ஸ்பாய்லர் அலெர்ட்
கேரளாவின் தலைநகர் ஆன திருவனந்தபுரத்தில் ஒரு சின்ன ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து போலீசும் ஒரே நேரத்தில் இட மாற்றம் செய்யப்படுகிறார்கள் . பொதுவாக இந்த மாதிரி டிரான்ஸ்பர் ஆகும் ஆபீசர்கள் ஒர்க் பிரஷர் காரணமாக தற்கொலை செய்து கொள்வது உண்டு . ட்யுயூட்டியில் ஜாயின் பண்ணாமல் எஸ்கேப் ஆவதும் உண்டு . அந்த போலீஸ் ஸ் டேசனில் பணியாற்றிய ஒரு போலீஸ் இட மாற்றம் செய்யப்பட் ட பின் ஆள் காணாமல் போகிறார் . அவர் நேர் மை யான ஆள் . அவரைக்கண்டு பிடிக்க ஒரு டீம் கள த்தில் இறங்குகிறது . இந்தக்கேஸ் தான் மொத்தக்கதையும்
சபாஷ் டைரக்டர்
1 துப்பறியும் நாய்கள் பற்றிய டீட் டெய்லிங்க் அருமை . அவைகளை பராமரிப்பவர்கள் , அதற்கான டாக் டர்கள் போன்ற விவரங்கள் பக்கா
2 சி சி டி வி புட் டேஜ் ல நாய் போன பாதையை ரிவர்ஸில் பாலோ செய்து போகும் சீன்கள் பரபரப்பு , அந்த ஐடியா செம
3 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் போலீஸ் ஆபீசர்கள் அவரவர் மனைவியை சமாதானப்படுத்தும் சீன்கள் கச்சிதம்
4 நேர்மையான போலிஸாக வரும் இந்திரன்ஸ் ,நாயகன் ஆக வரும் அஜு வர்கீசின் கம்பீரமான நடிப்பு கன கச்சிதம்
5 ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சை வைப்பது அசத்தல்
6 பின்னணி அருமை , பல சீன்களில் எடிட்டிங்க் , பி ஜி எம் கலக்கல் ரகம்
ரசித்த வசனங்கள்
1 லாட்டரில 500 ரூபா பரிசு அடித்தால் அந்த 500 க்கும் லாட்டரியே வாங்கறவங்க தான் அதிகம்
2 செய்யற வேலைக்கு மெடல் எதுவும் வேணாம் .புகார் எதுவும் வராம இருந்தாப் போதும்
3 ஒரே நேரத்தில் 2 படகுகளில் பயணம் செய்ய முடியாது
4 சாரி சார் ,அவன் கூட இப்போ அதிக பழக்கம் இல்லை
ஓஹோ , அப்போ கொஞ்சம் பழக்கம் உண்டு ?
5 பொதுவா குற்றவாளிகள் 5 வருடங்கள் ஒரே இடத்தில் குற்றம் செய்து கொண்டு இருக்க மாட்டாங்க , ப்ரோமோஷன் ஆகி வேற ஏரியாப்போகத்தான் விரும்புவாங்க
6 ஒரு கேஸை டீல் செய்ய அசம்ப்சன் ( யூகங்கள் ), தியரி இவை மட்டும் போதாது
7 பவர் இருக்கும் வரை தான் மரியாதை .என் தொடர்புகள் தான் என்னோட பவர்
8 என்னோட பவரை ( தொடர்புகளை) வேற ஒருவருக்கு ஹேண்ட் ஓவர் பண்ணிட் டா எனக்கு என்ன வேலை ?
9 எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகில் வாழ ரைட்ஸ் உண்டு
10 என் வேலைல நான் பெஸ்ட் ஆக இருக்கணும்னு நினைக்கறவன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஏ சென்ட்டர் ஆடியன்ஸுக்கு மட்டும் தான் படம் புரியும் . அதே போல க்ளைமாக்சில் என்னதான் நடந்தது என ஒரு முறை விபரமாக கேஸை விளக்கி இருக்க வேண்டும்
2 முதல் ஒரு மணி நேரம் மிகவும் மெதுவாகத்தான் திரைக்கதை நகர்கிறது .பொறுமை அவசியம்
3 நாய் ,பூனை போன்ற வளர்ப்புப்பிராணிகளை வீட்டில் வைத்திருப்பவர்களுக்குத்தான் கதை கனெக்ட் ஆகும் . மற்றவர்ளுக்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்காது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ரசிகர்களுக்குப்படம் பிடிக்கும் ,ஆனால் பொறுமை தேவை . ரேட்டிங்க் 3 / 5
Kerala Crime Files | |
---|---|
![]() | |
Genre | Crime drama Police procedural |
Created by | Ahammed Khabeer |
Written by | Ashiq Aimar (Season 1) Bahul Ramesh (Season 2) |
Directed by | Ahammed Khabeer |
Starring | Aju Varghese Lal |
Music by | Hesham Abdul Wahab |
Country of origin | India |
Original language | Malayalam |
No. of seasons | 2 |
No. of episodes | 12 |
Production | |
Producers | Rahul Riji Nair (Season 1) Ahammed Khabeer Jithin Stanislaus Hassan Rasheed (Season 2) |
Cinematography | Jithin Stanislaus |
Editor | Mahesh Bhuvanend |
Camera setup | Single-camera |
Running time | 30 minutes |
Production companies | First Print Studios (Season 1) Monkey Business (Season 2)[1] |
Original release | |
Network | JioHotstar |
Release | 23 June 2023 – present |
0 comments:
Post a Comment