Monday, October 10, 2011

நாளைய இயக்குநர் - காதல், காமெடி கதைகள் - விமர்சனம்

கீர்த்தி - சார்.. குறும்படம் எடுக்கறதுல எந்த மாதிரி படங்கள் மேக்கிங்க்ல கஷ்டம்?

கே பாக்யராஜ் - என்னைப்பொறுத்தவரை ஆக்‌ஷன் ஃபிலிம் தான் கஷ்டம்.. ஏன்னா கொஞ்சம் மிஸ் ஆனாக்கூட காமெடி ஆகிடும்.. கரெக்ட் பேக்கேஜ்ல கொண்டு வரனும்.. 

சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. 



1. கார்த்திக் - காதல் பீஸ்சா

லவ்வர்ஸ் ஜாலியா பைக் ரைடு போறாங்க.. அப்போ ஃபிகர் சொல்லுது.. நாளை வீட்டுக்கு வா..  என் தங்கை , அப்பா வீட்லதான் இருப்பாங்க.. பேசி சம்மதம் வாங்குன்னு.. 

இவரு போனா அங்கே வருங்கால  மச்சினி மட்டும்  தனியே தன்னந்தனியே.. 

இவருக்கு சிரமம் வைக்காம அதுவே பிட்டை போடுது.. வீட்ல வேற யாரும் இல்லை..  உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் அப்டினு சொல்லிட்டே பெட்ரூம்க்குள்ள போகுது.. இது குறும்படமா? குறும்புப்படமா? அப்டினு நாம யோசிக்கறப்ப.....

ஹீரோ பைக் சாவியை மறந்து பைக்லயே வெச்சுட்டு வந்துடறார்.. அதை எடுத்துட்டு வரலாம்னு போறப்ப ஹீரோயின், மாமா வந்து மச்சினி கிட்டே சிலாகிக்கறாங்க.. மாப்ளை கேரக்டர் அருமை.. ரொம்ப நல்லவர் போல.. ஃபிகர் வாலண்ட்ரியா கூப்பிட்டாலும் ஓடிப்போய்ட்டார்..

சாவியை எடுத்துக்கிட்டு திரும்பி வர்ற ஹீரோ நமுட்டுச்சிரிப்போட நிக்கறார்..

இந்தப்படத்துல பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் மச்சினியா வர்ற ஃபிகர் தான் நல்ல முக வெட்டு ( எத்தனை வெட்டுன்னு கேட்கப்படாது) குறும்புத்தனமான அக்னி நட்சத்திரம் அமலா (அஞ்சலி) நடிப்பு.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. மாப்ளையோட கேரக்டரை செக் பண்ண சொந்த தங்கையையே மோசமா நடந்துக்கற மாதிரி நடிக்க சொல்வாங்களா? யாராவது? நாளை மேரேஜ் ஆன பின் நிஜமாவே ட்ரை பண்ணலாம்னு மாப்ளைக்கு தோணாதா?

2. இப்போதான் முதல் டைம் பார்க்கறா ஹீரோயினோட தங்கை. பார்த்ததும் காதல் ஓக்கே, பார்த்ததும் காமம்? நாட் ஓக்கே.. 

3. இது ஒரு விளம்பர படத்தோட KNOT . அதுல ஹீரோ காண்டம் எடுத்துட்டு வரப்போவாரு.. இதுல பைக் சாவி.. 

4.  மோசமான நடத்தை உள்ள மாப்ளை ஏன் மச்சினி சோபால  பக்கத்துல உக்காரும்போது விலகி விலகி செல்கிறார்?

5. மாப்ளையை பற்றி விசாரிக்கனும்னா பொதுவா ஆஃபீஸ்ல , அக்கம் பக்கம், அல்லது நண்பர்களிடம்தான் விசாரிப்பாங்க.. யாரும் இப்படி சொந்த மகளை நடிக்க சொல்லி பார்க்க மாட்டாங்க.. 




2. குணாளன் - தொடரும்

ஒரு மாடர்ன் ஆசாமி தன் லவ்வரோட பைக்ல போறான், காதுல வாக்மேன் மாட்டி பாட்டு கேட்டுட்டே... ரொம்ப தூரம் போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. பார்க்கற ஆடியன்ஸ்  டென்ஷன் ஆகற வரை போய்ட்டே இருக்கான்.. 


வழில ஒரு ஆளை பார்த்து அந்த ஃபிகரு அந்தாள் செமயா இருக்காரு அப்டின்னு சொல்ல அப்போ நானும் நாளைல இருந்து ஜிம் போறேன்னு இவன் சொல்றான்..

அடுத்த நாள் காலைல 6 மணிக்கு இவன் ஜிம்முக்கு போறப்ப பாலத்துல  2 ரோடு பிரியுது.. எந்த ரோடுல போலாம்கற அறிவுப்புப்பலகை மேல் யாரோ ஏதோ போஸ்டர் ஒட்டி இருக்காங்க.. அதனால இவன் தவறுதலா ராங்க் ரூட்ல போறான்.. ஆக்சிடெண்ட்.. ஸ்பாட் அவுட்.. அவன் இறந்த ஃபோட்டோவை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுது.. 

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. அண்ணே, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லவும்.. ஏன் சுத்தி வளைக்கறீங்க?

2. ஹீரோ படம் பூரா வாக்மேன் கேட்டுட்டே வர்றது எதுக்கு? ஆடியன்ஸை டைவர்ட் பண்ணவா? ம்ஹூம்..

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  லவ் பண்ற பொண்ணை யாராவது 2 மணி நேரம் காக்க வைப்பாங்களா?

2. நீ மட்டும் இல்ல... அவனை துவம்சம் பண்ணி இருப்பேன்..

சரி விடு.. அவன் உடம்பை பார்த்தியா? அம்சமா இல்ல?



3. குகன் சென்னியப்பன் - உயிர் வாசம் 

கோயில், திருவிழாக்களில் ஆடு , கோழிகளை பலியிடும் வேலையில் இருக்கும் ஒருவர் நேரில் ஒரு விபத்து கம் கொலை யை பார்க்கும்போது நெஞ்சில் ஈரம் பொங்க , மனித நேயத்தை வெளிப்படுத்துகிறார்.. கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற KNOT..  நீட் 

படத்துல முக்கியமான மேட்டர் டயலாக்ஸே கிடையாது. ஒரே ஒரு சீன்ல செல்ஃபோன்ல குழந்தை வாய்ஸ் மட்டும் கேட்கும்.. ஒருத்தனை நடு ரோட்ல ஒரு கும்பல் வெட்டி போட்டிருக்கும்.. அந்த பாடில இருக்கற ஃபோன் ஒலிக்கறப்ப ஹீரோ எடுத்து அட்டெண்ட் பண்றார்.. அந்த குழந்தை அப்பா சீக்கிரம் வாங்க.. நான் கேட்டதெல்லாம் வாங்கி வந்தீங்கதானே? அப்டினு கேக்கும்

ரோட்ல பேக் சிதறி கிடக்கும், அதுல ஹார்லிக்ஸ், பொம்மை பொன்ற குழந்தைகள் அயிட்டமா இருக்கும்.. எங்கேயும்  எப்போதும் படத்துல இதே மாதிரி சீன் வந்துட்டதால எஃப்க்ட் கம்மி, ஆனாலும் மனதை தொட்டது..

 படத்துக்கு பின்னணி இசை அழகு.. உடுக்கை அடிக்கும் ஒலி.. கோயில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி

1. கேரக்டர்கள் ரவுடிகள், கெட்டவர்கள் என்பதை காட்ட சரக்கு அடிப்பது போல், தம் அடிப்பது போல் அவ்வளவு விலா வாரியாக காட்ட வேண்டுமா?




4. சந்த்ரு - ஆதாயம்

2 ஃபிரண்ட்ஸ்.. 2 பேருமே எழுத்தாளர்கள்... ஒருத்தன் சொல்றான்.. ரவுடி மேட்டர் கேட்டு பத்திரிக்கைல  ஃபோன் வந்திருக்கு.. எப்படி ரெடி பண்ண?
கவலைப்படாத, எனக்கு தெரிஞ்ச ரவுடி இருக்கான். அவனை பிடிப்போம்னு ஃபிரண்ட் சொல்றான்...மனசுக்குள்ள ஃபிரண்டுக்கு பொறாமை, தனக்கு கிடைக்காத பேரும் , புகழும் அவனுக்கு மட்டும் கிடைச்சிருச்சேன்னு.. 

ரவுடியை மீட் பண்ணி தகவல் சேகரிச்சு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணிடறாங்க.. பப்ளிஷ் ஆகுது.. 

இப்போ ரவுடியோட இடத்துல பார்ட்டி.. சரக்கு அடிக்கறாங்க எல்லோரும்.. திடீர்னு ரவுடி தன்னை பற்றி ஆர்டிகிள் எழுதுன ரைட்டரை கொலை பண்ணிடறான்,,. கொல்றப்ப என்னைப்பற்றியாடா எழுதுனே? அப்டி ஒரு பஞ்ச் டயலாக் வேற.. அப்புறம் பார்த்தா அவனை கொலை பண்ணச்சொன்னதே ரைட்டரோட நண்பன் தான் , பொறாமையின் காரணமா அப்டி பண்ண வெச்சுட்டானாம்.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ராஜேஷ்குமார் மாதிரி பிரபலமான ஒரு எழுத்தாளரை கூடவே இருக்கும் நண்பர் கம் ரைட்டர்  பொறாமையின் காரணமாய் கொலை செஞ்சா ஏத்துக்கலாம்... ஊரில் உள்ள 1000க்கணக்கான ஃபிரீ லான்ஸ் ரைட்டரில் இவரும் ஒருவர், இவரைக்கொல்வதால்  அவருக்கு சான்ஸ் கிடைச்சுடுமா? என்ன? இதுக்காக ஒரு கொலையா? அவ்வ்வ்

2. பணம் வாங்கிட்டு கொலை பண்ணும் ரவுடி எதுக்காக கொலை செய்யறப்ப என்னை பற்றியாடா எழுதுனே? அப்டினு டயலாக் பேசறாரு?

பெஸ்ட் ஃபிலிம் உயிர் வாசம்

பெஸ்ட் டெக்னீஷியன் -ஆதாயம் கேமரா மேன்

பெஸ்ட் ஆக்ட்ரஸ் - காதல் பீஸ்சாவில் கில்மா மச்சினியா வந்ததே ஒரு 70 மார்க் ஃபிகரு அதுக்கு

டிஸ்கி - கே பாக்யராஜ் சொன்ன ஒரு மலரும் நினைவு.. வளர்ந்து வரும் எல்லா இயக்குநர்களூம் மனசுல வெச்சுக்கனும்.. வீட்ல விஷேசங்க படத்துல அவரோட மனைவி இறந்ததும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்கப்போறார்..

சார்.. என்னோட முதல் மனைவி இறந்துட்டாங்க....

அந்த சீனை பார்த்துட்டு ஒரு ரசிகர் கேட்டாராம்.. சார்.. நீங்க இப்போ மனைவியை இழந்திருக்கீங்க, முறைப்படி மனைவி இறந்துட்டாங்கன்னுதானே கேஸ் தரனும், முதல் மனைவி இறந்துட்டாங்கன்னா அப்போ 2 வது மனைவிக்கு ஆல்ரெடி பிளானா?ன்னு கேட்டாராம்.. 

டைரக்டர்கள், அசிஸ்டென் டைரக்டர்கள்க்கு தோணாத பல லாஜிக் அத்து மீறல்கள் சாதாரண ரசிகனுக்கு தோணலாம்.. அதனால ஜாக்கிரதை என்றார்..

IN THE COLD OF THE NIGHT - - சினிமா விமர்சனம் 18 +


1990 ல ஃபாரீன்ல ரிலீஸ் ஆகி இந்தியாவுக்கு 1995 ல ரிலீஸ் ஆனப்ப  ஈரோடு அபிராமில 1998 ரிலீஸ் ஆச்சு, பேப்பர்ல விளம்பரம் எல்லாம் பட்டாசை கிளப்புச்சு.. பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? கில்மா படத்துக்கு போஸ்டர் எதுக்கு? என்ற கொள்கை எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் ஒரு நல்ல படம்  (!!!!!) ரிலீஸ் ஆகறப்ப தியேட்டர்காரங்க அவங்க ஆர்வத்தை காட்றதுல தப்பில்லைன்னு தோணுது.. பேப்பர்ல எக்ஸ்ட்ரா பிட்டா படத்தில் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் அப்டினு வேற போட்டுட்டாங்களா? அவனவன் காலை 11 மணிக்காட்சிக்கு 10 மணில இருந்தே வெயிட்டிங்க் .. ஆனா நான் நல்ல பையன் என்பதால் எப்பவும் போல 11 மணிக்குத்தான் போனேன்..( அப்புறம் எப்படி அவங்க 10 மணிக்கு வந்தது தெரிஞ்சது?ன்னு லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது.. மறுபடி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன் )

ஏன்னா காலைல 9.30 மணிக்கு ஆஃபீஸ்.. மேனேஜர்ட்ட ரிப்போர்ட் குடுத்துட்டு எக்ஸ்சிகியூட்டிவ்ஸ் எல்லாருக்கும் வழி நடத்திட்டு ,ஏதோ ஒரு பொய்யை சொல்லிட்டு ஆஃபீசை விட்டு கிளம்பறப்பவே 10.45 ஆகிடுச்சு.. அது டிசம்பர் மாசம்.. பேப்பர் விளம்பரத்துல வேற மார்கழி குளிருக்கு இதமான சூடான காட்சிகள் கொண்ட படம்னு போட்டிருந்ததால முதல் நாள் முத ஷோவே கிளம்பியாச்சு/./ ஏன்னா மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுனா 2 வது நாள்ல சில முக்கியமான காட்சிகள் கட் ஆகிட்டா..??

டிக்கெட்டை வாங்கிட்டு உள்ளே போனா  ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்கள் எல்லாரும் அங்கே தான் இருந்தாங்க, நல்ல வேளை ஆஃபீஸ் மேனேஜர் அங்கே இல்லை.. பொதுவா இந்த மாதிரி படத்துக்கு வர்றப்ப தியேட்டர்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?ன்னு பார்த்துக்கறது பண்புள்ள , முன் ஜாக்கிரதை உள்ள யூத்துங்க வழக்கம்.. 


படம் போட்டதும் ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி 2 பேரும் சண்டை போட்டுக்கறாங்க.. இது என்ன ஃபைட் படமா?ன்னு கேட்டுடாதீங்க.. இது நைட் சண்டை.. பக்கத்துல ஒரு ஆள் இண்ட்ரஸ்ட்டே இல்லாம உக்காந்திருந்தாரு.. நான் கேட்டேன்.. என்ன சார்? சீன் ஓடுது? கண்டுக்காம இருக்கீங்க? அதுக்கு அவர் சொன்னாரு.. தம்பி, ஹீரோ அவன் தாலி கட்ன சம்சாரம் கூட ஜல்சா பண்றான்.. அதுல என்ன கிளுகிளுப்பு இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்க.. வேற ஒரு ஃபிகர் கூட சீன் வரும், அப்போ ரசிப்பேன் அப்டின்னாரு.. 

அடங்கோ.. அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுன்னு சொன்னது மத்த கட்சிக்காரங்க நம்ம கட்சில சேர்ந்தாலும் தப்பில்லைங்கற அர்த்தத்துல. நம்மாளுங்க   அதை புரிஞ்சிக்கிட்டது இப்படி.. 

சரி.. இப்போ விமர்சனத்தை விட்டுட்டு நாம பாதை மாறிடக்கூடாது.. அப்புறம் உம்மாச்சி கண்ணை குத்திடும்.. படத்தோட கதை என்ன?

ஒரு ஃபோட்டோகிராஃபர்.. அவருக்கு அடிக்கடி ஒரு  கனவு வருது.. அந்த கனவுல ஒரு மிச்சமான ஃபிகரை ஸ்விம்மிங்க் பூல்ல அவர் கொலை பண்ற மாதிரி.. இதுல பாருங்க.. கொலை செய்யப்படறது ஒரு ஃபிகர்.. அதுவும் சிங்கிள் பீஸ் டிரஸ்ல கிளாமருக்கு கிளாமர்.. த்ரில்லுக்கு த்ரில்.. திரைக்கதைன்னா இப்படித்தான் எழுதனும்.. 

அவர் கனவுல கொலை பண்றதை மனசுல நினைச்சுட்டே ரியல் லைஃப்ல பக்கத்துல படுத்திருந்த சம்சாரத்தை கழுத்தை நெறிக்கறார்.. ( ஒரு வேளை வேணும்னே அல்லது அந்த சம்சாரம் வேணாம்னே நெறிச்சிருப்பாரோ? டவுட்டு )

திடுக்கிட்டு விழிச்சா கனவு... என்னா மேட்டரு>ன்னு சம்சாரம் கேட்டப்ப அண்ணன் எதுவும் சொல்லலை..எந்தக்காலத்துல ஆம்பளைங்க பொண்டாட்டி கிட்டே உண்மையை சொல்லி இருக்காங்க?


ஹீரோ தன்னோட ஃபிரண்ட் கிட்டே மேட்டரை சொல்றான்.. ஃபிரண்ட் ஒரு ஐடியா சொல்றான்.. அதன் படி ஹீரோவோட ஃபிரண்ட் வீட்ல படுத்துக்கறான் கேமரா கண்காணிக்குது..ஆனா அப்போ மட்டும் எதும் நடக்கலை..

ஒரு டி சர்ட்  கடைல ஹீரோவோட கனவுல வந்த அந்த ஃபிகரோட ஃபோட்டோ பிரிண்ட் ஆகி இருக்கு.. அதை வெச்சு விசாரிக்கறான்.. ஒரு விபரமும் பெயரலை.. அவன் கிளம்புன பிறகு பார்த்தா  ஹீரோவோட ஃபோட்டோவும் ஒரு டி சர்ட்ல பிரிண்ட் ஆகி இருக்கு. ஏதோ சஸ்பென்ஸ்..

படம் போட்ட 33 வது நிமிஷத்துல ( நீ படம் பார்க்க வந்தியா ? டைம் பார்த்துட்டு இருந்தியா?) கில்மா ஹீரோயின் வர்றா.. ஹீரோவை பார்க்க வந்தவ 2 நிமிஷம் பேசிட்டு கிளம்பறா.. அப்போ ஹீரோ அவ கையை பிடிச்சு ஒரு நிமிசஹ்ம்னு சொன்னதும் அவ ஏதோ கருமாண்டிச்செல்லி பாளையம்  கிராமத்து ஃபிகர் மாதிரி கையை எடுய்யான்னு கற்புக்கரசி மாதிரி சொல்றா.. ஆனா.. அடுத்து .. ஹி ஹி 

அந்த ஃபிகர் கூட அவ வீட்டுக்கு ஹீரோ போறான்.. அவ சமையல் பண்ணி போடறா.. இவனும் சாப்பிடறான்..சொந்த சம்சாரம் என்ன சமைச்சாலும் நம்மாளுங்க வாய் விட்டு பாராட்டவே மாட்டாங்க.. இந்த ஃபிகர் பண்ணுன ஒரு சூப் செமயா இருக்குன்னு வாய் கூசாம பொய் சொல்லி அவன் அவளோட விரலை..... அப்புறம் அடுத்த நாள் காலைல யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்குது.. அந்த ஃபிகர் அவ வீட்டு பாத்ரூம்ல குளிக்குது.. இதுல என்ன எதிர்பாராத சம்பவம்?அதைத்தான் நானும் கேட்கறேன்..

..ஹீரோ என்னமோ காணாததை கண்ட மாதிரி.. பாத்ரூம் கதவை திறந்து ஹேய்.. இங்கே என்ன பண்றே?ன்னு கேக்கறான்.. அதுக்குப்பிறகு 2 பேரும் தாயக்கரம் விளையாண்டங்கன்னு சொன்னா நம்பவா போறீங்க?

அந்த ஃபிகர் எல்லாம் முடிஞ்ச பிறகு வெளியே கிளம்பி போறா.. ஹீரோ அவ கிச்சனை செக் பண்றப்ப கனவுல அவன் உபயோகப்படுத்துன அதே கத்தி இருக்கு..  அது கூட பரவாயில்லை.... கனவுல வந்த நீச்சல் குளம் , ஹால் எல்லாமே அவன் பார்க்கறான்.. உச்ச கட்ட சஸ்பென்ஸா ஒரு சி டி பார்க்கறான்.. அதுல  அவன் கனவுல கண்ட சீன், கொலை பண்ணுன மாதிரி வந்த சீன், அப்புறம் இவன் பாத்ரூம்ல கில்மா ஃபிகர் கூட விளையாண்டதுன்னு எல்லாம் இருக்கு.. 

அப்போதான் தெரியுது.. எல்லாமே பிளானிங்கா பண்ணி இருக்காங்க.. அவ யாரு? எதுக்காக அப்படி பண்ணுனா? எப்படி தப்பிச்சான்? என்பதை எல்லாம் வெண் திரையிலோ, நீலத்திரையிலோ கண்டு மகிழுங்கள்.. 


சில சந்தேகங்கள் , சில கேள்விகள்

1. ஹீரோ ஏன் ஒரு மன நல மருத்துவரை கன்சல்ட் செய்யவே இல்லை..?

2. பீச்ல கில்மா ஃபிகரை டி சர்ட்ல ஃபோட்டோவா வெச்சிருக்கற ஆளை துரத்தற ஹீரோ ஏன் ஓடியே துரத்தறார்..? வில்லன் சைக்கிள்ல போறான்.. இவரும் அங்கே இருக்கற சைக்கிள்ல போகலாமே? ஏன் மெனக்கெட்டு 2 கிமீ ஓடறார்?

3.ஹீரோ கில்மா ஹீரோயினை சந்தித்த பிறகு அவர் வீட்லயே குடி இருக்கார், கோவலன் மாதவி ட்ட இருந்த மாதிரி, ஆனா கணணகிட்ட இருந்து ஒரு டைம் கூட ஃபோனே வர்லையே? ஏன்?

4. ஹீரோ ஏன் போலீஸ் கிட்டே தகவலே சொல்லலை?


சில காமெடி கேள்விகள்

1. கில்மா ஹீரோயின் எப்போ பாரு தலை ஈரத்தோடயே இருக்காரு.. காய்ச்சல் வராதா? துண்டை எடுத்து துடைக்கவே இல்லையே ஏன்? ( என்னா ஒரு அக்கறை? )

2. கில்மா ஹீரோயின் ஏசி பாத்ரூம்ல குளிக்கற சத்தம் அதாவது ஷவர்ல இருந்து தண்ணீர் வர்ற சத்தம் எப்படி 12 ரூம் தள்ளி இருக்கற ஹீரோவுக்கு தெளிவா கேக்குது?

3. வாடாமல்லி கலர் லிப்ஸ்டிக்கை கில்மா ஹீரோயின் போட்டிருக்காரே , அதைக்கூட சகிச்சுக்கலாம்.. எதுக்கு அவ்வளவு  டார்க் கோட்?

4. ஹீரோ ரொம்ப சோம்பேறியா? எப்போ பாரு ஹீரோயின் தான் ஹீரோவோட டிரஸ்ஸை ரிமூவ் பண்றாரு..

5. கில்மா ஹீரோயின் படத்துல மொத்தம் 45 நிமிஷம்  வர்றாரு.. 41 நிமிஷம் ஸ்விம்மிங்க் பூல்லயே தான் இருக்காரு.. அவர் என்ன குளியல் வளத்துறை அமைச்சரா?

6. ஹீரோவும், கில்மா ஹீரோயினும் பெரும்பாலும் டிரஸ் இல்லாம தான் இருக்காங்க.. எதுக்காக 40 லட்சம் சம்பளம் குடுத்து காஸ்டியூம் டிசைனர்?

படத்துல ஒளிப்பதிவு அழகு.. கிளாமரான காட்சிகளில் லைட்டிங்க் பக்கா.. 

சி.பி கமெண்ட் - ஷனான் ட்வீடு இருக்காரு. படத்துல மொத்தம் 4 சீன் இருக்கு, பார்க்கலாம்.. கண்ணியமான (!!!!) கிளாமர் படம்





Sunday, October 09, 2011

காதல் கவிதைகள் சொல்லும் ட்வீட்ஸ்

1.ஐ லவ் யூ சொல்ல வந்த உன் ஆளை எதுக்குடி சட்டையை கழட்ட சொன்னே?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு டி ஆர் சொன்னாரே?

-----------------------

2. தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்கிறது, கலைஞரின் செல்வாக்கு சரிகிறது # மஞ்சள் நிறத்தின் முரண்கள்

------------------------------

3. சீதை இந்த அளவு ஃபேமஸ் ஆகி இருக்க மாட்டாள், ராமன் மட்டும்தீக்குளிக்க சொல்லாமல் இருந்திருந்தால்# நீதி - ஆண் தான்பெண்ணின் புகழுக்கு காரணம்

--------------------------------

4. உன் ஆடம்பரமான அழகை என் எளிமையான அன்பு வசீகரித்த போது காத்திரமான நம் காதல் பூ பூத்தது மென்மையாக!

---------------------------------

5. நீ நடந்து வரும் வழி எங்கும் அழகை இறைத்து விட்டு வருகிறாய், எல்லாவற்றையும் சேகரித்து வர எனக்கு தாமதம் ஆகிறது

-------------------------------

6. உன் நினைவுகளை சேமிக்க மட்டும் ஒரு வங்கி இருந்தால் என் சேமிப்பு சக்தி கண்டு அது பிரமித்திருக்கக்கூடும்!

--------------------------------

7. நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளே!

----------------------------

8.அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் - கேப்டன் ஆவேசம்,எதிர்க்கட்சியா இருந்தும் இந்த அளவு அமைதியா எவன் இருந்திருக்கான்?

----------------------------

9. அட்டு ஃபிகர் யார்? 

நேருக்கு நேர் பார்வையைசந்தித்த பின்னும் உடல்அளவிலோ,மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் @டு ஃபிகர்

-----------------------------------

10. சூப்பர் ஃபிகர் யார்? 

பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியைஅதிகமாக கிளறிவிடுவதுபோல பார்த்தவுடனேயேகவிதைகளை உளறவைக்கும்ஃபிகர்

------------------------------

11. என்னை எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் நான் எல்லோரையும் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

----------------------------------

12. மஞ்சள் பூசும் சில பெண்கள், மஞ்சள் துண்டு போர்த்தி இருக்கும் கலைஞர் தங்களை நம்பியவர்கள் முகத்தில் கரி பூசுவதில் கை தேர்ந்தவர்கள்

----------------------------

13. உன்னை எதிரில் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை விட எதிர்பார்க்கும்போது ஏற்படும் துடிப்பே என்னை அதிகம் இயங்க வைக்கிறது

-----------------------------------

14. காதலிப்பதில் யாரும் களைப்படைவதே இல்லை, ஆனால் காத்திருப்பதில், பொய்களை சொல்வதில், மன்னிப்புக்கேட்பதில், காயம் அடைவதில் களைப்படைகிறார்கள்

---------------------------------------------

15. வெற்றி தாமதம் ஆவதால் சலிக்காதே! ஒரு அரண்மனையை நிர்மாணிப்பது என்பது சாதாரண வீட்டை நிர்மாணிப்பதை விட கடினமானது

--------------------------------------

16. சாம்பல் பூஜை அறைக்கு வந்ததும் திருநீறு ஆவது போல உன் நெற்றியில் இட்டுக்கொண்டதும் அது மாசிலா நீறு ஆகிறது

---------------------------------

17. உன் அழகால் எல்லோரையும் பலவீனம் ஆக்குகிறாய்! என் அன்பால் உன்னை மட்டும் நான் பலம் ஆக்கி என்னை சுகவீனம் ஆக்கிக்கொண்டேன்

------------------------------------

18. நீ இமைகளை வேகமாக அசைக்கையில் பட்டாம்பூச்சிகளுக்கு சவால் விடுகிறாய், உன் உதடுகளை ஈரப்படுத்துகையில் தேனிக்களுக்கு அழைப்பு விடுகிறாய்

------------------------------------

19. பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது பள்ளிப்பிராயத்து ஆசிரியர்க்கு நாம் எழுந்து இடம் கொடுக்கையில் அவர் முகத்தில் ஏற்படும் பெருமிதம்.. அடடா!!

--------------------------------

20. ஒரு டீச்சரால எல்லா சப்ஜெக்ட்டும் நடத்த முடியறதில்லை, ஆனா ஸ்டூடண்ட்டால எல்லா சப்ஜெக்ட்டையும் படிச்சிட முடியுது # நீதி - ஸ்டூடண்ட் டாப்

--------------------------------------

Saturday, October 08, 2011

ஈரோடு நகரம் - ஒரு பார்வை

பெரியார் பிறந்த ஊர்,மஞ்சள் மாநகரம் என்பது போக ஈரோட்டுக்கு பல பெருமைகள் உண்டு.. பல பிரச்சனைகள் உண்டு.. ஊர் வாழ் மக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் ஒரு பார்வை பார்ப்போம்.. 

1. ஆன்மீகம் - இங்கே கோட்டை ஈஸ்வரன் கோயில் ரொம்ப ஃபேமஸ்... ஈரோடு பன்னீர் செல்வம் பஸ்டாபில் இருந்து  ஒரு கி மீ தூரத்துல இருக்கு..அதுக்குப்பக்கத்துலயே பெருமாள் கோவில் இருக்கு.. இங்கே துளசி தீர்த்தம் வாங்கி குடிச்சா பல நோய்கள் குணமாவதா ஒரு ஐதீகம் உண்டு.. பொதுவா துளசியே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் நிவாரணிதான்..பெரிய மாரியம்மன் கோவில் உண்டு.. இது ப செ பார்க் அருகிலேயே இருக்கு.. வருடா வருடம் கம்பம் பிடுங்கும் விழா மிக சிறப்பா கொண்டாடப்படுது.. ஈரோட்ல இருந்து 9 கிமீ தூரத்துல திண்டல் மலை இருக்கு பேருக்குத்தான் மலை.. ரொம்ப கம்மியான படிகள் தான்.. முருகர் ஆலயம்.. இங்கே லேடீஸ் காலேஜ் 1 இருக்கு வேளாளர் மகளிர் காலேஜ்.. அதை வெச்சுத்தான் இந்த கோடில் ஃபேமஸ் ஆச்சு.. இது போக நகரை சுற்றிலும் மொத்தம் 37 கோயில்கள் உள்ளன.. 

http://www.erodeinfo.com/erode-photos/images/erode-mariyamman-kovil.jpg


2. போக்குவரத்து - டிராஃபிக் ஜாம் இல்லாத முக்கிய நகரம் எங்கே இருக்கு? எல்லா ஊர்லயும் இது பெரிய பிரச்சனைதான்.. பஸ் ஸ்டேண்ட்ல இருந்து ஒரு கி மீ தூரத்துல ஜி ஹெச் பஸ் ஸ்டாப் நால் ரோடு சிக்னல் தான் நகரின் மையமான டிராஃபிக் ஜாம் ஏற்படும் இடம்.. காலை 8 டூ 10 செம ரஷ்ஷா இருக்கும்.. மாலை 4 டூ 9 வரை கேட்கவே வேண்டாம்.. ப செ பார்க்  ரவுண்ட்டனாவுலயும் இதே அளவு டிராஃபிக் ஜாம் இருக்கும்.. மணிக்கூண்டு ஸ்டாப் - இங்கேயும் பல ஜவுளிக்கடைகள் சங்கமமா இருக்கறதால செம கூட்டம் தான் எப்பவும்.. 

3. வணிகம் -  பெட்ஷீட் சேல்சில் தமிநாடு அளவில் மட்டும் அல்ல இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்.. இது.. வாரா வாரம் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் கனி மார்க்கெட் கூடுது.. நாள் ஒன்றுக்கு சர்வசாதாரணமாக 4 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் ஆகும்.. பல மாநிலங்களில் இருந்து மொத்தமாக பர்ச்சேஸ் பண்ண இங்கே வருவாங்க.. 

மஞ்சள் மண்டி ஸ்டார் தியேட்டர் அருகே இருக்கு.பிஸ்கெட், சோப் அயிட்டங்கள் எல்லாம் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல சீப்பா அதாவது MRP ரேட்டை விட 1 ரூபாவாவது கம்மியா இங்கே கிடைக்கும்.. மற்றபடி மளிகை சாமான்கள், பருப்பு வகைகள் எல்லாம் மணிக்கூண்டு வணிக வளாகத்தில் சீப்பாக கிடைக்கும்.. .சத்தி ரோட்டில் ஆயில் மில்களில் எண்ணெய் வகைகள் தரமாக , நியாயமான விலையில் கிடைக்கும் , பொது மக்கள் இங்கே சில்லறையாகவே வாங்கி செல்வார்கள்



4. பள்ளிகள், கல்லூரிகள் - சவீதா பஸ் ஸ்டாப் பின் புறம் உள்ள கலைமகள் கல்வி நிலையம் பாரம்பரியம் மிக்கது.. அதற்கு எதிரே உள்ள செங்குந்தர் மேல் நிலைப்பள்ளியும் அதே.. போல் ஆண்களுக்கானது , ப செ பார்க் அருகே உள்ள சி எஸ் ஐ ஸ்கூல் செம ஃபேமஸ்.. மூலப்பாளையத்தில் கார்மெண்ட் ஸ்கூல் செம காஸ்ட்லி.. அதே போல் திண்டலில் உள்ள பி வி பி ஸ்கூல் ஹை க்ளாஸ் மக்களுக்கானது..

வீரப்பன் சத்திரம் அருகே உள்ள சி என் சி காலேஜ் , சித்தோடு அருகே உள்ள வாசவி காலேஜ், ரங்கம்பாளையம் அருகே உள்ள ஆர்ட்ஸ் காலேஜ் ஆகியவை முக்கிய காலேஜ்கள்.. 

http://lh3.ggpht.com/-0Cu8aCDj-UI/S86lV2QFwnI/AAAAAAAAFgk/nTqNmWM2lvc/%25255C%25255CCentraladmin%25255Ce%25255C20.04.10%25255CLotus%252520%252520Apollo%25255Cphotostills%25255C150209%25255CDSC02564.JPG

5. ஹாஸ்பிடல்கள் - ஈரோடு ஜி ஹெச் தான் பெரும்பாலான நடுத்தர , ஏழை மக்களின் கலங்கரை விளக்கம்.. காலை 8 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை செயல் படுகிறது.. அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணிநேரமும் செயல் படுகிறது.. ஒரு நாளில் கிறைந்த பட்சம் 6800 நபர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

மூலப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல் தான் தனியார் ஹாஸ்பிடலில் செம காஸ்ட்லி.. இப்போதெல்லாம் மக்கள் காஸ்ட்லி ஹாஸ்பிடல் என்றால் அது நல்ல தரமான ஹாஸ்பிடல் அப்டினு நினைச்சுக்கறாங்க..

பெருந்துறை ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் செண்ட்டர், செந்தில் நரம்பியல் மருத்துவனை காசு புடுங்கறதுல மிச்சமான ஆளுங்க..


தொடரும்----

நாட்டு நடப்பு நையாண்டி சிரிப்பு - கமெண்ட் டவுன் கமெண்ட் வில்லேஜ் கண்ணாயிரம்

1.ராணி முகர்ஜிக்கு ஜோடியாக ப்ருத்விராஜ்...! # ”ஆண்ட்டி” ஹீரோ கேரக்டர் போல!!

-------------------------

2. நடிகர்களை பற்றி புட்டு புட்டு வைக்கும் த்ரிஷா...! #ஜாக்கிரதை மேடம் , அப்புறம் அவங்க பிட்டு பிட்டு வெச்சுடப்போறாங்க!!

-------------------------------

3. மது கலாசாரம் பரவியது ஏன்? : வைகோ # நாளை கேப்டனுடன் கூட்டணி வைக்க வேண்டிய கேவலமான நிலைமை வந்தாலும் வரலாம், அடக்கி வாசி அண்ணாத்தே!

------------------------------------

4. ஜாக்கிசானின் 100வது படம் : தமிழகம் முழுவதும் அக்.13ல் வெளியீடு! # அடடா! 13 ராசி இல்லாத நம்பர் ஆச்சே! ஊத்திக்கப்போகுது படம்

----------------------------------

5. ஜெ இப்படி உதாசீனப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை- கம்யூனிஸ்ட் # ஷகீலா கிளாமராக நடித்தது அதிர்ச்சியாக இருக்கிறது - கில்மாயூனிட்ஸ்

----------------------------------

6. நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? லாரன்ஸ்க்கு தூதுவிட்ட அஜித்!# முடியாது, மங்காத்தால என் ஆளை கெட்ட வார்த்தைல திட்டிட்டீங்களே? - லாரன்ஸ்

-------------------------------------

7. நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம் # திருமணத்திற்குப்பின் மீண்டும் கவர்ச்சி காட்டுவேன் - நயன் தாரா உறுதி

--------------------------------

http://fearlessfalgons.files.wordpress.com/2008/08/rani_mukerji_001_300x356.jpg

8.  கத்ரீனா கைப்  நீச்சல் உடையில் நடிக்க மறுப்பு  # நீச்சல் உடைல வந்து சும்மா நில்லுங்க போதும், நடிக்கனும்னு அவசியம் இல்லை

---------------------------------

9. வீடு நீட்டா இருந்தா 1. குழந்தைகள் அந்த வீட்ல இல்லை 2. சம்சாரம் ஊர்ல இல்ல.ஏதோ கேர்ள் ஃபிரண்ட் வீட்டுக்கு வரப்போறா!

-----------------------------------

10. "என்னை சீண்டினால் அப்புறம் நான் மனுஷனாக இருக்க மாட்டேன்:சு.சாமி"-  அண்ணனுக்கு மனசுக்குள்ள பெரிய சோனான்னு நினப்பு!!

-----------------------------------

11. வெங்கட் பிரபுவின் புதிய படம் -ஹீரோ யார் ?# அது தெரில ஆனா அக்கா சோனா மட்டும் கவுரவ வேடத்தில் வந்து ஒரு குத்தாட்டம் போடுவாராம்

----------------------------

12.ப. சிதம்பரம் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது- பிரதமர் # எனக்கு நயன் தாரா மீது நம்பிக்கை இருக்கிறது - சிம்பு @ இமேஜினேஷன்

-----------------------------------

13. மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள் - குஷ்பூ. # பவர்ஸ்டார் நன்றாக நடிப்பார் - மிசஸ் பவர் ஸ்டார்

----------------------------------

14. விஜய்காந்த்தை பார்த்துத்தான் அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க கிளம்பினார் # செல்வராகவனை பார்த்துத்தான் பிரபுதேவா ரம்லத்துக்கு அல்வா குடுத்தார்

---------------------------------------

15. இன்னைக்கு தமிழ்நாடே தலைல தூக்கிவச்சு கொண்டாடுற வேலாயுதம்-ஜெனிலியா #  தலைவலிகளை தலைலதான் வெச்சிருக்க முடியும்

---------------------------------

Friday, October 07, 2011

REAL STEEL - சுட்டிகளுக்கான ஜாலி ரோபோ - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://moviecarpet.com/iwave/images/1/o-two-new-real-steel-clips.jpgஹாலிவுட்டில் ஜீன் கிளாடு வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,  கோலிவுட்ல அணில் புகழ் விஜய் நடிச்ச பத்ரி , ஜெயம் ரவி நடிச்ச எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படங்களை எல்லாம் ஒரு டைம் ரிவைண்ட் பண்ணிக்குங்க.. இதுவும் அது போல் ஒரு பாக்சிங்க் பேஸ்டு ஸ்டோரிதான்.. ஆனா ரோபோ பாக்சிங்க் என்பது மட்டுமே புதுசு..

மனிதர்களை வெச்சு நடத்தற பாக்சிங்க் சூதாட்டம் ஒரு கட்டத்துல போர் அடிச்சுடுது..  மக்கள்ட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ரோபோக்கள் ஃபைட் போடற மாதிரி ஏற்பாடு பண்றாங்க.. நம்ம ஹீரோ , அவருக்கு ஒரே ஒரு ஒயிஃப் ( என்ன ஒரு சோகம்.. அந்த ஒரு ஒயிஃபுக்கும் படத்துல நோ சீன் . பிகாஸ் இது அக்மார்க் சைவபடம்). ஒரே ஒரு சன்..அவர் தன் வீட்லயே ரோபோவை ரெடி பண்றார்... 

அது கிட்டத்தட்ட , தூரத்தட்ட நம்ம ஊர் கிளி மாதிரி.. என்ன வித்தியாசம்னா கிளி சொன்னதை திருப்பி சொல்லும், ரோபோ நாம என்ன செய்யறமோ  அதை அப்படியே திருப்பி செய்யுது.. 

ஹீரோ அதுக்கு பாக்சிங்க் கத்துக்கொடுக்கறாரு.. ஹீரோவோட பையன் அதுக்கு டான்ஸ் கத்து தர்றான்..போட்டில கலந்து ஜெயிக்குது...

http://images2.fanpop.com/image/photos/13600000/Evangeline-Lilly-and-Hugh-Jackman-filming-Real-Steel-in-Detroit-Michigan-July-6-lost-13660028-500-730.jpg

ஹீரோவுக்கு ஏகப்பட்ட கடன்.. பலர்ட்ட கடன் வாங்கி இருக்கார்.. ரோபோ மேட்டர் தெரிஞ்சு எல்லாரும் அவரை நெருக்கறாங்க.. ஒரு கோஷ்டி 40 கோடி ரூபா தந்து அந்த ரோபோவை வாங்க தயாரா இருக்காங்க.. ஆனா பொடியன் சம்மதிக்கலை... அதே ரோபோவை வெச்சு நிறைய போட்டிகள்ல கலந்து நிறைய சம்பாதிக்கலாம் என்பது அவன் ஐடியா.. கிடைச்ச வரை லாபம்  கொடுத்துடலாம்கறது ஹீரோவோட நினப்பு..

 கடைசில யார் நினச்சது நடந்தது என்பதை வெண் திரையில் காண்க!!

இந்தப்படத்தை தியேட்டர்ல குழந்தைங்க எல்லாம் ஆரவாரமாய் கை தட்டி ரசிச்சாங்க.. ஆனா எனக்கு படம் பிடிக்கலை..

2 மனுஷங்க குத்துச்சண்டை போட்டா  ஒருத்தர்க்கு வலிக்கும், அதிக அடி படும், அவர் தோத்துட்டதா சொல்லலாம்.. ரோபோவுக்கு ஏது வலி? ஏது உணர்ச்சி? இந்த ஆதாரக்கேள்விகள் மனதில் வந்து நின்றதால் என்னால் ரசிக்க முடியல..  

http://www.hdimages.in/wp-content/uploads/2011/08/real-steel-evangeline-lilly-hot-photos.jpg

படத்தில் வந்த ரசனையான வசனங்கள்

1.  உங்களுக்கு வேணாம்னா தூக்கிப்போட்டுடுவீங்க.. அதானே மனிதர்களோட குணம்?



2.  அது ஒண்ணும் என் உயிரை காப்பாத்தலை.. அதுக்கு உயிர் கொடுத்ததே நான் தான்..

3. ம் ம் .. ம் ஒத்துக்கறேன், நீ புத்திசாலிதான்.. 

டாடி.. நான் உங்களை விட புத்திசாலி... அதையும் ஒத்துக்குங்க..

4. அப்பா.. எனக்கு 11 வயசு ஆகுது.. 

அப்டியா? நிஜமாவா? நான் 9 அல்லது 10 வயசுதான் இருக்கும்னு நினைச்சேன்./. 

5. எது சொன்னாலும் எதுத்தேதான் பேசறான்..

ஆமாங்க.. உங்க பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்.. 

6.  என்னை அப்படி பார்க்காதீங்க.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது... 

சரி.. பிடிக்காதுன்னா ஏன் நான் பார்க்கறதை நீ பார்க்கறே?

7.  எங்கப்பாவை என் கண்ணுக்கு முன்னால அடிக்காதீங்க.. உங்க பையன் முன்னால நீங்க அவமானப்பட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்?

http://adonismens.com/wp-content/uploads/2011/06/real-steel-release-date.jpg?547c56

 படத்தில் கை தட்டலை அள்ளிய காட்சிகள்

1.  பொடிப்பையனின் நடன அசைவுகளை ரோபோ அட்சரம் பிசகாமல் செய்து செம ஸ்டெப் போட்டு ஆடுவது டாப் ...ஒரே ஆரவாரம் தியேட்டரில்.. 

2. ஹீரோ - ஹீரோயினின் எல்லை தாண்டாத கண்ணியமான ரொமான்ஸ் காட்சி 

3. ஓப்பனிங்க் ஃபைட்டிலும், க்ளைமாக்ஸ் ஃபைட்டிலும்  ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பில்  எடுப்பட்ட ஃபைட் சீன்கள்

 http://l.yimg.com/l/im_siggM1MImfoxwWoiGd68SC1EHw---x209-y280/tv/us/img/site/55/78/0000035578_20061027052559.jpg

சில சந்தேகங்கள், சில கேள்விகள்

1. ஒரு ரோபோவை உருவாக்கவே 10 கோடி தான் எனும்போது ஹீரோவை வைத்து புதிது புதிதாய் பல ரோபோக்களை மார்க்கெட்டில் இறக்கி காசு பார்த்திருக்கலாமே? ஏன் அதே ரோபோதான் வேணும் என வில்லன் குரூப் அடம் பிடிக்குது? லோக்கல் பாஷைல சொல்லனும்னா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

2. என்னதான் ரோபோ செமஸ்பீடு என்றாலும் பொடியனின் டான்ஸ் ஸ்டெப்பை பார்த்து ஒரு செகண்ட் லேட்டாகத்தானே ரோபோவால் பர்ஃபார்ம் பண்ண முடியும்? எப்படி ஒரே டைமில் அப்படி டாண்ஸ் பண்ன முடியும்?

3. செஸ் போல் குத்துச்சண்டையையும் ஒரு புரோகிராம் போல் ஹீரோ ரோபோவுக்கு கற்றுத்தந்து மெம்மரியில் வைக்கிறார்.. பிறகு ஏன் குத்துச்சண்டை போட்டியின் போது ரோபோவுக்கே டெமோ காட்றார்?

4. 2 லட்சம் கடனுக்காக கை வசம் கோடிகளை வைத்திருக்கும் ஹீரோவை கடன் கொடுத்த வடக்குப்பட்டி ராம்சாமிகள் துன்புறுத்துவது ஏன்? அதான் அவர் கிட்டே காசு சேர்ந்துடுச்சே.. பணத்தை முகத்தில் விட்டெறியாமல் ஹீரோ ஏன் கடனாளிகளைக்கண்டதும் எஸ் ஆகிறார்?

ஈரோடு வி எஸ் பி யில் இந்தப்படம் பார்த்தேன்.

இங்கே ஒரு வாரம் தான் ஓடும் போல.. ஏன்னா 14.10.2011 வேற படம் வர்றதா அவங்களே போஸ்டர் ஒட்டி இருக்காங்க..

சி.பி கமெண்ட் - குழந்தைகள், சின்னப்பசங்க பார்க்கலாம் ( அதான் நான் பார்த்தேன்)

சார், சினிமால பெரும்பாலும் ஏன் பெண்களையே பேயா காட்றீங்க?

Alaska Train Snowplow
1.புதியதமிழகம் தனித்துபோட்டி - கிருஷ்ணசாமி # புதிய தலை முறை தெரியும், புத்தகம், புதிய தமிழகம்கறது நீங்க ஆரம்பிச்சிருக்கற கட்சியாங்க்ணா?

--------------------------------

2.தமிழ்ல எனக்குபிடிக்காத ஒரே வார்த்தை புரட்சி - கலைஞர் # புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் இவங்க 3 பேரும்தான்யா

----------------------------

3. பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் # நியூஸ்ல எனி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்? பிட் அடிச்சாங்களா? பிட் படம் பார்த்தாங்களா?

-------------------------------------

4. மது குடிக்கும் கணவரை அடிக்கும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு: அமைச்சர் அறிவிப்பு # எப்டியோ அரசு கஜானா காலியாகப்போகுது!!!

--------------------------------------
5. சோனியாவை பாலு சந்தித்தது ஏன்?-கருணாநிதி விளக்கம் # சோனாவை SPB சரண் சந்தித்தது ஏன் அப்டினு ஒரு விளக்கம் கொடுங்க தலைவரே.. ஃப்ரீதானே நீங்க?

--------------------------------


Naturaleza


6. தலைவரே! ஏன் சிரிக்கறீங்க?

கலைஞர் - உள்ளாட்சித்தேர்தல் நிலைமை மாதிரி பொதுத்தேர்தல்லயும் அனைவரும்தனி என்றால் வெற்றிக்கனி நமக்கே!# கனவு

---------------------



7. உள்ளாட்சித்தேர்தலில் ”வாகை சூட வா! ”- கலைஞர் #

தலைவரே ! அந்தப்படம் 30 செப்டம்பர்லயே ரிலீஸ் ஆகிடித்து,வேற படம் போடலாம்

------------------------

8. o.p.s - அம்மா,உங்களை பார்க்க கேப்டன் வந்திருக்காரு!

ஜெ - கப்பல் கேப்டனா?மப்பில் இருக்கும் கேப்டனா?

----------------------------
9.நான் விரைவில் வலைப்பூ ஆரம்பிக்கப்போகிறேன் - பூனம் பாண்டே # மேடம், உங்க ஃபுல் நேக்கட் படம் போடுவேன்னு குடுத்த வாக்குறுதியை உங்க பிளாக்லயாவது நிறைவேற்றி ஃபோட்டோ போடுவீங்களா?

----------------------------------


10. சென்னையில் மீண்டும் 'உதயசூரியன்' உதிக்கும்: ஸ்டாலின் # சென்னையில் உள்ள திமுக வெண்ணெய்கள் விரைவில் கூண்டோடு கைது - ஜெ அறிக்கை!

-----------------------------------


11. தலைவரே,மதுரை ல இருக்கற ரவுடிகளை என்கவுண்ட்டர்ல போட்டுடச்சொல்லி ஜெ ஆர்டர் போட்டாராமே? 

அழகிரி - எனக்கு பயமில்லை, நான் என்ன கவுண்டரா?

-------------------------------------

12. சார்!ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு பின்னால நாடார்னு இருக்கே?

ஹாரீஸ் ஜெயராஜ் -  லாகிரி வஸ்துக்களை,ஆடம்பரத்தை நாடார்னு அர்த்தம்@ சமாளிஃபிகேஷன்

---------------------------------------

13.அடுத்தவங்க காலை எக்காரணம் கொண்டும் பிடிக்க மாட்டேன் என்று எல்லோராலும் சொல்ல முடியாது விதிவிலக்குகள் 

1. கபடிபிளேயர்ஸ் 2 கணவன்ஸ் 3. அ.வாதி

---------------------------------------------
14. பஸ்ஸில் கைக்குழந்தையுடன் பெண்கள் ஏறினால் ஒரு செகண்ட் கூட தாமதிக்காமல் எழுந்து இடம் கொடுப்பது ஆண்களே! # அவதானிப்பு

-------------------------------

15. அன்பே! நீ நடக்கும் பாதை முழுவதும் மலர்களைத்தூவி வைப்பேன். 

டேய் , லூஸு. ஒரு வெல்வெட் செப்பல் வாங்கிக்கொடுடா வேலை முடிஞ்சது

--------------------------

16. அன்பே! லெமன் ரைஸில் லெமன் சாறு போல் உன்னுடன் நான் இரண்டறக்கலந்தேன் # ஒரு சாப்பாட்டு ராமனின் மொக்க காதல் கவித

------------------------------

17. இது லவ் சப்ஜெக்ட் படம், அதனால லவ்வரோட போய் படம் பார்த்தேன், 

அப்போ பேய் சப்ஜெக்ட்னா உன் சம்சாரம் கூட போய் படம் பார்ப்பியா?

------------------------------

18. இன்னும் 2 மணி நேரத்துக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது. 

ஏன் DR?

  இப்போத்தான்யா படமே போட்டிருக்கான், அதுக்குள்ள படம் எப்டின்னா எப்டி?

--------------------------------
19. சார், சினிமால பெரும்பாலும் ஏன் பெண்களையே பேயா காட்றீங்க? 

யோவ்,. அப்பதான்யா திகில் படத்துலயுல் கிளுகிளுப்பு காட்ட முடியும்

------------------------

20. நீ என்னுடையவன் என்று சொல்பவனை விட நான் உன்னுடையவன் என்று சொல்பவனையே  பெண் அதிகம் நேசிக்கிறாள்

---------------------
டிஸ்கி 2 -

வேலூர் மாவட்டம் - போலீஸ் ஸ்டோரி வித் சந்தானம் காமெடி - சினிமா விமர்சனம்


Thursday, October 06, 2011

சதுரங்கம் - சோனியா அகர்வால் ஸ்வீட்ஸ் - சினிமா விமர்சனம்

http://cdn2.supergoodmovies.com/FilesTwo/sathurangam-movie-preview-be7a572d.jpg 

படம் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு ரெடி ஆகி பல வருடங்கள் ஆகி லேட்டாக ரிலீஸ் ஆனதால் வெற்றி வாய்ப்பை இழந்ததாக சொல்லப்படும் முக்கியமான படம் ஆர் கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை... படம் எடுத்து 17 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனதால் ஆறிய வடை ஆகி படம் டப்பாவுக்குள் வந்த வேகத்தில் சென்றது.. சதுரங்கம் படம் எடுக்கப்பட்டு 4 வருஷங்கள் கழிச்சுத்தான் ரிலீஸ் ஆகுது.. இதுல என்ன ஒரு விஷயம்னா இந்தப்படம் 4 வருஷம் முன்னால ரிலீஸ் ஆகி இருந்தாக்கூட.... ஹி ஹி 

ஸ்ரீகாந்த் கோ பட ஜீவா மாதிரி ஒரு பத்திரிக்கையாளர்.. நாட்டில் நடக்கும் அநியாயங்களை கட்டுரை ஆக்கி வெட்ட வெளிச்சம் ஆக்கி அவர்களுக்கு ஆப்பு வைப்பவர்.. ஆப்பு வாங்கிய ஒரு வி ஐ பி நாயகனின் காதலி சோனியா அகர்வாலை கடத்தி வைத்து சவால் செஸ் கேம் ஆடுவதே கதை..

ஸ்ரீகாந்த் எதுக்காக சத்யா கமல் கெட்டப்பில் படம் முழுக்க வர்றார்னு தெரியல.. பிரஸ் ரிப்போர்ட்டர்னா அவரது ரியல் கெட்டப்ல வந்தாலே ஸ்மார்ட்டா இருக்குமே? எதுக்கு இந்த கொலை வெறி?

சோனியா அகர்வால் 87 ஷாட்ல 85 தடவை ஷாலை கழுத்து ஒண்ட ஏன் போட்டிருக்கார்னே தெரியலை? ( ஒரு வேளை சொல் பேச்சு கேட்காம அக்கா இப்படி டிரஸ்ஸிங்க் சென்ஸ்ல இருந்ததாலதான் குணக்குன்று செல்வராகவன் கழட்டி விட்டுட்டாரோ என்னவோ? நாராயணா! நாராயணா!!)

சோனியாவுக்கு இயல்பாவே சோகம் அப்பிய முகம், இதுல இன்னும் சோகம் ஜாஸ்தி.. ஏதோ டூயட் சீன்ஸ்ல பார்க்கற மாதிரி இருக்கு..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimRvBPrK7s59wPYBmVPa7gKU6hLb3t7KOERHYmn27wh9IVeA1UIaez1X1q7G8WUegjljVxzSKxsaRZOZJGq02yZW_ed_qjmgmqK7EfSryxIpoaNAAfD8xmylazWsaoVyxAzKOa6u8JrC9D/s1600/sonia_agarwal-1.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கொலை பண்ணினவங்கதான் ஜெயிலுக்கு  வர்றாங்கன்னு நீ நினைக்கறே.. கொலை பண்ணறதுக்கு சிறந்த இடமே ஜெயில்தான்னு நான் சொல்றேன்..

2.  நான் எதுக்குய்யா நன்றி அறிவிப்புக்கூட்டத்துல மக்களுக்கு நன்றி சொல்லனும்? கட்டுன டெபாசிட்டையே  திருப்பி வாங்க முடியலையே?

3. யோவ் 33 %  !  உன்னால இந்த காலனில ஆம்பளைங்களூக்கெல்லாம் அவமானம்யா.. எப்பா பாரு பொம்பளைங்க செய்ய வேண்டிய வேலை எல்லாம் நீயே செய்யறியே?

சத்தமாப்பேசாதய்யா.. உள்ளே என் சம்சாரம் இருக்கா.. 

யோவ், நாங்க மட்டும் சின்ன வீட்டோடயா குடும்பம் நடத்திட்டு இருக்கோம்?

4.  XQS மீ மிஸ்.. பேனா ப்ளீஸ்.. 

பேங்க் வர்றம்னு தெரிஞ்சேதானே வந்தீங்க? ஏன் பேனா கொண்டு வர்லை? தெரிஞ்சே அலட்சியமா இருக்கறவங்களுக்கு நான் உதவறது இல்லை.. 

5.  கால் பக்கத்துல இருக்கற அந்த ஃபிகரோட ஃபோட்டோவை ஃபுல் பேஜ்ல போட்ருங்க.. 

சார்.. அப்போ மேட்டர்?

யோவ்.. அந்த ஃபோட்டோவே செம மேட்டர்தான்யா ( நல்ல எடிட்டர்!!)

6. அரசியல்வாதி என்னைக்கும் பழசை மறந்ததில்லை

7. அவர் பேர் என்ன? லே அவுட் டல்ஸ்டாயா?

யோவ்.. அது லியோ டால்ஸ்டாய்

8.  நான் எல்லாம் தண்டிக்கப்பட்டா அப்புறம் இந்தியாவுல பணத்துக்கே மதிப்பில்லாம போயிடும்..  நான் டெஃபனிட்டா வெளில வருவேன்.. 

9. மிஸ்.. உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்கனும்?

நிறைய சம்பாதிக்கறவரா இருக்கனும், அவர் எப்படி இருந்தாலும் கவலை இல்லை.. 

10. திட்டுவது பொம்பளைங்க லட்சணம், அதை கண்டுக்காம விடறது ஆம்பளைங்க லட்சணம்..

http://2.bp.blogspot.com/-O8h1QWW4f2c/TWOehU8wu7I/AAAAAAAABJ4/mnNrBkb-tng/s1600/Sonia+agarwal+hot+%25283%2529.jpg

11. நான் திருப்பதி சாமியை பார்க்கனும்

அவன் உள்ளேதான் இருக்கான்.. என்ன விஷயமா பார்க்கனும்..

ம் சும்மாதான்

சும்மா யாராவது பார்க்க வருவாங்களா?

ம் கொழுப்புதான்.. 

12.  ஒரு அழகான கோலம் எந்தப்புள்ளில ஆரம்பிக்கும்னு தெரியாது.. உங்களை கட்டிக்க ஆசைப்படறேன்..

கண்ணாலம் கட்டனும்னா எல்லார்ட்டயும் பர்மிஷன் வாங்கி லேட் ஆகும், கட்டிப்பிடிக்கனும்னா இப்பவே.. 
13.  நீ 4 பக்கம் எழுதுன கட்டுரையால 2 கோடி நஷ்டம், ஏன் எழுதுனே?ன்னு நான் கேட்க மாட்டேன், ஏண்டா எழுதுனோம்னு உனக்கு தோண வைப்பேன்..


14. காதல் என்பது என்ன? ஞாபகத்துல வெச்சுக்கறதும், ஞாபகங்களையே வெச்சுக்கறதும் ,தானே?


15.  ஐ வாண்ட் டூ கிஸ் யூ..

எந்த இடத்துல?

----------------------------
என்ன சொன்னீங்க?


சொன்னேன், சென்சார்ல கட் ஆகிடுச்சு போல.. ( அடங்கோ!!)

16. உங்கப்பா சப்போஸ் நம்ம காதலுக்கு ஓக்கே சொல்லலைன்னா என்ன பண்ணுவீங்க?

வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன்..

அப்டி பண்ணிக்கிட்டா என்  அருமை உங்களுக்குத்தெரியும்.. அடடா.. இவளை மிஸ் பண்ணிட்டமேன்னு ...

17. எனக்குப்பொண்ணு பாக்க எங்கப்பாதான் போனாரு,.. நான் கடைசி வரை பொண்ணைப்பார்க்கவே இல்லை, என் பையனுக்குப்பொண்ணு பார்க்கவும் நான் போகலை, அவனே பார்த்துக்கிட்டான்..

18. தரம் பார்த்துத்தான் நண்பனை வெச்சுக்குவேன், தகுதி பார்த்துத்தான் எதிரியை வெச்சுக்குவேன், எனக்கு எதிரியா இருக்கற தகுதி உனக்கு கிடையாது தம்பி.. 

19. உலக அளவுல டாப் 50 பணக்காரங்க லிஸ்ட் எடுத்தா அதுல பாதிப்பேரு இந்தியர்கள் தான், அதே நட்ல தான் ஏழைகள் 42 கோடி பேர் இருக்காங்க./. 

20. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் தப்பு பண்றேன், ஆனா ஒரு நூல் கூட ஜெயிப்போமா?ன்னு பயந்ததில்லை.. 

21.  டாம் & ஜெர்ரி டிசைனிங்க் பண்னப்ப வால்ட் டிஸ்னிக்கு வயசு 48

22. போலீஸ்காரன் எப்பவுமே தப்பை ரொம்ப கரெக்ட்டா பண்ணுவான்.. 


http://www.indiancinegallery.com/wp-content/uploads/2011/07/Sonia-Agarwal-Latest-Hot-still-from-Oru-Nadigayin-Vakkumoolam.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. வலைப்பூ எழுத்தாளர்களுக்கு 6.10.2011 மாலை 6 மணிக்காட்சி பிரிவ்யூ ஷோ காட்டப்போகிறாராம். அதற்கு அவர்களை சக பதிவர்கள் சார்பில் பாராட்டுகிறேன்.. 

2. பல போராட்டங்களுக்கு மத்தியில் 4 வருடங்களுக்குப்பிறகு இதை ரிலீஸ் செய்தமைக்கு.. 

3. சொல்ல வந்ததை சொல்ல வில்லை  ( பாடல் வரிகளே சில சமயம் படத்தின் விமர்சனம் ஆன தருணம் உண்டு),அம்புலி மாமா வா, எங்கே எங்கே , விழியே விழியே விரும்பும்போது வசதியாக வந்து  போன்ற பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. 

http://moviestills.in/wp-content/uploads/2010/11/sexy-sonia-agarwal-4.png


இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் ஒரு பிரபல பத்திரிக்கையின் நிருபர்  ரூ 1800 மதிப்புள்ள நோக்கியா 1100 மாடல் நோக்கியா ஃபோன் வெச்சிருக்காரே? ஏன்? லோ பட்ஜெட் படமா? கேமரா ஃபோன் வைத்திருக்க மாட்டரா?

2. ஒரு சீனில் மெயின் ரோட்டில் பைக்கில் ஸ்ரீகாந்த் சிக்னலுக்காக வெயிட்டிங்க்.. அப்போது அந்த வழியாகப்போகும் வில்லன் குரூப் வேனில் சோனியா கடத்தப்படுவது தெரிந்து ஹீரோ பைக்கில் துரத்தாமல் அதை கீழே தள்ளி விட்டுட்டு 80 கி மீ வேகத்தில் போகும் வேனை ஏன் ஓடியே சேஸ் பண்றார்?

3. அந்த காரில் உள்ள ஹீரோயின் சோனியா தன் கையில் உள்ள 90 கிராம் எடை உள்ள செல் ஃபோனை காரின் பின் கண்ணாடி மேல் வீசி  (4 இஞ்ச் கேப்)அதை எப்படி உடைக்கிறார்? ( நோ சான்ஸ்!!)

4.  ஹீரோ ஸ்ரீகாந்த், ஸ்ரீஇமன் இருவரிடமும் பைக் இருக்கு, ஆனா போலீஸ் ஸ்டேஷன்க்கு புகார் தர ஏன் ஆட்டோல போறாங்க?

5. வில்லனால் கடத்தி வைக்கப்பட்ட சோனியா ஏன் ஹீரோவின் செல் ஃபோன்க்கு ட்ரை பண்ணாமல் லேண்ட் லைன் ஃபோனுக்கு ட்ரை பண்றார்? அது ரிங்க் ஆகி யாரும் எடுக்கலையேன்னு ஏன் பதறனும்?

6. ஹீரோ வில்லனின் அடியாளிடம் வில்லனின் அட்ரஸை விசாரித்து விட்டு அப்படியே கிளம்பிடறார்.. விசாரிக்கப்பட்டவன் வில்லனிடம் போட்டுக்குடுக்க மாட்டானா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ2BQ41GTaExIWcXgcD24C4dSDBjHT_Rpnp9EaJCchssGwZvwB9XbBf4CNMQNpfMFMWM0DYF2vavnyVeulcT9Zen4-8NHaWnsjFyzFInrYj-fj4jC5e9BB5zFSjOch8oxrYz_gChS_ct4/s1600/1SoniaAgarwal+02.jpg


 ஏ, பி செண்ட்டர்களில் தீபாவளி வரை தாக்குப்பிடிக்கும்..  சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - டி வி ல போடறப்ப பார்க்கலாம்

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

த்ரிஷா சொல்றதை யாராலும் ஏத்துக்கவே முடியாது!உங்களால? ( ட்வீட்ஸ்)

1.பேசப்படவேண்டிய வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளப்படாதபோது நம் இருவருக்கிடையேயான இடைவெளி அதிகம் ஆகிறது

-----------------------------------

2.காதல் முறியும்போது சத்தம் வருவதில்லை, ஆனால் வலி மட்டும் உணரப்படுகிறது


---------------------------------------

3. பட்ட காலிலே படும்போதுகூட தாங்கிக்கொள்ள முடிகிறது, ஆனால் பட்ட இதயத்திலே மீண்டும் காயம் படும்போது தாங்கவே முடிவதில்லை

-------------------------------

4. ஒருவரிடம் இழந்த அபிமானத்தினை, மதிப்பை, அன்பை மீண்டும் பழைய அளவிலே பெறுவது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருக்கிறது

---------------------------------------

5. புதிய பேனா வாங்கும்போது எல்லோரும் அவரவர் காதலியின் பெயரை கிறுக்கிப்பார்க்கும்போதுதான், சாதாரண கிறுக்கல்கள் கவிதைகள் ஆகின்றன

---------------------------------------

6. முதுகில் குத்துகிறான் எதிரி, நெஞ்சில் குத்துகிறான் நண்பன், இதயத்தில் குத்துகிறாள் காதலி

---------------------------------

7. அழுகைக்கான தொடக்கத்தை உன் கண்ணீர் சுரப்பிகள் ஆரம்பிக்க யத்தனிக்கையில் ஆறுதலின் முடிவை என் விரல்கள் காட்டி விடுகின்றன

------------------------------

8. 2 வரிகளில் ஏதாவது கிறுக்கி விட்டு 3ஆம்  வரியாய் முத்தாய்ப்பாய் உன் பெயருடன் முடித்தால் அது அழகிய ஹைக்கூ

----------------------------------------------

Woman

9. அடிக்கடி ரகசியம் பேசி பேசி உன் காது மடல்கள் எங்கும் என் உதட்டின் ரேகைகள்

---------------------------------

10. டியர், எதுக்கு பீச்சுக்கு பொரி கடலை கொண்டு வந்திருக்கீங்க? 

நீ கண்டதையும் கேக்கறே, வசதி பத்தாது, பாரு 15 ரூபால முடிஞ்சுது செலவு

----------------------------------------

11. ஆண் ஏன் அழ வேண்டும்? -உன் கேள்வி. 

அவன் ஏன் பெண்ணின் காதலில் விழ வேண்டும் ?- என் பதில்!

-------------------------------------------

12. சிம்புவுடன் நடிக்க பயமாக இருக்கிறது- ஹன்சிகா மோத்வானி! # ஹன்சிகா மோத்வானியுடன் நடிக்கும்போது நயமாக இருந்தது - சிம்பு !

----------------------------------

13. மறுஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்,எப்போதும் அடுத்த ஜென்மத்திலாவது இணைவோம் என சொல்லிடாதே

----------------------------------

14. வீடுபுகுந்து தீபிகா படுகோனேயை எச்சரித்த போலீஸ்...!# உண்மையை சொல்லுங்கய்யா! எச்சரிச்சாங்களா? நச்சரிச்சாங்களா?

------------------------------

15. அறிமுகமாகும்போது இருந்தது இப்போதும் இருக்கிறது! - த்ரிஷா #  மேடம், அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், கொஞ்சம் இறங்கிடுச்சு

-------------------------------------

16. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட  நிம்மதியாக வாழ முயற்சிப்பதே நல்லது

---------------------------------------

17. உன் அழகில் நான் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க உன் அன்பு என்னை தாங்கிக்கொள்கிறது

---------------------------------

18. நல்ல மனிதனாக நடப்பது கோல்கீப்பர் போல, எத்தனை கோல்களை தடுத்தோம் என்பதை விட எத்தனை கோல்களை கோட்டை விட்டோம் என்பதையே உலகம் கவனிக்கிறது

-------------------------------------

19. நிலாவைக்காட்டி சோறூட்டும் உலகில் நான் நிலாவுக்கே சோறு ஊட்டினேன் # அவள் மருதாணி வைத்திருந்த சிவந்த பொழுதுகள்

----------------------------------

20. இந்தியாவில் 1,55,618 தபால் நிலையங்கள் இருந்தும் ஒன்றில் இருந்தும் உனது காதல் கடிதம் வரவில்லையே!!

------------------------------

21. மழைத்துளியாய் உன் அன்பு. மழைத்துளி எங்கே விழுந்தாலும் குளிர்ச்சியைப்பரப்புவது போல உன் அன்பு பரவும் இடங்களில்மகிழ்ச்சியை பரப்பிசெல்கிறாய்

----------------------------------

22. வாழ்க்கையின் மதிப்பை காலம் நமக்கு கற்றுத்தருகிறது,அவமானத்தின் மதிப்பை காதல் நமக்கு கற்றுத்தருகிறது

Wednesday, October 05, 2011

வேலூர் மாவட்டம் - போலீஸ் ஸ்டோரி வித் சந்தானம் காமெடி - சினிமா விமர்சனம்

http://www.viparam.com/cinema/thumbnail.php?file=vellore_mavattam_movie_posters_451126400.jpg&size=article_medium 

கோடம்பாக்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒரு நல்ல நடிகர் நந்தா.திறமைசாலிகள் பலர் வாய்ப்புக்கிடைத்தும் சரியான வெற்றி கிடைக்காமல் தள்ளாடுகின்றனர்,அங்கீகாரம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்,அப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகருக்கு கிடைத்திருக்கும் ஆறுதல் வெற்றிதான் வேலூர் மாவட்டம்.. 

சாதாரண மார்க்கெட் வியாபாரியான தந்தை தன் மகனை ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீசர் ஆக்க நினைக்கிறார்.. அது ஹேர் இழையில் தப்பி ஐ பி எஸ் ஆஃபீசர் ஆகும் வாய்ப்பு.. அவர் வேலூர் மாவட்டத்தில் பொறுப்பேற்று அந்த ஊரில் இருக்கின்ற லஞ்ச லாவண்யங்களை, தாதாக்களை, அரசியல் தலைகளை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஒழிக்கும் மாமூல்( இல்லாத , வாங்காத) போலீஸ் ஆக்‌ஷன் ஸ்டோரிதான்..

நந்தாவின் கம்பீரமான நடிப்புக்கு போலீஸ் யூனிஃபார்ம் ரொம்பவே கை கொடுக்கிறது. இதுதாண்டா போலீஸ், சிங்கம் ,சாமி, என பலதரப்பட்ட போலீஸ் ஆஃபீசர்ஸ் பார்த்து சலித்தாலும் நந்தாவின் நடிப்பால் கொஞ்சம் சலிக்காமல் போகிறது படம்...

அவருக்கு ஜோடி பூரணா... பார்ட்டி சுமாரான ஃபிகர் தான்.. வாய்ப்பு ரொம்ப கம்மி ( படத்துலப்பா... ) 2 டூயட் சீன் இருக்கு.. 

சந்தானம் போலீஸ் ஜீப் டிரைவராக வந்து சீரியஸான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறார்.. நித்யானந்தா கெட்டப் அவருக்கு செம மாட்ச்.. அந்த சீனை இன்னும் நல்லா டெவலப் பண்ணி இருக்கலாம்.. 


அழகம்பெருமாளின் வில்லன் நடிப்பு பாந்தம்.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வில்லனிக் ஆக்‌ஷன் குட்.. அவருக்கு பாஸாக வரும் வில்லன் ப சிதம்பரம் மாதிரி கெட்டப்பில் வர்றார்.. இயக்குநருக்கு அவர் மேல் என்ன கோபமோ.. 
http://www.cinemaexpress.com/Images/article/2011/9/21/newrelease2.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. நம்ம குடும்பத்துல எல்லோருமே சுமையை தூக்கித்தான் பழக்கம், முதன் முதலா என் சுமையை ஒருத்தர் தூக்கிட்டு வர்றார்.. 


2. ஏன் சார்.? முன்னே பின்னே அறிமுகம் இல்லாத பொண்ணு ஃபோன் நெம்பர்  கேக்குதே, ஏன்? எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?

ஏன்? எதுக்கு?

3. இந்தா பாருடி. இந்தாளைப்பார்த்தா கேணை மாதிரி இருக்கு. உன் ஆளை கண்டு பிடிக்க இவனை  யூஸ் பண்ணிக்க... 

4.  எனக்கு இலக்கியம் தெரியாது.. இசைல பிரமாதமா எதுவும் தெரியாது.. உன்னை மாதிரி கல கலன்னு பேசுற பொண்ணை பிடிக்கும், ஆனா எனக்கு அப்டி பேசத்தெரியாது.. உனக்கு ஓக்கேவா?

5.  சந்தானம் - ஏண்பா, ரவுடிங்க பேரைக்கேட்டா என்னமோ தாய்மாமன் பேரை சொல்ற மாதிரி டக் டக்னு சொல்றீங்க, போலீஸ் ஆஃபீசர் பேர் கேட்டா மட்டும் பம்பறீங்களே?என்னமோ சயின்ஸ்ல இருந்து கேள்வி கேட்ட மாதிரி...

6. சந்தானம் - அப்பா, நீ எதுக்கு ஹாஸ்பிடல்ல்ல வந்து அங்க பிரதட்சணம் பண்ண பம்பறேன்னு கண்டு பிடிச்சுட்டேன், நர்சுங்க எல்லாம் குட்டைப்பாவாடை போட்டிருக்காங்க. வாகா படுத்துக்கிட்டு நோகாம சீன் பார்க்க பிளான் பண்றே? பிச்சுப்புடுவேன் பிச்சு..

7. சந்தானம் -   ஹார்ட் ஆபரேஷன் பண்ற டாக்டர்க்கே ஹார்ட் அட்டாக்கா?

8.  அவர் என்ன கேட்டாரு இப்போ உங்களை?

அடுத்த குழந்தை எப்போ பெத்துக்கலாம்னு?

அடேய்.. இப்போத்தானேடா ஒரு குழந்தை பெத்தே? டே அப்பா!!!

9.  பக்கத்துவீட்டுக்காரனை பார்த்தியா? ஜாலியா அவன் சம்சாரத்தை கூட்டிட்டு வெளில கிளம்பறான். எனக்கும் அந்த மாதிரி ஆசை இருக்காதா?

சந்தானம் -அவன் பொண்டாட்டியை எதுக்கு நீ கூட்டிட்டு போக ஆசைப்படறே?  ( குமுதம் ஜோக் ரிட்டர்ன் பை வலங்கைமான் நூர்தீன் 1997)

10.  என்னப்பா? இது? எல்லா லாரிகளுக்கும் ஒரே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர்?

ட்வின்ஸ், த்ரின்ஸ் குழந்தைங்க பிறந்தா பார்க்க ஒரே மாதிரி இருக்கறதில்லையா? அது போல..
http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=11643&option=com_joomgallery&Itemid=77
11. சந்தானம் - இவனை எல்லாம் யார் மிரட்டப்போறாங்க? நான் நினைக்கறேன், கண்ணாடியைப்பார்த்து இவனே மிரட்டி இருப்பான்.. 

12. பரம்பரைப்பணக்காரங்க நிறையப்பேர் என் கிட்டே கை கட்டி சேவகம் பண்ணத்தயாரா  இருக்காங்க. பாவம் நீ பஞ்சம் பிழைக்க வந்தவன் தானே?

13.  ரிசைன் பண்ணறோமேன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கா?

இல்லை, நிம்மதியா இருக்கு.. 

14. யோவ்,, போலீஸ் வேலை தங்க முட்டை இடற வாத்து மாதிரி.. 

15. சந்தானம் - எல்லோரும் பொறுக்கி சாப்பிடறாங்க.. நீ மட்டும் தான்யா சாப்பிட்டுட்டு அப்புறம் பொறுக்கறே.. 

16.  சந்தானம் - யார் இவன்? பார்க்க பொம்பள புரோக்கர் மாதிரி இருக்கான்?
17. சந்தானம் - பொண்ணு பார்க்க வழக்கமா கோயிலுக்குத்தானே வரச்சொல்வாங்க? ஏன் வேன்?

18. சந்தானம் - நீ சொல்றதை கேட்கறோம், கொட்டாவி விட்டவன் வாய்ல திருப்பதி லட்டு போட்ட மாதிரி....

19 லேடி - எதுவா இருந்தாலும் பெட் 1 தலகாணி 2 என பேசுபவ நான்

சந்தானம் - வெட்டு 1 துண்டு 2 தானே நான் கேள்விப்பட்டிருக்கேன்.. இது புதுசா இருக்கே?

சரி.. எனக்கு மாசம் ரூ 15,000 தான் சம்பளம் உனக்கு ஓக்கேவா?

லேடி - எனக்கு ரூ 3000 குடுங்க போதும்...

20. சிஷ்யன் - சுவாமி! காமத்தை அடக்குவது எப்படி?

சந்தானம் - உன் கையால தான்

சாமி!!!!!!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdhVUyKS0-tJItjazG1ULy3yfHHc-eZwOqtG_TfrBjZwcxgpYnHakbeJjMA3-lx2wvN0TpEELTP55sqtMEEgoic0JoI2Wr8hy4xg1K1ceJ2bZVeXrdxx4WgO8we3vb6dUIToZpmeC_Y7ZC/s1600/Poorna-hot-stills+%25284%2529.jpg

21.  என்னை கடத்திட்டு வந்தது குரு மூர்த்திக்கு தெரிஞ்சா உங்க நிலைமை அவ்வளவுதான்....


சந்தானம் - உன்னை கடத்திட்டு வந்தது உனக்கே இப்போதான் தெரியும். அதுக்குள்ள அவனுக்கு எப்படி தெரியும்?

22.  உள்ளே யாரையும் அலோ பண்ணக்கூடாதுன்னு மேடம் சொல்லி இருக்காங்க.. 

நாங்க உள்ளே போறதே மேடத்தை உள்ளே தள்ளத்தான், நீயும் வேணா கூட வா!!

23. சந்தானம் - டேய் , என்ன பிரச்சனை இங்கே?

உங்கப்பனையே கேளு..

சந்தானம் -அப்பா, என்ண்டா பிரச்சனை?

அவனையே கேளு..

சந்தானம் -என்ன பிரச்சனைன்னு கேட்டா அதை சொல்லாம ஏண்டா பிரச்சனை பண்றீங்க?

24. நான் வெளீல இருக்கேன்.. அப்புறம் பேசறேன்.. உன் கிட்டே..

இனிமே உள்ளேதான் போகப்போறீங்க!!

25.  சில நேரங்கள்ல உண்மையை விட பொய்க்கு மதிப்பு ஜாஸ்தி.. 

26. மறதின்னு ஒண்ணு இல்லைன்னா அரசியலே பண்ண முடியாது.. 


http://www.indiancinemagallery.com/Gallery2/main.php?g2_view=core.DownloadItem&g2_itemId=131858&g2_serialNumber=1

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  வழக்கமான போலீஸ் கதை எடுத்தாலும் திரைக்கதையில் விறு விறுப்பு ஏற்றி டெம்போவுடன் படத்தை போர் அடிக்காமல் கொண்டு சென்றது.. 


2. ஹீரோவாக நந்தாவை , வில்லனாக அழகம்பெருமாளை தேர்வு செய்தது..


3.சந்தானம் கேரக்டரை டெவலப் செய்து படத்தோட ஒன்றி வருவது போல் செய்தது..

4. போலீஸ் அரெஸ்ட், ரெய்டு , சேசிங்க் சமந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை...

5. உன்னை உன்னை ஒன்று கேட்பேன் பாடல் நல்ல மெலோடி.. எடுத்த விதம் அழகு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWq__SBVZfjTomw4DS6qomE-ECh63zq_6Iy9qec3DRjBuLlSPZs2MBOT-0OGuvUSX8EQ8hY5gDI4ziNQTb9-twap00-TfpXAegzFBZVyE05hB7O9byuJQqn7I8eaUZMdvBRV1lih4Yhpg/s1600/poorna210.jpg
இயக்குநரிடம் சில சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகள்

1. ஐ பிஎஸ் ஆஃபீசர்க்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் லெட்டர் கூரியர் மூலமாகவோ,ரெஜிஸ்ட்டர் போஸ்ட் மூலமாகவோதான் வரும், ஆனால் சாதா தபாலில் ஹீரோவுக்கு வருது... 

2.  போலீஸ் பெரேட் நடக்கும்போதும், காலையில் ஜாகிங்க் எக்சசைஸ் பண்னும்போதும் யாருக்கும் செல் ஃபோன் நாட் அலோடு.. ஹீரோ மட்டும் செல் ஃபோனில் பேசறாரே? எப்படி?

3. போலீஸ் ட்ரெயினிங்க் நடக்கும்போது 50 மீட்டர் இடை வெளிவிட்டே வெளியாட்கள், அல்லது உறவினர்கள் பார்க்க முடியும், ஹீரோவின் அப்பா மட்டும் பக்கத்துலயே இருந்து பார்க்கறாரே? எப்படி?

4. பேஷண்ட்க்கு ஏதாவது சீரியஸ்னா நர்சுங்கதான் பதட்டமா இருப்பாங்க, இங்கேயும், அங்கேயும் ஓடுவாங்க. இதுல பெரிய டாக்டரே அப்படி பதட்டப்படறாரே? அவர் எப்படி ஆபரேஷன் செய்வார்?

5. ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி பேஷண்ட்டின் நெருங்கிய உறவினரிடன் கையெழுத்து வாங்க நர்ஸோ, அல்லது சின்ன டாக்டரோதான் வருவாங்க, இதுல பெரிய டாக்டரே பேடு, பேப்பர் தூக்கிட்டு பியூன் கணக்கா ஓடறாரே? ஏன்?

6. பஸ்ஸில் ஹீரோ, ஹீரோயின் ஒரே சீட்டில் போகும்போது மயில்சாமி தான் ஹீரோயின் பக்கம் அமர்வதாக ஆசைப்பட்டு கேட்டு ஹீரோயின் அருகே அமர்கிறார்... பின் துக்கம் கலைந்து எழுந்து பார்க்கும் ஹீரோயின் பயந்து மயில்சாமியை பின் சீட்டுக்கு விரட்றார்.. இப்போ நந்தா, பக்கத்துல மயில்சாமி.. ஆனா அடுத்த ஷாட்லயே ஹீரோ ஹீரோயின் பக்கம் இருக்காரு.. எப்டி?

7. ஆஃபீசர்ஸ் அனைவருக்கும் எங்கெங்கே டியூட்டி, எந்த ஊர் என உயர் அதிகாரி வாசிக்கும்போது இரியவர் எழுந்து எஸ் சார் என சொல்லி சல்யூட் வைக்க வேண்டும், ஆனால் எல்லோரும் விருந்துக்கு வந்தவங்க மாதிரி , அப்படியே உக்காந்து இருக்காங்களே? ஏன்?


http://flicksbuzz.com/Assets/Images/Tollywood/Tollywood-CelebPics/Tamil-actress-Poorna-Hot-stills.jpg

8. ஒரு டி எஸ் பிக்கு பதவி ஏற்றுக்கொண்ட 2 மாதங்கள் ஆகியும் தன் உயர் அதிகாரி வீடு தெரியாமல் போகுமா?அவர் எப்படி ஏமாற்றி வில்லனின் வீட்டுக்கு ஹீரோவை தன் வீடு என சொல்லி வர வைப்பார்?

9.  லாரிகள் 3ம் ஒரே ரெஜிஸ்ட்டரேஷன் நெம்பர் என ரெயிடின் போது தெரிகிறது... நந்தா அதை ஃபோட்டோ எடுக்க சொல்றார்... கோர்ட்ல இன்ஸ்பெக்டர் பல்டி சாட்சி அடிக்கறப்ப அந்த ஃபோட்டோ ஆதாரத்தை ஏன் காட்டலை?

10.  ஒரு சீன்ல கமிஷனர் ஆஃபீசர் பார்க்க நந்தாவும் ஜீப் டிரைவஎ சந்தானமும் போறாங்க, அப்போ சந்தானம் டீ வாங்கிட்டு வர்றார்.. டீ வாங்கிட்டு வர கமிஷனர் ஆஃபீஸ்ல உயாரும் இருக்க மாட்டாங்களா?

11.  சின்சியரான போலீஸ் ஆஃபீசரான நந்தா சோகமா இருக்கறப்ப ட்ரிங்க்ஸ் அடிக்கறாரே யூனிஃபார்மலயே? எபடி?

12.  ரிசைன் லெட்டரை கமிஷனரிடம் கொடுத்துட்டு நந்தா ரிட்டர்ன் ஆகறப்ப 3வது செகண்ட்லயே மினிஸ்டரும் , வில்லனுமான அழகம்பெருமாள் பின்னாலயே வந்து ஏன் ரிசைன் பண்ணீட்டிங்க? என கேட்கறாரே? அவருக்கு வேற பொழப்பே இல்லையா? அவ்வலவு குயிக்கா எப்படி வந்தார்?

13.  ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மினிஸ்டரை கொலை செய்ய ரூ 20 கோடி ரொம்ப  ஓவர் ரேட்.. ( 2 கோடி போதாதா/)

14. அவ்வலவு முக்கியத்துவம் வாய்ந்த கொலைக்கான ஆதாரம் உள்ள சி டி யை ஒரு காப்பி எடுத்து வெச்சுக்கிட்டு கொடுக்க மாட்டாரா டி எஸ் பி? ( நம்மாளுங்க சாதா த்ரிஷா குளியல் பிட் டி வி டி வந்தப்ப 2 காப்பி பண்ணி வெச்சுக்கிட்டுத்தான் ரிட்டர்ன் தந்தாங்க)

http://www.chitramala.in/photogallery/d/553660-1/poorna-hot-stills.jpg

சாதாரணமா திறந்து இருக்கற கேட் கதவை சந்தானம் மூடி வெச்சு அப்புறம் தன் தலையால இடிச்சு திறப்பதிலிருந்து அவரோட காமெடி களை கட்டுது.. 

தீபாவளி வரை ஏ பி செண்ட்டர்களில் ஓடும்.. சி செண்ட்டர்களில் `10 நாட்கள்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - போலீஸ் ஸ்டோரி - ஆக்‌ஷன் ப்ரியர்கள் பார்க்கலாம்

 ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifWu2rUWhCWPoP9IiOgEqU-CoE0jv3QSLzXjaKzsVjkYEB8h1OyXNd9XV7_8MDAAGEh-I_84If9jns9Je8pOfXjiDWFFVltlxoexG5amB_h8kEHKtfUt7G7cImHCQZ3k35SRArcR2c2DA/s1600/poorna_latest_new_hot_photos_008.jpg

டிஸ்கி - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆனால் சொல்லியே ஆக வேண்டிய ஒரு மேட்டர்.. போஸ்டர் டிசைன் அப்ரூவல் பண்ணுனது யார்? பாடல் ஆசிரியர் தாமரையின் பெயர் தாமாரை என தவறாக பிரிண்ட் ஆகி உள்ளது.. எல்லா ஊர் போஸ்டரிலும்....!!!

சினிமா சிரிமா முனிமா ஜோக்ஸ்

1.நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்- விஜயகாந்த்  # உள்ளத்தில் நல்ல உள்ளம்னு ஒரு படம் நடிச்சீங்களே,அந்தப்பட டிவிடியை  அம்மாவுக்கு அனுப்புங்க

---------------------------------

2. இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் : ஹாரிஸ் புகழாரம்!! # வண்டி ரூட் மாறுது, கமல் கவனிக்கவும்

-----------------------------------

3.புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி! # ஆண்களுக்கிணையாக பெண்களும் முன்னேறிக்கொண்டிருக்காங்க போல!!

-----------------------------------------


4 ஸ்ருதியின் முதல் ஹிந்திப்படம் லக் தோல்வி.ஸ்ருதியின் முதல் லவ் வித் சித்தார்த் தோல்வி, ஸ்ருதியின் முதல் தமிழ்ப்படம்7ம் அறிவு!! # நாராயணா

-----------------------------------

5. சமூக ,நீதி, நெறி முறைகள் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்கிறோம், ஒரு முறையாவது எல்லோரும் அதை மீறி விடுகிறோம்!
--------------------------------------

6. தலைவரே!உங்களை 420ன்னு எல்லாரும் திட்றாங்களே? 

அட!!நான் அத்தனை பொண்ணுங்களை ஏமாத்துனது தெரிஞ்சுடுச்சா?

------------------

7. மேனேஜர் சார், சேர்ந்த 4 வது நாள்லயே ரிசப்ஷனிஸ்ட் ஏன் ரிசைன் லெட்டர் தர்றாங்க? 

அதுவா? 2 வது நாள்லயே நான் ஒரு லவ் லெட்டர் தந்தேன்

-------------------------------------

8. ஜெயிலில் கட்சிக்கரை போட்ட வேட்டி கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது- ஸ்டாலின் # தலைவரே! ஜெயில்ல டிராயர் தானே போட விடுவாங்க?

-----------------------------------

9. ஏய்யா,உன்னை COUNTRY BRUTE னு திட்றேன், கோபப்படாம சிரிக்கறியே? 

மிஸ்.. நீங்க COUNTRY FRUIT மாதிரி இருக்கறீங்களே? எப்படி கோபப்பட?

--------------------------------

Annual Alternative Hair Show

10. மேடம், நீங்க கூத்துப்பட்டறைல பயிற்சி பெற்றவரா? 

எஸ், எப்டி தெரியும்? 

எப்போ பாரு பாட்டில்ல சரக்கடிச்சுட்டு கூத்தடிச்சுட்டே இருக்கீங்களே?

----------------------------------

11. உன் சம்சாரம் ஊர்ல இருந்து இன்னைக்கு ரிட்டர்ன் ஆகறா, வருத்தப்படாம சந்தோஷமா இருக்கியே? 

நான் இன்னைக்கு ஊருக்கு எஸ் ஆகறேனே?

------------------------------------

12. கவர்ச்சி நடிகைங்க ஏன் சேலையே கட்றதில்லை? 

அதான் மூடு மந்திரமா இருக்கு!

-----------------------------------------

13.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர் யார் ? திட்டக்கமிஷன் இன்று முடிவு செய்கிறது # ஒரு ஓட்டுக்கு ரூ 500 மட்டுமே வாங்கும் அனைவருமே ஏழைகளே

--------------------------------

14 ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது!  # அட, என்னங்க இது? மேரேஜ்க்குத்தான் கூப்பிடலை, டைவர்ஸூக்கு கூட யாரையும் கூப்பிடலையே?

---------------------------------------

15 பெற்றோர் சம்மதமில்லாமல் கல்யாணம் செய்யாதீங்க-ஆர்த்தி  # நல்லவேளை, கல்யாணம் செய்யாதீங்க!ன்னு சொல்லாம விட்டீங்களே? கணேஷ்கூட தகராறா?

-------------------------------

16 காதலுக்காக காத்திருக்கிறேன்! அஞ்சலி பேட்டி!! # அடிப்பாவி, அப்போ ஜெய்க்கு அல்வா குடுத்தாச்சா?

------------------------------------

17 பதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்: ஹசாரே  # நாங்க எல்லாம் சம்பளம் கிடைபதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்:

--------------------------------

18. .விமலிடம் முத்தத்தை கேட்டு வாங்கிய நிஷா அகர்வால்!! # அதானே கமலிடம்னா கிட்டே போனாலே போதும், கேட்காமலேயே கொடுத்திருப்பார்!

-----------------------------

19 ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு எடுபடாது என என் ஆறாம் அறிவு சொல்கிறது  - நெகடிவ் தாட் நெட் சாமி

-----------------------------

20. முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ் # ஆமா,சம்சாரம் கட்டவே கையாலாகாதவன் கொழுந்தியா பற்றி பேசலாமா?