
1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்
மணப்பெண் - யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
கும்மி அடிக்க வந்தீங்களா?
சிரிப்புப்போலீஷ் ரமேஷ்- எனக்குப்பிடித்த டாப் 10 பெண்கள் அப்படிங்கற
தலைப்புல உன் கிட்டே அரை மணி நேரம் பேசப்போறேன்.
மணப்பெண் - இதென்ன உங்க பிளாக்னு நினைச்சீங்களா?எதை
எழுதுனாலும் படிக்க ஆளுங்க வர்ற மாதிரி இங்கேயும் ஆளுங்க வருவாங்கன்னு அளக்க ஆரம்பிச்சிட்டீங்களா?
2. நல்ல நேரம் சதீஷ் -
மாமனார் -மாப்ளே,முதலிரவுக்கு நல்ல நேரம் பாருங்கன்னா சிஸ்டத்தை
ஆன் பண்ணி நெட் கனெக்ஷன் குடுக்கறீங்களே?
சதீஷ் - மாமா உங்களுக்குத்தெரியாதா?என் பிளாக் பேரே நல்ல நேரம்தான்.
அதனால அதை ஓப்பன் பண்ணி பார்த்தாலே நல்ல நேரம் பார்த்த மாதிரிதான்.
முதல்ல என் பிளாக்கை ஓப்பன் பண்ணி பார்க்கறேன்,ஹிட்ஸ் நிறைய வந்தா
மட்டும்தான் இன்னைக்கு முதலிரவு..இல்லைன்னா எல்லாம் கேன்சல்.
3. ஈரோட்டு லொள்ளு பதிவர் நண்டு நொரண்டு
மணப்பெண் - அத்தான் ,என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..
நான் ஒரு லாயர்,அதனால உன்னோட வாதம் (ARGUMENT)வேணா பண்றேன்,30 பவுன் போட்டே ஆகனும்னு பிடிவாதம் பண்றேன்,உங்கப்பா கிட்டே சீர் செனத்தி க்ளியர் ஆனாத்தான் முதல் இரவுன்னு வாக்குவாதம் பண்றேன்.லேட்
பண்ணுனார்னா கோர்ட்ல வெளிநடப்பு பண்ற மாதிரி முதலிரவு அறையை
விட்டு வெளியேறி முடக்குவாதம் பண்றேன்,ஆனா ஆசீர்வாதம் பண்ண மாட்டேன்.
4. பன்னிக்குட்டி ராம்சாமி - என்னடி ,உன் கழுத்துல தாலி ஏறுனதும் உங்கப்பன் வீங்குன வாயன் ஆள் அட்ரஸையே காணோம்?இப்படி ஓடிப்போய்ட்டா சீர் செனத்தியை நான் யார் கிட்டே வசூல் பண்றது?ங்கொக்காமக்கா,என்னை என்ன இளிச்சவாயன்னு
நினைச்சானா?அய்யோ நாராயணா,நாட்ல இந்த எழில் அதிபருங்க தொல்லை
தாங்க முடியலடா சாமி..மாநிறமா இருக்கறவளுக எல்லாம் உலக அழகி ரேஞ்சுக்கு பந்தா பண்றாளுங்க..
மணப்பெண் - அத்தான்,அதெல்லாம் காலைல பேசிக்கலாம்,இப்போ லைட்டை ஆஃப் பண்ணுங்க.
'முடியாது..இன்னும் ஒரு வாரத்துக்கு முல்லைச்சரம்கற பொண்ணுக்கு என்னை இன்சார்ஜ்ஜா போட்டிருக்காங்க..நான் அங்கே போறேன்.
மணப்பெண் -அந்தப்பெண்ணை கவனிச்சா உங்க சொந்தப்பொண்டாட்டியை யார் கவனிப்பா?
ஆ எகிருதுங்கோ எகிருதுங்கோ
5.. சங்கவி - டியர்,நான் 2 பிளாக் (BLOGS) வெச்சிருக்கேன்.அதைத்தான் யாரோ உன் கிட்டே திரிச்சு 2 பிளாக்கிகளை( BLOCKY) வெச்சிருக்கறதா திரிச்சு சொல்லீட்டாங்க.கறுப்புப்பொண்ணுங்களை நான் ஏறெடுத்தும் பாக்கறதில்லை.இதுக்குப்போய் கோவிச்சுக்கிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி? பிகு பண்ணாம வா,இல்லைன்னா அஞ்சறைப்பெட்டில உங்க
குடும்பத்தை பற்றி புட்டு புட்டு வெச்சுடுவேன்.

6. கோமாளி செல்வா - ஹைய்யா,வடை எனக்குத்தான்...வடை எனக்குத்தான்.
மணப்பெண் -யோவ்,இங்கே பால் ,பழம்,ஸ்வீட்ஸ் மட்டும்தான் இருக்கு,வடை ஏது?
உனக்குத்தெரியாது,பதிவுலகில்நான் ஒரு வடை வாங்கி வங்கி.எனக்கு இணையா ஒரு பயலும் வட வாங்க விடவே மாட்டேன்..
சவுந்தர் - அய்யய்யோ,வட போச்சே...
செல்வா -இங்கேயும் வந்துட்டியா,பிச்சுப்பிடுவேன் பிச்சு.
சவுந்தர் - எதை?வடையையா?
7. டெரர் பாண்டியன் - அன்பே,இந்த மஞ்சத்தில் வந்து அமர்.உன் இடை அழகும்,
நடை அழகும் ,உடை அழகும் என்னை சொக்க வைக்கிறது.
மணப்பெண் -அத்தான்,தமிழைக்கொல்லாதீங்க,இங்கே வந்து உங்க கவிதைக்குப்பையை அள்ளாதீங்க. பதிவுலகில் அடிக்கடி காணாமப்போயிடற மாதிரி இங்கேயும் எஸ்கேப் ஆகப்பாக்காதீங்க..தினமும் என் பக்கத்துலயே இருக்கனும்.பை த பை உங்க பேரைப்பார்த்ததும் நீங்க திகிலா இருப்பீங்கன்னு நினைச்சேன்.
நான் கூட உன் பேரைப்பார்த்ததும் ஷகீலா மாதிரி கும்முன்னு இருப்பேன்னு
நினைச்சேன்.உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகளே வர்லை.
மணப்பெண் -அதெப்பிடி வரும்?பதிவுலகில் இதுவரை 1675 கமெண்ட் போட்டிருக்கீங்க,என்னைப்பற்றி ஒரு கமெண்ட் சொல்லசொன்னா தடுமாறுறீங்க,.....
8. கோகுலத்தில் சூரியன் வெங்கட்- டியர்,நீ கட்டில்ல படுத்துக்கோ,நான்
தரைல படுத்துக்கறேன்.
மணப்பெண் -ஏன்?
பெண்களை நான் மதிக்கறேன்,அவங்களை ஆண்களை விட உயர்ந்த இடத்துல
வைக்கனும்னு ஆசைப்படறேன்
மணப்பெண் -அது சரிதான்,ஆனா முதல் இரவுன்னா ஒரே கட்டில்லதானே படுப்பாங்க?
ஸாரி,நான் ரொம்ப டீசண்ட்,எனக்குன்னு ஒரு இது வெச்சிருக்கேன்.(எது?)
என் பிளாக்கிற்கு கமெண்ட் போட வர்றவங்களையே குளிச்சிட்டு நீட்டா
டிரஸ் பண்ணிட்டு வர்றவங்களைத்தான் அலோ பண்றேன்.எனக்கு ஒழுக்கம்,
டிசிப்ளின்தான் முக்கியம்.
மணப்பெண் - சுத்தம்,நமக்கு வாரிசு உருவான மாதிரிதான்
9. கலியுகம் தினேஷ் - டியர்,நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு,இனி தினம் உனை வதம் செய்யப்போகிறேன்,ஒரெ மாதத்தில் சதம் அடிக்கப்போகிறேன்.
மணப்பெண் -யோவ்,நீங்க பிளாக்ல எழுதுன 37 கவிதைகள்ல 48 தடவை வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணி இருக்கீங்க,டைரில எழுதுன 189 கவிதைகள்ல 214 தடவை வதம் வருது. அப்பவே உங்களுக்கு வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணவேணாம்னு தடா வந்ததே...இங்கேயும் ஆரம்பிச்சுட்டீங்களா?
10. முறைமாமன் கார்த்திக் - டியர் ,இதுதான் என் மாமன் பொண்ணு.
மணப்பெண் -சரி,இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?
நான் எங்கே போனாலும் மாமன் பொண்ணை விட்டுட்டு வர மாட்டேன்,அவளை கை விட மாட்டேன்னு சத்தியம் செஞ்சு குடுத்திருக்கேன்.
மணப்பெண் -அப்போ அவளையே கட்டிக்க வேண்டியதுதானே..என் உசுரை ஏன் எடுக்கறீங்க?
டிஸ்கி 1 - சொல்லவே தேவை இல்லை மேலே கண்டவை அனைத்தும் கற்பனையே என்று,உங்களுக்கே தெரியும் அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் என.
டிஸ்கி 2 - இத்தனை நாளாக (177) எனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு இல்லாமல் இருந்தது.நண்பர்கள் யாராவது இணைத்தால்தான் உண்டு.நான் யாருக்கும் ஓட்டும் போட முடியாது,இண்ட்லியில் மட்டுமே அனைவருக்கும் ஓட்டு போட்டேன்,பலத்த போராட்டத்துக்கு பிறகு நேற்று ஓட்டுரிமை பெற்று விட்டேன்,அதற்கு உதவிய நல்ல நேரம் சதீஷ்க்கு நன்றி.இனி நானும் உங்களுக்கு ஓட்டு போடுவேன்.cp666 யூசர்நேம்.
டிஸ்கி 3 - இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.