ஆண்களின் வாழ்க்கையில் பெண்பார்க்கும் படலத்தினை மட்டும் மறக்கவே முடியாது .தமிழ் சினிமாவின் முதல் பெண்பார்க்கும் படலம் பேஸ் கொண்ட திரைக்கதை படித்தால் மட்டும் போதுமா? (1962) . பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாட்டு செம ஹிட்டு . இந்தப்படம் நா என்ற வங்காள மொழித்திரைப்படத்தின் தழுவல் . இதற்குப்பின் பெண்பார்க்கும் படலத்தை வைத்து திரைக்கதை எழுதப்பட்டு மெகா ஹிட் ஆன படம் தூறல் நின்னுபோச்சு (1982).ஆர் பாண்டிய ராஜனின் ஆண் பாவம் (1985) அதிரி புதிரி ஹிட் . இது படித்தால் மட்டும் போதுமா? வின் பட்டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் தான்
ஆஹா (1997) பூ மகள் ஊர்வலம் (1999) , கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (2000) ,கல்யாண சமையல் சாதம் (2013) ஆகிய படங்களில் கதை வேறாக இருந்தாலும் பெண்பார்க்கும் படலம் இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு முதிர் கண்ணன் .33 வயசு ஆகியும் இன்னமும் மேரேஜ் ஆகவில்லை . யாரும் பெண் தர முன் வரவில்லை .ஜவுளிக்கடை வைத்திருக்கிறார் . எப்படியோ ஒரு வழியாக தேனியில் இருக்கும் நாயகனுக்கு கோவையில் ஒரு பெண் கிடைக்கிறது . பெண்பார்க்க சொந்தக்காரர் களுடன் கோவை போகிறார் . பெண்ணைப்பார்த்ததும் அவருக்குப்பிடித்து விடுகிறது . மணப்பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு . அவர் விளையாட்டாக நாயகனின் செல் போனுக்கு மணப்பெண் போல அதாவது தன அக்கா அனுப்புவது போல் மெசேஜ் அனுப்புகிறார்
செல் போனில் நன்றாக ரொமாண்டிக்காக மெசேஜ் அனுப்பும் மணப்பெண் நேரில் சரியாகப்பேசுவது இல்லையே அது ஏன் ? என நாயகன் குழம்புகிறான் .மணப்பெண்ணுக்கு ஒரு காதலன் உண்டு . அவனுடன் ஓடிப்போய் விடுகிறாள் மணப்பெண் . இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீ தி திரைக்கதை
நாயகன் ஆக விக்ரம் பிரபு , கனகச்சிதமான நடிப்பு .பல இடங்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் .ஹேர் ஸ்டைல் , உடை அருமை .மணப்பெண் ஆக சுஷ்மிதா பட் அழகு பொம்மை மாதிரி வந்து போகிறார் . நடிக்க அதிக வாய்ப்பு இல்லை , டயலாக்ஸும் அதிகம் இல்லை ..மணப்பெண்ணின் தங்கை ஆக வரும் மீனாடசி தினேஷ் தொண தொண எனும் பேசும் கேரக்ட்டர் . நடிக்க நல்ல வாய்ப்பு .கெஸ்ட் ரோலில் சத்யராஜ் , ரியோ ராஜ் வந்து போகின்றனர்
தாய் மாமனாக வந்து அலப்பறை பண்ணும் அருள் தாஸ் நடிப்பு கலக்கல் ரகம் .ரமேஷ் தி லக்கின் காமெடி சுமார் ரகம் . மற்ற அனைவருமே நடிப்பில் குறை வைக்கவில்லை
ஷான் ரோல்டன் இசையில் 2 பாடல்கள் அருமை . பின்னணி இசையும் செம .மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . 2 நாயகிகளையம் கண்ணியமாக அழகாக காட்டி இருக்கிறது கேமரா .எடிட்டிங்க் கச்சிதம் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது . திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சண்முகப்பிரியன்
சபாஷ் டைரக்டர்
1 அனைவருக்கும் எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய கதைக்கரு , கதைக்களம் . காமெடி க்ளாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லாத பெண்பார்க்கும் படலம் ரசனை
2 நாயகிகள் இருவரின் அழகு முகங்கள் , கண்ணிய உடை
3 மணப்பெண்ணின் தங்கைக்கும் , நாயகனுக்கும் இடையே உருவாகும் புரிதல் , காதல் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மணப்பெண்ணைக்காட்டும் முதல் சீனிலேயே அவருக்குத்திருமணத்தில் இஷ்டம் இல்லை என்பது ஆடியன்சுக்குத்தெரிந்து விடுகிறது . ஆனால் நாயகனுக்கோ , வேறு யாருக்குமோ அது தெரியவில்லை என்பது மைனஸ்
2 மணப்பெண்ணை மிகவும் விரும்பும் நாயகன் அவர் இல்லை என்றானதும் இனி இவருக்குப்பதில் இவர் என ஈசியாக மச்சினியை கரெக் ட் செய்ய முயல்வது ஓவர் . கொஞ்ச்ம டைம் எடுத்திருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - லவ் மேரேஜ் (2025) -LOVE MARRIAGE - தமிழ் - அசோக வனம் லோ அர்ஜுன கல்யாணம் (2022 ) தெலுங்குப்படத்தின் அபிஷியல் ரீமேக் இது . தூறல் நின்னு போச்சு (1982) , ஆண் பாவம் (1985) ஆகிய படங்கள் போல பெண்பார்க்கும் வைபவத்தை வைத்து எழுதப்பட் ட திரைக்கதை . முதல் பாதி சராசரி , பின் பாதி தரம் . விகடன் மார்க் யூகம் - 41 . ரேட்டிங்க் 2.5 / 5