Monday, March 05, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 5

இந்த உலகத்துல நல்ல பேர் எடுக்கறதுங்கறது பசுமாட்டிடம் தினமும் ஒரு சொம்பு பால் கறந்து  ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கற மாதிரி.. கெட்ட பேர் எடுக்கறதுங்கறது பால் கண்ட்டெயினர்ல  ஒரு துளி விஷம் படற மாதிரி.. ரொம்ப நாளா சம்பாதிச்சு வெச்சிருக்கற நல்ல பேரை ஒரு சின்னத்தவறால இழக்க வேண்டிய சூழல் அல்லது ஒரு மாற்று குறைவான மதிப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலை எல்லா மனிதர்களோட வாழ்க்கைலயும் ஒரு முறையாவது நிகழும்.. என் வாழ்க்கைல, அதாவது பத்திரிக்கை உலக வாழ்க்கைலயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது..

பத்திரிக்கை உலகில் படைப்புகள் அனுப்புவோர்க்கு ஒரு எழுதப்படாத விதி உண்டு.. அதாவது எந்த படைப்பை அனுப்பினாலும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் அதிக பட்சம் 6 மாதங்கள் வரை அந்த படைப்பை மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது.. 

ஆர்வக்கோளாறில் சில சமயம்  சிலர் ஒரே படைப்பை இரண்டு வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்பி துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் ஒரே நேரத்தில் பிரசுரம் ஆவது உண்டு..

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வந்த ஒரு பாட்டை கிண்டல் பண்ணி ஒரு ஜோக் எழுதினேன்.. 

தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

 தையா தையா  தையா அப்டின்னா என்ன? அப்டினு  ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம்


 இந்த ஜோக்கை பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் உல்லாச ஊஞ்சல் என்ற இதழுக்கு அனுப்பினேன்..அது ஒரு மாத இதழ்.படைப்பு அனுப்பி 2 மாதம் வரை வர வில்லை.. பிறகு கல்கி வார இதழுக்கு அனுப்பினேன். 3 வாரங்கள் வர்லை.. அதன் பின் தினகரன் வசந்தம் வார இதழுக்கு அனுப்பினேன்..

இந்த இடத்தில் நான் படைப்புகளை அனுப்பும் முறை குறித்து சொல்லிடறேன்.. நான் வழக்கமா போஸ்ட் கார்டில் ஜோக்ஸ் எழுதி அனுப்புவேன்.. ஒரு புத்தகத்திற்கு 20 ஜோக்ஸ் அனுப்பினால்  அந்த இதழ் பெயர், அனுப்பிய தேதி, ஜோக்ஸ் இவற்றை  டைரியில் குறித்து  வைத்துக்கொள்வேன்.. 3 மாதங்கள் கழித்து  எந்தந்த படைப்புகள் பிரசுரம் ஆனதோ அதை அடிச்சுட்டு பிரசுரம் ஆகாத படைப்பை வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்புவேன்.

அப்படி அனுப்பற ஜோக்ஸ் பொதுவானதாக இருக்கும்.. அதாவது டாக்டர்-நர்ஸ்-பேஷண்ட்ஸ் ஜோக்ஸ், கோர்ட் கபாலி ஜோக்ஸ், அரசியல்வாதிகள் ஜோக்ஸ்,இந்த மாதிரி டாபிக்ல அனுப்புவேன்.. அந்த ஜோக்ஸ் எப்போ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்.. ஆனா டாப்பிக்கல் ஜோக்ஸ் எனப்படுபவை அந்தந்த கால கட்டத்தில் படிச்சாத்தான் நல்லாருக்கும், புரியும்.. 

உதாரணமா இப்போ நயன் தாரா பச்சை குத்தினதை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போறதை கிண்டல் பண்ணி எழுதுன ஜோக்ஸை , அல்லது பிரபு தேவாவுக்கு அல்வா குடுத்த ஜோக்கை இன்னும் 6 மாசம் கழிச்சு எழுதுனா புரியாது, மேட்சா இருக்காது.. அதுக்குள்ள அவங்க அடுத்த பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க ஆ:ளை மாத்தும்போது நாம ஜோக் லைனை மாத்திடனும்..

 ஓக்கே கம் டூ த மேட்டர்.. உயிரே பட பாடல் வெளியீட்டப்ப எழுதி அனுப்பப்பட்ட ஜோக்  3 மாசங்களாக வராததால் கல்கிக்கு அனுப்பினேன்.. கல்கி புக்ல ஒரு வரையறை வெச்சிருந்தாங்க.. 20 நாட்களில் எந்த படைப்பும் பிரசுரம் பண்ணிடுவாங்க.. ஆனா அந்த ஜோக் 20 நாட்கள்ல வராததால் தினகரன் வசந்தத்துக்கு அனுப்பினேன்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=210&height=314&image=/ahtees/admin/customer/content/2009_17_PattukkottaiPrabakar.jpg

உயிரே படம் ரிலீஸ் ஆச்சு.. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. அந்த வார ஞாயிறில் வசந்தம் இதழில், திங்கள் கிழமை கல்கி வார இதழில், அடுத்த வாரம் உல்லாச ஊஞ்சல் மாத இதழில் வெளியாகி விட்டது..


உல்லாச ஊஞ்சல் அந்த இதழில் மொத்தம் என்னுடைய 20 ஜோக்ஸ் ஒரே சமயத்தில் வெளியிட்டது.. தலையங்கத்தில்  என்னை பற்றி பாராட்டி எழுதி இருந்தார்கள்.. அதாவது 200 ஜோக்ஸ், 20 கவிதைகள், 3 கதைகள் என பல்க்காக படைப்புகள் அனுப்பியதாகவும் அவை எல்லாமே வெரைட்டியாக இருந்ததாகவும் சொல்லி இருந்தாங்க..

நம்ம ஜனங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.. அதாவது எவன் எப்போ சறுக்குவான், கை தட்டி வேடிக்கை பார்க்கலாம்னு பார்த்துட்டே இருப்பாங்க.. இந்த ஜோக் மேட்டர் 3 வெவ்வேற இதழ்கள்ல வந்ததும் ஆளாளுக்கு வாசகர் கடிதத்துல இதை குறிப்பிட்டு  கடிதம் எழுதுனாங்க.. சென்னை சென்ற போது ஒரு இதழின் ஆசிரியர் அந்த கடிதங்களை எல்லாம் காட்டினார்.. ( குறை சொல்லி எழுதியவர்களில் அதில் என் நெருங்கிய பத்திரிக்கை நண்பரும் அடக்கம்)

 அடுத்த மாத ஊஞ்சலில்  என்னை பாராட்டி தலையங்கத்தில் எழுதிய அதே உல்லாச ஊஞ்சல் இதழில் என்னை கண்டித்து எழுதியது..  அது வாசகர் வட்டத்தில், பத்திரிக்கை உலகில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.. நம்பகத்தன்மையை குறைத்தது..

அந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் என் படைப்புகள் எதுவும் எந்த இதழ்களிலும் வர வில்லை..  மிகுந்த போராட்டத்துக்குப்பிறகும், பல மன்னிப்புக்கடிதங்கள், தன்னிலை விளக்கக்கடிதங்களுக்குப்பிறகும் தான் மீண்டும் என் படைப்புகள் வர ஆரம்பித்தன..

 அதிலும் ஒரு சோகம் என்னான்னா எந்த படைப்பை அனுப்பினாலும் பத்திரிக்கை எடிட்டோரியல் குழுவில் யாராவது ஃபோன் பண்ணி “ இந்த படைப்பை வேற எந்த இதழுக்கும் அனுப்பிடலையே? என்று கேட்டு உறுதி செய்த பின் தான்  வெளியிட்டார்கள்/.. 

 ஆனால் சம்பவம் ந்டந்து பல வருடங்கள் கழித்து நானே அதை மறந்த நிலையில்  பிளாக் உலகில் வந்த பின்  எனக்கும் ஜாக்கிசேகருக்கும் நடந்த ஒரு மோதலில்  பின்னூட்டம் இட்ட ஒரு  நண்பர் “ பல வருஷங்களுக்கு முன்னால உல்லாச ஊஞ்சல்ல சொம்பு வாங்குனவன் தானே நீ? “ என கேட்டு கமெண்ட் போட்டிருந்தார்.. அப்போதான் எனக்கு உறைத்தது.. நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளைக்கூட காலம் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் என்று.. 

( ஜாக்கி சேகருக்கும் , எனக்கும் நடந்த மோதல் குறித்து பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.. ஆனா அந்த சம்பவத்தில் என் மீதுதான் தவறு இருந்தது)

 இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது..  பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இது போல்  நேர்ந்தது உண்டு.. தமயந்தி என்ற எழுத்தாளர் இதே போல் தேவி வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அதில் வராததால்  குங்குமம் வார இதழுக்கு அனுப்பினார்..  ஒரே வாரத்தில் 2 இதழ்களிலும் வந்தது.. ஆனால் அடுத்த இதழிலேயே அவரது தன்னிலை விளக்கம் பிரசுரிக்கப்பட்டது.. ஆனால் என்னைப்போன்ற ஜோக் எழுத்தாளர்களுக்கு அந்த மாதிரி தன்னிலை விளக்க வாய்ப்பு கம்மி. ( ஏன்னா அவங்களுக்கு 1000 பிரச்சனை இருக்கும், இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது)

 எழுத்து உலகில் இந்த மாதிரி கெட்ட பேர் வாங்குன ஆட்கள் அய்யம்பேட்டை விஜய லட்சுமி, எம் அசோக்ராஜா அரவக்குறிச்சிப்பட்டி.. 

 அவங்க பண்ணுனது  அப்பட்டமான திருட்டு.. ஆனந்த விகடன் இதழில் வந்த முத்திரை சிறுகதையை அப்படியே அட்டக்காப்பி அடிச்சு வைரமுத்து -குங்குமம் இணைந்து வழங்கிய கவிதைப்போட்டிக்கு அனுப்பி மாட்டிட்டாங்க .. குங்குமம் வார இதழில்  அவர் பேரை போட்டு தெளிவா  போஸ்டர் அடிச்சுட்டாங்க.. 

 எம் அசோக்ராஜா என்ன செய்யறார்னா அவர் புக் ஏஜென்சி வெச்சிருக்கார் போல..  பழைய புக்ஸ்ல வந்த ஜோக்சை எல்லாம் காப்பி பண்ணி அனுப்பிட்டு இருந்தார்.. சில புக்ஸ்ல போடவும் செஞ்சாங்க.. ஆனா ஆனந்த விகடன் இதழில் அவர் படைப்பு வருவதே இல்லை.. வாசகர்களிடம் அவருக்கு கெட்ட பேரு.. 

 இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும் வாசகர்கள் கவனமா இருக்கனும் என்பதற்காகத்தான்..

ஆனந்த விகடன் விக்ரம் வாசகர் சந்திப்பு விழாவில்  நானும், என் நண்பர் விஷ்ணுகுமாரும் தேர்வு ஆகி சென்னை போனோம்.. அங்கே சந்தோஷமான நிகழ்வும் , ஒரு சங்கடமான நிகழ்வும் நடந்தது.. அது.....


 தொடரும்.. 


டிஸ்கி -1  மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கு நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html


 இந்த கட்டுரையின் 4 ம் பாகம் -  http://adrasaka.blogspot.in/2012/02/4.html


Friday, March 02, 2012

அரவான் - அபாரம் - சினிமா விமர்சனம்


http://reviews.in.88db.com/images/arvan-standeesh/arvan-standeesh7.jpg 
1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட  தண்டிக்கப்பட்டு விடக்கூடாது... எந்த ஒரு குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்ற உயரிய கருத்தை பதிவு செய்த வகையில்  ஜி வசந்த பாலன் அண்ட் டீம்க்கு இது ஒரு முக்கியமான படம்.. தூக்குக்கயிற்றை எதிர் நோக்கி காத்திருக்கும் பல உயிர்களின் சார்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்.. 

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்து விட்டது.. ஆனால் இன்னும் உலகில் உள்ள 83 நாடுகள் அதை அமலில் வைத்திருக்கிறது ,( இந்தியா உட்பட) ஏன்? என்ற கேள்வியுடன் படத்தை முடிக்கையில் வெல்டன் டைரக்டர் என்று சொல்லத்தோன்றுகிறது.. 

படத்தோட  கதை என்ன? பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும்  ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் நெல் தர்றாங்க.. 

மகாராணியோட  வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா  6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்.. 

அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..



http://moviegalleri.net/wp-content/gallery/archana-kavi-cute-smile-pics/archana_kavi_new_stills_vaibhav_movie_launch_0214.jpg

ஆதி ஆரம்பத்துல தன்னை அநாதைன்னு சொல்லிக்கறார்.. ஆனா ஒரு கட்டத்துல அவருக்கு குடும்பம் இருக்கு.. அவர்  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதின்னு தெரிய வருது.. இடை வேளை.. 




ஃபிளாஸ் பேக் கதை.. ஆதியோட ஊர்ல  யாரோ ஒரு டெட் பாடியை கொண்டு வந்து போட்டுடறாங்க.. அசலூர்க்காரனோட டெட் பாடியை அடையாளம் கண்டுக்க அக்கம் பக்கம் ஊர்க்கெல்லாம் ஆள் அனுப்பி காட்டறாங்க/.. அந்த டெட் பாடி பரத்.. அவரோட அண்ணன்க்கும் ஆதியோட ஊர்க்கும் ஆல்ரெடி தகறாரு.. இரண்டு ஊர்க்கும் பயங்கர கை கலப்பு வர்ற சூழல்.. பரத்தோட அண்ணன் வேணும்னே என் தம்பியை ஊர் மக்கள் கூடி கொன்னுட்டீங்கன்னு சொல்றார்.. பழிக்கு பழி எடுக்கனும்கறார். 
ராஜா  ( கதை நடக்கற கால கட்டம் 18ஆம் நூற்றாண்டு) என்ன தீர்ப்பு சொல்றார்ன்னா ஆனது ஆகிடுச்சு.. ஆதியோட ஊர்க்காரங்க இறந்து போன பரத்க்கு ஈடாக அதே வயசுள்ள ஒரு இளைஞனை பலி கொடுக்கனும்கறார்.


http://tamil.cinesnacks.net/photos/movies/Aravaan/aravaan-movie-stills-007.jpg
5 இளைஞர்களை தேர்ந்தெடுத்து  அதுல இருந்து ஆதியை பலி ஆள் ஆக்க முடிவு பண்றாங்க.. ஆதிக்கும், ஹீரோயினுக்கும் ஆல்ரெடி லவ்,.,. பலி ஆக இன்னும் 30 நாள் டைம் இருக்கு.. அதுக்குள்ள மேரேஜ் பண்ணி அட்லீஸ்ட் 30 நாளாவது. வாழ்ந்திடனும்னு நினைக்கறாங்க.. மேரேஜ் ஆகுது.. 
இனிமே கதை பி கே பி நாவல் மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்ல போகுது.. ஆதி உண்மையான கொலையாளீயை தேடி போறார்.. பரத்தும், அஞ்சலியும் லவ்வர்ஸ்.. அது அஞ்சலியோட அப்பாவுக்கு பிடிக்கலை.. அவர் கொன்னிருப்பாரா?ன்னு பார்த்தா அவர் இல்லை.. 
தொடர்ந்த விசாரணைல பரத் அரண்மனைக்கு போனது தெரிய வருது.. வாசனைத்திரவியம் விற்கும் வியாபாரியா போய் சின்ன மகாராணியை சந்திச்சிருக்கார்.. சின்ன மகாராணிக்கு மன்னர்  மேல ஆல்ரெடி செம காண்டு.. அதாவது அவரது காதலனை முடிச்சுட்டு பலவந்தமா கூட்டிட்டு வந்தாரு.. ஆனாலும் கில்மா நடக்கலை.. 
 மகாராணி மன்னரை   பழி வாங்க பரத் கூட கில்மா பண்ணிடறார்.. இந்த மேட்டர் மன்னனுக்கு தெரிய வருது.. அவர் தானே போய் பரத்தை கொலை செஞ்சுடறார்.. 

இந்த மேட்டர் தெரிஞ்சதும் ஆதி மன்னரை கட்டி கூட்டிட்டு வர்ற வழில ஒரு விபத்து.. அருவில குதிச்சு மன்னர் தற்கொலை.. ஆதிக்கு கால்ல அடிபட்டு நடக்க முடியாத சூழல்.. 

 பலி ஆள் தேடி ஆள் வந்தாச்சு , ஆனா பலி ஆள் காணோம்.. அதனால ஆல்டர்ந்நேட்டிவ்வா வேற ஒரு ஆளை பலி குடுக்கறாங்க.. 

ஆதி கிராமம் வர்றார்.. உண்மை தெரிஞ்சதும் ஆதியோட மாமனார்  நடந்தது நடந்துடுச்சு நீங்க 10 வருஷங்கள் எங்காவது தலைமறைவா இருங்க.. கிராம வ்ழக்கப்படி 10 வருஷம் கழிச்சு பலி ஆள் வந்தா மன்னிச்சுடுவாங்க அப்டிங்கறார்.. 

 அதுக்காகத்தான் ஆதி தலை மறைவா வாழ்றார்.. ஃபிளாஸ் பேக் முடியுது.. 

 ஆனா 9 வது வருஷத்துலயே ஆதியை கண்டு பிடிச்சிடறாங்க.. என்ன நடக்குது? அப்டிங்கறதை மனதைத்தொடும் விதத்தில் படமாக்கி இருக்காங்க 

 படத்தில் முதல்ல பாராட்ட வேண்டியது ஆர்ட் டைரக்‌ஷன்.. 18 ஆம் நூற்றாண்டு மனிதர்களீன் ஆடை, அணிகலன்கள், வீடு எல்லாம் நேர்த்தி.. 

 இசை புது முகம் என்பது நம்ப முடியவில்லை.. செம 4 பாடல்கள் எல்லாமே கேட்கற மாதிரி இருக்கு.. 

 ஒளிப்பதிவு அருமை.. களவு செய்ய ஆட்கள் போறப்ப கூடவே நாமும் போற மாதிரி ஃபீலிங்க்.. 

நடிப்பு செக்‌ஷன்ல ஆதி முதல் இடம்..  சிக்ஸ் பேக் பாடி.. அசால்ட்டான நடிப்பு.. என மனிதர் கலக்கிட்டார்.. ஆல்ரெடி மிருகம், ஈரம்ல கலக்கினவர் தானே?

 பசுபதி சொல்லவே வேணாம்.. வெயில் அளவு சான்ஸ் இல்லைன்னாலும் இடைவேளை வரை இவர் தான் ஹீரோவா? என்று கேட்கும் அளவு பின்னிட்டார்.. 

ஹீரோயின் தன்ஷிகா உடல் வாகு, கண்கள், பார்வை என மனதில் தங்கும் பெண்னாகிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு.. 

சீரியசான கதையில் சிங்கம்புலியின் கொளுந்தியா , மச்சினி காமெடி கலகலப்பான பார்ட்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8JazeZ0l8FlYzjly4ElW5ps-Nub-9iqwUVKk60RHTlGESQP-UonK-O1OgtLi315jFPiwrRB2f3wulP5snTLkdDHd9DphLyEq72KLSdIY5yB-7X108NVdkCga8Ohs9FBJh1KYS07Kp3Qwb/s1600/aravaan_movie_stills_pics_gallery_07.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. களவு செய்யும் விதத்தை ரொம்ப விஸ்தீரணமாக காட்டுவது செம.. இருட்டில் வீட்டில் கதவு தாழ்ப்பாளுக்கு ஆயில் விடுவது, சாவியை களாவட செய்யும் தந்திரம்.. அந்த காட்சிகளீல் எல்லாம் இசையை கட் பண்ணி சைலண்ட் மோடில் படத்தை கொண்டு செல்வது செம.. 

2.  பொக்கிஷ பெட்டியை இடிக்க வேண்டிய சூழலில் பாட்டியை துக்கம் கெட வைத்து பாக்கு இடிக்க வைத்து அந்த சத்தத்தில் இடிக்கும் சீன் அப்ளாஸ் அள்ளுது

3.  நிலா நிலா பாடல் காட்சியில் ஆதி எம்பிக்குதித்து நிலாவையே தள்ளி விடும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சீன் ரசிக்க வைத்தது.. 

4.  ஆட்டு மந்தைகளை ஏரியல் வியூவில் காட்டும் சீனிலும், ஆதி பசுபதியை காப்பாற்ற எருமை, மாடுகள் சகிதம் வரும் காட்சியில் கேமரா கலக்கல் ( அந்த சீனில் அந்நியன் நினைவு வந்தாலும்)

5.   பாடல்கள் நா முத்துகுமார்.. ,விவேக்.. ஊரே  என்னை பெத்த ஊரே, நிலா நிலா போகுதே நில்லாமலே, சூரியன் சூரியன் சட்டுனு , உன்னை கொல்லப்போறேன் என 4 பாடல்களும் இதம்.. 


http://www.cinemaprofile.com/tamil-movies/actress/dhanshika%20aravaan%20movie%20press%20meet%20stills%20gallery/dhanshika_aravaan_movie_press_meet_stills_gallery%20(27).jpg

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1. படத்தின் மாபெரும் மைனஸ் கில்மா செஞ்ச மகாராணி தானே மன்னரிடம் எகத்தாளமா சொல்லி மாட்டிக்கொள்வதுதான்.. உடனே ராஜா ராணியை கொலை செஞ்சுடறார்.. எந்தப்பெண்னாவது அப்படி ஓபனா சொல்வாளா? எல்லாம் பிளான் பண்ணி பண்றவ ராஜாவோட கடைசி காலத்துல, அல்லது நோய் வாய்ப்பட்ட தருணத்துல சொல்லிக்காட்டி இருந்தா ஓக்கே. தவளை ஏன் தன் வாயால கெட்டுச்சு? அந்த சீனில் கில்மா மேட்டர் ராசாவுக்கே எப்படியோ வேற விதமா தெரிஞ்ச மாதிரி எடுத்திருக்கலாம்/.. 

2.  பிரமாதமான களவுத்திறமை உள்ள ஆதி ஏன் வாலண்ட்ரியா பசுபதிக்கு வைர நகையை தரனும்? அவர் பாட்டுக்கு இருக்க  வேண்டியதுதானே?

3. படத்தின் மிக முக்கிய திருப்பக்காட்சியாக வரும் ஜல்லிக்கட்டு சீனில் கூட்டத்தின் ஆரவாரம் பின்னணியில் பலமாக ஒலிக்கிறது.. ஆனால் காட்சி அமைப்பில் மக்கள் ஆரவாரம் செய்யவே இல்லை.. தனியா ரெக்கார்டு பண்ணி சேர்த்திருக்காங்க.. லாங்க் ஷாட்டிலும் சரி, க்ளோசப் காட்சிகளிலும் சரி மக்களின் ஆரவாரத்தை காட்டி இருக்கனும் காட்சி ரீதியா

4.  பசு பதிக்கு ஆதி அவ்ளவ் பெரிய தியாகம் செய்ய தேவை என்ன? அது அவ்ளவ் அழுத்தமா காட்டப்படலை.. 


http://moovstills.com/wp-content/uploads/2012/02/Sheena-New-Hot-Stills-4-e1329930748137.jpg
 பீரியட் ஃபிலிமில் தமிழுக்கு இது ஒரு முக்கியமான படம்.. டோண்ட் மிஸ் இட்.. 
 உழவுத்தொழில் போல் களவுத்தொழிலும் மனிதன் வாழ்வில் அந்தஸ்தை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்தை பிஞ்சு மனசில் நஞ்சாக பதியும் அபாயம் இருப்பதால் பள்ளி மாணவ் மாணவிகள் மட்டும் இந்த படத்தை பார்பதை தவிர்ப்பது நல்லது.. 
 மற்றபடி  நல்ல சினிமா ரசிகர்கள், மாறுதலான படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய  நல்ல படம் இது.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 50 

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

 சி.பி கமெண்ட் - சல்யூட் டூ வசந்த பாலன் அண்ட் டீம்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM5l4KNYRjycdfkyXOyVnDOMNJJhY9wtmoz1YEEuevmREw9UfYzJuVhCwIVYxVnpLThe0wLmPeiIVKDYJY7-y7A9eaXrQEut7Y6qONHuobxYlCdhGiTY9UfVAiwM0fzw8Eqm1IQbLmOHPC/s1600/001-23-07-2010-5677-1-1.jpg

டிஸ்கி 1 -  படத்தின் பிரமாதமான வசனத்தொகுப்பு நாளை தனிப்பதிவு ( வசனம் - வெங்கடேசன்)

டிஸ்கி 2 - துல்லியமான, தொலை நோக்குப்பார்வை உள்ள யூத்ங்க கவனமா படம் பார்த்தா நொடியில் மின்னி மறையும் கண்ணியமான சில கிளாமர் காட்சிகள் காணலாம்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -2.3.2012 - 5 படங்களின் முன்னோட்ட பார்வை

மார்ச் மாசம்னா ஃபைனான்ஸ் ஃபீல்டுல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி, பேங்க், ஆடிட்டிங்க், அக்கவுண்ட்ஸ் செக்சன்ல ஒர்க் பண்றவங்களுக்கும் சரி செம டைட் ஒர்க்கா இருக்கும்.. லீவே கிடைக்காது.. ஆனா மிக எதிர்பார்ப்புடன் வரும் படங்கள் இந்த மாதம் நிறைய ரிலீஸ் ஆகுது. அதுவும் இன்னைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்ல அரவான் ரொம்ப முக்கியமான படம்.. பீரியட் ஃபிலிம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKd5CIbX4aMnxL6jdXBphrao_0XC7U2PvI3aPzHQbqLLhhhjl9gWr52Xn9JbRBAsQy8f2KeAAUwVs6B7PYV5Fpe8-5SmSemcVt9EQdH29zRAdxMLltzarRZwQquDiUYTPqI4tqvyzrcS-R/s1600/aravaan_movie_stills_pics_gallery_02.jpg


 1.அரவான் - அங்காடித்தொரு படத்தின் வெற்றியைத் தொடந்து வசந்தபாலன் இயக்கத்தில் வேகமாக வளர்ந்துவரும் படம் ‘அரவான்’. இந்தப் படம் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதையாகும். இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலை மையமாகக் கொண்டு  இயக்கிவருகிறார் வசந்தபாலன்.





ஆதி, பசுபதி, தன்ஷிகா, அஞ்சலி என முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.

பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரியாதை கலந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://moviegalleri.net/wp-content/gallery/aravaan-movie-new-stills/aravaan_movie_new_stills_4230.jpg



"இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமானது. வரிப்புலி என்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பின்னோக்கிப் போய், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்", என்று கூறியுள்ளார் படத்தின் ஹீரோவான ஆதி.
இந்தப்படம் ஈரோடு அபிராமி,ஸ்ரீ லட்சுமில ரிலீஸ்
http://123tamilcinema.com/images/2012/02/Yaar-Tamil-Movie-2012-Posters-1-342x467.jpg


2. யார் - தமிழ் சினிமாவுக்கு இப்போது த்ரில்லர் காலம் போலும். காஞ்சனா, அம்புலி போன்ற படங்களை தொடர்ந்து அடுத்து மிரட்ட வரும் த்ரில்லர் படம் யார். கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கில், ரவி இயக்கத்தில், பூமிகா, சினேகா நடிப்பில் வெளிவந்த படம் அமரவாதி.


 த்ரில்லர் படமான, இந்தப்படம் இப்போது டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து 10நாட்கள் ரீ-சூட்டிங் நடத்தி விரைவில் வெளியிட உள்ளனர். தமிழில் இப்படத்தை வெளியிடப்போகும் தயாரிப்பாளர் சதீஷ் கூறுகையில், யார் படம் வெளிவந்த பிறகு, தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய டிரெண்ட் செட்டாகும்

 http://www.tamilkey.info/wp-content/uploads/2012/01/Kondan-Koduthan-Movie-Posters-e1326168261534.jpg
3.கொண்டான் கொடுத்தான் - பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "வரவு எட்டணா செலவு பத்தணா", "காலம் மாறிப்போச்சு", "விரலுக்கேத்த வீக்கம்" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ஜி.ராஜேந்திரன் "கொண்டான் கொடுத்தான்" எனும் படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். கூடவே படத்திற்கு கதை, வசனம், ஒளிப்பதிவும் செய்கிறார்.

தலைமுறைகளாக பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டான் கொடுத்தானாக இருக்கும் 2 குடும்பங்களுக்கு இடையில் நடைபெறும் பாசப்போராட்டமே இந்த படத்தின் கதை. உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உடன்பிறந்த அக்காள்-தங்கைகளை கண்ணீ­ர் விட வைக்கக்கூடாது. உறவுகளுக்கு இடையே திருமணம் செய்வது சிறப்பானது போன்ற கருத்துகள் இந்த படத்தில்  இருக்கிறது.

http://www.haihoi.com/upcoming-movies/upcoming_flim_images/kondan_koduthan.jpg

வெளுத்துக்கட்டு ஹீரோ கதிர் நாயகனாகவும், அழகர்சாமியின் குதிரை பட நாயகி அத்வைதா ஹீரோயினாகவும் நடிக்க இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், எல்.ராஜா, சுலக்ஷனா, லட்சுமி ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள். பி.பாரதி-மாஸ்டர் ஸ்ரீராம் வழங்க, அய்யப்பா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் பி.அய்யப்பா தயாரிக்கிறார். தேவா இசையமைக்கிறார். காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடந்தது.

ஈரோடு ஆனூர், அன்னபூரணி ரிலீஸ்

http://123tamilforum.com/imgcache2/2012/02/ShankarOorRajapalayamMovieOnline-1.jpg

4. சங்கர்  ஊர் ராஜபாளையம் -நாசிகா பிலிம்ஸ் நிறுவனத்துடன் கோல்டன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் “சங்கர்’. கந்தேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹாசிகா நடிக்கிறார். இவர்களுடன் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி வீரா இயக்குகிறார். வீ‌.தஷி‌ இசை‌யமை‌ப்‌பி‌ல்‌ உருவா‌கி‌ இருக்‌கு


படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ வீ‌ரா‌ பே‌சுகை‌யி‌ல்‌, “முன்ஜென்மத்தின் பிரதிபலிப்புதான் இந்த ஜென்மத்தில் நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் இக்கதை. 700 ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு உயிர், பெண் ஒருத்தி மீது காதல் கொள்கிறது. அடுத்த ஜென்மத்தில் அந்த உயிர் மனிதனாக பிறந்து அதே பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறது. அந்த காதல் நிறைவேறியதா என்பதை இப்போதுள்ள டிரண்டுக்கு ஏற்ப படமாக்கி இருக்கிறோம்.

http://www.southgossips.in/wp-content/uploads/2011/05/hasika_tamil_actress_78.jpg


தினம் தினம் எத்தனையோ பெண்கள் நம்மை கடந்து செல்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் மீது மட்டும் காதல் ஏற்படுகிறது. இதே மாதிரிதான் பெண்களும். ஆண்களைப் போல்தான் எல்லா உணர்வுகளும் பெண்களுக்கும் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்கள் வெளிக்காட்டி விடுகிறார்கள். பெண்களால் அது முடியவில்லை. இதை மையமாக வைத்தும்‌ இந்தப் படத்தின் திரைக்கதையை அமைந்‌‌தி‌ருக்‌கி‌றது.


காதல்தான் களம் என்றாலும், அதை வேறொரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் படம். புதுமையான யுக்தியில் இதை படமாக்கி வருகிறேன்.


ஹீரோ கந்தேஷ், ஹீரோயின் ஹாசிகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். படத்தின் சம்பவங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜபாளையம் பகுதியில் படப்பிடிப்பை நடத்தினோம். மேற்கு தொடர்ச்சி மலைபகுதியான சேத்தூர் கிராமத்தில் வில்லன் அருணுடன் ஹீரோ மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.


கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். நி‌றை‌ய படங்‌களுக்‌கு இசை‌யமை‌த்‌து வரும்‌ இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ வீ‌.தஷி‌, இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு இசை‌யமை‌த்‌துக்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பி‌ன்‌னணி‌ இசை படத்‌துக்‌கு பெ‌ரி‌ய பலம்‌. அதை‌ நி‌றை‌வா‌க செ‌ய்‌து கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌களும்‌ வி‌த்‌தி‌யா‌சமா‌க அமை‌ந்‌தி‌ருக்‌கி‌றது. கவிஞர் முத்துலிங்கத்துடன் புதுமுக கவிஞர்கள் பாடல்கள் எழுதி‌ உள்‌ளனர்‌. ரமே‌ஷ்‌ ரெ‌ட்‌டி‌ நடனம்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. படத்‌தோ‌ட வே‌லை‌கள்‌ முடி‌ந்‌து ரி‌லீ‌சுக்‌கு தயா‌ரா‌கி‌ வருகி‌றோ‌ம்‌…” என்‌றா‌ர்‌.


இந்த பட நாயகி ஹாசிகா ஆந்திர வரவு.தென்னிந்திய அழகி பட்டம் "பெற்றவர் ".இவர் அறிமுகமான் படம் 'மலர் மேல் நிலை பள்ளி '.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.



5. MUMMY VS SINBAD - ஃபாரீன்ல ஆல்ரெடி ரிலீஸ் ஆகி அங்கே ஃபெயிலியர் ஆன படம். ஆனா தமிழ்ல டப் பண்ணி பிரம்மாண்டமான போஸ்டர்ஸ் எல்லாம் ஒட்டி ஓவர் பில்டப்போட இந்தப்படம் வருது.. Cast: Manu Bennett, Holly Brisley and Steven Grives; Director: Karl Zwicky;   அங்கே 2011லயே ரிலீஸ் ஆகிடுச்சு

இந்தப்படத்தோட உண்மையான டைட்டில் 'Sinbad and the Minotaur.. நம்மாளுங்க மம்மி பேரை போட்டா பழைய ஹிட் பட மம்மி பாகம் 2ன்னு நினைச்சு கொஞ்சம் பேரும், அம்மா ஆதரவாளர்கள் பயந்துக்கிட்டு கொஞ்சம் பேரும் வருவாங்கன்னு நம்பி டைட்டில் மாற்றி இருக்காங்க.

http://leetleech.org/images/92424347827994703192.jpg

அரேபியன் நைட்ஸ், 1001 இரவுகள் படம் மாதிரி ட்ரை பண்ணி இருப்பாங்க போல.. என்ன காமெடின்னா காட்டுவாசிகள் போல் காட்ட வேண்டிய பெண்களை பியூட்டி பார்லர் மாடர்ன் கேர்ள் போல காட்டியதுதான்.. ஹய்யோ அய்யோ ..

http://image.hdvnbits.org/graphic/images/2011/May/12/3186_4DCB5029.jpg


கோடம்பாக்கத்தின் முகமூடியை கிழிக்கும் சோனியா அகர்வால் - வாக்குமூலம்- வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokPv0Ixb9CrWOrkkmqvvA7XxtzTcWOkk9bcCiGBAUtxfEawSEpF-ZG3FsaUJAe8ynYNZt-x-4kAHVkZIjuEOEiRNaM8SPadzwl9NxtlrveO1tFB6lF88OGbjh3GuScBxecrBFcAmYbcll/s1600/oru_nadigaiyin_vakkumoolam_posters_095.jpg

1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..

-------------------------------------

2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது

-----------------------------------------

3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?

---------------------------------

4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?

--------------------------------------

5சினிமால  போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்

---------------------------------------

6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..

சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, மீன் அறிமுகப்படுத்தறதில்லை

----------------------------------------------------

7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்

 அல்பம்

-----------------------------------

8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?

 அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?

--------------------------------------

9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..

இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்.. 

-------------------------------

10. உன் பேரென்னம்மா?

 அஞ்சலி

அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..

அப்போ நீங்களே வெச்சு விடுங்க

------------------------------------------ 

http://iclienttech.com/news1/1nov42.jpg

11. ஹீரோயின் பேரு ஆர் வர்ற மாதிரி  வெச்சிடலாமா?

நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு

------------------------------------------

12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?

அப்போ உங்க படத்துல கதை இருக்கா?

------------------------------

13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?

ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்

--------------------------------

14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?

அதுதான்  சினிமா உலகம்..

------------------------------------


15.திர்பார்த்து ஏங்கிப்போறத விட  ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்  

 ----------------------------

16. இந்த உலகத்துல ஏதாவது  ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ்  கிடைக்கும்

------------------------------------------

17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்

------------------------------ 
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை

------------------------------
19. அங்கே பார்த்தியாமொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?

----------------------------------

20. சார்  செக் இருக்கு , ஓக்கேவா?

 பாஸ் ஆகுமா?

------------------------------ 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Oru-Nadigaiyin-Vakku-Moolam-19.jpg

21. என்னைக்கு புரொடக்‌ஷன்   மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்

-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்

----------------------------------

23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்

--------------------------------------

24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு

--------------------------------

25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா

-------------------------------

26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும்  முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?

----------------------------------

27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?

அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே  கொடுத்திருக்கேன்

--------------------------------------------

28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்

ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?

-------------------------------

29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்

========================

30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு  என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

------------------------------ 

http://1.bp.blogspot.com/-t47XzlEyI_U/TwiI6vAH_UI/AAAAAAAAdFE/PUtDUz2ufIM/s1600/Nicole.jpg

31.  அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு

 யோவ், நீதான்யா அவளை பெத்தே

-------------------------

32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

-----------------------------

33.  எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?

---------------------------

34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு

-------------------------------

35.  இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..

நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?

-------------------------

36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?

கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை

-------------------------------

37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற

--------------------------- 

38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்

------------------------

39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?

அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை

-------------------------------

40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை

-------------------------

41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?

-------------------------- 


http://www.koodal.com/cinema/cine_interview/images/2011/punnagai-poo-geetha-649.jpg

42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?

-------------------------

43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
 
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?

-----------------------

44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா

ம்க்கும் திங்க் ஷி = 12 கோவை சரளா

---------------------

45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது

-------------------------------------

46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்


------------------------

47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்

------------------------------

48.  ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது

-----------------------------

49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு

---------------------------

50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?

------------------------------ 

http://aniwebtv.com/wp-content/uploads/2012/02/punnaigai-poo-geetha.jpg

51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால 

------------------------

52.  அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்

---------------------------------

53. நடிகைன்னா  மனசுல கர்வமும் உடம்புல திமிரும்  வரனும்

--------------------------

54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது

-------------------------------

55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்

----------------------------

56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?

-------------------------------

Thursday, March 01, 2012

கூடங்குளம் கட்டுரையால் முடக்கப்படும் அபாயத்தில் கீற்று இணையதளம்?

 http://natpu.in/wp-content/uploads/2011/03/keetru-ramesh-bala-cartoons.jpg

'ஜெயலலிதா ஆட்சியில் கருத்துரிமைக்கு இடம் இல்லையா?’ என்று கொதிக்கிறார்கள், சட்ட உரிமை ஆர்வலர்கள். 'கீற்று’ இணையதள ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணைதான் இந்தக் கொதிப்புக்குக் காரணம். 


சிறு வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட சமூக அக்கறையுள்ள சிறு பத்திரிகைகளை, தனது இணையதளத்தில் வெளியிட்டதன் மூலம், உலக அளவிலான கவனத்தைப் பெற்றது 'கீற்று’. இட ஒதுக்கீடு, தலித்மக்கள் மீதான வன்கொடுமைகள், கல்வி, சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகள் இதில்அதிகம் வெளியிடப்பட்டன. சூடு கிளப்பும் சர்ச்சையான விவாதங்களும் அவ்வப்போது  இதில் இடம்பெறும்.


அண்மையில், 'அணுஉலைப் பிரச்னை’ தொடர்பாக விஞ்ஞானி​கள், சூழலியலாளர்கள், படைப்பாளிகள் என பல தரப்பினரும் எழுதிய 200 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான், கடந்த 8-ம் தேதியன்று, 'கீற்று’ இணைய​தளத்தின் ஆசிரியரும் உரிமையாளருமான ரமேஷிடம், க்யூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சட்ட உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கீற்று நந்தன் என்ற ரமேஷ் கூறியது''-கடந்த 7-ம் தேதி மதியம் வீட்டுக்கு வந்தபோது, 'கீற்று இணைய தளம் பற்றி விசாரிக்க வேண்டும். க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்கு நாளை வாருங்கள்’ என்று, அங்கு காத்திருந்த போலீஸ்காரர்  சொன்னார். மயிலாப்பூரில் உள்ள க்யூ பிராஞ்ச் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு, டி.எஸ்.பி. நிலையில் உள்ள ஓர் அதிகாரி, கீற்று தளம் பற்றி விசாரித்தார். 'பல இயக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுகிறீர்கள். நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்? 

நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் உங்களுக்கு உதவி செய்கிறார்களா? வேறு யாராவது நிதிஉதவி செய்கிறார்களா?’ என்று இரண்டு மணி நேரம் பல விவரங்களைக் கேட்டார். என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் விசாரித்தார்கள். சமூகநீதி, முற்போக்குக் கருத்துக்களை வெளியிட்டு வரும் என்னுடைய இந்த முயற்சி முழுவதும் என்னுடைய சொந்த செலவில் நடக்கிறது. 

பொருளாதாரப் பிரச்னை வரும்போது, கீற்று வாச​கர்கள் உதவுகின்றனர். எங்கள் தளத்தின் செயல்​பாடுகள் முழு​வதும் வெளிப்படையானது. சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிடுவதைத் தடுப்பது, அடிப்படை சுதந்திரத்தை மறுப்பதாகும்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமேஷ்.


தீவிர அரசியல் தளமான 'வினவு’ இணையதள செய்தித் தொடர்பாளரான பாண்டியன், ''கீற்று ஆசிரியரிடம் க்யூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியதை, கருத்துரிமை பேசும் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது ஒரு வகை மிரட்டலும்கூட. இதை இப்படியே விட்டுவிட்டால், மக்கள் நலன் சார்ந்து எழுதுவதே தடைசெய்யப்படும் நிலை உருவாகும். எனவே, இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்'' என்றார் ஆவேசத்துடன்.


இது ஒரு புறம் இருக்க... சென்னையைத் தலை​மை இடமாகக்கொண்ட 'தி வீக் எண்ட் லீடர்’ ஆங்கில இணையதளம் திடீரென முடக்கப்பட்டது, கருத்துரிமையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்துக்கு எதிராக கேரளத்தினர் தகவல்களைப் பரப்புவது தொடர்பாக, இந்த இணையதளத்தில் கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த மலையாள ஆதரவுத் தரப்பினர் பிரச்னையைக் கிளப்பினார்கள். அது பின்னர் அமுங்கிப்போனது. விமர்சனங்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்த எதிர்வினைகள், இணையதளத்தை முடக்கிப்போடும் அளவுக்குப் போனது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcZSfMkd-GDEqsKQP8BjtOWdXYFvy3tX9gmtYPXjuD6Ovjfly8qFjrfEkhL3gBBgTPfhIor2DOw_6WYdz7uib-t4RK64WgsTWrMhDh0Qm7cxlG3m1ftOoGaYtpWuxMEl1r8U6SD-y0Oy4/s640/keetru.jpg


இது பற்றிப் பேசும் 'தி வீக் எண்ட் லீடர்’ஆசிரியர் வினோஜ் குமார், ''எங்கள் இணையதளத்தின் பெயரைப் பதிவு செய்த நிறுவனம், இந்த மாதத் தொடக்​கத்திலேயே தளத்தை முடக்கிப்போட்டது. 15 நாட்களுக்​கும் மேல், தளத்தை வழக்கம்போல பார்வை​யிட முடியாதபடி சிக்கல் உண்டானது. பெரியாறு அணை விவகாரத்தில், மலையாள இனவெறி​யுடன் தமிழகத்தில் செயல்படுபவர்கள், எங்களின் கட்டுரைக்குப் பழி வாங்கும் விதத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று நம்புகிறோம்'' என்கிறார்.


இது, இணையத் தளங்களுக்குச் சோதனைக் காலமோ?