Monday, July 07, 2025

AABHYANTHARA KUTTAVAALI (2025) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( பேமிலி கோர்ட ரூம் டிராமா )

                   

       அபயந்தரக்குட் டவாளி  = உள்  (நாட்டு)குற்றவாளி 


ஒரு காலக்கட்டத்தில்  ஆண்கள்  பெண்களைக்கொடுமைப்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும்  சங்க இலக்கியங்களில் , தஞ்சாவூர்  கல்வெட்டுக்களில்  படித்திருக்கிறேன் .ஆனால்  இப்போது நிலைமை தலைகீழ் . ஆண்கள்  இளிச்சவாயர்களாகவும் , மாங்கா மடையர்களாகவும் , பெண்களுக்கு  எடுபுடி  வேலை செய்யும் வேலைக்காரர்களாகவும்  இருக்கின்ற்னர் .  பெண்கள்  ஆண்களின்  தலையில்  மிளகாய்  அரைக்கிறார்கள் .அப்படி   ஏமாற்றப்பட்ட   ஒரு அப்பாவி  ஆணின் கதைதான்  இது . ஆண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவு இது 



6/6/2025 அன்று திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  இதுவரை  ஓ டி டி யில்  வெளியாகவில்லை . விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப்பெற்ற  இந்தப்படம்  காமர்ஷியலாகவும் ஹிட் ஆனது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  நாயகியுடன்  பெற்றோரால்  நிச்சயிக்கப்பட் ட  திருமணம்  நடக்கிறது .திருமணம்  மட்டும்  தான் முடிந்தது . சாந்தி  முகூர்த்தம்  10 நாட்கள்  ஆகியும்  நடக்கவில்லை .நண்பர்கள்  வேற  நாயகனை கிண்டல் பண்ணிட் டே  இருக்காங்க . நாயகன் - நாயகி , நண்பர்கள்  கேலி கிண்டல்  என முதல்  அரை மணி நேரம்  படம் ஜாலியாகப்போகிறது 



நாயகி  நாயகனிடம்  வெளிநாடு  போய் தான் படிக்க இருப்பதாகக் கூறு கிறாள் . ஐயோ  , அதுக்கு  15 லட்ச ம்  செலவு ஆகுமே?  என நாயகன்  மறுக்கிறான் . அப்போ    எங்க அம்மா, அப்பா   எனக்குப்போட் ட  நகைகளைக்கொடுங்க , அதை வித்து வெளிநாடு போய்க்கறேன்  என்கிறாள் நாயகி .பிரச்சனை வெடிக்கிறது 


 நாயகி  நாயகன் மீது  டொமஸ்டிக்  வயலன்ஸ்  கேஸ் ,டைவர்ஸ்  கேஸ்  என்   மானாவாரியாகப்போடுகிறாள் .நாயகி  வில்லி  ஆனதும்   நாயகன்  எப்படி  பேமிலி  கோர்ட்  ரூமில்    வாதாடி  தப்பிக்கிறான் என்பது மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆசீப் அலி  பிரமாதமாக நடித்திருக்கிறார் . கோர்ட்  ரூமில்  அவரது  வாதத்தைக்கேட்டு   ஐட்ஜே  பாராட்டுகிறார் . நாயகி ஆக   புது முகம்   துளசி  கச்சிதமாக நடித்திருக்கிறார் . நடிகை  ராதாவின்  2வது  மகளும் கடல்  படத்தின் நாயகியும்  ஆன  அந்தத்துளசி   இல்லை . இது வேற   துளசி . குடும்பப்பாங்கான தோற்றம் . கண்ணிய உடை 


நாயகன் க்கு ஆதரவாக  கோர்ட்டில்  வாதாடும்  பெண்  வக்கீல் ஆக ஸ்ரேயா   ருக்குமணி  அருமையான  பங்களிப்பு இவர்கள்  இருவரும்  இணைய மாட் டார்களா ? என  ஏங்க  வைக்கும்  கெமிஸ்ட்ரி 

.பாடல்களுக்கான இசையை  மூவரும் , பின்னணி இசையை ராகுல்   ராஜுவும்   செய்திருக்கிறார்கள் .. சாபின்  கே சோமன் தான் எடிட்டிங்க் .2 மணி நேரம்   படம் ஓடுகிறது . பின் பாதி ரொம்ப ஸ்லோ 


அஜய்  டேவிட்   தான்  ஒளிப்பதிவு . கண்ணுக்குக்குளுமை 


திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  சேது நாத்  பத்மகுமார் 




சபாஷ்  டைரக்டர்

 1  சீரியஸ் ஆன இந்தக்கதையை  முதல் பாதி காமெடி டிராமாவாக கொண்டு  போன  சாமார்த்தியம் 



2   கிரேசி மோகன் டைப்  வார்த்தை ஜால வசனங்கள் 


3 கோர்ட்டில்  வேறு ஒரு கேசில்  அப்பாவைப்பார்க்க விடாமல் குழந்தையை  மிரட்டும் பெண்ணின்  பச்சோந்தித்தனத்தைப்படமாக்கிய விதம் 


4  ஜீவனாம்சக்கேஸ்கள்  பெரும்பாலும்  பெண்களின்  பணம் பறிக்கும் ஆசை, வெறி தான் காரணம்   என்பதைத்துணிச்சலாகச்சொன்னது 


5 டொமஸ்ட்டிக்  வயலன்ஸ்   கேஸ்களில்  25% போய்க்கேஸ்   தான் பெண்களால்  ஜோடிக்கபப்டுகிறது என்பதை புள்ளி விபரங்களுடன் சொன்ன விதம் 


6 நாயகன் , நாயகி , பெண் வக்கீல்   மூவரின்  யதார்த்தமான நடிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


 1  எல்லாப்பெண்களும்  சீதை மாதிரி  நல்லவங்கன்னு சொல்லிட முடியாது . சூர்ப்பனகைகளும் இருக்காங்க 


2   எல்லாருக்கும் கனவுகள் உண்டு . ஆனா நம்ம கனவு இன்னொருவர் கனவை பாதிக்கக்கூடாது 


3 ஒரு பெண்ணை   வார்த்தையால் காயப்படுத்தினாலே 3 வருஷம் ஜெயில் தண்டனை உண்டு 


4  டைவர்ஸ்  பண்ணனும்னா  முதல்லியே  பண்ணிடுங்க . குழந்தை  பிறந்த பின் பண்ணினா  பல சிக்கல்கள் இருக்கும் , குழந்தையை   யார் வளர்ப்பது ? 


5  என்னது ? இவளுக்கு ஜீவனாம்சம்   தர்லைன்னா கோர்ட் என் வீட் டை ஜப்தி பண்ணுமா?  5 ஜட்டி தான் வீட்டில் இருக்கு 


6  பத்து நாட்கள்  என் வீட்டில்  இவ வந்து தங்கி இருந்தா அவ்ளோ தான் .  இதுக்காக  வாழ்நாள் முழுக்க  நான் மாதா மாதம் இவளுக்கு தண்டமாக  ரூ  6000 ஜீவனாம்சம்  தரணுமா?  


7  மீனுக்கே   நீந்தக்கற்றுத்தருகிறாயா?


8   அந்தப்பாத்திரத்தை த்திருப்பிக்கொடுத்திடுங்க 


அது ஐஸ்க்ரீம் டப்பா 


9   தயிர்   பாக்கெட்   உறை  வாங்கிட்டு   வர  சொன்னா   உன் பிரண்ட் காண்டம்   உறை   5 பாக்கெட்   வாங்கிட்டு  வந்திருக்கான் 


10  சொந்தக்காரங்க   வந்திருக்காங்க 


 அவ குளிச்சுட்டு இருக்கா 


 சரி உன் டிரஸ் எதனால  நனைந்திருக்கு ? 



11   இந்த   இடத்தை வாங்கி நான் என்ன செய்யப்போகிறேன் ?சூசையிட் பாயிண்ட் மாதிரி இருக்கு 


12 எதுக்காக  முடியை இப்படி  ஆம்பிளை   மாதிரி  கட்   பண்ணிக்கிட் டே 


 அம்மாவைக்கேட்டு தான் 


 எங்க அம்மாவையா?


 இல்லை  எங்க அம்மாவை


13  என்னது ?முதல்   இரவில் எதுவுமே நடக்கலையா? 


 அதுக்குப்பின் வந்த 10 இரவுகளும் எதுவும் நடக்கலை 


14   என்ன ;பிரச்சனை ?என என் கிட்டே   சொன்னா   நான் பேசிப்பார்ப்பேன் 


உனக்கு இன்ஸ் பெக் டரைத்தெரியுமா? 


ம்ஹும் , கர்த்தரிடம்  பேசுவேன் 












 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நிரந்தர  வேலை  இல்லாத  ஒரு மிடில்  கிளாஸ்  மாப்பிள்ளைக்கு  100 பவுன்  நகை போட்டுப்  பெண் கொடுப்பார்களா? . 2  பவுன்  கூட போட வக்கில்லாதவங்க எல்லாம் கவர்மெண்ட் மாப்பிள்ளை தான் வேணும்கறாங்க 


2   இந்தியா  முழுவதும் , அனைத்து  மாநில ங்களிலும்  இலவச  சட் ட  உதவி  மையம்  இருக்கிறது . வருமானம்  இல்லாதவர்க ளுக்கு  அரசாங்கமே  வக்கீல்  வைத்து  வாதாட  உதவுகிறது . நாயகன்  எதனால்  அதை அணுகவில்லை? 


3  குடும்ப நல  கோர்ட்களில்  தம்பதி  பெயர் சொல்லியே  அழைப்பார்கள் . கேஸ்   நெம்பர்  நினைவு வைத்திருக்கத்தேவை இல்லை 


4   நாயகன்  சார்பாக  வாதிட   வக்கீல்  இருக்கும்போது   நாயகன்  எதற் காகக்கிளைமேக்சில்  வாதாடுகிறான் ? 


5 நாயகி  செய்வது   வில்லித்தனம் .ஆனால்  பெண் ஆடியன்ஸின்  வரவேற்புத்தேவை   என்பதால்   பின் பாதியில்  மென்று முழுங்குகிறார்கள் 


6  டைவர்ஸ்  கேஸ் குடும்ப நல  கோர்ட்களில் விசாரணைக்கு  வர  மினிமம்  ஒரு வருடம் ஆகும் , அதுவரை வாய்தா வாய்தா   என இழுப்பார்கள் . ஆனால்  முதல்   வாய்தாவிலேயே  கவுன்சிலிங்க் , அ டுத்த வாய்தாவில் கேஸ்   என காட்டுகிறார்கள் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது   அபலை ஆண்களுக்கான படம் .பெண்களுக்கும் பிடிக்கலாம் .ரேட்டிங்  2.75 / 5 


Aabhyanthara Kuttavali
U.S theatrical release poster
Directed bySethunath Padmakumar
Written bySethunath Padmakumar
Produced byNaisam Salam
StarringAsif Ali
Thulasi
Jagadish
Harisree Ashokan
CinematographyAjay David Kachappilly
Edited bySobin K Soman
Music bySongs:
Bijibal
Muthu
Christy Joby
Score:
Rahul Raj
Production
company
Naisam Salam Productions
Distributed byDream Big Films (India)
Fars Films (Overseas)
Release date
  • 6 June 2025
Running time
121 minutes[1]
CountryIndia
LanguageMalayalam

0 comments: