Monday, April 30, 2012

உதாரண புருஷன்னா எப்படி இருக்கனும் தெரியுமா? ஹி ஹி ( ஜோக்ஸ்)

நேற்று கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. ஒரே பிரசவத்தில் பிறந்த உத்தமன், உத்ரஜா, உத்தமா, உத்தரா, உத்ரஜா ஆகிய பஞ்சரத்தினங்களின் தாயார் ரெமாதேவி நேற்று என்னை போனில் அழைத்து ஐந்து பேரும் பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். பஞ்சரத்தினங்களுக்கு வாழ்த்துக்கள்!
1.அத்தான், எல்லா  பெண்களுக்கும் நீங்க உதாரண புருஷனா இருக்கனும்..


. ஹி ஹி அந்த உதாரணத்தை மட்டும் கட் பண்ணிடேன்


-------------------------

2. ஈரோடு பஸ் ஸ்டேண்ட்ல பெண்களின் குறை தீர்க்க, அவங்க பாதுகாப்புக்கு மகளிர் காவல் நிலையம் ஓப்பன்.. அதுல ஒன்லி 2 பேருதான். சேஃபா இருப்பாங்களா?


---------------------------

3. நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் நம்மால் மனம் காயப்படும்போது நமக்கு ஏற்படும் வலிதான் உலகின் மோசமான வலி


-------------------

4. உலகில் தோன்றும் பல மனஸ்தாபங்களுக்குக்காரணம் இந்த உலகம் நம்மை நம்புவதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்றாங்களோ அதை நம்புவதே!



----------------------

5.பெண்களிடம் ரகசியம் தங்காது... ஆண்களிடம் செல்வம் தங்காது


6. சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தால் சலுகை: புது திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு # மேடம், உங்களுக்குத்தான் சூரியன்னாலே ஆகாதே?


-

----------------------------------


7. ஆண்கள் தூக்க மாத்திரைகள் மாதிரி!! பெண்கள் தூக்கம் வர்லைன்னா அந்த மாத்திரையை. யூஸ் பண்ணிக்குவாங்க. 


---------------------------

8. தமிழகத்தில் மக்கள் புரட்சிக்கு பின் தேர்தல் வரும்?: ஸ்டாலின் # அதாவது கலைஞரின் மக்கள் கனிமொழி, அழகிரி?

------------------


9. ஃபிகருங்க  தில்லா பதில் சொல்றப்போ பசங்க லொள்ளா பதிலடி கொடுக்கத்தெரியும்,ஆனா சில பல காரணங்கள்க்காக அடக்கி வாசிக்கறாங்க


--------------------


10. சிம்ரனை ரசித்தது ஒரு காலம் = நாங்க எல்லாம் ஒரு காலத்துல தியானம் செய்யாத நாளே இல்லை # சிம்ரன் = தியானம்


----------------------------


11. அடக்க ஒடுக்கமா பொண்ணுங்க இருந்தது அந்தக்காலம், ஆம்பளைங்களை அடக்கி ஒடுக்கி தான் சொன்னபடி கேட்க வைப்பது இந்தக்காலம்


------------------------------



12. காதல் மொழியில் போடா - போடி யை விட கிளு கிளுப்பைத்தருவது வாடா - வாடி


------------------------


13. வட்டி கட்டறதுக்கு மனசே வர்றதில்லை. ஆனா குட்டி கட்றதுக்கு இயற்கை சான்சே தர்றதில்லை # எ கீ 


--------------


14. பெண் பார்க்க வந்தப்ப எதுக்கு கலைஞர் டி வில இசை அருவி பார்க்க சொல்றீங்க? 


ஹி ஹி அப்போதான் பெண் பெட்டர்னு தோணும்


---------------------------


15. தங்கதுரை புது  செல் நெம்பர் அனுப்பினார், நான் தங்க்ஸ் -2 அப்டினு ஸ்டோர் பண்ணேன், 


 மனைவி -யாருய்யா அந்த 2வது தங்கமணி?


-------------------------


ஹி,ஹி,ஹி,........... சரக்கு பத்தல போல இருக்கு

16. நான் கடவுள்-னு எந்த கடவுளும் தைரியமா முன் வந்து சொன்னதே இல்லை # விதி விலக்கு - டைரக்டர் பாலா


----------------------

17. என் இங்க்லீஷ் நாலெட்ஜ் வளர்ந்ததுக்கு காரணமே

 1. இங்க்லீஷ் டீச்சர் 

2. அவர் பெண் 

3 கனடா டாக்டர் 

4. தாளம் எஃப் எம்


--------------------------

18. மிஸ். ரொம்ப நாளா உங்களை ஃபாலோ பண்றேன், ஆனா ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலையே? 

எதுக்கு? 


ட்விட்டர்ல எல்லாம் டெல்லிங்க். 


--------------------------


19. இன்னும் 40 நாட்களீல் மின்சாரம் சரி ஆகிடுமாம். அது வரை கேரளா டூர் போலாம்னு இருக்கேன்


---------------


20. வெண்டைக்காய் மூளைக்கு நல்லது, ஏன்னா அது லேடீஸ் ஃபிங்கர் ஹி ஹி 


----------------





டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 
 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 
 திரட்டியில் இணைத்து விடுங்கள்.

Sunday, April 29, 2012

தேன்ன்ன்ன்ன்ன் அடை சந்தானம் ஜோடி மதுமிதா பேட்டி - கிடாவெட்டு

பத்திரிகையில் 'சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் நல்ல கதை தேடிக்கிட்டு இருக்கார்’னு ஒரு பெட்டிச் செய்தி படிச்சேன். உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து கதை சொன்னேன். எதுவும் சொல்லாம, கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அப்படிக் கிடைச்சது தான் 'தொலி பிரேமா’ வாய்ப்பு. 

சி.பி - அடடா. நம்ம ஆளூங்களூக்குத்தெரிஞ்சிருந்தா கைலி பிரேமான்னு டப் பண்ணி ரிலீஸ் பண்ணீ 4 காசு பார்த்திருப்பாங்களே?


அடுத்தடுத்து தெலுங்கில் 13 வருஷத்துல எட்டுப் படங்கள். ஹிட் டைரக்டர்னு பேர் கிடைச்சது. என்ன... சினிமாவில் வரும் ஒரே பாட்டு... ஓஹோ வளர்ச்சி மாதிரி நாலே வரியில் சொல்லிட்டேனா என் கதையை!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் கருணாகரன்.


 தெலுங்குப் படவுலகில்  வெற்றியைக் குத்தகைக்கு எடுத்த தமிழர். இரண்டு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகளுக்குப் பிறகு 'ஏனென்றால்... காதல் என்பேன்’ மூலம் தமிழில் கதை சொல்ல வந்திருக்கிறார். 


சி.பி - கூட்டுத்தொகை 3 வருது ஹி ஹி   (ஏனென்றால்... காதல் என்பேன் = 12 = 3)நாமம் போடாம இருந்தா சந்தோஷம்


 ''தேவகோட்டைக்காரன் நான். பாலிடெக்னிக் படிக்க ஆர்வம் இல்லாம, சென்னைக்கு வந்தேன். அங்கே எதுவுமே ஈஸி இல்லை. ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது லாட்டரியில் பரிசு விழற மாதிரி ஆச்சு. எனக்கு நல்லா மிமிக்ரி வரும். நண்பர்களிடம் அதைச் செஞ்சு காமிச்சு காசு வாங்கிச் சாப்பிடுவேன். எப்படியோ பல்டி அடிச்சு டைரக்டர் கதிர்கிட்ட சேர்ந்தேன். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில்தான் அந்தப் பெட்டிச் செய்தியைப் படிச் சேன்!''  

சி.பி - கதிர் படம்னாலே காதல் தான். அதான் நீங்களூம் லவ் ஸ்டோரி செலக்ட்? வெரி குட்..  காதல் வைரஸ் மாதிரி டப்பா படம் தராம காதலர் தினம் மாதிரி ஹிட் படம் தர வாழ்த்துகள்


1. ''இத்தனை வருஷத்தில் தமிழ்ல ஏன் படம் பண்ணவே இல்லை?''


''நிறையத் தடவை கூப்பிட்டாங்க. ஆனா, தெலுங்கில் நான் படம் பண்ணின ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவங்களோட அடுத்தடுத்த படங்களிலும் என்னை கமிட் பண்ணிட்டே இருந்தாங்க. அந்த அளவுக்கு அங்கே ஹீரோ, தயாரிப்பாளர்கள்னு எல்லாரும் நண்பர்களாப் பழகிட்டோம். 


 இருந்தாலும் தமிழ்ல படம் பண்ண ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. அதுக்கு இப்போதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதோ ஆட்டத்துக்கு ரெடி. இது அசல் தமிழ்ப் படம்.  ராம், தமன்னா ஜோடி. இதுக்கு மேல சினிமாவில் காதலைப் பத்திச் சொல்ல எதுவும் இல்லை. ஆனா, ட்ரீட்மென்ட் ரகளையா இருக்கும். என் பட போஸ்டரைச் சுவத்திலும் என் பேட்டியை விகடனிலும் பார்த்தா, என்னோட அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க!''


2. ''என்னதான் தாய்மொழியா இருந்தாலும் தமிழில் படம் பண்ண எதுவும் சிரமம் இருக்கா?''


''மொழி வேற வேறயா இருந்தாலும் சினிமா எப்பவும்ஒண்ணு தான். எல்லா மக்களோட உணர்வுகளும் ஒண்ணுதான். நான் தமிழ்நாட் டில் பார்த்ததை, படிச்சதை, அனுபவிச்ச தைத்தான் அங்கே படமா எடுத்தேன். அதையேதான் இங்கேயும் பண்ணப்போறேன்.

 என்னைப் பொறுத்தவரைக்கும் உலக சினிமாவும் தென்னிந்திய சினிமாவும் தரத்திலும் ரசனையிலும் ரொம்பப் பக்கத்துலதான் இருக்கு. என்ன, உலக சினிமா உள்ளதை உள்ளபடி கொடுக்குறாங்க. நாம அதை இன்னும் எளிமை ஆக்குறோம். அவ்வளவுதான்!''

 சந்தானத்துடன் ஓக்கே ஓக்கே ஜோடி பேட்டி

டை... தேன்ன்ன்ன்ன் அடை.... ஜாங்ங்கிரி... அம்முக்குட்டி... பொம்முக்குட்டி!'' என 'ஓ.கே. ஓ.கே.’ படத்தில் சந்தானம் உருகி உருகிக் காதலிக்கும் 'ஐஸ்க்ரீம்’ காதலி யார் என விசாரித்தால்... ''ஹாய்... ஐ மதுமிதா. நைஸ் மீட் ஆஃப் யூ. ஐ வெரி பிஸி. யூ ஆஸ்க் கொஸ்டீன்... ஐ டாக் ஆன்ஸர்!'' எனக் கை குலுக்குகிறார்.



சி.பி - டேன்சர்னா நம்ப மாட்டோம்.. மானாட மயிலாட-ல  குத்தாட்டம் போட்டீங்களா? அப்போத்தான் நம்புவோம்

 ''பிறந்தது வண்ணாரப்பேட்டை. என் அப்பா வண்ணை கோவிந்தன், அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர். அப்பா - அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாலு பொண்ணுங்கள்ல நான்தான் கடைக்குட்டி. எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. மூணு அக்காக்களுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்குள்ள குடும்பத்துல கடன் கழுத்தை நெரிக்கவும் படிப்பை நிறுத்திட்டு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் போயிட்டேன்.




அங்கே என் துறுதுறுப்பைப் பார்த்துட்டு,

 சி.பி - அப்படி துறு துறுன்னு என்னா செஞ்சீங்க.. அங்கே ஏன் அவர் வந்தாரு.. வந்து என்ன பார்த்தாரு. ஆல் டீட்டெயில்ஸ் வீ வாண்ட்./. ஹி ஹி


 'சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணு’னு சொன்னாங்க. அப்படியே நடிக்க வாய்ப்பு தேடி ராஜ் டி.வி. 'சூப்பர் காமெடி’, சன் டி.வி. 'சூப்பர் 10’, விஜய் டி.வி. 'லொள்ளு சபா’, ஜெயா டி.வி. 'காமெடி பஜார்’னு ஆரம்பிச்சு... 'அழகான நாட்கள்’, 'ரேகா ஐ.பி.எஸ்.’, 'பொண்டாட்டி தேவை’, 'அத்திப்பூக்கள்’, 'அழகி’னு சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.  

 சி.பி - சீரியல்ல நடிச்சீங்களா? ஆனா அழுமூஞ்சி போலவே தெரியலயே?


'சிவா மனசுல சக்தி’ படத்துலயே நான் நடிச்சு இருக்க வேண்டியது. அப்போ மிஸ் ஆகிடுச்சு. இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ ஆடிஷன்ல செலெக்ட் ஆனதும் சோடாபுட்டிக் கண்ணாடி, எடுப்பான பல்லு, தலைக்கு 'விக்’னு என்னை உலக அழகி ரேஞ்சுக்கு அலங்கரிச்சுட்டாங்க. 'இப்படி ரவுண்டு கட்டி அசிங் கப்படுத்துறீங்களே’னு நான் ஃபீலிங்ஸ் காட்ட... 'இப்போ அப்படித்தான் இருக்கும். பின்னாடி பேட்டி கொடுக்குறப்ப பெருமையா சொல்லிக்கலாம்’னு சொன்னாங்க. அது இப்போ நிஜமாகி இருக்கு.



எனக்கு ஹீரோயின் கனவெல்லாம் கிடையாது. கோவை சரளா மாதிரி நடிச்சுப் பேர் வாங்கணும். நான் சரியான சவுண்ட் பார்ட்டி. கோவை சரளா இடத்தை நான் நிரப்ப ஆசைப்படுறேன். ப்ளீஸ்... தமிழ் சினிமா படைப்பாளிகள் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்க. ஐ ஆக்ட் குட். சத்தியமா ஐ பிராமிஸ்!''



சி.பி - கடைசி வார்த்தை உண்மையா? ஃபோட்டோ பார்த்தா அப்படித்தெரியலையே? ஹி ஹி  

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

Marvel's The Avengers (2012) - ஹாலிவுட் ஆக்‌ஷன் சினிமா விமர்சனம்

http://www.indiewire.com/static/dims4/INDIEWIRE/6493cfe/4102462740/thumbnail/680x478/http://d1oi7t5trwfj5d.cloudfront.net/1c/dd6c708edf11e1bcc4123138165f92/file/Avengers-Movie.jpgஹாலிவுட்காரங்க இப்போ வெச்சிருக்கற புது ட்ரெண்ட் என்னான்னா பூமி ஒரு கிரகம்.. வேற ஒரு கிரகத்துல இருக்கற சில கிரகங்களுக்கு வேலையே பூமியை தாக்கறதுதான்... உடனே பூமியை அழிவுல இருந்து காப்பாத்த அவங்கவங்க பட்ஜெட்டுக்கு தகுந்தா மாதிரி  சிங்குலர்லயோ, ப்ளூரல்லயோ ஹீரோக்களை களம் இறக்கி காப்பாத்துவாங்க.. சின்னக்குழந்தைங்க எல்லாம் கை தட்டி படம் பார்க்கறாங்க.. எனக்கு செம எரிச்சல்..


அடையாலம் தெரியாத சில எதிரிகள் பூமியை தாக்கறாங்க... அப்போதான் நிக்ஃபெரி என்பவர் (Director of the international peacekeeping agency known as S.H.I.E.L.D.,) நம்ம ஹீரோஸ் iconic Marvel Super Heroes 1. Iron Man, 2. The Incredible Hulk, 3. Thor,  4. Captain America, 5. Hawkeye and  6.Black Widow  இவங்க 6 பேரையும் வர வெச்சு அவங்களை முடிச்சுக்கட்டறார்.. அதான் கதை.. 


பசங்களை கவர்ந்தது ஹல்க் எனும் பச்சை மனிதன் தான்.. சம்சாரம் மேல கோபப்பட்ட புருஷன் துணி துவைக்கற மாதிரி அவர் வில்லனை நிஜமாவே துவைப்பது செம கலக்கல்.. கால்ல 2 ராக்கெட்டை பற்ற வெச்சது மாதிரி வர்றவரும் குழந்தைகளை குதூகலப்படுத்தறார்.. கைல சுத்தியை வெச்சு அலையறவர் செம காமெடி. 

 கிராஃபிக்ஸ் காட்சிகள் பல இடங்களீல் கலக்கல் என்றாலும் சில இடங்களீல் சலிப்பு..  எப்போ பாரு யாராவது ஷூட் பண்ணிக்கிட்டே இருப்பது கண் வலியைத்தான் தருது.. 


http://vegetarianstar.com/wp-content/uploads/2012/04/jeremy-renner-scarlett-johansson-avengers-hot-tin-roof.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள் 


1.  டென்சனே இல்லாம இருக்க இந்த இடம் தானா உனக்கு கிடைச்சுது?

 நோ நோ 

 பின்னே , இங்கே எதுக்கு வந்தே? யோகா பண்ணவா?


2.  ஹல்க்கா மாறாதவரை அவன் கிளவராத்தான் இருந்தான்


3. மனித இனத்தின் மாபெரும் விஷயம் அடிமைத்தனத்தை உள்ளூர விரும்புவதே 


4. சரித்திரம் என்னை மாதிரி யாரையும் பார்த்திருக்காது

 உன்னை மாதிரி பலரைப்பார்த்ததால தான் அது சரித்திரம் 


5. தாக்கறதுக்கு முன்னால திட்டம் போடனும் 

 திட்டம் ஆல்ரெடி போட்டாச்சு.. இப்போ தாக்கப்போறேன்.. 

6.  கூடிய சீக்கிரம் உனக்குத்தெரிய வரும்.

கூடிய சீக்கிரம்னா எத்தனை நாள்?


http://www.belfasttelegraph.co.uk/multimedia/archive/00674/b1d81d48-62f7-44c0-_674800a.jpg

7. உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா?

 ஆமா, சீரியஸான விளையாட்டு

8. நீ கூப்பீட்டேங்கறதுக்காதுக்காக நான் இங்கே வர்லை. எனக்கே  வேலை இருந்தது ஹி ஹி 

 ஓஹோ நீ கூமுட்டை இல்லைங்கறே..


9.  ஹல்க் - ஒரு ரகசியம் சொல்லவா? பிறந்ததுல இருந்தே நான் பயங்கரக்கோபக்காரன்  ( நர்சை கடிச்சு வெச்சுட்டியா?) நன்னாரிப்பயலே.. )

10.  மனித நேயம் இல்லாதவன் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன?


11. எங்க மக்கள் எல்லாருமே அமைதியை விரும்பறாங்க . 


ஆனா சிலர் ஃபைட்டையும் விரும்பறாங்களே.. 

 12.  ஹீரோ மாதிரி நடிக்காதே .. 

 அப்போ நீங்க பண்ணிட்டு இருக்கறதுக்குப்பேரு என்ன?

13.  உங்களால என்னைக்கொல்ல முடியாது, ஏன்னா என்னாலயே என்னை கொல்ல முடியலை.. ஒரு தடவை என்ன நானே கன் ல சுட்டேன்.. அப்போ எனக்குள்ள இருந்த இன்னொரு ஆள் அந்த குண்டை துப்பீட்டான்


http://www.boomtron.com/wp-content/uploads/Scar-Jo.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

 1.  ஓப்பனிங்க்ல ஒரு ஃபிகரு சேர்ல கயிறால கட்டி உட்கார வைக்கப்பட்டிருக்கு. ( தல அஜித் பில்லா - 2 ல போஸ் குடுக்கறாரே அது போல ) அவளை சுத்தி 3 பேரு. அப்போ அவளுக்கு ஒரு ஃபோன் வருது.. பேசரவ 2நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணுனி சொல்லி ஒரு ஜம்ப் பண்ணி  செம ஃபைட் போடறா பாருங்க.. தியேட்டரே அதிருது கிளாப்ஸ்ல.. செம சீன்.. ( பி கு - அந்த சீனில் ஃபிகர் லோ கட் டி சர்ட் ஹி ஹி )


2. மெஷின் மேன் நடந்து வரும்போதே ரோபார்ட்  அவரோட எல்லா பார்ட்ஸையும்  டக டக என உள் வாங்கி க்ளோஸ் ஆவது கலக்கல் ஸ்பீடு

3. கடலில் பயணீக்கும் பிரம்மாண்ட கப்பல் திடீர்னு ஹெலிகாப்டரா மாறி பறப்பது சூப்பர்

4.  சாதா மனுஷன்  நீ என்ன பண்ன முடியும் ? என வில்லன் கேட்கறப்ப ஹல்க் எனும் பச்சை மனிதன் அவனை காலை பிடிச்சு ஒங்கி தரைல அடிக்கறாரே ஆக்‌ஷன் செம 


http://www.metalmachine.net/blog/wp-content/uploads/2012/04/black-widow.jpg
இயக்குநர் சொதப்பிய இடங்கள்


1. சாதா   மனுஷனா இருக்கும் ஆள் 42 சைஸ் சர்ட்டும், 90 சைஸ் பனியனும் அணீஞ்சிருக்கார். ஹல்க்கா மாறூம்போது அவர் சட்டை , பனியன் எல்லாம் கிழியுது.. ஏன்னா அவர் ராட்சச மனுஷனா ஆகிடறார்.. ஆனா பேண்ட் மட்டும் கிழியல/./  அது எப்படி? ஹி ஹி ( குழந்தைங்க எல்லாம் பார்க்கறதுக்காகவா இருக்கும் )


2.  ஹல்க் ஒரு ஜெட் விமானத்துல போற வில்லனை பிடிச்சு டக்னு விமானியா இருக்கற அந்த ஆலை தூக்கி எறிஞ்சுட்டா மேட்டர் ஓவர்.. அதை விட்டுட்டு வேலை மெனக்கெட்டு விமானம் இஞ்சினை டேமேஜ் பண்ணி 10 நிமிஷம் கழிச்சு விமானியை ஏன் தூக்கிப்போடனும்?



3.  ஹல்க் ஒரு இடிஞ்ச கட்டடம் அருகே விழுந்ததும் ஒரு ஆள் நீங்க இரு மாறுனா  யூஸ் ஆகும்னு எடுத்து வெச்சேன்னு அந்த பேண்ட்டை குடுக்கறார்..  அவருக்கு எப்படி ஹல்க் பற்றி தெரியும்? அதே சீனில் அவர் ஹல்க்கை நீங்க ஏலியனா? என விசாரிக்கும் சீன் வருது.. அப்போ அவரைப்பற்றி தெரியாதவர் எப்படி ஆர்டினரியா மாறுவார்னு கண்டு பிடிச்சார்>?

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/12-2011/first-look-the/av_630.jpg



சில படங்களை கேள்வி கேட்காம ரசிக்கனும்பாங்க.. அந்த வகைல இதுவும் குழந்தைங்க , பசங்க ரசிக்கும் படமே 

 ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்.. 

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்
 
 

உன் உள்ளங்கை ரேகையில் என் காதல் ஜாதகம்



1. : சேலை வாங்கியதைவிட அதிகம் போராடவேண்டியிருக்கிறது அதை வாராவாரம் துவைச்சு அயர் பண்ண # சோக கணவர்கள் சங்கம்


--------------------------

2. அசல் படத்துக்குப்போய் கொடுத்த காசுக்கு வட்டி எங்கேன்னு கலாட்டா பண்ணுனா நீ இளைய தலைவலி ரசிகன் தான்


----------------------------

3. மொட்டை மாடில உக்காந்து கதை எழுதுனா அது டாப் ஸ்டோரின்னு  ஆகிடும்னா மீ ட்ரை


------------------------


4. இரட்டுற மொழிதலை இளைஞர்களும், புரட்டுற மொழிதலை அரசியல்வாதிகளும் அதிகம் விரும்புகின்றனர் # அவதானிப்பு 


---------------------------


5. காதலியிடம் கடன் வாங்கினவன் அவளைக்கழட்டி விடுவது ரொம்ப சிரமம், போலீஸ்ல 2 கேஸ் போட்டுடுவா 

-------------------------------------


ஜூம் ::ஒரு பைய்ன்  5 பொண்ணுகளுடன் கபடி வெளாடுறது தெரியும்... ஸ்கூல் காம்பெளண்ட தாண்டிக்குதிச்சித்தான் உள்ள போனான்.
Views 21
about 4 minutes ago
ஜூம் ::ஒரு பைய்ன் 5 பொண்ணுகளுடன் கபடி வெளாடுறது தெரியும்... ஸ்கூல் காம்பெளண்ட தாண்டிக்குதிச்சித்தான் உள்ள போனான்.
6. சேலை கட்டிய பதரை நம்பாதே # ராம்தேவ்


----------------------

7.தமிழினம் தலைநிமிர உடல், பொருள், ஆவியை தர தயார்-கலைஞர் # பகுத்தறீவுப்பகலவரே! ஆவியில் மட்டும் நம்பிக்கை உண்டா?


------------------------------

8. நடிகைகள் நட்பாக இருக்க முடியாது-சமீரா  ரெட்டி # நல்ல வேளை கற்போடு இருக்க முடியாதுன்னு சொல்லலை


-----------------------

9. பேசாம நித்யானந்தாவை மதுரை மேயர் ஆக்கிடுங்க.. அண்ணன் பாட்டுக்கு மேய்ஞ்சுட்டு இருக்கட்டும் :0


--------------------------

10. பியூட்டி பார்லர் போனா நிறைய செலவாகுதுன்னு நானே ஒரு பியூட்டி பார்லர் ஓப்பன் பண்ணிட்டேன் ( ஒரு பியூட்டியே பார்லர் ஓப்பண்டு அடடே! )


----------------------------


Condomínio Fechado...


11. லிமிடட் டாக்கர்ஸ் ( TALK))ஸை பெண்களுக்கு பிடிக்குமாம், அன்லிமிட்டட் டாக்கர்சை பிடிக்காதாம், ஹய்யோ அய்யோ


---------------------------

12. செகப்பா இருக்கற என் சம்சாரமே ஃபேரன் லவ்லி போடும்போது கறுப்பா இருக்கற நான் ஏன் போடக்கூடாது? ஹி ஹி # இன்றைய கேவலமான சிந்தனை


--------------------------

13. உன் உள்ளங்கை ரேகையில் என் காதல் ஜாதகம்


-------------------------

14. நீ  என்னைப்பார்க்காமல் முகம் திருப்பிய பொழுதுகள் உன் கண்ணீரை நீ மறைக்க முற்பட்ட  தருணங்களே!



--------------------------------

15. யோகாசனம் பண்றப்பக்கூட ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட், கூலிங்க் கிளாஸ் போட்டிருந்தா நீயும் ஒரு அலப்பரைத்தமிழனே!



-----------------------------------



16. "SICK"காக இருக்கும் பேஷண்ட்ஸ் கூட ”சிக்” கென இருக்கும் நர்ஸை சைட் அடிக்கிறார்கள்  # ஹாஸ்பிடல் அவதானிப்பு


-----------------------

17. டியர், எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி, அதனால என்னை கிச்சு கிச்சு பண்ணாதீங்க.


 ம்க்கும் ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறே.. வாட் டூ டூ?


---------------------------

18. சுடுதண்ணியை உங்க சம்சாரம் உங்க மூஞ்சில ஊத்துனா அதுதான் வார்ம் வெல்கம் ( WARM WELCOME) # பாசிட்டிவ் திங்க்கர்


------------------------

19. ஒரு ரசம் கூட ருசியா சமைக்கத்தெரியலையா? என திட்டும் மனைவிக்கு காதல் ரசம்,சரசம் எல்லாம் வாட் கேட்டகிரி? மீ ஆஸ்க்கிங்க்


------------------

20. அத்தான், ரசம் கொதிக்குதா பாருங்க.


ம் , 10 நிமிஷமா கொதிச்சுட்டுதான் இருக்கு, பார்த்துட்டுதான் இருக்கேன்.


யோவ் ஆஃப் பண்ணூய்யா # பல்பு


------------------------------------

a

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

Saturday, April 28, 2012

ஆளும் கட்சிக்கு அதீத மெஜாரிட்டி ஆபத்தானதா? எப்படி?

1. அப்துல் கலாமுக்கு இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மாளிகையின் கதவு திறக்க வாய்ப்பு உள்ளதா? 

 
அப்படி ஒரு சூழ்நிலை வருமா​னால், அதைப் புறக்கணித்து​விடுவதுதான் அப்துல் கலாமுக்கு நல்லது. ஏற்கெனவே அவர் ஒரு முறை சூடுபட்ட பூனை என்பதால், எச்சரிக்​கையுடன் நடந்து கொள்வார். அடக்க ஒடுக்க​மான சிறகுகளைத்தான் ஜனாதிபதி மாளிகையில் பறக்க அனுமதிப்பார்கள். அக்னிச் சிறகு​களை அல்ல!


சி.பி - இவர் ஜனாதிபதி ஆனா குழந்தைங்க சந்தோஷப்படும், ஸ்டூடண்ட்ஸ்க்கு புக் எழுதுவாரு  அவ்ளவ் தான் 


2.  ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு வருடம் டேரா போட்டால் காங்கிரஸ் வளருமா? 

சி.பி - ராகுல் காந்திக்கு தொப்பை வளரும். ஏதாவது ஃபிகர் கூட காதல் மலரும் அவ்ளவ் தான்

 
அவரது தாடி வேண்டுமானால் வளரும். ஏற்கெனவே, உ.பி. முடிவுகளால் லேசாகத் தாடி வளர்க்க ஆரம்பித்துள்ள ராகுல், தமிழகத்தில் இருந்தால் பெரும் தாடியில் வலம் வரத் தொடங்கி விடுவார்!



3. தமிழகம் பெருமைப்படும்படியான செய்தி ஏதாவது? 


ஒரு வரிக் கேள்வியில் அதை அடக்கிவிட முடியாது. பன்மொழிப் புலவர் என்று புகழப்பட்ட கா.அப்பாதுரையார் எழுதிய 'தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.


அடிமைத்தனத்தை மட்டும் அல்ல... அறத்துக்குப் புறம்பான அனைத்தையும் எதிர்ப்பதில் எல்லாக் காலத்திலும் தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது புரியும். இதுவே, தமிழினத்தின் பெருமை!

சி.பி - நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகிட்டாரே.. அது பெருமை இல்லாம ?


4. என்னிடம் பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கு, வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகள் ஒதுக்கியதில் என்ன தவறு?’ என்று கேட்கிறாரே கருணாநிதி? 

சி.பி - தமிழ் இனத்தலைவர் ஒதுக்குவதில் கில்லாடி, பதுக்குவதில் கேடி ஹி ஹி 


முதலமைச்சரின் பாதுகாவலர்கள் என்ற அடிப்​படையில், வீடோ, மனையோ ஒதுக்கட்டும். ஆனால், 'சமூக சேவகர்கள்’ என்ற ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டதை கருணாநிதி எப்படி நியாயப்​படுத்த முடியும்? சர்ட்டிஃபிகேட் கொடுத்த அனைவரும் சமூக சேவகர்களா? அவர்கள் செய்த சமூக சேவை என்ன?


அ.தி.மு.க. ஆட்சியில் யாருக்கு எல்லாம் வீடு கொடுக்கப்பட்டது என்றுதான் கருணாநிதியால் பட்டியல் போட முடிகிறது. செய்தது சரியா என்றால், 'அவரும்தானே இப்படிச் செய்தார்’ என்று பதில் வருகிறது. இது வாதம் அல்ல; விதண்டா​வாதம்!


5. மகாத்மா 'கிழித்த’ கோட்டை கஸ்தூரி பாய் எப்போ​தாவது எதற்காகவாவது தாண்டியது உண்டா? 

 
சுயநலம், குடும்ப நலத்தின் சிறு சுவடுகூட இல்லாமல் காந்தியால் வாழ முடியும். அப்படிப்பட்ட பற்றற்ற வாழ்க்கை கஸ்தூரிக்கு கஷ்டமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆசிரமத்துக்கு அன்பளிப்பாக வந்த பொருட்களை, தனது பிள்ளைகளுக்காக கஸ்தூரி தனியாக எடுத்து வைத்திருந்தார்.


 இதைக் காந்தி கண்டுபிடித்து விட்டார். விசாரணை நடந்தது. 'இன்றைய சமையல் பாத்திரங்கள், எச்சில் தட்டுக்களை நீதான் கழுவ வேண்டும்’ என்று தண்டனை விதித்தார். அதைஏற்று, பாத்திரங்​களைக் கழுவத் தொடங்கினார் கஸ்தூரி. காந்தியும் உடன் வந்து உதவி செய்தார். 'மனைவிக்கு கிடைக்கும் தண்டனையில் பாதிப் பொறுப்பு கணவனுக்கும்தானே’ என்று விளக்கம் சொன்னார் காந்தி.


அதனால்தான், அவர் மகாத்மா!

சி.பி - நான் கூட எல்லா பாத்திரங்களையும் டெயிலி விலக்கி கழுவறேன்.. ஹூம். 



6. ஜெயலலிதா தனது பேச்சில் கூறும் குட்டிக் கதைகளை ரசிப்பது உண்டா? 


படிப்பது உண்டு!

ஜெயலலிதா அந்தக் கதைகளை இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் கதைகள் சொல்லிப் பேசும் தலைவர்கள் நிறைய இல்லை. ஜெயலலிதா மட்டுமே இருக்கிறார். இது நல்ல விஷயம்தான்!

சி.பி - பாக்யா புக்ல இருந்து சுட்டு சொல்வார் போல. 



7. 'தி.மு.க-வில் இளைஞர் அணியின் பங்கு மகத்தானது’ என்கிறாரே மு.க.ஸ்டாலின்? 


தான், தி.மு.க-வின் பொருளாளர் என்பதை ஸ்டாலின் முதலில் உணர வேண்டும். இன்னமும் அவர் தன்னை இளைஞர் அணிச் செயலாளராக மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறார். தி.மு.க-வில் எப்போதும் 'அடிமட்டத் தொண்டர்​களின் அணி’தான் மகத்தானது!



8. நரசிம்மராவ் - மன்மோகன் சிங் ஒப்பிடுங்கள்! 


ராவ் கண்டுபிடிப்புதானே சிங். தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மௌன சாமியார்களாகவே இருப்பதில் இருவரும் ஒரே ரகம்.


ஆனால், ஊறுகாய்க்காரர் ஊழல் முதல் உலக சாமியாரின் வில்லங்கத் தொடர்பு வரை நரசிம்ம ராவ் மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான களங்கம் உண்டு. அந்த வகையில் சொந்த பைஜா​மாவில் அழுக்கு சேர்க்காதவர் சிங்!


சி.பி - நரசிம்மராவ் - உம்மணாமூஞ்சி மன்மோகன் சிங்க் -பேசா மடந்தை



9. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நேர்மையாக நடக்கும்’ என்று ஜூ.வி எழுதியது. ஆனால், இன்று நேர்மாறாக நடக்கிறதே? 


நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் ஜூ.வி. எப்போதும் எழுதியது இல்லை. நேர்மாறாக நடக்கும் போதெல்லாம் கண்டித்து எழுதியும் வருகிறது. கருணாநிதியை விமர்சிப்பதாலேயே ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்பதோ, ஜெய​லலிதாவைத் திட்டி எழுதுவதால் கருணாநிதிக்கு ஊதுகுழலாக மாறிவிட்டார்கள் என்பதோ... பத்திரிகைகள் மீது அரசியல்வாதிகள் கூறும் வழக்கமான அவதூறு. அதற்கு மற்றவர்கள் பலியாகி​ விடக்கூடாது!



10. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மேலும் மேலும் சிறுமைப்படுத்த ஆரம்பித்து விட்டதே ஆளும் கட்சி? 


அதீத மெஜாரிட்டி ஆபத்தானது என்பதற்கு இது ஓர் உதாரணம். 'அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் சொல்லலாம்’ என்ற அனுமதியை ஜெயலலிதா வழங்கி உள்ளார் என்பது உண்மைதான். அதற்காக எடுத்ததற்கெல்லாம் எழுவதும், எதிர்க்கட்சிகளை எதுவுமே சொல்ல விடாமல் செய்வதும் அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டிய மனோபாவம். 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...’ என்ற குறளையே சபாநாயகர் தினமும் சொல்லலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்!

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்



TEZZ - பிரியதர்ஷன் -ன் ஹிந்தி ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.glamsham.com/movies/scoops/12/apr/tezz-anil.jpg 

ஸ்பீடு-ன்னு ஒரு படம் பஸ்சை பேஸ் பண்ணி ஹாலிவுட்ல எடுத்தாங்களே.. அதுல இருந்து கதை நாட் (KNOT), 1980 இல் வந்த  THE BURNING TRAIN ல இருந்து கொஞ்சம் திரைக்கதை , கமல் -ன் உன்னைப்போல் ஒருவன் கொஞ்சம் எல்லாம் எடுத்து மிக்ஸ் பண்ணுனா தேஜ் படத்தோட கதை ரெடி. 

 தேஜ்-னா ஹிந்தில வேகம், கூர்மை அப்டினு 2 அர்த்தம்.. படம் வேகமாப்போகுது.. ஆனா யாரும் லாஜிக் மிஸ்டேக் எல்லாம் கேட்டு கூர்மையா பார்க்கக்கூடாதுன்னு அர்த்தம் போல. ஹி ஹி

படத்தோட கதை என்ன?  லண்டன் டூ கிளாஸ்கோ போற ட்ரெயின்ல ஹீரோ டைம் பாம் வெச்சுடறாரு. அந்த ரயிலை நிறுத்துனாலோ, வேகத்தை குறைச்சாலோ அது டமார்னு வெடிச்சுடும். அந்த ரயில்ல ஏராளமான பயணிகள் இருக்காங்க.. அது போக ரயில்வே கண்ட்ரோல் ஆஃபீசர் பொண்ணும் அதுல இருக்கு..


அவர் ஏன் பாம் வெச்சார்னா அதுக்கு ஏத்துக்கவே முடியாத காரணம் வெச்சிருக்காரு டைரக்டர்.. அதாவது இமிக்ரேஷன் இல்லாம , பர்மிட் வாங்காம  ஃபாரீன்ல வேலை செய்யறவரு அதுக்காக போலீஸ் பிடிச்சதும் அதுக்காக நாட்டையே பழி வாங்க  இப்படி கேனத்தனமா ஒரு ஐடியா பண்றாரு.. 


http://www.pinkvilla.com/files/imagecache/ContentPreview/tezz%203.jpg

 க்ளைமாக்ஸ்ல திடீர்னு டைரக்டருக்கு ஒரு டவுட். யாராவது ஹீரோவை வில்லன்னு சொல்லிடக்கூடாதே அதுக்காக அடிச்சார் பாருங்க ஒரு அந்தர் பல்டி . டாக்டர் ராம்தாஸ் எல்லாம் பிச்சை வாங்கனும்.. எல்லாம் டூப்பாம் ரயில்ல வெச்சது டம்மி பாமாம் ஹி ஹி ..  கேட்கறவன் கேனயன்னா  கேயாஸ் தியரியை எழுதுனது டாக்டர் ரியாஸ்னு சொல்லிடுவாங்க போல

 ஹீரோவா அஜய் தேவ் கான்.. ஆள் பந்தாவா இருக்காரு.. தாடி வெச்சிருக்காரு.. அப்போதான் டெரரிஸ்ட் எஃப்ஃபக்ட் வருமாம்.. ஹய்யோ அய்யோ.. படம் பூரா நிலம் , நீர், காற்று அப்டினு பைக்ல , கார்ல, போட்ல ஃபிளைட்ல பறந்துட்டே இருக்கார்.. நாய்க்கு நிக்க நேரம் இல்லைன்னு எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க.. 

 ஹீரோயின் கங்கணா ரனவத். வர்றதே 20 நிமிஷம் தான்.. இந்தப்படம் பெருசா பிரேக் தரும் ஆக்சிலெரேட்டர் தரும்னு பாப்பா ஸ்டார் டஸ்ட் புக்கிற்கு பேட்டி எல்லாம் குடுத்துது அய்யோ பாவம்.. 

 சமீரா ரெட்டி சப்போர்ட்டிங்க் கேரக்டர்.. அதாவது ஹீரோவுக்கும் சப்போர்ட்.. கிளாம்ர் ரசிகர்களுக்கும் சப்போர்ட். பாப்பா லோ கட் டி சர்ட் போட்டுக்கிட்டு ( டி சர்ட்ல கூட எப்படி லோ கட்னா அப்பப்ப குனியறது ஹி ஹி ) ஆக்‌ஷன் பண்றப்ப காமெடியா இருக்கு.. இடை வேளை விடும்போது பாப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகி  இன்சிடெண்ட்டா காணாம போயிடறாரு.. ஆக்சுவலி இவர் தான் ஹீரோயின்.. நடிச்ச வரை ஓக்கே.. முடிஞ்சவரை அவர் திரமையை சென்சார் அனுமதிச்ச அளவு காட்டி இருக்கார்.. 


 தீவிரவாதத்துக்கு எதிரான என்கவுண்ட்டர் ஆஃபீசராக அனில் கபூர். ஆள் செம கம்பீரம்.. அசால்ட்டா நடிச்சு அப்ளாஸ் வாங்கிங்க். சேசிங்க் சீன்ல ஆக்‌ஷன் சீன்ல  ஃபுல் ஃபார்ம்ல ஒர்க் பண்ணி இருக்கார்..

 மோகன் லால் ஒரு கெஸ்ட் ரோல்..ல வர்றார்,, ரயிலில் இருக்கும் ஒரு ஆஃபீசர்.  சும்மா 2 சீன் .. இது எதுக்குன்னா மலையாளத்துல இந்தப்படத்தை மார்க்கெட் பண்ண.. ( பிரியதர்ஷன்  ரொம்ப விவரமானவர்ங்கோ)

http://image.buzzintown.com/files/movie/upload_14000/upload_original/326290-tezz.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  ஒளிப்பதிவு கலக்கல் ரகம்.. ஓடும் ரயிலை ஹெலி வியூவில் எடுத்தது, சேசிங்க் சீன்களை  ஆங்கிலப்படங்களீல் ஜாக்கிசான் பட ரேஞ்சுக்கு மெனக்கெட்டு எடுத்தது எல்லாம் செம. 


2. பட போஸ்டரை வடிவமைத்த விதம்  செம .. அஜய் தேவ்  கான், மோகன் லால்,சமீரா ரெட்டி எல்லாரும் பந்தாவா இருக்கற மாதிரி காட்டி ஒரு பில்டப்பை உருவாக்குனது

3.  பாடல்காட்சிகள் ஆக்‌ஷன் படத்துக்கு தேவை இல்லை என்றாலும் ரிலாக்‌ஷேஷனுக்காக அமைக்கப்பட்ட இஜ்ஜத் மில்தி நஹி ( மரியாதை கிடைக்கலை)ச்சீன் ஹி பட்தி ஹை'( பிடுங்கிட்டு போயிடறே) 'பகுத்னா பூரே கோன் கா பதலா ஹை ( என் வேலையை நீ கெடுக்கறே) பாடல் வரிகள் ஓக்கே 


4. லொக்கேஷன் செலக்‌ஷன், ரயிலில் மாட்டிக்கொண்ட அந்த சிறுமியின் நடிப்பு எல்லாம் டாப் ரகம்  


http://2.bp.blogspot.com/-T9Wtt-_Csq8/TeYzSELaiKI/AAAAAAAAAp0/5K0MT_ztsSg/s1600/sameera.JPG

இ யக்குநர் இடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  டைம்பாமை ஒரு பேப்பர்லயாவது சுத்தி மறைப்பா கொண்டு போக மாட்டாங்களா? அவ்ளவ் மக்கள் புழங்கும் இடத்துல என்னமோ கொய்யாப்பழத்தை போட்டுட்டு பொற மாதிரி பப்ளிக்கா டஸ்ட் பின்ல டைம் பாமை போட்டு பத்திரப்படுத்தறாரே ஹீரோ? ஏன்?
2.  ஹீரோ என்னதான் அப்பாடேக்கரா இருக்கட்டும், டைரக்டர் ரொம்ப புத்திசாலியா இருக்கட்டும், தயாரிப்பாளர்  ஏமாந்த சோணகிரியா இருக்கட்டும் ஹீரோ படம் பூரா தலா 19000  ரூபா  மதிப்புள்ள 6 செல் ஃபோனை தண்ணிக்குள்ள, குப்பைல தூக்கி கடாசுறார்..  சிம் கார்டை கழட்டி தூக்கிப்போட்டா போதாதா?  ஹீரோ ஒவ்வொரு டைமும் போலீஸ்க்கு ஃபோனை போட்டு  கால் பண்ணிட்டு தூக்கி கடல்ல வீசிடறார். அவ்வ் 


3.  நாட்டை வெறுத்த , வாழ்வில் ஏமாற்றம் சந்தித்த மனிதன் எப்பவும் கவலையா இருப்பான்..  ஹீரோ கைல லேடீஸ் மாதிரி ஏகப்பட்ட மோதிரங்கள் அணிஞ்சிருக்காரு.. அது ஏன்? நல்ல வேலை  கட்டை விரலுக்கு போடலை

4.  போலீசை சூட்கேஸ்ல பணத்தை வெச்சு ஆத்து தண்ணில போடச்சொல்றாரு ஹீரோ.. அதுக்குப்பின் பல கஷ்டப்பட்டு அதை அந்த சூட்கேசை பிடிக்கறாரு.. ஏம்ப்பா அவ்ளவ் கஷ்டம்? ஏன் மூக்கைசுத்தி நாக்கை தொடனும்? நான் என்ன சொல்றேன்னா த்ரிஷா கால்ஷீட் வேணூம்னா த்ரிஷா கிட்டேயே நேரா போயிடனும் , எதுக்கு அவங்கம்மா கிட்டே போய் கேட்டு அப்புறமா த்ரிஷா கிட்டே போக?

5.  பல கோடி ரூபா பணகட்டு உள்ள பேக்கை முதுகுல சுமந்த  பேக்கு ஹீரோயின் எப்படி பேலன்ஸ் பண்ணி பைக்ல சர்க்கஸ் வேலை எல்லாம் செய்யுது? அவ்லவ் வெயிட்டை வெச்சு பைக்கை ஓட்டவே முடியாது.. 

6.  போலீஸ்ட்ட அபேஷ் பண்ணுன பணத்தை ஒரு கார் டிக்கில வெச்சு மறைவா, கமுக்கமா கலைஞர் மாதிரி நடந்துக்காம யாராவது அப்பட்டமா பைக்ல கொண்டு போவாங்களா? 

7. சமீரா ரெட்டி பைக்ல போறார்.. அவரை 4 கார், 12 பைக், 2 ஹெலிகாப்டர் துரத்துது.. யாராலும் அவரை சுட முடியலை அவ்வ்வ்வ் 

http://bollywood.celebden.com/wp-content/uploads/2008/03/kangana_ranaut_photo_10.jpg


ஆக்‌ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம்.. காது பத்திரம்.. பூவே பூச்சூடவான்னு காதுல ரீலா சுத்துவாங்க ஹி ஹி 

 மும்பைல இது ஹிட் ஆகிடும்.. தமிழ் நாட்ல சென்னை, கோவைல மட்டும் நல்லா ஓடும் , மற்ற இடங்கள்ல டல்லா தான் ஓடும்.. i c in  erode srnivaasaa

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்
http://bollywoodceleb.in/wp-content/uploads/2012/03/normal_Bollywood-Hot-sexy-Actress-Kangana-Ranaut-download-free-desktop-wallpaper-of-indian-bollywood-celebrity-6.jpg

பெண்களின் கண்ணியமான கிளாமர் என்பது எது? ஒரு அழகிய ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

1.ஒப்பனை இல்லாத முகங்கள் ,பாசாங்கு இல்லாத மனங்கள் இரண்டையும் மனிதன் நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்


---------------------------


2. பாவத்தின் சம்பளம் மரணம், பாவத்தின் இன்செண்ட்டிவ் நோய்


------------------------


3. வாழ்வின் சில நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை நிகழ்ந்தாலும் முதல் முறை போல் அது இருப்பதில்லை # முதல் காதல்,முதல் சந்திப்பு


----------------------------

4. மற்றவர்களை  மட்டம் தட்டும்போது தன் நிலை உயர்ந்து விடும் என சில அறிவு ஜீவிகள் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்


------------------------------

5. கண்ணியமான கிளாமர் என்பது லோ கட், லோஹிப் நிலைகளை ட்ரான்ஸ்பேரண்ட் சேலை அணிந்து மறைக்கு முயல்வது



-------------------------------------



6. சரத்குமாரின் இரட்டை வேடம்-அதிமுக அதிருப்தி# கலைஞர் நல்லா ரெட்டை வேஷம் போடுவாரு, ஆனா அவரை உங்க கட்சில சேர்த்துக்க முடியாதே?



--------------------------------

7. மிஸ்டு கால் கொடுப்போரை ஒறுத்தல் அவர் நாண அந்த காலை ( CALL) அவர் கட் பண்ணும் முன் அதை ரிசீவ்டு கால் ஆக்கிவிடல் # செல் நயம்


-------------------------------------


8. ஃபிகர் ஓவராக அலப்பறை செய்தால் அதை கிஞ்சித்தும் மதிக்காமல் அருகில் இருக்கும் அட்டு ஃபிகரை சைட் அடித்து அலப்பறை ஃபிகரை வெறுப்பேற்று!


---------------------------------


9. முதல் இரவில்


 கணவன் -டியர்! நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?

 மனைவி - அத்தான், ஆமான்னு சொன்னா அவன் கூட என்னை சேர்த்து வைக்கப்போறீங்களா?


-----------------------------

10. சினிமா படங்களில் ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்'  ஆகும்-உதயநிதி ஸ்டாலின் # அண்ணே, பராசக்தி, பாலைவன ரோஜாக்கள் எல்லாம் ஆங்கிலமாண்ணே?


--------------------------

eeran's photo. — with Sarangaraj Ganesan and 44 others.
 மதுரை ஆதீனம் இனி நித்யானந்தாவாம், மதுரை அழியப்போகுது அவ்வ்வ்வ்

11. ஏன்? எதற்கு? எப்படி? என்ற 340 பக்க புக் படிச்சுட்டு அதுல இருந்து ஒவ்வொரு வார்த்தையா ட்வீட்டா போட்டா நீயும் ஒரு தமிழனே!



-------------------------

12.ஃபோன் கீழ விழுந்ததில் ஸ்க்ரீன் விரிசலாயிடுச்சு. அதில் அப்பப்போ  சீன் படம் பாத்திட்டிருந்தேன். ஹும்..இனி என்ன பண்ண?



---------------------------

13. புத்தக தினத்தை முன்னிட்டு இன்று முகப்புத்தகத்தில் ( ஃபேஸ் புக்) டைம் பாஸ் பண்ணினால் நீ தான் புதிய தலை முறை !


----------------------------------

14,. நேமாலஜி காரணமாக ஹன்சிகா மோத்வானி, ஹன்சிகாவாக சுருங்கினார்!# நல்ல வேளை பேரை மட்டும் சின்னது பண்ணுனார்


------------------------------

15. இன்று ஷேக்ஸ்பியர் பிறந்தநாள். இதை முன்னிட்டு எத்தனை பேர் பியர் குடிச்சு கொண்டாடப்போறாங்களோ!?


----------------------------


----------------------------


16. நான் எந்தப்பெண்ணையும் அந்நியமாக நினைப்பதில்லை, அனைத்துப்பெண்களும் ( 18 வயசு டூ 21) எனக்கு முறைப்பெண்களே!  # எ கீ


---------------------------

17. இன்று புத்தக தினத்தை முன்னிட்டு விருந்து, திரைச்சித்ரா,இந்து நேசன், சரோஜாதேவி ஆகிய புக்ஸை வாசித்தால் நீ உருப்பட மாட்டாய்!


-------------------------

18. காதல் என்பது கனவுக்கோட்டையில் ஆரம்பித்து மூங்கில் கோட்டையில் வளர்ந்து கண்ணம்மா பேட்டையில் முடிகிறது ( நாட் இன் கனடா ) # SMS


---------------------------

19. ஃபிகர் மிடியில் இருந்தால் நேருக்கு நேர் நின்று பார்த்து ரசி, சேலையில் இருந்தால் போக்குவரத்து விதியை மதி ( KEEP LEFT) #சைட்டாலஜி


-------------------------------

20. அஞ்சனா எனக்கு செட் ஆகலை....

 அடடா, அப்புறம் என்ன செஞ்சே?


அவங்கக்கா எட்டணாவுக்கோ, அவ தங்கச்சி நாலணாவுக்கோ லவ் லெட்டர் தரலாம்னு இருக்கேன்


---------------------------



டிஸ்கி - 1 -கண்ணியமான காதல் கதை

லீலை - சினிமா விமர்சனம்

 

 டிஸ்கி 2 - http://www.hotlinksin.com

 
திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
 
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
 
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

Friday, April 27, 2012

லீலை - சினிமா விமர்சனம்


http://4.bp.blogspot.com/_J3eCu6V1pog/S-wFz-u7ZPI/AAAAAAAACB0/ncysOZoO77Q/s1600/LeelaiT_457.jpg
ஹீரோ காலேஜ் லைஃப்ல ஜாலியா ஃபிகர்ங்க கூட கடலை போட்ட கடலை மன்னன் கந்த சாமி.. கட்டதுர மாதிரி அவர் சும்மா கடலை தான் போட்டாரே தவிர சாகுபடி ஏதும் செய்யலை.. அதுல ஃபோன் மூலமா அறிமுகம் ஆகி சண்டைல பிரிஞ்ச ஒரு ஃபிகர் தான் ஹீரோயின்.. ஆளை நேர்ல பார்க்காமயே பிரிஞ்சாச்சு.. 

 இப்போ ஹீரோ கம்ப்யூட்டர் எஞ்சினியர்.. அவரோட கேர்ள் ஃபிரண்ட்க்கு ஃபோன் போடறப்ப அந்த கேர்ள் ஃபிரண்ட் ஆஃபீஸ்ல வேலை செய்யற மலர்ங்கற ஃபிகர்தான் தன் முன்னாள் ஃபோன் மேட்னு கண்டு பிடிக்கறார்.. ஒன் சைடு லவ்.. கார்த்திக்ங்கற தன் உண்மை பேரை மறைச்சு சுந்தர்ங்கர பேர்ல அறிமுகம் ஆகி மலரை மயங்க வைக்கிறார்.. இப்போ அந்த மலர் சுந்தரை லவ்விங்க்.. 

 ஹீரோ கார்த்திக்கா  மலருக்கு அப்பப்ப ஃபோனை போட்டு வெறுப்பேத்துறார். அப்போதான் சுந்தரை அவர் விரும்புவார்னு.. அந்த லூஸ் ஹீரோயின் கார்த்திக், சுந்தர் 2ம் ஒரே ஆள் தான்கறது தெரியாம லவ்வுது.. 

இவங்க 2 பேருக்கும் பப்ளிக் ஃபிரண்ட் அதாவது பொதுவான ஃபிரண்ட் ஒருத்தி இருக்கா.. அவ ஹீரோட்ட சொல்லிடறா.. ஹீரோயின் கிட்டே உண்மையை சொல்லிடு இல்லீன்னா நானே சொல்லிடுவேன்னு.. இவ எதுக்கு இந்த சுப்ரமணியம் சாமி வேலை செய்யனும்னு ஹீரோ எரிச்சல் ஆகி அப்படி எல்லாம் உடனே சொல்ல முடியாது டைம்  வேணும்னு கேட்கறான்.. 

திடீர்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே நான் உன் கிட்டே ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஆனா அது என்ன?னு கேட்காதே.. நாம பிரிஞ்சுடலாம்கறான் ..அதுக்குப்பிறகு என்ன ஆச்சு? 2பேரும் சேர்ந்தாங்களா? ஆடியன்ஸ் சோர்ந்தாங்களா? என்பதே மீதிக்கதை.. 




http://3.bp.blogspot.com/_GaVBOHRwetA/SOJUuReNxlI/AAAAAAAAVsE/0Zfll1T_AyU/s400/Leelai-Stills-007.jpg
 எங்கியோ கேள்விப்பட்ட கதை மாதிரி இருக்கா? எண்ட மூரி வீரெந்திர நாத் எழுதுன காதல் சதுரங்கம் தெலுங்கு நாவல் தான் இது.. ஆல்ரெடி குள்ள நரிக்கூட்டம்னு ஒரு படம் வந்ததே அந்தப்படமும் கிட்டத்தட்ட இந்தக்கதை தான்.அதுல ஹீரோ போலீஸ் ட்ரெயினர்.. இதுல கம்ப்யூட்டர் எஞ்சினியர். ஆனா லீலை படம் 4  வருடங்களுக்கு முன்பே ரெடி ஆன படம்.. ஏன் போணி ஆகலை.. ஏன் ரிலீஸ் ஆகாம இழுத்தடிச்சுதுன்னு யாருக்கும் தெரியலை.. கம்ப்பெனி சீக்ரெட்..

ஹீரோ பேரு ஷிவ் பண்டித்.. கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாம் .. மீசை இல்லாத ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஈசியா வரத்தொடங்கிட்டாங்க.. லவ் சப்ஜெக்ட் ஸ்டோரில  ஹீரோக்கள் அதிகமா மெனக்கெட தேவை இல்லை என்பதால் சமாளீக்கிறார்.. காமெடி காட்சிகளீல் கொஞ்சம் பம்முகிறார்.. ஹீரோயின் உடன் பாடி கெமிஸ்ட்ரி குட்.. அதானே பார்த்தேன்.. அதுல மட்டும் கரெக்ட்டா இருப்பாங்களே//,


 ஹீரோயின் பேரு மனசி பரேக் கோகில்.. என்னமோ கன்னட பட டைட்டில் மாதிரி இருக்கு.. பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா.. லிப்ஸ்டிக் கொஞ்சமா போட்ட மாநிற பலா .. க்ளிப்போ, ரப்பர் பேண்டோ போட்டு கட்டி வைக்காத கர்லிங்க் ஹேர் அழகி .. 50 மார்க் ஃபிகர் .. தேறிடுவார்னு தோணுது.. பாடல் காட்சிகளீல் தடுமாற்றம்.. காதல்  காட்சிகளீல் கனகச்சிதம்.. 

 ஹீரோயின் ஃபிரண்டா வர்றவர் பேரு சுஹாசினி ராஜு.. த்ரிஷா அம்மா சாயல் முக ஜாடைல மற்றபடி யூத்தான்.. ஹீரோயினை விட 4 இஞ் உயரம்.. எனக்குத்தெரிஞ்சு ஹீரோயினை விட ஹீரோயின் தோழி இவ்ளவ் உயரம் இருந்து இப்போ தான் பார்க்கறேன்.. உயரத்துல தான் ஹீரோயினை இவர் முந்தறார்.. மற்றபடி எல்லாத்துலயும் ஹீரோயின் தான் முன்னிலை.. 

சந்தானம் காமெடிக்கு தனி டிராக் போட்டது தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டது சாமார்த்தியம்.. இதில் சந்தானம் சொந்த வசனம் பேச வாய்ப்பு அதிகம் இல்லை.. ஸ்க்ரிப்டில் என்ன இருக்கோ அதைத்தான் பேசறார். ஆனாலும் ரசிக்கலாம்.. 



http://static.sify.com/cms/image/jdwmSBaaggg.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்.


1. ஹீரோ சந்தானம் வீட்டுக்கு வந்து நான் ஒருத்திக்கிட்டே இருந்து தப்பிக்கத்தான் இங்கே வந்திருக்கேன்.. ஒளிஞ்சுக்கறேன் என சொல்லும்போது யார் இடம் இருந்து தப்பிக்க நினைத்தாரோ அதே ஆள் ஆல்ரெடி அங்கே இருக்கும் போது செம காமெடி சிச்சுவெஷன்.. அந்த காட்சியில் மூவர் நடிப்பும் ஓக்கே

2. அதே போல் ஹோட்டலில் ஹீரோ, ஹீரோயின், ஃபிரண்ட் மூவரும் சந்திக்கும் காட்சி ரசிக்க வைக்கும் காமெடி


3.  படத்தில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருந்தும் மிக கண்ணியமாக காதலை, ஹீரோயினை காட்டிய விதம் ( நற நற வட போச்சே.. )

4.  சில்லென்ற ஒரு கனவு,  பொன் மாலைப்பொழுதே, உன்னைப்பார்த்த பின்பே என 3 பாடல்கள் தேறுது.. எல்லாமே மெலோடி தான்... 

5. சந்தானம் காமெடி படத்துக்கு எந்த அளவு தேவையோ கதையோடு வர்ற மாதிரி கனக்ச்சிதமா தேவையான அளவு மட்டும் யூஸ் பண்ணிய விதம். 


6. பட போஸ்டர் டிசைனும், பேப்பர் விளம்பரங்களும் நீட்..

7. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஹீரோயின் பொட்டு வெச்சு அழகா வர்றார். படம் பூராவே அப்படி வந்திருக்கலாம்

http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/leelai/leelai-movie-stills13_01.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. தமிழ் அகராதியில்  லீலை என்பதற்கு 1000 அர்த்தங்கள் இருந்தாலும்  தமிழனின் அகராதியில் லீலை என்பதற்கு ஒரே அர்த்தம் கில்மா தான்.. ஒரு நல்ல காதல் கதைக்கு ஏன் லீலை என்ற நெகடிவ் டைட்டில்?


2. ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுன பிறகு அவன் ஃபேமிலி பேக் கிரவுண்ட், வீடு எது? அப்டி எதுவும்னே தெரியாம அல்லது தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லாமலா இருப்பாங்க?

3. ஹீரோ என்னமோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி ஃபீல் ஓவரா விடறார். தன்  பேரை மட்டும் மாத்தி சொல்றார்.. அவ்லவ் தானே.. ஒரு முழுப்படத்தையும் உட்கார்ந்து பார்க்க வைக்க அந்த ஒரே ஒரு KNOT பத்தலையே.. இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் ஆச்சே?

4. ஹீரோ ஹீரோயின்  எப்படியும் சேர்வாங்க அப்டிங்கறது உள்ளங்கை  நெல்லிக்கனி போல , அல்லக்கை தாமரைக்கனி போல தெரிஞ்சுடுதே எப்படி ஆடியன்ஸ்க்கு சுவராஸ்யம் வரும் திரைக்கதைல?


5. ஹீரோயினோட அப்பா உன் காதலனை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்னியே? என்னாச்சு? என ஃபிரண்ட்லியாக அப்பா கேட்கரப்ப அப்பா எனக்கும் அவருக்கும் சின்ன ஊடல்... இப்போ வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு ஏன் ஹீரோயின் சொல்லலை? பூசி மெழுகறா..  தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றதுக்கென்ன?


மனதில் நின்ற வசனங்கள்
http://reviews.in.88db.com/images/leelai/shiva-pandit-santhanam-leelai.jpg

1.  என்னை விட்டுட்டு போனது கூட எனக்கு பெரிசா தெரியலைடி.. போறப்ப உனக்கு  மோனாவே பெட்டர்னு சொல்லிட்டு போய்ட்டான்.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை

2. கலையாத முடி, காட்டன் சுடி,கைல பேக் இண்டர்வியூக்கு வராம காபரே டான்ஸ் ஆடவா வந்திருப்பீங்க?

3.  என்னா ஆச்சு? வேலை கிடைச்சுதா? 

 பேடு லக் 

 அடடா.. 

 அதாவது கம்ப்பெனிக்கு பேடு லக்.. ஹா ஹா எனகு வேலை கிடைச்சுச்சு

4.  அடடா.. பில்டப் பண்ண விடமாட்டெங்கறாங்களே..

5. மேனேஜர் இருக்காரா? நான் அவரை இண்டர்வியூ பண்னனும்./. 

 வாட்?

 சாரி  ?  அவர் என்னை  இண்டர்வியூ பண்ணனும்

6. மிஸ்.. அடிக்கடி நாம் மீட் பண்ணப்போறோம்.. ஒவ்வொரு முறையும் ஹலோன்னு சொன்னா நல்லாருக்காது.. அதனால பேரு சொல்லுங்க ஹி ஹி 


7.  ஆல் த பெஸ்ட்.. 

 எனக்கு ஏன் சொல்றீங்க.. 

 சாரி எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்

8.  நான் ஒரு ரஃப்ஃபான சாஃப்ட் வேர் இஞ்சினியர்

9.  டேய்.. நிஜமாவே கருணை மலர் அழகா இருப்பாளா?

 தேன் கூடு மாதிரி தலையை வெச்சிருக்காளே, இவ மேல சத்தியமா சொல்றேன் அவ செம அழகுடா.. 

 10.  இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 

 உண்மையை சொன்னா எப்படியும் நீ நம்ப மாட்டே.. சைட் அடிச்சுட்டு இருக்கறதா நினைச்சுக்கோ.

http://www.filmics.com/gallery/d/160094-1/Leelai-Movie-Stills-9.jpg

11.  நான் சொன்ன படி அவ அழகா இல்லைன்னா  இதோ இவளுக்கு மொட்டை  அடிச்சுடறேன்

12.  நீங்க கேட்கறதால இந்த சிடியை கொடுக்கறேன்.. ஆனா பொண்ணுங்கறதாலதான் கொடுத்ததா என்னை தப்பா நினைக்கக்கூடாது


13. ரொம்ப நல்லவனாவே இருக்கட்டும், ஆனா பேரைக்கூட கேட்காத தத்தியாவா இருப்பாங்க?

14.  அடுத்தவன் ஃபிகருக்கு ஏண்டா இப்படி அலையறீங்க?

15. கிஸ்னா வாய்ல தரனும் அவ வெச்சிருக்கறதுக்குப்பேரு வாயா? கோடாலி.. பல் பட்டு உதடு கிழிஞ்சிருச்சு..

16.  பார்ட்டி வெச்சே ஓக்கே யார் பாக்கெட்ல கையை வெச்சே?

17.  சார்.. கார் எடுக்கனும்

லோனா?.. ஏன் சார் பெட்ரோல்விக்கற விலைல கார் வாங்க ஆசை?

 நீங்க உங்க காரை எடுத்தா அதுக்குப்பின்னால நிக்க வெச்சிருக்கற என் சைக்கிளை நான் எடுத்துக்குவேன்

18.  இனிமே புரியாத மாதிரி எவனாவது மொட்டையா பேசுனா எவனுக்குமே கொ சாரி சட்டை இருக்காது..

19. அந்தக்கால பொண்ணுங்க புருஷன் பேரை சொல்லமாட்டாங்க, இந்தக்கால பொண்ணுங்க புருஷன் இருக்கறதையே சொல்றதில்லை.


20. நாங்க எல்லாம் பீச் காத்துலயே பீடி பத்தவைக்கறவங்க டா..


http://chennai365.com/wp-content/uploads/movies/Leelai/Leelai-Stills-1010010.jpg

21. உங்களை மாதிரி குடும்பத்து  குத்து விளக்கை ஏத்தத்தான் அவன் வெயிட்டிங்க் ஹி ஹி  ஐ மீன் உங்களுக்கு அவன் தான் ஏத்தவன்


22.  என்னது அந்தப்பொண்ணு சிலாய்க்கு மலாய்க்காவா? ( டிக்கெட்டா?)

 அப்புறம் ஏன் பாவாடை தாவணில வருது?

23.  ஏ டி எம் = ஏ டைம் மேட்டர்


24.   மிஸ் ,3 நைட், 2 பகல்..

 ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் - 2500 ரூபா ஆகும்..

 ஹலோ, ஹோட்டல்ல தங்க..


 ஓ சாரி.. நான் என் கூட தங்கறதுக்குனு நினைச்சுக்கிட்டேன் ஹி ஹி 


25. ஆளாளுக்கு டேக் ஓவர் பண்ண அது அம்பாசிடர் காரா? அத்தை பொண்ணா?



26. அங்கே சப்பி சப்பி சாப்பிடுதே அந்த சப்பிதாதான் உன் பப்பிதாவா?

27. அஸ் பர் ஆலமர பஞ்சாயத்து தீர்ப்பு அவனவன் அத்தை பொண்ணை அவனவனே தான் ஓட்டிட்டு போகனுமாம்

28.  ஏன்? ஹிந்தி ஃபிகரை லவ் பண்ணக்கூடாதா? ஹிந்திப்படத்தை டப் பண்ணா பார்க்கறீங்க? ஹிர்ந்தி ஆண்டியை ( சேட்டு பொண்ணை ) சைட் அடிக்கறீங்க.. லவ் பண்ணா ஒத்துக்கிட மாட்டீங்களே..

29.  என்ன மேடம் கண்டிஷன்? மேரேஜ்க்கு முன்னே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா? ஐ ஆம் ரெடி ஹி ஹி

30.  இப்படிக்கு ரோஸ்..

 அவனா நீ..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKvX3MHqhU6hK20Q9j9BDKMbslWsnhLCnTOc5q1LVlaQCUF3SsTkhAYeBPIWPAwrx8-a92b61zfzBVotCiyw0O8D_Jg6WuXF388wgdVQ3v1tkrBlApSgDFFRauR9nC9Y-LTvgjTSjAuMq/s640/15177_17_leelai.jpg

31. .  தன் கண்ணுக்கு அழகா தெரியற பெண்ணை பசங்க காதலிக்க நினைப்பாங்க, அல்லது கை வைக்க நினைப்பாங்க . இந்த விஷயத்துல எல்லா பசங்களும் ஒண்ணுதான்
32.  மனசுக்குள்ள என்ன நினைக்கறானோ அதை வெளீல சொல்லாம பசங்களால இருக்கவே முடியாது

33.  நீ என் கிட்டே டீசன்சியா இருக்கே.. நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கே.. ஆனா டிஸ்டென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றே.. அது ஏன்?

34.  பொண்ணுங்க லவ் பண்றாங்களா? இல்லையா?ங்கற மேட்டர் தெரியற வரை பசங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க 


35.  ஃபிகரு , கம்ப்யூட்டர் 2ம் ஒண்ணுதான்

1. இரண்டுக்கும் விரல் முக்கியம்

2. மடிச்சுதான் லேப்டாப்பை வெளில எடுத்துட்டு போக முடியும், ஃபிகரையும் மடிஞ்ச பின் தான் வெளில கூட்டிட்டு போக முடியும்.. 

3. அடிக்கடி 2ம் ஹேங்க் ஆகிடும்


36. கூகுள்ள என்ன தேடறே?

 எங்கே ஒரு பெக்குக்கு ஒரு ரூபா கம்மின்னு தேடறேன்

37.  சாரி.. நான் அங்கே வந்து தண்ணீ அடிக்க மாட்டேன்.. பேரு கெட்டுடும்.. 

 குடல், கெட்டாச்சு, பாடி கெட்டாச்சு ஈரல் கெட்டாச்சு ஏண்டா நாயே பேரு கெட்டா என்ன? கெடாட்டி என்ன?

38.  பிராப்ளம் இல்லாத லவ்வே இல்லை 

 39.  லவ்ல நாம விட்டுட்டு வர்றதை விட நம்மளை ஒருத்தர் விட்டுட்டு வர்றதுதான் ரொம்ப கொடுமையானது
40.  ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரச்சனைன்னா அதை 3 வதா ஒரு நபர் பேசித்தீர்ப்பது நல்லது

41. நீ எத்தனையோ  தப்பு பண்றே.. அதை நீ மன்னிச்சுடறே.. ஆனா அவன் ஒரு தப்பு பண்ணுனா  அதை தாங்கிக்க முடியலை, உன்னால மன்னிக்க முடியலை.



http://www.virupu.com/Leelai/photos/leelai-movie-first-look-photo-gallery-1.jpg

 இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் சுமாராத்தான் போகும், ஏ செண்டர்களீல் 30 நாட்கள் ஓடும்
 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் -ஓக்கே


சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் பார்க்கலாம்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -
hotlinksin.com
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. துவங்கிய வேகத்திலேயே ஏராளமான வாசகர்களை பெற்றுள்ளது. பதிவர்களே உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...

உங்கள் பதிவுகளை இங்கேயும் இணைக்கலாமே

மேலும் ஒரு திரட்டி உங்களுக்காக...