Tuesday, July 01, 2025

RONTH (2025) -PATROL- மலையாளம் - சினிமா விமர்சனம் (போலீஸ் புரொஸீஜரல் த்ரில்லர் )

         

        இயக்குனர்  ஷாஹி  கபிர்   இளவிலா பூஞ்சிரா (2022)  என்னும்   மலையாளப்படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்னும்  மாநில அரசின்  விருதைப்பெற்றார் இவர்  இயக்கும் இரண்டாவது  படம் இது . இவர் முன்னாள் போலீஸ்  காரர்   என்பதால் இவரது கதைகளில்  இது வரை சொல்லப்படாத போலீஸ்  சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும் . இவர்  திரைக்கதை ஆசிரியர் ஆகப்பணி புரிந்த ஜோசப் (2016), நயாட்டு (2021) ஆபிசர்  ஆன் ட்யூட்டி (2025) ஆகிய  3 படங்களுமே  வெற்றிப்படங்கள் + போலீஸ்  சப்ஜெக்ட் .நயாட்டு (2021)  படத்துக்காக  சிறந்த  திரைக்கதைக்கான தேசியத்திரைப்பட விருது , சிறந்த   கதைக்கான மாநில   அரசின்  விருது ஆகியவற்றை  வென்றவர்     

பொதுவாக  போலீஸ்   சப்ஜெக்ட்  படங்கள் என்றால்  நமக்கு  இதுதாண்டா  போலீஸ் , சத்ரியன் , மூன்று முகம் , வேட் டையாடு  விளையாடு  , சாமி , காக்க காக்க , சிங்கம்  போன்ற  படங்கள்   தான்  நினைவு  வரும் . இவை அனைத்தும்  போலீஸ்   கதைகள்   என்றாலும்  ஹீரோவின்  சாகசம் தான் மெயின்  கதையாக இருக்கும் . இந்த வழக்கமான பாணியிலிருந்து விடுபட்டு ஆக்சன்  ஹீரோ பைஜு(2016) என்னும்  மாறுபட் ட   படம்  வந்து ஹிட் ஆனது , இந்தப்படத்தில்  முழு நீளக்கதை கிடையாது . போலீஸ்   ஸ்டேஷனில்  நிகழும்   சின்ன சின்ன   சம்பவங்கள்   தான்   கதை .சுவராஸ்யமாக   இருக்கும் .,அதே  போல  ஒரே இரவில் ரோந்துப்பணியில்  ஈடுபடும்  இரு போலிஸ் காரர்களின்   கதை தான் இது . சின்ன சின்ன  சம்பவங்களின்   தொகுப்பு 


 13/6/2025  அன்று  திரை   அரங்குகளில்   வெளியான இந்தப்படம்  வெளியான முதல் 3 நாட்களில்   5 கோடி வசூல் அடைந்தது . இது ஒரு லோ பட்ஜெட் படம்  என்பது   குறிப்பிடத்தக்கது  . மொத்த பட்ஜெட்டே  ஒரு கோடிக்குள் தான் இருக்கும்  



ஸ்பாய்லர்  அலெர்ட்

போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர் , ஜீப்  டிரைவர்  இருவரும்  போலீஸ்   ஜீ ப்பில்  ஓரு  நாள்  இரவில்  ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர் .  இதில் எஸ் ஐ  25  வருடங்கள்  அனுபவம்  மிக்கவர் , டிரைவர்  வேலைக்குப்புதுசு . இவர்கள்  இருவருக்கும் இடையே  எழும் ஈகோ  மோதல்கள் , போலீஸ்  ரோந்து நடக்கும்போது  சந்திக்கும் பிரச்சனைகள் , இறுதியில் இவர்கள்  மீடியாக்களால்  போகஸ்  செய்யப்பட்டு ஒரு தவறான  பொய்க்கேஸில்    எப்படி   சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதே கதை 


 மேலோட்டமாகப்பார்க்கும்போது  இதில்  என்ன சுவராஸ்யம்  இருந்து  விடப்போகிறது ?2  மணி  நேரம்  பார்க்கும் அளவுக்கு ஒர்த்தாக  இருக்குமா? என்ற   சந்தேகம்      வருவது  இயற்கை . ஆனால்  பிரமிப்பு அளிக்கும் வகையில் இதன் திரைக்கதை பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது 


போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர்  ஆக திலீஷ் போத்தன்  அட்டகாசமாக  நடித்து  இருக்கிறார் . மனைவி  தன்  மேல் சந்தேகப்படும்போது  கோபப்படாமல்  பொறுமையாக அவரை டீல் செய்யும் விதம் அருமை .ஜீப்  டிரைவருடன்  ஈகோ  மோதல்   வரும்போதெல்லாம் நக்கல் ஆக   அவரை   டீல்  செய்யும்  இவர்  ,டிரைவர் குடும்பத்தில் ஒரு பிரச்சனை   என்றதும்  மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வது செம 



ஜீப்  டிரைவர்  ஆக  துடிப்பான  ரோலில்  ரோஷன்  மேத்யூ இயல்பாக   நடித்து   இருக்கிறார் . இன்ட்டர்வெல்  பிளாக் சீனில்  பேயைக்கண்டு  அவர் பதறி  பின்  வாங்கும் சீன்  கலக்கல் ஆன நடிப்பு 


 படத்தில்   நடித்த   மற்ற   அனைவரது  நடிப்பும் யதார்த்தம் . குறிப்பாக போலீஸ்  சப் இன்ஸ்பெக்ட்டர்  மனைவியாக  வருபவர் , போலீஸ்  லேடி கான்ஸடபிள்  இருவரது  நடிப்பும்   டச்சிங்க் 


அனில்  ஜான்சனின்  இசை  செம . பின்னணி  இசை படத்தை க்ரிப்பாகக்கொண்டு செல்வதில் பெரும்பங்கு இருக்கிறது . பிரவின்   மங்களத்  எடிட்டிங்கில்  122 நிமிடங்கள்  படம் ஓடுகிறது . ஒரு சீன்  கூட   போர்  அடிக்கவில்லை 


மனிஷ்  மாதவன் ஒளிப்பதிவு  இரவு நேரக்காட் சிகளில்  புகுந்து   விளையாடி இருக்கிறது 


வித்தியாசமான , அமர்க்களமான  திரைக்கதை   எழுதி  இயக்கி இருப்பவர் இயக்குனர்  ஷாஹி  கபிர் 


 




சபாஷ்  டைரக்டர்


1 ஓடிப்போன பொண்ணின் கேசை  டீல் செய்யும் விதம்


2 சர்ச் பாதிரியாரின் காரை இடித்த நபர்களிடம்  10,000 ரூபாய் நஷ்ட ஈடு வாங்கிக்கொடுத்து பின் பாதிரியாரிடம் அதை அபேஸ் பண்ணும் சாமார்த்தியம்


3 மனநிலை பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து அவரது குழந்தையைக்காப்பாற்றும் உயிரோட்டமான காட்சி


4.  மனப்பதட்ட நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் கிணறைக்கண்டு பயப்படும் காட்சி


5. ஈகோவைத்தூண்டி விட்ட ஹையர் ஆபீசர் ஜீப்பில்  சீட்டில் சாய்ந்தபடி  தூங்க அதைக்கலைக்க வேண்டும் என்றே ஜீப்பைக்குலுக்கி ஓட்டும் லாவகம்


6.  ஹையர் ஆபீசர் ஒரு மாமரத்தின் அடியில் மாங்காய் பொறுக்கும் காட்சி


7. ஆல்ரெடி 3 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில். டிரைவரை விசிட் அடிக்க வைப்பது


8. டிரைவரின் மகனுக்குக்காய்ச்சல் என்றதும் அதுவரை வில்லத்தனம் காட்டி வந்த ஹையர் ஆபீசர் டிரைவரிடம் மனிதாபிமானத்துடன் நடப்பது,உதவுவது  நெகிழ்ச்சியான காட்சி


9. தற்கொலை செய்ய முயலும் பெண்ணைக்காப்பாற்ற முயற்சித்துத்தோல்வி அடையும் தருணம்


10.  யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். காட்சி.அதுவரை துண்டு துண்டாந சம்பவங்களால் நிரப்பப்பட்ட திரைக்கதை உயிர் பெறும்தருணம்

11. படம் முழுக்க நேச்சுரலான போலீஸ் வாக்கி டாக்கி ஆர்டர்கள் ,அதற்கான சவுண்ட்  டிசைனிங்க் 


12 இரு நாயகர்களின் இயல்பான நடிப்பு


13 ஒரு  சீன் கூட போரடிக்காத திரைக்கதை








  ரசித்த  வசனங்கள்


1. ரோந்துப்பணி என்பது  க்ரைம் உண்டாகமல் தடுப்பது,கண்காணிப்பது


2 கேரள மாநிலத்தின் மக்கள் தொகை 3 1/2 கோடி பேரு.அவஙகளைக்கண்காணிக்க வெறும் 40,000 போலீஸ் தான்.எப்படி சாத்தியம்? போலீஸ்னா ஒரு பயம்  மக்கள் மத்தியில். இருக்கு


3. போஸ்ட் மார்ட்டம் பண்ற டாக்டர்ஸ் பயப்படறாங்களா? பரிதாபப்படறாஙகளா? அது மாதிரி தான் போலீசும்


4 போலீசோட முதல் குவாலிட்டி அப்சர்வேசன்.ஆவேசப்படுவது அல்ல


5. ஒரு. போலீஸ்காரரோட மனசில் அவர் கடைசியாக்கண்ட டெட் பாடி தான் இருக்கும்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


யோசித்து யோசித்துப்பார்த்தும் ஒன்றும் அகப்படவில்லை 

வெற்றி  மாறன் இயக்கிய  விசாரணை  படத்தின்  சாயல்   சில  இடங்களில்   தெரிகிறது 


ஒரே  இரவில்  இத்தனை  சம்பவங்கள்  நடக்குமா? என்ற  கேள்வி எழுகிறது 


 கமர்ஷியல்  படங்களை மட்டுமே  பார்த்து  ரசிக்கும்  ஆடியன்ஸுக்கு  இது செட் ஆகாது 

 





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரே இரவில் நடக்கும் அருமையான திரில்லர் கதை .பாட்டு,டூயட்,காமெடி டிராக் அபத்தஙகள் இல்லாத. படம்.ரேட்டிங் 3.5 /5


thanx - ANICHAM JULY ISSUE 


Ronth
Theatrical Release Poster
Directed byShahi Kabir
Written byShahi Kabir
Produced byVineet Jain
Rathish Ambat
Renjith EVM
Jojo Jose
StarringDileesh Pothan
Roshan Mathew
CinematographyManesh Madhavan
Edited byPraveen Mangalath
Music byAnil Johnson
Production
company
Junglee Pictures Festival Cinemas
Distributed byFestival Cinemas
Release date
  • 13 June 2025
Running time
122 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹5 crore (US$590,000)[1]

 

0 comments: