Skip to content

Wednesday, December 30, 2015

பசங்க 2-திரை விமர்சனம்:

வித்தியாசமான இயல்பும் போக்கும் கொண்ட குழந்தைகள், முறைசார் கல்வியும் கட்டுப்பாடுகளும் கொண்ட பள்ளிக்கூடங்களில் தங்களைப் பொருத்திக்கொள்ளத் திணறுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றிப் பேசுகிறது பாண்டிராஜின் ‘பசங்க 2’.


கவின், நயனா இரண்டு சுட்டிகளும் துறுதுறுவென்று இருக்கிறார்கள். கவி னுக்கு நடனம் என்றால் பிடிக்கும். தேஜஸ் வினிக்குப் புனைவுலகில் சஞ்சரிக்கப் பிடிக் கும். யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே பின்பற்றாமல் கேள்விகள் கேட்பது இவர்கள் பழக்கம். பள்ளிக்கூடங்களின் முறைசார்ந்த, கட்டுப்பாடு மிகுந்த கற்பித்தல் இவர்களுக்கு சரிவரவில்லை. பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்கள் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோரைக் கூப்பிட்டுப் புகார் செய்கின்றன.



பள்ளிக்கூடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் கடுப் பாகும் பெற்றோர்கள் எடுக்கும் முடிவு குழந்தைகளை மேலும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள் கிறார்கள் என்பது மீதிக் கதை.


குழந்தைகள் தொடர்பான பல பிரச் சினைகளில் அடிப்படைக் கோளாறு பெரிய வர்களிடம்தான் இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது ‘பசங்க-2’ திரைப்படம். கற்றல் குறைபாடு கள், அதீத சுறுசுறுப்பு முதலானவற்றைக் குறைகளாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அவற்றை எப்படிக் கையாளலாம் எனபதையும் படம் தெளி வாகக் காட்டுகிறது. குறிப்பான பிரச்சினை களுக்குத் தீர்வு சொல்வதைக் காட்டிலும் குழந்தைகள் சம்பந்தமான சமூகத்தின் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான வழிமுறைகளின் மீது படம் கவனம் செலுத்துகிறது.



பள்ளிக்கூடங்கள் நடத்தப்படும் விதம், குழந்தைகள் தொடர்பான ஒவ்வொரு விஷ யத்திலும் நிலவும் பணத்தாசை, குழந்தை களுக்கான போட்டிகள் நடத்தப்படும் முறை, அவர்களை எடைபோடுவதில் உள்ள அடிப்படையான பிழைகள் எனப் பல விஷயங்களைக் கையாள்கிறது இந்தப் படம். பெரும்பாலான காட்சிகள் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் விதத்தில் அமைந்தாலும் இந்தப் படம் பெரியவர் களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தருவதுதான் முக்கியமே தவிர, சிலருக்கு மட்டும் பரிசளிப்பது அல்ல என்பதைச் சொல் வதோடு முடியும் படம் பெரியவர்களுக்குப் பல பாடங்களைச் சொல்கிறது.



இரண்டு குடும்பங்களைச் சுற்றி நகரும் முதல் பாதியில் குழந்தைகளின் இயல்பான போக்குகளும் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் நெருக்கடிகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. குழந்தைகளின் குறும்புச் சேட்டைகள் ரசிக்கும்படி இருந் தாலும் குழந்தைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் குழந்தைகளுக்கும் ஏற் படும் மன வருத்தங்கள் மனதைக் கனக்கச் செய்கின்றன. பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க கலகலப்பாகவும் அறிவுரைகளோடும் செல்கிறது.


குழந்தைகள் உலகையும், அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும், நடத்தைகளையும் நெருக்கமும் உருக்கமு மாகக் காட்டியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குழந்தைகளின் உலகம் அதன் இயல்போடு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. எனினும் படம் முழுவதும் ஆவணப்படத் தன்மை தூக்கலாக இருக்கிறது. சூர்யாவும் அமலா பாலும் வந்த பிறகு படம் முழுக்க முழுக்க அறிவுரைப் பாதைக்கு மாறுகிறது. சூர்யாவின் குடும்பத்தில் நிலவும் அதீத ‘சந்தோஷம்’ திகட்டுகிறது. எனினும் குழந்தைகளின் அற்புதமான நடிப்பும் ரசிக்கத்தக்க காட்சிகளும் படத்தைப் பார்க்கவைக்கின்றன.


கவினாக நடித்த நிஷேஷ், நயனாவாக நடித்த வைஷ்ணவி ஆகியோரின் சேட்டை கள், குறும்புகளுக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இருவரும் அற்புத மாக நடித்திருக்கிறார்கள். ராமதாஸ், கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா ஆகியோர் இன்றைய பெற்றோர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்கள்.


சூர்யா, அமலாபால் இருவரும் படம் சொல்ல வரும் சேதியைத் தங்கள் பக்குவ மான நடிப்பால் பார்வையாளர்களுக்கு எளிதாகக் கடத்திவிடுகிறார்கள். அமலா பால் எப்போதும் சிரித்துக்கொண்டும், சூர்யா ஓயாமல் அறிவுரை சொல்லிக் கொண்டும் இருப்பது நெருடுகிறது.


குழந்தைகளின் உலகம் எவ்வளவு வண்ணமயமானது என்பதைத் தனது ஒளிப்பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார் பாலசுப்பிரமணியெம். அரோல் கொரெலி இசை படத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. ‘சோட்டாபீம்’ பாடலும், ‘காட்டுக்குள்ள கண்ணைவிட்டு’ பாடலும் கவனம் பெறுகின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் காட்சிகளில் ‘பிசாசு' படத்துக் குத் தான் உபயோகித்த வயலின் இசையை அப்படியே உபயோகித்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.


படத்தின் முதல் நாயகன் வசனங்கள் தான். “பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தை களைத்தான் பேசுறாங்க.”, “மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” - இப்படிப் படம் நெடுக பாண்டிராஜின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.



குழந்தைகளின் அதீத சுறுசுறுப்பு முதலான பிரச்சினைகளைக் கையாள்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல் படத்தில் இல்லை. ஆனால், குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களைக் கையாளவும் வளர்க்கவும் வேண்டும் என்பது தெளிவாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.


ஆவணப்பட நெடி தூக்கலாக இருந் தாலும் குழந்தைகளுக்கான ரசனை யையும் பெரியவர்களுக்கான செய்தியை யும் சம விகிதத்தில் கலந்த விதத்தில் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டியிருக் கிறது ‘பசங்க 2’.


த ஹிந்து

ஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்பா?

1]ஜெ வைதிட்டி வாட்ஸ் ஆப்"பில் பேசியதாக டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு. # நல்லவேளை.வாட்சப் யாருமே யூஸ் பண்ணக்கூடாதுனு தடை வர்லை.



============



2]சிறார் குற்றவாளியின் வயது 18லிருந்து 16 ஆக குறைப்பு

# இதுதான் உங்க டக்கா?18 வயசுல பண்ணலாம்னு ஒத்தி வெச்சதை 16 லயே பண்ணுவான்


=============
இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம் # மப்புல இருக்கும்போது எதுனா உளறிட வேண்டியது ,தெளிஞ்சதும் மன்னிப்பு கேட்க வேண்டியது
3]

===============

4[தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி # அதுக்கு இயக்குநர் சேரன் ஒத்துக்கனுமே?


==============



5]ஆண்டுக்கு 1.66 கோடி பேர் ரயிலில் ஓசி பயணம்: பிடிக்க முடியாமல் திணறல் # டிடிஆர் யாரும் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் வர்றதே இல்ல




===============



6]அம்மாவான நடிகை அமலாபால்! # அவங்களும் அரசியலுக்கு வந்துட்டாங்களா? சொல்லவே இல்ல



=============



7]நான் இன்னும் தீபிகாவுடன் டச்சில் தான் இருக்கேன்- ஜூனியர் மல்லையா # ஓஹோ.டெய்லி நைட் வந்து டச் பண்ணிட்டு விடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா?



==============



8]பீப் பாடலைக் கேளுங்கள் - வக்கீல்; 'வேணவே வேணாம்!' - நீதிபதி # அண்ணன் ஆல்ரெடி தனியா கேட்டிருப்பாரு.பப்ளிக்கா கேட்க கூச்சம்



==============

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அருண் ஜேட்லி விரைவில் மீண்டு வண்ணமயமாக ஜொலிப்பார்... பிரதமர் மோடி # ராமராஜன் டைப் கலர் சொக்கா போடுவாரா?


================



10]

சிம்புவைக் கைது செய்ய போலீசாருக்கு எந்தத் தடையும் இல்லை!- உயர் நீதிமன்றம் # படத்துக்கு மட்டும் தடை போடுவாங்க


============



11]தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்ரமணிய சுவாமி # அதுக்கு இயக்குநர் சேரன் ஒத்துக்கனுமே?



==============

12]ஆண்டுக்கு 1.66 கோடி பேர் ரயிலில் ஓசி பயணம்: பிடிக்க முடியாமல் திணறல் # டிடிஆர் யாரும் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் வர்றதே இல்ல


============

13]அம்மாவான நடிகை அமலாபால்! # அவங்களும் அரசியலுக்கு வந்துட்டாங்களா? சொல்லவே இல்ல


================

14]காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை: சுமித்ரா மகாஜன் கண்டனம்#ஏன்?அவங்களும் மோடி மாதிரி பாரீன் டூர் அடிச்ட்டு இருக்காங்களா?


==================


15]துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் - அன்புமணி இன்னும் வர்லை.ரிசல்ட்டே வந்த மாதிரி பில்டப்"

=============

16]இளைய தலைமுறை டைரக்டர்கள் லேப்டாப்புக்குள் மூளையை வைத்து இருக்கிறார்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் திருடு போய்ட்டா சிரமம்


=================

17\பீப் சாங்கை உடனடியாக யூடியூப்ல இருந்து நீக்க வேண்டும் போலீஸ்
உங்க டக்கா சார். 10 லட்சம் பேர் போன்ல வாட்சப் மூலம் பரவியாச்

==============

18]திருநின்றவூர் ஏரிப்பகுதி வீடுகளில் தண்ணீர் தேங்க திமுகவே காரணம்-ஜெ# அதுக்குத்தானே மாத்தி ஓட்டுப்போட்டோம்?என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா

============
பஜிராவோ மஸ்தாணி படத்துக்கு எதிர்ப்பு...திரையரங்கம் முன்பு பாஜகவினர் ரகளை! # ஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்பா?



==============

20]சிம்புவை புடிக்க தனிப்படை போலிசார் பெங்களூர், ஹைதராபாத் விரைவு. பிடிக்கறதா கணக்கு எழுதி இவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போறாங்க போல


========================

பூலோகம்-திரை விமர்சனம்:

குத்துச்சண்டையில் யாரையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் கொண்ட உக்கிரமான வீரனால் வணிகச் சூழலின் சூழ்ச்சிகளை எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதே ‘பூலோகம்’.


வட சென்னையில் ஒரு காலத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்று பல குத்துச்சண்டை குழுக்கள் இருந்தன. அத்தகைய இரண்டு ‘பரம்பரை’களுக்குள் இருக்கும் ஜென்மப் பகையின் தற்கால அத்தியாயம்தான் படத்தின் கரு.



எதிர் பரம்பரை வீரரிடம் தோற்ற அவமானத்தால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறார் ஜெயம் ரவியின் அப்பா. அந்த பரம்பரையின் இன்றைய வாரிசை வென்று பழிதீர்க்கத் துடிக்கிறார் ரவி. அதற்காக வெறித்தனமாகப் பயிற்சி செய்கிறார். எதிராளி ஆறுமுகமும் (ராஜேஷ்) இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடு தயாராகிறார்.


பகைமையின் இந்த வெறியைப் பணமாக மாற்ற விளையாட்டு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் பிரகாஷ் ராஜ் திட்டமிடுகிறார். அவர் நடத்தும் பெரிய அளவிலான போட்டியில், ரவியின் அடி தாங்காமல் கோமாவில் படுத்துவிடுகிறார் ராஜேஷ். இதனால், ரவிக்கு வெறி மறைந்து குற்ற உணர்வு தலைதூக்குகிறது. குத்துச்சண்டையே வேண்டாம் என ஒதுங்கி சாமியார்போல வாழ்கிறார்.


ரவியின் குத்துச்சண்டை வெறியை வைத்து பல திட்டங்கள் போட்டிருந்த பிரகாஷ் ராஜ், அவரை மீண்டும் சண்டையில் இறக்க முடிவு செய்கிறார். பிரகாஷ் ராஜின் சதி வலையில் விழும் ரவி, அவரது சதிகளை புரிந்துகொண்டு, அதே விளையாட்டில் அவரை தோற்கடிக்க முடிவுசெய்கிறார். தன்னைவிட பல மடங்கு பலம் பொருந்திய அமெரிக்க குத்துச்சண்டை வீரரோடு இதற்காக மோதவேண்டி இருக்கிறது. அந்த போட்டியையும் பிரகாஷ் ராஜின் வியூகங்களையும் ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பது ‘பூலோகம்’ கதை.


குத்துச்சண்டையின் ஆக்ரோஷத்தையும் வட சென்னையின் பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாக பதிவுசெய்துள்ளார் இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன். சண்டைக்குத் தயாராகும் காட்சிகள், சண்டைக்கு முன்பு அம்மன் கோயிலில் ரவி மேற்கொள்ளும் சடங்கு, சாவின்போது பாடப்படும் கானா பாடல் காட்சி, சாமியாராக வாழும் ரவியை மீண்டும் சண்டையில் இறக்குவது ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான நாயக அடையாளங்கள் அதிகம் இல்லாமல் ஆத்திரமும் வேகமும் கொண்ட சராசரி மனிதராக ரவியைச் சித்தரித்துள்ளது பாராட்டுக்குரியது. எதையும் பணமாக்கத் துடிக்கும் வணிக மோசடியையும் ஊடகங்களின் விரும்பத்தகாத போக்கையும் கதையில் பொருத்தியிருக்கிறார்.



சண்டைகளைக் காட்சிப்படுத்திய விதம் ஆர்வ மூட்டக்கூடியதாக இருக்கிறது. மிகவும் அபாயகரமான ஜார்ஜோடு நடக்கும் குத்துச்சண்டையைவிட, போட்டிக்கான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் காட்சியில் ரவி - பிரகாஷ் ராஜ் இடையே நடக்கும் சொல் யுத்தம் விறுவிறுப்பு.



எல்லாம் சரிதான், சிக்கலான வணிக மோசடிகளை ரவி எப்படித் தெரிந்துகொண்டார் என்பது சொல்லப்படவே இல்லை. ஒப்பந்தம் போடும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்குப் பிறகு ரவி பேசும் அரசியல் ஆகியவை வசனகர்த்தா எஸ்.பி.ஜனநாதனின் குரலாகவே ஒலிக்கிறது.



அமெரிக்க குத்துச்சண்டை வீரரை பெண் வேடத்தில் அலையவிடுவது, ரவியின் திருமணத்துக்கு அவர் வந்து சவால் விடுவது போன்ற காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. அமெரிக்க குத்துச்சண்டை வீரரை அழைத்துவந்து மோதவிடுவது, வெவ்வேறு எடைப் பிரிவில் இருப்பவர்கள் பரஸ்பரம் மோதுவது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.


பழிவாங்கும் வெறியோடு கூடிய குத்துச்சண்டை வீரரின் கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அவரது உடல்மொழி, முகபாவனைகள் பாத்திரத்தின் தேவைக்கேற்ப உள்ளன. வசன உச்சரிப்பில் அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். படம் முழுவதும் வரும் த்ரிஷாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வேலையும் இல்லை. எல்லோரையும் தனது வணிக விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றும் வில்லன் வேடத்தில் பிரகாஷ் ராஜ் கச்சிதம். பயிற்சியாளர்களாக வரும் பொன்வண்ணன், ஷண்முகராஜா மனதில் நிற்கிறார்கள்


. நாதன் ஜோன்ஸின் தோற்றம் பிரமிக்கவைத்தாலும், நடிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.


தன் சீடர் இயக்கியுள்ள படத்துக்கு எஸ்.பி.ஜன நாதன் வசனம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல, படத்துக்கு அது பெரிய பலம். வசனங்களில் தெறிக்கும் அரசியல், கூர்மையும் காரமும் கொண்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத் தொகுப்பு நேர்த்தியாக இல்லை. நம்பகத்தன்மை விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் வணிக அரசியலைப் பேசும் நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கும்.


the hindu

சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா?இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்?

ரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு தம்பதியினர் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கிறது சீன அரசு. 1978-ம் ஆண்டு முதல் இருந்து வரும் சர்ச்சைக்குரிய 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை' திட்டத்தை நீக்கியிருப்பது சீன மக்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்?

திட்டம் பிறந்த கதை

அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய சீனாவின் மக்கள் தொகை. அப்போது, இதனை சுமையாகக் கருதாமல், சீனாவின் தனித்துவமான பலமாக கருதியது சீனக்கம்யூனிச கட்சி.

“அதிக மக்கள் தொகை என்பது அதிகமான மக்கள் சக்திக்கு அடையாளம். சுதந்திரமாக செயல்படும் 600 மில்லியன் மக்கள் என்பது, அணுசக்தியை விட பத்தாயிரம் மடங்கு வலிமையானது” என்றார் அன்றைய கம்யூனிச கட்சியின் ஹூ யாபேங். ஆனால் மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவை வளர, வளர மக்களின் இறப்பு விகிதம் குறையத்துவங்கியது. பிறப்பு விகிதம் சீராக அதிகரித்துக்கொண்டே சென்றது. இதை 1950களிலேயே உணரத்துவங்கியது சீன அரசு. அதிகரிக்கும் மக்கள் தொகை ஒரு வகையில் பிரச்னைதான் என்பதை கண்டுகொண்டது. இதற்கு காரணமாக அன்று அமைந்தது, அப்போது நாட்டில் வந்த வெள்ளம்.  லட்சக்கணக்கான மக்களை வெள்ளம் வெகுவாக பாதிக்க, அதன் பின்பு வந்த உணவுப்பஞ்சம், நாட்டை உலுக்கி எடுத்தது. அதிகமான மக்களுக்கு போதுமான உணவளிக்க முடியாமல் அரசு திணறியது. பின்னரே தனது பெருமைக்கான சுருதியை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, இதற்கான தீர்வுகளைப்பற்றி சிந்திக்கத் துவங்கியது.

1970களில், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. உற்பத்தியை விட, நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகமானதால் உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றிலும் பற்றாக்குறை, போட்டி என சிக்கல்கள் உருவாகத் தொடங்கியது. அரசு தலையிட்டு எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை வந்தது. 60 கோடியாக இருந்த சீனாவின் மக்கள் தொகை, 80 கோடியை எட்டியது. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்கட்டமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சீன கம்யூனிசக் கட்சி 'Late, Long and Few' என்ற வாசகத்தை பிரபலமாக்கியது. அதாவது தாமதமாக திருமணம் செய்து, குறைவாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கட்டும் என மென்மையாக, அறிவுரைகள் வழங்கியது. குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ளாது இருக்க, குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தம்பதிகளை, குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள ஊக்குவித்தது.

1976-ல் மாவோ மறையவே, ஆட்சிப்பொறுப்பு அப்படியே, டெங் ஜியோபிங்கிடம் வந்தது. சீனாவை பொருளாதார ரீதியாக ஆசியாவில், வல்லரசாக மாற்ற கனவு கொண்டிருந்தார் டெங். அதற்கு ஒவ்வொரு சீனக்குடிமகனும் ஒத்துழைக்க வேண்டுமே? அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால், அவர்களது தனி நபர் வருமானம் உயர வேண்டும். அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும். இதற்கு தடையாக இருப்பது எது என யோசித்தார். அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக வளர்வது கடினம் என்பதோடு, சீனாவின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என நினைத்தார். மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை குறைக்க விரும்பினார். இதன் விளைவாக 1978-ல் அறிமுகமானது 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை திட்டம்'.

அன்று முதல் இன்று வரை இருக்கும் திட்டத்தின் வரலாறு இதுதான். இதில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டும் உள்ளது. நாட்டின் சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஊர்களில், சில இடங்களில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2008-ல் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, 70,000 மக்கள் மாண்டனர். 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம். அப்போது பலரும், தங்கள் ஒரே குழந்தையையும் விபத்தில் இழக்க, அவர்களுக்கு மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து, பார்த்து சலுகைகள் அளித்தது மிகப்பெரிய எதிர்ப்பையும் கிளப்பின. ஆனால், அந்த சலசலப்புக்கு கொஞ்சமும் அஞ்சாமல், கொள்கையில் உறுதியாக நின்றது சீனா.

சலுகைகள் என்ன?

இந்த சட்டத்தை, நாடு முழுக்க கொண்டு சேர்ப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அரசுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே இந்த சட்டத்தை பின்பற்றும் தம்பதிகளுக்கு அரசு மானியங்கள், பள்ளி, கல்லூரிகளில் முன்னுரிமை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வங்கிக் கடன்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என அள்ளி அள்ளிக்கொடுத்தது அரசு. அரசு ஊழியர்களின் குழந்தைகள் 14 வயதை எட்டும் வரை, அவர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் அளித்தது. இதே சலுகைகள், தங்கள் திருமணத்தை தள்ளிப்போடும் மக்களுக்கும் அளித்தது சீன அரசு.

இதில் யாருக்கும் பிரச்னைகள் இல்லை. ஆனால், இந்த சட்டத்தை பின்பற்றாத மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதிகள்தான் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு கடும் அபராதம் விதித்தது. இதை செலுத்த முடியாமல் போகும் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்வது, சட்ட உரிமைகளை மறுப்பது போன்றவை மனித உரிமை ஆர்வலர்களின் கோபத்தை தூண்டியது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 1 கோடிக்கும் மேல் கட்டாய கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்பது வேதனையான விஷயம்.

கருப்பு குழந்தைகள்

சீனாவில் மொத்தம் 13 மில்லியன் கருப்பு குழந்தைகள் இருக்கிறார்கள். யார் இவர்கள்? ஒரு தம்பதி- ஒரு குழந்தை திட்டத்தை மீறி பிறக்கும் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு,  'சமூக பாராமரிப்பு நிதி' எனத் தனியே 5,000 யுவான் கட்டணம் செலுத்த வேண்டும். இது மிகமிக அதிகமான கட்டணம் என்பதால், ஏழைகளால் செலுத்த முடியாது. எனவே, அவர்களின் குழந்தைகள் கருப்புக் குழந்தைகளாக கணக்கில் கொள்ளப்படுவர். ஹூகோ என்பது சீனாவின் குடிமகனாக பதிவு செய்து கொள்ளும் அடிப்படை சட்டநெறிமுறை. இவர்களுக்கு அதில் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு கிடையாது. எனவே, இவர்கள் சீனக்குடியுரிமை பெற முடியாது. மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது. பள்ளிகளில் சேர முடியாது. பிறப்பு சான்றிதழ் எதுவும் கிடைக்காது என்பதால், வங்கிக்கணக்கு, வேலை என எதுவும் கிடைக்காது. சொந்த வீடு கட்டக்கூட அனுமதி கிடையாது. இப்படி சொந்த நாட்டிலேயே அகதிகளாக, அகதிகளை விட மோசமாக  வாழும் இவர்களின் எண்ணிக்கை மட்டுமே 2010 கணக்கெடுப்பின்படி, 13 மில்லியன். இது போர்ச்சுக்கல் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம்.

“நான் இங்குதான் பிறந்தேன். ஆனால், இந்த நாட்டின் குடிமகளுக்குரிய எந்த உரிமையும் எனக்கு கிடையாது. என்னிடம் ஹூகோ இல்லை என்பதால், என்னை சுற்றியுள்ள அனைவரை விடவும் நான் வித்தியாசமானவளாக இருக்கிறேன். நான் நாட்டில் புறக்கணிப்படாத இடங்களே இல்லை. பல நாட்கள் பள்ளிகளின் வெளியே நின்று, பாடம் நடத்துவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஆனால், பாடம் படிக்கத்தான் முடியாதே...” என்கிறார் 22 வயது பெண்ணான லீ.

இப்படி சீனாவின் கருப்பு குழந்தைகளின் சோக பக்கங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது, நீக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம் இவர்களுக்குத்தான் வாழ்க்கையின் இன்ப வாசலை திறந்து விட்டிருக்கிறது. இப்படி நிழலில் வாழும் இவர்களை,  சீனக்குடிமக்களாக எந்தவொரு கட்டணமும் இன்றி, பதிந்து கொள்வோம் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஜீ ஜின்பிங். இதன் மூலம் வருங்காலத்தில் எல்லா சட்ட உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் சீனாவின் மக்கள்தொகை ஏன் குறையவில்லை?

இப்படி இவ்வளவு கடுமையான தண்டனைகள், கட்டுப்பாடுகள் இருந்தும் ஏன் இன்னும் சீனாவே மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கிறது? இதற்கு காரணம் 1980களிலேயே சீனாவின் மக்கள் தொகை 98 கோடியாக உயர்ந்து விட்டது. அதற்கு பிறகு வந்த கட்டுப்பாடுகளால் மட்டும் கடந்த 38 ஆண்டுகளில் 40 கோடி குழந்தை பிறப்புகளை தடுத்திருந்தாலும், நிலைமை ஏற்கனவே கைமீறிப்போயிருந்தது. இதனால்தான் தற்போது சீனாவின் மக்கள்தொகை 137 கோடியாக இருக்கிறது.

இப்போது ஏன் கொள்கையை தளர்த்துகிறது சீனா?

தற்போது சீனாவில் இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை, அதாவது 60 வயது தாண்டியவர்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டியுள்ளது. இது இன்னும் சில வருடங்களில், அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, முக்கியமாக உழைப்பாளர் சக்திக்கு தேவையான இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். பணியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

அடுத்த அடி, பாலின விகிதம். ஒரே ஒரு குழந்தைகள் மட்டுமே, பெற்றுக்கொள்வதால் பெரும்பாலான நகரங்களில் ஆண்-பெண் விகிதத்திலும் பெரிய அளவிலான சமச்சீரற்ற தன்மை உருவாகியிருக்கிறது. இது சமூக பாலின சமத்துவத்தையும் பாதிப்பதால், இந்த பிரச்னையும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருக்கிறது சீனா. இதன் மூலம் 13 மில்லியன் தம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் எனவும் அறிவித்திருக்கிறது. இதன்படி, அடுத்த ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும். தற்போதைய பிறப்பு விகிதத்தை வைத்துக் கணக்கிட்டால், 2035-ல் 146 கோடியாக மக்கள் தொகை உயர்ந்து விடும்.

இது நிச்சயம் வரவேற்கத்தக்கதா?

இல்லை என்கின்றனர் சீனாவின் மனித உரிமை ஆர்வலர்கள். ஒரு தம்பதி-ஒரு குழந்தை என்னும் திட்டம் 'ஒரு தம்பதி- இரு குழந்தை' என்று மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவதாக பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சட்ட உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஒரு குழந்தையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த சுதந்திரமும் இதனால் கிடைக்கவில்லை. ஏனெனில் ஒரு தம்பதியினர் எவ்வளவு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசு எப்படி முடிவு செய்யலாம்? அது அவர்களின் தனிமனித உரிமை அல்லவா? அதைப்போலவே, இவ்வளவு ஆண்டுகள் கழித்து, திருத்தப்பட்டுள்ள இந்த திட்டம் இனி போதும் என நினைத்தால், மீண்டும் பழையபடி, சட்டத்தை மாற்ற அரசுக்கு சில நிமிடங்கள் போதுமே? எனக்கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.

ஆக, இந்த விஷயத்தில் சீனாதான் இன்னும் பல காலம் நம்பர் 1.

-ஞா.சுதாகர்

மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட் குடுத்திருக்கீங்க?

1]மிஸ்! உங்க காலைக்கொள்கை என்ன?


குளிக்காமயே சாப்பிடறது.

மதியக்கொள்கை?
தூக்கக்கலக்கத்துலயே லஞ்ச் எடுத்துக்கறது


================

2]ஜட்ஜ் = பீப் ஸாங் சர்ச்சை பற்றி ஏதாவது சொல்லனுமா?


கைதி = ட்விட்டர் பாலோயர்ஸ் 10 லட்சத்தை தொட்டுட்டேன்



===============

3]டாக்டர்.இவங்க நர்ஸ் மஞ்சுளாவா?


இல்லை.சியாமளா.காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சுளாவாதான் தெரியுமாம்



===============

4]எதுக்காக மிஸ் பரிமளாவை ஓட்டிட்டு இருக்கே?


எத்தனை நாளைக்குத்தான் குண்டுச்சட்டில குதிரையை ஓட்றது?பரி ன்னாலும் குதிரை தானே?


=================

5]யுவர் ஆனர்.மனசளவில் எனக்கு 17 3/4 வயசு தான் ஆகுது.


இந்த டகால்டி எல்லாம் வேணாம்.பீப் சாங் பாடுனது சட்டப்படி குற்றம்



=============

6]வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த.வழக்கில் சிம்புவைக்கைது பண்றீங்களா?அவருக்கு 4,வருசமா வருமானமே இல்லயே?


ட்விட்டர்ல.10 லட்சம் பாலோயர்ஸ்


==============\\


7]ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை பாலோ பண்றே?


சமூக வலைத்தளத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப்பின்னும் என்னை மாதிரி பல பாலோயர்ஸ் இருப்பாங்க


==============

8]தலைவரே! சுற்றுலாத்துறையை நவீனமயமாக்கப்போறீங்களாமே?


ஆமா.முதல் கட்டமா மூணாறு டூரிஸ்ட் ஸ்பாட்க்கு 18 ன்னு பேர் வைக்கப்போறேன் (3*6=18)


==============

பிரேமம் தமிழ் ரீமேக் ல ரேப் சாங் வெச்சா எப்டி பாடுவாக?

மலர் கெடுத்தேன்.கை குலுங்க வளையல் இட்டேன்.

==============

10]கடல் கன்னியை நேர்ல பார்த்திருக்கியா?


கடல் ல குளிக்கற கன்னிப்பொண்ணுதான் கடல் கன்னின்னா நேர்ல
சைடு ல பார்த்திருக்கேன்


=============

11]மிஸ்! சாப்ட்டாச்சா?


இன்னும் இல்லை சார்.
ஏன்?
சாப்பிட்ட பின் ஒரு ஒர்க் இருக்கு.தர்றேன்னீங்களே? சாப்ட்டாதானே தருவீங்க?


==============

12]பிசிக்ஸ் மிஸ் பிந்து = எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.



ஓஹோ.அப்போ விஜய் ரசிகைக்கு அஜித் ரசிகனைத்தான் பிடிக்கும்னுஅர்த்தமா?

=============
13]மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட் குடுத்திருக்கீங்க?


மேடம்.இது செல்வராகவன் படம்.டபுள் ஏ கொடுக்க முடியல


==============

14]டியர்.ஜனங்க நான் தான் இந்தப்பட டைரக்டர்னு நம்பிடுவாங்களா?

டைட்டிலைப்பார்த்தா நம்பிடுவாங்க.படத்தை/ரிசல்ட்டைப்பார்த்தா நம்பமாட்டாங்க


=============

15]டியர்.கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு வரை எனக்காக என்ன செஞ்சீங்க ?


டெய்லி சமையல் செஞ்சேனே? போதாதா?

==============

16]சார்.உங்க பையன் பிரம்மாண்டமான மார்க் எடுத்திருக்கான்னீங்க?வெறும் 2 மார்க்!
அடப்பாவி.ஷங்கர் + ரஜினி பட டைட்டிலைத்தான் அப்டி சொல்லிட்டானா ?


===============

17]மிஸ்! கேன் ஐ சிட் ஹியர்? டேய்.கேனை.இது லேடீஸ் ஸீட்.நீ ஆம்பளையா? பொம்பளையா?  

===================

18]யுவர் ஆனர் .ரேப் பன்றது சரியா?தப்பா?
தப்புதான். அப்போ எதுக்கு வயது வரம்பு? 13 டூ 15 3/4,வயசு வரை எல்லாரும் ரேப் பண்ணலாம்னு சொல்ற மாதிரி

=================
உலகத்துக்கே தெரிஞ்ச கிறிஸ்மஸ் தேதி என்ன?எப்போ வருது?னு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே டவுட் கேட்கறான்


.நல்ல வேளை நியூ இயர் எப்போ?னு கேட்கலை


=============

20]டியர்.இன்னைக்கு புதுசா ஒரு வெரைட்டி சமைச்சேன்.பேரு தான் வாய்ல நுழையல.
சரி.நீ செஞ்ச சமையல் வெரைட்டியாவது வாய்ல நுழையுதா?ன்னு பார்ப்போம்.

=================


Tuesday, December 29, 2015

கேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்

அது என்னவோ தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செய்தியாளர் சந்திப்பென்றாலே எட்டிக்காயாக கசக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடம் நியாயமாக கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டால்கூட, சிடுசிடு கடுகடுவென கடுப்படிக்கிறார். அந்த கடுகடுப்பில் நேற்றைய ‘தூ’ சம்பவம் அடுத்தகட்ட அத்தியாயத்தை எட்டியிருக்கிறது. இதற்கு முன் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை இப்படி கடுப்படித்த சம்பவங்களில் சில இங்கே...   

1) கடந்த 2013-ம் ஆண்டு 3ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று கேட்டதோடு, 'வீம்புக்கென்றே கேட்பீங்க..!' என்று சாடினார்.






2) கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சி எம்எல்ஏக்களை டெல்லிக்கு விஜயகாந்த் அழைத்து சென்று பிரதமர் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசப்பட்ட விஜயகாந்த், "நீ போகும் வரை நான் பேச மாட்டேன். கம்முனு இருக்கணும். ஒழுங்கா பேட்டிக் கொடுத்துக்கிட்டு இருக்கிறேன். உனக்கு கொடுக்கணும் என அவசியமில்லை. நா பட்டுபட்டுனு பேசுவேன். போயா...!' என்று ஆவேசப்பட்டார்.






3) மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி தடுக்கும் வகையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் அதிமுகவை தவிர்த்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். பிரதமரை சந்தித்து பேசிய பின்னர், குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைதியான முறையில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்று கொண்டிருந்தது. பிரதமரை சந்தித்து பேசியது பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்த விஜயகாந்திடம் இடையிடையே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை; படித்து விட்டு பதில் சொல்கிறேன்" என்றார். 

பின்னர் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று எரிச்சலடைந்த விஜயகாந்த், கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது கோபப்பட்டதோடு, அந்த செய்தியாளரை பார்த்து, "உனக்கு கொம்பா முளைச்சிருக்கு, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே...?" என்றார் ஆவேசத்துடன். ஒரு கட்டத்தில் உனக்குக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிய விஜயகாந்த், "சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி வீசி விடுவேன்" என்றார்.







4) 2015 அக்டோபர் 17ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு செய்தியாளர், "ஏன் சார் திடீர் மவுனம்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், "என்ன மவுனம், நான்தான் பேசிக்கொண்டே இருக்கேனே... கேமராவை பார்த்து பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். என்ன மவுனம் என்று நீங்கள்தான் சொல்லணும்?' என கோபத்துடன் கூறினார். மேலும், சிவாஜி சிலை தொடர்பான கேள்விக்கு, "அதெல்லாம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இடமே மாறி வந்து கேட்கிறீங்க!' என்று ஆவேசப்பட்டார்.


5) கடந்த 2012 அக்டோபர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்ட விஜயகாந்த், "இந்தக் கேள்விகளை ஜெயலலிதாவிடம் போய் கேளுங்கள் என்று கூறியதோடு, தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளரை, "உன் பத்திரிகை எனக்கு சம்பளமாடா தருது, நாயி!" என அருவருக்கத்தக்க முறையில் பேசி,  அவரை அடிக்கப் பாய்ந்தார். மேலும் கேள்வி கேட்க முற்பட்ட ஒரு செய்தியாளரிடம்,  "உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்குக் கிடையாது; பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா...." என்று ஆவேசப்பட்டார்.





6) சென்னையில் நேற்று கடந்த (டிசம்பர் 27ம் தேதி) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த், "ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா? இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே? பயப்படுவீங்க... பத்திரிகைகாரங்களா நீங்க.... த்தூவ்...!" என்று செய்தியாளர்களை பார்த்து உமிழ்ந்தார்.


 


அப்போது, அந்த செய்தியாளர், "ஜெயலலிதா பிரஸ் மீட் கொடுத்தால் கேட்கத்தான் செய்வோம்" என பதில் சொன்னதற்கு, "ஏன் பிரஸ் மீட் கொடுக்கலை என்று கேளுங்கள். உங்க முதலாளிங்க சொன்னா நீங்க கேப்பீங்க" என்று செய்தியாளர்களைப் பார்த்து கூறினார்.

vikatan