  பிளாக் சீனில்  பேயைக்கண்டு  அவர் பதறி  பின்  வாங்கும் சீன்  கலக்கல் ஆன நடிப்பு 


 படத்தில்   நடித்த   மற்ற   அனைவரது  நடிப்பும் யதார்த்தம் . குறிப்பாக போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர்  மனைவியாக  வருபவர் , போலீஸ்  லேடி கான்ஸடபிள்  இருவரது  நடிப்பும்   டச்சிங்க் 


அனில்  ஜான்சனின்  இசை  செம . பின்னணி  இசை படத்தை க்ரிப்பாகக்கொண்டு செல்வதில் பெரும்பங்கு இருக்கிறது . பிரவின்   மங்களத்  எடிட்டிங்கில்  122 நிமிடங்கள்  படம் ஓடுகிறது . ஒரு சீன்  கூட   போர்  அடிக்கவில்லை 


மனிஷ்  மாதவன் ஒளிப்பதிவு  இரவு நேரக்காட் சிகளில்  புகுந்து   விளையாடி இருக்கிறது 


வித்தியாசமான , அமர்க்களமான  திரைக்கதை   எழுதி  இயக்கி இருப்பவர் இயக்குனர்  ஷாஹி  கபிர் 


 




சபாஷ்  டைரக்டர்


1 ஓடிப்போன பொண்ணின் கேசை  டீல் செய்யும் விதம்


2 சர்ச் பாதிரியாரின் காரை இடித்த நபர்களிடம்  10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கிக்கொடுத்து பின் பாதிரியாரிடம் அதை அபேஸ் பண்ணும் சாமார்த்தியம்


3 மனநிலை பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து அவரது குழந்தையைக்காப்பாற்றும் உயிரோட்டமான காட்சி


4.  மனப்பதட்ட நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் கிணறைக்கண்டு பயப்படும் காட்சி


5. ஈகோவைத்தூண்டி விட்ட ஹையர் ஆபீசர் ஜீப்பில்  சீட்டில் சாய்ந்தபடி  தூங்க அதைக்கலைக்க வேண்டும் என்றே ஜீப்பைக்குலுக்கி ஓட்டும் லாவகம்


6.  ஹையர் ஆபீசர் ஒரு மாமரத்தின் அடியில் மாங்காய் பொறுக்கும் காட்சி


7. ஆல்ரெடி 3 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில். டிரைவரை விசிட் அடிக்க வைப்பது


8. டிரைவரின் மகனுக்குக்காய்ச்சல் என்றதும் அதுவரை வில்லத்தனம் காட்டி வந்த ஹையர் ஆபீசர் டிரைவரிடம் மனிதாபிமானத்துடன் நடப்பது,உதவுவது  நெகிழ்ச்சியான காட்சி


9. தற்கொலை செய்ய முயலும் பெண்ணைக்காப்பாற்ற முயற்சித்துத்தோல்வி அடையும் தருணம்


10.  யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். காட்சி.அதுவரை துண்டு துண்டாந சம்பவங்களால் நிரப்பப்பட்ட திரைக்கதை உயிர் பெறும்தருணம்

11. படம் முழுக்க நேச்சுரலான போலீஸ் வாக்கி டாக்கி ஆர்டர்கள் ,அதற்கான சவுண்ட்  டிசைனிங்க் 


12 இரு நாயகர்களின் இயல்பான நடிப்பு


13 ஒரு  சீன் கூட போரடிக்காத திரைக்கதை








  ரசித்த  வசனங்கள்


1. ரோந்துப்பணி என்பது  க்ரைம் உண்டாகமல் தடுப்பது,கண்காணிப்பது


2 கேரள மாநிலத்தின் மக்கள் தொகை 3 1/2 கோடி பேரு.அவஙகளைக்கண்காணிக்க வெறும் 40,000 போலீஸ் தான்.எப்படி சாத்தியம்? போலீஸ்னா ஒரு பயம்  மக்கள் மத்தியில். இருக்கு


3. போஸ்ட் மார்ட்டம் பண்ற டாக்டர்ஸ் பயப்படறாங்களா? பரிதாபப்படறாஙகளா? அது மாதிரி தான் போலீசும்


4 போலீசோட முதல் குவாலிட்டி அப்சர்வேசன்.ஆவேசப்படுவது அல்ல


5. ஒரு. போலீஸ்காரரோட மனசில் அவர் கடைசியாக்கண்ட டெட் பாடி தான் இருக்கும்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


யோசித்து யோசித்துப்பார்த்தும் ஒன்றும் அகப்படவில்லை 

வெற்றி  மாறன் இயக்கிய  விசாரணை  படத்தின்  சாயல்   சில  இடங்களில்   தெரிகிறது 


ஒரே  இரவில்  இத்தனை  சம்பவங்கள்  நடக்குமா? என்ற  கேள்வி எழுகிறது 


 கமர்ஷியல்  படங்களை மட்டுமே  பார்த்து  ரசிக்கும்  ஆடியன்ஸுக்கு  இது செட் ஆகாது 

 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரே இரவில் நடக்கும் அருமையான திரில்லர் கதை .பாட்டு,டூயட்,காமெடி டிராக் அபத்தஙகள் இல்லாத. படம்.ரேட்டிங் 3.5 /5


thanx - ANICHAM JULY ISSUE 


Ronth
Theatrical Release Poster
Directed byShahi Kabir
Written byShahi Kabir
Produced byVineet Jain
Rathish Ambat
Renjith EVM
Jojo Jose
StarringDileesh Pothan
Roshan Mathew
CinematographyManesh Madhavan
Edited byPraveen Mangalath
Music byAnil Johnson
Production
company
Junglee Pictures Festival Cinemas
Distributed byFestival Cinemas
Release date
  • 13 June 2025
Running time
122 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹5 crore (US$590,000)[1]

 

Thursday, June 26, 2025

A WIDOW'S GAME (2025) -LA VIUDA NEGRA-ஸ்பானிஷ் /ஆங்கிலம்/ ஹிந்தி - சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

                 

        

2017 ல்  நடந்த  உண்மை சம்பவம் இது 30/5/2025  முதல்  நெட் பிளிக்ஸ்  ரிலீஸ் ஆக  வெளி வந்துள்ள இந்தப்படம் மிக மெதுவாக நகரும் ஒரு க்ரைம் டிராமா . 18+  காட் சிகள்  கொண்ட  படம் என்பதால் குடுப்பத்துடன்  பார்க்க முடியாது . பெரிய  திருப்பங்கள்  எதுவும்  இல்லாத  ஒரு கதை . . பொறுமை உள்ளவர்கள்  மட்டும்  பார்க்கலாம் . இந்த மாதிரி  கான்செப்ட்டில்  1988 - 1992 காலகட்ட்ங்களிலேயே  பிகேபி , சுபா , ராஜேஷ் குமார்  போன்ற  ரைட்டர்கள்  இது போன்ற கதைகளை எழுதி விட் டார்கள் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லி ஒரு நர்ஸ் . திருமணத்துக்கு முன்பே  வில்லிக்கு  ஒரு காதலன் உண்டு.திருமணம் ஆன பின் கணவனுடன்  ஒரு வருடம்  குடித்தனம் நடத்தி இருக்கிறாள் . ஹாஸ்பிடலில் தன்னுடன் பணி  புரியும் ஒரு ஆளை   மயக்கி , வளைத்துப்போட்டு  தன்னைத்தன் கணவன் தினமும் டார்ச்சர் செய்வதாக அளந்து விடுகிறாள் . அவனும் நம்பி விடுகிறான் . எனக்காக ஒரு உதவி செய் , நான் நிம்மதியாக வாழ வேண்டும் எனில் என் கணவனை கொலை செய்ய வேண்டும் செய்வாயா?எனகேட்கிறாள் 



அவனும்  ஒக்கே   சொல்ல  எப்படிக்கொலை செய்வது என வில்லி பிளான் போட்டுக்கொடுக்கிறாள் .கொலை  நடந்த பின்  வில்லி  தன கணவனைக்கொலை  செய்தவனுக்கு அல்வா  கொடுத்து விட்டு   தனது  பழைய காதலனுடன் வாழத்திட்டம் போடுகிறாள் .வில்லி யின் திட் டம்   எந்த அளவு நிறைவேறியது ? போலீஸ்  வில்லியை எப்படிப்பிடித்தது ? என்பது மீதித்திரைக்கதை 


வில்லி  ஆக  இவானா  பேக்கரோ  பிரமாதமாக நடித்திருக்கிறார் . மீரா ஜாஸ்மின்  சாயலில் இருக்கிறார் .இளமைத்துள்ளலுடன் நடிப்பு . தன சொந்த அம்மாவிடம்  கூட  அளந்து  விடும்போது இவரது நடிப்பு அட போட வைக்கிறது  


வில்லியின்  கணவனைக்கொலை  செய்யும்  காதலன் ஆக ட்ரிஸ்ட்ட்ன  உள்ளோ  நடித்திருக்கிறார் . வில்லியை நம்பி  ஏமாறுவது  அவர் மேல்  பரிதாபம் வர வைக்கிறது 


 வில்லியை  கையும் களவுமாகப்பிடிக்கும் போலீஸ் ஆபிசர் ஆக கார்மன்  மச்சி  அசால் ட்   ஆக  நடித்து   இருக்கிறார் 


வில்லியின் இன்னொரு காதலனாக  ஜோல்  சாஞ்சஸ்  நடித்திருக்கிறார் .அதிக   வாய்ப்பில்லை


 வில்லியின்  அப்பாவிக்கனவன் ஆக அலெக்ஸ்  கேடா நடித்திருக்கிறார்



ஒளிப்பதிவு  டேனியல் ஜோசா .அழகான  வில்லியை  கில்லி மாதிரி படம் பிடித்து இருக்கிறார் 


 இயக்கம் கார்லஸ் செடோஸ்  கேர்லஸ்  இல்லாமல்  தெளிவாக   திரைக்கதை   அமைத்து   இயக்கி இருக்கிறார் / எடிட்டிங்க்  ஷார்ப்   என   சொல்ல முடியாது . பரவாயில்லை ரகம் , 122  நிமிடங்கள்   ரன் டைம் 


சபாஷ்  டைரக்டர்


1   பேசிக் இன்ஸ்ட்டிங்க்ட்  போஸ்ட்டர்  டிசைனை  சுட்டது 


2   எங்கெல்லாம்  திரைக்கதை  தொய்வு அடைகிறதோ  அங்கெல்லாம்  கில்மா  சீன்களை  புகுத்தியது 


3   வில்லியின் ஐடியாக்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1   நீதி  தூங்காது , ஆனா   அப்பப்ப   ஓய்வு எடுத்துக்கும் 


2  மனதில்   நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள நீ முயற்சிக்காதே?  மென்ட்டல்  ஆகி  விடுவாய் !


3  நீ  இந்த இடத்துக்குக்  கூட் டி வரும் முதல் பெண்  நான்  தான? 


  அப்படி சொல்ல முடியாது , ஆனா  கடைசி  பெண்   நீ  தான் 


4  நீ   கொடுத்திருக்கும் பரிசு மிக  விலை மதிப்பு மிக்கதா இருக்கும் போலயே ? 


 நான்   உனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஒர்த் தான் 


5  நிம்போ  மேனியாக்    ஒரே  சமயத்தில் 5 பேருடன் ஜோடியாக இருக்க முடியும் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லி  தன காதலனிடம்  நைட்    டைமில் மெசேஜ் செய்ய வேண்டாம் என சொல்லமாட் டாளா? 


2   வில்லி   தன காதலன் பெயரை  டேனியல் என்றே  செல் போனில்  சேவ் செய்து   வைத்திருக்கிறாள் . பெண் பெயரில் சேமிக்கலாம்? 


3  கொலை  நடந்த  நான்காவது   மாதத்திலேயே  கணவனின்   பெற்றோரிடம்  சொத்து  கேட் கிறாள்  வில்லி .டவுட்   வராதா? 


4 கொலைக்கேஸ்  இன்னமும் முடியவில்லை . விசாரணை நடக்கிறது . வில்லி  என்ன தைரியத்தில்  காதலனுடன் வெளியே சுற்றுகிறாள்? போனில் பேசுகிறாள்? தன்  பேச்சை  ஒட்டுக்கேட்பார்கள்   என்பதை  யூகிக்க முடியவில்லையா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பல  விமர்சனங்கள்  படத்தை சிலாகித்து வந்திருக்கின்றன . ஆங்கிலப்பத்திரிக்கைகள் எல்லாம் 3/5 , 3.5 /5  என ரேட்டிங்க் கொடுத்து இருக்கின் றன  .எனக்கென்னவோ  சுமார் ரகம்  என்றே   தோன்றுகிறது . ரேட்டிங்  2.25 / 5 


A Widow's Game
Theatrical release poster
SpanishLa viuda negra
Directed byCarlos Sedes
Starring
CinematographyDaniel Sosa
Production
company
Bambú Producciones
Distributed byNetflix
Release date
  • 30 May 2025
Running time
122 minutes[1]
CountrySpain
LanguageSpanish

Tuesday, June 24, 2025

DNA -டி என் ஏ (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )

                         




ஸ்பாய்லர்  அலெர்ட்


 வில்லி  ஒரு பாட்டி .திருடி .ஹாஸ்ப்பிடலில் முறுக்கு, மிக்ஸர் விற்பது போல இரண்டு கட்டைப்பைகளுடன் போய் நைசாக கைக்குழந்தையைத்திருடி  ஒரு கும்பலிடம் விற்று விடுவாள் .


 வில்லன் ஒரு டாக்டர் .ஒரு நாள்  காரில்  போகும்போது  முன்னால்  பைக்கில் போன ஒரு தம்பதியை விபத்துக்கு உள்ளாக்குகிறார் . ஹாஸ்ப்பிடலில் சேர்க்கிறார் . ஆனால்  தம்பதி இருவரும் அவுட் .அவர்களது  கைக்குழந்தை  உயிருடன் அநாதை ஆகிறது .அதே  ஹாஸ்ப்பிடலில்  பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையால்  கதி   கலங்கி  நின்ற  ஒரு தம்பதிக்கு  வில்லன்  விபத்தில்  உயிர்  இழந்த  தம்பதியின் கைக்குழந்தையை  தானமாகத்தருகிறார் . உடனே  குழந்தையை  வாங்கிக்கொண்டவர்   ஒரு பெரிய தொகையை வில்லனுக்குத்தருகிறார் . இது  வில்லனை  யோசிக்க வைக்கிறது 


 ஒரு நெட் ஒர்க்கை உருவாக்குகிறார் .குழந்தையைத்திருடுவது . , குழந்தை இல்லாத   தம்பதிக்குத்தானமாகத்தருவது , சன்மானம் பெறுவது .இதுதான்  இனி வில்லனின் தொழில் 


நாயகன் ,, நாயகி  இருவரும் தம்பதி .பிரசவத்தில் பிறந்த இவர்களது குழ்ந்தை ஒரு மணி நேரத்தில் காணாமல் போகிறது . அந்தக்குழந்தையை  எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள் என்பது மீது திரைக்கதை 


நாயகன்  ஆக அதர்வா .அப்பாவை விடத்திறமைசாலி . ஆனால்  அப்பா முரளி  போல  நல்ல படங்கள் அமையவில்லை ,அந்தக்குறையை இந்தப்படம் போக்கும் .



நாயகி ஆக  நிமிசா  சஞ்சயன் . பிரமாதமாக நடித்திருக்கிறார் .நாயகனை விட நடிக்க அதிக வாய்ப்பு இவருக்குத்தான் ,நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் ( இயல்பாகவே இவரது முக அமைப்பு சிடுமூஞ்சி அல்லது அழுது வடிந்த முகம் தான்  ஆனால்  சிரித்தால்  அழகாக இருக்கிறார் )


இயக்குனர் பாலாஜி சக்திவேல்  போலீஸ் ஆபிஸர் ஆக வருகிறார் .பரவாயில்லை ரக நடிப்பு / தொப்பையுடன் அவர் வருவது சகிக்கவில்லை 


நாயகியின்  அம்மாவாக வரும் விஜி சந்திர சேகர் , நாயகனின் அப்பாவாக வரும் சேத்தன்  இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு 


ஒளிப்பதிவு பார்த்திபன் . அருமை .இசை ஜிப்ரான் . நான்கு பாடல்களும் பாஸ்  மார்க் . பின்னணி   இசை அருமை . இயக்கம் நெல்சன்  வெங்கடேசன் . திரைக்கதை , வசனம்  உதவி  அதிஷா

சபாஷ்  டைரக்டர்


1    திரைக்கதை  நல்ல   விறுவிறுப்பு .இடைவேளை  பிளாக்  சீன் ,கடைசி  20 நிமிடங்கள்  செம கலக்கல் ரகம் 


2   பாட்டியாக  நடித்த   வில்லி நடிப்பு செம . அதே  போல் நாயகியின் நடிப்பும் அருமை 


3 ஜிப்ரானின் பின்னணி இசை   அருமை  .


  ரசித்த  வசனங்கள் 


1  தப்பு  செய்யற யாருமே  தப்பிக்கறதில்லை ,தண்டனைக்கான காலத்தைத்தள்ளிப்போட்டுடறாங்க 



2   பார்டர்  லைன் பர்சனாலிட்டி   டிஸ் ஆர்டர்  என்பது வெ ட் டவெட்ட வளரும் 



3  மூஞ்சியை கொஞ்ச்ம் சிரிச்ச மாதிரி  வையேண்டா 


பேசாம  நாம அவனுக்கு சிரிச்ச மாதிரி  மேக்கப்  போட்டு விட்டுடலாமா? 


4  ஒரு பொருளை எடுத்துட்டு அதே மாதிரி  இன்னொரு  பொருளை வைப்பது  நகைக்கடத்தல்ல, சிலைக்கடத்தலில் தான் . குழந்தைல இதுதான் முதல் டைம் 


5  பெண்பிள்ளைன்னா   வட நாடு ,ஆண்பிள்ளைன்னா சுடுகாடு . தலைச்சன் பிள்ளைன்னா நரபலி கொடுப்பாங்க 


6  மனுஷன்   மாடா , பேயாய் உழைப்பான் ,மானமா? பசியா?  என வந்தா  அவன் சாய்ஸ்   பசி தான் 


7 பணக்காரனுக்கும் , மிடில் கிளாசுக்கும்  உள்ள  வித்தியாசமே இந்த  ரிஸ்க் தான் 


8   உன்  கிட்டே  காசில்லைன்னா ,, வசதி இல்லைன்னா , வேலை  இல்லைன்னா  ஒரு பய என்ன? ஏது என கேட்க மாடடான்  , ஆனா  குழந்தை  இல்லைன்னா  கண்டிப்பா  கேட்பான் , பிரஸர்  தான் 


9 குற்றத்தில்  கூட்டணி போட் டவன்  என்னைக்கும் நம்மைக்காட்டிக்கொடுக்க மாட் டான் 


10  இந்த  ஜோசியர்  சொல்றதெல்லாம் நம்பும்படியாவா  இருக்கு ? 


 நம்புனா காசு வாரும் 


 கண்டிப்பா 100% நம்பறேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  குடிகாரன் , கஞ்சா  கேஸ் , ஆனால் திருமணம் ஆன உடனே  அப்படியே  நல்லவனாக மாறி விடுகிறார் .பாடியை  ஜிம் பாடி போல் பிட்  ஆக வைத்திருக்கிறார் . சாத்தியமே இல்லை 


2   நாயகன்   பைக்கில் போகும்போது  ஹெல்மெட்  போடுவதே இல்லை 


 3  ஒரு  சீனில்  போலீஸ்   ஆபீசர்  கான்ஸ்டபிளிடம் , சின்னசாமி  இருக்காரா?எனக்  கேட்கும்போது  இருக்கார்  இல்லை என பதில் சொன்னால் போதும் . சும்மாதான் இருக்கார் என்கிறார் .


4  நாயகி  நாயகனிடம்  நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை , டி என் ஏ  டெஸ்ட்  எடுத்தபின் தான் நம்பினாயா?எனக்கேட் கும்போது  நாயகன்  எதனால் மவுனமாக இருக்கிறான் ?கோர்ட்டுக்கு த்தேவை என உண்மையை சொல்லி இருக்கலாமே? 


5 படத்தில்  வரும் அனைத்துப்பெண்களும்   தாலிச்செயினை  மறைவாக  வைக்க   நாயகி மட்டும்   சேலை , ஜாக்கெட்டுக்கு வெளியே  வைததிருக்கிறார் . இதெல்லாம் எம் ஜி ஆர் , கால சிவாஜி  கால நாயகிகள் செய்யலாம் .மாடர்ன்  பெண்கள்  தாலியை மதிப்பது இல்லை 


6  தீண்ட  தீண்ட பாடல்  இசை , நடன அமைப்பு  அனைத்தும்  கோடானு கோடி  பாட்டின்  உல் டா  வெர்சன் 


7 இது   நல்ல க்ரைம் த்ரில்லர் படம் . ஆனால்   தேவை இல்லாமல் நாயகனுக்கு 4 பைட் சீன்கள் 


8   போலீஸ்   ஆபிஸர்  நாயகன் சொல்படி எல்லாம் கேட்பது எப்படி ? 


9  நாயகனின்  குசந்தையை  எதற்காகத்திருடுகிறார்கள்  என க்ளைமாக்சில்   சொல்லும்    காரணம்  நம்ப முடியவில்லை 


10   குழ்ந்தை   திருட்டில்  நர்ஸ்  ட்வின்ஸ்    என்ற   டிவிஸ்ட்  எல்லாம் அடேங்கப்பா போதும்டா உங்க உருட்டு   என சொல்ல வைக்கிறது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளி வந்திருக்கும்  நல்ல க்ரைம் ஆக்சன் த்ரில்லர் . படம்  பார்க்கலாம் . விகடன்   மார்க் யூகம் -42. ரேட்டிங்க்  3 / 5