
பிரபலங்கள் என்றாலே ஏதாவது சர்ச்சையில் சிக்கித்தான் ஆகவேண்டும் என்ற எழுதப்படாத விதி நம்மைச்சுற்றி இயங்குகிறது போலும்.வெளிநாடு முதல் ,உள்ளூர், உள் நாடு வரை இந்த விதி செல்லுபடி ஆவதை நாம் தினமும் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்,நம் பதிவுலகிலும் அத்தகைய சம்பவங்கள் நடந்தது,அதை வெளிச்சம் போட்டுக்காட்டவே இந்தப்பதிவு.
1.பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.நான் 1998 இல் அமரர் சாவி அவர்களின் சாவி இதழில் 87 படங்களுக்கு சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறேன்,எம் ஜி வல்லபன் நடத்திய ஃபிலிமாலயா இதழ்களில்.இதயம் பேசுகிறது ,உட்பட பல வார ,மாத இதழ்களில் சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறேன்.அப்போதெல்லாம் எழாத பிரச்சனை இப்போது வந்து விட்டது.பிளாக் ஆரம்பித்து 4 மாதத்தில் நான் மொத்தம் 56 படங்களுக்கு சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன்.அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்.அப்படி எழுதியது கூடப்பரவாயில்லை,அவர் எழுதிய பிட்டுப்பட பதிவர்கள் ஷோ வுக்கு நான்தான் தலைமை தாங்கியதாக ஒரு பதிவு போட்டு இருந்த (!?)கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விட்டார்.ரஜினி பற்றிய தொடர் பதிவு போட்ட போது என்னை எழுத அழைக்கவே இல்லை.ஏன் என கேட்ட போது மொக்கை பதிவர்களை நான் மதிப்பதே இல்லை என நக்கலாக கூறி விட்டார்.
2. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் சந்தித்தோம்.ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.அ[ப்போதே நான் கூறினேன்,”ரமேஷ்,இந்த சந்திப்பை நான் பதிவாகப்போடறேன்” என . அதற்கு அவர் “ ஓ ,தாராளமா போட்டுக்குங்க “ என்றார்.நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார்.(இதுல பதிவுக்கு தலைப்பு வேற அராஜகம்னு வெச்சார்).
3. நல்ல நேரம் சதீஷ் - எனக்கு பிளாக் சம்பந்தமாக டெக்னிக்கல் மேட்டர் எதுவும் தெரியாது,சும்மா டைப் மட்டுமே அடிக்கத்தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் (தெரியாதவங்களுக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும் )
அப்படி எல்லாம் தெரிஞ்சிருந்தும் என் பதிவில் ஃபோட்டோ இமேஜ் ஓவர்லேப் ஆனாலோ,அலைன்மெண்ட் சரி இல்லை என்றாலோ இவர் பாட்டுக்கு சத்தம் இல்லாமல் அதை மாற்ற வேண்டியதுதானே,பப்ளிக்காக கமெண்ட் வேறு போட்டு விடுவார்.பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?
4. டெரர் பாண்டியன் - தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் அறிவிப்பில் 3 வாரங்களுக்கு முன்பு சிரிப்புப்போலீஸ் ரமேஷ் 14 வது இடமும்,நான் 13வது இடமும் பிடித்திருந்தோம்.அதை ரமேஷ் ஒரு பதிவாகப்போட்டார்.டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா? கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?என கேட்டு ஒரு கமெண்ட் போட்டேன்,அதற்கு பதில் கூட போட வில்லை.சே,வீட்லதான் நம்மை யாரும் மதிக்கறது இல்லைன்னு பார்த்தா பதிவுலகிலும் யாரும் மதிக்கவில்லையே என நினைத்துக்கொண்டேன்.
5. மங்குனி அமைச்சர் -3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது (ஒரு தடவை சென்னை வந்ததுக்கு எதுக்கு இத்தனை அலும்பு?) ரமேஷிடம் மங்குனியை சந்திக்க ஆவலாக இருப்பதாக சொன்னேன்.அதற்கு ரமேஷ் சொன்ன பதில் என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போல் இருந்தது. (1986ல வந்த கண்ட கண்ட நாவல்களை படிச்ச பாதிப்பு). மங்குனி ரொம்ப பிசி,அவரை பார்க்க முடியாது என்றார்.சரி ,ஒரு வார்த்தை ஃபோனிலாவது பேசறேன் என்றேன்,அதற்கு அவர் உங்க ஃபோன்ல இருந்து கூப்பிட்டா எடுக்க மாட்டார்,என் ஃபோன்ல இருந்து கூப்பிடறேன் என்று மீண்டும் கேவலப்படுத்தினார்.அப்போதுதான் எனக்கு 10 நாட்கள் முன் நடந்தது ஞாபகம் வந்தது. (ஸ் ஸ் அப்பா.. இங்கேயும் ஃபிளாஸ்பேக்கா?) மங்குனி கோவை வந்திருக்கார்,ஆனா ஈரோடு பக்கம் எட்டி பார்க்கலை? ஏன்?னு கேட்டு அவர் பிளாக்ல ஒரு கமெண்ட் போட்டேன்,மனுஷன் அதை கண்டுக்கவே இல்லை.
6. உண்மைத்தமிழன் - நான் அவ்வப்போது (அதென்ன அவ்வப்போது பெரும்பாலும்னே போட்டிருக்கலாம் ) டப்பா படத்துக்கு விமர்சனம் எழுதுவது உண்டு.(அதுதான் ஊருக்கே தெரியுமே?)நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதும்போது அண்ணன் கண்டுக்கவே மாட்டார்.மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது மட்டும் “தம்பி,எனக்கு ரூ 60 மிச்சம் பண்ணீட்டே?” என நக்கலாக ஒரு கமெண்ட் போட்டு சென்று விடுவார்.
7. கேபிள் சங்கர் - புதிய தலைமுறை இதழில் பதிவர்களைப்பற்றி ஒரு கட்டுரை வந்தபோது அதில் நெம்பர் ஒன் ரேசில் கேபிள் சங்கரும்,ஜாக்கிசேகரும் போட்டி போடறாங்க என யுவகிருஷ்ணா எழுதி இருந்தார்.உடனே அதை அவருக்கு தெரிவிக்கலாம் என ஃபோன் போட்டேன்,என் நெம்பரை பார்த்தோ அல்லது எதேச்சையாகவோ அவரது அசிஸ்டெண்ட் லேடி ஃபோனை அட்டெண்ட் பண்ணி ,” என்ன விஷயம்னு சொல்லுங்க,சார் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கார்” என்றார்.அவரிடம் மேட்டரை சொன்னேன்.ஓக்கே .அவர் ஃபிரீ ஆனதும் உங்களுக்கு பதில் குடுப்பார் என்றார்.சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும் அவர் ஃபிரீ ஆகவில்லையா?அல்லது என்னை அவாய்டு பண்றாரா தெரியவில்லை.
8. கோகுலத்தில் சூரியன் வெங்கட்- நான் பதிவு உலகுக்கு வந்த புதிதில் இவரைப்பற்றி முழுசா தெரியாது.இவரது போஸ்ட் எல்லாம் காமெடியாக இருக்கும்,அதை நம்பி ஆளும் ஜாலி டைப் என நம்பி அவர் பிளாக்கில் கமெண்ட் போட்டேன்.உடனே அவர் ஃபோன் போட்டார்.( கீழே போட்டிருந்தா உடைஞ்சிருக்கும்,எனக்கு லைன் போட்டார்)
தம்பி சி பி இனிமே என் பிளாக்ல நீ கமெண்ட் போடாதே...
ஏண்ணே?
இல்ல.என் பிளாக்கை என் குடும்பத்துல எல்லாரும் படிப்பாங்க (அப்போ எங்களுக்கெல்லாம் குடும்பமே இல்லையா?அவங்க என் பிளாக் படிக்க மாட்டாங்களா?)
அதுக்கெண்ணண்ணே (அடேங்கப்பா,எவ்வளவு மூணு சுழி ண் )
நீ ஒரு மொக்கை பதிவர் கம் பிட்டுப்பட விமர்சகன்.நீ எல்லாம் என் பிளாக்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் என்னாகறது?
நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். (இது மார்கழி மாசம் ஆச்சே,எப்படி ஆடி போவே?)
கண்ட பசங்க கூட சேராதேன்னு சொல்ற அம்மாவை பார்த்திருக்கேன்,அவங்க கூட ஃபோன்ல பேச வேண்டாம்னு சொல்ற மனைவிங்களை பார்த்திருக்கேன் (சுமாரா எத்தனை மனைவிகளை பார்த்திருப்பே?),ஆனா இவன் யோக்கியன் இல்லை இவன் உன் பிளாக்ல கமெண்ட் கூட போடக்கூடாது என சொன்ன ஆட்களை இப்போதான் பாக்கறேன்.அப்போ வெங்கட் எவ்வளவு நல்லவரா இருந்திருக்கனும்?பேசாம் இவரும் ரமேஷ் மாதிரி ரொம்ப நல்லவன்,ரொம்ப தூய்மையானவன்னு ஒரு புனைப்பெயர் வைக்கலாம்.
டிஸ்கி 1 - ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச மேட்டரு இப்படி பதிவா போட்டு ஊருக்கே நீ அவமானப்பட்ட கதை தெரியனுமா?ன்னு என் மனசாட்சி கேக்குது.அதுக்கு என் பதில் நான் நடிகை நமீதா மாதிரி,எதையும் மறைச்சு பழக்கம் இல்லை.
டிஸ்கி 2 - அபலை என்ற சொல் பெண்பால் பெயர் என்றாலும் சில நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆண்பால் பெயராகவும் யூஸ் பண்ணிக்கலாமாம்.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...
டிஸ்கி 3 - வழக்கமா சொல்றதுதான் ,இது ஒரு மொக்கை பதிவு,(லேபிளில் குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் சும்மா ஜாலிக்கு.யாரும் சீரியஸா எடுத்துக்க வேணாம்.மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் 80 % உண்மை 20 % கற்பனை.