Tuesday, June 28, 2011

ஈரோடு காலேஜ் பிரின்சிபால் VS மவுண்ட் ரோடு அமலா பால்

1.உங்களுக்கு பிடிச்சது எது?பிடிக்காதது எது?

பிடிச்சது  அமலா பால்,பிடிக்காதது எங்க காலேஜ் பிரின்சிபால்#பால் பாண்டி ஜோக்

---------------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல. 

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க, சம்சாரின்னா சம்சாரத்தை மாத்திப்பாருங்க

------------------------

3. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?

வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களை விட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போற பொண்ணுங்கதான்  அதிகமா இருக்காங்க.. 

------------------------------

4.  என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு.. 

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

--------------------------



5. சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 

மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்னு தெரியுமா உங்களுக்கு?

----------------------

6. அவரு பால் மணம் மாறா பாலகன்னு இனிமே சொல்ல முடியாது.. 

ஏன்? 

எப்போ பாரு நடிகையோட ஸ்டில்லை ஸ்மெல் பண்ணிட்டே இருக்கானே? அமலா பால் மணம் மாறா கிராதகன்னு வேணா சொல்லலாம்..


---------------------

7. விளக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடி களைத்தவர்கள் அவசர உதவிக்குகிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைக்கிறார்கள்#முதிர் கண்ணன்களின் காமம்


----------------------------------

8.  மனசுக்குப்பிடிச்சவங்களை பார்க்காமல்.பேசாமல் இருந்து விடலாம்,ஆனால் மனதில் நினைக்காமல் இருந்து விட முடிவதில்லை#நெஞ்சுக்கு நீதி

--------------------

9. உனக்காக எதையும் விட்டுக்குடுக்க நான் தயார் தான்,ஆனால் உன்னை விட்டுக்குடுக்க தயார் இல்லை.. 

-----------------------

10. பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை

-------------------